Monday, 6 April 2020

புனைவு என்னும் புதிர் – 3 ஷோபாசக்தி சிறுகதைகள்: பரபாஸ், மாதா, சூக்குமம் November 27, 2018 பரபாஸ் பாரபாஸ் –புனைவு என்னும் புதிர் – 3 ஷோபாசக்தி சிறுகதை: மிக உள்ளக விசாரணை://web.archive.org/web/20190628163345/http://maamallan.com/?p=4158

November 27, 2018
பாரபாஸ் – பேர் லாகர்குவிஸ்டு எழுதியது. தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் எழுதியது. இரண்டுமே ஸ்வீடிஷ் படைப்புகள். இரண்டுமே திருடர்களைப் பற்றியவை. இரண்டையுமே தமிழில் மொழிபெயர்த்தவர் க.நா.சு. இரண்டுமே இலக்கிய பொக்கிஷங்கள்.
தம்முடைய பரபாஸை, தேவமலர் போன்ற உலக தரத்திற்கு இணையாக எழுதி வைத்திருக்கிறார் ஷோபாசக்தி. இதுவும் திருடர்களைப் பற்றிய கதைதான்.
மூன்று கதைகளிலுமே திருடர்கள் கருணையுடன் பார்க்கப்படுகிறார்கள். அதற்காக அவர்களது திருட்டு மூன்றிலுமே நியாயப்படுத்தப்படவில்லை. மூன்று எழுத்தாளர்களும் அவர்களது கதை மாந்தர்கள் ஏன் திருடர்களாக ஆனார்கள் எப்படி சமுதாயத்தால் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றெல்லாம் முற்போக்காக எந்த முலாமும் பூசி விளக்கிக்கொண்டிராமல், அவர்கள் திருடர்கள் என்பதை, அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கை, எழுத்தாளர்களின் எந்த உச்சுக்கொட்டலும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகும் எவ்வித இறைஞ்சுதலுமின்றி இந்தத் திருடர்கள் மூவரிடமுமே வாசகனை இரக்கம்கொள்ள வைப்பதுதான் இவர்களது எழுத்தின் மேன்மை.
தம் கதைகள் எல்லாமே அரசியல், தாம் கதை எழுதுவதே அரசியல் செயல்பாடுதான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பவர் ஷோபசக்தி. அவரது அரசியல் எதிரிகளும் அவரது கதைகளில் அவர்களுக்கு எதிரான அரசியலை மட்டுமே பார்த்து, இலக்கியத்தைத் தவறவிடுகிறார்கள். அரசியல் என்று சொல்லிக்கொண்டு இலக்கியத்தைப் படைத்துக்கொண்டிருப்பது தமிழில் கொஞ்சம் அபூர்வம். ஏனென்றால் இங்கே இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியமாகப் படைக்கப்பட்டுபவையே ரொம்பக் கொஞ்சம்.
இவற்றைக் கதையாக மட்டுமே பார்க்கிறான் கால தேசங்களைக் கடந்த தேர்ந்த வாசகன். அவனுக்கு இவை எப்படித் தெரிகின்றன என்பதில்தான் இருக்கிறது எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளின் இலக்கியத் தகுதி.
பின்புலம் கதையைப் புரிந்துகொள்ள மேலதிகமாக உதவக்கூடும் என்பதால் இது எழுதப்பட்ட காலம் முக்கியமாகிறது. பரபாஸ் ஜூன் 2007ல் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையின் இந்தக் காலகட்டத்தின் பின்னணியுடன் சேர்த்துப் பார்த்தால் சொல்லப்படாத அடுக்கு புலப்படக்கூடும். சொல்லப்பட்டு இருப்பவற்றைவிட சொல்லப்படாமல் விடப்பட்டவையே எந்தக் கதையையும் வேறு தளத்திற்கு நகர்த்தவல்லவை.
மேற்கோளுடன் கதையைத் தொடங்குவது கிளாசிக் இலக்கிய மரபு. ஆனால் மேற்கோள் அல்லது கவித்துவமான தலைப்பு கூட வாசகனிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிடும் அபாயம் உள்ளது. மேற்கோளின் தரத்திற்குக் கதை இல்லையென்றால் அதுவே படைப்பைக் கேலிச்சித்திரமாக்கிவிடும்.
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்கிறீர்கள்? பரபாஸையோ? கிறித்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” – (மத்தேயு 27:18)
எதிரெதிர் இருமைகளால் ஆனது உலகு.
இயேசு கிறிஸ்து இரட்சகராக அறியப்படுகிறவர். மனிதனை இரட்சிக்க வந்தவையாகச் சொல்லிக் கொள்பவை இயக்கங்கள். போலீஸ் என்கிற அரசு இயந்திரம் இருப்பதும் மக்களை இரட்சிக்கத்தான். திருடர்களும் இரட்சகர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் கதை நெடுக தெளித்துச் செல்கிறார் ஆசிரியர்.
“குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்குமிடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக, கலை உணர்வுடன் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும் நம்பிக்கை சிருஷ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகு லாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்” என்று பிரெஞ்சு இலக்கிய மேதையான ஆண்ட்ரே ழீடு, பேர் லாகர்குவெஸ்டின் பாரபாஸ் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுதியதாக அன்புவழி என்கிற தமது, பாரபாஸ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் கூறுகிறார் க.நா.சு.
ஷோபாசக்தியின் பரபாஸ் தொடங்குவதும் முடிவதும் காலடித் தடங்களில். கடற்படையினரின் பூட்ஸ் கால் தடங்களைத் தவிர சந்தியாப்புலம் கிராமத்தில் வேறு மனிதக் கால் தடங்களே இல்லாமல் போய்விட்டது என்று தொடங்குகிற கதை, அதற்கு இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததென்று சொல்லி தேவாலயத்தின் சந்தியோகுமையருடைய குதிரையின் குளம்படித் தடங்கள் கடலுக்குள் சென்று மறைவதில் முடிகிறது.
வில்லியம் என்கிற திருடனைப் பற்றிக் கூறத்தொடங்கிய கதை, அறுபது ஆண்டுகளாகத் திருடிக்கொண்டிருக்கும் கள்ளக் கபிரியேலின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிரப்பம்தாழ்வு என்றழைக்கப்பட்ட அந்த கிராமம், அறுபது ‘வருடங்களீற்கு’ முன்பு பெத்லேம் இஸ்ரேல் பாதிரியாரால் சந்தியோகுமையர் தேவாலயம் அமைக்கப்பட்டதிலிருந்து மாதத்திற்கு ஓரிருமுறை நடுநிசியில் குதிரைக் குளம்பொலிக்க சந்தியோகுமையர் வீதிவலம் போவதைச் சொல்கிறது. கண்ணிகளை இணைத்துக்கொள்வது வாசகன் கையில்.
கிழவர் திருடுவதும் பிடிபடுவதும் அதற்கொரு சால்ஜாப்பைச் சொல்லி அவர் சாதாரணமாக செல்வதும் பொருளைப் பறிகொடுத்தவனைத் தவிர மற்ற எல்லோரும் அதை சகஜமாக எடுத்துக்கொள்வதுமாக முந்தைய தலைமுறைக் கதை சென்று முடிகிறது.
தூய்மையான வெள்ளைச் சாரமும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிகிற அடுத்த தலைமுறைத் திருடன் வில்லியம். அவன்கூட, நகரத்திற்குச் சென்று ‘சென்ற் பற்றிக்ஸ்’ பாடசாலையில் படித்தவனாக இருந்தும் திருடுகிறான் என்றாலும் பிடிபட்டவுடன் முதல் அடியிலேயே திருடியதை ஒப்புக்கொள்கிறவனாகதான் இருக்கிறான். அவனுக்கும் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அவனோ திரும்பத் திரும்பத் திருடுபவனாகவே இருக்கிறான்.
“பத்து தடவைகள் திருடினால் அவன் பதினொரு தடவைகள் பிடிபட்டான்”
என்கிற வில்லியம் பற்றிய வாக்கியத்தையும் களவைக் கண்டுபிடிக்க விசாரணைக்கு வரும் பொலிஸ் சார்ஜனும் பொலிஸ்காரர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிப்போகிறார் ஷோபாசக்தி.
