Monday, 28 December 2015

MURANVELI - Archive for திசெம்பர் 11, 2006

Archive for திசெம்பர் 11, 2006

மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

–முரண்வெளி கூட்டுக்கட்டுரை-

மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

–முரண்வெளி கூட்டுக்கட்டுரை- (மேலும்…)

கதையாடலுக்கான அழைப்பு

எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக இவ்வலைப்பதிவைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் – நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.அடயாளம் காணப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டு, ஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூட, அல்லவா?அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.எதிர்வினைகள்,கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகளுக்கு (மேலும்…)

கதையாடலுக்கான அழைப்பு 
எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக இவ்வலைப்பதிவைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் – நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.அடயாளம் காணப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டு, ஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூட, அல்லவா?அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.எதிர்வினைகள்,கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகளுக்குmuranveli@yahoo.com 
–முரண்வெளி கூட்டுக்கட்டுரை-மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள் 

‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும்எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும்தணலோடும்கோடை வந்திறங்கிற்றெம் மண்மீதுமறுபடியும்–தவ.சஜிதரன்- 
‘Corpses have grownAnd covered the land….’ 
‘Earth echoes with alien soundsStuttering riffles, weird moans –And the harsh face of warFills the land with abomination’-Ken Saro Wiwa, Songs in a time of war- 

*மல்ட்டி பரல் குண்டுகள் ஏவப்படும் சத்தத்தில் வீட்டுச் சுற்றுப் புறம் பலமாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஷெல் சத்த மும்முரத்தைப் பார்த்தால் பிரிட்டோன் போட்டுத்தான் தூங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இன்றைய நாளின் உள்வாங்கல்களை அலசியபடி அவற்றை கணினியில் பதிவு செய்து கொண்டிருகிறோம், கரண்ட் நின்று விட்டால் டைப் செய்ய முடியாது, தமிழில் டைப் செய்வதென்றால் நாம் அந்த இடத்திலிருந்து விலகி விடவே விரும்புவோம், பௌசரது வேண்டுகோளைப் புறக்கணிக்கவும் முடியாது. விவாதித்து திருத்தங்களையும் சேர்ப்புகளையும் செய்வதற்கு நேரம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலைப் பளு. சிதறல்களாய் எழுதியிருந்தவற்றை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டும். அது ஒரு நீண்ட தலைவலியைக் கொடுக்கும் வேலை. இன்று பத்து மணியளவில் தான் நண்பரொருவர் ஃபோன் செய்து வவுனியாவில் 5மாணவர்கள் கதறக் கதறச் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நடுங்கும் குரலுடனும் விபரித்தார். பதிலளித்த தோழரின் பதில் இவ்வாறு அமைந்தது ‘ஆ, அப்பிடியே நாங்கள் இன்னும் நியுhஸ் கேக்கேல்ல.. எத்தினை மணிக்கி நடந்தது?” ஃபோனில் கதைத்த நண்பர் அதிர்ந்து போனாராம். உடைந்த கம்மிய அவரது குரலுக்குப் பதிலாக தோழரது சலிப்புக் கூடிய கவலையற்ற குரலும் பதட்டமின்மையும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ன செய்வது இதெல்லாம் கொடூரம் என்ற நிலையிலிருந்து சாதாரண நிகழ்வுகளாக மாறி நாட்களாகின்றன என்பதை எப்படி விளங்கும் வகையில் கூறுவது?  —ஓகஸ்ட்11ம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் நாங்கள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்தோம். நல்லூர் திருவிழா என்பதால் அச்சூழலில் பெரிதும் அச்சமின்றித் திரியலாம் என்கிற நிலை காணப்பட்டது. பல நாட்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி இருந்த பலருக்கு நல்லூரின் மாலைப்பொழுதுகள் அரிய சந்தர்ப்பமாக இருந்தன. 6.30மணியளவிலேயே ஷெல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. கிளைமோர்களும், கிரனேட்டுகளும் சர்வ சாதரணமாகி விட்டதால் பலரும் ஆரம்பத்தில் ஷெல் சத்தத்தை கிளைமோர் அல்லது கிரனேட் தாக்குதல் அருகில் எங்கேயோ நடந்ததாய் கூறிச் சமாதானப் பட்டுக்கொண்டார்கள். சண்டை தொடங்கி விட்டது என்பதை நம்ப யாருமே தயாராயிருக்கவில்லை. நல்லூர் முடியும் வரைக்கும் எவனும் எதுவும் செய்யமாட்டாங்கள் என்ற அசட்டு நம்பிக்கை மக்கள் மனதில் பெருமளவில் இருந்தது. அதைவிட,மறுநாள் சனிக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை நடக்க ஏற்பாடாகியிருந்தது. கல்விச்செயற்பாடுகளைக் குழப்புவதில் இருதரப்புமே ஏற்கனவே தேவையானளவு கெட்ட பேரைச் சம்பாதித்திருந்தன. ஆகவே புலமைப் பரிசிலுக்கு இடையுhறு விளைவிக்க இருதரப்புமே -முக்கியமாக  விடுதலைப் புலிகள்- விரும்பார்கள் என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது.ஷெல் சத்தங்களும், ஹெலிகளின் தொடர் உலாவுகையும் போர் தொடங்கிவிட்டதை உறுதி செய்தன. அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த யுத்தம் இறுதியாகத் தொடங்கி விட்டது என்பதை மிகச் சோர்வுடன் மெல்ல மெல்ல உணர்ந்தோம். அன்றிரவு மின்சாரம் சிறுது நேரத்திடன் நின்றுவிட்டது. கைத்தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. யாரும் யாருடனும் தொடர்புற முடியாத நிலை தோன்றியிருந்தது. தனியார் பண்பலை வானொலிகள் இயங்கவில்லை. பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்லியறியாத இலங்கை வானொலியின் யாழ்சேவை மாத்திரம் ‘மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாக‘ யாழ் படைத் தலமையகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை அலறிக் கொண்டிருந்தது.யாருமே தயாராயிருக்கவில்லை. மண்ணெண்ணையோ மெழுகுதிரிகளோ பற்றறிகளோ அற்ற நிலையில் அன்றைய இரவு இருளில் கழி;ந்தது. அயலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். எல்லோரும் ஒன்றாக முன்முற்றத்து பெஞ்சுகளில் கூடியிருந்து கதைத்தவாறேயிருந்தோம். யாருமே உறங்குவதற்ற்குத் தயாராயிருக்கவில்லை. தாம் எப்படி உயிரோடு வீடு போய்ச்சேருவது என்பது அவர்களுடைய பெருங்கேள்வியாக இருந்தது.மறுநாள் காலையும் ஊரடங்கு தளார்த்தப் படவில்லை. மின்சாரம் இல்லாததால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் நிரப்பிக் கொள்ள முடியவில்லை. குளிப்பதற்காக கிணற்றடிகளில் லைன் போடவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் பங்குக் கிணறுகள் தான். கிணற்றடிச் சண்டைகள் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்கு உணவு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒன்பது மணியளவில் இராணுவப்பிரசன்னம் அற்ற உள்வீதிக் கடைகளில் ஒற்றைக்கதவு-வியாபாரம் நடப்பதாக செய்தியறிந்து எல்லோரும் ஆளுக்கொரு பைகளை எடுத்துக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்தோம். மெழுகுதிரி, அரிசி, பால்மா, சீனி, பருப்பு, சோயாமீற் போன்ற பொருட்கள் சற்று விலை கூட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்கப்பட்டன.  பல்கலைக் கழக மாணவர்களது கைகளில் நிறைய நூடில்ஸ் பாக்கெட்டுகளையும் சமபோஷ பாக்கட்டுகளையும் கண்டேன். சமபோஷவுடன் தண்ணீரை முண்டி விழுங்குவதாக அவர்கள் கூறியபோது என்னவோ செய்தது.அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப் பட்டிருப்பதாய் யாழ் சேவை அறிவித்ததும் வீடுகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரம் பண்ணி விட வேண்டுமென்கிற அந்தரம் மக்களை சிடுமூஞ்சிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாற்றி விட்டிருந்தது. அனைவரினதும் கால்களில் சக்கரங்கள் முளைத்திருந்தன. பனடோல் கார்ட்டுகள், மா, சீனி பருப்பு எனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு மத்திய தர வர்க்கத்துக்கு இயலுமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் கியுh. மீண்டும் கியுh வாழ்க்கை எம்மீது திணிக்கப் பட்டிருப்பதை வெறுப்புடன் உணரவேண்டியிருந்தது. கம்பி வழித் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சீர் செய்யப் பட்டதும்,  தொலைபேசி அழைப்புகளை எற்படுத்துவதும் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. ‘உங்கட பக்கம் எப்பிடி?” விசாரிப்புகளுக்கு மேலாக தவறிப்போய் வன்னியிலும் வவுனியாவிலும் கொழும்பிலும் சிக்கிக் கொண்ட உறவினர்களுக்கு தொலைபேசி செய்வதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது.எனது அயலவர்களில் ஒருவரது அப்பா கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். அக்குடும்பத்தினர் 2001 யுத்ததில் தென்மராட்சிப் பக்கமிருந்து துரத்தப் பட்டு இங்கு வந்து குடியேறி, பின்னர் கல்வித் தேவைகளுக்காக தங்கிவிட்டவர்கள். தகப்பனும் மகளும் மாத்திரம் தான். தாயார் 90களின் ஷெல் வீச்சு ஒன்றில் கொல்லப் பட்டிருந்தார். தந்தையார் திடீரென ஏ-9 மூடப்பட்டதால் யாழ் திரும்பமுடியாத நிலையிலிருந்தார். அவரது மகள் அவ்வீட்டில் தனியாக இருந்தார். முதல் ஊரடங்கு இரவின் போது அந்தப் பெண் எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார். தனது தந்தை எவ்வாறெல்லாம் கஷ்டப்படக்கூடும் என்பது பற்றிய மிகக் கொடூரமான ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை நீரிழிவு நோயால் அவதிப் படுபவராம். ஆஸ்த்துமா வேறாம். ‘ஒவ்வொரு நாளும் 7 குளிசைகள் இன்றி உயிர்வாழ முடியாதவர்,எப்படி றெயினிங் எடுக்கப் போப்போறாரோ தெரியேல்லை……………………. (தணிக்கை). அவரை எங்களுடன் வந்து விடும்படி கூற அம்மா தயாராயிருக்கவில்லை. ‘தேத்தண்ணிக்கு மா இல்லை, புட்டுக்கு மாவில்லை”என்கிற கணக்கில் சாக்குக் கூறினாள். அடுத்த நாள் இரவு அம்மா பிளாஸ்க்கினுள் தேனீரும் உணவுப் பொதியுடனும் அவ்வீடு சென்று தங்கி விடியற்காலமை வந்து முழுகினாள். அடுத்தடுத இரவுகளில் வேறு சில அயல் பெண்கள் உணவுப் பார்சலுடனும் பிளாஸ்குடனும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பிளாஸ்குகளுக்கான காரணம் அம்மா முழுகுவதில் தெரிந்தது. மிகவும் அசிங்கமாய் உணர்ந்தேன். (சாதி தெரியாது, கதையைப் பாத்தா எங்கட ஆள் மாரித்தான் தெரியுது, நல்ல பெட்டை ஆனா எத்தினையாம் செம்போ எங்கெங்க கலப்போ ஆர் கண்டது? இந்த நேரம் கேக்கவும் ஏலா..)யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் கோர முகத்தையும் மத்தியதர முதலாளித்துவ மனப்பாங்கையும் நான் இன்னொருமுறை கண்டு அதிர நேர்ந்தது பல்கலைக் கழகத்தில். அவர் விரிவுரையாளர். அனுபவமுள்ளவர். பலவழிகளிலும் மார்க்ஸிஸ்ட்டாக தன்னைப் பாவனை பண்ணிக் கொள்ள முனைபவர். அவர் கூறினார் ‘இந்த என்.ஜி.ஓ அறுவாங்களால தான் தங்கச்சி இவ்வளாவும்.., இவங்கள் வேணுமெண்டே செயற்கைத் தட்டுப் பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறாங்கள். அகதிச் சனத்துக்கு தேவைப்படுமெண்டு எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அவங்கள் கொள்வனவு செய்ததால தான் எங்களுக்கு இந்தக் கெதி.” (நாம் இங்கு என்,ஜி.ஓவினை நியாயப்படுத்தவில்லை, ஆனால் அவை இல்லாவிடின் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாகவிருந்திருக்கும். ஆனால் விரிவுரையாளர்களும் உயர்பதவிகளுலிருப்போரும் தமது சுருட்டிக் கட்டி எடுத்த பண வலுவினைப் பயன் படுத்தி இன்னும் நன்றாய் குளிர்காய முடிந்திருக்கும்.) உயர் பதவிகளில் இருப்போரில் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர அனைவருக்கும் இக்காலப் பகுதி ஓர் சிறந்த விடுமுறையாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வடக்கில் நிலவவில்லை என்று தனது முட்டாள்தனமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கும் அரசை விட அபாயகரமான நபர்கள் இவர்கள். இந்த நபர்களுக்காகத் தான்,யாழ் மின்சார சபை கிரிக்கெட் மச் நேரங்களில் மின் வழங்கி உதவி செய்தது,பரீட்சை எதிர் நோக்கும் ஏழை மாணவர்களின் நிலை பற்றிக் கவலைகள் ஏதுமற்று…. (ஆதாரம்: உதயன் பத்திரிக்கை செய்தியும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும்)ஊரடங்கு மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தளர்த்தப் பட்ட போது 15-40 வயதுக்குழுமத்து ஆண்கள் தவிர்ந்த அனைவரும் கியுhக்களில் நின்றனர். மா கையிருப்புத் தீர்ந்து போன குடும்பங்களில் பெரிய இடர் நிலவியது. பல குழந்தைகளாலும் சிறுவர்களாலும் திணிக்கப் படும் புதிய சூழ் நிலையை சீரணிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கின்றனர். ஏன், எதுக்காக என்ற அவர்களது கேள்விகளுக்கு எந்த ஒரு அரசியல் தலமையாலும் பதிலிறுக்க முடியுமென நான் நம்பவில்லை. எனது வீட்டிலும் ஏழு கிலோ மாவே மீதமிருந்தது. பாண் வாங்குவதற்காக ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப் பட்ட சில நிமிடங்களிலேயே அம்மா பேக்கரி வாசலுக்கு சென்று விடுவாள். அவ்வாறு சென்றே எழாம் எட்டாம் ஆளாகத்தான் வரிசையில் இடம் கிடைக்கிறது என்று அலுத்துக் கொள்வாள். ஏழு மணி அளவில் தான் பாண் வினியோகம் ஆரம்பமாகும். பல வீடுகளில் காலைச் சாப்பாடு பத்து மணிக்குத்தான். பாடசாலை செல்லும் பிள்ளையொன்றின் கதியை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கப்பலில் பொருட்கள் அனுப்பப் படுவதற்கு முன், ‘அங்கு பாண் கொடுக்கிறார்களாம் இங்கு பாண் கொடுக்கிறார்களாம்’ என்று பல மைல்கள் நடந்து சென்று பாண் இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினார்கள். பனங்கட்டியுடன் பிளேன் ரீ குடிப்பதற்கும் வெறும் பிளேன் ரீ குடிப்பதற்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் என அம்மா கூறினாள். ஏற்கனவே எனது தேனீரிலும் மாற்றம் தெரியத் தொடங்கியிருந்தது. நெஸ்கஃபேக் குப் பதிலாக சங்கம் கொடுத்த ஏதோ ஒன்றை மாஞ்சருகுப் புகை மணத்துடன் விழுங்க வேண்டியிருந்தது (காஸ் தீர்ந்து நாளாகிறது). வெதுப்பகங்களில் தரும் பாண் வேகாமல் பச்சையாய் இருந்தது. ரோஸ்டர் இருந்தால் தப்பித்தேன். எனக்கு இவற்றைப் பாவித்து உண்ணுகையில் பெரும் சஞ்சலமாகவும் ஏதோ குற்றத்தைச் செய்வது போலவும் இருக்கிறது. மரக்கறிகளை மெலிதாக அவித்து உப்பும் சோஸ்உம் சேர்த்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் எனக்கு அதிக சிக்கல் கள் இருக்கவில்லை. ஆனால், மீன் முட்டையின்றி உணவு உள்ளிறங்காத பல நண்பர்கள் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தனர்.சவர்க்காரங்களுக்கும் டிடர்ஜன்ட் தூள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை எகிறிக் கொண்டேயிருக்கிறது. அவற்றில் எதையாவது ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கி விடுவது பெரிய சாகச நிகழ்வு போல மாலை நேர சந்திப்புகளில் அம்மாமார்களால் அலசப் படும். இவ்வாறே மத்திய தர மற்றும் உயர்தர வகுப்பின் பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் சிக்கலற்று இலகுவில் கடந்து போகக்கூடியதாக காணப்படுகின்றன. மத்திய வர்க்க மக்களுடைய சிக்கல்களையும் துலங்கல்களையும் அறிந்து கொள்ளமுடிந்தாலும் விளிம்பு நிலை மக்கள் குறித்து நாம் என்னத்தை தெரிந்துவைத்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மைக் கொன்று கொண்டிருந்தது. போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலை எமக்குள் சரியாக ஏற்படுத்தி கொள்வதற்கான எத்தனிப்பின் ஒரு பகுதியாகவும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவும் நாம் இடைத்தங்கல் முகாமொன்றுக்கு செல்ல முடிவெடுத்தோம்.——-அல்லைப்பிட்டியின் கண்ணீரும் குருதியும் ஓகஸ்ட் 11க்கு சற்று முன்பு தான் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவற்றின் ஈரம் காய்வதற்குள்ளாகவே மீண்டுமொருமுறை அம்மக்கள் தமது நிலத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட கோரம் நிகழ்ந்திருந்தது.. மண்டைதீவு அல்லைப்பிட்டி மற்றும் பாஷையுhர் ஆகிய இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த  இடம்தான் ஓ.எல்.ஆர் தேவாலய இடைத் தங்கல் முகாம். 61 குடும்பங்கள் 324 பேர், சிறிய மண்டபமொன்றில்.நாம் அங்கு சென்ற காலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த மக்கள் யாருமே எங்களுடன் கதைப்பதற்குத் தயாராக இல்லை என்பதற்கு மேலாக அவர்களுடன் கதைக்க நாம் மிகவும் பயந்து கொண்டிருந்தோம். தலையில், கையில், எதிர்ப்படும் ஒவ்வொருவருமே மருந்துக் கட்டுகளோடிருந்தார்கள். மூக்குச் சளி வழிய வழிய கெந்தித் தட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்குழாம் ஒன்றுடனேயே எம்மால் தொடர்புற முடிந்தது. உடுப்புகள் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. எந்த ஒரு கணத்திலும் முகஞ்சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். தேங்கியிருந்த மழைநீரின் நடுவில் நாய் மலம். (நண்பி சேலையை  நிலத்தில் முட்டவிடாது உயர்த்திப் பிடிக்க வேண்டியதாயிற்று. எனது டெனிம் ஜீன்ஸ் பற்றி நான் கவலைப் பட ஆரம்பித்திருந்தேன். என்ன செய்வது..எவ்வளவு தான் முயன்றாலும் கொள்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க முடிவதில்லை பல நேரங்களில். பலரும் இதை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்று ஒரே குழப்பமாகவிருக்கிறது.)நீண்ட ஹோல், 64 குடும்பங்கள். துணிகளைக் கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பிறிம்பாக சமைக்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. குறிப்பேடுகளை மறந்தும் தொடுவதில்லையென முன்கூட்டியே முடிவெடுத்திருந்தோம். அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தாயை,தந்தையை, சகோதரர்களை அல்லது ஒருசேர அனைவரையுமே பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் எதைப் பேச, சிறுவர்களின் அனர்த்த நிவாரண சிகிச்சை அரங்குகள் குறித்து நாம் கற்ற எவையுமே உதவவில்லை. உளவியலைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாமா என்றிருந்தது… எங்களில் சிலருக்கு இருந்த முன்முடிவுகளுக்கு அதிர்ச்சியுhட்டும் விதத்தில் அச் சிறுவர்கள் கெந்தித் தட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சாகசக் கதை போல விவரிக்குமளவுக்கு யுத்தத்திற்கு அவர்கள் இசைவாக்கமடைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியுhட்டுகிறது.கல்; பணிஸ் பாக்கெட்டுகளை வாங்கி 6 உள்ள சிறிய பொட்டலங்களாக அவற்றைப் பிரித்துப் பாக் செய்து கொண்டு மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் அங்கு சென்றோம். எமக்கு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாணவன் இந்த மார்கழியில் ஒ.எல் பரீட்சை எழுத இருப்பவர். பதிவு செய்யப்பட்டு பின் வெட்கத்துடன் எம்மால் தணிக்கை செய்யப் பட்ட பகுதிகள் நீங்கலாக அவரது உரையாடல் பின்வருமாறு:“நாங்கள் இஞ்சை வரேக்கை இந்த ஃபாதரும் தொண்டு நிறுவனங்களும் நல்லாத்தான் கவனிச்சவை. வேள்ட் விசன் கிட்டடில இருகிறதாலை பரவால்லை..தொடக்கத்தில சமைச்ச சாப்பாடு தந்தாங்கள்..போட்டோ எடுத்திச்சினை. பிறகு ஒண்டையும் காணேல்லை. இப்ப நாம தான் சமைக்கிறது.. சமைக்கிறதுக்கு பிறம்பா இடம் போட்டுத் தந்திருக்கிறாங்கள்..முந்திக் கொஞ்ச நாள் ஃபிரீயாச் சாமான் தந்தாங்கள்.. இப்ப நிலமை தலை கீழ். கோப்பிரட்டியில காசுக்குத்தான் சாமான் தந்தவை – அல்லைப்பிட்டிச் சனங்கள் எண்டு தெரிஞ்சும்.‘………’‘இல்லை.. பிறகு ஆராரோவெல்லாம் போய் கதைச்சு ஒருமாரி பில்லைக் கொண்டு வந்தால் காசு திருப்பித் தாறம் எண்டாங்கள். ஒண்டுமே இல்லாம வந்திருக்கிறம் இவேன்ர பில்லையே காப்பாத்தி வச்சிருக்கி.. (பதிவில் தடங்கல்) பில்லையே காப்பாத்தி வச்சிருக்கிறம்…ஆ. பிறகு ஒருமாரி காசு தந்தாங்கள்..ஒரே அலைச்சல்”இஞ்சை கரையுhர்ச் சனங்களும் தீவிலருந்து வந்த நாங்களும் இருக்கிறம்.  இரவில ஒரே நுளம்பு. இப்பான் கொஞ்ச நாள் முந்தி நுளம்பு நெற்று தந்தாங்கள். ஆம்பிளையள் எல்லாம் அந்த மேடையிலதான் படுக்கிறது. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறதெண்டதுதான் பிரச்சனை. பெம்பிளையளும் பிளையளும் ஏலாவாளியளும் தான் பாவம். அங்கை பாருங்கோ.. அந்த அம்மா செத்துப் போச்சுதெண்டா நல்லது… ஒரு பிரச்சனையும் இல்லை.. பிள்ளை போட்டுது. ஆள் தனிக்கட்டையாப் போனா காட்டியிருக்கிற சாறன் கூட நான் குடுத்து ஒரு அன்ரா கட்டிவிட்டதுதான்.எல்லாத் தொண்டர் நிறுவனக்களுமே சாமான் தர வந்தாலும் எங்களுகுள்ள அடிபிடியளப் பாத்திட்டு திரும்பிப் போட்றாங்கள். உம்மையில, நாங்களும் (அல்லைப்பிட்டி) மண்ண்டைதீவுச் சனமுந்தான் உடுத்த உடுப்போட ஓடி வந்த சீவன்கள். கரையுhர்க் காரரைக் கர்த்தர் காப்பாத்திப் போட்டார். அவைக்கு சாமான் சக்கட்டுகளோட எழும்புறதுக்கு நேரமிருந்தது. எங்களுக்குத்தாறதெல்லாம் தங்களுக்கும் தா எண்டு அவங்களோட மல்லுக் கட்டி ஏலுமே.. எல்லாரும் அடிபடுங்கோ எண்டு விட்டிட்டாங்கள் போல.. பின்னேரங்கள்ள ஊருக்குள்ளால போய்க் கசிப்படிக்கிறது தான் இஞ்ச கொஞ்சத்துக்கு வேலை.. குடிச்சிட்டு வந்தா ஒரே தூஷணமும் கத்துப்படுகையுந்தான். ஃபாதருக்கும் பிடிப்பு விட்டுப் போச்சு, எங்களைக் கலைச்சாக் காணும் எண்ட பொசிசனில தான் ஆள் இப்ப..பள்ளிக்கூடம் ஒரு நரகமண்ணை.. என்ர தம்பி–ஆள் கொஞ்சம் உருளை– இப்ப மெலிஞ்சு போனான். காச்சட்டை வழுகி விழுது. பள்ளிக் கூடத்தில வாத்தி எழுப்பிக் கேட்டானாம் “என்னடா தோப்ளாஸ் வீட்டில பட்டினியே?” எண்டு. இவன் தான் முகாமில இருக்கிறதைச் சொன்னகொண்ண எல்லாப் பெடியளும் திரும்பிப் பாத்தாங்களாம். ஆள் வீட்ட வந்து பள்ளிக்கூடம் போமாட்டன் எண்டு ஒரே சிணுக்கம். நான் முகாமில இருகிறதை பள்ளிக் கூடத்தில சொல்லேல்லை. சேர் மார் கேட்டிச்சினம் முகாம் பிள்ளையள் கையுயத்துங்கோ எண்டு.. நான் உயத்தேல்லை. என்ர இடம் அல்லைப்பிட்டி எண்டு மிஸ்ஸ்உக்குத் தெரியும்.. மிஸ் கேக்க நான் சொந்தக் காரர் வீட்டில இருக்கிறதாச் சொல்லிப் போட்டன். எனக்கு பேரை பதிவமெண்டும் சாதுவா ஆசை.. எதுவாவது தருவினை.. சரியா அந்தரப் பட்டுட்டன்.. (கண் கலங்குகிறது.)இங்கிலிசைத் தவிர எல்லாப் பாடத்துக்கும் 60க்கு மேல எடுப்பனண்ணை. ஸயன்ஸ் நல்லச் செய்வன். சேர் ஏயில பாஸ் பண்ணுவன் எண்டு சொன்னவர். இப்ப பயமாயிருக்கண்ணை. அப்பிளிக்கேசன் போட்டாச்சு. மெடிகல் குடுப்பமோ எண்டும் யோசிச்சன். அப்பா கத்துவார். காலம் பிந்தப் பிந்தப் படிப்புச் செலவு கூடுமாம். ஓடேக்க அப்பா முதல்ல கட்டித் தூக்கினது தம்பீன்ரயும் என்ரயும் புத்தகங்களைத் தான். எல்லாம் மறந்து போச்சு இஞ்சை இருந்து படிக்கேலா.. பேர்சனல் கிளாசுக்கு கன பெடியள் போறவங்கள்.. நாங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறம்.. இரவில கரண்ட் பத்து மணி மட்டும் தான். அதுக்கையும் இஞ்சை பெரிசுகள் லைட்ட நூர் நித்திரை கொள்ளோணும் எண்ணுங்கள்;: லைட் சுவிச்சை வேள்ட் விசன் கன்ரோல் பண்ணுறதால ஒருமாரிப் படிக்கலாம். சத்தியமா உங்களுக்கு விளங்குமோ என்னவோ,என்னால இந்தச் சோதினை பாஸ் பண்ணேலா.. இண்டைக்கு எண்ட இங்கிலிசு வாத்தி சொன்னான் படிப்பில கள்ளம் வந்துட்டுதாம்.. மீசை எங்கெங்கயோ முளைக்க படிப்பும் எங்கெங்கயோ பறக்குதாம்..நம்புறியளோ தெரியா, பச்சைத் தண்ணி பல்லில படாமத் தான் பள்ளிக்கூடம் போறது. ஒருமாரி பள்ளிகூடத்துக்குப் போனா இரண்டாம் பாடமே பசிக்கத் தொடங்கீடும். இன்டேவலுக்கு மற்றப் பொடியள் சாப்பாடு கொண்டாறவங்கள். நான் வகுப்புக்கை இருந்தா தந்திடுவாங்கள் எண்டு நூலகத்துக்குப் போயிடுவன். சில நேரம் உப்புத்தூள் பிரட்டின மாங்காய் வாங்கிச் சாப்பிடுவன். இன்ரேவல் முடியத் தான் வகுப்புக்கை வாறது.”மாணவன் மிகவும் கலங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவ்வாறு துருவுவது பற்றி எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் அம்மாணவன் கதைக்க கதைக்க அவரிடம், உரையாடுதலுக்கான ஆர்வம் இருப்பதையும் உரையாடலின் போது அவரது மன இறுக்கம் மெல்ல மெல்ல தளர்வதையும் உணர முடிந்தது. உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்படுகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையோ வேறு பொறுப்புக் கூறவேண்டிய இடங்களோ இதற்கான ஏற்பாடுகளை திருப்தியளிக்கும் வகையில் செய்ததில்லை. ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிறுவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் விளையாட்டுக்களிலும் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறது. அதுதவிர வேறெந்த உருப்படியான முயற்சிகளும் இல்லை.தமது சுற்றங்களை இழந்து வந்திருப்போரிடம் கதைத்த போது அவர்களால் கைவிடப்பட்டு அழுக அழுக  கவனிப்பாரற்று சிதைந்து இறுதியில் தமது சமயாசாரங்களுக்கு முரணான முறையில் எரியுhட்டப் பட்ட அந்த பாவப்பட்ட உயிர்கள் குறித்த குற்றவுணர்வு மனச்சிதைவின் எல்லைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு ஊறியிருந்ததை அறிய முடிந்தது. (அல்லைப்பிட்டி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்து மக்கள் துரத்தப்பட்ட போது கொல்லப்பட்ட உடலங்களைக் கொண்டுசெல்ல இயலவில்லை. அந்த உடலங்களை அடக்கம் செய்வதற்காக பலமுறை படைத்தலைமையகத்திடம் விண்ணப்பித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில் மாவட்ட நீதிபதியினதும் உயர்மட்டத்தினதும் தலையீட்டால் அழுகிச் சிதம்பிய அச் சடலங்கள் பெறப்பட்டு எரியுhட்டப்பட்டன)முகாமில் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சைவக் குடும்பங்கள் தமது சமய கலாச்சார வழக்காறுகள் தொடர்பில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன. ஓ.எல்.ஆர் தேவாலயம் இளைஞர் கழகத்தால் ஆளப்படுகிறது. கோயில் நிர்வாகம் இந்த அமைப்பின் மூலமாகவே அகதிகளுக்கு இடைஞ்சல் தந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. செபமாலை வழிபாடுகளின் போது கிணற்றடியைப் பாவிப்பதும் கழிவறையை பாவிப்பதும் இந்த அமைப்பினால் தடை செய்யப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பெண்களும் இத்தடைக்கு உட்பட்டவர்களே. விதி விலக்குகள் கிடையா… ஒருமுறை இளம் பெண்ணொருவர் செபமாலை நேரத்தின் போது கிணத்தடியைப் பாவித்தமைக்காக கடுமையான தொனியில் எச்சரிக்கப் பட்டாராம். (வாளியைப் பறித்து வீசியதாகவும் கூறுகிறார்கள்) தீவகம் ஈ.பி.டீ.பீ அமைச்சின் கோட்டை என குறிப்பிடப் படுவது வழக்கம். ஈ.பீ.டீ.பீ யின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் ஏச்சுக்களுக்கு இலக்கு இந்த அகதிகளே. இவர்கள் மீது உள்ளூர் வாசிகள் அடிக்கும் கேலி கிண்டல்களில் இந்த அமைப்பின் பெயரும் இழுபடுவது வழக்கம் என்பதால் இவர்கள் தொடர்ந்தும் மரணபீதியிலேயே இருக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு ஜிம் பிரௌண் அடிகளாரைத் தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களென சிப்பாய்களின் கோபக் கண்ணும் இவர்கள் மீது உண்டு.  கோயில் நிர்வாகத்துக்கும் அகதிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது மதப்பிரிவுகளே என்ற கருத்தும் நிலவுகிறது (ரோமன் கத்தோலிக்கம் எதிர் அ-ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகள்) யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தற்காலிக சமையல் கூடமொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது கோயில் நிர்வாகம் அந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை.  பெரிய கொடுமை என்னவெனில், அகதிகளான பெண்பிள்ளைகளைச் சீண்டவென வரும் நகர இளைஞர் கூட்டம் நேரடியாக சமையல் கூடத்துக்குச் சென்று அடுப்பு நெருப்பிலிருந்து சிகரெட் பற்ற வைக்கிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் விடயத்தில் தேவாலய நிர்வாகம் மிக வெளிப்படையாகவே தலையிடுகிறது. தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களைப் பெற்று பங்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதப்பிரிவு ரீதியான பாகுபாடு பங்கீட்டு நடவடிக்கையின் போது இடம்பெறுகிறது. இதை ஒருவாறு அறிந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தேவாலயத்துக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி அகதிகளை வெளியில் அழைத்து பொருட்களை பங்கீட்டு விநியோகம் செய்கின்றன.13-08-2006 இங்கு வந்த இவர்களுக்கு இந்தக் கட்டுரையை மின் அஞ்சல் செய்;யும் விசையை சொடுக்கும் கணம் வரை (22-11-2006காலை9.30மணி) எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை. குறித்த இடமொன்றில் 20 குடும்பங்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள நிலப்பகுதியில் அமைக்கப் படவிருக்கும் வீடுகளாவது பெருமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களிடம் கையளிக்கப் படுமா என்பதும் சந்தேகமே.இடைத்தங்கல் முகாமின் பிம்பங்கள் என்னுள் மிகுந்த குற்றவுணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிந்து போயிருந்தன. பிளேன்ரீ டம்ளர் சரிந்து கிடக்க, பரட்டைத் தலையில் எறும்பூர உதடுகளில் இலையான் மொய்க்கும் பிரக்ஞையே அற்று உட்கார்ந்து எம்மை வெறித்த பெண்மணியை என்னால் எப்படி மறக்க முடியும்? அன்றிரவு தூங்க முடியாதிருந்தது. பிரிட்டோனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நல்லதொரு தூக்கத்துக்கும் பிறிதொரு சமயம் தற்கொலைக்கும் அது உதவக் கூடும். 1001கூல் ஜோக்ஸ் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். விடிந்த போது குருதி நிறச் சதைக் குவியலாய் சிதறி கிடந்தது சூரியன். திருமாவளவனின்‘முல்லைத் தீவு’ கவிதை நினைவுக்கு வந்தது.—–எனது வீட்டிற்கு வந்து பழைய உடுப்புகளைப் பெற்றுச் செல்லும் செல்லும் ‘மாவிடிக்கிற மனிசி’(பெயர் தெரியாது) தன் பேரனுடன் ஒருநாள் காலை வீட்டிற்கு வந்திருந்தார். தனது மகனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென்பதைப் பிரலாபித்துக் கொண்டிருந்தார். அம்மா சிறிதளவு புட்டு மாத்திரமே கொடுத்தாள். பாத்துக் கீத்து ஏதாவது தரும்படி அப்பெண்மணி அழத் தொடங்கியதும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. அப்பெண்மணியின் பெண்ணின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி விரல் சூப்பி ஒண்டி ஒளிந்து நின்ற அக்குழந்தையின் கண்களைப் பார்ப்பதின்னின்றும் நான் தப்பியோட விரும்பினேன். மிகவும் சங்கடமாக இருந்தது. அப்பெண்ணின் அழுகையொலியில் நான் மிகவும் ஆத்திரமடைந்தேன்.. ஏன் இன்னும் இவர்கள் செத்துப் போகவில்லை என்று. அம்மா வாழையிலையில் கொடுத்த புட்டை தின்னும் சிறுவனது வாயின் அசைவு எனக்கு கதற வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திற்று. நரைத்த தலையுடன், உணவை விழுங்க அசையும் தொண்டை… அப்பெண்மணி ஒரு கவளம் பிட்டிற்கு ஒரு மிடறு குடித்தார். பட்டினியில் தொண்டை வறண்டு போயிருக்கும். சகிக்க முடியாதிருந்தது. கடவுளே.. ஏன் இவர்கள் உயிருடனிருக்கிறார்கள்..அம்மா சில மாங்காய்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் கொடுத்தாள். தணலில் புரட்டி புரட்டி சுட்டெடுத்த மரவள்ளிக் கிழங்குகளை எவ்வாறு உண்ணுகிறார்கள்? வயிற்றைப் பிசைந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. செய்து என்ன என்பது போலவுமிருந்தது.மெல்ல மெல்ல பேரவலத்துக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். நாய்க் குரைப்புகளுக்கு பழக்கப் பட்டுப் போனது போல், ஷெல் சத்தத்துக்கு பழக்கப்பட்டது போல், இனிப்பற்ற தேனீருக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது போல், இந்த உடலை மரணத்துக்கும் சிதைவிற்கும் தயார் செய்வதெப்படி?ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி – என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற அரச வகைப் பாட்டினுள் கீழ் மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறது? அது குறித்து என்னால் யாது செய்ய முடியும். வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன்.. இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளி, ஈரவிறகுப் புகை, நாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள்.. கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள்..அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதினித்துதுவம் செய்யப் படக் கூடிய பாடுகளல்ல அவை. அவர்களுடைய பாடுகளை அதன் வலியை, கசப்புகளை அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் நம்பவில்லை.—-பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் கிடைத்த போது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவை குழப்பத்தில் மட்டுமே முடியும் என்பதை மக்கள் வெகு தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆனால் ஒரு நப்பாசையில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனாலும் பெருட்களுக்காக அலையும் எமது நாளாந்த விதியிலிருந்து நாம் பிறழ்ந்துவிடவில்லை. ஊரடங்குத் தளர்வு நேரம் காலை 5மணி தொடங்கி மாலை 6மணியாக அதிகரித்த போதும் சரி, மின்சார விநியோக நேரம் கூட்டப் பட்ட போதும் சரி மக்கள் சந்தோஷப் படும் படியாக அவை இருக்கவில்லை. பாடசாலைகள் மீளவும் தொடங்கியிருந்தன. கொலைகளும் நடந்து கொண்டிருந்தன – பயங்கரமான விவரிக்கவே அச்சமூட்டும் கொலைகள். தொழில்நுட்ப நேர்த்தியுடன் லாவகமாக கொலை செய்யப் பட்ட பிரேதமொன்றை காண நேர்வதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை ஒரு நாளும். ஏதோவோர் சந்தில் அகப்பட்டு விடுகிறது, குருதி வழிய இறந்து கிடக்கும் மனித உடல். கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப் பட்டவுடன் ப.நோ.கூ சங்கக் கிளைகள் தமது வினியோக நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளாளர்களும் உதவியாளர்களும் தெய்வங்களாக தம்மைப் பதவி உயர்த்திக் கொண்டனர். ஏச்சு வாங்கியபடி மக்கள் மந்தைகள் போல வரிசையில் நின்றனர் — 6,7மணித்தியாலங்களாகளாக, மழைக் குளிரில் நடுங்கியபடி. நிறுவைகளில் நடக்கும் குளறுபடிகளும் பாரபட்சங்களும் நிகழ்கின்றன என்று தெரிந்தும் மக்கள் தமது தாய் மொழியாம் ‘ம்’மைத் தவிர வேறெதையும் பேசத் தயாராக இருக்கவில்லை. மந்தைகள் போல வரிசையில், குழந்தைகளும் பெண்களும்..பிற்பாடு விதானைமார்களுடனும் கிளையுடனும் பல பத்திரிக்கையாளர்களும் முற்போக்கு நோக்குடையோரும் முரண்படத்தொடங்கிய பின்னரே இந்த நிலமைகள் ஓரளவு சீராயின. எல்லாளன் படை துண்டுப் பிரசுரங்களில் சங்கக் கடைகளில் சுருட்டும் நபர்களை எச்சரித்ததை அடுத்து குறிப்பிடத் தக்க ஒழுங்கு வந்து சேர்ந்தது.எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு கிளை வாசல்களில் நிற்பதென்பது எல்லாருக்கும் முடிகிற காரியமாக இல்லை. அரசு கிள்ளித் தெளிக்கும் இப் பொருட்களுக்காக நீண்ட நேரம் காத்துக் கிடந்து பின்பே சமையலைத் தொடங்கும் வீடுகளும் உண்டு. மக்கள் மிக மோசமாக ஏமாற்றப் படுவதை தட்டிக் கேட்க முனைந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு ப.நோ.கூ சங்கம் தமது பிழைகளை வெளிப்படையாக ஆனால் திமிராக வெளிச்சமிடக் கூடிய கடிதமொன்றை அப் பத்திரிக்கையாளரை இழிவு செய்து அனுப்பியிருந்தது. சங்கக் கடை ஊழியர்களும் தமக்குக் கிடைத்த புதிய முக்கியத்துவத்தை இழக்கத் தயாராக இல்லை. நடைமுறை தொடர்பான மிகக் குழப்பமான அறிவுறுத்தல்களை பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன.  உயர்- மத்திய வகுப்புக்கே மாத்திரம் விளங்கக் கூடிய மொழியிலமைந்த அவற்றை சாதாரண மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. மக்கள் ஆவலாதி பட்டு ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே விடிவதற்கு முன்பே பங்கீட்டு அட்டைகளுடன் கிளை வாசலில் வரிசை கட்டுகிறார்கள். கிளை 9 மணிக்குத் திறந்து 10 மணிக்கு தனது விநியோகத்தைத் தொடங்குகிறது. வரிசையில் நிற்கும் அரைவாசிப் பேருக்கு ஏதோ சிலது கிடைத்து விடுகிறது. கையிருப்பு முடிந்த நிலையில் ஏனையோர் தமது கைகளில் மேலும் கொஞ்ச இருளைக் கொண்டு சொல்கின்றனர் – இருளும் பசியும் நிறைந்த தமது வீடுகளுக்கு. பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்களது கார்ட்டுகள் செல்வாக்கினால் முதலிலேயே பொருட்களைப் பெரும் விதத்தில் வைக்கப் பட்டுவிடுகின்றன. கையிருப்பு முடிந்ததாய் அறிவிக்கப் பட்டவுடன் இருண்ட முகத்துடன் வெற்று மாட்டுத்தாள் பைகளை அசைத்த படி வீடு செல்பவர்கள் ஏழைப் பெண்களும் சிறுவர்களுமே. இன்னமும் மரவள்ளிக் கிழங்கு தான் அவர்களுக்கு உணவு. அரசு கிள்ளித் தெளிப்பதில் ஏதோ ஒன்றிரண்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அவர்களிடம் உணவைத்தயாரிப்பதற்கான உபபொருட்களோ (உப்பு, தூள்), சமைத்துண்பதற்கான விறகோ அவர்களிடம் இல்லை. கொடுத்த கோதுமை மா வேறு மிகவும் பழுதடைந்து பாவனைக் குதவாத நிலையிலிருந்ததாய் முறைப்பாடுகள் கிடைத்தன. அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் அரிசியும் மாவுமே திருப்திகரமாக வழங்கப் பட்டிருக்காத நிலையில் நல்லை ஆதீனம் (மனிதப் பேரவலத்துக்கான அறிகுறிகள் தோன்றியிருந்த போதும் சரி, சக மதத் தலைவர்கள் அரசியல் தலமைகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய போதும் சரி பேசாமல் உண்டியல் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அதே ஆதீனம் தான்), கார்த்திகை தீபத் திருநாளுக்கான விசேட பொருட்களை வலியுறுத்துகிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை விளங்கிக் கொண்டவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே சொந்தக் காரர்களை வைத்திருப்பது வெள்ளாள உயர்குடியும், சில மேல்தட்டு கத்தோலிக்கர்களும் தான் என்பது புரியுமென நினைக்கிறேன். அவர்களே அஞ்சல் மூலம்  பொருட்களைப் பெற முனைந்தனர். இது அவர்களுக்கு வந்திருந்த பொதிகளின் உள்ளடக்கத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். பருப்புகளோ வேறு பாதுகாத்து வைக்கக் கூடிய உலர் உணவுகளோ அவற்றுள் அரிதாகவே தென் பட்டன. கட்டிப் பால் டின்கள், உருளைக்கிழங்கு, கடுகு ,சீரகம் இவ்வாறன பொருட்களே அதிகளவிலான பார்சல்களில் இடம்பிடித்திருந்தன. குழந்தைகளுக்கான விசேட உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளும் கணிசமான அளவில் மத்திய தர வர்க்கத்துக்கும் உயர்குழாத்துக்கும் இந்த முறையில் கிடைத்தது. எனினும் பலருக்கு பார்சல்களில் உருளைக்கிழங்குகள் சிதைந்தும் பழுதடைந்தும் வந்தமை குறித்து விமர்சிக்க இடமிருந்தது. இக் குருhர நகைச்சுவையை எங்கு சென்று கூற? இந்த நிலையில் தான் இராணுவம் தனது உத்திகளில் ஒன்றான கட்டுப்பாட்டு விலைக் கடைகளைத் திறந்தது. சாமான் குடுக்கிறாங்களாம் எண்டு கேள்விப் பட்டகொண்ண ஆவலாதிப்பட்டு பசியுடன் வந்து எப்ப கிளிப் களட்டி எறிவாங்களோ என்ற பயத்துடன் வரிசையில் நின்று அவமானத்துடன் பொருட்களைப் பெற்றுச் செல்லும் பஞ்சமர்களை படம் பிடித்து வெட்கமின்றிப் தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறது இராணுவம். ‘யாழ்ப்பாணத்தைப் பாதுகாத்து தந்த’ தமக்கு யாழ்மக்கள் நன்றி கூறுவதாக அலங்கார வளைவொன்றையும் நகர் மத்தியில்  துளிகூட வெட்கமின்றித் தானே நிறுவிக்கொண்டது.  இக்கடைகளுக்கு வந்து பொருட்களைப் பெற்று செல்லும் மக்களுக்கு பல எச்சரிக்கைகள், மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களது சமூகப் பெறுமானம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது (ஆமீன்ரய ஊம்புற துரோகியள்). உயர் வர்க்கம் வீட்டிலிருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மத்திய தர வர்க்கம் ப.நோ.கூ சங்கங்களில் செல்வாக்கு மூலம் கிள்ளித் தெளிக்கப்படும் பொருட்களில் கணிசமானதைப் பெற்றுக் கொள்கிறது. இராணுவத்தினரது கடைகளில் இருதலைக் கொள்ளி எறும்புகளாக அவமானத்துடன் நிற்பவர்கள் ஏழைச் சிறார்களே.(அரசால் கண்துடைப்பாகக் கிள்ளித்தெளிக்கப் படும் பொருட்கள் அறவே போதாத நிலையில் தென்மராட்சிப் பிரதேச சங்கக் கிளைகள் குலுக்கல் முறையில் பங்கீட்டு அட்டைகளைத் தெரிவு செய்து பொருட்களை வினியோகிக்கின்றன. – உதயன்)  —-மாணவர்களிடையே  தோன்றத் தொடங்கியிருக்கும் முனைப்புகள் 80களை நினைவுக்கு கொண்டுவருவதாய் அமைகின்றன. வீதிகளில் இளைஞர்களைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கும் இராணுவ நடமாட்டம். வீட்டில் நாய்கள் பூனைகள் போல எமது இளைஞர்கள். பல சிப்பாய்களுக்கு மாணவர்களைச் சீண்டி கோபப் படுத்துவது பிடித்தமான பொழுதுபோக்காகவோ மாறிவிட்டது.  அடிப்பார்கள்.. காரணம் தெரிவதேயில்லை. மறித்து மிக விஷமத் தனமான கேள்விகளைக் கேட்பார்கள். சேர் போட்டு கதைத்தால் விட்டுவிடுவார்கள். இல்லாவிடில் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு கையை உயர்த்தியபடி முழந்தாளிட்டு நிற்கச் சொல்வார்கள் வீதியிலேயே… மாணவிகள் அவர்களைக் கடக்கும் நேரம் அவர்களைத் துவக்குகளால் தட்டி உரக்கச் சிரிப்பார்கள். அடோ. நாய் இப்பதங்கள் தான் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழனுக்கும் வழங்கப் பட்டிருக்கும் பெயர். பாடசாலைகளுக்குள் கூடப் புகுந்து அட்டுழியம் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது தான் விளங்கப் போகிறதோ தெரியவில்லை. ‘பொங்கி எழும் படைகளைத்’ உருவாக தாம் துணை புரிகிறோம் என்று. ‘முறிந்த பனை’ தொடங்கி சமீபத்திய புஷ்பராஜாவின் பதிவு வரை வாசித்து நம்முடன் தீவிரமாக கதையாடும் மாணவத் தோழர்களே ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்து மீதான அதிருப்தியையும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறை அரசியல் மீதான தமது சாய்வையும் வெளிப்படுத்திய  போது ஆயுதக்கலாச்சாரம் தொடர்பான நமது பார்வையை மீள்-பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நீண்ட போர்க் கலாச்சாரத்தின் பின்னான புதிய தலைமுறைக்குக் கூட எம்மிடம் பரிசளிப்பதற்கு யுத்ததைத் தவிர வேறேதுமில்லை. இருதரப்பும் மக்களுக்காக யுத்தம் புரிகிறார்கள். மக்களுக்கான யுத்த்தத்தை மக்களின் மீதே நடாத்துவதைத் தவிர வேறெதையும் இத் தலைமைகள் இதுவரை செய்ததில்லை.வன்முறை அரசியலின் மீது பூசப்பட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாய்ப் படுகின்றது. குருhரம் வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரசனை மனோபாவத்துடன் பண்ணப் படுகின்றன. எரியுhட்டிக் கொல்வதும், கதறிக் கதறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய கொலைத் தொழில் நுட்பங்கள்.  மனித விழுமியங்களும், ஜனநாயக உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூடக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் இருந்து நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கிழிக்க.. 
————————————————————————————————————ஆமிரபாலி எழுதியது போல நிச்சயமாக இது ஓர் சாம்பல் தேசம் தான். ஒவ்வொரு கணத்திலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடலங்களைத் தயாரிப்போரின் ஆட்சியின் கீழ் என்பதை உணர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். எம்மைப் பணிய வைத்துவிடலாம் எனத் திட்டங்களைத் தீட்டியவாறிருக்கிறது சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு. மறுபுறம் தமிழ் அரசியல், கருத்தியல் வெறுமைக்குள்ளும் வன்முறைக்குள்ளும் மூழ்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் திக்கற்று நிற்கிறார்கள். தமிழ் அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முஸ்லிம் முனைப்புகள் கூட அம்மக்களது பாடுகள் பற்றிய உண்மையான அக்கறையுடன் இல்லை. அதனினும் மேலாய், வன்முறையை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் தேசம் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதாய்த் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள் மீதுதான் வரலாற்றுக் தவறுகளின் மீள் நிகழ்த்துகை சாத்தியமாகிறது.வரலாற்றின் பெயரால் யுத்தம் மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப் பட்டவாறிருக்கிறது.எமக்கான யுத்தத்த்தைப் புரிவதாய், எம்மைப் பாதுகாப்பதாய்க் கூறியபடி அதிகார மையங்கள் பண்ணிக்கொண்டிருப்பது என்ன என்பது பற்றியே நாம் கதையாட விரும்புகிறோம். இந்தக் கதையாடலினூடு அதிகார மையங்கள் தவிர்ந்த விளிம்புகளது பாடுகள் என்றுமே பொதுவான ஒருமைப் பாடுடையவை என்பதையும் இந்த விளிம்புகளிடையே சகவாழ்வு சாத்தியம் என்பது குறித்தும் வலியுறுத்த விரும்புகிறோம்.வன்முறையைத் தீர்வெனத் திணித்தவாறேயிருக்கின்றன அதிகார மையங்கள். வன்முறையின் மூலம் நாம் எவ்வாறு புரிந்துணர்வை அடையப் போகிறோம்? 
–முரண்வெளி- 

