Tuesday, 15 January 2019

0 டிகிரி - சாரு நிவேதிதா ::: சில பகுதிகள்



இவர்களைத் தவிர ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்று பிரசங்கம் செய்யும் இளைஞன். தீர்க்கதரிசியின் மறுவருகையை உருக்கமான குரலில் | அறிவிக்கும் பிரசங்கி. ஒம்போது பளம் ஒம்போது ரூவா என்பதை எண்ணற்ற தடவைகள் திருப்பித் திருப்பிக் கூவியபடி பெரிய சாத்துக்குடிப் பழக்கூடையைச் சுமந்து செல்லும் பெண். எலுமிச்சம் பழ சைசில் இருக்கும் ஆப்பிள் பழங்களை காஷ்மீர் ஆப்பிள் காஷ்மீர் ஆப்பிள் என்று கத்தியபடி விற்கும் கறுத்த சிறுவன். முள்வாங்கி நகவெட்டி காது குரும்பை ரேஷன் கார்டு கவர் ஐடென்டி கார்டு கவர் எலெக்ட்ரிசிடி கார்டு கவர் பால்கார்டு கவர் சீசன் டிக்கெட் கவர் என்று ராகத்துடன் கூவிக்கொண்டு வரும் கண் பார்வையற்றவன். ஸ்வெட்டர் பின்னும் ஊசி அளவுக்குத் தடிமனான நீண்ட ஊசியை நாக்கில் குத்தியிருந்த கறுத்த உடம்புக்காரன் தன் உடம்பு முழுதும் மஞ்சளையும் சாம்பலையும் பூசியிருந்தான். இடுப்பில் மஞ்சள் துண்டு. துண்டின் ஓரம் முழுதும் ஓம் முருகா எழுதியிருந்தது. நாக்கு நுனியிலிருந்து எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. அருகே வந்து உண்டியலைக் குலுக்கிய அவனைத் தவிர்த்துவிட்டு முன்னால் நகர்ந்தான் சூர்யா. ரயில் நிலைய வாசலில் நான்கைந்து கண் பார்வையற்றவர்கள் சிறிய ஒலிபெருக்கி டோலக் ஆர்மோனியம் அகார்டியன் என்று வைத்துக்கொண்டு சோகமான குரலில் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதைய . இசையமைப்பாளர்கள் இந்தக் கண்பார்வையற்ற பாடகர்களுக்காகவே இசையமைத்திருப்பார்களோ என்று அவனுக்குத் தோன்றியது. ரயில் நிலையத்திற்கு வெளியே இருக்கும் இவர்களைத் தவிர்க்க  முடியாதென்றாலும் குறைந்தபட்சம் ரயிலுக்குள் வரும் பிச்சைக்காரர்களையும் விற்பனையாளர்களையும் பிரசங்கிகளையுமாவது தவிர்த்து விடலாம் என எண்ணிய சூர்யா முதல் வகுப்பில் பயணம் செய்ய ஆரம்பித்தான். 

வீடுகளுக்குப்போய் வீட்டு வேலை செய்து பிழைக்கவும் வழியில்லை. அதற்கு நகரத்துக்குப் போக வேண்டும். இந்தக் கிராமத்தில் அதற்கெல்லாம் வழியில்லை . 

கமலநாதனுக்கு வருமானம் இருந்தால் அன்றைய தினம் ஆர்த்தியிடம் பிரியமாக இருப்பான். பூ வாங்கி வருவான். சினிமாவுக்கு அழைத்துப் போவான். ஆனாலும் கடைசியில் அடி உதையில்தான் முடியும். 

அவள் மாதமாக இருந்தபோது நடந்த சண்டையில் அதுதான் அவன் அவளுடன் போட்ட கடைசி சண்டை அவன் அவளை தேவடியாள் என்று திட்ட பதிலுக்கு அவள் சொன்னதைக் கேட்டு அவன் உறைந்து போனான். 

- ஆமாண்டா. நான் தேவடியாதான்டா. என் வயித்துலெ வளர்ற  புள்ளெகூட உன் மூலமா தரிச்சது இல்லடா. இது சாமி சத்தியன்டா. 

அன்றைக்குக் கமலநாதன் ஆர்த்தியை அடிக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் பணம்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. மறுநாள் பெரிய திருட்டாக திட்டமிட்டான். பேங்கிலிருந்து பணப்பையுடன் வெளியே வந்த ஆளிடமிருந்து பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். ஆனாலும் எப்போதும் அவனைத் தொடர்ந்து வரும் துரதிர்ஷ்டம் அன்றைக்கும் அவனை விடவில்லை. அகப்பட்டுக் கொண்டான். வாங்கிய அடியில் உயிர் பிழைத்ததே அபூர்வம். அன்றைக்கு அவன் உயிரைக் காப்பாற்றியதே போலீஸ்காரர்கள்தான். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த போலீஸ் ஜூப்தான் அவன் இன்னமும் உயிரோடு இருப்பதற்குக் காரணம். பணக்காரனாவதென்பது மிகவும் சுலபமான விஷயமாகத்தான் இப்போதும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அவ்வளவுதான். அன்றைய தினம் அவன் மாட்டிக் கொள்வான் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? 

பொதுவாகவே அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் இருக்காது. அதுவும் அன்றைய தினம் மதிய நேரம். உச்சி வெயிலில் மரக்கிளைகள்கூட அசைவற்றுக் கிடந்தன. அந்த நேரம் பார்த்துத்தானா அந்தச் சவ ஊர்வலம்  வந்து தொலைக்க வேண்டும். தாரை தப்பட்டை சத்தம் கூட தனக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது என்று இப்போதும் கூட அவனுக்குத் தீராத சந்தேகம்தான். அந்த ஆளின் கையிலிருந்த பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடவும் குறுக்குச் சாலையிலிருந்து திரும்பி அந்தச் சவ ஊர்வலம் அவன் கண்ணெதிரே வரவும் சரியாக இருந்தது. தப்பு அடித்தவர்களும் டான்ஸ் ஆடியவர்களும் மற்றவர்களும் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்து விட்டார்கள். அவனை லட்சாதிபதியாக்க வேண்டிய விதி மயிரிழையில் - மாற்றம் கொண்டு அவனை இந்தச் சிறைக் கம்பிகளுக்கிடையே கொண்டு வந்து போட்டிருக்கிறது. | 
****************
சிசுவின் தலை அங்குமிங்குமாய் புரள்கிறது. உட்கார முடிய வில்லை. நின்றுகொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கிறது. நின்றால் படுக்க வேண்டும்போல் இருக்கிறது. இடது பக்கம் ஒருக்களித்தால் வலது பக்கம் புரள்கிறது. வலது பக்கம் சாய்ந்தால் இடது பக்கம் நழுவுகிறது. மேலும் கீழுமாய் நீந்துகிறது. வெளியே செல்லும் வழி தேடி அல்லாடுகிறது. பொறுக்க முடியாமல் எழுந்து கொள்கிறாள். உட்காரலாம் என்று பார்த்தால் உட்காரவும் முடியவில்லை. எப்போது ஆரம்பித்தது இந்த வலி. ஞாபகமில்லை. முதுகின் கீழ் புறத்தில். கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து இப்போது அந்த வலியே முழு உடம்பாய் மாறிவிட்டது. பக்கத்துக் குடிசை ஆயா மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்நேரம் வயிற்றில் வளரும் சிசுவும் அவளும் இறந்துபோய் எத்தனையோ நாட்களாகியிருக்கும். நம்பி வந்தவன் ஜெயிலுக்குப் போய்விட்டான். கிழவி எங்கே தொலைந்தாள் என்றே தெரியவில்லை. அவளும் சினிமா சான்ஸ் தேடி மெட்ராசுக்குப் போய் ராஜாங்கத்தோடு சேர்ந்து விட்டாளோ என்னவோ. இப்போதெல்லாம் அம்மா வேஷத்துக்குத்தான் கிராக்கி அதிகம் போலிருக்கிறதே. எப்படியோ வயிற்றில் குழந்தையோடு அவள் தனியாகிவிட்டாள். கடைசிவரை காப்பாற்றுவேன் என்று சொன்னவனை நம்பி அம்மாவையும் நைனாவையும் அண்ணன் தம்பி அக்கா எல்லோரையும் உதறிவிட்டு இவனோடு ஓடிவந்து பதினெட்டு மாதம் ஆகிறது. இப்போது இந்தக் கிழவியும் ஓடிவிட்ட பிறகு இத்தனை நாட்களாகக் கஞ்சி ஊற்றுவது இந்த ஆயாதான். 

