Monday, 30 November 2015

White Night - Poem by Boris Pasternak


SAMUEL BECKETT shared FULCRUM: an annual of poetry and aesthetics's photo.
December 5 at 2:42pm ·



FULCRUM: an annual of poetry and aesthetics

"The Harvest (for Émile Bernard),", drawing by Vincent van Gogh. 1888. Reed pen in brown on paper, 24.1 x 31.8 cm. [Only at FULCRUM: an annual of poetry and aesthetics.]
White Night - Poem by Boris Pasternak

I keep thinking of times that are long past,
Of a house in the Petersburg Quarter.
You had come from the steppeland Kursk Province,
Of a none-too-rich mother the daughter.

You were nice, you had many admirers.
On that distant white night we were sitting
On your window-sill, looking from high on
On the phantom-like scene of the city.

The street-lamps, like gauze butterflies fluttering,
Had been touched by the chill of the morning.
My soft words, as I opened my heart to you,
Matched the slumbering vistas before us.

We were plighted with timid fidelity
To the very same nebulous mystery
As the cityscape spreading unendingly
Far beyond the Neva, through the distances.

In that far-off impregnable wilderness,
Wrapped in springtime twilight ethereal,
Woodland glades and dense thickets were quivering
With mad nightingales' thunderous paeans.

Crazy resonant warbling ran riot,
And the voice of this plain-looking songster
Sowed derangement, ecstatic delight
In the depth of the mesmerised copsewood.

To those parts Night, a barefoot vagabond,
Stole its way along ditches and fences.
From our window-sill, after it tagging,
Was the trail of our cooed confidences.

To the words of this colloquy echoing
In the orchards beyond the tall palings
Spreading branches of apple and cherry trees
Swathed themselves in their pearly-white raiment.

And the trees, like so many pale phantoms,
Waved their farewell, along the road thronging,
To White Night, that all-seeing enchanter,
Who was now to North Regions withdrawing. 

White Night

http://allpoetry.com/White-Night

I keep thinking of times that are long past,
Of a house in the Petersburg Quarter.
You had come from the steppeland Kursk Province,
Of a none-too-rich mother the daughter.

You were nice, you had many admirers.
On that distant white night we were sitting
On your window-sill, looking from high on
On the phantom-like scene of the city.

The street-lamps, like gauze butterflies fluttering,
Had been touched by the chill of the morning.
My soft words, as I opened my heart to you,
Matched the slumbering vistas before us.

We were plighted with timid fidelity
To the very same nebulous mystery
As the cityscape spreading unendingly
Far beyond the Neva, through the distances.

In that far-off impregnable wilderness,
Wrapped in springtime twilight ethereal,
Woodland glades and dense thickets were quivering
With mad nightingales' thunderous paeans.

Crazy resonant warbling ran riot,
And the voice of this plain-looking songster
Sowed derangement, ecstatic delight
In the depth of the mesmerised copsewood.

To those parts Night, a barefoot vagabond,
Stole its way along ditches and fences.
From  our window-sill, after it tagging,
Was the trail of our cooed confidences.

To the words of this colloquy echoing
In the orchards beyond the tall palings
Spreading branches of apple and cherry trees
Swathed themselves in their pearly-white raiment.

And the trees, like so many pale phantoms,
Waved their farewell, along the road thronging,
To White Night, that all-seeing enchanter,
Who was now to North Regions withdrawing.

Sunday, 29 November 2015

டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி கி.ரா. எழுதிய இந்தக் கட்டுரை 13.12.1988 தேதியிட்ட தினமணி கதிரில் வெளிவந்து சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.அழிந்து போன நந்தவனம் கி.ராஜநாராயணன்

