Sunday 31 May 2015

புத்தரின் படுகொலை... - கவிஞர் எம்.ஏ.நுஃமான்


புத்தரின் படுகொலை...
"""""""""""""""""""""""""""""
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.
-கவிஞர் எம்.ஏ.நுஃமான்
Lunugala Sri பேராசிரியர். எம்.ஏ.நுஃமான் சேரின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

  • Slm Hanifa இந்த கவிதையை எழுதியதற்காக இராணுவ முகாமிற்கு ,கவிஞர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் ...
Ashok-yogan Kannamuthu's photo.

Saturday 30 May 2015

-Charles Tomlinson --Maureen Burge--Friedrich Holderlin - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    எதுவுமே நிகழவில்லை
    ஏதுமின்மை
    ஒரு துளிநீர்
    ஒசையின்றி சிதறுகிறது
    சிலந்தி இழை தளர்கிறது
    உபயோகிக்காத இவ்வெளிக்கெதிராக
    ஒரு பறவை
    யோசனையின்றி தன் குரலில் முயல்கிறது
    ஆனால் வேறெந்த பறவையும் செய்யவில்லை
    மிதியுற்ற தரையின் மீது
    காலடிச் சுவடுகள்
    ஒலியாயின்றி
    தாமே அதித- துடிப்பாய் உயிர்க்கிறது
    திரும்பி வரும் கணம்
    லேசாக மயக்குற்று
    காற்றினில்
    அதை உணர்ந்திருக்க,
    ஏதுமின்மை
    நிகழ்ந்தேறுகிறது.
    -Charles Tomlinson -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.
    ஒரு மதுக்கடையில் அமர்ந்திருந்தேன்
    மது கட்டற்று பாய்ந்து வழிகிறது
    எல்லோருமே கொண்டாட்டத்திலிருக்க
    அளவாய் உண்ணும் வயோதிக நான்
    பட்டினியாயிருக்கிறேன்,
    நான் ஒரு மூலையில்
    அமர்ந்திருக்க வேண்டியிருந்தது
    அனைத்தும் அமைதியாயிருக்க
    நீ காணும் சிக்கல்
    நான் உணவு கட்டுப்பாட்டிலிருக்கிறேன்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    விஸ்கியும் அல்ல , ஜின்னும் அல்ல
    நான் இங்கு ஏன் வந்தேன்
    உழுபவன் உணவல்ல இது
    அந்த பேராசை கொண்ட கூட்டத்தைப்போல்
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    நான் அந்த மதுக்கூடத்திற்கு நடக்கட்டுமா
    அதிக தூரம் போகமாட்டேன்
    ஒரு பாக்கட் நொறுவைகள்
    ஒரேயொரு கோப்பை மது
    நான் பட்டினியாயிருக்கிறேன்,
    பிறகு நான் யோசிக்கிறேன்
    இந்த சிகரெட்டை புகைத்தபின்
    எனக்கு ஒரு கூடையில்
    கொஞ்சம் சிக்கன் கொஞசம் சிப்ஸ் கிடைக்கும்
    நான் பட்டினியாயிருக்கிறேன்
    இல்லை
    என்னால் இனி அமைதியாக இருக்க இயலாது
    நான் உரக்க கூச்சலிடுவேன்
    உணவுக் கட்டுப்பாட்டை விட்டுத் தள்ளு
    நான் முழு பட்டினியாயிருக்கிறேன்.
    -Maureen Burge-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

