Friday, 26 July 2019

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் கோணங்கி 1,2,3

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் 

கோணங்கி 1,2,3

****

கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்

1


ரயில் அவர்களை மதியவேளை அமைதியில் இறக்கிவிட்டுச் சென்றது. சிக்காடா இசைப்பறவையின் இதயத்தை ஊடுருவும் சோகத்திற்கு மத்தியில் ரயில் ஆவிநகரத்தைத் தாண்டிச் சென்றபோது ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றாய் கடந்தன. காப்ரியேலின் தாய் லூயிஸாவின் கண்களில் வடிந்த வெப்பமான கண்ணீரின் இளஞ்சூட்டில் ஸ்பரிசத்தை அடைந்த அரக்காடக்கா ரயில் நிலையத்தின் வெறுமையான தோற்றத்தில் கறுமையடைந்த பல ஞாபகங்கள் காண தூணில் சாய்ந்தாள். தாத்தாவுக்கு சொந்தமான பூர்வீக வீடு எட்டிய தூரத்தில், அவர்களைக் கண்டதும் விசாரத்தில் ஆழ்ந்து நடுநடுங்கியது. பழமையான தெருக்களோடு அசையும் அல்மாண்ட் மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த காப்ரியேலின் பொம்மைகள் அரூபமாய் எழுந்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி வாழைத்தோட்ட வெளிகளுக்கு ஓடுகின்றன. பாழ்பட்டு அகண்ட தெருக்கள் குறுகி வழிமறித்தன இருவரையும். தூசிபடர்ந்த மரங்களில் உதிரத்தொடங்கிய ஞாபகங்கள், அடையாளம் காண இருந்த செடிகளின் துயரம் கண்டு லூயிஸா முணுமுணுத்தாள். தாய் வீடு ரகஸியமாய் பெண்களிடம் பேசியவையெல்லாம் இருந்து கொண்டிருந்த சமையலறையில் பல பொந்துகளில் உதிரத்தொடங்கிய குரல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லூயிஸா. தாத்தா வீட்டை விற்பதற்காக வந்திறங்கியவர்களை வீடே பார்வைகொண்டு காற்றினால் அடித்துக் கொண்டது ஜன்னல் கதவுகளை. 

உயரமான சமையல் கட்டுகளில் இருந்த இருட்டு கீறல் விழுந்து வெளியேறிக் கொண்டிருந்த ரகஸியங்களை அரக்காடக்காவில் குடியிருந்த பழைய மனிதர் சிலர் பார்த்தார்கள். வெப்பமும் உதாசீனமும் நகரைக் கவ்வியிருந்தன. 

தெருக்களைப் பார்த்து வர நெடுக நடந்து சென்றபோது காப்ரியேலும் அம்மாவும் அரக்காடக்காவின் பாழ்தோற்றத்திலிருந்து தப்பிச் செல்ல பழைய இனிய தோற்றங்களில் அனர்த்து சென்றனர். வீடுகள் பேசிய துயரத்தின் சாயல் யார் யார் வீட்டையோ அடையாளம் சொன்னது. தெருத்திருப்பங்களில் வயதான சிலர் மங்கலான பார்வைக்குள் லூயிஸாவைப் பார்த்து அந்நியராய் விலகி நகர்ந்தார்கள். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த தெரு வந்த போது தலையசைப்பில் புலப்பட்டது அடையாளம் ஏதோ. அழகான பெண்களும் மீசை முறுக்கிய ஜெனரல்களும் குடும்பங்களுடன் அலாதியாக வாழ்ந்த தனி வகையில் குடும்பக் கதைகள் பேசி ஊர்ந்து சென்ற காலம் நகரை விட்டு நீங்கியிருந்தது. 

