மனக்கோலம் - மௌனி
https://archive.org/stream/orr-11357_Manakkolam?ui=embed#page/n6/mode/1up
இரவுவெகுநேரம் கழிந்தபின்பு சிறிது அயர்ந்தவன் ஒரு ஒலக் குரல் கேட்க, திடுக்கிட்டு விழித்தெழுந்தான். கடிகாரம்_அப்போது இரண்டு மணிதான் அடித்தது. கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ள வில்லை. சஞ்சலத்திலும், ஒரு நிகழ்ச்சி நேரப் போவதை எதிர்பார்த்தலிலும், நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்குக் கொஞ்சம் அயர்வு தோன்றுகிறது. சாமக் கோழி அப்போது இரண்டுதரம் கூவி விட்டு நிசப்தமாகியது. நான்கு கவரால் அடைபட்டது போன்ற அவ்விரவின் இருள் அவனை அச்சுறுத்தவில்லை. ஆனால் கவர்க்கோழியின் இடைவிடா சப்தம் கருதியாக மெளனம் பயங்கரமாகியது. அவன் எழுந்து மேற்கு நோக்கிய ஜன்னல் கதவுகளைத் திறந்தான். சந்திரன் வானத்தின் உச்சியிலிருந்து வெகுதூரம் சரிந்துவிட்டது. மெல்லிய மேகங்கள் ஆகாயத்தைத் துளவிமேய்ந்தன. ஜில்லெனக் காற்று அவன் முகத்தில் பட முகம் வியர்வை கொண்டது. "சிறிதுதான் அயர்ந்தேன். ஆம். அவள் இன்னும் வர வில்லை. உதயம் காணுமுன் வருவதற்கு இன்னமும் நேரமுண்டு. ஒருக்கால் நான் அயர்ந்தபோது வந்து போய் விட்டாளோ இல்லை. அவளால் முடியாது. எல்லோ ருடைய தூக்கத்திலும் வருபவள் நான் துங்கும் போதா வருவாள். என்னைத் தட்டி எழுப்பாமலா போய் விடுவாள்_அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை.
விரல்களின்றியும் விணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்_அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான்.
அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது._அவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்_ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?_இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக்விடுவாள்_அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை. விரல்களின்றியும் விணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்_அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான். அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது._அவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்_ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?_இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக் கூடாது என்று அந்த அறையைக் குறுக்கு நெடுக்காக நடந்து துளாவுவான்.
கிழக்கு வெளுத்து உதயம் கண்டது. இருட்டு உள்ளளவும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்குமொரு அமைதி அவள் வராதது கண்டு மறுபடியும் பகலைக் கழித்து இரவு வருவதை எதிர் பார்த்தலில் அமைதி இன்மையாக மாறக் கண்டான். உறங்குவதற்கு இரவு அவனுக்கு உறுத்தாத பாயாக விரியவில்லை. புரண்ட விழிப்பிலோ வேலை கொள்ளப் பகலில்லை. மறுபடியும் இரவைத்தான் எதிர்பார்க்க ….
கேசவனுக்கு வாழ்க்கை லட்சியம் என்பது என்ன வென்றே புரியவில்லை. உலகில் எத்தனையோபோபுரியாத வாழ்க்கை நடத்தும் விதமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் மனோபாவம் வெகு விநோதமாகத்தான்_அமையப் பெற்றது. அவன் பிறந்த வேளையின் கோளாறு போலும்! எந்த விஷயமும் இவ்வளவுதான் என்ற மதிப்பிற்கு அகப்பட்டுநிலைத்தால் அல்லாது.அதன் தேவை எவ்வளவு என்பது புலனாகாது. நிலை கொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்துகொண்டே போனால், மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்தத் துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியினமாகப்படுகிறது. எல்லாம் தெரிந்தும் கூட அவனால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. இந்த மன வெறி யாட்டத்தில் களி கொண்டு எட்டிப் பார்த்து நிற்பவனா கடவுள்? அப்படியாயின் அவனை கேசவன் கருணையில் பார்க்க முடியவில்லை. பிடிபடாத பைத்தியக்காரத் தனத்தில் தான் சிற்சில சமயம் அவன் அகப்படுவதான எண்ணம்_அவனுக்கு.
கேசவனுக்குப் பழமையில் நம்பிக்கை இல்லாதத னால், புதுமை என்பது மனத்திற்கு இசைவதாக இல்லை. பச்சைவெட்டாக, உயிரற்று அழுகும் பழமையிலும் கேவலமாகத் தான் தெரிந்தது புதிய நாகரீகப் பண்பு. வாழ்க்கைப் பாட்டையில் அநேக விஷயங்களைப் பழக்க வழக்கங்களாக்க வேண்டும். அவைகளிடம் சிந்தனை களைக் கொள்ளவே இடமிருக்கக் கூடாது. ஒவ்வொரு நித்திய விதியையும் ஆராய்ந்து செய்ய மனிதனுக்கு அவகாசம் கிடையாது. ஒளியற்ற பழைய வழியிலும் மனது செல்லாது. புதிது என்ற ஆபாசத்திலும் சுருக்கம் கொண்டு கேசவன் சிந்தனைகளிலே காலத்தைக் கழிக்க ஆரம்பித் தான். அதிர்ஷ்டவசமாக அவன் தாயார் தகப்பனார் அவனுக்கு நல்ல ஆஸ்தியைவிட்டு, அவனுடைய இருப தாவது வயதிலே இறந்து விட்டார்கள். சென்ற நான்கு வருஷங்களாக அந்த நகரில் தன் வீட்டில் தனியாகக் கல்யாணமின்றி தன் சிந்தனைகளிலே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.
யோசனைகளிலேயே ஒருவன் எப்போதும் வாழ்க் கையைக் கழிப்பது முடியாது. பசிப்பிணி முதலியவை களின்றிக் காலம் கடத்தும் மிருக வாழ்க்கையாகத் தோன்றும் அது. தான் படைக்கப்பட்டவன் என்று எப்போதாவது உணரும்போது, ஏன், எதற்காக என்ற கேள்விகள் தானாகவே மனதில் எழும். இத்தகைய கேள்விகளை மனது விழுங்கவேண்டுமாயின், புற உணர்வு மயமாகவும், காரணகாரியமற்று சம்பவங்களைக் கொள்ளும் விதமாகவும் தான் ஒருவன் இருக்க முடியும். எப்போதும் எவ்விதம் இவ்விதமாக இருக்கமுடியும் ஒருவனால்?
