Tuesday 27 October 2015

-Thomas Wolfe--Mikhail Lermontov--Vasily Zhukovsky--Evgeny Vinokurov--Andrey Bely--Vasily Zhukovsky--Nikolay Klyuev--Zinaida Gippius --Ivan Bunin--Innokenty Annensky--Gavril Derzhavin-Apollon Grigoriev--Fet- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



The whole conviction of my life
now rests upon the belief that loneliness,
far from being a rare and curious phenomenon,
is the central and
inevitable fact of human existence...........


-Thomas Wolfe-





மஞ்சள்மயமாகும் சோளக் காடு வளைந்த்தாடும் தருணம்,
சில்லிட்டிருக்கும் வனம் மென்காற்றில் சலசலக்கிறது,
பூந்தோட்டத்தில் சிவந்திருக்கும் ப்ளம், பச்சைய இலையின்
மதுர நிழலின் கீழ் மறைந்திருக்கிறது;


ரோஜா வர்ண அந்தி - சாயும் தருணம்,
அன்றி
புலர்வின் பொன் பொழுதில் பள்ளத்தாக்கின் வெள்ளி-மேனி லில்லியின் மீது ,
மணம்வீசும் பனித்துளி தெளிக்க்ப்பட்டிருக்கிறது.
ஒரு புதரின் கீழிருந்து நட்பார்ந்த வாழ்த்துக்களுடன்
என்னைக் கண்டு தலையசைக்கிறது

ஒடுங்கிக் குறுகியப் பள்ளத்தாக்கில்
குளிர்ந்த நீருற்று நடமிட்டு வீழ்கிறது,
நிச்சயமற்ற கனவினுள் எண்ணங்களைத் தணிவிக்கிறது,
தான் வேகமாய் விடைபெறும் அமைதியான நிலத்தின் புதிர்மையான வீரகாவியத்தை என்னிடம் முணுமுணுக்கிறது

பின்னர் எனது ஆன்மாவின் பதற்றம் அசைவிழக்கிறது,
புருவத்தில் ஆழ்ந்திருக்கும் சுருக்கங்கள் மிருதுவாகிறது,
நான்
பூமியின் மீதுறும் உவகை யாவையும் கிரகிக்கிறேன்,
வானுலகில் ஆண்டவரைக் காண்கிறேன்.

-Mikhail Lermontov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)





ஏற்கனவே களைத்துவிட்ட நாள் செந்நிற நீரில் அமிழ்கிறது,
நீலவானம் இருளுற்று வளர்கிறது;
குளிர்ந்த நிழல்கள் பரவுகிறது,
அமைதியான இரவு கட்புலனாகா வான்- பாதையில் நகரத் துவங்குகிறது,
முன்னே ஹெஸ்பெரஸ் தனது அழகியத் தாரகையுடன் பறக்கிறான்,


ஓ வானுலகத்தவனே;
உனது மாய முகத்திரையுடன் எம்மிடம் இறங்கி வா,
குணப்படுத்தும் மறதியின் கண்ணாடிச் சிமிழுடன் வா,
சோகம் கவிந்த ஆன்மாவிற்கு இனிமையூட்டும்
உனது இருத்தல், மற்றும்
தாலாட்டித் தணிக்கும் உனது பாடல்களால் அமைதிசெய்,
ஒரு தாய் மழலையை அமைதி செய்வதுபோல்.

-Vasily Zhukovsky-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





இரவு இரங்கி ஓலமிடுகிறது, சுழல்கிறது,
பக்கங்கள் யாவிலும் எக்காளமிட்டு முழங்குகிறது,
ஒவ்வொரு மரித்த மானுடனும் அவன் வீழும் தருணத்தில்,
வாழ்வை வெண்-பனிச்சூறையாய் ஞாபகம் கொள்கிறான்,
அவனது முகத்தில் சீற்றத்துடன் வலிதாய் அடிக்கிறது.


ஆயினும் காலையில் யாவுமே அசைவற்று மோனமடைகிறது
பூவுலகு பண்டைய நீலத்தில் தன்னை வெளிப்படுத்தி அருள்கிறது,
நான் மார்பளவுள்ள அரண் மேலேறுகிறேன்,
மீண்டும் ஒருமுறை –
பதினெட்டாவது முறையாக, இளவேனிலை வியக்கிறேன்.

ஈரம்கவ்விய குன்றின் சரிவுகள் செந்நிறமாகியுள்ளது,
இளவேனிலின் காற்று பித்துற்று வீசுகிறது,
மரித்தவனின் அகன்ற விழிகளின் நிர்வானத்தில் மட்டுமே
பனிக்காலம் நித்தியமாய் உறைந்திருக்கிறது.

-Evgeny Vinokurov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



இலைகளின் மீது பனித்துளி தகதகக்கிறது,
குளத்தின் மேல் ஞாயிறு பளபளக்கிறது,
கன்னத்தில் அழகு மச்சத்துடன் எழில்மிளிரும் ஒரு யுவதி,
ஒளிவண்ண ரோஜாவைப் போல் அமர்ந்திருக்கிறாள்.


அக்காட்சி நெஞ்சை மகிழ்விக்கிறது ,
அரை -தெள்ளிய வெந்நிற வாரிழைகளை அணிந்திருக்கிறாள்,
தந்தியிசை கருவியின் ஓசையில் கனவுறுகிறாள்........
கதிரோனது பொன்-கீற்றில் அவள் மிளிர்கிறாள்.

சிற்பங்கள் பொறிக்கப்பட்ட அறைகளின் உச்சிமுகடு
ஹாப் படரிலைக் கொடியுடன் பின்னிப் பிணைந்துள்ளது,
சுவர்கள் அதிர்ஷ்ட வசந்தத்தின் வருடலின் வசமிருக்கிறது .
ஒரு நேர்த்தியுரு இளம் கோமான் அவள்முன் பணிகிறான-

வலிந்து பழகிய பாத்திரமாய்,
சாம்பல்நிற சுருள்கேச பொய்ச்- சிகையில் ,
வான்நீல பட்டு உள்ளாடையுடன்,
கரத்தில் கருஞ்சிவப்பு ரோஜாவுடன் இருக்கிறான் .

நானுன்னை ஆழ்ந்து நேசிக்கிறேன் , அத்தைமகளே-
இம்மலரை ஏற்றுக்கொள்.........

அவன் தந்தியிசைக் கருவியின் ஒசைக்கு நகைக்கிறான்
தன் அத்தைமகளை மெய்தழுவ விழைகிறான்,

இக்கணம் வெளிரிய மூடுபனி,
பனித்துளி படர்ந்த பசும்புல் வெளியில் ஊர்கிறது,
ஊதா மூட்டத்தின் அலைகளின் மீது பொன்நிலா மிதக்கிறது.

