Wednesday 10 February 2016

What do I feel if this is not love?
But if it is love, God, what thing is this?
If good, why this effect: bitter, mortal?
If bad, then why is every suffering sweet?
If I desire to burn, why the tears and grief?
If my state is evil, what’s the use of grieving?
O living death, O delightful evil,
how can you be in me so, if I do not consent?
And if I consent, I am greatly wrong in sorrowing.
Among conflicting winds in a frail boat
I find myself on the deep sea without a helm,
so light in knowledge, so laden with error,
that I do not know what I wish myself,
and tremble in midsummer, burn in winter.

Petrarch
இது காதலில்லை என்றால்
வேறு என்னதான் இது?
இதுதான் காதல் என்றால்
கடவுளே, எதுதான் இது?
இது நன்று என்றால்
ஏன் இந்த பாதிப்பு:
கசப்பும் உயிர்கொல்வதுமாய்?
இது கெடுதல் என்றால்
வேதனைகள் இனிப்பது எதனால்?
எரியத்தான் விழைகிறேன் என்றால்
ஏன் இந்தக் கண்ணீரும் சோகமும்?
இந்த நிலை தீங்கானது என்றால்
சோகித்துதான் என்ன பயன்?
ஓ, வாழ்க்கையாகிவிட்ட மரணமே
களிப்பூட்டும் தீமையே,
என் அனுமதியின்றி
என்னுள் நீ உறைவது சாத்தியமோ?
என் அனுமதி உண்டென்றால்
என் சோகம் தவறன்றோ?
எதிர்காற்றில் அலைபடும்
நொய்தான படகொன்றில்
சுக்கான் இல்லாமல்
ஆழ்கடலில் இருப்பதுபோல் உணர்கிறேன்.
எதை நான் விழைகிறேன் என்றறிய
ஞானத்தின் பலமுமில்லை
பிழைகளின் பாரமும் அதிகம்.
நடுவேனில் காலத்தில் நடுங்குகிறேன்
பனிக்காலத்தில் எரிகிறேன்.


You Tell Us What to Do
When we launched life on the river of grief,
how vital were our arms, how ruby our blood.
With a few strokes, it seemed, 
we would cross all pain,
we would soon disembark.
That didn't happen.
In the stillness of each wave we found invisible currents.
The boatmen too were unskilled,
their oars untested.
Investigate the matter as you will,
blame whomever, as much as you want,
but the river hasn't changed,
the raft is still the same.
Now you suggest what's to be done,
you tellus how to come ashore.
When we saw the wounds of our country
appear on our skins,
we believed each word of the healers.
Besides, we remembered so many cures.
It seemed at any moment
all troubles would end, each wound heal completely.
That didn't happen; our ailments
were so many, so deep within us
that all diagnoses proved false, each remedy useless.
Now do whatever, follow each clue,
accuse whomever, as much as you will.
our bodies are still the same,
our wounds still open.
Now tell us what we should do,
you tell us how to heal these wounds.

Faiz Ahmad Faiz London 1981
Translated by Agha Shahid Ali from Urdu
From the book The Rebel’s Silhouette (Delhi, OUP)
நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று

சோக ஆற்றில் நாங்கள்
வாழ்க்கைப் படகை இட்ட போது
எவ்வளவு ஆதாரமாக இருந்தன எங்கள் கரங்கள்
எவ்வளவு சிவப்பாக இருந்தது எங்கள் ரத்தம்
இரண்டொரு முறை துடுப்பை நீரில் எட்டிப் போட்டால்
படகு மறு கரை சேர்ந்துவிடும் என்று நினைத்தோம்
அது நடக்கவில்லை
ஒவ்வொரு அலையிலும்
கண்ணுக்குத் தெரியாத சுழல்
படகோட்டிகளும் பயிற்சி அற்றவர்கள்
துடுப்புகளும் இதுவரை நீரில் இடாதவை
இப்போது எத்தனை வேண்டுமானாலும் உசாவுங்கள்
யார் மீது வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும்
பழியைப் போடுங்கள்
ஆனால் ஆறு இன்னும் மாறவில்லை
படகும் அதே படகுதான்
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று

எங்கள் தேகத்தில் தேசத்தின்
காயங்களைக் கண்ட போது
மருத்துவர்களை முற்றிலும் நம்பினோம்
தவிர எங்கள் நினைவில் வேறு பல நோய் நிவாரணிகள்
எந்த நிமிடமும் எல்லாத் தொல்லைகளும் நீங்கும்
ஒவ்வொரு காயமும் முற்றிலும் ஆறும்
என்று நம்பினோம்
அது நடக்கவில்லை
எங்கள் நோய்கள் காலம்காலமாக இருந்தவை
தொட முடியா மன ஆழத்தில் அவற்றின் வேர்கள்
எல்லா நோய் அறுதியிடலும் பொய்யாய்ப் போயிற்று
ஒவ்வொரு மருந்தும் பயனற்றுப் போயிற்று
இப்போது எத்தனை வேண்டுமானாலும் உசாவுங்கள்
யார் மீது வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும்
பழியைப் போடுங்கள்
அதே உடல்கள்தாம்
அதே புண்கள்தாம்
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
ஃபெயிஸ் அஹமத் ஃபெயிஸ், லண்டன், 1981
கலகக்காரனின் நிழலுருவம் புத்தகத்திலிருந்து
ஹிந்தியிலிருந்து தமிழில் ஆங்கில உதவியுடன் ஆங்கிலத்தில் செய்திருந்த சில மாற்றங்களைத் தவிர்த்து