அழிந்து போன நந்தவனம்

 http://solvanam.com/?p=19710

http://charuonline.com/blog/?p=3444

இப்போது வாசிக்கப்படும் நாதஸ்வரம் உருவான வரலாறு, சீவாளியைப் பதப்படுத்துதல், டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேதைமை எனப்பல அரிய தகவல்களைக் கொடுக்கும் இக்கட்டுரை எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களால் 13.12.1998-ஆம் தேதியன்று வெளியான தினமணிக்கதிர் இசைமலரில் எழுதப்பட்டது. இக்கட்டுரை மூலம் கி.ரா அவர்களுக்கு இசையில் இருக்கும் தேர்ச்சியையும், ரசனையையும் தெரிந்துகொள்ளலாம்.
article2
னி பள்ளிக்கூடம் இல்லை எனக்கு என்று தீர்ந்தது. மேல்க்கொண்டு என்ன செய்ய என்ற கவலை இல்லை. வடக்குக் குளத்தில் தண்ணீர் வற்றிப் போய்விட்டால் நந்தவனத்துக் கிணறு இருக்கிறது குதித்து நீச்சல் அடித்து விளையாட.
ஊருக்கு வடகிழக்கு மூலையில் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் எங்கள் அப்பா அமைத்த நந்தவனம் அது. அதைப் பார்த்துப் பராமரிக்க ஒரு குடும்பத்தாரை ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் குடும்பத்தைத் தனது இளம்தோளில் தாங்கும் உத்திரம் ஆக வேண்டியதாகிவிட்டது எனது பாலியக் கால நண்பன் சத்திவேலுவுக்கு. ஆறாவது வகுப்புவரை என்னோடு வகுப்புத் தோழனாக இருந்தவன். அவனுடைய கூரைமண் வீட்டைக் கடந்துதான் குறுக்குப்பாதையாக நான் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். காளியம்மன் கோயில், பார்வதியம்மன் கோயில் ரெண்டையும் கடக்கும்போது ஏதாவது ஒரு கோயிலினுள் அவன் இருப்பான். அவனுடைய தாத்தா முத்தையாப் புலவர்தான் அந்தக் கோயில்களின் பூசாரி. அந்த முத்தையாப் புலவரின் மூன்றாவது மகளைத்தான் காருகுறிச்சி அருணாசலத்துக்குக் கட்டிக் கொடுத்திருந்தது; முதல் தாரமாக. காருகுறிச்சியும் இப்படித்தான் எனது பாலியகால சகாவாக ஆனது.
kiraa
நான் பள்ளிக்கூடத்துக்கு ஒருநாள் வந்துகொண்டிருந்தபோது சத்திவேல் வீட்டினுள் பெண்களின் அழுகைக்குரல் பலமாகக் கேட்டது. முத்தையாப் புலவர் திடீரென்று இறந்து போய்விட்டதாக வீட்டின் முன் கூடியிருந்த கூட்டத்திலிருந்த ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
அதுக்குப் பிறகு அந்தக் கோயில்களின் பூசாரியாக சத்திவேல்தான் இருந்தான்.
எனது வாசகர்களுக்கு இந்த சத்திவேல் என்பவன் யார் என்பது ஓரளவு புரிந்திருக்கும்! “பிஞ்சுகள்” குறுநாவலில் வருகிற செந்திவேல்தான் இந்த சக்திவேல்.
சத்திவேலின் அப்பாவும் சித்தப்பாவும் நாகஸ்வர வித்வான்கள். அடுத்த சித்தப்பா தவில் வித்வான். இந்தக் குடும்பத்தில் பொண் எடுத்த காருகுறிச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இப்படி ஒரு இசை வாழ்ந்த குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சத்திவேலுவுக்கு இசை அந்நியமாகிவிட்டது. ரெண்டு கோயில்களுக்கும் பூசை செய்வது, நந்தவனத்துப் பூச்செடிகளுக்கும் பச்சிலைக் கொடி செடிகளுக்கும் திலாப் பிடித்து தண்ணீர் பாய்ச்சுவது. இதுபோக களை செதுக்க உரம்வைக்க என்று அங்கே ஏதாவது செய்து கொண்டிருப்பான். முக்கியமாக நந்தவனத்துக்குள்ளே பெண்களும் பெண்பிள்ளைகளும் நுழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளணும். இதுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படும். பூக்கள் பேரில் அவர்களுக்கு உள்ள தாங்க முடியாத பிரியம்; மற்றது “தீண்டல்” வந்த பெண்வாடை பூச்செடிகளுக்கு ஒவ்வாமை என்பது.
நந்தவனத்துப் பூச்செடிகளே கதி என்று கிடந்த சத்திவேலைப் பார்க்க நாங்கள்தான் அங்கெ போகணும். “எப்பா, பூந்தோட்டக் காவக்க்காரா” என்று சொல்லிக்கொண்டே அங்கே வருவார் சீனி நாயக்கார். எங்கள் “சங்கத்தில்” இவரும் ஒரு சந்தா இல்லாத அங்கத்தினர். அவர் வீட்டுக்குச் சாப்பிட மட்டும் போவார். மற்ற முக்கால்வாசி நேரம் எங்களோடதான். அவருடைய வாய் எங்களோட பேசும்; பீடி குடிக்கும்; மற்ற நேரங்களிலெல்லாம் ராகங்கள் இசைத்துக் கொண்டே இருக்கும்.
என்னையும் சேர்த்து சதா ஒரு “வெட்டிக் கூட்டம்” எப்போது பார்த்தாலும் இருந்துகொண்டே இருக்கும். என்னுடைய தகப்பனார் காலமானதும் அவர் இன்ஷ்யூர் செய்த கம்பெனியிலிருந்து ஒரு தொகை வந்தது. அதை வாங்கி எனது பாட்டி ஒரு புது வீடு கட்டினாள். அந்த வீட்டில்தான் எங்கள் ஜாகை. ஊர்சுற்றுகிற நேரம் போக மற்ற நேரங்களிலெல்லாம் எங்களை அங்கேதான் பார்க்கலாம். அந்த வீட்டிற்கு விளாத்திகுளம் சாமிகள் வைத்த செல்லப்பெயர் “சங்கீத மகால்”. சாமிகள் வந்தால் அங்கே என்னோடு ஒருவாரம் பத்துநாள் என்று தங்குவார். பாட்டு, சாப்பாடு, தூக்கம் என்று பொழுது கழியும். காருகுறிச்சி அருணாசலம் வந்தாலும் அதேவீட்டில் என்னோடு தங்கியிருப்பார். நாயனத்தில் எப்படி வாசிப்பாரோ அதேபோல் அவர் பிரமாதமாகப் பாடுவார். அவருடைய குருநாதர் ராஜரத்தினம் அவர்களும் அதே போல்த்தான். ராஜரத்தினத்தின் கண்டத்திலிருந்து வெளிப்படும் அந்த இசைக்குரலைக் கேட்கும் போதெல்லாம் கு.அழகிரிசாமி சொல்லுவான். ஒரு சங்கிலிருந்து வெளிவரும் நாதம்போல் ஒலிக்கிறது அவருடைய வாய்ப்பாட்டுக் குரல் என்று.
இந்தக் குரலில் மயங்கிய ஒருத்தர் ராஜரத்தினத்தைக் கதாநாயகனாக வைத்து ஒரு சினிமாப் படம் “கவி காளமேகம்”(?) என்று எடுத்தார். அதில் ராஜரத்தினம் பாடிய பாடல்கள் இசைத் தட்டாகவும் வெளிவந்தன.
சத்திவேலின் அப்பா, சித்தப்பா இவர்கள் தங்கள் பூர்வீக ஊரான குருமலை கிராமத்தில்தான் இருந்து வந்தார்கள். இடைசெவலில் நடக்கும் திருவிழா, கல்யாண விசேசங்களுக்கு வாசிக்க வரும்போது மட்டும் இங்கே தங்கிச் செல்வார்கள்.
பின் நாட்களில் நான் சத்திவேலின் சித்தப்பாவான குருமலை பொன்னுசாமி பிள்ளை அவர்களைக் குடும்பத்துடன் இங்கே வரவழைத்து ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து, சில காலம் அவரிடம் முறையாக இசை பயின்றேன். என்னோடு கு.அ.வையும் (எழுத்தாளர் கு.அழகிரிசாமி) சேர்த்துக் கொண்டேன். சீனிநாயக்கரும் சேர்ந்து கொள்வார்.
காலம் ஒரும்பாக ஆக மக்களை ஏழ்மை பிடித்து வாட்டியது. தொடர்ந்து வானம் பொய்த்தது. பட்டினியால் மக்கள் செத்தார்கள். மனிதருக்கே தண்ணீர் இல்லை; பூச்செடிகளுக்கு எங்கே போக. பக்தர்களோடு சேர்ந்து கோயில்ச் சாமிகளும் ‘பட்டினி’ கிடந்தன.
இதற்கு முன்னதாக, கோயில் வருமானமும் நந்தவனத்தில் பூக்கள் மூலம் கிடைத்த வருமானமும் சேர்ந்தாலும் சத்திவேல் குடும்பத்துக்குக் காணாததால் அவன் சித்தாள் வேலைக்குப் போய் வந்தான். அவன் படும் பாதரவு மனசை வாட்டியது.
என்னைப் போல் அவனுக்கும் ஒரு சில கனவுகள் இருந்தது. அவனுடைய ஆசையெல்லாம் திருவாடுதுறை ராஜரத்தினம் போல நாயனம் வாசித்துப் பேர் எடுக்க வேண்டும் என்பதே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாயனத்தில் சாதகம் செய்வான்.
அந்த நாயனத்தை நான்தான் அவனுக்கு வாங்கப் பணம் தந்தேன்.
ஒரு நாள் அவன் ரொம்ப வருத்தத்தோடு இருந்தான். என்ன என்று கேட்டதற்கு நாயனத்தை அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றான். அப்பா நாயனத்தை அப்பா கொண்டு போனார்; உனக்கென்ன என்றேன்.
எவ்வளவு பிரியமா வச்சிருந்தேன்; அப்பா எனக்கொரு நாயனம் தரப்படாதா என்றான்.
அவர்கள் நிலையில் ஒரு நாயனம் வாங்க முடியாதுதான். நான் முதலில் ஒரு ஹார்மோனியம் வாங்கினேன். அதன் பிறகு ஒரு நாயனம் வாங்க சத்திவேலுக்குப் பணம் தந்தேன். மதுரைக்குப் போய் வாங்கி வந்தான். அந்தச் சமயத்தில்தான் நாயனத்தின் வடிவமே மாறியிருந்தது. அதுக்கு முன்பெல்லாம் ‘திமிறி’ என்கிற முக்கால் முழம் நீளமுள்ள வெங்கல அணசு பொருத்திய நாயனம்தான் உண்டு. நாயனத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவரே திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளைவாள்தான். அயிரை மீனைப் போல இருந்த திமிறி வாத்தியம் விலாங்கு மீனைப் போல நீண்ட ‘பாரி’ வாத்தியமாகியது. இதன் கம்பீரமான குரலைக் கேட்டவர் மயங்கினர்.
அந்தச் சமயத்தில் ராஜரத்தினத்திடம் காருகுறிச்சி அருணாசலம் திருவாடுதுறையில் “குரு குலவாசம்” பண்ணிக்கொண்டிருந்தார். குருவுக்கு காருகுறிச்சி செய்த பணிவிடைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது அப்படி இருக்க, இப்போது காருகுறிச்சியாரிடமிருந்து சத்திவேலுவுக்கு ஒரு அவசரச் செய்தி வந்தது. அதன்படி, ‘ராஜரத்தினம் வீட்டுக்கு ஒரு நல்ல வேலையாள் தேவை. சத்திவேல் வந்தால் நல்லது.’
சத்திவேல் உட்பட எங்கள் எல்லோருக்கும் சந்தோசம். உடனே புறப்பட்டுப் போ என்று சத்திவேலை அனுப்பி வைத்தோம். சில வருசங்கள் சத்திவேல் ராஜரத்தினம் வீட்டில் இருந்ததால், அவன் இங்கே இடைசெவலுக்கு வரும்போதெல்லாம் நான் அவனிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம். அவைகளையும் அதோடு நானே அறிந்து கொண்ட பல செய்திகளையும் இங்கே சொல்கிறேன்.
திமிறி நாயனத்தின் ஒத்துச்சத்தமே – அதன் எச்சான ஒலி – மிக அருகில் நின்று கேட்க ராஜரத்தினம் சங்கடப்படுவதாக நான் உணர்ந்தது, கோவில்பட்டியில் அவர் வாசிக்க வந்த ஒரு திருவிழா ஊர்வலத்தின் போதுதான். ஒத்துவாசிப்பவனை, தள்ளிப் போய் நில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ராஜரத்தினம் பல வகைப்பட்ட நாயனங்களை வைத்து வாசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
இப்போது அமலில் இருக்கும் பாரியை அவர் வடிவமைக்கப் பட்டபாடு மிக அதிகம்.
“எப்பப் பார்த்தாலும் வீட்டில் ஒரு ஆசாரியரைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஆறிய ஆச்சா மரங்களில் வெவ்வேறு வித விதமாக நாயனங்களைப் பல்வேறு அளவுகளில் கடைந்து செய்து பார்த்து, அதை வாசித்துப் பார்த்து, இப்படி செய்து கொண்டேயிருப்பார்.”