தமிழில் இலக்கியக் கதை என்று எழுதப்படுபவற்றில் பலவும் இதை மட்டுமே சொல்லிமுடித்த உப்புசத்தில் துவண்டுவிடுபவையாக இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துரதிருஷ்டவசமாக இதுதான் தமிழின் நவீன இலக்கியம் என்று வேற்று மொழிகளுக்குப் பறந்துகொண்டு இருக்கின்றன.
பொலிஸுக்கு அடுத்து, திருட ஒன்றுமற்ற கத்தோலிக்க பாடசாலையிலும் அறைக்கதவை உடைத்து வாலிபர் சங்கத்திடம் அடிபடுகிறான் வில்லியம். அறிவுரைகள் கூறி இரக்கப்பட்டு ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
கால ஓட்டத்தில் சந்தியாப்புலம் இயக்கத்தின் கீழ் வந்திருப்பதை, செயின் திருட்டு வழக்கு இயக்கத்திடம் வந்தது என்று சொல்லிப்போகிறார். குடிசைக்குள் தேடியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் மறுநாள் காலை வில்லியத்தின் குடும்பமே தற்கொலை செய்துகொண்டு கிடக்கிறது. திருட மட்டுமே தெரிந்த ஒருவனால் அதையும் ஒழுங்காகச் செய்யமுடியாத ஒருவனால், செத்துப் போவதைத்தவிர  வேறு என்னதான் செய்யமுடியும். துரதிருஷ்டவசமாக வில்லியத்தால் மனைவி குழந்தைகளைப்போல செத்தும்கூடப் போகமுடியவில்லை. இயக்கம், யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பிழைக்கவைத்துவிடுகிறது.  இனி இங்கே திருடிப் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று குடிசையை பிரித்துப்போட்டு விற்றுவிட்டு ஊரைவிட்டே வெளியேறுகிறான்.
உழைக்க முடியாதா என்பது எவருக்கும் இயல்பாக எழுகிற கேள்விதான். தர்க்க நியாயங்களுக்குள் கட்டுப்பட்டு இருந்தால்  மனித வாழ்வு எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்வது அப்படி இல்லை என்பதுதானே யதார்த்தம்.
வில்லியம் என்கிற திருடன் சந்தியாப்புலத்திலிருந்து வெளியேறியதற்கு மறுநாள் காலையில், சந்தியோகுமையர் தேவாலயத்தின் பிரமாண்டமான கதவுகள் திறந்துகிடக்க வெள்ளியினாலான திருவிருந்துப் பேழை காணாமல் போகிறது.
கள்ளக் கபிரியேல் காலத்திலிருந்து, அறுபது எழுபது வருடங்களாக ஒவ்வொரு திருட்டின்போதும் குதிரைமேல் வீதிவலம் போய்க்கொண்டிருக்கிற சந்தியோகுமையர், தமது தேவாலயத்திலேயே திருட்டு நடந்தபோது வீதிவலம் போகவில்லை. மாறாக அவரது குதிரையின் காலடித்தடங்கள் கடலுக்குள் சென்று மறைகின்றன.
சொல்லப்பட்டிருப்பதைவிட, சொல்லாமல் விடப்படுவதும் அப்படி விடுபட்டதே கதையை வேறு தளத்திற்கு நகர்த்துவதும் உயர்ந்த எழுத்தின் அடையாளம்.
***
சிறுகதை என்பதற்கு, ஒரு நிகழ்வு குறித்தது, எதிர்பாராத திருப்பம் குறித்தது, ஒரு முரண் குறித்தது, எதிர்பாராத முடிவைக் குறித்தது. ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் குறித்தது என்றெல்லாம் அவரவர் மனதுக்கு ஏற்றார்போல இலக்கணம் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தலைப்பு குறித்தது என்று யாரும் விசேஷ முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
மேற்சொன்ன அத்தனையும் இந்தக் கதையில் இருக்கின்றன. மேலதிகமாக தலைப்பும் இறுதி வாக்கியமும் இந்தக் கதையை வேறு தளத்திற்கு உயர்த்திவிடுகின்றன.
ரேப் என்கிற ஒரு நிகழ்வைப் பற்றியதுதான் கதை. அது நடக்கும் தருணமான கதையின் மத்தியப் பகுதிவரை, கதை இதைப் பற்றியது என்பது தெரிவதில்லை.
குற்றவாளி பதுங்கிக் கவனித்துக் கொண்டிருந்தான் என்று கதையின் முதல் பத்தியிலேயே வெளிப்படையாய் சொல்லிவிட்டு என்ன செய்யப்போகிறான் என்கிற எதிர்பார்ப்பை வாசகனுக்குள் கிளப்பிவிடுகிற மர்மக் கதை, அவன் என்ன செய்யப் போகிறான் என்றே ஊகிக்க முடியாதபடி, வெற்றிகரமாகப் போய்க்கொண்டே இருக்கிறபோது, ஒருவேளை இதுவாக இருக்கலாமோ என்கிற மெல்லிய சம்சயம் தோன்றும் வண்ணம் கோடிகாட்டப்படுகிறது. ஆனால் அந்தச் சந்தேகத்தை முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் சம்மந்தப்பட்ட பாத்திரத்தின் செயல்கள் இருப்பதால், பிற்பகுதிக் கதை முழுவதுமே அதைப்பற்றியே இருந்தாலும் கதைப்போக்கில் மற்ற பாத்திரங்களால் கவரப்பட்டு வாசகன் அவற்றுடன் கரைந்துவிடுகிறான்.
ரேப் கூட பக்கவிளைவேயன்றி குற்றவாளியின் முதன்மை நோக்கமன்று. திருடவந்து அடிபட்டதன் வெறி, பெண் அதுவும் ஒரு வயதான பெண் தன்னை அடித்துவிட்டாளே என்கிற, ஆண் என்பதால் உண்டாகிற கபோதக் கோபம் வெறியாகி ரேப்பில் முடிகிறது. பெண்ணின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஆணின் அடுத்த நடவடிக்கையே பாலியல் வசைத் தாக்குதலில் ஈடுபடுவதாகத்தானே இருக்கிறது. பொதுவெளி என்றால் வார்த்தையளவில் நின்றுவிடுகிறது. கேட்க யாருமில்லை என்றால் அத்துமீறி பாலியல் பலாத்காரமாகிறது.
அந்த அம்மா அறுபத்தியெட்டு வயது முதிர்ந்தவர் என்பதுகூட, ஐம்பது வயதில் ஓய்வுபெற்றதாக இரண்டாவது பக்கத்திலும் சில பத்திகள் தாண்டி, அறுபத்தியெட்டாவது வயதில் மனிடம் சென்றதாகவுமாகத் தூவப்பட்டிருக்கும் தகவல்களைக் கூட்டிச் சேர்த்து கவனமாகப் படிப்பவனுக்கே மனதில் தங்கும். அந்த அம்மா ஐந்தடி பத்தங்குலம் இருப்பவர் என்பதும் ‘சற்று உயரம் குறைந்த’ குற்றவாளியைத் தாக்கும் அளவுக்கு வல்லமை மட்டுமின்றி வாளிப்பானவரும்கூட என்பது கவர்ச்சியாக ஆகிவிடாபடி நாசூக்காக ‘எப்போதுமே நிமிர்ந்து கம்பீரமாக நடப்பார்’ என்றும் அவருக்குப் பெயரென்ற ஒன்று இருப்பினும் கதை முழுக்க அம்மா அம்மா என்றுமே சொல்லப்படுகிறது.
தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் குற்றம் நிகழ்ந்துவிடும். பார்வையாளனுக்கும் அது அப்பட்டமாகக் காட்டப்பட்டுவிடும். ஆனாலும் அதன்பிறகு ஒன்றரை மணிநேரம் பதற வைத்துக்கொண்டிருப்பார் என்பதில்தானே ஹிட்ச்காக்கின் சிறப்பே இருக்கிறது. மற்றப் பாத்திரங்கள் எதர்க்கும் யார் குற்றவாளி என்பது தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமுடியாதபடி சூழ்நிலை அமைந்திருக்கும். அந்தப் பாத்திரத்தின் தவிப்பும் வேறு பார்வையாளனைத் தொற்றிக்கொள்ளும்.
