Shanmugam Subramaniam 24-01-16
அவள் இவ்விடமிருந்த பொழுது
அழகிய அன்பே
மண்டபத்தில் பூக்கள் நிரம்பின
இப்போது அவள் போய்விட்டாள்
அழகிய அன்பே
அவளது மஞ்சத்தை பின்னால் விட்டுச் சென்றாள்
அவளது மஞ்சத்தில்
பூத்தையலிட்ட விரிப்பு
சுருட்டப்பட்டுள்ளது
மீண்டும் அதில் சயனிக்கவில்லை
மூன்று வருடங்களுக்கு முந்தைய இந்நாள்
இன்னமும்
அவளது மணத்தை வைத்திருக்கிறது,
சுகந்தத்தை ஒருபோதும் இழக்கவில்லை
அழகிய அன்பே
மீண்டும் திரும்பிடவுமில்லை
மஞ்சள் இலைகள் வீழ்கின்றன
நான் அவளை நினைக்கையில்
வெண் பனி
பச்சை வண்ணப் பாசிமேல்.
-Li Po-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
Yesterday at 12:06am ·
காற்று வீசுதலை நிறுத்திவிட்டது
பூமி
வீழ்ந்த பூக்களினால் மணக்கிறது
நாள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டது
எனது கேசத்தை சீவ அதீதமாய் அலுத்துவிட்டது
அவனது உடைமைகள் இங்குள்ளன
அவன் இப்போது இங்கில்லை
யாவுமே வியர்த்தமானது
ஒர் வார்த்தையை நான் மொழியும் முன்பே
முதலில் விழிநீர் வழிந்தோடுகிறது
அவர்கள் உரைக்கின்றனர்
இரட்டை ஓடையில்
இளவேனில் இன்னமுகூட வனப்புற்றிருக்கிறது
நானும்கூட
ஒரு ஒளியேற்றியப் படகில் துடுப்பிட்டு செல்ல விழைகிறேன்
ஆயினும் நான் அஞ்சுகிறேன்
இரட்டை ஓடையிலுள்ள சிறுபடகால்
ஏந்தி செல்லவியலாது
அத்துனைச் சோகத்தையும்.
-Wu -ling-ch'en-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 22 at 8:19am ·
இருமருங்கும் மரங்கள் செறிந்த சாலையிலுள்ள இல்லத்தில், பகலவன் தாழும் வேளையில்,
கணநோக்கில் இணையைப் பற்றினேன் ஒரு அழியா மறவாமைக்கு!
மதுரமாய் ஒப்பனையிட்ட முகப்பூச்சுடன் ,
தளர்வாய் சீவியக் கேசத்துடன்,
வர்ணமிட்ட திரை-மறைப்பின் நிழலின் கீழ்
அவள் மங்கலாய் ஒளிர்ந்தாள்,
பிறகு வார்த்தையின்றி ,
அல்லது சைகையின்றி,
பட்டாலான சட்டைக்கைகளை மெதுவாய் இழுத்துபடியே , பின்வாங்கினாள்.
-Suan Kuang -Hsien-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 21 at 1:02am ·
வா, அந்த விலைமதிப்பற்ற மாணிக்கத்தின் முத்தம் எவ்வளவு ?
ஒரு முத்தம் வாழ்விற்கெனில், அதை வாங்குவதும் ஒரு கடமைதான்.
முத்தம் தூயதாயிருப்பதால் பூமிக்கு அது நேரியதாயில்லை,
நான் ஈடுபாடற்ற ஆன்மாவாய் மாறிடுவேன், இந்த தேகத்திலிருந்து நான் வெளிப்படுவேன்.
நின்மலத்தின் ஆழி என்னிடம் நவில்கிறது, ”விழைவேதும் கைமாறில்லாது இலவசமாய் வழங்கப்படுவதில்லை;
விலைமதிப்பின் முத்து உன்வசமே உள்ளது- வா, சிப்பியை உடை.
ஒரு ரோஜாவின் முத்தத்திற்கென, வைன்மீது எது சீர்மையை அளிக்கிறது, உலகு முழுமையும் தனது நாவை ஒரு லில்லி மலரைப்போல் வெளியே நீட்டுகிறது.
