Thursday, 15 February 2018

குலசாமியைக் கொன்றவன் - சிறுகதை: கணேசகுமாரன், பனி நிலா - அராத்து

குலசாமியைக் கொன்றவன்


சிறுகதை: கணேசகுமாரன்ஓவியங்கள்: ஸ்யாம்

திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து   20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’ இடைவெளி 'ரா’ இடைவெளி 'ம’ இடைவெளி 'ம்’... அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு இறந்துபோயிருக்கும் இசக்கிமுத்து முக்கியம். மிகவும் தளர்ந்திருந்த தோல். கஷ்டப்பட்டுத்தான் செத்துப்போயிருக்க வேண்டும். வலது கையில் பிடித்திருந்த கத்தியில் ரத்தம் காய்ந்து ஈ மொய்க்கத் தொடங்கியிருந்தது. கழுத்தில் இருந்து வழிந்த ரத்தம், இசக்கிமுத்துவின் சட்டையை நனைத்து நிலத்தில் தேங்கியிருந்தது. திறந்திருந்த விழிகளில் பிரேதத்தின் நிம்மதி உறைந்திருந்தது. 
நேற்று இரவுதான் திருப்பாளையம் வந்தார் இசக்கிமுத்து. கடைசி பஸ் போய்விட்டது. இசக்கிக்கு அதைப் பற்றி கவலை இல்லை. வந்து இறங்கிய வண்டியிலேயே டிக்கெட் எடுக்காத பயணியாக தான் பயணம் செய்தது. யார் கேட்பது? அவரின் கண்களில் உறைந்திருக்கும் பல வருடத் துக்கத்தைச் சந்திப்பவர்கள் எவருமே, அவரைத் தவிர்க்கத்தான் நினைப்பார்கள். ஆனால், இசக்கிக்கு வழி தெரியும். மறந்துபோய்விடக்கூடிய பாதையா அது? அவரின் கருப்பசாமி இருக்கும் இடம் அல்லவா! பௌர்ணமி நிலா, பேருந்து நிலையத்தைக் கழுவிக்கொண்டிருக்க அவர் கண்களில் நீண்ட பாதையின் முடிவில், கருப்பசாமியின் கழுத்து அறுபட்டு இரண்டு முறை உடல் துடித்து அடங்கியது. உதடுகள் அசைந்தன. 'என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. மெதுவாக நடக்கத் தொடங்கினார்.
'புகழ்மேனிராஜன்குடி 20 கி.மீ’ என எழுதப்பட்டு அம்புக்குறி பாய்ந்திருந்த பாதையில், அங்கங்கே கொஞ்சம் வெளிச்சம். இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் உறங்கிய கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். அந்த முனகல் மட்டும் உதடுகளைவிட்டு விலகவில்லை. 'என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நாய்களின் கண்களில் வண்ணம் மாறின. குரைக்க மறந்து நிலவு ஒளியின் துணையில் நடக்கும் இசக்கியையே பார்த்துக்கொண்டிருந்த நாய் ஒன்று முகம் உயர்த்தி, நிலா பார்த்து பெரும் ஊளையிட்டது. 'ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ...’