அம்மா எதிர்கொண்ட முதல் தோழி எளிமையான வீட்டில் இருண்ட அறையில் தையல்மிஷின் முன்னால் உட்கார்ந்திருந்தாள். முதலில் அம்மாவுக்கு அடையாளம் தெரிய வில்லை. இதே தெருவில் பிறந்த இரு ஸ்திரீகளும் தங்கள் சலிப்புற்ற வாழ்க்கைக்கு மத்தியிலும் இற்று நறுங்கிப்போன உடம்புகளுக்கு மத்தியிலும் ஒரு காலத்தில் அழகுடன் சிரித்து விளையாடிய பருவத்தை கணம் தங்கள் மனதில் நினைவு கூர முயற்சித்து 

290 

ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தார்கள். தோழியின் சத்தம் சற்று கவலைக்குரியதாகவும் யெப்புக்குரியதாகவும் அமைந்திருந்தது. 

"பிரியமானவளே" என்று சொல்லிக் கொண்டு பரவசத்தில் கூவியவாறு எழுந்தாள். 

"லூயிஸா." 

"எப்படி இருக்கிறாய்." 

"எனக்கு ஒன்றுமில்லை ." 

"பார்த்தாயா என் கார்ஸியாவை." 

அவன் தலையைச் சுற்றி முத்தமிடுகிறாள். குதூகலத்தால் அவளை முத்தமிடக்கூட தயாராக இருந்தான் கார்ஸியா. 

"என் அருமை கார்ஸியாவா இது." 

"பார் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துக்கம், சாதாரண வாழ்க்கை தான் எவ்வளவு.' 

"இப்போது நீயே பார்க்க வந்துவிட்டாய்." 

லூயிஸா நொடிப் பொழுது மெளனமானாள். அந்தப்பக்கம் திரும்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். 

"லூயிஸா, உன்னுடைய நட்பால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறாய் தெரியுமா, நீயின்றி இந்த பூமியில் வாழ்ந்திருக்கவே மாட்டேன் தெரியுமா." 

"வேண்டாம் வேண்டாம் ஒன்றும் சொல்லாதே." லூயிஸா முடிக்கவில்லை. இரு பெண்களும் கட்டி அணைத்து மனம் ஒடிந்து அழுதார்கள். 

இரு ஸ்திரீகளின் கைகளின் நடுக்கங்களுக்கிடையே உயிர்பெறும் துடிப்பு மஞ்சள் பட்டாம்பூச்சிகளாய் படபடத்ததை, தொலைந்து போன காலங்களை, அவன் அத்தைகள் தங்களுக்கான சவத்துணிகளை தாங்களே நெய்துகொண்டதை, அவன் பாட்டி இறந்தவர்களுடன் உறவாடுவதை, இறந்தவர்கள் காலியான படுக்கையறையில் பெருமூச்சு விடுவதை, மஞ்சள் நிற ரயில்கள் சுமந்து சென்ற வாழைத்தார்களும் நிழல் படர்ந்த வாழைத் தோட்டங்களுக்குள் தாத்தாவுடன் போய்ப் பார்த்த குளிர்ந்த நீரோடைகளை, தொங்கும் மீன்களை, இசைப்பறவைகளை, இவையெல்லாம் மெல்ல மறைந்தபின் அம்மாவும் தோழியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட கணங்களில் அம்மாவின் உதட்டில் துடித்த பிரகாசத்தை நினைவுகூர்ந்தான் கார்ஸியா. அந்த இருண்ட வீட்டு மர ஜன்னலில் இருந்த பல்லி சுவரில் குதித்து கீழே விழுந்து ஓடியது. தோழி கை தட்டி விரட்டினாள். 
291 

