Saturday, 10 October 2015

-Vicente Huidobro-Alexander Blok --Idea Vilarino --Eca De Queiroz---Gevorg Emin- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



There I wait for the Beautiful Lady
Where the icon lamps spill their red light.

................................


But the face that regards me is only
An Image , a vision of Her.

......................................

On the cornices high up above me
Smiles, visions and fairy -tales glide.

...................................

Though I hear neither sighing nor speaking ,
I believe: Dearest one, Thou art here .

-Alexander Blok-





பிரகாசமாய் ஒளிர்ந்திருக்கும் ,அந்த வெறுமை இரவுகளில்,
சந்தடியற்ற நதியை பாலங்கள் குனிந்து பார்க்கின்றன,
அவர்கள் ஏறக்குறைய அந்நியர்களாகவே சந்தித்தனர்,
தங்களுக்கிடையே வாஞ்சையின் தடயம் ஏதுமற்றிருந்தனர்.


அவர்கள் ஒவ்வொருவரும் இளமையும் - வனப்புமாக ஒளிவீசுகின்றனர்,
ஆனால், நிறைந்த ஏதுமின்மையால் பெயர்க்கப்பட்டு
அவள் தன்னுள் உறைக் குளிர்மையை பதுக்கியிருக்கிறாள்,
விந்தையாகவும், வினோதமாகவும், பழக்கி வசப்படுத்தாத மூர்க்க எழிலின் பின்னால்.

என்றுமே தனது உண்ர்வினில் கவனம் கொள்ள
அவனால் இயலவில்லை, முற்றிலும் நேசிக்கவே இயலவில்லை.
அவனுள் உறையும் விலங்கை கிளர்ந்தெழச் செய்விக்க
அவள் நேசித்தாள்,
பின் அந்த விலங்கை அடிமையுறலில் தக்க வைக்கிறாள்.

அந்நியன் , அவன் அவளது அந்நியக் கரத்தை அழுத்துகிறான்
வடக்கு திசை ,தணிவடைய உதவ ஆர்வத்துடனிருக்கிறது
இனித்திருக்கும் அவ்வித வலி , மற்றும் மென்- சோர்வு,
இரவைப் பகலாக மாற்றத் துரிதப்படுகிறது.

அவ்வண்ணம்; அந்த ஒளிர் இரவினது பாழ்நிலம்,
இரவின் மெய்தழுவலுகளுக்கு துரிதப்படவில்லை,
ஊழ்வழி உந்துதலில் பேரவாவுறும் அவர்களது ஆன்மா,
.மேல்நோக்கி வெறிக்கிறது
வானத்தின் வெளிர் நீல வெளிகளினுடே.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




நெடுநாட்களுக்கு முன் மறந்துபோன கல்லறைகளின் மீது நாணல் தழைத்துள்ளது
கடந்தகாலத்தை நாம் மறந்தோம்..... வார்த்தைகளையும் நாம் மறந்தோம்......
மெளனம் எங்கெங்கும் தனது அசைவாடலை வைத்திருக்கிறது.....

பிரிந்தோரின் மாய்வு முற்றிலுமாய் அழிவுற,
இப்போது நீ உயிர்த்திருக்கிறாயா இல்லையா?
நீ என்றைக்குமாக ஒளிர்ந்திருக்கிறாயா இல்லையா?
உனது நெஞ்சம் ஆண்டின் இளவேனிலாய் இல்லையா?


இங்கு மட்டுமே என்னால் சுவாசிக்க கூடும்,
இந்தக் கல்லறைகளின் இடையே, சில தருணங்களில்
நான் அந்த மோக கானங்களை இசைப்பேன்
அது உன்னுடனான சந்தித்தலில் சித்திக்கலாம்...........

எனது கிளர்வற்ற மெழுகான முகத்தின் மீது
இவ்விடமற்ற வாழ்வை மென் அலையாக காற்றில் மிதக்க வைக்கிறாய்
இந்தக் கல்லறைகளின் மீது தழைத்திருக்கும் நாணலாய்.........

