Saturday, 31 October 2015

மனக்கோலம், சாவில் பிறந்த சிருஷ்டி- மௌனி

மனக்கோலம் - மௌனி
https://archive.org/stream/orr-11357_Manakkolam?ui=embed#page/n6/mode/1up
இரவுவெகுநேரம் கழிந்தபின்பு சிறிது அயர்ந்தவன் ஒரு ஒலக் குரல் கேட்க, திடுக்கிட்டு விழித்தெழுந்தான். கடிகாரம்_அப்போது இரண்டு மணிதான் அடித்தது. கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ள வில்லை. சஞ்சலத்திலும், ஒரு நிகழ்ச்சி நேரப் போவதை எதிர்பார்த்தலிலும், நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்குக் கொஞ்சம் அயர்வு தோன்றுகிறது. சாமக் கோழி அப்போது இரண்டுதரம் கூவி விட்டு நிசப்தமாகியது. நான்கு கவரால் அடைபட்டது போன்ற அவ்விரவின் இருள் அவனை அச்சுறுத்தவில்லை. ஆனால் கவர்க்கோழியின் இடைவிடா சப்தம் கருதியாக மெளனம் பயங்கரமாகியது. அவன் எழுந்து மேற்கு நோக்கிய ஜன்னல் கதவுகளைத் திறந்தான். சந்திரன் வானத்தின் உச்சியிலிருந்து வெகுதூரம் சரிந்துவிட்டது. மெல்லிய மேகங்கள் ஆகாயத்தைத் துளவிமேய்ந்தன. ஜில்லெனக் காற்று அவன் முகத்தில் பட முகம் வியர்வை கொண்டது. "சிறிதுதான் அயர்ந்தேன். ஆம். அவள் இன்னும் வர வில்லை. உதயம் காணுமுன் வருவதற்கு இன்னமும் நேரமுண்டு. ஒருக்கால் நான் அயர்ந்தபோது வந்து போய் விட்டாளோ இல்லை. அவளால் முடியாது. எல்லோ ருடைய தூக்கத்திலும் வருபவள் நான் துங்கும் போதா வருவாள். என்னைத் தட்டி எழுப்பாமலா போய் விடுவாள்_அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை. 
விரல்களின்றியும் விணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்_அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான்.
அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது._அவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்_ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?_இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக்விடுவாள்_அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை. விரல்களின்றியும் விணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்_அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான். அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது._அவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்_ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?_இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக் கூடாது என்று அந்த அறையைக் குறுக்கு நெடுக்காக நடந்து துளாவுவான்.

கிழக்கு வெளுத்து உதயம் கண்டது. இருட்டு உள்ளளவும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்குமொரு அமைதி அவள் வராதது கண்டு மறுபடியும் பகலைக் கழித்து இரவு வருவதை எதிர் பார்த்தலில் அமைதி இன்மையாக மாறக் கண்டான். உறங்குவதற்கு இரவு அவனுக்கு உறுத்தாத பாயாக விரியவில்லை. புரண்ட விழிப்பிலோ வேலை கொள்ளப் பகலில்லை. மறுபடியும் இரவைத்தான் எதிர்பார்க்க ….

கேசவனுக்கு வாழ்க்கை லட்சியம் என்பது என்ன வென்றே புரியவில்லை. உலகில் எத்தனையோபோபுரியாத வாழ்க்கை நடத்தும் விதமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் மனோபாவம் வெகு விநோதமாகத்தான்_அமையப் பெற்றது. அவன் பிறந்த வேளையின் கோளாறு போலும்! எந்த விஷயமும் இவ்வளவுதான் என்ற மதிப்பிற்கு அகப்பட்டுநிலைத்தால் அல்லாது.அதன் தேவை எவ்வளவு என்பது புலனாகாது. நிலை கொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்துகொண்டே போனால், மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்தத் துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியினமாகப்படுகிறது. எல்லாம் தெரிந்தும் கூட அவனால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. இந்த மன வெறி யாட்டத்தில் களி கொண்டு எட்டிப் பார்த்து நிற்பவனா கடவுள்? அப்படியாயின் அவனை கேசவன் கருணையில் பார்க்க முடியவில்லை. பிடிபடாத பைத்தியக்காரத் தனத்தில் தான் சிற்சில சமயம் அவன் அகப்படுவதான எண்ணம்_அவனுக்கு.

கேசவனுக்குப் பழமையில் நம்பிக்கை இல்லாதத னால், புதுமை என்பது மனத்திற்கு இசைவதாக இல்லை. பச்சைவெட்டாக, உயிரற்று அழுகும் பழமையிலும் கேவலமாகத் தான் தெரிந்தது புதிய நாகரீகப் பண்பு. வாழ்க்கைப் பாட்டையில் அநேக விஷயங்களைப் பழக்க வழக்கங்களாக்க வேண்டும். அவைகளிடம் சிந்தனை களைக் கொள்ளவே இடமிருக்கக் கூடாது. ஒவ்வொரு நித்திய விதியையும் ஆராய்ந்து செய்ய மனிதனுக்கு அவகாசம் கிடையாது. ஒளியற்ற பழைய வழியிலும் மனது செல்லாது. புதிது என்ற ஆபாசத்திலும் சுருக்கம் கொண்டு கேசவன் சிந்தனைகளிலே காலத்தைக் கழிக்க ஆரம்பித் தான். அதிர்ஷ்டவசமாக அவன் தாயார் தகப்பனார் அவனுக்கு நல்ல ஆஸ்தியைவிட்டு, அவனுடைய இருப தாவது வயதிலே இறந்து விட்டார்கள். சென்ற நான்கு வருஷங்களாக அந்த நகரில் தன் வீட்டில் தனியாகக் கல்யாணமின்றி தன் சிந்தனைகளிலே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.
யோசனைகளிலேயே ஒருவன் எப்போதும் வாழ்க் கையைக் கழிப்பது முடியாது. பசிப்பிணி முதலியவை களின்றிக் காலம் கடத்தும் மிருக வாழ்க்கையாகத் தோன்றும் அது. தான் படைக்கப்பட்டவன் என்று எப்போதாவது உணரும்போது, ஏன், எதற்காக என்ற கேள்விகள் தானாகவே மனதில் எழும். இத்தகைய கேள்விகளை மனது விழுங்கவேண்டுமாயின், புற உணர்வு மயமாகவும், காரணகாரியமற்று சம்பவங்களைக் கொள்ளும் விதமாகவும் தான் ஒருவன் இருக்க முடியும். எப்போதும் எவ்விதம் இவ்விதமாக இருக்கமுடியும் ஒருவனால்?

கேசவன் வாழ்க்கையில் கெளரி குறுக்கிட்டபோது அதையும் ஒரு சம்பந்தமற்ற நிகழ்ச்சியாகத்தான் அவன் எண்ணினான். அண்டை விட்டு கப்பையர் மனைவி என்பதைத் தவிரவும் காலையில் வாயிலில் சிற்சில சமயம் கோலம் போடுவதை இவன் திண்ணையில் நின்று பார்ப்பது என்பதைத் தவிரவும் வேறொரு சம்பந்தமும் முதலில் இல்லை. இவன் மனம் சித்திரம் கொள்ளக் கோலம் வரைகிறாள் என்று எண்ணிய இவனை ஒருநாள் நிமிர்ந்து உள்ளே போகுமுன் பார்த்தாள். சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷயப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான். அவள் முகமே விழிகளென இவனைப் பார்த்துவிட்டு உட்சென்று விட்டாள் கெளரி அவள் எண்ணம்_அவன் மனத்தை விட்டு அதற்குப்பின் அகலாது ஒரு லகூடியமாக நீண்டது. அவள் வேறு ஒருவரின் மனைவி என்பதை அவன் மனது ஏற்க மறுத்தது.
இரவு காணும் முன்பே மெல்லெனக் காற்று வீச ஆரம்பிக்கும். வாயிற்புறத்திலிருந்துமலரின் மணம் மிதந்து வந்துமயக்கம் கொடுக்கிறது. அந்திவேளையின் சூரியஒளி ஒரு இன்ப வேதனை நிறத்தில் தோன்றுகிறது. சில சில நாட்களில் சூரியன் மறையுமுன்பே மேற்கிலிருந்து மேகத்திரள்கள் மேலோங்கி விடும். மேக முகப்பு பலவித வர்ணப்பாடுகளுடன் காணப்படும்_அவன் இவைகளை, பார்த்து உணரும் உணர்ச்சிகள், இரவின் வருகையில் கொள்ளும் இன்பமயமான கனவுகள்தான். அவ்வேளை களில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற்பான். சில சமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்கு போகப் பார்க்க நேரிடுவதும் _ண்டு.
அவை காரணமின்றி நடக்கும் சம்பவங்கள் என அவன் கொள்ளுபவைகள்தாம். துக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக் கான ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும் அவன் நின்று பார்க்கும் மறதியில் எவ்வளவு நேரம் அவன் வாழ்க்கை துங்கிவிட்டது. நீளுகிறது. நேற்று நடந்ததை ஞாபகப் படுத்திக் கொள்ளும்போது நடந்ததா என்பதாகிறது. நடக்கிறதோ எனில் அப்படியே காலமென்பதின்றி. காலத்தையும் மீறியதாகிறது. நாளைக்கு நடக்கப்போவது


அவனுக்கு நிச்சயமில்லை. எதிர்பார்க்கும் சந்தேகத்தில் அவன் இளமையும் சிக்குண்டு பாழாகிறது. அமைதியை இவ்விதம் அடிக்கடி இழப்பவன் அமைதியை வேண்டு பவன் அல்ல. அமைதியை இழப்பதில்தான் அவன் அமைதி அடைகிறான் போலும். அது கேசவனுக்கு சாந்தமும் சமாதானமும் கொடுக்கவில்லை.உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கணமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது. விடை கண்டால் புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது. எனினும் அறியாததொன்றுதன்னை எதிரே சூனியத்தில் பலமாக உந்தித் தள்ளுகிறதா_இழுக் கிறதா_காலை கண்டுவிட்டது காகங்கள் கூட்டை விட்டு வெளியே பறந்து சென்று கொண்டிருந்தன. உலகமும் பகலில் நகர ஆரம்பித்தது. நிம்மதியின்றிப் பகலெல்லாம் இரவின் வரவே எதிர்நோக்கி நிற்க வேண்டும். இரவிலோ வெனில் அவளை எதிர்பார்த்து நிற்பது கொஞ்சம் அமைதியைக் கொடுப்பதாக இருக்கிறது.

கையால் ஆகாதவன்தான் கணவன் ஆகிறான். பசிக்குப்பிச்சை கேட்கயாரிடமும் எந்நேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு விடு தனக்கென்று ஒரு மனைவி தன் பலவினத்தை _ணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க மறைக்கதான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான். கேசவனுக்கு கப்பையரின் மனைவி அருவருப்பைத் தான் கொடுத்தாள். ஆனால் கெளரியின் நினைவில் ஒரு பயங்கரம் சப்தித்தது.

இரவு கண்டுவிட்டது மனவேதனை இன்பவேதனை என மாறாமலே கொஞ்சம் குறைவதாயிற்று. அவன் மனது சொல்லிக்கொண்டது.அவன் காதில் விழவில்லை. இன்று அவள் நிச்சயம் வருவாள். நேற்றிரவு அவள் வந்ததோ
வராததோ ஒன்றாகத்தான் அவன் மனதில் சந்தேகத்தில் மறந்து மடிந்தது. ஒரு_ணம் அவள் வருவதும் போவதும் என்ற எண்ணம்கூட சரியெனப்படவில்லை. இவ்வகை நிலையில் வெகுநேரமானதாய் ஒரு தோற்றம் கப்பையரின் அருகில் கெளரி துங்கிக் கொண்டு இருக்கிறாள் - பின் நின்று கொண்டு இருக்கிறாள். இந்த இருளும், எதிரில் நிற்கும் அவளுடைய முகம் காண ஒளி கொடுக்க வில்லையே! உள்ளுற உறைந்து தடித்ததொரு உணர்ச்சி வேகம் அவனை வெகு துரம் உந்தித் தள்ளிவிட்டது. நிற்கும் இடத்திலிருந்து வெகு சமீபத்திலேதான் ஆரம்ப . இறுதிகளின் எல்லை. மயங்கிய தோற்றம் கொடுக்கிறது. மனது வெடிக்கும் ஏக்கத்தின் புரளலில் ஏதாவது இடம் சித்திக்காதா என்ற நம்பிக்கைதான். கேசவனால் பிறிதான ஒரு பெண்ணையும் புறத்தில் பார்க்க முடியவில்லை. அகத்தில்தான், பிளவுபட்ட ஒரு பாகத்தில் கெளரியைக் காண்பான் ஒரு சமயம் அக்கணமே அழிந்து சுப்பையரின் மனைவியாக மாறி விடுகிறாள் அவள் கொஞ்சம் இரைந்தே கெளரி எனக் கேசவன் கப்பிட்டான்.
பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம். ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவமாகும் கற்பனைக் கோட்டை_ அனைத்த கை சர்ப்பமாக அன்றோ_அவன் மேல் நெளிந்தது ஆம் சர்ப்பம் ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் கற்றி ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து நக்கி முத்தமிடும் ஆர்வத்தில் - நீட்டி விழுங்கும் அவைகளின் நாக்குகள். அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அவனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.
பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில் நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத்தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது. தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்ற தொரு உணர்வை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று_ருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது. காலை காண ஆரம்பித்தது.