நாயனத்தில் – சுரத்துக்கு ஒரு துளைதான் உண்டு. பிரதிமத்திம ராகங்களையும் சுத்த மத்திம ராகங்களையும் வாசிக்க இரு மத்திமங்களுக்கும் தனித்தனியாகத் துளைகள் இருப்பது அவசியம் என்று ராஜரத்தினம் கருதினார். சுருதி சுத்தமாக வாசிக்க வேண்டுமென்றால் இது மிக அவசியம் என்றார். “ஆசாரி பாடு ரொம்ப லத்தாடிட்டது; துளைகள் போட்டுப் போட்டு, ஊதிப் பாத்துப் பாத்து, ரொம்ப நாயனங்கள் வீணாப் போச்சி. கடோசியில் ஒண்ணு அமைஞ்சது. ரொம்ப சத்தமா அமைஞ்சிட்டது. ஆனா அதுலயும் ஒரு சங்கடம் வந்து சேந்தது. அதை சரிக்கட்ட ராஜரத்தினம் ஒண்ணு பண்ணார். மெழுகு – தேன் – மெழுகு கொண்டு வரச் செய்து, பிரதிமத்திம ராகத்தை வாசிக்கும் போது சுத்த மத்திம துளையைத் தேன் மெழுகால் அடைப்பதும், சுத்தமத்திம ராகங்களை வாசிக்கும் போது பிரதிமத்திமத் துளையையும் அடைத்துக் கொண்டார்.
சீவாளி தயாரிப்பதில் ராஜரத்தினம் ரொம்ப ரொம்பக் கவனம். சத்திவேல் சொன்ன அந்த ஊரின் பெயர் எனக்கு இப்போது – இந்த கணத்தில் – ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது. காவிரி நதிக் கரையில் அந்த இடத்தில் வளர்ந்திருந்த ஒருவகை நாணல்தான் சீவாளி தயாரிக்க ரொம்ப விசேஷம். அவருடைய நாயனச் சத்தத்தின் இனிமைக்கே, அந்த ஊர் நாணலில் தயாரிக்கப்பட்ட சீவாளிதான் காரணம் என்பார்கள்.
குறிப்பிட்ட பருவத்தில்தான் அது கிடைக்கும். ரொம்ப கவனமாகப் பார்த்து அதை அறுவடை செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் எத்தனையோ ஊர்களிலிருந்து சீவாளி நாணல் தட்டை விற்பனைக்கு வருமாம். எல்லாத்தையும் வாங்கிப் பார்ப்பாராம். அந்த ஊர் தட்டைப் போல வருமா என்று சொல்லி வாங்கிய மற்ற ஊர் நாணல் தட்டை நறுக்குகளை வீசி எறிந்து விடுவாராம். ரேகை சாஸ்திரிகள் ரேகை பார்க்க ஒரு பூதக் கண்ணாடி வைத்திருப்பார்களே அதுபோல் ராஜரத்தினத்திடம் ஒரு கண்ணாடி உண்டாம். தேர்ந்தெடுத்த நாணல் நறுக்குகளை அந்தக் கண்ணாடி வழியாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, தட்டையின் ஈரம் காய்வதற்குள் ஒரு பக்கத்தை நூலால் இறுக்கிச் சுற்றி மறுபக்கத்தின் நீளத்தை அளவாக வெட்டிவிட வேண்டும். இப்போது பார்ப்பதற்குச் சிறிய தட்டையான புனல் வடிவத்தில் தெரியும் சீவாளி.
இதன் பிறகு சீவாளிக்கு துவர்ப்பு ஏற்றுதல் என்கிற முக்கியமான சடங்கு உண்டு. வாய்நிறைய வெற்றிலை எச்சிலைக் கூட்டிக் கொள்ள வேணும். வெற்றிலை போடும்போது அந்தச் சமயத்தில் மட்டும் பாக்கின் துவர்ப்புக் கூடுதலாக இருக்க வேண்டும். அப்படிக் கூடுதலான துவர்ப்பு எச்சிலைச் சீவாளியின் உள்ளும் புறமும் தோயும்படியாக, குளுகுளு என்று வெற்றிலை எச்சில் அபிசேகம் பண்ணி, அப்படிப் பண்ணிய புதிய சீவாளிகளை உலர விடுவதற்காக வீட்டு முற்றத்தில் தோரணமாகக் கட்டி விடுவாராம். நன்றக உலர்ந்தவுடன் சுத்தமான தண்ணீரில் போட்டு அலசி நாயனத்தில் சொருகி ஊதிப் பழக்குவார்களாம் சீவாளிகளை.
சத்திவேல் சொல்லுவான்: அதிகாலையில் எழுந்து நாங்கள் “பனி சாதகம்” பண்ணுவோம். அப்போது எங்களுக்கு அந்த துவர்ப்புப் பாடம் பண்ணிய சீவாளியைத் தந்து வாசிக்கச் சொல்லுவார். அதை வைத்து வாசிக்க ரொம்பச் சிரமப்படும். வாசிக்க வாசிக்கத்தான் ஒலி வசப்படும். “தம்” கொடுத்துத்தான் வாசிக்க வேண்டியதிருந்த சீவாளியில், நேரம் ஆக ஆகச் சுகமான இனிமையான ஒலி வர ஆரம்பிக்கும். அப்போது நமக்கே வாசிக்க ஆனந்தமாக இருக்கும் நாயனம். சொல்லி வச்சது போல ராஜரத்தினம் அவர்கள் வந்து, “எடு; கொண்டா அந்தச் சீவாளிய” என்று வாங்கி வைத்துக்கொண்டு இன்னொரு துவர்ப்புச் சீவாளியைத் தந்து இதைப் பழக்கு என்பார்.
இப்படியாகப் புதிய சீவாளிகளை நாங்கள் வசமாக்குவோம் என்பான். தனது வாத்தியத்தைப் பேணிப் பேணி அதன் பகுதிகளில் புதிய புதிய பரிசோதனைகள், மாறுதல்கள் செய்து பார்த்தவர் ராஜரத்தினம்.
ஆரம்ப காலத்தில் அவருடைய “சேட்டை”களைப் பார்த்து, கேள்விப்பட்டு பரிகாசம் செய்து கொண்டிருந்தது நாகஸ்வர உலகம். அப்போதெல்லாம் நாயனக்காரர் ராகம் வாசித்துக் கொண்டிருக்கும்போதே தவில்காரரும் மத்தியில் மத்தியில் “தட்டுவது” என்கிற பழக்கம் இருந்தது. இதை அடியோடு நிறுத்தியவர் ராஜரத்தினம்தான். ராகம் வாசித்துக் கொண்டே வரும்போது இடைநிறுத்தம் வரும். அப்போதுதான் தவில் வாசிக்க வேண்டும் என்ற புதிய பழக்கத்தைக் கொண்டு வந்தார்.
அந்தக் காலத்துப் பெரியவர்கள் வாசித்த நாகஸ்வர இசைத் தட்டுகளைக் கேட்டுப் பார்க்கிறவர்களுக்கு இது புரியும். ஆரம்பகாலத்து ராஜரத்தினத்தின் இசைத் தட்டுகளில் ஒன்றிரெண்டு இசைத் தட்டுகளிலும் கூட இந்தப் “பிழை” உண்டு.
இந்தப் “பிழை” குறித்து இரு வேறு கருத்துகள் உண்டு. இசைத்துறையில் பூர்வீகம் தொட்டு பெரியர்வகள் கடைபிடித்து வந்ததைப் பிழை என்று தள்ளலாமா?
பிரமாதமாக வாசிக்கிற போது ஆஹ, பலே என்பது போலத் தட்டினால் பரவாயில்லை நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் போல. எல்லாத் தவில்காரர்களும் நீடாமங்கலம் ஆகிவிட முடியாதே. அதனால் சப்சாடாக நிறுத்து என்று நாகஸ்வரச் சக்கரவர்த்தியின் ஆணையாக நிலைத்து விட்டது. இந்த ஆணை எழுத்து வடிவமாகவோ சொல் வடிவமாகவோ ஏற்படுவில்லை வெறும் ஒரு கண்பார்வையிலேயே பிறப்பித்துவிட்டார் ராஜரத்தினம்.
[ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் சாருகேசி]
அறிந்தவர்களே அறிவார்கள் இதை; கண்களாலேயே அற்புதமாக விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள் நாகஸ்வரக் குழுவிலுள்ள அத்தனை பேர்களும். நிகழ்கலைக் கலையாளர்கள் அத்தனை பேர்களுக்குமே இது கைவரப்பெற்றதுதான் என்றாலும் நாகஸ்வரக் குழுவிலுள்ளவர்களின் நயனமொழி, கண்டு அனுபவிக்கத்தக்கது.
‘வந்துட்டான்பார்’ என்கிறார் பக்க நாயனக்காரரிடம் கண் ஜாடையால். பத்திரிகைகளில் இசையாளர்களைப் பற்றி ‘வாங்கு வாங்’கென்று வாங்குகிறவர் அப்பதான் வந்து உட்காருகிறார் என்பது இது. எங்கே கச்சேரி நடந்தாலும் தவறாமல் வந்து விடும் ஒரு குண்டு ரசிகையைக் கண்ணாலேயே அடையாளம் காட்டுகிறார் பக்க நாயனக்காரர்.
ஒத்துக்காரரைத் திரும்பிப் பார்த்தால் அதுக்கு ஒரு அர்த்தம், தவில்காரரைப் பார்த்தால் ஒரு அர்த்தம், இப்படி வார்த்தைகள் கண் வழி கண்ணுக்குள் போவது ரசமாக இருக்கும்.
நாயனம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பக்க நாயனக்காரரைப் பார்த்து கண்ணடிப்பார் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி! வில் வண்டியிலிருந்து நாயகி இறங்கி வருவதை. ஜாகைகளில் இவர்கள் சங்கீத மொழியிலேயே லவ்கீகம் பேசுவது ஒரு அழகு. மற்ற நாயனக்காரர்கள் அந்தக் காலத்தில் கச்சேரியில் வந்து உட்கார்ந்து கொண்ட பிறகுதான் சீவாளி சரியாக நனைந்து விட்டதா என்று பார்க்க, பீ, பீ என்று ‘சீட்டி’ அடிப்பார்கள். ராஜரத்தினம் இப்படிச் செய்வதை நான் பார்த்ததே இல்லை.
ஜாகையிலேயே சரி பார்த்து நாயனத்தைக் கழுவித்துடைத்து சீவாளிகளையெல்லாம் நனைத்து, மேல் ஸ்தாயையில் வாசிக்கப் போகும் சீவாளிகளுக்கு முன்புறமும் கீழ் ஸ்தாயையில் வாசிக்க சீவாளியின் அடிப்புறத்திலும் குச்சிகளை (இந்தக் ‘குச்சி’கள் யானைத் தந்தத்தினால் ஆனவை) சொருகி வைத்து விடுவார்.
கச்சேரியில் வந்து அமர்ந்ததும் ஒத்துவின் ‘கும்’ என்ற ஒலி பரவியதும் தவிலின் எடுப்பான முன்னுரை வாசிப்பு முடியவும்; அதற்குள் ராஜரத்தினம் பதமான சீவாளியை வாய் அமுதத்தினால் நனைத்து நாயனத்தில் சொருகி வாசிக்க ஆரம்பித்துவிடுவார்.
நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராகங்களை வித்தியாசமான புதிய வடிவங்களில் வழங்கியவர்கள் நான் அறிய மூன்று பேர்.
1. விளாத்திகுளம் சாமிகள்,
2. திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம்,
3. மாலி என்ற டி.ஆர்.மகாலிங்கம்.
ராஜரத்தினம் தோடி ராக ஆலாபனை இசைத் தட்டில் முதலில் வந்தபோது கர்நாடக இசை உலகமே அதைக் கேட்டுக் கேட்டு வியப்பும் ஆனந்தமும் கொண்டது. அதுவரை தோடியை அப்படி யாரும் வழங்கியதில்லை.
அந்த இசைத்தட்டுப் பதிவின் போது நடந்த நடப்பை அங்கே அப்போது உடன் இருந்த மற்றவர் வியந்து சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ஒத்திகை என்ற பேரில் முதலில் வாசித்த தோடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அதுவே ‘ஓகே’ ஆகி ஒலிப்பதிவு தொடங்கியது. இப்போது வாசித்த தோடி மற்றொரழகு! இன்னொன்றும் ஏதொன்றுக்கும் இருக்கட்டும் என்று வாசித்துப் பதிவானது இன்னொரு அழகான தோடி. சில உடன்பிறப்புக் கன்னியரில் யார் அழகு என்று தீர்மானிக்க முடியாமல் திணறிப் போய்விடுவோம். அது போல் ஆகிவிட்டதாம்.
வெளிவந்த தோடிதான் நாம் அறிவோம். அந்த மற்றது இன்னும் இருக்குமா; அதையும் நாம் கேட்க முடியுமா. தெரியவில்லை.
[தோடி ராக விருத்தத்தை ராஜரத்தினம் பிள்ளை ‘பாடும்’ அரிதான ஒலிப்பதிவு]
ஒரு ராகத்தில் பல்வேறு வடிவ வர்ணமெட்டுக்களில் ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகளை உண்டாக்க முடியும்.
சத்திவேல் சொன்ன இன்னொரு தகவல்.
கல்யாணி ராகத்தில் என்று ஞாபகம். அந்தக் கீர்த்தனை; அதைக் கீர்த்தனை என்று சொல்லுவதை விட வர்ணமெட்டு என்று சொல்லுவதுதான் சரி.
வார்த்தைகள் இல்லாத சுரங்களால் மட்டுமே ஆன கீர்த்தனை வடிவம்.
இதை ராஜரத்தினம் சத்திவேலுவுக்குப் பாடியும் காட்டி நாயனத்தில் வாசித்தும் காண்பித்திருக்கிறார்.
இது போன்ற வர்ணமெட்டுக் கீர்த்தனைகளைப் புல்லாங்குழல், நாயனம், மாண்டலின் போன்ற இசைக் கச்சேரிகளில் ஜமாய்க்க முடியும். பாட முடியாது.
இந்தக் கீர்த்தனை மெட்டு ராஜரத்தினம் உண்டாக்கியதா அவரது முன்னோர்கள் வாத்திய இசைப்பில் வாசிப்பதற்கென்றே உண்டாக்கினார்களா, இது போல் மற்ற ராகங்களிலும் இருக்கிறதா – தெரியவில்லை. நினைத்தபோதெல்லாம் நினைத்தபடிக்ககு எந்த இடத்திலும் ஒரு கேமராவில் படம் பிடிப்பது போல – ஒலிப்பதிவு வசதி அந்தக் காலத்தில் கிடையாது. அப்படி இருந்திருந்தால் ராஜரத்தினம், விளாத்திகுளத்தின் ராக வடிவங்களைப் பதிவு செய்திருக்கலாம்.
இப்படி எவ்வளவோ விசயங்கள் இல்லாமல் போய்விட்டதால் அவை இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் விளாத்திகுளம் இல்லை, திருவாடுதுறையும் இல்லை.
அந்த நந்தவனம் அழிந்து விட்டது இடைசெவலில்.
- See more at: http://solvanam.com/?p=19710#sthash.EaOX5yto.dpuf