    News Feed

    வேறு யாருமே அறிந்திருக்கவில்ல
    இதற்கிடையே நான் திரிய துவங்குகிறேன்
    பெர்ரிகளை சேகரிக்கிறேன்
    உன்மீதான என் காதலை அமைதியாக்க 
    உனது பதைகளின் மீது,
    ஓ பூமியே
    இங்குதான் ரோஜாக்களின் முட்களில்
    இனிமையான லிண்டன் மரங்கள் தனது நறுமணத்தை வார்கிறது
    பீச்கள் ஒருபுறமிருக்க , நண்பகலில் ,
    வெளிறிய ரை
    அடர்ந்து செழித்த மெலிய தண்டுகளோடு சலசலக்கிறது,
    அதன் செவிகள் பக்கமாக சாய்ந்தன
    இலையுதிர்காலத்தை போல்,
    ஆனால் மேலோங்கி உயரே வேய்ந்த ஓக்கின் கவின்மாடம்,
    நான் அகம்- நெகிழ்ந்து கவியுற
    வானத்தை வினவ , மணிகளின் ஓசை
    எனக்கு நன்கு தெரியும்
    தொலைவாய் ஒலிக்கும் பொன்மணிகள்
    பறவைகள் மறுவிழிப்புறும் நேரத்தில் .
    அவ்வாறாக நிகழ்கிறது.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

-Friedrich Holderlin - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    எளிதாய் மருளும் சேயே , நான் உன்னை பயிரிட்டேன்
    வனப்புறும் செடியே !
    இப்போது எத்தனை மாறியிருக்கிறோம்
    ஒருவரையொருவர் நாம் பார்த்துக் கொள்வதில்
    அதி அற்புதமாய் நீ நிற்கிறாய் அங்கே
    ஒரு சேயாய்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.

    முகத்துக்கு முகம் நேர்முகமாக ................
    அனைத்துமே அகமுகமாகவே உள்ளது
    இதுதான் வித்தியாசம்
    இவ்வாறாக கவிஞன் மறைக்கிறான்
    கவனமின்மையோடு!
    ஆன்மாவை ஆழ்ந்து தரிசிக்க விழைகிறான்
    முகத்துக்கு முகம் நேர்முகமாக
    நீ
    தீ ஜூவாலையுள் அமிழ்ந்து போகிறாய் .
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


    இரவு முழுமையுமாய் கிராமத்தில் நான்
    ஆல்பின் தளிர்காற்று
    சமவெளிச் சந்தின் ஊடாக
    வீடு மீள்-இணக்கம் . பிறப்பிட சூரியன்
    படகுசவாரி,
    நண்பர்கள் ஆண்கள் மற்றும் அன்னை,
    நித்திரையிலாழ்தல்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    கடவுள் என்பது யாது? அறியப்பட்டதில்லை,
    ஆயினும்
    வான் முகத்தில் அவனது அம்சங்கள் நிறைந்துள்ளன .
    மின்னல் கடவுளின் கடுங்கோபம் .
    இன்னும் கூடுதலான புலப்படாமை
    இதிலொரு
    அறிமுகமின்மை இசைந்திருக்க
    ஆனால்
    இடி கடவுளின் மகிமையாயிருக்க. நிலைபேற்றின் அன்பும்
    ஒரு உடைமைதான் , நம்முடையது போன்று,
    கடவுளடையது.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    மனிதனின் வாழ்வென்பதென்ன? இறைமையின் படிமமா?
    அவர்கள யாவரும் வானத்தின் கீழ் அலைகின்றனர்,
    அழிவுறு மனிதர்கள் அதை நோக்குகிறார்கள்.
    ஒரு புனிதநூலைப் படிப்பதைப் போல
    மனிதர்கள் இன்மையை போலச் செய்கின்றனர்,
    செல்வத்தையும் கூட.
    சரி, எளிய வானும் வளமார்ந்ததா?
    வெள்ளி மேகங்கள் பூக்களை ஒத்திருக்கின்றன .
    ஆயினும் பனியாய் பொழிந்து ஈரப்படுத்துகிறது.
    ஆனால்
    எளிய நீலம் அழிப்புற்றிருக்கிறது
    பளிங்காய் விரிவுறும் வான்
    தாதுவைப் போல் மிளிரும்
    வளங்களையெல்லாம் சுட்டியும்.
    -Friedrich Holderlin -
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Friday 29 May 2015

