Tuesday, 27 October 2015

-Thomas Wolfe--Mikhail Lermontov--Vasily Zhukovsky--Evgeny Vinokurov--Andrey Bely--Vasily Zhukovsky--Nikolay Klyuev--Zinaida Gippius --Ivan Bunin--Innokenty Annensky--Gavril Derzhavin-Apollon Grigoriev--Fet- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



The whole conviction of my life
now rests upon the belief that loneliness,
far from being a rare and curious phenomenon,
is the central and
inevitable fact of human existence...........


-Thomas Wolfe-





மஞ்சள்மயமாகும் சோளக் காடு வளைந்த்தாடும் தருணம்,
சில்லிட்டிருக்கும் வனம் மென்காற்றில் சலசலக்கிறது,
பூந்தோட்டத்தில் சிவந்திருக்கும் ப்ளம், பச்சைய இலையின்
மதுர நிழலின் கீழ் மறைந்திருக்கிறது;


ரோஜா வர்ண அந்தி - சாயும் தருணம்,
அன்றி
புலர்வின் பொன் பொழுதில் பள்ளத்தாக்கின் வெள்ளி-மேனி லில்லியின் மீது ,
மணம்வீசும் பனித்துளி தெளிக்க்ப்பட்டிருக்கிறது.
ஒரு புதரின் கீழிருந்து நட்பார்ந்த வாழ்த்துக்களுடன்
என்னைக் கண்டு தலையசைக்கிறது

ஒடுங்கிக் குறுகியப் பள்ளத்தாக்கில்
குளிர்ந்த நீருற்று நடமிட்டு வீழ்கிறது,
நிச்சயமற்ற கனவினுள் எண்ணங்களைத் தணிவிக்கிறது,
தான் வேகமாய் விடைபெறும் அமைதியான நிலத்தின் புதிர்மையான வீரகாவியத்தை என்னிடம் முணுமுணுக்கிறது

பின்னர் எனது ஆன்மாவின் பதற்றம் அசைவிழக்கிறது,
புருவத்தில் ஆழ்ந்திருக்கும் சுருக்கங்கள் மிருதுவாகிறது,
நான்
பூமியின் மீதுறும் உவகை யாவையும் கிரகிக்கிறேன்,
வானுலகில் ஆண்டவரைக் காண்கிறேன்.

-Mikhail Lermontov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)





ஏற்கனவே களைத்துவிட்ட நாள் செந்நிற நீரில் அமிழ்கிறது,
நீலவானம் இருளுற்று வளர்கிறது;
குளிர்ந்த நிழல்கள் பரவுகிறது,
அமைதியான இரவு கட்புலனாகா வான்- பாதையில் நகரத் துவங்குகிறது,
முன்னே ஹெஸ்பெரஸ் தனது அழகியத் தாரகையுடன் பறக்கிறான்,


ஓ வானுலகத்தவனே;
உனது மாய முகத்திரையுடன் எம்மிடம் இறங்கி வா,
குணப்படுத்தும் மறதியின் கண்ணாடிச் சிமிழுடன் வா,
சோகம் கவிந்த ஆன்மாவிற்கு இனிமையூட்டும்
உனது இருத்தல், மற்றும்
தாலாட்டித் தணிக்கும் உனது பாடல்களால் அமைதிசெய்,
ஒரு தாய் மழலையை அமைதி செய்வதுபோல்.

-Vasily Zhukovsky-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





இரவு இரங்கி ஓலமிடுகிறது, சுழல்கிறது,
பக்கங்கள் யாவிலும் எக்காளமிட்டு முழங்குகிறது,
ஒவ்வொரு மரித்த மானுடனும் அவன் வீழும் தருணத்தில்,
வாழ்வை வெண்-பனிச்சூறையாய் ஞாபகம் கொள்கிறான்,
அவனது முகத்தில் சீற்றத்துடன் வலிதாய் அடிக்கிறது.


ஆயினும் காலையில் யாவுமே அசைவற்று மோனமடைகிறது
பூவுலகு பண்டைய நீலத்தில் தன்னை வெளிப்படுத்தி அருள்கிறது,
நான் மார்பளவுள்ள அரண் மேலேறுகிறேன்,
மீண்டும் ஒருமுறை –
பதினெட்டாவது முறையாக, இளவேனிலை வியக்கிறேன்.

ஈரம்கவ்விய குன்றின் சரிவுகள் செந்நிறமாகியுள்ளது,
இளவேனிலின் காற்று பித்துற்று வீசுகிறது,
மரித்தவனின் அகன்ற விழிகளின் நிர்வானத்தில் மட்டுமே
பனிக்காலம் நித்தியமாய் உறைந்திருக்கிறது.

-Evgeny Vinokurov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



இலைகளின் மீது பனித்துளி தகதகக்கிறது,
குளத்தின் மேல் ஞாயிறு பளபளக்கிறது,
கன்னத்தில் அழகு மச்சத்துடன் எழில்மிளிரும் ஒரு யுவதி,
ஒளிவண்ண ரோஜாவைப் போல் அமர்ந்திருக்கிறாள்.


அக்காட்சி நெஞ்சை மகிழ்விக்கிறது ,
அரை -தெள்ளிய வெந்நிற வாரிழைகளை அணிந்திருக்கிறாள்,
தந்தியிசை கருவியின் ஓசையில் கனவுறுகிறாள்........
கதிரோனது பொன்-கீற்றில் அவள் மிளிர்கிறாள்.

சிற்பங்கள் பொறிக்கப்பட்ட அறைகளின் உச்சிமுகடு
ஹாப் படரிலைக் கொடியுடன் பின்னிப் பிணைந்துள்ளது,
சுவர்கள் அதிர்ஷ்ட வசந்தத்தின் வருடலின் வசமிருக்கிறது .
ஒரு நேர்த்தியுரு இளம் கோமான் அவள்முன் பணிகிறான-

வலிந்து பழகிய பாத்திரமாய்,
சாம்பல்நிற சுருள்கேச பொய்ச்- சிகையில் ,
வான்நீல பட்டு உள்ளாடையுடன்,
கரத்தில் கருஞ்சிவப்பு ரோஜாவுடன் இருக்கிறான் .

நானுன்னை ஆழ்ந்து நேசிக்கிறேன் , அத்தைமகளே-
இம்மலரை ஏற்றுக்கொள்.........

அவன் தந்தியிசைக் கருவியின் ஒசைக்கு நகைக்கிறான்
தன் அத்தைமகளை மெய்தழுவ விழைகிறான்,

இக்கணம் வெளிரிய மூடுபனி,
பனித்துளி படர்ந்த பசும்புல் வெளியில் ஊர்கிறது,
ஊதா மூட்டத்தின் அலைகளின் மீது பொன்நிலா மிதக்கிறது.

-Andrey Bely-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





கடந்து செல்லும் நைட்டிங்கேல் பறவையாய்
இளமை என்னருகே சிறகடித்தப் போனது,
துர்-வானிலையில் எழும் அலை போல்
உவகை கடந்தகாலத்தை எதிரொலித்தது.


பொன்னான நாட்கள் இங்கிருந்திருக்கின்றன,
ஆனால் அவை மங்கியழிந்தன,
இளமையின் திடம் என் யாக்கையுடன் கூடித் தூர்ந்தது.

துயர்நிறைச் சிந்தனைகள் என் நெஞ்சில் குருதியை உறைவிக்கிறது.;
எதை நான் எனது ஆன்மாவென நேசித்தேனோ-
அதுவும்கூட என்னிடம் பொய்மையாய் விணையாற்றியது.

காற்று இளைஞனை புல்லின் இதழாய் அசைவாட்டுகிறது;
பனிக்காலம் அவனது முகத்தை குளிர்விக்கிறது,
ஞாயிறு பொசுக்குகிறது.

என்னை நான் நைந்த- கந்தலாக்கியிருக்கிறேன்
என் வசமிருப்பவை யாவும் மிகத் துரிதமாயிருக்கிறது.............
தோள்மீதுறும் நீல கோட் சரிந்துவிட்டது,
நேசமும் -உவகையுமின்றி பூவுலகெங்கிலுமாய் இலக்கற்றுத் திரிகிறேன்.
துரதிர்ஷ்டத்துடனான தோழமையிலிருந்து பிரிந்தால்,
நான் துயரை எதிரிடுகிறேன்.

செங்குத்தாய் சரிந்திருக்கும் மலையில்
பச்சை ஓக் மரம் வழமையாய் வளர்ச்சியுறும் ;
இப்போது மலையடிவாரத்தில் அது அழுகி நசிகிறது.

Aleksey Kol'tsov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




இரவில் கட்டிலின் மீது யார் உன்னைத்
தனது கரங்களில் இறுகத் தழுவுகிறானோ
அவன் ஆசீர்வதிக்கபட்டவன்.
புருவத்தின் மீது புருவமாய்,
விழியின் மீது விழியாய்,
இதழ்களின் மீது இதழ்களாய்,
மார்பின் மீது மார்பாய்,
கவர்ந்திழுக்கும் உனது முணுமுணுப்பை இடையீடு செய்யும்
அவனது பேருணர்வின் முத்தம்,
இப்போது அமைதியுறுகிறது.
உனது இருண்ட மார்பகங்களின் கட்டுக்கடங்கா நடுக்கத்தைத் தூண்டுகிறது,
இன்னும் மிகையாய் ஆசீர்வதிக்கப்பட்டனவாய் இருக்கிறான்.


ஓ இராக்காலத்தின் இளநங்கையே,
நேசத்தின் மெய்மறத்தலில் யார்,
உனது செங்கனல் வண்ண விழிகளினுள்ளேயும் ;
உனது வாடா- மலர்ச்சியில் ஒளிர்ந்து சிவந்திருக்கும் இதழ்களையும்,
உனது அற்புத புருவங்களையும்,
உனது இளமைபூத்தக் கறுமை கேசச்சுருள்களையும் நோக்குகிறானோ;
புயலார்ந்தப் பேரின்பத்தின் பரவச-வெப்பத்தின் ஊடே,
தனது இளமையின் வலிமையையும் மறந்திருக்கிறான்!

-Nikolay Yazykov-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

அமைதியாய் இரு ,
உன்னை ஒளித்து வைத்துக் கொள்,
உனது உணர்வுகளையும் கனவுகளையும் முழுமையாய் மறை,
உனது ஆன்மாவின் ஆழங்களில்
அவை அமைதியாய் உதித்தெழுந்து - தாழட்டும், ,
இராப்பொழுதின் தாரகைகளாக;
அவைகளை வியந்த வண்ணமாய், தியானி,
அமைதியாய் இரு.


நெஞ்சம் தன்னையே எவ்வாறு வெளிப்படுத்தும்?
மற்றொருவர் உன்னை எவ்வாறு புரிந்துகொள்வார்கள்?
எதனில் நீ வாழ்வுற்றிருக்கிறாய் என, அவனால் புரிந்து கொள்ளக் கூடுமா?

சிந்தனையொன்று மொழியப்படுகையில் பொய்மைப்படுகிறது,
நீருற்றுக்களை நீ கிளருவதினால் கலங்கிடச் செய்வாய்,
அதைப் பருகிவிட்டு , அமைதியாய் இரு.

உன்னிலேயே வாழ்ந்திருத்தலை அறிந்துகொள்:
உனது ஆன்மாவினுள் புதிர்மையும் - வசியபடுத்தும் எண்ணங்களும் நிறைந்துள்ளன,
அவை அதீத-சப்தத்தினால் மூழ்கடிக்கப்படும்;
புலரொளி யாவையும் விரட்டிவிடும்,
அவை பாடுவதைச் செவிகொள்.
அமைதியாய் இரு.

-Fedor Tyutchev-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





என் முன்னே நீ மெளனத்துள் நின்றாய்,
உனது விழியின் துயர்நோக்கு உணர்வு நிரம்பியிருந்தது.
என் நேசிப்பிற்குரிய இறந்தகாலத்தை அது ஞாபகப்படுத்தியது....
அதுவே நீ இவ்வுலகிலிருந்த இறுதி- கணம்...


பேசா தேவதையாய் நீ அகன்றாய்,
உனது கல்லறை விண்ணுலகின் பேரமைதியைத் தரித்திருக்கிறது,
பூவுலகின் நினைவுகள் யாவும் ,
விண்ணுலகின் பரிசுத்த சிந்தனைகள் யாவும் அங்குள்ளன.

விண்ணுலகின் தாரகைகள், மெளன இரவு!

-Vasily Zhukovsky-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





நேசத்தின் துவக்கம் கோடைக் காலம், அதன் அந்தம்-
செப்டம்பர் மாத இலையுதிர்காலம்.
ஒரு யுவதியின் எளிய ஆடையில் முகமனுடன்
நீ என்னிடம் அண்மித்து வந்தாய்.


ஒரு செவ்வண்ண முட்டையை குருதியின்,மற்றும் நேசத்தின் குறியீடாய் என் கைவசம் அளித்தாய்;
வடதிசை சிறகடிக்க அவசரப்படாதே , சிறு பறவையே,
தென் திசையின் இளவேனிலுக்காய் சற்று பொறு!

நீலமாயும் , புகைந்தும் . குறும்- புதர்காடுகள் கூர்ந்த-விழிப்புடன்; மோனத்திலிருக்கிறது,
சித்திரத் திரைசீலையினூடே உருகும் பனிக்காலத்தை காட்சி கொள்ளவியலாது,

ஆனால் நெஞ்சம் உணர்ந்தறிகிறது,
அங்குள்ள பனிமூட்டங்களையும்,
வனத்தின் இருண்மை அசைவுகளையும்.
ஊதா - சாம்பல் மலைகளது,
அவ-விதியின் மாயத்தோற்றங்களையும்.

ஓ, மூடுபனியினுள் சிறகடித்து விடாதே; சிறு பறவையே!
வருடங்கள் சாமபல்நிற மூட்டத்துள் வடிந்துவிடும்,
தேவாலய முன்றிலின் ஒரு மூலையில்,
நீ யாசிக்கும் கன்னியாஸ்திரியாக நின்றிருப்பாய்;

ஒருவேளை , நான் உன்னைக் கடந்தும் போவேன்,
வறியவனாய் மெலிந்திருப்பேன்,
ஓ, கேருபினின் சிறகுகளை எனக்களித்துவிடு,
உனது விழிப்பினில் நான் புலனாகாது பறந்திடுவேன்,

முகமன் நவிலாது உன்னக் கடந்திடேன், அன்றி
பின்னர் கழிவிரக்கம் கொள்ளேன்....
நேசத்தின் துவக்கம் கோடைக் காலம், அதன் அந்தம் -
செப்டம்பர் மாத இலையுதிர்காலம்.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





நாணமற்ற அவளது வெறுக்கத்தக்க இழிமையில்
அவள் புழுதிபோல் சாமபல் நிறம் பூத்திருக்கிறாள்,
உலகுக்குரிய அஸ்திகளாயிருக்க
நான் அவளது அண்மையினில் நசிகிறேன்,
அவளுக்கும் எனக்குமிடையே உள்ள பிரிக்கவியலா உறவிலிருந்து.


சொரசொரப்பாய் , உறுத்துபவளாய், குளிர்ந்திருக்கும்-
அவளொரு அரவம்.
அவளது வெறுப்பூட்டும் சீற்றம் ,
ஒழுங்கின்றி வதங்கித் துண்டிக்கப்பட்ட அவளது செதில்கள் என்னை காயங்களால் போர்த்தியுள்ளது.

அக்கூரியக் கொட்டுதலை நான் உணர்திருந்தால் !
அவள் தளர்வுற்று தொங்குகிறாள், மந்தமாக ஜீவனற்றிருக்கிறாள்,
இருப்பினும் அத்துனை மொழுமொழுப்பாக மெதுவாக நகர்கிறாள்,
அவளில் விழைய அணுகலில்லை - அவள் கேளாமையில் இருக்கிறாள்.

என்னை வட்டமாய்ச் சுற்றிச் சுருள்கிறாள்,
அவள் பிடிவாதத்துடனும்,
நயமாய் நுழைந்து வருடி நெரிக்கிறாள்.
மாய்ந்து மிரட்சியூட்டும் இக்கறுநிற வஸ்து,
எனது ஆன்மா!

-Zinaida Gippius -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)









இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

பனிமீதுறும் எனது யாத்திரைகள் கணக்கிடுவது அல்லது அளவிடுவதற்கு அப்பால் கொடூரமானதாயுள்ளது,
என் முன் நீட்சியுற்றிருக்கும் வெறுமைத் தொலைவுகள் சாம்பல்நிறமாய் இல்லையா?
மணிகளின் ஒலிகள் கிளர்வற்று இருக்கவில்லையா?


ஆனால் நீ, என் நெஞ்சே,
நீயேன் அத்துனை ஆழ்- பிளவுண்டிருக்கிறாய்?
அவள் கண்காணா தூரத்தில் இருக்கிறாள் என நானறிவேன்,
ஆயினும் நான் அவளது அண்மையை உண்ர்கிறேன்.

இதோ அவர்கள் இங்குள்ளனர், பனிமூட்டம் ,
எனது விழிகளை அவர்கள் மீதிருந்து அகற்றக் கூடவிலை,
ஒரு கணத்தில் நாம் ஒருவரையொருவர் வெண்மையில் கடந்துவிடலாம், ஆனால் மரித்திருக்கும் பனி.