Thursday, 26 November 2015

நிழலின் தனிமை - தேவிபாரதி.... பற்றி Bogan Sankar and wordsbeyondborders

பழியின் தனிமை 1
ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ''நிழலின் தனிமை'' படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு இல்லாத ஆன்மாக்கள் அநீதி என்னும் சுழலில் மாட்டிக் கொள்ளும்போது என்ன ஆவார்கள் ?பழிவாங்குதலை வாழ்க்கை நமக்கு முன்வைக்கும் ஒரு சோதனையாக கணக்காக அல்லது புதிராக வைத்துக் கொள்ளலாமா ?இந்தப் புதிருக்கு இரண்டு வழிகள் உண்டு.நாம் எதன் மூலமாக அதிலிருந்து வெளியேறப் போகிறோம் ?
நிழலின் தனிமை தேவிபாரதியின் முதல் நாவல் .தமிழில் -ஆங்கிலத்தில் ஜே .எம் கூட்சி எழுதிய அவமானம் (Disgrace)நாவலுக்கு இணையான நாவல் என்று சொல்லலாம்.அடி நாதமாக ஓடும் குற்றம் ,மன்னிப்பு ,தண்டனை ,பழிவாங்குதல் போன்ற விசயங்களால் தாச்தொவச்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டும் நாவல் கூட.இதன் அடிப்படையான சிக்கல் ஒரு தாச்தவ்ச்கியச் சிக்கலே .ஆ னால் அது நாம் பின்னால் தொகுத்துக் கொள்வது
பழிவாங்குதல் மற்றும் மன்னிப்பு என்பது தேவி பாரதியின் கதைகளின் அவர் அக உலகின் பிரதான சாய்வாக கருத முடியும் குறிப்பாக அவரது புகழ் பெற்ற பலி சிறுகதையையும் நினைத்துக்கொண்டால் என்று எனக்குத் தோன்றுகிறது
நிழலின் தனிமையின் கதை சுருக்கமாக இது (அம்ஷன் குமாரின் விமர்சனத்திலிருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது )
சுமார் நாற்பது வயதுள்ள கதை சொல்லி பெயர் சொல்லப்படாத ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் எழுத்தராகப் பணியேற்கிறான். முப்பது வருடங்களுக்கு முன் அவனுக்குப் பழக்கமான, அவனது ஞாபகங்களில் வலுவாக இடம் பெற்றுவிட்ட கருணாகரனை அப்பள்ளியில் தற்செயலாக சந்திக்கிறான். ஒரு கந்துவட்டிக்காரனான கருணாகரனின் வன்புணர்ச்சிக்குக் கதைசொல்லியின் தமக்கை சாரதா பலியானவள். சாரதாவும் கதைசொல்லியும் கருணாகரன் தங்கள் வட்டத்தினுள் தட்டுப்பட்டுவிட்டதால் அவனைச் சுலபமாகப் பழி தீர்த்துவிட முடியும் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். கருணாகரனால் கதைசொல்லியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவன் இப்பொழுது அந்த ஊரின் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவன். சேவை மனப்பான்மை கொண்டவன். பள்ளிக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறான் கருணாகரன். கதைசொல்லி தனது பழிதீர்க்கும் படலத்தின் முதல் படியாக கருணாகரனின் வீட்டுக்குச் செல்கிறான். கருணாகரனின் மனைவி, மகன், மகள் சுலோ ஆகியோருடன் ஏற்படும் பழக்கம் அவனைத் தடுமாறவைக்கிறது. கருணாகரனின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துத் தருபவனாக மாறி அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாகிறான். சுலோவின் மீது அவனுக்கு இச்சை ஏற்படுகிறது. அவளும் அவன்மீது மையல் கொள்கிறாள். இதற்கிடையே கருணாகரனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறான். அதை சாரதா மானபங்கத்திற்குள்ளான அதே ஊரில், அதே கட்டடத்தில் இயங்கிவரும் தபாலாபீஸிலுள்ள பெட்டியில் அஞ்சல் செய்கிறான். அந்தக் கடிதத்தை கருணாகரன் பெற்றுக்கொண்டானா, படித்தானா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் இருவருக்குமான நெருக்கம் அதிகரிக்கிறது. கதை சொல்லியின் வீட்டிற்கே சுலோ வரத் தொடங்குகிறாள். கருணாகரனும் கதை சொல்லியின் தாயாரின் இறப்பிற்கு வந்து அவனது துக்கத்தில் பங்குபெறுகிறான்.
ஊர்த் திருவிழா ஒன்றுக்குக் கருணாகரனின் குடும்பத்துடன் செல்கிறான் கதைசொல்லி. அங்கு அவனுடன் முயல் வேட்டைக்குச் செல்கிறான். அவனுக்கு ஒரு கத்தி கிடைக்கிறது. கருணாகரனுடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனாலும் கதைசொல்லியால் அவனைக் கொல்ல முடிவதில்லை. கருணாகரனின் மகன் கொலை செய்துவிட்டுப் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். கருணாகரனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். சுலோவிற்கு அவளது சாதிக்காரனுடன் திருமணம் நடக்கிறது. சுலோவின் மாமியார் கதைசொல்லியின் பூர்விகத்தை குடைந்து தெரிந்துகொள்கிறாள். அவன் நாசுவன் (நாவிதன்) என்பதும் சிறுவயதில் சினிமா கொட்டகையில் முறுக்கு விற்றுப் பிழைத்தவன் என்பதும் அவளுக்குத் தெரியவருகிறது. தான் சிறுமைப்படுத்தப்படுவதை ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத கதைசொல்லி அவளையும் அவளது மகனையும் பழிவாங்குகிற மாதிரி தனக்கும் சுலோவிற்குமுள்ள கள்ள உறவினை அம்பலப்படுத்துகிறான்.
சுலோவுடனான உறவு முறிந்த பிறகு தனது பக்கத்து வீட்டுக்காரியான சுகந்தியுடன் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் . அவருடைய கணவனான பழந்துணி வியாபாரி இதையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறான். அவனுக்குப் பிரதியுபகாரமாக கட்பீஸ் கடை ஒன்றை வைத்துக்கொடுக்கிறான் கதை சொல்லி. ஒருநாள் சுகந்தியின் கணவன் விழிகள் பிதுங்க இருமுவதன் மூலம் தன் இருப்பை அவனுக்கு உணர்த்தவே சுகந்தியை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான் கதைசொல்லி. சுலோ பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு அவளைத் தேடி அலைகிறான். பின்னர் அவள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தன் கைக்குழந்தையுடன் தென்படுகிறாள். கணவனைப் பிரிந்து தன் தாய் தந்தையருடன் வாழ்கிறாள் சுலோ. சுகந்தியுடனான உறவைத் துண்டித்துக்கொண்ட கதை சொல்லி அவளுடன் கருணாகரனின் வீட்டுக்குச் செல்கிறான். முற்றிய நோயாளியாகச் சீழும் ரத்தமும் வடியும் உடலுடன் படுத்த படுக்கையாக கிடக்கிறான் கருணாகரன். முப்பது வருடங்களாக அவனைப் பார்த்திராத சாரதா கருணாகரனின் வீட்டுக்கு வந்து மரணப் படுக்கையில் கிடக்கும் அவனைப் பார்த்துவிட்டுப் போகிறாள். சிறையிலிருக்கும் தன் மகன் பரோலில் வீட்டிற்கு வருவதற்குள் கருணாகரன் இறந்துவிடுகிறான்.
இந்த 'சுருக்கமான' கதை பயணிக்கிற இடங்கள் விரிவானவை.ஆழமானவை.
ஒரு குற்றம் என்றால் உண்மையில் என்ன?எளிமையான விவரணை நாம் இன்னொருவர் வீட்டுக்குள் வெளிக்குள் அவர் அழைக்காமலே போய்விடுகிறோம். என்பதுதானே ?ஆனால் தேவிபாரதியின் கதை அதன் நிழலாக நாம் எவர் மீது அந்த குற்றத்தை நிகழ்த்துகிறோமோ அவரும் நம் வீட்டுக்குள் வந்துவிடுகிறார் என்பதையும் காட்டுகிறது..அவர்-அந்தக் குற்றம் புரியப்பட்ட நபர் - எப்போதும் நம் வீட்டு கூடத்தில் இருக்கிறார்.எல்லோரும் உறங்கியபிறகும் அணைக்க மறந்த விளக்கு போல அவர் மேல் நாம் விடுத்த குற்றம் எரிந்தபடியே இருக்கிறது.அல்லது பூட்ட மறந்த கதவு போல.அந்தக் கதவின் வழியாக 'பழி 'எப்போதும் வரத் தயாராக இருக்கிறது.ஒருவகையில் இரு தரப்பும் ஒரே பிணையில் மாட்டிக் கொண்ட இரு மிருகங்கள் போல ஆகிவிடுகிறது.இங்கே குற்றம் செய்கிறவர் மட்டுமில்லாமல் அவரைப் பழி வாங்க எழுகிற ஆளும் தண்டிக்கப்படுகிறார் 'பழிவாங்கும் உரிமை என்னுடையது 'என்ற விவிலிய வாசகத்தை நினைவூட்டும்படி
தேவிபாரதியின் கதையில் வருகிற இந்த கந்து வட்டிக் காரர்களோடு நான் இரண்டு வருடங்கள் இங்கே குமரியில் திரிந்திருக்கிறேன் .இங்கும் அவர்கள் தொழில் செய்கிறார்கள்.அதே பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.ஆனால் இதில் வருவது போல இல்லாமல் வேறு விதமான மனிதர்களாக .வயிறு மட்டுமில்லாமல் நெஞ்சும் ஈரமும் உள்ள மனிதர்களாக ..
அவர்களில் ஒருவரைப் பற்றி முன்பு இங்கு எழுதியது .ஒருவகையில் தேவிபாரதியின் கதையில் வரும் கருணாகரன் வாழ்க்கைக்கும் ஒரு இணைத் தன்மை இருக்கிறது.'இந்தத் தொழில் கர்மத் தொழில் சார்''என்று அவர்களே பேசுவதை கேட்டிருக்கிறேன் .பிறகேன் அவற்றைச் செய்கிறார்கள் என்பது எளிதாக வைக்கக் கூடிய கேள்வி .பதில் சிக்கலானது.அல்லது பதில் இ ல்லை.
இங்கு வந்த புதிதில் பேச்சிலர் வாழ்க்கையில் பழக்கமான பழனி பக்கமிருந்து வந்த நண்பர் ஒருவர்.பக்கத்து முறியில் தங்கி இருந்தவர் .சிறு செலவுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து ஜீவிப்பவர்கள் இங்கு ஒரு கூட்டம் உண்டு.எல்லோருமே ஒட்டன் சத்திரம் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தவர்கள் இவர் அவர்களில் ஒருவர் இரண்டு வருடங்கள் நானும் அவரும் அருகருகே தங்கி இருந்தோம் .இரவுணவு காலைச் சாயா பெரும்பாலும்ஒன்றாக.பிறகு எனக்குத் திருமணமாகியது .பாதைகள் பிரிந்துவிட்டன .சில வருடங்கள் பார்க்கவே இல்லை .பின்னர் ஒருநாள் எப்படியோ தேடித் பிடித்து என்னைப் பார்க்க வந்தார் ,கல்யாணப் பத்திரிகையோடு .மலையாளப் பெண்.காதல் .கல்யாணத்துக்குப் போக முடியவில்லை .இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து முன்சிரையில் வைத்துப் பார்த்தேன் .ஆள் பெருத்து இருந்தார்.பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் ஆற்றுப் பக்கம் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் சொன்னார் .என்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துப் போனார்.நல்ல அழகி அவரது மனைவி.சிறிய சினுங்கும் புஷ்பக் குழந்தை ஓட்டு வீடு ஆனாலும் நல்ல சூழலில் நதி முனகுவது கேட்கும் தூரத்தில் அற்புதமான வீடு,
பைக்கில் வைத்து என்னைக் கொண்டு விடுகையில் ''சந்தோஷமா இருக்கேன் சார்.ஒன்னு சொல்லவா..உங்களை எல்லாம் பார்த்து ஏங்கியிருக்கேன் சார்.நமக்கு இவரைப் போல ஒரு வேலையும் இல்லை.படிப்பும் இல்லை.நாம எப்படி வாழறதுன்னு.கோயிலுக்குப் போய் கரைஞ்சு அழுவேன்..அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ நல்லாருக்கேன் சார்''என்றார்
சந்தோசமாக இருந்தது
அதன்பிறகு மீண்டும் ஒரு சில வருடங்கள் அவரை ஒரு ஓணம் அன்று படந்தாலுமூடு தியேட்டரின் முன் டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்.கையசைத்தேன்.அவர் என்னைக் கவனிக்கவில்லை
அதன்பிறகு தீபாவளி அன்று இரவு குழித்துறை லக்ஷ்மி தியேட்டரின் முன்பு முதல் ஷோ முடிந்து வெளியே வந்துகொண்டிருந்தார்
நான் எதோ பொறி தட்டி அவரை நிறுத்தி ''ஹலோ பாஸ் ..தீபாவாளி எல்லாம் கொண்டாடாம இங்கே என்ன பண்றீங்க?"'
அவர் என்னை தூங்கி விழித்தது போல பார்த்து ''சார்''என்றார்.குரல் கம்மியது ''யாருக்கு சார் தீபாவளி ''என்றார்
நான் புரியாமல் ''என்ன?""
''சாருக்குத் தெரியாதா ...பேப்பர்ல கூட வந்துச்சே...''
''என்ன சொல்லுங்க...''
போன ஒணத்துக்கு சில நாட்கள் முன்பு அவரது மனைவியும் குழந்தையும் கோட்டயம் பக்கம் உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள் .கேரளத்தில் டெங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த சமயம் போன இரண்டாம் நாளே குழந்தைக்கு டெங்கு வந்திருக்கிறது மறுநாள் மனைவிக்கு .மூன்றாம் நாள் குழந்தை இறக்க அடுத்து இரண்டு நாட்கள் கழித்து மனைவி இறந்திருக்கிறார்
''அவ நல்லா பொழைச்சி வந்தா சார்.குழந்தை இறந்து வந்தது எப்படியோ தெரிஞ்சி போச்சு.தாங்காம செத்துப் போயிட்டா''
நான் ஸ்தம்பித்து நின்றிருக்க ''நான் அப்பவே நினைச்சேன் சார்.எனக்கெல்லாம் இது அதிகம்.தகுதி இல்லை.என்ன சார் ?""
''மத்த நாள் கூடப் பரவாயில்லை .பண்டிகை நாட்கள் தான் ரொம்பக் கஷ்டமா இருக்கு .எனக்கு குடிக்கவும் முடியலை .தனியா அந்த வீட்டுல கிடக்க முடியலை .அதான் இப்படி சினிமாவுக்கு கிளம்பி வந்துடுறது.மறக்கத்தான் நினைக்கறது ஆனாலும் முடியலை சிரிப்புப் படம் போலிருக்கு இந்தச் சினிமா.ஒட்டவே முடியலை.சார்.வரட்டா ?அப்படியே ஆனந்த்ல ரெண்டாம் ஆட்டம் பார்த்துட்டு போயிடுவேன்.அது ஏதோ அரசியல் படம்னு சொன்னாங்க''

