Friday, 30 December 2016

பிரிவு- சம்பத்

பிரிவு- சம்பத்

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார்.
sambathஅவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் - மானசீகமாகத்தான் - அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் - இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது.
ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை.
"மிஸ் கல்பனா!"
"எஸ். மிஸ்டர் தினகரன்!"
"வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?"
"விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?"
அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள்.
அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், "யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்," அவளுடைய சிரிப்பு !!!
"கல்பனா, ப்ளீஸ்..."
"அக்ஹான் ....அக்ஹான்..அக்ஹான்.."
"வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்..." என்பார் அவர்.
அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை.
அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். 'மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்," என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது.
அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது.
ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.
"டிக்கட் கிடைத்ததா?" என்றாள் கல்பனா.
இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.
"இது ஸ்டேஷன்," என்றாள் கல்பனா.
அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. "இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன," என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை.
"கிவ் மி எ லிட்டில் வாட்டர்," என்றாள் கல்பனா.
தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.
அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார்.
அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது 'டிட் யூ வீப்,' என்றாள் அவள். "நோ நாட் எக்ஸ்ôட்லி," என்றார் அவர்.
தயங்கியவாறே, "எப்போது திரும்பி வருவே," என்றார்.
"ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்," என்றாள் அவள்.
"எனக்குத் தெரியும்," என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
"எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,"என்றாள் அவள்.
கொஞ்சநேரம் கழித்து, 'டூ யூ ஃபீல் ஸôட்?" என்றாள் அவள்.
அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது.
பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?
ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?
ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
'மை லவ்'
வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், 'அன் அடல்டரேடட் பக்வாஸ்,' என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட - உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?'
மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது.
'மை லவ்,
உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, 'அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..'
('ஏப்ரல் 1974' - சதங்கை இதழில் வெளிவந்தது)

Wednesday, 28 December 2016

‘வெளிச்சம் விற்றுப் போகிறவன் rendered in English by Latha Ramakrishnan (*First Draft)

நன்றி :லதா ராமகிருஷ்ணன் Anaamikaa Rishi
THAMIZH MANAVALAN’S POEM CAPTIONED
‘வெளிச்சம் விற்றுப் போகிறவன் rendered in English by 
Latha Ramakrishnan (*First Draft)
(*From his recent poem-collection titled UYIRTHEZHUDHALIN KADAVUCH-CHOL (உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் -The password for Resurrection)
RADIANCE-SELLER
“Radiance here, come fast and buy, Radiance here, oh, come fast and buy” 
Hearing the voice of the vendor who went cycling with his ‘Sompapdi’ jar at the carrier
those who came outside, bargained 
and bought it suiting their pleasure and purse,
in small packets and left,
The jar with radiance emptied turned dark.
Now he had no radiance to sell.
When he cleaned the clouds that lay 
all over the inner ceiling of the sky-roof,
with broom
The moon inside starting to shed radiance,
filling the jar with it,
looking at me and smiling
he slowly moves his cycle
to a place of darkness.

வெளிச்சம் விற்றுப் போகிறவன்
தமிழ் மணவாளன்

(சமீபத்தில் வெளியாகியுள்ள அவருடைய உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ என்ற தலைப்பிட்ட கவிதைத்தொகுப்பிலிருந்து)


“வெளிச்சம் வாங்கலியோ வெளிச்சம்
வெளிச்சம் வாங்கலியோ வெளிச்சம்”
சோன்பப்பை ஜாடியை சைக்கிள் கேரியரில்
வைத்துக்கொண்டு சென்றவனின் குரல் கேட்டு
இருளில் இருந்து வெளியில் வந்தோர்
அவனிடம் விலைபேசி
வசதிக்கேற்ப வெளிச்சத்தைப் பொட்டலப் பொட்டலமாய்க் கட்டி வாங்கிக்கொண்டுபோக
வெளிச்சம் காலியான ஜாடி இருளானது
இப்போது விற்பதற்கு அவனிடம் வெளிச்சம் இல்லை.
வான் வீட்டுக்கூரையின் உள் முகட்டில்
ஒட்டடையாய் அப்பிக்கிடந்த
மேகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்ததும்
உள்ளிருந்த நிலவு
வெளிச்சத்தை சொரியத் தொடங்க அதை
ஜாடியில் நிரப்பிக்கொண்டவன்
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு
சைக்கிளை மெல்ல நகர்த்துகிறான்
இருளான இடம் நோக்கி.

Saturday, 24 December 2016

ராஸலீலா - வாசிப்பனுபவம் : பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

16 hrs · 

ராஸலீலா - வாசிப்பனுபவம்

ஒரு நாவலுக்கான வரையறைகள் அனைத்தையும் உடைத்துவிட்டு நிற்கிறது ராஸலீலா. ஆரம்பம் முடிவு தொடக்கம், காலம், வரிசை என்று எதுவுமின்றி எழுத்தாளனின் எழுத்துத் திறனின் மீதே முழுதுமாய் நிற்கிறது. ஒன்றிரண்டு வரிகளிலேயே வாசிப்பவரை உள்ளிழுக்கும் மாயாஜால நடை. ஒரு நல்ல நாவல் என்று எதைச் சொல்வோம்? ஒரு உச்சத்தைத் தொடுதல், நெகிழ்ச்சி, ஆழமான பார்வை, கவித்துவம், ஒரு வாழ்க்கையை மொத்தமாய் வாழ்ந்து முடித்த சோர்வு இப்படி எதுவும் ராஸலீலா தராது. அபாரமான வேகமான உள்ளே உள்ளே இழுத்துச்செல்லும் எழுத்து. அவர் மீண்டும் மீண்டும் பல இடங்களில் சுட்டிக்காட்டிய இசையைப் போல, நடனத்தைப் போல. ஆனால் ஒரு ஏக்கம்போல இத்தனை அழகாய் வசியம் செய்யும் எழுத்தைக் கொண்டவர் ஏன் ஒரு வடிவத்துக்குள் தன் எழுத்தைக் கொண்டுவரக்கூடாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதற்குப் பதில்சொல்லும்விதமாகக்கூட நாவலில் சிலவரிகள் வருகின்றன. பின்நவீனத்துவம் என்றால் எதையும் முன்கூட்டித் திட்டமிட்டு எப்படி எழுதுவது? நான் பாட்டுக்கு எழுதுகிறேன். அதற்கு அர்த்தம் நீங்கள்தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாய்த் தொகுத்துச் சொல்வதாய் இருந்தால், கதை இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. கண்ணாயிரம் பெருமாளின் அஞ்சல்துறை அனுபவங்கள். இதில் பெரும்பாலும் அலுவலகவாசிகளின் வாழ்க்கை, இப்போது சாரு பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறாரே "அதிகாரம்" அதனால் பீடிக்கப்பட்ட அய்ப்பீயெஸ் களின் அதகளம். இப்படி மொத்தம் இருபத்தாறு கதைகள் முதல் பகுதியில் வருகின்றன. ஒவ்வொரு கதைக்கும் பின்குறிப்புகள் என்ற பெயரில் அதுவே ஒன்றிரண்டு சிறுகதைகளைப் போல நீண்டு கிடக்கின்றன. ஒவ்வொரு கதை, அதாவது அத்தியாயம் தொடங்கும்போதும் ஒரு quote இடம்பெறும். சாதாரணமாய் நடைபெறும் சம்பவங்களாய் நீளும் அத்தியாயத்தைப் படித்து முடித்தவுடன் எதற்குப் படித்தோம் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த quotation-ஐ வாசித்துப் பார்த்து உள்ளர்த்தம் செய்யலாம். நான் சில பல நேரங்களில் இப்படிச் சோதித்துப் பார்த்தேன். சம்பவங்களின் விவரணைக்கும் அந்த கோட்டுக்கும் தூரம் ரொம்ப அதிகமாய் இருந்து என்னை ரொம்பச் சோதித்ததால் அப்புறம் விட்டுவிட்டேன். அவர் போடும் கோட்கள் அருமையாய் இருக்கின்றன. கதையில் இரண்டு இடங்கள் மனயெழுச்சியூட்டுபவை. 1) பெருமாளின் நண்பன், பெருமாளின் கதை பெரும்பாலும் தான் எழுதிக் கொடுத்தது என்று சொல்லும்போது பெருமாள் ஆடைகள் அத்தனையையும் கழற்றிவிட்டு அம்மணமாய் நிற்பது. 2) பாரீஸில் ரோட்டில் ஒருபெண் அப்படியே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது பெருமாள் உணர்ச்சிவசப்பட்டு, "சுதந்திரம் என்றால் இதுதான். அந்தப் பெண்ணின் சிறுநீரை முத்தமிடவிரும்புகிறேன்" என்று சொல்வது. ஆனால் பின்னர், அங்கு குளிர் அதிகம் என்பதாலும் சாலையில் ஒரு பாத்ரூமுக்கும் இன்னொன்றுக்கும் தூரம் அதிகம் என்பதாலும் நிறையபேர் இப்படித்தான் கழிக்கிறார்கள். அது சாதாரண நிகழ்வு என்றும் தெரிந்துகொள்கிறான்.