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





அவனுக்கு, நீ எளிதில் இணங்கும் மலர்,’
உனக்கு, அவன் ஒரு விலங்கு, அன்றிக் கூடுதலில்லை.
ஒரு இன்முறுவலால் அவனை மயக்கி வசியப்படுத்தாதே,
உனது கதவைத் தட்டி அணுகிவரும் அவனுக்கு பதிலளிக்காதே.


வலிந்து அவன் உள்ளே நுழைந்தால்,
கதவின் பின்புறமாக் நழுவிக் காத்திரு. .
நட்பு இழையா அந்த வாசத்தில் இன்னமும் நேரம் மிச்சமுள்ளது,
சுவர்களை சுடர்விடச் செய்வதற்கு.

மற்றும் வெட்கத்தின் பொழுது நெருங்கிவரும் போது,
பின்னர் திரும்பிச் சென்று சுவரைப் பார்த்திரு,
கறுமையான உனது தலையங்கியின் முடிச்சை தளர்த்து ,
ஒரு ஊசியை அந்தப் பந்தில் ஒளித்து வை ,

கூரியநுனி முரட்டு தசையின் மூர்கத்தையும்,
நாடியறியும் உள்ளங்கைகளை அது ஊடுருவட்டும்.
வலியிலும் மற்றும் மாளாத்துயரிலும் அலறும் போது,
அவனது கரத்தில் நீ கட்டுக்கடங்காது திமிறுகிறாய்.

கணத்தால் குருடாக அவனை அனுமதி ,
புகைந்தெழும் பேருணர்ச்சியின் உச்சத்தில்
அவனது தோளின் மீது தழும்பாக பதிந்திருக்கும்
உனது மூர்க்கவெறிக் கடியை மறந்துவிடு.

Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



அந்நகரத்தை உன்னால் நினைவுகூற முடிகிறதா
பெரும் தொலைவில் நீல பனி மூட்டத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது?
பேசாமையில் , நாமிருவரும் உடனிருக்கிறோம்,
நடையிட்டோம் .......அந்தப் பிழையுற்றப் பாதையில்.
நடையிட்டோம்;
பின்புறம் புகைந்த- தோற்றமுறும் சுவர்களின் மீது
நிலா உச்சியுற எழுகிறது
ஒருவேளை நமது வழிகளும் பிழையுற்றதாய் இருக்கக் கூடும் -
நான் திரும்பிப் பார்க்கவும் எத்தனிக்கவில்லை.
ஒருவேளை நமது நேசமும் மருள்- தோற்றமாயிருக்கலாம்,
ஒருவேளை நமது வழியும் வஞ்சனை- ஈர்ப்பாக இருக்கலாம்
இருப்பினும்,அந்நகரின் நீல-மூட்டம்,
என்னைக் கிளர்த்தியது- அதனில் நான் உறுதியாயிருந்தேன்........
அந்நகரத்தை உன்னால் நினைவுகூற முடிகிறதா
பெரும் தொலைவில் நீல பனி மூட்டத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது?
யோசனையற்ற மோனத்தில் , நாமிருவருமாக
அந்தப் பிழையுற்றப் பாதையில் நடையிட்டோம் .....


-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


கனவு பாடத் துவங்கியது, பூ விரியத் துவங்கியது,
நாள் தோய்வடைந்து நலியத் துவங்கியது, விரைவாய் அணுகியது அந்தி ஒளி ,
நான் சாளரத்தைத் திறந்தேன் , லில்லாக் பெருங்களிப்புறுகிறது.
இதுவொரு இளவேனிற்ப் பொழுதில் சம்பவிக்கிறது,
நாளொன்றின் அழிவில்.
பூக்கள் தமது சுகந்தத்தைச் சுவாசிக்கின்றன, நிழல்கள் வீசியெறியப்பட்டிருக்கின்றன
உவகையில் ஆரவாரிக்கும் மேலங்கிகள் கல்லின் முகட்டின் மீது கவின் -வார்ப்பாகிறது.