கேசவன் வாழ்க்கையில் கெளரி குறுக்கிட்டபோது அதையும் ஒரு சம்பந்தமற்ற நிகழ்ச்சியாகத்தான் அவன் எண்ணினான். அண்டை விட்டு கப்பையர் மனைவி என்பதைத் தவிரவும் காலையில் வாயிலில் சிற்சில சமயம் கோலம் போடுவதை இவன் திண்ணையில் நின்று பார்ப்பது என்பதைத் தவிரவும் வேறொரு சம்பந்தமும் முதலில் இல்லை. இவன் மனம் சித்திரம் கொள்ளக் கோலம் வரைகிறாள் என்று எண்ணிய இவனை ஒருநாள் நிமிர்ந்து உள்ளே போகுமுன் பார்த்தாள். சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷயப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான். அவள் முகமே விழிகளென இவனைப் பார்த்துவிட்டு உட்சென்று விட்டாள் கெளரி அவள் எண்ணம்_அவன் மனத்தை விட்டு அதற்குப்பின் அகலாது ஒரு லகூடியமாக நீண்டது. அவள் வேறு ஒருவரின் மனைவி என்பதை அவன் மனது ஏற்க மறுத்தது.
இரவு காணும் முன்பே மெல்லெனக் காற்று வீச ஆரம்பிக்கும். வாயிற்புறத்திலிருந்துமலரின் மணம் மிதந்து வந்துமயக்கம் கொடுக்கிறது. அந்திவேளையின் சூரியஒளி ஒரு இன்ப வேதனை நிறத்தில் தோன்றுகிறது. சில சில நாட்களில் சூரியன் மறையுமுன்பே மேற்கிலிருந்து மேகத்திரள்கள் மேலோங்கி விடும். மேக முகப்பு பலவித வர்ணப்பாடுகளுடன் காணப்படும்_அவன் இவைகளை, பார்த்து உணரும் உணர்ச்சிகள், இரவின் வருகையில் கொள்ளும் இன்பமயமான கனவுகள்தான். அவ்வேளை களில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற்பான். சில சமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்கு போகப் பார்க்க நேரிடுவதும் _ண்டு.
அவை காரணமின்றி நடக்கும் சம்பவங்கள் என அவன் கொள்ளுபவைகள்தாம். துக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக் கான ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும் அவன் நின்று பார்க்கும் மறதியில் எவ்வளவு நேரம் அவன் வாழ்க்கை துங்கிவிட்டது. நீளுகிறது. நேற்று நடந்ததை ஞாபகப் படுத்திக் கொள்ளும்போது நடந்ததா என்பதாகிறது. நடக்கிறதோ எனில் அப்படியே காலமென்பதின்றி. காலத்தையும் மீறியதாகிறது. நாளைக்கு நடக்கப்போவது
அவனுக்கு நிச்சயமில்லை. எதிர்பார்க்கும் சந்தேகத்தில் அவன் இளமையும் சிக்குண்டு பாழாகிறது. அமைதியை இவ்விதம் அடிக்கடி இழப்பவன் அமைதியை வேண்டு பவன் அல்ல. அமைதியை இழப்பதில்தான் அவன் அமைதி அடைகிறான் போலும். அது கேசவனுக்கு சாந்தமும் சமாதானமும் கொடுக்கவில்லை.உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கணமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது. விடை கண்டால் புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது. எனினும் அறியாததொன்றுதன்னை எதிரே சூனியத்தில் பலமாக உந்தித் தள்ளுகிறதா_இழுக் கிறதா_காலை கண்டுவிட்டது காகங்கள் கூட்டை விட்டு வெளியே பறந்து சென்று கொண்டிருந்தன. உலகமும் பகலில் நகர ஆரம்பித்தது. நிம்மதியின்றிப் பகலெல்லாம் இரவின் வரவே எதிர்நோக்கி நிற்க வேண்டும். இரவிலோ வெனில் அவளை எதிர்பார்த்து நிற்பது கொஞ்சம் அமைதியைக் கொடுப்பதாக இருக்கிறது.
கையால் ஆகாதவன்தான் கணவன் ஆகிறான். பசிக்குப்பிச்சை கேட்கயாரிடமும் எந்நேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு விடு தனக்கென்று ஒரு மனைவி தன் பலவினத்தை _ணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க மறைக்கதான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான். கேசவனுக்கு கப்பையரின் மனைவி அருவருப்பைத் தான் கொடுத்தாள். ஆனால் கெளரியின் நினைவில் ஒரு பயங்கரம் சப்தித்தது.
இரவு கண்டுவிட்டது மனவேதனை இன்பவேதனை என மாறாமலே கொஞ்சம் குறைவதாயிற்று. அவன் மனது சொல்லிக்கொண்டது.அவன் காதில் விழவில்லை. இன்று அவள் நிச்சயம் வருவாள். நேற்றிரவு அவள் வந்ததோ
வராததோ ஒன்றாகத்தான் அவன் மனதில் சந்தேகத்தில் மறந்து மடிந்தது. ஒரு_ணம் அவள் வருவதும் போவதும் என்ற எண்ணம்கூட சரியெனப்படவில்லை. இவ்வகை நிலையில் வெகுநேரமானதாய் ஒரு தோற்றம் கப்பையரின் அருகில் கெளரி துங்கிக் கொண்டு இருக்கிறாள் - பின் நின்று கொண்டு இருக்கிறாள். இந்த இருளும், எதிரில் நிற்கும் அவளுடைய முகம் காண ஒளி கொடுக்க வில்லையே! உள்ளுற உறைந்து தடித்ததொரு உணர்ச்சி வேகம் அவனை வெகு துரம் உந்தித் தள்ளிவிட்டது. நிற்கும் இடத்திலிருந்து வெகு சமீபத்திலேதான் ஆரம்ப . இறுதிகளின் எல்லை. மயங்கிய தோற்றம் கொடுக்கிறது. மனது வெடிக்கும் ஏக்கத்தின் புரளலில் ஏதாவது இடம் சித்திக்காதா என்ற நம்பிக்கைதான். கேசவனால் பிறிதான ஒரு பெண்ணையும் புறத்தில் பார்க்க முடியவில்லை. அகத்தில்தான், பிளவுபட்ட ஒரு பாகத்தில் கெளரியைக் காண்பான் ஒரு சமயம் அக்கணமே அழிந்து சுப்பையரின் மனைவியாக மாறி விடுகிறாள் அவள் கொஞ்சம் இரைந்தே கெளரி எனக் கேசவன் கப்பிட்டான்.
பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம். ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவமாகும் கற்பனைக் கோட்டை_ அனைத்த கை சர்ப்பமாக அன்றோ_அவன் மேல் நெளிந்தது ஆம் சர்ப்பம் ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் கற்றி ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து நக்கி முத்தமிடும் ஆர்வத்தில் - நீட்டி விழுங்கும் அவைகளின் நாக்குகள். அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அவனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.
பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில் நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத்தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது. தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்ற தொரு உணர்வை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று_ருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது. காலை காண ஆரம்பித்தது.