இசக்கிமுத்துவுக்கும் செல்விக்கும் திருமணம் முடிந்து 10 வருடங்களாகக் குழந்தை இல்லை. இருவரின் உடலிலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லை என ஏகப்பட்ட மருத்துவர்கள் சொல்லியும் கரு தங்கவில்லை. போகாத கோயில் இல்லை; கும்பிடாத சாமி இல்லை. அங்கம் புரண்ட கோயில் கருங்கற்களின் வெப்பமும் எதுவும் செய்யவில்லை இருவருக்கும். பரமசிவம் தோப்பில்தான் இசக்கி வேலை பார்த்தான். விடியும் முன் தோப்புக்குச் சென்றால் வெளிச்சம் விரிவதற்குள் தோப்பில் உள்ள எல்லா தென்னைமரத்தில் இருந்தும் கள் இறங்கியிருக்கும். அதோடு அவன் வேலை முடிந்தது. மாலையில் ஒரு மணி நேரம் மட்டும் மறுபடியும் சென்று கள் வடிவதற்கான தென்னம்பாளையைச் சீவிவிட்டு வருவான். மூன்று தலைமுறையாக பரமசிவத்திடம்தான் இசக்கி குடும்பம் வேலை செய்துவருகிறது. எல்லாம் சரியாக இருந்தும், வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லாத குறைதான் அவர்களை வாட்டிவதைத்தது. உறவுக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு இருவரும் செல்வது நிறுத்தப்பட்டது. நண்பர்களுடன் அரட்டையில் இசக்கி தனியானான். கடவுள் என்ற ஒன்றின் மீது இசக்கி காறித் துப்பிய நேரம்தான் இழவு விழுந்தது. செல்வி வகையறாவில் தூரத்துச் சொந்தக்காரக் கிழவி. பிணத்தைக் கழுவிய தண்ணீரைச் சேமித்து, தன் வீட்டுக் கொல்லையில் தென்னம்பிள்ளை நட்டுவைத்து நீர் ஊற்றி வளர்த்தாள் செல்வி. தென்னங்கன்றும் துளிர்விட்டது. ஆனாலும் பயன் இல்லை. செல்வி தன் அடிவயிற்றைத் தடவிக்கொடுத்து அழுதுகொண்டிருந்தபோதுதான், இசக்கிக்கு குலதெய்வம் ஞாபகம் வந்தது. யார் யாரோ சொல்லிய சாமிகளிடம் எல்லாம் தன் குறையைச் சொல்லி அழுத இசக்கி, குலதெய்வத்தை மறந்தது குறித்த குற்றவுணர்வுக்கு ஆளானான். சித்திரைத் திருவிழாவுக்குச் செல்ல ஏற்பாடானது.
திருப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ளது புகழ்மேனிராஜன்குடி. மெயின் ரோட்டில் சில கிலோ மீட்டர்களிலேயே இடதுபுறம் திரும்பினால் உயரமான கோபுரத்தில் அம்மன். மலைகாத்த அய்யனாரின் தங்கை. பல வருடங்களுக்குப் பிறகு வருகிறான் இசக்கி. மண் தரை மொசைக்காக மாறியிருந்தது. அய்யனாரின் கையில் புது அரிவாள். வாசலில் கருப்பசாமி காவலுக்கு. குலதெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆடுகள் வெட்டப்படக் காத்திருந்தன. திருவிழா வாசனையை அந்தச் சிறு கிராமம் இன்னும் சில நாட்களுக்கு அலறும் லவுட் ஸ்பீக்கர் வழியே சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் பரப்பிக்கொண்டிருக்கும். தன் குலசாமியின் முன் தலைக்கு மேல் கை உயர்த்தினான் இசக்கி.
''கருப்பா... ஒன் வாசலை மிதிக்காத குத்தம்தான் எங்களுக்குக் கொள்ளிபோட ஒரு வாரிசைக் குடுக்காம இருக்கபோல. என்ன மன்னிச்சுடு. ஒன் கொழந்தைங்க நாங்க. எங்களுக்கு ஒரு கொழந்தையைக் குடு. நீ கேக்கிற பலியை நான் தர்றேன். ஒன் கோயில் வந்து அத நெறவேத்துறேன்.''
பூசாரி, இசக்கியின் நெற்றியிலும் செல்வியின் நெற்றியிலும் திருநீறை அள்ளிப் பூசினார். அர்ச்சனை செய்த தேங்காய்முடியை தரையில் தட்டி உடைத்து, சிறு சிறு சில்லுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் இசக்கியும் செல்வியும்.
''உயிர் பலி தர்றதா வேண்டியிருக்கேன். குட்டி ஆடு ஒண்ணு வாங்கணும். அய்யனார் வரம் தர்றாரோ இல்லியோ, அடுத்த வருஷம் திருவிழாவுக்கு வந்து காவு குடுக்கணும். குலசாமி மனசு அப்பவாவது குளிருதானு பாப்போம்'' - கோயிலில் இருந்து பைக்கில் திரும்பும் வழியில் குறுக்கிட்டது ஓர் ஆட்டுக்குட்டி.
''ம்...மேஏஏ''
சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் இசக்கி. ஆனாலும் ஆட்டின் காலில் அடி. நகர முடியாமல் தன் வலியை 'ம்ம்ம்ம்ம்மேஏஏஏ’ என அதிகப்படுத்தியது. சுற்றிலும் யாரும் இல்லை. செல்வி மனசுக்குள் குமைந்தாள். கோயிலுக்குப் போய் வரும் வழியில் இப்படி நடந்திருக்கக் கூடாதே என முகம் சுருக்கினாள். இசக்கி ஆட்டுக்குட்டியைத் தூக்கி செல்வி மடியில் வைத்தபடி, பைக்கைக் கிளப்பினான். இசக்கியின் கண்களுக்குள் அய்யனாரின் உத்தரவு மீசை முறுக்கிப் புன்னகைத்தது.
காலில் புண் ஆறி, இசக்கி வீட்டில் வளரத் தொடங்கியது ஆட்டுக்குட்டி. 'கருப்பசாமி’ எனப் பெயர் வைத்தான் இசக்கி. மூன்றாம் மாதம் வாந்தி எடுத்துச் சோர்ந்து படுத்தாள் செல்வி. நாள் தள்ளிப்போயிருப்பதை இசக்கியிடம் சொன்னபோது ஓடிப்போய் கருப்பசாமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான் இசக்கி.
10 மாதங்கள் பல்லை கடித்து, செல்வி தன் வயிற்றுப் பாரத்தை இறக்கிவைப்பதற்குள் திமுதிமுவென வளர்ந்துவிட்டது கருப்பசாமி. ஆண் குழந்தை. ஆயுதம் போட்டுத்தான் எடுத்தார்கள். செல்வியின் கர்ப்பப்பை களைத்துப்போனது. மீண்டது மறுபிறப்பு. குழந்தை, இசக்கி போல் கறுப்பாகவும் திடமாகவும் இருந்தான். இசக்கி யோசிக்கவே இல்லை. தன் மகனுக்கும் 'கருப்பசாமி’ என்றே பெயர் வைத்தான். குழந்தை பிறந்த சந்தோஷத்தில், செல்வியின் உடல் படுத்திய பாட்டில் அந்த வருடம் நேர்த்திக்கடனை மறந்துபோனான் இசக்கி.
வருடங்கள் கடந்தன. நிசப்தமாக இருந்த வீட்டில், பிள்ளைச் சத்தமும் ஆட்டின் சத்தமும் நிறையத் தொடங்கின. கஞ்சி வைத்தும் கருவேலங்காய்கள் பறித்துப்போட்டும் 'கருப்பு... கருப்பு...’ எனக் கொஞ்சித் தீர்த்தான் தன் நிராசையைத் தகர்த்த குலசாமியை. இசக்கியின் மகனோ வளரும் காலத்திலேயே ஏகப்பட்ட சேட்டைகளுடன் வளர்ந்தான். ஊர்ப் பிள்ளைகளைக் கிள்ளிவைப்பதில் தொடங்கிய விளையாட்டு, 10 வயதில் கில்லி விளையாட்டில் வம்பு இழுத்து வளர்ந்தது.
இசக்கி நடந்துகொண்டிருந்தார். மதனபுரம் வந்திருந்தது. இன்னும் 10 கிலோ மீட்டரில் அவரின் கருப்பசாமி. அந்த இரவில் திறந்திருந்த ஏ.டி.எம் வாசலில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருந்த காவல்காரர், சாலையில் நடந்துசென்ற இசக்கியை அழைத்தார்.
''யாருப்பா அது இந்த நேரத்துல..?''
இசக்கி, செக்யூரிட்டி அருகில் வந்தார். ஏ.டி.எம்-காரரே தொடர்ந்தார்.
''கடைசி பஸ்ஸும் போயாச்சு. ஷேர் ஆட்டோ, வேன் எதுவுமே கெடையாது. எங்க போறீங்க..?''
இசக்கியின் உதடுகள் ஒருமுறை முணுமுணுத்தன. ''என் குலசாமிய நானே கொன்னுட்டேன்.'' அதைச் சரிவர காதில் வாங்காத காவல்காரர், '' 'எந்த ஊர்?’னு கேட்டேன்'' என்றார்.
''கோட்டைவாசல்'' என்ற இசக்கியின் கண்களில் தவிப்பு.
''திருப்பாளையத்துல எறங்கி வர்றீங்களா நேரம் கெட்ட நேரத்துல. எங்க போகணும்?''
''கருப்பசாமியைப் பாக்க... அய்யனார் கோவத்துல இருக்கார். ராஜங்குடிக்குப் போகணும். விடியிறதுக்குள்ள... நிலா வெளிச்சத்துல போயிடுவேன்.''
''இன்னும் கொள்ள தூரம்ல போகணும். நமக்குத் தெரிஞ்ச பசங்க யாராவது வண்டியில வந்தா ஏத்திவிடுறேன்... செத்த இருங்க. யாராவது தென்படுறாங்களானு பாக்குறேன்.''
இறங்கி சாலைக்கு வந்து கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பார்க்க, இருள் அப்பிய சாலை முடிவில் இன்னும் இருள்.
''ஒருத்தரையும் காணுமே பெருசு. காத்திருந்து பாக்குறீங்களா?'' என்றபடி திரும்பிப் பார்க்க, அதிர்ந்தார். இசக்கி ஏ.டி.எம் வாசலைவிட்டு அகன்றிருந்தார். மஞ்சள் வெளிச்சம் படிந்திருந்த சாலை முடிவைக் கடந்தார். மேகத்துக்குள் இருந்து நிலா வெளியே வந்தது.
''ஏன்டா கருப்பு... இப்பிடி இருக்க?'' என்றார் இசக்கி, கஞ்சி குடிக்க மறுத்த கருப்பசாமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு. வீட்டு வாசலில் அமர்ந்தபடி பனங்கிழங்கு உரித்துக்கொண்டிருந்த கருப்பசாமி, ''எப்பா... ஒண்ணு என் பேரை மாத்து. இல்ல ஒன் ஆட்டு பேரை மாத்து. 'கருப்பு’, 'கருப்பு’னா யாரைச் சொல்றேன்னே தெரியல. என்னத் திட்டுறியா,                     அத திட்டுறியானும் புரியல'' என்றான் கோவமாக.
''டேய் கிறுக்கா... அது அய்யனார் பேரு.
நீ பொறக்கிறதுக்கு முன்னாடியே நம்ம வீட்டுக்கு குலசாமி வந்தாச்சுடா.''
''அப்போ ஒன் குலசாமி பேரை மாத்து. சும்மா... ஆட்டுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் தெரியாம பேரை வெச்சுக்கிட்டு'' - பனங்கிழங்கைப் பிட்டு, நார் உரித்து வீசிவிட்டு, தின்னத் தொடங்கினான்.
செல்விதான் அடிக்கடி இசக்கிக்கு ஞாபகப்படுத்துவாள்.
''நேர்த்திக்கடனுங்க... நாம மறந்தாலும் சாமி மறக்காது. போய் நெறவேத்திட்டு வாங்க.''
''எப்பிடி செல்வி முடியும்? நமக்குப் புள்ளையா கருப்பசாமி வர்றதுக்கு முன்னாடியே தானா நம்ம வீட்டுக்கு வந்த புள்ளை அது. அதைப் பலிகுடுக்க மனசு வருமா..? வருஷாவருஷம் திருவிழாவுக்குப் போய் பொங்கல் வெச்சு கும்பிட்டுத்தான வர்றோம். அய்யனாருக்கு ரத்த தாகம் எடுத்தா, நம்ம புள்ளைய பலி கேக்க மாட்டாரு. என் ரெண்டு புள்ளைங்களும் எனக்கு வேணும் செல்வி.''
பரிதாபம் வழிய அவன் பேசும் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது செல்வியிடம். ஆனாலும் அய்யனாருக்குக் கோவம் வந்தது ஒருநாள். ஜுரம் எனச் சோர்ந்து படுத்த கருப்பசாமியை திருப்பாளையம் ஆஸ்பத்திரியில் சேர்த்துதான் காப்பாற்ற முடிந்தது. ஒரு மாதம் பள்ளி சென்றவன், மறுபடியும் சோர்ந்து விழுந்தான். இந்த முறை அம்மையும் சேர்ந்து வந்தது. செல்வி, உள்ளூர் அம்மனிடம் சென்று காசு முடிந்து வந்தாள். வாசல் திண்ணை மீது செருகி வைத்திருந்த வேப்பிலையை கருப்பசாமி தின்றது.
அம்மை நாட்கள் முடிந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றியும் கருப்பசாமி முன்புபோல் இல்லை. சட்டென உடல்வற்றி சவலைப்பிள்ளைபோல் ஆனான். சத்தான சாப்பாடு, மருத்துவர்களின் டானிக் மருந்துகள் எதுவும் கருப்பசாமியின் கால்களில் சக்கரம் மாட்டவில்லை. சதா ஊரையே வலம்வந்து வம்பும் வழக்குமாக இருந்த பிள்ளை, இப்படி கை ஊன்றி எழக் கஷ்டப்படுவதைக் காண முடியாமல் கண்ணீருடன் கிடந்தாள் செல்வி. தோட்டத்தில் இலை, தழைகளைத் தின்றுகொண்டும் புழுக்கை போட்டுக்கொண்டும் கொழுகொழுவெனத் திரிந்த கருப்பசாமியைப் பார்க்கையில், மனம் ஊமையாகப் புழுங்கியது செல்விக்கு. இசக்கியோ, மகனின் உடல் நலமாக ஊர் ஊராகத் திரிந்துகொண்டிருந்தான் மருத்துவர்களைத் தேடி. அலுத்துக் களைத்துவரும் இசக்கியைக் கண்டதுமே தலையாட்டி கழுத்து மணி ஒலிக்கவிடும் கருப்பசாமியின் கொம்புத் தடவல் மட்டுமே அவனுக்கு ஆறுதல். ஒருநாள் இரவு புருஷனிடம் தயங்கித் தயங்கிச் சொன்னாள் செல்வி.
''எனக்கு என்னமோ வேண்டுதல் நெறவேத்தாததுதான் இப்பிடி புள்ளைக்கு வியாதியா வந்து கெடக்கோனு தோணுது. வருஷம் பத்து ஆச்சு... இப்போகூட ஒண்ணும் கெட்டுப்போகல. போய் குலசாமி கடமையை முடிங்க.''
பகீரென்றது இசக்கிக்கு.
''ஏன் செல்வி. ஒனக்கு கருப்பும் ஒரு புள்ளதான..! ஒரு புள்ளையைப் பொழைக்கவைக்க, இன்னொண்ணைப் பலி தரச் சொல்றியா?''
கண்கள் கலங்கின. மனசுக்குள் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப்போவதுபோல் பிசைந்தது.
''நான் இன்னும்
10 வருஷமோ...
15 வருஷமோ... எனக்குக் கொள்ளிவைக்க புள்ள வேணுங்க!'' - இசக்கியின் மார்பில் சாய்ந்து அழுத செல்வியின் அழுகைக்கு முன், கருப்பசாமியின் 'ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஏஏஏஏஏஏ’ அழைப்பு, இசக்கியின் காதில் விழவில்லை.
பௌர்ணமி உச்சத்தில் இருந்தது. இசக்கியின் நடையில் வேகம் கூடியது. கை இடைக் கத்தியைத் தொட்டுத் தடவியது. உதடுகள் வறண்டு இருந்தன. 'என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. கோயில் கோபுர உச்சி கண்ணுக்குத் தெரிந்ததும் நின்றார். உடம்பில் நடுக்கம் கூடியது. ஒருமுறை... ஒரே ஒருமுறை தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். 'ம்ம்ம்ம்ம்ம்ம்மே ஏஏஏஏஏ.’
கண்களில் மடை உடைக்க அழுதுகொண்டே கோயில் நோக்கி விரைந்தார்.
அந்த வருடத் திருவிழாவுக்கு செல்வி வரவில்லை. படுக்கையிலே கிடக்கும் கருப்பசாமியின் ஜுரம் அதிகமாகியிருந்தது. இசக்கிமுத்து மட்டும் கருப்புடன் கிளம்பிவிட்டான். அதுவும் தலையை ஆட்டியபடி இசக்கியுடன் உற்சாகமாகக் கிளம்பியது. கோயில் திருவிழா களைகட்டியிருந்தது. சாலையின் இருமருங்கிலும் டியூப்லைட்டுகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.
காலை பூஜை முடிந்து நகர்வலம் கிளம்பினார் அய்யனார். கருப்பின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை, இறுகப் பிடித்தவாறு அய்யனாரை நோக்கி கை உயர்த்திக் கும்பிட்டார் இசக்கி. கண்களை மூட, கண்ணீர் தடையின்றி பிதுங்கி வழிந்தது.
''உனக்கான சொத்து இதோ. என் சந்தோஷத்தை மட்டுமே யோசிச்ச நான், உன்கிட்ட குடுத்த வாக்கை மறந்தது தப்புதான். அதுக்காக              10 வருஷமா வேண்டிப் பொறந்த உசிர எடுத்துடாத சாமி. உனக்கான காணிக்கையை நான் உன்கிட்டவே சேத்துடுறேன்.''
ஒருமுறை இசக்கியின் உடல் குலுங்கி அடங்கியது. 'ஆடு காணிக்கை தரும் நபர்கள், கோயில் அலுவலகத்துக்கு வந்து டோக்கன் வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ - மைக்கில் அறிவிப்பு வந்ததும் கருப்பை இழுத்துக்கொண்டு டோக்கன் வாங்க நடந்தார் இசக்கி.
''ஏம் பெருசு... ஆட்டை எங்கயாவது தூண்ல கட்டிட்டு டோக்கன் வாங்க வரலாம்ல. கூடவே கோயில் பூரா கூட்டிட்டு அலைவியா?''- டோக்கன் கியூவில் யாரோ கேட்டார்.
இசக்கிக்கு, கருப்பைப் பிரிய மனம் இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் அய்யனாரின் முகத்தில் தன் ரத்தம் பூசி, இன்னோர் உயிரைக் காக்கும் கருப்பின் கழுத்துக் கயிறு இசக்கியின் கைகளில் இறுகியது. நகர்வலம் முடித்து கோயில் திரும்பிய அய்யனாருக்கு முன் ஆட்டமாக ஆடி வந்தான் காத்தவராயன். சாமியாடி. கழுத்தில் மாலை. கையில் கத்தி. கூட்டம் திமிறியது. ஆடு வெட்டும் சாமியாடி பல வருடங்களாக ஒரே சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார். தலைமுறை தலைமுறையாக வளரும் காத்தவராயன்கள். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அய்யனார் முன் சீட்டு குலுக்கிப்போட்டு ஊரில் இருந்து திடகாத்திரமான ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், திடீரென கோயில் மிகப் பிரபலமாகி, கூட்டம் வர ஆரம்பித்ததும், வசூல் வேட்டையில் இறங்கிய உள்ளூர் பெரிய மனிதர்கள் சிலர், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காத்தவராயனாக இருப்பதை எதிர்த்தார்கள். சாமியாடி பதவியை விட்டுக்கொடுக்க விரும்பாத சாதியினரோ, நிஜமான ரத்தவேட்டை நடத்தினர். ஆனாலும் அரசியலும் பணபலமும் உள்நுழைந்து ஆதிக்கம் செலுத்த, வேறு வழியின்றி அடங்கிப்போயினர், முப்பாட்டன்களின் காலத்தில் இருந்து தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காமல் சாமியாடிய சாதியினர்.
நெற்றியில் பொட்டுவைத்து, மாலை போட்டு, தண்ணீர் தெளித்து அய்யனார் முன் நின்று சம்மதம் வாங்கிய முதல் ஆடு தயாராக இருந்தது. தீபாராதனை காட்டப்பட்டு மணி அடித்து பூசாரியிடம் இருந்து உத்தரவு வந்ததும், சாமியாடி தயாரானான். 30 வயது. இது மூன்றாவது வருடம் சாமியாடிக்கு. குலுக்கல் சீட்டில் இவன் பெயர் வந்ததுமே தன்னைத் தயார்செய்யத் தொடங்கினான். கவுச்சியற்ற விரதம் என்றாலும் தினமும் செய்த உடற்பயிற்சி புஜங்களின் விம்மலில் தெரிந்தது. அகன்ற மார்பு. காப்பு காய்ச்சி கெட்டித்தட்டிப்போன உள்ளங்கை பரப்பு. மனதளவில் தயாராக இருந்தான் சாமியாடி.
சட்டென ஆட்டைப் படுக்கப்போட்டு அதன் கால்களை இருவர் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, தலையை தரையோடு அழுத்தி இன்னொருவர் பிடிக்க, கழுத்தின் எலும்புப் பகுதியில் கத்திவைத்து அறுத்தான் சாமியாடி. இரண்டாவது கீறலில் ரத்தம் பீறிட்டு சாமியாடி முகத்தில் அடித்தது. கையில் அள்ளிய சூடான ரத்தத்தை அய்யனார் முன் காட்டி, பூமியில் சிந்தவிட்ட சாமியாடி கண்களின் நிறம் சிவப்பு. அடுத்த ஆட்டின் முறை. அதேபோல் கழுத்து அறுபட்டு நிலத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆட்டின் அருகில் படுக்கவைக்கப்பட்டு, முதல் ஆட்டின் கால்களுக்கு இடையில், இந்த ஆட்டின் கால்கள் செருகப்பட்டன. முதல் பலி ஆடு தன் துடிப்பை நிறுத்தியிருந்தது.
இந்த வருடம் ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். டோக்கன் என்பது அடையாளத்துக்குத்தானே தவிர எண்கள் இல்லை. தொடர்ச்சியாக ஆடுகள் வரவர கழுத்து அறுபட்டு நிலத்தில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டன. ஆடுகளின் கால்களையும் தலையையும் பிடித்துக்கொள்ளும் இருவரும், அறுபட்ட பின் ஆட்டைத் தூக்கித் தர, அதை வேறு இருவர் வாங்கி நிலத்தில் படுக்கவைத்தனர். 10 ஆடுகளுக்குப் பின் வரிசை தள்ளிப்போக அறுபட்ட ஆடு கழுத்தில் பீறிடும் ரத்தத்துடனே, காற்றில் பயணப்பட்டு இவர்களின் கையில் விழுந்தது. சற்றே கொழுத்த ஆடுகளைப் பிடிக்க முடியாமல் நழுவவிட, அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆடுகளின் உடல் மீது விழுந்து துடித்த ஆட்டை, இருவரும் சரியாகப் படுக்கவைத்துத் துடிப்பை நிறுத்தினர். ஆடுகளைப் படுக்கவைக்கும் இடத்தின் அருகில் கட்டியிருந்த கயிறுக்கு அப்பால் நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் காற்றில் விசிறிவரும் ரத்தம், தங்கள் ஆடைகளில் பட்டதும் மெய்சிலிர்த்தனர். அது அவர்களின் நம்பிக்கை. பலி கொடுக்க வசதி இல்லாதவர்கள் இப்படி நின்று, அந்த ரத்தம் தங்கள் மீது படிந்ததும் அய்யனாரின் அருள் தங்களுக்குக் கிடைத்ததாக நம்பினர். இதுநாள் வரை பார்வையாளனாக இருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த இசக்கி, முதன்முறையாக தான் பலியாக இருப்பதை நினைத்துப் பதற்றம்கொண்டான். அவரவர் ஆடுகளின் அடையாளத்துக்கு என ஒவ்வொருவரும் கறுப்பு, மஞ்சள், பச்சை... என பல நிறங்களில் ஆட்டின் கால்களில் கயிறு கட்டியிருந்தனர். இசக்கி, தன் கருப்பசாமியின் காலில் கட்டியிருந்தது சலங்கை.
வேண்டிக்கொண்டு சாமியாடியின் கையால் அறுபட்ட தங்கள் ஆட்டை, பலர் உடனே எடுத்துச்சென்று கோயிலின் பின்னே மறைவான ஓர் இடத்தில் வைத்து, தோல் உரித்து, கறி பங்கு பிரித்து, திருவிழாவுக்கு வந்திருந்த தங்கள் உறவினர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தனர். சம்பிரதாயத்துக்குக் கொஞ்சம் குழம்பும் வைத்து அய்யனாருக்குப் படைத்து அங்கேயே கறிச்சோறும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இசக்கி... முன்பே முடிவுசெய்திருந்தார், கருப்பசாமி அறுபட்டதும் உடனே உடலை எடுத்து ஒரு ஆட்டோவில் போட்டுக்கொண்டு நேராகத் தன் வீட்டுக்குச் சென்று கொல்லையில் புதைத்துவிட வேண்டும் என்று.
100 ஆடுகள் அறுபட்டு முடிந்ததும், சாமியாடி சற்றே ஓய்வெடுத்தான். அந்தப் பலிச் சம்பவத்தில் பங்குபெற்ற அனைவரும் சாராயம் அருந்தினர். மதியம் 2 மணிக்கு மேல் மறுமுறை தொடங்கியது. இசக்கி, கருப்பின் உடலைத் தடவிக்கொண்டே இருந்தார். மனம் இல்லை. கருப்பின் கண்களை நேருக்கு நேராக எதிர்கொள்ளத் தயங்கினார். தான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையிலும் வேட்டியிலும் ஏகப்பட்ட ரத்தக் கறைகள். இதில்தான் தன் கருப்பின் ரத்தமும் படியப்போகிறதா... நினைக்கையிலே உயிர்போனது இசக்கிக்கு. தீர்மானித்தார். அய்யனாரைப் பார்த்த இசக்கியின் முகத்தில் அத்தனை வெறுப்பு. கருப்பை, சாமியாடியின் வரிசையில் நிற்கவைத்த இசக்கி, அங்கேதான் தவறு செய்தார். தன் கருப்பின் கழுத்து அறுபடுவதைக் காண விரும்பாத இசக்கி, அங்கேயே நிற்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்றுகொண்டார். இப்போது இசக்கியிடம் இருந்து 50 அடி தொலைவில் சாமியாடி. அங்கிருந்து தூக்கி வீசப்படும் ஆடுகள் பொத்தென வந்து விழுந்துகொண்டிருந்தன. எதையும் கையில் வாங்கிப் படுக்கவைக்க முடியவில்லை. இசக்கி, கண்களை மூடியிருந்தார். கருப்பு, தன் சொரசொரப்பான நாக்கால் அவர் கையை நக்கியது. அவர் கையில் இருந்த கருவேலங்காய்களைக் கவ்வித் தின்றது. செல்லமாக அவர் வயிற்றில் முட்டியது. இசக்கிக்கு கண்களில் கண்ணீர் திரள, காற்றில் சலங்கை சத்தம். சட்டென கண்களைத் திறந்தார். அவர் கண் முன்னே வந்து விழுந்து துடித்தது கருப்பசாமி. 'அய்யோ என் புள்ள...’ திடீரென கூட்டத்தில் ஓர் ஆர்ப்பாட்டம் நிகழ, தான் நின்றிருந்த இடத்தில் இருந்து பின்னே வந்தார் இசக்கி. கண்கள் இருட்டி மயக்கம் வந்தது. காலையில் இருந்து சாப்பிடவில்லை. அங்கு இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினார். அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.
p74c.jpgஇசக்கி விழித்தபோது மேளச் சத்தம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. உடன் கருப்பின் ஞாபகம் வர சடாரென எழுந்தார். கூட்டம் குறைந்து இருந்தது அந்த இடத்தில். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இசக்கி தன் கருப்பைத் தேடினார். 10 ஆடுகள் இருக்கும். கழுத்து அறுபட்டு, திறந்த கண்கள் வெறித்து அய்யனாரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக்கொண்டிருந்தன.
'கருப்பு...’ இசக்கி அழைத்தார். கருப்பு இறந்ததை மூளையில் அவர் பதியவிடவில்லை. 'கருப்பு...’ மறுபடியும் அழைத்தார். அங்கு இருந்த ஆடுகளைப் புரட்டி, தன் ஆட்டைத் தூக்கிய ஒருவர் இசக்கி பக்கம் திரும்பி, ''என்ன பெருசு... செத்துப்போன ஆட்டைக் கூப்புட்டுக்கிட்டு...'' என்றார். இசக்கியின் கண்கள், ஜோடி ஜோடியாகப் பின்னிப் பிணைந்திருந்த ஆட்டின் கால்களில் சலங்கையைத் தேடியது. இல்லை. அவரின் கருப்பு காணவில்லை. இசக்கியின் உலகம் இருண்டது.
''என் கருப்பசாமியைக் காணும்யா...''
அழுகைத் திமிற அவசர அவசரமாக அங்கு இருந்த உடல்களைப் புரட்டினார்.
''அதுசரி... கடைசி நேரத்துல வந்து நின்னுக்கிட்டு என் கருப்பசாமியயைக் காணும்னா எங்க போக..? கொழுத்த ஆடா இருந்தா கறிக்குத் தேறிடுச்சுடானு யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்க. இங்க கிடக்கிறதுல அந்தா... அந்த எளந்தாரிக் கெடாவைத் தூக்கிட்டுப் போ. வந்த வரைக்கும் லாபம்தானே...'' அவர் தன் தோளில் தொங்கிக்கிடக்கும் ஆட்டுடன் விலகினார்.
''அய்யய்யோ... தப்பு பண்ணிட்டேனே. என் குலசாமியை நானே கொன்னுட்டேனே...'' -மடேர் மடேரெனத் தலையில் அடித்துக்கொண்டார். 'கருப்பா... கருப்பா...’ தேடி ஓடினார். கோயில் முழுவதும் அவரை வேடிக்கை பார்த்தது. கூட்டமாக இருந்த இடத்தில் சென்று பார்த்தார். பெரிய குடும்பம் போலும். ஆடு ஒன்று தோல் உரித்து தொங்கிக்கொண்டிருக்க, கறி சப்ளை நடந்துகொண்டிருந்தது. சாணமும் ரத்தமும் சிதறிய அந்த இடத்தில் தொங்கிய ஆட்டின் காலில் சலங்கை இல்லை.
''அய்யா... என் கருப்பு குலசாமிய்யா... அதை நான் பலி குடுத்தது என் புள்ளையைக் காப்பாத்தத்தான்யா. என் கருப்பு என் தோட்டத்துலதான்யா வளந்தான். அவனை அங்கதான்யா பொதைக்கணும். கருப்பு... அய்யா கருப்பசாமி...'' - கோயில் எங்கும் இசக்கியின் கதறல்.
அப்புறம் இசக்கி தன் வாழ்க்கையில் பேசியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'என் குலசாமிய நானே கொன்னுட்டேன்.’
15 வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிய வார்த்தைகள். கருப்பசாமி சொந்தத்திலேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொண்டான். பைத்தியமாகத் திரிந்த புருஷனைப் பார்த்தபடியே செத்துப்போனாள் செல்வி. கருப்பசாமி மனைவியோ, பைத்தியக்கார மாமனாருக்கு சாப்பாடு போட மறுத்தாள். வெள்ளையாக காலில் சலங்கை கட்டிய ஆட்டை வீட்டுக்குத் தூக்கிவந்து 'என் கருப்பு கெடச்சுட்டான்...’ எனக் கொஞ்சிய இசக்கியை, ஆட்டுக்குச் சொந்தக்காரர்கள் அடித்து, ஆட்டைப் பிடுங்கிக்கொண்டு போனார்கள்.
கருப்பசாமி, தன் அப்பனைக் கழுத்தைப் பிடித்து வீட்டைவிட்டுத் தள்ளினான். இசக்கி தளர்ந்திருந்தார். கழுத்து அறுபட்டுத் துடித்த தன் கருப்பசாமியின் கடைசிக் கதறல் அவரின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. தெருவில் மேயும் ஆடுகள் எல்லாம் ஒருநாள் கழுத்து அறுபட்டு துடிக்க, திடுக்கிட்டு விழித்த இசக்கி தீர்மானித்தார்.
கோயில் உச்சியில் வெள்ளை லைட் ஒன்று  எரிந்துகொண்டிருந்தது. காற்றில் மெல்லிய ரீங்காரம். இசக்கி படியில் அமர்ந்தார். கோயில் கதவு மூடப்பட்டிருக்க, உள்ளே அய்யனார் குற்றவுணர்வுடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததை, அவரின் காவல் குதிரைகளும் இசக்கிமுத்துவும் கவனித்தனர். கருப்பசாமியின் உடல் இசக்கிக்குத் தெரிந்தது. அய்யனாரைப் பார்த்து காறித் துப்பினார் இசக்கிமுத்து. 'என் குலசாமி...’ மேற்கொண்டு வார்த்தை வராமல் விம்மினார். படியில் தன் தலையைச் சாய்த்தார். இடை பெல்ட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்து நரம்பில் வைத்து சரசரவென அறுக்கத் தொடங்கினார். ரத்தம் சூடாகப் பெருகி வழிய, கண்களில் உறைந்திருந்த கருப்பின் உருவம் மறையும் வரை அறுப்பதை நிறுத்தவில்லை. கை அப்படியே கழுத்தில் படிந்து ஓய்ந்தது. நிலா, மேகத்தில் இருந்து வெளியே வந்தது!