அமௌனன் சிறுகதை 
அகதி வாழ்வில்அருவருப்பொன்றும்அவ்வளவாயிருந்ததில்லை…வாயுள் சலங்கழித்தசமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியைகடித்தெடுக்க முடியாதஇயலாமையை விட….            காருண்யன் 
வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்… 
நான் தீபன் ராஜ் மூண்டு பேரும் ஒரு செட். நாவல் பழம் புடுங்க முனியப்பர் கோவில் காட்டுக்கு போறதிலயிருந்து பள்ளிக்கூடம் போய் வாறது வரை எங்களை யாரும் தனித்தனியாப் பாக்கேலா… அவ்வளவு ஒட்டு. நாங்கள் செய்யுற குறளி விஷயங்கள் கனக்க இருக்கு. கெட்டப்போலால தியாகண்ணை வீட்டு மாமரத்தில மாங்காய் அடிக்கிறது வீட்டில சொல்லாமக் கொள்ளாம நீச்சல் பழகிறது பேப்பர் ரொக்கட் செய்து ரோட்டில போற வாற ஆக்களுக்கெல்லாம் விடுறது எண்டு நிறைய. ஆனா அதெல்லாத்ததையும் விட போன வருசம் நாங்கள் தெரிஞ்சு கொண்ட விசயம் சூப்பரான ஒண்டு.போன வருசம் நாங்கள் ஆறாம் ஆண்டில இருந்தம். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கேக்கை தான் ஆமி மாமாக்கள் எங்கடை ஊரை பிடிச்சவை. தீபன் வீட்டுக்கு முன்னால இருக்கிற யோகமன்ரி வீட்டை வைபோசா எடுத்து சென்ரிப் பொயின்ற் ஒண்டும் போட்டிட்டினம். கிட்டடியில கூட யோகமன்ரி சித்திராக்காவுக்கு கலியாணம் தள்ளிப் போகுது, சீதனம் குடுக்க வீடும் காணியும் வேணுமெண்டு ஆமிப் பெரியவரிட்ட கடிதம் குடுத்தவா.ஆமி மாமாக்கள் வந்த புதிசிலை அவையின்ர தொப்பியளையும் துவக்குகளையும் கண்டு நாயள் வெருண்டது போலவே நாங்களும் பயப்பிட்டுப் போனம் – ஆனால் – போகப் போகப் பழகிற்றுது. காலமையில ரோந்து போகேக்க எங்களைப் பாத்து சிரிப்பினம். ஆமி மாமாக்கள் கன்ரீன் ஒண்டையும் இப்ப திறந்து போட்டினம். இப்பெல்லாம் அவையக் கண்டா நாயள் மாத்திரம் குலைக்கும்.தீபன்ட அம்மா தூரத்து ஊரொண்டில ரீச்சராயும் அப்பா வீ.சீ கிளாக்காயும் இருக்கினம். என்ர அப்பாவும் தீபன்ட அப்பாவும் வெளி நாட்டில இருக்கினம். என்ர அம்மா லைபிறறியனா இருக்கிறா.நான் ஆறாமாண்டுக்கு வந்த புதிசில பயப்பிடாம இருக்க காட்டித்தந்தது தீபன் தான். ஆனா கொஞ்ச காலத்திலேயே அவன் என்னை விட்டு பிரிஞ்சு போற மாதிரி – அதான் படங்கள்ல வருமே அது போல- இருந்துது.தீபன்ட அம்மா சுயிங்கம் சாப்பிட விடுறேல்லை ஆனா அவன் நிறய சுயிங்க ஸ்டிக்கர் வைச்சிருந்தான். அதயெல்லாம் காட்டி சேட் கொலர தூக்கி சண் காட்டுவான். போதாக்குறைக்கு முந்தின மாதிரி பட்டமேத்தவோ கெந்திதட்டு விளையாடவோ அவன் வாநறேல்லை. முந்திரியம்பழம் ஆயக்கூட வாறேல்லை. எனக்குச் சரியான கவலையாவும் எரிச்சலாவும் இருந்துது. இவனிட்ட கண்ணக் கட்டி கோபம் போட்டா அன்டனி, ஜீட் ஆக்களோட தான் பழக வேணும். அவங்களோட கூட்டு சேந்தா அணில் முயல் வளக்கிறது சிப்பி சோகி சேர்க்கிறது எண்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா தீபன் வீட்டில போய் அண்டிக்குடுத்தானெண்டால் திரும்ப மஞ்சள் தண்ணியும் உப்பு பிரம்பும் தான். கோபமா நேசமா எண்டு விரல் நீட்டினா நேசம் எண்டு தான் சொல்லுறான். ஆனா கதைக்க வேணுமெண்ட அவற்ற கெண்டிசனுகளுக்கு ஒப்ப வெணுமாம். அவருக்கு நான் ஏழு வயசு குறச்சலாம்  அவருக்கு சிங்களம் தெரியுமாம் (எக்காய்  தெக்காய் துனாய்  கத்தா கறண்ட எப்பா) எனக்குத் தெரியாதாம்.அதால மரியாதை தர வேணுமாம். எனக்கு எரிச்சல் எரிச்சலா வந்துது.ஆனா எனக்கும் சிங்களம் படிக்க விருப்பம்.அப்ப தானே இவனை மடக்கலாம்.எரிச்சலை அடக்கிக்கொண்டு எங்க தீபண்னா சிங்களம் படிச்சனீங்கள் எண்டு மரியாதயாக் கேட்டன்.நான் அண்ணை போட்டகொண்ண ஆளுக்குப் புளுகம் தலைக்கேறிப்போட்டுது. சனிக்கிழமை தன்ர வீட்ட வந்தா எல்லாம் சொல்லுறதா சொல்லீற்றுப் போயிற்றான்.சனிக்கிழமையண்டு அவன்ட வீட்ட போனன். தீபன் எண்டு கூப்பிட உன்னின நாக்கை அடக்கி “தீபனண்ணா” எண்டு கூப்பிட்டன். “கேட் திறந்து தான் கிடக்கு திற்ந்து கொண்டு வா ” எண்டு பதில் வந்துது.கேட் கிறீச் சத்தம் போட எனக்கு பயம் பயமா வந்துது. தீபன் வாசல்ல ஒரு மாதிரியா சிரிச்சுக்கொண்டு நிண்டான்.உள்ள கூட்டிக்கொண்டு போய் கொம்பாசுக்குள்ளால நூறு ரூவாய்த் தாள் எடுத்துக் காட்டினான்.பிறகு விளயாட்டுத் துவக்கு கண்டோஸ் மின்னி எண்டு கனக்க காட்டினான். நான் எல்லாத்தையும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்தன். அன்ரி கண்டாலும் எண்ட பயத்தில எல்லாத்தயும் ஒளிக்கச் சொன்னன். அவன் அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றினம் எண்டும் மத்தியானச் சாப்பாடு பாண் தான் எண்டும் சொன்னனான். 
“எங்காலயடா தீபன் உனக்கு இவ்வளவு சாமான்?” எனக்குத் தெரிஞ்சு கிட்டடியில வெளிநாட்டுச் சொந்தக்காரர் ஒருத்தரும் வரேல்லை.முறைத்தான்.‘போடா… புண்டை….”‘அன்ரி தீபன் தூஷணம் கொட்டுறான்” தீபன் கோள்மூட்டி எண்டு திட்டி தலயில குட்டினான். வீட்டில ஆருமில்லை எண்டது திரும்பவும் ஒருக்கா விளங்கிச்சுது.கண் எல்லாம் கலங்கி சொண்டு துடிக்கிறதப் பாத்து தீபன் சமாதானமா இறங்கி வந்து ‘சரி இனிமெ இப்பிடி அண்டிப் பழகாத‘எண்டான். கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த்தான்.பிறகு உள்ள போய் மயிலிறகு கொண்டு வந்து தான் சொல்லப்போறதை ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினான். பிறகும் அவன் பேசாமலே இருந்தான். என்னைப் பாத்துக்கொண்டே அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்ச படி கிட்ட வந்து “நீ ஐஞ்சு ரூவாய்ச் சூப்புத்தடி வாங்கிச் சாப்பிடுறனியெல்லே……..‘“ஒமோம் அதுக்கென்ன”“அதுமாதிரி…..அதுமாதிரி…ஆமி மாமாக்களின்ர குஞ்சாமணியச் சூப்பி விட்டா…இவளவும் கிடைக்கும்”எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு “ச்சீ! மூத்திரம்” எண்டு சொன்னன்.“இல்லையடா மடையா!.. சின்னப்பிள்ளை மாரிக் கதைக்கிறாய். ஆமி மாமாக்களின்ர மணி எங்கட மாதிரியில்லை. அது பெரிசு ..இதரைப் பழமளவு இருக்கும் . அதைச் சுத்தி மயிரெல்லாம் இருக்கும் மூத்திரமெல்லாம் வராது.”எனக்கு அந்த வித்தியாசத்தப் பாக்க வேணும் போல கிடந்துது. அதெப்பிடி.. இவன் புருடா விடுற ஆள்த் தானே. அதில மாத்திரம் ஆள் விண்ணன்.‘பொய் சொல்லாதடா..‘எண்டு கத்தினன்.‘டா‘ போட்டத இப்ப அவன் பெரிசு படுத்திற மாரித் தெரியேல்லை. ‘நீ வேணுமெண்டா ஜான் அண்ணையக் கேட்டுப்பார். அவரும் சென்ரிக்குப் போறவர். அவர் சொல்றார் அதுக்குப் பேர் குஞ்சாமணி இல்லயாம் உண்மையான பேர் சுண்ணியாம்” ‘அரியண்டமாயிருக்காதோ?” நான் மெல்லிய குரல்ல கேட்டன்.‘முதல்ல அப்பிடித் தான்.. சூப்பச் சொல்லி பண்டா மாமா வெருட்டினவர்.துவக்கால சுடுவம் எண்டு கூட ஒரு மாமா சொன்னவர்.ஆனா பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் – அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.‘ தீபன் சொல்லச் சொல்ல எங்கும் சரியான விருப்பம் வந்துது. எவ்வளவு நல்லாயிருக்கும் சுயிங்கம் ஸ்டிக்கர் ரொபி நூறு ரூவாய்த்தாள்………..ஒருக்காப் போய்ப் பாப்பம்.         பதினொரு மணியப்பிடி தீபன் ரோட்டடிக்குப் போய் தெரிஞ்ச முகங்கள் நடமாடுதோ எண்டு ரெக்கி பாத்தான். ஒருத்தரும் இல்லாத ஊட்டில சடாஸெண்டு பொயின்ற்றுக்குள்ள போட்டான் – என்னையும் இழுத்துக்கொண்டு. நான் முழி முழியெண்டு முழிச்சுக்கொண்டு நிண்டன். ஆமிக்கார மாமா என்னை ஆரெண்டு தீபனிட்ட கேட்டிச்சினம். ‘தீபன் மை பிரெண்ட்‘ எண்டு இங்கிலிசு பேசினான். ஆமி மாமா என்ர கொட்டயப் பிடிச்சு நசிச்சு ‘ஆ! குண்டு பொம்.” எண்டார். தீபனும் மற்ற மாமாவும் விழுந்து விழுந்து சிரிச்சினம். தீபன் அவரை பண்டா அங்கிள் எண்டு கூப்பிடச் சொன்னான். பண்டா மாமா அதில நிண்ட இன்னொரு மாமாட்ட  என்னமோ சொல்லிட்டு எங்கள் இரண்டு பேரையும் பங்கருக்க கூட்டிப்போனார். தீபன் சொன்னது மாதிரியே அவற்ற குஞ்சாமணி வாழைப்பழம் மாதிரிப் பெரிசு தான். ஆனா அவற்ர நிறம் சிவப்பு ஏன் மணி மட்டும் கறுப்பு எண்டது தான் எனக்குப் பெரிய சந்தேகம். அதின்ர மணம் எனக்குப் பிடிக்கவே இல்லை. மாமா கொஞ்சினது தடவினது எல்லாம் நல்லா இருந்துது. ஆனா கடைசியா மணியிலேர்ந்து வந்தது தான் என்னகுப் பிடிக்கேல்லை.உண்மையாவே அரியண்டமா இருந்துது. துப்பிப் போட்டன். பண்டா மாமா கன்னத்தில தட்டிச் சிரிச்சுப் போட்டு ஒதுக்கப் போய் சூச்சா விட்டார். எனக்கு ஒங்காளம் ஒங்காளமா வந்துது. தீபனப் பாத்து நெருமினன். ‘என்னடா இது மூக்குச் சளி மாதிரி…..ச்சீ..!‘ அவன் தனக்கும் முதல்ல இது போலத்தான் இருந்தது எண்டு சமாதானம் சொன்னான். எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆனா ஆமி மாமா ஐஸ்கிறீமுக்கு காசு தந்தகொண்ண கோபமெல்லாம் காணாமப் போட்டுது.இதுக்குப் பிறகு கிழமையில இரண்டு மூண்டு தரம் நான் சென்ற்றிக்குப் போகத் தொடங்கீட்டன். ஒரு நாள் பண்டா மாமா சிங்களத்தில என்ர பேரை எழுதித்தந்தார். வகுப்பில அத்தனை பேருக்கும் காட்டி சேட் கொலரைத் தூக்கி விட்டன். தீபனை விட நான் நல்ல பாஸ்ராவே சிங்களம் படிச்சிட்டன். பண்டா மாமா சில நேரம்தான் சூப்பச் சொல்லுவார். பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர்.  அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா – குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்…. நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன், 
குருளுப் பஞ்சோ குருளுப் பஞ்சோகோய்பத யன்னே..கொட்டல கொட்டல தான்ய கபலிகன்னட்ட யன்னே. 
புஞ்சிலன் பட்டியோ புஞ்சிலன் பட்டியோகொய்பத யன்னேகொந்தட்ட இதுனு அம்பக்கொட்டியக்கன்னட்டயன்னே 
எலுபட்டியோ எலுபட்டியோகோய் பதயன்னேநுக கொல கலாத்துறுன்கன்னட்ட யன்னே 
புஞ்சி பபோ புஞ்சி பபோகொய்பத யன்னேஸ்கோலட்டக் கொஸ்பாட கியகரனட்ட யன்னெ *நானும் தீபனும் இதயெல்லாம் ராஜிட்ட சொல்ல அவன் கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டே கிணத்தடிக்கு குளிக்க வாற ஆமி மாமாக்கள் பற்றிச் சொன்னான். அசுகிடாக் கள்ளன். நிறய விளையாட்டுச் சமான்கள் ரொபியள் கண்டோசுகள். எங்களுக்குச் சரியான சந்தோஷம்.ஆமி மாமாக்கள் ஜான் அண்ணாவுக்கு நிறய வீடியோ கொப்பியள் குடுத்திச்சினம். ஜானண்ணா அதயெல்லாம் எங்களுக்கும் போட்டுக் காட்டினான்.ஆம்பிளயளும் பெம்பிளயளும் உரிஞ்சாங் குண்டியோட வருவினம். அவை செய்யுற ஒவ்வொண்டுக்கும் ஜானண்ணா பேர் சொல்லித் தந்தான். அவனோட ஓ.எல் படிக்கிற அண்ணை மாரும் வந்திருந்து படம் பாக்கிறவை. அந்தப் படங்கள்ல வாற மாதிரி ஜானண்ணா ஒருநாள் ஆட்டிக் காட்டினான். எங்களுக்கு அது ஏலாமப் போட்டுது. நாங்கள் சாமத்தியப் படேல்லை எண்டு எல்லாருஞ் சேந்து நக்கலடிச்சாங்கள்.எங்களுக்கு கோபம் கோபமா வந்துது. ஆமிக்கார மாமாட்டப் போய் அவனச் சுடச் சொன்னம். ஆமி மாமா சிரிச்சிட்டு எல்லருக்கும் சுயிங்கம் தந்தார். அவர்லயும் எங்களுக்கு கோபம்.இந்தக் கோபம் பண்டா மாமா வெளிசக் கூடுகளைத் தந்த கொண்ண எந்தப் பக்கமா போச்சுது எண்டே தெரியேல்லை. வெள்ளை நிறத்தில நல்ல வடிவான வெளிச்சக்கூடுகள்.சரி அதை விடுங்கோ. விஷயத்துக்கு வருவம் உங்களுக்கு வெள்ளைக்கலரில  வடிவான வெளிச்சக் கூடுகள் வேணுமெண்டா அடுத்த சனி தீபன் வீட்ட வாங்கோ………நாங்கள் உங்களை ஒரு இருண்ட பங்கருக்கை கூட்டிப் போவம்.அதுக்குப் பிறகு வடிவான வெள்ளை நிற வெளிச்சக்கூடுகள் உங்களுக்குக் கிடைக்கலாம், 

