மாஜிக் கம்பளங்களே எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆனது
தமிழில் - பால் பிரகாஷ்
: கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் ::
From Kalkuthirai little magazine
0 கதைகளில் பேச்சுமொழிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்.
மொழிஉண்மையை ஸ்பானியப் பேச்சுமொழி அவ்வளவு பிரதிபலிக்காது. பேச்சு மொழிக்கும் எழுத்துவழி உரையாடலுக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. நிஜவாழ்க்கையில் அழகாக அமையும் ஸ்பானியப் பேச்சுமொழி கதைகளில் அவ்வழகை எப்போதும் தொனித்து ஒலிப்பதில்லை. ஆகவே குறைவாகவே பேச்சுமொழியை கதைகளில் உபயோகிக்கிறேன்.
0 பாத்திரங்களின் போக்கையும் முடிவையும் முன் தீர்மானிப்பீர்களா.
பாத்திரங்களுக்கு ஏற்படும் சம்பவங்களை ஓரளவு மனதில் வைத்துக்கொள்வேன். கதைப் போக்கிலோ எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்லும். - ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் கர்னல் அவ்ரலியானோ புண்டியா வெகுகாலம் உள் நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு ஒரு வேளை மரத்தடியில் சிறுநீர் கழிக்கும்போது உயிர்பிரிவதாக முதலில் நினைத்திருந்தேன். "அவர் இறக்கும்போது வெகுவாகத் துன்பமடைவாய்" என்று என் மனைவி மெர்ஸிடஸ் கூறினாள்.
ஏதாவது ஒரு கணத்தில், புள்ளியில் அவரைக் கொன்றே தீரவேண்டும் என்று அறிவேன். உடனே அதைச் செய்யத் துணியவில்லை. இதற்கிடையில் கர்னல் வயதாகி சிறிய தங்க மீன்களைச் செய்துகொண்டிருக்கும் நிலைக்கு வந்து விட்டார். "இப்போது அவருக்கு எல்லாம் போதுமானது" என்று ஒரு மதியவேளை நினைவு தங்கியது. இப்போது அவரைக் கொன்றே தீரவேண்டும். அத்தியாயத்தை எழுதி முடிந்தவுடன் நடுங்கியவாறு இரண்டாம் மாடியில் இருந்த மெர்ஸிடஸ்ஸைப் பார்க்கச் சென்றேன். முகத்தைப் பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டாள். "கர்னல் இறந்து விட்டார்" என்று கூறினாள். படுக்கையில் வீழ்ந்து இரண்டு மணி நேரம் விடாமல் அழுது கொண்டிருந்தேன்.
0 எழுதுவதெல்லாம் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியது தானா.
எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வரியைக் கூட என் கதைகளில் நீங்கள் பார்க்க முடியாது.
0 நிஜம்தானா.
ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் வரக்கூடிய மந்திரவயப்பட்ட நிகழ்ச்சிகள், ரெமிடியோஸ் என்ற அழகி மோட்சத்துக்குப் பறந்து செல்வதும் மாரிஸியோ பாபிலோனியாவைச் சுற்றி எப்போதும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டே இருப்பதும் எல்லாமே நிஜமான நிகழ்ச்சிகளைச் சார்ந்தவையே..
0 ரெமிடியோஸ் அழகி மோட்சத்துக்கு செல்வதற்கான எண்ணம் எப்படித் தோன்றியது.
ரெபெக்காவும் அமரந்தாவும் துணியில் பூவேலை பின்னிக்கொண்டிருந்த போது ரெமிடியோஸ் : அழகி மறைவதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். அப்படியொரு கற்பனைத் தோற்றம் சாத்தியமாகத் தோன்றவில்லை. ரெமிடியோஸ் அழகியை சற்று அதிகநேரம் வைத்திருக்க வேண்டியதாயிற்று. உடல், ஆன்மாவோடு மோட்சத்துக்கு அவள் பறந்து செல்லச் செய்தேன். அதற்குக் காரணமாயிருந்த முடிவு. அதிகாலையில் வீட்டை விட்டு ஓடிப்போன பெண்ணின் பாட்டி, ஓடிப்போனதை மறைப்பதற்காக சுற்று வட்டாரத்திலெல்லாம் பேத்தி மோட்சத்துக்குப் பறந்து போனதைக் கண்டதாகக் கூறியதே ஆகும்.
0 க... கொள்ளை ப கட்டுரையில் அவளைப் பறக்க வைப்பதற்கு கஷ்டப்பட்டதாய, 92
'. ; எழுதினீர்களே.