தொடைகளுக்கு நடுவே பிசுபிசுப்பை உணர்ந்தாள். மூத்திரமா பனிக்குடம் உடைந்து விட்டதா. நகர்ந்து நகர்ந்து வாசலுக்கு வந்தாள். ஆயாவுக்கு குரல் கொடுக்க எத்தனித்தாள். குரல் எழும்பவில்லை. வாயைத் 

*****************

- 15 

ஒம் புருசன் மாதிரி பிக்பாக்கெட் ஆவுணுமா. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆயா குடிசையை விட்டு வெளியே போகவில்லை. வெந்நீர் போட்டுக் கொடுத்தாள். கஞ்சி போட்டுக் கொடுத்தாள். குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டாள். ஆனால் இப்படியே எத்தனை நாள் போகும். ஆயா தன் தொழிலுக்கே போகவில்லை. மதுரைக்குப் போய் பஸ் ஸ்டாண்டில் நின்று நாள் பூராவும் பிச்சையெடுப்பதுதான் பிழைப்பு. பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவும் இந்த ஆயா யார். நான் யார். கடவுளே இவள் ஏன் இவ்வளவு பாடுபட்டு என்னையும் இந்தக் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும். 

- நீ கெளம்பும்மா டிக்கட்டுக்கு நான் பணம் தர்றேன் உங்கம்மா நிச்சயம் 

ஒன்னெ ஏத்துக்குவா. - உன்னை விட்டுப் போக மாட்டேன் ஆயா உடம்பு தேறியதும் இந்த உடம்பை வைத்தாவது உன்னையும் இந்தக் குழந்தையையும் காப்பாற்றுவேன் என்னைப் போகச் சொல்லாதே. - இங்கயே இருந்தா நீ அழிஞ்சிடுவே தைரியமா கெளம்பு. 

இந்த ஆயாவை நான் இனிமேல் சாவதற்குள் மீண்டும் பார்க்கக் கூடுமா. கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட கதி வரவேண்டும். ஆயாவைக் கட்டிக் கொண்டு அழுது புலம்பினாள் அவள். 

ஊரில் வந்து இறங்கினாள். இந்த ஊரைப் பார்த்துத்தான் எவ்வளவு காலம் ஆகிறது. பதினெட்டு மாதங்கள். பதினெட்டு வருடங்களாகத் தோன்றின. இறங்கியதும் கண்ணில் பட்டது தென்னவன் டீ ஸ்டால். தென்னவன் சூர்யாவின் க்ளாஸ்மேட். வீட்டுக்கெல்லாம்கூட வரும். சூர்யா 

இப்போது எங்கே இருக்கிறதோ. வேறு எங்கே. டில்லியில்தான். அண்ணியை இதுவரை பார்த்ததே இல்லை. அண்ணி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்று சூர்யாவை மறுமணம் செய்துகொண்டார்களாம் கையில் குழந்தையோடு. ஆமாம். சூர்யாவுக்கு இப்போது குழந்தை இருக்குமா. அம்மாவைப் பார்த்ததும் முதலில் இதைத்தான் கேட்க வேண்டும். வீட்டுக்குள் நுழைய அனுமதித்தால். இது என்ன எதைப் பார்த்தாலும் சூர்யாவின் ஞாபகம். 

டீ குடித்து கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது. சேலை முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். சில்லரை கொஞ்சம்தான் இருந்தது. தைரியம் வரவில்லை. விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள். ஊர்க்கோடியில் வீடு. பெருமாள் கோயிலைத் தாண்டி வந்தபோது சின்னாச்சிக் கிழவி அவளை அடையாளம் கண்டுகொண்டாள். ஐயோ இப்புடி ஆயிட்டியடீ கண்ணு என்று சொல்லி வாயில் கை வைத்து பதைபதைத்தாள். ஆர்த்தி ஊரை விட்டு ஓடிய பிறகு அம்மாவும் நைனாவும் திருமலைராயன் பட்டினம் போய்விட்டார்கள் என்று சொன்னாள் சின்னாச்சி. 

வயிற்றைக் கலக்கியது. எப்படியோ சமாளித்துக் கொண்டு திரும்பவும் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள். பாலுக்கு அழுத்து குழந்தை. மூலையில் அமர்ந்து பால் கொடுத்தாள். கொலைப் பட்டினி கிடந்த இந்த உடம்பிலிருந்து எப்படித்தான் இவ்வளவு பால் சுரக்கிறதோ. 

கையிலிருந்த சில்லரையை வைத்து திருமலைராயன் பட்டினம் போய்விடலாம். டீ குடிக்காமல் இருந்தது நல்லதாகப் போயிற்று. திருமலைராயன் பட்டினம் போய் இறங்கி விசாரித்து விசாரித்து வீட்டை நெருங்கியபோது காதுகள் பஞ்சடைந்து கண்கள் இருண்டன. 

பிறந்து சில தினங்களே ஆன சிசுவுடன் தன் வீட்டு வாசலில் வந்து மயங்கி விழுந்த அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து முகத்தை நிமிர்த்தினாள் பார்வதி. 

அந்தக் கணத்தில் நெஞ்சே நின்றுவிடும்போல் இருந்தது. அருமையாய் வளர்த்த மகள் இப்படித் தன் வீட்டு வாசலில் வந்து மயங்கி விழவும் வேண்டுமா. கடவுளே உனக்கு கண்ணில்லையா. நான் என்ன பாவம் பண்ணினேன் இதைப் பார்க்க. 

பழசையெல்லாம் மறந்து ஆர்த்தியையும் குழந்தையையும் தன் கண்ணேபோல் பாராட்டினாள் பார்வதி. பத்தியச் சமையல் செய்து - போட்டாள். பச்சை ஒடம்புக்காரி கொழந்தைக்கும் சேர்த்து சாப்பிடணும் நீ  என்று சொல்லி ஊட்டி ஊட்டிக் கொடுத்தாள். 

இடையில் கமலநாதனும் காமாட்சியும் வந்து தெருவில் நின்று ரகளை செய்துவிட்டுப் போனார்கள். பேரப் பிள்ளையை அவர்களிடம் கொடுத்துவிட வேண்டுமாம். 

காமாட்சிக்கும் பார்வதிக்கும் நீயா நானா என்று ஆகிவிட்டது. பார்வதியைத் தள்ளிவிட்டு வெறிகொண்டவளாய் காமாட்சியோடு சண்டையிட்ட ஆர்த்தியை முடியைப் பிடித்து இழுத்துப் போட்டு காலால் ஓங்கி உதைத்தான் கமலநாதன். 

விருட்டென்று உள்ளே ஓடிய பார்வதி அரிவாள்மனையை எடுத்து வந்து கமலநாதனை நோக்கி ஓங்கினாள். கமலநாதன் தன் கழுத்துக்கு வந்த . ஆபத்தை உணராமல் ஆர்த்தியை உதைத்துக்கொண்டிருந்தான். அதற்குள் ரோட்டில் விழுந்து கிடந்த காமாட்சி சுதாரித்துக்கொண்டு எழுந்தோடி வந்து கமலநாதனின் கையைப் பிடித்து இழுத்தாள். கழுத்துக்கு வைத்த குறி தப்பி அரிவாள்மனையோடு எகிறி விழுந்தாள் பார்வதி. 