சாவில் பிறந்த சிருஷ்டி
ஒரு மாதம் முன்பே கெளரியை அவள் தங்கையின் கலியானத்தை முன்னிட்டு பிறந்தகம் அனுப்பிவிட்டு தனியாக வீட்டிலிருந்த கப்பய்யருக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது. மனைவியை முன் கூட்டியே அனுப்பியதன் தவறுக்கு தன்னையே நொந்து கொண்டார். ஒவ்வொரு நாளையும், துன்புறுத்தும் ஒவ்வொருநாளாக கணக்கிட்டுக் கொண்டிருந்த கப்பய்யருக்கு தன் மைத்துணியின் கலியாணம் வெகுவாக தாமதப்பட்டு வருவதாகத் தோன்றியது. கலியானத்தன்று போவதாக எண்ணியிருந்த அவர் புது மாப்பிள்ளை வந்து இறங்குமுன் முதல் மாப்பிள்ளையாக தன் மனைவி ஊர் போய் சேர்ந்தார்.
சுப்பய்யருக்கு ஐம்பது வயது இருக்கலாம். அவர் மதிப்பிற்கு குறைவாகவே தோற்றமளிக்கும் சரீர முடையவர். குழந்தைகளின்றி, பத்துவருஷங்களுக்குமுன் அவருடைய மூத்த மனைவி நோய்வாய்ப்பட்டு கொஞ்ச நாள் இருந்து இறந்துவிட்டாள்.அதற்குப்பிறகுநான்கைந்து வருஷம் கல்யாணம் செய்துகொள்ளாமலே அவர் காலம் கழித்தார். பிறகு கெளரியை மணம் புரிந்து கொண்டு நாலைந்துவருஷம் ஆகிறது. சிறுவயதில் தாய்தந்தையை இழந்து பிரமச்சாரியாக வாழ்ந்த தனிமையையும் தன் மனதில் நன்றாக உணர்ந்தவர். ஆயினும் கடந்த ஒரு மாதமாக கெளரியை ஊருக்கு அனுப்பியதிலிருந்து அவர் கண்ட தனிமை ஏதோ ஒருவிதமாக மனதில் சஞ்சலம் கொடுப்பதை உணர்ந்தார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் கெளரியை பிறந்தகம் அனுப்பியதே இல்லை. எப்போ தாவது, அவ்வப்போது, ஏதாவது ஒரு காரணம் காட்டி தட்டிக் கழித்து விடுவார். சரியெனக் கேட்கும் தன் மனைவியின் மனப்போக்கை அவர் அப்போது ஆராய்ந்து அறிந்து கொள்ளாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவளும் போவதற்கு இஷ்டப்படவில்லை என தன் மனதிற்குகந்தவாறு சமாதானம் அடைவதுண்டு. தன் சுயநலத்தை அறியாது அவளுடைய சவுகரியத்தின் பொருட்டே தான் செய்வது சரி என்ற நினைவில் மனது சமாதானம் அடைகிறது. இவ்விதம் அவர் தம் மனைவி யிடம் கொண்ட_பிரியம்தான் தனிமையில் காணும் சஞ்சலத்தின் காரணம்போலும் கப்பய்யருக்கு கிராமத்தில் நல்ல சொத்தும் மதிப்பும் இருந்தன.
ஒரு சுமாரான குடும்பத்தில் ஐந்து குழந்தைகளுக்கு முத்தவளாகப் பிறந்தவள் கெளரி, சிறு வயதிலிருந்து அவளுடைய குறுகுறுப்பும் அமைதியான அழகும் அவள் பெற்றோர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. அவளுக்கு வயது.ஆக,ஆக அவள் கல்யாணத்திற்காக அவர்கள் மிகக் கஷ்டப்பட்டனர். கல்யாணத்திற்குப் பிறகு கெளரியைப் பார்க்காவிட்டாலும் கப்பய்யரோடு செளகரியமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறாள் என்பதில் அவர்களுக்கு ஒருவகையில் திருப்திதான். கெளரி ஒரு கெட்டிக்காரப் பெண். தோற்றத்திலும் அவள் வெகு வசீகரமுடையவள். அவள் மனது சுலபமாகக் கண்டறி வதற்கு அகப்படுவதில்லை. பிறருக்கு ஒன்றையும் நிச்சயம் கொடுக்காதவகையில்தான் அவள் போக்கும் பேக்கம் இருக்கும். தன்னுடைய கல்யாணத்திற்குப் பிறகு, தன் கணவனிடமும் நடந்து கொண்டாள். தன் தியாகம் என்ற நினைப்பில் கொள்ளும் பெருமிதமும் அவள் மனது கொள்ளவில்லை. அவ்விதமாயின் அதன் விளைவாகதான் தன் கணவனிடம் கொள்ளும் பிரியம் பாதிக்கப்படும் என்பதை சூட்சமமாக அவள் மனது உணர்ந்தது போலும் கல்யாணத்திற்குப் பின் வெகு சீக்கிரமாகக் கெளரியின் மனது அவள் வயதுக்கு மீறியே பக்குவமடைந்துவிட்டது. 


கல்யாண இரண்டாம் நாள். வாயில் திண்ணையில் ஏனையவர்கள்மத்தியில் பேசாது உட்கார்ந்து கொண் டிருந்தவர் கூடத்திலிருந்து கலகலப்பான பேச்சு, சிரிப்பு. சப்தங்கள் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பேச்சு, சிரிப்பு. சப்தங்களிலும் தன் மனைவி கெளரியின் சிரிப்பொலி மேலோங்கி மிதந்து இவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. வெகு காலமாகதான் வாழ்க்கையில் கண்டுணராத ஒருவித இன்ப உணர்ச்சியுடன் உள்ளே தன் மனைவியைக் காணும் ஆவலில் நுழைந்தார். ரேழியி லிருந்து தன் மனைவி வெகு குதூகலத்தில் அநேகர் மத்தியில் ஒரு ராணியெனப் பார்வை கொண்டு பேசியும் சிரித்தும் நின்றிருந்ததைப் பார்த்தார். தனக்கு வாழ்க்கைப் பட்டதிலிருந்து கெளரியைத் தான் அறிந்துகொண்ட விதம் அவள் இவ்விதமான ஒரு கலகலப்பான பெண்ணென எண்ணம் கொள்ள முடியவில்லை. ஓர் உயர்வகை இன்பம் தனக்கு_ண்டாக வேண்டியதை கூடியதை_அவள் மறைத்து விடுகிறாள். வேண்டுமென்றுதானே தன்னிடம் மாறு விதமாகப் பழகுகிறாள். உள்ளே தன் பிறந்தகத்துக் கூடத்திலே அவள் தோற்றம், பேச்சு, சிரிப்பு. குதூகலம். எல்லாவற்றையும் தன்னிடம் மறைத்துக் கொண்டுதான் பழகுகிறாள். என்பதான எண்ணங்களைக் கொண்டு வாயிற்புறம் திண்ணையில் பழையபடி வந்து உட்கார்ந்து கொண்டார். திடீரென மனதில் ஒரு ஆத்திரம் காண, மறுபடியும் உள்ளே சென்றவர். தன் மனைவியைத் தனியே கூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே ஊருக்குக் கிளம்ப ஏற்பாடு செய்யும்படிச் சொன்னார். தனக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றாலும், தன் மனைவியையும் விட்டுப்போக மனமில்லை. அநேக உயர்குணமும் ஞானமும் படைத்த கப்பப்யருக்கு இந்த மூர்த்தன்யமும் கூட இருந்தது. சமீபகாலமாக அதிக மாகவும் தலைகாட்ட ஆரம்பித்தது. வயது ஆக ஆக, அவருடைய முன்கோபம் கட்டுக்கடங்காது அதிகமாகி தன்னுடைய மனைவியிடமும் இடம் காலம் மாறி கொள்ளும் நிலைக்கு வந்தது.