சாவில் பிறந்த சிருஷ்டி
ஒரு மாதம் முன்பே கெளரியை அவள் தங்கையின் கலியானத்தை முன்னிட்டு பிறந்தகம் அனுப்பிவிட்டு தனியாக வீட்டிலிருந்த கப்பய்யருக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது. மனைவியை முன் கூட்டியே அனுப்பியதன் தவறுக்கு தன்னையே நொந்து கொண்டார். ஒவ்வொரு நாளையும், துன்புறுத்தும் ஒவ்வொருநாளாக கணக்கிட்டுக் கொண்டிருந்த கப்பய்யருக்கு தன் மைத்துணியின் கலியாணம் வெகுவாக தாமதப்பட்டு வருவதாகத் தோன்றியது. கலியானத்தன்று போவதாக எண்ணியிருந்த அவர் புது மாப்பிள்ளை வந்து இறங்குமுன் முதல் மாப்பிள்ளையாக தன் மனைவி ஊர் போய் சேர்ந்தார்.
சுப்பய்யருக்கு ஐம்பது வயது இருக்கலாம். அவர் மதிப்பிற்கு குறைவாகவே தோற்றமளிக்கும் சரீர முடையவர். குழந்தைகளின்றி, பத்துவருஷங்களுக்குமுன் அவருடைய மூத்த மனைவி நோய்வாய்ப்பட்டு கொஞ்ச நாள் இருந்து இறந்துவிட்டாள்.அதற்குப்பிறகுநான்கைந்து வருஷம் கல்யாணம் செய்துகொள்ளாமலே அவர் காலம் கழித்தார். பிறகு கெளரியை மணம் புரிந்து கொண்டு நாலைந்துவருஷம் ஆகிறது. சிறுவயதில் தாய்தந்தையை இழந்து பிரமச்சாரியாக வாழ்ந்த தனிமையையும் தன் மனதில் நன்றாக உணர்ந்தவர். ஆயினும் கடந்த ஒரு மாதமாக கெளரியை ஊருக்கு அனுப்பியதிலிருந்து அவர் கண்ட தனிமை ஏதோ ஒருவிதமாக மனதில் சஞ்சலம் கொடுப்பதை உணர்ந்தார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் கெளரியை பிறந்தகம் அனுப்பியதே இல்லை. எப்போ தாவது, அவ்வப்போது, ஏதாவது ஒரு காரணம் காட்டி தட்டிக் கழித்து விடுவார். சரியெனக் கேட்கும் தன் மனைவியின் மனப்போக்கை அவர் அப்போது ஆராய்ந்து அறிந்து கொள்ளாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவளும் போவதற்கு இஷ்டப்படவில்லை என தன் மனதிற்குகந்தவாறு சமாதானம் அடைவதுண்டு. தன் சுயநலத்தை அறியாது அவளுடைய சவுகரியத்தின் பொருட்டே தான் செய்வது சரி என்ற நினைவில் மனது சமாதானம் அடைகிறது. இவ்விதம் அவர் தம் மனைவி யிடம் கொண்ட_பிரியம்தான் தனிமையில் காணும் சஞ்சலத்தின் காரணம்போலும் கப்பய்யருக்கு கிராமத்தில் நல்ல சொத்தும் மதிப்பும் இருந்தன.
ஒரு சுமாரான குடும்பத்தில் ஐந்து குழந்தைகளுக்கு முத்தவளாகப் பிறந்தவள் கெளரி, சிறு வயதிலிருந்து அவளுடைய குறுகுறுப்பும் அமைதியான அழகும் அவள் பெற்றோர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. அவளுக்கு வயது.ஆக,ஆக அவள் கல்யாணத்திற்காக அவர்கள் மிகக் கஷ்டப்பட்டனர். கல்யாணத்திற்குப் பிறகு கெளரியைப் பார்க்காவிட்டாலும் கப்பய்யரோடு செளகரியமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறாள் என்பதில் அவர்களுக்கு ஒருவகையில் திருப்திதான். கெளரி ஒரு கெட்டிக்காரப் பெண். தோற்றத்திலும் அவள் வெகு வசீகரமுடையவள். அவள் மனது சுலபமாகக் கண்டறி வதற்கு அகப்படுவதில்லை. பிறருக்கு ஒன்றையும் நிச்சயம் கொடுக்காதவகையில்தான் அவள் போக்கும் பேக்கம் இருக்கும். தன்னுடைய கல்யாணத்திற்குப் பிறகு, தன் கணவனிடமும் நடந்து கொண்டாள். தன் தியாகம் என்ற நினைப்பில் கொள்ளும் பெருமிதமும் அவள் மனது கொள்ளவில்லை. அவ்விதமாயின் அதன் விளைவாகதான் தன் கணவனிடம் கொள்ளும் பிரியம் பாதிக்கப்படும் என்பதை சூட்சமமாக அவள் மனது உணர்ந்தது போலும் கல்யாணத்திற்குப் பின் வெகு சீக்கிரமாகக் கெளரியின் மனது அவள் வயதுக்கு மீறியே பக்குவமடைந்துவிட்டது.
கல்யாண இரண்டாம் நாள். வாயில் திண்ணையில் ஏனையவர்கள்மத்தியில் பேசாது உட்கார்ந்து கொண் டிருந்தவர் கூடத்திலிருந்து கலகலப்பான பேச்சு, சிரிப்பு. சப்தங்கள் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பேச்சு, சிரிப்பு. சப்தங்களிலும் தன் மனைவி கெளரியின் சிரிப்பொலி மேலோங்கி மிதந்து இவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. வெகு காலமாகதான் வாழ்க்கையில் கண்டுணராத ஒருவித இன்ப உணர்ச்சியுடன் உள்ளே தன் மனைவியைக் காணும் ஆவலில் நுழைந்தார். ரேழியி லிருந்து தன் மனைவி வெகு குதூகலத்தில் அநேகர் மத்தியில் ஒரு ராணியெனப் பார்வை கொண்டு பேசியும் சிரித்தும் நின்றிருந்ததைப் பார்த்தார். தனக்கு வாழ்க்கைப் பட்டதிலிருந்து கெளரியைத் தான் அறிந்துகொண்ட விதம் அவள் இவ்விதமான ஒரு கலகலப்பான பெண்ணென எண்ணம் கொள்ள முடியவில்லை. ஓர் உயர்வகை இன்பம் தனக்கு_ண்டாக வேண்டியதை கூடியதை_அவள் மறைத்து விடுகிறாள். வேண்டுமென்றுதானே தன்னிடம் மாறு விதமாகப் பழகுகிறாள். உள்ளே தன் பிறந்தகத்துக் கூடத்திலே அவள் தோற்றம், பேச்சு, சிரிப்பு. குதூகலம். எல்லாவற்றையும் தன்னிடம் மறைத்துக் கொண்டுதான் பழகுகிறாள். என்பதான எண்ணங்களைக் கொண்டு வாயிற்புறம் திண்ணையில் பழையபடி வந்து உட்கார்ந்து கொண்டார். திடீரென மனதில் ஒரு ஆத்திரம் காண, மறுபடியும் உள்ளே சென்றவர். தன் மனைவியைத் தனியே கூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே ஊருக்குக் கிளம்ப ஏற்பாடு செய்யும்படிச் சொன்னார். தனக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றாலும், தன் மனைவியையும் விட்டுப்போக மனமில்லை. அநேக உயர்குணமும் ஞானமும் படைத்த கப்பப்யருக்கு இந்த மூர்த்தன்யமும் கூட இருந்தது. சமீபகாலமாக அதிக மாகவும் தலைகாட்ட ஆரம்பித்தது. வயது ஆக ஆக, அவருடைய முன்கோபம் கட்டுக்கடங்காது அதிகமாகி தன்னுடைய மனைவியிடமும் இடம் காலம் மாறி கொள்ளும் நிலைக்கு வந்தது.