இந்தக் கதையிலும் என்ன நடந்திருக்கிறது என்பது, பாதிக்கப்பட்டவரைத் தவிர எல்லோருக்கும் தெரிகிறது. அல்லது நாளாவட்டத்தில் தெரியவந்துவிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு, நடந்தது தெரிந்துவிடக்கூடாதே என்று எல்லோருமே பதைக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதுகுறித்து மனதளவில் அதீதமாக பாதிக்கப்படுகிறார்கள். ரேப் என்பதை மகனும் மருமகளும் கணவரும் எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களது பாதிப்பு எங்கே மையம் கொள்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் பார்வை எப்படியாக இருக்கிறது என்கிற முரண் வெளிப்படும் கதை இது என்றும் கூறலாம். அதையும் தாண்டி ரேப்பை ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த கதைத்துவ ஆய்வுக் கட்டுரையாகவும் இதைப் பார்க்கலாம் -எவ்வித அலசலோ வியாக்கியான விளக்கச் சொற்பொழிவுகளின் சுவடுகளோக்கூட இல்லை என்றபோதிலும்.
சர்வ சத்தியமாக இந்தக் கதையில் இப்படியான முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. தொடர்ந்து ஷோபாசக்தியைப் படிக்கப்படிக்க கிட்டத்தட்ட ரசிக மனோபாவத்துக்கு நான் தள்ளப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதிகம் படித்த வாசகனைவிட ஊகிக்கமுடியாதபடி இன்னொரு எழுத்தாளனை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனென்றால் எழுதும் தொழிலின் ரகசியம் தெரிந்தவனல்லவா மற்றவனும். ஆனால் இந்தக் கண்கட்டும் கலை ஷோபாசக்திக்கு அநாயாசமாகக் கைவருகிறது.
ஒரு வார்த்தையில் கதையின் கடைசி வாக்கியத்தில் கதையைத் தலைகீழாக மாற்றிவிடுவது பெரிய திறமைதான். தொடக்கத்திலிருந்து எங்குமே கொஞ்சமும் இடிக்காதபடி இதைச் செய்வதற்கு நிறையவே திறமை வேண்டும். எழுத்து வசப்பட்டிருக்கவேண்டும். வாசக விசிறி, தனக்குப் பிடித்த எழுத்தில் இன்னும் இன்னும் என கரையவே சித்தமாக இருக்கிறான். அப்படியான வாசகர்களைப் பெறும் எழுத்தாளன் பிரம்மிப்புக்குரிய பிம்பமாகிறான். இவ்வளவும் வெறும் சுவாரசிய பொழுதுபோக்குக் கதை சொல்லிகளுக்கும்கூடப் பொருந்தும்.
எல்லா எழுத்தாளர்களாலும் எளிதில் எட்டித் தொட்டுவிட முடியாத தள நகர்வு கலைஞர்களுக்கு மட்டுமே கைகூடுகிற விஷயம்.
நிகழ்வுகளாகச் சொல்லப்படும் கதையில் மன ஓட்டம் என்று எழுத்தாளனே எல்லாவற்றையும் சொல்லி பாத்திரங்களை நிரப்பிக்கொண்டு செல்லாமல், துலக்கம்பெறும் அளவுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருப்பது எல்லோருக்கும் கைவரப்பெறுகிற காரியமில்லை.
பொழுதுபோக்கு சுவாரசிய எழுத்தாளனுக்கோ பாத்திரத்துக்கு மனம் என்ற ஒன்று இருக்குமே என்பதைப் பற்றிய கவலயேயில்லை. சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகக் கதையைக் கொண்டுசெல்வதற்குக் கதாபாத்திரத்தின் மனமும் எண்ண ஓட்டமும் முட்டுக்கட்டை. போகவும் அவனுக்கே மனமும் சுயமான எண்ண ஓட்டமும் இருந்தால் அல்லவா அகப்பையில் வருவதற்கு. எனவே சம்பவங்களை எப்படிச் சுவாரசியமாக்கலாம் என்பதற்கு மட்டுமே பயிற்சிபெற்ற அவன் மூளைக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிப்பதே அனாவசியம்.
வெகுஜன மனதில் புனித பிம்ப அந்தஸ்துடன் திகழ்கிற எழுத்தாளனோ ரேப்பின் பயங்கரத்தை அஞ்சி நடுங்கி அல்லது பிழியப்பிழிய அழுது புரண்டு வாசகன் கதறும்வண்ணம் எப்படியெல்லாம் நாடகீயமாக்கலாம் என்பதிலேயே குறியாயிருப்பான்.
கதையின் முடிவில் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் கதையையே வேறாக ஆக்கி, வாசகனை பிரமிப்பில் ஆழ்த்திவிடுவது, எழுதிக்கொண்டே இருப்பதால் தீவிரப் பயிற்சியில் சித்தித்துவிடக்கூடிய கைத்தேர்ச்சி; திறன்.
அதுகாறும் அதற்கு எதுவுமே தெரியாது என்று, வாசகன் உட்பட எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்படியாக ஒரு பாத்திரத்தைப் படைப்பதும் ஒருவேளை அந்தப் பாத்திரத்திற்குத் தெரிந்திருக்குமோ என வாசகனுக்குத் துளியும் ஐயம் ஏற்படாவண்ணம் இறுதிவரை நகர்த்திச் செல்வதும் கதை சொல்லும் திறமை என்றால், சம்பவம் நிகழ்ந்தபோது நடந்ததைக் கதையின் இறுதியில் தர்க்கரீதியாக நம்பும்படி அளவாக விவரித்து, அப்போது ஒரு வாக்கியத்தில் அவர் சொன்னதாக இப்போது சொல்லி வாசகனைக்  கலங்கடிப்பது எழுத்தில் தேர்ந்த கைக்கே சாத்தியம்.
நினைவில் சற்றே தோய்ந்தவரிடம், தலைமைப் புலனாய்வு அதிகாரி அருகில் வந்து அவர் சொல்லப்போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கையில், அந்த அம்மா கூறுகிற கதையின் இறுதி வாக்கியம் முக்கியமானது. வேறெவரும் அவ்வளவு எளிதில் கூறிவிடமுடியாத அந்த வார்த்தைகளை அவர் கூறியது, அவர் மட்டுமே கூறியிருக்கக்கூடும் என்கிற சாத்தியத்துக்கான தர்க்க அமைதியின் விதை கீழ்க்காணும் வரிகளாகக் கதையின் இரண்டாவது பக்கத்திலேயே ஊன்றப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் பிரசவ விடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல அன்பும் கருணையும் அன்பும் கொண்டவர் என அங்கே பெயர் வாங்கியிருந்தார்
இந்த வரிகளை தலைப்புடனும் கதையின் முடிவுடனும் பொருத்திப் பார்க்கிற இலக்கிய வாசகன், அம்மாவை மாதாவாக்கி எழுத்தாளன் எப்படிக் கலைஞனாகியிருக்கிறான் என்பதை உணரக்கூடும்.
***
சூக்குமம்
சரசரவென்று படிக்கமுடிகிற மாதிரி எழுதுவது சிறந்த எழுத்தின் முக்கியமான அம்சம் என்பதைப்போல, சிறந்த வாசகனின் முதன்மை லட்சணம் அதை மூச்சுவிடாமல் வாசித்து முடிப்பதன்று. நல்ல வாசகனின் மற்றொரு அடையாளம், ஆரம்ப வாசகனைப் போலல்லாது, எழுதப்பட்டுக் கிடக்கும் ஏராளத்தில் பெரும்பாலானவற்றைப் படிக்கமுடியாமற் போவது.
நெருடலற்ற எழுத்து என்பது, மொழி மீதான எழுத்தாளனின் ஆளுகையை மட்டுமின்றி, சொல்லவந்தது பற்றிய அவனது தெளிவையும் குறித்தது.