*********************************–அதீதன்–வெளித் தோன்றும் மறுபாதியின் கதை. 
நிறப்பிரிகை, கிரணம் போன்ற இதழ்கள் சமப்பாலுறவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்ததன் பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக மாத்திரம் அற்முகமாகியதால் சமப்பாலுறவு வெளி குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் என்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய-தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க முடிகிறது. 
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அவ்வுறவு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது எதிர்வினை எதுவாக இருந்தது? 
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையினைக் கொண்ட ‘Funny Boy’ வெளிவந்து எத்தனை வருடங்கள்? ஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர்.‘Funny Boy’இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே.கேயினால் எழுதப்பட்டு மு.பொவினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகரில் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறும் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. எனவே, நாவல் கொண்டிருந்த சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக்குக் காரணம் என ஊகிக்க முடிகிறது. 
மௌனம். மௌனம் மேலும் மௌனம். மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி. கொஞ்சமாவது உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து காத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது இக்கட்டுரை.  

1 
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தாலும், இந்திய/இந்துத்வப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மை மிக்க சமூகக்கூறுகளை தனது உடைக்கவியலா மௌனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறுமரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும்,சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா-எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறுமரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, போன்ற பெருங்கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ,சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸ்யாயனரையே யாரும் கண்டுகொள்வதில்லை. 
மத்திய காலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki – I – bari பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக்காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. 
இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே-1942இல்-உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf ( The Quilt ) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக்காரிக்கும் இடையிலான பெண்சமப்பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley’s Lover – D.H.Lawrence, Ulysess – James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான  தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது. 
நீண்ட கால மௌனத்தைக் கிழித்துக் கொண்டு வெளிவந்த கமலாதாஸின் My Story பதின்மப் பருவப் பெண்சமப்பாலுறவைக் காட்டியது. இளம் ஆசிரியை மீது தனக்கு ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவு செய்திருந்தார். 
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்து ஞாபகமில்லை (இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக நாவலான Strange Obsession (Shopa De 1993), அதன் பெண்சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை. 
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம்பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.  
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சனைகளே இங்கு ஆராயப்படுகிறது) 
மிகக்குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகை, சுயத்தைக் கட்டமைத்த இனத்துவ, காலனிய, பின்காலனியக் கதையாடல்கள், இந்தியப் பெருங்கதையாடலில் சிக்குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி(Prafulla Mohanti), அகா ஷாகிட் அலி(Aga Shahid Ali),அன்ட்ரியூ ஹார்வீ(Andrew Harvey), சுனிட்டி நம்ஜோஷி(Suniti Namjoshi), விக்ரம் சேத்(Vikram Seth), ஷ்யாம் செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த முடியும். 
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர்.சுய அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத் பிரதிகள். 
நாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில்  வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ட்ரியூ ஹார்வியின் One Last Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழியிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான ‘Through Brown Eyes’ இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய்கிறது. 
சுனிட்டி நம்ஜோஷியின் Feminist Fables தொன்மப்பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய-சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (எ.கா – Conversation of a cow)  சமப்பாலுறவினை எழுதி வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே. 
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சம்ப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் த்மது அடையாளத்தினை மறைத்துக் கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? 
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக்கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidalபோன்றோருடன் தொடங்கி Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா – ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்ற போது எழுந்த சர்ச்சை. சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டெரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங் லீயின்  Broke back Mountainஇற்கும் ஸ்டீபன் டால்டிரையின் The Hours இற்கும் என்ன செய்தது? ( இவ்விடத்தில் Broke back Mountainஇனை Bareback Mounting என conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது. 

2 
சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறிது எழுதியோராக – நானறிந்தவரை – ஜெயமோகன்,சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், மாலதி மைத்ரி, லஷ்மி மணிவண்ணன்,ஷோபா சக்தி, திசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும். 
ஜெயமோகனதும் (விஷ்னுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி – ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை. 
லஷ்மி மணிவண்ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில்/எழுந்து நெளிகிறது/ சங்கருக்குக் கதவற்ற / எனது வீடு). பிரேம்-ரமேஷ், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப்பில் கொண்டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.  
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப் படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள ‘காய்தல்’ இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது.) 
திசேராவினுடைய சிறுகதை (‘கண்ணியத்தின் காவலர்கள்’ – வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழநுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது. 
தமிழில் சமப்பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப் பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம்-ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும். : பெண்சமப்பாலுறவு பற்றிய பிரேம்-ரமேஷின் கதையான ‘அங்கும் இங்கும் உடல்கள், இங்கும் அங்கும் கதைகள்’, கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல்ச்சலனங்களும் தீராது  தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது. 
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான்-அடிமைத் தர்க்கம் ,சமப்பாலுறவாளர்களின் மனச்சிக்கல்கள்களை ஆராய்ந்து முன்வைக்கும்‘மனவெளி நாடகம்’ சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி. 
உள்ளிணைப்பு:ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் 
ராஜீவ விஜேஸின்கவின் ‘Days of Despair’ உம் சரி ரொமேஷ் குணசேகரவின்‘Reef’உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதை சொல்லி கதை சொல்லி தனது ‘வித்தியாசத்தை‘ உணர்ந்த படி வளர நேர்கிறது.Lambda, W.H.Smith First Novel Award போன்ற பல சர்வதேச விருதுகளை வென்ற ஷ்யாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத் தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.சிங்கள-தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷ்யாம செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).  
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த் தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்னத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல்: அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (effeminate tendencies) இருப்பதால்‘Funny’ என்ற அடைமொழி கொண்டழைக்கப் படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப் பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bildungsromanஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது. 
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல் 
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல். அர்ஜியின் மாமா, மாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்து விடுகின்றன. சிறுமிகள் கொல்லைப் புறத்தில் தனியாகவும், சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிருக்கிறது. அர்ஜி தான் பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத் திறன் மிக்க அழ்கியல் உணர்வுகளுடைய ஒருவன். ஆண் சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால், கற்பனச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைகதைகளது ‘போலச் செய்தல்கள்’ அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் அப் போலச் செய்தல்களில் புதிய திருப்பங்களைக் கொண்டுவர சுவாரசியமான முடிச்சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.அர்ஜியினது‘வினோதங்கள்’ வெளித்தெரியத் தொடங்குகையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருத ஒரேயொரு வெளியும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல், நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின் மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.அர்ஜியின் சிறுபிள்ளைத் தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல அற்றுப் போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷ்யாம் செல்வதுரை.அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவு கூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ பயங்கரமும் சோகமும் நிரம்பியவை: “As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain.”  “Soon I would have to turn around and go back to my parent’s house, where Amaachchi awaited me with her thinnest cane, the one that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with Gentian Violet. The thought of  the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far from it”. 

நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா “Ey Chelva, Looks like you have a funny one here” (அர்ஜியைப் பற்றி) என்று கூறுமிடம், அர்ஜியின் தாய் நளினி ‘because the sky is so high and the pigs can’t fly’கூறுமிடமும் அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை* அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் ஷ்யாம் செல்வதுரை.நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரி நிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான ‘பிளக் ரை’ நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம். அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில்லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள்பவர்களே: இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள், நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல்வரத்னம் இன்னோர் உதாரணம்: அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தன்கியிருந்த ஞெகனைக் கைகழுவி விடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப்படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபனாக இருக்கிறான்.அர்ஜியின் தந்தை அவனது பெண்தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக்கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும் படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான்.  கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப் படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப் படுத்துகிறது. அர்ஜி சமப்பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப் படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.Funny Boyக்கு அடுத்து வெளிவந்த
Cinnamon 
Gardens 1920
களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாக, இலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலிமதிப்பிடுகளையும்hypocrisyயையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.  
மூன்றாவது நாவலான Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப் படுத்தும் புனைகதையாளராக ஷ்யாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷ்யாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம் வீழ்ந்திருக்கிறது. Young Adultsக்கான புனைவு என்றே இது விளம்பரப் படுத்தப் படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர்-சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல். 
* 
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித் தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும்‘பொன்ட்ஸ்’ என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்: நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை – பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை – வேலை அது இதென்று திரிவதை – உள்ளே அலைந்துலைந்து  செத்துப் போவதை-அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டு‘குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம்’ என்று யாராவது பேனையைத் தூக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவது போல ‘They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard’. 
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்து கொண்டு நாம் இதன் மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்கு தளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை. 
குறிப்புகள்:            * – சல்மாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்                1 – மேலும் வாசித்தறிய – * Same Sex Love In India: 
Readings from History and Literature –  Saleem Kidwai, Ruth Vanita 
                                                                                                                                                                              * Facing the mirror: Lesbian Writings From India – Aswini  Sukthankar – Penguin 
India
                                                                                              2 – Funny Boy – Novel by Shyam Selvadurai – Penguins 
India
பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப் படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜீவ விஜேசின்கவின் Acts Of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிற்து , இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல்Days Of Despair. ஜீன் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலமையே ஷ்யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக்கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சனை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கயின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy –இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.                                அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாததுக்குள்ளாக்கப் படவேண்டிய ஒன்று. நாவலினிறுதி அத்தியாயமான ‘The Riot Journal: An Epilouge’ இனை மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவிய நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா- பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் ‘Death to all tamil paraiahs’என செல்வரத்தினத்தின் கடை ஜன்னல்களில் எழுதுவது.)விக்டோரியா அக்கடமியில் சல்கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது.ஷ்யாம் செல்வதுரை இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை தலமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August 25 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல்கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல்க் கையாள்கை தனியான விவாததுக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று. 
இரவு வீடு – அதீதன் கவிதை 
நாளைடைவில்இந்த இரவு ஒரு வீடானதும்அதில் வசிப்பவர்களாக நாமிருந்து தானே தீரவேண்டும் 
நமக்கான கனவுகள்ஒரு மேஜையொன்றில் பரிமாறப்பட்டிருக்கலாம்என் நண்பனே கனவினை நாம் தின்னத் தொடங்குகையில்பயத்தின் நொடி வீசுவதாகதயவு செய்து கூறாதிருப்பாயாகஅவ்வாறு கூறுவாயாகில்வீட்டிற்கு கதவுகள் இல்லாதிருப்பதைவெகு சீக்கிரமாகவே உணர நேரிடும் 
அவ்வீட்டின் எந்த மூலையில்நீ உன்னைப் புணருவாய்என் நண்பனேஇல்லாதிருப்பதாய் நாம் நினைக்கும் குறி தன்னை உணர்த்தும் தருணத்தில்நம் வீட்டில் ஜன்னல்கள் இல்லாதிருப்பதைஉணர்வோம் 
மனவாதையின் உடல் நீட்சியெனத்துடிக்கும் உன் குறியின் ஸ்கலிதம் விழுங்கித்தணியும் என் தாபத்தின் தொடக்கத்தில்எழுந்து நெலியும் சர்ப்பம் தீண்டியஇரவின் சுவர்கள் நீலமாகப்பெயர்த்துத் தின்னலாம் சுவர்க் காறைகளை 
விழிப்பின் தருணத்தில் காய்ந்த ஸ்கலித்த்தைதொடைகளில் உணர்ந்துகுளியலறைக்குச் செல்கையில்உடலில் ஒட்டியிருக்கும் இரவின் ஸ்கலிதத்தை நாம் உணர்வதில்லை 
புன்னகைத்தபடி கதவுகளைத் திறந்து வெளிவருகிறோம்பல்லிடுக்குகளில் இருளாய் ஒளிர்கிறது இரவின் ஸ்கலிதம் 
என்ன செய்யலாம் எனது நண்பனேநமக்குத் தெரியாமலே நம்மைப் புணர்த்தி விலகும்வசீகரமிக்க இரவின் குறியை 
குருதியால் அமையும் தேசம்வாதைகளால் அழியும் மனிதன்   — அஜீப் பொன்னையா—நூல் – ம்ஆசிரியர் – ஷோபா சக்திவெளியீடு – கருப்பு பிரதிகள் 
மூன்றாம் உலக நாடுகளில் தெடர்ந்து இடம் பெற்றுவரும் போர்கள் அவற்றின் மீள் நிகழ்த்துகைகள் அழிவின் சாத்தியப்பாடுகள் பற்றிய துல்லியமானதும் தவிர்க்கமுடியாதவையுமான எதிர்வு கூறல்களால் இருப்பு அல்லது நிலவுகை சூழப்பட்டிருக்கும் நிலையில் மனித இருத்தல் குறித்து நாமனைவரும் சிந்திக்கவேண்டிய வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தகைய சிந்தனை கலை இலக்கியத் தளங்களில் நீட்சியடையும் போது உருவாகும் படைப்புகள் போர் புரட்சி என்பவற்றின் பின்னணியில் மனித இருப்பை ஆராயும் தன்மையுடையவையாக வெளிவருகின்றன. ஈழத்துச்சூழலில் இத்தகைய புனைவுகளை உக்கிரத்துடன் புனைந்து வரும் ஷோபா சக்தியின் சமீபத்திய நாவலான ‘ம்’ பலவகைகளில் கவனிப்புக்குரிய ஒன்று.                               போரின் முன் மனித உயிரின் பெறுமதி இழப்பின் அவலம் இடம் புலம் பெயர் வாழ்வின் அவலம் சமகாலத்தேவைப்பாடு என்று நிறையவே பெருங்கதையாடல்கள் நிகழ்ந்து வரும் காலமிது.போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறவே இல்லை.சமகாலத்தேவைப்பாடு என்ற ஓர் எண்ணக்கருவை தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துக்கெண்டு பிறரையும் அதன்படி செயற்பட வைப்பதே பெரும்பான்மை இலக்கியவாதிகளது நிலைப்பாடாக இருக்கிறது.ஆதிகார மையங்களது ஃபாஸிசக்கரம் நீளமுடியாத தொலைவில் இருப்போர் கூட சுயதணிக்கையுடனேயே கருத்து வெளியிடுவதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.                                தியாகம் அர்ப்பணிப்பு வீரம் போன்ற உணர்வு வயப்பட்ட சொற்களை புனிதப் பீடத்தில் ஏற்றிப் பிரச்சாரம் பண்ணிக்கெண்டிருப்பது மையநீரோட்டம். போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல்கள் அனைத்துமே மையநீரோட்டப் பார்வையின்படி எதிர்க்கதையாடல்கள் தான்.மேற்கூறிய கதையாடல்களின் உக்கிரமான வெளிப்பாட்டிற்கு எழுதப்படாத அதிகாரத்தின் சொல்லப்படாத தணிக்கை விதிகள் ஒத்துப்பேவதில்லை. அத்துடன் இலங்கையில் இத்தகைய வெளிப்பாட்டிற்கான இயங்குதளமும் அரிதான ஒன்றாகவே தெடர்ந்தும் இருந்து வருவது சகிக்க முடியாத ஒன்று.                                ம் மை பிரதியியல் (Textual) ஆய்வுக்கும் சூழல்சார் (Contextual) ஆய்வுக்கும் உட்படுத்தும் ஒருவன் கேள்விகளுக்குள் புதையுண்டு போக வேண்டியவனாகிறான்.ஏனெனில்: மக்களின் பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசு மக்களின் விடுதலை சுதந்திரம் என்பவற்றுக்கென கட்டமைந்ததாகக் கூறப்படும் தமிழ்த்தேசியவாத அமைப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் பின்னாலுள்ள கருத்துருவாக்க மையங்கள் என்பவற்றின் மீதான ஆய்வுக்கு நிகரானதே ஒரு ஈழத்து இலக்கியப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு. ஆகவேம்மினை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு என்பது பிறிதொரு வகையில் ஈழத்தின் சமகால அரசியலை ஆராய்வதாக அமையும்.‘ம்’மின் விமர்சகன் நாவலின் கதையாக்கத்துக்கும் அமைப்பாக்கத்துக்கும் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் சமூக அமைப்பை பகுப்பதற்கு மனத்தடையற்றிருக்க வேண்டும்.                                               கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுத் தோற்றப்பாடு மற்றும் சமநிலையை ஒரு நவீனத்துவப்பிரதி சிதைத்தே ஆகவேண்டும். அத்தனை சிதைவுகள் ரணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார மையங்கள் போர்த்தி விடும் வெண்ணிறப் போர்வையை‘ம்’ கிழித்தெறிவதால் அது தன்னை ஒர் உக்கிரமான நவீனத்துவப் பிரதியாக முன்னிறுத்துகிறது.ம்மின் சித்தரிப்பும் கதையாடலும் நாவலைக்கடந்து செல்ல முடியாத நிலையை வாசகனிடத்து ஏற்படுத்துவதை உணர முடிவதால் அது தன்னை ஓர் சிறந்த படைப்பாகவும் முன்னிறுத்திக்கொள்கிறது.                               தமிழ்த்தேசியத்துக்கான ஒருங்கிணைவு ஏகப்பிரதிநிதித்துவம் காவியத்தலைவன் ஒன்றிணைந்த இலங்கை போன்ற நுண்ணரசியல் மிகு செற்பிரயோகங்கள் மூலம் சமூக அமைப்பின் அடிப்படை அலகான தனி மனித இருப்பு நூதனமாக மறுதலிக்கப்படுகிறது. மறுதலிக்கப்பட்ட இருப்புக்குச் சார்பான எப்பிரதியும் ‘பயங்கரவாதிகளின் பிரச்சாரப்பிரதி’ என்றும்‘துரோகியால் எழுதப்பட்ட பிரதி’ என்றும் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு மாற்று வெளிகளை இல்லாதொழித்தும் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கியும் ஆதிக்க அமைப்புகள் தம்மைப் பாதுகாத்துக்கௌ;ளும் நிலையில் சமூக அமைப்பின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பிரக்ஞைக்குட்படுத்தும் ஒரு செயலே சமநிலையைக் ;குலைத்தல் என்பதாகிறது.மேற்புறத்தின் தொகுப்பு நிகழ்வான மௌனத்தை மீறி அதன் நிகழ்த்துகைக்கு அடியில் இருக்கும் புதைக்கப்பட்ட கூச்சல்களையும் அலறல்களையும் வெளிக்கெணர்தல் சமகால அரசியல் இலக்கியப் பிரதியொன்றின் கடமையாகிறது.அக் ;கடமையைத் திறம்படச் செய்யும் ‘ம்’ சமகாலத்து புனைவுகளில் முதலிடம் பெறும் தகுதியைக் கெண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.                                புல விதமான தூண்டல்களை சமூக இருப்பு மீது பிரயேகிப்பதுன் மூலம் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கும் காரியத்தைச் செய்கின்றன நமது அதிகார நிறுவனங்கள். தனி மனித இருப்பின் உடல்வெளி மற்றும் மனவெளி மீது முறையே ஒடுக்குதலையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் செலுத்திச் செலுத்தியே அந்த இருப்பை செயல்பாடற்றதாகவும் எந்நிலையிலும் ‘ம்’கொட்டக்கூடியவனாகவும் வைத்திருக்கும் உத்தி இன்று நேற்று ஏற்பட்டதல்ல: அதிகாரத்தின் ருசி என்று மனிதனுக்குப் புரிந்ததோ அன்றிலிருந்தே சமூக வெளியினுள் செயற்பட்டவாறே இருக்கிறது இந்த உத்தி.மதம் குடும்பம்; சாதி போன்ற அமைப்புகளை இவ்வுத்திக்கான நிகழ்த்துவெளியாகப் பயன்யடுத்திக்கொள்கிறது அதிகாரம். கலாச்சார சீர்திருத்தச் சட்டவாக்கங்கள் அறவியல் மதிப்பீடுகள் என்பனவும் இந்த வகையினவே.முன்முடிவுகளினதும் நேர்கோட்டு ஆய்வுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவையனைத்துமே தமது செயற்பாடுகளின் மூலம் தனி மனித இருப்பை மிக மோசமாகச் சிதைக்கின்றன.இவ்வாறு சிதைக்கப்பட்ட தனி மனித இருப்பு வர்க்கம் சாராததாக – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியாக மாறுகிறது.          கருத்துருவாக்க கருத்தியல் ஆதிக்க நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் எந்தவொரு சுயாதீனமான இருப்பும் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது. நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாத தனி மனித இருப்பு இயல்பாகவே பிறழ்கிறது.பிறழ்ந்த இருப்பின் நிலவுகை தடை செய்யப்பட்டு அதன் இருப்புக் குறித்த தடயம் மறைக்கப்படுகிறது. அதிகார மையங்களின் கைக்கு மீறிய இருப்புகள் பல்வேறுவிதமாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.இதன் மூலம் அவற்றின் சமூகப் பெறுமதி இல்லாதொழிக்கப்படுகிறது: அவற்றின் சமூக இயங்கு வெளி குறுக்கப்படுகிறது.இதன் மூலம் தமது ஸ்தாபன அறத்தை நிலைநாட்டிக் கொள்வதாக அதிகார மையங்கள் எண்ணங் கொள்கின்றன.இது தான் இலங்கையின் முக்கிய அதிகார நிறுவனங்கள் இரண்டினதும் பொது இயங்கியல்.இவை இரண்டினதும் தணிக்கை விதிகளை மீறி உருவாகும் பிரதி– அதிகாரத்தின் இயங்கியலை அராய்வதற்காகவேனும் அந்நியமாதலுக்கு உட்பட்டவனின் கதையாடலை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறது. இந்த ;அடிப்படையிலேயே ‘ம்’மில் பிறழ்வடைந்த இருப்பு கதையாடலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் வலிமையுடைய கலக மொழி அந்த இருப்புகளிடம் மாத்திரமே உண்டு.          அதிகார மையக் கருத்துருவங்களும் எதிர்க்கலாச்சாரக் கருத்துருவங்களும் வேறுபட்டவையாகவே இருந்தாலும் அவை பிரிதித்தறிய முடியா உள் இணைப்புக்களைக் கொண்டிருப்பதை எளிதில் இனங்காணலாம். அவ்வாறான உள் இணைப்புக்களில் ஒன்றே அதிகாரத்தின் இயங்கியல் மாற்று இயங்கியலை தோற்றுவிக்கும் செயற்பாடு.இக்கருத்தின் அடிப்படையில் வர்க்கம் சாராத – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியை உருவாக்குவதும் அதிகார நிறுவனமே என்பது புலப்படும்.’ம்’மின் கதை வெளியில் இதற்கான பல உதாரணங்களைக் காண முடியும்.            எதிர்ச்செல்லாடல் என்பதே அபுர்வமான நிகழ்வாகிவிட்ட இச் சூழலில் மனநோயாளிகள் என்று அறியப்படுவோரும் தன்பால்புணர்ச்சியாளர்களும் விபச்சாரிகளும் மறுத்தோடிகள் ஆகி சனாதனக் கருத்துருவங்கள் ஆதிக்க நிலையடைவதை உக்கிரமாகக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.அதிகாரத்தின் அசிங்கமான இயங்கியலை எதிர்க்க நினைத்தால் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட சிதைவுகளை முன்வைப்பது தான் ஒரே வழி. அதிகாரம் முன்வைக்கும் அனைத்துக் கற்பிதங்களையும் நேசகுமாரன் என்ற சிதைவை முன்வைப்பதன் மூலம் தகர்க்கிறது ‘ம்’. 




செப்புப்பட்டயம்
Category Archives: ரமேஷ் – பிரேம்

http://kundavai.com/category/ரமேஷ்-பிரேம்/

by Kundhavai
படைப்பின் அடிமைகள்(ரமேஷ் – பிரேம்)

விடுதலை கருத்தியல்கள் மற்றும் புரட்சிகர கோட்பாடுகளின் காலமான பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் மனித சமூகங்களின் மொத்த வடிவத்தையும், இயக்கத்தையும் ஏதோ ஒரு வகையில் மாற்றி அமைத்துள்ளன. இன்றைய வாழ்நிலையின் பல அடிப்படைக்கூறுகள் மனித உரிமை, சுதந்திரம் என்பவற்றை முன் நிபந்தனையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றுள்ள அதிகாரம், ஆதிக்கம் என்பவை கூட ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம், சமநீதி என்பவற்றையும் அடிப்படை உரிமைகள் என்பவற்றையும் முன்வைத்தே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.


முன்பிருந்த ஆதிக்கம், அதிகாரம் என்பவை தம்மை இறையாண்மை உடையவையாக பிரகடனப்படுத்திக் கொண்டது போல, கேள்விக்கு அப்பாற்பட்டவையாக இன்று எந்த ஆதிக்க, அதிகார, அடக்குமுறை அமைப்பும் தம்மை வைத்துக்கொள்வதில்லை; இவை தம்மை நியாயப்படுத்தும் சொல்லாடல்களை, நடைமுறை விதிகளைக் கட்டமைத்து பெருக்கிக் கொண்டுள்ளன. இந்தச் சொல்லாடல்கள், விதிகள் அனைவரையும் உள்ளடக்குவதான தோற்றம் கொண்டவை. அகிலம் சார் மனிதம், மனித உரிமை, சுதந்திரம், கடமை எனப் பல உபதர்க்கங்களைக் கொண்டு இவை கட்டப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கும் கருத்தியல்களின் சொல்லாடல்கள் மிகத்தந்திரமானவை; தாம் கொண்டுள்ள அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆதிக்கப் பொறியமைப்பை வெளித்தெரியா வண்ணம், புலப்படா வண்ணம் பொதிந்து வைத்திருப்பவை. அனைவரையும் இதன் பங்கேற்பாளராக மாற்றிவிடுபவை. என்றாலும் விடுதலை, மாற்றம், புரட்சி என்ற மாற்றுக்கருத்தியல்களும், செயல்திட்டங்களும் இன்றைய வாழ்தல் விதிகளை, உலகு பற்றிய பார்வைகளை, நடத்தை விதிகளைத் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கேள்வி கேட்கும் கருத்தியல்களின் மிகத்தீவிரமானதும்,. மிகத்தேவையானதுமான ‘பெண்ணியம்’ மட்டும் இன்றும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் ஒன்று, எல்லா விடுதலை, புரட்சிகர கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்களும் பெண்ணியத்தைப் புரிந்துகொள்வதில், ஏற்பதில் மிகுந்த தயக்கம் காட்டுபவையாக அல்லது தமக்கேற்ப பெண்ணியத்திற்கு வரையறை தரமுயற்சிப்பவையாகவே இருந்து வருகின்றன.


எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால், எல்லா வித அடிமைத் தனங்களுக்கும் அப்பால் மீந்து நிற்கும் ஒடுக்குமுறையாக, அடிமைத்தனமாக இருப்பது பெண்ணடிமைத்தனமாக, பெண்ணொடுக்கு முறையாகவே இருக்கிறது. அடிமைகளுக்குள் அடிமையாக, ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளது ஒரு வரலாற்று மெய்மை. மிகக்குறுகிய ஒரு வெளிக்குள், மிகக்குறைந்த இரு உறுப்பினர்களுக்கிடையில் கடைசியாக மீந்து நிற்பதாக இந்தப்பால் நிலை சமத்துவமின்மை, பாலியல்பு ஒடுக்குமுறை இருந்து கொண்டே வருகிறது. ‘‘ஆணும் பெண்ணும் சமஉரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?’’ எனப் பெரியார் கேட்பது எல்லா வித அறிவியல் சமூக ஒழுங்குகளுக்கும் பொருந்தக்கூடியது.


பெண் இயற்கையிலேயே ஆணுக்குப் பிற்பட்ட, கீழ்ப்பட்ட உயிரி என்ற வாதம் வெகுகாலமாக வைக்கப்பட்டு, பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும், பல இனக்குழு சமயங்கள் உட்பட பெண்ணை, ஆணுக்கு அடங்கிய, கட்டுப்பட்ட உயிரியாக வரையறுத்ததும் உடைத்தெறியப்பட்டுவிட்டது. பெண் ஒடுக்கப்பட இல்லை, பெண்கள் சுதந்திரமாகவே உள்ளனர் என்ற மூடத்தனமாக வாதங்கள் தற்போது பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இயல்பிலேயே அடங்கியும் கட்டுப்பட்டும் இருக்க விரும்புபவர்கள் என்ற கோணல் வாதங்களும் எப்போதும் பெருகியபடி உள்ளன. இவையும் இன்னும் எண்ணற்ற கொடுங்கோன்மை ஆண்மைய, ஆண் மேலாதிக்க வாதங்களும் பெண்ணியத்தால் ‘தகர்க்கப்பட்டு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ‘பெண்ணிய’ அறிதல் முறை, அணுகுமுறை, புலன்முறை என்பது இன்னும் ‘வெளியே’ உள்ளதாக, விளிம்பு நிலைப்பட்டதாக இருப்பதற்குக் காரணம் உண்டு. மற்ற கோட்பாடுகள், அரசியல் கருத்தில்களைப் போல் இல்லாமல் ‘பெண்ணியம்’ மனித சமூகத்தின் அடிப்படைகளை மாற்றியமைப்பது, பாலியல்புகள், பாலியல் நடத்தைகள் தனிமனித உறவமைப்புகள், குடும்பம், சமூகக்குழு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை பெண்ணியம் உணர்த்துகிறது. நகர அமைப்பு, வாழிட அமைப்பு, மொழி அமைப்பு, பண்பாட்டு இயக்கம், உணவு, உடை மற்றும் குடும்ப அமைப்பு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை ‘பெண்ணியம்’ தெளிவுப்படுத்துகிறது. ஆண்மைத்தன்மை உடைய இன்றைய சமூக உளவியல் இவற்றை ஏற்பதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.


நுண் அரசியல், நுண் அதிகாரக்களங்களைக் கேள்வி கேட்கும் ‘பெண்ணியம்’ மிகச் சமீபத்தில்தான் தன்னை வடிவமைத்துக்கொண்டது. இன்றுள்ள விடுதலை, ‘சமத்துவம் சார்’ கோட்பாடுகள் மற்றும் கருத்தியல்களில் மிகமிகப் புதிய புரிதல் இந்தப் ‘பெண்ணியம்’. இது ஆண்மையச் சொல்லாடல்களை, அமைப்புகளை அச்சுறுத்துவதாக இருப்பது இயல்பு. ‘ஆண்மை’ என்ற ஒன்றையே கேள்விக்குட்படுத்தி தகர்க்கும் இந்த விடுதலைக்கருத்தியலை ஏற்காத வரை, உலகின் சமூக அறம், சமூக அழகியல், ஒழுக்கவிதிகள் யாவும் அர்த்தமற்றவை, ஆபத்தானவை, ஆதிக்கத்தன்மை உடையவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அன்பு, காதல், பாசம், நட்பு என்ற அனைத்தும் பாலொடுக்குதலின் வன்கொடுமைக் கருவிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


பெண்ணியமும், தலித்தியமும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு வழிகாட்டு நெறிகளாக மாறாத வரை, இந்தியச் சமூகங்களின் எந்த விடுதலைக் கருத்தியலும், அரசியலும் வெறும் ஏமாற்று வித்தைகள்தான் என்பதை நாம் உரத்துச்சொல்ல வேண்டிய காலம் இது. இதற்கான காரணங்களும், தர்க்கங்களும், நியாயங்களும் எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து பேசப்படவேண்டும். எல்லா சொல்லாடல்களையும் இவை உடைத்துப்பிளவு படுத்தவேண்டும். நிர்ணய_நியாயவாத, இயற்கை வாத வன்முறைகளின் போலித்தனங்கள் அறிவுத்துறைகளிலும், அழகியல் தளங்களிலும் குவிந்து கிடப்பதை மிக மென்மையான அணுகுமுறைகளின் மூலம் இனி எதிர்கொள்ளமுடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலாதிக்கக்கருத்தியல்கள் தம்மை ‘இயற்கை வாதங்களாக’, ‘இயல்பு வாதங்களாக’ வைத்துக்கொண்டு விடுதலை மற்றும் அடிமை மறுப்புக் கருத்தியல்களை இயற்கை மீறிய, இயல்புகோணிய வக்கிரங்களாக, பயங்கரங்களாகத் தொடர்ந்து சித்திரித்துக்கொண்டே வருபவை. அப்படி ‘வக்கிரகோணல்’ பட்டியலில் சேர்க்கப்பட்ட சிந்தனைகளில் ஒன்றுதான் ‘பெண்ணியம்’


தற்போது உள்ள உலகமயமான அரசியலும், மிக நுண்தளத்தில் உள்ள ஒரு இந்திய சாதிக்குழு அரசியலும் மிக இணங்கிப்போகும் ஒரு கருத்தியல் ஆண்மையத்தன்மை மற்றும் பெண் ஒடுக்குமுறை. இது எப்படி சாத்தியமானது என்பதுதான். மிக மிக நுணுகி ஆய்வு செய்யப்படவேண்டியது. இது மிகமிகப் புராதனமான வரலாற்றை உடையது; அதே சமயம் மிகமிகத் தற்காலத் தன்மையும், தற்கணத்தன்மையும் உடையது.


இனஒடுக்குதல், தேச ஒடுக்குதல், வர்க்க ஓடுக்குதல் போல் எதிரெதிராக விலகி நிற்கும் இரு குழு அல்லது பகுதிகளுக்கு இடையில் உள்ளது போல் இல்லாமல் பாலொடுக்குதல் என்பது உள்ளடங்கிய, பிணைந்த இருவருக்கிடையில், உறவமைப்புகளுக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று என்பதனால் மிகவும் நுட்பமாகவும், பூடகமாகவும், மர்மமமான முறையிலும், தந்திரமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இந்தப்புலப்படாதத்தன்மை பல சமயங்களில் அதற்குள் நசுங்கிக்கிடக்கும் பெண்களையே நினைவிழக்கச்செய்து ஒடுக்குதலில் ஒப்புக்கொடுப்பவர்களாக மாற்றிவிடக்கூடியது. இந்த நினைவிழப்பு தான் ஆண்மேலாதிக்கத்திற்கும், ஆண்மைய வாதத்திற்கும் பலமாக மாறி அவற்றை விரிவடையச்செய்கிறது. ‘பெண்ணியம்’ இந்த நினைவிழப்பிலிருந்து பெண்களை மீட்கவும், மறதிகளிலிருந்து வெளியேற்றவும் நிகழ்த்தும் ஒவ்வொரு முனைப்பும் ஆண்மையச்சிந்தனைகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது.


நினைவிழப்புகளால், அறியாமைகளால் கட்டப்படும்_ பாதுகாக்கப்படும்_ எந்த அமைதியும் சமநிலையும் கொடூரமானது. அந்தக்கொடூரங்கள் காலம் காலமாக நியாயப்படுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் அக்கொடூரங்களுக்கு எதிரான மறுப்பு மிக மென்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் வன்முறை. இந்திய அரசியலில் தலித்தியத்திற்கும் இதே நிலை ஏற்பட்டதுண்டு. ஒடுக்குதலுக்கு, வன்கொடுமைக்கு எதிரான கேள்வி வன்முறையினதாக, அமைதி குலைப்பதாக, சமநிலையை உடைப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது. தலித் அரசியல் இந்தியப் பொது அரசியல் பொருளாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் ஒரு வன்முறையான இடையூறாக அறியப்பட்டு வருவது, பொதுப்புத்தியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கேள்வியும், மறுப்பும், எதிர்ப்பும் இன்றி பணிந்து, ஒடுங்கி இருப்பது அமைதி; அதுவே சமநிலை. இந்தச் சமநிலையை அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளத்தில் மட்டும் இன்றி உளவியல், நடத்தையியல் தளத்திலும் குலைக்கும் செயலைச் செய்வது பெண்ணியம். மிகப்புராதனமான வலியுடன், மிக அடிப்படையாக அறத்துடன் உருவாகி வந்துள்ள ‘பெண்ணியம்’ இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லா மாற்றுச்சிந்தனை முறைகளுடனும், ஊடாடி, கேள்வி கேட்டு சரிப்படுத்தும் செயலைச் செய்யவேண்டிய கடினமான பணியைத் தன்னிடம் கொண்டுள்ளது. அது அமைதியாகத் தன் தரப்பு நியாயங்களை முன் வைத்த காலம் முடிந்து தான் போனது. இது உடைப்புகளுக்கென காலம். குடும்பம், சாதி, ஊர், சமூகம், சமயம், தேசியம், சமூக ஒழுக்கம், மனித அறம் என்ற அனைத்து ஆண்மையக் கட்டமைப்புகளையும் ‘பெண்ணியம்’ உடைப்பதன் மூலம் ‘ஆண்’_‘ஆண்மை’ என்பதையும் உடைக்கவே செய்யும். இந்த உடைக்கும் உரிமை பெண்களுக்கு எப்படி வரமுடியும் என்ற கேள்வி எழலாம். கட்டியவர்கள் அவர்கள். ஆம், இன்று ஆண்களால் கைப்பற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அனைத்து ‘மனித நிலை’ நிறுவனங்கள், அமைப்புகள் யாவும் பெண்மையால், பெண்களால் கட்டப்பட்டவை. ஈணுதல், பேணுதல் (பிறப்பளித்தல், வளர்த்தல்) என்ற தாய்மையின் கூறுகள்தான் மனித சமூகத்தின் அடிப்படைகள். ஈணுதல் அனைத்து உயிர்களுக்கும் பொது. ஆனால் ‘பேணுதல்’ (நீடித்த பேணுதல்) மானுட சமூகத்தின் மூலக்கூறு, இது மனிதர்களை மாற்றியமைத்தது. இதிலிருந்தே மனித சமூகத்தின் அனைத்து வளர்ச்சிகளும், மாற்றங்களும் தொடங்கின. உணவு சேகரித்தல், சேமித்து வைத்தல், விவசாயம், கைத்தொழில், வாழிடம் அமைத்தல், சேர்ந்து வாழ்தல் என அனைத்து மனிதத்தொழில் கூறுகளும் பெண்களால் படைக்கப்பட்டவை. வளர்க்கப்பட்டவை. தாய் வழி, தாய் முதன்மைச்சமூகங்களாக இருந்தே எல்லா சமூகங்களும் இன்றுள்ள தந்தை வழி, தந்தை முதன்மைச் சமூகங்களாக மாறின. தாய்மை ஒருவகையில் மனிதர்களை (ஆண்) வளர்த்தது, மறுவகையில் பெண்மையை ஒடுக்கியது. அடிமைப்படுத்தியது. பெண் படைத்தது., பெண்ணையே ஒடுக்குதல் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதும், இனத்தொடர்ச்சிக்குப் பெண் தந்த முதன்மை பெண்ணை படைப்பின் அடிமையாக்கியது. தான் படைத்தவைகள் தன்னை ஒடுக்கும் போது, அவற்றை உடைக்கும் உரிமை யாருக்கும் உண்டு. பெண்ணியம் அவ்வகையில்தான் உடைத்துப் படைக்கும் ஒரு செயலாக, போராட்டமாகத் தொடரவேண்டியிருக்கிறது.