ஆம். தரையிலிருந்து கால்களை எடுக்க மறுத்துக் கொண்டிருந்தாள். அவளை மேலே எழுப்ப முடியாமல் வெறி பிடித்தவனாக அலைந்தேன். ஒருநாள் இதை சிந்தித்துக் கொண்டே என் தோட்டத்திற்குச் சென்றேன். காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. அழகான பெரிய உருவம் கொண்ட நீக்ரோப் பெண் ஒருத்தி துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவளால் முடியவில்லை. காற்று துணிகளை அடித்துப்பரத்திக் கொண்டிருந்தது. உடனே மனத்தில் மின்னலாய உதித்தது. முடிவு செய்தேன் ரெமிடி யோஸ் அழகியை வானத்துக்கு அழைத்துச் செல்ல மாஜிக் கம்பளங்கள் தேவை என்று. இவ்வகையில் மாஜிக் கம்பளங்கள் எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆயின. டைப்ரைட்டருக்குத் திரும்பியபோது ரெமிடியோஸ் அழகி தடைகள் இன்றி காற்றாக கைகளை விட்டு விலகி மேலே பறந்து சென்றாள். கடவுளே நினைத்திருந்தால் கூட அவளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது.
0 வீட்டுத்தோட்டத்தில் மஞ்சள் பூக்களை அதிகமாக வளர்க்கிறீர்களே, காரணமுண்டா.
மஞ்சள் நிறப்பூக்கள் இருக்கும்போது எனக்குத் தீங்கு ஏதும் ஏற்படாது. பாதுகாப்புணர்வோடு இருப்பதற்கு மஞ்சள் நிறப் பூக்களும் பொதுவாக மஞ்சள் ரோஜாக்களும் சுற்றிப் பெண்களும் தேவைப்படுகிறார்கள்.
0 மேஜையில் எப்போதும் மஞ்சள் ரோஜாவை மெர்ஸிடஸ் வைப்பதுண்டல்லவா.
எப்போதும். வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் எதுவுமே சரிவரச் செய்யாமல் பக்கங்களுக்கு மேல் பக்கங்களாக கசக்கி எறிவதுண்டு. எவ்வளவு முயற்சித்தாலும் நினைப்பதை அடைய முடியாது. அப்போது பூஜாடியைப் பார்த்தபோது அதில் மஞ்சள் ரோஜா இல்லை. அதுதான் காரணமென்று புரிந்து கொண்டேன். ரோஜா இல்லாத பூஜாடி. உடனே மலருக்காகக் கத்துவேன். மெர்ஸிடஸ் மஞ்சள் ரோஜாவுடன் வருவாள். கண்ணாடிக்குள் வைத்ததும் எழுத்தும் தானே இடைவிடாமல் ஓடத் தொடங்கி இருக்கும்.
0 மஞ்சள் உங்கள் அதிர்ஷ்ட நிறமா.
பூவின் நிறம்தான் அது. தங்க ரோஜா அல்ல. தங்கத்தின் நிறமும் அல்ல.
0 உங்களுக்குப் பிடிக்காதது நிறைய உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தருணத்தில் கூறினீர்கள். நிர்வாணத்தில் புகை பிடிப்பது துரதிர்ஷ்டம் விளைவிக்காது. ஆனால் நிர்வாணமாய் நடந்து கொண்டே புகை பிடித்தால் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்புவதாக கூறினீர்கள்.
மட்டுமல்ல. நிர்வாணமாய் வெறும் பூட்ஸ் அணிந்து ஊர் சுற்றுவதும். வெறும் காலுறைகளுடன் கலவியில் ஈடுபடுவதும் மிகவும் ஆபத்தானது. அது சரியாக இயலாது.
.
0 வேறென்ன. ஊனமடைந்த மனிதர்கள் ஊனங்களை இசைக்கருவிகள் கொண்டு மாற்றும் போது இந்த எண்ணம் தோன்றும்.
கையில்லாத மனிதர்கள் கால்களை வைத்து தோல்கருவிகளை இசைப்பதும் காதுகள் மூலம் புல்லாங்குழல் வாசிப்பதும் கண்தெரியாத இசைஞர்கள் இசையால் துரதிர்ஷ்ட வசமான பாதையில் இழுத்துச் செல்வதும்... வார்த்தைகள் சில சமிக்ஞைகளைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். எழுத்தில் உபயோகிக்காத வார்த்தைகளைக் கேட்கிறேன். வரையறை, அளவீடு, ஒப்பான, சமதளத்தில், கண்ணோட்டத்தில், போன்ற வார்த்தைகள் சமூகார்த்தமான குணங்களின் பிதற்றல்.
0 அணுகுமுறை என்ற வார்த்தையும் உண்டல்லவா. ஆம்.
ப அந்த மாதிரி நபர்களும் உண்டா . அந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துவோரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.
0 இடங்கள் இந்த மாதிரி நிகழ்வை உங்களிடம் ஏற்படுத்துமா.
ஆம். இடங்களே துரதிர்ஷ்டங்களைத் தாங்கி நிற்பதாகக் கூறவில்லை. அவ்விடங்களில் சில நேரங்களில் ஏற்படும் முன்னுணர்வுகள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரியாது. இது எனக்கு கடாகஸ்ஸில் ஏற்பட்டது. அங்கே திரும்பிச் சென்றால் இறந்து விடுவேன் என்று தெரியும்.
0 கோடை தோறும் செல்வீர்களே, அங்கு என்னவாயிற்று.