-Andrey Bely-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





கடந்து செல்லும் நைட்டிங்கேல் பறவையாய்
இளமை என்னருகே சிறகடித்தப் போனது,
துர்-வானிலையில் எழும் அலை போல்
உவகை கடந்தகாலத்தை எதிரொலித்தது.


பொன்னான நாட்கள் இங்கிருந்திருக்கின்றன,
ஆனால் அவை மங்கியழிந்தன,
இளமையின் திடம் என் யாக்கையுடன் கூடித் தூர்ந்தது.

துயர்நிறைச் சிந்தனைகள் என் நெஞ்சில் குருதியை உறைவிக்கிறது.;
எதை நான் எனது ஆன்மாவென நேசித்தேனோ-
அதுவும்கூட என்னிடம் பொய்மையாய் விணையாற்றியது.

காற்று இளைஞனை புல்லின் இதழாய் அசைவாட்டுகிறது;
பனிக்காலம் அவனது முகத்தை குளிர்விக்கிறது,
ஞாயிறு பொசுக்குகிறது.

என்னை நான் நைந்த- கந்தலாக்கியிருக்கிறேன்
என் வசமிருப்பவை யாவும் மிகத் துரிதமாயிருக்கிறது.............
தோள்மீதுறும் நீல கோட் சரிந்துவிட்டது,
நேசமும் -உவகையுமின்றி பூவுலகெங்கிலுமாய் இலக்கற்றுத் திரிகிறேன்.
துரதிர்ஷ்டத்துடனான தோழமையிலிருந்து பிரிந்தால்,
நான் துயரை எதிரிடுகிறேன்.

செங்குத்தாய் சரிந்திருக்கும் மலையில்
பச்சை ஓக் மரம் வழமையாய் வளர்ச்சியுறும் ;
இப்போது மலையடிவாரத்தில் அது அழுகி நசிகிறது.

Aleksey Kol'tsov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




இரவில் கட்டிலின் மீது யார் உன்னைத்
தனது கரங்களில் இறுகத் தழுவுகிறானோ
அவன் ஆசீர்வதிக்கபட்டவன்.
புருவத்தின் மீது புருவமாய்,
விழியின் மீது விழியாய்,
இதழ்களின் மீது இதழ்களாய்,
மார்பின் மீது மார்பாய்,
கவர்ந்திழுக்கும் உனது முணுமுணுப்பை இடையீடு செய்யும்
அவனது பேருணர்வின் முத்தம்,
இப்போது அமைதியுறுகிறது.
உனது இருண்ட மார்பகங்களின் கட்டுக்கடங்கா நடுக்கத்தைத் தூண்டுகிறது,
இன்னும் மிகையாய் ஆசீர்வதிக்கப்பட்டனவாய் இருக்கிறான்.


ஓ இராக்காலத்தின் இளநங்கையே,
நேசத்தின் மெய்மறத்தலில் யார்,
உனது செங்கனல் வண்ண விழிகளினுள்ளேயும் ;
உனது வாடா- மலர்ச்சியில் ஒளிர்ந்து சிவந்திருக்கும் இதழ்களையும்,
உனது அற்புத புருவங்களையும்,
உனது இளமைபூத்தக் கறுமை கேசச்சுருள்களையும் நோக்குகிறானோ;
புயலார்ந்தப் பேரின்பத்தின் பரவச-வெப்பத்தின் ஊடே,
தனது இளமையின் வலிமையையும் மறந்திருக்கிறான்!

-Nikolay Yazykov-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

அமைதியாய் இரு ,
உன்னை ஒளித்து வைத்துக் கொள்,
உனது உணர்வுகளையும் கனவுகளையும் முழுமையாய் மறை,
உனது ஆன்மாவின் ஆழங்களில்
அவை அமைதியாய் உதித்தெழுந்து - தாழட்டும், ,
இராப்பொழுதின் தாரகைகளாக;
அவைகளை வியந்த வண்ணமாய், தியானி,
அமைதியாய் இரு.


நெஞ்சம் தன்னையே எவ்வாறு வெளிப்படுத்தும்?
மற்றொருவர் உன்னை எவ்வாறு புரிந்துகொள்வார்கள்?
எதனில் நீ வாழ்வுற்றிருக்கிறாய் என, அவனால் புரிந்து கொள்ளக் கூடுமா?

சிந்தனையொன்று மொழியப்படுகையில் பொய்மைப்படுகிறது,
நீருற்றுக்களை நீ கிளருவதினால் கலங்கிடச் செய்வாய்,
அதைப் பருகிவிட்டு , அமைதியாய் இரு.

உன்னிலேயே வாழ்ந்திருத்தலை அறிந்துகொள்:
உனது ஆன்மாவினுள் புதிர்மையும் - வசியபடுத்தும் எண்ணங்களும் நிறைந்துள்ளன,
அவை அதீத-சப்தத்தினால் மூழ்கடிக்கப்படும்;
புலரொளி யாவையும் விரட்டிவிடும்,
அவை பாடுவதைச் செவிகொள்.
அமைதியாய் இரு.

-Fedor Tyutchev-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





என் முன்னே நீ மெளனத்துள் நின்றாய்,
உனது விழியின் துயர்நோக்கு உணர்வு நிரம்பியிருந்தது.
என் நேசிப்பிற்குரிய இறந்தகாலத்தை அது ஞாபகப்படுத்தியது....
அதுவே நீ இவ்வுலகிலிருந்த இறுதி- கணம்...


பேசா தேவதையாய் நீ அகன்றாய்,
உனது கல்லறை விண்ணுலகின் பேரமைதியைத் தரித்திருக்கிறது,
பூவுலகின் நினைவுகள் யாவும் ,
விண்ணுலகின் பரிசுத்த சிந்தனைகள் யாவும் அங்குள்ளன.

விண்ணுலகின் தாரகைகள், மெளன இரவு!

-Vasily Zhukovsky-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





நேசத்தின் துவக்கம் கோடைக் காலம், அதன் அந்தம்-
செப்டம்பர் மாத இலையுதிர்காலம்.
ஒரு யுவதியின் எளிய ஆடையில் முகமனுடன்
நீ என்னிடம் அண்மித்து வந்தாய்.


ஒரு செவ்வண்ண முட்டையை குருதியின்,மற்றும் நேசத்தின் குறியீடாய் என் கைவசம் அளித்தாய்;
வடதிசை சிறகடிக்க அவசரப்படாதே , சிறு பறவையே,
தென் திசையின் இளவேனிலுக்காய் சற்று பொறு!