ஒரு கணத்தில் யாரோ பேச்சின்மையில் கூடி ஜோடியாவார்கள்,
பின்னர் தனியாவார்கள், நமது பனிசறுக்கூர்திகள்,
ஒரேயொரு முறை,ஆயினும் வதைக்கும் மணிகளின் முணுமுணுப்பு
நமக்கு ஒன்றாய்ச் சங்கமிக்கும்..........

அவைகள் சங்கமித்துவிட்டன,
ஆயினும் ஒளிமங்கிய இரவினுள்
மீண்டும் நாம் ஒருவரையொருவர் கண்டடைய இயலாது...............
சாத்துன்பத்தின் மூடிய வட்டத்துள்
சலிப்புற்ற எனது பாதையில் திக்கிழந்து சுற்றித் திரிகிறேன்............

இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

-Innokenty Annensky-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






பிரிந்த அதரங்களின் பூவிதழ்கள்,மழலை போன்று ஈரமாயுள்ளது,
குளிர்மையாய் விளைந்துள்ளது,
நடன அரங்கு மிதந்துச் செல்கிறது.
ஆழ்விருப்பம், மகிழ்வின் மந்தகதி இசையில் மிதந்துச் செல்கிறது.


சரவிளக்குகளின் சுடர்வில் ஆடிகளில் சாய்ந்தாடும் அசைவுகள், படிகத்தின் ஓற்றைக் கானல் தோற்றத்துள் இரண்டறக் கலந்துவிட்டது,
குழுநடனத்தின் காற்று மிதக்கிறது, சுகந்தம் வீசும் ரசிகர்களின்
கதகதப்பான மூச்சுக்காற்று மிதக்கிறது.

-Ivan Bunin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







ஓதம் செறிந்தக் காற்றைப் போல் பலகணிக் கதவுகளில் அறைகிறாய்,
கறுத்த காற்றைப் போல் நீ இசைக்கிறாய்:
நீ எனதே ! நானொரு புராதன ஒழுங்கின்மை,
நான் நினது பழைய நண்பன்
நினதேயான ஒரே நண்பன் -திற,திற!


நான் பலகணிக் கதவைப் இறுகப்பற்றியிருக்கிறேன்,
நான் திறந்திடத் துணியவில்லை,
நான் பலகணிக் கதவை இறுகப்பற்றி எனது அச்சத்தை மறைக்கிறேன்.
நான் என்னுள் வைத்திருந்து உளமார நேசிக்கிறேன்,
நான் என்னுள் வைத்திருக்கிறேன் எனது இறுதிக் கதிரையும் - என் நேசத்தையும் .

பார்வையற்ற ஒழுங்கின்மை நகைக்கிறது மற்றும் அழைக்கிறது:
நீ விலங்கில் பிணையுண்டு மரிப்பாய்- கிழி,
அதிலிருந்து நின்னையே கிழித்துக்கொள்!
நீ ஆனந்தத்தை அறிவாய் , நீ தனித்திருக்கிறாய்,
ஆனந்தம் சுதந்திரத்தில் உள்ளது நேசம்- அல்லாததில் உள்ளது.

நான் உறைகிறேன் ஒரு ஜெபத்தைச் சொல்லுகிறேன்:
சற்று அரிதாகவே என்னால் நேச- ஜெபத்தைச் சொல்ல இயலுகிறது,
எனது கரங்கள் தளர்கின்றன, நான் பூசலை கைவிடுகிறேன்,
எனது கரங்கள் தளர்கின்றன....... நான் திறந்திடுவேன்.

-Zinaida Gippius-

நினது விழியில் உள்ளார்ந்திருக்கும் சாந்தம் ,
ஒரு பெண்மானை ஒத்திருக்கிறது,
அதனில் நான் நேசித்தவை யாவுமே மென்மையாய் உறைந்திருக்கிறது,
இந்நாள்வரை எனது நீங்கா சோகத்திலும் மறவாதிருக்கிறேன்
ஆனால் இப்போது நினது படிமம் பனிமூட்டத்தால் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளது.

நேரம் கனிந்து நெருங்கும் நீங்கா சோகமும் மாய்ந்தொழியும்,
நினவுகொள்ளலின் கனவும் நீலத்துள் பின்னுற்றுத் தணியும்,
எங்கு மகிழ்வும் அன்றி துயரும் அற்றிருக்குமோ,
அங்கு யாவற்றையும் மன்னிக்கும் ஒரு தொலைவு.

-Ivan Bunin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நினது கிடாரை எடுத்துக் கொள், ஜிப்ஸி பெண்ணே,
தந்திகளை மீட்டு; உரக்க குரலிடு;
சிருங்கார காய்ச்சலுடன் , நினது நடத்தால் யாவரையும் மெய்பரவசப்படுத்து,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.


வாழ்விற்குள் மீண்டும் அழை அதேசமயம் பித்தவெறியிலும், புலன்கிளர்த்தும் உண்ர்விலும், பதட்ட நடுக்கத்திலும்,
நேசத்தின் மெலிவிலும் ,
புராதன பெண்-பாக்கஸின் மாயக் கலையிலும்,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

இரவைப் போல், நினதுக் கன்னத்தில் எழும் மின்கல விளக்கு, சுழற்காற்றைப் போல்,
நினது மேல் -அங்கியால் புழுதியை வாரிச் சென்றுவிடு;
ஒரு பறவையப் போல், நினது சிறகுகளால் காற்றின் மேலெழுவாய்;
உரக்க வீரிட்டு கைகொட்டு,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஓ குறைந்த பட்சம்- நீ என்னிடம் பேசு,ஏழு -நரம்புகளையுடைய எனது நண்பியே,
எனது ஆன்மா கடுந்துயரால் நிரம்பியுள்ளது,
பிரகாசிக்கும் நிலவின் கதிரொளியில் இரவு நீராடியிருக்கிறது!


அதோ அங்கே ஒரு தாரகை பளிச்சென்று வாதையுறும்படியாக எரிகிறது,
அதன் ஒளிக்கதிர் நெஞ்சத்தைக் கிளர்த்தித் தூண்டுகிறது,
அதை பரிகசிக்கிறது , கொட்டுகிறது.

அதற்கு என் நெஞ்சத்திடம் வேண்டுவதென்ன?
எப்படியோ அது நன்கு அறிந்திருக்கிறது
எனது வாழ்வு முழுமையும் அழுத்தமாய் அதனில் பிணைவுற்றிருக்கிறது
எனது எண்ணிறந்த நாட்களின் ஆழ்விருப்பில்.....

எனது நெஞ்சம் நஞ்சில் ஊறியுள்ளது,
அதன் விடமூச்சை நான் உள்ளீர்த்துக் கொண்டதை அறிந்துள்ளது..............

அஸ்தமனத்திலிருந்து புலர்வுவரை நான் ஆழ்விருப்புறுகிறேன்,
அவதியுறுகிறேன், குறை சொல்லுகிறேன்,
ஆகையால்
முடிக்கப்பெறா பாடலின் அந்தம்வரை என்னிடம் பாடு

உனது தங்கையின் வாயில் எஞ்சியுள்ள பாதி- நவிலப்பட்ட
அந்த விசித்திரமானவைகளை இறுதிவரை சொல் ............
பார்: தாரகை பிரகாசமாய் எரிகிறது..............
ஓ பாடு, எனது நேசப்பிற்குரியவளே!

உன்னுடன் கூடிப் -பேசுதலை புலர்காலைவரை பற்றித் தொடரச் சித்த்மாயிருக்கிறேன்..... என்னிடம் பாடு
முடிக்கப்பெறா பாடலின் அந்தம்வரை என்னிடம் பாடு!

-Apollon Grigoriev-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

பனிமீதுறும் எனது யாத்திரைகள் கணக்கிடுவது அல்லது அளவிடுவதற்கு அப்பால் கொடூரமானதாயுள்ளது,
என் முன் நீட்சியுற்றிருக்கும் வெறுமைத் தொலைவுகள் சாம்பல்நிறமாய் இல்லையா?
மணிகளின் ஒலிகள் கிளர்வற்று இருக்கவில்லையா?


ஆனால் நீ, என் நெஞ்சே,
நீயேன் அத்துனை ஆழ்- பிளவுண்டிருக்கிறாய்?
அவள் கண்காணா தூரத்தில் இருக்கிறாள் என நானறிவேன்,
ஆயினும் நான் அவளது அண்மையை உண்ர்கிறேன்.

இதோ அவர்கள் இங்குள்ளனர், பனிமூட்டம் ,
எனது விழிகளை அவர்கள் மீதிருந்து அகற்றக் கூடவிலை,
ஒரு கணத்தில் நாம் ஒருவரையொருவர் வெண்மையில் கடந்துவிடலாம், ஆனால் மரித்திருக்கும் பனி.

ஒரு கணத்தில் யாரோ பேச்சின்மையில் கூடி ஜோடியாவார்கள்,
பின்னர் தனியாவார்கள், நமது பனிசறுக்கூர்திகள்,
ஒரேயொரு முறை,ஆயினும் வதைக்கும் மணிகளின் முணுமுணுப்பு
நமக்கு ஒன்றாய்ச் சங்கமிக்கும்..........

அவைகள் சங்கமித்துவிட்டன,
ஆயினும் ஒளிமங்கிய இரவினுள்
மீண்டும் நாம் ஒருவரையொருவர் கண்டடைய இயலாது...............
சாத்துன்பத்தின் மூடிய வட்டத்துள்
சலிப்புற்ற எனது பாதையில் திக்கிழந்து சுற்றித் திரிகிறேன்............

இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

-Innokenty Annensky-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





It is very difficult also
to sacrifice one's suffering.

A man will renounce any pleasures you like
but
he will not give up his suffering.


- G.I. Gurdjieff-






an honest being
who does not behave absurdly
has no chance at all of becoming famous,
or even of being noticed,
however kind and sensible he may be...


- G.I. Gurdjieff-






Life is real only then,
when "I am".”

-G.I. Gurdjieff-






Two things in life are infinite;
the stupidity of man and the mercy of God.....

-G.I. Gurdjieff-






The greatest untold story
is the evolution of God.............

-G.I. Gurdjieff -






There is a cosmic law
which says that every satisfaction
must be paid for with a dissatisfaction.

-G.I. Gurdjieff-






Time in itself does not exist,
there is only the totality of the results
issuing from all the cosmic phenomena present in a given place.

- G.I. Gurdjieff-

விளிம்பின் குரல்
October 31, 2014 ·
. எண்ணற்ற நபர்கள் இரவெல்லாம் வேலை செய்கின்றனர்....ரயில்வே கட்டுமானப் பணியாளர்கள், வாடகைக் கார் ஓட்டுனர்கள், மதுவிடுதிப் பணிப்பெண்கள், தீயணைப்புப் பணியாளர் மற்றும் இரவுநேர காவல் பணியாளர்கள்; அத்தகைய நபர்களுக்கு கொடியின் பாதுகாப்பை மறுப்பது நியாயமற்றதாக எனக்குப் படுகிறது. அல்லது இது என்னைத் தவிற யாரும் பொருட்படுத்தாத உண்மையில் அக்கறைகாட்டாத ஒன்றாயிருக்கலாம். நானும்கூட உண்மையில் பொருட்படுத்தினேன் என்றில்லை. இது தற்செயலாய் என் மனதில் தோன்றியது அவ்வளவுதான்.”
(ஹாருகி முரகாமி, நோர்வீஜியன் வுட், எதிர் வெளியீடு, ப,32)


நினது கிடாரை எடுத்துக் கொள், ஜிப்ஸி பெண்ணே,
தந்திகளை மீட்டு; உரக்க குரலிடு;
சிருங்கார காய்ச்சலுடன் , நினது நடத்தால் யாவரையும் மெய்பரவசப்படுத்து,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.


வாழ்விற்குள் மீண்டும் அழை அதேசமயம் பித்தவெறியிலும், புலன்கிளர்த்தும் உண்ர்விலும், பதட்ட நடுக்கத்திலும்,
நேசத்தின் மெலிவிலும் ,
புராதன பெண்-பாக்கஸின் மாயக் கலையிலும்,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

இரவைப் போல், நினதுக் கன்னத்தில் எழும் மின்கல விளக்கு, சுழற்காற்றைப் போல்,
நினது மேல் -அங்கியால் புழுதியை வாரிச் சென்றுவிடு;
ஒரு பறவையப் போல், நினது சிறகுகளால் காற்றின் மேலெழுவாய்;
உரக்க வீரிட்டு கைகொட்டு,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நான் விடைபெற்றுச் செல்கிறேன். வழமையான ”குட் பை
எனது இதழ்களின் மீது மரிக்கிறது.
விதி என்னை எங்கு வார்க்கப் போகிறது?
ஆழ்துயர் என்னை எங்கு எடுத்துச் செல்லும்?


நான் பேசாதிருக்கிறேன். எப்போதுமே நீ இரக்கமற்றிருகிறாய்,
வருடத்திற்கு பின் வருடமாக -
ஆனால், ஒருவேளை, ஒரு கண்காணா தேசத்தில் ,
நீ முகமன் கூறுவதை நான் எதிர்பாராநிலையில் செவி கொள்கிறேன்.

ஒரு பள்ளத்தாக்கில் ஏதோவொரு நாள், ’குட் பை’ சொல்வதும்,
ஒரு மூலையில் திரும்பியதும்
பயணி பின்புறம் நோக்குவான்,
யாரோ ஒருவரை வீணில் அழைப்பான்.

ஆனால் இருளடர்ந்து விட்டது,- கறுப்புச் சுவரின் மேற்புறம்
தழலொளி சுருளுற்ற மேகங்கள்,-
அதோ அங்கே, கீழே, மலைப் பாதையிலிருந்து,
அவன் பிரியாவிடையின் அழைப்பை செவிகொண்டான்.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








என்னை வளைவுறும் தொடுவானுக்கு கொண்டு செல்
எங்கே தருக்களின் பின் நிலவாய் சோகமிருக்கிறதோ ,
நேசத்துக்குரியவளின் புன்னகை, இந்த ஒலிகளினூடே , மென்மயமாய் பளபளக்கிறது ,
நினது தழலுறும் கண்ணீர்த் துளிகளின் மீது.


ஒ குழவியே! எத்துனை எளியது , இவ்வானுலகத்தின் மீ -அலைகளுக்கிடையே ,
நினது கானத்தை நம்பவும்,
உயரே உயரே , நான் வெள்ளிப் பாதையில் நீந்துகிறேன்,
ஒரு சிறகின் பின்னே படபடக்கும் நிழலைப் போல்.

நினது குரல் தூரத்தில் மடிந்து அப்பலுறுகிறது, எரிகிறது,
யாமத்து ஆழிக்கு அப்பால் தோன்றும் தகதகப்பைப் போல்,
எங்கிருந்து, எதிர்பாரா திடீர் கணத்தில் , என்னால் அதையறிய இயவில்லை,
முத்தின் பேரோசையிடும் அலை அதன் இடிநாதத்தை வழங்குகிறது.

என்னை வளைவுறும் தொடுவானுக்கு கொண்டு செல்
எங்கு சோகம் ஒரு இன்முறுவலாய் மென்மையுற்றிருக்கிறதோ,
நான் வெள்ளிப் பாதையை கடையும் போது , முன் எப்போதைக் காட்டிலும் உயரே,
ஒரு சிறகின் பின்னே படபடக்கும் நிழலைப்போல்.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நீ கதிரவனின் ஒளிக்கீற்றிடம் மன்றாடு;
எத்துனைக் கன்னிமைப் பேருவகை
நினது நறுமனம் கமழும் தூய்மை!


இளவேனிலின் முதல்-கதிர் நிகர்த்த ஒளிர்வு!
எத்தகையக் கனவுகள் தாழ்ந்திறங்குகின்றன!
நீ எத்துனை மாயவசியமாய் இருக்கிறாய்,
உணர்வைக் கிளர்த்தும் இளவேனில்- பருவத்தின் கொடை!

இவ்வண்ணம் முதன்முறையாக ஒரு இளநங்கை பெருமூச்செறிகிறாள்-
எதைக் குறித்து - அவளுக்குத் அது தெளிவற்றிருக்கிறது;
அவளது பளபளக்கும் தோள்
முதன்முறையாக நறுமணம் கமழ்கிறது.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







ஞாயிறு மேலுயர்ந்திருக்கிறது எலும்பிச்சை தருக்களின் ஊடே
கொதித்து எரிகிறது,
பூந்தோட்டத்து- இருக்கையின் முன்னே
பளபளத்து மிளிரும் மணலில் சிலத் தோற்றங்களைப் நீ படிசெய்கிறாய்,
ஒரு பொன்மயப் பகல்கனாவில் நான் முற்றிலுமாய்ச் சரணடைந்தேன்,
யாவைக்கும் நீ பதிலளித்தாய் -எனினும் ஒன்றுமில்லை.


நான் நெடுநாட்களுக்கு முன்பே புரிந்து கொண்டேன்
நாம் கொடிவழி ஆன்மாக்கள்,
நீயோ நினது நெஞ்சத்தை எனக்கே உவந்தளித்தாய்,
அது நம்மைச் சார்ந்த பிழையல்ல என்று மறுமுறைக் கூறுவதில் நான் உறுதியாயிருந்தேன்,
ஆனால் இவை யாவைக்கும் நீ ஒன்றுமே பதிலளிக்கவில்லை..