saturday, February 4, 2012

நிழலின் தனிமை - தேவிபாரதி

http://wordsbeyondborders.blogspot.in/2012/02/blog-post.html?spref=fb

இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் தேவிபாரதி குறைவாகவே எழுதி உள்ளார். ஒரு சிறுகதை/நெடுங்கதை/கவிதை/கட்டுரை தொகுப்பு மற்றும் ஒரு நாடகம் அவ்வளவே. 'நிழலின் தனிமை' அவருடைய முதலாவது நாவல். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு துயர சம்பவத்தின் நினைவுகளை சிலுவையாக தன்னுள் சுமந்து தெரியும் ஒருவனின் கதை இது. அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு கிளார்க் தன் அக்கா சாரதாவை வன்புணர்ச்சி செய்த கருணாகரன் என்பவனை முப்பது ஆண்டுகள் கழித்து சந்திக்கின்றான். இத்தனை ஆண்டுகளும் அவனை பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்துடன் கிளார்க் இருந்துள்ளார். கருணாகரனுடன் பழக வாய்ப்பு கிடைக்க, அவன் வீட்டிற்கு அடிக்கடி செல்லும், அவனுடைய கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு உயர்கின்றார். இதனிடையே கருணாகரனை பழிவாங்க எண்ணி அவர் செய்யும் காரியங்கள், அதன் விளைவுகள், அதனால் கிளர்க்கே எப்படி மாறுகின்றார் என்பது தான் நாவல். 

அவருடைய பழிவாங்கும் (அல்லது அப்படி நினைக்கும்) செயல்களில் இருக்கும் அர்த்தமின்மை மற்றும் அபத்தம், வாழ்கையில் நீதி என்பது இல்லை என்று நம்மை நினைக்க தோன்றும். அவருடைய ஒவ்வொரு செயலும், ஒன்று குழந்தைத்தனமாக இருக்கும் (மொட்டை கடுதாசி போடுதல்), அல்லது அவருடைய தயக்கத்தால் பாதியில் விட்டு விடுவதாக முடியும். (கொலை செய்ய கத்தியுடன் சென்று, வாய்ப்பு கிடைத்தும் நிறைவேற்றாமல் இருப்பது). அதே போல் கருணாகரன் மகளுடன் (சுலோ)  காதல் கொள்வது, அதன் மூலம் அவனை காயப்படுத்த நினைப்பது. (மூன்றாம் தர சினிமா போல் என்று கிளர்க்கே நினைக்கின்றார்) . கிளார்க் உண்மையில் அவளை காதலித்தாரா அல்லது நடித்தாரா  என்று உறுதியாக சொல்லமுடியாது. அவளை கைவிட்டதற்கு அவருடைய இயல்பான, எதிலும் இருக்கும் தயக்கமே ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இதனால் கருணாகரன் காயப்படவில்லை, அவனுக்கு இது பற்றி தெரியவே தெரியாது. இது ஒரு புறமிருக்க, சுலோ கிளார்க் தன்னை மணம் முடிக்க மாட்டான் என்று தெரிந்ததும் அவனை ஒரு வேலையாள் போலவே நடத்த ஆரம்பிக்கின்றாள், கிளார்க்கும் அதை எதிர்க்கவில்லை. கருணாகரன் குடும்பம் வேறொரு பிரச்சனையில் மாட்டிய போதும், அவர் கூட இருந்து உதவுகின்றார். பழிவாங்க சென்ற இடத்தில், வேலையாளாக மாறி அவர்களின் நன்மைக்கு உழைப்பவனாக மாறிப்போனது ஒரு அபத்தம் தானே. 

பின்னர் கிளார்க் அவர்கள் வீட்டிலிருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்கை மேற்கொள்கின்றார். இதில்  கிளார்க்கே ஒரு வகையில் கருணாகரன் போல் நடந்து கொள்வது ஒரு முரண் நகை. சுலோவிடம், அவருடைய  நடத்தையை இப்படி பார்க்கலாம்.  கிளார்க் அவரை வேண்டுமென்றே ஏமாற்றினாலும், அல்லது பயத்தால் விலகிப்போனாலும் ஆண்கள் பெண்கள் மீது செய்யும் வன்முறையின் இன்னொரு வகை தானே அது. (கண்ணாடியில் கருணாகரனின்  முகத்தை பார்க்கும் இடம், அதற்கு முன்பான இடங்களில் கதை யதார்த்தவாதத்தில் ஒரு சில பக்கங்கள் சர்ரியலிச பாணியில் செல்கின்றது, அது ஒன்றும் துருத்தலாக இல்லை, அவருடைய அப்போதைய மனநிலைக்கு,  தோதாகவே உள்ளது. அவரின் ஆழமான உணர்வுகளின் கனவென்று தான் கொள்ளவேண்டும்). நாவலின் முடிவை இரண்டு விதமாக கருத வாய்ப்புண்டு, ஒன்று வலிந்து திணிக்கப்பட்டதாக கருதலாம் அல்லது  தர்க்கரீதியானதாக. என்னால் இதை, திடீர் திருப்பமாக பார்க்க முடியவில்லை நாவலின் அடிநாதமாக வரும் அபத்தத்தின், அர்த்தமின்மையின்  உச்சமாகவே பார்கின்றேன். 

'படைப்பு மொழியை கண்டறிவதின் சவாலை' பற்றி தேவிபாரதி  முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அது உண்மை தான்,  அவருடைய பலி தொகுதி மற்றும் சமீபத்திய நெடுங்கதைகளை பார்க்கும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,மாற்றத்தை நாம் உணர முடியும். இந்த நாவலும் சமீபத்திய நெடுங்ககதைகளின் மொழியின் நீட்சியாக உள்ளது. சற்றே மெருகேறி உள்ளது என்றும் கூறலாம்.   எளிமையான அதேநேரம் கட்டுக்கோப்பான, அடர்த்தியான மொழி. பத்திரங்களின் பதற்றத்தையும், சோகத்தையும், மன இறுக்கத்தையும், சிடுக்குகளையும் வாசகனுக்கு கடத்தும் மொழி. கிளார்க்கின் மொட்டை கடிதம் எழுதி அதை தபால் ஆபீசில் போட செல்லும் இடம் ஒரு உதாரணம். அவருக்கு  மனதில் ஏற்படும் பதற்றங்கள் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.  மிக நுணுக்கமான, சிடுக்குகள் நிறைந்த மன உணர்வுகளை மொழி மூலம் வெளிக்கொணரும் முயற்சி நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றது.  இந்த நாவல் முழுவதும் ஒரு மிக மெல்லிய அங்கதம் இருந்ததாக தோன்றியது எனக்கு. அது மிக இயல்பாக, சற்றே கண்ணையர்ந்தால் கவனிக்க படாமல் சென்று விடக்கூடியதாக இருக்கின்றது. 

கிளார்க்கிற்கு நாவல் முழுதும் பெயர் இல்லாமல் இருப்பது மிக பொருத்தம். அவர் எல்லார் வாழ்விலும் பங்கு பெற்றாலும் ஒரு வகையில் அநாமதேயமாகவே, எங்கும் நிலைகொள்ளாமல் உள்ளார். கருணாகரன் குடும்பத்துடன் பழகுவது, சட்டென்று விலகுவது, சுகந்தியுடன் ஒரு தற்காலிக உறவு இப்படி எப்போதும் ஒரு அலைச்சல் அவர் வாழ்கை முழுவதும்.   கிளார்க் சிறுவனாக இருக்கும் பொது கருணாகரனை வெட்ட சென்று அதில் தோல்வி தான் அடைகின்றார். கிளார்க் வளர்ந்து விட்டாலும், அவர் மனதில் அந்த சிறுவன் அப்படியே தான் உள்ளான் என்று கிளார்க்கின் செயல்கள் மூலமும் அவை வியர்த்தனமாவதின் மூலமும் தோன்றுகின்றது. இப்படி எண்ண வாசகனுக்கு சங்கடமாகதான் உள்ளது, ஆனால் வாழ்கை எப்போதும் நமக்கு தேவையான ஒரு நிறைவு  (closure) அளிப்பதில்லையே. 