ஆண் என்பவன் பண்பாடு (கலாசாரம்) (சிuறீtuக்ஷீமீ) என்றும், பெண் இயற்கை (ஸீணீtuக்ஷீமீ) என்றும் ஒரு எதிரிடை கட்டப்பட்டுள்ளது. இது ஆணுக்கு பண்பாட்டில், அரசியலில், நாகரிகத்தில் அதிக முதன்மை தரும் வாதம். உண்மையில் பெண்ணே கட்டமைப்பு (பண்பாடு) (சிuறீtuக்ஷீமீ). ஆண் அதன் உப கட்டமைப்பு, தாய்மைக்கு உள்ள எந்தப் பொறுப்பும் அற்ற தந்தையைப் பண்பாட்டுக்குள் கொண்டுவந்த நிகழ்வு மானிட சமூக வரலாற்றில் மிக முக்கியமான கட்டம். சமூக அமைப்பும், அதன் வளர்ச்சியும் ஆண்களால் வந்தவை என்ற அறிவற்ற வாதங்களை உடைக்க இன்று ஏராளமான சான்றுகள் கிடைத்துவிட்டன, என்றாலும் ஆண் மையப்பட்ட சொல்லாடல்கள் இவற்றை ஏற்பதில்லை. பெண்ணின் படைப்புகள். குடும்பம், குடி மரபு என்பவை பெண்ணின் படைப்புகள் குடும்பம், குடி மரபுகள் தான் வாழிட எல்லைகளின் அடிப்படைகள், இவையே அரசின் தொடக்கம், போரின் தொடக்கம். இல்லம், வீடு என்பவை தாய்மையின் கண்டுபிடிப்பு, இவையே உலக வரலாற்றை மாற்றியமைத்தவை. இன்று எல்லாம் மறதிக்குள் புதைந்து போன ‘ஆண் முதன்மை’ அரசியலில் பெரும் தலைகீழாக்கம் நிகழ வேண்டியள்ளது. இந்தத் தலைகீழாக்கத்திற்கு பெண்மை எல்லாவிதமான உத்திகளையும் கையாளும், அதற்கான நியாயங்கள் அதற்கு உண்டு. இது ஒரு வகையில் இரண்டாம் படைப்பு, தான் முதலில் படைத்ததை உடைத்து, தனக்கான இடத்துடன் கட்டப்படும் இரண்டாம் படைப்பு. ‘ஆண்மை’ என்பதும் இதில் அடங்கும். ‘ஆண்’ என்பதும் ‘ஆண்மை’ என்பதும் கூட பெண்ணின் படைப்பு, பெண்ணின் புனைவுதான். ‘தந்தை’ என்பது போல் தாய் அளித்த உரிமைதான். இந்த உடைப்புகளுக்கும் மறு உருவாக்கத்திற்கும் தயாராக இல்லாத ‘ஆண்மை’ இனி எந்த அறத்தையும், நியாயத்தையும், அறிவியலையும் பேசத் தகுதியற்றதாகவே இருக்கும். ஏனெனில் இன்றுள்ள ‘ஆண்மை’யின் கையில் இருப்பவை ‘பேரழிவுக்கருவிகள்’ பேரழிவு உத்திகள்’ கொடும்வன்மை மூலம் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள அது முயற்சிக்கும். இது அழிவின் தொடர்வினை, படைக்கப்பட்டவற்றை தான் கவர்ந்து கொண்டதால் கிடைத்த ஆதிக்க மேலாண்மை. பெண்ணியம் எதிர்நோக்கி உள்ள மிகப்பெரும் சிக்கல், இந்த வன்முறை எதிர்கால அற சார் அரசியலுக்கும், மனித ஒழுங்குகளுக்கும் முன் உள்ள பெரும் சவாலும் இதுதான்.


நன்றி தீராநதி Standard | Posted in ரமேஷ் - பிரேம் | 0 comments






02.07.07

by Kundhavai

உண்மையின் பயங்கரம்(ரமேஷ் – பிரேம்)









மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள் என்று கூறுவது, சற்று வன்முறையாகத் தோன்றலாம். ஆனால் என்ன செய்வது நாம் அப்படித்தான் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வன்முறைகள் சமூக அமைப்பின் அடிப்படை. வன்முறைதான் மனிதரை ‘மனிதராக’ வைத்திருக்கிறது. மனிதர்களைப் பற்றி எத்தனைப் புனைவுகளை உருவாக்கிக் கொண்டாலும் அடிப்படையில் விலங்குகள் என்பதை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ எந்தச் சான்றும் இதுவரை கிட்டவில்லை. நாம் விலங்குகள் போல் வன்முறையை உடையவர்கள். எந்த நிமிடமும் வன்முறையைச் செலுத்த நாம் ஆயத்தமாக இருக்கிறோம். விலங்குகளின் வன்முறை அக்கணத்தின் காரணங்களைக் கொண்டது; உணவுக்காக, தற்பாதுகாப்புக்காக, இடத்திற்காக, இனத்துக்காக, புணர்ச்சிக்காக என ஏதோ ஒரு தருணத்தில் அவை வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆனால், அவற்றின் வன்முறை இயற்கை விதியின் ஒரு பகுதியாக இருப்பது போல் வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டதல்ல. மனிதர்களின் வன்முறையோ வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட ஒரு உயிரியல் நிகழ்வு. மனிதர்கள் அடிப்படையில் ஊன் உண்ணிகள், அத்துடன் தமது உணவுக்காக, தேவைக்காக எந்த விலங்கையும் தாவரத்தையும் அழிக்கத் தயங்காதவர்கள். விலங்குகளில் சிலவற்றைத் தவிர, பிற தமது இனத்தின் ஊனை உண்பது இல்லை. மனிதர்கள் தமது இனத்தின் ஊனையும் உண்ணப் பழகியவர்கள். அதே சமயம், தமது இனத்துக்காகத் தமது உயிரையும் இழக்கவும் பழகியவர்கள்.


காதல், போர் என்ற இருமைகளின் மீது கட்டப்பட்டது அடிப்படை மனித சமூகம். வீரமும், காதலும் என்ற இரு அடிப்படை உணர்வுகள் மனிதச் செயல்பாட்டின் எல்லா கூறுகளிலும் ஊடாடி இருப்பவை. வீரம் என்பது தற்காத்தல், தன் உயிரை, உடலை அழிவிலிருந்து காத்தல், தன் இனத்தைக் காத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய வன்முறைச் செயல் உத்தி. இது தற்போது உள்ள உடலைக் காத்தலின் தொழில் முறை, போர் அவ்வகையில் புராதனப் புனிதச் செயலாகிறது. காதல் என்பதோ இனத்தொடர்ச்சி என்பதை நோக்கியது, தன் இனப்பெருக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டைச் சுற்றியும் எத்தனை காவிய கற்பனைகள் புனையப்பட்டாலும், இந்த இரண்டின் உள்ளீட்டு உந்தம் ‘மரணம்’ என்ற‘ அழிவற்ற உண்மை’. தன் உடல் அழியாமை, தன் இனம் அழியாமை என்பதே இதன் நேரடி இயல்புருவம். இயற்கையின் விதி இது, இது இயற்கையின் சட்டமும் நியதியும் ஆகிறது. ஒரு உடல் உருவாகி, வளர்ந்து, தன்னைப் போல் இன்னொரு_இன்னும் சில உடல்களை உருவாக்கிவிட்டுத் தளர்ந்து மடிவது என்பது இயற்கை நியதி. எத்தனை முயன்று தேடினும் இதற்கு மேல் இயற்கை நமக்கு எந்த உரிமையையும், உன்னதத்தையும் வழங்கி விடுவதில்லை. மற்ற பிற எல்லாம் ‘மொழி’ என்பதைப் போல் எதேச்சையாக, ஏதோ வகையில், விபத்தைப் போல், விபரீதமாக மனிதருக்கு நேர்ந்தவைதாம். ‘மொழி’ என்ற புரியாத ஒரு மர்மம், புதிர், இயற்கை வினோதம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், இயற்கை மீறிய இந்த மனிதத் தன்மை என்பது எப்படி இருந்திருக்கும் என யூகிப்பது கடினம். எல்லையற்ற பயங்கரமாக விரிந்து கிடக்கும் இயற்கையின் விதிகளுக்குள் இருண்மையாய் இருந்து மனிதரை மிரட்டும் மரணத்தையும் நாம் இப்படித்தான் மொழி மூலம் எதிர்கொள்கிறோம்.


வாழ்வு, மரணம் என்ற இரு நிலைப்புள்ளிகளுக்கிடையே நமது மாபெரும் தனிமை எங்கெங்கோ நம்மை அலைக்கழிக்கிறது. இன்பம், துன்பம் என்ற இரு இருமைகளால் சுழலியக்கம் பெரும் மனிதப் புலன்களின் அடிப்படையில் இந்த இறப்புணர்வும், வாழ்வுணர்வும் நடத்தும் நாடகங்கள் பற்றி எல்லா தத்துவங்களும் ஏதேதோ பேசிச் செல்கின்றன. இன்ப விழைவு, துன்ப மறுப்பு என்பதில்தான் மனித சமூகப் பண்பும் கூட வடிவம் பெறுகிறது. ஆம், மனிதர்கள் இவ்வகையில்தான் என்றும் வன்முறையானவர்களாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு சமூக வயமானவர்களோ, அதே அளவுக்கு சமூக வெறுப்பும், சமூக மறுப்பும் கொண்டவர்கள். நாம் எப்போதும் இந்த வெறுப்பின் உள் சுழல்களை அடக்கியபடியே இன்னொன்றாக இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறோம். வாழ்வை ஓயாமல் இயக்கும் இந்த இறப்பைத்தான் இந்திய மனம் தர்மம் என்கிறது. தர்மம் என்பது நியதி, விதி, சட்டம். அதனால் தான் தர்மத்தின் தேவனே மரணத்தின் தேவனாக இருக்கிறான். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தர்மத்தின் தேவன், மரணத்தையே தனது உத்தியாகக் கொண்டிருப்பதான உருவகம் உண்மையில் மிக வலிமையானது. இதனால்தான் இந்திய மரபில் பிறவி என்பது பெருந்துன்பமாக, பெரும் நோயாக அச்சுறுத்துவதும் ‘பிறவாமை’ என்பது பேரின்பமாகக் கவர்ந்திழுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. நோக்கமற்ற ஒரு எதேச்சை நிகழ்வாக ‘ஊழாக’ விளைந்து விட்டது இந்தப் பிறவி என்ற உணர்வு, எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரியது. இதற்கு சமூக சமயத்தீர்வு பிரம்மம் என்ற புனைவாக இருக்கலாம். அல்லது சூன்யம் என்ற மிரட்டும் பிரக்ஞையாக இருக்கலாம். இந்த இடத்தில் மனிதருக்கு முன் இரண்டு சாத்தியங்கள் உள்ளன. கட்டற்ற செயல், ஒடுங்கி நிற்கும் செயலின்மை. துறவும், சரணும் இந்த வெறுமைக்கு மாற்று மயக்க மருந்துகள். ஆனால், எல்லாம் கலைந்து போகும் மயக்க நிலைகள் தான். மனிதர்கள் தம் மீது கவிழ்க்கப்பட்ட இந்த வன்முறையிலிருந்து விடுபட வன்முறையைத்தான் கைக்கொள்வார்கள். அப்படியெனின் அறம், அன்பு, அகத்தனிவு என்பவை முற்றிலும் பொய்யானவைகளா எனில், நிச்சயமாக நம்மால் எதுவும் கூற முடியாது. ஆனால், அவையும் மனிதச் செயல்பாட்டின் சில கூறுகளாக அமைந்து விடுகின்றவைதாம்.


அன்பு என்பது முதலில் மனிதர்களின் சுய அன்பில்தான் தொடங்குகிறது. தன்னைத்தான் நேசித்தல், தன்னைத்தான் மோகித்தல் என்பதில்தான் எல்லா நேசங்களின் அடிப்படையும். தான்_பிறர் என்பதில் தற்காதல் தான் முதலில் நிற்கிறது. உயர் பண்புகளின் தொடக்கமாகக் கூறப்படும் தன் மதிப்பு சுய மரியாதையில்கூட முதலில் தன் மீதான மதிப்பு தான் தொடக்கம்.


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்


_ தொன்றும்


துன்னற்க தீவினைப் பால் (குறள்_209)


‘‘உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’’ இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை.


‘‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.


(மத்தேயு 22:34_40 மாற்கு 12:28.34 லூக்கா 10:25_28) இந்தத் தற்காதல் தன் நேசம் என்பதில் முன் நிற்கும் ‘தான்’ என்பது எப்போதும் தனித்து இருக்க விரும்பாதது. தான் என்பதை அறிய, உணர, உணர்த்த, அறிவிக்க அதற்குப் ‘பிற’ தேவைப்படுகிறது. எந்த ஒரு மனிதரும் இந்த உலகில் தனித்து இருக்க இயலுவதோ, எண்ணுவதோ, ஏன் யூகிப்பதோ இல்லை என்பது இதனால் தான். ஒரு வகையில் தான் என்பதே பிற என்பதால் தான் அறியப்படுகிறது என்பதும்கூட உண்மையே. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிய ஒவ்வொரு மனித உடலிலும் புலன்கள் இருந்தாலும் காண ஒளியும், கேட்க ஒலியும், உண்ண உணவும், நுகர மணமும் உற்றறிய மற்ற பொருளும் இல்லாத போது புலன்கள் என்பவை எந்த அர்த்தமும், வடிவமும் பெறுவதில்லை. இன்னொரு வகையில் நமது ஒவ்வொரு ‘நாள்’ மற்றும் ‘தான்’ என்பது பல்வேறு பிறவற்றின் இணைப்பால் இழைவால் நேரும் ஒரு விளைவும் கூட. இந்த ‘தான்’ பிற என்பதில் நேர்ந்து விடும் இந்தச் சிக்கல், பெரும் ஆக்கங்களை நோக்கியோ, பெரும் அழிவை நோக்கியோ நம்மை நகர்த்தலாம். அத்துடன் எல்லாத் தருணங்களிலும் ‘தன் மீது தான் காதலாகி’ நிற்பதும் கூட சாத்தியமற்ற ஒன்றே. பிற என்பது இதன் நீட்சியாக வெறுப்பும் விருப்புமாக உருச் சுழன்றபடியே இருப்பதும் தவிர்க்க முடியாதது. ஒரே சமயத்தில் ‘தான் ஒரு மையம்’, ‘பிற ஒரு மையம்’ என்ற இரு துருவச் சுழற்சியால் மனிதச் செயலாற்றல் பெருகவோ, சுருங்கவோ செய்கிறது.


நாம் நம்மை வெளியிலிருந்தே கற்கிறோம்; குழந்தையாக இருக்கும்போது, நமக்கு எந்த ஒழுங்கும் தெரியாது. நாம் அனைத்தையும் கலைத்துப் போடுகிறோம். மடிக்கப்பட்ட துணி, அடுக்கப்பட்ட பாத்திரம், வட்டமான தட்டில் இடப்பட்ட சோறு எதையும் நாம் கலைத்தும், கலந்தும் போடவே முயல்கிறோம். நேர்க்கோடு, வட்டம், சதுரம், முக்கோணம் என்ற ஒழுங்கு நமக்குத் தெரியாது. கலைப்பது என்பது நமது இயற்கை வினை. பிறகு மெல்ல மெல்ல ‘ஒழுங்கை’ விதிகளைக் கற்கிறோம். இந்த ஒழுங்கு கற்றல்தான், நமது வாழ்தலைக் கற்றலாகிறது. உண்ணக் கூடியது, உண்ணக் கூடாதது, தொடக் கூடியது, தொடக் கூடாதது, செய்யக் கூடியது, செய்யக் கூடாதது; என நம் வாழ்தலின் விதிகளைக் கற்கிறோம். இந்த விதிகள் மீறப்படும் பொழுது, நாம் உயிரை இழக்க வேண்டி வரும். எப்பொழுதும் மரணம் நம்மை இழுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. நம் உடல் காயப்படலாம். ஊனப்படலாம். விதிகள் மீறப்படும்போது, நாம் மெல்ல சமூக உயிரியாக மாறிய பிறகும், நமக்குள் இந்த ஒழுங்கு கலைக்கும் உந்துதல் கடைசிவரை இருந்து கொண்டே இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். இப்பொழுது மெல்ல புரிபடத் தொடங்குகிறது. ஏன் மனிதர்கள் ஒரே சமயத்தில் சமூக உயிரிகளாகவும் சமூக வெறுப்பு கொண்டவர்களாகவும் உள்ளே முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இங்கே சமூக விதி என்பது இன்னொரு வடிவில் மனிதர்களின் இறப்புணர்வுடன் தொடர்ந்து பேரம் பேசிக் கொண்டே இருக்கிறது. எல்லா சமூகத்திலும் தனி மனிதர்களுக்கு தண்டனை என்பது வரையப்பட்ட ஒன்று. அதன் உச்சபட்சம் மரணம். மரண பயத்தில் தொடங்கி தன் மோகத்தில் தொடர்ந்து மீண்டும் மரண சாசனத்தில்தான் எல்லா ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படுகின்றன. இயற்கை விதித்த அதே கொடு விதியைச் சமூகமும் _ அரசியலும் _ பண்பாடும் தமது கூட்டு மன இயக்கத்தின் உத்தியாக மாற்றிக் கொண்டுவிட்ட பின்; வன்முறை என்பது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் எப்போதும் எங்கும் இருந்துகொண்டே இருக்கிறது என்பது மிகைப் பட்ட கூற்றல்ல; ஆனால் ‘ஒழுங்கு’ என்பதன் மூலம் நாம் அதனைத் தவிர்க்க, தணிக்க, உருமாற்ற முடிகிறது. அரசு, சட்டம், ஆட்சி என அனைத்து நிறுவனங்களும் இந்த உயிர்_உடல் நீக்கும் அதிகாரம் கொண்டவையே; தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதரும் இதே அதிகாரத்தைக் கற்றுச் சிறிய அளவில் செயல்படுத்தியபடியே இருக்கிறோம். ஆனாலும் தனி மனித ஒழுங்கும், சமூக ஒழுங்கும், அரசியல் ஒழுங்கும் ஒத்திசைகிறபோது அமைதியும் இணக்கமும் இயல்பும் தோற்றம் தருகின்றன. வேறு வகையில், ஒரு ஒழுங்கு இன்னொரு ஒழுங்கின் மீது திணிக்கப்படும் பொழுது, இன்னொன்றுடன் மோதுகின்றபொழுது, பார்வைக்குத் தென்படும் பருண்மையான வன்முறையும், பயங்கரமும் பரபரப்பைப் பெருக்கி விடுகின்றன. இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட ஒழுங்குகளோ மோதிக் கொள்ளும் தளங்கள் பற்றியதுதான் நமது கவலை. ஒழுங்குகளின் மோதல்கள் இலங்கையில் செஞ்சோலையில் நூற்றுக்கு மேற்பட்ட பச்சைக் குழந்தைகளைப் பலி கொள்ளலாம். லெபனானில் ஆயிரக்கணக்கானோரை சாகடிக்கலாம். இராக்கில் பத்து லட்சம் பேருக்கு மேலான மக்களை கணக்கிலிருந்தே நீக்கி விடலாம். ஆப்கானிஸ்தானை வெறும் கற்குவியலின் பூமியாக மாற்றிவிடலாம், என்னவும் செய்யப்படலாம்; எல்லாம் ஒழுங்குகளின் விதிகளின் மோதல்கள்தான். வன்முறை தற்போது வேறு வடிவில் நம்முன் மகா கொடூரமாக நிற்கிறது அல்லவா. எங்கும் பேசப்படுவதாக, எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாக, எப்போதும் வெடித்துக் கிளம்புவதாக அது விரிகிறது அல்லவா. இதைப்பற்றிய வேறு வகையான பேச்சுத்தான் பயங்கரவாதம் பற்றியது.


பயங்கரவாதம் என்றவுடன் நமக்கு நினைவூட்டப்படுவது சில கட்டடங்களின் தகர்ப்பு, சில ரயில் வெடிப்பு, சில தலைவர்கள் கொலை செய்யப்படுவது என்பவை போன்றன. உண்மையில் நம்மை நடுங்கச் செய்யும் நிகழ்வுகள்தாம் இவைகள், ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (கீணீக்ஷீ ஷீஸீ tமீக்ஷீக்ஷீமீக்ஷீவீsனீ) என்பது அதைவிட நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்லவா. 2001 ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன், உலகில் எங்கும் பயங்கரங்கள், வன்முறைகள் நடக்காதது போலவும், அன்றுதான் மனித குலத்துக்கே நாசம் வந்து சேர்ந்ததாகவும் தொடங்கப்பட்ட பேச்சுக்கள், கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள், எத்தனை வன்கொடுமையானது. அதனை ஒரு சாக்காக வைத்து ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் தரைமட்டமாக்கப்பட்டது, பேரன்பின் அடையாளம் போலப் பேசப்படுகின்றன. இராக்கில் சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு பன்னிரண்டு இலட்சங்களைத் தாண்டுகிறது. தினம் இரண்டு மூன்று கார் குண்டு வெடிப்புகள் ர்ராக் மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சரி இதனால் ‘பயங்கர வாதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வன்முறை நியாயமானதாகி விடுமா. இல்லை; எல்லா வன்முறைகளும் கொடூரமானதே. ஆனால், மனிதர்கள் அதைப் பெருக்கிக் கொண்டே இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் எப்பொழுதும் வன்முறை செலுத்த, பிறர் மீது செலுத்தப்படும்போது பார்த்து ‘ரசிக்க’ தயாராக இருப்பதற்கு எல்லாவிதமான தயாரிப்புகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.


பயங்கரவாதம் என்பது போர் அல்ல, போர் செய்ய முடியாதவர்களால் போர் வலிமை உடையவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. அதில் ஒரு அரசு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வர்க்கம், ஒரு தலைமை எது வேண்டுமானாலும் குறிவைக்கப்படலாம். எந்த வகையிலும் அத்துடன் தொடர்பற்ற மக்களும் பாதிக்கப்படலாம். அது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமை. இதைச் செய்பவர்களின் நோக்கம் தீர்வு அல்ல, வெறும் எதிர்ப்பு_வெறுப்பு; இதற்குப் பின்னுள்ள பிரச்சினையை நோக்கி அனவைரையும் இழுத்துவிட அவர்கள் செய்யும் முயற்சி. இது ஒரு ‘நவீனத்தொழில் நுட்பம்’. நவீன அழிவுக் கருவிகளால், உத்திகளால் நிகழ்த்தப்படுவது. சில ஆய்வாளர்கள் இது வெகுசன ஊடகங்களின் காலகட்டத்தில், ஊடகங்களில் இவற்றிற்கான சொல்லாடல் களத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுபவை என்று கூறுகிறார்கள். ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதோ, இயக்கங்களின் திட்டமிடுதலில் நடப்பதோ, எதுவானாலும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கவே செய்யும். மக்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் என்பவை இதிலிருந்து தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவே செய்கின்றன. ஆனாலும் இது எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. ‘நவீன பயங்கரவாதம்’ என்பது வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருக்கலாம். ஆனால் படுகொலை, வன்கொடுமை, திட்டமிட்ட தனித்தாக்குதல் என்பவை மனித இன வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நடந்து கொண்டே இருப்பதுதானே. இங்குதான் சிக்கல் எழுகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் ‘அறம்’ வன்முறையை மனிதர் மீது மனிதர் செலுத்தும் வன்கொடுமையை எதிர்க்கிறதா; அல்லது அதிகாரபூர்வமான, நியாயப்படுத்தப்பட்ட வன்முறை நிறுவனங்களைத் தவிர (அரசுகள், இராணுவங்கள், பலவகைப்படைகள்) வேறு யாரும் வன்முறையில் ஈடுபடுவதை எதிர்க்கிறதா. இதற்குப் பதில் கூறப் போகும் முயற்சியில்தான் ‘மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள்’ என்ற வாசகம் நம்மை எதிர்கொள்கிறது.


இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில பயங்கரங்களை, பாதகங்களை, சற்றே நினைவுபடுத்திக்கொள்வது நமது உறக்கத்தை, தொந்தரவு செய்வது என்றாலும், தற்போது தேவை இருக்கிறது. தற்போது பேசப்படும் ‘மகாபாதக செப்டம்பர்’ 11 போல், 1973 ஆண்டு ஒரு செப்டம்பர் 11 இல் சிலியின் தலைநகரில் ஒரு படுகொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசை, அமெரிக்கத் துணைப்படை அழிக்கப் புறப்பட்டு, ஒரே நாளில் 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் தினம் கைதும் படுகொலையுமாக எத்தனை ஆண்டுகள்! ஆனால், உலகம் இப்போது போல் பெரும் சோகத்தில் மூழ்கிடவில்லை. (தொலைக்காட்சி இப்போது போல் அதைப்படம் பிடிக்காதது மட்டும் காரணம் அல்ல). ஆனால், 9/11 என்று புதிய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்க, தற்போது அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ பயன்படுகிறது. இனி உலகை ஆட்டிப்படைக்க இது ஒரு பயங்கர ஆயுதம்.