*******************
Raja Sundararajan
21 hrs · 
கணேசகுமாரனின் “மிஷன் காம்பவுண்ட்”
_______________________________________

‘Status quo’ என்றால் என்ன? “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு எதிர்நிலை, அப்படித்தானே?

சமூகத்தில் சில விதிமுறைகளை, ஒழுக்கநெறிகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக, அவை ஆட்சியில் உள்ளவர்களுக்கு, மேலடுக்கு மனிதர்களுக்கு சாதகமாகவும்; பெண்களுக்கும் கீழடுக்குமக்களுக்கும் பாதகமாகவும் இருக்கும்.

“ஒரு பெண் ஒருவனையே விரும்ப வேண்டும்; ஒரு ஆண் ஆனால் பல பெண்களை விரும்பலாம்”, “சூத்திரன் வேதம் ஓதக்கூடாது” என்றிப்படி.

இந்த ‘முன்னைநிலை’யை மீறிய முதற்பெண், எனக்குத் தெரிந்து, பரசுராமனைப் பெற்றெடுத்த ரேணுகாதேவி ஆவாள். அவள் ஒரு நதியில் குளித்துகொண்டிருந்த க்ஷத்ரியன் ஒருவனின் கட்டுடம்புகண்டு ஆசைப்பட்டாளாம். அதனால் தலைதுண்டிக்கப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு அதே ‘முன்பிருந்த நிலை’க்குள் முடக்கப்பட்டாள்.

நிற்க, எழுத்துலகில் ‘Status quo’ என்பது என்ன?

ஒரு கதை சொல்கிறேன்:

“தாழ்த்தப்பட்ட ஒரு சாதியில் பிறந்த ஒருவன் கல்விகற்று கலெக்டர் ஆகிறான்; ஒரு பிராமணப் பெண்ணை மணந்துகொள்கிறான்.” இது கதை.

என்றால், இந்தக் கதை ‘Status quo’ இல்லை அல்லவா?