நாவல் முழுவதும் கிளார்க்கின் பார்வையில் உள்ளதால் மற்ற பாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. நாவலின் ஆரம்பத்தில், சாரதா, கருணாகரன் இருவரும் நாவலில் முக்கிய பங்குவகிப்பார்கள் என்று நாம் நினைப்போம், ஆனால்   சாரதா வெகு அரிதாகவே வருகின்றார், கருணாகரன் உணர்வுகள் குறித்தும் அதிகம் இல்லை. இதை நெகடிவாக கொள்ள வேண்டாம், இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் ரூபிக் கூப் போன்ற உறவின் ஒரு பக்கம் தான் இந்த நாவல். இதை இன்னும் நான் நீடிக்க முடியும்.  சாரதாவின் பார்வையில் இருந்து இதை இன்னொரு நாவலாக எழுதக்கூடும். அந்த துயர சம்பவத்தை எப்படி எதிர்கொண்டார், எப்படி தன் வாழ்கையை மீட்டு ,குடும்பம், குழந்தை என்று ஒரு நடைமுறை வாழ்கைக்கு திரும்பினார் போன்ற கேள்விகள் நமக்கு அதில் விடை கிடைக்கலாம். அவர் கருணாகரனை, மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை என்று அவர் வரும் சில இடங்களிலேயே தெரிகின்றது, அதன் மூலம் அவர் இன்னும் சுமந்து கொண்டிருக்கும் வலியின் ஆழத்தையும்.  அவர் நாவலில் இறுதியில் கூறியது உண்மை தானா என்றும் நமக்கு அந்த நாவலில் தெரியக்கூடும். 

அதே போல் கருணாகரன் நமக்கு  பல வியாபாரங்கள் செய்யும், அரசியலில் சற்றே செல்வாக்கான மனிதர் என்ற அளவில்  வழக்கமான, சாதாரணமான ஆசாமியாக தோன்றுகிறார். சாரதாவிடம் அவருடைய நடத்தை பற்றி நமக்கு தெரியவில்லை என்றால் அவரை பற்றி நமக்கு வேற பிம்பமே ஏற்படும்.   எந்த ஒரு மனிதருக்கும் பல பக்கங்கள் இருப்பது போல நாம் பார்ப்பது அவருடைய ஒரு பக்கம் தான். 

இதை நல்ல/மோசமான நாவல்,பிடிக்கும், பிடிக்கவில்லை, என்று ஒற்றை வரியில் சொல்லமுடியாது. மனதின் அலைச்சலை கூறும், படிப்பவரையும்  அலைகழிக்கும் இந்த நாவல் படித்தவுடன் இன்னொரு வாசிப்பை கோரும். பத்திரங்களின் மனவியல் குறித்து சிந்திக்க தூண்டும், கூடவே நாம் செய்யும் பல செயல்களின் முடிவில் உள்ள அர்த்தமின்மையையும். இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள். 

வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம் 

Tuesday, 24 November 2015

-Vladimir Soloviev--Nikolay Klyuev--Yakov Polonsky--Gavril Derzhavin- -Mikhail Lermontov--Nikolay Gumilev-Fedor Tyutchev---Ivan Bunin-.-Sergey Esenin--Konstantin Balmont -(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    நமது வறிய கிராமங்கள் ஏதாயிருக்கின்றன,
    காலம் மற்றும் வெளியின் முழுமை ஏதாயிருக்கிறது?
    பிதாவின் வசம் பல மாளிகைகள் உள்ளன, ஆனால்
    அவற்றின் பெயர்கள் நாம் அறியாதனவே.


    ஆனால் வானுலகின் பேரின்பங்கள் குறித்த முன்னுணர்தல் எனக்குள்ளது,
    அன்றி வாழ்வெனப்படுவது ஒரு கனா;
    நான் மருள்-தோற்ற இன்னிழைவைத் துறக்கிறேன்
    காலத்தின் வாதையை மறுதலிக்கிறேன்.

    நலிதலும், துயருறுதலும், நசிதலும் என - நீ
    எனக்கொரு கொடிய மாலையைத் தொடுத்திருக்கிறாய்.
    வாக்களிக்கப்பட்ட புத்துயிர்ப்பு ஒருபோதும் பூமிக்கென
    எங்குமே நிறைவேற்றம் காணாது.

    -Fedor Sologub-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Yaazh Mozhi





    அந்தி வானில் புயல் ,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்...........

    ஆழியின் மீதும் எண்ணங்கள் மீது புயல்-
    வதைக்கும் எண்ணிறந்த எண்ணங்கள்.


    ஆழியின் மீதும் எண்ணங்களின் மீதும் புயல் -
    எண்ணங்களின் உயர்ந்தெழும் சேர்ந்திசை -
    கரு முகிலின் பின் முகிலாய்,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்..........

    -Afanasy Fet -
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






    மனிதத் தன்மையற்ற அவ-விதியுடன் வாதிட ஏதுள்ளது?
    என்ன போராட்டம் ?
    இவையாவும் மருள் தோற்றம்.

    ஆனால் இந்த வெளிர்-நீல அந்தியே இன்னும் என் ஆளுகையின் புலமாயிருக்கிறது.
    வானம்: கிளைகளுக்கிடையே சிவந்தும்,
    விளிம்புகள் முத்து-வர்ணம் பூண்டும் ...............
    ஒரு நைட்டிங்கேல் பறவை லில்லாக் புதரில் கானம் இசைத்திருக்க,
    ஒரு எறும்பு புல்லின் மேல் ஊர்கிறது:
    இது யாரோ ஒருவனுக்கு பயனாகும்.


    ஒருவேளை காற்றில் நான் சுவாசிப்பதிலும் கூட ஏதோவொரு பயனிருக்கவே கூடும்,
    எனது பழம்-மேலங்கியின் இடதுபுறம் சூரியாஸ்தமனத்தில் நீராடியுள்ளது ,
    அதன் வலதுபுறம் தாரகைகளில் அமிழ்கிறது.

    -Georgy Ivanov-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Shanmugam Subramaniam
    December 1 at 12:49am · Edited ·



    குபிட் ஸ்பெயினிற்கு அந்நியன் அல்லன்;
    இங்கவன் விருந்தினனும் அல்லன்,
    அவன் சொந்த நாட்டில் தனது உறவினர்களுடன் இருக்கிறான்;
    காஸ்டநெட் வாத்தியத்தின் இசைத்துணையாக
    ஒரு எழிலார்- நேசப்பாடலை களிப்புடன் பாடி
    ஸ்பானியனைப் போல் நடமிடுகிறான்.


    ஒரு இளம் ஸ்பானிய நங்கையின் கன்னங்களை
    அவனது கனல் செந்நிறமாக்குகிறது,
    அவளது கொங்கைகளைத் தழல் மூளச் செய்கிறது,
    அவளது ஜீவனுள்ள விழிகளைச் சுடர்த்துகிறது,
    அவளது இதழ்களை எரியூட்டுகிறது,
    மயர்டில்- தாவரமும், கசந்த-ஆரஞ்சு தருவும் அவற்றின் நறுமணத்தை காற்றலையில் ஏந்திச் செல்கையில்.

    ஆனால் நமக்கும்கூட அவன் , தன் சர்வ-வல்லமையின் கடுமையைக் காண்பித்ததில்லை,
    வடதுருவ தட்பவெட்பத்தின் மீதுள்ள அவனது
    இரக்கமிக்க ஆர்வத்தை நம்மால் காணவியலும்:
    உனது விழிகளுக்குச் சுடர்தலை அளித்தவன் அவனில்லையா,

    பவழ அதரங்களும் உனது வாயிற்கு முத்து- நிகர் பல்வரிசையும் ,
    இந்த மென்-பட்டான கேசத்தை சுருளாக்கியும் ,
    உனது -முழுமையை மந்திர வசியத்தால் உடுத்தியிருக்கிறான்?

    -Baron Anton Delvig-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




    Shanmugam Subramaniam
    November 30 at 12:06am · Edited ·



    நீ இன்னும் உயிர்த்திருக்கிறாயா, என் மூதாட்டியே?
    நானும்கூட உயிர்த்திருக்கிறேன்.
    வாழ்த்துகள், உனக்கென் வாழ்த்துகள் ............
    அந்தச் சொல்லடங்கா அந்தி ஒளி உனது சிறு வீட்டின் மேல் பாயட்டும்.


    அதை எனக்குச் சொல்வதற்காகவே அவர்கள் எழுதுகிறார்கள்,
    ஆயினும் நீ உனது பதற்றத்தை மறைத்தாலும்,
    எப்போதும் எனக்கென நீ அத்துனை ஏக்கமுற்று
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து
    அடிக்கடி வெளியே சாலைக்கு வருகிறாய்;

    அந்த அந்தி நீல-இருண்மையில் அடிக்கடி நீ அதையே கற்பனை கொள்கிறாய்: யாரோ ஒருவன், மதுக்கூட சச்சரவில்
    ஒரு உறைவாளை எனது நெஞ்சின் கீழ் செருகியதாய்,
    நீ கற்பனைக் காட்சியுறுகிறாய்,

    அது ஒன்றுமில்லை,என் அன்பானவளே,
    உன்னை சாந்தம் செய்:
    இது தொல்லை தரும் ஒரு மனக்கற்பிதத்தின் ஆட்டம்.
    நான் அப்படியொன்றும் உறுதியான குடியன் அல்லன்,
    முதலில் உன்னை காணாது மரிக்க.

    நான் முன்பைப் போலவே அன்பானாவன்,
    எனது ஒற்றைக் கனா ஒயாத துயரிலிருந்து மீண்டு,
    நமது சிறுவீட்டிற்கு திரும்பவது.

    நமது வெண்-தோட்டம் தனது கிளைகளை இளவேனிற்கால பாணியில் விரிக்கும் தருணம், நான் வீடு திரும்புவேன்,
    ஆனால் என்னை நீ புலர்காலையில் விழிக்கச் செய்யாதே,
    எட்டு வருடங்களுக்கு முன் செய்ததைப் போல்.

    மறைந்தழிந்த கனவுகளை மீள்-விழிப்புறச் செய்யாதே,
    எது நிஜமாகவில்லையோ அதை தொந்தரவு செய்யாதே:
    வெகு-சீக்கிரமாகவே வாழ்வு என்னிடத்தில் வீழ்ந்தது
    உளச்சோர்வையும் கையறுநிலையையும் அவதியுற.

    ஜெபிக்க என்னைப் பயிற்றுவிக்காதே. அதை செய்யாதே. இறந்தகாலத்திற்கு திரும்புதல் இனியில்லை,
    நீ மட்டுமே எனது பேருதவியும் இளைப்பாறுதலும் ஆவாய்,
    நீ மட்டுமே எனது செல்லடங்கா ஒளியாவாய்.

    ஆதலால் உனது பதற்றத்தை மறப்பாய்,
    எனக்காக அத்துனை ஏக்கமுறாதே,
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து அடிக்கடி
    சாலைக்கு வராதே.

    -Sergey Esenin-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)








    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·

    How often do we tell our own life story?
    How often do we adjust,
    embellish, make sly cuts?

    And the longer life goes on,
    the fewer are those around to challenge our account,
    to remind us that our life is not our life,
    merely the story we have told about our life.


    Told to others,
    but—mainly—to ourselves..........

    -Julian Barnes-
    (The Sense of an Ending)




    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·



    The man who cannot visualize
    a horse galloping
    on a tomato is an idiot....