நீலமாயும் , புகைந்தும் . குறும்- புதர்காடுகள் கூர்ந்த-விழிப்புடன்; மோனத்திலிருக்கிறது,
சித்திரத் திரைசீலையினூடே உருகும் பனிக்காலத்தை காட்சி கொள்ளவியலாது,

ஆனால் நெஞ்சம் உணர்ந்தறிகிறது,
அங்குள்ள பனிமூட்டங்களையும்,
வனத்தின் இருண்மை அசைவுகளையும்.
ஊதா - சாம்பல் மலைகளது,
அவ-விதியின் மாயத்தோற்றங்களையும்.

ஓ, மூடுபனியினுள் சிறகடித்து விடாதே; சிறு பறவையே!
வருடங்கள் சாமபல்நிற மூட்டத்துள் வடிந்துவிடும்,
தேவாலய முன்றிலின் ஒரு மூலையில்,
நீ யாசிக்கும் கன்னியாஸ்திரியாக நின்றிருப்பாய்;

ஒருவேளை , நான் உன்னைக் கடந்தும் போவேன்,
வறியவனாய் மெலிந்திருப்பேன்,
ஓ, கேருபினின் சிறகுகளை எனக்களித்துவிடு,
உனது விழிப்பினில் நான் புலனாகாது பறந்திடுவேன்,

முகமன் நவிலாது உன்னக் கடந்திடேன், அன்றி
பின்னர் கழிவிரக்கம் கொள்ளேன்....
நேசத்தின் துவக்கம் கோடைக் காலம், அதன் அந்தம் -
செப்டம்பர் மாத இலையுதிர்காலம்.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





நாணமற்ற அவளது வெறுக்கத்தக்க இழிமையில்
அவள் புழுதிபோல் சாமபல் நிறம் பூத்திருக்கிறாள்,
உலகுக்குரிய அஸ்திகளாயிருக்க
நான் அவளது அண்மையினில் நசிகிறேன்,
அவளுக்கும் எனக்குமிடையே உள்ள பிரிக்கவியலா உறவிலிருந்து.


சொரசொரப்பாய் , உறுத்துபவளாய், குளிர்ந்திருக்கும்-
அவளொரு அரவம்.
அவளது வெறுப்பூட்டும் சீற்றம் ,
ஒழுங்கின்றி வதங்கித் துண்டிக்கப்பட்ட அவளது செதில்கள் என்னை காயங்களால் போர்த்தியுள்ளது.

அக்கூரியக் கொட்டுதலை நான் உணர்திருந்தால் !
அவள் தளர்வுற்று தொங்குகிறாள், மந்தமாக ஜீவனற்றிருக்கிறாள்,
இருப்பினும் அத்துனை மொழுமொழுப்பாக மெதுவாக நகர்கிறாள்,
அவளில் விழைய அணுகலில்லை - அவள் கேளாமையில் இருக்கிறாள்.

என்னை வட்டமாய்ச் சுற்றிச் சுருள்கிறாள்,
அவள் பிடிவாதத்துடனும்,
நயமாய் நுழைந்து வருடி நெரிக்கிறாள்.
மாய்ந்து மிரட்சியூட்டும் இக்கறுநிற வஸ்து,
எனது ஆன்மா!

-Zinaida Gippius -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)









இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

பனிமீதுறும் எனது யாத்திரைகள் கணக்கிடுவது அல்லது அளவிடுவதற்கு அப்பால் கொடூரமானதாயுள்ளது,
என் முன் நீட்சியுற்றிருக்கும் வெறுமைத் தொலைவுகள் சாம்பல்நிறமாய் இல்லையா?
மணிகளின் ஒலிகள் கிளர்வற்று இருக்கவில்லையா?


ஆனால் நீ, என் நெஞ்சே,
நீயேன் அத்துனை ஆழ்- பிளவுண்டிருக்கிறாய்?
அவள் கண்காணா தூரத்தில் இருக்கிறாள் என நானறிவேன்,
ஆயினும் நான் அவளது அண்மையை உண்ர்கிறேன்.

இதோ அவர்கள் இங்குள்ளனர், பனிமூட்டம் ,
எனது விழிகளை அவர்கள் மீதிருந்து அகற்றக் கூடவிலை,
ஒரு கணத்தில் நாம் ஒருவரையொருவர் வெண்மையில் கடந்துவிடலாம், ஆனால் மரித்திருக்கும் பனி.

ஒரு கணத்தில் யாரோ பேச்சின்மையில் கூடி ஜோடியாவார்கள்,
பின்னர் தனியாவார்கள், நமது பனிசறுக்கூர்திகள்,
ஒரேயொரு முறை,ஆயினும் வதைக்கும் மணிகளின் முணுமுணுப்பு
நமக்கு ஒன்றாய்ச் சங்கமிக்கும்..........

அவைகள் சங்கமித்துவிட்டன,
ஆயினும் ஒளிமங்கிய இரவினுள்
மீண்டும் நாம் ஒருவரையொருவர் கண்டடைய இயலாது...............
சாத்துன்பத்தின் மூடிய வட்டத்துள்
சலிப்புற்ற எனது பாதையில் திக்கிழந்து சுற்றித் திரிகிறேன்............

இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

-Innokenty Annensky-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






பிரிந்த அதரங்களின் பூவிதழ்கள்,மழலை போன்று ஈரமாயுள்ளது,
குளிர்மையாய் விளைந்துள்ளது,
நடன அரங்கு மிதந்துச் செல்கிறது.
ஆழ்விருப்பம், மகிழ்வின் மந்தகதி இசையில் மிதந்துச் செல்கிறது.


சரவிளக்குகளின் சுடர்வில் ஆடிகளில் சாய்ந்தாடும் அசைவுகள், படிகத்தின் ஓற்றைக் கானல் தோற்றத்துள் இரண்டறக் கலந்துவிட்டது,
குழுநடனத்தின் காற்று மிதக்கிறது, சுகந்தம் வீசும் ரசிகர்களின்
கதகதப்பான மூச்சுக்காற்று மிதக்கிறது.

-Ivan Bunin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







ஓதம் செறிந்தக் காற்றைப் போல் பலகணிக் கதவுகளில் அறைகிறாய்,
கறுத்த காற்றைப் போல் நீ இசைக்கிறாய்:
நீ எனதே ! நானொரு புராதன ஒழுங்கின்மை,
நான் நினது பழைய நண்பன்
நினதேயான ஒரே நண்பன் -திற,திற!