கெளரிக்கு உள்ளுரக் கொழுந்து விட்டெரியும் கோபம் ஒருபக்கம். சமய சந்தர்ப்பத்தை உத்தேசித்து விகாரமாக இல்லாத வகையில் தன் விட்டவர்களுக்கும் ஏனைய மற்றவர்களுக்கும். ஏதோ காரணங்கள் சொல்லி ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானாள். கல்யாண வீட்டை விட்டு வண்டியேறி ரயிலடியை அடைவதற்குள், கப்பய்யர் மனது பல விதத்தில் சலிக்க ஆரம்பித்தது. தான் செய்தது சரிதானா என்பது புரியவில்லை. ஒரு உன்னதவகை என்பதின்றி, ஒதுங்கிப் பதுங்கி ஊளையிடுவது போன்று பயத்திலும் அருவெறுப்பிலும் தெரிந்து மனது ஒருவகை வருத்தமுற்றது. ஒரு நிச்சயமான மன உணர்ச்சியைக் கொள்ள அவருக்கு தெம்பில்லை. ஒருவரை யொருவர் நேராகப் பார்த்துக் கொள்ளாமலும் பேச்சில்லாமலும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டனர். பலவகை உணர்ச்சிப் பெருக்கில்_றித் திளைத்த மனதானது. வெறுப்பில் தான் _றிக் களைத்து நின்றது போலும் பரஸ்பர வெறுப்பில் ஒற்றுமை கொண்ட தம்பதிகளாக அன்று பிரயாணத்தைத் தொடங்கினர். ரயிலும் புறப்பட்டு விட்டது.
வண்டி நகருமளவும், எதிரே, கீழே உலாவி நின்ற ஒரு வாலிபனும் வண்டிநகர்ந்ததும் வெகுநாகக்காக ஓடி வந்து தாவி, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறினான். சின்ன கைகாட்டியைத் தாண்டுமளவும் கதவடியிலேயே நின்று பார்த்துவிட்டு சாவதானமாக உள்ளே வந்தான். எட்டி
இருந்த காலி இடங்களை விட்டு விட்டு இவர்கள் எதிரில் அமர்ந்தான் ஜன்னலுக்கு வெளியே தன்னுடைய பார்வையைக் கொள்ள, ஏங்கித் துடித்துப் பரந்து கிடந்த இயற்கைக் காட்சிகளைத் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் கண்ட இன்பத்தை சீட்டி மூலமாகவும், முணுமுணுப்பு. கீதமாகவும் வெளிப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த நவநாகரீக வாலிபனின் சேஷ்டைகள் இவ்விதங்களினாலன்றி எதிரிலுள்ளவர்களின் மதிப்பையும் கவனிப்பையும் கொள்ள முடியாது என்பது போன்றிருந்தன. எவ்வளவு நேரம்தான் அவனால் எதிரிலுள்ளவர்களை நினைத்துக் கொண்டு வெளியே பார்க்க முடியும்? இவர்கள் பக்கம் திரும்பும்பொழுது, இவனையே வெகுநேரமாக எதிர் பார்த்தவர் போன்று. "எங்கேயோபார்த்தமாதிரி இருக்கே சார். என்று கப்பையர் கேட்டது இவனுக்குத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. அவருடைய சப்தமே யல்லாது கேள்வியல்ல. அவனுக்குப் புரியுமுன் மனது இன்பத்தில் திடுக்கிட்டு விட்டது போலும். அவர்களுடன் பேசுவதற்கான சூழ்ச்சிகளை யோசித்துக் கையாளுவதற்கு முன்பே, எதிர்பார்த்தது இவ்வளவு சுலபமாக நேர்ந்ததில் கொஞ்சம் குழப்ப மடைந்தான். பதில் ஒன்றும் சொல்லாமல் ஒட்டிக் கொண்டு கெஞ்சுத லான பாவத்தில், முகத்தில் லேசான அசட்டுப் புன் சிரிப்புடன் உடம்பை ஒருதரம் நெளிந்துக் கொண்டான். ஏதோ யோசிக்கும் பாவனையில் தலை குனிந்து கொண்டான்.
கெளரிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. கொஞ்சம் வாய்விட்டே சிரித்துவிட்டாள். கப்பய்யர் இவள் பக்கம் திரும்பி என்ன என்றதற்கு ஏதோ யோசனைகள்
எதிரிலுள்ள வாலிபன் தன் கைக்குட்டையால் முகத்திற்கு பாலிஷ் கொடுத்துக் கொண்டிருந்தான். பாவம், தற்கால வாலிபர்களின் பரிதவிப்பு, வெகு விநோதமாக அவன் உருக்கொண்டு நடையுடை பாவனை
கெளரியின் வசீகரம் வெகு திரடானது. வெகு தெளிவானது. பெண்ணைப் படைத்தவன் பெண்களைப் பார்க்கும்போது தோன்ற எதையுமோ படைத்தானோ என்று எண்ண முடியுமேயல்லாது. இதைத்தான் என்று நிச்சய மாகக் கொள்ளும்படி இராது. இவளைப் பார்ப்பவர்களுக்கு ஒரேமாதிரி தோற்றம் கொடுக்கும் வகையல்ல அழகிய அவள் முகம் அறிய முடியாத அவள் மனப் போக்குடன் அவள் முகத்தோற்றமடையும், சலனம்_அழகிற்குத்தான் எவ்வெவ்வகைச் சாயல்கள்_அவள் மனது வெகு நேர்மையானது. எந்த ஆடவனையும் நோக்கின மறுகணம் அவள் கண்கள் லேசாக மாசடைந்து பாதி முடிக் கொள்ளும், கனவென வாழ்க்கை கொண்ட கெளரிக்கு அன்று மனது சரியாக இல்லை.
பக்கத்து ஜங்ஷனை அடையும்போது பகல் பனிரெண்டு மணி இருக்கும். வண்டி நின்றவுடன் கையில் கூஜாவுடன் கப்பையர் இழே இறங்கினார். வண்டி புறப்பட மணி அடித்தாகிவிட்டது. கப்பையர் கூஜாவில் ஜலம் பிடித்துக் கொண்டு வந்தபாடில்லை. அவர் வராததில் சஞ்சலமடைந்தவளே போன்று, கெளரி வெளியில் அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'வண்டி புறப்பட நேரமாகிவிட்டது. அவரைக் கானோமே. என்று பேச்சை எடுத்த வாலிபன் திரும்பிய அவள் கண்களின் பார்வையைக் கண்டபோது ஒன்றும் புரியாமல் நிறுத்திவிட்டு அவர் வருவதைக் கவனிப்பது போல வெளியே பார்த்தான்.
வேகமாக ஓடிவந்த கிழவர் வண்டி ஏறுவதும்_டி நகருவதும் ஒன்றாக இருந்தன. இரைந்து சிரித்துக் கொண்டும் நடு நடுவே இருமிக் கொண்டும் வந்தவர் கெளரியைப் பார்த்தது ஒருவிதமாகத் தெரிந்தது. 'குழாயடியில் கூட்டம். நின்றுகொண்டே இருந்ததில் ஒன்றுமே புரியவில்லை. முந்தாநாள் உன்னையழைக்க உங்களுர் வரும் ஞாபகம்தான் வண்டி_தினதும் தான் ரயிலில் எதையோ மறந்துவைத்துவிட்டு வெளியே அங்கே நிற்பதான ஞாபகம் வந்தது._ன் ஞாபகம்தான்_. வேகமாக ஓடிவந்து ஏறிக் கொண்டேன். வயதாச் சோன்னோ_வண்டி போனால்தா_என்ன என்று தோன்றியது, ஓடிவரும் போது_அடுத்த வண்டி இல்லையா. துணைக்கு நீங்கள் இல்லையா ஸார். ரயில்லே போகிறபோதுதான் லார் குவியாக என்ன வெல்லாமோ தோன்றுகிறது. ஸ்நேகமும் அகப்படுகிறது. நாளைக்குப் பின்னாலே நடக்கப் போகிறதெல்லாம் நேத்திக்கு முன்னாலே நடந்தது போல காலம் எல்லாம் தலைகீழே மாறிப் போகிறது ஸார். என்று என்ன வெல்லாமோ இவளிடமும் அவனிடமும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்.
கெளரிக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை. தன் கணவனின் இவ்வகைப் பேச்சுக்கு ஆதாரமான கோளாறை அவள் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள் போலும் அறியாத ஒருவகை பயமும், தன் கணவனிடம் ஒருவித அனுதாபமும் அவள் மனது கொண்டது. தன்னைப் பற்றி தவறாக அவரவர்கள் அபிப்பிராயம் போனவாக்கில் கொள்ளாத வகைக்கு தான் எவ்விதம் இருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு தவறிய சூழ்நிலையில் தான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதான எண்ணம் கொண்டாள்_ரில் தன் தங்கையின் கலியான இரண்டாம் நாள்_அதை நினைக்கும்போது மனது வருத்தம் கொள்கிறது. தன்னால் ஆவது ஒன்றுமில்லை. விதி தனக்குத் தெரியாது பின்னின்று உந்தித் தள்ளத்தான் இருக்கிறது. ஏதோ நடக்கப் போவதில் நடந்ததென பின் ஆறுதலை முன்கூட்டிக்கொள்ளும்படிதான் இப்பொழுது இருக்கிறது. அவளால் மேலே யோசிக்க முடியவில்லை.
வாலிபன் கிழவரைப் பாத்து சொல்லிக்கொண் டிருந்தான். ஆமாம். நீங்கள் வராதது பெண்ணிற்குக் கூட ரொம்பகவலையாக இருந்தது.நான்க_அவன் முடிக்கு முன்-பெண்ணில்லைலார்_பெண்ணில்லை. அவள் நம்ப ம்ைலாரம் கெளரின்னு பேரு_ன்று சொல்லிச் சிரித்தார். வாய் நிறைய நின்றவரிசையான பொய்ப்பற்களைக் காட்டி அவர் சிரித்ததானது. பயங்கரம் தோன்ற இருந்தது. அவர் மூளை சமீப காலமாக ஏறாத ஒரு விருவிருப்புக் கொண்டிருப்பதை கெளரி உணர்ந்து கொண்டாள். காலையில் யார் முகத்தில் விழித்தோமோ என்று -ன்னைத்தானே நொந்து கொண்டாள். நல்லபடியாக உரையாவது போய் அடைவோமா என்ற கவலையில், வேகம் கொண்டு பேசத் தன் கணவனுக்கு ஒரு வாலிபன் எதிரில் அகப்படுகிறான்!

ஒகோ_ஒய்யா_ஏதாவது குழந்தை குட்டிகள்'

'இல்லை ஸார், இனிமேல்தான். ஆசிர்வாதம்' என்றார் கிழவர்.
கெளரி எங்கேயாவது ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் கணவனைப் பார்த்தாள். அவரைப் பார்க்கும் போது மனது வேதனைதான் கொள்ளுகிறது.
கெளரி உன்கிட்ட ஒரு சமாசாரம். குழாயடியில் உன்னை மறந்து நின்றிருந்தேன் என்று சொல்ல வில்லையா? அப்போது கூட்டத்தில் ஒருவன் உங்க எதிராளத்து கப்பிணி மாதிரி இருந்தான். அவ_ரிலே விட்டு வந்தோமே எங்கே இங்கே ரயிலைத் துரத்திக் கொண்டு தொத்தி ஏறிக் கொண்டா வருகிறான் என்று நினைத்துக்கொண்டு_ப்பிடலாம் என்றுவயெடுத்தேன். அவன் நல்ல வேளைய திரும்பினான். அவன் இல்லை. அவனே போலத்தான்_ரொம்ப வேடிக்கை லார், கப்பிட்டுவிட்டு இல்லை என்று தெரிந்தால் லார்_ கெளரியைப் பார்த்துக்கொண்_ேபட்டம் அவளுக்கு வழங்கியதை நினைத்து திடுக்கிட்டு இவன் பக்கம் திரும்பி,
...வேடிக்கை ஸார். வேடிக்கை எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்க சாயலும் உண்டு லார். வாலிபமாக் சோன்னோ_...வேடிக்கை ஸார். வேடிக்கை எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்க சாயலும் உண்டு லார். வாலிபமாக் சோன்னோ_
'கப்பிணி என்ற வார்த்தை முள்ளென பலவித அருத்தத்தில் கெளரியைக் குத்த உபயோகிக்கும் ஒரு அஸ்திரம். அவள் எதிராளத்து_ப்பி_ன்பவனுக்கு. சிறுவயதில் தன்னைத் தன் பெற்றோர்கள் கலியாணம் செய்து முடிக்க எண்ணியதும், அது நடக்காமல் போனதும் கெளரியின் குற்றத்தினாலல்ல. இந்த விஷயமும் கப்பய்யருக்கு ஏதோ ஒரு சமயம் அவள் சொல்லித்தான் தெரியும் பல்விதத்தில் அவள் மனது நோக அருத்தம் கொடுக்குமாறு அவர் எப்போதாவது கப்பிணி என்ற பதத்தை அந்தந்த சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எடுப்பார். கப்பய்யர் அப்போது ஒன்று தெரிந்து கொள்ள வில்லை. புண்பட்டுக் காய்ச்சிய மனதிற்கு நோவில்லை என்பதைத்தான். அவிழ்ந்து பறந்த புடவையின் முந்தானை தன் கணவன் முகத்தில் பட, அதைப் பிடித்து இழுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் செருகிக் _ொள் கெளரி.
ஒரு சிறியஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஏராளமான ஜனக்கூட்டம் இறங்கியது. அந்த ஊரில் சந்தை கூடுகிறது போலும், மணி அடித்து வண்டியும் நகர்ந்தது.
'கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணி அடிக்க வேண்டும் ஸார் வண்டி மேற்கே போக இரண்டு தரம்_உங்களுக்கு தெரியுமாலார் மாத்தி_அடி_வண்டி போகிற பக்கம்தான்போகும்.ஆனால்திக்குதிசைமட்டும் மாறி விடும். கிழக்கு மேற்கா, தலை கீழா_வ்வளவு இருக்கிறது தெரிகிறதா ஸார். எவ்வளவு கவனமும் விரத்தையும் வேண்டும் மணி அடிப்பவனுக்குக்_ அதோ அவன் நிற்பதைக் கவனியுங்கோலார்_திக்குதிசை தெரியாதுமாறாமலிருக்கப் பார்த்துக்கொண்டு.

'கப்பிணி என்ற வார்த்தை முள்ளென பலவித அருத்தத்தில் கெளரியைக் குத்த உபயோகிக்கும் ஒரு அஸ்திரம். அவள் எதிராளத்து_ப்பி_ன்பவனுக்கு. சிறுவயதில் தன்னைத் தன் பெற்றோர்கள் கலியாணம் செய்து முடிக்க எண்ணியதும், அது நடக்காமல் போனதும் கெளரியின் குற்றத்தினாலல்ல. இந்த விஷயமும் கப்பய்யருக்கு ஏதோ ஒரு சமயம் அவள் சொல்லித்தான் தெரியும் பல்விதத்தில் அவள் மனது நோக அருத்தம் கொடுக்குமாறு அவர் எப்போதாவது கப்பிணி என்ற பதத்தை அந்தந்த சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எடுப்பார். கப்பய்யர் அப்போது ஒன்று தெரிந்து கொள்ள வில்லை. புண்பட்டுக் காய்ச்சிய மனதிற்கு நோவில்லை என்பதைத்தான். அவிழ்ந்து பறந்த புடவையின் முந்தானை தன் கணவன் முகத்தில் பட, அதைப் பிடித்து இழுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் செருகிக் _ொள் கெளரி.
ஒரு சிறியஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஏராளமான ஜனக்கூட்டம் இறங்கியது. அந்த ஊரில் சந்தை கூடுகிறது போலும், மணி அடித்து வண்டியும் நகர்ந்தது.
'கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணி அடிக்க வேண்டும் ஸார் வண்டி மேற்கே போக இரண்டு தரம்_உங்களுக்கு தெரியுமாலார் மாத்தி_அடி_வண்டி போகிற பக்கம்தான்போகும்.ஆனால்திக்குதிசைமட்டும் மாறி விடும். கிழக்கு மேற்கா, தலை கீழா_வ்வளவு இருக்கிறது தெரிகிறதா ஸார். எவ்வளவு கவனமும் விரத்தையும் வேண்டும் மணி அடிப்பவனுக்குக்_ அதோ அவன் நிற்பதைக் கவனியுங்கோலார்_திக்குதிசை தெரியாதுமாறாமலிருக்கப் பார்த்துக்கொண்டு.
ஒடிகொஞ்சம் கொஞ்சமாக தெளிவுபடலாயிற்று. பாவம் என்னவாயினும் அவள் சிறு பெண்தானே? இருபது வயது கூட இருக்காது. கால வித்தியாசம் என்பதால் தன்னைப் பிடிக்க கிழவனும் வாலிபனும் ஒன்றெனத்தான் தென் படுகிறார்கள். காலையிலிருந்து தன்னைப் பிடித்த சனியன் பல ரூபத்தில் ஆட்டுகிறான். கிழவனாகிக் கணவனாகி றான். ஒடும் ரயிலிலும் தொத்தி ஏறி எதிரில் உட்கார வாலிபம் கொள்கிறான்; தான் பிறந்தவுடன் தன் உயிரைப் பிடித்த சனியன் தன் பெண் உருவம் என்பதை அவள் அறிந்தாள் போலும்உயிரைக் கொண்டு உடம்பைத் தொலைத்து வாழ முடிகிறதில்லை. பெண்களென்றால் ஆறுதலுக்கு அழுவதற்குமில்லை. சிரிப்பதற்குமில்லை ஆடவர்களிடையே அவள் மார்பிலிருந்து விம்மி யெழுந்த மூச்சானது சப்தமற்றுத்தான் வெளிக்கலந்தது. மனதில் ஒரு சக்தி வேகம் கொள்ள அவள் முகம் தெளிவடைந்து காணப்பட்டது. உலகைத் தழுவும் பெண்மையை விசுவ ரூபத்தில் கொண்டாள் போலும்.