நான் பிசகுகிறேன், ஒருவேளை நீ அனைத்து ராஜாக்களாக இருந்தால்,
நீ செவ்வாய் கிரகமாகவும் சந்திரனாகவும் இருந்தால்,
அந்த பழக்கப்படுத்தாத நேசிப்பிக்குரியவரிடம் முத்தமொன்றை கேட்காதே.
நுழை , விண்ணுலகின் நிலவில், ஆக நான் சாளரத்தை திறந்திருக்கிறேன்; ஒரு இரவிற்கு மட்டும் என் முகமீது ஒளிப்பிரகாசி ,
உனது அதரத்தை என்னதின் மீது அழுத்து.
பேச்சின் கதவினை சாத்திடுவாய் நெஞ்சின் சாளரத்தை திறந்திடுவாய்;
இந்நிலவின் முத்தத்தை உன்னால் பெறவியலாது சாளரத்தின் வழியாக அதை சேமி.
-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 20 at 12:19am ·
Wang : என்னை ஏந்திச் செல்லும் படகினை ஒளியூட்டு
கனிவான விருந்தினனைச் சந்திக்க,
பெருந்தொலைவிலிருந்து யார்
ஏரியின் மீது வருகிறானோ.
அவ்வேளை , மாடியின் மீது,
ஒரு கோப்பை வைன் முன்னே,
ஒவ்வொரு பக்கத்திலும்
தாமரை பூக்கள் திறந்திடும்.
Wei: மாடி முகப்பின் முன்பாக,
நீரின் அகல்விரிவு
அதிர்வலைகளைக் கொண்டு நிரப்பும் வேளையில்,
தனிமைவாச நிலா
இடை நிறுத்தமற்று அலைந்து திரிகிறது.
பள்ளத்தாக்கின் ஆழத்திலிருந்து
வானரங்களின் கூக்குரல்கள் எழுகின்றன;
காற்ற்றினால் சுமக்கப்பட்டு
அவை என்னை அடைகின்றன எனதறையில்.
-Wang ch'uan chi-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 19 at 12:46am ·
எனது நெஞ்சின் ஒளி நினது எழிலார் முகம், எனது சிறகுகளும் செட்டைகளும் நினது மென்மை;
பண்டிகையும் ’அரபாவும்’ நினது நகைப்பு, எனது கஸ்தூரி மணமும் ரோஜாவும் இனித்திருக்கும் நினது சுகந்தத்தை முதிர்விக்கிறது.
எனது குறியீடு நினது நிலவின் வட்டு, எனது நிழலின் புலம் நினது வனப்பார்ந்த கேசம்.
நான் தொழ -வணங்குமிடம் நினது கதவின் தூசு, எனது துள்ளி குதித்தலுக்கான புலம் நினது மகிழ்நிறை வீதி.
எனது நெஞ்சம் பிறரிடம் அண்டிச் செல்வதில்லை. அது நினது திசையைக் குறியிட்டுப் போனது முதலாய்,
எனது நெஞ்சம் பிறரிடம் சென்றாலும் கூட, நினது இனிய ’நபர்’ அதை பின்னுக்கு இழுத்திடுவார்.
எனது களிவெறியே நின்னுடைய இருத்தல், மூழ்கப் பாயும் எனது இடம் நினது இனித்திருக்கும் நதி,
வெள்ளியார்ந்த நினது மார்பிலிருந்து நான் பொன்னொப்ப மாறியுள்ளேன், நினது இனிய அணைப்பினில் நான் ஒருவருக்கானவனாய் மாறியுள்ளேன்.
நான் எனது சிரத்தை கிடத்துகிறேன்; எவ்வாறு நினது இனிய உருள் கோளம் தனது சிரத்தை மரச்சுத்தியலின் முன் கிடத்தக் கூடாது?
நான் மெளனமாய் இருப்பேன், மெளனமாய், எனது இடையறா ஆரவாரம் நினது இனிய கூக்குரலால் சிதறடிக்கப்படுகிறது.
-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
நீ வினவுகிறாய் :
இப்பச்சை மலையில் நான் ஏன் வசிக்கிறேன் என?