அந்தக்காலத்தில் பேனா நண்பர்கள் என்று பல இடங்களில் பல அமைப்புகளாலோ தானாகவோ நட்பை வளர்த்துக்கொண்டனர். அப்படி தபால் போட்டுத்தான் நட்பை வளர்க்க வேண்டிய அளவுக்கு இங்கு யாரும் நண்பர்கள் இல்லாமல் இல்லை. எல்லாமே பெண்களுக்கான தேடல்தான். இணையம் வந்தபிறகு அதன் ஆரம்பகால கட்டத்தில் மெசஞ்சர்கள் கொடிகட்டிப் பறந்தன. MSN இந்தியாவில் ஆபாச உரையாடல்களே ஓடுகின்றன என்று தன் சேவையையே நிறுத்திக்கொண்டது. பின்னர் உரையாடலோடு கேமராக்களும் சேர்ந்துகொண்டதால் இது இன்னும் சூடானது. ராஸலீலாவின் இரண்டாம்பகுதியின் பெரும்பங்கு பெருமாளின்/சாருவின் வாழ்வில் வந்துபோகும் இணையவழிப் பெண்கள் அவர்களது உரையாடல் தான். சாருவின் உரையாடல் மொழி மோசம். its so formatted and not colloquial. அதேநேரம் அந்த உரையாடல்களில் தனிமையும், விரகமும் ஏகத்துக்குக் கொட்டிக்கிடக்கிறது. அதன் உண்மைத்தன்மையினாலேயே அதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. யதார்த்த உலகில் எப்படி நேரடியாக இருவர் நடந்துகொள்ளமுடியாதோ அது இணையத்தில் மிக எளிதாக இருக்கிறது. கொச்சையாக, மனதில் தோன்றுவதை அப்படியே பட்டவர்த்தனமாய் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும் வெளியாக இருக்கிறது.

பெண்ணுக்குத் துணையும், தன்னைப் புரிந்துகொள்பவனுக்கான தேடலும், தான் பேசுவதைக் கேட்கும் ஆணுக்கான ஏக்கமும் உரையாடலுக்குக் காரணமாக இருக்கிறது. ஆணுக்கு இது எதிலும் நாட்டமில்லை. அடைத்துவைக்கப்பட்ட இச்சைகளைக் கொட்டவேண்டும். சமூகம் எதையெல்லாம் தடையாக்கி வைத்திருக்கிறதோ அது காட்டாற்றுவெள்ளம்போல் பெருகி ஓடும் இடம். இதைப் பெறுவதற்காக ஆண் பல விஷயங்களைச் சகித்துக் கொள்கிறான். அதில் ஒன்று பெண் பேசுவதற்கெல்லாம் ஊம், அடடா, அப்புறம் என்று கேட்டுவிட்டு அவள் ஓரளவு தன்னைப் பற்றி அன்றைக்குச் சொல்லவேண்டியதைக் கொட்டித் தீர்த்ததும் விரசத்துக்கு இறங்குவது. இதே பெண்கள் நேரில் சந்திக்கும்போது அப்படி ஒருவன் இல்லவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். அல்லது நேரில் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். உள்ளும் புறமுமாய் தனியே பிரித்துவைக்க பெண்களால் முடிகிறது. இதைத்தான் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான பக்கங்கள் தீராமல் சொல்லிச் செல்கிறது. எத்தனைவிதமான அனுபவங்கள் என்று மீட்டி மீட்டிப் பார்க்கிறது. யதார்த்தத்தில் அது கிடைக்க வழியே இல்லை என்பதால் அது பெரிய விஷயமாய்ப் பிரஸ்தாபிக்கப் படுகிறது.

"தமிழ் மொழி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் இருநூறு பேருக்காகவும், முன்னூறு பேருக்காகவும் இலக்கியம் படைப்பதில்தான் சற்றும் உடன்பாடில்லை. " - ராஸலீலாவில் ஒரு அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இலக்கிய வாசிப்பாளர் அல்ல. ஆனால் சாருவின் அத்தனை புத்தகங்களையும் வாங்கி பீரோவுக்குள் ஒளித்துவைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு பெண்கள். ராஜேஷ்குமார் நாவல் மட்டுமே வாசிக்கும் ஒரு வாசகரும்கூட சாருவின் புத்தகத்தைத் தற்செயலாய் வாசித்து பின் தொடர்ந்து அவரது நாலைந்து புத்தகங்கள் வாசித்தார். அவர்கள் வாசிப்பதால் இலக்கியத் தரமில்லாத எழுத்து என்று அர்த்தமில்லை. அவரது வசீகரமான எழுத்து ஒரு காரணம். Political correctness-க்கு எதிரான கலகக்குரல் நாவல் முழுக்க எதிரொலிக்கிறது. நிறைய இடங்கள் இரசிக்க வைக்கிறது. நிறைய அடிக்கோடிட அல்லது பின்னர் அதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று நினைத்து எல்லாமே விடுபட்டுவிட்டது. சின்னச்சின்னதாய் நிறைய விஷயங்கள். முழுநாவலுமே இப்படிச் சின்னச்சின்னதாய் கோர்வையின்றி நிறையக் கிடைப்பதால் தொகுத்துச் சொல்ல ஏதுவாயில்லை. வாசித்து முடித்தவுடன் இதுபோன்று எழுதவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி ஒரு ஸ்டைல். வாசிக்கையிலேயே பின்குறிப்புகளைத் திருப்பிப் பார்த்துக் கொள்ளவேண்டி வருகிறது. அத்தியாயத்தை முடித்து பின் குறிப்பு வரும்போது திரும்ப அத்தியாயத்துக்குள் போய் மீள் வாசிப்புக்கான அவசியத்தையும் சிலநேரங்களில் ஏற்படுத்தி விடுகிறது.