கெளரிக்கு உள்ளுரக் கொழுந்து விட்டெரியும் கோபம் ஒருபக்கம். சமய சந்தர்ப்பத்தை உத்தேசித்து விகாரமாக இல்லாத வகையில் தன் விட்டவர்களுக்கும் ஏனைய மற்றவர்களுக்கும். ஏதோ காரணங்கள் சொல்லி ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானாள். கல்யாண வீட்டை விட்டு வண்டியேறி ரயிலடியை அடைவதற்குள், கப்பய்யர் மனது பல விதத்தில் சலிக்க ஆரம்பித்தது. தான் செய்தது சரிதானா என்பது புரியவில்லை. ஒரு உன்னதவகை என்பதின்றி, ஒதுங்கிப் பதுங்கி ஊளையிடுவது போன்று பயத்திலும் அருவெறுப்பிலும் தெரிந்து மனது ஒருவகை வருத்தமுற்றது. ஒரு நிச்சயமான மன உணர்ச்சியைக் கொள்ள அவருக்கு தெம்பில்லை. ஒருவரை யொருவர் நேராகப் பார்த்துக் கொள்ளாமலும் பேச்சில்லாமலும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டனர். பலவகை உணர்ச்சிப் பெருக்கில்_றித் திளைத்த மனதானது. வெறுப்பில் தான் _றிக் களைத்து நின்றது போலும் பரஸ்பர வெறுப்பில் ஒற்றுமை கொண்ட தம்பதிகளாக அன்று பிரயாணத்தைத் தொடங்கினர். ரயிலும் புறப்பட்டு விட்டது.
வண்டி நகருமளவும், எதிரே, கீழே உலாவி நின்ற ஒரு வாலிபனும் வண்டிநகர்ந்ததும் வெகுநாகக்காக ஓடி வந்து தாவி, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறினான். சின்ன கைகாட்டியைத் தாண்டுமளவும் கதவடியிலேயே நின்று பார்த்துவிட்டு சாவதானமாக உள்ளே வந்தான். எட்டி
இருந்த காலி இடங்களை விட்டு விட்டு இவர்கள் எதிரில் அமர்ந்தான் ஜன்னலுக்கு வெளியே தன்னுடைய பார்வையைக் கொள்ள, ஏங்கித் துடித்துப் பரந்து கிடந்த இயற்கைக் காட்சிகளைத் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் கண்ட இன்பத்தை சீட்டி மூலமாகவும், முணுமுணுப்பு. கீதமாகவும் வெளிப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த நவநாகரீக வாலிபனின் சேஷ்டைகள் இவ்விதங்களினாலன்றி எதிரிலுள்ளவர்களின் மதிப்பையும் கவனிப்பையும் கொள்ள முடியாது என்பது போன்றிருந்தன. எவ்வளவு நேரம்தான் அவனால் எதிரிலுள்ளவர்களை நினைத்துக் கொண்டு வெளியே பார்க்க முடியும்? இவர்கள் பக்கம் திரும்பும்பொழுது, இவனையே வெகுநேரமாக எதிர் பார்த்தவர் போன்று. "எங்கேயோபார்த்தமாதிரி இருக்கே சார். என்று கப்பையர் கேட்டது இவனுக்குத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. அவருடைய சப்தமே யல்லாது கேள்வியல்ல. அவனுக்குப் புரியுமுன் மனது இன்பத்தில் திடுக்கிட்டு விட்டது போலும். அவர்களுடன் பேசுவதற்கான சூழ்ச்சிகளை யோசித்துக் கையாளுவதற்கு முன்பே, எதிர்பார்த்தது இவ்வளவு சுலபமாக நேர்ந்ததில் கொஞ்சம் குழப்ப மடைந்தான். பதில் ஒன்றும் சொல்லாமல் ஒட்டிக் கொண்டு கெஞ்சுத லான பாவத்தில், முகத்தில் லேசான அசட்டுப் புன் சிரிப்புடன் உடம்பை ஒருதரம் நெளிந்துக் கொண்டான். ஏதோ யோசிக்கும் பாவனையில் தலை குனிந்து கொண்டான்.
கெளரிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. கொஞ்சம் வாய்விட்டே சிரித்துவிட்டாள். கப்பய்யர் இவள் பக்கம் திரும்பி என்ன என்றதற்கு ஏதோ யோசனைகள்
எதிரிலுள்ள வாலிபன் தன் கைக்குட்டையால் முகத்திற்கு பாலிஷ் கொடுத்துக் கொண்டிருந்தான். பாவம், தற்கால வாலிபர்களின் பரிதவிப்பு, வெகு விநோதமாக அவன் உருக்கொண்டு நடையுடை பாவனை
கெளரியின் வசீகரம் வெகு திரடானது. வெகு தெளிவானது. பெண்ணைப் படைத்தவன் பெண்களைப் பார்க்கும்போது தோன்ற எதையுமோ படைத்தானோ என்று எண்ண முடியுமேயல்லாது. இதைத்தான் என்று நிச்சய மாகக் கொள்ளும்படி இராது. இவளைப் பார்ப்பவர்களுக்கு ஒரேமாதிரி தோற்றம் கொடுக்கும் வகையல்ல அழகிய அவள் முகம் அறிய முடியாத அவள் மனப் போக்குடன் அவள் முகத்தோற்றமடையும், சலனம்_அழகிற்குத்தான் எவ்வெவ்வகைச் சாயல்கள்_அவள் மனது வெகு நேர்மையானது. எந்த ஆடவனையும் நோக்கின மறுகணம் அவள் கண்கள் லேசாக மாசடைந்து பாதி முடிக் கொள்ளும், கனவென வாழ்க்கை கொண்ட கெளரிக்கு அன்று மனது சரியாக இல்லை.