அதேபோல ஆரம்ப வாசகன், கையில் கிடைப்பதையெல்லாம் எப்படி வேகமாகப் படிக்கிறான். தேர்ந்த வாசகன் ஏன் நிதானமாகப் படிக்கிறான். ஏன் எழுதப்பட்ட எல்லாவற்றையும் பின்னவனால் படிக்க முடிவதில்லை என்பதும் எதிரெதிரல்ல தொடர்ச்சி. துளிர் வேகமாய் வளரத் துடிக்கிறது. முதிர்ச்சி விவேகத்தை வளர்க்கிறது -ஷோபாசக்தியின் ரம் மாஸ்டரைப்போல.
நல்ல எழுத்தில் நாட்டம் கொண்டவன் எழுதப்பட்டிருப்பதில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் நகாசுகளையும் ரசித்துத் துய்க்க நினைப்பதால் பொறுமையாகப் படிக்கிறான். பயிற்சி காரணமாக அவற்றை முதல் வாசிப்பிலேயே அவனால் கண்டு உணர முடிகிறது. அதே காரணத்தால்தான், எவ்வித நுட்பமும் வேலைப்பாடுமற்ற வெறும் சம்பவக் கோர்வைகளை அவனால் படிக்கவே முடிவதில்லை.
எழுத்தின் சூக்‌ஷுமம் எழுதிக்கொண்டேயிருப்பதில் இருக்கிறது என்பார்கள். இது எல்லா எழுத்துக்கும் பொருந்தக்கூடியதன்று. குறிப்பாக இலக்கியத்தைப் பொறுத்தவரை இது பொருந்தாது. எழுதாதபோதும் எழுதிக்கொண்டிருப்பவனே இங்கே எழுத்தாளன். எவ்வளவு காலம் உறைக்குள்ளேயே தூங்கிக்கொண்டு இருந்தாலும் துருப்பிடித்துப் போகாதிருந்தால்தானே அது போர்வாள்.
எழுத்தின் சூக்‌ஷுமம் வெறும் பயிற்சியால் மட்டுமே வருவதன்று என்பதற்கு நல்ல உதாரணமாக இந்த சூக்குமம் கதையைச் சொல்லலாம்.
பெரிய கேன்வாஸில் பல்வேறு வண்ணங்களுடைய பாத்திரங்களை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்களுடன் தீட்டப்பெறும் அவருடைய பிற்காலக் கதைகளின் வரிசையில் ஒன்றாக இதைச் சேர்க்கமுடியாது என்றாலும் அவற்றின் கூறுகள் இரண்டாயிரங்களிலேயே தொடங்கிவிட்டதற்கான ஆதாரமாக இருக்கிறது இந்தக் கதை. தேசத்துரோகி தொகுப்பிலிருக்கும் கதைகள் 1997க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்கிறன கதையின் இறுதியில் இருக்கும் குறிப்புகள்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எல்லோரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய ஒரு விஷயத்தை, அதிலும் குறிப்பாக வசதியற்ற, முன்னாள் போராளியொருவன் அகதி அட்டை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தியிருக்கிற முக்கியமான கதை.
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் 
வாக்கினிலே ஒளி உண்டாகும்
என்கிற இலட்சியவாதக் கவிதை வரிகளைப் போலில்லை யதார்த்தம் என்பதை பிரான்ஸில் ஈழத்துப் பாத்திரங்களை வைத்து கைப்பு கலந்த நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு செல்கிற கதை.
கலை என்பதே, தத்ரூபமாக ஒன்றை கண்முன் நிகழ்வதைப்போல கட்டியெழுப்பிக் காட்டுகிற பொய்தானே. போலவே, நம்பும்படியாக வாழ்வில் பொய்சொல்வதும் ஒரு கலைதானே. யாரை நம்பவைக்கை என்ன சொல்லவேண்டும் அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதை அவரவர் பாணியில் கைதேர்ந்தவர்களை வைத்துச் சொல்லிச்செல்கிறது கதை.
வெளிப்படையாகப் பிரித்துக் குறிப்பிடப்படாவிட்டாலும் மூன்று பகுதிகளாக இருக்கும் கதையின் தொடக்கம் அகதி கார்ட் கேட்பவனின் கதையைச் சொல்கிறது. இவன் சிறுவனாக தகப்பனுடன் கூலிக்குப் பனை தறிக்கப் போவதில் இருந்த அவனது இயல்பான புத்தி சூக்குமம் இயக்கத்தில் சேர்ந்த பின்பு எப்படி உதவிற்று வளர்ந்தது என்பது முதல்பகுதியாக வருகிறது. அதன் நீட்சியாகக் கள்ள பாஸ்போர்ட் தயாரிப்பில் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவதிலும் அது வெளிப்படுகிறது. இதன் பின்னிரு பகுதிகளாகவே அகதி அட்டைக்கு விண்ணப்பமெழுதும் இரண்டு நிபுணர்கள் வருகிறார்கள்.
உரையாடல் தவிர ஆசிரியர் கூற்றிலும் முழுக்கவே ஈழத்தமிழில் எழுதிச்சென்றிருப்பதும் கதையின் சரளத்துக்கு ஒரு காரணம் என்றாலும் கதை, அகதி கார்ட் வேண்டி நிற்பவனின் பார்வையிலேயே நகர்வது இந்த மொழிநடைக்கான அவசியத்தை நியாயமாக்கி இந்தியத் தமிழ் வாசகனையும் நெருக்கமாக உணரவைக்க உதவுகிறது.
கதையின் முடிவைப்போல,முரண்நகை ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுகிறது. அவனது சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்து பிரான்ஸுக்கு ஓடி வந்து அகதி கார்டுக்கு விண்ணப்பிப்போரின் பெரும்பான்மை மனுக்கள், சொந்த நாட்டில் வாழ முடியாதபடிக்கு ராணுவம் ஆவர்களைத் தேடுவதற்கான முக்கியமான காரணமாக, ஊரில் இயக்கப் பொறுபாளராக இருந்த இந்த சூக்குமத்தைக் குறிப்பிடுகின்றன. அவர்களுக்கெல்லாம் சீக்கிரத்தில் கிடைத்துவிடும் அகதி கார்ட் இவனுக்கு நிராகரிக்கப்படுகிறது.
எப்படி நிராகரிக்கப்பட்டது, அடுத்தடுத்த முயற்சிகள் எப்படி தோல்வியில் முடிகின்றன. இழு இழுவென இழுத்து எட்டு வருடங்கள் கழித்து எப்படி இவனுக்கு அகதி கார்ட் கிடைத்தது என்பதை வறள்நகைப்புடன் சொல்லத்தான் மீதி கதை.
அவனே 21 பக்கங்களுக்குத் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப் போய் சேருமிடத்துக்குத் தமிழோவியம் எனவும் நியாயஸ்தராகக் காட்டிக்கொண்டு இவன் தலையைத் தடவுகிறவர் பெயர் காந்தி மாஸ்டர் என்றும் உபரியாக அவர் யாழ்ப்பாணக்காரர் என்கிற தகவலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘தம்பி இது பச்சைப் பிழையான கேஸ்’ என்று படித்த உடனே அவனது விண்ணப்பத்தை நிராகரிக்கிறார். அதை, இவன் நொந்துபோகுமளவுக்கு எப்படியெல்லாம் பிழை என்று அவனுக்கு உணர்த்த அவனுக்குத் தெரியாத பிரெஞ்சு வார்த்தைகளைப் போட்டு ஜெனிவா ஒப்பந்தத்திலிருந்து கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதுவரை பெரிய கிளாஸ் எடுத்து, அவரது கைச்சரக்கை எல்லாம் சேர்த்து, பக்கத்துக்கு 150 ப்ராங்க் எண்ட கணக்கில 22 பக்கங்கள் வரும்படி பிரெஞ்சில் எழுதிக்கொடுக்கிறார்.
உள்ளது ஒன்றென்றால் அதை ஆளாளுக்கும் ஊதிப் பெருக்கி எட்டாக்குவதை முழுக்கவே பகடியாகச் சொல்லிச் செல்கிற கதையில், உளவு பார்க்கவரும் ‘சீ ப்ளேன்’ வெடி வைத்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவ விவரனை முக்கியமான இடம்.