நான் புன்முறுவலிக்கிறேன்
பதில் ஏதுமில்லை
எனது நெஞ்சம் சாந்தமுற்றிருக்கிறது
பாய்ந்தோடும் நீரினில்
மென்னீலச் செவ்வண்ணம்
அமைதியாய் செல்கிறது
நெடுந்தொலைவில்
இது
:வேறொரு பூமி
:வேறொரு வான்
ஒத்த தன்மையில்லை
கீழுள்ள அம்மானுட உலகுடன்.
-Li Po-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 10 at 8:26pm ·
மாலைப் பொழுதில் ஆண்டுகள் நிறையமைதிக்கு அளிக்க்ப்பட்டுள்ளன,
உலகின் கவலைகள் எனது விசாரமில்லை,
எனது சுய தேவைகளுக்கென வேறெந்த திட்டத்தையும் செய்யவில்லை,
நினைவில் உறைவதை அகற்றுவதைவிட நெடுங்காலம் நேசித்த வனங்களுக்கு திரும்புவேன்:
எனது அங்கியை தளர்த்துகிறேன் பைன் தருக்களிலிருந்து வரும் மென்காற்றின் முன்,
கணவாயின் மீதுள்ள நிலவொளியை எனது யாழ் கொண்டாடுகிறது.
’தோல்வி’ அல்லது ‘வெற்றி’ -ஆகியவைகளை ஆளும் விதிகள் யாதென நீ வினவுகிறாய்-
மீனவர்களின் பாடல்கள் அசைவற்ற மோனக் கரை நோக்கி மிதக்கின்றன.
-Wang Wei-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 9 at 11:56pm ·
நேசிப்பவளின் கன்னங்களை உற்றுப்பார் மெய்யான மாந்தரின் பண்பினை ஈட்டுவாய்; கிளர்வற்றவருடன் அமராதே அவர்களது மூச்சினால் நீ குளிவிக்கப் படமாட்டாய்.
நேசிப்பவளின் கன்னங்களிலிருந்து வடிவமற்ற வேறொன்றை நாடு; உனது கருமம் உளம்வருந்தும் நேசிப்பவளுடன் இணையனாய் இருத்தல்.
மண்திரளின் பண்பினை நீ பெற்றிருப்பாயெனில், உன்னால் காற்றில் பறக்கவியலாது, நீயுன்னைத் துண்டுகளாக உடைத்து துகள்களாக்கினால் பறக்கவியலும்.
நீயுன்னைத் துண்டுகளாக உடைத்து கொள்ளாவிடில், , யாருன்னை ஆக்கினாரோ அவருன்னை உடைப்பார், சாக்காடு உன்னை உடைக்கும் பொழுது, எவ்வாறு நீ தனித்த முத்தாவாய்.
ஒரு இலை மஞ்சலாகும் போது, புதிய வேர்கள் அதை பச்சையமாக்குகிறது ; உன்னை மஞ்சலாக்கும் நேசத்தில் நீ ஏன் பூரித்திருக்கிறாய் ?
-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
January 7 at 10:51pm ·
நீயென் உயிர், நீயென் உயிர், என் உயிர்:
நீயென் சொந்தம்,நீயென் சொந்தம், என் சொந்தம்.
நீயென் அரசன், என் பேருணர்ச்சிக்குத் தகுதியானவன்
நீயென் கற்கண்டு என் பற்களுக்குத் தகுதியாயிருக்கிறாய்.
நீயென் ஒளி; என் இவ்விழிகளினுள்ளே உறைகிறாய் ,
ஓ என் விழிகள் வாழ்வின் நீருற்று!
ரோஜா உன்னை விழியுற்ற போது, அது லில்லி மலரிடம் நவின்றது, ”என் சைப்ரஸ் தரு என் ரோஜா தோட்டத்திற்கு
வருகை தந்ததென.”
உரைத்திடு, சிதறியுள்ள இவ்விரண்டினைப் பொறுத்துவரையில் நீ எவ்வாறிருக்கிறாய்!
உன் கேசம், என் கவனம் பிறழ்ந்த நிலை?