எனது ஆன்மா நீள்- அவாவுற்றுக் களிக்கிறது, எனது நெஞ்சமோ வாதையடைகிறது.
நான் சாளரத்தை திறந்தேன் , அது எந்நேரம் வந்ததென நான் அறியேன்,
எனது முகம் ஒரு இருத்தலின் முன்னிலையை உணர்ந்தது,- அது எக்கணம் வந்ததென நான் அறியேன்;
அவள் தாழ்வாரத்தின் மேலெழுகிறாள், பாடிய வண்ணம் எரிதழலால் போர்த்தப்பட்டு.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

இன்றிரவு , ஊதா வானிலிருந்து பால்வெளி தருக்களின் மீது சரிந்து விழுகிறது,
அலையும் பூணைகள், மஞ்சள் வண்ண தீபங்கள் , ரொட்டியும் வைனும்.
அனைத்துமே ஒரு இரகசியத்தை சிக்க வைக்கிறது
அந்த ஒளிப் பனிமூட்டத்தில் சாலைகள் இறுதியுறுவதில்லை.


மெளன சிலந்தியாக அது வினையாற்றுகிறது
பாய்மரப்படகுகள் இரவினுள் அசைவது போல்
எனது நெஞ்சம் கனிந்து வளர்வதை நிறுத்தவில்லை
தூசு மற்றும் இலைகளின் மீது பறந்தெழுகிறது.

புகைசூழ் பூமியை விரைவில் பனிமூடும்
சாளரத்தின் வழியே அதன் அச்சமூட்டும் அகோரமான வெண்மையை நான் தரிசிப்பேன்
புறாவின் சிறகுகள் கண்ணாடி சட்டகத்தை ஒருவேளை தீண்டக்கூடும்.

பனிக்காலம் அபரிமிதமான அழகுபெறும்
முன் அறிந்திராத நினது கேசம்
எனது தலையணையின் பெரும் -பாழினை முடும் தருணம்.

-Fayad Jamis-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் எழுதும் போதும் அன்றி நீ கல்லறையிலிருந்து
நினது இளமை எழிலை எனக்கு அனுப்பும் போதும் ,
இன்னமும்- நான் கடந்த ஆண்டின் ரோஜாக்களின் மாலையச் சூட்டுவேன்
வாஞ்சையுடன் நான் வசப்படுத்திய நினது பேயமையுருவிற்கு.


ஒருவேளை நான் மாண்டால்,
பின்னர் காற்று வழியேகும் துரிதப் பறவைகள்
அப்பேயுருவை விரட்டிவிடும்
நீயும் கூட அதன் பின்னர் ஏடுகளைத் திருப்புவாய்;
”இது கடவுளின் குழவியாய் இருந்தது “ என நீ மொழிவாய்.

-Alexander Blok-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





கவிதை ஒரு திறவுகோலைப் போலிருக்கட்டும்
ஆயிரம் கதவுகளைத் திறப்பதாகவும்.
இலையொன்று சரிந்து வீழ, சிரம் மீது ஏதோவொன்று பறக்கிறது;
விழிகளால் மிகுதியாய்ப் பார்வையுறும் யாவையும் உருவாக்கட்டும்,
செவிசாய்ப்போனின் ஆன்மா அதிர்ந்து நடுங்கட்டும் .
புத்துலகங்களைப் புனைந்துருவாக்குங்கள்;
உங்களது பதங்களை உன்னித்துக் கவனியுங்கள்,
பெயரடை , உயிர்ப்பை உருவாக்காவிடில் கொல்லும்.
பதட்டத்தின் நாள- யுகத்தில் நாம் ஜீவிக்கிறோம்.
தசை தொங்குகிறது,
அது அருங்காட்சியகத்தின் நினைவை ஒத்திருக்கிறது,
ஆனால் நாம் அதற்கான வலிமைக் குன்றாதிருக்கிறோம்,
உண்மை வீரியம்
சிரத்தில் வசிக்கிறது.
ரோஜாவைப் படாதிரு, ஓ கவிஞனே!
அதை கவிதையில் அலர்த்து.
சூரியனுக்குக் கீழ் யாவும்
நமக்கெனவே உயிர்த்திருக்கின்றன.
கவிஞன் ஒரு சிறு-தெய்வம்.
-Vicente Huidobro-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
* (Thanks a Lot Vasu Devan for sharing the most treasured work of
Emir Rodriguez Monegal.)
Shanmugam Subramaniam