நான் இரைஞ்சினேன், மீண்டும் சொன்னேன் , நாம் நேசிக்கவே கூடாதென,
கடந்தகாலத்தை நாம் மறந்துத் தொலைக்க வேண்டும்
இனி வரப்போகும் நாட்களில் பேரெழிலின் உரிமைகள் யாவும் நிறைந்து மலர்ச்சியுறும்,
அப்போதும்கூட நீ ஒன்றுமே பதலளிக்கவில்லை.

பிரிந்தோரின் மேலூன்றிய என் பார்வையை அகற்றவும் வலிமையற்றிருக்கிறேன்,
நமது இரகசியங்கள் சாம்பலில் இடப்பட்டிருக்கிறது,
அவைகளை நான் புரிந்து கொள்ள எத்தனித்தேன்,
நினது முகத்தின் அம்சங்கள் மன்னித்தலை வெளிப்படுத்தியதா?
நீ ஒன்றுமே, ஒன்றுமே .பதிலளிக்கவில்லை.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







நதியில், விளையாட்டாக நீர்வாரியிரைக்கிறேன்:
இருண்டக் கிளைகளின் ஊடே பார்க்கிறேன், நீரின் மேல்புறம்,
அவளது முறுவலிக்கும் முகம் - நகர்ந்தது, மிதந்தது.
சரிந்துப் பாயும் கேசத்துடனிருக்கும் சிரத்தை நானறிவேன்.


வெண்ணிறக் கரையைச் சற்றே நோக்க , அந்த ஆடையையும் அறிவேன்,
குழம்பித் திரும்பிக் கொண்டேன்
இந்த வனப்பார்ந்த யுவதி படிகம் கவிந்த நீரினை உடைத்துப் புறமடைந்தாள்,
மணலின் மென்மையில் தனதுக் குழந்தைமைப் பாதத்தைப் பாவினாள்.

அவளது எழில் யாவிலும் ஒரு கணம் வெளிப்பட்டிருக்கிறாள்,
லேசாக நடுங்கியபடியே, நாணமுற்று ,
இவ்வண்ணமே நாணும்-லில்லியின் அசைவாடா இலைகள்,
காலைப் பனி ஈந்தக் குளுமையுடன் ஓளிவீசுகிறது.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




October 25 at 1:35am · Edited ·



எத்தகையப் பேரானந்தம், இரவு நேரம், நாமோ தனித்திருக்கிறோம்,
நதி ஆடியை ஒத்திருக்கிறது , தாரகைகளுடன் தகதகக்கிறது;
அங்கு....உனது சிரத்தை உயர்த்து, நிமிர்ந்து பார்:
உயரே எத்தகைய ஆழ்ந்தகன்றப் பேராழம் மற்றும் மாசிலா-தூய்மை.


ஓ, என்னைப் பேதையன் என்றே அழை! நீ விரும்பியபடியே அழை;
இத்தருணத்தில் தணிக்க வொண்ணா உணர்ச்சியில் என் மனமிருக்க-
நேசம் என் நெஞ்சினூடே வழிந்தோடுகிறது-
என்னால் மெளனமடைய இயலாது, இயலாது,
எவ்வாறெனவும் நான் அறிந்திலேன்.

நான் பிணியுற்றிருக்கிறேன், நான் நேசம் பீடித்திருக்கிறேன், ஆயினும் ,வாதையுற்று -நேசிக்கிறேன் -
ஓ கேள், புரிந்துகொள் , -
என்னால இப்பேருணர்வை மறைக்க இயலாது
நின்னை நான் நேசிக்கிறேன் என மொழியவே விழைகிறேன்
நீன்னை , நீன்னை மட்டுமே,
நான் நேசிக்கிறேன் வேட்கை கொள்கிறேன்!

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






அதே தாரகை வானில்,
அதே நதி தாழ்வாய்க் கீழே பாய்ந்தோடுகிறது,
ஆனால் நேசித்தவளின் குரல் முன்பே அப்பாலுற்றது, அமைதிலாழ்ந்துவிட்டது,
நெஞ்சத்தின் உவகையெல்லாம் அப்பாலுற்றது!
எதிரொலி விசனமுடன் மீள்-ஒலிக்கிறது:
அப்பாலுற்றது!


நிசப்தமாய உள்ள வனமரத்தில்
அதே ஒளிமய நீருற்று பிரவகித்துப் பாய்கிறது;
ஆனால் கடந்தகாலத்தின் ஆறுதலளிக்கும் முகத்தோற்றம்
மேகத்தின் பின்புறம் காணக் கிடைக்கவில்லை !
மீண்டும் ஒருமுறை உளத்துயரின் எதிரொலி குசுகுசுக்கிறது:
மேகத்தின் பின்புறம்!

வழமையாய்ப் பாடல் இசைக்கும் அதே பறவை
இரவில் இன்னமும் அதன் பாடலைப் பாடியபடியே உள்ளது;
ஆனால்; பாடலோ துயர் தோய்ந்திருக்கிறது, இப்போது
மகிழ்வு நெஞ்சத்தைத் தவிர்க்கிறது!
எதிரொலி மென்மையாய் நவில்கிறது:
நெஞ்சத்தைத் தவிர்க்கிறது!

எனது கடந்தகாலத்தின் குரலே ,
எப்போது நீ அமைதி கொள்வாய்?
கனாக்களை மறுவிழிப்படையச் செய்யாதே
என்றென்றைக்குமாகச் சுழன்று
அப்பாலுற்ற எதிரொலி மீள்- ஒலிக்கிறது
என்றென்றைக்குமாக!

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Image Courtesy : Iyyappa Madhavan.
(18/10/2015)


.


Shanmugam Subramaniam
October 23 at 11:01pm · Edited ·



யாவரும் துயில்கின்றனர், என் அன்பியே ,
நாம் நிழலிழையும் தோட்டத்துள் செல்வோம்,
யாவரும் துயில்கின்றனர்,
தாரகைகள் மட்டுமே நம்மை நுணுகிப் பார்க்கின்றன.
எனினும் நம்மைக் கிளைகளுக்கிடையிலும் அவர்களால் காணக்கூடவில்லை,
அவர்களால் செவிகொள்ள இயலவில்லை- நைட்டிங்கேல் பறவை ஒன்றே செவிகொள்கிறது......
அவனாலும் செவிகொள்ள இயலவில்லை - அவனது பாடல் அவனைக் கேளாமையில் ஆழ்த்துகிறது.
நெஞ்சத்தாலும், கரங்களாலும் மட்டுமே செவிகொள்ள முடிகிறது,
நாம் கொணர்ந்த
பூவுலகின் உவகை-யாவையும் நெஞ்சம் செவிகொள்கிறது;
செவிகொள்ளும், கரம், நெஞ்சத்திடம் நவில்கிறது:
இனமறியா நடுக்கமும் , வினோத அன்னியம் என்னில் கிளர்கிறது,
நான் ஜூரமுற்றிருக்கிறேன் . விரும்பியும் - விரும்பாதும்,
இப்போது ஒருதோள் மறுதோளை நாடிச் சாய்கிறது.


- Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






மாலைப் பனி புல்லின் மீது மினுமினுக்குகிறது,
இருண்ட - விழி விதவை
தனது கழுத்தையும் முகத்தையும் கழுவுகிறாள்,
அவளதுக் கேசப் பின்னலிழையைச் சீவுகிறாள்.


சாளரத்திலிருந்து அவளால் கூர்ந்துப் பார்க்கவியலும்
இருள்கவ்வி கறுக்கும் வான் நோக்கியும்,
மந்தகாசமாய் ஒளிரும் மற்றும் விழியை ஈர்க்கும் அரவத்தின் நொடித் தோற்றத்தையும்
நீளும் சுருள்களின் பளிச்சிடலையும்.பார்!

அது சலசலக்கிறது மற்றும் லயமற்று வழுக்கியபடியே நெருக்கமாய்,
நெருக்கமாய்,
விதவையின் சாளரத்தின் மேல்,
அவளது வைக்கோல் வேய்ந்த கூரையின் மேல்,
அதன் தீப்பிழம்பைச் சிந்துகிறது.

இருண்ட - விழி விதவை
தனது சாளரத்தை வேகமாய் சாத்துவாள்,
அறைக்குள்ளிருந்து இப்போது ஒருவருக்கு கேட்கக் கூடியது ,
ஒலிமெலிந்தக் குசுகுசுப்பும் மற்றும் முத்தங்களும்.

- Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







இரவு, நகரம் உள்ளார்ந்து தணிந்துவிட்டது, ,
பெரும் சாளரத்தின் பின்னே ,
யாவும் அமைதியாய் மற்றும் மதிப்பார்வமிக்க சடங்காய்,
ஒரு மானுடன் மெல்ல மாய்வது போல் நிகழ்கிறது.


ஆனால், அங்கவன் மன -அவசத்தில் நின்றிருக்கிறான்,
தோல்வியால் உளத்துயருற்றிருக்கிறான்,
அவனது காலர் திறந்திருக்கிறது,
அவன் மேல் நோக்கித் தாரகைகளைப் பார்த்திருக்கிறான்.

தாரகைகளே, தாரகைகளே,
நான் ஏன் இத்துனைத் துயருற்றிருக்கிறேன்.

அவன் தாரகைகளை உன்னிக்கிறான்.

தாரகைகளே ,தாரகைகளே ,
வலிய இப்பேரவா எங்கிருந்து வருகிறது?

யாவற்றையும் தாரகைகள் மொழிகின்றன
தாரகைளால் மொழியப்பட்டவைதான் யாவுமே.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
October 21 at 11:34pm · Edited ·



முகமூடிகளுக்குப் பின்புறம் தாரகைகள் ஒளிவீசுகின்றன,
எவரது கதையோ கனிவுடன் நகைக்கிறது,
இரவோ நகர்ந்தபடியே கடக்கிறது.

யோசனையில் அமிழ்ந்த மனச்சாட்சி , பெருவெளியின்
உச்சியின் மேல் புறப்படுகிறது, மந்தகதியில்
காலத்தையே எடுத்துச் சென்றது.


கரங்கள், முன்பு கடுமையாயிருந்தன, இப்போது ,
கண்ணாடியாய் தெளிந்த திரவத்தால்,
நிரம்பியக் கோப்பையை பிடித்திருக்கிறது,
அறைகளில் இரவுத் தாழ்ந்து இறங்கியது,
அதன் வேகத்தை தணித்து தொய்கிறது.

கணங்கள் ஒன்றின்பின் ஒன்றாக இசைக்கின்றன,
நெஞ்சத்தினுள் , திரவம் ஒலித்தது,
கோப்பையில், சுடர்தல் இனியில்லை,
ஒரு பச்சை வண்ண ஒளி நடமிடுகிறது, மினுமினுத்து.

அதன் அலமாறிகளில் , நூற்கள் கண்ணயர்ந்துள்ளன,
இறுகப்பற்றிய நிர்வானக் குழவியுரு-தேவதூதன்
கடையப்பட்ட பழம்-அலமாறி அடுக்கின் கதவில்,
தன் ஒற்றைச் சிறகில் படபடத்திருக்கிறான்.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








ஒவ்வொரு முறையும் நான் நினது விழிகளுக்குள் பார்வையூன்றுகிறேன்
என்னுடைய குறுகிய அரவ -விழிகளுடன் நின்னை நான் மென் -தீண்டுகிறேன்,

எச்சரிக்கையாயிரு , நான் அகமும் -புறமும் அரவமாயிருக்கிறேன்!
நான் ஒருமுறைதான் நினக்கு உரியவனாய் இருந்திருக்கிறேன்,
நான் நின்னைப் நிராதரவாய் கைவிட்டுப் பிரிந்தேன்.


நீயோ என்னை பாராமுகமாய் துறந்தாய் , எனது பார்வையின் புறமுற்று !
இன்றிரவு நான் வேறொருவருடன் இருக்கப் போகிறேன்,
பற்றிக்-கூடியிருக்க நினக்கு ஒரு துணைவி இருக்கிறாள் !

போய்விடு, நினது மீளா வேதனயை அவளால் அகற்ற இயலும் .
ஆகையால் அவள் முத்தமிடட்டும் , வருடி இன்புறுத்தட்டும் போய்விடு, இல்லையெனில் எனதுச் சாட்டை நின்னைத் தீண்டலாம்!

துணிவிருந்தால் எனது பூந்தோட்டத்துள் நுழை ,
எனது கறுத்த ஓரவிழியின் குறுகிய வெறித்தலை நிராகரி,
நான் நின்னை உயிரோடு தீயூட்டுவேன் !

நான் இளவேனிலாய் இருக்கின்றேன் , நான் தீச்சுடராய் இருக்கின்றேன்.!
நீ என்னை நெருங்கி வரமாட்டாயா, அதைப் போலவே -
நான் நேசிப்போர் யாவருக்குமாய் காத்திருக்கிறேன்.

எவரெல்லாம் இளமையாய் இருக்கிறார்களோ , எவரெல்லாம் மூப்படைந்து இருக்கிறார்களோ,
எவரெல்லாம் ஒலியதிரும் பொன்னைக் கொடையளிக்கிறார்களோ,
எனது அழைப்பொலியின் நிமித்தம் வருவீர்.

ஆனால் எழிலைச் சுட்டிக் குறித்தால், அல்லது நரை கேசங்கள் ,
அல்லது நினது பேதைமை நிறைந்த சிரம்-
சீழ்கையொலி , மெல்லிய இமை -ரோமம், மற்றும் இலையுதிர்ப் பருவம்.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




அவ்வண்ணமாகவே வருடங்கள் கடந்தன, ஒன்றன்பின் ஒன்றாக,
ஏனெனில் நான் குருடனாய் மற்றும் பேதையனாய் இருந்திருகிறேன்,
இன்றைக்குத்தான் நானதைப் பிரத்யேகமாகக் கனவுற்றேன்-
அவள் என்னை ஒருசிறிதும் நேசித்திருக்கவில்லை.


அவளுக்கு ஒரு இயல்பான எதிர்படலாய் நான் இருந்திருக்கிறேன்,
அவளது வழிப்பயணத்தில் என்னை யாரோ ஒருவனாகவே சந்தித்திருக்கிறாள்,
ஆயினும் அந்த பிள்ளைமை ஜூரம் தணிந்தது,
“ இதுவொரு பிரியாவிடை , என்றே அவளால் கூற இயன்றது.

ஆயினும் எப்போதும் போல் எனது ஆன்மா நேசத்தின் அகமுணர்தலில் ததும்பி வழிகிறது,
பிறருடனான கணங்கள் யாவுமே எனக்கு நஞ்சு தோய்ந்திருக்கிறது,
இன்னமும்கூட எனக்கு அதே யோசனை இருக்கவே செய்கிறது-
மற்றும் அந்த ஒற்றைக் கானம்
இன்று ஓயாது ஊடாடும் என் - கனாவின் இசையாகிறது.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







அவர்கள் நம்மை பூமியின் அடியாழத்தின் கீழ் புதைப்பார்கள்,
நமது வறியக் கல்லறைகளின் மீது நாணல் துளிர்க்கும்,
பூமியின் மீது பொழியும் மழையின் சன்னமான ஒலி செவியடைகிறது, உயரே எங்கோ ஒரிடத்தில், மேலே உயரே.

அசைவிழந்த நித்திரைகளிலிருந்து நாம் விழிப்படையும் போது,
நமக்கு எதைச் சொல்லவும் தேவை எழாது, நாமே அறிவோம்.
மழை சற்றே அமைதியாயிருக்க, பின்னர் அது இலையுதிர்காலம்,
மற்றும் நறுமணம் தாங்கிய காற்று வீசும் போது, அது இளவேனில்,


நாம் நன்றியதலுடன் இருப்போம் பேரானந்த பரவசத்திலும் மற்றும் நீள்-ஏக்கத்திலும்,
உயரே உறையும் சப்தங்களில் புகாதிருக்க,
நடுகல்லின் பாரத்தால் நாம் காப்பாற்றபபடுகிறோம்,
பிரிதலின் மற்றும் நேசத்தின் உளவாதையிலிருந்து.

பதற்றமடையத் தேவையேதும் எழவில்லை, இவ்விடம் கதகதப்பான தனியிடம்,
ஒருவேளை நாம் அதை யூகிக்கதறியவும் கூடும்,
அவர்கள் வாழ்வின் அர்த்தம் மற்றும் அர்த்தமின்மையைச் சுட்டிப்
பேசும்போது,
மானுட உள்ளங்கள் எதைப் பொருள்கொள்கிறது.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Monday, 26 October 2015

mubeen-sadhika.blogspot.in/2015/10/blog-post_26.html, மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

https://www.facebook.com/profile.php?id=100000015930586&fref=nf

ஒருகாலத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிதையான இராமச்சந்திரக் கவிராயரின் பாடல் 

வரிகள் இந்த நூலில்தான் இருக்கின்றன.
//கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான்
புவியிற்றான் பண்ணினானே. //
இந்தக் கவிதையை கலைஞர் எழுதினார் என்று எண்ணியிருப்பாரும் உண்டு. கலைஞர் கதைவசனம் எழுதிய பராசக்தியில் ஒரு காட்சியில் பேசப்படும் ஒரு காட்சிக் கோவையாக இது காட்டப்பட்டிருக்கும்.

தருமு சிவராம் பிரமிளின் சில கவிதைகள்

மகுடம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் வாசித்த கட்டுரை








http://mubeen-sadhika.blogspot.in/2015/10/blog-post_26.html

கண்ணாடியுள்ளிருந்து

யாரிது?
இதுதான் என் பிறப்பா
இது பிரதி,
எனது புதிய மறுமை

கண்ணாடி சமீபிக்கிறது
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது.