ரோட்டில் போய் நின்றுகொண்ட காமாட்சி பார்வதியின் வீட்டை நோக்கி மண்ணை வாரித் தூற்றினாள். 

நீ நாசமாப் போக. ஒங்குடும்பம் விடியாமப் போக. ஒம் பொண்ணு அவுசாரியாப் போக. ஒன் வயித்திலெயும் ஒம் புள்ளைங்க வயித்துலெயும் புத்து வைக்க. ஒம் புள்ளைங்களெ மகமாயி வாரிக்கிட்டு போக. ஒங்குடும்பம் புல் பூண்டு இல்லாம அத்துப் போவ. 

சரமாரியாகத் தூற்றிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு கிளம்பி னாள் காமாட்சி. ஆனால் பிரச்னை அதோடு விடவில்லை. ஆர்த்தியையும் அவள் பெற்றோரையும் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுவதாக போலீஸ்காரர் வந்து சொன்னார். 

ஸ்டேஷனில் வைத்து மீண்டும் தகராறு. ஆனால் முடிவு பார்வதிக்கு சாதகமாகவே இருந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லை. கமலநாதனுக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் இருக்கலாம் அல்லது கிருஷ்ணசாமி ரிடையர்டு டீச்சர் என்பதாலும் இருக்கலாம். குழந்தை அம்மாவிடம்தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் இன்ஸ்பெக்டர். 

காமாட்சி மறுபடியும் சில சாபங்களைச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே மண்ணை வாரித் தூற்றிவிட்டு கமலநாதனை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். 

ஆனது ஆயிடுச்சி இன்னிமெயாவது புத்தியோட பொழச்சிக்க கட்டுன பொடவையகூட உருவிக்கிட்டு வுடுற ஒலகம் இது என்று ஆர்த்தியிடம் கடைசியாக எச்சரிக்கை பண்ணினாள் பார்வதி. 

ஆனால் விதி வேறு விதமாய் நினைத்தது போலும். பக்கத்து வீட்டு சாந்தகுமாரின் லவ் லெட்டர் மூலம் அது ஆர்த்தியின் வாழ்க்கையை வேறு விதமாய் திருப்பிச் சென்றது. 

என் வாழ்வின் வசந்தமே ஆர்த்தி ஆர்த்தி உன்னை நான் காதலிக்கிறேன் என்றது கடிதம். 

இனிமேல் என் வாழ்வில் காதலே இல்லை என்றது ஆர்த்தியின் பதில் கடிதம். 

என் உயிரே உன்னை என் உயிரினும் மேலாய்க் காதலிக்கிறேன். நீ என் காதலை நிராகரித்தால் என் உயிரை மாய்த்துக்கொள்வேன். 

என் உடம்பிலிருந்த கண்ணீரெல்லாம் வற்றிவிட்டது. இனிமேல் உனக்காகக் கொடுக்க என்னிடம் கண்ணீரும் இல்லை காதலும் இல்லை. 

உன் காதல் வேண்டும் கண்ணே . நான் உன்னை வெறுக்கிறேன். எல்லா ஆண்களையும் வெறுக்கிறேன். 

நாளடைவில் இந்த வெறுப்பு காதலாக மலர்ந்தது. காதல் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. 

எப்பேர்ப்பட்ட காதலன் இவன். உயிரையே விடுகிறானே. குழந்தை இருந்தால் என்ன அதுவும் என் குழந்தைதானே என்கிறான். உன் அண்ணன் சூர்யாவைப்போல நானும் உன்னை உன் குழந்தையோடு ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான். சூர்யாவைப் போலவே என்ன சாந்தமான பேச்சு. பெயருக்கேற்ற 
*********************

தள்ளினார் சாந்தனின் அப்பா. 

கிருஷ்ணசாமியின் பூஞ்சை உடம்பு அந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தது. பார்வதி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள். 

இப்ப அடிச்சிக்கிட்டு என்னாடி புரோஜனம். ஒம் பொண்ணுக்கு அரிப்பெடுத்து ஊரு மேல போனப்பயே தொடைல சூடு போட்டிருந்தீன்னா இப்பிடி அண்ணனோடயே படுத்து புள்ளயும் பெத்துருக்க மாட்டா. இப்பிடி தெருத்தெருவா எந்தப் பையனெ லவுட்டலாம்னு வேக்காடு புடிச்ச நாயாட்டம் அலைஞ்சிருக்க மாட்டா. 

சமயம் பார்த்து பார்வதியைப் பிடித்தாள் சாந்தனின் அம்மா. 

இதற்கு மேலும் நின்றால் ஆபத்து என்று உணர்ந்த கிருஷ்ணசாமி தன் மனைவியையும் ஆர்த்தியையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அப்படியே கிழிந்த பனியனுடன் காரைக்கால் கிளம்பினார். 

இவ்வளவு ரகளைக்கும் சாந்தகுமார் இருந்த இடம் தெரிய வில்லை. அவனை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். . 

கிருஷ்ணசாமியின் தங்கை லீலாவின் கணவர் மீனவ சாதியைச் சேர்ந்தவர். அதோடு அரசாங்க உத்தியோகத்திலும் இருப்பவர் என்பதால் அவருக்கு அவர் மனிதர்களிடம் செல்வாக்கு அதிகம். 

தன் மைத்துனர் குடும்பம் வந்து சேர்ந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் உடனடியாக, தன் ஆட்களுக்குச் சொல்லி அனுப்பினார். மீனவக் குப்பமே திரண்டு வந்தது. 

குப்பத்து ஜனக் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போனார்கள் சாந்தகுமாரின் குடும்பத்தார். அதனால் மத்தியஸ்தம் செய்து வைக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணசாமியின் குடும்பம் அங்கிருந்து உடனடியாக கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது. 

இப்படியாக பெரிய சாதி மோதலாக உருவாகியிருக்க வேண்டிய சம்பவம் வரலாற்றில் இடம் பெறாமல் போனது. 

தெரியவில்லை. ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி ஆர்த்தி என்று புலம்புகிறேன். என்னால் அவளுக்கு எதுவுமே தர முடியாமல் போய்விட்டது. முன்பின் தெரியாத எவனுக்காகவோ தன் உடம்பை விற்கும்போது அவள் உடலும் மனமும் என்ன பாடுபடும். அவள்மீது படரும் அத்தனை உடல்களையும் அவள் எப்படி சகித்துக்கொண்டிருக்கிறாள் என்று எழுதும்போது கண்ணீர் விடுகிறான் சூர்யா என்கிற முனியாண்டி என்கிற நேநோ என்கிற மிஸ்ரா என்கிற சாரு நிவேதிதா என்கிற வாசுகி என்கிற 

வலியும் அவமானமும் பட்டினியும் துரோகமும் அன்பும் தனிமையும் நிரம்பிய அந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியாக வார்த்தைகளில் 

முடிந்து போனதில் சூன்யமானது மனம். 

*********************

மதியத்திலிருந்து பனிக்குட நீர் வெளியில் வர ஆரம்பித்தது. உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றாள். எனிமா கொடுக்கப்பட்டது. வலி எடுப்பதற்காக ஊசி போட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது. ஸ்கேன் எடுக்கப்பட்டது. குழந்தையின் பொஸிஷன் பார்த்தார்கள். குழந்தை பக்கவாட்டில் இறங்கி வந்ததை அவளே உணர்ந்தாள். பிறகு குழந்தையை வெளித்தள்ள முயற்சி செய்தாள். அவளுக்கு சுய நினைவு இருந்தது. அவள் தலைக்குமேல் இருந்த கடிகாரத்தில் நேரம் 9.00 ஆனபோது குழந்தை பிறந்தது. ஆனால் அவள் உயிர் போய்விடும் போலிருந்தது. எக்கச்சக்கமான ரத்த இழப்பு. ரத்த அழுத்தம் இறங்கிவிட்டது. சுற்றி நின்றவர்கள் பேசியதெல்லாம் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. அவர்கள் முகம் கலவரம்கொண்டிருந்தது. தலைமை மருத்துவர் கையைப் பிசைந்தார். அவுளுக்குக் கை காலெல்லாம் நடுங்கியது. எப்படியோ ரத்தத்தை ஏற்றி அவள் உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள். நிறைய தையல்கள். வலி பொறுக்காமல் மருத்துவரின் கையைக் கடிக்காத குறைதான். எந்த மயக்க மருந்தும் வேலை செய்யவில்லை. நடு இரவு வரை தையல் போட்டுக்கொண்டே இருந்தார். அந்த மருத்துவமனையே கிடுகிடுத்துப் போக கத்திக் கொண்டே இருந்தாள் அவள். 