இன்றிரவு , ஊதா வானிலிருந்து பால்வெளி தருக்களின் மீது சரிந்து விழுகிறது,
அலையும் பூணைகள், மஞ்சள் வண்ண தீபங்கள் , ரொட்டியும் வைனும்.
அனைத்துமே ஒரு இரகசியத்தை சிக்க வைக்கிறது
அந்த ஒளிப் பனிமூட்டத்தில் சாலைகள் இறுதியுறுவதில்லை.


மெளன சிலந்தியாக அது வினையாற்றுகிறது
பாய்மரப்படகுகள் இரவினுள் அசைவது போல்
எனது நெஞ்சம் கனிந்து வளர்வதை நிறுத்தவில்லை
தூசு மற்றும் இலைகளின் மீது பறந்தெழுகிறது.

புகைசூழ் பூமியை விரைவில் பனிமூடும்
சாளரத்தின் வழியே அதன் அச்சமூட்டும் அகோரமான வெண்மையை நான் தரிசிப்பேன்
புறாவின் சிறகுகள் கண்ணாடி சட்டகத்தை ஒருவேளை தீண்டக்கூடும்.

பனிக்காலம் அபரிமிதமான அழகுபெறும்
முன் அறிந்திராத நினது கேசம்
எனது தலையணையின் பெரும் -பாழினை முடும் தருணம்.

-Fayad Jamis-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







கவிதை ஒரு திறவுகோலைப் போலிருக்கட்டும்
ஆயிரம் கதவுகளைத் திறப்பதாகவும்.
இலையொன்று சரிந்து வீழ, சிரம் மீது ஏதோவொன்று பறக்கிறது;
விழிகளால் மிகுதியாய்ப் பார்வையுறும் யாவையும் உருவாக்கட்டும்,
செவிசாய்ப்போனின் ஆன்மா அதிர்ந்து நடுங்கட்டும் .


புத்துலகங்களைப் புனைந்துருவாக்குங்கள்;
உங்களது பதங்களை உன்னித்துக் கவனியுங்கள்,
பெயரடை , உயிர்ப்பை உருவாக்காவிடில் கொல்லும்.

பதட்டத்தின் நாள- யுகத்தில் நாம் ஜீவிக்கிறோம்.
தசை தொங்குகிறது,
அது அருங்காட்சியகத்தின் நினைவை ஒத்திருக்கிறது,
ஆனால் நாம் அதற்கான வலிமைக் குன்றாதிருக்கிறோம்,
உண்மை வீரியம்
சிரத்தில் வசிக்கிறது.

ரோஜாவைப் படாதிரு, ஓ கவிஞனே!
அதை கவிதையில் அலர்த்து.

சூரியனுக்குக் கீழ் யாவும்
நமக்கெனவே உயிர்த்திருக்கின்றன.

கவிஞன் ஒரு சிறு-தெய்வம்.

-Vicente Huidobro-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

* (Thanks a Lot Vasu Devan for sharing the most treasured work of
Emir Rodriguez Monegal.)





நான் எழுதும் போதும் அன்றி நீ கல்லறையிலிருந்து
நினது இளமை எழிலை எனக்கு அனுப்பும் போதும் ,
இன்னமும்- நான் கடந்த ஆண்டின் ரோஜாக்களின் மாலையச் சூட்டுவேன்
வாஞ்சையுடன் நான் வசப்படுத்திய நினது பேயமையுருவிற்கு.


ஒருவேளை நான் மாண்டால்,
பின்னர் காற்று வழியேகும் துரிதப் பறவைகள்
அப்பேயுருவை விரட்டிவிடும்
நீயும் கூட அதன் பின்னர் ஏடுகளைத் திருப்புவாய்;
”இது கடவுளின் குழவியாய் இருந்தது “ என நீ மொழிவாய்.