ஆனால் இதுமட்டுமே இல்லை கதையில். கலெக்டருக்கு அம்மாவை, கொஞ்சம்கூட, civic sense இல்லாத ஒரு கேரக்டராய் உருவாக்கி, நமக்குள் ஓர் அருவருப்புச்சுவை உண்டாக்கப் படுகிறது. (அதாவது, என்னதான் கலெக்டரானாலும் உங்கள் இனம் ஒப்பேறாது, உருப்படாது, ஆமாம்.)

இன்னொரு கதை சொல்கிறேன்:

“ஒருவன் கல்லூரிப் படிப்புக்காக பட்டணம் போகிறான். அவன் விடுப்பில் வரும்போதெல்லாம் அவனது அம்மா சீவிமுடித்து தன்னை திருத்தமாகக் காட்டிக்கொள்கிறாள்.”

கற்றார் ஒருவரின் சுற்றத்தில் சற்றேனும் மாற்றம் வராமற் போகாது. இது நடைமுறை.

முதற்கதை ஜெயமோகனுடையது. இரண்டாவது, கு.அழகிரிசாமியினுடையது. இப்படியெல்லாம் பழிவருமே என்று ஜெயமோகன், முன்னெச்சரிக்கையாக, அந்தக் கதைக்கு “நூறு நாற்காலிகள்” என்று தலைப்பிட்டுள்ளார். அதாவது ஒரேயொருவன் கலெக்டரானால் போதாது; ஒருநூறு பேராவது ஆகவேண்டும் என்பதாம்.

“Quantity change will eventually result in quality change” என்பது மார்க்சியம்.

என் அக்காமகள் சொன்னது: “காலேஜ் ஹாஸ்டலுக்கு ஐயா என்னைப் பார்க்க வர்றப்போ அவ்வளவு பெருமையா இருக்கும். வெள்ளை வேட்டிசட்டையில, தோள்ல ஒரு துண்டும் மடிச்சுப்போட்டு, மிடுக்கா வருவார்.”

அவள் ஐயா என்றது என் அப்பாவை. படிக்காதவர் அவர். காட்டுவெள்ளாமைப் புழுதியில் வேர்வை சிந்தியவர். ஆனால் என் அக்காவை, கிராமத்திலேயே முதல் பெண்ணாக, படிக்கவைத்து ஆசிரியை ஆக்கியவர்.

ஆக, ஜெயமோகனின் தலைப்பு சரிதான், ஆனால் அந்தக் கதைக்குள் அதை நியாயப் படுத்துகிற ஒரு குறிப்பும் இல்லை. தாய்மையை இவ்வளவு கேவலப்படுத்தி எழுதிய ஒரு எழுத்தையும் நான் வாசித்ததில்லை. ஒரு கலெக்டர்க்கு அம்மா இந்த லட்சணமாம். இன்னும் நூறு ‘இன்ன லட்சணம்’ சேர்ந்தால்..?!

கு. அழகிரிசாமி ஒரு கலைஞர். An ‘Artist’. ஜெயமோகன் ஒரு தொழில்வல்லுநர். A ‘Craftsman’. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து பிராமணத்தியை மணந்த அந்த அவர் யாரென்று யூகிக்க முடிந்தால் இது இன்னும் தெளிவாகும்.

இப்படி, ஜெயமோகன் ஒரு ‘Status quo’ எழுத்தாளர் ஆகிறார். இதை நான் சொல்லவில்லை. எனக்கு முந்தியே சாரு சொல்லியிருக்கிறார்.

தொன்மையை நாடுவோர் இவ்வாறு ‘Status quo’ ஆவதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் உண்டு. என்னிடமேகூட அது இருக்க வாய்ப்புண்டு. (பழந்தமிழ்ச் சொற்களை மீட்டெடுப்பதில் ஆர்வம்கொண்டு அலைகிறேன் அல்லவா?) கோணங்கியிடமும் இருக்கலாம். (தனுஷ்கோடிச் சிதிலங்களிலும் புகைவண்டிக் காலத்துப் பாலகாண்டங்களிலும் சங்ககாலத்துத் திணைமயக்கங்களிலும் அலைகிறவர்.)

ஆனால் இன்றைய எழுத்தாளர்களான போகன், கார்த்திகைப்பாண்டியன் முதலியோரிடம் இது இருக்க வாய்ப்பில்லை. இடறிவிட்டு எகிறுகிற நடை அவர்களுக்கு.

கணேஷகுமாரன் பாதி அப்படி; பாதி இப்படி. கோணங்கியைப் போலிபண்ணி எழுதப்பட்டிருக்கிற “மயிற்கண் வேட்டி”யை வைத்து இதை நான் சொல்லவில்லை.

நாயகன் ஏற்கெனவே மணமானவன் என்கிற உண்மையை முக்கால்வாசிக் கதைக்குமேல் வெளிப்படுத்தும் “திலோத்தமா” கதையில், அதில் வருகிற பத்தாம்பசலி மனைவி ஒரு ‘Status quo’. சுய-இன்பத்தில் தொடங்கி, உதறிச்செல்கிற காதலிகளைப் பேசுகிற “உறை” கதைக்கு, பனிப்பொழிவு பின்னணி என்றாலும், கதைக்களம் அமெரிக்காவாக இல்லாமல் இந்தியாவாக இருந்திருந்தால் இன்னும் கெத்து கூடியிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

“மிஷன் காம்பவுண்ட்”, “கிருபாகரன் டயரி”, “குலசாமியைக் கொன்றவன்” ஆகியன இத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகள் என்பேன். “அப்பாவின் காதலி”யும் நல்லகதைதான், ஆனால் அதன் பிற்பகுதி லட்சியவாதம் காரணமாக ரொமான்ற்றிக் ஆகிவிடுகிறது.

“கிருபாகரன் டயரி”யின் ஒருவனே இருவராய்ப் புழங்குகிற உத்தி பாராட்டுதற்குரியது. உத்தி என்கையில், எல்லாக் கதைகளிலுமே அது சிறப்பாக இயன்று வந்திருக்கிறது. “குலசாமியைக் கொன்றவன்” கதை எனக்கேனோ, ஆபிரஹாம் தன் மகனை பலிகொடுக்கப் போகும் இடத்தில் கடவுள் ஆட்டுக்குட்டியை பகரமாகத் தருகிற வேதக்கதையின் இன்னொரு பாடமாகத் தெரிகிறது. அங்கே ஆட்டுக்குட்டி என்பது இயேசு. இங்கேயும் சாமிதான், ஆனால் கருப்பு. அங்கேயும் இங்கேயும் சந்ததி காப்பாற்றப்படுகிறது. ஆனால் அங்கே, பலனடைந்தவர்களுக்கு குற்றபோதம் இல்லை. இங்கே, இருக்கிறது. அதனால் சிறக்கிறது.

தொகுப்பிலேயே ஆகச்சிறந்த கதை தலைப்புக் கதையான “மிஷன் காம்பவுண்ட்”தான். கன்னியாகுமரிப் பேச்சுவழக்கு, கதை கட்டப்பட்டிருக்கிற நேர்த்தி, கதையில் நேர்கிற சம்பவங்கள், கண்டெட்டப்படும் தீர்வு என எல்லாம், ஒரு பைத்தியக்காரத்தனமான இயல்போடு, மிகக் கச்சிதமாகப் பொருந்த நிற்கிறது.

ஒரொரு கதை வடிவத்திலும் சோதனை செய்து பார்த்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இதோடு, இவர் எழுத்துக்கள் இன்னும்இன்னும் சிறக்க வாழ்த்தி அமைகிறேன்.



(14-02-2016, "மிஷன் காம்பவுண்ட்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது.)
Like
Show More Reactions
Comment
102102
Comments
Shahjahan R
Shahjahan R நீங்க விமர்சனம் எழுதற எந்த சினிமாவும் பாத்ததில்லை. இந்த புத்தகமும் படித்ததில்லை. ஆனாலும் உங்க பதிவு வந்ததும் உடனே முதல் ஆளா படிச்சுடுவேன். பிரதியை அணுகும் தன்மை பற்றிய கல்விக்காக. 
வணக்கம் ஆசானே
23
Manage
LikeShow More Reactions · Reply · 21h
Proto Fernando
Proto Fernando me too . before / after watching movies i used to read his review. sometime i watch a movie again for a second time because of his review. .but i find it difficult to search for it as i get to watch very late after few weeks or months. ellorukkum Aasaan.
3
Manage
Like · Reply · 15h
Ramakutty Ramasundaram

Reply to this...


Raja Sundararajan
Raja Sundararajan இது என்ன கோளாறு? உங்களுக்கும் ஆசானா?
3
Manage
LikeShow More Reactions · Reply · 21h
Naan Rajamagal
Naan Rajamagal ஆசானுக்கே ஆசானே!
3
Manage
Like · Reply · 13h
Ramakutty Ramasundaram

Reply to this...


Abilash Chandran
Abilash Chandran நூறு நாற்காலிகள் கதை பற்றின கருத்துடன் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு கதை ஸ்டேட்டஸ் கோவை எடுத்துக் கொண்டு மெல்ல அசைக்கவே முயலும். முழுக்க கடந்து போகாது. ரொலாண்ட் பார்த் சொல்கிறார் இதை. ஜெயமோகனின் கதையும் அதைச் செய்கிறது.
4
Manage
LikeShow More Reactions · Reply · 21h · Edited
Raja Sundararajan
Raja Sundararajan செய்தால் சரி.
4
Manage
LikeShow More Reactions · Reply · 21h
Mathy Kandasamy
Mathy Kandasamy  ;)
1
Manage
Like · Reply · 21h
Ramakutty Ramasundaram

Reply to this...


Kadanganeriyaan Perumal
Kadanganeriyaan Perumal “மிஷன் காம்பவுண்ட்”, “கிருபாகரன் டயரி”, “குலசாமியைக் கொன்றவன்” ஆகியன இத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகள் என்பேன். // நீங்களுமா ?.. தேங்காய் முறி மாறிப்போனாலேயே பதறித்துடித்து தன்னுடைய தேங்காயைத்தான் கேட்டு வாங்குவார்கள். மேலும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுவது தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கிவிடப்படும் கிடாய். அந்தக் கதை அத்தனை அரைவேக்காடானது... வெட்டுப்பட்டுக்கிடக்கும் கிடாயை தெரியாமல் தேடுபவனிடம் இருக்கிறதிலே பெரிய கிடாயை எடுத்துக்கொள்ளச் சொல்வானாம் ஒருத்தன்..... எந்த ஊர்லயா நடக்கும்? .. புனைவுக்கும் ஒரு அறம் உண்மை வேண்டாமா ஆசானே ?...
3
Manage
LikeShow More Reactions · Reply · 21h
Vishvaksenan
Vishvaksenan பெரிய கிடாய்காரன் வந்து வாயிலேயே வெட்டமாட்டானா?
1
Manage
Like · Reply · 20h
Raja Sundararajan
Raja Sundararajan முடியாதே. அதுதானே அங்கே நடப்பது.
Manage
Like · Reply · 20h
Vishvaksenan
Vishvaksenan பொதுவாக இப்படி ஊரில் மாறாது. இந்த கதையில் என்ன சொல்கிறார் என்று படிக்கிறேன்.
1
Manage
Like · Reply · 20h
Ramakutty Ramasundaram

Reply to this...