FOR JANE BY CHARLES BUKOWSKI - ஜேனுக்காக -மொ.பெ. ராஜசுந்தர ராஜன் raja sundara rajan

FOR JANE BY CHARLES BUKOWSKI

 FOR JANE 

BY CHARLES BUKOWSKI

225 days under grass and you know more than I. they have long taken your blood, you are a dry stick in a basket. is this how it works? in this room the hours of love still make shadows. when you left you took almost everything. I kneel in the nights before tigers that will not let me be. what you were will not happen again. the tigers have found me and I do not care. (போதை தெளிந்தபின்): ஜேனுக்காக _____________ 225 நாட்கள் புல்லுக்கு அடியில்  நீ என்னிலும் கூடுதல் அறிவாய். எப்போதோ பறித்துவிட்டார்கள் உன் குருதியை, ஒரு சுள்ளி நீ கூடையில்.   இப்படித்தானா அது நடந்தேறுகிறது? இந்த அறையில்  காதலின் காலநீட்சிகள் இன்னும் இருள்கவிக்கின்றன. போகையில்  கிட்டத்தட்ட எல்லாவற்றையும்  கூடவே கொண்டுபோய்விட்டாய். என்னை இருக்கவிடாத  புலிகளின் முன்  இரவில் மண்டியிடுகிறேன். நீ இருந்த நிலை  மீண்டும் நிகழப்போவதில்லை. புலிகள் என்னைக் கண்டுவிட்டன,  எனக்கதில் அச்சமில்லை.
 

raja sundara rajan

Shared publicly  -  7 May 2015
எளிமை, படுத்தப்படாமல், இயல்பாகவே இயலும் ஒரு கவிதை எடுத்துக்காட்டு:

ஜேனுக்காக
_______________

225 நாட்கள் புதைமேட்டுப் புல்லுக்கு அடியிலான
நீ என்னிலும் நன்றாக அறிவாய்.
எப்போதோ உன் உயிர்நீரை எடுத்துவிட்டார்கள்,
இப்போதொரு சுள்ளி நீ கூடைக்குள்.
இப்படித்தானா அது இயல்கிறது?
இந்த அறையில்
காதலின் மணிக்கூறுகள்
இன்னும் நிழற்பூச்சி காட்டுகின்றன.
போனதோடு
எல்லாவற்றையும்
கொண்டுபோய்விட்டாய்.
என்னை இயல்பில் விடாத
புலிகளின் முன்
இரவில் மண்டியிடுகிறேன்.
இடம் உனது இனி
நிரப்பப்படப் போவதில்லை.
எனது இருப்பையும் புலிகள் கண்டுகொண்டனவா,
கவலையில்லை.

- சார்ல்ஸ் புக்கவ்ஸ்கீ


FOR JANE BY CHARLES BUKOWSKI

225 days under grass
and you know more than I.
they have long taken your blood,
you are a dry stick in a basket.
is this how it works?
in this room
the hours of love
still make shadows.
when you left
you took almost
everything.
I kneel in the nights
before tigers
that will not let me be.
what you were
will not happen again.
the tigers have found me
and I do not care.

(போதை தெளிந்தபின்):

ஜேனுக்காக
_____________
225 நாட்கள் புல்லுக்கு அடியில்
நீ என்னிலும் கூடுதல் அறிவாய்.
எப்போதோ பறித்துவிட்டார்கள் உன் குருதியை,
ஒரு சுள்ளி நீ கூடையில்.
இப்படித்தானா அது நடந்தேறுகிறது?
இந்த அறையில்
காதலின் காலநீட்சிகள்
இன்னும் இருள்கவிக்கின்றன.
போகையில்
கிட்டத்தட்ட எல்லாவற்றையும்
கூடவே கொண்டுபோய்விட்டாய்.
என்னை இருக்கவிடாத
புலிகளின் முன்
இரவில் மண்டியிடுகிறேன்.
நீ இருந்த நிலை
மீண்டும் நிகழப்போவதில்லை.
புலிகள் என்னைக் கண்டுவிட்டன,
எனக்கதில் அச்சமில்லை.