1945_செப்டம்பர் மாதம் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சிமின் ஞிமீனீஷீநீக்ஷீணீtவீநீ ஸிமீஜீuதீறீவீநீ ஷீயீ க்ஷிவீமீtஸீணீனீ இன் சுதந்திரப்பிரகடனம் செய்கிறார். அதுவரை இந்தோசீனா என்ற பெயரில், பெரும் நிலப்பரப்பை அடிமை கொண்டிருந்த வன் கொடுமையாளர்களுக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. வியட்நாம் மண்ணை இரண்டாகப் பிரித்து, பெரும் நாசத்தை விளைவித்த போரைத் தொடங்கினர். பத்து ஆண்டுகள் பிரஞ்சுப் படையினரின் அட்டூழியம், 1955 முதல் அமெரிக்கப்படையினரின் அட்டூழியம். அப்பொழுதும் வியட்மின்களை பயங்கரவாதிகள் என்றே கூறினர், அமெரிக்க நிர்வாகிகள். 1975 வரை எத்தனை இலட்சம் மக்களின் உயிரிழப்பு, எத்தனை ஆயிரம் பேரின் ஊனம், எத்தனை பெரிய மனநோக்காடு. அதற்காக அமெரிக்கா செய்த செலவு எத்தனை மில்லியன் டாலர்கள். வியட்நாமை இரு பகுதிகளாக்கி பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. இன்றைய ஈராக்கில் ஷியா_சன்னி என்ற பிரிவினையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் படுகொலை வெடிப்புகள் போல. இதைப்பற்றி ஜான் பிட்சரால் கென்னடி ‘‘கீமீ sலீணீறீறீ ஜீணீஹ் ணீஸீஹ் ஜீக்ஷீவீநீமீ, தீமீணீக்ஷீ ணீஸீஹ் தீuக்ஷீபீமீஸீ னீமீமீt ணீஸீஹ் லீணீக்ஷீபீsலீவீஜீ, suஜீஜீஷீக்ஷீt ணீஸீஹ் யீக்ஷீவீமீஸீபீ ஷீஜீஜீஷீsமீ ணீஸீஹ் யீஷீமீ tஷீ வீஸீsuக்ஷீமீ tலீமீ suக்ஷீஸ்வீஸ்ணீறீ ணீஸீபீ suநீநீமீss ஷீயீ லிவீதீமீக்ஷீtஹ்’’ என மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்போது உள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோல் உலக அமைதியைக் காக்க எதையும் எப்படியும் செய்யத் தயாராக இருக்கிறார்.


1948இல் இரண்டாம் படுகொலைப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப்பின் பாதிக்கப்பட்ட யூத இன மக்களைக் காக்க அமெரிக்க_ ஐரோப்பிய நாட்டு மனிதாபிமானிகள் ஒன்றுகூடி ஒரு நாட்டை உருவாக்கினார்கள்: இஸ்ரேல், யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நாஜி தாக்குதல் வரலாற்றின் பெருங்கொடுமையானதே. ஆனால், ஐரோப்பியர்கள் தமது நிலப்பகுதிக்குள் ஒரு நாட்டை, நிலத்தை ஒதுக்கி ஒரு குடியேற்ற தேசத்தை உருவாக்கித் தந்து தமது மேலான மனிதநேய மெல்லுணர்வுகளை நிரூபித்திருக்கலாம். புதிதாக ஒரு நாட்டை வேறு நாட்டுக்குள் இடம் ஒதுக்கி நட்டதன் மூலம் ஐம்பதாண்டு ரத்தக்களரியை உருவாக்கி விட்டனர். பாலஸ்தீனத்தின் தினசரிப் போராட்டம் இப்படியாகத் தொடங்கியது. அராபிய மண்ணில் தமக்கு ஒரு இராணுவத் தளத்தை ‘இஸ்ரேல்’ என்ற பெயரில் அமெரிக்கா உருவாக்கிக்கொண்ட படுபாதகச் செயலின் விளைவுதான், பின்னால் வந்த பல தனிநபர் தாக்குதல் இயக்கங்கள், யாசர் அராபத் போன்றவர்களையும் பல காலம் பயங்கரவாதி என்றே கூறி வந்தன மேற்கத்திய அரசுகள். பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதும், சோவியத்துக்கு எதிராக ஒசாமா பின்லாடன் என்ற தாக்குதல் தளபதியை அமெரிக்கா உருவாக்கி உலவவிட்டதும் இந்தப் பின்னணியில்தான்.


1994ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாத நாளில் ருவாண்டாவில் தொடங்கிய வன்முறை, கடந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான வன்முறைகளில் ஒன்று. இரண்டு ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கிடையிலான வன்மம். ‘ஹ§டு’ என்ற இனமக்கள் ‘டுட்சி’ என்ற இனமக்களில் 80,0000 பேரை மூன்று மாதத்திற்குள் மகாகொடூரமான முறையில் கொன்று குவித்தனர். பல ஹ§டு இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் அந்தப் படுகொலை அங்குமிங்குமாக நிகழ்ந்தபடியே இருந்தது. உயிரிழப்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. இதில் ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். இதைத் தொடங்கி வைத்தவர்களே ஐரோப்பிய ஆட்சியாளர்கள்தான். முதலில் ஜெர்மனியின் ஆதிக்கத்திலும் பிறகு பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலும் ருவாண்டா இருந்தபோதுதான் ஹ§டு_டுட்சி என்ற எதிர்ப்பு இன அடையாளம் வன்மைப்படுத்தப்பட்டது. தமது ஆதிக்கத்தை நிறுவ _ தொடர இந்த இன வெறுப்பு தூண்டி வளர்க்கப்பட்டது. பழங்குடிச் சமூக அரசுகளாக இருந்த இந்நாட்டின் மக்கள் குழுவினரை ஒன்றாக நெருக்கி நாட்டை உருவாக்கி, 10 பசுக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ‘ஹ§டு’ என்றும், 10க்கு மேல் பசுகொண்ட மக்களை ‘டுட்சி’ என்றும் சட்டப்பதிவு செய்து, ‘டுட்சி’ மக்களுக்கு சில அரசு சலுகைகள் தருவதன் மூலம் பெரும் பான்மை ஹ§டு மக்களிடம் வன்மத்தைத் தூண்டி ஒரு நீடித்த இனமோதலை ஏற்படுத்தியது, பெல்ஜிய ஆதிக்கம். 1994_இல் நடந்த படுகொலைக்கு ஆயுத உதவி செய்தது பிரான்ஸ் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. படை உதவியும் செய்ததாக தற்போது தெரியவருகிறது. இனமோதலை முன்பெல்லாம் சிறிய போர்களின் மூலம் தீர்த்துக்கொண்ட வரலாறு, தற்போது நவீன உத்திகளால் படுபயங்கரமாக மாற்றப்பட்டுவிட்டது.


நன்றி தீராதநதி Standard | Posted in ரமேஷ் - பிரேம் | 1 பின்னூட்டம்

01.08.07

by Kundhavai


பேரழகிகளின் தேசம்


ரமேஷ் பிரேம்(இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் – பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.(டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.)


பாயிரம்


வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்

திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்

எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட

ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்

பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்

பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்

நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்

வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்

பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று

வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்

உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்

உடல் வாசனயால் கவரப்பட்டு

எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு

வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான

பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


வேறு


என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த

உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்

திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்

தணல்கொண்டு வருகிறேன்


இதுவுமது


சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு

முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து

வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்

மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்


பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்

ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்

எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து

முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று

உனது மதனபீடத்தில்

அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்

கவ்வி இழுக்கும்போது

உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது

ஒரு துளி எல்லையற்ற வெளியில்

வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு

பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது


வேறு


கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று

வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்


இதுவுமது


ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே

ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது

ஆளற்ற படகு – அதிலே

சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது

யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்

எனது மனம் படுத்துக்கிடக்கிறது


இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து

கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்

கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி

கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து

எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது


வேறு


யோனி புணர்வதற்கல்ல

பிறப்பதற்கு – என்று வேதநூலில் நான்

சொல்லியிருந்த வாக்கியத்தை

காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து

வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்


தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்

வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்

நிறைந்த இந்தத் தேசம்

மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து

அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக

இந்த்ப் பூமி இருந்தது

அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.


இதுவுமது


யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக

ஒரு மிடறு நீர்

எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்

அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது

நீரலைகளென அசையும் அவளது

தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்

எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று

அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்


கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென

றெக்கைத் துடிக்கிறது யோனி

வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த

ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று

மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி

கிளர்ந்து புகைகிறது

கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.


வேறு


நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்

சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக

தொடுவானத்திலிருந்து

மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்

தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்

வெயில்படாத பால் நிறச் சருமத்தில்

என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்

என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்

பெயரால் அவனை விளித்தேன்

திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி

குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்

ஒற்றை முலையோடு

வந்தவளை வாறி மடியிலிருத்தி

முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி

வரல் சுட்டுப் பதறி

உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை

எனது வாய் எச்சிலில் நனத்தேன்

உறிந்த பொருக்கினூடே உள்ளே

கணன்ற நெருப்பைக் கண்டேன்.


கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து

குறுஞ்சிரிப்போடு நடந்காள்


இதுவுமது

வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்

அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க

ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்

என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது

முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க

என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்

குருதி குடித்தபோதுதான் தெரிந்தது

இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது


உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்

பிணைந்த எனது படகை

தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி

முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்

படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு

உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்


நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்

தரும்படி வேண்டினேன்

அவர்களில் ஒருத்தி பதிலுக்கு

தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்

திரும்பிக் கேட்டாள்

எல்லோரும் சிரித்தார்கள்

பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது


படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி

நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்

படகு பற்றிப் புகையத் தொடங்கியது

பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்


வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்

திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்

எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட

ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்

பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்

பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்

நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்

வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்

பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று

வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்

உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்

உடல் வாசனையால் கவரப்பட்டு

எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு

வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான

பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


—————————-


இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் – பிரேம் காப்பிகள்.


தாமதமாக வந்துசேரும் அறிவு

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும் Standard | Posted in கவிதைகள், ரமேஷ் - பிரேம் | 3 பின்னூட்டங்கள்


10.03.06


by Kundhavai


கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்






எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.


குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.


எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.


மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.


இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.


சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை ‘ஆய்வி’ற்கும், ‘ங்’ ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.


“பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்”. என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த “கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்” புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.


புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.


பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். “Why you are trying to invend the wheel once again.” அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.




பூனையாக இல்லாமல் போன சோகங்கள்


"Love is the delightful interval between meeting a beautiful girl and discovering that she looks like a haddock." John Barrymore (1882 - 1942)

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும
http://baavaa.blogspot.in/2008/02/blog-post_02.html

எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.

குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.

எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.

மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.

இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.

சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை 'ஆய்வி'ற்கும், 'ங்' ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.

"பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்". என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த "கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்" புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.

பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். "Why you are trying to invend the wheel once again." அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.

- இது செப்புப்பட்டயத்தில் இருந்து ஒரு காப்பி பேஸ்ட் பதிவு

ரமேஷ்-பிரேம் கதைகள் - வரலாறுகளின் சதுரங்கப் பலகை
மனோ. மோகன்
http://manomohanthepoet.blogspot.in/2012/03/blog-post.html
"எழுது. எல்லாவற்றையும் எழுது. கதையாக எழுது. ஆய்வுரையாக எழுதி விடாதே. அதிகாரத்தின் கண்காணிப்பில் நீ இருக்கிறாய்.. அணுசக்தி மட்டுமே மனிதரை அதிமனிதர் ஆக்கக்கூடியது. நாம் அதற்கு எதிரானவர்கள். நம்மைக் கொல்ல இந்த உலகின் எல்லா நாடுகளின் அரசுக்கும் உரிமையுள்ளது. நாம் புனைவுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். எல்லாம் புனைவுதான். கடவுளைப் போலவே விஞ்ஞானமும் புனைவுதான்."
[குருவிக்காரச் சீமாட்டி, பக். 101 - 102].
          தமிழகத்தின் கிழக்குக் கடலில் காற்றில் குமையும் பிணவாடை மட்டுமே எஞ்சியிருக்கிற ஈழத்துச் சூழலின் தீவிரம் யாரையும் எதுவும் செய்துவிடப் போவதில்லையென்பது யதார்த்தமாகியிருக்கிறது. கால்களுக்குக் கீழே பூமி பத்திரமாயிருக்கிறதாவென ஒவ்வொரு கணமும் சரிபார்த்துக் கொள்கிறேன். எந்த நிமிடமும் என் காலடி நிலம் பிய்த்து வீசப்படலாம் என்கிற அச்சம் மனதை உறையவைக்கிறது. வரலாற்றின் தீராத பக்கங்களில் ஒவ்வொரு விபத்தும் திட்டமிட்டே நிகழ்த்தப் படுகிறது என்கிற பேருண்மை எந்த நேரத்திலும் இரத்த நாளத்தை வெடிக்கச் செய்வதான மரண பயத்தைத் தருகிறது. இந்தப் பரந்துபட்ட உலகில் சொந்தமாக ஒருபிடி மண்கூட இல்லாததைக் கவனப்படுத்தியபடியே அகதிகளின் கதையை நாடோடிகளின் கதையை விளிம்புகளின் கதையைப் பேசும் ரமேஷ்-பிரேமின் பேரினவாத எதிர்ப்புப் பிரதிகளை இத்தகைய கனத்த மனதோடுதான் வாசிக்க நேர்கிறது.
 
          தையல் காரனைப் போலவோ மளிகைக்கடைக் காரனைப் போலவோ என்னிடம் எந்த அளவுகோலுமில்லை. ரமேஷ்-பிரேமின் பிரதிகளை மதிப்பிடுவதான அல்லது இலக்கிய வரலாற்றில் அவற்றின் இருப்பு குறித்ததான நுட்பங்களுக்குள்ளும் நான் போகவில்லை.. ஏறத்தாழ இருபது வருடங்களில் ரமேஷ்-பிரேம் எழுதிய முப்பத்தைந்து கதைகள் குறித்த வாசிப்பனுபவத்தினூடாகச் சக வாசகனுக்கான சில முன்தயாரிப்புகளைத் தருவது என்பதனடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப் படுகிறது.
 
          வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தினூடே அரசியலையும் பொதிந்து வைத்திருக்கிற ரமேஷ்-பிரேமின் பிரதிகளில் பெரும்பாலானவை வாசகனுக்கான கோப்பைகளை மட்டுமே தயாரித்துத் தருகின்றன. அவற்றில் மதுவை ஊற்றிக் கொள்வதோ மருந்தை ஊற்றிக் கொள்வதோ வாசகனின் பிரதியனுபவத்தில்தான் இருக்கிறது. இவ்வகையில் 'பன்றி' கதை மிகுந்த கவனத்திற்குரியது. ஆதித்தாயின்  சாயலில் சாலையோரத்தில் குட்டிகளோடு படுத்திருக்கும் பருத்த பெண்பன்றி நவீன வாகனமான லாரி ஏறி இறந்து விடுவதான இந்தக் கதை சமூகத்தில் பன்றியின் பல்விதமான இருப்புகளை முன்வைக்கிறது. இக்கதையை வெறும் பன்றியைப் பற்றிய கதையாகவும் வாசித்துக் கொள்ளலாம். பெண்களுக்கெதிரான, தலித்துகளுக்கெதிரான, கருப்பர்களுக்கெதிரான, எந்தவொரு விளிம்புக்கும் எதிரான வன்மத்தைப் பேசும் பிரதியாகவும் வாசித்துக் கொள்ளலாம். ஆதிக் குடிகளை நிர்மூலமாக்கும் அதிகார வர்க்கத்தின் அழித்தொழிப்பை கவனப்பத்தும் கதையாகவும் இதனை வாசித்துக் கொள்ளலாம்.
 
          பொதுவாகவே ரமேஷ்-பிரேமின் கதைகள் வாசகனின் வரலாற்றறிவையும் அரசியலறிவையும் ஒருசேர எதிர்பார்க்கின்றன. இவை குறித்த கூடுதல் எதிர்பார்ப்பினால் முதலிரண்டு தொகுப்புகளும் வாசகனை ஒருவித மிரட்சிக்குள்ளாக்கவும் செய்கின்றன. அதே சமயம் வாசக மனதின் அறிதல் திறனுக்குத் தக்கவாறு வேறுவேறு விதமான புளகாங்கிதங்களையும் உடைப்புகளையும் இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.
 
          வரலாற்றுப் பிரதிகளைச் சிதைப்பாக்கம் செய்வதன் மூலம் வரலாற்றின் அரசியல் பின்புலங்களையும் மறைக்கப்பட்ட பக்கங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன ரமேஷ்-பிரேமின் கதைகள். சகமனிதனை அடித்துவிரட்டுவதும் அழித்தொழிப்பதுமாகவே நீளும் வரலாறு பேரினவாதத்தின் பாசிச மனோபாவத்தோடும் மனிதகுல விரோதியொருவனின் வன்மத்தோடும்தான் செயல்படுகிறது. எதிரியின் உடைவாளைக்கொண்டே எதிரியை வீழ்த்துவது போல இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் புனைவுத் தன்மையைக் கொண்டே வரலாற்றின் பாசிச மனோநிலைக்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' பிரதியை அதிலும் குறிப்பாக மைதூனா நாகரீகம் குறித்த பகுதியை இவ்விடத்தில் வாசித்துக் கொள்ளலாம்.
 
          விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த கவனமே இக்கதைகளின் மையநீரேட்டமாக ஒடுகிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே', 'காலவட்டத்திற்குள் இரண்டு கண்கள்' முதலான கதைகளைத் தலித் அரசியலைப் பேசும் கதைகளாக அடையாளம் காணமுடியும். 'பொம்மை-குழந்தை' கதை பைத்தியங்களைப் பேசுவதோடல்லாமல் தெருவோரங்களில் வீசப்படும் குழந்தைகளையும் கவனத்திற்குள் கொண்டுவருகிறது. விளிம்பிலிருப்பவற்றைப் பேசுவது என்பதைத் தாண்டி மையத்தை நிறைத்துக்கொண்டிருந்த குடிகள் விளிம்பிற்குப் பிதுக்கியெறியப் பட்டது பற்றிய கவலையே ரமேஷ்-பிரேமின் கதைகளில் அதிகம் வெளிப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் புதுச்சேரி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பன்றிகளை அதிகார வர்க்கம் அழித்தொழித்தது பற்றிக் கூறும் 'பன்றி' கதை இத்தகைய அரசியலைப் பேசுவதே. இவர்களின் கதைகள் பூர்வ குடிகள் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றையும், அகதிகளின் அவலங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன.
 
          ஆதி மனோநிலைக்கும் நவீன மனோநிலைக்கும் இடையிலான முரண்களினூடாக நகர்ந்து அறிவியலின் வன்முறையை அழித்தொழிப்பின் வன்முறையைப் பேசும் கதைகளாக இவற்றை வாசிக்க இயலும். விஞ்ஞானத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி ஆதி மனோநிலைக்குத் திரும்புவதன் மூலம் இயற்கையோடு கலப்பதே இக்கதைகளின் எத்தனிப்பாக உள்ளது. இந்த எத்தனிப்பு இயல்பாகவே சூழலியல் குறித்த கவனமாகவும் விரிந்து விடுகிறது. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன', 'நத்தைக் கதை' முதலானவற்றில் அணுசக்தியின் பேரழிவுகளைப் பேசுவதும், ஆதித் தாய் பற்றிய குறிப்புகளில் அவள் பச்சை நிறத்தவளாயிருப்பதும் (எ.கா. ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம், பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை) இந்த வகையில் கவனம் பெறுகின்றன.
 
          அறிவு அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அதிகாரம் பேரினவாதத்திற்குத் துணைபோகிறது. பேரினவாதம் தனது ஒற்றை அதிகாரத்தின் மூலம் விளிம்புகளை மறக்கடித்து விடுகிறது. இத்தகைய மறக்கடிப்பு அரசியலுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்தும் பிரதிகளாக ரமேஷ்-பிரேமின் கதைகளை வாசித்துக்கொள்ள முடியும். தன் வீட்டிலேயே வளர்ந்த பூனையை வீட்டுக்காரன் அடித்துத் தின்றுவிட்டுக் குறவன் தூக்கிப் போயிருக்கலாமெனக் கதைகட்டும் 'தொடர் மழைக் காலம்' கதை பேரினவாதமும் ஊடகமும் இணைந்து நிகழ்தும் மறக்கடிப்பு அரசியலைப் பேசும் குறியீட்டுக் கதையாக விரிகிறது. காலனியாதிக்கத்தின் அரசியலைப் புனைவினூடாக வெளிப்படுத்துவது (ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம்), நவீன பேரரசுகளின் ஏகாதிபத்திய வன்மத்தால் அழித்தொழிக்கப் பட்டவர்களைப் பட்டியலிட்டு அதன் அரசியல் பின்னணிகளைத் தெளிவு படுத்துவது (மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி) ஆகியவற்றின் மூலம் இவர்களின் பிரதிகள் பேரினவாதத்தின் முகமூடியைக் கிழித்தெறிகின்றன.
 
          நம் கண்ணெதிரே நிகழ்த்தப்பட்ட ஈழத்துப் பேரினவாதத்தின் வன்முறையை ரமேஷ்-பிரேம் தங்கள் கவிதைகளில் போலவே கதைகளிலும் தொடர்ந்து பேசிவந்துள்ளதை இப்பிரதிகளில் உணரமுடிகிறது. அகதி முகாம்களின் அவலத்தைப் பேசும் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை' கதையும் யாழ்ப்பானத்துத் தெருக்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவையும் அந்தப் போரின் தொடர்ச்சி கடல்கடந்து நம்மிடம் வர வெகுநாட்களில்லை என்னும் அபாய அறிவிப்பையும் வெளிப்படுத்தும் 'கோடைப்பகல் தூக்கம்' கதையும் இங்கு கவனம் கொள்ளத்தக்கன. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன' கதையில் உலகின் எந்தப் பேரினவாதத்தின் பேரழிவுடனும் பொருத்திப் பார்க்க முடியுமெனினும் அதன் மங்கலான நிலவியல் சித்திரம் அதைத் தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் பிரதியாக வாசிக்கும் மனோநிலைக்கு உட்படுத்திவிடுகிறது.
 
          பேரினவாதத்திற்கெதிரான கலகப் பிரதிகளான ரமேஷ்-பிரேம் கதைகள் விளிம்புநிலையரசியலைப் பேசுபொருளாகக் கொண்டது போலவே வடிவ ரீதியிலும் உத்தி ரீதியிலும் கூட ஏகத்துவத்தை உடைத்துப் பன்மைத்துவத்தை உடுத்துக்கொள்கின்றன. நேர்கோட்டு வாசிப்பிற்கெதிராக வரிசை மாற்றி அடுக்கப்பட்ட இப்பிரதிகள் அர்த்தங்களைத் தொடர்ந்து ஒத்திப் போட்டுக்கொண்டே வருவதன் மூலம் மையமறுப்பு அரசியலை நிகழ்த்துகின்றன. வாசகனை முடிவை நோக்கி நெருங்க விடாமல் செய்வதன் மூலமே இவை அதிகாரத்திற்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. கால, இடப் பரிமாணங்களில் செங்குத்தாகவும் கிடைக்கோட்டு நிலையிலும் நகரும் இப்பிரதிகள் ஒருவித எண்கணித விளையாட்டை நிகழ்த்திக் காட்டுகின்றன. முதலிரண்டு தொகுப்புகளில் இத்தகைய எராளமான கதைகளைக் காணமுடியும். வரலாற்றின் கருப்புப் பக்கங்களின் கருதுகோள்களைக் கொண்டு புதிய புதிய தொன்மங்களைப் புனையும் இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் உண்மைத் தன்மைக்கும் புனைவுத் தன்மைக்கும் இடையிலான மொழி விளையாட்டின் சதுரங்கப் பலகையாக விரிந்து விடுகின்றன.
 
          உலகின் ஒட்டுமொத்த அரசியலும் நிகழ்த்தப் படுவதற்கான களங்களாக உடலையும் மொழியையும் முன்னிறுத்தும் ரமேஷ்-பிரேம் கதைகள் தனது பூர்வ அடையாளங்களை மீட்டெடுக்க எத்தனிக்கும் இனங்களின் அடையாள அரசியலுக்கான கருவியாக மொழியை முன்மொழிகின்றன. உடல் ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உட்படுத்தப்படுவது. அந்தக் கண்காணிப்பிலிருந்து தப்பித்துப் புனைவின் மூலம் உடலைப் பூரண விடுதலை பெற்றதாகக் கொண்டாட வைக்கும் உடலரசியலை நிகழ்த்திப் பார்க்கின்றன ரமேஷ்-பிரேம் கதைகள். கண்காணிப்புக்குட்பட்ட லிங்க மையப் புணர்ச்சியிலிருந்து விடுபட்டு ஆணோடு ஆண் புணர்தல், பெண்ணோடு பெண் புணர்தல், அலியின் போகம், ஆண் சிறுமியோடு போகம் கொள்ளுதல், பெண் சிறுவனோடு போகம் கொள்ளுதல், ஆண் பெண்மிருகத்தைப் புணர்தல், பெண் ஆண்மிருகத்தைப் புணர்தல், கூட்டுப் புணர்ச்சி, யாரும் யாரோடும் உறவு கொள்ளும் கட்டற்ற வெளிக்கு உடலை நகர்த்துதல் என உடலைப் பூரண விடுதலையுடைய ஒன்றாகக் கொண்டாடுகின்றன இக்கதைகள். அதிகார மையத்தின் கண்காணிப்பு அரசியலை உடலின் மூலமாக மீறும் கலக ஏற்பாடு இது.
 
          உடல் அரசியலைப் பேசும் ரமேஷ்-பிரேம் கதைகள் எல்லா அதிகாரத்திற்கும் மூலகாரணியாக அதிகாரத்தின் பேருருவாக இருப்பது ஆண்மையமே என்னும் புள்ளியிலிருந்து கிளைத்து லிங்க மையத்தை உடைத்துப் போடும் பாலரசியல் பேசும் கதைகளாகப் பரிணமிக்கின்றன. ஆதிச் சமூகம் பெண் தலைமைச் சமூகமாகவே இருந்ததை இக்கதைகள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆதி சக்தியிலிருந்தே மும்மூர்த்திகளும் பிறந்ததான தொன்மம் ஊடுபிரதியாகச் சொல்லப்படுகிறது. 'வியாசகுலம்' கதை லிங்க மையத்தை ஆட்டம் காணச் செய்து பெண்ணின் இருப்பு குறித்த உரையாடலை நிகழ்த்துகிறது. வைத்தியனொருவன் சிவனின் பெயரால் பிள்ளையில்லாத பெண்களுக்குத் தன் விந்தையே மருந்தாகச் செலுத்துவதைப் பேசும் அக்கதை 'பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் கொள்கலம் தானா? பிள்ளையில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழவே முடியாதா?' என்னும் கேள்விகளை முன்வைக்கிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே' கதையில் ஆண் கடவுளை வழிபடும் முப்புர ராசாக்களால் விரட்டியடிக்கப்பட்டு வெகு காலத்திற்குப் பிறகு தன் பூர்வ நிலத்திற்கு மீளும் தாழ்த்தப்பட்ட குடிகளுக்கு வழிபடுவதற்கெனப் பெண் கடவுள் காத்திருக்கிறது. 'குருவிக்காரச் சீமாட்டி' கதை ஆண்களை வெளியே நிறுத்தி பெண்களுக்கான கதை வெளியை உருவாக்குகிறது. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' கதை பெண்ணிய அரசியலைப் பேசும் தொன்மங்களைப் புனைகிறது..
 