    -André Breton-

சிரம் முதல் பாதம்வரை தடிமனான ஃபர் மேலங்கியால் 
நின்னைப் போர்த்தியுள்ளாய்,
நிசப்தமாய் சயனிக்கிறய், சாந்தமாய் துயில்கிறாய்,
இங்கு சுடரும் காற்றில் மரித்தலின் சுவாசமில்லை,
படிகமாய்த் தெளிந்த, இவ்வெண்-மெளனத்தில்.


அல்லாது , உலைவுறா ஆழ்ந்த அசைவின்மையில்,
நின்னை நான் வீணில் நாடிவிழையவில்லை.
நினது அதே படிமத்தை அகக்கண் இன்னும் காண்கிறது,
தேவதை அரசியே, பைன் தருக்களின் மற்றும் பாறைகளின் தலைவியே!

நீ மாசில் தூய்மை, மலைகளின் அப்பாலுள்ள பனி போல்,
நீ எண்ணிலா சிந்தனைகளுடன் இருக்கிறாய்,
குளிர்கால இரவைப் போல் , நீ பிரகாசிக்கிறாய்,
வடதுருவ ஒளிதீபங்களைப் போல்-

ஓ இருண்ட ஒழுங்கின்மையின் ஒளிர்- புதல்வியே!

-Vladimir Soloviev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பொன்னால் நெய்த செப்டம்பர் நாட்களில்
பைன்- வனங்களின் விளிம்பு தேவாலயத்தின் முன்றிலெனத் தோன்றுகிறது. பைன் மரங்கள் ஜெபிக்கின்றன, மற்றும்
உனது வெறிச்சோடிய குடிசையின் மேல் நறுமணத் தூபம் எரிகிறது.

காற்றும் , வனக்காவலனும், பழங்காலத் தடங்களைச்
சலசலக்கும் உலரிலைகளால் மூடினர்,
அலங்காரமாய் வடிவமைந்த பைன்களின் வலையை அகலவிரித்திடு,
தடித்த பிர்ச்- மரத்தின் பின்புறம் உன்னைக் கணக்-காட்சி கொள்கிறேன்


கைக்குட்டையின் ஓரத்தை நான் இனமறிவேன்,
சன்னமான சிறு குரல் , சிறிதே அசைவாடும் நடை,......
பைன் தருக்கள் இருளை, சிறைகளை, கம்பிகளினூடே மினுங்கும் தாரகைகளை, -

ஒரு கொடூர யாத்திரையில் கணீரென ஒலிக்கும் மணியைப் பற்றிக் குசுகுசுக்கின்றன,
புர்யாதின் தொடுவானம்...... உங்களுக்குச் சமாதானம் ,
பைன் -தருக்களே, நீவீர் எனையீன்ற தாய்போல்
எனது சிந்தனைகளைப் புனிதம் செய்தீர்.

செப்டம்பர் மாத நினைவு நாட்களில்
உனது மகனின் இரகசியத்தைக் கண்டறிவாய்,
யார் நேசித்து -அழிந்தாளோ அவளைப் பற்றி வானுலகிற்கும் பூவுலகிற்கும் சொல்வாய்.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

*****(புர்யாத் குடியரசு)





ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது,
விளக்குகள் தோட்டங்களில் மிளிர்ந்திருந்தன,
மக்கள் உலாவிய வண்ணமிருந்தனர்; மென்காற்று மட்டுமே கண்ணயர்ந்தது , இரவின் வான் கறுமையாயிருந்தது .

பச்சையமான குளமும் கறுமையுற்றிருந்தது
அடர்த்தியான நாணற்புதர்களில் வறிய அன்னமொன்று வாடி நலிந்திருக்க, இரவின் மோனத்தில் தன்னை மறைத்தது.


நயந்து பழக்கப்பட்டும் தனிமையார்ந்தும்,
தனது மரித்தலின் -வேதனையிலும்கூட
ஒரு ராக்கெட் காற்றினுள் பறந்துயர்ந்து நெருப்பை அவன் மேல் சிதறச் செய்ததைக் கண்டதில்லை

நீர்த் தாரையின் துள்ளலாட்டத்தையும் , அன்றி
ஓடையின் கரையோ முணுமுணுப்பையும் அவன் செவி கொள்ளவில்லை,
அவனது விழிகள் சாத்தியிருந்தன,
முகில்களின் மேல் ஒரு பறத்தலை அவன் கனவுற்றிருந்தான்:

வானின் அகண்ட விரிவின் உயர்வினுள்
தன்னை ஏந்திச் செல்லும் ஒரு பறத்தலை, -.......................
அங்கவன் எத்தகைய அகத்தூண்டலின் பாடலை இசைப்பான்!

எவைகளை மானுடனிடமிருந்து புனிதமாகவும் மறைவாகவும் தனவசம் வைத்திருந்தானோ அவை அங்கு
வெண் -அன்ன கூட்ட்த்தின், மற்றும் தன் உறவினர்களின் பாடலில் எதிர்வினையைக் காணும்.

அவன் ஒரு கணத்தில் பெருமூச்செறிவதாய் கனவுற்றான்,
அவனது சிறகுகள் படபடக்கத் துவங்கின,
தளை தகர்ந்த பாடலின் ஒலிகள் காலைப் பொழுதை அறிவிக்கும்.

ஆனால் அவனது சிறகுகள் அசையவில்லை,
அவனது உள்ளத்திருந்த பாடல் பிறழ்ந்தது,
பறத்தலை செய்ய இயலாமலும்
அவனது பாடல் புகழ்ந்து இசைக்கப் பெறாமலும் ,
அரை ஒளியில் மாய்ந்தபடி இருந்தான்.

இலைகள் சலசலத்தன, நறுங்காற்று நாணற் புதர்களிடையே கடக்கும் தருணம்,சுற்றிலும் உள்ள தோட்டங்களில் ,
விளக்குகள் மிளிர்ந்திருந்தன,
ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது.

-Yakov Polonsky-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






உயர் குன்றின் மேல் நான் துயின்றிருந்தேன் உனது குரலையும் செவி கொண்டேன்,
ஓ நைட்டிங்கேல் பறவையே. ஆழ்ந்த துயிலிலும்கூட எனது ஆன்மாவால் அதைச் செவிகொள்ள முடிகிறது-
இப்போது ஒலியதிர்கிறது , இப்போது எதிரொலிக்கிறது,
இப்போது இரங்கியழுகிறது, இப்போது என் செவிகளில் நெடும் தொலைவிலிருந்து நகைக்கிறது. மற்றும்
காலிஸ்டோவின் மெய்தழுவலில் நான் சாய்ந்து கிடந்த தருணம், பாடல்களும், பெருமூச்சுகளும் ,
அழுகையும், சீழ்கையொலியும்,
எனது இனித்த -துயிலிலும் களிப்பூட்டுகின்றன.


ஒருவேளை, நான் மரித்த பின் நீள்-சோர்விலும் , இறுதியுறா நீடித்த துயிலிலும் நான் படுத்து கிடப்பினும்,
அந்தோ, இப்போது போல் - இனி எப்போதும் என் செவிகளைச் சேராது,
ஒருவேளை மகிழ்ச்சியின் மற்றும் கிளர்ச்சியின்,
குழுப்பாடலின், நடமிடலின், சப்தங்களை நான் செவி கொள்ளாவிடினும்-
பூமியின் மீதான வாழ்வை நான்அதேபோல் துய்க்க்கூடும்,
எனது அன்பியை அவ்வப்போது இடைவிடாது முத்தமிட்டும்,
நைட்டிங்கேல் பறவையின் பாடல்களுக்கு உன்னிப்பாய் செவிமடுத்தும்.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
22 hrs · Edited ·



that is, in all Translation......................

The question of how to translate - should translators, like wives and husbands,
be 'faithful' or "free" ? - has continued to be controversial ever since the literal-minded Gavin Douglas rebuked Caxton for his 'counterfeit' of Virgil, and Dryden (two hundred years later) aligned himself cautiously on the others side: 'something must be lost in all Transfusion , that is, in all Translation."


-James Greene -
(Translator's Preface)
Osip Mandelstam -Selected Poems)







News Feed





Shanmugam Subramaniam
November 23 at 11:47pm ·



நள்ளிரவு வானூடே ஒரு தேவதூதன் பறந்து கொண்டிருந்தான்,
அவன் மிருதுவாய் நெகிழ்ந்து பாடினான்;
நிலவும், தாரகைகளும், குழுமிய முகில்களும் ,
அப்புனிதத் திருப்பாடலைக் கூர்ந்து செவிமடுக்கிறது.


சுவர்க்கத் தோட்டங்களின் நிழலில் தங்கும்
களங்கமில்லா ஆவிகளின் பேரின்பத்தை பாடினான்,
அவன் மகிமை நிறை ஆண்டவரைத் துதி பாடினான்,
அவனது துதிகள் மெய்யாயிருந்த்து.

தனது கரங்களில் ஒரு இளம் ஆன்மாவை ஏந்திச் சென்றான்,
விசனத்திற்கும் விழிநீருக்குமான உலகிற்கு விதிக்கப்பட்டவனாய்;
அவனது பாடலின் ஒலி தங்கியிருந்தது,
வார்த்தைளற்றிருப்பினும் உயிர்த்திருக்கிறது,
அந்த இளம் ஆன்மாவில்.

புவியில் நெடுங்காலம் அது சோர்ந்து நலிந்தது,
வியப்பார்ந்த பேரவாவினால் நிரம்பியுள்ளது,
அதன் பொருட்டு பூமியின் நீள்-சலிப்பூட்டும் பாடல்கள்
சுவர்க்கத்தின் ஒலிகளால் தம்மை மாற்றீடு செய்ய இயலாதுள்ளன.

-Mikhail Lermontov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Shanmugam Subramaniam
November 23 at 1:17am · Edited ·



நம்முடன் நேசமுற்றிருக்கும் வைனும் ,
நம் நிமித்தமாய் அடுப்பிற்குள் புகும் நேர்த்தியான நன்-ரொட்டியும் ,
நாம் துய்த்து இன்புறம் நங்கையும்,
நம்மை அவள் முழுமையாய் வாதையுற வைத்த பின்னரும்
நன்றாயிருக்கிறது.


ஆனால் உயரே குளுமையுறும்
வானின்,
ரோஜா-வர்ண அஸ்தமனத்துடன் நாம் ஏது செய்ய?
எங்கு மெளனமும் நிலவுலகத்தல்லாத பேரமைதியும் நிலவுகிறதோ,அங்கு நிலைபேறுடைய கவிதைகளுடன்
நாம் ஏது செய்ய?

நின்னால் உண்ணவியலாது, அல்லது பருகவியலாது,
அல்லது அவர்களை முத்தம் செய்யவியலாது.....................
தடையின்றி கணம் சிறகடிக்கிறது,
நாம் நமது கரங்களை வலிய முறுக்குகிறோம்,
ஆனால் நாம் இன்னமும் நெருக்கமற்று பரந்தகலுகிறோம்,
குறியீட்டிலிருந்து பரந்தகல்கிறோம்.

ஒரு சிறுவனாய் மட்டுமே, தனது ஆட்டங்களை மறந்து,
இளநங்கைகள் நீராடுதலைச் சிலசமயம் கூர்ந்து நோக்கி,
புலனாகா மறைவேட்கையால் இன்னும் வதைக்கப்படுகிறான்.