உன் கேசத்தின் கயிறு என் தளை, உன் கன்னத்தின் கிணறு என் சிறை.
எங்கு செல்கிறாய் நீ, குடிவெறியுற்று , கரங்களை ஆட்டிக் கொண்டே? என்வசம் வா, என் நகைக்கும் ரோஜாவே!
-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
அனந்த வெளிக்குள்;
மலையின் முழுமை மீது
இளவேனிலின் சீரொளி திரும்புகிறது,
உயர்ச்சியுற்றும் தாழ்ச்சியுற்றும்
ஹூவா சு குன்றில்
எல்லையில்லா திகைப்பையும் புலம்பலையும்
நான் உணர்கிறேன்.
Pei : வெங்கதிர் அஸ்தமிக்கிறது,
பைன் தருக்களிடையே காற்று மேலெழுகிறது,
இல்லம் திரும்புகையில்,
நாணலின் மீது சொற்பமாய் உள்ளன பனித்துளிகள்.
முகில்களின் பிரதிபலிப்பு
எனது காலணித் தடங்களின் மீது வீழ்கிறது,
மலைகளின் நீலம்
எனது ஆடைகளை ஸ்பரிசிக்கிறது.
-Wang ch'uan chi-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
காற்று மடிகிறது வீழ்ந்த பூவிதழ்கள் ஆழ்ந்து குவிகின்றன்,-
திரளான செவ்வண்ணமும் பனியும் திரைச்சீலைக்கு அப்பாலுள்ளன.
நெடிதாய் நினைவுகூர்ந்த கசந்த காட்டு ஆப்பிளின் முகிழ்விற்கு பிந்தைய பருவம்-
மங்கி மறைந்த இளவேனிலுக்கு இரங்குவதற்கான நேரம்.
வைன் முழுமையும் பருகித் தீர்ந்தது, பாடல்கள் பாடப்பெற்றன,
குவளைகள் காலியாக கிடக்கின்றன,
விளக்கைப் பார், அது எவ்வாறு படபடக்கிறது, இப்போது மங்குகிறது, இப்போது ஒளிகூடிப் பிரகாசிக்கிறது.
எனது யோசனைகள் ஏற்கனவே இவ்வமைதியான துயரைத் தாளவும் ஏலாதிருக்க,
ஆயினும் அங்கொரு குக்கூ பறவையின் அழைப்பொலி வரவேண்டும்.
-Hai -shih chin -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
பூக்களுக்கு மத்தியில்
ஒரு ஜாடி வைன் -
நான் தனியாக ஊற்றுகிறேன்
தோழமை இல்லாது,
அவ்வண்ணமாய் கோப்பையை உயர்த்தி
நான் நிலவை அழைக்கிறேன்,
பின்னர் எனது நிழலிடம் திரும்புகிறேன்
அது எம்மை மூவராக்குகிறது.
ஏனெனில் நிலா
குடிப்பது எவ்வாறென அறியாது
எனது நிழல் வெறுமனே
எனது உடலைப் பின்தொடர்கிறது.
நிலா நிழலை கொணர்ந்திருக்கிறது
எனது தேழமையைச் சிறிது நேரம் வைத்திருக்க,
களியாட்டத்தின் நடைமுறை
இளவேனிலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும்.
ஒரு பாடலைத் துவங்குகிறேன்
நிலா சுழல்வட்டமிடத் துவங்குகிறது,
நான் எழுந்து நடமிடுகிறேன்
நிழல் கோமாளித்தனமாய் நகர்கிறது.
நான் இன்னும் பிரக்ஞையோடு இருக்கையில்
நாம் ஒருவருக்கு ஒருவரென மகிழ்வோம்,
நான் குடியில் மூழ்கிய பிறகு
ஒவ்வொருவரும் தனது வழி செல்லலாம்.
நம்மை நாம் என்றென்றைக்குமாக ஒன்றிணைத்துக் கொள்ளலாம்
உணர்ச்சிப் பெருக்கற்ற பயணங்களுக்கு.
நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ள உறுதி கூறுவோம்
பால்வீதியில் தொலைவாய்..
-Li Po-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)