-Alexander Blok-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



தனித்தே இரவுக்கும் மாய்தலுக்கும் இடையே தனித்தே
நிலைபேற்றின் நெஞ்சினூடே பயணிக்கிறேன்
பெரும்பாழின் மையத்தில் கனி உண்கிறேன்

இரவு மாய்தல்
மரித்தோர் எல்லையின்மையில் நடப்படுகிறார்கள்
பூமி விடைபெறுகிறது பூமி திரும்புகிறது


தனித்தே என்முன் ஒரு தாரகையுடன்
தனித்தே அகத்திலொரு மாபாடலுடன் மற்றும்
என் முன் தாரகை இன்றி

இரவு மற்றும் மாய்தல்
இரவு மற்றும் மாய்தல்
இரவின் மாய்தல் சுழல்கிறது மாய்வினூடே

எத்த்னையோ தூரம் வெகுதூரமாகி
இவ்வுலகு காற்றில் பறந்து தொலைகிறது
தொலைந்த நிலத்திற்கான
தன் எல்லையில்லா தேடலில் நாயொன்று உளையிடுகிறது.

-Vicente Huidobro-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








But that You want to see
Is not you, and will never be.
No one else will ever do
The special things that wait
inside you.


-Benjamin Hoff -

(The Tao of Pooh
and the
Te of Piglet)





தனிமையில் இன்று நீ வழியிழந்தாய்,
உன்னில் ஒளிந்துள்ள மாயவனப்பை நான் விழியுற்றதில்லை,
உயரே அங்கு , ஓங்கியெழுந்த உனது மலையுச்சிக்கு மேல்,
சீரற்றுத் துண்டுபட்ட வனம் நீட்சியுற்று அப்பால் பிரிகிறது.


வனம் , சுற்றிலும் இறுகி வளைவுறுகிறது,
அந்த மலைகளின் வழித்தடங்கள் பார்வைக்குத் தப்பின,
அறியாதவைகளுடன் இயைவதிலிருந்து தடுக்கப்பட்டு
உனது வெளிர் நீலத்துடன் அலர்கிறது.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





அந்திச் செவ்வண்ணத்துள் நீ சென்றுவிட்டாய்,
வட்டங்களுக்குள் அந்தமற்று
காலடிகளின் மெலிந்த எதிரொலியை நான் செவியுற்றிருக்கிறேன்,
நான் நின்று சமைந்த இடத்திலிருந்து நீள்-தூரத்தில்.


நீ அருகிருக்கிறாயா , அன்றி நீ வழியிழந்திருக்கிறாயா
எங்கோ தொலைதூர உயரங்களில் விடுபட்டுவிட்டாயா?
இதிலும் ஒரு கூடல் வாய்க்குமா,
எதிரொலிக்கச் செய்விக்கும் மெளனம் ?

உரத்து, உரத்தபடியே உள்ளது காலடியோசை ,
நான் நின்று சமைந்த மெளனத்தில்
தீச்சுவாலையால் வழித்து விழுங்கப்பட,
நீ வட்டங்களை முழுமை செய்கிறாயா,
அந்தமற்ற வட்டங்களில்?

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பின்னர் நான் பைன் தருக்கள்
நான் வெம்மணல்
ஒரு மென் தென்றல்
வானில் அலைவுறும் ஒரு சிறுபறவை
பின்னர் நான் பொங்கியெழும் இரவுநேர ஆழி
பின்னர் நான் இரவு
பின்னர் அதுவல்ல நான்.