பக்கத்து ஜங்ஷனை அடையும்போது பகல் பனிரெண்டு மணி இருக்கும். வண்டி நின்றவுடன் கையில் கூஜாவுடன் கப்பையர் இழே இறங்கினார். வண்டி புறப்பட மணி அடித்தாகிவிட்டது. கப்பையர் கூஜாவில் ஜலம் பிடித்துக் கொண்டு வந்தபாடில்லை. அவர் வராததில் சஞ்சலமடைந்தவளே போன்று, கெளரி வெளியில் அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'வண்டி புறப்பட நேரமாகிவிட்டது. அவரைக் கானோமே. என்று பேச்சை எடுத்த வாலிபன் திரும்பிய அவள் கண்களின் பார்வையைக் கண்டபோது ஒன்றும் புரியாமல் நிறுத்திவிட்டு அவர் வருவதைக் கவனிப்பது போல வெளியே பார்த்தான்.
வேகமாக ஓடிவந்த கிழவர் வண்டி ஏறுவதும்_டி நகருவதும் ஒன்றாக இருந்தன. இரைந்து சிரித்துக் கொண்டும் நடு நடுவே இருமிக் கொண்டும் வந்தவர் கெளரியைப் பார்த்தது ஒருவிதமாகத் தெரிந்தது. 'குழாயடியில் கூட்டம். நின்றுகொண்டே இருந்ததில் ஒன்றுமே புரியவில்லை. முந்தாநாள் உன்னையழைக்க உங்களுர் வரும் ஞாபகம்தான் வண்டி_தினதும் தான் ரயிலில் எதையோ மறந்துவைத்துவிட்டு வெளியே அங்கே நிற்பதான ஞாபகம் வந்தது._ன் ஞாபகம்தான்_. வேகமாக ஓடிவந்து ஏறிக் கொண்டேன். வயதாச் சோன்னோ_வண்டி போனால்தா_என்ன என்று தோன்றியது, ஓடிவரும் போது_அடுத்த வண்டி இல்லையா. துணைக்கு நீங்கள் இல்லையா ஸார். ரயில்லே போகிறபோதுதான் லார் குவியாக என்ன வெல்லாமோ தோன்றுகிறது. ஸ்நேகமும் அகப்படுகிறது. நாளைக்குப் பின்னாலே நடக்கப் போகிறதெல்லாம் நேத்திக்கு முன்னாலே நடந்தது போல காலம் எல்லாம் தலைகீழே மாறிப் போகிறது ஸார். என்று என்ன வெல்லாமோ இவளிடமும் அவனிடமும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்.
கெளரிக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை. தன் கணவனின் இவ்வகைப் பேச்சுக்கு ஆதாரமான கோளாறை அவள் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள் போலும் அறியாத ஒருவகை பயமும், தன் கணவனிடம் ஒருவித அனுதாபமும் அவள் மனது கொண்டது. தன்னைப் பற்றி தவறாக அவரவர்கள் அபிப்பிராயம் போனவாக்கில் கொள்ளாத வகைக்கு தான் எவ்விதம் இருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு தவறிய சூழ்நிலையில் தான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதான எண்ணம் கொண்டாள்_ரில் தன் தங்கையின் கலியான இரண்டாம் நாள்_அதை நினைக்கும்போது மனது வருத்தம் கொள்கிறது. தன்னால் ஆவது ஒன்றுமில்லை. விதி தனக்குத் தெரியாது பின்னின்று உந்தித் தள்ளத்தான் இருக்கிறது. ஏதோ நடக்கப் போவதில் நடந்ததென பின் ஆறுதலை முன்கூட்டிக்கொள்ளும்படிதான் இப்பொழுது இருக்கிறது. அவளால் மேலே யோசிக்க முடியவில்லை.
வாலிபன் கிழவரைப் பாத்து சொல்லிக்கொண் டிருந்தான். ஆமாம். நீங்கள் வராதது பெண்ணிற்குக் கூட ரொம்பகவலையாக இருந்தது.நான்க_அவன் முடிக்கு முன்-பெண்ணில்லைலார்_பெண்ணில்லை. அவள் நம்ப ம்ைலாரம் கெளரின்னு பேரு_ன்று சொல்லிச் சிரித்தார். வாய் நிறைய நின்றவரிசையான பொய்ப்பற்களைக் காட்டி அவர் சிரித்ததானது. பயங்கரம் தோன்ற இருந்தது. அவர் மூளை சமீப காலமாக ஏறாத ஒரு விருவிருப்புக் கொண்டிருப்பதை கெளரி உணர்ந்து கொண்டாள். காலையில் யார் முகத்தில் விழித்தோமோ என்று -ன்னைத்தானே நொந்து கொண்டாள். நல்லபடியாக உரையாவது போய் அடைவோமா என்ற கவலையில், வேகம் கொண்டு பேசத் தன் கணவனுக்கு ஒரு வாலிபன் எதிரில் அகப்படுகிறான்!
ஒகோ_ஒய்யா_ஏதாவது குழந்தை குட்டிகள்'
'இல்லை ஸார், இனிமேல்தான். ஆசிர்வாதம்' என்றார் கிழவர்.
கெளரி எங்கேயாவது ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் கணவனைப் பார்த்தாள். அவரைப் பார்க்கும் போது மனது வேதனைதான் கொள்ளுகிறது.
கெளரி உன்கிட்ட ஒரு சமாசாரம். குழாயடியில் உன்னை மறந்து நின்றிருந்தேன் என்று சொல்ல வில்லையா? அப்போது கூட்டத்தில் ஒருவன் உங்க எதிராளத்து கப்பிணி மாதிரி இருந்தான். அவ_ரிலே விட்டு வந்தோமே எங்கே இங்கே ரயிலைத் துரத்திக் கொண்டு தொத்தி ஏறிக் கொண்டா வருகிறான் என்று நினைத்துக்கொண்டு_ப்பிடலாம் என்றுவயெடுத்தேன். அவன் நல்ல வேளைய திரும்பினான். அவன் இல்லை. அவனே போலத்தான்_ரொம்ப வேடிக்கை லார், கப்பிட்டுவிட்டு இல்லை என்று தெரிந்தால் லார்_ கெளரியைப் பார்த்துக்கொண்_ேபட்டம் அவளுக்கு வழங்கியதை நினைத்து திடுக்கிட்டு இவன் பக்கம் திரும்பி,
...வேடிக்கை ஸார். வேடிக்கை எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்க சாயலும் உண்டு லார். வாலிபமாக் சோன்னோ_...வேடிக்கை ஸார். வேடிக்கை எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்க சாயலும் உண்டு லார். வாலிபமாக் சோன்னோ_
'கப்பிணி என்ற வார்த்தை முள்ளென பலவித அருத்தத்தில் கெளரியைக் குத்த உபயோகிக்கும் ஒரு அஸ்திரம். அவள் எதிராளத்து_ப்பி_ன்பவனுக்கு. சிறுவயதில் தன்னைத் தன் பெற்றோர்கள் கலியாணம் செய்து முடிக்க எண்ணியதும், அது நடக்காமல் போனதும் கெளரியின் குற்றத்தினாலல்ல. இந்த விஷயமும் கப்பய்யருக்கு ஏதோ ஒரு சமயம் அவள் சொல்லித்தான் தெரியும் பல்விதத்தில் அவள் மனது நோக அருத்தம் கொடுக்குமாறு அவர் எப்போதாவது கப்பிணி என்ற பதத்தை அந்தந்த சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எடுப்பார். கப்பய்யர் அப்போது ஒன்று தெரிந்து கொள்ள வில்லை. புண்பட்டுக் காய்ச்சிய மனதிற்கு நோவில்லை என்பதைத்தான். அவிழ்ந்து பறந்த புடவையின் முந்தானை தன் கணவன் முகத்தில் பட, அதைப் பிடித்து இழுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் செருகிக் _ொள் கெளரி.