அம்மாவும் தோழியும் வெளியே நடந்து போனார்கள். அதுவரை காணாத பூச்சிகள் வீட்டுக்குள் இரைந்து கத்தின. தெருவில் அப்போது தோன்றிய கண்ணுக்குப் புலப்படாத ரகஸிய இழையானது எல்லோரது வாழ்வாகவும் அவர்களது கண்ணீர் எப்போதும் இசைக்கப்படவும் அவன் வாழ்க்கையாக இருக்கவும் விரும்புவான். அரிதாகவே மாறுபட்ட இரு ஸ்திரீகளின் பேச்சுகள் ஒவ்வொரு தெருவாக நீண்டன. மறைவாக இருந்த பல ஸ்திரீகள் அவர்களைப் பார்த்து கூவியவாறு ஓடிவந்தார்கள். எல்லோரும் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு அழுதது கண்ணீரால் எழுதப்பட்ட கான்ஸர்ட்டோ . அந்த நாளில் ஸான் ஜெரோனிமோவிலிருந்து வந்த இரட்டையர்களோ மதியத்தூக்கத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையும் முற்றத்தில் தோன்றி நித்திய சுகமளிக்கும் தளிரை வேண்டும் பிச்சைக்காரிகளையோ நினைவுகூர்ந்தான். வரப்போகும் மழைக்கு மேலாக குருட்டு இரட்டையர்களின் பாடலைக் கேட்டான். மழை வெறித்த வெளியில் சென்று பாட வீட்டுக்கு வெளியில் கூட்டமாய் வருகிறார்கள். சுட்டெரிக்கும் புழுதியைக் கொண்ட ஏழு மாதக் கோடைக்குப் பிறகு பூந்தொட்டிகளில் தாகத்தால் வறண்ட ரோஸ் மேரியையும் ஸ்பைக்நார்ட்டையும் மழை உயிர்ப்பிக்கும் என இரு தோழிகளும் பேசினார்கள். 

ஒரு காலத்தில் அழகான பெண்களாலும் வண்ணக் குடைகளாலும் அசைவாடிக் கொண்டிருந்த பழைமையான தெரு வழியே ஸ்திரீகளின் குரலைக் கேட்டான் கார்ஸியா. துணிக்கடையிலிருந்தும் மார்க்கெட்டிலிருந்தும் ரொட்டிக்கடையிலிருந்தும் வெகுதூரம் பேசிய பேச்சுகளின் தொடர்ச்சிகளுடன் அம்மாவும் தோழியும் தையல் வேலையில் இறங்கினார்கள். அவனுக்கான மெல்லிய ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் மஞ்சள் பூவை எம்ப்ராய்ட் செய்வதென்பதில் சர்ச்சித்து ஓய்ந்தார்கள் இருவரும். சக்கரம் சுற்றி தையல் எந்திர ஓசைக்குள் இருவரின் ரகஸிய உரையாடல் விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. சக்கரத்தின் நிழல் சுற்றிச் சுழல தரையில் சிதறிய பித்தான்களை இருட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். 

"இரு ஸ்திரீகளின் சந்திப்பில் தான் என்னுடைய முதல் நாவல் பிறந்தது" என்கிறார் மார்க்வெஸ். முதல் நாவல் மட்டுமல்லாது படைத்த அத்தனை நாவல்களும் அதிலிருந்து ஆரம்பமானவை தான் எனவே. 

2

ஆயிரத்தி நூற்றிப்பதினைந்தாம் அராபியக் கதையில் "இவ்விடமிருந்து நீங்கியபின் நிலம் உன் கண்களுக்குப் புலப்படாது. இந்நிலம் அலையாக மாறிவிடும்" என சொல்லப் பட்ட அபு-அபன் கதையில் பாம்பரசன் தன் பச்சைக்கல்லைக் கக்கி அதன் ஒளிப்பாதையால் வழிதவறிய மாலுமிக்கு தூரதேசங்களைக் காட்டியவுடன் தீவு அலையாகிவிடும். அதற்குள் ஜனங்களெல்லாம் அவன் கரிய இரைப்பைக்குள் ஒளிந்து கொண்டனர். பாம்பரசனே 

292 

'”ெ $2)$யில் பாம்புநெ 87வு (யோசுரமாகி பெண் விரலில் சுற்றி பச்சைக்கல் பாம்பு ! T$ 67ன் பர்) 2 wயால, 4) பாம்பரரியான குள்ளப்பாட்டி டோனர் 

உன் குழம்(சிய நீலக்கண் 8 எள் ஆழத்தில்தான் ஜாஸ்மின் மரங்களை மூழKடி ககும் வாசனை, இறந்து போன காதையின் ஆவிகளைத் தூண்டும் மாயாவாத எழுததாகத் தோன்ற குக்கிர) சர். மந்திரவாக கள் வாழ்ந்த எரிகிற கொசிரா கதை தீபகற்பத்தில் இருந்து வந்தாள் மந்திரக் கிழவியைப் போல. ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் வரும் கதைகள், இறந்த போர்வீரனின் உடல் கவசத்திற்குள் தூர்ந்த எலும்புகளிடையே கண்டெடுத்த பெண்ணின் முடிச்சுருளில் இந்தியக் கதை மரபைக் கொண்டு 