வெளியே சென்ற கிழவர் மெதுவாகவே தின்பண்டங் களை வாங்கி வந்தார். வரும்போதே தன் வருகையை சிரிப்பிலும் இருமலிலும் முன்னதாகவே தெரிவித்துக் கொண்டு வந்தார். ஒரு சந்தேகத்தை ஒரு வகையாக நிச்சயமெனத் தீர்த்துக்கொள்ள அவர் மனது பயம் கொண்டது போலும். வாங்கி வந்ததை அவன் கையில் கொடுத்தபோது, அவன் மற்றொரு கையை சட்டை ஜேயில் கொண்டு போனான். பாதகமில்லை ஸார். கையை வெளியில் எடுங்கள். ஒன்றும் பிரமாதமில்லை. அசல் ரயில் சிநேகிதம் போல பழகுகிறீர்களே. நான் உங்களைக் கண்டவுடனே கேட்கவில்லையா? யாரோ எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என்று. என்று சொல்லிச் சிரித்தார்
நல்ல கோடை, பிற்பகல். வரண்ட வாய்க்கால், வயல்களின் குறுக்கே ரயில் க்கொண்டிருந்தது. எட்டிய
பனந்தோப்புகள் தெரிந்துகொண்டும் ஒன்று மறைந்த பின் மற்றொன்று தெரியவும் மறையவும் வரிசையாக வந்து கொண்டிருந்தவை. ஒன்றே மறைந்து தோற்றம் கொடுத்து விளையாடுவது போன்று தோன்றியது. இங்கு மங்குமாக ரயில் பாதையருகில் தோன்றி மறையவிருக்கும் குட்டை களின் குழம்பிய சேற்று நீரில் எருமைகள் இன்பத்தில் மூழ்கிப்புரண்டுகொண்டிருந்தன. அவள் எதிரில், தனக்குத் தோன்று முன்பேமறைய இருக்கிறதேதன்மணஇன்பம் என நினைத்தான் வாலிபன். ஒருகால் பிறர் ஆனந்தத்தைத் தோன்றுமுன் விழுங்க இருக்கிறதா அந்தக் கிழயூதம் என அவரைப் பார்த்தான். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் தொலைந்தால் தன் இன்பம் சாசுவதமாகுமா? மேலே யோசிக்க முடியவில்லை. பாவம் அவனால் என்ன செய்ய முடியும் அவனால் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருக்கவும் முடியவில்லை. அங்கிருந்து நழுவிப் போய் எட்டிய அந்த காலியிடத்திலும் உட்காரும் வழி புரியவில்லை. ஏதோ ஒரு சங்கடத்தில் தான் அகப்பட்டுத் தத்தளிப்பதான எண்ணம் அவன் மனதில் கொண்டான். மாலைப்பொழுது கண்டு கொண்டு இருந்தது. அடித்த பஞ்சு போன்று ஆகாயத்தில் மேகத் திட்டுகள் மிதந்து கொண்டிருந்தன. மேற்கு அடிவானத்தில் அசைவற்றுக் கிடந்த மேக முகப்புகளுக்கு பொன் வரம்பு காட்டி சூரியன் மறைய இன்னும் கொஞ்சநேரம் இருந்தது.
கெளரியின் கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தன. சலிக்கும் அவள் முக அழகும் ஒரே விதத்தில் தோற்றம் கொடுத்தது. விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவது தானா ஆடவர் வாழ்க்கை கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால்?
இருள் சுடரைக்கொண்டு விளக்காக முடியுமா? தன்னைத்தானே நொந்து கொண்டாள். அவள் கண்கள் சோர்வு கொண்டு பாதி முடிக் கொண்டன. எல்லைக்
கோட்டருகில் தெரியும் ஒரு வெளி அதனைப் பொருள் கொள்ள அவளுடைய பகற் கனவினாலும் முடியவில்லை போலும்.
தோப்பின் நடுவில் நின்ற ஒரு சிறுகுடிசைமரத்திடை எட்டிப் பார்ப்பது போலத் தெரிந்தது. ரயிலோடு மெதுவாக கொஞ்ச தூரம் ஊர்ந்து வந்தது. அதுவும் பின் தங்கி பார்வையில் மறைந்து விட்டது. ஒரு பயங்கரத்தின் நடுவில் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்க முடிகிறது? நின்றவிடத்திலிருந்துயிரியும்பாதைகளென எண்ணற்றவை நேராகக்கொஞ்சதுரம் சென்று திருப்பத்தில் கோணலாக வளைந்து மறைந்து கொண்டன. அநேகர் தன்னை விட்டு விட்டு, எட்டி தன் தலையை மட்டும் சுமந்து கொண்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தனர். ஒன்று கூடி தனக்குத் தெரியாமலே தன்னப் பற்றி சதியாலோசனை செய்கிறார்கள். நெருங்கித் தெரிந்தாலும் புரியாத வழிக்குத் தான் தன்னைக் கலக்காமல் எட்டி மறைகிறார்கள். ஏதோ உருளும் சப்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
சாலை ஓரத்தில் ஒரு கிழவி உட்கார்ந்துகொண்டிருக் கிறாள். அவளைத் தெரியாமல் மறைத்து முடிக் கொண் டிருக்கும் புற்கள் கூரிய கோரைப் பற்களாக இருந்தன. வெகு அப்பால் உள்ள ஒரு அழகிய நகரை அடையும் ஆவலை அவள் வெகுநாளாகப் பாடிக்கொண்டு இருக்கிறாள். உள்ளம் கவரும் ஒரு தேம் இவளைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு கிட்டே நெருங்க பயம் கொள்கிறது. என்ன கெளரி, தூக்கமா...' என்றார் கப்பய்யர் இல்லை எனச் சொல்லி ஏதோ பேசிக்கொண்டிருந்த அவரையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.
... அப்பாலும் இப்பாலும் ஒரு கீதம் மெளனமாக ஒலிக்கிறது. ஏ குட்டி என்ன பாட்டு என்று பார்த்தவுடன் புற்கள் காற்றுடன் ஓடிவிட்டன. தனது பொக்கை வாயைத் திறந்து காட்டி எத்தனை பேரோ பார்த்தாகி, நீ தானா
பாக்கி?...' என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் தலைமயிரைக்கோதிக்கொண்ட போது தன் தலையைக் காணவில்லை. சதியாலோசனைக் காரர்களிடம் விட்டு வந்தது ஞாபகம் வந்தது. எதை தனக்குத் தெரியாததை எழுதி தலைக்குள் புகுத்தி விடுகிறார்களோ என்ற பயத்தில் நின்று கொண்டு கற்றும் முற்றும் கவனித்தாள். அவர்கள் தங்களிஷ்டமான யோசனைகளுடன் தலையைத் தூக்கிக்கொண்டு வந்தனர். இவளைத் தேடி ஜே_ஜே எனக் கோஷமிட்டுக் கொண்டு இவளைச் சுற்றிச் சுற்றி தேடி அலைந்து கொண்டிருந் தார்கள். வாடி வதங்கிய பூக்கள் அப்பால் ஆடிக் கொண்டும் அழுது கொண்டுமிருந்தன. அவைகளின் மணம் ஒருவர்மூக்கிலும்படாது. மறைந்து, பதுங்கி, எட்டே ஒடி சிரித்துக் கொண்டிருந்தது. பூக்களின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் கெளரி. தன்னைச் சுற்றிலும் ஒரு ஒளி வெறிச்சென்று காய்ந்து கொண்டிருந்தது. மறையும் சூரிய கிரணங்கள் ரயில் ஜன்னல் வழியாக இவள் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது. திடுக்கிட்டுக் கண்விழித்தாள்.
தன் கணவன் எதையோ வெகு சுவாரஸ்யமாக இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான். வெகு அலுப்பில் சிரத்தையாகக் கேட்கும் பாவனையில், அடிக்கடி தலையை ஆட்டிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அனுதாபங்கொண்டு ஏன் இந்த துன்பமெல்லாம் உனக்கு எனக் கெளரிக்குக் கேட்கத் தோன்றியது. அவள் அவனைப் பார்த்த பார்வைகூட அலுத்துக் கொண்டான் போலும், அவள் பக்கம் பார்க்காமலே வேறுபக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான்.
ஆமாம் லார், நான் சிறிது முன்னால் சொன்னேனே புரிஞ்கதோன்னோ. வெளியே பார்க்காதே அம்பி, கண்ணில் தூசி விழும். ரொம்ப தொந்திரவு கொடுக்கும். நேரே இங்கே பாருங்கோ... ஏன் எதற்கென்றால் அவ அப்பன் பாட்டன் யார், எவர் என்று கேட்காதே.
வேண்டிய ஸ்டேஷனும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டேஷன் ஊரிலிருந்து கூட வண்டி வந்து இருக்கலாம். என்று அவளிடம் சொல்லி அவள் கொடுத்த தீர்த்தம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இடதுமாரை ஒரு கையால் அமுக்கிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்த வாலிபனைப் பார்த்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார்.
சொல்லுகிறதெல்லாம் பாதியிலே விட்டுப் போகிறது சொல்ல வந்ததை எல்லாம் எப்பவோ சொல்லியாகிவிட்டது என்றுகூடத் தோன்றுகிறது. ஆமாம் பிரும்மாவிற்குத் தூக்கம் வந்து விட்டது. விஷ்ணுவைக் கேட்டான் "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு. ஒரு சின்ன துக்கம் போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன்" என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அந்த சாப்பாட்டு ராமன் சரி என்றான். சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம் முடியவே முடியாது. நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது. இப்போதுதான் எனக்குக் குஷி கண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டான். என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை. கோபம் வருகிறது. ஆனால் யார் யாரை என்ன செய்ய முடியும் லார். இந்தக் காலத்திலே எல்லோரும் ஈசுவரர்கள் இல்லையா? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவாதலை எழுத்துப்படி ஆகட்டும் நடக்கப்போவதுதான் நடந்தது. ஆகப் போகிறது தலை எழுத்தாக என நினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் கேளுங்க லா ரொம்ப வேடிக்கை. என்ன் உங்களுக்கும் என்ன துக்கமா? '.
சிவன்_அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்து கொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம் குவியில், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக் கொண்டே இருந்தான் ஸார். பிரும்மா துங்கிக் கொண்டு இருக்கான் படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து
அப்பனையே தெரிந்துகொள்ளமுடியாதென்றால்,பாட்டன் எங்கிருந்து குதிப்பான்?... ஆனால் அப்பன் வைத்த ஆஸ்தியாகத்தானே ஒரு வேலையை மூன்று பேரும் கண்டிஷனோடு பிரித்துக் கொண்டார்கள். ஒரு முழு வேலையை இந்த பிரகஸ்பதிகள் மூன்றாகப் பிரித்துக் கொண்டார்கள். செய்தால் மூன்று பேரும் சேர்ந்து செய்யவேண்டும் நிறுத்தினால் மூன்று பேரும் சேர்ந்து 'ரெஸ்ட் எடுத்துக்கவேண்டும்.
'இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித் தார்கள். ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக. கிரேதாயுகம். திரேதாயுகம். துவாபர யுகம். முழுசா மூன்று யுகங்கள் ஐயா. ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம்தான் வேலை கலைந்து சாப்பிட்டுத் துங்க கலி பிறந்ததே பாருங்க ஸார், நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத்தான் சொல்லுகிறேன். அதுதான் பாக்கி அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி ப்ேபி, பொடி கிடி என்று என்ன வெல்லாமோ குடித்தும்போட்டும் பார்த்தான் போலிருக்கிறது. இதைத் தான் லார் அந்த புராணத்தில் நன்றாக சொல்லி இருக்கிறதுநான் படிச்சு இருக்கேன், ஒரு காலத்திலே பக்தி சிரத்தையாக, வேதாந்தம், புராணம், அது இது என்று என்னவெல்லாமோ படித்து, முடித்து கண்டது என்ன இப்போது?. உங்களைத்தான், ஐயா நீங்களும் இதைக் கேட்டது உண்டா? கண்டது என்ன என்று தான் சொல்ல முடிகிறதா? போகிறவழியும் தெரியவில்லை. வந்தவழியும் நன்றாகப் புரிந்த பாடில்லை. விட்டுத் தள்ளுங்கோ எல்லா வற்றையும் லார். எனக்கென்ன வேண்டி கிடக்கிறது? எனக்கு நடக்க வேண்டியதெல்லாம் நடந்தாச்சு என்பது தானே இனிமேல் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் கெளரி பக்கம் திரும்பி கெளரி மாரைக் கொஞ்சம் வலிக்கிறது. கூஜாவிலிருந்து ஜலம் கொஞ்சம் எடு. இறங்கவேண்டிய ஸ்டேஷனும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டேஷன் ஊரிலிருந்து கூட வண்டி வந்து இருக்கலாம். என்று அவளிடம் சொல்லி அவள் கொடுத்த தீர்த்தம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இடதுமாரை ஒரு கையால் அமுக்கிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்த வாலிபனைப் பார்த்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார்.
சொல்லுகிறதெல்லாம் பாதியிலே விட்டுப் போகிறது சொல்ல வந்ததை எல்லாம் எப்பவோ சொல்லியாகிவிட்டது என்றுகூடத் தோன்றுகிறது. ஆமாம் பிரும்மாவிற்குத் தூக்கம் வந்து விட்டது. விஷ்ணுவைக் கேட்டான் "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு. ஒரு சின்ன துக்கம் போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன்" என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அந்த சாப்பாட்டு ராமன் சரி என்றான். சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம் முடியவே முடியாது. நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது. இப்போதுதான் எனக்குக் குஷி கண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டான். என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை. கோபம் வருகிறது. ஆனால் யார் யாரை என்ன செய்ய முடியும் லார். இந்தக் காலத்திலே எல்லோரும் ஈசுவரர்கள் இல்லையா? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவாதலை எழுத்துப்படி ஆகட்டும் நடக்கப்போவதுதான் நடந்தது. ஆகப் போகிறது தலை எழுத்தாக என நினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் கேளுங்க லா ரொம்ப வேடிக்கை. என்ன் உங்களுக்கும் என்ன துக்கமா? '.
சிவன்_அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்து கொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம் குவியில், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக் கொண்டே இருந்தான் ஸார். பிரும்மா துங்கிக் கொண்டு இருக்கான் படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து
சொல்லிக் கொண்டே ஊர் வந்துவிட்டது என்று வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்ந்தார். பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டுக் கீழே விழாது தப்பினார்.
வாலிபன் அவ்விடத்தில் இருப்புக் கொள்ளாமல் மெதுவாக நழுவி மூலையில் காலியாக இருந்த ஒரு இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