கொண்டாட்டம், nudity, அரசியல் சரிநிலைக்கெதிரான கலகம், அதிகார துஷ்பிரயோகம் இவைதான் நாவல் முழுக்க பிரஸ்தாபிக்கப்படுகின்றன. நிர்வாணத்துக்கு ஆசிரியர் தரும் விளக்கம் 'அப்படியே இரத்தமும் சதையுமாய்ப் பச்சையாய் இருத்தல்.' எப்படி ஒருவன் தான் எழுதிய நாவலின் 20% அவன் எழுதித்தந்ததாய்ச் சொன்னதும் பெருமாள் ஆடைகளைக் கலைந்து அம்மணமாகிறானோ அதைப்போல. எந்த அத்தியாயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் மேற்சொன்ன நான்கில் ஒன்று இருக்கும்.

இவையெல்லாவற்றையும் அடக்கிய பித்தான எழுத்துநடை. மது அருந்திவிட்டு எழுதுவது போலவே இருக்கின்றன சில இடங்கள், ஒருவகையான சுரவேகம். அதேவேளையில் நான்லீனியரின் பல சாத்தியங்களைப் புகுத்தித் திணறடிக்கிறார். முன்னும் பின்னும் கோர்த்து ஒரு திறமையான வித்தைக்காரனின் வித்தை போல, ஒரு வலைபோல அத்தியாயங்கள் பின்னிக் கிடக்கின்றன. நான்-லீனியரே ஒருவகையில் தடையாகவும் இருக்கிறது. சொல்லவரும் விஷயத்தின் அழுத்தத்தை நான்-லீனியர் தடுத்துவிடுகிறது. நிறைய அத்தியாயங்களுக்கு சில்வியா பிளாத்தின் 'The Journals' -லிருந்து, ஷேக்ஸ்பியர், எல்பிரிட் ஜெலினெக் (The Piano Teacher)-லிருந்து சில வரி கோட் கொடுக்கப்பட்டிருப்பது பொருத்தமாக அழகாக இருக்கிறது. இருந்தும் முதல்பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பதுகதைகளோடு ராஸலீலாவாக வரும் இரண்டாம் பகுதியின் சில அத்தியாயங்களையும் சேர்த்து (அதாவது without web chat) தனிப்புத்தகமாக வந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இணைய உரையாடல்களை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்தியிருப்பது கடுப்படிக்கிறது. இதற்கு ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கலாம் (உரையாடலே நாவலுக்குத் தேவையில்லை என்றாலும்)

மீள்: 24/12/2015

LikeShow More ReactionsCommentShare

42 Karthigai Pandian M and 41 others

3 shares

4 comments

Comments

மீனாட்சி சொக்கன்

மீனாட்சி சொக்கன் படிக்கனுமே

Like · Reply · 1 · 16 hrs

பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி படிக்காமத்தான் லைக் போட்டீங்களா

Like · Reply · 1 · 16 hrs

மீனாட்சி சொக்கன்

மீனாட்சி சொக்கன் அண்ணே புத்தகத்த சொன்னேன்ணே

Like · Reply · 1 · 16 hrs

மீனாட்சி சொக்கன்

மீனாட்சி சொக்கன் எக்ஸைல் படிச்சப்ப மொத பக்கத்லயே மெரண்டுட்டேன். இப்ப நீங்க எழுதிபுட்டீங்க. கண்டிப்பா படிப்பேன்



Mani Jayaprakashvel அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சாரு எழுதுவதை கொஞ்சமே கொஞ்சம் படிக்கிறார்கள் என்று வருந்துவார். காரணம் இதுதான். ஊரில் எல்லாரும் கதை சொல்கிறார்கள். அதனூடே சில விவரணைகளும். ஆனால் நீங்கள் சொல்லும்- இவர் எழுதுகிற நான் - லீனியர் எல்லாருக்கும் உவப்பாய் இல்லை. சொல்லப்போனால் படித்து முடித்து விட்டு மொத்தமாய் யோசிக்க முடியாது. நீங்கள் செய்தது போல குறிப்பு குறிப்பு எடுத்து....யார்டா இதெல்லாம் செய்வது என்று போட்டு விட்டுப் போவார்கள். உங்கள் பதிவே கூட அந்தச் சுழலில் சிக்கித்தவித்து ஒருவாறு வெளியே வந்தது போல உள்ளது.

Like · Reply · 3 · 12 hrs

பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி நன்றிகள் சார். நான் லீனியர் என்றாலும் சில பார்வைகளை முன்வைக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கொஞ்சம் சிரமம்தான்.

Like · Reply · 2 · 12 hrs

Mani Jayaprakashvel

Mani Jayaprakashvel என்னதான் காமெடி பண்ணிலாலும் சாருவின் மொழி தமிழில் தனித்துவமானது. ரசிப்புக்குரியது. நீங்கள் எழுதிய இந்தப் பதிவுக்கு கண்டிப்பாக பலமணி நேரம் செலவிட்டிருப்பீர்கள்.

Like · Reply · 2 · 12 hrs

பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி :)

Like · Reply · 12 hrs


Thambu C Wet Chat பற்றி உளவியல் சார்ந்த பார்​வை அரு​மை.

Like · Reply · 1 · 9 hrs

Friday, 23 December 2016

தஞ்சை பிரகாஷின் "மிஷன் தெரு" நாவலுக்கு எழுதிய முன்னுரை - லீனா மணிமேகலை

Friday, December 23, 2016

இருட்டின் எண்ணற்ற சாயைகள்

தஞ்சை பிரகாஷின் "மிஷன் தெரு" நாவலுக்கு எழுதிய முன்னுரை. 
நன்றி - வாசகசாலை பதிப்பகம் 

"தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை" என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம்.  "தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும் மேல், தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளிகளுக்கும் மேல் தஞ்சை பிரகாஷ்" என்று அவர் இருந்த திசை நோக்கித் தொழும் சாரு நிவேதிதா மற்றொரு பக்கம். உண்மையில் இதுபோன்ற மிகையுணர்ச்சிகளுக்கு எதிரானது பிரகாஷின் எழுத்து. மிக நிதானமான வாசிப்பை, கவனிப்பை கோரி நிற்கிறது பிரகாஷின் படைப்புலகம். 

மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே  புழக்கத்திலிருக்கும் "Taming of the shrew" வகைமை கதை.  பெண்களை "அடக்க" "நல்வழிப்படுத்த" "கீழ்ப்படியவைக்க" "சொந்தமாக சிந்திக்கும் திறனை மரத்துப்போகச் செய்ய" "பக்குவப்படுத்த" உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் விதவிதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதை தான் "Taming of the shrew" என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதி அதை இலக்கியமாக்க, இன்றுவரை அந்த மரபு உலகின் எல்லாப் பண்பாடுகளிலும், நாடகங்களாக  திரைப்படங்களாக நாவல்களாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த படங்களில் எல்லாம் தொடர்ச்சியாக அவர் "போக்கிரி" பெண்ணாக வருவதும், நம் கதாநாயகர்கள் அவரை "அடக்கமான" பெண்ணாக மாற்றுவதையும் நாம் பார்த்திருப்போம். தமிழ் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள "திமிரான" பெண்கள் வன்புணரப்பட்டே "பாடம்" புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள்.  தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப் படுகிறாள்.  பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும் தான் உலக நியதி என்று வீடும்,  பள்ளிக்கூடமும்,  தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே "மிஷன் தெரு". இதில் தஞ்சை பிரகாஷின் பங்களிப்பு, தன்னை தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் பாத்திரமாக  எஸ்தரை உருவாக்கியது தான். அந்த கேள்விகள் தான் பிரகாஷ் நமக்கு விட்டுச் செல்பவை. கேள்விகளை உறைந்துப்போக விடாமல் சதா உயிர்ப்புடன் வைத்திருப்பதும் படைப்பாளியின் வேலை தான். 

கதை நிகழும் காலகட்டத்தையும் அதன் உள்ளடுக்கு சிக்கல்களையும் மிக நுட்பமான சித்திரமாக்குகிறார் ஆசிரியர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இரட்டை  ஆட்சி. ஏதும் அறியாத தமிழ் சனங்கள்  வெள்ளைக்காரர்களுக்கும் அடிபணிந்து, மராட்டியர்களுக்கும் கீழ்ப்படிந்து, கொள்ளையிடும் முஸ்லீம்களுக்கும் வேற்று அரசர்களுக்கும் நடுங்கி வாழ்ந்துக்கொண்டிருந்த காலத்தில் 'சோற்றுக் கள்ளர்கள்' என்று கேலி பேசப்பட்ட கிருத்துவக் கள்ளர் குடும்பத்துப் பெண்ணாக வருகிறாள் எஸ்தர். கீழ்சாதி என்று கருதப்பட்ட பள்ளு பறை சாதிகளுக்கு ஏசுவை மறுதலித்த கள்ளர்கள், தங்களுக்கென்ற புதிய பள்ளிக்கூடங்களை கிராமம்தோறும் நிறுவிக்கொண்டனர்.  துலுக்கர்களும் மராட்டியர்களும் பெண்களைத் துணியில் போர்த்தி மூடிவைத்திருந்தபோது, இந்துக்கள்ளர் சாதியில் பெண்களை வெளியில் அனுப்பாமல் வைத்திருந்தபோது, கிருத்துவக் கள்ளர் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். எஸ்தரின் தந்தைக்கு அவளை சீமைக்கு அனுப்பி, ஆங்கிலம் படிக்கவைத்து ஒரு Madam ஆக்குவது தான் கனவு. பெண்களைக் "கொண்டு" போவதும், சிறைப்பிடிப்பதும், பூட்டிவைப்பதும், எட்டு வயதிலேயே  கட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் சூழலில் எஸ்தர் மட்டும் பதினெட்டு வயது வரை  யாருக்கும் படியாத கன்றுக்குட்டியாய் வலம் வருகிறாள். ஆங்கிலப் புத்தகங்களின் ஞானம், லத்தீன் - கிரேக்க மொழியறிவு, சங்கீதப்  பாடங்கள், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த  நோக்கம், சமத்துவம்-சகோதரத்துவம்-சமாதானம் என்ற பிரஞ்சு சிந்தனை, காதல், சுயதேர்வு என்று வாழ விரும்பும் எஸ்தரை "நீ விபசாரி. நீ கேவலம். உன் உடம்பு அசிங்கம்.ஏசு இதில் குடியிருக்க மாட்டார். உன் அழகு பாவம். அதைப்பார்த்தே பலர் பாவம்  செய்கிறார்கள்.எனவே நீ பாவமாகிறாய். நீ பாவ மன்னிப்பு கேட்டு அழு" என்று முதலில் வேதபாடசாலை வாத்தியார் பழிக்கிறார்.அடுத்து,"ஒரு பொண்ணை கொழுக்கவுட்டா அவ்வளவு தான், கூரை ஏறி கோளிபுடிக்கக் கிளம்பிடுவா" என்று  அவளின் தாய் கண்டிக்கிறாள். தொடர்ந்து,"பொட்டை நாயீ, போடி உள்ள, கட்டை துளுத்துப் போச்சா, தெருவில வந்து பேசினா வீச்சருவால எடுத்து சீவிப்புடுவேன்" என்று தெருவில் மாமா  மிரட்டுகிறார். முடிவில், "ஓடுகாலி காலில் சங்கிலி போட்டு கட்ட வேணும்" என்று லாசரஸ் என்ற ராட்சசனுக்கு கட்டாயத் திருமணம் செய்து  வைக்கிறார்கள். லாசரஸ், அவளது அபிப்பிராயங்களைக் குறித்து எந்தக் கவலையுமில்லாமல் அள்ளிக்கொண்டு போய் மூலை இருட்டில் போட்டு,   மிருகம் வளர்ப்பதை போல வளர்த்து, குட்டிப்போட வைத்து, மாட்டை முகத்தில் கட்டுவதைப்போல கட்டி, பிதுங்க பிதுங்க அது முகத்தை இழுத்துக்கொண்டு  சுற்றுவதை போன்ற பயங்கரமான வாழ்க்கையைப் பரிசளிக்கிறான். மிஷன் தெருவில் குடியமர்த்தப்பட்டு, தினமும் அடி, உதை எனப் பதினைந்தாண்டு கால திருமண சிறையில் உருவாகும் தன் மகள் ரூபி, அவளுக்கென துணையை தேடும் தருணத்தில் அவளை அடித்து உதைத்து தன் கணவனிடம் ஒப்படைக்கும் எஸ்தரின் Stockholm Syndrome இல் நிறைவுறுகிறது கதை. திருமணத்திற்கு முன் வரை தன் சுய தேர்வுக்காக எதிர்ப்பதும், ஓடுவதும், தப்புவதும், மீறுவதும், கொலை செய்வதற்கும் அஞ்சாதவளாய் நிற்பதுமாய் இருக்கிற எஸ்தர் வன்புணர்வின் மூலம் வசப்படுத்தப்படுகிறாள். அவளிலிருந்தே அவள் பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுகிறாள். அவள் கால்களின் இடையில் நேர்ந்த பலவந்த திணிப்பில் வஞ்சத்தைப் புரிந்துக்கொள்கிறாள். ஆனால் அதை தன் உடலின் வஞ்சமெனவும் கருதி  மறுகுகிறாள். இதை மேலோட்டமாக உள்வாங்கும்போது வாசக மனம் துணுக்குறும்.  ஆனால் ஒரு திரைப்பட இயக்குனராக இந்தியா முழுவதும் "ரேப் நேஷன்" என்ற என் ஆவணப்படத்திற்காக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தித்து உரையாடிய அனுபவத்திற்குப் பிறகு எஸ்தரை இன்னும் ஆழமாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் தங்கள் உடல் மீதே ஒரு தனிப்பட்ட கோபமும், கையாலாகாத்தனமும், கழிவிரக்கமும் அவ்வப்போது பொங்கி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். வன்புணரப்பட்ட ஒவ்வொரு முறையும்  தற்கொலை செய்துக்கொண்ட வேதனையும் விரக்தியும் வெட்டி வெட்டி இழுத்த எஸ்தரின் மீளாத துயரத்தை, நான் நேரடியாக சந்தித்த பாதிக்கப்பட்ட  பெண்களின் கண்களிலும் பார்த்திருக்கிறேன். அத்துமீறப்பட்ட  உடலும்,  எதிர்ப்பின் ஒவ்வொரு முனைப்பும் படுதோல்வியடைந்த வலியும் பெண்கள் காலம் காலமாய் சுமக்கும் சிலுவைகள். அந்தக் கொடும் உளைச்சலில் இருந்தே, எஸ்தர் தன்னை துச்சமாக எண்ணிய லாஸரஸைவிட தன்னை கொஞ்சமாகவேனும் "மதித்த" வெள்ளைக்காரத்துரையிடம் தோற்றுப் போயிருக்கலாம் என எண்ண  வைக்கிறது. அதிகாரத்தின் முன் நூறு நூறு ஆண்டுகளாக பெண்ணை மண்டியிட வைக்கும் மிகச் சிக்கலான புள்ளியை பிரகாஷ் தொடுகிறார். பெண்ணைக் கொண்டே அதை விசாரணைக்கும்  உட்படுத்துகிறார். எந்தக் கர்த்தரையும், எந்த ஜெஹோவையும், எந்த  கிருஷ்ண மூர்த்தியையும், எந்த சைவ சிவசுந்தரத்தையும், எந்த சைன பௌத்த காளி கூலி மாடன்,  புலையன்,பாவாடைராயன், வாழ்முனி வங்கீசன், காட்டேரி,  குரும்பன்,குள்ளன், தெரு சாமி வரை யார் கூப்பிட்டு அலறினாலும், எந்த காலத்திலும், எத்தனை ஆயிரம் கோடி வருடங்கள் கடந்தாலும் இதில் இருந்தெல்லாம் பெண்ணுக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கிறார். 