பைபிள் போன்றது இக்கதை, அபு-அபன் கதைக்குள் மூழ்கத் தொடங்கிற்று கண்டம். தொலைந்து போன வெமரின் அதி அற்புதக் கற்பனை கொண்ட எழுத்து முறையை ராட்சஸ எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் எழுதிக் கொண்டிருக்கின்றன, மூழ்கிவிட்ட கண்டத்தைத் தாக்கிய கறுப்பு மின்னலில் இறந்தவர்களின் உடல் ரேகையில் கருகிய தோலில் குத்தப்பட்டிருந்த பச்சைக் கோலங்களில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர மீன்களை நீர் கரையான்கள் கொஞ்சமாய் அரித்து அக் கறையான்களே ராட்சஸப் பூச்சியாகி தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களாகின்றன. விண்மீனிலிருந்து இன்னொரு விணமினுக்குத் தாவும் கதையானது மெண்டார் எனும் மூழ்கிய பழங்கப்பலில் இருந்த பார்தெனான் எனும் மிக மெல்லிய துணிகளில் வரைந்த புதிராகிக் கருநிற எழுத்துமுறைகள் நிரம்பிய பெட்டியிலிருந்த மெல்லிய துணிச்சுருள்கள் சுற்றிச்சுற்றி அலையலையாய் வெளிப்படுகிறது சமுத்திரங்களில். எழுத்துக்களைக் கரும்பிச் சென்ற கடல்ராசிகள் கடல் மடுவில் துயிலும் தேவதைகளின் காதுகளில் ரகஸியமாய் சொல்ல, கடல் தேவதைகள் விலைமதிக்க முடியாத அபூர்வத் துணிகளை பெட்டிகளிலிருந்து அலையலையாக வெளியேற்றின. இந்த பூமி தன்னுடைய சொந்த அச்சில் சுழன்றுகொண்டே முடிவில்லாத அந்தத் துணியில் விரல்களாலே பரந்ததொரு ஓவியத்தை முடிவில்லாமல் வரைந்து கொண்டே ஊழிக்காலத்தில் மேல் எழும்பிய பனிக்கட்டிகளை கண்களால் பார்த்துக் கொண்டே அதே கண்களால் "மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தன் மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நின்றிருக்கும் துப்பாக்கிக் காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில் தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதல் முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன அந்த தாரத்து மத்தியானப் பொழுதானது நினைவுக்கு வரத் தொடங்கியது" என நூற்றாண்டுக்காலத் தனிமைவாசத்தில் முதல்வர் பனியைப் பார்க்க பல வருஷங்கள் மார்க்வெஸ் காத்திருக்க வேண்டியதாயிற்று. பனி உருகி நிலம் உண்டான நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேலே வானம் பெயர் சொல்லப்படவில்லை. கீழே கெட்டியான பூமி பெயர் சொல்லப்படவில்லை. பெயர்கள் தனி எல்லை குறிக்கப்படவில்லை. முளை வெளிப்பட்டாகவில்லை. எந்தத் தெய்வமும் வெளிப்பட்டிருக்கவில்லை. ஊழ்விதிகள் எவையும் நிர்ணயிக்கப்படவுமில்லை. எந்தப் பொருளுக்கும் எதிர்காலம் இன்னதென்று நிர்ணயம் ஆகாத போது கடலோடிகளும் பாலைவன மாய இனங்களும் மீமனிதப் புராணங்களும் முன் அறியாத துயர இருள் வீசும் மனிதப் பாதைகளும் ஆயிரம் பாதைகள் சொன்ன கதைகளும் பின்னால் வந்த மத போதகர்களும் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களும் ஆக்கிய அற்புத புராணக்கவிதைகளும் நாடோடிக் கதைகளும் கற்பனைக் கதைகளும் கலந்து வடிவம் பெற்ற பைபிளை தலைகீழாக்கம் பெறவைத்த தனிமொழியின் சிருஷ்டிகரப் பாய்ச்சலாக கொலம்பியாவில் 

293 

தணிந்த எரிமலையின் வயிற்றில் பிறந்த காப்ரியேல் என்ற கதைக்காரன் தொல் பழங்கால ஜனங்களது கலாச்சாரங்களின் நீரடிப் பாதைகளை தாவரவகை எழுத்தாக்கியது நவீனம். 