- சிவாஜி 1954





Pound Cantos (Canto LXXXI) ("Pull down thy vanity")



Friday, October 30, 2015


Ezra Pound's Birthday

                                                        [Ezra Pound (1885-1972)]

We featured a couple of days ago, the early English lyric, "Summer is Icumen in(commonly known as "The Cuckoo Song")

Ezra Pound made a playful parody of it

AG:    ...And I forgot there's this little paraphrase by Ezra Pound of "The Cuckoo Song". Has anybody heard that or seen that?..How many know of Pound? (It's) called "Ancient Music" - So let's go back to that. where is that? " The Cuckoo Song"? - " Sumer is Icumen in,/Loudly sing, cuckoo!/Grows the seed and blows the mead,/And springs the wood anew." 

(and Pound):


"Winter is icummen in,/Lhude sing Goddamm./ Raineth drop and staineth slop,/ And how the wind doth ramm!/ Sing: Goddamm./ Skiddeth bus and sloppeth us,/ An ague hath my ham./ Freezeth river, turneth liver,/ Damn you, sing: Goddamm./ Goddamm, Goddamm, 'tis why I am, Goddamm,/ So 'gainst the winter's balm./ Sing goddamm, damm, sing Goddamm./ Sing goddamm, sing goddamm, DAMM."

 And then, (a) note, "This is not folk music, but Dr. Ker writes that the tune is found under the Latin words of a very ancient canon." (here he's being mock-pedantic/campy) 

[Audio for the above can be heard here, beginning at approximately twenty minutes in and concluding at approximately twenty-one minutes in]

Ezra Pound's birthday today. We draw your attention to previous birthday postings - here, here,here and here

Harvard's Woodberry Poetry Room has recently preserved a rare acetate from 1939 of Pound reading - see here

The publication of the curiously-named Posthumous Cantos is noted here 

Here's Pasolini and Pound together (Pier Paolo Pasolini reading to Pound (in Italian) from hisCantos  (Canto LXXXI) ("Pull down thy vanity")  



Quello che veramente ami rimane,
il resto è scorie
Quello che veramente ami non ti sarà strappato
Quello che veramente ami è la tua vera eredità
Il mondo a chi appartiene, a me, a loro
o a nessuno?
Prima venne il visibile, quindi il palpabile
Elisio, sebbene fosse nelle dimore dinferno,
Quello che veramente ami è la tua vera eredità

La formica è un centauro nel suo mondo di draghi.
Strappa da te la vanità, non fu luomo
A creare il coraggio, o lordine, o la grazia,
Strappa da te la vanità, ti dico strappala
Impara dal mondo verde quale sia il tuo luogo
Nella misura dellinvenzione, o nella vera abilità dellartefice,

Strappa da te la vanità,
Paquin strappala!
Il casco verde ha vinto la tua eleganza.

Dominati, e gli altri ti sopporteranno
Strappa da te la vanità
Sei un cane bastonato sotto la grandine,
Una pica rigonfia in uno spasimo di sole,
Metà nero metà bianco
Né distingui unala da una coda
Strappa da te la vanità
Come son meschini i tuoi rancori
Nutriti di falsità.
Strappa da te la vanità,
Avido di distruggere, avaro di carità,
Strappa da te la vanità,
Ti dico strappala.


Ma avere fatto in luogo di non avere fatto
questa non è vanità 
Avere, con discrezione, bussato
Perché un Blunt aprisse
Aver raccolto dal vento una tradizione viva
o da un bellocchio antico la fiamma inviolata
Questa non è vanità.
Qui lerrore è in ciò che non si è fatto, nella diffidenza che fece esitare



What thou lovest well remains,
the rest is dross
What thou lovst well shall not be reft from thee
What thou lovst well is thy true heritage
Whose world, or mine or theirs
or is it of none?
First came the seen, then thus the palpable
Elysium, though it were in the halls of hell,
What thou lovest well is thy true heritage
What thou lovst well shall not be reft from thee
The ants a centaur in his dragon world.
Pull down thy vanity, it is not man
Made courage, or made order, or made grace,
Pull down thy vanity, I say pull down.
Learn of the green world what can be thy place
In scaled invention or true artistry,
Pull down thy vanity,
Paquin pull down!
The green casque has out done your elegance.
Master thy self, then others shall thee beare
Pull down thy vanity
Thou art a beaten dog beneath the hail,
A swollen mag pie in a fitful sun,
Half black half white
Nor knowstou wing from tail
Pull down thy vanity
How mean thy hates
Fostered in falsity,
Pull down thy vanity,
Rathe to destroy, niggard in charity,
Pull down thy vanity, I say pull down.
But to have done instead of not doing
This is not vanity
To have, with decency, knocked
That a Blunt should open
To have gath ered from the air a live tradition
or from a fine old eye the uncon quered flame
this is not vanity.
Here error is all in the not done,
all in the diffidence that faltered

தவறு - மௌனி , காதல் சாலை - மௌனி

Thanks :archive.org - to download pdf file
-Foxit reader to snapshot into 8 jpg.image
-drive.google.com to upload 8 images
- open each image with docs.google.com . image is automatically converted into tamil text

நன்றி : உத்தியைச் சொல்லி தந்த Kaala Subramaniam
தவறு - மௌனி
அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்கமான நேரத்திற்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். தன் முன் வாழ்வெலாம் எவ்வெவ்விடத்தில் எவ்வெவ்வகை கொண்டதாகிறது என்று, கனவின் நிழலென. உணர்விற்கப்பால் தோன்றி மறையக் கண்டான் போலும் எங்கிருந்தெல்லாமோ 'சா குருவிகள் அலறலும் ஆங்காங்கே எட்டிய வெளியில் புதைந்து, கேள்வி பதில்களென விபரங்கொள்ளக் காத்து நின்று ஆந்தை களின் சீறலும் கேட்டன. இரண்டொருவர் நடமாட்டமும் அந்த அகால வெளியில், வீதி வழியே உலாவி வரும் மெளனத்தைக் குலைக்கா வண்ணம், கேட்டு மறைய இருந்தது. எதிரே, கீழே நடைபாதையில் முடங்கிக் கிடந்த பிச்சைக்காரர்கள் அயர்ந்து தூக்கம் கொண்டிருந்தனர். இரவில் வெகுநேரம், எதிரே தூக்கம் காண, அவர்கள் இரைந்து பேசிக் கூவி கொம்மாளமிட்டு இருமி இருமிச் செத்துக் கொண்டிருந்தவர்கள்..எவ்வளவு அமைதியான தூக்கம், விடிவுகொண்டு விழிப்பு வரும் வரையில்.

'ஏன் தன் வாழ்வு, அவளுடன் ஆரம்பித்த அந்த இனிமையுடன் முடிவு பெறவில்லை. ஏன் எதற்கு இவ்வகையில், நடுவில் குறுக்கிட்டு வந்து போனதான சம்சயம், நிச்சயம் கொள்ள வாழ்க்கை தொடருகிறது? உலகு அவளை எவ்வளவு ஏளனமாக ஏற்க, தன்னைக் கலந்து இன்பம் காண, என்பதில் கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்டவர்களை மகிழ்விக்க தன்னை ஈனமாக்கிக் கொண்டவளா..? இவனுக்குப் புரியவில்லை. கேள்வி பதில் என்பதின்றியே எதிரே இரவின் இருள் கவிந்து இருந்தது. உள் ஜன்னலைத் திறந்து பிடித்துக் கொண்டு, வெளியே பார்ப்பதில்தான் எல்லாம் இருக்கிறது. ஆகாயத்தில் எண்ணிலா தாரகைகள் விதியில் பதிந்து பவனிவர சென்று கொண்டிருந்தன போலும்.

அன்று மாலை நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்து நிச்சயமடைய, நடக்க இருப்பதின் நீண்ட முன் சாயையும், பின் நடந்தவைகளின் மறைவு, மறதி பின் ஞாபகத்தையும் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. விதியில் ஒரு சந்தின் குறுக்கீட்டின்போது அவனைக் காண நேர்ந்தது வியப்படைய இருந்தது. இவனைப் பார்த்து அவன்_என்னப்பா.இங்கே தானா.எப்போது தெரிய வில்லையே._என்றது யதேச்சை குறுக்கீட்டு சம்பவமென இப்போது கொள்ள முடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு வசீகரமாக அவனுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பது ஒளிவு மறைவின்றி அவன் நடையுடை பாவனைகளில் மிளிர்கின்றது.அவனுடன் தானே இப்போது அவள் வாழ்கிறாள். இவன் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் மாலை சரியாக நாலரை மணிக்கு நிச்சயமாக சந்திக்க வருவதாகச் சொல்லி அப்போதைய அவன் அவசர ஜோலியில் போய்விட்டான். மாலை சூரியன் மங்கல் மஞ்சள் ஒளியும் அவ்விதி வழியே படர்ந்து வசீகரமாகத் தோன்றி மறைவுகொள்ள ஆரம்பிக்கிறது.