சிகிக்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து
நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது.

இரவினுள் புதைந்து
முடங்கிக்கிடக்கும் நிழல்கள்
ஒன்றையொன்று கண்டு நிற்கும்
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.
பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாது.
அதன் வித்தை ஒரு
போலிவெளி
மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்
ஆனால், கண்ணாடியுள் நிற்பவன்
நிழலுக்கும் பதிலதன்
கண்ணாடி
ஊடற்ற ஒரு
போலி வெளி
வெற்றுத் தளம்
நிர்பரிமாணம்

தசைச் சுவர்களின் இப்
புவன நிழல் வெளியில்
சுவர்கள் ஆடுகின்றன
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு
அவற்றை நோக்கி
காற்றில் ஏறும்
மயானச் சாம்பாலாய்
எனது லிங்கம்
மீண்டும் எழுகிறது
பனிவிரலாய் நிற்கிறது

பாலைமீ தெங்கும்
திசையின்மையுள்
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி
வெறிச்சிட்டு நிற்கிறது.
-----

1.தருமு சிவராம் பிரமிளின் இந்தக் கவிதை கண்ணாடியுள்ளிருந்து ஊடுருவும் ஒரு மாய உலகம். பிரதிபலிப்பின் மீது எழுப்பும் கேள்விகள், ஒளியின் ஊடுருவல்கள், நிழலின் நீட்சிகள் என்று பல வர்ணனைகள், வண்ணங்களைக் கொண்டது. 

2.பிரதியும் ஒரு பிரதிபலிப்புதான். அது வெறுமையை பிரதிபலிக்கிறது.
அல்லது கவிதை சொல்லியின் பிறன்மையாக இருக்கிறது. 

3.கண்ணாடியைத் தட்டுவதா அல்லது கதவைத் தட்டுவதா என்ற ஒலித் தடுமாற்றம் இருக்கிறது. தானும் தனது பிம்பமும் இரட்டையாக இருக்கிறார்கள். அல்லது பிம்பம் கண்ணாடியைக் கதவு போல் தட்டி பிரதிபலிப்பின் காலடியில் ஒலி எழுப்புகிறது. தன்னையும் தன் பிரதிபலிப்பையும் இணையாக்கி எதிராக்கி ஒன்றாக்கி உருவாக்கி இருக்கிறது இக்கவிதை.  

4.தன்னை ஊடுருவும் ஒளி. தன்னை எரியவைக்கும் ஒளி.
பிரதி பிம்பமாக மாற. இதில் தான் என்பது தனது பிம்பமாக தனது பிறன்மையாக மாறுகிறது. கண்ணாடியின் பிம்பம் தன்னை வர்ணிப்பது நடக்கிறது. கண்ணாடியில் ஊடுருவ வேண்டிய ஒளி அது எதிரொளிக்கும் தன் மீது ஊடுருவிவிடுகிறது.

5.ஒளியை விரும்பாத படைப்பு. தன்னை எரியவிடுவதை பதிவு செய்யும் படைப்பு. பிம்பத்தின் தானாக இருப்பதால் ஒளி ஊடுருவுவதாக சொல்கிறது. 

6.கண்ணாடிகளில் புதைந்த நிழல்கள் பிரதிகளில் வியாபிக்கின்றன. அது ஓர் ஒற்றை உரு. தானும் தன் பிறனும் கலந்தது. பிரதிகளிலிருந்தோ கண்ணாடியிலிருந்தோ பிரித்தெடுத்துவிடலாம் என்றால் அது ஒற்றை உருவாக உள்ளது.  கண்ணாடியின் இடத்தைப் பிரதி எடுத்துக் கொண்டுவிட்டதால் தன்னையும் பிரதிபலிப்பையும் ஒரு சேரக் கலந்த ஒற்றை உரு ஆகியிருக்கிறது அது.

7.பிரதிபிம்பத்திற்கு ஒற்றைப் பரிமாணம் மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது.
அதன் பின்புறத்தைக் காணமுடியவில்லை. அதனுள் ஊடுருவிச் சென்று காணமுடியாது. ஒரே பக்கத்தை மட்டுமே காட்டும். நின்றுவிட்ட பரிமாணம்.
அது ஒரு போலி வெளி. உண்மை போல் தெரிவது. அதன் போலித் தன்மையைத் தெரிந்துகொள்ள பிம்பத்தின் எல்லா பக்கங்களும் தெரியாமல் இருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  பிரதியும் ஒரு போலிப் பொருளைக் கொண்டு பிம்பத்தை மறைத்துவிடுகிறது. தான் என்ற முழுமையின் எல்லாப் பக்கங்களையும் பிரதி காட்ட முடியாதது போல கண்ணாடியும் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே காட்டுகிறது.

8.வெற்றுவெளி, பாலைவனம் போன்றது. அது போல் கண்ணாடியும் வெறிச்சோடிவிடும். அதன் முன் ஏதுமற்ற உரு நின்றால் பிரதிபலிக்க முடியாமல் வெறிச்சிடும். 

9.நான்/பிறன்மை என்ற விளையாட்டின் கூறுகள் கொண்ட கவிதை இது.
பிறன்மை மூலம் 'தான்' கட்டப்படுவதை புதிர் போல் வளைத்துச் சொல்கிறது இந்தக் கவிதை.  

10.ஆண் என்ற தானின் பிறன்மை போல் பெண் என்ற பொருளின் செயல்பாடு இருப்பது போலவும் இக்கவிதை தோற்றமளிக்கிறது. உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை. பிறன்மை தானைக் கட்டமைக்கிறது என்ற லக்கானின் விளக்கத்திற்கு பதிலாக உள்ளது இக்கவிதை. கண்ணாடி பிம்பத்தில் உண்மையான தானைக் காண விழைந்து அது பெண் உருவின் பரிமாணமாகப் புரிந்து அதனுடன் கலக்க முடியாத கூக்குரலாகக் கண்ணாடியுள்ளிருந்து கூவுகிறது இக்கவிதை.

----------

நான்

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவென்
தாய்
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெறித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களின்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்
யாரோ நான்? ஓ-ஓ-
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்
---
1.நான் என்பதைக் கண்டடைய பிறப்பும் இடமும் தெளிவாக்கப்பட வேண்டியிருக்கிறது. பிறப்பு பற்றிய புதிர் விடுபடுவது தாய் பற்றிய தெளிவில் கிடைக்கிறது. தாயைப் பற்றிக் கூறிவிட்டால் தான் யாரென்று விளங்கிடும் என்பதாக.
2.பெக்கெட்டின் மோலாய் என்ற நாவலில் ஒரு வசனம் வரும். மோலாய் என்ற பாத்திரத்திடம் அதன் பெயரையும் அதன் தாயின் பெயரையும் கேட்கும் போது தன் பெயர் மோலாய் என்றும் தன் தாயின் பெயரும் மோலாய் தான் என்றும் கூறும். இதைப் பற்றி ஜில் டெல்யூஜ், பிலிக்ஸ் கட்டாரி தங்களது ஆண்டி இடிபஸ் என்ற இடிபலுக்கு எதிராக என்ற நூலில் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள். தாயைத் தேடி தன்னைக் கண்டடைவதாக இந்த நாவல் பாத்திரம் இருப்பது விருப்பிற்கு எதிரான மனப்பிறழ்வு நிலை என்று அவர்கள் கூறுகிறார்கள். அது போல் தன்னை விளக்கும் கவிதையில் தாயைப் பற்றி கூறுவது தன்னை பிறப்பித்த தான் என்பதைச் சொல்வதாக உள்ளது. அண்டத்தின் தாய் என்றால் விரிந்த தன்னிலையைப் படைக்கும் ஒன்றாக இக்கவிதை சொல்கிறது. அந்தத் தாயிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் தான் என்பதுதான் தானாக தன்னிலையாக விளக்குகிறது இக்கவிதை.

3.பக்தி இலக்கிய மரபும் இக்கவிதைக்குள் ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சக்தியின் ஒட்டுமொத்த வடிவமாக தாய் இருந்தால் அழிவின் வடிவமான தந்தையின் இடத்தை சிவன் என்று நிரப்புகிறது இக்கவிதை. ஏனெனில் அண்டம் முழுதும் தாயினது என்றால் தனது இடத்தைச் சுட்ட தந்தையின் இடத்தைத் தேடுகிறது கவிதை. அது சுடுகாடு. மரணத்தில் முடிந்துவிடும் தானைக் கொண்ட இடம் அது. அந்த இடத்தில் அழிவின் சின்னமான சிவன் இருப்பதை தனதாக்கிக் கொள்கிறது இக்கவிதை.

4.தாயிடமிருந்து பிறந்து தந்தையிடம் மறைந்து போன தான் என்பதுதான் இங்கு நானாகிறது. பிறப்பின் விருப்பும் அழிவின் விருப்பின்மையும் கலந்ததுதான் நான் என்கிறது கவிதை. இந்து மத பிடிப்பில் சக்தியும் சிவனும் தன்னைப் பிறப்பித்தாலும் தான் என்பதற்கான தேடல் தொடர்கிறது. ஏனெனில் தன்னைப் பிறப்பித்து தன்னை அழிக்கும் தொடர் சக்கர இயக்கமாக நான் இருப்பதில் ஏற்படும் குழப்பம் மிஞ்சிவிடுகிறது கவிதைக்குள். மேலும் நான் என்பது தனித்த ஒன்றாக உடலற்ற ஒன்றாக அலையும் பிரதிமையாகக் கவிதை சொல்கிறது.

5.உடல்/மனம் என்கிற பிளவை ஏற்படுத்திய தெக்கார்த்தின் சிந்தனையை உள்வாங்கிய ஒலி கவிதையில் மண்டிப் போய் ஒலிக்கிறது. 'நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கிறேன்' என்ற கார்டீசிய பிளவு கவிதையின் சிந்தனை முனகலாகத் தெறிக்கிறது.

6.பிறப்பும் இடமும் தானை நிர்ணயித்துவிட்டதாகத் தோன்றினாலும் தாயின் தானும் தந்தையின் தானும் தன்னில் கலந்து பல தான்கள் உருவாவதைக் கோடிட்டு காட்டுகிறது இக்கவிதை. தாயாதல், தந்தையாதல் என்ற இயக்கத்தில் தானுமாதல் நடக்கிறது.

7.தாயையும் தந்தையையும் பிறன்மை எந்திரங்களாக மாற்றி நானை உருவகிக்க முனைகிறது இக்கவிதை. பிறப்பும் இறப்பும் உடலியக்கம் மட்டும் அல்ல, நான் என்ற விளைவை உற்பவிக்கும் தாக்கங்களாக இக்கவிதை காட்டுகிறது. ஏனெனில் பிறப்பும் இறப்பும் தொடர்மங்களாக இருக்கும் வாழ்வின் போக்கில் நான் என்பது அவற்றின் விளைபொருளாகிவிடுவதாக கவிதை கொண்டுவிட்டது.

8.நான் ஒரு நிலையற்ற மாறிலி(uncertain constant) என்பதாக பிறப்பையும் இறப்பையும் முன்வைத்து வகுத்துக் கொள்கிறது இக்கவிதை. மதத்தின் குறியீட்டியல் பண்புக்குள் மிதக்கும் மாறிலியாக(floating signifier) நான் இந்தக் கவிதைக்குள் உள்ளது.

9.நான் இருக்கும் இடம் உயிரற்ற வெளி. அதாவது மனிதமற்ற அப்பாலை இடம். அங்கு தந்தைமையின் அதிகாரம் பாதுகாப்பற்ற உறைவிடத்தை நானுக்குத் தருகிறது. அது விடுபடுதலற்ற ஒரு சிறை போன்ற வெளி. மீண்டும் மீண்டும் இறத்தலைச் சுட்டும் களம். இறந்த நான் கொண்டிருக்கும் வசிப்பிடம்.

10.பிறப்பின் கூட்டுத் தொகையையும் இறப்பின் பெருக்கத்தையும் நினைவில் இருத்தும் ஒன்றாக நான் வெளிப்படுகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு புள்ளியில் நான் இருக்கலாம் என்பதாகக் கவிதை கொண்டுவிடுகிறது. இந்த இடைப்பட்ட நான் என்பது தனித்தது என்பதாகப் பொருள்படுத்தப்படமுடியாது. பல நான்களின் கூட்டுத் தொகுப்பு என்பதாகக் கொள்ளலாம்.

11.அண்டத்தைப் பிறப்பித்த தாய் என்பதால் எப்போதோ பிறந்துவிட்ட நான் என்பதாக கவிதை சொல்கிறது. விருப்பத்தின் காலத்தை அளக்க முடியாது என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம். தானின் உற்பத்தி தொடர்வதும் முறிவதும் என்ற சிக்கலான வட்டம் கவித்தைக்குள் தெரிகிறது.

12.தாயும் தந்தையும் அற்ற ஒன்றாகவோ அல்லது தாயும் தந்தையும் கலந்த ஒன்றாகவோ நானை பொருள் கொண்டுவிடுகிறது இக்கவிதை. இந்து மத மரபுசார் நம்பிக்கை இந்த பற்றைக் கொடுத்துவிடுகிறது.

13.பிறப்பு/இறப்பு, தாய்/தந்தை என்ற இருமைக்குள் மையமிட்டு வரலாற்றின் காலத்திலும் வெளியிலும் பரவி நின்று தனித்தது என்ற தகுதியை அமையப்பெறாத ஒன்றாக நானை சுட்டுகிறது இக்கவிதை. இடம், காலம் என்ற சட்டகமாகவும் நானை வரைந்துவிடுகிறது இக்கவிதை. அவற்றைக் கடந்த ஒன்றாக சிந்திக்கும் ஆற்றலற்றதாகிவிடுவதையும் சுட்டுகிறது.

14.நான் எனும் தன்னிலையாக்கம் இந்தக் கவிதைக்குள் பொதுமைப் படுத்தப்பட்ட ஒன்று. மனித இனத்தின் நான் என்பதாக உருவாகிவிட்ட ஒன்று. அதில் பன்மைத்துவம் கொண்ட நான் பொதுவிதியினால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதையும் இந்தக் கவிதை தெளிவாக்குகிறது.

15.உள்ளுறைந்த சக்தியும் வீணாகும் ஆற்றலும் நானை தனிப்பட்டதாக்க இயலாமல் தவிப்பதை சொல்கிறது இக்கவிதை. அதைவிடுத்த வேறொன்றாக இருப்பதையே நானாக இக்கவிதையின் கற்பனை உருவகிக்கிறது.
-------

E=mc2

காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு
ஒரு புதிய பிரபஞ்சம்
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒரு நாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன-
காலமே வெளி
இன்று கண்டது
நேற்றையது
இன்றைக்கு நாளைக்கு
இக்கணத்தின் கரையைத்
தீண்டாது
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்
--------
வடக்குவாசல்:தபாலில் வந்த தனித்துவம்

புலனும் புலனெட்டாப்
பரிமாணங்களுக்கும்
இடைவெளிகளிலே
திரிந்துகொண்டிருந்தேன்
வெளிதோறும் நின்றது
ஒருகணப் பொறி
கையொப்பமின்றி
அனுப்புனர் பெறுநர்
முகவரி இன்றி
காலமும் இன்றி
அண்டத்தை அளாவி
நின்றது தனித்துவம்

தெற்கு வாசல்

தெற்கு கோபுர வாசலுக்கு
வந்த உன்முன் உனது
இடப்புறமாக நிற்கிறான்
காலபைரவன்
பூணூலில் அவர்
கோர்த்தணிந்திருக்கும்
பொக்கிஷங்களைப் பார்
பூக்களல்ல, புஷ்பராகக்
கற்களல்ல
கபாலங்கள்
ஒவ்வொரு கபாலமும்
பார்ப்பனில் இருந்து
பறையன் வரை
ஐரோப்பியனிலிருந்து
ஆப்பிரிக்க நீக்ரோப்
பழங்குடி வரை
ஒவ்வொரு மனித
இனப்பிரிவினை காண்
நேர்கொண்டு பார், சிலையின்
கால்களுக்குப் பின் நாயாய்
உருமுகிறது மரணம்
அது காலத்தின் வாகனம்.

எனவே, எட்டாத
வெற்றுவெளி ஒன்றில்
ஓயாத திகிரியை
மென்சிறகலைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசையாமல்
பறப்பது நீயல்ல
நானல்ல
காலாதீதம்

கிழக்குவாசல்

மேஷசூர்ய உதயவேளை
கீழ்த்திசை கண்டம்
காலம் இற்றைக்கு
ஆறு மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு

சிறகு தளர்ந்து
தாழ்ந்து பறந்து
இடியொலிக் குரலில்
இறுதியாய் அலறி
வீழ்ந்தது-இன்னும்
மனித வர்க்கம்
தோன்றியிராத அவ்
உதய வேளையில்-
பிரமாண்டானதோர்
பெயரில்லாப் பட்சி

கணத்தில் நின்றது
நின்று ஜடத்தின்
காலத் துடிப்பை
நாளை நேற்றாய்
திசை மாற்றிற்று
பட்சியின் உரு
மாற்றமடைந்து
இரண்டு மில்லியன்
ஆண்டுக்குள் பிர
மாண்டமான தோர்
பாறையாயிற்று
பூமிச் சுழற்சியின்
அச்சாணியிலே
சரிவு கண்ட
யுகம் ஒன்று
துருவங்களின்
உறைபனி வெளி
உருகிய காலம்
உருகலில் நீர்
அலையற்று
புயலற்று
மலை முகடுகளை எட்டி
மூடத்துவங்கியது
--------
1.ஈ=எம்சி2, வடக்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் ஆகிய கவிதைகளில் அண்டம், காலவெளி போன்ற கருத்துகளைப் பற்றிய ஒரு தத்துவப் பார்வை பகிரப்பட்டிருக்கிறது.