-Idea Vilarino -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








நீ வந்தாய் நின்னை நான் மார்போடு இறுகத் தழுவினேன்,
நம்மைச் சுற்றிலும் , இருள்கவிந்த இரவு ,
நமது கூட்டில் வாரிழை தோரணங்கள் அணியாகவில்லை,
நமது துயிலிடத்திற்கு பூத்தையல் விரிப்புகள் இல்லை,
நமது படுக்கை இறுகியப் பளிங்காய் நெகிழ்வற்றிருக்கிறது,..
தொலைவுற்றுப் புலனாகா புலத்தில் ,வருடி மீட்டிய கிடார்-
நரம்பினை மிழற்றிச் சோகத்தில் விதிர்விதிர்க்கிறது...
நின்னை நான் மறக்கவில்லை நீயே காண்பாய்!
நேசத் தீப்பிழப்பின் கீழ்,
குளுமையில் நெகிழா பாறைக் கதகதக்கிறது.


-Eca De Queiroz--
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

* (Thanks Rosélia Santos for sending me Eca De Queiroz. book.
Mere Thanks cannot suffice my gratitude My Dear Friend.

This one is for our friendship and for your support & warmth..)




இத்தனை வருடங்களாக நாமிருவரும் கூடித் திரிந்தோம்,
கோணலாக வளைந்தோடும் குறுக்குச் சந்தில்,
ஒவ்வொன்றைப் பற்றியும் பேசிப் பகிர்ந்தோம்.
ஒவ்வொன்றும் அன்றி நீயும் மற்றும் நானும்.


உள்ளபடியே நீ என்னை நேசிப்பதும்,
நானும்கூட உன்னை அதே நிமித்தமாய் நேசிப்பதும்
யாவருமே அறிந்ததே- ஆயினும் நாம்
ஒருவருக்கொருவர் இதைச் சொல்லவும் துணியாதிருந்தோம்.

-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



இன்றிரவு நாமிருவரும் ஒன்றாக விருந்து கொள்வோம்,
எனது இளம் நேசத்தவளே,
என்னைக் கைப்பற்றியவளே ,
எனது நெஞ்சின் உவகையே!
கறையடையா வெண்மையின்
ஒருமேசைத் துணியை விரி,
நினது தளிர்மையின் சிறுகிளையை
அதன்மீது நாம் பொருத்துவோம்
மற்றும் சுவையேறிப் பழுத்தக் கனியை
அந்தமற்ற எனது வாதைகளின்
விலைமதிப்பற்ற தட்டில்
நினது இறைமையின் நம்பிக்கையையும்,
எனது அனுபவத்தின் கசந்த வைனையும் நாம் ஊற்றுவோம்;
நினது பேருணர்ச்சியின் இளம் வைனும்
கனன்றுத் தகிக்கும் எனது வேட்கையின்
குருதிச் செந்நிற மாதுளையுடன்,
வா,
இன்றிரவு நாமிருவரும் ஒன்றாக விருந்து கொள்வோம்,
எனது பகட்டில்லா எளிய அறையில்,
நமது நேசத்தின் சுடரொளியுடன்!


-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





வாலிபன் ஒருவன் முதன்முறைப் பேரானந்தத்தைச் சுவைக்கிறான்,

தனது நேச -அணங்குடன் முத்தத்தைப் பகிரும் தருணம்,

அந்த முத்தம் நீங்கலாக இவ்வுலகில் வேறேதும் இருப்பதாய் நினைக்கவில்லை.

எக்காலத்திலும் அன்றி அதற்கு முன்பேயும் ஜீவித்திருக்கவில்லை..


அவனுக்குத் தோன்றுகிறது, மானுடர் யாவரும், இளையோரும் முதியோரும் ,

ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளவே விரைகின்றனர்,

ஒளிவிடங்களில் நேசம் அனைத்தையுமே பொன்னாக ரசவாதமாக்குகிறது,

அன்றி சங்கமிக்கும் புலத்திலிருந்து சாவதானமான திரும்புதலும்.


அவ்விதம் நான் எனது கரத்தில் முதல் நூலுடனிருக்க ,

இப்பொழுது சாலை நெடுகிலுமாக நடையிடுகிறேன் - ஒரு பூரணக் கவியாய் ,

அது அதீத -வசீகரத்தை வசப்படுத்திக் கொள்ளக் கற்பனை செய்கிறேன்

இப்புவியாவும் அதை வாசித்து அறியவே ஏங்க வேண்டும்.


-Gevorg Emin-

(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)