அரக்கரடக்கா வீட்டைச் சுற்றி நடமாடிய ஆவிகள் எலும்புகளின் இசையில் ஆடிக்கொண்டிருந்தன. அந்த வேளை பாட்டி டோனா ட்ராங்குலினாவின் மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட கொடூரமான உருவங்கள் பாட்டிக்குள்ளிருந்து வெளியேறிப் போய் அல்மாண்ட் மரத்தில் மறைந்தன. தாவர ராஸிகளின் காரவாசனையை நுகர்ந்து பெருமூச்சுவிட்டாள் பாட்டி, மயக்கத்தில் பூக்களுடன் உறவாடிப் பல வார்த்தைகளை செடிகளிடம் சொன்னாள். அவள் பெரிய முக்தில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப் பிரிந்து தொலைவான நிலப்பரப்பில் வீசிக் கொண்டிருந்த துயரக் காற்றாய் மாறியது. அவள் மூதாதையர் வாழ்ந்த தரிசுப் பிரதேசத்தில் விநோத இந்தியர்கள் வாழ்ந்தார்கள். ஆளவரமற்ற மலைப்பறம்புகளில் அசையும் நிழல்களுடன் பதுங்கியிருந்த கிராமங்களில் வெளியாளுக்குத் தெரியாத பாடல் உதிர்ந்து கொண்டிருக்கும், பாடல் கறைபடாத மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட எலும்புகளுடன் உதிர்ந்தபடி, வணங்கப்பட்ட எலும்புகளுக்கு விரோதமாக வாட்களை நீட்டுவதில்லை. பிறந்த மாந்திரீகக் கதைகளும் புராண வீரர்களின் சரித்திரமும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு கானகங்களினூடு மறைந்திருந்தது அரக்காடக்கா. பிறகு வாழைத் தோட்டங்களுக்காகப் பொசுக்கப்பட்ட கானகங்களின் புகையும் புழுதியும் சாலைகளாக வளைந்து செல்லத் தொடங்கின. இருண்ட தார்ச்சாலைகள் பொருள் போக்குவரத்தால் நெரிசலடைந்து ட்ரங்க் ரோடுகளாயின. அரூபமான தான்தோன்றிப் பாதைகளில்தான் ஆவிகள் உலவும். கதைகள் புதையுண்ட பாதைகளில் ஒவ்வொரு சுவட்டிலும் ஞாபகங்களின் துகள்கள் மறைந்திருக்கும். பாட்டியின், அத்தைகளின் ஞாபகங்களில் மறையாத காட்டுப் பாதைகளை மார்க்வெஸ் எந்த இரவிலும் அந்நிய நகரத்தின் வாடகை விடுதியில் இருந்தவாறே நினைவுகூர்வார். மிருகங்களின் காலடிகளும் பறவையின் தடங்களும் காற்றின் மிக மெல்ல துயரமும் படிந்த மணல் பாதைகளில் ஒவ்வொரு மணலையும் மூன்றாம் உலகக் குரலாக மாற்றினார். களங்கமற்ற எரிந்திராவின் பாலைவனத் துயரக்காற்று பெருங்கண்டங்களின் ஒடுக்கப்பட்ட மனிதரின் மூச்சாய் சுழல்கிறது. 