உன்னை நான் முனியாண்டியின் எழுத்துக்களில் வாசித்திருக் கிறேன். இப்போதுதான் உன்னுடன் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆமாம். முனியாண்டியின் எழுத்துக்கள் எதையும் விடாமல் வாசித்திருக்கிறேன். சேகரித்தும் வைத்திருக்கிறேன். அவனைப் பற்றிய செய்திகள் தகவல்கள் எல்லா வற்றையும்கூட தொகுத்து வைத்திருக்கிறேன். அவனே அறிந்திராத அவனுடைய எழுத்தின் அர்த்தங்களை அவன் எழுத்துக்களின் ரகசிய வாசுகியான என்னை விடப் புரிந்து கொண்டவர்கள் யாரும் இருக்கமுடியாது. இப்போது அவன் ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறானே டெலிஃபோன் நாவல் அந்த நாவலுக்காக அவன் உரையாடிய பெண்களில் நானும் உண்டு என்பதை அவன் அறிய மாட்டான். நான் யாரென அறியாமலேயே பல சமயங்களில் அவன் என்னுடன் தன் சம்பாஷணைகளை நிகழ்த்தியிருக்கிறான். அவன் தன்னுடைய எழுத்தில் வாசுகி வாசுகியென்று அழைக்கிறானே ஏன் தெரியுமா. அப்படி அழைக்காமல் அவனால் எழுதவே முடியாது. His whole obsession is me. ஆமாம். அந்த வாசுகி நான்தான். உண்மையில் என் பெயர் வாசகி. எழுத்துக்காகவே வாசுகி என மாற்றியும் ஆர்த்தி என புதுப் பெயரிட்டும் அழைக்கிறான். நான்தான் அவனுடைய தங்கை. என்னைப் பற்றிய குற்ற உணர்வினாலேயே அவன் கிரேக்க புராணங்கள் உலக அரசியல் இலக்கியம் பீடி சுற்றும் சிறுவன்கள் அணு பெளதிகம் வரலாறு ருவாந்தா கல் உடைக்கும் பெண்கள் ஆர்னிதாலஜி கார்மீனியப் படுகொலை விபசாரிகள் என்று புலம்பிக்கொண்டிருக்கிறான். இது எல்லாவற்றிலும் படிந்து கிடக்கும் வன்முறையைப் பார்த்துவிட்டு இவ்வளவு பெரிய வன்முறையில் தன் தங்கையின் வாழ்வும் உள்ளடங்கிப் போய்விட்டதான பாவனையில் ஆறுதலடைய முயல்கிறான். பாவம். வன்முறை என்பது அவனுக்கு வெறும் டிரைவர்களிடமும் பயப்படத் தொடங்கியிருக்கிறான். 

போலீஸ்காரர்களைவிட கண்டக்டர்களும் ஆட்டோ டிரைவர்களும் என்னை மிகவும் அச்சுறுத்துகிறார்கள் என்று சொல்வான். சில சமயங்களில் சக மனித இருப்பே என்னை அச்சுறுத்துகிறது துருவப் பிரதேசங்களில் போய் வாழலாமா என்று தோன்றுகிறது என்று புலம்புவான். என் எழுத்து அரசுக்கு எதிரானதா என்னைக் கைது செய்துவிடுவார்களா ஜெயிலில் எழுத முடியுமா நீ எனக்கு எழுதுவதற்கான காகிதங்களும் பேனாவும் கொடுப்பாயா என்று பலவிதமாகக் கேட்டுக் கொண்டேயிருப்பான். அவனைக் கைது செய்ய வேண்டுமென சில இலக்கியப் போலீஸ் அதிகாரிகள் பேசியிருப்பதாக தினசரிகளில் வந்திருக்கிறதென்று சொல்லிப் பதற்றம் கொள்வான். ஜெயிலில் போட்டு தனிமையில் பைத்தியம் பிடித்துவிட்டால் என்ன செய்வதென்று தியான வகுப்புகளுக் கெல்லாம் போய்க் கொண்டிருந்தான். தியானம் செய்தால் எந்த மோசமான நிலையிலும் மனம் தன் வசத்தை இழக்காதல்லவா என்று என்னிடம் பயந்து கொண்டே கேட்டிருக்கிறான். இப்படிப் பட்ட பயங்கொள்ளியின் எழுத்தா அரசுக்கு எதிரானதாக இருக்கும். சமூக மதிப்பீடுகளுக்கு எதிரானதாக இருக்கும். உண்மையில் பார்த்தால் எந்தச் சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிப்பீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். சமூக மதிப்பீடுகளை மறுப்பதாகக் காண்பித்துக் கொள்வதன் மூலம் அவன் தனது இருப்பை ஸ்தாபிக்க முயல்கிறான். ஆனால் சமூக மதிப்பீடுகளை ஏற்பதோ மறுப்பதோ எல்லாமே அவற்றைப் பிரதானப்படுத்தத்தானே செய்கிறது. அவன் பேசும் எதிர்க் கலாச்சாரத்தையும் கலாச்சாரமானது உப கலாச்சாரமாக உள்வாங்கிக்கொண்டுவிட வில்லையா. இது ஏன் அவனுக்குத் தெரியவில்லை. தயவுசெய்து இவனைப் போன்ற கவுண்டர் கல்ச்சர் ஆட்கள் விபச்சாரிகளைப் பற்றி எழுதாமல் இருப்பதே அவர்கள் எங்களுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன் நான் 

*********

41. 

நளினி சூர்யா தம்பதியினர் தாம்பத்ய வாழ்க்கை 

28 

முனியாண்டி ருவாந்தாவில் இருந்தபோது உலகத்தின் வரலாறு என்ற பெயரில் நாவல் எழுதும் பொருட்டு அவன் எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் சேகரித்து வைத்திருந்த கத்தரிக்கப்பட்ட செய்திகளையும் அவனது தோழி நமிஸிஷிரு எனக்குத் தபாலில் அனுப்பி வைத்திருந்தாள். பெரிய சாக்கு மூட்டை அளவுக்கு வரக்கூடிய அக்குறிப்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிய நான் அதிலிருந்து முக்கிய மானதாக எனக்குத் தோன்றியவற்றை மட்டும் திரட்டி எடுத்தேன். எல்லாவற்றையம் வாசித்துப் பார்த்ததில் கலாச்சாரம் எதிர்க் கலாச்சாரம் என்கிற துருவங்களுக்கிடையே அவன் ஊடாடிக்கொண்டிருந்ததை என்னால் அனுமானிக்க முடிந்தது. கமேர் ரூஜ் இயக்கத்தினால் முப்பத்தாறு மாதங்களில் பதினெட்டு லட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்துகிறான். அதே சமயத்தில் பதினெட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் மூதாதையான homo habilis இன் படிமப் பதிவுகள் தான்ஸானியாவில் பாறைகளுக்குள்ளேயிருந்து கிடைத்திருப்பது பற்றியும் எழுதுகிறான். இப்படியே மலைமலையாய் குவிந்து கிடக்கும் அவனது குறிப்புகளிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன். 