பிரகாஷ் சுட்டிக்காட்டுவதைப்போல ஒவ்வொரு மனிதனும், தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள். அந்த இருட்டில் என்னையும், நான் அறிந்த, நேசித்த, பிறந்த, பழகிய, வாசித்த, கூடி வாழ்ந்த எல்லாப்பெண்களின் சாயைகளையும் காண முயற்சிக்கிறேன். பதின்மூன்று வயதில் தன் தாய் மாமனுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டு, எந்த வழியில் குழந்தை தன் உடலில் இருந்து வெளியே வரும் என்று அறியாப் பருவத்தில் என்னைப் பெற்றதாய் சொல்லும் என் தாய் ரமா, தான் இழந்ததை எல்லாம் எனக்கு அளித்து விட வேண்டும் என கான்வென்டில் படிக்கவைத்து, நடனம் பாட்டு விளையாட்டு நாடகம் என எல்லாம்  பயிற்றுவித்து நூறு மேடைகள் ஏற்றி அழகு பார்த்து, சாதிக்கப்பிறந்தவள் என தினமும் சொல்லி சொல்லி கனவுகளை வளர்த்துவிட்டு, எனக்குப் பருவம் வந்ததும் என் தாயமாமனுக்கு கட்டிக்கொடுத்துவிட வேண்டுமெனத்  துடித்ததை, என்னைக் கட்டாயப்படுத்தியதை இன்றளவும் மன்னிக்க முடியாமல் இருக்கும்  நான்,  தன் மகள் ரூபியை அவள் தேர்ந்தெடுத்த  துணையிடமிருந்து பிரித்து அடித்து துவைத்து தன்னை அடிமைப்படுத்திய கணவன் லாசரஸிடமே அவளையும் ஒப்படைக்கும் எஸ்தரையும் மன்னிக்க இயலவில்லை. வாழ்க்கையை சகித்துக்கொள்வதும் வாழ்வு தான் என்றால் அதை எழுதுவதும் படைப்பு தான். 

லீனா மணிமேகலை                                                           
19 டிசம்பர் 2016
                                                        

சிறப்புப் பகுதி: வித்யாஷங்கர் ஸ்தபதியுடன் ஒரு நேர்காணல்! : மின்னம்பலம்

https://minnambalam.com/k/1482431433

சிறப்புப் பகுதி: வித்யாஷங்கர் ஸ்தபதியுடன் ஒரு நேர்காணல்!