ஒரு சிறியஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஏராளமான ஜனக்கூட்டம் இறங்கியது. அந்த ஊரில் சந்தை கூடுகிறது போலும், மணி அடித்து வண்டியும் நகர்ந்தது.
'கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணி அடிக்க வேண்டும் ஸார் வண்டி மேற்கே போக இரண்டு தரம்_உங்களுக்கு தெரியுமாலார் மாத்தி_அடி_வண்டி போகிற பக்கம்தான்போகும்.ஆனால்திக்குதிசைமட்டும் மாறி விடும். கிழக்கு மேற்கா, தலை கீழா_வ்வளவு இருக்கிறது தெரிகிறதா ஸார். எவ்வளவு கவனமும் விரத்தையும் வேண்டும் மணி அடிப்பவனுக்குக்_ அதோ அவன் நிற்பதைக் கவனியுங்கோலார்_திக்குதிசை தெரியாதுமாறாமலிருக்கப் பார்த்துக்கொண்டு.
'கப்பிணி என்ற வார்த்தை முள்ளென பலவித அருத்தத்தில் கெளரியைக் குத்த உபயோகிக்கும் ஒரு அஸ்திரம். அவள் எதிராளத்து_ப்பி_ன்பவனுக்கு. சிறுவயதில் தன்னைத் தன் பெற்றோர்கள் கலியாணம் செய்து முடிக்க எண்ணியதும், அது நடக்காமல் போனதும் கெளரியின் குற்றத்தினாலல்ல. இந்த விஷயமும் கப்பய்யருக்கு ஏதோ ஒரு சமயம் அவள் சொல்லித்தான் தெரியும் பல்விதத்தில் அவள் மனது நோக அருத்தம் கொடுக்குமாறு அவர் எப்போதாவது கப்பிணி என்ற பதத்தை அந்தந்த சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எடுப்பார். கப்பய்யர் அப்போது ஒன்று தெரிந்து கொள்ள வில்லை. புண்பட்டுக் காய்ச்சிய மனதிற்கு நோவில்லை என்பதைத்தான். அவிழ்ந்து பறந்த புடவையின் முந்தானை தன் கணவன் முகத்தில் பட, அதைப் பிடித்து இழுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் செருகிக் _ொள் கெளரி.
ஒரு சிறியஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஏராளமான ஜனக்கூட்டம் இறங்கியது. அந்த ஊரில் சந்தை கூடுகிறது போலும், மணி அடித்து வண்டியும் நகர்ந்தது.
'கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணி அடிக்க வேண்டும் ஸார் வண்டி மேற்கே போக இரண்டு தரம்_உங்களுக்கு தெரியுமாலார் மாத்தி_அடி_வண்டி போகிற பக்கம்தான்போகும்.ஆனால்திக்குதிசைமட்டும் மாறி விடும். கிழக்கு மேற்கா, தலை கீழா_வ்வளவு இருக்கிறது தெரிகிறதா ஸார். எவ்வளவு கவனமும் விரத்தையும் வேண்டும் மணி அடிப்பவனுக்குக்_ அதோ அவன் நிற்பதைக் கவனியுங்கோலார்_திக்குதிசை தெரியாதுமாறாமலிருக்கப் பார்த்துக்கொண்டு.
ஒடிகொஞ்சம் கொஞ்சமாக தெளிவுபடலாயிற்று. பாவம் என்னவாயினும் அவள் சிறு பெண்தானே? இருபது வயது கூட இருக்காது. கால வித்தியாசம் என்பதால் தன்னைப் பிடிக்க கிழவனும் வாலிபனும் ஒன்றெனத்தான் தென் படுகிறார்கள். காலையிலிருந்து தன்னைப் பிடித்த சனியன் பல ரூபத்தில் ஆட்டுகிறான். கிழவனாகிக் கணவனாகி றான். ஒடும் ரயிலிலும் தொத்தி ஏறி எதிரில் உட்கார வாலிபம் கொள்கிறான்; தான் பிறந்தவுடன் தன் உயிரைப் பிடித்த சனியன் தன் பெண் உருவம் என்பதை அவள் அறிந்தாள் போலும்உயிரைக் கொண்டு உடம்பைத் தொலைத்து வாழ முடிகிறதில்லை. பெண்களென்றால் ஆறுதலுக்கு அழுவதற்குமில்லை. சிரிப்பதற்குமில்லை ஆடவர்களிடையே அவள் மார்பிலிருந்து விம்மி யெழுந்த மூச்சானது சப்தமற்றுத்தான் வெளிக்கலந்தது. மனதில் ஒரு சக்தி வேகம் கொள்ள அவள் முகம் தெளிவடைந்து காணப்பட்டது. உலகைத் தழுவும் பெண்மையை விசுவ ரூபத்தில் கொண்டாள் போலும்.