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையும் உத்தமத் தமிழ் எழுத்தாளனும் தமது மூதாதையரின் வாழ்வை எழுத்தில் பிடிக்க முயல்வதாகவும் வேர்களைத் தேடிச் செல்வதாகவும் மண்ணைப் பற்றி எழுதுவதாகவும் பினாத்துகிறார்கள். நமது மூதாதையரைத் தேட ஆரம்பித்தால் அந்தப் பயணம் நம்மை பதினெட்டு லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அவர்கள் அறிவார்களா. நமது 

பெட்ஷீட் - ஏன் ஊறவச்ச இந்த பெட்ஷீட்டெல்லாம் தொவைக்கல்லே. - யாரைக் கேட்டு நீ ஊற வச்சே. - ஏன் தொவைக்கலேன்னா என்ன திமிர்ப்பேச்சு வேண்டிக் கிடக்கு. 

யாரைக் கேட்டு நான் ஊற வைக்கணும். - என்னால இப்ப தொவைக்க முடியாது. நான் இப்போ அவசரமா வெளிய 

கெளம்பணும். - பெட்ஷீட்டெல்லாம் அவ்வளவு நேரம் ஊறினா என்னத்துக்கு ஆறது. 

நீங்க காசு குடுத்து வாங்கியிருந்தால்ல தெரியும். - நான் வாங்காம ங்கொப்பனா வாங்கினான். - உங்க கையாலாகாத்தனத்துக்கு எதுக்கு இப்ப எங்கப்பாவை யெல்லாம் 

இழுக்கறேள். - நான் கையாலாகாதவன்னா உங்காத்து மனுஷாள்ளாம் அயோக்கியக் 

கும்பல். ஊர் சொத்தையெல்லாம் ஏமாத்திக் கொள்ளையடிச்சு பணம் சேர்க்கற கும்பல். மனசாட்சியெக் கழட்டி வச்சிட்டில்லடீ நீ உங்கப்பன் அம்மா எல்லாரும் நடமாடறேள். - உங்காத்துல என்ன யோக்கியமா. தங்கை ஒண்ணு விட்ட 

அண்ணாவையே இழுத்துண்டு ஓடிட்டா. தம்பி என்னடான்னா பொண்டாட்டிக்குத் தோப்புக்கரணம் போட்டு நமஸ்காரம் பண்ணிண்டு கெடக்கான். எங்காத்து யோக்கியதை பத்திப் பேச வந்துட்டேன். ஆமாண்டீ. நீ இவ்வளவு தூரம் பேசும்போது நான் ஏன்டி பேசக் கூடாது. 

நீயே ஒரு பவிஷூ கெட்டவதானேடீ உங்கம்மாவப் போல. என்னோட பேருக்கு குடித்தனம் பண்ணிண்டு ஊரையெல்லாம் மேயறவளாச்சேடீ நீ. - நான் பவிஷூ கெட்டவொன்னு தெரிஞ்சிடுத்தோன்னோ ரைட். இனிமே 

இந்த ஆத்திலே உங்களுக்கு இடம் இல்லை. நீங்க ரோஷமான ஆம்பிளையா இருந்தா இனிமே இங்கே நிமிஷம்கூட நிக்காம எம் 

கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாய் நீ. - சரி. பேச்சு வேண்டாம். திருடும் அளவுக்கு வந்த பிறகு நீர் இந்த 

வீட்டில் இருக்கக் கூடாது. வெளியே போய்விடும். அதுவும் இந்தக் கணமே. - முடியாது. எனக்கு எப்போது வீடு கிடைக்கிறதோ அப்போதுதான்  செல்வேன். 


- இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். இப்போதே நீர் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நடக்கிற கதையே வேறு. எலெக்ட்ரிக் க்ரிமடோரியம் 

- எதுக்கும் என்கிட்ட நாலாயிரத்து ஐநூறு ரூபா குடுத்து வை. - ஏன். - திடீர்னு நீ செத்து கித்து வச்சிட்டீன்னா ஒன்னோட பொணத்தெ யாரு டிஸ்போஸ் பண்றது. அதுக்கு ஆவுற செலவுக்கெல்லாம் நான் எங்கே போறது. - என்னது நான் செத்து கித்துப் போன பிறகா. நான் செத்ததுக் கப்புறம் 

என் பாடியப் பத்தி எனக்கென்னாடி கவலை. ங்கோத்தா. - டேய் இங்க பாரு. இந்த ங்கோத்தா கத்தால்லாம் வேற எவள்ட்டயாவது வச்சுக்க. என்னாலெல்லாம் ஒன் சாவுக்கு செலவு பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. - அடப்போடீ மயிரு. ஒன்னால செலவு பண்ண முடியலேன்னா முனிசிபால்ட்டிகாரன்ட்ட சொல்டீ. அவன் வந்து லாரிலெ தூக்கிப் போட்டுக்கிட்டு போய்டுவான். 

- அந்த வேலையெல்லாம் என்னால பண்ண முடியாது. இல்லேன்னா 

எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்லெ எவ்வளவு செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு வா. அந்தத் தொகையெ என் கிட்ட குடு. - அட வல்லார ஓளி. நான் எதுக்கும் விசாரிக்கணும். நானே செத்த பிறகு 

என் பாடியப் பத்தி எனக்கென்னாடீ கவலை... நாயோ நரியோ தின்னுட்டு போவட்டுண்டீ. ங்கொப்பன ஓளி. - யாரெடா சொன்ன ங்கொப்பன ஓளின்னு. தேவிடியாப் பையா. செருப்பு 

பிஞ்சிடுண்டா பாஞ்சத். - என்ன அந்த விஷயம் விசாரிச்சியா. - எந்த விஷயம். - அதான் அந்த எலெக்ட்ரிக் க்ரிமடோரியம். - நான்தான் சொன்னேனடீ. ங்கோத்தா தேவுடியா செறுக்கி. 

ங்கொம்மாலெ. நான் எதுக்குடி விசாரிக்கணும். - யாரெப் பார்த்து தேவிடியான்னு சொன்னே பொட்டப் பயலே. 

ஒங்கொம்மாதான்டா தேவிடியா. தேவிடியாப் பயலெ. வீட்ட விட்டு வெளியே போடா நாயே. தெருப் பொறுக்கி நாயே. இந்த நிமிஷமே நீ இந்த வீட்டை விட்டு போயிடணும் இல்லெ ரசாபாசமாயிடும்.. 

அப்போது ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படித்துக்கொண்டிருந்தேன். ஸ்கூலில் எங்கள் எல்லோரையும் எக்ஸ்கர்ஷனுக்கு மகாபலிபுரம் கூட்டிச் சென்றார்கள். ஆனால் கீதா மட்டும் நான் வரக்கூடாது என்றாள். என் கிளாஸ் டீச்சருக்கு நான் என்றால் உயிர். அதனால் டீச்சரே மிகவும் வற்புறுத்தி என்னையும் கூட்டிச் சென்றார்கள். வழியெல்லாம் கீதா என்னை அடித்துக்கொண்டே வந்தாள். 

மகாபலிபுரம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்து வந்தாளோ தெரியாது. திடீரென்று வந்து தரதரவென்று என்னை இழுத்துக் கொண்டுபோய் கடல் அலையில் தள்ளி விட்டாள் கீதா. யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அலை என்னை அடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக நான் ஒரு பாறையின் நடுவில் சிக்கி விட்டேன். அப்போது அந்தப் பக்கமாக வந்த மீனவர்கள்தான் என்னைக் காப்பாற்றினார்கள். அதற்குள் நான் எக்கச்சக்கமாக கடல் நீரைக் குடித்திருந்தேன். என் கால்களைப் பிடித்துக் கொண்டு தட்டாமாலையாய் சுற்றித்தான் தண்ணீரையெல்லாம் வெளியே எடுத்துப் பிழைக்க வைத்ததாகப் பிறகு சொன்னார்கள். வீட்டுக்கு வந்ததும் அக்காவிடம் இதைச் சொன்னேன். அவள் அப்பாவிடம் சொன்னாள். அவள் செத்தாலும் பரவாயில்லை நீ ஏன் கீதாவை அடித்தாய் என்று கீதாவுக்குத்தான் பரிந்து பேசினார் அப்பா. 