முன்னொரு காலத்தைப் போன்றே வழுக்கி ஊரும் உயிரினம் ,
தனது முதுகில் உருப்பெறா சிறகுகளை உணர்கிறது,
அதீதமாய்ச் செழித்த புதர்காடுகளிலிருந்து
இயலாமையின் உணர்வுற்று ஓலமிடுகிறது-

ஆகையால் நூற்றாண்டிற்கு பின் நூற்றாண்டாக,-,
எத்துனை விரைவாக, ஓ ஆண்டவரே?--
இயற்கையின் - கலையின் வாளின் கீழ்;
நமது ஆன்மாவின் அழுகை வீறிட்டெழுகிறது,
மாம்சம் உணர்விழந்து மயங்குகிறது, அவை-
ஆறாம் அறிவின் உறுப்பைப் பிறப்பிக்கும் தருணம்.

-Nikolay Gumilev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 21 at 11:54pm · Edited ·



ஓ, இன்னும் எத்துனைக் கூடுதலான பிரியத்துடனும் குருட்டு நம்பிக்கையுடனும்
நமது தேய்ந்து தளரும் ஆண்டுகளில் நேசிக்கிறோம்...................
ஒளிவீசு, ஓ, ஒளிவீசு,
கடைசி நேசத்தவளின் பிரியாவிடை ஒளியே,
அஸ்தமனச் செவ்வான் ஒளியே!


அரை வானை நிழல் கவிந்துள்ளது,
அங்கு மட்டுமே, மேற்கு திசையில் ,
ஒரு ஒளிமினுக்கம் அலைகிறது;
துரிதப்படாதே, அந்தி ஒளியே,
நீடித்திரு ,நீடித்திரு , மந்திரவசியத்தில்.

நரம்புகளில் குருதி மெலிந்து நீர்மையாய் பாய்கிறது,
இன்னமும் நெஞ்சத்தில் மென்கனிவு தேய்வுறவில்லை...................
ஓ கடைசி நேசத்தவளே,
நீ ஆனந்தமும் விரக்தியும் இரண்டுமானவள்....

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







News Feed





Shanmugam Subramaniam
November 20 at 10:50pm · Edited ·



பூக்களும், பெருவண்டுகளும், புல்லும் ,(சோளத்தின்),கதிர்களும்
நீலவானும், மதியப்பொழுதின் வெம்மையும்...........

காலம் அணுகி வரும்-
ஆண்டவர் கெட்டு- மீண்ட குமாரானை வினவுவார்:
பூமியின் மீதான உனது வாழ்வு உவந்திருந்ததா?


மேலும்; யாவையும் நான் மறப்பேன்,
புல் மற்றும் சோளக் கதிர் காடுகளின் குறுக்கே சமைந்திருக்கும்,
பாதைகள் ஒன்றையே ஞாபகமடைவேன் -மற்றும்,
(அவரது) அருளார்ந்த முழங்காலுக்கு எதிராய் அழுத்தபட்டிருக்க,
என் விழிகள் தேக்கியுள்ள உவகையின் கண்ணீருக்கு
நான் பதிலளிக்க இயலாதவனாய் இருப்பேன்.

-Ivan Bunin-.
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 20 at 1:41am · Edited ·



பொற் -தோப்பு இப்போது பிர்ச் மரங்களின் மகிழ்-மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்து,
நாரைகள், சோகமாய் சிறகடித்துக் கடக்கின்றன,
இனி எவரேனும் ஒருவர்கூட வருந்தமாட்டார்கள்.

வருந்துவதற்கென யார் உள்ளார்?
இவ்வுலகத்துள்ள ஒவ்வொரு மானுடனும் ஒருவகையில் நாடோடியாக இல்லையா?
அவன் கடந்து போகிறான், வருகை தருகிறான்,
மீண்டும் இல்லம் விட்டுத் தொலைகிறான்,
சணல்-வயல், வெளிர்நீல குளத்தின் மீதிருக்கும் அகன்ற நிலவுடன் கூடி,
தொலைவுற்று மறைந்தோர் அனைவரையும் கனவுறுகிறது.


தழைக்கா வெற்றுச் சமவெளியில் நான் தனியனாய் நிற்கிறேன்,
நாரைகளை அதிதூரம் காற்று ஏந்திச் செல்லும் தருணத்தில்,
மகிழ்வூறிய இளமையின் எண்ணங்களால் நிரம்பியுள்ளேன்,
ஆனாலும் நான் கடந்தகாலத்தின் எதை நினைத்தும் வருந்தவில்லை.

பாழுக்கு; நான் வீணிற் கழித்த ஆண்டுகளை எண்ணியும் வருந்தவில்லை,
எனது ஆன்மாவின் லில்லாக் அரும்புக்கும் வருந்தவில்லை
ரோவன் மரக்கிளைகள் தோட்ட்த்தில் தழலுற்று எரிகின்றன,
அதனால் யாரேனும் ஒருவரைக்கூட கதகதப்பூட்ட இயலவில்லை.

ரோவன்-பெரி கொத்துகள் தீக்கிரையாகாது,
நாணல் மஞ்சள் நிறமாகி நசியாது,
மரம் இலைகளை கனிவுடன் வீழ அனுமதிப்பது போன்றே,
நானும் சோகமிழையும் வார்த்தகளை வீழ அனுமதிப்பேன்.

ஒருவேளை காலம், அதைக் காற்றில் விசிறியெறிந்த பின்,
யாவற்றையும் வாரி பயனில்- குவியலாக்க வேண்டும்.......
வெறுமனே சொல், பொற் -தோப்பு இப்போது
நான் நேசிக்கும் மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்தென்று...........

-Sergey Esenin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
November 19 at 1:38am · Edited ·



மங்கும் நாளின் அமைதியொளியில்
நெடுஞ்சாலையின் நெடுகிலும் நடையிடுகிறேன் ;
என் நெஞ்சம் பாரமடைகிறது,
என் கால்கள் உணர்விழக்கின்றன:
என் அன்பிற்கினியவளே, நீயென்னைப் பார்க்கிறாயா?


பூமியின் மீது இருளடர்கிறது மென்மேலும் வளர்ந்து இருளடர்கிறது............
நாளொளியின் இறுதிப் பிரகாசமும் பறந்துவிட்டது........
இவ்விடம்தான் நாமிருவரும் சங்கமித்து வாழ்ந்த உலகு,
என் தேவதையே ,நீயென்னைப் பார்க்கிகிறயா?

நாளைப் பிராத்தணையின்,மனத்துயரின் பொழுதாகும்,
நாளை மரித்தலின் ஆண்டு நிறைவு. என் தேவதையே,
எங்கு ஆன்மாக்கள் வசிக்குமோ அங்கிருந்து,
என் தேவதையே, நீயென்னைப் பார்க்கிறாயா?

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)






எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய் நீ ,
ஓ ஆழியே! இராப் பொழுதில் இங்கு ஒளிமயமாகிறாய்,
அங்கு சாம்பல்பூத்த நீலமாய் இருண்மையாய் ....
அது நகர்கிறது, முச்சுவிடுகிறது, நிலவொளியில் பளபளக்கிறது,
உயிர்த்திருக்கும் இனங்காணா பிராணி போலுள்ளது.


அதன் எல்லையில்லா, கட்டற்ற விரிவில், ஒளி சுடர்கிறது,
அதன் அசைவில்,கர்ஜனையில், அங்கு இடி முழங்குகிறது .........
ஓ ஆழியே, மங்கலான ஒளிர்வில் நீராடியுள்ளாய்,
நீ எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய்
இராப் பொழுதின் தனிமைவாசத்தில்.

ஓ மீ -அலையே , ஆழியின் பேரெழுச்சியே!
யாரின் விழாநிலையை இப்பாணியில் கொண்டாடுகிறாய்?
இடிமுழங்கியும் மின்னியும் ; அலைகள் புரள்கின்றன,
உயரேயிருந்து தாரகைகள் உன்னிப்புடன் நோக்குகிறது.............

கனவில் நிற்றலைப் போல் நிற்கிறேன்,
இக்கலக்கத்திலும் ஒளிர்விலும் தொலைகிறேன்.
ஓ, எத்தகைய ஆனந்தத்துடன் அவைகளின் மந்திர-மயக்கில்,
எனது முழு ஆன்மாவையும் முழ்கடித்திருப்பேன்!

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)


Original Incorrect.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:32am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



...it occurred to me that perhaps in this city the crowd was essential to the individual; without it, he had nothing against which to scrape his anger, no echo for grief, and not the slightest proof that there were others more lonely than he. it was just a passing thought.


-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:31am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



It is so much simpler
to bury reality
than it is to dispose of dreams.........

-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am · Edited ·



I'm permanence.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



We are as ignorant of the meaning
of the dragon
as we are
of the meaning of the universe.”


-Jorge Luis Borges-
( The Book of Imaginary Beings)












News Feed





Shanmugam Subramaniam shared his post.
November 18 at 10:11am ·




Shanmugam Subramaniam added 2 new photos.
November 18, 2014 ·



Too much has been forgotten
in the name of memory. ...

- Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 · Edited ·



That night, after the movie, driving my father's car along the country roads, I began to wonder how real the landscape truly was, and how much of a dream is a dream.

-Don DeLillo-
( Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



One must become a book
before
one can know what is inside it...........

-Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



"Fellini says the right eye is for reality ,and the left eye is the fantasy eye.
Whenever you are ready,Glenn."

-Don DeLillo -
(Americana)






News Feed





Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



Any life is made up of a single moment,
the moment
in which a man finds out,
once and for all, who he is.....................


-Jorge Luis Borges-










Shanmugam Subramaniam
November 18 at 12:59am · Edited ·



இன்னிசைப் பாடலின் வனப்பில் ,
ஒரு அசையா ஆடிநிகர் மேற்பரப்பில்,
எனக்கு முன்னம் யாரும் மொழியாக் கனவுகளின்
விளிம்புக் கோடுகளை நான் கணடறிகிறேன்,
பனிப்பாளங்களின் கீழ் குத்திட்டு அடைப்பட்ட தாவரங்களாய்,


அவைகளுக்கு நான் ஆனந்தக் களிப்பின் ஆற்றலைக் கொடுத்தேன்,
அதன் ஜனித்தலுக்கு எழிலின் நேர்த்தியை அளித்தேன்,
சப்தமிட்டு ரீங்கரிக்கும் பனிபாளங்களைச் சிதறடித்தேன்,
ஒலிபெறா துதிப் பாசுரங்களைப் போல்,
அபரிமிதமாய் செழித்த தாமரைகள்,
ஆடிநிகர் நீரின் விரிவில் சுவாசிக்கிறது.

ஒலிபெறா இன்னிசைப் பாடலில்,
இப்புதிய ஆடிநிகர் மேற்பரப்பில்,
அதன் வட்ட நர்த்தனம் புத்துலகை தோற்றுவிக்கிறது,
இன்னமும் முழுமையாய் வெளிப்படாது
ஆயினும் அறிந்த உலகுடன் இணைவுற்றிருக்கிறது
பிரதிபலிக்கும் நீரின் அடியாழத்தில்....

-Konstantin Balmont -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)