தன் தனிமை மாடி அறையில், இவன் தங்கியிருந்த இடம், போதுமானதற்கு அதிகமாகவே இருந்தது. நாற்புற ஜன்னல்களுடன், எதிரே எட்டிய வெளியையும் கீழே ஊர் நடப்பையும் கவனிப்பு கொடுக்கும் வகைக்கு அது வெகு உயரத்தில் மேல் மாடியில் இருந்தது. தடுக்கி விழக்கூடிய விதத்தில், செங்குத்தான அநேக படிகளைத் தாண்டி ஏறித்தான் தன் அறைக்குள் நுழைய வேண்டிய சிரமம், அதிகமாக கீழிறங்கி ஊர் கற்றித் திரிந்து திரும்பும் இவன் ஆவலை, வேதனை எனத்தான் கொள்ளச் செய்யும். ஜன்னலைப் பிடித்துக் கொண்டு எட்டிய வெளியை நோக்கியிருந்தான்.காலையும், காண கண்டுகொண்டிருக் கிறது. 
அன்று மாலை நான்கு மணியிலிருந்து அவன் வருகையில் கொள்ளும் ஆவலில், நேரமாகியும் அவன் வராதது கண்டு ஆத்திரம் கொள்ளலானான். அடிக்கடி கடியாரத்தைப் பார்த்தும் கொண்டிருந்தான். இன்னும் நேரமாகவில்லை என்று சமாளித்துக் கொள்ளுவதில், எப்போது அவன் வருவதாகக் குறிப்பிட்டான் என்பதையும் மறந்து கொண்டிருந்தான் போலும். சில சில சமயம் யாருக்காக தான் காத்திருத்தல் என்பதும் விளங்குவது இல்லை விதி வழியே அநேக ஆடவ பெண்டிர் பிள்ளை குட்டியுடன் கடற்கரையை நோக்கி விரைந்து சாய்ந்து கொண்டிருந்தனர். தத்தம் தினசரி வாழ்க்கை அலுப்பை கடற்கரைக் காற்று வாங்குவதில் கரையவிட முடியும் என்ற எண்ணத்திற்குத்தான் எவ்வளவு அலங்காரங்கள் ஆர்ப் பாட்டங்கள் வேண்டிக்கிடக்கின்றன.இந்திர விழா எடுப்பென.மேலே ஆகாயம் நிர்மலமாக சூரிய மறைவிற்கு இருள் கொள்ளக் காத்திருந்தது. விதி விளக்குகளும், ஏற்றப்படாமல் எட்டிய வரையிலும் நின்று தெரிந்தன. 
நேரமாகி விட்டது. அறையின் அமைதி அச்சுறுத்த லாகி, உள்ளே இருப்புக் கொள்ள முடியாது கீழிறங்கி விதியை அடைந்தான். அநேகரை ஆங்காங்கே கடக்கும் போது உன்னிப்பாய் வெறித்து நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஒருக்கால் தன் எதிரிலேயே தெரியாமல் தன் நண்பன் தன்னைக் கடந்து செல்லக் கூடுமென்ற எண்ணம் போலும், எதிரே யாரோ ஒருவன் கையில் கட்டியிருந்த கடியாரத்தை இவன் கவனித்து, அவனருகில் சென்று திடுக்கிட நின்று, கேட்டான். இவனை ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டே அவன் தன் கடியாரத்தை யும் பார்த்துவிட்டு அடிக்கடி அதற்கு சாவி கொடுக்கத் தவறியதால் அது நின்றிருப்பதைக் குறிப்பிட்டு, "...ஏன் லார்..சரியாக நாலரை இருக்கும்" என்றான். ஐந்துக்கு மேலாகாது என்றும் சொல்லிக் கொண்டே அவன் போய்விட்டான். திரும்பி தன் அறையை அடையவும் தோன்றியது. ஒருக்கால் தன் நண்பன் அப்போதுான் அங்கே வந்து, தன் அறையில் தன் நாற்காலியில் தன்னை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டிருக்கமுடியும் எனவும், தான் குறிப்பிட்ட காலத்தில் வந்தும் தன்னை வெகு நேரமாகக் காத்திருக்கச் செய்ததன் தவறை அவன் கட்டிக் காட்டிச் சொல்ல, அதை எப்படி சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில், திரும்பும் நினைவை மறந்தான். வெளிக் கிளம்பும் போது பூட்டாதே தன் அறைக்கதவைச் சாத்தி வந்ததாகவும் ஞாபகம் வந்தது.மேலே விதி வழியே போய்க் கொண்டிருந்தான்.

ஒரு பங்களா, கற்றுச் சுவர் சூழ மத்தியில் தெரிந்தது. அதைக் கடக்கும் போது வராண்டாவில் ஒரு அழகிய பெண் அலுப்பு மிகுதி ஆனந்தத்தில் ஆவலுடன் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். படிக்கும் பாவனையும் அவள் முகத்தில் படர்ந்து தெரிந்தது. உள்ளே அவள் முன் சென்று சரியாக சொன்னபடி ஆறு மணிக்கு தான் வந்ததைச் சொல்லி அவள் அலுப்பிற்குத் தான் ஜவாப்பல்ல எனச் சுட்ட வேண்டுமெனத் தோன்றியதும், அவனாக அவளுக்குத் தானாக முடியுமா என்ற சந்தேகத்தில் விழிப்படைந்து மேலே நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராச் சம்பவம், விபத்தென அடிக்கடி ஆபத்தில் சிக்கவைக்க வாழ்வுதான், தவிப்பில் எவ்வளவு அபத்தமென பெரும் பாடாகிறது. குறுக்கும்.நெடுக்கும்.அநேக கார்கள் விதிவழியேவேகமாக இவனைத் தொடும் அளவிற்கு உரசிச் சென்று கொண் டிருந்தன_விதி விளக்குகள் இன்னும் ஏற்றிய பாடில்லை.


எதிரில், தனக்குப் பால் விற்பவளை இவன் பார்த்து. சிறிது தயங்கியவாறுநின்றான். இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள்_ளங்கே ஐயா.இவ்வளவு சிக்கிரமாக வெளியே.புதிசா நான் வரதுகூட மறந்து..." என்றதும் அவளுடன் தன் அறைக்குத் திரும்ப எண்ணினான்.மேலும், தன் நண்பன் தனக்காக அங்கு காத்து விற்றிருந்தால், இருவரையும்_அவன் பார்த்தால்_என்ற எண்ணம் எப்படியோதோன்ற அந்நினைப்பை மறந்தான்.அவளையே போய் பாலை ஊற்றச் சொல்லவும் தயங்கி இன்று வேண்டாம். நீ ரூமுக்கும் போக வேண்டாம்_என்று சொல்லி மேலே அவள் சிரிப்பில் பாவம் என்னிடம் எவ்வளவு பிரியம்" என மிதந்து நடந்து கொண்டிருந்தான்.
குறிப்பற்ற போக்கில் போவது, நிச்சயமாக வேண்டி, எல்லை விரிந்த வெளியென எங்கெங்கேயும் ஒளிகிறதா கிறது. எதிரே, ரயிலடி ஆயிரம் விளக்கொளியில் நிற்கக் கண்டான். சிறிது எட்டி நின்று பார்த்திருந்து, பிறகு அதன் ஈர்ப்பில் அதனூடே கும்பலில் ஒருவனாக எப்படி எப்போது கலந்தான் என்பது இவனுக்கு விளங்கவேயில்லை.
ரயிலடியே ஒரு அலாதி அநாதைப் பார்வை கொடுப்பது. அதன் வெறிச்சோட்டத்திலும் கும்பலிலும் மனிதர்கள் ரயில் வண்டியில் வந்து போவதற்கு சிறிது அது ஒரு தங்கும் இடம். ஆனால் இந்தப் பெரிய புகைவண்டி நிலையம், வண்டிகளில் பிரயாணம் செய்பவர்களுக்கு ஒரு ஆரம்ப முடிவு ஸ்தலம்-டெர்மினஸ் இங்கிருந்து ஆரம் பிக்கும்பிரயாண தொடர்கள் எங்கேயோ எப்போதோளட்டுத் திக்குகளுக்கும் சென்றடைந்து சிறிது தாமதித்து நின்று திரும்பவும் இங்கு வந்தடையும். நாலாபக்கத்து ஜனங் களும் இங்கிருந்து கிளம்பவும், ஆங்காங்கிருந்து வந்தடைய கூட்டுறவு கொள்ளுதலும் இங்கேதான். அநேக குண விசேஷங்கள் விட்டுப் பிரிந்து தவறுதலில் அநேகரை மாற்றடைவது நேருமிடம்.ஆக இந்த ஆரம்ப முடிவிடம் எவ்வளவு கும்பல் கச்சலையும் சமாளித்து சலனமற்ற ஒரு

உன்னத மெளனப் புதிர்கூேடித்திரம். அவ்வேளையில் அங்கே வெகு ஜனக்கும்பல். ஏதோ வந்த ஒரு ரயிலில் இருந்து இறங்கியவர்களும், போவதான, ஒன்றுக்குக் காத்திருப்பவர்களும் ஒன்று சேர்ந்து அநேக தவறுதலுக் கான பாவனை கொண்டிருந்தது. கூச்சல்கள் யாராரிட மிருந்து வருகிறதென்பதன்றி தானும் சேர்ந்ததான ஒரு பிரமை கொள்ளவும்.உருவங்கள் தெரிந்தும் மறைந்தும், சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகாநியதியில் அவதி கண்டு சிதறித் தெரிந்தன. இந்த உரு இந்த சப்தம், இந்த பெயர் என்ற இசைவு முறை நழுவி தனித்தனியாகத் தோன்றும் புலனுணர்வுகளை மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை.


அங்கிருந்து புறப்பட இருக்கும் ஒரு ரயில் வெகு காலமாக பிராயனத்திற்கு ஆவல் தூண்ட காத்திருந்தது போலும் அதில் செல்ல நினைத்தவர்கள் கண்ட கண்டபடி இடம் பிடிக்கும் ஆர்வத்தில் அதை மொய்த்துத் திரிந்தனர். நெருக்கியடித்து ஏறியவர்களும் மேலும் எவர் எவரும் படிக்கட்டுகள், ஜன்னல் பிடிப்பு மற்றும் மேல் கூறையிலும் கூட ஏறியிருந்தனர். சிலர், ஸ்டேஷன் கம்பங்களிலும், மேல் பிளாட்பாரத்திலும் ஏன் ஸ்டேஷன் கூறையிலும் கூட ஏறி ஆவலைத் தணித்துக் கொண்டிருந்தது. ஒரு குருட்டு குரங்குத்தனமான விளையாட்டெனத் தோன்ற இருந்தது. என்ஜின் கோர்க்கப்பட்டு யூதாகரத்தில் புகையைக் கக்கி நின்றது. செல்ல ஆயத்தம் கொண்டு நகர முடியாது முக்கித் திணறி பெருமூச்சில் உறுமியது. அந்த வண்டித் தொடர், ஒரு ஜனக்கதம்பத் தொடுப்பு வடமெனத் தோன்றியது.
சிக்கிரமே வேறு வண்டி புறப்பட இருப்பதை அறிவித்து விட்டு, கூட்டத்தைக் குறைக்க போலிஸ்காரர்கள் முனைந்தனர். கண்ட கண்டபடி அநேகரை இழுத்து அடித்துத் துரத்தினர். ஒரு புறம் ஓடியவர்கள் மறு புறமாக ஆங்காங்கே தொத்திக் கொண்டனர்.


இரண்டொரு முன் பின் குலுக்கலில் திடீரென வண்டி வேகம் கொண்டு ஓட ஆரம்பித்தது. உதறி விழுந்த அநேகர் அதில் தொற்றிக் கொள்ள முடியாமல் அத்துடன் ஒடி. களைத்து நின்றார்கள். இந்தச் சந்தடியில் தன்னை அறியாதே வண்டியில் புகுந்தது எவ்விதம் என, இவனுக்குப் புரியவில்லை. ஒரு சாமான் வைக்கும் மேல் தட்டில் ஒண்டி கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தான். தன் முழங்காலையும் கட்டி அதன் மேல் தலை வைத்துத் துங்கியும் விட்டான். எங்கெங்கேயோ கண்ட கண்டவிடங்களில் ரயில் நின்ற போதும், ஊர்ந்து சென்ற போதும் அநாவசிய பிரயாணம் கொண்டவர்கள் அவசியமென இறங்கி, இரவின் இருளில் மறைந்தனர். இடவசதி கண்டு காலை நீட்டி, நன்றாகத் தூங்கி விழித்த விதமும் புரியாதுதான் எழுந்து உட்கார்ந்தான். எங்கேயோ தடுமாறியதான ஒரு கனவுத் தோற்றமாய் உணர்ந்தவன், தானே ஒரு கனவுத் தோற்றமெனவும் கண்டான் போலும்.

தன்னையே விழி கொட்டாமல் கீழிருந்து பார்த்துத் துங்கி வழியும் ஒரு முகத்தில் ஏளனப் புன்னகை கண்டு விழித்து அவனுடன் பேச ஆர்வம் கொண்டான்.