2.சக்திச் சொட்டுப் பொறியியலின் அடிப்படையில் காலம் என்பது இல்லை. பிரமிள் க்வாண்டம் இயற்பியலை படித்தவர். அதனால் காலம் கற்பனை வெளியுடன் கலந்து பிணைந்து இக்கவிதைகளில் உருவாகியிருக்கிறது. காலமே வெளியாவது இந்த அடிப்படையில்தான். பிரபஞ்சத்தின் காலமும் நனவின் காலமும் தன்னிலையில் நிகழும் காலமும் வேறு வேறானவை. இன்று கண்டது நேற்றையதாகவும் இன்றுக்கு உரியது நாளையதாகவும் பிரிப்பது காலத்தை இருத்திக் கொள்ள மட்டுமே. காலம் என்பது இல்லாததால்தான் புதிய புவனம் பிரவாகம் எடுக்கும் என்கிறது இக்கவிதை.

3.ஐன்ஸ்ட்டீனின் சார்பியல் கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த இந்த சூத்திரம் இக்கவிதைக்குள் விளைவிப்பது வேறொரு பரிமாணத்தை. இன்று 11 பரிமாணங்கள் இருப்பதாக எம்தியரி எனப்படும் இழைக் கோட்பாடு கூறுகிறது. அதைத்தான் வேறொரு பரிமாணமாக இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது. அதில் காலமும் ஒரு பரிமாணம்தான். அந்தக் காலத்தின் இருப்பாக உள்ள பரிமாணத்தை இப்படிச் சுட்டிச் செல்கிறது.

4.ஈ=எம்சி2 கவிதையில் அறிவியலின் அழிவுக்கு சின்னமாக ஐன்ஸ்ட்டீனும் அழிவின் கடவுளான சிவனும் இரு பாத்திரமேற்புகளைச் செய்கிறார்கள். அழிக்கும் விருப்பம் கடவுளுக்கு இருந்திருந்தால் எந்த சூத்திரமும் தேவை இருந்திருக்காது. ஆனால் சூத்திரங்கள் மற்றும் விதிகளுடன் இறையின் படைப்பை அணுகும் அறிவியலாளர்கள் கண்டடைவது அழிவைத்தான். ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் உருவாக்கியதைப் போன்ற அழிவைத்தான். அதனால் அழிவின் கடவுள் சிவன் கெக்கலிக்க அழிவின் அறிவியலாளர் ஐன்ஸ்ட்டீன் அழுகிறார். அழிவுக்கான அறிவியலைக் குறித்த விமர்சனமும் அறிவியலின் இறையை எட்டாப் போக்கைப் பற்றிய ஆசுவாசமும் வெளிப்படும் கவிதை இது.

5.காலம், அண்டம் மற்றும் ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வில் ஈ=எம்சி2 கவிதை சைவத்தின் அடிப்படையைத் தேர்ந்து விடையை அடைகிறது. சக்தியும் சிவனும் ஒளியாகவும் நிழலாகவும் கண்டு அணுவின் கோர்ப்பை விளக்குகிறது இக்கவிதை. ஜடப் பொருள்களும் சக்தியின் சலனமாகவே கவிதை பார்க்கிறது. அழியும் பொருள்கள் யாவும் சிவனின் இயக்கத்தைச் சார்ந்தவை என்று வரையறுக்கிறது இக்கவிதை. அறிவியிலில் தொடங்கி சைவத்தின் ஆன்மீகத்தில் முடிக்கிறது இக்கவிதை.

6.காலாதீதம், காலவெளி, காலமும் இன்றி, கணப்பொறி, நாளைய நேற்று, என காலத்தின் பிரசன்னத்தை பல சொற்களில் சொல்கின்றன இக்கவிதைகள். புலன் உணர்த்தும் பரிமாணத்தில் காலத்தின் அறிதலும் புலன் எட்டாப் புலத்தில் காலமின்மையும் கவிதைகளுக்குள் நிகழ்கிறது. இடத்தில் நின்ற கணத்தைக் கண்டறிவதுதான் தனித்துவம் என்கிறது கவிதை. காலமும் இன்றி என்ற வரி க்வாண்டம் இயற்பியல் கூறும் காலம் என்பது ஒரு மாயை என்பதைத்தான் சுட்டுகிறது.

7.'நாம் உண்மை என்று கூறிய பொருள்கள் எல்லாமே உண்மையான பொருள்களால் உருவானவை அல்ல' என்கிறார் நீல்ஸ் போர். நட்சத்திரங்கள் மறைந்து போன பின்னும் ஒளியின் பயணத்தில் அவை இருப்பது போல் தெரிவது காலத்தை வெளியாகப் புரிந்த கவிதையின் வெளிப்பாடாக உள்ளது.  

8.காலம் என்பதை காலனாக மாற்றுகிறது தெற்குவாசல் கவிதை. காலம் என்ற ஸ்தூல வடிவாக இருப்பது நாயாக, காலபைரவக் கடவுளாக எல்லை வகுத்துவிடுகிறது இக்கவிதை. கல்லைக் கண்டால் நாயைக் காணம், நாயைக் கண்டால் கல்லைக் காணம் என்ற வழங்குதலிலிருந்து நாயின் சிலையாக இருப்பது காலத்தின் இறுகிய தோற்றமாகவும் காலம் என்பதே மரணத்தின் மற்றொரு உருவாகவும் மரணத்தைக் குறிப்பது நாயாகவும் கல்லும் நாயும் துரத்தும் மனித பிறப்பாகவும் கொண்டு இறப்பும் காலமும் பிணைந்து பொருளாகிவிடுகிறது. காலத்திற்கான பொருளை இந்து மதத்தத்துவத்தில் தேடிக் கண்டடைகிறது கவிதை.

9.கடந்ததும் வருவதும் நிகழ்வதில் அடக்கம் என்ற காலத்தின் நேர்க்கோட்டுத் தன்மையை வெளி அல்லது இடம் என்று மாற்றிவிடுகின்றன இக்கவிதைகள். அனுபவங்களின் சாரத்தில் விளைந்த ஒன்றாகவோ அல்லது உடனடித் தன்மையுடன் நிகழும் காரணகாரியமாகவோ காலத்தைப் பார்க்கின்றன இக்கவிதைகள்.

10.பெருவெடிப்பின் பின்னான உயிராக்கங்களைக் கற்பனை செய்யும் கிழக்குவாசல் கவிதை உயிரும் உயிரற்றதும் ஒரு வேதியியல் வினையில் உருமாறுவதைத் தோற்றம் கொள்ளச் செய்கிறது. யுகம் கடத்தல், மீண்டும் உயிராக்கம் நிகழ்தல் என்பதையும் தாண்டி ஒளியின் நிரந்தரத்தை மாறா நிலைப்பை பதிகிறது இக்கவிதை. ஒளி, சூரியன், சக்தி என்ற சிந்தனை வளர்ச்சி மனித இனங்களின் பரிணாமத்தில் மிதந்து கொண்டிருக்கும் குறியிடல்கள்தான். அதிலும் 'நேற்றின்று நாளை' என்ற நேர்க்கோடு பாம்பு போல் வளைகிறது. இந்தக் கவிதையும் மனிதனாவதில் இறுகிய தன்னிலையும் கடவுளாவதில் சூட்சுமம் கொண்ட புறநிலையும் சாத்தியப்படுவதாய் கூறுகிறது. ஏனெனில் மனிதப் பார்வை அகமுகமானது அது வெளிப்படுவது பகிர்முகமானது என்கிறது. மீண்டும் ஓர் உயிராக்கம் நிகழ்த்த பரமாணு அகத்திலிருந்து வெளிக்குப் பாய்கிறது. அகம் காலத்தைக் கொண்டிருப்பது அதாவது காலனைக் கொண்டிருப்பது. புறவெளி எல்லையற்றது. காலமற்றது. கடவுளானது. சிவமானது.

11.காலம் என்பது படைப்பாகவும் மரணமாகவும் இறையாகவும் பல அடுக்குகளை இந்தக் கவிதைகள் காட்டுகின்றன. இறையில் காலமானது விடுதலை அடையும் என்ற கருத்து தொடர்ந்து இக்கவிதைகளுக்குள் உரத்து ஒலிக்கிறது. அழிவற்ற உயிராக்கம் இறையைப் படைத்தளிக்கும் என்று இக்கவிதைகள் கூறுவதாகக் கொண்டுவிடலாம். அழிவின் சின்னமாகக் காலமும் படைப்பின் புதிராக இறையும் இரு இணை கோடுகளாக இக்கவிதைகளுக்குள் பயணிக்கின்றன. புறநிலையின் காலம் இறையாகவும் அகநிலையின் காலம் மரணமாகவும் நனவின் காலம் படைப்பாகவும் உள்ளது பிரமிளின் படைப்புகளில்.

12.காலம் குறித்த அறிவியல் சிந்தனை வெளியாக நிலை பெற்றுவிடுகிறது இக்கவிதைகளுக்குள். இருப்பின் எல்லையில் கடந்ததும் வருவதும் நிகழ்வதுதான் அற்புதமாக, காலத்தின் அற்புதமாக இக்கவிதைகள் கூறுகின்றன. புராணம் நிகழ்வில் நடப்பதாக மாறுகிறது. அதில் அற்புதங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஏனெனில் நிகழ்ந்ததற்குள் கடந்தது புதிய நடப்பைக் கொண்டிருக்கிறது. அது அவதாரத் தன்மையை மறுப்பதாக மாறுகிறது. காலத்தை புராணத்தின் வெளியிலிருந்து மீட்டு நிகழ்வதில் மறுஉற்பத்தி செய்கிறது கவிதை. அதில் கடந்ததும் இல்லை. எதிர்வருவதும் இல்லை. இருப்பு மட்டுமே உள்ளது.


Prem Prem "உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." என்பதன் வழி என்ன சொல்ல வருகிறார் இந்தக் கட்டுரையாளர்? தமிழில் ழாக் லக்கானை யார் படித்திருக்கப்போகிறார்கள், அவருடைய எக்ரி நூலை யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள் என்ற தன்மிதப்பில்தான் இவ்வாறான வாசகங்கள் உருவாக்கப்படுகின்றன. கட்டுரையாளர் லக்கானின் அத்தனை நூல்களையும் தன் மேசைமீது அடுக்கிவைத்திருக்கிறேன் என்று கூறினாலும் கூட இது அடிப்படையில் தவறான வாசகம். ழாக் லக்கான் 'கண்ணாடி நிலை' என்று எதையும் கூறவில்லை பிம்பம் வழி அறிதல் உருவாகும் கட்டம் என்பதை அறிவு-தன்னிலை உருவாக்க நிலையுடன் உறவுபடுத்தி விளக்கும் கோட்பாடு இது. symbolic, real, imaginary பற்றியதாக விரிவடைகிறது லக்கானின் ைமயமறுப்பு சாராம்ச மறுப்பு உளவியல். அதற்கு முற்றிலும் எதிர் நிலையில் உள்ளதுதான் இதில் உள்ள கண்ணாடி. 'எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு' ைவ கருத்தியல் தளத்தில் தகர்த்த லக்கானின் கோட்பாட்டை பிரதிபலிக்க இக்கவிதை மறுக்கிறது.இக் கவிதையும் புரியாமல் லக்கானும் புரியாமல் கண்ணாடி என்றவுடன் லக்கானின் மிர்ர் ஸ்டேஜ் என்று சொல்லிவிட்டால் தமிழ் வாசகர்கள் தலை சுற்றி நின்று விடுவார்கள் என்ற நினைப்புதான் இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

Like · Reply · 5 · October 28 at 12:11am · Edited


Prem Prem "This behavior is none other than that of the human infant before its image in the mirror starting at the age of six months, which is so strikingly different from the behavior of a chimpanzee, whose development in the instrumental application of intell...See More

Like · Reply · 5 · October 27 at 11:48pm


Mubeen Sadhika Prem Prem i will explain my understanding soon. Thx for your comments.

Like · Reply · 1 · October 28 at 7:27pm


Prem Prem Please read: [ Ecrits: the first complete edition in English / Jacques Lacan; translated by Bruce Fink in collaboration with Heloi'se Fink and Russell Grigg.(1966,2006)

Like · Reply · October 28 at 9:33pm


Write a reply...



Mubeen Sadhika ’நான்' என்பது பிறன்மையால் கட்டப்படுகிறது என்பது லக்கான் கூறியதுதான். இதில் என்ன சந்தேகம். மேலும் இதைத்தான் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது. அதைத்தான் கவிதை 'எனது இரட்டை' என்றும் 'தன்னை மறைத்த ஒற்றையுரு' என்றும் கூறுகிறது. பிறன்மை என்பதே தானாகிவிட்டதான ஒற்...See More

Like · Reply · 2 · October 29 at 5:36pm


Kaala Subramaniam Mirror: A Psychological Door to the Otherness of Self, by ANDRE PIJET (2009) போன்ற கட்டுரைகள் அநேகம். ஓவிட் கூறும் நார்சிசஸ் போன்ற புராணக்கதைகளும், கண்ணாடியுள் கண்ணாடியாக விரியும் வெளி பற்றிய ஓவியங்களும் புகைப்படங்களும், திரைப்படங்களும் பல. மிஸ்டிகல் மரபில் கண்ணாடியைப் பற்றியும் தன் இரட்டையைச் சந்தித்தால் மரணம், தனனழிவு என்பதுமான பல ஆர்கிடைப் தொன்மங்கள் உண்டு. doppelganger பற்றிய இலக்கியப் பிரதிகள் நீண்ட மரபுடையவை. The Double என்ற தலைப்பிலேயே ஒரு ஜெர்மன் மொழிபெயர்ப்பு உளவியல் ஆய்வுநூலை 1980இல் படித்த ஞாபகம் வருகிறது. போர்ஹேஸ் தனது மிரர் பற்றிய கட்டுரையில் பல மிஸ்டிகல் மரபுக் கதைகளையும் கோட்பாடுகளையும் தொகுத்துரைப்பார். இவற்றையெல்லாம் உட்கொண்டதே ‘கண்ணாடியுள்ளிருந்து’ என்ற நெடுங்கவிதை. இந்த வியாக்யானங்கள் இல்லாமலேயே கவிதையைப் படித்து ரசிக்கலாம். பிரமிள் மிஸ்டிகல் மரபு பற்றி யாராலும் நினைத்துக்கூடிப் பார்க்கமுடியாத ஆழங்களை அறிந்தவர். தத்துவங்களில் தீவிரமான படிப்புடையவர், இந்திய ஆன்ம மரபை நன்றாக அறிந்தவர், ஓவியர், புனுவல் போன்றோர் திரைப்படங்களை விரிவாக அறிந்தவர், போர்ஹேயின் பரமரசிகர். எனவே இக்கவிதையின் பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்களைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிவெளியிடும், கவிதைகளை ஆழ்ந்து ரசித்துப் படித்ததற்கான எந்தத் தடயத்தையும் தமது விமர்சனங்கள் என்ற அரைவேக்காட்டுக் கட்டுரைகளில் வெளிக்காட்டாத சிலர் இதில் 10 சதவீதம் கூட தெரியாதவர்களே, வெறும் பின் நவீனத்துவக் கருத்தியல்களை மட்டும் படித்து எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்பவர்களும் இந்த வரிசையில்தான் சேர்வார்கள். தன்முனைப்பும் அகங்காரமும் பன்மைத்துவம் பேசியபடியே தன்னை மீறிய தனதுக்குப் புறம்பான மற்றவர்களை அவமதிக்கும் ஆங்காரமும் இப்போது காணக்கிடைக்கிறது, (உண்மையிலேயே) தனது தகுதியை ஏற்றுப் போற்றவில்லை என்ற, ஒதுக்குதலின் ஆற்றாமை வெளிப்பாடாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

Like · Reply · 3 · October 29 at 7:45pm · Edited


Perundevi Perundevi ஒன்றை மட்டும் பதிய விழைகிறேன். லகானுடைய கோட்பாடு அதன் “decentering of the self,” சுயத்தை மையத்திலிருந்து அகற்றலுக்கு முக்கியத்துவம் தருவது. ஏற்கெனவே தரப்பட்ட, சாரப்பட்ட, திடப்பட்ட ‘சுயம்’ என்பதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ’புரட்சிகரமான’ தத்துவம் என்று அறியப்படுவது அது. பிரேம் கூறியிருப்பது போல பிம்பம்வழி தன்னிலை உருவாக்கம் நடப்பதை விவரிப்பது. மற்றமையால் கட்டமைக்கப்படுவது தன்னிலை என்பது முக்கியம். குறிப்பிட்ட கவிதையில், மற்றமைக்கான இடமின்றி, ’நானாக’ இருக்கிறது மற்றமை, தன்னிலையைக் கட்டமைக்கும் இயக்கங்களை, செயற்பாடுகளை மறுப்பது இது. கவிதையில் ‘நான்’ ஒற்றையுருவாகவும், பிரதிகளாக வியாபிப்பதாகவும், அழிபட்ட நிலையிலும் எழும்பக்கூடிய ஆண்குறி லிங்கமாகவும் இருக்கிறது. தவிர, கண்ணாடி என்கிற கவிதைப்படிமம், மற்றமையாகவும் தன்னையே காண, தன்னையே பிறப்பிக்க உதவுவதாகவும் இருக்கிறது. லகானுடைய கோட்பாட்டுக்கு எதிர்நிலை என்று பிரேம் கூறுவதை இவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