Raja Sundararajan
Raja Sundararajan வேண்டும்தான். ஆனால் அது ஆதாயம் தேடுகிற சமூகத்தில் நடப்பதுதானே? அதையெல்லாம் கடந்த அறம் என்று மன உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். அப்படித்தான் இயேசு = கருப்பு. :)
2
Manage
LikeShow More Reactions · Reply · 20h · Edited
Kadanganeriyaan Perumal
Kadanganeriyaan Perumal மேலும் சுயவதை என்பது தமிழ்ச் சமூகத்தில் சமூகத்திற்காக நடப்பது. அது சமூகத்தை இயற்கையிடமிருந்து / எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தன்னையே பலிகொடுப்பது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. கணேசகுமாரன் போன்ற வரலாறு தெரியாத அரைவேக்காடுகள் அறமில்லாத ஒருவன் பெற்ற குழந்தையைவிட வழியில் கண்டெடுத்த ஆட்டுக்குட்டிக்காக தன்னையே பலிகொடுப்பதாக எழுதுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது ஆசானே... அதனை நியாயப்படுத்தும் உங்களை என்ன சொல்ல? ..
4
Manage
LikeShow More Reactions · Reply · 20h · Edited
Raja Sundararajan
Raja Sundararajan ஆட்டுக்குட்டி subtext ஆக ஆட்டுக்குட்டி இல்லையே? இப்போ என்ன செய்யச் சொல்கிறீர்கள்? நானும் அவர், "கலகலப்பு-2"வை விட "சவரக்கத்தி" நல்லபடம் என்று சொன்னதில் காண்டாகி இருக்கிறேன். போட்டுத்தாக்கி விடலாமா? ஆனால் 2016-இல் பேசியதை, வீடியோ வேறு இருக்கிறது, என்ன செய்து மாற்றுவது? மக்களிடம் மன்னிப்பு?
7
Manage
LikeShow More Reactions · Reply · 20h

Kadanganeriyaan Perumal replied · 2 Replies · 7 hrs
Kadanganeriyaan Perumal
Kadanganeriyaan Perumal நான் படம் பார்ப்பதில்லை. .. தங்களுடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன்படி ..
1
Manage
LikeShow More Reactions · Reply · 20h

Kadanganeriyaan Perumal replied · 4 Replies
Vishvaksenan
Vishvaksenan நூறு நார்காலிகளில் அந்த அம்மா கேரக்டரே தமிழில் புதிதில்லையா? பண்டரிபாய்களும், கண்ணாம்பாக்களும் தானே தமிழ் அம்மக்களின் status quo? அதை உடைத்து எறிந்ததே ஒரு கலகம்தானே. இங்கே அந்த கலக்டர் கேரளத்தின் நாயாடி என்னும் ஒரு பழங்குடி நாடோடி சமூகமென காட்டியிருப்பார். கிட்டதட்ட குறவர் போன்ற ஒரு மக்கள் கூட்டத்தின் ஒருவராக. அவரது அம்மா இந்த சமூகத்தில் இருந்தாலும், இந்த சமூகத்தில் இல்லை. அவர் பிறந்த வாழ்ந்த அவரது சமூகத்தின் சுதந்திர வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் நிலை உள்ளவர், உங்கள் சரிகள், தவறுகள் அவருக்கு தெரியாது. நுணுக்கமாக பார்த்தீர்கள் என்றால், காப்பானின் அப்பா என்ற கேரக்டரே இருக்காது. இதில் இரண்டு உலகத்துக்கிடையே அல்லாடுபவர் அந்த கலெக்டர். இந்த கதை உண்மை சம்பவத்தின் மீது கட்டமைக்கப்பட்டது, அதனால் உங்களது அரசியல் சரிகளை ஒதுக்கிவிட்டு பார்பது சரியான கோணம் தரும்.
1
Manage
LikeShow More Reactions · Reply · 20h · Edited
Raja Sundararajan
Raja Sundararajan இந்த மிரட்டல்கள் எனக்கு எதற்கு? என் குடும்ப எடுத்துக்காட்டுகள் உணமைசம்பவங்கள் இல்லையா? ஒரு கலைஞனுக்கு ஒரு விளக்கு ஏற்றப்பட்டாலே அதைச்சுற்றி கொஞ்சம் இருள் விலகும் என்கிற சிறிதளவு ஞானம்கூடவா சித்திக்காது?

கு.அழகர்சாமியின் அம்மா சும்மா. Vishvaksenan
2
Manage
LikeShow More Reactions · Reply · 20h
Vishvaksenan
Vishvaksenan பொசுக்குன்னு மிரட்டல்னு சொல்லிட்டீங்க.. :)

அவரோட கதை மாந்தர் அப்படித்தான் படைக்கபட்டிருக்கார். ஏன் எனக்கு தெரிஞ்சமாதிரி படைக்கலன்னு கேக்க முடியாதில்லயா?
ஒரு விளக்கு கான்சப்ட் சரிதான். ஆனால் போட்டுவைத்த ராஜபாட்டையில் நடப்பவனுக்கும் முள்ளும் கல்லும் குத்திட கால் படாத பூமியில் முதல் பாதை வகுக்கிறவனின் வலிகளைதான் பேசியிருக்கிறார். அவனது போராட்டம் அதோட நிக்கக்கூடாது, இன்னும் இன்னும் நிறைய பேர் நடந்து அந்த பாதை ஒரு பெரும்பாதையாகி, பின் வருபவர்களுக்கு முற்கள் இல்லா நடைபாதையாகனும்னு நினைக்கிறான். இது தவறா என்ன?
1
Manage
Like · Reply · 20h · Edited
Raja Sundararajan
Raja Sundararajan அதெல்லாம் தவறில்லை. ஆனால் அவர் உருவகப்படுத்தி இருப்பது பீம்ராவ் அம்பேட்கர் என்று எனக்கு ஏன் தோன்றுகிறது?

சம்திங் ராங். 

ஏங்க, நானே என் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்காட்டு தந்துவிட்டேன். ஜெயமோகன் இதில் மூன்றாம் மனிதர். சும்மா வேடிக்கை பார்த்து எழுதியிருக்கிறார். வேற யார்ட்டயாவது போய்க் கதையுங்க!
2
Manage
Like · Reply · 19h
Vishvaksenan
Vishvaksenan அது அம்பேட்கரா இருக்காது ஜி. ஏன்னா இந்த கதைல ஜெமோவும், சுராவின் வீடும் ஒரு இடத்தில் வருவார், வரும். இந்த கலக்டர் ஜெமோ, சுரா இருவருக்கும் அறிமுகமான ஒருவர்தான் என்பது உள்ளீடு. இதை ஒரு விவாதத்தில் ஜெமோவே ஒத்துக்கொண்டார், ஆனால் அவரது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். 

உங்களை மதிக்கிறேன், உங்கள் புலமையையும். அதேநேரம் ஜெமோவின் இந்த கதையின் தரம் பற்றியதான எனது கருத்தில் மாற்றமில்லை.
2
Manage
Like · Reply · 19h · Edited
Raja Sundararajan
Raja Sundararajan இருக்கட்டும். 'சுரா'வோடு என்னுடைய நட்பு ஜெமோவுக்கு முந்தியது. பிராமணத்தியை மணந்த தாழ்த்தப்பட்டவன் இன்னாரென்று எனக்கு ஓர் அறிவும் இல்லையே!
3
Manage
Like · Reply · 19h
Ramakutty Ramasundaram

Reply to this...


Madhavan Srirangam
Madhavan Srirangam ம்
1
Manage
LikeShow More Reactions · Reply · 19h
Ruben Jay
Ruben Jay மிஷன் காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சுட்டு வெளிய வர நாம் பட்டபாடு இன்னும் நினைவிருக்கு
1
Manage
LikeShow More Reactions · Reply · 15h
Naan Rajamagal
Naan Rajamagal இதை நான் காதாலேயே கேட்டேனே.
பேசுவதற்கு முன் என் பக்கத்து நாற்காலி பாக்கியம் பெற்றதாக இருந்தது.....
1
Manage
LikeShow More Reactions · Reply · 13h
Kannan Krishnan
Kannan Krishnan நூறு நாற் ...ல்இருக்கும் அரசியல் இப்போதான் என் மண்டைக்கு புரிந்தது. நன்றி.
1
Manage
LikeShow More Reactions · Reply · 10h
Prabhakar Sivasubramaniam
Prabhakar Sivasubramaniam ஆசானே மிசன்காம்பவுண்ட் கிருபாகரனின் டைரி இரண்டும் உண்மை சம்பவங்கள் இது குறித்து நாள் வாய்க்கும்போது நேரில் பேசுவோம்.. கணேசகுமாரன் முன்னுரையில் சொல்லியிருப்பாரே.
1
Manage
LikeShow More Reactions · Reply · 10h
Samayavel Karuppasamy
Samayavel Karuppasamy உண்மையில் நடந்தது, நிஜ சம்பவம் என்பதெல்லாம் கதைகள் குறித்த உரையாடலில் செல்லுபடி ஆகாது. உங்களது சொந்த அனுபவத்திற்குள் கதையை முக்கி எடுப்பது கதைகளைப் புரிந்து கொள்ள உதவும். விமர்சனத்தின் எளிய அலகுகள் கூட ஒட்டுமொத்த மனித நியாயத்தை வேண்டி நிற்பவை.
4
Manage
LikeShow More Reactions · Reply · 9h
Raja Sundararajan
Raja Sundararajan நன்றி, சமயவேல். Samayavel Karuppasamy
2
Manage
Like · Reply · 9h
Ramakutty Ramasundaram

Reply to this...


Sureshkumar KS
Sureshkumar KS Kadanganeriyaan Perumal தமிழில் நன்கு வெந்து குழைந்த ஓரிரு எழுத்தாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டீர்களானால் அவர்களை நாங்களும் வாசித்து உய்வோம். :)

*****************

பனி நிலா - சிறுகதை

சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில்

கார் டயர் டொம்ம்ம்  என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த  பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான்.
p44a_1517902040.jpg
டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது  ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக் கண்டு, ஒருகணம் உருக்குலைந்து உடைந்துபோனான்.

தூறல் இப்போது ஆரம்பித்தது. டாக்ஸி டிரைவரும் அவளும் ஏதோ பேசிக்கொண்டார்கள். லக்கேஜை இறக்கினார்கள்.

அந்தச் சாலை சென்னையின் சாலை போலவே இல்லை. புயல் அறிவிப்பினால், நடமாட்டமில்லாமல் இருந்தது. புயல் அடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் மரங்கள் கல்லுளிமங்கன்போல அமைதியாகக் காத்திருந்தன.

தரண் பைனாகுலரை வைத்துப் பார்த்தால் அவளின் முதுகில் இருக்கும் மெல்லிய மயிர்க்கால்களில் ஒரு துளி மழைநீர் நடனமாடிக்கொண்டிருப்பது தெரியும்.

தரணுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. மூளையில் ஏதோ உருகி, மீண்டும் உறைவது போல இருந்தது. இவள் எனக்கானவள் என்று அவனை மீறி முணுமுணுத்தான். இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமான காதல் உணர்வைத் தரண் மட்டுமே அப்போது அனுபவித்தான்.

ஒரு மாய உலகத்தில் நுழைந்த அனுபவத்தில் மிதந்தான். மரங்கள் லேசாக அசைந்தாட ஆரம்பித்தன. மரங்களிலிருந்து லேசான கோரைப்பற்கள் எட்டிப்பார்த்தன. புயலின் போது என்ன செய்வோம் என்று அவை முன்னறிவிப்பதுபோல இருந்தன.

இது என்ன அனுபவம்? பியர் அடித்ததாலா என்று மனதிற்குள் பேசாமல் வெளிப்படையாக முணுமுணுத்துக்கொண்டான். உடலெங்கும் சிலிர்த்து ரத்த ஓட்டம் அதிகரித்துக் காதல் உணர்வை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில் மெல்லிய பயத்தில் சிறுநீர் முட்டியது.

இன்னொரு கால் டாக்ஸி அவளின் அருகில் வந்து நின்றது. அவள் அதில் ஏறி, பயணத்தைத் தொடர்ந்ததும், தலையை உலுக்கிக்கொண்டு பின்தொடர்ந்தான்.

மரங்கள் மீண்டும்  அபாயமான அமைதியில் ஆழ , இரண்டு கார்கள் மட்டும் அந்தச் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.

அவளுடைய டாக்ஸி செல்லும் வழியை வைத்து விமான நிலையத்திற்குத்தான் செல்வதாக யூகித்த தரண், நண்பனுக்கு கால் செய்தபடியே ஓட்டினான். புளூ டூத்தில் போன் கனெக்ட் ஆகவில்லை. அவளுடைய கார் விமான நிலையத்தில், உள்நாட்டு முனையப் புறப்பாட்டில் நின்றது.

காரை அவளுடைய டாக்ஸிக்குப் பின்னே நிறுத்திவிட்டு, பாம்பு மகுடியானதுபோல அவளைத் தொடர்ந்தான்.

விமான நிலையம் சோகமாக இருந்தது. ஒரு விமானம் கடனே என்று வந்து இறங்கி அலுத்துக்கொண்டு, முனகியபடிக்கு நொண்டியடித்துக்கொண்டே போய் ஓரமாக நின்று முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அவள் தன்னுடைய பயணக் காகிதங்களையும், அடையாள அட்டையையும் எடுப்பதைப் பார்த்தான். அவற்றைச் சரிபார்க்கும் சிஐஎஸ்எஃப் பணியாளரின் பின்னால் கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டான். தன் மொபைலை எடுத்து அங்கே குறி பார்த்து, ஜூம் செய்து வைத்துக்கொண்டான்.
p44b_1517902109.jpg
அவள் பயணக் காகிதங்களைக் கொடுத்ததும், அலுவலர் தூக்கிப் பிடித்துப் பார்க்கும்போது கஷக் கஷக் கஷக் என அந்தக் காகிதங்களின் நிழலுருவைக் கைப்பேசியில் உள்ளிழுத்துக் கொண்டான்.
‘ஜீரோ ஒன் ஜீரோ ஒன் யார் வண்டி இது? சீக்கிரம் எடுங்க, ஜாம் ஆவும் பாரு’ என்று கட்டைக்குரல் மைக்கில் ஒலிக்க, தலையையும் கையையும் போக்குவரத்துக் காவல் வண்டியை நோக்கி ஆட்டிக்கொண்டே, கைப்பேசியில் அந்தப் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டே காரை நோக்கி ஓடினான்.

டெல்லி செல்கிறாள். விமானம் புறப்பட இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. வெப் செக்கின் செய்திருப்பதால் உட்காரும் இடத்தின் நம்பரும் தெரிந்தது. 7 ஏ. ஒருகணத்தில் காதலாகி, பித்துப்பிடிக்க வைத்தவளின் பெயர் ‘பனி நிலா’  எனக் காணப்பட்டது.

பரபரவென செயலியைக் கைப்பேசியில் இயக்கி அதே விமானத்தில் 7 பி என்ற இருக்கையை முன்பதிவு செய்து வெப் செக்கின் செய்தான்.