          ஆண் தன்மையுடைய பிரதிகள் மையத்துடன் இருக்கும். அதன் விரைப்பு முடிவை நோக்கிச் சுட்டியபடி இருக்கும்.. பெண் தன்மையுடைய பிரதிகளில் இறுக்கமிருக்கலாம். ஆனால் தளர்வுகள்- மையபடுத்தப் படாத பல புலன் சிலிர்ப்புகள்- கலைந்து கிடக்கும் பலவழிப் புழைகள்- விட்டு விட்டுத் தொடரும் அர்த்தத்தின் திருகு மாற்றங்கள் என விரிந்து கொண்டேயிருக்கும். (கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். ப.90). ரமேஷ்-பிரேமின் கதைகளும் அக்கதைகளின் அரசியலும் இத்தகைய பெண் தன்மை கொண்டவையாகவே இயங்குகின்றன.
 
          ரமேஷ்-பிரேம் கதைகளை இரண்டாயிரத்திற்கு முன்பு எழுதப்பட்டவை, இரண்டாயிரத்திற்குப் பின்பு எழுதப்பட்டவை என்னும் இரண்டு பகுப்புகளுக்குள் வைத்துப் பார்க்க முடியமெனத் தோன்றுகிறது. இப்படியொரு கோட்டை வரைந்து கொள்கையில் இக்கதைகளின் பரிமாணங்களில் எற்பட்ட மாற்றங்களெனச் சிலவற்றை அனுமானிக்க முடியும். முந்தைய காலக் கதைகள் உலக வரலாறுகளையும் மேற்கத்திய சிந்தனைத் தொகுப்புகளையும் அதிகம் உட்கொண்டு இயங்கும் கதைகள். இட, காலப் பரிமாணங்களின் மங்கலான சித்திரத்தை மட்டுமே வரையும் இக்கதைகள் அந்தரத்தில் தொங்குவதான பாவனையை ஏற்படுத்துகின்றன. அதிகம் பாத்திரப் பெயர்களில்லாத நீண்ட வாக்கிய அமைப்புடன் எழுத்து வழக்கிலான உரையாடல்களைக் கொண்டியங்கும் கதைகளாக இவற்றை வரையறுத்துக் கொள்ளலாம். கால அடுக்குகளில் முன்னும் பின்னுமாக நகர்வதன் மூலம் வாசகனின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் கதைகளாக இவை இயங்குகின்றன. 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்' தொகுப்பை வாசகனின் அதீத பொறுமையை எதிர்நோக்கும் தொகுப்பாக அடையாளம் காணலாம்.
 
          இரண்டாயிரத்திற்குப் பிறகு வெளிவந்த கதைகளில் கூறுமுறையில் எளிமை கூடியிருக்கிறது. புதுவையின் நிலவியலை வரைந்து காட்டும் கதைகளாக இவற்றை வாசிக்கமுடியும். இட, காலப் பரிமாணங்களின் தெளிவான சித்திரத்தை இவற்றில் காணலாம். கடந்த இருநூறாண்டு கால எல்லைக்குட்பட்ட கதைகளாகவே இயங்கும் இவற்றில் எளிய வாக்கிய அமைப்பையும் பேச்சுவழக்கிலான உரையாடல்களையும் காணமுடியும். தலைப்பிடுவதில் கூட முந்தயகாலக் கதைகளுக்கும் பிற்காலக் கதைகளுக்குமிடையே மிகுந்த வித்தியாசத்தைக் காணமுடிகிறது. (எ.கா. மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி, பன்றி).
 
          ரமேஷ்-பிரேமின் கதைகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொள்வோமெனில் விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துப் பேசும் கதைகளெனவும் பூர்வ மையம் விளிம்புகளில் வழியவிடப்பட்டதின் வன்மத்தைப் பேசும் கதைகளெனவும் வரையறை செய்து கொள்ளலாம். எனினும் அர்த்தங்களை அடுத்த கணத்திற்கென ஒத்திபோடும் இப்பிரதிகளில் வாசக அனுபவத்தினூடாக முடிந்த ஒற்றை முடிவுக்கு வரமுடியுமெனத் தோன்றவில்லை. சக வாசகராகிய உங்களுக்கு இக்கதைகள் என்னுடைய வட்டத்திற்கு வெளியே வேறுவிதமான உடைப்புகளை ஏற்படுத்திவிடும் சாத்தியமிருக்கிறது. எனவே இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளாமல் தொடர் ஓட்டத்தின் முதல் ஓட்டக்காரனைப் போல இதன் தொடர்ச்சியை உங்கள் பொறுப்பில் விட்டு விடுகிறேன். எனக்குச் சார்பாகவோ எதிராகவோ சம்பந்தமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் இதன் தொடர்ச்சியை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
நன்றி: மணல் வீடு ( டிசம்பர் 2009)

காகங்கள் அங்கு பறந்தன, காற்று இனித்தது
பிரசாந்தி சேகர்
http://www.kalachuvadu.com/issue-175/page29.asp


சொல்லித் தீராத் துயர் ஒன்று என் கைகளுக்குள். எழுதி மாளா கனம் ஒன்று என் நெஞ்சுக்குள். இட்டு நிரப்ப நீ வேண்டும். உன்னிடம் பகிர்ந்து நான் மீளவேண்டும்.

மரித்தாலும் மறக்கா நெடுந்துயரின் பதிவு இது.
உயிர்த்தாலும் துரத்தும் கொடுங்கனவின் பதற்றம் இது.
எரித்தாலும் எரியாச் சிறு கூட்டின் வாழ்வு இது.

இரவொன்று வேண்டும் இந்த ஒளியைப் புரிந்திட. அவ்வாறான இரவு இது. ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள் மின்னக்கண்டேன், அங்கும் இங்கும். சரசரக்கும் இலைகளுக்குள், சடைத்த மரக்கொப்புகளுக்குள், அடர்ந்த காடுபோல் அமைந்த இந்த ரயில் நிலையத்தினுள், துருப்பிடித்து மணக்கும் இந்தக் காற்றினுள், மின்னும் உறுப்பை வால்பகுதியில் கொண்ட இந்தச் சிறுபூச்சிகள் கூட்டமாய்ப் பறந்து, விட்டுவிட்டு மின்னியும் விடாது மின்னியும் முடிச்சுப் போடும் கதைகள் ஒன்றல்ல. காத்திருக்கின்றேன். ஒவ்வொன்றாய் அவிழ்த்தபடி. ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒருமுறை விரைந்து வந்து சடசடத்துக் கடந்துபோகும் ரயிலைப் பார்த்தபடி பயணிக்க இங்கு நான் வரவில்லை. இங்கு அமர்ந்து என்னை மீட்டிட வந்தேன். நெஞ்சினில் கனன்றெரியும் கதை ஒன்றைச் சொல்லிட வந்தேன். இது எனது கதையா? எனது வேரின் கதையா? எனது விருட்சங்களின் கதையா? சொல்லத் தெரியவில்லை. சொற்களுக்கும் சக்தி இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்த ரயில் நிலையத்தில் பதிந்த கதை இது. இணையாகச் செல்லும் தண்டவாளங்களில் தொடங்கிய கதை. அதனுள் இரும்பாய் ஊறி இரத்தமாய்க் கசிந்த கதை. விழிகளில் கடந்துபோகும் ரயிலின் ஒவ்வொரு சடசடப்பிலும் உயிர் உறையும் கதை. சற்று இறங்கி இந்த இரும்புப் பாதையில் ஒருமுறை காது வைத்துக் கேட்டுப்பார்! ஒரு தேசத்தின் அழுகுரல் உனக்குக் கேட்கவில்லையா? ஓர் இனத்தின் சாவுப் பாடல் உன் நெஞ்சைப் பிசையவில்லையா? உள்ளமெல்லாம் கனக்கவில்லையா? உணர்வழிந்து போகவில்லையா? மின்னிப் பறக்கின்றனவே இந்தப் பூச்சிகள். நீயும் 'ஓம்' என்று ஓர் வார்த்தை தலையசைத்துச் சொல்! உன் கைப்பிடித்து உன்வேருக்குள் நீராய் ஊற்றுவேன், நீளும் என் நினைவுதனை. தீராத் துயர்தனை.

ஓர் ஊரில் ஓர் எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

- Elzunia

இது ஒரு சிறுமியின் காலணிக்குள் மடித்து வைக்கப்பட்டுப் போலந்தின் லுப்ளின் எனும் ஊரில் 1944ஆம் ஆண்டு இறந்தவர்களின் உடமைகளுடன் கண்டெடுக்கப்பட்ட கவிதை. அதனை எழுதியவள் எல்சூனியா என்ற ஒன்பது வயதுச் சிறுமி. போலந்து மொழியின் சிறுவர் பாடல் ஒன்றின் மெட்டில் அவள் அந்த வரிகளை எழுதிப் பாடி வந்தாள். பிறிதொரு நாள் யாருமற்று அவள் இறந்துபோனாள் என்று சொல்கிறது ஒரு குறிப்பு. எல்சூனியாவின் மரணம்; அது இயற்கையாய் நிகழ்ந்தது அல்ல. ஓர் இனத்தை சேர்ந்தவள் அவள். அதற்குரிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டவள். அதனால் முகிழ்க்கு முன் காலன் அவளைக் குரூரமாகக் கூட்டிச் சென்றான். எல்சூனியா இன்று இல்லை. அவள் அப்பா இல்லை. அம்மாவும் இல்லை. அவள் எழுத்து மட்டும், சாம்பலை ஊதி ஊதி விலக்கப் பூத்துக்கிடக்கும் நெருப்புப்போலத் தணலாய் எரிகிறது. சாவையும் மீறி, சரித்திரத்தின் சிவந்த பக்கங்களில்.

1939 & 1945: இரண்டாம் உலகப்போரின் காலப்பகுதி அது. எனக்கு அது இருண்டகாலம். ஒரு சொல்தான். ‘ஹோலோகௌஸ்ட்’. கிரேக்க மொழியில் ‘ஹோலோகௌஸ்ட்’ என்பது ‘முற்று முழுதாய் எரித்தல்’ என்று பொருள்படும். கிரேக்க மற்றும் உரோமானிய வழிபாட்டு முறையில் நிலத்தெய்வங்களுக்குக் காணிக்கையாக விலங்கினைப் பலிகொடுப்பதுண்டு. பலியிடப்பட்ட அந்த விலங்கு முற்று முழுதாய் எரிக்கப்படும். எரிந்த அந்த இருண்ட படையலே அதி உச்ச வேள்வியாகக் கருதப்பட்டது. அதுவே ‘ஹோலோகௌஸ்ட்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக ‘ஹோலோகௌஸ்ட்’ என்பது ஓர் இனத்திற்குச் சொந்தமான சொல்லாகியது. இரண்டாம் உலகப் போரின்போது அவ்வினத்திற்கு நிகழ்ந்த பேரிடர் அது. முற்றுமுழுதாய் ஓர் இனம் எரிக்கப்பட்ட அனர்த்தம். இனப்படுகொலை. ‘யூதர்’ (யிமீஷ்s) எனும் பெயர் கொண்ட இனத்திற்கு நிகழ்ந்த பெருந்துயர் அது.

11ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அந்நியரின் ஆட்சியினால் தமது சொந்த நிலமான இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து உலகமெங்கும் சிதறிப் பரவினர் யூதமக்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகம், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதமக்களின் எண்ணிக்கை சுமார் 9 இலட்சத்தைத் தொட்டது. போரின் முடிவில், ஆறு இலட்சம் யூதமக்களின் உயிரைக் குடித்தது ‘ஹோலோகௌஸ்ட்’. ஒருவனே அதனை மூர்க்கமாக நிகழ்த்தி முடித்தான். ஜெர்மனி நாசிக் கட்சியின்

(ழிஷிஞிகிறி) தலைவன். அடோல்ப் ஹிட்லர் அவன் பெயர். மானுடத்தின் எதிரி. மனித இனத்தின் பெரும் பகைவன். ஆரிய இரத்தத்தில் பிறக்காதவர்கள், தனது கருத்திற்குத் தலையசைக்க மறுத்தவர்கள், ‘வானம் பச்சை’ எனக் கருதியவர்கள். ‘நிலம் நீலம்’ எனச் சொல்லியவர்கள் அனைவரையும் அழித்தான். அழிப்பின் விதைகளை வெகு நுட்பமாய்த் தூவினான். மானுடத்தைப் பொய் யாக்கி, பொய்யைப் பெரிதாக்கினான். அந்தப் பெரிதைச் சில வார்த்தைகளுக்குள் சிறிதாக்கினான். அந்தச் சிறு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க அதுவே பெரும் மெய்யாகிப் போனது. அந்த மெய்யில் மரித்தனர் ஆரியர் அல்லாத யூதர், ஜிப்ஸீஸ், கம்யூனிஸ்ட், ஊன முற்றவர், ஓரினச் சேர்க்கையாளர்; இன்னும் எத்தனையோ இனத்தால், மதத்தால், நிறத்தால், தேசத்தால் வேறுபட்டவர்கள்; மொத்தம் 15 இலட்சம் உயிரிகள்.

மாண்டவர் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. மரணத்திற்குக் கணக்குப் போட்டுப் பெருக்கவும் விரும்பவில்லை. மரணத்திற்கு முன் எழுதப்பட்டது ஒரு பதிவு. ஓர் இனத்தின் கையெழுத்து. எல்சூனியாவின் கவிதையைப் போல இன்னும் ஆயிரமாயிரம் வரிகள் என் கைகளுக்குள் கனத்துக் கிடக்கின்றன. மரணத்திற்கு முன் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் வண்ணங்கள் தீர்ந்துபோன சாகாச்சித்திரம். அலங்காரம் இல்லை. அணி இல்லை. அழகு இல்லை. சொற்களை உடைத்தேன் சாம்பல் பறந்தது. நீ சொல். மரணத்திற்காகச் காத்திருக்கும் அந்தக் கொடிய கணத்தில் எழுதுவது சாத்தியமா? சுயம் தொலைந்து, மனம்பிறழ்ந்து, உடல் தேய்ந்து துடிக்கும் நொடியிலும் படைப்பது சாத்தியமா? சாத்தியமாயிற்று. பலருக்கு அது சாத்தியமாயிற்று. போலந்து நாட்டின் ஔஷ்விற்ஸ் (Auschwitz) எனும் பெரும் நிலத்தில் எழுதப்பட்டதனால் அவை ஔஷ்விற்ஸின் கவிதைகளாயிற்று. தொட்டுப் புரட்டியபோது அவை எனதாகின. மைதொட்டு எழுத நேர்ந்த அந்தக் கணம், இரத்தத்தில் தோய்ந்தது எனது இறகு. சாம்பலாகின வார்த்தைகள். வாழாத ஒரு காலத்தில் வாழ்ந்தேன். போகாத ஓர் ஊருக்குப் போனேன். வேகாத ஒரு நிலத்தில் வெந்து, எரிந்து, சாம்பலாகித் தொலைந்தேன். புலன்கள் அனைத்தையும் இழந்தேன்.

உணர்வழிந்து போனேன். விரல்களுக்குள் வலி எடுக்கும் இந்தச் சாவுப் பாடல்களில். யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்டால் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

விலங்குகளைச் சுமக்கும் புகைவண்டிகள்
மனிதர்களைச் சுமந்தன
ஒரு சொட்டு நீருக்கு, கீற்று ஒளிக்கு
கொஞ்சம் காற்றுக்கு
கொடுத்தோம் படையினருக்குத் தங்கக்காசை
எமை இகழ்ச்சியாய்ப் பேசும்
இனிவரும் தலைமுறை
நம்பிடாது எமக்கு நேர்ந்த இடரை மட்டும்

(Tadeusz Borowski)

ஐரோப்பாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளிலிருந்தும் ரயில்வண்டிகள் புகைத்தபடி புறப்பட்டன. மனிதர்களாய் நாம் வாழ்ந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு, ஆடு, மாடு, குதிரைகள் போல நெருக்கித் தள்ளித் திணித்து அடைக்கப்பட்டோம், பொறித்தாழிட்ட ரயில்பெட்டிகளுக்குள். திசை ஒன்று கண்ணுக்கு எத்துப்பட இந்தப் பெட்டிகளுக்கும் ஜன்னல் இல்லை. எங்கு போகிறோம்? தெரியவில்லை.

ஔஷ்விற்சை நோக்கி ஔஷ்விற்சை நோக்கி
விரைகின்றன சக்கரங்கள்

(Karl-Heinz Czechowski)

போகும் இடத்தில் எமக்கு வேலை உண்டு. தங்க இடம் உண்டு. உணவும் உண்டு. அதுமட்டும் தெரியும். அதுபோதுமல்லவா? அறிவுக்கு அதுபோதும். ஆயினும், இதயம் விசித்திரமாய்த் துடிக்கிறது. காற்று இல்லை. ஒளியில்லை. நீர் இல்லை. உணவில்லை, இந்த நெடுநாள் பயணத்தில். மலம் கழிகிறது. சிறுநீர் மணக்கிறது. வியர்வை கசிகிறது. இருள் கவிகிறது. எங்கும்.

தண்ணீர், தண்ணீர்,
தண்ணீர் கொடுங்கள்
நா ஊதி உப்பிற்று
உதடு கொதித்து வெடித்திற்று

(Zofia Grochowalska Abramowicz)

யாரும் என்னை அங்கு கண்டீர்களா? சுவாசப்பை சுருங்கிப்போக ஒருசொட்டுக் காற்றுக்காய் நான் தவித்தேனே. யாரும் என்னைக் கண்டீர்களா? என் அருகில் நசிபட்டுத் தூங்கி விழித்த அந்தக் குழந்தை நீருக்கு வீரிட்டு அழுகிறது. அதன் அம்மா அசைவற்றுக் கிடக்கிறாள். அசைவுறும் நான் வெறுங்கைகளுடன். இது கொடுமை. கழிந்த மலத்தில் மயங்கிக் கிடக்கிறான் இன்னொருவன். அவனை எழுப்ப முயன்று தோற்றுப்போனாள் ஒருத்தி. அவளின் கண்ணீரிலும் துடிக்கவில்லை அவனது விழிகள். காற்றுக்கூடப் புகுந்து கொள்ளாத நெருக்கத்தில் மரணம் புகுந்து விழித்தபடி இருந்தது. இருளோடு இருளாக அது கூடவே வந்தது. கண்களைக் கட்டிக் கூட்டிச் சென்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பலரை. ஒளியின்றி, ஓசையின்றி. இன்னும் நெடுநாள் நீளுமா இந்தப் பயணம்? சொல், சுருங்குமா எம் வாழ்வு?

சட்டெனச் சக்கரங்களின் சடசடப்பு ஓய அடைத்து மூடிய கதவுகள் திறந்துகொண்டன. காற்று, அதனைக் குடித்தும் தீரவில்லை தாகம். ஒளி, அது தெறிக்கக் கண்கள் பனிக்கின்றன. பெயர் அறியா இந்தப் பெரும்வெளியில், உள்ளமெல்லாம் ஊசியாய்க் குத்தும் இந்தப் பனி நிலத்தில் பதித்தோம் எம் கால்களை.

வரைபடத்தில் இந்தப் புள்ளி
இந்தக் கறுப்புக்கறை. ஐரோப்பாவின் நடுவே.
இந்த சிவப்புக்கறை. இந்த துருப்புக்கறை.
இந்த இரத்தக்கறை. இந்த சாம்பல்கறை.
எண்ணற்ற மக்களுக்கு. பெயரற்ற நிலம் இது.
தமது வாழ்வுடன். தமது நினைவுகளுடன்.
சின்னச் சின்ன குற்றங்களுடன். பெரிய பெரிய கனவுகளுடன்
இறக்கிவிடப்பட்டனர்.
அந்த விழிகள் கேட்டன. ஆயிரம் கேள்விகள்
இங்கு வந்தவர்களுக்கும் தெரியாது
சென்றவர்களுக்கும் தெரியாது இந்த நிலத்தின் பெயர் யாதென்று.

(Charlotte Delbo)

ஔஷ்விற்ஸ், அதன் பெயர். போலந்து நாட்டின் கிராகோவ் (Krakov) எனும் நகரத்திலிருந்து முப்பது மைல்கள் தென்நோக்கி அமைந்த ஊரின் பெயர்தான் ஔஷ்விற்ஸ். அமைந்த ஊர் அல்ல. ஆரியர்கள் அமைத்த ஊரது. அவ்வளவும் தானா?

வைக்சல் (Weichsel) நதிக்கும் சோலா (Sola) நதிக்கும்
இடையில் கிளைவிட்டு
சேற்று நிலத்தில் முட்கம்பிகள் சூழப்
பரந்து கிடக்கிறது ஔஷ்விற்ஸ்
போலந்து மலைகளின் அடிவாரத்தில்
சாபம் போட்ட கூடல்லவா அது?

(பெயரற்ற கவிஞன்)

நாம் ஏன் இங்கு வந்தோம்? இங்கும் அங்கும் எங்கும் சுற்றிக்கிடக்கும் முள்வேலிகளுக்குத் தெரியும். மின்கம்பிகளுக்கும் தெரியும். தூரத்துக் காப்பரன்களுக்குத் தெரியும். செங்கல் தொடர் குடியிருப்புக்களுக்கும் தெரியும். மரப்படுக்கைகளுக்குத் தெரியும். புகைக்கூடுகளுக்கும் தெரியும். இங்கு உலவும் ஆரியர்களுக்குத் தெரியும். அவர்களின் கைப்பிடியில் ஓட்டம் பிடிக்கும் பசி நாய்களுக்கும் தெரியும். ஏன், இந்த நிலத்திற்கும் காற்றுக்கும் நன்றாகவே தெரியும். எமக்கு மட்டும் தெரியாது போயிற்று. அறிவுக்கும் கிட்டாது போயிற்று. எமது உடைமைகள் தனித்தொதுக்கப்பட வேகமாய் நடக்கின்றோம் அந்த வாயிலை நோக்கி.

எழுதப்படாத வீரகாவியம் இங்கு பிறக்கின்றது
அவலம் நிறைந்த இறுதிக்காலம் எமை அழைக்கிறது.

(Tadeusz Borowski)

தூரத்தில் புகைக்கூடுகள் புகைத்துக்கொண்டே இருக்கின்றன. அது இரசாயனத் தொழிற்சாலையா? அங்குதான் எமக்கு வேலையா? விறைக்கின்றன எனது கால்கள். நடுக்கம் கொள்கின்றன எனது விரல்கள். யாரும் என்னை அங்கு கண்டீர்களா? இரும்பு எழுத்துக்கள் பதித்த அந்த நுழைவாயிலில் ஓரமாய் நான் ஒதுங்கி நின்றேனே. புரியாத பல கேள்விகளுடன் அந்த எழுத்துக்களில் பதில்களைத் தேடினேனே. யாரும் என்னைக் கண்டீர்களா? வரிசையில் என்னைக் கடந்துபோயின பல கால்கள். "உழைப்பு உன்னை விடுதலை செய்யும்" (Arbeit Macht Frei) என்று சொல்கிறது ஒரு வாசகம், இந்த வாயிலில். ‘உழைப்பு’ ‘விடுதலை’ முரண்படும் இரண்டு புனிதப்பொருள் கொண்ட கூற்றுகள். உழைப்பிற்கும் விடுதலைக்கும் வெகுதூரமல்லவா? அறிவுகட்ட முயன்ற படங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது ஒருசேர மறுக்கின்றன. நொருங்கி விழுகின்றன. இந்த நிலத்தில். உனக்காயினும் புரிகிறதா? இமை கொட்டக் கொட்ட விழிக்கும் இந்தக் கணம் பனிச்சூரியனின் கதிர்கள் இரத்தச் சிவப்பாய் வானத்தைப் புண்ணாக்க, இழுத்து வரிசையாக்கப்படுகிறேன். எங்கும் வரிசைகள். நீளும் பட்டியல்கள்.

பெண்கள். ஆண்கள்.
குழந்தைகள். பிஞ்சுப்பாலன்கள்
பலமானவர்கள். பலமற்றவர்கள்
முடி நரைத்தவர்கள். பார்வை மங்கியவர்கள்
ஆண் போன்ற பெண்கள். பெண் போன்ற ஆண்கள்.
நீள்மூக்கு மனிதர். கூர்நாடிக்காரர்
மனிதரில் இத்தனை வகை
இந்த நிலத்தில் மட்டும்

(பெயரற்ற கவிஞன்)

இதயம் ஓங்கி அடிக்க உன்னைக் கேட்கிறேன். இதில் நான் எந்த வகை? யாருக்கும் தெரியுமா? சொல்லுங்கள். என்னைப் பற்றி எனக்கே தெரியாதவையெல்லாம் அவனுக்குத் தெரிகிறது, இங்கு அமர்ந்து பட்டிய லிடுபவனுக்கு. எனது உடல்வாகு, உயரம், எடை, பார்வைக் கூர்மை, கால்களின் சக்தி, கைகளின் வீரியம் யாவும் ‘பலமானவர்கள்’ எனும் பட்டியலில் சேர்கின்றன. அந்த வரிசையில் நடக்கின்றேன்.

புயல் - அது வீசி எறிந்தது
எமை இந்த நிலத்தில்
சுமந்துபோனது
நதியில் மிதக்கும் கிளையாய்
காட்டினுள் தொலைந்த குழந்தைகள் நாம்.

(Tadeusz Borowski)

எனக்கு முன்நின்ற அந்த முடி நரைத்த பெண் எங்கே? பார்வை மங்கின பெண் எங்கே? தனது கைகளில் இருந்த குழந்தையைப் பறித்தெடுக்கக் கதறியழுத அந்த அம்மா எங்கே? அந்தக் குழந்தை எங்கே? எம்முடன் நடந்து வந்த ஆண்கள் எங்கே? புகைக்கூடுகள் புகைத்தபடியே இருக்கின்றன. அதற்குள் கடின உழைப்பு எமக்காகக் காத்திருக்கிறதா? உழைக்கத்தானே நாம் இங்கு வந்தோம்? உழைத்து வீடு செல்லத்தானே நாம் இங்கு வந்தோம்? கேள்விகள் பதில்கள் அற்று முளைக்கின்றன. கண்களைக் கசக்கி விழிக்கிறேன். கொடுங்கனவாய் இது இருக்கக் கூடாதா?

பெயர் யாவும் பூச்சியத்திற்கும் கீழ்
இலக்கம். அதுவே இந்த நிலத்தின் அரசன்
பசியுற்றது ஓர் இலக்கம். பலநாள் ஆகாரம் இன்றி
நோயுற்றது ஓர் இலக்கம். குருதிக்கட்டிகள் பெருக்கெடுக்க
உயிர்விட்டது ஓர் இலக்கம். இது வேடிக்கையான கூற்று
மனிதர்தானே இறப்பர். இலக்கம் இறக்குமா?