Like · Reply · 2 · October 30 at 3:14am · Edited


Kaala Subramaniam கவிதையில் கண்ணாடி முன் நிற்பவன் குழந்தையல்ல. அகத்தாலும் புறத்தாலும் சமைக்கப்பட்ட வளர்ந்த ’நான்’. அவன் கண்ணாடியில் பார்ப்பது தனது ’இரட்டை’யை தனது double-ஐ. (தன் இரட்டையைச் சந்தித்தால் மரணம், ‘நான்’அழிதல், தன்னழிவு சம்பவிக்கும் என்பதும் மிஸ்டிகல் மரபின் ஒரு கூற்று, வேறு பலவும் உண்டு ) கண்ணாடிப் பிம்பத்தைப் பார்க்கும் எதார்த்த நேர்நிலையும் அதற்கான எதிரிடல்களுடன் கவிதையில் வருகிறது. அவன் ஆண் என்பதால் லிங்கம் பற்றியல்லாது யோனி பற்றி வர ஏதுவில்லை. இங்கே மற்றமையாக இருப்பது ’பிற’ அல்ல, ‘நான்’இன் பிரதி. (மற்றவன்). (போர்ஹேயின் ’மற்றவன்’ கதை வேறு காலப்பரிமாணத்தில் தன்னையே சந்திப்பதைக் கூறும்). உண்மையில் லக்கானுக்கும் இதற்கும் அதிக தொடர்பில்லை. யுங் பற்றி வந்திருக்கவேண்டும். அல்லது அதன் இலக்கிய விமர்சன வகையான ஆர்கிடைப்பல் கிரிட்டிசிசம்’ செய்திருக்கவேண்டும். இவை தமிழில் இல்லை. வாய்ப்பும் இல்லை. ஆனால் பிற கோட்பாடுகள் வழி கவிதையைப் பார்க்கலாம், மறுக்கலாம், விமர்சிக்கலாம். அதே சமயம் கவிதையிலிருந்து கோட்பாடுகளை வரவழைத்தும் காட்டலாம். இரண்டும் இல்லாமல், புரிந்துகொள்ளும் திறனும் இல்லாமல், தம்மவற்றைப்போலவே இதுவும் ஒரு சூடோ பொயட்ரி’ என்று நினைத்துக்கொண்டு, வேண்டுமென்றே ‘தகர்க்க’ நினைப்பது தங்களது போதாமைகளைத்தான் வெளிக்காட்டும். அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.

Like · Reply · 2 · October 29 at 11:52pm · Edited


Prem Prem தங்களது போதாமைகளைத்தான் வெளிக்காட்டும்.

Like · Reply · 1 · October 30 at 2:41am

Write a reply...



Prem Prem முபின் சாதிகா அவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இலக்கிய அறிவுத்துறை மாணவரும் லக்கானைப் படிக்க வேண்டும்.

ஃபிராய்டையும் லக்கானையும் படித்தால்தான் மிஸ்டிக் ஆன்மீகம் உள்ளொளி பல்லொளி என்ற மூட இலக்கிய அக்கப்போர்கள் தமிழின் குப்பை மேட்டில் கொட்டப்படும். ஃபிராய்டு மேற்குலகின் சமய அடித்தளத்தை அடித்து நொருக்கிய பெரும் பணியைச் செய்தார். ழாக் லக்கான் மேற்குலகின் மிஸ்டிக் மூடத்தனம்-மெட்டாபிசில் அய்யோக்கியத்தனம் இரண்டையும் அடித்து உடைத்து மொழியின் வழியான மனித நிலை பற்றிய மிகத்தேவையான கோட்பாடுகளை கருத்தியல்களை உருவாக்கினார். டெல்லி பல்கலைக் கழக சிறப்பு வகுப்புகளில் பிராய்ட், லக்கான், ழாக் தெரிதா, மார்க்ஸ், ஃபூக்கோ, அம்பேத்கர் பற்றிய எனது சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் மட்டுமின்றி பல ஆசிரியர்களும் உற்று பயின்று செல்வதைப் கடந்த பத்து வருடங்களாக ஒரு ஆதங்கத்துடன் கவனித்து வருகிறேன். இந்த ஆங்கிலவழி வகுப்புகள் தமிழ் மாணவர்களுக்குப் புரியாத நிலையில் மிகவும் வருத்தம் உணர்பவன். 1985 முதல் என் உரையாடல் கருத்துப் பகிர்வுகள் வழி கற்று வருகிறவர்கள் அதிகம், அது எனது அரசியல் தளம்.

தமிழ் இலக்கியக் களத்தை தற்போது ஆக்கிரமித்துள்ள சோதிடச் சொல்லிகள், ஆன்மிக அறிவீனர்கள், உள்ளொளி உன்மத்தர்கள், சாமியார் சாணத்தின்னிகள் என அறிவு மறுப்பு அரசியல் மறுப்புக் கூட்டத்திடமிருந்து உண்மையான அறிவுத்தேட்டம் உடைய இளையோர் குழுக்களை மீட்டு தற்காலத் தன்மை கொண்ட அறிவியக்கம் நோக்கி நகர்த்துவது எனது இலக்கிய- அரசியல்- கருத்தியல் செயல்பாடு. அதனை எனது ஒவ்வொரு இலக்கிய எழுத்தில் மட்டுமின்றி, நமது தமிழ்மண் போன்ற அரசியல் ஏட்டில் நான் எழுதி வரும் தொடர் கட்டுரைகளிலும் செய்து வருகிறேன்.

அந்த அறிவியக்க செயல்பாட்டின் ஒரு பகுதிதான் "உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." என்ற அடிப்படையில் தவறான ஒரு தொடர் குறித்த எனது எதிர்வினை. கண்ணாடி உள்ளிருந்து என்ற அந்த கலங்கிய கவிதை பற்றிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பின்நவீனத் தளத்தில் மட்டுமின்றி நவீனத் தளத்தில்கூட பொருளற்ற உளறல்கள் என்பதை இலக்கிய மாணவர்கள் அறிவார்கள். அது மிஸ்டிசிச மூளைச்சிக்கல் வழிப்பட்ட வார்த்தைக் கலக்கம். உளறல் இலக்கியம் செய்ய ஒருவருக்கு உரிமை இருக்கிறது.

Like · Reply · October 30 at 1:04am


Prem Prem ஆனால் தமிழில் பின்நவீனத்துவ குறியியல் உரையாடல்களில் நானும் எமது நண்பர்களும் அதிகம் பயன்படுத்தி வரும் புறத்தால் அமைந்த அகம் மொழியால் வரைந்த தன்னிலை பற்றிய லக்கானிய கருத்தியல் மாதிரியை அதற்கு முற்றிலும் முரணான ஒரு கவிதைக்கு பயன்படுத்தி அது அக்கோட்பாட்டைபிரதிபலிக்கிறது என்று எழுதி வாசித்து இணையம் வழி பரப்பி பலரின் மனதில் இல்லாத ஒரு பொய்யைப் பதியவைக்கும் போது எனது அறிவியக்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக அதனை புலப்படுத்தி அதற்கான சரியான விளக்கத்தை அளிக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு.

நான் என்ன படித்திருக்கிறேன் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதையெல்லாம் ஓராமாக ஒதுக்கிவிட்டு நான் கேட்ட கேள்வியை அளித்த விளக்கத்தை மறுபடியும் படியுங்கள். கண்ணாடியுள்ளிருந்து கவிதையின் மிஸ்டிசிஸ-தன்வியாபக குறுக்கல் வாதத்தை உடைக்கும் கோட்பாடுதான் லக்கானுடையது.
"லக்கான் பற்றி எக்ரி என்ற நூலைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய பலரின் நூல்களும் கட்டுரைகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன" என்பது எல்லோருக்கும் தெரியும் அதில் சிலவற்றை படித்திருந்தால்கூட அந்தத் 'தன்மைய பிம்பச் சிக்கல் கவிதை' லக்கானின் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது, தற்கால பின்நவீனத்துவ தானற்ற தன்னிலைக் கருத்தியலை கேலி செய்கிறது இக்கவிதை என்றுதான் ஒருவர் எழுதியிருப்பாரே தவிர 'நெருங்கிய தொடர்பு உள்ளது' என்று அப்பட்டமான அறியாமையை அறிவினால் அமைந்த வாசகம் போல எழுதியிருக்க மாட்டார். நான் சொல்ல வந்ததும் இதுதான் 'லக்கானை யார் வேண்டுமானாலும் இப்போது படிக்கலாம். அந்தக் கோட்பாட்டை இலக்கியங்களில் பயன்படுத்தி எழுதலாம்.' அதற்கு லக்கானைப் பற்றி எழுதப்பட்டவைகள் கொட்டிக் கிடந்தாலும் லக்கானின் நான்கு நூல்களை நேரடியாகப் படித்துவிடுவது நல்லது. 'இலக்கியத்தை இப்படித்தான் படிக்கவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது.'ஆனால் கோட்பாட்டை இப்படித்தான் படிக்கவேண்டும் என கோட்பாடே உங்களுக்குச் சொல்லும். அனைவரும் படியுங்கள் புரிந்து கொண்டு எழுதுங்கள் இதனைச் சொல்வது அதிகாரம் என்றால் இல்லாத ஒன்றை எழுதிப் பரப்புவதை பாசிச மாறுவேடம் என்று சொல்லலாம்.

"உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." மீண்டும் சொல்கிறேன் இந்த வாசகத்தை எழுதியவருக்கு கவிதையும் புரியவில்லை லக்கானும் புரியவில்லை. தர்மு சிவராம தர்சன மண்டலத்தை உடைத்து அதன் அறிவு மறுப்பு தன்மையத்தை விளக்க லக்கான்தான் முதல் கருத்தியல் கருவி. என் சிதைவுகளின் ஒழுங்கமைவு நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் இதனைப் பலவகையில் விளக்கியிருக்கிறேன். 20-25 ஆண்டுகளாக தமிழில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கருத்தியல் கருவியை பொறுப்பின்றி பயன்படுத்துவது தன்மிதப்புதான் என்பதை மறுமுறையும் உறுதி செய்கிறது உமது பதில்.

Like · Reply · October 30 at 1:04am


Prem Prem ' 

'பிரமிள் மிஸ்டிகல் மரபு பற்றி யாராலும் நினைத்துக்கூடிப் பார்க்கமுடியாத ஆழங்களை அறிந்தவர்." அடடா காலசுப்பிரமணியம் அருளிய வாக்கு எவ்வளவு சுயமான சுத்தமான தத்துவ தரிசனம். உங்கள் மிஸ்டிக்கா மெடிகாவை நீங்கள் கொண்டாடுங்கள் பக்த கோடிகளே. ஆனால் மிஸ்டிசிஸசம் மெடாபிசிக்ஸ் இரண்டையும் கருத்தியல் தளத்தில் உடைத்து எறிந்து மொழியின் பொருளுரும் நிலை பற்றி தன் வாழ்நாள் முழுக்க விளக்கிய ழாக் லக்கானை மிஸ்டிசிஸ தன் கலக்கத்திற்கு சாட்சியாக ஆதாரமாக பயன்படுத்துவது அறிவீனம் மட்டுமல்ல திமிர்வாதமும் கூட. அடுத்து போர்ஹஸ் வந்து மாட்டினாரா அவர் மிஸ்டிக் அனுபவத்தை மறுத்து 'மிஸ்டிபிகேஷன் இன் பிக்ஷன்' மிஸ்டிபையிங் பங்ஷன் ஆப் பிக்ஷன்' என்பதை கதைக் கணித வகைமைகள் வழி ஆராய்ந்தவர். கதையாக்கத்திற்கு வெளியே பூடக புலன் கடந்த நிலை என்று எதுவும் இல்லை என்பதை விளக்குபவை லூயி போர்ஹஸ் கதைகள். எழுதுபவர்- எழுதும் குரல் இரண்டும் ஒன்றா என்பதைக் கேள்விக்குட்படுத்திய, எழுத்து உருவாக்கும் எழுதுபவர் என்ற கோட்பாட்டை விளக்க கதைதந்த போர்ஹஸை மிஸ்டிக் கொழுக்கட்டைக்கு தீனியாக்கி உமது அறிவு பிரமிளால் கூட ஆழம்காணமுடியாத அளவுக்கு பாதளம் நோக்கிப் பாய்கிறது. எந்த பின் நவீனத்துவக் கருத்தியல்களையும் அறியாமல் எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்ள முனையும் சோதிட சிகாமணிகளுக்கு இன்னும் எதையெதையெல்லாம் சொல்லி விளக்க வேண்டுமோ தெரியவில்லை. கால சுப்புரமணியம் எழுதிப்பழகுகிறார் பார்க்கலாம், எதையாவது படித்து சில பத்திகள் எழுதட்டும். "உண்மையில் லக்கானுக்கும் இதற்கும் அதிக தொடர்பில்லை. யுங் பற்றி வந்திருக்கவேண்டும்." என்ன கொடுமை சார் இது? லக்கான் இல்லை உங்கள் விபூதியைக் கொட்டி வைக்க யுங்தான் சரியான சட்டி என்பது இளங்கலை மாணவர்களுக்குத் தெரியும். குளூத் லெவிஸ்த்ரோஸ் படியுங்கள்'மித் அண்ட் மீனிங்' நூலில் தர்மு சிவராமன் கவிதைபற்றி அதில் எழுதியிருக்கிறார். பிரடெரிக் ஏங்கெல்ஸூம் கார்ல் மார்க்ஸூம் இணைந்து 'தி ஹோலி பேமிலி' (1845) என்ற நூலில் 'மிஸ்டிரி ஆப் ஸ்பெக்குலேடிவ் கன்ஸ்ட்ரக்சன்' என்ற இயலில் கூட மிஸ்டிக் கவிதை பற்றித்தான் எழுதியிருக்கிறார்கள் இல்லையா? தர்மு சிவராமன் அதைபடித்தார் இதைக் குடித்தார் என்ற மாயாஜால மந்திர உச்சாடனத்தைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு நீ என்ன படித்தாய் நீ என்ன எழுதினாய் என்று தன்னிடம் ஒருவர் கேட்டுக் கொண்டால் 'வெறும் பின் நவீனத்துவக் கருத்தியல்களை மட்டும் படித்து எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்பவர்களும்' என்ற குரைப்புக் கோட்பாடுகளை கொட்டிவிட்டுச் செல்லமுடியாது. வெறும் பிரமிளை படித்து வெறும் பஜனையைப் பாடும் உள்ளொளி உன்மத்த நிலைக்குத் ெதரியாது வெறும் பின்நவீனத்துவம் என்றும் அதன் கருத்தியல்கள் என்றும் எதுவும் இல்லை என்பது.


Like · Reply · 1 · October 30 at 2:09am


Prem Prem சில எழுத்தாளர்கள்-கோட்பாட்டாளர்களின் பெயர்கள், சில நூல்களின் தலைப்புகள் பிறகு தமிழில் எதை உளறினாலும் கேட்க யாரும் இல்லை என்ற தினமலர் திமிர் இதை மட்டும் வைத்துக் கொண்டு கோயில் கட்டலாம் குருபூசை நடத்தலாம் ஆனால், நவீன-பின்நவீன இலக்கியம் பற்றிப் பேசவோ எழுதவோ இயலாது. எல்லாம் தெரிய வேண்டிய தேவையில்லை நாம் சொல்லுவது பேசுவது எழுதுவது என்ன என்று தெரிவதுதான் அறிவியக்கம்.

Like · Reply · October 30 at 2:16am


Prem Prem (போர்ஹேயின் ’மற்றவன்’ கதை வேறு காலப்பரிமாணத்தில் தன்னையே சந்திப்பதைக் கூறும்). என்றும் இது மிஸ்டிக் பற்றியது என்றும் ஒருவர் சுவரெழுத்து எழுதுகிறார். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் படித்த ஒரு கலைஞரின் எழுத்து என்றால் என்ன செய்வீர்கள் அது அபத்தம் என்று சொல்லுவீர்களா இல்லையா? "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்று முடியும் அக்கதை self reflective memory பற்றியது என்று சொல்லி அந்தப்பக்கத்தை எடுத்துக் காட்டினால் வெறும் பின்நவீனத்துவம் என்று சொல்லும் அறிவீனத்தை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கவேண்டியுள்ளது.