அது ஒரு வெருட்டுற வெடிதான். திட்டமிட்ட பண்டார வெடிதான். ஆனால் அதுக்குப் பிறகு சீ ப்ளேன் அந்த ஏரியாவுக்கே வாறதில்ல. பனவட்டு எப்பிடிப் பத்தி எழும்பினது எண்ட சூக்குமம் இவனுக்கும் இவன்ர டீமுக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் ஈழநாடு, வீரகேசரி பேப்பருகளில எழுதின இராணுவ ஆய்வாளமார் அதை ‘ஆகாயக் கன்னிவெடி’ எண்டொரு புதுச்சொல்லைப் பாவிக்கத் தலைப்பட்டினம். அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னொரு தளத்துக்கு நகருதாம்.
இப்படி எல்லாமே ஊதிப் பெருக்கப்பட்டவை என்று, இவன் சொல்கிறவற்றையெல்லாம் கதைகளாகவே பார்த்து நிராகரிக்கின்றனர் பிரெஞ்சு விசாரணை அதிகாரிகளும் அப்பீல் நீதிபதியும்.
இறுதிப்பகுதியில் அகதி கார்டை வெற்றிகரமாகப் பெற்றுத்தரும் மற்றொரு விண்ணப்பக் கலைஞருக்கு ஷோபாசக்தி வைத்திருக்கும் பெயர் ரம் மாஸ்டர்.
ப்ரெஞ்சுக்காரர்களுக்கு எது அதிக அனுதாபத்தை உருவாக்கும் என்கிற அவருடைய சூக்கும விண்ணப்பமும் இவனது எட்டுவருட அனுபவமும் சேர்ந்து அகதி கார்டை எப்படிப் பெற்றுத் தருகின்றன என்று முடிகிற கதையில் கடைசி வரிவரை முரண்நகை எங்குமே பிசிறு தட்டாமல் விறுவிறுவெனச் செல்கிறது. எதிரும்புதிருமான நோக்கங்களும் இயல்புகளும் கொண்ட இரண்டு விண்ணப்ப மாஸ்டர்கள் கதையின் ஆதாராமான முரண்நகைக்குள் எவ்வளவு பாந்தமாய் பொருந்தி உட்காருகிறார்கள். கதையின் நாயகனிடம் இயல்பாகவே இருக்கும், எல்லா இடத்திலும் கைகொடுக்கும் நாட்டுப்புற சூக்குமம் வெளிநாட்டில் எடுபடவில்லை. இந்தக் கதை, முழுக்கவே வழக்குமொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு இதுவும் நியாயம் சேர்க்கிறது.
ஷோபாசக்தியிடம் இருக்கிற கலை அமைதி அசாதாரனமானது. ஆரம்பம் முதல் இறுதிவரை சுருதியோ தொனியோ பிசகுவதேயில்லை. 2003ல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை பின்னால் வரப்போகும் பெரிய கச்சேரிக்களுக்கு முன்னோட்டம் போல விளங்குகிறது.
நன்றி: காலம் நவம்பர் 2018
==================================================
November 28, 2018
இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது.
ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம்.
இந்தக் கதையில் நடக்கும் விசாரணைக்கும் காஃப்காவின் விசாரனைக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் உள்ளன.
மேலோட்டமான பார்வைக்கு, இருவருமே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதுவரை மட்டுமே இரண்டிற்கும் ஒற்றுமை என்று தோன்றும். அடிப்படையில் இரண்டு கதைகளுமே ஒன்றைத்தான் சொல்கின்றன என்கிற ஒற்றுமையை இறுதியில் பார்ப்போம்.  
ஃப்ரான்ஸ் காஃப்காவின் விசாரணையில், கதை முடியும்வரை விசாரணையே தொடங்கப்படுவதில்லை.
ஷோபாசக்தியின் விசாரணையில், விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு என்கிற பெயரில் தீர்வும் தரப்பட்டுவிடுகிறது. ஆனால் அளிக்கப்பட்ட தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்பதுதான் கதையே.
காஃப்காவின் கதையில் குற்றம் சாட்டப்பட்ட நாயகன் இறுதியில் இறந்துவிடுகிறான். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பது இறுதிவரை யாருக்குமே தெரியாது அவனுக்கு உட்பட.
ஷோபாவின் கதையில் விசாரிக்கப்படுபவன் குற்றவாளியில்லை என்பது மட்டுமின்றி உண்மையான குற்றவாளி யார் என்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனது விசாரணையின் வழியே எல்லோருக்குமே தெரியும் அவனை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உட்பட.
எனினும் இரண்டு கதைகளின் முடிவுகளும் ஒன்றுதான் என்பதே ஷோபாசக்தி சொல்லவருவது.
இதை அவர் கதையில் எங்குமே சொல்லவில்லை. அதனால்தான் அவர் எழுத்தாளரில் இருந்து கலைஞனாகிறார்.
காஃப்காவின் விசாரனை எழுதப்பட்டது 1914-15 வாக்கில். ஷோபாசக்தி தமது விசாரணையை எழுதியிருப்பது 2016ல். இரண்டிற்குமிடையில் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலான இடைவெளி. ஒருவேளை, காஃப்காவின் விசாரணை நாவலுக்குச் செலுத்தும் நூற்றாண்டு அஞ்சலியாக இந்தக் கதையை ஷோபாசக்தி எழுதியிருந்தாலும் பொருத்தமானதே.
நூறாண்டுகள் கழிந்தும் ஜெர்மனிக்கு சம்மந்தமேயில்லாத தமது நாட்டிலும் இன்று நடக்கிற விசாரனையின் லட்சணமும் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லாது காஃப்கா சொன்னதைப்போலவேதான் உள்ளது என்பதை, இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது.
இந்தக் கதையின் முதல் பத்தியைத் தவிர்த்துவிட்டுப் படித்தாலும் இலக்கியத் தரமோ வீச்சோ வாசகனிடம் இது உண்டாக்கும் தாக்கமோ இம்மியளவும் மாறவோ குறையவோ செய்யாது என்பதை இரண்டையும் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
இரண்டு பகுதிகளாக இருக்கும் கதையில் முதல் பகுதி விசாரணைக்கான முன்கதைச் சுருக்கமாக இருக்கிறதென்றால் இரண்டாம் பகுதி முழுக்க விசாரனையாகவும் அதில் வெளிப்படுவது பூர்வகதையாகவும் தீர்ப்பு முத்தாய்ப்பாகவும் இருக்கிறது.
முன்னும் பின்னுமாகக் கதை சொல்வதைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தவிர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு பிளாஷ்பேக்கிற்கு மட்டுமே அனுமதி என்பது சிறுகதையில் எழுதப்படாத விதி. வேறொன்றுமில்லை குழப்பிவிடும் என்பதுதான் காரணம். சில சமயம் வாசகனையும் பல சமயம் எழுதுபவரையும்.
ஷோபாசக்தி கண்டமானத்துக்கும் கதை சொல்பவர் என்பது போல எடுத்தவுடனே தோன்றினாலும் உள்ளூர ஒத்திசைவும் ஒழுங்கும் கச்சிதமாக உட்கார்ந்திருப்பது, பகடியும் எள்ளலும் குமிழியிட்டுக்கொண்டு சரசரவென்று ஓடும் கதைகளை சற்றே நிறுத்திப் படித்தால் பிடிபட்டுவிடும். கூடவே, சொல்லப்படாமல் ஆங்காங்கே கவனமாய் தவிர்க்கப்பட்டிருக்கும் மறைபொருளும்.
உள்ளக விசாரணை என்கிற தலைப்பிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கவில்லையா. மிக உள்ளக விசாரணை என்று ஏன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது கதையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே படிக்கிறவனிடம் தோன்றுகிற வறண்ட புன்னகை சொல்லிவிடும். இதைவிட பொருத்தமான தலைப்பை இந்தக் கதைக்கு வைக்க முடியாது என்பதை கதை முடியும்போது வாசகனுக்கு உண்டாகிற மன அழுத்தம் உணர்த்திவிடும்.
முதல் பத்திக்குப் பிறகு வரும் பாராவில்,எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது.