Wednesday 27 May 2015

    அமைதியிலிருந்து அமைதியைக் கிழித்தெடுத்தல்.....................
    மெய்மை என்பது நாம் நாடியடைதல்,
    ஸ்தூலத்தில் அல்ல;
    அது வெளியினுள் தெளிவாக அறியப்படுதல்:
    உதாரணமாக ஒரு கடற்கரை,
    சுவரிலிருந்து சுவருக்கிடையே பரவியிருக்கிறது,
    கடலின் -குரல்
    அமைதியிலிருந்து அமைதியை கிழித்தெடுத்தல்.
    -Charles Tomlinson-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    Shanmugam Subramaniam's photo.



முழு உலகும் அவனுக்கு வழங்கப்பட்டது
அவன் ஏற்க மறுத்துவிட்டு போனான்.
அவன் கவிதை எதும் எழுதவில்லை,
அவன் கவிதை இருந்திருக்கும் முன்பே 
கவிதையை வாழ்ந்தான்.
அவன் தத்துவத்தை பற்றி பேசவில்லை,
தத்துவம் விட்டுச் சென்ற சாணத்தைத் தூய்மை செய்தான்.
அவனுக்கு முகவரி ஏதுமில்லை:
அவன் ஒரு புழுதிப் பந்தில் வசித்துக் கொண்டு
பிரபஞ்சத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
-Jung Kwung-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
நீல இரவினில்
பனிமூட்டம் ,
நிலவுடன் வான் ஓளிர்கிறது
பைன் மர சிரசு
பனி நீலத்தில் வளைவுற்று
வானில் மங்குகிறது,
பனி, நட்சத்திர ஒளி.
பூட்ஸின் கிரிச்சொலி .
முயல் தடங்கள்,
மான் தடங்கள்,
நாம் எதை அறிந்தோம்
-Gary Synder-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 
வார்த்தை வார்த்தையால் அழிக்கப்படும்
வாள் வாளால்
நன்மை நன்மையால்
வாள் வெட்டுகிறது பாழ்வெளியை வெட்டுகிறது
ஆனால் வாள் உடைகிறது
பாழ்வெளி தன் கண்களை சிமிட்டுகிறது.
-Jung Kwung-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

News Feed

இந்த மரத்தினுள்
இன்னொரு மரம்
தன்னொத்த உடலை அகப்படுத்தியுள்ளது
இந்தக் கல்லினுள்
இன்னொரு கல் துயில்கிறது,
சாம்பல் நிறத்தின் பல்வேறு சாயல்கள்
ஒன்றாயிருக்க ,
அதன்
மேற்புறமும் எடையும் ஒத்ததாயிருக்கிறது.
எனது உடலினுள்
இன்னொரு உடல்,
அதன் வரலாறு,
காத்திருத்தலில் இசைக்கிறது.
இதைத்தவிர
வேறொரு உடல் இல்லையென
வேறெந்த உலகு இல்லையென
இசைக்கிறது.
-Jane Hishfield-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
காதலி திகைப்புறச் செய்யும்
சுழற் படிக்கட்டில் ஏறிச் செல்கிறாள்
உனது கரங்களில்
டாஃபோடில்கள் மலர்கின்றன
மரணித்த தங்கமீண்
கண்ணாடிக் குடுவையியுள் அகப்பட்டிருக்கிறது
உயிரோவிய சட்டகத்தினுள்
மீண்டும் நீந்தத் துவங்குகிறது
காதலி திகைப்புறச் செய்யும்
சுழற் படிக்கட்டில் ஏறிச் செல்கிறாள்
நீ
என் கரங்களில்
அரும்புகிறாய்.
-Mina Asadi -.
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.