நான் பலகணிக் கதவைப் இறுகப்பற்றியிருக்கிறேன்,
நான் திறந்திடத் துணியவில்லை,
நான் பலகணிக் கதவை இறுகப்பற்றி எனது அச்சத்தை மறைக்கிறேன்.
நான் என்னுள் வைத்திருந்து உளமார நேசிக்கிறேன்,
நான் என்னுள் வைத்திருக்கிறேன் எனது இறுதிக் கதிரையும் - என் நேசத்தையும் .

பார்வையற்ற ஒழுங்கின்மை நகைக்கிறது மற்றும் அழைக்கிறது:
நீ விலங்கில் பிணையுண்டு மரிப்பாய்- கிழி,
அதிலிருந்து நின்னையே கிழித்துக்கொள்!
நீ ஆனந்தத்தை அறிவாய் , நீ தனித்திருக்கிறாய்,
ஆனந்தம் சுதந்திரத்தில் உள்ளது நேசம்- அல்லாததில் உள்ளது.

நான் உறைகிறேன் ஒரு ஜெபத்தைச் சொல்லுகிறேன்:
சற்று அரிதாகவே என்னால் நேச- ஜெபத்தைச் சொல்ல இயலுகிறது,
எனது கரங்கள் தளர்கின்றன, நான் பூசலை கைவிடுகிறேன்,
எனது கரங்கள் தளர்கின்றன....... நான் திறந்திடுவேன்.

-Zinaida Gippius-

நினது விழியில் உள்ளார்ந்திருக்கும் சாந்தம் ,
ஒரு பெண்மானை ஒத்திருக்கிறது,
அதனில் நான் நேசித்தவை யாவுமே மென்மையாய் உறைந்திருக்கிறது,
இந்நாள்வரை எனது நீங்கா சோகத்திலும் மறவாதிருக்கிறேன்
ஆனால் இப்போது நினது படிமம் பனிமூட்டத்தால் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளது.

நேரம் கனிந்து நெருங்கும் நீங்கா சோகமும் மாய்ந்தொழியும்,
நினவுகொள்ளலின் கனவும் நீலத்துள் பின்னுற்றுத் தணியும்,
எங்கு மகிழ்வும் அன்றி துயரும் அற்றிருக்குமோ,
அங்கு யாவற்றையும் மன்னிக்கும் ஒரு தொலைவு.

-Ivan Bunin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நினது கிடாரை எடுத்துக் கொள், ஜிப்ஸி பெண்ணே,
தந்திகளை மீட்டு; உரக்க குரலிடு;
சிருங்கார காய்ச்சலுடன் , நினது நடத்தால் யாவரையும் மெய்பரவசப்படுத்து,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.


வாழ்விற்குள் மீண்டும் அழை அதேசமயம் பித்தவெறியிலும், புலன்கிளர்த்தும் உண்ர்விலும், பதட்ட நடுக்கத்திலும்,
நேசத்தின் மெலிவிலும் ,
புராதன பெண்-பாக்கஸின் மாயக் கலையிலும்,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

இரவைப் போல், நினதுக் கன்னத்தில் எழும் மின்கல விளக்கு, சுழற்காற்றைப் போல்,
நினது மேல் -அங்கியால் புழுதியை வாரிச் சென்றுவிடு;
ஒரு பறவையப் போல், நினது சிறகுகளால் காற்றின் மேலெழுவாய்;
உரக்க வீரிட்டு கைகொட்டு,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஓ குறைந்த பட்சம்- நீ என்னிடம் பேசு,ஏழு -நரம்புகளையுடைய எனது நண்பியே,
எனது ஆன்மா கடுந்துயரால் நிரம்பியுள்ளது,
பிரகாசிக்கும் நிலவின் கதிரொளியில் இரவு நீராடியிருக்கிறது!


அதோ அங்கே ஒரு தாரகை பளிச்சென்று வாதையுறும்படியாக எரிகிறது,
அதன் ஒளிக்கதிர் நெஞ்சத்தைக் கிளர்த்தித் தூண்டுகிறது,
அதை பரிகசிக்கிறது , கொட்டுகிறது.

அதற்கு என் நெஞ்சத்திடம் வேண்டுவதென்ன?
எப்படியோ அது நன்கு அறிந்திருக்கிறது
எனது வாழ்வு முழுமையும் அழுத்தமாய் அதனில் பிணைவுற்றிருக்கிறது
எனது எண்ணிறந்த நாட்களின் ஆழ்விருப்பில்.....

எனது நெஞ்சம் நஞ்சில் ஊறியுள்ளது,
அதன் விடமூச்சை நான் உள்ளீர்த்துக் கொண்டதை அறிந்துள்ளது..............

அஸ்தமனத்திலிருந்து புலர்வுவரை நான் ஆழ்விருப்புறுகிறேன்,
அவதியுறுகிறேன், குறை சொல்லுகிறேன்,
ஆகையால்
முடிக்கப்பெறா பாடலின் அந்தம்வரை என்னிடம் பாடு

உனது தங்கையின் வாயில் எஞ்சியுள்ள பாதி- நவிலப்பட்ட
அந்த விசித்திரமானவைகளை இறுதிவரை சொல் ............
பார்: தாரகை பிரகாசமாய் எரிகிறது..............
ஓ பாடு, எனது நேசப்பிற்குரியவளே!

உன்னுடன் கூடிப் -பேசுதலை புலர்காலைவரை பற்றித் தொடரச் சித்த்மாயிருக்கிறேன்..... என்னிடம் பாடு
முடிக்கப்பெறா பாடலின் அந்தம்வரை என்னிடம் பாடு!

-Apollon Grigoriev-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

பனிமீதுறும் எனது யாத்திரைகள் கணக்கிடுவது அல்லது அளவிடுவதற்கு அப்பால் கொடூரமானதாயுள்ளது,
என் முன் நீட்சியுற்றிருக்கும் வெறுமைத் தொலைவுகள் சாம்பல்நிறமாய் இல்லையா?
மணிகளின் ஒலிகள் கிளர்வற்று இருக்கவில்லையா?


ஆனால் நீ, என் நெஞ்சே,
நீயேன் அத்துனை ஆழ்- பிளவுண்டிருக்கிறாய்?
அவள் கண்காணா தூரத்தில் இருக்கிறாள் என நானறிவேன்,
ஆயினும் நான் அவளது அண்மையை உண்ர்கிறேன்.

இதோ அவர்கள் இங்குள்ளனர், பனிமூட்டம் ,
எனது விழிகளை அவர்கள் மீதிருந்து அகற்றக் கூடவிலை,
ஒரு கணத்தில் நாம் ஒருவரையொருவர் வெண்மையில் கடந்துவிடலாம், ஆனால் மரித்திருக்கும் பனி.