நண்பன் வந்து என்ன என்ன என நடுவில் சுரண்டிக்கொண்டிருந்தான். கார் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘`போன்ல பேசறேன்’’ என்று சொல்லியவாறு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

விமான நிலைய ஓடுதளத்தைத் தாண்டி நீண்ட தூரத்தில் இருந்த மரங்கள் செடிகள்போலச் சின்னதாகக் காட்சியளித்தன. புயலை வரவேற்பதைப்போல மெல்லிய நடனத்தில் ஈடுபட்டிருந்தன அந்தச் செடி மரங்கள்.
அவளிடமிருந்து ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான். சத்தம் வராமல் கனைத்துக்கொண்டான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு மொத்த விமான நிலையத்தையும் அளப்பதைப்போலப் பார்வையைச் சுழற்றி அவள் அவனின் பார்வைக்குள்  வந்ததும் சுழற்சியின் வேகத்தைக் குறைத்தான்.

அவள் ஓடுதளத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கால் மேல் கால் போட்டிருக்கவில்லை. செருப்பைக் கழற்றி வைத்திருந்தாள். தனியாக ஜோடியாக முப்பது டிகிரி கோணத்தில் இவனைப் பார்த்துக் கொண்டிருந்த செருப்புகளே இவனுக்குக் காதலுணர்வைக் கூட்டின. அவளின் பாதங்களைப் பார்த்தபடியே இருந்தான். அவள் தன்னுடைய பார்க்கும் திசையைத் திருப்பியதும் அவளின் பக்கவாட்டு முகம் இவனுக்குத் தெரிந்தது. அந்த தரிசனமே இவனுக்கு மூச்சு முட்டியது. மூச்சுத்திணறி இறப்பவன்போல தலையை உலுக்கிக்கொண்டான். விமானத்தில் அவளின் பக்கத்தில் அமரப்போவதை நினைத்து ரத்த அழுத்தம் எகிறியது. ரத்தத்துளிகள் மூளையில் பன்னீர் தெளிப்பதைப்போல மீண்டும் தலையை உலுக்கிக்கொண்டான்.

விமானத்திற்கு அழைப்பு வந்தது. அவள் எழுந்து நேராக நின்றாள். அந்த நிற்றலில் ஒரு கம்பீரம் தெரிந்தது. அசட்டு அழகு. அங்கு நின்றது, வரிசையில் நின்றது, வரிசையில் நகர்ந்தது என எங்குமே அவள் ஒன்றரைக் காலிலோ, ஒண்ணே முக்கால் காலிலோ நிற்கவில்லை. மிக நாகரிகமாக, அளவெடுத்ததுபோல நடந்தாள், நின்றாள்.  அவள் அப்படி நடந்துகொண்டதுகூட ஆச்சர்யமில்லை. ஆனால், அவளின் அவயவங்கள்கூட அளவாக, நாகரிகமாக அசைந்தன. அவள் பழக்கி வைத்திருக்கிறாளா, தானாகப் பழகிக்கொண்டனவா என்பது புதிர்தான்.

விமானத்தினுள் கடைசி ஆளாக நுழைந்தான். ஏழாம் வரிசையில் அமர்ந்திருந்தாள். மட்டமான புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளின் வாசனைத் திரவியம் இவன்மீது படர்ந்து தாக்கியது. புயலுக்கு பயந்து அடித்துப்பிடித்து அவசரமாக விமானம் விண்ணில் பாய்ந்ததுபோல இருந்தது.

செயின்ட் தாமஸ் மலையை அரைவட்ட வலத்தால் கடந்து சென்னை வெளிவட்டச் சாலைகளைக் குறுக்காகக் கடந்து ரொய்ங்க் என்று சத்தமிட்டபடியே நிலைபெற்றது.

விமானத்தினுள் விளக்கு எரிந்தது. என்னென்னமோ டிஜிட்டல் சத்தங்கள்.விமானத்தினுள் பெரிதாகக் கூட்டமில்லை.

“ஹாய் பனிநிலா!” - சடுதியில் முடிவெடுத்து அழைத்துவிட்டான்.

அவள் சாதாரணமாகத் திரும்பினாள். அந்த முகத்தை வெளியில் விலகி ஓடிக்கொண்டிருந்த மேகங்கள் ஒருகணம் படமாக வரைந்து கலைந்திருக்கலாம். அந்த முகத்தில் ஆச்சர்யம், அதிசயம், புன்னகை, கோபம், அதிர்ச்சி ஏதும் இல்லை. நிர்மலமாகவும் இல்லை. இந்தக் கணத்தில் இவனைப் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிட்ட ஒன்றைச் செய்வது போல இருந்தது. திரும்பிய நான்கு நொடிகள் கழித்து ஒட்டிக்கொண்டு இருந்த உதடுகள் நடுவில் மட்டும் பிரிந்தன.

“யெஸ்” என்றாள். இன்னும் கொஞ்சம் உதடுகள் பிரிந்தன. மீண்டும் உதடுகள் ஒட்டிக்கொண்டன.இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் , கீழுதடு மேலுதட்டை நாடிச்சென்று ஒட்டிக்கொண்டது. மேலுதடு கீழுதட்டைவிடத் திமிராக இருப்பதாகப் பட்டது. சடுதியில் சிரித்துக்கொண்டான்.

மீண்டும் ``யெஸ்’’ என்றாள். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

``இல்லை, கீழுதட்டையும் சேர்த்து அல்லவா நான் காதலிக்க வேண்டும்?’’ என்றான்.

``வாட்?’’

“ஸாரி ஸாரி, உளறிட்டேன். உங்களை, உங்க கார் டயர் வெடித்ததிலிருந்து தொடர்ந்து வந்திட்டிருக்கேன். ரொம்பப் படபடப்பா இருக்கு, ஒரே மூச்சில எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்களை முதல் முறை பார்த்த உடனே என்னவோ ஆயிடிச்சி. என் வாழ்க்கை, என் மனசு, என்னோட இயல்பு எல்லாமே மாறிட்ட மாதிரி ஒரு உணர்வு… ம்ம்..ம்ம்… நான், எனக்கு... எனக்கு... என்னவோ ஆயிடிச்சி. சோல் மேட்டுன்னு சொல்வாங்களே… ஸாரி க்ளிஷேவா இருக்கு… அதையும் தாண்டி… பல ஜென்ம பந்தம்… இதுவும் க்ளிஷேதான்… ஸாரி, அவ்ளோ காதல், என் தெய்வம் மாதிரி, என் அம்மா மாதிரி, என் குழந்தை மாதிரி, எனக்கு எல்லாமே நீதான்னு, ஸாரி, நீங்கதான்னு சட்டுன்னு தோணிடிச்சி. தேவதைன்னு சொல்லலை, ஆனா, தேவதையைவிட மேல, பிரியமான தேவதை, என்ன சொல்றதுன்னே தெரியலை, உங்க கால் சுண்டு விரல் கூட இப்ப என் மனசுல, இல்ல நியூரான்ல எங்கோ பத்திரமா இருக்கு. உன் முகம்… அதை இன்னும் என்னால முழுக்க உள்வாங்கவே முடியலை. உன் முகத்தோட மொத்த அழகையும் உள்வாங்க மூளை தடுமாறுது, திணறுது, இவ்ளோ அழகை உள்வாங்கிப் பழக்கப்படலை இதுவரைக்கும். நான் சரியா சொல்றனான்னு தெரியலை… ஸாரி, அதனால உன்னைத் தொடர்ந்து வந்தேன். எப்படியோ இப்ப உன் பக்கத்துல உக்காந்துட்டிருக்கேன்.”
p44c_1517902129.jpg
“வாவ்… ஒரு பழைய  சினிமா ரொமான்ட்டிக் சீன்போல இருக்கு. சினிமாலதான் இப்படி நடக்கும்னு நினைச்சிட்டிருந்தேன்.”

“ரியல் லைஃப் சினிமாவைவிட சுவாரஸ்யங்கள் நிறைந்தது.”

“ம்ம்... ஆமாம்… நான் இன்னொரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் கொடுக்கவா?”

“என்னது’’

“நீ என்னைத் தொடர்ந்து வந்து இந்த ஃபிளைட்ல ஏறி என் பக்கத்து சீட்ல உக்காருவன்னு எனக்குத் தெரியும்.”

“வாட்?’’

“ரெண்டு வைப்பர் ஓவர் ஸ்பீட்ல ஆட ஆட, அதுக்கு நடுவுல உன் முகத்தைப் பார்த்தேன்.”

“ஓ காட்.”

“இவன் என் ஆளு, என்னைத் துரத்தி வருவான்னு தெரிஞ்சிது’’

“மை காட், எப்படி?”

“ஏன்னா நான் ஒரு சூன்யக்காரி’’

சீட்டை சாய்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்டபடி இருந்தான் தரண்.

திரும்ப பனிநிலாவைப் பார்த்து, “எனக்கு எல்லாமே கனவுபோல இருக்கு பனி.”

“சரி கனவுன்னே வெச்சிப்போம். இந்தக் கனவிலிருந்து முழிக்கணும்னு இருக்கா  இப்ப?”

“இல்லை.”

“சரி, இதைக் கனவுன்னே வெச்சிப்போம். போற வரைக்கும் போகட்டும், இப்ப கொஞ்ச நேரம் தூங்குவோமா?”

“நீ தூங்கு, நான் கனவை கன்ட்டினியு பண்ணிக்கிட்டே, நீ தூங்கறதைப் பாத்துக்கிட்டே இருக்கேன்.’’p44d_1517902139.jpg

பனி தூங்க ஆரம்பித்தாள். பனியின் சீட் பெல்ட்டை விடுவித்து விட்டான் தரண். அவள் கண்ணை மூடி சற்று நேரம் கழித்து தனது இருக்கையின் சாய்வுப்பகுதியில் தவழ்ந்த அவளின் முடிக்கற்றையில் முத்தமிட்டான். காதலில் முடிக்கற்றைகளுக்கும் உணர்விருக்கும். முடிக்கற்றைகள் அந்த முத்தத்தை உள்வாங்கின. எதிர்ப்பக்கத்தில் இருந்த முடிக்கற்றைகள் லேசாக ஆடி ஆர்ப்பரித்தன.

வானிலை சரியில்லாததால் வார்ப்பட்டையைப் போடவேண்டி அறிவிப்பு வந்ததும், பனிநிலா எழுந்தாள்.

விமானம் தரை இறங்குவதற்கு முன்னதாக அவள், ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்தவள் என்றும், அப்பா ஹிமாச்சல், அம்மா தமிழ்நாடு என்ற ஒரு சுருக்கமான காதல் கதையையும் சொன்னாள். அப்பா அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்.

விமானம் இறங்கியவுடனேயே ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் அவளுடைய ஊருக்கு காரில் செல்வதாகக் கூறினாள்.

“வாவ்” என்றான். விமானம் டெல்லியில் தரை தட்டியது. சென்னையில் புயல் ஆரம்பித்தது.

கார் சண்டிகர் பாதையில்  பயணிக்க ஆரம்பித்தது. சண்டிகர் தாண்டி பெரிய ஏசி தாபாவில் நின்றது. முதலில் தான் உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள். அவள் வரும் வரையில் அவளுடைய கைக்குட்டையை எடுத்து நீண்ட முத்தமிட்டான். முத்தமிடுகையில் மூக்குக்கும் வேலை கொடுத்தான். முன்பைவிட அதிக ஒளியுடன் திரும்பி வந்தாள். அளவாக உணவருந்திய பின், மீண்டும் வண்டி கிளம்பியது.

மலையேற ஆரம்பித்ததும், நான் உறங்கவா என்றாள்.

நான் இன்னும் கனவிலேயே இருக்கிறேன் என்றான்.

நீண்ட நேர ஓட்டுதலுக்குப்பிறகு, வாழைப்பழங்கள் சுருங்கித் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு கடையில் வண்டியை நிறுத்தினான். கடையில் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாமல், தானே ஒரு தேநீர் போட்டான். சத்தம் கேட்டு அசைந்தவனை ஆசுவாசப்படுத்தி விட்டு 500 ரூபாயை அவன் தலைமாட்டில் வைத்துவிட்டு, ஒரு சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டான்.

அவள் காரில் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சிகரெட் அடித்து முடித்துவிட்டு, காரில் ஏறினான். அவள் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு காலைத்தூக்கித் தன் இருக்கையில் வைத்துக்கொண்டு, ஒருக்களித்து ஒரு சின்னஞ்சிறு குழந்தைபோலத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளின் செருப்பை எடுத்துப்பார்த்து முகர்ந்தான். அதை ஒரு முத்தமிட்டான்.  மீண்டும் கீழே இறங்கி அவளுக்கான ஒரு தேநீரைப் போட்டு அவனே குடித்தான். அப்போது காரின் கண்ணாடி வழியே அவளின் தொண்டைக்குழியைப் பார்த்தான்.