பிறகு, எப்படி அந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் தொடங்கி ஆற்றொழுக்காய் செல்கிற கதையில், இதைப்போலவே இதற்கருகில் ஒரு கிணறு இருந்ததாகவும் மண்மூடப்பட்டுவிட்ட அதிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நேரடியாகத் தோண்டிப்பார்த்துவிசாரணை செய்வதற்காக வரும் நீதிபதிகளில் ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர்.
உக்கிரமாக, பொறி பறக்க எழுதுவதே முற்போக்கு எழுத்து என்கிற எண்ணம் இன்னும்கூட நிறைய இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் இலக்கியம் எப்போதும் அதைத் தாண்டியே, இயங்கிக்கொண்டு இருக்கிறது.
25 வருடங்களுக்குப் பிறகு தோண்டிப்பார்க்கிற கிணற்றில்,
அவர்கள் கயிற்றில் தொங்கியவாறே ஆழத்திலிருந்து அச்சத்துடனும் வியப்புடனும் கூச்சலிட்டார்கள்:
” இங்கே ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான்.”
இதைக் கேட்டதும் நீதிபதிகளின் உணர்வு என்ன, வைத்திய சட்ட நிபுணர்களின் எதிர்வினை என்ன, தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளரின் ஊகம் என்ன, காவற்துறையினரிடையே எழுந்த சலசலப்புகள் தானென்ன போன்றவற்றை விபரிப்பது இந்தச் சிறிய கதைக்கு முக்கியமல்ல என்பதால் கதையின் முதற்பாதியை நாங்கள் இங்கேயே நிறுத்திவிட்டு கதையின் மறுபாதிக்குச் செல்வோம்.
என்று, எழுதாமல் விட்டதைப் பற்றி, எழுதுகிற விதத்தில் எழுதினால், எழுதுவதைவிட வலுவாகச் சொல்லிவிடமுடியும்.
எழுதத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தைப் போலவே, அதில் எதையெதை எழுதுகிறான் எதையெதைத் தவிர்க்கிறான் என்கிற எழுத்தாளனின் பிரஞைபூர்வ தேர்விலும் இருக்கிறது எழுத்தின் வீரியம்.
விசாரணை நடக்கையில், என்ன நடந்தது எப்படி நடந்தது என்று விரிவாக அவன் விவரித்து முடிக்கையில், படித்துக்கொண்டிருக்கிற வாசகனைப்போலவே நீதிபதிகளுக்கும் நியாயமான அடிப்படை ஐயம் எழுகிறது.
“நீர் இவ்வளவு காலமும் மூடப்பட்ட கிணற்றுக்குள் உயிரோடு இருந்தீர் என்பது பெரிய அதிசயமாயிருக்கிறது.”
“அங்கே நிலத்தோடு கொஞ்சத் தண்ணீர் எப்படியிருக்கிறதோ, தாவரங்களும் தவளைகளும் புழுபூச்சிகளும் எப்படியிருக்கின்றனவோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதிசயமாக எதுவுமில்லை.”
எதை எழுதுவது எதை விடுப்பது என்பதைப் பல எழுத்தாளர்கள் அவரவர் தேவை பார்வை சார்பு பக்குவம் முதிர்ச்சி அறிவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். அதைப் போலவே இந்தக் கதையிலும் விசாரணை முடிந்தபின் நீதிபதிகள், எது நியாயம் என்பதைவிட எது நாட்டிற்கு நல்லது என்பதை முடிவுசெய்கிறார்கள். அது எப்படி நிறைவேற்றப்படுகிறது என்கிறபடியாகக் கதை முடிகிறது.
காஃப்காவின் விசாரணையில் K என்கிற பெயர் கொண்ட நாயகன் இறுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு இறக்கிறான்.
ஷோபாசக்தியின் மிக உள்ளக விசாரணையில் பெயரே இல்லாத நாயகன் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் -எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று மட்டும் கேட்டுவிடவேண்டாம் என்கிறபடிக்கு. 

நன்றி: அரும்பு டிசம்பர் 2018

Saturday, 8 February 2020

என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி |


என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/jan/26/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்---சாகந்தசாமி-3341050.html
Published on : 26th January 2020 12:21 PM |




"நான் எனக்காக மட்டும் எழுதக் கூடியவனாக இருக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பிறகுதான் உள்ளே அது இருப்பது தெரிய வருகிறது. இதைப்போல் உள்ளே வேறு என்ன என்ன இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு விடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ' என்று தன் எழுத்தைப் பற்றி குறிப்பிடும் சுந்தர ராமசாமி தன் வாசகர்கள் பற்றியும் சொல்கிறார்.
"இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக ஆளாக, என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்தியமாக இருக்குமென்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள் என்னுடைய வாசகர்கள்' என்றார்.
தன் எழுத்துகள் பற்றியும், தன் வாசகர்கள் பற்றியும் தீர்க்கமான முன் முடிவுகள் கொண்ட ராமசாமி 1931-ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள "தழுவிய மகாதேவர் கோவில்' என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை எஸ்.ஆர். சுந்தரம் ஐயர். தாயார் தங்கம்மாள்.
எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் கோட்டயத்தில் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். அது மலையாள மொழி பேசப்படும் பகுதி. பள்ளிக்கூடத்தில் மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பப் படிப்பை மலையாளத்தில் தான் அவர் தொடங்கினார்.
1939 - ஆம் ஆண்டில் எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவர் பணியை விட்டு விட்டு நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அப்பொழுது ராமசாமிக்கு எட்டு வயதாகி இருந்தது. அவர் தந்தையார் சுதர்சன் ஜவுளிக் கடையை ஆரம்பித்து நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான நாகர்கோவில் திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. எனவே பள்ளிக்கூடங்களில் மலையாள மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. அவர் பள்ளியில் மலையாள மொழி படித்து வந்தார்.
ராமசாமிக்குப் பத்து வயதாகும்போது பக்கவாத நோய் வந்துவிட்டது. அதனால் பள்ளிக்கூடம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. எனவே வீட்டில் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தமிழ்மொழி வீட்டில் பேசப்பட்டு வந்தது.
அவர் தாயார் தங்கம்மாள் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா சிறுகதைகளைப் படித்துக் காட்டி வந்தார். அவரை நவீன தமிழ்ச் சிறுகதைகள் வசீகரித்தன.
1947- ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்பொழுது ராமசாமிக்கு பதினாறு வயதாகி இருந்தது. தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. எனவே வீட்டில் இருந்து கொண்டே மலையாளம், ஆங்கிலம் வழியாக நாட்டின் நடப்புகளை, அரசியல் சமூக, கலாசார இலக்கிய நிகழ்வுகளைப் படித்தறிந்து கொண்டார்.
மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பெரியார், அரவிந்தர், ராம் மனோகர் லோகியா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.சி. குமரப்பா உட்பட எதிர் எதிரான சிந்தனைப் போக்குகள் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சாதனைகளையும், தத்துவங்களையும் அறிந்து கொண்டார்.
அவருக்குத் தமிழ் மொழிவழியாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. "சொந்த முயற்சியால் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுக் கொண்டேன்' என்று பின்னால் எழுதியிருக்கிறார்.
அவர் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுத் தமிழ் மொழியில் பின்னால் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதியதால்தான் இலக்கிய ஆளுமை கொண்டவர், மேலான கலைஞர் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். அதுதான் எழுத்து என்பதின் வலிமை.
தமிழ் படிக்கக் கற்றுக் கொண்ட ராமசாமி புதுமைப்பித்தனின் "காஞ்சனை' சிறுகதையைப் படித்தார். கதைகளின் கருத்துகளும், சொல்லப்பட்ட விதமும், மொழியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புதுமைப்பித்தன் அசலான கதாசிரியர் என்று முடிவு செய்தார். பதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவு மலர் கொண்டு வர முன் முயற்சிகள் எடுத்தார். புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட ஒரு சிறுகதை எழுதினார். அதற்கு "முதலும் முடிவும்' என்று பெயரிட்டார். தன் தாயாரிடம் படித்துக் காட்டினார். நன்றாக இருக்கிறது என்று தாயார் பாராட்டியதைக் குறிப்பிட்டு விட்டு, "எந்தத் தாயார்தான் தன் மகன் எழுதியதை பாராட்டாமல் இருப்பார்' என்று ஒரு கேள்வியையும் கேட்கிறார்.