ஒரு கணத்தில் யாரோ பேச்சின்மையில் கூடி ஜோடியாவார்கள்,
பின்னர் தனியாவார்கள், நமது பனிசறுக்கூர்திகள்,
ஒரேயொரு முறை,ஆயினும் வதைக்கும் மணிகளின் முணுமுணுப்பு
நமக்கு ஒன்றாய்ச் சங்கமிக்கும்..........

அவைகள் சங்கமித்துவிட்டன,
ஆயினும் ஒளிமங்கிய இரவினுள்
மீண்டும் நாம் ஒருவரையொருவர் கண்டடைய இயலாது...............
சாத்துன்பத்தின் மூடிய வட்டத்துள்
சலிப்புற்ற எனது பாதையில் திக்கிழந்து சுற்றித் திரிகிறேன்............

இறுதி வண்ணம் நள்ளிரவுப் பிராத்தனையில் ஒரு குசுகுசுப்பாய் மங்கியது
ஓ பித்தத்தின் கதையே,
இத்தகைய எனது நெஞ்சிடம் நீ அவாவுற்று வேண்டுவதென்ன?

-Innokenty Annensky-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





It is very difficult also
to sacrifice one's suffering.

A man will renounce any pleasures you like
but
he will not give up his suffering.


- G.I. Gurdjieff-






an honest being
who does not behave absurdly
has no chance at all of becoming famous,
or even of being noticed,
however kind and sensible he may be...


- G.I. Gurdjieff-






Life is real only then,
when "I am".”

-G.I. Gurdjieff-






Two things in life are infinite;
the stupidity of man and the mercy of God.....

-G.I. Gurdjieff-






The greatest untold story
is the evolution of God.............

-G.I. Gurdjieff -






There is a cosmic law
which says that every satisfaction
must be paid for with a dissatisfaction.

-G.I. Gurdjieff-






Time in itself does not exist,
there is only the totality of the results
issuing from all the cosmic phenomena present in a given place.

- G.I. Gurdjieff-

விளிம்பின் குரல்
October 31, 2014 ·
. எண்ணற்ற நபர்கள் இரவெல்லாம் வேலை செய்கின்றனர்....ரயில்வே கட்டுமானப் பணியாளர்கள், வாடகைக் கார் ஓட்டுனர்கள், மதுவிடுதிப் பணிப்பெண்கள், தீயணைப்புப் பணியாளர் மற்றும் இரவுநேர காவல் பணியாளர்கள்; அத்தகைய நபர்களுக்கு கொடியின் பாதுகாப்பை மறுப்பது நியாயமற்றதாக எனக்குப் படுகிறது. அல்லது இது என்னைத் தவிற யாரும் பொருட்படுத்தாத உண்மையில் அக்கறைகாட்டாத ஒன்றாயிருக்கலாம். நானும்கூட உண்மையில் பொருட்படுத்தினேன் என்றில்லை. இது தற்செயலாய் என் மனதில் தோன்றியது அவ்வளவுதான்.”
(ஹாருகி முரகாமி, நோர்வீஜியன் வுட், எதிர் வெளியீடு, ப,32)


நினது கிடாரை எடுத்துக் கொள், ஜிப்ஸி பெண்ணே,
தந்திகளை மீட்டு; உரக்க குரலிடு;
சிருங்கார காய்ச்சலுடன் , நினது நடத்தால் யாவரையும் மெய்பரவசப்படுத்து,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.


வாழ்விற்குள் மீண்டும் அழை அதேசமயம் பித்தவெறியிலும், புலன்கிளர்த்தும் உண்ர்விலும், பதட்ட நடுக்கத்திலும்,
நேசத்தின் மெலிவிலும் ,
புராதன பெண்-பாக்கஸின் மாயக் கலையிலும்,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

இரவைப் போல், நினதுக் கன்னத்தில் எழும் மின்கல விளக்கு, சுழற்காற்றைப் போல்,
நினது மேல் -அங்கியால் புழுதியை வாரிச் சென்றுவிடு;
ஒரு பறவையப் போல், நினது சிறகுகளால் காற்றின் மேலெழுவாய்;
உரக்க வீரிட்டு கைகொட்டு,
ஆடவரின் ஆன்மாக்களைத் தீக்கிரையாக்கு,
அவர்களது நெஞ்சங்களுள் நினது கரிய முகத்திலிருந்து
தீயைச் சுழற்றி வீசு.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நான் விடைபெற்றுச் செல்கிறேன். வழமையான ”குட் பை
எனது இதழ்களின் மீது மரிக்கிறது.
விதி என்னை எங்கு வார்க்கப் போகிறது?
ஆழ்துயர் என்னை எங்கு எடுத்துச் செல்லும்?


நான் பேசாதிருக்கிறேன். எப்போதுமே நீ இரக்கமற்றிருகிறாய்,
வருடத்திற்கு பின் வருடமாக -
ஆனால், ஒருவேளை, ஒரு கண்காணா தேசத்தில் ,
நீ முகமன் கூறுவதை நான் எதிர்பாராநிலையில் செவி கொள்கிறேன்.

ஒரு பள்ளத்தாக்கில் ஏதோவொரு நாள், ’குட் பை’ சொல்வதும்,
ஒரு மூலையில் திரும்பியதும்
பயணி பின்புறம் நோக்குவான்,
யாரோ ஒருவரை வீணில் அழைப்பான்.

ஆனால் இருளடர்ந்து விட்டது,- கறுப்புச் சுவரின் மேற்புறம்
தழலொளி சுருளுற்ற மேகங்கள்,-
அதோ அங்கே, கீழே, மலைப் பாதையிலிருந்து,
அவன் பிரியாவிடையின் அழைப்பை செவிகொண்டான்.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








என்னை வளைவுறும் தொடுவானுக்கு கொண்டு செல்
எங்கே தருக்களின் பின் நிலவாய் சோகமிருக்கிறதோ ,
நேசத்துக்குரியவளின் புன்னகை, இந்த ஒலிகளினூடே , மென்மயமாய் பளபளக்கிறது ,
நினது தழலுறும் கண்ணீர்த் துளிகளின் மீது.


ஒ குழவியே! எத்துனை எளியது , இவ்வானுலகத்தின் மீ -அலைகளுக்கிடையே ,
நினது கானத்தை நம்பவும்,
உயரே உயரே , நான் வெள்ளிப் பாதையில் நீந்துகிறேன்,
ஒரு சிறகின் பின்னே படபடக்கும் நிழலைப் போல்.