ங்கள்
ஓட்டலில் தங்கியிருந்தபோது மேற்குக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. மயிர்க் கூச்செறியும் அளவு வலுத்து வீசியது. நானும் மெர்ஸிடஸ்ஸும் மூன்று நாட்கள் அறையை விட்டு வெளிவர முடியாமல் கிடந்தோம். அப்போது திடீரென்று உயிர்போகும் ஆபத்தில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றியது. அப்போதே தெரியும் நான் கடாகஸ்ஸை விட்டு ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் அங்கு செல்லவே மாட்டேன் என்று. காற்று நின்றபோது அங்குள்ள குறுகிய சாலை மூலம் ஜெரோனா வந்து சேர்ந்தேன். அப்பொழுது தான் நிம்மதி மூச்சு விட ஆரம்பித்தேன். அற்புதமான வழியில் தப்பி வந்தேன்.
0 முன்னுணர்வுகளை எப்படி விளக்குவீர்கள்.
உருவெளித் தோற்றங்களில் வரும் சிறு சிறு அதிர்வுகள் மூலம் தெரிந்து விடும் என்ன நடக்கப் போகிறதென்று..
1958 என்று நினைவிருக்கிறது. கடாகஸில் என்னுடன் இருந்தபோது திடீரென உணர்ந்தீர்கள். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென்று. அசம்பாவிதமும் நடந்தது. மூக்குக்கு முன்னே ஜனாதிபதி மாளிகை மீது யாரும் எதிர்பாராதபடி விமானங்கள் குண்டு பொழிந்தன. இந்த நாள் வரை என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதற்கு எப்படி உங்களுக்கு இந்த முன்னுணர்வு ஏற்பட்டது.
0 உங்களுடைய முன்னுணர்வுகள் எல்லாமே தெளிவாக இருக்குமா.
சற்றுமங்கலாகவே இருக்கும். ஆனால் ஏதாவது தெளிவான விஷயத்தை உள்ளடக்கியிருக்கும் அன்று ஒரு நாள் பார்ஸிலோனாவில் புடஸ்களுக்கு லேஸ் மாட்டிக் கொண்டிருந்தபோது மெக்ஸிகோவில் என் வீட்டில் ஏதோ ஒன்று நடந்திருப்பதாக உணர்ந்தேன். துரதிர்ஷ்ட வசமானதாக இருக்கும் என்று அவசியமில்லை. ஆனால் ஏதோ நடந்திருப்பதாக முன்னுணர்வு. மனம் கேட்கவில்லை. ஏனெனில் மகன் ரொட்ரிகோ அன்று அகபுல்கோவுக்கு காரில் செல்வதாக இருந்தான். மெர்ஸிடஸ்ஸை உடனே போன் செய்யச் சொன்னேன். உண்மையிலேயே என் பூட்ஸ் லேஸைக் கட்டும் அதே தருணத்தில் வீட்டில் ஒரு சம்பவம். பணிப்பெண் அக்கணத்தில் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள். நிம்மதி கலந்த பெருமூச்சு விட்டேன். முன்னுணர்வு மகனைப் பற்றியதல்ல என்று புரிந்து கொண்டேன்.
0 உள்ளுணர்வும் முன்னுணர்வும் அதிகம் உதவியதாகக் கூறுகிறீர்கள். வாழ்வின் முக்கியமான தீர்மானங்களை அவை மூலமே தீர்மானிக்கிறீர்களா.
முக்கியமானதை மட்டுமல்ல. எல்லாவற்றையுமே அவ்வாறே தீர்மானிக்கிறேன்,
0 உண்மையாகவா.
எல்லாவற்றையும்தான். எல்லா நாளும் எல்லாப் பொழுதும் எதைச் செய்தாலும் உள்ளுணர்வின் உறுத்தலாலேயே செய்கிறேன்.
0 முதன் முதலில் ஏற்பட்ட பெண் ஸ்பரிசத்தை நினைவுணர முடியுமா.
என்னைக் கவர்ந்த பெண்மணி ஐந்து வயதாக இருந்தபோது டீச்சர். அது வேறு வகையான ஈர்ப்பு. முதன்முதலில் உடம்பில் ஸ்பரிசத்தை ஏற்படுத்தியது வீட்டில் வேலை பார்த்த யுவதி. ஓரிரவு பக்கத்து வீட்டில்' இசை ஒலிக்க வெகுளியாக தோட்டத்துக்கு என்னை நடனமாட அழைத்துச் சென்றாள். தோள்கள் என்னுடன் உரச எனக்கு அப்போது ஆறு வயதிருக்கும். உணர்வுகளில் பற்றிக் கொண்ட வசீகரத்திலிருந்து இதுநாள்வரை மீள முடியவில்லை. அவ்வளவு கனத்தையும் அந்த உணர்வு வேகத்தின் ஆளுமையையும் மீண்டும் அடைந்ததே இல்லை.
0 இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் கவர்ந்தவர் யார்.
மனைவி மெர்ஸிடஸ்.
0 எழுத்தை விளக்க ஒரே உங்கள் வரி.
ஆதிக்கத் தனிமைவாசத்தின் கவிதை.
தமிழில் - பால் பிரகாஷ்
281