1951- ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் நினைவு மலர் வெளி வந்தது. அதில் அவரது முதல் சிறுகதை, "முதலும் முடிவும்' இடம் பெற்றது.
ராமசாமிக்கு மலையாள மொழி இலக்கியத்தின் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், காரூர், கேசவ தேவ் உட்பட பலரைப் படித்திருந்தார். 1942- ஆம் ஆண்டில் வெளிவந்த தகழியின் "தோட்டியின் மகன்' பெருமளவில் வெற்றி பெற்ற நாவலாக இருந்தது. நாவலின் தலைப்பே முற்போக்கான, எதைச் சொல்கிறது என்பதை உரக்கச் சொல்வதாக இருந்தது. "தோட்டியின் மகன்' நாவல் ராமசாமியை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மலையாளத்தில் இருந்து அதனை தமிழில் மொழி பெயர்த்தார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்புக்கு 2000- ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில், "அப்போது எனக்கு வயது இருபது, இருபத்தியொன்று. அதற்கு முன் தமிழில் சொல்லும்படி நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நிச்சயமாக என்னுடைய படைப்பென்று எதுவும் அச்சேறியிருக்கவில்லை. என் உடல், மனம் சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும், வருத்தத்துடனும் புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்' என்று "தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்பு பற்றி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் ராமசாமி நினைவு கூர்ந்து சொல்கிறார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்க்கப்பட்டு அவரிடம் இருபது ஆண்டுகள் இருந்தன. அவர் பிரபலமாகி வந்தார்.
கம்யூனிஸ்டும், இலக்கியவாதியுமான தொ.மு.சி. ரகுநாதன் வெகுஜனப் பத்திரிகைகள் மீதும், புலமை அற்ற பேராசிரியர்கள் மீதும் கடுங்கோபம் கொண்ட எழுத்தாளராக இருந்தார். அவர் வை.கோவிந்தனின் "சக்தி'யில் சில காலம் பணியாற்றியவர். தீவிரமான இலட்சியவாதி. அவருடன் ராமசாமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன், ராமசாமியைக் தத்துவரீதியிலும், கலைக் கோட்பாட்டிலும், கம்யூனிஸ்டு சித்தாந்தம் என்பதிலும் அதிகமாகவே சிந்தித்தவர் என்றே குறிப்பிட வேண்டும். இருவரும் தோழமை கொண்டிருந்தார்கள். ராமசாமி திறமை மிகுந்ததொரு கலைஞர் என்றே தொ.மு.சி. ரகுநாதன் கருதினார்.



1953- ஆம் ஆண்டில் தொ.மு.சி.ரகுநாதன் "சாந்தி' என்றொரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார். அது சிற்றிதழ்தான். அதில் அரசியல் கட்டுரைகள் சில வந்தன. ஆனால் "சாந்தி' வெளியிட்ட கதைகளுக்காகவே மதிக்கப்படுகிறது. "சாந்தி' யின் முதல் இதழில் ராமசாமியின் இரண்டாவது சிறுகதை "தண்ணீர்' வெளிவந்தது. தண்ணீர் முற்போக்கான சிறுகதை. ஆனால் வறட்சி உள்ள சிறுகதை கிடையாது. மனிதாபிமானம் என்பதுதான் கதையின் ஆதார சுருதி.
இலக்கியம் என்பது பொழுதுபோக்கிற்கானது இல்லை. அது மனித குலத்தின் மேன்மைக்கானது என்ற சோசலிச கருத்து முதன்மையுற்று இருந்தபோது ராமசாமி உளவியலையும் சேர்த்து எழுதினார்.
தண்ணீர் கதையின் பிரதான அம்சம்தண்ணீர்தான். "நீரின்றி அமையாது உலகு' என்பது பொதுவிதி. அது மனிதர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. பூமி பசுமை கொள்ள பயிர்கள் விளைய, பறவைகள் வானில் பறக்க, விலங்குகள் கானகத்தில் திரிய, மனிதர்கள் உண்டு களிப்புற்று இருக்க தண்ணீர் வேண்டும்.
ஒரு கிராமம் நீரின்றி வறண்டு போன போது மனிதர்கள் தண்ணீர் இன்றி தவிக்கும்போது, ஒரு முதியவர் கிணறு வெட்டுவதுதான் தண்ணீர். அது மனித முயற்சியின் உச்சம். அது வெறும் முற்போக்கு இல்லை. ஆனால் சொல்லப்படும் முறையில் சார்பு கொண்டு விடுகிறது
ராமசாமி கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் ஆதரவாளராக இருந்தபோது, அவர் அடிப்படையில் கலைஞராகவும் இருந்தார். கலை எல்லாவிதமான புத்திசாலித்தனமான காரியங்களையும் உருட்டித் தள்ளிவிடும் என்பதால், அவர் ஆரம்ப கால கதைகள் கூட அதிகமான சேதாரம் இல்லாமலேயே இருக்கின்றனர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு, 1959- ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் பெயர் "அக்கரைச் சீமையிலே' . ராமசாமிக்கு அப்போது இருபத்தெட்டு வயதாகி இருந்தது.
உலகம் முழுவதிலும் பல எழுத்தாளர்கள் இளம் பருவத்தில் கவரப்பட்ட இலட்சியப் பிடிப்போடு எழுதிக் கொண்டு இருப்பதில்லை. இடையில் இலட்சியம் ஒரு சுமையென கருதி அதை கீழே இறக்கி வைத்துவிட்டு எழுத போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் இளம் பருவத்தில் தவறானதொரு இலட்சியத்திற்காக எழுதியதாகப் பிரகடனப் படுத்திக்கொண்டு அதற்கு எதிராக எழுதி இருக்கிறார்கள். எழுதவே வேண்டாம் என்று போனவர்களும் இருக்கிறார்கள். சிலர் இலட்சியத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் அதனை செயல்முறைப்படுத்திய தலைவர்கள் செயற்பாட்டில் அதிருப்தி உற்று வெளியேறி உள்ளார்கள். சித்தாந்தம் தவறு என்று சொல்லிக் கொண்டு வெளியில் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
1950- ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளில் பலர் எழுத்தாளர்களாக இருந்தார்கள். அல்லது எழுத்தாளர்களில் சிலர் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் முதன்மையானவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் கம்யூனிஸ்டு சித்தாந்தவாதி. இளம் பருவத்தில் இயக்கத்தில் பங்குபெற்ற அவர், தன் இறுதி காலம் வரையில் கொள்கைப் பிடிப்பாளராகவே வாழ்ந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் சித்தாந்த அடிப்படையிலேயே எழுதி வந்தார். மொழி பெயர்ப்பாளர். சோவியத் நாவல்களையும், கவிதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் காந்திய கோட்பாடுகள், கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள், திராவிடச் சிந்தனைகள் பரவி இருந்தன. அவற்றில் கவரப்பட்ட சிலர் கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் எழுதி வந்தார்கள். நாடகங்கள் எழுதி சிலர் அரங்கேற்றினார்கள். சித்தாந்தம் கலைப் படைப்பிற்கு அவசியமில்லை. வாழ்க்கையை எழுதுவதுதான் இலக்கியம் என்ற முறையில் சிலர் எழுதி வந்தார்கள். பத்திரிகைகள் குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் வெளியிட்டு வந்தன. எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் பெரும்பாலும் பத்திரிகை எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
தமிழகத்தின் தென்கோடியில் இருந்து சுந்தர ராமசாமி வந்தார். கடலூரில் இருந்து ஜெயகாந்தன் வந்தார். இருவரும் சொற்பப் படிப்புப் படித்தவர்கள்தான். ஆனால் சுயமான சிந்தனை கொண்டவர்கள். மார்க்ஸ், லெனின் சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள். ஒரு பத்தாண்டு காலத்திற்குள் அவர்கள் சித்தாந்தம் சார்ந்து எழுதுவதில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள்.