வெளியே சென்ற கிழவர் மெதுவாகவே தின்பண்டங் களை வாங்கி வந்தார். வரும்போதே தன் வருகையை சிரிப்பிலும் இருமலிலும் முன்னதாகவே தெரிவித்துக் கொண்டு வந்தார். ஒரு சந்தேகத்தை ஒரு வகையாக நிச்சயமெனத் தீர்த்துக்கொள்ள அவர் மனது பயம் கொண்டது போலும். வாங்கி வந்ததை அவன் கையில் கொடுத்தபோது, அவன் மற்றொரு கையை சட்டை ஜேயில் கொண்டு போனான். பாதகமில்லை ஸார். கையை வெளியில் எடுங்கள். ஒன்றும் பிரமாதமில்லை. அசல் ரயில் சிநேகிதம் போல பழகுகிறீர்களே. நான் உங்களைக் கண்டவுடனே கேட்கவில்லையா? யாரோ எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என்று. என்று சொல்லிச் சிரித்தார்
நல்ல கோடை, பிற்பகல். வரண்ட வாய்க்கால், வயல்களின் குறுக்கே ரயில் க்கொண்டிருந்தது. எட்டிய
பனந்தோப்புகள் தெரிந்துகொண்டும் ஒன்று மறைந்த பின் மற்றொன்று தெரியவும் மறையவும் வரிசையாக வந்து கொண்டிருந்தவை. ஒன்றே மறைந்து தோற்றம் கொடுத்து விளையாடுவது போன்று தோன்றியது. இங்கு மங்குமாக ரயில் பாதையருகில் தோன்றி மறையவிருக்கும் குட்டை களின் குழம்பிய சேற்று நீரில் எருமைகள் இன்பத்தில் மூழ்கிப்புரண்டுகொண்டிருந்தன. அவள் எதிரில், தனக்குத் தோன்று முன்பேமறைய இருக்கிறதேதன்மணஇன்பம் என நினைத்தான் வாலிபன். ஒருகால் பிறர் ஆனந்தத்தைத் தோன்றுமுன் விழுங்க இருக்கிறதா அந்தக் கிழயூதம் என அவரைப் பார்த்தான். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் தொலைந்தால் தன் இன்பம் சாசுவதமாகுமா? மேலே யோசிக்க முடியவில்லை. பாவம் அவனால் என்ன செய்ய முடியும் அவனால் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருக்கவும் முடியவில்லை. அங்கிருந்து நழுவிப் போய் எட்டிய அந்த காலியிடத்திலும் உட்காரும் வழி புரியவில்லை. ஏதோ ஒரு சங்கடத்தில் தான் அகப்பட்டுத் தத்தளிப்பதான எண்ணம் அவன் மனதில் கொண்டான். மாலைப்பொழுது கண்டு கொண்டு இருந்தது. அடித்த பஞ்சு போன்று ஆகாயத்தில் மேகத் திட்டுகள் மிதந்து கொண்டிருந்தன. மேற்கு அடிவானத்தில் அசைவற்றுக் கிடந்த மேக முகப்புகளுக்கு பொன் வரம்பு காட்டி சூரியன் மறைய இன்னும் கொஞ்சநேரம் இருந்தது.
கெளரியின் கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தன. சலிக்கும் அவள் முக அழகும் ஒரே விதத்தில் தோற்றம் கொடுத்தது. விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவது தானா ஆடவர் வாழ்க்கை கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால்?
இருள் சுடரைக்கொண்டு விளக்காக முடியுமா? தன்னைத்தானே நொந்து கொண்டாள். அவள் கண்கள் சோர்வு கொண்டு பாதி முடிக் கொண்டன. எல்லைக்கோட்டருகில் தெரியும் ஒரு வெளி அதனைப் பொருள் கொள்ள அவளுடைய பகற் கனவினாலும் முடியவில்லை போலும்.
தோப்பின் நடுவில் நின்ற ஒரு சிறுகுடிசைமரத்திடை எட்டிப் பார்ப்பது போலத் தெரிந்தது. ரயிலோடு மெதுவாக கொஞ்ச தூரம் ஊர்ந்து வந்தது. அதுவும் பின் தங்கி பார்வையில் மறைந்து விட்டது. ஒரு பயங்கரத்தின் நடுவில் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்க முடிகிறது? நின்றவிடத்திலிருந்துயிரியும்பாதைகளென எண்ணற்றவை நேராகக்கொஞ்சதுரம் சென்று திருப்பத்தில் கோணலாக வளைந்து மறைந்து கொண்டன. அநேகர் தன்னை விட்டு விட்டு, எட்டி தன் தலையை மட்டும் சுமந்து கொண்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தனர். ஒன்று கூடி தனக்குத் தெரியாமலே தன்னப் பற்றி சதியாலோசனை செய்கிறார்கள். நெருங்கித் தெரிந்தாலும் புரியாத வழிக்குத் தான் தன்னைக் கலக்காமல் எட்டி மறைகிறார்கள். ஏதோ உருளும் சப்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
சாலை ஓரத்தில் ஒரு கிழவி உட்கார்ந்துகொண்டிருக் கிறாள். அவளைத் தெரியாமல் மறைத்து முடிக் கொண் டிருக்கும் புற்கள் கூரிய கோரைப் பற்களாக இருந்தன. வெகு அப்பால் உள்ள ஒரு அழகிய நகரை அடையும் ஆவலை அவள் வெகுநாளாகப் பாடிக்கொண்டு இருக்கிறாள். உள்ளம் கவரும் ஒரு தேம் இவளைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு கிட்டே நெருங்க பயம் கொள்கிறது. என்ன கெளரி, தூக்கமா...' என்றார் கப்பய்யர் இல்லை எனச் சொல்லி ஏதோ பேசிக்கொண்டிருந்த அவரையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.
... அப்பாலும் இப்பாலும் ஒரு கீதம் மெளனமாக ஒலிக்கிறது. ஏ குட்டி என்ன பாட்டு என்று பார்த்தவுடன் புற்கள் காற்றுடன் ஓடிவிட்டன. தனது பொக்கை வாயைத் திறந்து காட்டி எத்தனை பேரோ பார்த்தாகி, நீ தானா
பாக்கி?...' என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் தலைமயிரைக்கோதிக்கொண்ட போது தன் தலையைக் காணவில்லை. சதியாலோசனைக் காரர்களிடம் விட்டு வந்தது ஞாபகம் வந்தது. எதை தனக்குத் தெரியாததை எழுதி தலைக்குள் புகுத்தி விடுகிறார்களோ என்ற பயத்தில் நின்று கொண்டு கற்றும் முற்றும் கவனித்தாள். அவர்கள் தங்களிஷ்டமான யோசனைகளுடன் தலையைத் தூக்கிக்கொண்டு வந்தனர். இவளைத் தேடி ஜே_ஜே எனக் கோஷமிட்டுக் கொண்டு இவளைச் சுற்றிச் சுற்றி தேடி அலைந்து கொண்டிருந் தார்கள். வாடி வதங்கிய பூக்கள் அப்பால் ஆடிக் கொண்டும் அழுது கொண்டுமிருந்தன. அவைகளின் மணம் ஒருவர்மூக்கிலும்படாது. மறைந்து, பதுங்கி, எட்டே ஒடி சிரித்துக் கொண்டிருந்தது. பூக்களின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் கெளரி. தன்னைச் சுற்றிலும் ஒரு ஒளி வெறிச்சென்று காய்ந்து கொண்டிருந்தது. மறையும் சூரிய கிரணங்கள் ரயில் ஜன்னல் வழியாக இவள் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது. திடுக்கிட்டுக் கண்விழித்தாள்.
தன் கணவன் எதையோ வெகு சுவாரஸ்யமாக இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான். வெகு அலுப்பில் சிரத்தையாகக் கேட்கும் பாவனையில், அடிக்கடி தலையை ஆட்டிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அனுதாபங்கொண்டு ஏன் இந்த துன்பமெல்லாம் உனக்கு எனக் கெளரிக்குக் கேட்கத் தோன்றியது. அவள் அவனைப் பார்த்த பார்வைகூட அலுத்துக் கொண்டான் போலும், அவள் பக்கம் பார்க்காமலே வேறுபக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான்.