துருப்பிடித்த அச்சில் திரும்புகிற பல நூற்றாண்டுகள் முதிர்ந்த கரகரப்பைத் தவிர வேறு எதையும் இந்த பூமியால் கேட்கமுடியாதபோது ஆலீஸின் அதிசய உலகத்தையோ அராபியக் கதைகளையோ கேட்டுக் கொண்டிருக்கும். தன்னை விட முதிய பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையாக பூமி இருந்து கொண்டிருக்கும் வரை வெளியில் காத்திருக்கும் சாவை தள்ளிப் போட்டவாறு உயிர் வாழக்கூடும். இந்த நூற்றாண்டு முடிய இன்னும் நான்கு தப்படிகளே எஞ்சியுள்ள தருணத்தில் மார்க்வெஸ்ஸின் சிறப்பிதழ் லேஸரில் ஓடத் தொடங்கி இன்று தமிழ் வாசகரின் நாடித்துடிப்பிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது, இதுவரை படைக்கப்பட்ட தமிழ் எழுத்தில் மிகுதியாக எதிர்காலத்தின் பெயரிலேயே துரோகங்கள் அனைத்துமே செய்யப்படுகின்றன. வரும் நூற்றாண்டின் துவக்கத்தை இப்போதே உன்னிப்பாகப் பார்த்தால் கதைமரபுகள் காலியாகிக் கொண்டிருப்பதையோ சிறு கூட்டத்தால் மறைக்கப்படுவதையோ காணலாம். 

294 

பிராந்திய மொழி மரபுகளிலிருந்தே சுயம்புவான கலாச்சாரத்தின் ஆதித் தன்மைகளைக் காக்க முடியும். மாபெரும் கண்டத்தின் சிறிய நிலத்துண்டிலிருந்து பாட்டியின் நீலநிறக் கண் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் மார்க்வெஸ் மாந்த" " எதார்த்தவாதத்தை நிலப்பரப்பாக்கியது உலக மொழிகளுக்கு மாறி மாற 200" மேலுறை விம்மி எழுகிறது. பூமியின் மேலோட்டில் வயோதிக மனிதன் மா இறகினால் எழுதிக் கொண்டிருக்கும் சாகாத வஸ்துவான கதையில் மறைகிறான. 

அலாதியான கலாச்சாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அந்நிய 2"?" மூலதன வெறி கொண்ட சிக்னல் விளக்குகளுக்குக் காத்திருக்கிறது தமிழ். வெற்ற கொள்ளும் பொருள் மேலாதிக்கக் கலாச்சாரத்தில் வேகமாகத் திணிக்கப்படும் ?? உற்பத்திப் பண்டங்களுக்குள் பலன்கள் நசுக்கப்பட்டுவிட்டன. உலகே நொறுங்க - 2 அளவுக்கு விநாசங்கள் வந்தபோதிலும் கரைக்கு அப்பால் எறியப்பட்ட போதும் சொந்த திணைப்பூவின் ஸ்பரிசமானது நிலத் தோற்றங்களாய் தானியங்களின் கண்ணீராய் இசைக்கப்படும். அகதிகள் போனபின் முகாம்கள் கோழிப்பண்ணைகளாக உருமாறின. மரபுரிமைமீது கைவைக்கும் ராட்சஸ விரல் நகங்களுக்குள் பதுங்கி பாலீஷ் அடிப்பவர்கள் கூட்டமாகிவிட்டார்கள். கலாச்சாரம் அரூபமான மொழி சமிக்ஞை கொண்டது இனி. புறத்தைச் சுற்றி வரும் எதார்த்தவாத விரல்களைக் கம்பன் நிலத்தடி புடை மண்ணில் ஒவ்வொரு துகளிலும் தொட வைக்கும் முயற்சிதான் இதழ். 