அப்பாவின் போக்கை என்னால் புரிந்துகொள்ளவே முடிய வில்லை. புரிந்து கொள்ளும் நிலையிலும் நான் இல்லை. அம்மாவின் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எனக்கும் என் தங்கை வத்சலாவுக்கும் 

மூன்று வருட இடைவெளி. அவள் மிகவும் நோஞ்சானாகவும் மூன்று வயது வரை பேசாமலும் நடக்காமலும் இருந்தாள். அதனால் அக்காதான் அவளை வளர்க்க வேண்டியிருந்தது. அதனால் நான் அக்காவின் கவனிப்பையும் அன்பையும் இழக்க நேர்ந்தது. 

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் விடியற்காலையில் வீட்டில் ஒரே ரகளை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் எப்போதும் அக்காவுடன்தான் படுத்துக்கொள்வேன். 

எழுந்து பார்த்தால் அக்காவைக் காணவில்லை. நான் அழ ஆரம்பித்தேன். அதற்காக கீதாவிடமிருந்தும் அப்பாவிடமிருந்தும் எனக்கு அடிதான் கிடைத்தது. 

ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. அக்கா காணாமல் போய்விட்டாள். இனி திரும்ப மாட்டாள் என்று. அவள் போன பிறகு கீதாவின் அட்டகாசமும் அப்பாவின் கொடுமையும் இன்னும் அதிகமாகியது. 

ஏற்கெனவே நாங்கள் மற்றவர்கள் வீட்டில்தான் சாப்பிட்டு வளர்ந்தோம். எப்படிச் சாப்பிட்டோம் எப்படி பள்ளிக்குச் சென்றோம் என்று நினைத்தால் இன்றுகூட என் கண்கள் கலங்குகிறது. 

அக்கா போன பிறகு எனக்கென்று யாருமே இல்லை. அம்மாவின் நிலைமையைச் சொல்லவே முடியவில்லை. எங்களைக் கண்டாலே | 

அடிப்பதற்கு விரட்டிக் கொண்டு வருவாள். கையில் எது கிடைத்தாலும் அதை எடுத்து அடித்து விடுவாள். நாளாக நாளாக அக்கம் பக்கத்தினர் எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தினார்கள். நாங்கள் அவர்கள் சாப்பிடும்போது போய் நின்றால் ஈவு இரக்கமின்றி விரட்டி விடுவார்கள். ஒருநாள் நானும் என் தங்கையும் பசி தாங்காமல் அம்மாவிடம் சென்று அழுதோம். உடனே அவள் இருங்கள் இதோ ஏதாவது கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் போனாள். திரும்பி வந்தபோது அவள் கையில் அரிவாள்மனை இருந்தது. எங்கள் இருவரையும் வெட்ட வந்தாள். வத்சலா ஓடிவிட்டாள். நான் மாட்டிக் கொண்டேன். தப்பித்து ஓட முயன்றபோது என் நீண்ட ஜடை அவள் கையில் சிக்கிக் கொண்டது. ஜடையை இழுத்துப் பிடித்து என் கழுத்தின்மீது அரிவாள்மனையை ஓங்கினாள். அரிவாள்மனை கழுத்தை நோக்கி இறங்கியபோது ஒரு கணம் என் பலத்தையெல்லாம் சேர்த்து தலையைப் பின்னுக்கு இழுத்தேன். 

கூந்தலில் வெட்டு விழுந்து என் ஜடை அவள் கையோடு போனது. ஓடி வந்து விட்டேன். 




என் அக்கா போனதிலிருந்து நான் தனியாகத்தான் படுத்துக்கொண்டேன். இரவில் அக்காவைத் தேடி அழுவேன். கனவில் அடிக்கடி அம்மா என் தலையை வெட்டுவதாகவும் தலை துண்டாகி தனியே விடுகிறார்கள். 

வீட்டில் வேறு வருமானம் எதுவுமில்லை. ஆர்த்தியும் கர்ப்பமாகி விட்டாள். இவ்வளவு அருமையான குரல் இருந்து என்ன பயன். சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை. எப்படிக் கிடைக்கும். மெட்ராசுக்குப்போய் | 

ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து பார்த்திருக்கிறானா என்ன. இங்கே குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் சினிமா சான்ஸ் எங்கிருந்துவரும். 

- போயேண்டா நாயே. அந்த ராஜாங்கம் பயலும் மத்த நாய்களும் போன 

மாதிரி நீயும் போயேன். 

அதுவும் சரிதான். மூட்டை மூட்டையாக சினிமா கதை வசனங்களை எழுதிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிய ராஜாங்கத்திடமிருந்தும் ராமமூர்த்தியிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. இப்படியே இந்த ஜேப்படித் திருட்டை நம்பி எத்தனை நாளைக்கு ஓடும் வண்டி. 

பாப்பம்மாள் இருந்தவரை அவள் ஜெயிலில் இல்லாமல் வெளியில் இருந்த காலத்திலாவது சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தப் பட்டினி அவள் இருந்தபோதே ஆரம்பமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மதுவிலக்கை எடுத்து விட்டதால் பாட்டில்களைக் கடத்த வேண்டிய தேவையில்லாமல் போனது. பாப்பம்மாளும் படுத்த படுக்கையாகி விட்டாள். தொழில் முடங்கி விட்டதால் படுத்து விட்டாளா அல்லது வயோதிகமா என்று தெரியவில்லை. எப்படியோ ஆண்களைப்போல வெளியே சம்பாதித்து அதிலும் எப்பேர்ப்பட்ட சம்பாத்தியம் பாட்டில் கடத்தல் ஜெயில் என்று இருந்தவள் கரையில் ஒதுங்கிய திமிங்கிலமாய் ஆகிவிட்டாள். படுத்தவள் பிறகு எழுந்து கொள்ளவே இல்லை. அப்போதுகூட சிரித்துக் கொண்டே சொன்னாள்: நான் ரிஷப ராசி. ரிஷபம் படுக்கவே படுக்காது. படுத்தால் எழுந்து கொள்ளாது என்று. அவள் சொன்னபடியே எழுந்து கொள்ளாமலேயே இறந்து போனாள். 

அதற்குப் பிறகு காமாட்சிக்கு உடம்பு முடியவில்லை . 
*******************

வார்த்தையாகிப் போய்விட்டது. 

முனியாண்டியின் எழுத்துக்கள் வேறு அவனுடைய வாழ்க்கை வேறு என்பதைப் பல வருடங்கள் அவனுடன் உடனிருந்தவள் என்ற முறையில் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். அவன் பயந்தாங்கொள்ளி. அவன் சொல்வதுபோல் அவன் எழுத்துக்கள் எதுவும் தடை செய்யப்படப் போவதில்லை. எல்லாம் அவனுடைய பிஸாது. உண்மையில் அவன் பஸ் கண்டக்டர்களுக்கும் போலீஸ் காரர்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகாரர் களுக்கும் நாய் பூனை எலி கரப்பான் தவளை கம்பளிப்பூச்சி போன்ற உயிரினங்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் ரயில் தண்ட வாளங்களுக்கும் வாகனங்களுக்கும் பயப்படுபவன். சில்லரை கொடுக்காமல் ரூபாய் நோட்டாகக் கொடுத்ததால் கண்டக்டர் அவனை கிரிமினல் குற்றவாளியை நடத்துவதுபோல் நடத்திய தையும் திட்டியதையும் கண்டக்டருக்கு பயந்துகொண்டே பல தினங்கள் கால்நடையாகவே போனதையும் அவன் என்னிடம் டெலிஃபோன் சம்பாஷணைகளின்போது சொல்லி அழுதிருக் கிறான். அதேபோல் ஆட்டோ டிரைவர்கள். அன்றைய தினம் அவனுக்கு சின்மயா நகரிலிருந்து கே.கே. நகர் போக வேண்டி யிருந்ததாம். நாற்பத்தைந்து ரூபாய் என்று சொல்லியிருக்கிறார் ஆட்டோக்காரர். பதினெட்டு ரூபாய்தானே ஆகும் என்று விவாதித்திருக்கிறான் இவன். கடைசியில் வேண்டா வெறுப்பாக இருபத்தேழு ரூபாய்க்கு பேரம் முடிந்து கிளம்பினால் அந்த ஆட்டோ டிரைவர் கடும் கோபத்தில் வளைவுகளிலும் திருப்பங்களிலும் படுவேகத்தில் திரும்பி லாரிகளில் மோதி விடுகிறாற் போல் சென்று கடைசி நிமிடத்தில் ஒடித்து வேகத்தடை இருக்கும் இடங்களிலும் அதே வேகத்தில் போய் தூக்கித் தூக்கிப் போட்டு கடைசியில் அவனுக்கு முதுகுத் தண்டே முறிந்து போனதுபோல் ஆகியிருக்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் லேசான நெஞ்சுவலி வரவே டாக்டரிடம் போயிருக்கிறான். ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும் இனிமேல் இரவு ஒன்பது மணிக்கு மேல் கண் விழிக்கக் கூடாது அதிகம் கோபப்படக் கூடாது அதிகம் படிக்கக் கூடாது அதிகம் எழுதக் கூடாது என்றும் பல கூடாதுகளைச் சொல்லியிருக்கிறார் டாக்டர். அன்றிலிருந்து அவன் ஆட்டோ 