மீண்டும் ஓட்டம். ஒரு நதியைப் பாலத்தின் மூலம் கடந்ததும் அது பக்கவாட்டில் தொடர்ந்து ஓடி வர ஆரம்பித்தது. குளிர் ஏற ஆரம்பித்ததும் காரில் வெப்பத்தைக் கூட்டினான். நிற்காமல் வளைந்து நெளிந்து ஓட்டியபடியே உயர ஆரம்பித்தான். முரட்டு ஓட்டம் இல்லாமல் வாழ்விலேயே இப்போதுதான் ஒரு பரதநாட்டிய நங்கையின் லாகவத்தோடு ஓட்டிக் கொண்டிருந்தான். அதிகாலை நான்கு மணி ஆகியும் கண் செருகவேயில்லை. பனிநிலா எழுந்துகொண்டாள். சற்று நேரம் அரைத்தூக்கத்தில் இருந்தாள். சில மணித்துளிகள் கழித்து ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தினார்கள். தேநீர் முடிந்ததும் சற்று நேரம் பனி ஓட்டுவதாகச் சொல்லி ஓட்ட ஆரம்பித்தாள்.

அதிகாலைக் காற்றைச் சுவைக்க ஆர்வம்தான். ஆனால், கண்ணாடியைத் திறந்தால் உறைந்து விடுவோம் என்றாள்.

“நான் உறைந்து எவ்வளவோ நேரம் ஆகி விட்டது” என்றான் தரண்.

கன்னங்களால் சிரித்த பனிநிலா , “நீ என்னை எவ்ளோ லவ் பண்ற தரண்?” என்றாள்.

“சொல்லவே தெரியலை பனி, எனக்கு இந்த உலகமே வேணாம்னு இருக்கு. யாரும் வேணாம். எதுவும் வேணாம். நீ நீ மட்டும் போதும். தனியான ஒரு கிரகம், இல்ல, தனியான ஒரு காடு. எந்தத் தொந்தரவும் இல்லாம உன்னை லவ் மட்டும் பண்ணிட்டிருந்தா போதும்” என்றான்.

“யூ ஆர் லக்கி தரண். நீ கேட்டதை எல்லாம் நான் உனக்குத் தரேன்.’’

“நிஜமாவா ராணிக்குட்டி.”

“ஆமாண்டா ராஜாக்குட்டி. நாம இப்ப போறதே யாருமில்லாத மலைமேல, தனியா இருக்கும் காட்டுக்கு நடுவுல, யாரும் இல்லாத பங்களாவுக்குத்தான். அங்க போனா வெளில வரவே எட்டு மாசம் ஆகும். யாரும் வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரு மட்டும்தான். இன்னொண்ணு தெரியுமா? இந்தக் குருவி, காக்காகூட வராது. நதியோட சலசலப்புகூடத் துணைக்கு இருக்காது. ஏன்னா நதியே உறைஞ்சு போய்க் கிடக்கும். நேரமும் உறைஞ்ச மாதிரிதான் இருக்கும். அந்த உறைந்த உலகத்துல நம்ம காதல் மட்டும் உயிர்ப்போட இருக்கும். அங்க இறந்த காலம் , எதிர்காலம் ஏதும் கிடையாது. எல்லாமே நிகழ்காலம்தான். லவ்வுக்கு பாஸ்ட், ஃப்யூச்சர் ஏதும் வேணாம். அதை நிகழ்காலத்துல உறைய வச்சி வாழ்வோம். என்னா?”

“என் பனிக்குட்டி, எல்லாமே நான் மனசுல நினைச்ச மாதிரியே நீ பேசற . அந்த இடம் எங்க இருக்கு ?”

p44e_1517902152.jpg“மணாலி தாண்டி, ரோத்தாங் பாஸ் போயி, கேலாங் தாண்டிப் போனா ஜிஸ்பான்னு ஒரு சின்ன கிராமம் வரும். அந்தக் கிராமத்துல 30 வீடுகள்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்லயும் ஒருத்தவங்கதான் இருப்பாங்க. அங்க போறதுக்கான பாதை இன்னும் 10 நாளில் அடைச்சுடுவாங்க. அதுக்கு அப்புறம் ரோட்டை முழுக்கப் பனி பொழிஞ்சி மூடிடும். அதுக்கு அப்புறம் ஆறு மாசமோ எட்டு மாசமோ கழிச்சிதான் பனியைச் செதுக்கிட்டு ரோட்டைத் திறப்பாங்க. நடுவுல ஏதாச்சும் எமர்ஜென்சின்னா ஹெலிகாப்டர்தான். கடை, கிடை ஏதும் கிடையாது. அந்த கிராமத்தைத் தாண்டி மேல ஏறினா பல ஏக்கர்ல எனக்கு ஒரு பண்ணை இருக்கு. அதுக்குள்ள ஒரு மர பங்களா இருக்கு. அங்க யாரும் இல்லை. நாம மட்டும்தான் தங்கப் போறோம். நம்ம மர வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஆறு ஓடுது.’’

“ வாவ் , சான்ஸே இல்ல பனி , பனிக்கு நடுவில் பனிநிலாவோட இருக்கப்போறேன்.’’

பேசிக்கொண்டே வண்டி வேகமெடுத்து, மணாலியை வந்தடைந்தபோது விடிந்திருந்தது. ஓர் அறையெடுத்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, உடை மாற்றிக்கொண்டாள். ஹிமாச்சலபிரதேசத்தை லேசாகப் பிரதிபலிக்கும் படியான உடையணிந்து கொண்டாள்.

இந்த நாட்டின் இளவரசியே என்று கூறி அவளின் இடது கைச் சுண்டு விரலைப் பிடித்தான். அவளுடைய ரத்தம் இவனுடம்பில் பாய்வது போல ஒரு மோனமான சிரிப்பை உதிர்த்தாள். ஆலு பரோட்டா சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

டீசல் முழுக்க நிரப்பிக்கொண்டாள். இரண்டு பெரிய கேன்கள் வாங்கி, அதிலும் டீசல் நிரப்பிக்கொண்டனர்.
 
ஆல் வீல் டிரைவ் மோடுக்கு மாற்றி ஓட்ட ஆரம்பித்தாள். சாலையே இல்லாமல் பாறையாக, சேறாகக் கிடந்த இடங்களையெல்லாம் அநாயாசமாகக் கடந்தாள். ரோதாங்க் பாஸ் தாண்டி,  கேலாங்குக்குச் சற்று முன்பாக ஒரு குடில் இருந்தது. மதியம் ஆகிவிட்டபடியால் அங்கே ஆட்டுக்கறி உணவு உண்டார்கள். இன்றோடு அந்தக் கடையை அடைக்கப் போவதாகக் கூறினார்கள். அநேகமாக நாளையே சாலையை அடைத்துவிடுவார்கள். பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஆட்கள் போக்குவரத்தும் குறைந்துவிட்டது என்றார்கள்.

மீண்டும் ஆரம்பித்த பயணத்தில் சாலையை உடைத்துக்கொண்டு, நீர் மரண வேகத்தில் கிழித்துக்கொண்டு சென்றது. அதையெல்லாம் ஓவியம் வரையும் நிதானத்தோடு ஸ்டியரிங்கைப் பயன்படுத்திக் கடந்தாள். இப்போது பனிக்கட்டிகள் தட்டுப்பட ஆரம்பித்தன. சாலையின் இரு பக்கத்திலும் பனிக்கட்டிகள். தூரத்து மலைகளின் மீது பனிக்கட்டி உறைந்து கிடந்தது. பக்கத்தில் இருக்கும் ஆழமான பள்ளத்தாக்கையும், தொலைவில் இருக்கும் பனி உறைந்த மலைகளையும் ஒருங்கே பார்க்கும்போது, இரண்டையும் விழுங்கியதுபோல அடிவயிறு கலங்கியது.

கார் ஜிஸ்பாவினுள் நுழைந்தது. ஜிஸ்பா,  அநியாய போதையில் சாத்தான் வரைந்த ஓவியம் போல அவ்வளவு அழகாகவும், புதிராகவும் இருந்தது.

பனி சொன்னது போல 30 வீடுகள்கூட தேறுமா என்பது சந்தேகம். ஊரே உறைந்து கிடக்க, ஆட்கள் நடமாட்டம் ஏதுமில்லை. ஜிஸ்பாவைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்று, இடதுபுறம் பிரியும் ஒரு மோசமான தனியார் சாலையில் கார் திரும்பி  தத்தித் தத்திச் சென்றது. கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர்களைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனது.

ஒரு மணி நேரத்திற்குப்பிறகு, ஆறு தென்பட்டது. பக்கத்தில் ஒரு மர வீடு. பனி மர வீடு என்று சொன்னாளே ஒழிய, அது வீடு அல்ல, மர பங்களா. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என பிரமாண்டமாக இருந்தது.
“இங்கேதான் காதல் வளர்க்கப்போகிறோம்” என்று கூறி, துள்ளி இறங்கினாள்.

நதி ஓடிக்கொண்டிருந்தது. நீர் பாறையைப் பழித்தபடியும், பாறை நீரைப் பழித்தபடியும் ஏதோ கலவையான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது நதி.

“ஆறு ஓடுறதைப் பாத்துக்கோ, இன்னும் கொஞ்ச நாளில் உறைஞ்சிடும்” என்றாள்.

 வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

“தூங்கறியா?” என்றாள்.

“இல்ல, இப்பவே ஈவ்னிங் ஆயிடிச்சி , ஏதாவது டிரிங்க் இருந்தா கொஞ்ச நேரம் குடிச்சிட்டு, சீக்கிரம் தூங்கிடலாம்” என்றான்.

“இந்த ஊர்லயே தயாரிச்ச வைன் இருக்கு” என்றவள், உள்ளே சென்று பெரிய மண் குடுவையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்டவன், இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தவன்போல, அவளின் இடையில் கைகொடுத்துத் தன்னருகே இழுத்து அணைத்துக்கொள்ள முயன்றான்.

அவன் நெற்றியில் பாக்ஸர்போலக் குத்திவிட்டு, சிரித்தாள். விலகினாள். ``குடிச்சிட்டிரு வந்துடறேன்’’ என்றவள், பங்களாவுக்குள் ஓவியம் கலங்குவதைப் போல நடந்து சென்று மறைந்தாள்.

வீட்டை விட்டு வெளியே வந்து நதிக்கரைக்குச் சென்றான் கையில் வீட்டில் தயாரித்த வைனுடன். நதியின் பக்கத்தில் ஒரு பாறை மீதமர்ந்தான். வைனை ருசிக்க ஆரம்பித்தான்.

பதநீரில் கசப்பும் கொஞ்சம் தணலும் சேர்த்தது போல இருந்தது.

இன்னும் இரவாகவில்லை.

இந்த இமாலயக் குளிர் நரம்பினூடாகப் பாய்ந்து மூளையில் தேள் கொடுக்கால் கொத்துகிறது. பெரிய உடல் நடுக்கம் இல்லை, ஆனால் மன நடுக்கம் உண்டாக்குகிறது. நுரையீரலில் சுடச்சுட பனி சென்று அமர்ந்து கொண்டது போல இருந்தது. மூச்சுக்காற்று குளிர்ச்சூடாக வெளியேறியது. தக்காளியைப் பிதுக்கி மூக்கில் தேய்த்துக்கொள்ளலாம்போல இருந்தது. பிராண வாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை இப்போதுதான் உணர்ந்தான். மணாலியில் பனி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கும்போது கண்டுகொள்ளவில்லை. பிராண வாயுத் தட்டுப்பாட்டை உடலின் பாகங்கள் முதன்முறையாக உணர்ந்ததால், அபயக்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தன. உடலுக்குள்ளே ஒரு ஆம்ப்ளிஃபையரை வைத்தால் நூறு ஆம்புலன்ஸ் சைரன்களின் ஒலி கேட்கும்.

அந்தக் குளிரிலும் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டு, ஒரு முக்கால் கால்சராய் போட்டுக்கொண்டு தரணை நோக்கி வந்தாள் பனிநிலா.

அந்த உடையில் அவளைப் புதிதாய்ப் பார்த்தான். காதல் நட்சத்திரங்கள் கூட்டமாய் பின் மண்டையில் தாக்குவதுபோல உலுக்கிக் குலுக்கி எழுந்தான்.
p44f_1517902175.jpg
சூரியன் மங்கிக்கொண்டிருந்தது. அவளின் பின்னணியில் பனிமலை தூரத்தில் தெரிந்தது. பனி என்றால் வெள்ளை என்றுதான் இதுவரை தரண் நினைத்திருந்தான். இப்போதுதான் கரும்பனியும் உண்டென்று கண்டுகொண்டான். கரும்பனி மற்றும் வெண்பனிப் பின்னணியில் வண்ணமயமாகப் பனிநிலா மிதந்து வருவதைக்கண்டு, அவளை நோக்கிச் சென்றான்.

``இந்த நிமிடத்திலிருந்து, இப்போதுதான் உன்னைப் பார்த்ததுபோலப் புதிதாகக் காதலிக்கிறேன்’’ என்றான்.

“நான் சொல்ல வருவதை எல்லாம் நீ சொல்கிறாய்” என்றாள். ஆனால் “ஒரே ஒரு ஏமாற்றம்தான் என்றாள்.’’

“என்ன ?”

