Monday 5 August 2019

சாவு நிலையானது காதலுக்கு அப்பாலும் - மார்க்வெஸ்

Gabriel Garcia Marquez

சாவு நிலையானது காதலுக்கு அப்பாலும் 

செனட்டர் ஒனாஸிமோ சான்செஸ் தன் வாழ்க்கையின் உன்னதமான பெண்ணைக் கண்டபொழுது அவர் இறப்பதற்கு இன்னும் ஆறு மாதங்களும் பதினோரு நாட்களும் இருந்த ரோசல் டெல் விரே என்னும் பொய்மையான கிராமத்தில் அவளைச் சந்தித்தார். அது ஒரு புறம் இரவு நேe கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கு ரகசிய கப்பல்து? மேடையாகவும் மறுபுறம் பகல் நேரத்தில் பாலைவனத்தின் மிகவும் பயனற்ற கழிமுகமாகவும் இருந்தது. கிராம் வெறுமையானதும், திசையற்றதுமான ஒரு கடல்புறத்தைப் பார்த்திருந்தது. எல்லாவற்றிலிருந்தும் தூரமாய் அவ்வளவு விலகி இருந்ததால் யாருடைய வாழ்க்கைப் பயணத்தையும் திசைதிருப்பும் சக்திமிக்க எவராவது அங்கு வாழ்ந்து கொண் டிருப்பார்களா என ஒருவரும் சந்தேகித்திருக்க முடியாது. அதன் பெயர் கூட ஒரு வகையான கிண்டல் தான். காரணம் அந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரோஜாவை செனட்டர் ஒனாஸிமோசான்செஸ், லாரா ஃபரீனாவைச் சந்தித்த அதே மதியத்தில் அணிந்து கொண்டிருந்தார். 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் நிகழ்த்திய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அது தவிர்க்க முடியாத ஒரு நிறுத்தமாக இருந்தது. கேளிக்கை வண்டிகள் காலை யிலேயே வந்துவிட்டிருந்தன. நகரங்களுக்குள் பொது நிகழ்ச்சி களின் போது கூட்டங்களைப் பெரிதாக்க கொண்டு செல்லப்பட்ட, கூலிக்கு அமர்த்தப்பட்ட சிவப்பிந்தியர் களைத் தாங்கிய ட்ரக்குகள் பிறகு வந்தன. பதினோரு மணிக்கு சற்று முன்பாக, இசை மற்றும் வானவெடிகளுடன் குழுவின் ஜீப் கார்களும் அமைச்சர்கக் காரும் வந்து சேர்ந்தன. அந்தக் கார் மென் சிவப்பு ஸ்ட்ராபெர்ரி ஸோடா நிறத்தில் இருந்தது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட காருக்குள் செனட்டர் ஒனாஸிமோ சான்செஸ் ஆழ்ந்த அமைதியிலும் காற்றற்றும் இருந்தார். ஆனால் கதவைத் திறந்தவுடன், நெருப்பலை வீச்சு ஒன்றினால் அதிர்ந்து போனார். அவருடைய தூய பட்டுச்சட்டை ஒருவித மென்னிற சூப்பினால் நனைந்தது. அவர் பல வருடங்கள் வயதாகிவிட்ட மாதிரியும், எப்பொழுதையும் விட மிகத் தனிமையாகவும் உணர்ந்தார். நிஜத்தில் அவருக்கு நாற்பத்து இரண்டு வயதே ஆகியிருந்தது. காட்டிங்கென் கல்லூரியில் ஆனர்ஸ் பட்டம் பெற்று, உலோகவியல் துறை என்ஜினீயராக வெளிவந்தார். அதிகம் பயனின்றிப் போயினும், மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட லத்தீன் பேரிலக்கியங் களின் ஒரு ஆர்வமான வாசகர். அவருக்கு சருமம் ஒளிரும் ஜெர்மன் பெண்ணுடன் திருமணம் ஆகி, அவள் மூலமாக ஐந்து குழந்தைகள் இருந்தன. அவர்கள் எல்லோரும் தம் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்--அவர் எல்லோரையும் விட மகிழ்ச்சியானவராக - அடுத்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாக அவர் இறந்துபோவார் என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்கள் அவரிடம் சொல்லும் வரை. 

பொதுப் பேரணிக்கான தயாரிப்புகள் முடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அவர் ஓய்வெடுப்பதற்காக அவர்கள் ஒதுக்கித் தந்திருந்த வீட்டில் ஒரு மணி நேரம் தனிமையில் இருப்பதற்கு சாத்தியப் படுத்திக்கொண்டார். படுப்பதற்கு முன்பாக, பாலைவனத்தின் வழியாய் எல்லாம் அவர் வாடி விடாமல் வைத்திருந்த ரோஜாவை ஒரு தம்ளர் குடிநீரில் போட்டு வைத்தார். நாளின் மற்ற நேரங்களுக்கெல்லாம் அவருக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கறியின் பொரித்த பகுதிகளை திரும்பத் திரும்ப சாப்பிட வேண்டியதைத் தவிர்க்க விரும்பி, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த, தானியங் களிலிருந்து தயாரிக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டார். மேலும், குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னராகவே பல வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டார். வலிக்கு முன் -பாகவே நிவாரணத்தை அடையும் வகையில். கித்தான் தொட்டிலுக்கு மிக அருகில் மின் விசிறியைச் சுழலவிட்டு, ரோஜாவின் நிழலில் பதினைந்து நிமிடங்களுக்கு வெற்றுடம் -புடன் நீட்டிப் படுத்திருந்தார். குட்டித் தூக்கத்தின் போது சாவைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றபடிக்கு மனதின் திசை திரும்பல்களுக்கு எதிராகப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார். மருத்துவர்களைத்தவிர, அவர் ஒரு முடிவு செய்யப்பட்ட காலத்திற்குள் மரணத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் வாழ்க்கையில் எவ்வித மாறுதல்களும் இன்றி தன் ரகசியத்தைத் தானே தனியாகப் பொறுத்துக் கொள்ளத் தீர்மானித்தார்- தற்பெருமையினால் அல்ல அவமானத்தினால். மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பொதுப்பிரவேசம் செய்தபோது தன் மனதின் முழுக்கட்டுப்பாட்டுடன் உணர்ந்தார் 

வெடுத்துக் கொண்டு, அவரின் ஆன்மா வலி எதிர்ப்பு மாத்திரைகளால் வலிவூட்டப்பட்டு, முரட்டுத்தனமான லினன் தலாக்குகளையும், பூ வேலைப்பாடு செய்யப்பட்ட சட்டையையும் அணிந்து தூய்மையாக இருந்தார். இருப்பினும் சாவின் தேய்மானத்தன்மை அவர் உத்தேசித்திருந்ததைவிட மிகத் தீவிர அழிப்புத்தன்மை உடையதாயிருந்தது. காரணம் மேடையின் மேலே சென்றதும், நல்ல நிகழ்வுக்காக அவருடன் கைகுலுக்கிப் போராடிக் கொண்டிருப்பவர்கள் மீது, விநோதமான வெறுப்பு கலந்த புறக்கணிப்பை உணர்ந்தார். பிற சமயங்களில் போல இம்முறை வெறுமையான சிறு சதுக்கத்தின் உப்பு மண் கற்களின் வெப்பத்தைத் தாங்க முடியாமலிருந்த, காலணிகள் அணியாத செவ்விந்தியர் குழுக்களுக்காக அவர் வருத்தப்பட வில்லை. கைத்தட்டல்களை ஒரு கையசைவின் மூலம் மெளனப் படுத்தி, ஏறத்தாழ ஒரு ஆத்திரத்துடன், எவ்வித சைகைகள், அசைவுகளுமின்றி அவர் பேசத் தொடங்கினார்- பார்வை கடலின் மீது பதிந்திருக்க, கடல் வெப்பத்தினால் பெருமூச்சு விட. அவருடைய அளவிடப்பட்ட, ஆழ்ந்த குரலில் அமைதி -யான நீரின் தன்மை இருந்தது. ஆனால் மனப்பாடம் செய்யப் பட்டு, பலமுறை திரும்பச் சொல்லப்பட்ட பேச்சு நினைவுக்கு வரவில்லை . மாறாக, Marcus Aurelius-இன் நான்காவது Meditations-இல் கூறப்பட்ட விதிவசமான அறிவிப்புக்கு எதிரானது போன்றதாயிற்று. 

'நாம் இங்கு இயற்கையைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் கூடியுள்ளோம்' அவர் தொடங்கினார், அவருடைய வலிமையான நம்பிக்கைகளுக்கெல்லாம் எதிராக. 'தாகத்தி னதும், மோசமான தட்பவெட்ப நிலைகளினுடையதுமான பிரதேசத்தில், நம்முடைய தேசத்திலேயே நாம் கேட்பாரற்ற பிள்ளைகளாக, கடவுளின் அனாதைகளாக, நம் சொந்த தேசத்திலிருந்தே நாடு கடத்தப்பட்டவர்களாக இனி ஒரு பொழுதும் இருக்க மாட்டோம். கனவான்களே, கனவதிகளே, நாம் வித்யாசமான மனிதர்களாக ஆவோம், நாம் உயர்ந்த மகிழ்ச்சியான மனிதர்களாவோம்.' 

அவருடைய இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு ஒரு அமைவு முறை இருந்தது. அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருடைய உதவியாளர்கள் காகிதப் பறவைகளில் சில கொத்துக்களை எடுத்து காற்றில் வீசினர். இந்த செயற்கை  பலகையினால் அமைக்கப்பட்ட மேடையினைச் சுற்றிப் பறந்து, கடலை நோக்கிப் போயின. அதே நேரத்தில் மற்றவர்கள், ஒட்டுக் கம்பளத்தில் ஆன இலக்க " கொண்ட செயற்கை மரங்களை பாரவண்டிகளிலிருந்து எடுத்து, உப்பு மண்ணில், கூட்டத்திற்குப் பின்புறம் நட்டார்கள். அட்டையில் செய்யப்பட்ட ஒரு பொய் முகப்பினை நிறுத்தி முடித்தனர். அதில் சிவப்பு செங்கற்கள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களுடைய செயற்கை வீடுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு நிஜ வாழ்க்கையில் பரிதாபகரமான பொத்தல் குடிசைகளை மறைத்தனர். 

இந்த கேலிக் கூத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரம் அளிக்கும் வகையில், லத்தீனில் இரண்டு மேற்கோள்களுடன் செனட்டர் பேச்சினைத் தொடர்ந்தார். மழை உண்டாக்கும் யந்திரங்கள், உணவுக்காகும் விலங்குகளை உற்பத்திசெய்யும் எடுத்துச் செல்லப்படக்கூடிய உபகரணங்கள், ஜன்னல் தொட்டிகளில் பேன்ஸி மலர்கள், உப்பு மண்ணில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் மகிழ்ச்சியின் எண்ணெய்கள் போன்ற வற்றை அளிக்க உறுதி கொடுத்தார். தன் கற்பனை உலகம் உருவாக்கப்பட்டு விட்டதைக் கண்ட அவர் அதைச் சுட்டிக் காட்டினார். 'அது போலத்தான் நமக்கு இருக்கும், கனவான் களே, கனவதிகளே' அவர் உரக்க அறிவித்தார். 

பார்வையாளர்கள் சுற்றித் திரும்பினர். காகிதத்தில் தீட்டப்பட்ட ஒரு பெரும் கடற்கப்பல், வீடுகளுக்குப் பின்புறம் கடந்து சென்றது. அந்த செயற்கை நகரத்தில் இருந்த மிக உயரமான வீடுகளையெல்லாம் விட அது உயரமாக இருந்தது. அது செய்யப்பட்டு, கீழிறக்கப்பட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தால் அதன் மீது பொருத்தப்பட்டிருந்த கெட்டி அட்டை நகரம் பயங்கர சீதோஷ்ணத்தால் அரிக்கப்பட்டிருப்பதையும், அது ரோசல் டெல் விரேவைப் போலவே ஏறத்தாழ பரிதாபமாகவும், தூசி படிந்தும் இருப்பதை செனட்டர் மட்டுமே கவனித்தார். 

இந்தப் பன்னிரண்டு வருடங்களில் முதல் முறையாக நெல்ஸன் ஃபரீனா தன் வணக்கத்தைச் சொல்ல செனட்டரிடம் செல்லவில்லை. தன் மதியத்தூக்கத்தின் மிச்சங்களுடன் கித்தான் தொட்டிலில் படுத்தபடி, தன் கம்பவுண்டர் கைகளினால் தானே கட்டிய, இழைக்கப்படாத பலகைகளால் ஆன வீட்டின் குளிர்ச்சியான கூடத்திலிருந்து பேச்சினைக் கேட்டுக் கொண்டி -ருந்தான். அவன் முதல் மனைவியை இதே கைகளால்தான் இழுத்து, நான்கு துண்டங்களாக வெட்டினான். டெவில்ஸ்டிவிலிருந்து தப்பித்து, ஒரு கப்பலில் ஏறி ரோசல் டெல் விமாவில் தோன்றினான். ஒரு பாவமும் அறியாத மேக்கா பெருங்கிளி -ளால் நிரம்பியிருந்த அந்தக் கப்பலில், பாரமரீபோவில் அவன் கண்ட அபவாதமான, அழகிய கறுப்புப் பெண்ணா சந்தான். சிறிது காலத்திற்குப் பின், இந்த பெண் இயற்கையான காரணங்களால் இறந்து போனாள். இவள் முன்னவளின் முடிவைப் போன்ற தொன்றைச் சந்திக்கவில்லை. தன் காலிஃபிளவர் பாத்திக்கு தானே எருவாகிப் போகவில்லை மாறாக அவளின் டச்சுப் பெயருடன் உள்ளூர் இடுகாட்டில் முழுமையாகப் புதைக்கப்பட்டாள். இவளின் மகள், இவளுடைய நிறத்தையும், உடற்கட்டினையும், மஞ்சளும், வியப்புக்குட்பட்டது போன்றதுமான அப்பாவின் கண்களையும் ஸ்வீகரித்துக் கொண்டிருந்தாள். உலகின் மிகச் சிறந்த பெண்ணை தான் வளர்க்கிறோம் என்ற கற்பனை அவனுக்கு இருந்ததற்குத் தகுந்த காரணம் இருந்தது. 

எப்பொழுது முதல் முறையாக சான்செஸ்ஸை அவருடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்தித்தானோ அப்பொழுதிலிருந்தே நெல்ஸன்ஃபரீனா சட்டத்தின் பிடிகளில் இருந்து அவனை அப்பால் வைத்துவிடக் கூடிய பொய் அடையாள அட்டையைப் பெறுவதற்கு உதவும் படி அவரைக் கெஞ்சியிருக்கிறான். செனட்டர், நட்பான முறையில் ஆனால் ஸ்திரமான வகையில் மறுத்துவிட்டார். நெல்ஸன் ஃபரீனா முயற்சியைக் கைவிட வில்லை. வித்யாசமான உதவி கோருதலுடன் தன் கோரிக்கையைத் திரும்பச் சொல்லு வான். ஆனால் இந்த முறை, கடத்தல்காரர்களின் வெப்பமான பதுங்குமிடத்தில் உயிருடன் அழிவதற்கு விதிக்கப்பட்டவனாக, தன் கித்தான் தொட்டிலிலேயே தங்கிவிட்டான். கடைசி கைத் தட்டல்களைக் கேட்ட பொழுது, தலையை உயர்த்தி, மரப் பலகைகளால் ஆன வேலிக்கு அப்பால் பார்த்தவன், கேலிக் கூத்தின் பின்புறத்தைக் கண்டான் : கட்டிடங்களுக்கான செட்கள், மரங்களுக்கான சட்டங்கள், மறைந்திருந்த பொய்த் தோற்றவாதிகள்- அவர்கள் பெரும் கடற்கப்பலைத் தள்ளிக் கொண்டிருந்தனர். அவன் எந்தவித காழ்ப்பும் இன்றி காறித் துப்பினான். 

'மலம்' அவன் சொன்னான் 'இது கறுப்பு மனிதர் தீவு அரசியல்'. 

பேச்சு முடிந்தவுடன், வழக்க முறைப்படி, நகரின் தெருக்களின் வழியாக, இசை மற்றும் வே வழியாக, இசை மற்றும் வான வெடிகளுக்கு இடையில் நடந்து சென்ற செனட்டர் தம் கஷ்டங்களைக் கூறிய நகர மனிதர்களால் சூழப்பட்டார். அவர்களின் வேண்டு கோள்களை நல்ல மனநிலையுடன் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஒவ்வொரு வரையும் ஆறுதல்படுத்த, அவர்களுக்கு எந்தவிதமான கடினமான உதவிகளும் செய்யாமலேயே ஏதாவது ஒரு உத்தியைக் கண்டு பிடித்தார். தன் சிறு குழந்தைகள் ஆறு பேருடன் வீட்டின் கூரை மீதிருந்த ஒரு பெண் இந்த களேபரத்தையும், பட்டாசு வெடிச்சத்தங்களையும் மீறி தன் குரலைக் கேட்கும்படி செய்தாள். 

'நான் ஒன்றும் அதிகமாகக் கேட்கவில்லை செனட்டர்' அவள் கூறினாள் 'தூக்கிலிப்பட்ட மனிதனின் கிணற்றி லிருந்து நீர் இரைக்க மட்டும் ஒரு கழுதை வேண்டும்'. செனட்டர் ஆறு மெலிந்த குழந்தைகளைக் கவனித்தார். 'உன் கணவனுக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டார். 'அரூபாத் தீவுக்கு செல்வம் தேடிப் போனார்' அந்தப் பெண் நல்ல மனநிலையில் பதில் கூறினாள். 'அவர் கண்டதென்னவோ பற்களின் மீது வைரங்களை அணியும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை'. இந்த பதில் பெரும் வெடிச் சிரிப்பைக் கொணர்ந்து. 'நல்லது' செனட்டர் முடிவு செய்தார். 'உனக்கு ஒரு கழுதை கிடைக்கும்.' 

இதற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் அவரின் உதவியாளர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நல்ல பொதி சுமக்கும் கழுதை ஒன்றைக் கொண்டு வந்தார். மேலும் கழுதையின் பின்புறப் பகுதியில் அது செனட்டரின் பரிசு என்பதை யாரும் மறந்து விடாத வகையில் தேர்தல் பிரச்சாரக் கோஷம் அழிக்க முடியாத பெய்ன்டினால் எழுதப்பட்டிருந்தது. 

சிறிது தூரமே இருந்த அந்தத் தெருவின் வழியாகச் செல்கையில் அவர் வேறு சிறிய குறிப்புணர்த்தும் செயல்களைச் செய்தார். செனட்டரைப் பார்க்கும்படி தன் கட்டிலை வாயிற் படிக்கருகில் போடச் செய்து படுத்திருந்த நோயாளி மனிதன் ஒருவனுக்கு சிறிய கரண்டியில் மருந்து ஊற்றினார். கடைசி திருப்பத்திற்கு அருகில், பலகையினால் ஆன வேலியின் வழியாக, நிறம் வெளுத்துப் போய், சோகமாய்த் தெரிகிற நெல்ஸன் ஃபரீனாவை அவனுடைய கித்தான் தொட்டிலில் கண்டார். ஆனாலும் செனட்டர் அன்பின் தொனிப்பு எதுவும் மின்றி அவனுக்கு வணக்கம் சொன்னார்.

எப்படி இருக்கிறாய்' நெல்ஸன்ஃபரீனா தன் கித்தான் தொட்டிலில் திரும்பி, அவரைத் தன் சோகமான, மஞ்சள் - மண் நிறப் பார்வையால் நனைத்தான். 

“என்னை உங்களுக்குத்தான் தெரியுமே' அவன் கூறினான். 

வணக்கம் கூறுதலைக் கேட்டபொழுது அவனுடைய மகள் முற்றத்திற்கு வந்தாள். வெளுத்துப்போன குவாரிரோ இந்திய அங்கியை அணிந்திருந்தாள். அவளுடைய தலை வர்ண வில்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. சூரிய வெப்பத் திலிருந்து காக்க அவள் முகம் சாயம் பூசப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதிரியானதொரு சீர்குலைந்த நிலையிலும் அவ்வளவு அழகிய பெண் உலகில் வேறு எங்கேயும் இருந்த தில்லை என்று கற்பனை செய்வது சாத்தியமாயிருந்தது. செனட்டர் பேச்சு மூச்சற்றுப் போனார். 'நான் நாசமாய்ப் போவேன்' பெரும் வியப்பில் மூச்சிழுத்தார் 'கடவுள் மிகவும் பித்துப் பிடித்த காரியங்களைச் செய்கிறார்! 

அன்றிரவு நெல்ஸன் ஃபரீனா தன் மகளை, அவளின் சிறந்த உடைகளில் அலங்கரித்து செனட்டரிடம் அனுப்பினான். ஆயுதம் தாங்கிய இரு காவலர்கள் இரவல் வாங்கப்பட்டிருந்த அந்த வீட்டினுள் வெப்பத்தின் காரணமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர். முகப்பறையில் இருந்த ஒரே ஒரு நாற்காலியில் அவளைக் காத்திருக்க உத்தரவிட்டனர். 

அடுத்த அறையில் ரோசல் டெல்விரேவின் முக்கியப் பிரமுகர்களுடன் செனட்டர் இருந்தார். தன் உரைகளில் அவர் சொல்லாமல் விட்டு விட்ட உண்மைகளைச் சொல்வதற் காக அவர்களை அங்கு ஒன்று சேர்த்திருந்தார். இந்தப் பாலைவனத்தில், எல்லா நகரங்களிலும் அவர் எப்பொழுதும் சந்தித்தவர்களைப் போலவே இவர்கள் தோன்றியதால், முடிவற்ற அந்த இரவுச் சந்திப்பில் செனட்டர் தானும் ளத்துப் போய், சலிப்புற்றிருந்தார். அவர் சட்டை வெயில் நனைந்திருந்தது. மின் விசிறியின் வெப்பமான 'ஊறில் தன் உடல் மீது அதை உலர்த்த முயன்று எடிருந்தார். அந்த அறையின் கனத்த வெப்பத்தில் "ஐ ஒரு பெரிய ஈ மாதிரி ரீங்கரித்துக் கொண்டிருந்தார். மின் விசிறி ஒரு கொண்டிருந்தது. 


வாஸ்தவமாக, நாம் காகிதப் பறவைகளைச் சாப்பிட முடியாது' என்றார் அவர். 'இந்த ஆட்டுச் சாணக் குவியலில் மரங்களும் பூக்களும் வரும் நாளில், நீர்ச்சுனைகளில் புழுக களுக்குப் பதிலாக சாப்பிடக் கூடிய பெரிய ஷேட் மீன்கள் வரும் நாளில் -அந்த நாளில் நானோ நீங்களோ இங்கிருக்க மாட்டோம். உங்களுக்கும் எனக்கும் அது தெரியும். நான் சொல்வது புரிகிறதா ? ' யாருமே பதில் சொல்லவில்லை., அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, காலண்டரின் ஒரு தாளக் கிழித்து, அதில் ஒரு காகிதப் பட்டாம் பூச்சியை தன் கைகளால் உருவாக்கியிருந்தார். எந்த குறிப்பிட்ட இலக்கும் இன்றி அதை மின் விசிறியிலிருந்து வந்த காற்றின் இழுவையில் சுண்டி விட்டார். அந்தப் பட்டாம்பூச்சி அறை யைச் சுற்றிப் பறந்து பின், பாதி திறந்திருந்த கதவின் வழியாக வெளியே சென்றது. சாவின் பங்கேற்பினால் உண்டான கட்டுப்பாடுடன் செனட்டர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். 

'ஆகவே' அவர் கூறினார் ' நீங்கள் முன்பே மிக நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதை நான் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை : என்னுடைய மறு தேர்தல் என்னை விட உங்களுக்குச் சிறந்த வியாபாரமாக இருக்கும். காரணம் இந்த தேங்கிப் போன தண்ணீர், செவ்விந்திய வியர்வை ஆகியவற்றால் நான் மிகவும் சலிப்படைந்து போயிருக்கிறேன். மாறாக நீங்கள் அதிலிருந்து பிழைப்பு நடத்துகிறீர்கள்.' 

லாரா ஃபரீனா காகிதப் பட்டாம்பூச்சி வெளியே வருவதைப் பார்த்தாள். அவள் மட்டுமே அதைப் பார்த்தாள். காரணம் முகப்பறையில் இருந்த காவலர்கள் தம் துப்பாக்கி களை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தனர். சில அசைவு களுக்குப் பிறகு அந்த லித்தோ கிராப்ஃப் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி, முழுவதும் விரிந்து, சுவர் மீது தட்டையாகி, அங்கேயே ஒட்டி நின்றது. தன் நகங்களைக் கொண்டு லாரா ஃபரீனா அதைப் பிய்த்தெடுக்க முயன்றாள். அடுத்த அறையிலிருந்து வந்த கை தட்டல்களினால் விழித்தெழுந்த காவலர்களில் ஒருவன் அவளுடைய பயனற்ற முயற்சியைக் கவனித்தான். 


'அதை எடுக்க முடியாது. அவன் தூக்கக் கலக்கத்துடன் சொன்னான். -  

'அது சுவற்றில் தீட்டப்பட்டிருக்கிறது' 

கூட்டத்திலிருந்து மனிதர்கள் வர ஆரம்பித்த போது மீண்டும் லாரா ஃபரீனா அமர்ந்தாள். அறைவாசல் வழியில் தாழ்ப்பாளின் மீது கை வைத்தபடி நின்றிருந்தார் செனட்டர். முன் கூடம் காலியான பிறகு லாரா ஃபரீனாவை அவர் மட்டுமே கவனித்தார். 

'இங்கு என்ன செய்கிறாய் நீ?' 

'இது என் அப்பாவின் வேலை' என்றாள் அவள். 

செனட்டர் புரிந்து கொண்டார். முதலில் தூங்கிக் கொண்டிருந்த காவலர்களையும், பிறகு லாரா ஃபரீனாவையும் கூர்ந்து கவனித்தார். அவளுடைய அசாதாரண அழகு அவருடைய் வலியை விட ஆதிக்கம் செலுத்துவதாயிருந்தது. சாவு, அவருக்கான முடிவினைச் செய்திருப்பதாக அவர் அப்போது தீர்மானித்தார். 

'உள்ளே வா' அவளிடம் கூறினார். 

அறைவாசல் வழியில் லாரா ஃபரீனா ஸ்தம்பித்து நின்றிருந்தாள் : ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளைப் போல வங்கி நோட்கள் படபடத்தபடி காற்றில் மிதந்து கொண்டி ருந்தன. ஆனால் செனட்டர் மின் விசிறியை நிறுத்தினார். காற்றின்றிப்போன காகிதங்கள் அறையில் இருந்த பொருள் களின் மீது வந்திறங்கின. 

'மலம் கூடப் பறக்கும்', 'உனக்குத் தெரியுமா ?' 

என்றார் புன் முறுவல் செய்தபடி. 

பள்ளிக் கூடப்பையன் அமரும் ஸ்டூலில் லாரா ஃபரீனா 

அமர்ந்தாள். கச்சா எண்ணெயின் அதே சூரிய அடர்த்தி 1 அம், அதே நிறத்துடனும், அவளுடைய சருமம் வலிமை பாகவும், வழவழப்புடனும் இருந்தது. அவளுடைய தலைமுடி "பன குதிரைக் குட்டியினுடையதைப் போலிருந்தது. 

விளக்கினை விடப்பளிச்சென்று இருந்தன அவளுடைய கண்கள். அவளுடைய 

'! அவளுடைய பார்வையின் சரடைப்பின் 

ஓடாந்த செனட்டர், உப்புப் பிரதேசத்தின் உவாட் 

""குலந்து போயிருந்த ரோஜாவைக் கண்டாய் 


'அது ஒரு ரோஜா' என்றார். 

குழப்பத்தின் சாயலுடன் அவள் 'ஆமாம்' என்றாள். 

ஆம்' ரியோஹாச்சாவில் அவை என்னவென்பதை நான் தெரிந்து கொண்டேன்' என்று கூறினாள். 

தன் சட்டைப் பித்தான்களைக் சுழற்றியபடி, ரோஜாக்களைப் பற்றிப் பேசிய வண்ணம் செனட்டர் ஒரு ராணுவக் கட்டிலின் மீது உட்கார்ந்தார். அவருடைய மார்புப் பகுதிக்குள் எந்தப் பக்கம் தன் இதயம் இருக்கிறது என்று கருதினாரோ அந்தப் பகுதியில் ஒரு கடற் கொள்ளைக்காரனின் பச்சை குத்தியிருந்தார். அது இதயத்தைத் துளைக்கும் அம்பு வடிவில் இருந்தது. நனைந்து சொத சொதத்துப் போயிருந்த சட்டையைத் தரையில் வீசிவிட்டு, லாரா ஃபரீனாவை அவருடைய பூட்சுகளைக் கழற்ற உதவும்படி கேட்டார். 

கட்டிலைப் பார்த்தபடி அவள் குனிந்தாள். சிந்தனை வயப்பட்டவராய் அவளைக் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அவள் பூட்சுகளின் லேஸ்களை விடுவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் இருவரில் இந்த சந்திப்பின் துரதிர்ஷ்டத்தில் எவர் முடியப் போகிறார்கள் என நினைத்தார். 

'நீ வெறும் குழந்தை ' என்றார் அவர். 'நீங்கள் நம்பவில்லையா?' அவள் கூறினாள் 'ஏப்ரலில் எனக்கு பத்தொன்பது வயதாகப் போகிறது' செனட்டர் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். 'என்ன நாள் ?' 'பதினோறாம் நாள்' என்றாள். செனட்டர் செளகரியமாக உணர்ந்தார். 'நாம் இருவருமே மேஷ ராசிக்காரர்கள்' என்றார். புன் முறுவல் செய்தபடி தொடர்ந்தார் 'அது தனிமையின் ராசி' . 

லாரா ஃபாரீனா கவனம் செலுத்தவே இல்லை. காரணம் பூட்சுகளை அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. செனட்டர், தன் பங்குக்கு, லாரா ஃபரீனாவுடன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தார். காரணம் திடீர்க் காதல்களில் அவருக்குப் பழக்கமில்லை. மேலும் இப்போதிருப் பதின் தொடக்கங்கள் அவமதிப்பில் இருந்தன என்பதை 

அறிந்திருந்தார். வெறுமனே சிந்திப்பதற்கு சிறிது நேரம் வேண்டுமென்பதற்காக தன் முட்டிகளுக்கு இடையில் லாராஃபரீனாவை இறுகப் பிடித்து, அவளை இடுப்புப் பகுதியில் அணைத்தபடி தன் முதுகுப் பக்கத்தை கட்டிலில் கிடத்தினார். ஆடைகளுக்கு அடியில் அவள் நிர்வாணமாய் இருந்தாள் என்பதைப் பிறகு உணர்ந்தார். அவள் உடலிலிருந்து காட்டு மிருகங்களினுடையதைப் போன்ற அடர்ந்த வாசனை வீசியது. ஆனால் அவள் இதயம் பயந்து போயிருந்தது. அவள் சருமம் ஒளிரும் வியர்வையால் இடைஞ்சலுற்றிருந்தது. 

'யாருமே நம்மைக் காதலிப்பதில்லை' அவர் பெருமூச்செறிந்தார். 

லாராஃபரீனா ஏதாவது சொல்ல முயற்சி செய்தாள். ஆனால் அவளுக்கு மூச்சு விடுவதற்கு மட்டுமே தேவையான காற்றிருந்தது. அவளுக்கு உதவும் பொருட்டு அவளை அவருக்கு அருகில் படுக்க வைத்தார். அறையின் விளக்கை அவர் அணைத்தபோது ரோஜாவின் நிழலில் இருந்தது அறை. அவள் தன் விதியின் கருணை வசம் தன்னை ஒப்படைத்தாள். மெதுவாக செனட்டர் அவளை வருடினார். அவளுடைய முக்கியப் பகுதியைத் தேடிய வண்ணம், ஏறத்தாழ தொடுகிற நிலையில் இருந்தார். 'அவளை' எங்கு இருக்க வேண்டுமென எதிர்பார்த்தாரோ அங்கு இடை மறித்தபடி ஏதோ இரும்பு போன்ற ஒன்றைத் தொட்டார். 

'அங்கு என்ன வைத்திருக்கிறாய்?' 

'ஒரு பூட்டு' என்றாள். 

"என்ன நரகம் ! கோபமாகக் கூறிய செனட்டர் மிக 

நன்றாகத் தெரிந்திருந்ததைக் கேட்டார். 

'சாவி எங்கே ? 

லாராஃபரீனா ஆசுவாசமான மூச்சிழுத்தாள். என அப்பா வைத்திருக்கிறார்' அவள் பதில் 

அளித்தாள். * ங்கள் ஆட்களில் ஒருவரை சாவியைப் பெற பயும்படியும், என் அப்பாவின் நிலைமையைச் சரி செய்வீர்கள் என்ற எழுதியளிக்கப்பட்ட உறுதிமொழி யையும் அவர் மூலமாக அனுப்பும்படியும் என்னிடம் சொன்னார்.' 

செனட்டர் விறைப்பேறிப் போனார். 

'தவளைத் தேவடியாள் மகன்' அவர் கடும் கோபத்தில் முணுமுணுத்தார். படபடப்பைச் சமன்படுத்திக் கொள்ள அவர் கண்களை மூடினார், தன்னையே இருளில் சந்தித்தார். நினைவு கொள், அவர் ஞாபகப் படுத்திக் கொண்டார், நீயோ அல்லது வேறு எவரோ, உன் சாவுக்கு முன் அதிக காலமிருக்காது. உன் பெயர் கூட இல்லாமல் போவதற்கு அதிக காலமிருக்காது. 

தீடீர் நடுக்கம் குறைவதற்குக் காத்திருந்தார். 

- 'ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்' அவர் அவளிடம் அப்போது கோட்டார் : 'என்னைப் பற்றி என்ன கேள்விப் பட்டிருக்கிறாய் ? 

'கடவுள் சத்தியமான உண்மை உங்களுக்கு 

வேண்டுமா ? ' 

'கடவுள் சத்தியமான உண்மை ' 

'நல்லது' லாராஃபரீனா துணிகரமாகத் தொடர்ந்தாள். 'மற்றவர்களை விடவும் நீங்கள் மோசம், காரணம் நீங்கள் வித்யாசமானவர் என்று சொல்கிறார்கள்.' 

செனட்டர் இதனால் மன நிலை குலையவில்லை. அவர், கண்கள் மூடியபடி நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். மீண்டும் கண்களைத் திறந்த போது தன்னுடைய மிக ஆழ்ந்த உள்ளுணர்வுகளில் இருந்து மீண்டவர் போலத் தோன்றினார். 

'ஒ என்ன நரகமிது ! அவர் தீர்மானித்தார். பெட்டை நாயின் மகன் உன் அப்பாவிடம் சொல், நான் அவனுடைய நிலைமையை நேர் செய்கிறேன் என்று' 

' நீங்கள் விரும்பினால் நானே போய் சாவியை வாங்கி - வருகிறேன்' என்றாள் லாராஃபரீனா. ,ன என்பதை 


செனட்டர் அவளை பின்னுக்கு இழுத்துக் கொண்டார். (சாவியைப் பற்றி மறந்துவிடு' , 'கொஞ்ச நேரம் என்னுடன் 

தனியாக இருக்கும் போது யாருடனாவது இருப்பது நல்லது.' என்றார். 

அவளுடைய கண்கள் ரோஜாவின் மீது பதிந்த வண்ணம் அவருடைய தலையைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டாள் . செனட்டர் அவள் இடையைப் பற்றியபடி, காட்டு விலங்கின் கையிடுக்கில் தன் முகத்தைப் புதைத்து பயங்கரத்திற்குள் தன்னை இழந்து கொண்டார். ஆறு மாதங்களும் பதினோரு நாட்களும் கழிந்த பிறகு அவர் அதே நிலையில் இறந்து போவார், சீரழிந்து, மறுதலிக்கப்பட்டு காரணம் லாராஃபரீனாவுடன் ஆன தொடர்பு பற்றிய பொதுஜன வதந்தியாலும், அவள் இல்லாமல் இறப்பது பற்றிய பெரும் ஆத்திரத்தில் அழுதபடியும்.