"லார் நாம் தூங்கும்போது, டிக்கட் பரிசோதகர் வந்து போய் விட்டார் லார் நம்மைப் பார்த்து நம் நடையுடை பாவணயைக் கவனித்து டிக்கட் வாங்கியதாகக் கருதி கேட்காமலே போய்விட்டார் லார்.இனி வரமாட்டார் லார்."
இவன் தன் பையைத் தடவிக் கொண்டான். பையில் டிக்கட் இல்லாதது நிச்சயமாகத் தெரிந்தது. தான் வாங்கியதோ வாங்காததோ மேலும் பிரயாணம் செய்வதோ ஒன்றும் ஞாபகம் வரவில்லை. ஒருக்கால் தான் வாங்கியிருந்தால் இவன் ஏன் பிக்பாக்கெட் அடித்திருக்க முடியாதென்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. மறு ஒரு தரம் அவர் வந்தால் வருவதற்கு முன் எங்கேயாவது போய் விட வேண்டுமென்ற எண்ணத்தில் தன் தலைமயிரைப் பிடித்தே தன்னைத் துக்கிக்கொண்டு சென்று விடமுடியும் என, கோதிக் கொண்டான் போலும். 

நிற்காத ஒரு சிறிய ஸ்டேஷன் வெளிக் கைகாட்டி காட்டவில்லை போலும். ஒரு அத்துவான வெளியில் சிறிது அது நிற்க ஊர்ந்து கொண்டிருந்தது. வேகம் கண்டு, நிற்குமுன்பே அவசரமாக வெகு லாகவமாக இறங்கலா னான்.தடுக்க அவனிடம் சாமான் சச்சுகள் இல்லை, வண்டி நின்று போனவுடன் அந்த இரவின் இருள் சூழ்ந்த வெளியில் கூர்ந்து சுற்றும் முற்றும் கவனிப்பு கொண்ட போது, தன்னைப் போல் யாருமில்லை என அப்போது உணர்ந்தான். 

அந்த இரவு இருள் வெளியில், கண்ட இருளானது மிகப் பிரகாசமாகத் தெரிந்து ஏனைய தோற்றங்கள் கொள்ளவும் ஏதுவாகியது. அடிக்கடி இவ்வித ஒளியும் இருளாகியது. உடல் தனித்த ஆவி, வாசனை கொண்டு அரூபத்தில் அலற, பயங்கரம் தொனிக்கக் கேட்கிறது. இருள், மறைவு, ஒளி, இசைவு முறை நியதியினின்றும் நழுவியது போலும் தறிதலை என குதிக்கும் சேவல், இருளில் முண்டம் காணாது, கண்ட கண்டவைகளில் சார்ந்து பொழுது புலர கூவியது, விநோதமாகக் கேட்டது. கொஞ்சம் வெளிச்சம் காணுமுன்பிருந்து பனை, தென்னை, ஆடு, மாடு, நாயெனவும் ஏன், மனிதனாகக் கூட இச் சேவலின் விடிவைக் கூவ முடியாது? ஆதாரம் தெரிந்தும் தவறை (பிரமை) தவிர்ப்பது எப்படி..தவறென உலகைக் காண்பதில்தான் போலும்.


காலை ஒளி காணும் சிறிது முன்பே பால் கொடுக்க வந்தவள் கதவை தட்டி கூப்பாடு போட்டும் இவன் எழுவதாக இல்லை.யாரோ ஒருவன் கனவின் சாயை யென, தன் கனவில் உலகைக் கண்டு களித்திருந்தான் போலும். யார்யார் காதிலோ இந்த கூப்பாடுகேட்டும் இவன் காதில் விழாது. இவனுக்காக இனி காத்திருத்தல் தவறென. பால் விற்பவள் சென்று கொண்டிருந்தாள்.

- கசடதபற 1971

காதல் சாலை - மௌனி

மௌனிஅன்றைய தினம்

அன்று காலை அவன் மனங்கெட்டுத் திரிந்தான்.

அன்று நடுப்பகல் மேகமூட்டுக்கொண்டு இருண்டு இருந்தது. ஆலமரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள்  தொங்கிக்கொண்டு தன்னை அழைப்பதைக்கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப்பார்த்தான். அதைப்பிடித்திழுத்து ஒன்றை வீசி ஆட்டிவிட்டு வழி நடந்தான்.

மாலையில் மேற்கு வானம் மிகுந்த பிரகாசம் அடைந்திருந்தது. சூரியன் மறைந்தான். தன்னை அறியாது நடந்தான். காதல் காதல்,  எங்கும் காதல்தான், இவன் மனம் உடைந்தது. யோஜனைகள் அற்றன. காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது. உயிரற்று நடந்தவன் நிற்பதைத்தான் கண்டான். முன்னே தோன்றியது முன் போன்றே இருந்தது. பின் கடந்த வழி விடாமல் சுற்றி இவனைச்சூழ்ந்தது. வேகமாக நடக்கலுற்றான். உடம்பு ஒரு தரம் மிகக் குலுங்கியது. வண்டிச்சோடு, தோன்றுவதினின்று உதறமுடியாது போன்று வெகு ஆழமாகப்பாதையில் பதிந்திருக்கக் கண்டான்.

பொழுது போயிற்று. கடந்த காலம் கதைத் தோற்றம் கொண்டது. நிகழ்வது நிச்சயம் கொள்ளவில்லை. “பிறகு - பிறகு - ?” ஒன்றுமில்லை. பழையபடியேதான் திரும்பத் தோற்றம்.

அவ்வகை அவன் வாழ்ந்தவிதம் எவ்வளவு காலம் - ? உயிர் கொண்டா இறந்தா?  ஒரு கணமா அநந்த காலமா ?

இரவு

இரவு கண்டது. உலகை இருள் மூடியது. அன்றிரவு அவனுக்கு சதா இரவாகவே முடிந்தது.

முந்தின தினம்

தன் ஊரைவிட்டு இவன் சாலைவழியே நடந்து வந்தான். வழியில் சிறிது நேரம் களைப்பாற உட்கார்ந்தான். ஒரு கூடைக்காரி, கூடையை கீழே இறக்கி வைத்து சிறிது தூரத்தில் உட்கார்ந்தாள். ஒரு சிறு பறவை, பக்கத்து வரப்பின் மீது பறந்து வந்து உட்கார்ந்தது. கூடைக்காரி தன் முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். முந்தாணியை உதறி மேலே போட்டுக்கொண்டாள். சிறிது நேரம் சென்று நின்றுகொண்டு, அருகாமையைச் சுற்றிச் சுற்றி திரும்பிப்பார்த்தாள். இவன் இருப்பதை அறிந்தவள் அவனை அருகில் அழைத்தாள். அவனைப் பார்த்து, “ ஐயா , இந்தக் கூடையைச் சிறிது தூக்கிவிடுங்கள் ” என்றாள்.

இவன் “ என்ன எதை ?” என்றான்.

“ இதை ஐயா ” என்று இரண்டு கைகளையம் விரித்து நீட்டிக் கீழே இருந்த கூடையைக் காட்டினாள். “வெகு பளுவாக இருக்குமே ? உன் கழுத்தை அமுக்குமே ? உன்னால் தாங்க முடியுமா - ஏன் தூக்கிக்கொண்டு - ” என்றான்.

“ அதற்காகத்தான் ஐயா - உங்களை. ”

“ யார் எங்களையா ? புருஷர்களையா ? கூடைக்காரி ; சரி சரி, என்ன செய்யச் சொல்லுகிறாய் ? ” என்றான்.

“ கூடையைத் தூக்கிவிடுங்கள் ” என்றாள் அவள். கூடையை அவள் தலையில் ஏற்றிவிட்டான். அவள் முகத்தை அருகிலிருந்து பார்த்தான். அவள் தன் இரு கைகளையும் மேலே முழுதும் நீட்டிக் கூடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டாள். அவள் கழுத்து சிறிது சிறுத்துப் பெருத்ததை அவன் கண்டான். மார்பும் சுமையைத் தாங்கி கெட்டியானதைக் கண்டான். அவள் முகத்தில் வசீகரமும் நன்றி அளிக்கும் புன்னகையும் தோன்றின. இவன் மிகுந்த வருத்தங்கொண்டான். அவன் நின்ற இடத்தைவிட்டு அகலவில்லை. ஒதுங்கி அவனைத் தாண்டி அவள் சென்றாள்.

சிறிது சென்று, அவன் திரும்பிப் பார்த்தான். ரவிக்கை இல்லாது திறந்த அவள் முதுகைக் கண்டான். திடீரென்று வரப்பில் உட்கார்ந்திருந்த அப்பறவை நடுவே பறந்து எதிர்ப்புறத்து மரக்கிளையில் மறைந்து. இவனுக்குத் தன்னைஅறியாது சிரிப்பு வந்தது ; சிரித்து விட்டான். அந்தப் பறவை “ சீ சீ ” என்று கூவிக்கொண்டே பறந்துவிட்டது.

கொஞ்சம் மேலே நடந்து திரும்பினாள் கூடைக்காரி. சாலைத் திருப்பத்தில் மறைந்து விட்டாள். பக்கத்து ஓடை மதகுக் கட்டையில் உட்கார்ந்தான். மறுபடியும் கூடைக்காரி, தன் பளுவை இறக்க வருவதை எதிர்பார்த்தவன் போன்றிருந்தான். ஆனால் எதிரில் எதிர் மதகுக் கட்டை, வலது புறமும் இடது புறமும், சாலையும், பாழ் அடைந்த அச்சாவடியும் சமீபகாலத்தில் இடிந்தது போன்று முற்றும் பாழ் தோற்றம் கொடுக்கவில்லை.

அலுப்புற்று எழுந்து, நடந்து அவன் பக்கத்து ஊரை அடைந்தான். கீழ்க் கோடியிலிருந்து மேற்கே அவ்வூர்த்தெரு வழியாக மெதுவாக நடந்துகொண்டே போனான். அவன் முன் குறுகிய அவன் நிழல் போய்க்கொண்டிருந்தது.

பின்னிலிருந்து அவ்வக்கிரகாரத்து நாய் குரைத்தது. அவன் திரும்பிப் பார்த்தான். அவ்வூர்ப் பெண்கள் சிலர் இடுப்பில் குடத்துடன் ஜலம் மொள்ள, கோயிற் கிணத்தடிக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். “ஏன்? எங்கே ?” என்பது போல் நாய் குரைத்தது.

“ சீ சீ நாயே, நான் அவளைப் பார்க்க - தேட - போகிறேன். ”

குரைப்பு. “ ஏன் ? எங்கே ? ”



“ சீ சீ நாயே ! ஏன் என்கிறாயே - என் காதலி அல்லவா - என் காதல் இருப்பிடம் அல்லவா - எங்கே? தெரிந்தால் ஏன் போகிறேன். ”

“ ஏன் - ? எங்கே ? ”

“ சீ சீ ! நாயே அப்பெண்கள் ஜலமெடுக்க, கிணற்றுக்குப் போவதுபோலவா ? காதல் இதுமாதிரி அல்ல - ”

மறுபடியும் குரைப்பு.

அவனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. பொறுக்காமல், அந்த நாயைத் துரத்தினபோது, நாய் சிரித்துக்கொண்டே “ சரி - சரி ” என்று சந்தேகத்துடன் ஆமோதித்துக் குரைத்துக்கொண்டே ஓடிவிட்டது.

ஜலத்திற்குப் போகும் பெண்களைப் பார்த்தான். அதில் ஒருத்தி கறுப்பு. அவள் இடுப்பில் பித்தளைக் குடம், முகத்தில் மிகுந்த வசீகரம். அப்பெண் குனிந்து குதிகாலில் தண்டின குயவானை இழுத்துவிட்டுக் கொண்டாள். எல்லாப் பெண்களும் எதையோ பேசிக்கொண்டு போனார்கள். புரியாத பேச்சுச் சத்தத்திலும் தனிப்பட்டு ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பவளை இவன் பார்த்தான். அவன் முகத் தோற்றமே இவன் மனதில் பதியவில்லை. ஆனால் அவள் சிரிப்பதைத்தான் இவன் கண்டான். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே எல்லோரும் கோவிலினுள் சென்று மறைந்துவிட்டனர். திரும்பி அவன் அப்பெண்ணுடைய சிரிப்பை எண்ணிக்கொண்டு, அந்த ஊரைக் கடந்து சென்றான்.

அவ்வூரை விட்டதும் அவன் அறுவடையான வயல்கள் வழியாகப் போனான். சிறுசிறு மேகங்கள், உருவை மாற்றிக்கொண்டு கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. சிறு வெண்மை மேகம் ஓன்று சூரியனை மெதுவாக கடக்கும்போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடியது. அறுவடையான வயல்களில் ஒற்றையடிப்பாதை இன்னும் சரியாக ஏற்படவில்லை. நடுநடுவே ஒன்றிரண்டு கெட்டியான கட்டைத்தான் இவன் காலால் மிதிக்கப்பட்ட போது குத்தியது. வயலைவிட்டு அதன் வரப்போடு சிறித் தூரம் சென்றான். நன்கு காயாமல் இருக்கும் வரப்பில், சில சில இடங்களில் இவன் குதிகால் அமுங்கும். “ அப்படியே பாதாளம் வரையில் நான் அமுங்கிப்போனால் -  எனக்கு பளு ஜாஸ்தி - பளு இல்லாவிடில் இப்படி அமுங்குவேனா - ”

சில சில இடத்தில் வரப்பில் விதைத்த துவரை வெட்டப்படாமல் இருந்தது. இருபக்கமும் தன்னைவிட உயர்ந்து வளர்ந்து இருக்கும், செடிகளின் இடையே சென்றான். நடுநடுவே இவன் திடுக்கிடும்படி தத்துக்கிளி உயர எழும்பும். திடீரென்று மறுபடியும் மறைந்துவிடும். இப்படியே இவன் ஒரு களத்து மேட்டிற்குச் சென்றான். நடுவில், கதிரடிக்கும் சிறு இடத்தைத் தவிர மற்ற இடத்தில் ஒரே செடி, புல் பூண்டுகள் மண்டி கிடந்தன. சிறு புல் நீல புஷ்பங்கள், மிகுந்து ஒரு இடத்தில் பூத்திருந்தன. அவ்விடம், கண் குளிர்ந்த ஒரே நீலத்தால், சலவை செய்தது போன்றிருந்தது.

போயக்கொண்டிருக்கும் போது ஒரு நெரிஞ்சி முள் இவன் காலில் தைக்கக் கீழே உட்கார்ந்தான். உள்ளங்காலைக் கையால் தடவிக்கொண்டே, இவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான், முள் இல்லை ; ஆனால் வலி மட்டும் இருந்ததை இவன் உணர்ந்தான். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய வைக்கோல்போர், பழுப்பாக வைக்கோல் மாதிரியே தோன்றவில்லை. நன்கு காயாமல் பசுமை கலந்த பழுப்பிலேயே, உயர்ந்து, ஏதோ தோற்றம் கொண்டது. தூரத்தில் இருந்த வேலிக்கால் காட்டாமணக்குச் செடியின் மீது ஒரு குருவி வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. அது கத்திக்கொண்டே இறக்கும்  போன்று தோன்றியது.

“ சீ சீ ! அவள் போய்விட்டாள் - ” என்றது அக்குருவி. “ யார் ? எங்கே ? ” என்றான் இவன். மிக வெட்கமுற்றுப் பயந்தோடிவிட்டது அக்குருவி, “ குருவியே உனக்கு புத்தியில்லை, ஏன் கத்திக் கத்திச் சாகிறாய் ? - ” என்று வெற்றுக் காட்டாமணக்குச் செடியைப் பார்த்துச் சொன்னான்.

திடீரென்று எழுந்து நடக்கலுற்றான். சிறிது சென்றவுடன் மற்றொரு முள் குத்த இவன் கீழே உட்கார்ந்தான். முள்ளிப் பிடுங்கி எறிந்தான். பக்கத்தில் ஒரு எருக்கஞ்செடி முளைத்திருந்தது. அதன் மலராத மொட்டுக்களை நசுக்கினான். அப்போது உண்டான சிறு சப்தத்தில் கொஞ்சம் ஆனந்தம் அடைந்தான்.

அவள் ஞாபகம் வந்தது ! “ காதலி எங்கே - ஏன் நான் காதல் மணந்தானே புரிந்துகொண்டேன் ? அவளும் என்னைக் காதலித்தாளே ! எங்கே அவள் ? - அவள் எருக்க மொட்டில்தான் இருக்கிறாள். நசுக்கினால் வெளிவருவாள் ” மறுபடியும் மிஞ்சின மொட்டுகளை நசுக்கினான். மொட்டுகள் இல்லை. சப்தமும் இல்லை. அவளையும் காணோம். கோபம் கொண்டான். செடியின் இலைகளைப் பிடித்து வெடுக்கென்று பிடுங்கினான். கைநிறையக் கசங்கின. இலைகள் வந்தன. ஓங்கிக் கீழே அடித்தான். போக எண்ணி எழுந்தான். காட்டாமணக்குச் செடியின் மீது மறுபடியும் அக்குருவி இருந்து கத்தியது. “ சீ சீ அவள் போய்விட்டாள் - ” குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து வீசி எறிந்தான். அது பறந்துவிட்டது. இவன் நடந்து போனான்.

சிறிய நகரம் ஒன்றைச் சேர்ந்தான் இவன். சாயங்காலவேளையும் ஆயிற்று.. இவன் அவ்வூர்க் கடைத்தெருவின் வழியாகச் சென்றான். பண்டங்கள் வாங்குபவர்களைக் கண்டான். “ காதல் - காதல் ஏன் இங்கு இருக்க முடியாது ? ” என்று பார்த்துக்கொண்டே, ஒரு முச்சந்தி வந்ததும் நின்றான். காணமுடியாததை “ அதோ - அதோ ” என்பது போலச்  சற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். தன் பின்னால் ஒருவன் நிற்பதைக் கண்டான். அவன் மீசை சற்றுப்பெரிது ; கிராப் தலை சிறிது கோணல் நெற்றிச் சந்தனப் பொட்டு மிகப் பெரியது. எல்லாம் கலந்து அவன் தோற்றம் இவன் மனத்தில் நன்றாகப் பதிந்தது.

“ ஐயா - மிக உயர்ந்த அழகு - சிறு வயது ;  நீங்கள் சாதாரணமாக வாருங்கள். மயங்கியே விடுவீர்கள் - காதல் மயக்கம் ஐயா - ரொம்ப அழகு ஐயா - ” என்றான் அவன்.

இவன் “ எங்கே -  ? எங்கே -  ? போவோம் - ? ” என்றான். அவனோடு கூடச் சென்றான். ஒரு சந்தில், சிறிய மட்டமான வீட்டிற்குள் இருவரும் சென்றனர். உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும், வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுதுகொண்டு எரிந்தது.

கூடத்தில் ஒரு பெண் இருப்பதை இவன் கண்டான். அவள் உட்கார்ந்திருந்தாள். எழுந்து நின்றாள். கோணலாகத் தலையை வாரிக் கொண்டிருந்தாள். புது வறுமையையும், சேர்த்துக் கட்டிக் கொண்டது போல் அவள் முகம் தோன்றியது.

“இவள்தான் கிருஷ்ணவேணி, வெகு அழகு ஸார், எல்லோரும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் - நீங்களும் கட்டாயம் சொல்லப்போகிறீர்கள் ஸார் - ” என்றான் அவன்.

“ இங்கே - ஆம் அதைத்தானே நான் தேடி அலைகிறேன் - ”

“ சரி ஐயா - இருங்கோ - நான் இதோ வரேன் - ” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போய் விட்டான்.

இவனுக்கு காதல் வந்தது ! “ எப்படி - ? எங்கே - ? எதுபோல - ? ”  இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவா - இல்லை. மிகுந்து திடீரென்று  வாய் பிளக்கவா ?  தெரியவில்லை. ஆனால் சமுத்திரக்கரையில் ஒழுங்கு உடைதரித்த வாலிபர்களுக்கு, நாகரிக ஒய்யார நடை மாதர்களைக் கண்டால் வருவது போலவா ? அவ்வகை இல்லை. அது மாதிரி யிருந்தால் இவனுக்குத் தெரிந்து இருக்குமே !

“ காதல் - எங்கே வந்ததா ? கண்டேனா - ”

“ ஆம். காதலை நேருக்கு நேராக ” தீபச் சுடர் சிறிது தூண்டிவிடப்பட்டது. கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றேதான், நிமிர்ந்து ஜ்வலித்து.

அவன்  பேசவில்லை. உட்காரவில்லை, தீபத்திற்கும் சுவற்றுக்கும் நடுவே இவனுக்கு நேராக இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் நிழல் பாதி கூடத்திலும், இடுப்பிற்கு மேல் எதிர்ச் சுவரிலும் விழுந்து சிறிது சிறிது ஆடிக் கொண்டிருந்தது. அது சுவர் முழுவதும் வியாபித்துத் தலை உச்சி மேடுவரை போய் மறைந்து, பயங்கரத்தோற்றத்தைத் கொடுத்தது. அவள் அத் தீபச் சுடரைப் பார்த்து நின்றிருந்தாள்.

அன்றிரவு, இவன், அங்கு தங்கினான், அவள் இரவெல்லாம் தூங்கவில்லை. அவன் பக்கத்திலே, கண்ணயராமல், விழித்துப்படுத்திருந்தாள். இவன் நடுநடுவே சிறிது விழித்துக்கொண்டான். இரண்டொருதரம் பிதற்றுவது போல் பேசினான்.

“ நாய் சொல்லியது சீ - சீ - அவள் போய்விட்டாள். - ஓடி விட்டாள். காதல் ஏன் ? எங்கே ?  சீ - சீ - நாயே காதல் எங்கேயா - ? இருட்டிவிட்டது. காண முடியாதோவென்று பயந்தேன் - ஆனால் இருட்டிலும் அகப்படுமோ காதல் - ? எங்கே ? ஏன் ? ” என்றெல்லாம் பிதற்றினான். அவன் பிதற்றலில் தனக்கு எதாவது புரிகிறதா வென்று அவள் நடுநடுவே சிறிது கவனித்தாள். ஒன்றும் புரியவில்லை, அவனையும் தெரியவில்லை.

விடியுமுன் மறுபடி ஒருதரம் பிதற்றினான். “ அந்தக் குருவி - ‘ஓடிவிட்டாள் ’ என்றது. யார் - ? அது வெட்கம் கொண்டு பறந்து விட்டது. ஓடினால் வெட்கமா ?
காதல் - ? ஏன் -  ?  எங்கே -  ?  அவள் எங்கே - அவள் ஓடி விட்டாளா ? இல்லை, நான்தான் ஓடுகிறேன். ஏன் - எதற்கு - காதலா - சீ - சீ இல்லை - அவள் - ராஜீவி - ”  அவன் முடித்துவிட்டான். அவளும் கேட்டாள். விடிந்ததும் இவன் எழுந்தான். அவளும் எழுந்தாள்.  அவனும் வந்தான். அவனும் இவனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் உள்ளே போய் விட்டாள். வெளிவந்து, தாம்புக் கயிற்றை எடுத்துக்கொண்டு, பின்பக்கம் சென்றாள். சிறிது சென்று, திரும்பி வந்து, குடத்தையும் எடுத்துச் சென்றாள், கொல்லை கிணற்றடிக்கு. இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் வரவில்லை. வருவது போலும் இல்லை. அவன் கொல்லைப் பக்கம் போனான். இவனும் தொடர்ந்து சென்றான். அவளையும் இவர்கள் பார்த்தனர். குடம், அவள் கால் கீழ் சற்று எட்டி உதைக்கப்பட்டு உருண்டிருந்த கயிறு மேலிருந்து தொங்கியது. இவள் கயிற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் மேல்நோக்கி இருந்தது. கண்கள் மூடியிருந்தன, அவள் ஆத்மா முக்தி அடைந்தது. இவன் மனதில் - கால்களும் தேகமும், மெதுவாக ஊஞ்சல் ஆடின. அவள் முகத்தை இவன் பார்த்தான். “ காதலை - ? ” அவளை மறுபடியும் பார்த்தான். அவள் ஆத்மாவை எண்ணினான்.முக்தி அடைந்ததை உணர்ந்தான். போன இரவு நிகழ்ச்சிகளை நினைத்தான். பத்து மாதம் முன்னால் நிகழ்ந்தவைகளை நினைப்பூட்டிக் கொண்டான். ராஜீவியை முதல்தரம் தான் முத்தம் கொடுத்த போது அவள் முகத்தோற்றத்தை (மனதில்) கண்டான். தேவர் போன்று தரையில் தீண்டாது ஆடிக்கொண்டு நிற்பவளுடைய முகத்தை உற்று நோக்கினான். “ காதல் ?  ராஜீவியா - இவள் ? - காதல் - இவள் - ” வெளியே விரைந்து ஓடினான்.

ஓடி ஓடி அவ்வூரை விட்டகன்றான். அவன் வழிநடந்தான். “ காதல் - ? எங்கே - எப்படி - ” என்றான். உணர்ந்தானா ?  “ அதோ அங்கே - ” என்று ஆகாயத்தை இருகைகளையும் விரித்து நீட்டிக் காட்டினான். விரல்களைக் கெட்டியாக மூடி அசைத்துப் பயமுறுத்தானான். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. அன்று பொழுதும் போயிற்று. இரவும் வந்தது ; ஆனால் அவனுக்கு மறுபடியும் பொழுது புலரவில்லை.

நேருக்கு நேரே காதலைக் கண்டதே போலும் - கண்டதன் கதி போலும் - காண்பவரின் கதி போலும் -

- மணிக்கொடி, 1936.
தட்டச்சு : ரா ரா கு