“என்னைத் தேடி நீ இங்கு வருவாய் எனச் சில வருடங்கள் இங்கே காத்திருந்தேன். நீ வந்திருக்க வேண்டும், அதுதான் இன்னும் உண்மையான காதல். ஆனால் நீ என்னை சென்னையில் பார்த்துதான் தொடர்ந்து வந்தாய்.”

“மன்னித்துவிடு. என் தவறுதான். நான்தான் வந்திருக்க வேண்டும்’’  என்று கூறிய தரண் பனியை மெல்ல இழுத்து நெற்றியில் முத்தமிட்டான். விடுவித்துக்கொண்டு, அவள் திரும்பியதும் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு முகம் புதைத்தான்.

“தரண், அங்கே தணல் போட்டிருக்கிறேன். அதனருகே அமர்ந்து பேசலாம் வா.”

தரணை முதன்முறையாகக் கையைத் தொட்டு, பிடித்து  அழைத்துச் சென்றாள். தரணுக்கு அவளாகவே தந்த ஸ்பரிஸம் தாங்க முடியவில்லை. மின்மினிப்பூச்சிகள் வைரஸ்களாக மாறி ரத்தத்தில் ஓடுவதைப்போல வித்தியாசமாக நடந்தான்.

“என்னோட ரெண்டு கண்ணையும் பிடுங்கி உன்கிட்ட கொடுத்துடணும்போல இருக்கு’’ என்றான்.

பனிநிலா தரணை அழைத்துச்சென்று தணலின் அருகே போட்டிருந்த மரக்கட்டையில் அமர வைத்தாள்.

அவளும் ஒரு வைன் கோப்பையை எடுத்துக்கொண்டாள்.

“தரண் உன்கூட கொஞ்சம் பேசணும். நீ தெளிவா புரிஞ்சிப்ப. நானே சொல்லட்டுமா, இல்ல நீ சொல்றியா?”

“லவ் யூ சோ மச் பனி.”

“அதேதான். ஆனா விரிவா சொல்றேன். நம்ம காதல் செத்துடக்கூடாது. வளரணும்.”

“நிச்சயமா பனி.”

“காதலுக்கு முக்கியமான  எதிரிகள் பல பேர் இருக்காங்க. எல்லோரையும் ஒதுக்கணும்.”

“நம்ம காதல் வளரணும்னா, நான் சாகணும்னாகூட சாகத் தயாரா இருக்கேன் பனி.”

“சரி… நமக்குள்ள செக்ஸ் வேண்டாம். செக்ஸ் முடிஞ்ச அடுத்த செகண்ட் காதல் குறைய ஆரம்பிக்கும். செக்ஸ் வளர்ந்துகிட்டே போகும். நாம தப்பா, அதைக் காதல்னு நினைச்சிப்போம்.”

“ஓக்கே செக்ஸே வேண்டாம்.’’

“ஒண்ணு சொல்லட்டுமா? குழந்தைகூட காதலுக்கு எதிரிதான்.”

“ஆமாம், ஆமாம்.’’

“நமக்கு செக்ஸும் வேண்டாம், இந்தக் காதலைக் கொல்லும்  குழந்தையும் வேண்டாம்டா.’’

‘`ஓக்கே’’

“அப்புறம், நாள் கூடக் கூடவும் காதல் குறைஞ்சி, ஒரு அலுப்பு வரும். அதனால…”

“அதனால...’’

“நாம தினமும் அன்னிக்கிதான் முதன்முதலா பார்த்த மாதிரி, லவ்வை ப்ரப்போஸ் பண்ணி லவ் பண்ணலாம். ஏன்னா, முதன்முதலா காதலைச் சொல்லிக் காதலிக்க ஆரம்பிச்ச அந்த நாளோட அடர்த்தி  அடுத்தடுத்த நாளில் இருக்கறது இல்லை.’’

“சரி , பனி… நான் உன்னை தினமும் அதே தீவிரத்தோட, புதுசா காதலிக்கிறேன். காதலை எப்பவும் புத்தம் புதுசா ஃப்ரெஷ்ஷா வச்சிப்போம்.”

“அம்மா, அப்பா, வேலை, நண்பர்கள், பொழுது போக்கு, செக்ஸ் எல்லாமே காதலுக்கு எதிரிகள்தான்.’’

“ஆமாம் பனி, நமக்கு நம்ம காதல் மட்டும் போதும்.”

“இன்னும் எட்டு மாசம் வெளி உலகைப் பார்க்க முடியாதுடா. நீ, நான், இந்த வீடு, உறைந்த இந்த நதி, அப்புறம் நம்ம காதல் மட்டும்தான்.’’

“எனக்குக் காதல் மட்டும் போதும் பனி, வேறெதுவும் தேவையுமில்லை பனி.’’

“அப்புறம், செக்ஸ் வச்சிக்கிட்டா குழந்தை பிறக்குது இல்லடா?”

“ஆமாம்.’’

“அதேபோல உண்மையா, தீவிரமா காதலிச்சா ஏன் எதுவும் புதுசா உருவாகிறது இல்ல?”

“தெரியலையே!”

“ஏன்னா யாரும் இதுவரைக்கும் உண்மையா, தீவிரமா காதலை வளர்க்கறதே இல்லை. காதல் உருவான அன்னிக்கே அது மெதுவா  கொல்லப்பட ஆரம்பிச்சிடுது.”

“ம்ம்”

“காதல் பாவம், அதுக்கு வளர்ச்சியே இல்லை. உருவான நாளில் இருந்தே அது அழிய ஆரம்பிக்குது. அழிக்க ஆரம்பிச்சிடறாங்க.’’

“ஆமாம் பனி , நீ சொல்றது சரிதான்.”

“ஆனா நாம ஒழுங்கா காதலை மட்டும் வளர்த்து ,  காதலால் உருவாகும் ஒண்ணுக்கு உயிர் கொடுப்போமா?”

“எப்படி பனி?’’

“அர்ப்பணிப்போட காதலிச்சா, காதல் உருவாகி வளரும். அது ஒரு உணர்வு.  உருவமில்லாம காற்றில் கலந்திருக்கும். அந்த உணர்வை நாம உணரலாம். அது நம்மளைச் சுத்திதான் இருக்கும். நம்மகிட்ட மட்டும் பேசும்.இப்போதைக்கு அரூபமா நினைச்சிப்போம். அதுக்கு ஒரு பேர் வைப்போம்.”

“என்ன பேர் வைக்கலாம்?”

“ம்… சிமிழ்… ஓக்கே வா?’’

“ம்ம் ஓக்கே… சிமிழ், சூப்பர்’’ என்றான் தரண்.

“ஹாய் சிமிழ்” என்றாள் பனி.

இப்போ வரைக்கும் நான் நல்லா இருக்கேன். இப்பவே கிஸ் வரைக்கும் வந்துட்டீங்க. இனிமேலும் இப்படியே போச்சின்னா… செக்ஸ் வரைக்கும் போயிடும். நான் செத்துடுவேன், போய்த் தூங்குங்க என்றது சிமிழ்.
“சிமிழ் சொன்னது கேட்டுச்சா’’ என்றாள் பனி.

“கேட்டிச்சி’’ என்றான் தரண். சிரித்தான். பனியை மென்மையாக முத்தமிட்டான். “என் முத்தத்தில் காமமே இல்லை, காதல் மட்டும் தான். என் முத்தத்தால் நீ அழியமாட்டாய் சிமிழ்,  வளர்ந்துகிட்டுதான் போவ’’ என்ற தரண், “சிமிழுக்குக் கேட்டுச்சான்னு கேளு பனி” என்றான்.

“இப்போதைக்கு நம்பறேன்’’ என்ற சிமிழ், தரண் முத்தமிட்ட பனியின் கன்னத்தை வருடிச் சென்றது.

இருவரும் எழுந்து கைகோத்தபடிக்கு நடந்து உள்ளே சென்றனர். பனி, தரணின் தோளில் சாய்ந்துகொண்டு நடந்தாள்.

பின்னாலேயே வந்த சிமிழ், “பிரிஞ்சி நடந்து போங்க” என்றது.

தரணை இன்னும் இறுக்கிக்கொண்டாள்  பனி. “காதல் உணர்வால் கட்டிப்பிடிக்கிறீங்க, ஓக்கே! நானும் வளர்கிறேன். அது எப்போ எல்லையைத்தாண்டிக் காம உணர்வுக்குள்ள போகுதோ, பிரிய முடியுதா உங்களால?” என்று சிமிழ் கேட்டது.

“நிச்சயமா விலகிடுவோம்’’ என்றாள் பனி.

சிமிழ் அழ ஆரம்பித்தது. ``எனக்கு இப்பவே கழுத்தை நெரிக்கிற மாதிரி இருக்கு” என்றது சிமிழ்.

“ஸாரி சிமிழ், எனக்குக் காமம் ஏதுமில்லை.இந்த தடியனுக்குத்தான் போல இருக்கு’’ என்ற பனி, செல்லமாக அவனது தலையில் தட்டி தரணைப் பிரிந்தாள்.

இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

உன் பெட் ரூமைக் காட்டறேன் என்றவள், முன்னால் நடந்தாள், தரண் பின்தொடர்ந்தான்.

அவனது படுக்கையறையைக் காட்டி, அவனை உள்ளே தள்ளினாள் பனி. அறையினுள் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. கதகதப்பாக இருந்தது.

அவளையும் உள்ளே இழுத்தான் தரணி.

இழுத்ததும் அவனுடன் வந்து ஒட்டிக்கொண்டாள் பனி.

கட்டிப்பிடித்தல் என்றால், மார்பும், மார்பகங்களும் எந்தத் தடையும் இல்லாமல் முதலில் சேர வேண்டும். மார்பகங்கள்,  வயிற்றையும் வயிற்றையும் சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தரணின் மார்பில் புதைந்த பனியின் மார்பகங்கள் அவனது இதயத்தோடு பேசின.

“எனக்கு மட்டும் இழுக்கும் சக்தி இருந்தா,  உங்களைப் பிரிச்சி தனித்தனியாக் கட்டி வெச்சிடுவேன்” என்றபடியே சிமிழ் நுழைந்தது.

தரணை விலக்கிய பனி, “சிமிழ் வருத்தப்படுதுடா, தெரியலையா?’’ என்றாள்.

“இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா சிமிழ்? நான் உன்னை நல்லா போஷாக்கா வளர்த்துட்டுதான் இருக்கேன்” என்றான் தரண்.

சிமிழ் இருவர் தலையிலும் குதித்து ஆடியது.

“தரண், நம் காதலுக்கு எதிராக யார் இருந்தாலும் கொல்ல வேண்டும். உனக்குத் தெரியுமா? காதல் ஆதி உணர்ச்சி” என்றாள் பனி.

“ஆம் ஆம்’’ தரணுக்கு மூச்சு இரைத்தது.

“கொல்லுதலும் ஆதி உணர்ச்சி. இந்த நாகரிகம், பெருந்தன்மை, அன்பு, பாசம் எல்லாம் நடுவில் வந்தவை.’’

“ஆமாம்’’ என்றான் தரண்.

“நம் காதலுக்குத் தடையாக இருந்தால் நான் உன்னையும் கொல்லுவேன். என்னையும் கொல்லுவேன்’’ என்றாள்.

“அதுதான் சரி’’ என்றது சிமிழ்.

“கனவு போல இருக்கிறது கண்ணே’’ என்றான் . ‘`கண்ணே” என்பதை சொல்லவில்லை, முணுமுணுத்தான்.

“இது கனவு என்றால், இதிலிருந்து, நீ எழ விரும்புகிறாயா’’ என்றாள்.

“எழுந்தாலும், எழ விரும்பவில்லை என்று சொல்லத்தான் விரும்புவேன் உன்னிடம், அப்போதும் நீ இருக்க வேண்டும்’’ என்றான்.

“சரி போய் தூங்கு, காலையில், புதிதாக சந்திக்கலாம். புதிதாக காதலிக்கலாம். காதலை உறைய வைக்கலாம். காலத்தை, வாழ்வை உறைய வைத்து காதல் காதல் காதல் என வெறும் காதலோடு காதலாக வாழலாம் தரண்’’ என்று சொல்லியபடி பின்னகர்ந்தாள். தரண் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். கைகளை விடுவித்துக்கொண்டே நகர்ந்தாள் பனி.

“லவ் யூ பனி’’ என்று கத்தியபடியே, படுக்கையில் வந்து விழுந்தான் தரண். நீண்ட நாள்களுக்குப்பின் படுக்கையில் விழுவது போல இருந்தது. தூக்கம் சொக்கியது.  தூங்கப்போவதற்கு முன்பு, அறையை நோட்டமிட்டான். நல்ல பெரிய அறை. மூலையில் சலனம் தெரிந்தது. மூலையை நோக்கினான் தரண்.

மூலையில், நூற்றாண்டுத் தாடியுடன், தரண்.   கண்களில் காதல் ஒளிர அமர்ந்திருந்தான். அவன் கைகளில் சிகரெட் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அசாத்திய பேரமைதியோடு சிமிழ் அமர்ந்து இருந்தது தெரிந்தது.

குட்டிச் சிமிழ், குதித்துக்கொண்டே எங்கோ ஓடியது.