Like · Reply · October 30 at 2:38am


Kaala Subramaniam போர்ஹேயின் மற்றவன் கதையில் தன்னையே தான் சந்தித்துக்கொள்கிறான். தனது Double-ஐ அல்ல. அந்தச்சூழ்நிலையை மனநிலையை தமது மொழிமூலம் உருவாக்கிக்காட்டுகிறார். இதனால்தான் இவரது கதைகளை ‘பென்டாஸ்டிக் ரியலிசம் என்றும் ‘மிஸ்டிகல் ரியலிசம்’ என்றும் குறிப்பிட்டார்கள். ( இது The Morning of the Magicians என்ற பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1960களின் முற்பகுதியில் பிரபலமான, Louis Pauwels & Jacques Bergier எழுதிய புத்தகத்தில்தான் முதன்முதலில் பதச்சேர்க்கை பெற்றது, அதற்குமுன் ரியலிசத்திலிருந்து சோசலிசரியலிசம் என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. பின்புதான் மேஜிக்கல் ரியலிசம் வருகிறது. போர்ஹே இந்த நிலையை நம்பினார் என்றோ ஆசைப்பட்டார் என்றோ ஒரு மிஸ்டிக் என்றோ பொருளல்ல. புனைகதையிில் இதை எதார்த்தமாக்கிக் காட்டுவதுதான் இலக்கிய லட்சியம். ஆர்தர் சி, கிளாக் விஞ்ஞானப் புனைகதைகளில் அயல்கிரகவாசிகளை, அயல் உலகை, அதன ஆன்மீகத்தை உருவாக்கி எதார்த்தமாக்குவதால் அவர் பறக்கும் தட்டுகளை நம்புகிறார், உலக எதார்த்தத்திலிருந்து தப்பிக்க வைக்கிறார் என்பதல்ல. யேட்ஸ், எலியட், செஸ்டர்டன், கிரகாம் கிரீன் போன்ற எத்தனையோ நவீன எழுத்தாளர்கள் (அதற்கு முந்தியவர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தவர்கள்) சமய நம்பிக்கையுள்ளவர்கள்தாம். அதற்காக அவர்கள் எழுத்து ஒதுக்கப்படும் முட்டாள்தனம் நடந்ததில்லை. (மற்றவன் கதை எனது மொழிபெயர்ப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது. நான் தேர்ந்தெடுத்து உன்னதம் ஆசிரியரைக்கொண்டு பிரேமுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டு வெளிவந்ததுதான் Tlön, Uqbar, Orbis Tertius என்ற போர்ஹேயின் கதை) ஒருபுறம் உள்ளொளி, தரிசனம், பஜனை, சநாதனம், ஆன்மீகம் என்று ஜல்லியடிக்கிறார்கள் என்றும் மற்றொருபுறம் உடல்மொழி/வெளி, தலித்/பெண்எழுத்து, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள் என்றும் எடுத்தஎடுப்பில் மட்டையடி அடிப்பதும் பொறுப்புள்ள காரியம் அல்ல. லக்கானை லூசி இரிகரே, நோம்சாம்ஸ்கி Fashionable Nonsense என்னும் Alan Sokal & Jean Bricmont, phallocentric, sadistic narcissism உள்ள கோட்பாடு என்போர் என்றெல்லாம் மறுப்பவர்கள் பலர் உண்டு. ஆனாலும் பின்நவீனத்துவ மும்மூர்த்திகளில் ஒருவர் அவர் என்பதும் பிராய்டைப் போலவே அவரது கோட்பாடுகளின் வலிமையும் மதிப்புக்கும் இயக்கத்துக்கும் உரியவையே. சாரங்களைத் தெரிந்து மட்டும் பயனில்லை என்று ஒரு சமயம், மூலங்களைப் படிக்கவைக்கவேண்டும் என்ற அற்ப ஆசையில் (யாரும் படிக்கத்தயாரில்லை என்ற தடைப்படுத்தல்களையும் மீறி) சில முக்கியமான பின்நவீனத்துவ, குறியியல் கோட்பாட்டாளர்களின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்க்க வைத்து (அதன் கஷ்டம் பெரிது) ஓரிரு கட்டுரைகளை லயத்திலும் உன்னதத்திலும் வரச்செய்துள்ளேன். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பல கட்டுரைகள் உன்னதம் ஆசிரியரிடம் சிக்கிப் பூதம் காத்த புதையலாக இருக்கின்றன. யாரையோ கொண்டு மொழிபெயர்த்த லக்கானின் முக்கியமான கட்டுரையும் அதிலொன்று, நான் மொழிபெயர்த்தது ஒன்றிரண்டு வேறுபெயர்களில் வந்தன. நான் மொழிபெயர்த்துப் பிரசுரமாகாத தோடரோவ் போன்றோரின் சில கட்டுரைகளைக் கூட என்னால் அவரிடமிருந்து மீட்க முடியவில்லை-இப்போது வெளியிடும் வாய்ப்பிருந்தும். சரி, அப்படி அன்று வெளியிட்ட கட்டுரைகளையும் யாரும் வாசித்தார்களா என்ற சந்தேகமே உள்ளது.

Like · Reply · 1 · October 30 at 4:48am · Edited


Prem Prem போர்ஹேயின் மற்றவன் கதை The Other என ஆங்கில வடிவம். முதிய போர்ஹஸ் இளைய போர்ஹஸ் மனக்களத்தில் சந்தித்தல். "Suddenly, I had the sense (which psychologists tell us is associated with states of fatigue) that I had lived this moment before." என்ற குறிப்பு வரிகளைக் கொண்டது. எனது 'போர்ஹே என்னும் கணிதவியல் வினோதமும் கதைமரபின் விரீத மாற்றங்களும்" கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன இருக்கலாம் உன்னதம் சிறப்பிதழில் வந்து தொகுதியில் சேர்ந்து பின் மணல் பிரதி கதைத் தொகுதியின் அறிமுகக் கட்டுரையாக தளவாய் சுந்தரத்தால் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் லாயத்தில் அடங்காத குதிரையை உங்களுக்குத் தெரியாது.

Like · Reply · October 30 at 3:55am


Prem Prem "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்ற வாக்கியத்தின் அதிசயம் உணர்த்தும் சொல்லான impossible date என்பதை டாலர் நோட்டில் இருந்த தேதியை என்றும் rigorously என்பதை துல்லியமாக என்றும் மொழி பெயர்த்துவிட்டு போர்ஹே-வை நானும் பிரமிளும் தவிர எவன் படிச்சான் அப்படின்னு சவால் விடுபவர்களைக் கண்டு கௌதம சித்தார்த்தன் மிரளலாம் காலசுப்புரமணியம் அவர்களே. பின்நவீனத்துவம் மட்டுமல்ல உங்களைப் போன்ற லயப்பாடிகளின் முன்நவீனத்துவத்தையும் கடந்தே நான் வந்திருக்கிறேன்.

Like · Reply · October 30 at 4:05am

Write a reply...



Prem Prem 'ஆர்கிடைப் தொன்மங்கள் உண்டு' இப்படிச் சொல்வது அபத்தம் அறியாமை என்பதை பின்நவீனத்து அறிவுள்ளவர்கள் மட்டுமல்ல முன்நவீனத்துவ முரடர்கள் கூட சொல்லிக்காட்டுவார்கள்தானே?

Like · Reply · October 30 at 2:53am


Kaala Subramaniam தொன்மம் என்று கா,மீனாட்சிசுந்தரம் புராணக் கதைகளுக்குப் பயன்படுத்திய சொல் பின்பு தொல்படிவம் எனப்படும் ஆர்க்கிடைப்புக்கும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது கல்விவட்டாரத்தில். எனவே தொல்படிவக் கதைகள் கருத்துக்கள்/புராணிகம் என்ற பொருளில் ஆர்க்கிடைப்/தொன்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

Like · Reply · October 30 at 5:05am


Prem Prem "சக்தியும் சிவனும் ஒளியாகவும் நிழலாகவும் கண்டு அணுவின் கோர்ப்பை விளக்குகிறது இக்கவிதை. ஜடப் பொருள்களும் சக்தியின் சலனமாகவே கவிதை பார்க்கிறது. அழியும் பொருள்கள் யாவும் சிவனின் இயக்கத்தைச் சார்ந்தவை என்று வரையறுக்கிறது இக்கவிதை. அறிவியிலில் தொடங்கி சைவத்தின் ஆன்மீகத்தில் முடிக்கிறது இக்கவிதை." நவீனத்தின் உச்சம் நம் காலச் சிந்தனையின் மிச்சம் இந்த வரிகள் இல்லையா?? சைவமா ஆன்மிகமா சைவ ஆன்மிகமா ஆன்மிக சைவமா? லக்கானில் தொடங்கி லயத்தில் முடியுமா இன்றைய தமிழ்ச்சிந்தனை?

Like · Reply · October 30 at 3:00am


Kaala Subramaniam சிவதாண்டவத்தையும் அணுத்தாண்டவத்தையும் ஒன்றாகக் கண்ட பிரிட்ஜாப் காப்ரா (டாவோ ஆஃப் பிசிக்ஸ்) போன்றோரை சுஜாதா என்ற ‘விஞ்ஞான’ எழுத்தாளர் போற்றியபோது அதை மறுத்து எழுதியதுதான் ‘விஞ்ஞானம் ஞானம் விபூதிப்பட்டை’. இங்குவரும் சக்தியும் சிவனும் சைவமல்ல. சாக்த தாந்ரீகத்தைச் சேர்ந்தவை.

Like · Reply · 1 · October 30 at 5:15am


Prem Prem "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்ற வாக்கியத்தின் அதிசயம் உணர்த்தும் சொல்லான impossible date என்பதை டாலர் நோட்டில் இருந்த தேதியை என்றும் rigorously என்பதை துல்லியமாக என்றும் மொழி பெயர்த்துவிட்டு போர்ஹே-வை நானும் பிரமிளும் தவிர எவன் படிச்சான் அப்படின்னு சவால் விடுபவர்களைக் கண்டு கௌதம சித்தார்த்தன் மிரளலாம் காலசுப்புரமணியம் அவர்களே. பின்நவீனத்துவம் மட்டுமல்ல உங்களைப் போன்ற லயப்பாடிகளின் முன்நவீனத்துவத்தையும் கடந்தே நான் வந்திருக்கிறேன்.

Like · Reply · October 30 at 4:08am


Kaala Subramaniam உங்களுடைய மேலுள்ள கிண்டல்களின் அபத்தத்தையும் அறியாமையையும் நினைத்தால் ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்னசெய்ய? இன்றைய இணைய யுகத்தில் போர்ஹேயின் கதையை எளிதாகத் தேடிப்பிடித்து, உன்னதம் உங்களிடம் இருக்கும் என்பதால் உடனே ஒப்பிட்டுப் பார்த்து (உங்களடையதும் அதிலே வந்திருக்கலாம், அல்லது முன்பின் இதழ்களில்) ’கண்டுபிடித்த’ உழைப்பைப் பாராட்டலாம். ஆனால் போர்ஹே போன்றவர்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மொழிபெயர்ப்பு இருக்கும் என்ற சிறு ஞானம் கூடவா பிரேமானந்தருக்கு இல்லாமலாகும். சரி இப்படியெல்லாம் வீணாக எழுதி உங்களைப் போலவே விரையமாக்க வேண்டாம் என்று நினைத்தாலும் உங்கள் தோரணை இப்படிச் செய்யவைத்துவிட்டது. மன்னிக்க. \\ The other man dreamed me, but he did not dream me exacty. He dreamed, I now realize, the date on the doller bill. // The Book of Sand, Tr. by Norman Thomas di Giovanni, 1979. P.10. போர்ஹேவைப் படித்தவர்கள் இன்று ஏராளம் உள்ளனர், அன்று கநாசுவும் பிரமிளும்தான் மொழிபெயர்த்தார்கள்.

Like · Reply · October 30 at 8:43am · Edited


Prem Prem போர்ஹஸை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். கௌதம சித்தார்த்தன் வகையாறாக்களுக்கு உங்கள் ஞானமோதிரம் பொருந்தலாம். இன்றைய வாசகர்களுக்கு அல்ல. The Other என்பதை 'மற்றவன் ' என்று மொழிபெயர்த்ததே புரிதலை அழித்த பொறுப்பற்றதனம் 'மற்றொருவன்' என்று கிறுக்கியிருந்தால்கூட ஏதோ கொஞ்சம் தெரிந்துதான் படித்திருக்கிறான் இந்த ஆள் என்று நம்பலாம். அன்று கநாசுவும் பிரமிளும்தான் மொழிபெயர்த்தார்கள். அதற்கு என்ன அன்று ஏழுகழுதை வயதான ஆட்கள் இவர்கள்தான் இதைக்கூடச் செய்யாமல்? மிஸ்டிக் -போர்ஹே என்று உளறுவதை நிறுத்து என்றால் கிண்டலாம் கேலியாம்.

Like · Reply · October 30 at 11:36am · Edited

Write a reply...



Prem Prem என்னைக் கற்றுச் சொல்லியெனச் சொல்லிய காலசுப்புரமணியம் உங்களைப் போன்ற கற்காமல் சொல்லிகளுக்கு விளக்கம் தருவது என் எழுத்தின் களத்திற்கும் வாசிப்பின் தளத்திற்கும் தேவையற்ற ஒரு வீண்வேலை என்பது எனக்கு மிகநன்றாகத் தெரியும்.

என்றாலும் இல்லாத நிகழ்வுகளில் சிலையெழுப்பி இன்று உதவாத எழுத்துக்களுக்கு பாலபிஷேக உபயம் செய்து பஞ்சாமிர்த மகுடம் வைத்து புதுவகை பூசக வியாபாரம் தொடங்கியுள்ள உங்களையும் ஏதோ இலக்கியம் செய்யும் நபர் என்று நம்பி புதிய தலைமுறையினர் சிலர் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அறிவிக்கவே சிலவற்றை எழுதுகிறேன்.

Like · Reply · October 30 at 12:04pm

மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

http://mubeen-sadhika.blogspot.in/2015/08/blog-post_24.html
நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் சென்றிருக்கலாம். என்னை இங்கு கொண்டுவந்து விட்டிருக்கலாம். நான் இங்கு தனியாக வந்திருக்கமாட்டேன். ஒவ்வொரு வாரமும் இங்கு ஒருவன் வருகிறான். அவனால் இங்கு நான் வந்திருந்தால் அவனுக்கு நன்றி. அவன் இல்லை என்கிறான். எனக்கு பணம் கொடுத்துவிட்டு நான் எழுதுவதை எடுத்துச் செல்கிறான். எத்தனை பக்கம் எழுதுகிறேனோ அத்தனை பணம். ஆம் இப்போது நான் வேலை செய்கிறேன், எனக்கு தெரிந்த வகையில், ஆனால் எனக்கு வேலை செய்யத் தெரியாது. அது பெரிய ஒன்றல்ல. இப்போது நான் என்ன விரும்புகிறேன் என்றால் விடுபட்டவற்றைச் சொல்லிவிட்டு, விடைபெறுதல்களுடன் மரணத்தை முடிக்கவேண்டும். அவர்களுக்கு அது தேவை இல்லை. ஆம், ஒன்றுக்கும் மேல் ஒன்று இருக்கிறது. ஆனால் எப்போதும் வருவது அதேதான். நீ நன்றாக செய்வாய் என்கிறான் அவன். நல்லது. என்னிடம் அதிகம் விடுபட்டது எதுவும் இல்லை என்பதே உண்மை. அவன் புதிதான பக்கங்களுக்காக வரும் போது முந்தைய வாரத்தின் பக்கங்களை எடுத்து வருகிறான். அவற்றில் எனக்குப் புரியாத அடையாளங்கள் இடப்பட்டிருக்கின்றன. எப்படியாயினும் அவற்றை நான் படிப்பதில்லை. நான் எதுவும் செய்யாத போது அவன் எனக்கு எதுவும் தருவதில்லை, என்னைத் திட்டுகிறான். இருப்பினும் நான் பணத்திற்காக வேலை செய்வதில்லை. பிறகு வேறு எதற்கு? எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவெனில் எனக்கு அதிகம் தெரியாது. உதாரணமாக, என் தாயின் மரணம். நான் இங்கு வந்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டளா? அல்லது அதன் பிறகுதான் அவள் இறந்தாளா? அதாவது புதைக்கும் அளவுக்கு என்ற பொருளில். எனக்குத் தெரியவில்லை. ஒருகால், அவர்கள் அவளை இன்னும் புதைக்காமல் இருக்கலாம். எப்படியாயினும் எனக்கு அவளுடைய அறை கிடைத்துவிட்டது. நான் அவள் படுக்கையில் தூங்குகிறேன். அவளுடைய கழிப்பறையில் மல, ஜலம் கழிக்கிறேன். நான் அவள் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டேன். நான் அவளைப் போலவே இருக்கவேண்டும். இப்போது எனக்குத் தேவைப்படுவது எல்லாம் ஒரு மகன். ஒருவேளை எங்காவது ஒரு மகன் இருக்கலாம். ஆனால் இல்லை என்றே நினைக்கிறேன். அவனுக்கு இப்போது வயதாகி இருக்கலாம், கிட்டத்தட்ட என் வயதாகியிருக்கும். அது ஒரு சிறிய பணிப்பெண்ணுடன். அது உண்மையான காதல் இல்லை. உண்மையான காதல் வேறொருத்தியுடன். அது பற்றி வருவோம். அவள் பெயர்? அதை மறுபடியும் மறந்துவிட்டேன். எனக்கு என் மகனைத் தெரியும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது, அவனுக்கு நான் உதவியிருக்கிறேன். அதன் பின் நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன், அது சாத்தியமில்லை. நான் யாருக்காவது உதவியிருப்பேன் என்பது சாத்தியமில்லை. நான் எப்படி உச்சரிப்பது என்பதையும் பாதி சொற்களையும் மறந்துவிட்டேன். அது ஒரு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். நல்லது. என்னை சந்திக்க வருபவன் எந்த பயனும் இல்லாதவன். உண்மையில் அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருகிறான். மற்ற நாட்களில் அவன் ஓய்வாக இல்லை. அவன் எப்போதுமே தாகம் கொண்டவனாக இருக்கிறான். அவன்தான் நான் எல்லாமே தவறாகத் தொடங்கியதாகவும், நான் எல்லாவற்றையும் வித்தியாசமாகத் தொடங்கியிருக்கவேண்டும் என்றும் கூறினான். அவன் சொல்வது சரியாக இருக்கலாம். நான் தொடக்கத்தில் பழைய பீஜத்தைப் போல் தொடங்கினேன். உங்களால் அதை கற்பனை செய்ய முடிகிறதா? இதுதான் என் தொடக்கம். ஏனெனில் அவர்கள் அதை உண்மையாக வைத்திருக்கிறார்கள். நான் அதில் பல சிக்கல்களைச் செய்தேன். இதுதான் அது. அது எனக்கு பல தொல்லைகளைக் கொடுத்தது. அது தான் தொடக்கம். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் இப்போது இறுதிக்கு வந்துவிட்டது. இப்போது நான் செய்வது கொஞ்சம் நன்றாக இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. அது வேறொரு அம்சம். இதுதான் என் தொடக்கம். அது ஒரு பொருளைத் தரவேண்டும் அல்லது அவர்கள் அதை வைத்துக் கொள்ளமாட்டார்கள். அது இதுதான்.