(Franciszek Stryj)

சுயத்தையும் மனிதத்தையும் ஒரு நொடியில் சிதைக்க முடியுமா? யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்களை இறுக்கி மூடி, பற்கள் நொருங்கக் கடித்தேன். கூரான ஆணிகள் பதித்த இரும்புக் கல்லை ஆறு தடவை எனது இடது நெஞ்சினில் குத்தி எடுத்தான் ஒருவன். அம்மா... அம்மா... அம்மா... புழுத்துடியாய்த் துடித்தேனே. யாரும் என்னைக் காணவில்லையா? இதயம் வெம்பி அழுதது. சொட்டுச் சொட்டாய் இரத்தம் வழிந்தொழுக நெஞ்சு நனைந்தது. காயாத அந்தப் புதுப்புண்ணில் நீல மையைத் தடவினான் இன்னொருவன். மூச்சு நின்றது. முகம் தொலைந்தது. சுயம் இழந்து நான் இலக்கமானேன். "157622". புலன்களில் உச்சமென நான் கருதும் தொடும் மொழி எனக்குத் தொலைவாய்ப் போயிற்று. இனி, என்றும் அது எனக்குக் கிட்டாது. எனக்கும் என் உடலுக்குமான உரையாடல்கள் இந்தக் கணம் முதல் முற்றுப்பெற்று முடிந்துபோயின.

ஆரியனே, கயவர்களே
நெஞ்சு மட்டுமல்ல. கை, கால்
கழுத்து, உடலனைத்தும் உனக்கே
பச்சை குத்து. சிவப்பாக்கு ஆணி வைத்து
நீல மை தடவு. வண்ணமாக்கு
துடிக்காது இனியும் இந்தத் தேகம்.

(பெயரற்ற கவிஞன்)

இனியாரும் என்னைப் பெயர் கொண்டு அழைக்காதீர். 'விசித்திரமானவள்' என்ற குட்டிக்குட்டிக் கனவெல்லாம் குத்திக்குத்தி வலிக்கின்றன. விட்டுவிட்டுப் போகின்றன. இனி, அவளும் மற்றவளும் நீயும் நானும் ஒன்றே. வெவ்வேறு இலக்கங்களுடன். புகைக்கூடுகள் ஓய்ந்த பாடில்லை. எரிந்து எரிந்து புகைக்கின்றன. இனி, நாம் இழப்பதற்கு ஏதும் இருக்கிறதா?

இலைகள் உதிர்கின்றன நாள்காட்டியிலிருந்து
வாழ்வின் சக்கரம் தொடராய்ச் சுழல்கிறது
நேற்றைய கொடுங்கனவு. அது மறந்தாயிற்று இன்று
இன்றைய நினைவு. அது மழுங்குது மெல்ல
என் சகவாசியே! உனக்கு நினைவிருக்கிறதா?
பனியில் வெறுங்கால்களுடன்
காலணிகள் எம் கனவாகின
தலைமுடி மழிக்கப்பட்டு
முடி எம் கனவாகின

(Miroslaw Lebkowski)

யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்டிருக்க மாட்டீர்கள். எனது தோற்றம் எனக்கே அந்நியமாய், அவமானமாய், தலைமுடி மழிக்கப்பட்டு உருக்குலைந்து நின்றேன். மொட்டைத் தலையுடன். முதிர்ந்த குழந்தையாய். கொட்டும் பனியில். தலைத் தோல் விறைக்க. யாரும் கண்டீர்களா?

கத்தரிக்கப்பட்ட முடி
கொத்துக்கொத்தாய். நிலமெங்கும்
தோளிலும் காலிலும்
கழுத்திலும் விழுகிறது
கண்ணீர் மொழியாகி
அது கரைகிறது. விழுந்த
எனது சுருள்முடியில் கலந்து

(Anna Sonschein)

கட்டற்று அலைகிறது மனது. கரைபுரண்டு வழிகிறது நினைவு. இனி, அழுவதற்கும் என்னிடம் கண்ணீர் இல்லை. நான் மட்டுமா? இலக்கங்களாக உலவும் இந்த நிலத்தின் அத்தனை உருவங்களும் முகம் அற்று, முடி அற்று ஒரே உடையில்.

நீள்வரி ஆகின எமது ஆடைகள்
நீங்கின எமது முடி
விதிக்கு அப்பாற்பட்டவர் நாம்
மனிதனாய் இருப்பவனும்
கலைஞனும் சிந்தனை யாளனும்
அடிமைகளின் ஆடையில்

(Kupfer Kobernitz)

பழுப்பு நீலவண்ணத்தில் வெள்ளை நீள்வரி. இனி, இதுவே எமது உடையாகிற்று. அவளின் உடலில் அது பெருத்துத் தொங்குகிறது. எனக்கோ காலுக்கு மேலேறிக் கழுத்துவரை இறுக்கி நெரிக்கிறது. நீள்வரி உடையில் அடுக்கடுக்கே உயர்ந்த மரப்படுக்கைகளில் குறுக்கும் நெடுக்குமாய்க் கிடக்கிறோம். இந்தக் குடில்களில். குடில், இந்தச் சொல்லுக்குள் எத்தனை அன்பு, பரிவு, அரவணைப்பு, உறவு, சூடு, சுகம். தொலைத்தோமே இவையாவற்றையும் நாம். குடில்களில் மனிதர் வாழ்வார் இல்லையா? எமக்கென ஒதுக்கப்பட்டிருப்பதோ விசித்திரமான குடில்கள். எட்ட நின்று பார். எத்தனை அழகான செங்கல் குடில்கள். மரத்துண்டுகள் பதித்த குடியிருப்புகள். கிட்டவந்து குடிலுக்குள் ஓர் அடி வைத்துப் பார். மனம் வெடித்துச் சிதறும். விலங்குப் பண்ணைகள் இவை. ஆடுகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள், கோழிகள் வளர்ந்து திரிந்த குடில்களுக்குள் நாம். மடிக்குள் பொத்தி வைத்து வளர்த்த என் அம்மா சித்தம் சிதைவாள் இதனைப் பார்த்து. முடி கோதி முத்தமிட்ட என் அப்பா துடித்துப் போவார். இதனைக் கண்ணுற்று. துடித்துத் துவளவில்லை நான். முகம் தொலைத்து, முடிதொலைத்து, பெயர் தொலைத்து, அறிவையும் தொலைத்த எமக்கு இந்த விலங்குப் பண்ணைகள்தான் தகும். மனிதர் அல்லவே நாம். குடில்களில் வாழ!

எம் கண்களில் வெண்படலங்கள்.
அதன் அடிவாரத்திலோ
மறக்கப்படாமல், மரிக்காமல்
வலி தந்து உறைகிறது
துயர், இழப்பு, இன்னல்
நெடுந்துயர், கடும் இழப்பு
பேரின்னல்

(Zofia Grochowalska - Abramowicz)

கால்விரல்களுக்குள் வைக்கோல் சிக்குப்படுகிறது. மேலெங்கும் விலங்குகளின் எச்சங்கள். என் அருகில் தூங்க முயன்றவள் சத்தி எடுத்து, கத்தி அழுகிறாள். ‘அழாதே’ என்று நான் எப்படி அவளுக்குச் சொல்ல? அவள் வேகமாய் ஓடுகிறாள். இருண்டவெளிதனில். அவளை நிறுத்த யாரும் இல்லையா? சட்டென ஓர் ஒலி. கண்கள் ஒருமுறை ஒளிர்ந்து இருள, மின்கம்பிகள் மின்னிப் பொரிந்தன. சிவந்து வழிந்தன. என் நா அசைவற்றுப்போயிற்று. என் வார்த்தைகள் எங்கே? தொலைத்தேன். சொல் கோர்த்துப் பேசும் மொழிதனைத் தொலைத்தேன். என் மௌனம் யாருக்கும் கேட்கவில்லையா? தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் நீள்கிறது இந்த இரவு. மரணம் மட்டும் துளிகூடத் தூங்காது விழித்திருக்கிறது. கால்கள் நடந்த பாதையெங்கும் துரத்திப் பிடித்துக் கவ்விக்கொண்டது. வெவ்வேறு வடிவில். இனி விடியாத பல காலைகளும் விரியாத பல பகல்களும் மடியாத பல இரவுகளும் இந்த நிலத்தில் மரணத்துடன் மல்லுக்கட்டி. நேற்று அவள், இன்று இன்னொருத்தி. நாளை வேறொருத்தி. மறுநாள் நானா? வானம் புகைமண்டிக் கிடக்கின்றது. இந்தப் புகைக்கூடுகளுக்கு ஓய்வே இல்லையா?

உலுப்பி எழுப்புகிறது ஓர் ஒலி. விடியாத பல காலைகள் தட்டுத் தடுமாறி விடிகின்றன.

முகாம்! முகாம்! பெண்கள் முகாம்!
கழிப்பறை. குளியலறை
கோப்பி எடு! எழும்பு!
அறிவிப்பு! அறிவிப்பு!
எல்லாம் வெளியேறு!
ஐவராக! அமைதி! அமைதி!
கணக்கெடுப்பு! எல்லாம் சரி!
கத்தி, கோடாலி, மண்வெட்டி, வைக்கோல் வாரி
வேகம்கொள்! நடந்துசெல்!
நிற்காதே!

(Jadwiga Leszczynska)

பனியிலும் மழையிலும் நடுங்கும் குளிரிலும் நடந்தோம். வெகுதூரம். எங்கு போகிறோம்? காட்டு மரங்களை வெட்டிச்சரிக்க. அவற்றை விறகாக்க. சேற்று நிலத்தைச் சரிப்படுத்த, வெற்று நிலத்தில் குழிதோண்ட. மரத்தாலான காலணிகள் எம் கால்களில். பாதையோ பனியில் சேறாகி.

மரணத்தின் பனிப்பாலையில்
மெதுவாக இழுபட்டோம்,
வடக்கு நோக்கிச்
சங்கிலியால் விலங்கிடப்பட்டன
எமது கால்கள்.
குளிரால் குறுகின
எமது தோள்கள்,
செத்து விழுந்தன
சில உருவங்கள்.
வீசும் பனிக்காற்றில்
கேளுங்கள் எமது பாடலை,
அது ஒப்பாரியாய் எழும்புகிறது
அந்தப் பாடல், நாம் அங்கு பாடினோம்
அந்தப் பாடல், அதற்காய் உயிரை விட்டோம்

(Fania Fenelon)

கால்கள் நீலமாகி நாளங்கள் புடைக்க நடையை நிறுத்தினாள் ஒருத்தி. அதுபெரும் ஆபத்து. திரும்பிப் பார்த்து அவளை இழுப்பதற்குள் கால்களுக்குள் குண்டுபாய்ந்து சரிந்து விழுந்தாள் அந்தப் பெண். நேற்றைய இராப்பொழுதில் அவளின் குரல்தான் வைக்கோல் படுக்கையில் விம்மிவிம்மிக் காதுகளில் ஒலித்தது.

மகளே! இரவின் பிஞ்சுக்கால்கள்
இந்தப் பாடலின் தொட்டிலை அசைக்கட்டும்
என் உருவம் உனக்கு, தெரியாதுபோனாலும்
உன்னிடம் வருவேன். இந்தப் பாடலினூடே
எனது கைகளில் சுமந்து வருவேன்
உனக்கான தூக்கத்தை
நான் வராதுபோனால்
வாழ்வேன். பல ஆண்டுகள்
இந்தப் பாடலில்
தூங்கு என் மகளே!
நான் அழுதிடல் ஆகாது
உன்னைப் போல

(Tadeusz Holuj)

உயிரைப் பிசைந்த அந்தக் குரல் இப்போதும் என் காதுகளில். ஒலித்து ஓய்ந்தது. போதும். செவிப்புலன் இந்த கணம் முதல் மருத்துப்போக. கேட்கும் மொழியாவும் தொலைந்துபோக. இந்த நிலம் இனி ஒலியற்றுக் கிடக்கட்டும். சற்றுமுன் எனது கைகள் தோண்டிய குழிக்குள் அவளின் உடல். உற்றுப் பார்க்கிறேன். இந்தக் காட்டுநிலத்தின் ஆழத்திலிருந்து தட்டுப்படுகின்றன இன்னும் பல எலும்பாய்த் தேய்ந்த கைகள். கால்கள். தலைகள். நம்பமறுத்துத் திரும்பி நடக்கிறேன். தூரத்தில் புகைக்கூடுகள் எரிந்துகொண்டு இருக்க, பஞ்சு பஞ்சாய்ப் புகை பரவியது. இந்த நிலத்தில் புகை அல்லாத பொழுதேதும் உண்டா? காலுக்குள் உறைந்த பனி சிவந்து போயிற்று. அது அவள் விழுந்த பனி. அறியாமல் ஒரு துளி என்னையும் மீறி என் கண்களின் ஓரமாய்க் கசிந்தது. யாரும் அதனைக் கண்டீர்களா? கண்டாலும் ‘காணவில்லை’ என்று சொல்லுங்கள். அது அப்படியே உறைந்து போகட்டும்.

எமது பெரும் பகைவன்
பனி, அது ஓய்ந்தபோது
பசி, அது பெருக்கெடுத்தது

(Primo Levi)

மரணம் எமது பகல்களையும் விட்டுவைக்கவில்லை. பசி வடிவில் தின்று தீர்த்தது. மெல்லமெல்ல உயிரைப் பிடுங்கி எடுத்தது. யாரும் என்னை அங்கு கண்டீர்களா? பசியால் கண்கள் மின்ன மரப்படுக்கையில் எலும்புகள் நொருங்கத் துடித்தேனே. யாரும் என்னைக் கண்டீர்களா?

ஒருபிடி உணவிற்குப் பிச்சை எடுத்தோம்
ஏச்சும் சாபமும் அடியும்
அனைத்தும் பொறுத்தோம்
உணவைக் கண்டபோது
விலங்கானோம்

(Konstanty Cwierk)

கஞ்சி போன்ற நீராகாரத்தில் சதை வற்றி எலும்புகள் தேய நாட்கள் நீண்டன. வயிறு நிறையச் சுவைக்கும் புலன், அது யாதெனக் கேட்டேன்.

பசி என்றால் என்னவென்று
நீ அறிந்ததுண்டா?
பசி, அது உன் குடற்
கொடிகளைச் சுருக்கும்,
மூளையிலிருந்து நினைவை
விரட்டும்,
வயிற்றைக் கத்தி கொண்டு
கிழிக்கும்,
மூச்சு வரமறுக்கும்,
இதயம் துடிப்பதை
நிறுத்தும்,
உணவு, உணவு, உணவு...
இந்த நினைப்பில்
அனைத்தும் மங்கும்,
கண்கள் இருள்கின்றன,
கடவுளே கருணை
காட்டாயா?
கடவுளே, என்றாவது நீ
பசியுற்றாயா, சொல்!

(Halina Nelken)

பசியால் நோயால் செத்து விழுந்தன நித்தம் பிணங்கள். குடில்களெங்கும் பிணங்களின் நாற்றம். வயிற்றுப்போக்கில் மிதந்தும் கிடந்தன அவை. பார்க்க மறுக்கிறேன் அந்த அவலத்தை.

பிணங்களும் மலமும் சிரங்கும் நச்சுக்காய்ச்சலும்
எங்கும் பெண்களின் பிணங்கள். கண்களில்
பூளையும் சீழும்
ஈரும்பேனும் புண்களை மொய்த்து மூடின
அழகியாய் வாழ்ந்தவர்கள்.
அது அன்று,
இன்று, அந்த உடல்களை எலிகள் தின்றன.

(Monika Dombke)

மரணம் நாளங்களுக்குள் குடைந்து சென்று உடலைப் துளைக்கிறது. நாளை நானும் இந்தப் பிணங்களுக்குள் ஒருத்தியா? கூடு போன்ற இந்த நெஞ்சினில் அவனின் கால்கள் நடந்துபோகுமா? மிதித்து நசுக்கிவிடுமா? துயரை சுமக்க முடியாது வெடித்துச் சிதறுமா இந்த இதயம்? வழிந்த இரத்தத்தில் ஊர்ந்து திரியுமா இந்த எலிகள்? போதும். என் கண்களைத் தூரமாய் கொண்டு செல். பிடுங்கி எறி. முள்வேலிகளுக்கு அப்பால். பார்க்கும் மொழி இனியும் எனக்கு வேண்டாம். பார்வை போனால் பயம் நீங்கும், வலி மறக்கும் அல்லவா?

நரகத்தில், மற்றவர் இறப்பது தெரியாது,
நரகத்தில், மரணத்திற்கு இடர் இல்லை,
நரகத்தில், பசி இல்லை, தாகம் இல்லை,
நரகத்தில், காத்திருப்பு இல்லை,
நரகத்தில், நம்பிக்கை இல்லை, பயம் இல்லை,
அப்படி இருக்க, ஏன் சொன்னாய்,
இது நரக நிலம் என்று?

(Charlotte Delbo)

இந்தப் பாழ்பட்ட வாழ்வில் எதற்காக இத்தனை ரணம்? இது யாருக்கும் புரியவில்லை. இந்த நிலத்தில் மீள்வது எமக்கினி இல்லை. மெல்லச் சாவதும் எமக்கினி வேண்டாம். வலியற்ற, துடிப்பற்ற, ஒரு நொடிச்சாவு. அது வேண்டும். அதுபோதும்.

விடிந்த பொழுதில் வரிசையில் ஒருவனைக் காணோம்
முள்வேலிக்குள் முகம் குப்புற அவன் விழுந்தான்
குண்டுகள் சரமாய்ப் பொழிந்தன
வளைந்த கம்பிகளில் இரத்தம் வழிந்து ஒழுகியது

(Kazimierz Wojotowicz)

புகைக்கூடுகள் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன. கண்கள் அற்றும் காட்சியாய் அது பதிந்தது. மரித்தாலும் மறக்காது இந்த நிலத்தின் புகைக்கூடு. என்ன இது? உனக்கு மணக்கவில்லையா? காற்றில் ஒரு மணம். அது தினுசாய் மணக்கிறதே. நுகர்ந்துபார். காற்று இனிப்பாய் மணக்கிறதல்லவா? இனிப்பில் ஊறிக் காற்று இனிக்கிறதல்லவா? 'ஓம்' என்று சொல். பார்ப்பதும், கேட்பதும், சுவைப்பதும், தொடுவதும் அனைத்துப் புலன்களையும் இழந்தேன். தூக்கித் தூர எறிந்தேன். தொலைந்து போகட்டும் என எண்ணி. ஆனால், இந்த நுகர்தல் மட்டும் தொலையவில்லை. துரத்தினபோதும், தூக்கி வீசினபோதும் விட்டுப்போகவில்லை. இனிப்பான இந்த மணம் நான் என்றோஅறிந்தது ஒன்று. சுவைத்தது ஒன்று. சுகமான அழகான வாழ்வில் இழையோடிய மணம் அது. உறவின் கதகதப்பான சூட்டைச் சொன்ன மணம் அது. நினைவுகளுக்குள் துளைத்துத்தேட விரிகிறது ஒரு காட்சி.

எனது ஊரின் திருவிழாக்காலம் அது. வீட்டில் இருந்தாலே மேளச்சமா கேட்கும். எட்டி ஒரு நடை நடந்தால் கோயில் தெரியும். பச்சை உடுத்த அந்த அழகன் தெரிவான். சிறுமி நான். அம்மாவின் கைப்பிடித்து அந்த அழகனைப் பார்க்கவா சென்றேன்? இல்லை. திருவிழாவின் காற்றைக் குடிப்பதற்காய்ச் சென்றேன். காற்றின் ஒவ்வொரு சொட்டையும் உருசித்து மென்று விழுங்கினேன். கோயில் வீதியெங்கும், போகும் பாதையெங்கும் சோளகத்தில் அசைந்த இலைகளிலும் ஒலிபெருக்கியிலும் வறுத்த கச்சானிலும் கிணற்றடியிலும் சுற்றுக்காப்பிலும் சாமிப் பட்டிலும் காற்று இனித்து இனித்து மணத்தது. இனிப்பாய் அது இருந்தது. உதடுகளைத் தேனாய் ஒட்டவைத்தது. இது எப்படிச் சாத்தியம்? வண்ண வண்ண ஐஸ் பழத்துக்குள் நுழைந்து, ரோஸ் தும்பு முட்டாசியில் ஒரு சுற்றுச் சுற்றி, பழுத்த பலாவில் ஊறி எங்கும் இனிப்பாய் இனித்தது அந்தக் காற்று. திருவிழாக் காற்று. அன்றிலிருந்து திருவிழாவில் மட்டும்தான் காற்று இனிக்கும். தேனாய் இனிக்கும். இனித்து மணக்கும்.

இன்று, இந்தப் பொழுது, கடல்தாண்டி, மலைதாண்டி, இந்தக் கொடும் நிலத்தில் காற்று இனித்து மணக்கிறது. தொட்டுத் தடவிப் புரிய முயல்கிறேன். இங்கு காற்று இனிப்பதன் கதை யாது?

ஒவ்வொரு நாளும்
குடில்களுக்கு அப்பால்
புகையும் நெருப்பும் வரக்கண்டேன்
என்ன எரிகிறது? நீ கேட்கிறாயா?
உனக்குத் தெரியவில்லையா?
மனிதனே, உன் தலையைக் குனி
இங்கு யாரும் மீள முடியாது
எல்லாம் எரிக்கப்படும்

(Ruth Klueger)

சட்டென ஓர் ஒலி. தட்டுத் தடுமாறிக் கூட்டத்துடன் கூட்டமாய் நான் நடக்கிறேன். நாம் விரட்டப்படுகிறோம். கண்கள் இல்லை. ஆயினும் கால்களுக்கு நன்றாகவே தெரியும். இது கரடுமுரடான கல்லுப்பாதை. இத்தனை காலமும் கால்கள் படாத ஒரு பாதை. “ஆடைகளைக் கழற்றி இங்குவை, குளியல் அறைக்குள் இறங்கிப்போ! போ போ நிற்காதே!” உரத்த குரலில் ஒருவன் கத்தினான்.

நீள் வரி உடையே, நீள் வரி உடையே!
நீயே எனது அதி உச்ச உடை. நான் மெச்சும் உடை
உனக்குள் நான் துயருற்று வருந்தியது
அளக்க முடியாது அந்த வலி,
அதுவே உன்னை அளப்பெரிதாக்கிற்று.

(Kupfer Kobernitz)

ஆடைகள் இன்றி நெருக்கித் தள்ளி அடைக்கப்பட்டோம் இந்தக் குளியல் அறைக்குள். நசிபட்டு நின்றேன் எண்ணற்ற மேனிகளுக்கு நடுவில்.

கொத்துக் கொத்தாய் மனிதர்கள்
வந்து சேர்ந்தனர்
நான்கு சுவர்களுக்குள்
களைத்து, வாடி, வதங்கி
சூடான நீரில் குளிப்பதற்கு
ஏன் இந்தக் குளிப்பு? நீ கேட்கிறாயா?
உனக்குத் தெரியவில்லையா?

(Paul Celan)

ஓர் ஒலி. கதவு அடைத்து இழுத்து மூடிய அந்த ஒலி. கத்திக் கதறி அந்தரித்தோம். ஓங்கி அடித்துத் திறக்க முயன்றோம். அந்த நெரிசலுக்குள் ஒரு குழந்தை கேட்கிறது.

அம்மா, ஏன் அழுகிறாய்?
எல்லோரும் ஏன் அழுகிறார்கள்?
எனது பொம்மையும் அழுகிறதே!
வா, நாம் வீடு போவோம்
அழாதே அம்மா! சிரி! பார்,
நானும் சிரிக்கிறேன்
இந்தப் பொம்மையைப் போல

(Kazimierz Dabrowski)

அந்தக் கணம் மேலிருந்து தாரையாக நீர் வரவில்லை. புகை வந்தது. நச்சுப்புகை அது. சுவாசக் குழாய்கள் சுருங்க மூச்சு வரமறுத்தது. தொண்டை அடைத்து, குரல்வளை இறுகி முடிச்சாகியது. மூச்சுத் திணறி விக்கித் தவித்துக் கண்கள் சொருகச் சரிந்தோம். மெல்லச் சரிந்தோம். உடல்களின் மேல் உடலாக. கொத்துக் கொத்தாய்.

பொழுதாகியதும்
புகைக்கூடுகள் மட்டும் விடாது
எரிந்தன
சுண்ணமிட்ட எண்ணற்ற
சடலங்கள்
மேலெழும்பிய அந்தப் புகை
அந்தக் காற்று
அந்த மணம்
நாம் இங்கு இருந்தோம்
எனச் சொல்லிற்று
நெருக்கமாய்க் கிடந்தோம் நிலத்தில்
பிரிந்து போகிறோம் துகள்களாய்க்
காற்றில்
எஞ்சியது சாம்பல் மட்டுமே
நிலமெங்கும் காற்றெங்கும் சாம்பல்
இனி, சாம்பல் கொண்டு காற்றில்
எழுதுங்கள்
எங்கள் பெயர்களை...

(Paul Celan)

இருள் அல்லாத ஒளி அல்லாத அந்தப் பொழுது. ஔஷ்விற்ஸின் அஸ்தமனம். சிவந்த வானில் சாம்பல் படிந்தது. சாவு மணத்த காகங்கள் அங்கு பறந்தன. காற்று இனித்தது.

பெர்லின் குரூனவல்ட் (Berlin, Grunewald) ரயில் நிலையம், 17வது தண்டவாளப் பாதை:

ஔஷ்விற்ஸ் பற்றிச் சொல்ல நான் யார்? எனக்கும் அந்த நிலத்திற்கும் என்ன உறவு? ஓராயிரம் மின்மினிப் பூச்சிகளை விரட்டியபடி பயணிக்காமல் நான் அமர்ந்திருக்கும் இந்த ரயில் நிலையம். இந்த 17வது தண்டவாளப் பாதை. ஏழு வயதுச் சிறுமியாக இந்தத் தண்டவாளப் பாதையில் ரயில் வரும்வரை நான் கல் எறிந்து விளையாடியதுண்டு. ஓடி ஒளித்ததுண்டு. ரயில் ஏறிப் பயணித்ததும் உண்டு. அன்று எனக்குத் தெரியவில்லை. யாரும் சொல்லவில்லை. இன்று தெரியும். உனக்குச் சொல்கிறேன். இந்த ரயில் நிலையத்தில் இருந்து, இந்த 17வது தண்டவாளப் பாதையில் இருந்து, நீ காது வைத்துக் கேட்ட இந்த இரும்புப் பாதையிலிருந்து புறப்பட்டன அன்று அந்த ரயில் வண்டிகள், மனிதர்களைச் சுமந்து மரணத்தை நோக்கி. காகங்கள் பறந்த திசையை நோக்கி. காற்று இனித்த நிலத்தை நோக்கி. ஔஷ்விற்சை நோக்கி.

இட்டு நிரப்ப நீ வந்தாய். நான் மீண்டேன். மரணத்திற்கு முன் எழுதப்பட்ட இந்தப் பதிவை உன் கைகளுக்குள் பதித்து நான் போகிறேன். இனி, நீ பேசு. வாழாத ஒரு காலத்தில் வாழ்ந்து, புலன்களைத் தொலைத்து, உணர்வழிந்து பேசு. நான் போகிறேன்.
at 05:17:00