நினது குரல் தூரத்தில் மடிந்து அப்பலுறுகிறது, எரிகிறது,
யாமத்து ஆழிக்கு அப்பால் தோன்றும் தகதகப்பைப் போல்,
எங்கிருந்து, எதிர்பாரா திடீர் கணத்தில் , என்னால் அதையறிய இயவில்லை,
முத்தின் பேரோசையிடும் அலை அதன் இடிநாதத்தை வழங்குகிறது.

என்னை வளைவுறும் தொடுவானுக்கு கொண்டு செல்
எங்கு சோகம் ஒரு இன்முறுவலாய் மென்மையுற்றிருக்கிறதோ,
நான் வெள்ளிப் பாதையை கடையும் போது , முன் எப்போதைக் காட்டிலும் உயரே,
ஒரு சிறகின் பின்னே படபடக்கும் நிழலைப்போல்.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நீ கதிரவனின் ஒளிக்கீற்றிடம் மன்றாடு;
எத்துனைக் கன்னிமைப் பேருவகை
நினது நறுமனம் கமழும் தூய்மை!


இளவேனிலின் முதல்-கதிர் நிகர்த்த ஒளிர்வு!
எத்தகையக் கனவுகள் தாழ்ந்திறங்குகின்றன!
நீ எத்துனை மாயவசியமாய் இருக்கிறாய்,
உணர்வைக் கிளர்த்தும் இளவேனில்- பருவத்தின் கொடை!

இவ்வண்ணம் முதன்முறையாக ஒரு இளநங்கை பெருமூச்செறிகிறாள்-
எதைக் குறித்து - அவளுக்குத் அது தெளிவற்றிருக்கிறது;
அவளது பளபளக்கும் தோள்
முதன்முறையாக நறுமணம் கமழ்கிறது.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







ஞாயிறு மேலுயர்ந்திருக்கிறது எலும்பிச்சை தருக்களின் ஊடே
கொதித்து எரிகிறது,
பூந்தோட்டத்து- இருக்கையின் முன்னே
பளபளத்து மிளிரும் மணலில் சிலத் தோற்றங்களைப் நீ படிசெய்கிறாய்,
ஒரு பொன்மயப் பகல்கனாவில் நான் முற்றிலுமாய்ச் சரணடைந்தேன்,
யாவைக்கும் நீ பதிலளித்தாய் -எனினும் ஒன்றுமில்லை.


நான் நெடுநாட்களுக்கு முன்பே புரிந்து கொண்டேன்
நாம் கொடிவழி ஆன்மாக்கள்,
நீயோ நினது நெஞ்சத்தை எனக்கே உவந்தளித்தாய்,
அது நம்மைச் சார்ந்த பிழையல்ல என்று மறுமுறைக் கூறுவதில் நான் உறுதியாயிருந்தேன்,
ஆனால் இவை யாவைக்கும் நீ ஒன்றுமே பதிலளிக்கவில்லை..

நான் இரைஞ்சினேன், மீண்டும் சொன்னேன் , நாம் நேசிக்கவே கூடாதென,
கடந்தகாலத்தை நாம் மறந்துத் தொலைக்க வேண்டும்
இனி வரப்போகும் நாட்களில் பேரெழிலின் உரிமைகள் யாவும் நிறைந்து மலர்ச்சியுறும்,
அப்போதும்கூட நீ ஒன்றுமே பதலளிக்கவில்லை.

பிரிந்தோரின் மேலூன்றிய என் பார்வையை அகற்றவும் வலிமையற்றிருக்கிறேன்,
நமது இரகசியங்கள் சாம்பலில் இடப்பட்டிருக்கிறது,
அவைகளை நான் புரிந்து கொள்ள எத்தனித்தேன்,
நினது முகத்தின் அம்சங்கள் மன்னித்தலை வெளிப்படுத்தியதா?
நீ ஒன்றுமே, ஒன்றுமே .பதிலளிக்கவில்லை.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







நதியில், விளையாட்டாக நீர்வாரியிரைக்கிறேன்:
இருண்டக் கிளைகளின் ஊடே பார்க்கிறேன், நீரின் மேல்புறம்,
அவளது முறுவலிக்கும் முகம் - நகர்ந்தது, மிதந்தது.
சரிந்துப் பாயும் கேசத்துடனிருக்கும் சிரத்தை நானறிவேன்.


வெண்ணிறக் கரையைச் சற்றே நோக்க , அந்த ஆடையையும் அறிவேன்,
குழம்பித் திரும்பிக் கொண்டேன்
இந்த வனப்பார்ந்த யுவதி படிகம் கவிந்த நீரினை உடைத்துப் புறமடைந்தாள்,
மணலின் மென்மையில் தனதுக் குழந்தைமைப் பாதத்தைப் பாவினாள்.

அவளது எழில் யாவிலும் ஒரு கணம் வெளிப்பட்டிருக்கிறாள்,
லேசாக நடுங்கியபடியே, நாணமுற்று ,
இவ்வண்ணமே நாணும்-லில்லியின் அசைவாடா இலைகள்,
காலைப் பனி ஈந்தக் குளுமையுடன் ஓளிவீசுகிறது.

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




October 25 at 1:35am · Edited ·



எத்தகையப் பேரானந்தம், இரவு நேரம், நாமோ தனித்திருக்கிறோம்,
நதி ஆடியை ஒத்திருக்கிறது , தாரகைகளுடன் தகதகக்கிறது;
அங்கு....உனது சிரத்தை உயர்த்து, நிமிர்ந்து பார்:
உயரே எத்தகைய ஆழ்ந்தகன்றப் பேராழம் மற்றும் மாசிலா-தூய்மை.


ஓ, என்னைப் பேதையன் என்றே அழை! நீ விரும்பியபடியே அழை;
இத்தருணத்தில் தணிக்க வொண்ணா உணர்ச்சியில் என் மனமிருக்க-
நேசம் என் நெஞ்சினூடே வழிந்தோடுகிறது-
என்னால் மெளனமடைய இயலாது, இயலாது,
எவ்வாறெனவும் நான் அறிந்திலேன்.

நான் பிணியுற்றிருக்கிறேன், நான் நேசம் பீடித்திருக்கிறேன், ஆயினும் ,வாதையுற்று -நேசிக்கிறேன் -
ஓ கேள், புரிந்துகொள் , -
என்னால இப்பேருணர்வை மறைக்க இயலாது
நின்னை நான் நேசிக்கிறேன் என மொழியவே விழைகிறேன்
நீன்னை , நீன்னை மட்டுமே,
நான் நேசிக்கிறேன் வேட்கை கொள்கிறேன்!