ஆமாம் லார், நான் சிறிது முன்னால் சொன்னேனே புரிஞ்கதோன்னோ. வெளியே பார்க்காதே அம்பி, கண்ணில் தூசி விழும். ரொம்ப தொந்திரவு கொடுக்கும். நேரே இங்கே பாருங்கோ... ஏன் எதற்கென்றால் அவ அப்பன் பாட்டன் யார், எவர் என்று கேட்காதே.
வேண்டிய ஸ்டேஷனும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டேஷன் ஊரிலிருந்து கூட வண்டி வந்து இருக்கலாம். என்று அவளிடம் சொல்லி அவள் கொடுத்த தீர்த்தம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இடதுமாரை ஒரு கையால் அமுக்கிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்த வாலிபனைப் பார்த்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார்.
சொல்லுகிறதெல்லாம் பாதியிலே விட்டுப் போகிறது சொல்ல வந்ததை எல்லாம் எப்பவோ சொல்லியாகிவிட்டது என்றுகூடத் தோன்றுகிறது. ஆமாம் பிரும்மாவிற்குத் தூக்கம் வந்து விட்டது. விஷ்ணுவைக் கேட்டான் "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு. ஒரு சின்ன துக்கம் போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன்" என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அந்த சாப்பாட்டு ராமன் சரி என்றான். சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம் முடியவே முடியாது. நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது. இப்போதுதான் எனக்குக் குஷி கண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டான். என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை. கோபம் வருகிறது. ஆனால் யார் யாரை என்ன செய்ய முடியும் லார். இந்தக் காலத்திலே எல்லோரும் ஈசுவரர்கள் இல்லையா? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவாதலை எழுத்துப்படி ஆகட்டும் நடக்கப்போவதுதான் நடந்தது. ஆகப் போகிறது தலை எழுத்தாக என நினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் கேளுங்க லா ரொம்ப வேடிக்கை. என்ன் உங்களுக்கும் என்ன துக்கமா? '.
சிவன்_அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்து கொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம் குவியில், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக் கொண்டே இருந்தான் ஸார். பிரும்மா துங்கிக் கொண்டு இருக்கான் படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து
அப்பனையே தெரிந்துகொள்ளமுடியாதென்றால்,பாட்டன் எங்கிருந்து குதிப்பான்?... ஆனால் அப்பன் வைத்த ஆஸ்தியாகத்தானே ஒரு வேலையை மூன்று பேரும் கண்டிஷனோடு பிரித்துக் கொண்டார்கள். ஒரு முழு வேலையை இந்த பிரகஸ்பதிகள் மூன்றாகப் பிரித்துக் கொண்டார்கள். செய்தால் மூன்று பேரும் சேர்ந்து செய்யவேண்டும் நிறுத்தினால் மூன்று பேரும் சேர்ந்து 'ரெஸ்ட் எடுத்துக்கவேண்டும்.
'இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித் தார்கள். ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக. கிரேதாயுகம். திரேதாயுகம். துவாபர யுகம். முழுசா மூன்று யுகங்கள் ஐயா. ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம்தான் வேலை கலைந்து சாப்பிட்டுத் துங்க கலி பிறந்ததே பாருங்க ஸார், நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத்தான் சொல்லுகிறேன். அதுதான் பாக்கி அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி ப்ேபி, பொடி கிடி என்று என்ன வெல்லாமோ குடித்தும்போட்டும் பார்த்தான் போலிருக்கிறது. இதைத் தான் லார் அந்த புராணத்தில் நன்றாக சொல்லி இருக்கிறதுநான் படிச்சு இருக்கேன், ஒரு காலத்திலே பக்தி சிரத்தையாக, வேதாந்தம், புராணம், அது இது என்று என்னவெல்லாமோ படித்து, முடித்து கண்டது என்ன இப்போது?. உங்களைத்தான், ஐயா நீங்களும் இதைக் கேட்டது உண்டா? கண்டது என்ன என்று தான் சொல்ல முடிகிறதா? போகிறவழியும் தெரியவில்லை. வந்தவழியும் நன்றாகப் புரிந்த பாடில்லை. விட்டுத் தள்ளுங்கோ எல்லா வற்றையும் லார். எனக்கென்ன வேண்டி கிடக்கிறது? எனக்கு நடக்க வேண்டியதெல்லாம் நடந்தாச்சு என்பது தானே இனிமேல் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் கெளரி பக்கம் திரும்பி கெளரி மாரைக் கொஞ்சம் வலிக்கிறது. கூஜாவிலிருந்து ஜலம் கொஞ்சம் எடு. இறங்கவேண்டிய ஸ்டேஷனும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டேஷன் ஊரிலிருந்து கூட வண்டி வந்து இருக்கலாம். என்று அவளிடம் சொல்லி அவள் கொடுத்த தீர்த்தம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இடதுமாரை ஒரு கையால் அமுக்கிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்த வாலிபனைப் பார்த்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார்.
சொல்லுகிறதெல்லாம் பாதியிலே விட்டுப் போகிறது சொல்ல வந்ததை எல்லாம் எப்பவோ சொல்லியாகிவிட்டது என்றுகூடத் தோன்றுகிறது. ஆமாம் பிரும்மாவிற்குத் தூக்கம் வந்து விட்டது. விஷ்ணுவைக் கேட்டான் "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு. ஒரு சின்ன துக்கம் போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன்" என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அந்த சாப்பாட்டு ராமன் சரி என்றான். சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம் முடியவே முடியாது. நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது. இப்போதுதான் எனக்குக் குஷி கண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டான். என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை. கோபம் வருகிறது. ஆனால் யார் யாரை என்ன செய்ய முடியும் லார். இந்தக் காலத்திலே எல்லோரும் ஈசுவரர்கள் இல்லையா? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவாதலை எழுத்துப்படி ஆகட்டும் நடக்கப்போவதுதான் நடந்தது. ஆகப் போகிறது தலை எழுத்தாக என நினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் கேளுங்க லா ரொம்ப வேடிக்கை. என்ன் உங்களுக்கும் என்ன துக்கமா? '.
சிவன்_அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்து கொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம் குவியில், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக் கொண்டே இருந்தான் ஸார். பிரும்மா துங்கிக் கொண்டு இருக்கான் படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து சொல்லிக் கொண்டே ஊர் வந்துவிட்டது என்று வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்ந்தார். பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டுக் கீழே விழாது தப்பினார்.
வாலிபன் அவ்விடத்தில் இருப்புக் கொள்ளாமல் மெதுவாக நழுவி மூலையில் காலியாக இருந்த ஒரு இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
- சிவாஜி 1954