இப்போதும் சப்த சமுத்திரங்கள் மணல்காணும் ஆழத்தில் கொலம்பஸ்ஸின் கற்சவப்பெட்டியை நான்கு மாலுமிகள் கொண்டு செல்லும் பைசாசக் கப்பலின் கடற்கோடுகள் சலனமடைந்தவாறு இருக்கிற எழுத்தாக மார்க்வெஸ். அஸ்டெக் கடவுளான சக்-மூல் கப்பலில் செல்லும் கற்சவப்பெட்டியை திறந்து கல்நாகங்களை வளையவிட்டார் ஃபுயன்டஸ் எழுத்தில். வடிவத்தை உடைத்து சே குவேராவின் உருவிழந்த கைகளை சக்-மூல் சிலையில் ஒட்டவைத்த கொலம்பியப் புதிரான ரஸவாதி. இவ்விரு மாய அஸ்டெக் எழுத்தில் ரகஸிய இனங்களது துயர்மிக்க நினைவுகள் கதை விளிம்புகளில் உடைந்த ஈட்டிகளாய் சிதறிக் கிடக்கின்றன. ஞாபகத்தின் சுவர்கள் குருதிதோய்ந்த சிவப்பாய் இருக்கின்றன. அதனைப் பருகிய போது கரித்தது எழுத்து. பாரம்பரியப் பெருமை சிதைந்தபோது வாழைத்தோட்ட நீண்ட ரயில் தொடரின் மரணாலி கேட்டு மலைகளுக்குள் சினத்தால் ரத்தமேறிய முட்டிகளால் மண் சுவர்களைக் குத்தினார்கள் கொலம்பியர்கள். பாதுகாப்புக் கவசமணிந்த மெக்ஸிகர்கள் யுத்தத்தில் வீழ்ந்த பழமையான வர்ணனைகளை ஃபுயன்டஸ்ஸின் எரிந்த தண்ணீரில் காண மரப்பாலமாய் குறுக்கே செல்லும் மார்க்வெஸ் எழுத்தில் கடற்கொள்ளையரின் மாலுமிகளின் ரஸவாதிகளின் நாடோடிகளின் காலடி மர ஓசைகளில் பாலைவன முதுகெலும்புகள் கூட்டமாய் நகர்ந்தன. நினைவுக்கெட்டா கால முதற்கொண்டு கற்பனைப்புராண இதிகாசக் குறிப்புகளை லத்தீன் அமெரிக்கரின் சமுதாய நினைவுகள் தனிமொழியில் சுருளவைத்து அராபியக் கம்பளங்களாய் விரித்தார் மார்க்வெஸ். 

அஸ்டெக் இனம் வைத்திருந்த அமாக்கல்லிப் பதிவறைகளில் முப்பதடி நீள அகலமான வரைபடங்களில் காட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கிளைகளில் சிக்கிக் 
295 

கொண்ட பகைவர்களை கொலம்பஸறிக்கு முந்திய உலகை விவரித்த தோல் வரை படத்தில் பதிந்த தாவரங்களின் மறைவிபோர்ஹெ இருந்திருக்க வேண்டும். காகத்தான் மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளாத காலத்துக்கு மறைந்து முன்பே தோன்றியவர்தான் போர்ஹெ. அது வரை ஐரோப்பியர் பார்த்திராத எழுத்தை ஸ்பெயினில் விளைந்து இந்தியர்களின் மெல்லிய விரல்களால் பருத்தி நரற்று மென் துணியில் தீட்டப்பட்டிருந்த போர்ஹெயின் விநோத உருவத்தில் தாவர மிருக மீன்வகை தசைநார்களால் தீட்டிய இன்னொரு போர்ஹெ ஐரோப்பியக் கடலோடி களிடம் சிக்காது அர்ஜென்டினய கடற்குகையில் மீன் கன்னிகளோடு ஒரே இளவரசனாகத் துயில்கிறார். இருளில் மறையும் கதைகளை மிருகசீரிஷம், மூலம், அனுஷம், சதயம், தனு, சத்துரு, அரசை, அருள் நட்சத்திரங்களிடம் கேட்டு அடிமை அமெரிந்தியர்கள் நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கிய தோல்கோடுகளை கல்வரிகளை விண்ணிலிருக்கும் அண்ட கோச அடுக்கில் கணிதார்த்தமாக எண்களை மாற்றி விஞ்ஞான அதீதக் கதைகளை, கடந்த உலகத்திற்கும் தாவரங்களுக்குமிடையில் சொல்லி வைக்கிறார். 

மிகப்பழங்காலத்தில் தனிமொழி கொண்டு இந்திய மரபினங்களின் உடல்தோலில் வரையப்பட்ட பச்சை மையில் தீட்டிக்கொண்டிருக்கிறார் இனியாகும் எழுத்தை, பூமியைத் சுமந்து கொண்டிருக்கிற கார்க்கோடக ஸர்ப்பமானது சந்திரனை மெல்ல மென்று கொண்டிருக்க பூமியில் விழுந்த நட்சத்திரங்களோடு சூரியனுக்கு எதிரான கடும் ஆயுதங்களைப் பறக்க விடுகிறார் போர்ஹெ. எரிகற்களால் ஆன கபாலங்களை அதன்மீது வீசுகிறார். ஸெண்டமாக் எரிகற்கள். போர்ஹெவை இருள்கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரத் தடியுடன் போர்ஹெ. 