- Big Bang வெடிப்பின் மூலம் உருவான இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு முன் இந்த வெளி எதுவாக இருந்தது. - இந்த வெளியின் ஆரம்பமோ முடிவோ எது. - எல்லையற்ற தன்மை என்றால் என்ன. - காலம் என்பது என்ன. - அகாலம் என்பது எப்போது சாத்தியம். - இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் 

எப்படி இருந்தது. - மூல நுண்ணுயிரியை அனுமானிப்பது நமது கற்பனையின் காலவெளி 

எல்லைக்கு உட்பட்டதுதானா. - அந்த மூல நுண்ணுயிரியின் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் மூலம் 

மூலம் மூலம் மூலம் - முடிவு என்ன. - முடிவுக்குப் பிறகு என்ன. - வார்த்தைகளின் போதாமையா. - அறிதல் திறனின் போதாமையா. - நான் ஏன் தமிழில் எழுத வேண்டும். - தமிழ் எங்கிருந்து வந்தது. - 5454 ஆண்டுகளுக்கு முந்திய சிந்து சரஸ்வதி சமவெளி நாகரீக 

காலத்தில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவத்திலிருந்துதான் பிராமி கிரேக்க தேவநாகரி தமிழ் எழுத்துக்கள் பிறந்திருக்கின்றன என்கிறபோது அந்தப் பெயர் தெரியாத மொழியை நான் ஏன் எனது தாய்மொழி எனக் கொள்ளக் கூடாது. - தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை 

ஒழித்துக்கட்டிவிட்டு உருவானதென்பது உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்குத் தெரியுமா. 

30 

கிளி ஜோஸ்யம் பார்த்தான் முனியாண்டி முனியாண்டி என்ற பெயருக்கு அட்டை எடுத்துக் கொடு அன்பர் முனியாண்டி அவர்களுக்கு நல்ல காலமா கெட்ட காலமா என்று பார்க்க அட்டை எடுத்துக் கொடு என்று ஜோஸ்யக்காரர் சொல்லிக்கொண்டேயிருக்க கிளி கூண்டை விட்டு மெதுவாக வெளியே வந்து அட்டைகளைத் தன் அலகால் கொத்திக் கொத்தி எடுத்துக் கீழே போட்டது. ஒன்பதாவது அட்டையை மட்டும் எடுத்துத் தனியே போட்டு விட்டு கூண்டுக்குள் புகுந்துகொண்டது. அட்டையை எடுத்துப் பிரித்தார் ஜோஸ்யக்காரர். அரசனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த சேடியின் படம் வந்திருந்தது. அரசனின் உருவம் முழுசாக இல்லாமல் சேடியின் உருவமே பிரதானப்படுத்தப்பட்டிருந்த அந்தப் படத்தை உற்றுக் கவனித்தபோதுதான் முனியாண்டிக்குத் தெரிந்தது அந்த சேடிப் பெண் பெண்ணல்ல அலி. ப்ருஹண்ணளை ப்ருஹண்ணளை என்று கத்தியது கிளி. தனக்கு இந்த ஆயுளில் விடுதலையே கிடையாதா என அரற்றியபடி அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் முனியாண்டி. 

ஓடி வந்து நின்ற இடம் அண்ணாசாலை அஞ்சல் நிலையம். அதற்கு எதிரே பிரம்மாண்டமான கட் அவுட். கிட்டத்தட்ட நிர்வாணமாகக் காட்சி தந்த நடிகைக்கு கை அகல ஸ்கர்ட் மாட்டிவிடப்பட்டிருந்தது. நடிகையின் படத்துக்குக் கீழே நடிகனின் படம் வரையப்பட்டிருந்தது. நடிகன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் படத்தின் ஸ்கர்ட் துணி 

காற்றில் படபடப்பதை கீழே நின்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தமிழ்ச் சமூகத்தின் சில பிரதிநிதிகள். 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் கிராமப்புறங்களிலும் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் சினிமா தியேட்டர்களில் வெளிப்படையாக நீலப்படங்கள் திரையிடப்பட 

ஆரம்பித்தன. மனைவியை நிர்வாணமாகக் காண முடியாமல் பத்திரிகைகளில் வெளிவரும் நிர்வாண டிராயிங்குகளையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருந்த தமிழ்க் கணவன்மார்களுக்கு இந்த நீலப்படங்கள் வரப்பிரசாதமாகவே அமைந்துவிட்டன என்று சொல்லலாம். ஆனால் முனியாண்டியோ இது எதையும் அறியாதவன். நீலப் படங்களுக்கு முந்திய ரெக்கார்ட் டான்ஸ்களை மட்டுமே பார்த்து அறிந்தவன். மற்றும் உரையாடல் ரெக்கார்டுகள். முனியாண்டி நினைத்துப் பார்த்தான். சிறுமிகள் வயதுக்கு வந்தாலோ அல்லது வளைகாப்பு நிகழ்ச்சியிலோ இம்மாதிரி ரெக்கார்டுகளை நாள் பூராவும் போட்டு அந்தந்த ஏரியாக்களையே சந்தோஷப்படுத்தி விடுவார்கள். 

வடை சுட்டு விற்கும் பெண் பாத்திரங்களுக்கு ஓட்டை அடைத்துக் கொடுக்கும் ஆண் வடை விற்கும் பாத்திரம் ஓட்டையாகிவிட அவள் அவனிடம் பாத்திரத்தைக் கொடுக்கிறாள். இனி வருவது டயலாக். 

அவன்: என்ன இது... ஒன்னோட சாமான்ல இவ்ளோ பெரிய பொத்தல். 

அவள்: ஏன் இவ்ளோ பெரிய பொத்தலை அடைக்கிற மாதிரி சாமான் ஒன்ட்ட இல்லியா. 

அவன்: ஏன் இல்லாம. என் சாமான் இந்தப் பொத்தலையும் அடைக்கும். இதைவிட பெரிய பொத்தலையும் அடைக்கும். காமி அடச்சிக் காமிக்கிறேன். 

அந்தப் படத்தைப் பார்த்துவிட எண்ணி தியேட்டருக்குள் நுழைந்தான் முனியாண்டி. செய்திப் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஊனமுற்றோர் நல வாழ்வு மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர். அதேபோல் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம் தொழுநோயாளிகள் இல்லம் முதியோர் இல்லம் அனாதைக் குழந்தைகள் இல்லம் காவல் நிலையங்களில் கற்பழிக்கப்பட்டோருக்கான உதவித் தொகையை ரூபாய் ஆயிரத்து எட்டிலிருந்து ஆயிரத்து நூற்று எண்பத்தெட்டாக அறிவித்ததைக் கொண்டாடும் விழா என்று ஒன்பது நிமிடங்களுக்கு பல்வேறு இல்லங்களைத் திறந்து வைத்தபடி இருந்தார் முதல்வர். 