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






அதே தாரகை வானில்,
அதே நதி தாழ்வாய்க் கீழே பாய்ந்தோடுகிறது,
ஆனால் நேசித்தவளின் குரல் முன்பே அப்பாலுற்றது, அமைதிலாழ்ந்துவிட்டது,
நெஞ்சத்தின் உவகையெல்லாம் அப்பாலுற்றது!
எதிரொலி விசனமுடன் மீள்-ஒலிக்கிறது:
அப்பாலுற்றது!


நிசப்தமாய உள்ள வனமரத்தில்
அதே ஒளிமய நீருற்று பிரவகித்துப் பாய்கிறது;
ஆனால் கடந்தகாலத்தின் ஆறுதலளிக்கும் முகத்தோற்றம்
மேகத்தின் பின்புறம் காணக் கிடைக்கவில்லை !
மீண்டும் ஒருமுறை உளத்துயரின் எதிரொலி குசுகுசுக்கிறது:
மேகத்தின் பின்புறம்!

வழமையாய்ப் பாடல் இசைக்கும் அதே பறவை
இரவில் இன்னமும் அதன் பாடலைப் பாடியபடியே உள்ளது;
ஆனால்; பாடலோ துயர் தோய்ந்திருக்கிறது, இப்போது
மகிழ்வு நெஞ்சத்தைத் தவிர்க்கிறது!
எதிரொலி மென்மையாய் நவில்கிறது:
நெஞ்சத்தைத் தவிர்க்கிறது!

எனது கடந்தகாலத்தின் குரலே ,
எப்போது நீ அமைதி கொள்வாய்?
கனாக்களை மறுவிழிப்படையச் செய்யாதே
என்றென்றைக்குமாகச் சுழன்று
அப்பாலுற்ற எதிரொலி மீள்- ஒலிக்கிறது
என்றென்றைக்குமாக!

-Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Image Courtesy : Iyyappa Madhavan.
(18/10/2015)


.


Shanmugam Subramaniam
October 23 at 11:01pm · Edited ·



யாவரும் துயில்கின்றனர், என் அன்பியே ,
நாம் நிழலிழையும் தோட்டத்துள் செல்வோம்,
யாவரும் துயில்கின்றனர்,
தாரகைகள் மட்டுமே நம்மை நுணுகிப் பார்க்கின்றன.
எனினும் நம்மைக் கிளைகளுக்கிடையிலும் அவர்களால் காணக்கூடவில்லை,
அவர்களால் செவிகொள்ள இயலவில்லை- நைட்டிங்கேல் பறவை ஒன்றே செவிகொள்கிறது......
அவனாலும் செவிகொள்ள இயலவில்லை - அவனது பாடல் அவனைக் கேளாமையில் ஆழ்த்துகிறது.
நெஞ்சத்தாலும், கரங்களாலும் மட்டுமே செவிகொள்ள முடிகிறது,
நாம் கொணர்ந்த
பூவுலகின் உவகை-யாவையும் நெஞ்சம் செவிகொள்கிறது;
செவிகொள்ளும், கரம், நெஞ்சத்திடம் நவில்கிறது:
இனமறியா நடுக்கமும் , வினோத அன்னியம் என்னில் கிளர்கிறது,
நான் ஜூரமுற்றிருக்கிறேன் . விரும்பியும் - விரும்பாதும்,
இப்போது ஒருதோள் மறுதோளை நாடிச் சாய்கிறது.


- Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






மாலைப் பனி புல்லின் மீது மினுமினுக்குகிறது,
இருண்ட - விழி விதவை
தனது கழுத்தையும் முகத்தையும் கழுவுகிறாள்,
அவளதுக் கேசப் பின்னலிழையைச் சீவுகிறாள்.


சாளரத்திலிருந்து அவளால் கூர்ந்துப் பார்க்கவியலும்
இருள்கவ்வி கறுக்கும் வான் நோக்கியும்,
மந்தகாசமாய் ஒளிரும் மற்றும் விழியை ஈர்க்கும் அரவத்தின் நொடித் தோற்றத்தையும்
நீளும் சுருள்களின் பளிச்சிடலையும்.பார்!

அது சலசலக்கிறது மற்றும் லயமற்று வழுக்கியபடியே நெருக்கமாய்,
நெருக்கமாய்,
விதவையின் சாளரத்தின் மேல்,
அவளது வைக்கோல் வேய்ந்த கூரையின் மேல்,
அதன் தீப்பிழம்பைச் சிந்துகிறது.

இருண்ட - விழி விதவை
தனது சாளரத்தை வேகமாய் சாத்துவாள்,
அறைக்குள்ளிருந்து இப்போது ஒருவருக்கு கேட்கக் கூடியது ,
ஒலிமெலிந்தக் குசுகுசுப்பும் மற்றும் முத்தங்களும்.

- Fet-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







இரவு, நகரம் உள்ளார்ந்து தணிந்துவிட்டது, ,
பெரும் சாளரத்தின் பின்னே ,
யாவும் அமைதியாய் மற்றும் மதிப்பார்வமிக்க சடங்காய்,
ஒரு மானுடன் மெல்ல மாய்வது போல் நிகழ்கிறது.


ஆனால், அங்கவன் மன -அவசத்தில் நின்றிருக்கிறான்,
தோல்வியால் உளத்துயருற்றிருக்கிறான்,
அவனது காலர் திறந்திருக்கிறது,
அவன் மேல் நோக்கித் தாரகைகளைப் பார்த்திருக்கிறான்.

தாரகைகளே, தாரகைகளே,
நான் ஏன் இத்துனைத் துயருற்றிருக்கிறேன்.

அவன் தாரகைகளை உன்னிக்கிறான்.

தாரகைகளே ,தாரகைகளே ,
வலிய இப்பேரவா எங்கிருந்து வருகிறது?

யாவற்றையும் தாரகைகள் மொழிகின்றன
தாரகைளால் மொழியப்பட்டவைதான் யாவுமே.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
October 21 at 11:34pm · Edited ·



முகமூடிகளுக்குப் பின்புறம் தாரகைகள் ஒளிவீசுகின்றன,
எவரது கதையோ கனிவுடன் நகைக்கிறது,
இரவோ நகர்ந்தபடியே கடக்கிறது.

யோசனையில் அமிழ்ந்த மனச்சாட்சி , பெருவெளியின்
உச்சியின் மேல் புறப்படுகிறது, மந்தகதியில்
காலத்தையே எடுத்துச் சென்றது.