ஐந்து திறங்கொண்ட திணைகளில் அமர்ந்திருக்கும் நட்சத்திரங்களுடன் சூதாடிக் கொண்டிருக்கிறார் மார்க்வெஸ். நட்சத்திரக் கோடுகளுக்கு ஏற்ப சந்திரப்பெண் வருகிறான். கபடறியா எரிந்திராவை வானவில்லின் ஏழு ஆன்மாவினால் உருவாக்கினார் மார்க்வெஸ். சூரியனின் வெப்ப சக்தியில் கனன்று கொண்டிருந்த புரட்சிகரக் கனவைப் படைப்பாக்கியது நவீனம். தீவிரக் கலை இலக்கிய இயக்கமாகி சாலைகளிலும் வீதிகளிலும் பஸ்களிலும் காலியிடங்களிலும் மார்க்வெஸ்ஸின் இனந்தெரியாத சக்தி முழுவீச்சுடன் உலக வாசகர்களை ஈர்த்தது. 

செருப்புத்தொழிலாளர்கள், நாவிதர், வாடகைக்கு ஓட்டுபவர், தச்சர், மீன்பிடிப்பவர், தையல்காரிகள், கடல்கொள்ளையர்கள், மாலுமிகள், ரஸவாதிகள், வேசைகள். பணிப் பெண்கள் அவர் கதைவழியே நடமாடத் தொடங்கினர். இந்த வெப்ப மண்டல நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு அதன் நோய் பீடித்த கலாச்சாரத்திற்கு எதிராய் மேலோங்கி வரும் லத்தீன் அமெரிக்கக் குரல். 

மறைபொருளாகவுள்ள மொழியும் சரித்திரமும் சித்திர எழுத்து வகை பிரமிடுகள், பலிபீடங்கள், நடுகற்கள் என மூன்று பிளவுகளாக எழுத்தைப் பிரிக்கும். கல்படைப்புகளில் பாதி பூனை வடிவக் கல் உருவத்தின் கண்கள் மட்டும் பச்சைக் கற்களாக ஒளி கக்கும். பூனை வடிவக் குழந்தையை வைத்திருக்கும் மனிதக்கல் கொலம்பியப் புதிராய் மார்க்வெஸ்ஸின் படைப்புகள். 

296 

யுத்தகளத்தில் மாலை நேரம் பாட்டி.யால் ஏவப்பட்ட மஞ்சள் வண்ணத்துப்பூச்சி மாண்டு கிடக்கும் கர்னல்கள், வீரர்கள், வெற்றிக்களிப்பில் துயிலும் கர்னல் அவ்ரலியானோ புண்டியா மீதும் ஒரே மாதிரி வந்து வந்து உட்காருகின்றன. காலம் கடந்து செல்வதை ஆழமாக


னோ நுட்பமாக உருவகப்படுத்த யாரால் முடியும். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஒருங்கே

வாழ்ந்தாலும் அழகு காட்டிச் செத்துப்போகும். ஆயினும் எட்டு கோடி வருஷங்கள் பூமியைச் சுற்றி வருகின்றன, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் அழியா ஆயுள் பெற்றிருப்பதாக , நினைக்கின்றன, வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டே பல தலைமுறையாக மாறி மாறி எல்லா நிறங்களாகவும் உருவெடுத்து கர்னலின் மீது அமர்ந்திருக்கிறது வந்து, ஒரே நாள் மட்டும் வந்து அடுத்த தலைமுறையாக மாறி மாறித் தோற்றம் கொள்வதான மாய்த்தன்மைதான் மாந்திரீக எதார்த்தம். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஏவியவாறிருக்கிறார் " மார்க்வெஸ்ஸன் பாட்டி எனவே........