வெள்ளி, 23 டிச 2016
நேர்கண்டவர்: வைஷ்ணவி ராமநாதன்
உங்கள் குடும்பப் பின்னணி பற்றி...
நான் கோயில்களுக்காக பஞ்சலோக திருமேனிகள் செய்யும் ஒரு ஸ்தபதி குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் பாரம்பரியம் 500 வருடங்களுக்கும் மேலானது. அந்த முன்னோர்களின் பெயர் தெரியாது. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இருந்தவர்களின் பெயர்களிலிருந்து தெரியும். என் கொள்ளுத்தாத்தா ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதியை 1884இல் திரு. E.B.Havell சென்னைக்கு அழைத்துச் சென்றார். அவரையும், திருநெல்வேலியில் இருந்தும், மதுரையில் இருந்தும் வேறு இரண்டு ஸ்தபதிகளையும் வைத்துதான் திரு. E.B.Havell சென்னைக் கலைக் கல்லூரியைத் தொடங்கினார். என் கொள்ளுத்தாத்தா இல்லையென்றால் நான் இந்தத் துறைக்குள் நுழைந்திருக்க மாட்டேன். ஏதாவது, ஒரு பள்ளியில் Drawing வாத்தியாராக பணி செய்துகொண்டு இருந்திருப்பேன்.
பரம்பரை பரம்பரையாக கோயில் சிற்பங்களைச் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சிற்பத் துறைக்கு வந்ததற்கு காரணம் அது மட்டும்தானா?
நான் SSLC ஸ்ரீரங்கம் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது என் தகப்பனார் ஸ்ரீரங்கம் கோயிலில் வாகனங்கள், கொடிமரம் போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார். SSLC முடித்தவுடன் நான், மருத்துவம் இல்லையென்றால் வக்கீல் துறைக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பம் என் தந்தைக்கு இருந்தது. அந்தக் காலத்தில் கலைக்கு போதுமான ஆதரவு இல்லாமையால், நான் இந்தத் தொழிலுக்கே வரக்கூடாது என்று நினைத்தார். ஆனால் நான் கலைதான் படிப்பேன் என்று சாதித்தேன். என்னுடைய தாத்தா முத்துசாமி ஸ்தபதி, சிறுவயதில் என்னை மிகவும் ஊக்குவிப்பார். மணலின்மீது எனக்கு பறவை உருவங்களையும் விலங்குகளையும் வரைவார். அதைப் பார்த்து நானும் வரைய கற்றுக்கொண்டேன். .
என் தந்தையார் சென்னைக்கு வந்தபோது நானும் அவருடன் வந்தேன். அந்தக் காலத்தில் மூன்று காலேஜ்கள் பிரபலமாக இருந்தன - செத்த காலேஜ், உயிர் காலேஜ், பொம்மை காலேஜ். பொம்மை காலேஜ் என்றால் கவின்கலைக் கல்லூரி. என் தாத்தா, கல்லூரியில் இருந்த கட்டடத்தைக்காட்டி என் கொள்ளுத்தாத்தா எப்படி அங்கு வேலை செய்தார் என்று கதைகள் சொல்வார். அதைக்கேட்டு, நானும் அவரைப்போல் வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மேலும் என் அப்பா ஸ்ரீரங்கத்தில் வேலை செய்யும்போது அங்குள்ள ஆகம, சிற்ப சாஸ்திர விஷயங்களைப்பற்றி அங்குள்ள வைணவ பட்டர்களுடன் விவாதம் செய்வார். நானும் அதைக்கேட்டு வளர்ந்தேன். கலைக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற என் உறுதியை வலுப்படுத்தியதற்கு அதுவும் ஒரு காரணம்.
நான் கலைக்கல்லூரியில் சேர்ந்த சமயம், ராய் சவுத்ரி பணிமுடித்து, பணிக்கர் வந்த காலம்.
உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். இத்தகைய சிந்தனை, ஒரு சிற்பியாகிய உங்கள் தந்தைக்கும் இருந்ததா?
இல்லை. ஆனால் இந்தக் கேள்வியை பலரும் கேட்பார்கள். எங்களுடைய முப்பாட்டனார்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்காக சிற்பங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். என் தந்தையார், கோயில்களுக்காக கவசங்கள் செய்வார். அவர் கோயில்களுக்குச் செல்லும்போது நானும் பலமுறை அவரோடு செல்வேன். என் தந்தையாரிடமிருந்து மரபுவழி செய்முறைகளை கற்றுக்கொண்டேன். ஆனால் இதையே எவ்வளவு நாள்தான் செய்வது என்று என்னுள் கேள்வி எழுந்தது. மேலும் நாம் கோயிலுக்காக சிரமப்பட்டு செய்யும் ஒரு கவசத்தை, கோயில் நிர்வாகிகள் உருக்கிவிட்டு புது கவசத்தையும் செய்யலாம். இவ்வாறு அந்த கலைப் பொருள் அழிந்துவிடும்.


எனக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்று நினைத்து, நான் சென்னைக் கலை கவின் கல்லூரியில் சேர்ந்தேன். நான் Modelling படித்தேன். அந்தக் காலத்தில் Craft, Fine Art என இரு பிரிவுகளாக இருக்கும். Craft அதாவது, Sheet Metal, Wood work, Engraving படிப்பு Fine Art அதாவது, Modelling, Commercial Art, Painting படிப்பு. என் தந்தையாருக்கு நான் Commercial Art படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் Painting மற்றும் Commercial Art படிக்க வேண்டும் என்றால், 2 ஆண்டுகள் General Drawing படித்திருக்க வேண்டும். நானோ General Drawing படித்திருக்கவில்லை. ஆனால் General Drawing படிக்காமல் நேராக சிற்பக்கலை (Modelling) படிப்பில் சேரமுடியும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், Painting மற்றும் Commercial Art பயிலும் ஒரு மாணவனுக்கு முப்பரிமாணம் பற்றி படித்தால்தான் தெரியவரும். ஆனால் சிற்பக்கலை பயிலும் மாணவனுக்கோ 3-Dimension-ஐ பற்றி தனியாகப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், ஓவியம் மற்றும் வணிக ஓவியம் இரு பரிமாண கலை வடிவங்கள். ஆனால் சிற்பக்கலையோ முப்பரிமாண கலை வடிவம். இன்னும் சொல்லப் போனால், சிற்பத்துக்கு 4 அல்லது 6 பரிமாணங்கள்கூட உள்ளன.
அது எப்படி?
இதோ, இங்கு மனிதத்தலை வடிவில் ஒரு சிற்பம் உள்ளது. அதை நாம் நேர்பார்வை, மேல்பார்வை, ¾பார்வை எனப் பல கோணங்களில் பார்க்கலாம். இவ்வாறு, நாம் எண்ணற்ற பரிமாணங்களில் பார்க்கலாம். நான், என் சிற்பங்களை பலவிதமான கோணங்களிலிருந்து பார்த்து புகைப்படங்கள் எடுத்து ரசிப்பேன். அதனால்தான் என்னால் இத்தகைய சிற்பங்களைச் செய்ய முடிகிறது.
நான் சிற்பக்கலையில் Diploma முடித்த ஆண்டுதான், பழைய பாடத்திட்டம் மாறி 5 ஆண்டு படிப்பாக புதிய பாடத்திட்டமுறை அறிமுகமாயிற்று. நான் அந்தப் படிப்பில் சேர தகுதித்தேர்வு எழுதினேன். K.C.S.பணிக்கர்தான் மாணவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். என்னை அங்கு பார்த்த உடனே அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. நானும் 5 ஆண்டுப் படிப்பில் சேர வேண்டும் என்ற என் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். ஏனென்றால், நான் வேலைவாய்ப்புக்காக பல இடங்களில் விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைத்தவுடன் நான் படிப்பை விட்டுவிடுவேன் என்றும் அதனால் ஒரு இடம் வீணாகிவிடும் என்றும் அவர் சொன்னார். அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்தது. பின்னர் அவருடைய ஆலோசனையின்படி, நான் கல்லூரியில் இருந்த கைவினைப் பகுதியில் (Craft Section) சேர முயன்றேன். அந்தக் காலத்தில் கைவினைப் பகுதியில் Ceramic, Engineering, Sheet Metal என பல பிரிவுகள் இருந்தன. பணிக்கர் என்னை Sheet Metal துறையில் சேரச் சொன்னார். ஆனால் என் தாத்தா பல ஆண்டுகளுக்குமுன்னரே அதே துறையில் இருந்தார். மேலும் எனக்கு Sheet Metal செய்முறை எல்லாமே முன்னரே தெரியும். இதை, நான் பணிக்கரிடம் கூறினேன். அந்தக் காலத்தில் Sheet Metal துறையில் எவ்வாறு பாத்திரங்களைச் செய்வது, அவற்றை எவ்வாறு அழகுபடுத்துவது என்பன போன்ற பாடங்கள் இருக்கும். புடைப்பு (Embossing) நகாசு (Repousse) போன்ற வேலைப்பாடுகளை கற்றுக் கொடுப்பார்கள்.
அவரிடம், இந்தமாதிரியான ஒரு துறையில் நான் ஏன் சேர வேண்டும் என்றபோது, நான் உனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன். நீ இந்த உலோகங்களுடன் வேலைசெய்யும் முறையை மாற்ற வேண்டும் என்று பணிக்கர் சொன்னார். அப்போதுதான் அவர் ரஷ்யா சென்றுவிட்டு திரும்பிவந்திருந்தார்.
என் தந்தையார் செய்வதைப்போல எனக்கு தெய்வங்களை செய்யத் தெரியும். ஆனால் அதையே மறுபடியும் செய்வதில் என்ன பயன் உள்ளது. அதனால்தான் 1964இல் முதன்முதலில் என்னுடைய பாணியில் ‘பானை ஏந்திய மங்கை’ என்ற சிற்பத்தைச் செய்தேன்.
அப்போது, துறையில் இக்கலையை முறையாக என் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட குப்புசாமி நாயக்கர் என்ற ஆசிரியர் இருந்தார். ‘பானை ஏந்திய மங்கை’ சிற்பத்தை ஓவியமாக முதலில் செய்தேன். அதை சிற்பமாகச் செய்ய வேண்டும் என்றபோது செப்புத்தகடு துறையின் இருப்பில் இல்லை. ஒருநாள், அந்த ஓவியத்தை பணிக்கர் பார்க்க நேர்ந்தது. செப்புத்தகடு இல்லாமையால் அதை நான் சிற்பமாக மாற்றவில்லை என்றதும் பணிக்கர், உடனே குப்புசாமி நாயக்கரை அழைத்து தகடை வரவழைக்கச் சொன்னார். நான் சிற்பத்தை செய்துமுடித்தவுடனே பணிக்கரின் மேஜையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். அவர், அதைப் பார்த்தவுடன் என்னை வரவழைத்,து என் கையைப் பற்றிக்கொண்டு அந்த சிற்பத்தைப்பற்றி அரை மணிநேரம் பாராட்டிப் பேசினார்.
அதன்பின்னர், ஒரு பெண் வருத்தப்படுவதைப் போன்ற சிற்பத்தைச் செய்தேன். இவ்வாறு, சில சிற்பங்கள் செய்தபிறகு கிராமியக் கலையை மையமாகக்கொண்டு சிற்பங்களை செய்யத் தொடங்கினேன். பல இடங்களுக்குச் சென்று சுடுமண் சிற்பங்களை புகைப்படம் எடுத்தேன்.
என்னுடைய சிற்பங்கள் பலவும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. Punjab National Museum, புவனேஷ்வர் லலித் கலா அகாடமியில் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில். அப்போது, என் ஓவியங்கள் 600 அல்லது 900 ரூபாய் விலை இருக்கும். 1972 வரை பிரபலமான கலைஞர்கள்தான் தங்கள் படைப்புகளுக்கு 1000 ரூபாய் கேட்க முடியும்