...

என் திட்டத்தை நான் துல்லியமாக்கிய போது என் சைக்கிள் ஒரு நாயின் மீது ஏறிவிட்டது, அப்படித்தான் தோன்றியது, மன்னிக்க முடியாத திறமையின்மையுடன் கீழே விழும் போது, கழுத்தில் பட்டை அணிந்த நாயைப் போல் சாலையில் அல்லாமல் நடைபாதையில் அதன் பெண் உரிமையாளரின் காலடியில் அந்த நாய் பவ்யமாய்க் கிடந்தது. முன்னெச்சரிக்கைகள், முடிவுகளைப் போல் முன்னெச்சரிக்கையுடன் எடுக்கப்படவேண்டியவை...நான் அந்த சிக்கலை அதிகமாக்க அங்கிருந்து ஓடிப்போனேன். நான் உடனடியாக ரத்தவெறி கொண்ட பெரிய கும்பலால் ஆட்கொள்ளப்பட்டேன்...என்னை அவர்கள் துண்டுத்துண்டாக கூறாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது அந்த பெண் தலையிட்டாள்...இந்த வயதானவரை விட்டுவிடுங்கள்...அவர் டெட்டியை கொன்றுவிட்டார், அதை நான் என் குழந்தையைப் போல் நேசித்தேன் என்பதை உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது ஒரு பெரிய காரியமாகக் கருதமுடியாது, அதை நான் ஒரு மிருக வைத்தியரிடம் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது நடந்திருக்கிறது, அதனால் அதன் வலியிலிருந்து இந்த சம்பவம் அதை விடுவித்திருக்கிறது. டெட்டி வயதாகி, பார்வையற்று, கேட்கும் திறனற்று, முடக்குவாதத்தால் முடங்கி, மல,ஜலம் வெளியேற்ற முடியாமல், இரவிலும் பகலிலும் உள்ளேயும் வெளியேயும் அலைந்துகொண்டிருந்தது. என்னை ஒரு வலிமிக்க வேலையிலிருந்து காப்பாற்றிய இந்த வயதான மனிதருக்கு நன்றி சொல்லவேண்டும், இதற்காக ஆகப்போகும் செலவு பற்றி சொல்லவே வேண்டாம், அதை நான் ஏற்றிருக்கவே முடியாது... ஏனெனில் பாதுகாப்பு படையில் வேலை செய்து இறந்து போன என் கணவரின் ஓய்வூதியம் மட்டுமே எனக்கு ஆதரவாக உள்ளது. அந்த கும்பல் கலைந்து போகத் தொடங்கியது...அங்கிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த பெண் திருமதி லாய், இப்போது சொல்லும் பெயர்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறேன், அல்லது லோஸ், கிறித்துவ பெயர், சோஃபி என்பது போல் ஏதோ ஒன்று, என் கோட்டின் பின் புறத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள், நான் முதல் முறையாகக் கேட்ட சொற்களைப் போன்று ஒலிக்கும் சொற்களைப் பேசினாள், கனவானே, நீங்கள் எனக்குத் தேவைப்படுகிறீர்கள். என்னை எப்போதும் கைவிடும் என் பாவனையை அவள் பார்த்ததிலிருந்து, அவள் எனக்கு புரியவைத்துவிட்டாள் என்பது போல இருந்தது, இதைப் புரிந்து கொண்டால் அவர் எதையும் புரிந்துகொள்வார் என்பது போல அவள் சொன்னாள்....ஆஹ் ஆம் எனக்கும் அவள் தேவை என்று தோன்றியது. அந்த நாயைப் புதைக்க அவளுக்கு நான் தேவை, எனக்கு அவள் எதற்காக தேவை என்பதை மறந்துவிட்டேன்..

ஒரு பெண் என்னை என் தாய் நோக்கி நான் தள்ளப்பட்டதிலிருந்து தடுத்திருப்பாளா? இருக்கலாம். நல்லதுதான் இருந்தாலும், அது போன்ற ஒரு நிகழ்வு எனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் சாத்தியமாகியிருக்குமா? ஆண்கள் சிலருடன் போராடியிருக்கிறேன், ஆனால் பெண்கள்? ஓ நல்லது, இந்த நேரத்தில் நான் உண்மையைச் ஒத்துக்கொள்ளவேண்டும், நான் ஒரு முறை ஒரு பெண்ணுடன் இழைந்திருக்கிறேன். நான் என் தாயைக் குறிப்பிடவில்லை. நான் அவளுடன் இழைந்தது தவிர இன்னும் பலவற்றைச் செய்திருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என் தாயை இவற்றிலிருந்தெல்லாம் விடுவித்துவிடலாம். ஆனால் மற்றொரு பெண், என் தாய் ஆகக்கூடியவர், என்னைப் பொறுத்தவரை வாய்ப்பிருந்திருந்தால் என் பாட்டியும் கூட ஆகக்கூடியவர். வாய்ப்பு பற்றி இப்போது அவன் பேசுவதை கவனியுங்கள். அவள்தான் எனக்கு காதலுக்கு நெருக்கமாக்கினவள். அவள் அமைதியின் பெயரான ரூத் என்று அழைக்கப்பட்டாள் என்று நினைக்கிறேன், எனக்கு சரியாக நினைவில்லை. அந்த பெயர் எடித் என்றிருக்கலாம். அவள் கால்களுக்கு இடையில் ஒரு துளை இருந்தது, நான் எப்போதுமே கற்பனை செய்வது போல் குப்பிகளில் போடப்படும் துளை போன்றதல்ல, ஒரு துவாரம், அதில்தான் அவள் சொல்வது போல் வீரியமிக்க என் குறியை, என்னை நுழைப்பேன், அல்லது அவள் நுழைத்துக் கொள்வாள், கொஞ்சமும் சிரமப்படாமல், நான் திண்டாடி திணறி வெளியேற்றும் வரை, அல்லது முயற்சியை நிறுத்தும் வரை, அல்லது அவள் போதும் என்று மன்றாடும் வரை...

நான் இந்த காட்டில் சில பேரைப் பார்த்திருக்கிறேன், வேறு எங்குதான் இப்படி நடக்கவில்லை, ஆனால் குறிப்பிடும்படியாக எதுவும் நடந்ததில்லை. நான் ஒரு நிலக்கரி எரிக்கும் ஒருவரை சந்தித்தது குறிப்பிடத்தக்க ஒன்று., நான் எழுபது வயது குறைவாக இருந்திருந்தால் நான் அவனை நேசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. அப்படி இருப்பின் அவனும் அதே அளவு மிகவும் இளமையாக இருந்திருப்பான், அந்த அளவு இல்லை என்றாலும் இளமையாகத்தான் இருந்திருப்பான். ஆனால் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நேசம் என்னிடம் இல்லை, நான் சிறிய வயதாக இருக்கும் போது, என்னிடம் ஒரு சிறு அளவு இருந்தது, அது முதுமையில் முடிந்த அளவு போய்விட்டது. ஒரு சிலரை நேசிக்கலாம் என்று நினைக்கிறேன், ஓ உண்மையான காதல் அல்ல, இல்லை, மூதாட்டி மீதான காதல் போல் அல்ல, நான் மீண்டும் அந்த பெண்ணின் பெயரை மறந்துவிட்டேன், ரோஸ், இல்லை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று, எப்படிச் சொல்வது, நல்ல நிலையில் இருக்க விரும்புபவர்கள் மென்மையாகக் கையாளப்படுவது போலத்தான். நான் வயதுக்கு மீறிய அறிவுத்திறனை உடைய குழந்தை அதன் பின் அறிவில் முதிர்ச்சி அடைந்த மனிதன். ஆனால் எல்லோரும் எனக்கு முதிர்ந்த, முதரிச்சி அடையாத பழங்களை கிளைகளிலிருந்து தருகிறார்கள். அவன் என் மீது படர்ந்தான், நீங்கள் நம்பினால் நம்புங்கள், அவனுடைய குடிசையைப் பகிர்ந்து கொள்ள கெஞ்சினான். அவன் அரிதானவனாக இருந்தான். தனிமையில் இருப்பது அவனுக்கு நோய்மையாக இருந்திருக்கலாம். நான் அவனை நிலக்கரி எரிப்பவனாக சொல்கிறேன், ஆனால் எனக்குத் தெரியாது. நான் அங்கு எங்கோ புகையைக் கண்டேன். புகை என்னிடமிருந்து எப்போதும் தப்புவதில்லை. ஒரு நீண்ட பேச்சு, முனகல்களுடன் நடந்தது. அவனிடம் என் நினைவில் இப்போது கூட இல்லாத என் ஊரின் பெயரையும் என்னுடைய ஊருக்கான வழியையும் கேட்க முடியவில்லை. அவனிடம் அருகிலிருக்கும் ஊரின் வழியைச் சொல்லும்படிக் கேட்டேன். எனக்குத் தேவையான சொற்களையும் உச்சரிப்புகளையும் கண்டுகொண்டேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் காட்டில் பிறந்து அங்கேயே முழு வாழ்வையும் கழித்திருக்கலாம். அவனிடம் காட்டிலிருந்து வெளியேறும் அருகிலிருக்கும் வழியைக் கேட்டேன். நான் நன்றாக பேசும் அளவுக்கு மாறினேன். அவன் பதில் மிகவும் குழப்பமாக இருந்தது. நான் அவன் பேசுவதில் ஒரு சொல்லைக் கூடப் புரிந்துகொள்ளவில்லை அல்லது நான் பேசுவதில் ஒரு சொல்லைக் கூட அவன் புரிந்துகொள்ளவில்லை, அல்லது அவனுக்கு எதுவுமே தெரியவில்லை, அல்லது அவன் என்னை அருகில் வைத்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். நான் போக முனையும் போது அவன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான் அப்போது  அந்த நான்காவது கருதுகோளைத்தான் அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் நான் அறிந்தேன். அதனால் நான் என் ஊன்றுகோலில் ஒன்றைத் தேர்ச்சியுடன் எடுத்து அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டேன். அது அவனை அமைதி ஆக்கியது. முதிய அழுக்கான முட்டாள். நான் எழுந்து நடந்தேன்.

...

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. நான் அமைதியாக இருக்கிறேன். எல்லோரும் தூங்குகிறார்கள். இருந்தாலும் நான் எழுந்து என் மேஜை அருகில் செல்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. என் விளக்கு மென்மையான தொடர்ச்சியான ஒளியைப் பாய்ச்சுகிறது. அதை குறைத்தேன். அது காலை வரை எரியும். நான் ஆந்தைகள் கத்துவதைக் கேட்கிறேன். என்ன ஒரு போராட்டத்தின் ஓலம்! நான் அதை ஓரிடத்தில் நின்று கேட்கிறேன். என் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தூங்கட்டும். அவனும் தூங்கமுடியாத இரவுகள் வரும், அப்போது அவன் மேஜைக்கருகில் எழுந்து செல்வான். நான் மறக்கப்பட்டிருப்பேன்.

என் அறிக்கை நீளமானது. என்னால் முடிக்க முடியாமல் இருக்கலாம். என் பெயர் மோரான், ஜேக்கஸ். இந்தப் பெயரால்தான் நான் அறியப்பட்டிருக்கிறேன். என்னுடையது முடிந்துவிட்டது. என் மகனுடையது கூட முடிந்துவிட்டது. எல்லாமே சந்தேகமற. அவன் உண்மையான வாழ்க்கையின் இறுதியில் இருப்பதாக அவன் நினைக்கவேண்டும். அவன் அங்குதான் இருக்கிறான். என் பெயரைப் போல, அவன் பெயர் ஜேக்கஸ். இது குழப்பத்திற்குக் காரணமாக இருக்கக்கூடாது...

மோலாயைத் தேடச் சொல்லி எனக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நாளை என்னால் மறக்க முடியாது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை...ஒரு மனிதன் தோட்டத்தில் நுழைந்து என்னை நோக்கி நடந்து வந்தான். அவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனை எனக்கு நன்றாகத் தெரியும்...இந்த மனிதன் எனது அண்டை வீட்டுக்காரன் அல்ல, இவனுடனான எனது போக்குவரத்துகள் எல்லாமே வேலை சார்ந்தவை, அவன் மிகவும் தூரத்திலிருந்து பயணித்து என்னை தொல்லை செய்ய வந்திருந்தான்.

அன்னை மோலாய் அல்லது மோலோஸ் நான் முற்றிலும் அறியாதவர் அல்ல என்று தோன்றியது. ஆனால் அவருடைய மகனை விட குறைவாகத்தான் உயிரோடிருக்கிறார் என்று கடவுள் தூரத்திலிருந்து அறிந்திருப்பார்...

அவனைப் பற்றி முற்றுமாக அறிந்திருக்கவில்லை என்றாலும் எனக்கு மோலாயைத் தெரியும். ஏதோ சுருக்கமாக தெரிந்திருந்தது என்று நான் சொல்லலாம். நான் மோலாயைப் பற்றிய அறிய, ஒன்றுமே தெரியாத இடைவெளியைப் பற்றி அறியும் கவனத்தைக் கொடுத்திருக்கிறேன்.

நாங்கள் பல நாட்கள் தனிப்பாதைகளில் நடந்தோம். முக்கிய சாலைகளில் நான் தென்படுவதை விரும்பவில்லை...

கிளைகளைக் கொண்டு போக்கிடம் அமைப்பதை என் மகனுக்குக் கற்றுக் கொடுத்தேன். அவன் சாரணர் இயக்கத்தில் இருந்தும் அவனுக்கு எதுவும் தெரியவில்லை...

மாலையாகிவிட்டதால் நான் தீ மூட்டிவிட்டு அது பற்றிக் கொள்ளக் காத்திருந்த போது ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன். எனக்கு மிக அருகில் ஓர் ஆணுடைய குரல் என்னை அதிரச் செய்தது...

நான் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா?அவன் கேட்டான். நான் போக்கிடம் அருகில் செல்லும் போது என் காலை எடுத்து வைக்க முடியாமல் அவன் என் பாதையை மறித்தான். உன்னுடைய நாக்கு உன் தலையில் உள்ளதா? அவன் கேட்டான். உன்னை எனக்குத் தெரியாது என்றேன். நான் சிரித்தேன். நான் நகைச்சுவையான உள்நோக்கம் கொண்டிருக்கவேண்டாம் என்று நினைத்தேன்...அவன் என் அருகில் வந்தான். என் வழியிலிருந்து அகன்று விடு என்றேன். இப்போது சிரிப்பது அவன் முறை. நீ பதில் சொல்ல மறுக்கிறாய்? அவன் சொன்னான்...உனக்கு என்ன தெரியவேண்டும்?நான் கேட்டேன்...சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்த வழியாகக் கடந்து சென்ற கையில் தடி வைத்திருந்த ஒரு வயதான நபரை நான் பார்த்தேனா என்று கேட்டான். இல்லை என்றேன். இல்லை என்றால் என்ன பொருள்?என்றான். நான் யாரையும் பார்க்கவில்லை என்றேன்...அவன் என் மீது கையால் குத்தினான். அவனை என் வழியிலிருந்து அகன்றுவிடச் சொன்னதாக நினைவு. வெள்ளையான கை மூடியும் விரிந்தும் என்னை நோக்கி வந்ததை என்னால் இன்னும் கூட மறக்க முடியவில்லை. தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டது போல. அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, இல்லை அதிக நேரம் கழித்து அவன் நிலத்தின் மீது படர்ந்து கூழாய் வீழ்ந்திருந்தான்...

இப்போது நான் முடிக்க முயல்கிறேன்...

யூதி ஆணையிட்டது போல் நான் வீடு வந்துவிட்டேன்...
அவனுக்கு அறிக்கை தேவைப்பட்டது. அவனுக்கு அறிக்கை கிடைத்துவிடும்.

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. அது நள்ளிரவு. மழை பெய்யவில்லை.

*********

கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு