அபிராமி அந்தாதி - எவராலும் கற்பனை செய்ய முடியாதவள்.
https://www.facebook.com/riyas.qurana/posts/1066022200094532
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
மொழியின் மாய வலையில்
அவள் சிக்குவதில்லை
நினைத்துப் பார்க்கலாமென்றால்
நினைவையும் தாண்டி நிற்கிறாள்
எனினும், அவளை எனக்கு தெரியும்
சந்தித்திருக்கிறேன்.
எப்படி விபரித்தாலும்
அவளை உங்களால்
கற்பனை செய்ய முடியாது
அவளின் காதலன் காமம் கடந்தவன்
அவனின் ஒரு பாகத்தை கையேற்று
உலகம் பழிக்கும்படி ஆள்பவள் நீ.
நந்திக் கலம்பகம் - நெருப்புச் சாறு
https://www.facebook.com/riyas.qurana/posts/1066032896760129
செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்'
நீ தழுவாமல்
துடிக்கின்ற என் மேனியில்
நெருப்பில் பிழிந்த சாற்றை
சந்தணமென்று சொல்லி
யாரோ தடவுகின்றனர்.
கம்பராமாயணம்.
https://www.facebook.com/riyas.qurana/posts/1066001103429975
வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்.
நஞ்சுக் குளத்தில்
சிக்கித் தவிக்கும் மீன்
துள்ளிக் கரை வந்தாலும்
குளத்தில் வசித்தாலும்
மரணம் மட்டும் உறுதி