பெரும்பாலும் பெண் உருவங்களை மையமாகக் கொண்டு படைக்கிறீர்கள். ஏன்?
பெண்களிடம்தான் நளினம், நாணம் போன்ற பாவங்களைக் காணமுடியும். ஆண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கென்று தனித்த உடலமைப்பு உள்ளது. அது, எப்படி சிற்பத்தில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை சிற்ப சாஸ்திரங்கள் விளக்குகின்றன. அந்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவின்படி நாமும் சிற்பங்களை வடிவமைத்தால் அழகு தானாகவே வந்துவிடும். பெண்களால் உயிர்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பெண்ணால்தான் கருவைத் தாங்க முடியும். ஆண்களால் அது முடியாது. இதுதான் பெண்ணின் சக்தி தாங்கும் சக்தி. அதனால்தான் நான் பெண்களை மையமாகக் கொண்டு அமைக்கிறேன். அதனுள் என் கற்பனையைப் புகுத்துகிறேன். சிற்பி ஜானகிராமனும் அவ்வாறே தெய்வ உருவங்களில் தன் கற்பனையைப் புகுத்துகிறார்.
ஜானகிராமன் என்னைவிட பெரியவர். நாங்கள் Sheet Metal துறையில் இருந்தபோது அவரும் அங்கு வந்து வேலை செய்தார். அப்போது நானும், என்னுடன் படித்த ரிச்சர்டு யேசுதாசும் அவருக்கு Sheet Metal சிற்பம் செய்ய உதவி செய்தோம்.
நான் ஒரு சிற்பம் செய்யும்போது நானே இறுதிவரையில் செய்வேன். ஆனால் பல கலைஞர்கள் அவ்வாறு இல்லை. ஓவியர் ஒருவரிடமிருந்து வாங்கி, மற்றவரிடத்தில் சிற்பத்தை செய்யச்சொல்லி பின்னர், தங்கள் பெயரை மட்டும் எழுதிக் கொள்வார்கள் சிலர். அது எனக்கு ஒப்பாது.
*
மூன்று பாகங்கள் கொண்ட இந்த நேர்காணலின் இரண்டாம் பாகம் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை (30.12.16) அன்று தொடரும்.
வித்யாஷங்கர் ஸ்தபதி
1938இல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். 1962இல் சென்னைக் கலைக் கல்லூரியிலிருந்து நுண்கலை பட்டம் (Diploma) முடித்தார். பின்னர், கும்பகோணத்தில் உள்ள கலைக் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் இருந்து ஓய்வுபெற்றார். இவர், National Award of Lalit Kala Akademi, New Delhi விருது (1993), Bombay Art Society Award (1976) என, பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் Regional Centre Art Exhibition of the Lalit Kala Akademi, Madras (1989), 3rd Havana Biennale Cuba (1989), The Madras Metaphor Exhibition organized by Ebrahim Alkazi of Art Heritage Gallery, New Delhi (1991) போன்ற முக்கியமான பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.
வைஷ்ணவி ராமநாதன்
Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் நுண்கலை படித்தார். இப்போது, சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதிநேர Art History ஆசிரியராக இருக்கிறார்.