***********************
ஆர்த்தியின் கதை 




- எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் நாவலில் வரும் அந்தப் 

பெண் ஆர்த்தி இப்போது எங்கே இருக்கிறாள். அந்த நாவலை வாசித்ததிலிருந்து எனக்கு அவளைப் பற்றிய ஞாபகமாகவே இருக்கிறது சூர்யா. - ஆர்த்தி எங்கே இருக்கிறாள் என்று எனக்கும் தெரியாது வாசுகி. அவளைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை ஆண்டுகள் என்றுகூட ஞாபகமில்லை. அம்மாவையும் பார்க்கவில்லை. எல்லோரையும் பிரிந்துவிட்டேன். - ஏன் பார்க்கவில்லை. - அவர்கள் போக்கு பிடிக்கவில்லை. - அதைப் பற்றி உனக்கென்ன. அவர்களின் இயல்பு அது வெனில் 

அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. நீ ஏன் உனது இயல்பை மாற்றிக் கொள்கிறாய். தேளும் துறவியும் கதை உனக்குத் தெரியும்தானே. தேளின் இயல்பு கொட்டுவது எனில் எனது இயல்பு பிற உயிர்களின் பால் அன்பு பாராட்டுவது என்று சொல்லி தேள் தன்னைக் கொட்டக் கொட்ட ஆற்றிலிருந்து கரையில் எடுத்துவிட்டுக் காப்பாற்றிய துறவியின் கதை. - அது அனைவரும் அறிந்த கதை வாசுகி. அறியாத கதையை நான்  சொல்கிறேன் கேள். 

- ஆற்றின் கரையிலிருந்து அக்கரை சேர்வதற்காக அசுவம் ஆற்றில் 

இறங்க அப்போது கரையில் நின்றுகொண்டு அக்கரைக்குப் போகும் வகை தெரியாது கைகளைப் பிசைந்துகொண்டிருந்த விருச்சிகம் ஆற்றில் இறங்கப்போகும் அசுவத்தைப் பார்த்து அசுவமே அசுவமே நானும் அக்கரைக்குத்தான் போக வேண்டும் என்னை உனது முதுகில் ஏற்றிச் செல்வாயா என வினவ அசுவமும் அந்த ஏழை விருச்சிகத்தைப் பார்த்து மனம் இரங்கி சரியெனச் சொல்ல விருச்சிகமும் அசுவத்தின் முதுகின் மேலேறிக்கொள்ள அசுவம் அனாயாசமாய் நீச்சலடிப்பதைக்கண்டு வியப்புற்று அசுவமே அசுவமே நீ எப்படி நீச்சல் அடிக்கிறாய் என வினயமாய் வினவ நீச்சலடிப்பது எனது இயல்பு எனச் சொன்ன அசுவத்தின் முதுகில் விருச்சிகமானது தன் கொடுக்கால் பலமாய் போடு போட விஷம் தலைக்கேறிய அசுவம் நீரில் மூழ்கும் தறுவாயில் விருச்சிகத்தைப் பார்த்து ஏனிப்படி என்னைக் கொட்டித் தொலைத்தாய் முட்டாள் விருச்சிகமே இப்போது பார் நீயும் காலி நானும் காலி எனப் புலம்ப கொட்டுவது எனது இயல்பு என சாவகாசமாய்ச் சொல்லிக்கொண்டே அசுவத்தோடு சேர்ந்து தானும்  மூழ்கிப்போனது விருச்சிகம். - அடேய் முட்டாள். இயல்பு மட்டுமல்ல. விவேகமும் வேண்டுமடா விவேகம். - ஆர்த்தியைச் சந்திக்க வேண்டுமானால் அம்மாவைச் சந்தித்தாக வேண்டுமே. அவர்களையும் பார்த்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

வாசுகியின் தூண்டுதலால் அன்றிலிருந்து தன் அம்மாவைத் தேடியலைந்தான் சூர்யா. கடைசியில்தான் தெரிந்தது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீதியிலிருந்த அம்மாவின் முகவரி. அம்மாவைப் போய்ப் பார்த்தான். அம்மாவுக்குக்கூட ஆர்த்தியின் தற்போதைய இருப்பிடம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அம்மாவிடமிருந்து அவனால் ஆர்த்தியின் கதையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. 

காமாட்சியும் அவள் மகன் கமலநாதனும் ஆர்த்தியும் மதுரைக்குப் பக்கத்திலுள்ள கிராமத்தில் இருந்திருக்கிறார்கள். கமலநாத னுக்கு சினிமா சான்ஸ் தேடி சென்னைக்குப் போன தன் தகப்பன் ராஜாங்கத்திடமிருந்தோ சித்தப்பன் ராமமூர்த்தியிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை. சினிமா பார்ப்பதற்காக சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த கமலநாதன் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான ஜேப்படித் திருடனாக மாறினான். 

ஆர்த்தியின்மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தான். ஆனாலும் அவளுக்கு அது புரியவில்லை . அவள் கமலநாதனையும் அதற்கும் மேலாக 

காமாட்சியையும் வெறுத்தாள். அதிலும் காமாட்சியின்மீது அவளுக்கிருந்த வெறுப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களின் வாய்ச்சண்டை கைகலப்பில் முடிந்து முடியைப் பிடித்துக்கொண்டு ரோட்டில் புரளும்போது கமலநாதன் வந்து சேருவான். 

அதிலும் எப்படி. இப்போதெல்லாம் போலீஸ்காரன் என்று தனியாகவே தேவையில்லைபோல. ஜனங்களே போலீஸ்காரர் களாக மாறிவிட்டார்கள். ஜேப்படித் திருடன் மாட்டினால் ஜனங்களே அவர்களைப் போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறார்கள். 

அந்த மாதிரி தர்மஅடி வாங்கிக்கொண்டு வரும்போது ஆர்த்தியும் அம்மாவும் இப்படி ரோட்டில் கட்டிப் புரண்டு உருண்டுகொண்டிருந்தால் எப்படி. விறகுக் கட்டையை எடுத்து வந்த ஆர்த்தியைப் போடு போடு என்று போட்டான். 

போடா பிக்பாக்கெட் என்று சொல்லி அவனையே அடிக்க வந்தாள் ஆர்த்தி . 

என்னது போடாவா. யார் யாரை அடா போட்டுக் கூப்பிடுவது. கமலநாதனிடமிருந்த விறகுக் கட்டையை வாங்கி ஆர்த்தியை அடித்தாள் அம்மா . 

மண்டை உடைந்து ரத்தம் வந்ததும் திடீரென்று அவள் ஆர்த்திக்குப் பரிந்துகொண்டு பேச ஆரம்பித்துவிட்டாள். 

என்ன இருந்தாலும் நீ என் தங்கச்சி பொண்ணாச்சே ஏன்டி இப்பிடி இந்த பிக்பாக்கெட் பயலெ கட்டிக்கிட்டு அடிபட்டு சாகறே என்று ஆர்த்தியைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். மஞ்சள் பற்று போட்டு கட்டுக் கட்டினாள். 

ஜேப்படி செய்து அவனவன் எப்படியெப்படியோ இருக்கிறான். ஆனால் கமலநாதனுக்கு அந்தத் தொழில் அவ்வளவாகக் கை கொடுக்கவில்லை. அடிக்கடி போலீசிடமோ அல்லது பயணிகளிடமோ மாட்டிக் கொண்டான். போலீசிடம் மாட்டினால் அவ்வளவாக பிரச்னையில்லை. ஆனால் பயணிகளிடம் மாட்டினால் மாற்றி மாற்றி அடித்துப் பின்னி எடுத்து ...........................