கரங்கள், முன்பு கடுமையாயிருந்தன, இப்போது ,
கண்ணாடியாய் தெளிந்த திரவத்தால்,
நிரம்பியக் கோப்பையை பிடித்திருக்கிறது,
அறைகளில் இரவுத் தாழ்ந்து இறங்கியது,
அதன் வேகத்தை தணித்து தொய்கிறது.

கணங்கள் ஒன்றின்பின் ஒன்றாக இசைக்கின்றன,
நெஞ்சத்தினுள் , திரவம் ஒலித்தது,
கோப்பையில், சுடர்தல் இனியில்லை,
ஒரு பச்சை வண்ண ஒளி நடமிடுகிறது, மினுமினுத்து.

அதன் அலமாறிகளில் , நூற்கள் கண்ணயர்ந்துள்ளன,
இறுகப்பற்றிய நிர்வானக் குழவியுரு-தேவதூதன்
கடையப்பட்ட பழம்-அலமாறி அடுக்கின் கதவில்,
தன் ஒற்றைச் சிறகில் படபடத்திருக்கிறான்.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








ஒவ்வொரு முறையும் நான் நினது விழிகளுக்குள் பார்வையூன்றுகிறேன்
என்னுடைய குறுகிய அரவ -விழிகளுடன் நின்னை நான் மென் -தீண்டுகிறேன்,

எச்சரிக்கையாயிரு , நான் அகமும் -புறமும் அரவமாயிருக்கிறேன்!
நான் ஒருமுறைதான் நினக்கு உரியவனாய் இருந்திருக்கிறேன்,
நான் நின்னைப் நிராதரவாய் கைவிட்டுப் பிரிந்தேன்.


நீயோ என்னை பாராமுகமாய் துறந்தாய் , எனது பார்வையின் புறமுற்று !
இன்றிரவு நான் வேறொருவருடன் இருக்கப் போகிறேன்,
பற்றிக்-கூடியிருக்க நினக்கு ஒரு துணைவி இருக்கிறாள் !

போய்விடு, நினது மீளா வேதனயை அவளால் அகற்ற இயலும் .
ஆகையால் அவள் முத்தமிடட்டும் , வருடி இன்புறுத்தட்டும் போய்விடு, இல்லையெனில் எனதுச் சாட்டை நின்னைத் தீண்டலாம்!

துணிவிருந்தால் எனது பூந்தோட்டத்துள் நுழை ,
எனது கறுத்த ஓரவிழியின் குறுகிய வெறித்தலை நிராகரி,
நான் நின்னை உயிரோடு தீயூட்டுவேன் !

நான் இளவேனிலாய் இருக்கின்றேன் , நான் தீச்சுடராய் இருக்கின்றேன்.!
நீ என்னை நெருங்கி வரமாட்டாயா, அதைப் போலவே -
நான் நேசிப்போர் யாவருக்குமாய் காத்திருக்கிறேன்.

எவரெல்லாம் இளமையாய் இருக்கிறார்களோ , எவரெல்லாம் மூப்படைந்து இருக்கிறார்களோ,
எவரெல்லாம் ஒலியதிரும் பொன்னைக் கொடையளிக்கிறார்களோ,
எனது அழைப்பொலியின் நிமித்தம் வருவீர்.

ஆனால் எழிலைச் சுட்டிக் குறித்தால், அல்லது நரை கேசங்கள் ,
அல்லது நினது பேதைமை நிறைந்த சிரம்-
சீழ்கையொலி , மெல்லிய இமை -ரோமம், மற்றும் இலையுதிர்ப் பருவம்.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




அவ்வண்ணமாகவே வருடங்கள் கடந்தன, ஒன்றன்பின் ஒன்றாக,
ஏனெனில் நான் குருடனாய் மற்றும் பேதையனாய் இருந்திருகிறேன்,
இன்றைக்குத்தான் நானதைப் பிரத்யேகமாகக் கனவுற்றேன்-
அவள் என்னை ஒருசிறிதும் நேசித்திருக்கவில்லை.


அவளுக்கு ஒரு இயல்பான எதிர்படலாய் நான் இருந்திருக்கிறேன்,
அவளது வழிப்பயணத்தில் என்னை யாரோ ஒருவனாகவே சந்தித்திருக்கிறாள்,
ஆயினும் அந்த பிள்ளைமை ஜூரம் தணிந்தது,
“ இதுவொரு பிரியாவிடை , என்றே அவளால் கூற இயன்றது.

ஆயினும் எப்போதும் போல் எனது ஆன்மா நேசத்தின் அகமுணர்தலில் ததும்பி வழிகிறது,
பிறருடனான கணங்கள் யாவுமே எனக்கு நஞ்சு தோய்ந்திருக்கிறது,
இன்னமும்கூட எனக்கு அதே யோசனை இருக்கவே செய்கிறது-
மற்றும் அந்த ஒற்றைக் கானம்
இன்று ஓயாது ஊடாடும் என் - கனாவின் இசையாகிறது.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







அவர்கள் நம்மை பூமியின் அடியாழத்தின் கீழ் புதைப்பார்கள்,
நமது வறியக் கல்லறைகளின் மீது நாணல் துளிர்க்கும்,
பூமியின் மீது பொழியும் மழையின் சன்னமான ஒலி செவியடைகிறது, உயரே எங்கோ ஒரிடத்தில், மேலே உயரே.

அசைவிழந்த நித்திரைகளிலிருந்து நாம் விழிப்படையும் போது,
நமக்கு எதைச் சொல்லவும் தேவை எழாது, நாமே அறிவோம்.
மழை சற்றே அமைதியாயிருக்க, பின்னர் அது இலையுதிர்காலம்,
மற்றும் நறுமணம் தாங்கிய காற்று வீசும் போது, அது இளவேனில்,


நாம் நன்றியதலுடன் இருப்போம் பேரானந்த பரவசத்திலும் மற்றும் நீள்-ஏக்கத்திலும்,
உயரே உறையும் சப்தங்களில் புகாதிருக்க,
நடுகல்லின் பாரத்தால் நாம் காப்பாற்றபபடுகிறோம்,
பிரிதலின் மற்றும் நேசத்தின் உளவாதையிலிருந்து.

பதற்றமடையத் தேவையேதும் எழவில்லை, இவ்விடம் கதகதப்பான தனியிடம்,
ஒருவேளை நாம் அதை யூகிக்கதறியவும் கூடும்,
அவர்கள் வாழ்வின் அர்த்தம் மற்றும் அர்த்தமின்மையைச் சுட்டிப்
பேசும்போது,
மானுட உள்ளங்கள் எதைப் பொருள்கொள்கிறது.

-Alexander Blok -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)