Saturday, 10 December 2016

சரமேகோ உறுப்பினர் கார்டை கொண்டிருந்த கம்யூனிஸ்டாக இருந்தாலும் அந்த காலத்தில் இடதுசாரிகளால் மிகவும் விதந்தோதப்பட்ட சோசலீச எதார்த்தவாதத்தை தன்னுடைய எழுத்தில் கடைபிடிக்கவில்லை. மாய எதார்த்த புனைவு வகையே அவருடைய எழுத்துப்பாணியாக இருந்தது. 'மாய எதார்த்தவாதியாக' இருப்பினும் தன்னுடைய நாவல்களின் இருக்கும் தாக்கங்களை குறித்து அவரே விளக்குகிறார். Stylized statements-உடன் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இந்த எழுத்தாளன் சாக மறுக்கிறான்.
பிள்ளைகெடுத்தாள்விளை என்ற சிறுகதையை நான் கிண்டலாக குறிப்பிடுவதன் காரணம், 'எங்க டீச்சர்' என்ற சிறுகதையும், 'பிள்ளைகெடுத்தாள் விளை' கதையும் பார்ப்பன பார்வையில் உதித்த பிராமண/உயர்சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதிகள் குறித்தான Stereotype-களை மிகவும் தந்திரமாக வாசகர்களுக்கு கடத்தும் ஒரு பார்ப்பன எழுத்தானின் பிரதிநித்துவபடுத்தும் படைப்புகள் என்பதால்தான். ஜே.ஜே. சிலகுறிப்புகளுடன் ரிக்காடோ ரெய்ஸின் மரணம் என்ற நாவலை இணைத்துப் பேசுவதன் காரணம் இரண்டு நாவல்களுமே உண்மையில் இருந்திராத இலக்கியவாதிகளை குறித்துப் பேசுவதாலும் (பெஸ்ஸாவோ தன் வாழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கற்பனை சித்திரத்தை ரிக்கார்டோ குறித்து கொடுத்திருப்பதால் ரிக்கார்டோவும் கற்பனை கதாபாத்திரமாக மாறுகிறான்), இரண்டு நாவல்களுமே அரசியல் பேசும் நாவல்களாக இருப்பதாலும்தான். (இரண்டு நாவல்களையுமே சரியான இடத்திலிருந்து புரிந்துகொள்வதற்கு அவர்கள் குறிப்பிடும் நிலப்பகுதிகள் குறித்த அரசியல் புரிதல் அவசியம்) சரமேகோ தனக்கென சார்புநிலை அரசியல் நிலைப்பாட்டினை கொண்டிருந்தாலும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. மாய எதார்த்த புனைவு வகைமையை அவர் கையாளுகிறார். அதன் காரணமாக புனைவு அழகியல் முறையிலும் சிறப்பானதாக வருகிறது. பிள்ளைகெடுத்தாள் விளை நாயகனுக்கு அது கைவரப்பெறவில்லை. நுண்மையான பிரச்சாரம் அங்கிருக்கிறது (என்ன, பிராமண சங்கத்திலோ ஆர். எஸ். எஸ்-சிலோ அவர் உறுப்பினராக இருக்கவில்லை). நாவலின் முதல் பகுதில் வரும் பல பத்திகள் அதன் முன்னுரையாக வந்திருக்க வேண்டியது. இந்த படைப்பு மிகவும் சராசரியானதாவதற்கான காரணமும் இதுதான். இங்கு எழுத்தாளன் யார்? எங்கிருந்து எழுதுகிறான்? என்றக் கேள்விகள் முக்கியமானதாகிறது. இந்தக் கேள்விகளில்லாது இலக்கிய ஆய்வுகளின்/விவாதங்களின் பயன் என்னவாக இருக்க முடியும்? எழுத்தாளனுக்கு சாவு கிடையாது. அதுவும் பார்ப்பன எழுத்தாளனுக்கு கிடையவே கிடையாது.
ரொபர்டோ பொலானோ, அமெரிக்காவில் (வட மற்றும் தென் அமெரிக்கா) நாஜி இலக்கியம் என்ற புதினத்தில் வலதுசாரி சராசரி இலக்கியவாதிகளை கிண்டலடித்து எழுதியிருப்பார். நாஜி இலக்கியவாதிகளின் போதாமைகளை அம்பலபடுத்தும் புத்தகம் அது. ஆனால் அவர் குறிப்பிடும் இலக்கியவாதிகள் குறித்து தேடிப்பார்த்தால் எந்தத் தகவலையையும் பெறமுடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே கற்பனை கதாபாத்திரங்கள். இதற்காகவேனும் எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்ல முடியுமா? இல்லை. காரணம் என்னவென்றால் அந்த கதாபாத்திரங்கள் உண்மையாக கதாபாத்திரங்களிலிருந்து வடிக்கப்பட்டவர்கள். எழுத்தாளன் ரோலன் பார்த்தஸ் சொல்லும் 'பொருளில்' எழுத்தாளன் சாகவே முடியாது என்பதற்கு இந்த படைப்பே சான்று!
Like
Comment
பிள்ளைகெடுத்தாள்விளை மற்றும் புளியங்கொட்டை கதைகளின் காரணகர்த்தாவானவரின் ஜே.ஜே. சிலக் குறிப்புகள்-ஐ கொண்டாடும் முன் ரிக்கார்டோ ரெய்ஸ் இறந்த ஆண்டு என்ற நாவலையும் படிப்பது ஒப்பீட்டு தளத்தில் பிள்ளைகெடுத்தாள்விளை கேம்பின் தலமைத்துவத்தை தானே சுமந்து தனது சஞ்சிகையில் கொண்டாடிவரின் எலக்கிய பங்களிப்பு குறித்து இன்னும் சரியான புரிதலை ஏற்படுத்துமென நினைக்கிறேன்.
Like
Comment
Comments
Yavanika Sriram அப்பிடியே விளக்கமா எழுது தம்பி இது விளங்கல
Jose Antoin வெளக்கமா எழுதணும்னுதான் ஆரம்பிச்சேன். முடியாம போச்சு. எழுதித்தான் என்ன ஆவப்போவுது!
Yavanika Sriram ஷ்ஷ்ஷ்ஷ்
Palani Vell ஆரம்பிச்சுட்டு பதில் வுட்டா என்ன ஆவறது
Jose Antoin இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதணும். தூங்குவதற்கு முன்னால் எழுதியதால் செய்ய முடியவில்லை.
Ilango Krishnan ஜோஸ் பிள்ளைகெடுத்தாள் விளைக்கும் சரமாகோவின் நாவலுக்கும் ஒரு நூல் ஓடுகிறதுதான். குறிப்பாக, ஸ்பானிய சிவில் வார் பற்றிய ரெய்ஸின் நிலைப்பாடுகள். ஆனால் சரமாகோவின் (கவனியுங்கள் பெசோவாவின் அல்ல) ரிக்கார்டோ ரெய்ஸ் பாத்திரம் இன்னும் குழப்பமானது. ஒப்பீட்டளவில் சு.ராவின் கதைகள் தெளிவானவை... அவரின் அரசியலும்கூட ஓரளவு தெளிவானதே. இங்கு சரமாகோவின் மற்ற எழுத்துகளை நான் குறிப்பிடவில்லை.
Jose Antoin பிள்ளைகெடுத்தாள்விளையை கிண்டலுக்காக குறிப்பிட்டிருந்தேன். //அவரின் அரசியலும்கூட ஓரளவு தெளிவானதே.//இந்த இடத்தைப் பற்றிதான் விவாதிக்க வேண்டும்.