சுந்தர ராமசாமி, ""சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டபோது மனம் மாறி வந்துட்டேன்'' என்றார்.
ஜெயகாந்தன், " நான் கம்யூனிஸ்டுகளால்தான் உருவானேன். ஆனால் அவர்களோடு இருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒரு கட்சியில் சேர்வதற்கும், சித்தாந்தம் சார்ந்து எழுதுவதற்கும் பெரிய ஈர்ப்புகள் ஒன்றும் கிடையாது. சித்தாந்தத்தின் கவர்ச்சி, தலைவர்களின் செயற்பாடுகள், அறிமுகம், அரவணைப்பு சேர்த்து வைக்கிறது. வயது ஏற ஏற எழுத்தாளர்களின் ஆர்வம் மாறுகிறது. கட்சியின் மீது பிடிப்பு குறைகிறது. தலைவர்கள் சாதாரணமான முதியவர்களாகப் படுகிறார்கள். தன்னிடம் அபாரமான அறிவும் ஆற்றலும், தலைமைப் பண்பும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் காரணமாகச் சுதந்திர எழுத்தாளராக பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டு தலைவர் ப.ஜீவானந்தத்திடம் சுந்தர ராமசாமி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். ஜீவா இலக்கியவாதி இல்லை. இலட்சியவாதி. இலட்சியவாதிக்கு சமூகத்தில் இடம் உண்டு என்ற முறையில் நினைவோடையில் ப.ஜீவானந்தம் பற்றி எழுதியிருக்கிறார்.
தொ.மு.சி. ரகுநாதன், கம்யூனிஸ்டு சுந்தர ராமசாமியை இனம் கண்டு இலக்கியவாதியாக அறிமுகப்படுத்தியவர். அவரை வெகுவாகப் பாதித்த எழுத்தாளர். ஆனால் அவரைப் பற்றி நினைவோடையில் எழுதவில்லை. அதுவும் ஒரு விமர்சனம்தான்.
அவருக்கு எழுதும் மொழி முறை, படிக்கும் விதம் பற்றி எல்லாம் தனியாகக் கருத்து இருந்தது. அவர் சொல்கிறார்:
"முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்கும் என உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகத்தைப் படிக்க கஷ்டமாக இருக்கிறது.'
இலக்கியம், அது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், எதுவாகட்டும் மொழியில்தான் எழுதப்படுகின்றன. மொழி என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்டதுதான். மொழியைக் கொண்டுதான் பலரும் தம் மேதமையை நிலை நாட்டி வருகிறார்கள். ஆனால் மொழிக்கு என்ன இடம் என்பது படைப்பாளர்கள் தீர்மானிப்பதுதான். சிலர் கருத்துக்கேற்ற வசீகரமான மொழி நடையையும், வார்த்தைகளையும் வளர்ப்பதோடு கொண்டு வந்து எல்லோரையும் படிக்க வைத்துவிடுகிறார்கள். மற்றும் சிலர் மொழியே பிரதானமென்று கொண்டு முரட்டுத்தனமாக எழுதி படிக்கவே முடியாமல் செய்துவிடுகிறார்கள்'.
ஓர் படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் மொழியின் முக்கியத்துவம் பற்றி சுந்தர ராமசாமி தன் அனுபவம் என்ற முறையில் சொல்லி இருக்கிறார்.
மொழி என்பது கற்கப்படுவது. ஒருவன் எந்த மொழியும் கற்றுக்கொண்டு எழுதலாம். அவன் வாழும் பகுதியில் அது அதிகமான மக்களால் படிக்கப்படுகிறது. ராமசாமிக்கு மலையாள மொழி முதல் மொழியாக இருந்தது. அதில் அவர் எழுதியிருந்தால் மலையாள எழுத்தாளராகி இருப்பார். தமிழ்மொழி தாய்மொழியாக இருந்தது. அவர் பெற்றோர்கள் தமிழ் பேசிவந்தார்கள். சில தமிழ்க் கதைகள், கேட்டு, அதனால் தமிழ் படித்து தமிழில் கதைகள் எழுதி தமிழ் எழுத்தாளராகி விட்டார். அது சொந்தமான முடிவுதான் என்கிறார். மலையாள மொழியில் எழுதி இருந்தால் கூடுதலான அங்கீகாரம் பெற்று இருக்கலாம் என்று அர்த்தம் சொல்லப்பட்டதின் வழியாகத் தெரிகிறது.
சுந்தர ராமசாமி இளம் பருவத்தில் படித்த புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் நினைவுகளையெல்லாம் உரையாடலில் எழுதியிருக்கிறார்.
அவர்களில் க.நா.சுப்பிரமணியம் மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னையும், ஜெயகாந்தனையும் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்கள் என்று அவர் அறிமுகம் செய்தது உற்சாகம் அளித்தது என்றோர் இடத்தில் பதிவு செய்து இருக்கிறார். ஆனாலும் க.நா.சுப்பிரமணியம் பட்டியல் அடிக்கடி மாறக் கூடியதாக இருப்பது பற்றி கேலி செய்கிறார்.
சிறுகதை எழுத்தாளரும், புதுக்கவிஞருமான ந.பிச்சமூர்த்தி மீது அவருக்கான மரியாதை குறையாமலே இருந்து வந்தது. அவர் வாழ்க்கையையும், சாதனைகளையும் பற்றி "ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்' என்று இலக்கியச் சிந்தனைக்காக 1991-ஆம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.
ந.பிச்சமூர்த்தியை, அவர் சி.சு. செல்லப்பா போல மகாகவி என்று கொண்டாடாவிட்டாலும் அசலான புது கவிஞர் என்று உறுதிபட நம்பினார்.
ந.பிச்சமூர்த்தி ஒரு படைப்பு எழுத்தாளராகவே இருந்தார். அவர் சார்ந்திருந்த மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா அலசல் முறையிலும், ரசனைரீதியிலும் நவீன படைப்பிலக்கியத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது சிறுகதைகள், புதுக் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார். விமர்சனம் செய்ய வேண்டாம் என்றுதான் இருந்தார்.
சுந்தர ராமசாமி விமர்சனத்தின் மீது ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். அதாவது ஒரு படைப்பின் சக்தியை, கலையம்சத்தைக் கண்டறியும் ஆற்றல் பெற்று இருந்தார். அவர் தனக்கு உவப்பான எழுத்தாளர்கள் பற்றி நினைவோடையில் எழுதினார். அந்தத் தேர்வே விமர்சனம்தான்.
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள், நாடகங்களை விட, புதுக்கவிதைக்காக அதிகமாக மதிக்கப்படுவார் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அதனை விளக்கி எழுதவில்லை. ஆனால் புதுக்கவிதைகள், சிறுகதைகள் பற்றி எழுதியதன் வழியாகத் தெரிய வருகிறது.
(தொடரும்)
****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/02/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3347430.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 02nd February 2020 10:34 PM |!






சென்ற இதழ் தொடர்ச்சி...

சுந்தர ராமசாமியின் உற்ற நண்பர் கிருஷ்ணன் நம்பி. அநேகமாக இருவரும் ஒரே வயதினர். இலக்கியப் பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி வழியாக கிருஷ்ணன் நம்பியையும், கிருஷ்ணன் நம்பி வழியாக சுந்தர ராமசாமியும் தமிழக இலக்கிய உலகம் தெரிந்து கொண்டது. அவர்களின் நட்பின் இறுக்கத்தையும்.

சுந்தர ராமசாமி, தன் காலத்தில் மிகவும் மதித்த எழுத்தாளர் என்றால் அது க.நா.சுப்பிரமணியம்தான். அவர் படைப்புகள், மொழி பெயர்ப்புகள், இலக்கிய அபிப்பிராயங்கள், அவற்றை எழுதியது பற்றியெல்லாம்கவனிக்கத்தக்க விதமாகவே எழுதியுள்ளார்.

அவர் நாகர்கோவிலில் வசித்து வந்தார். பல தமிழ் எழுத்தாளர்கள் சென்னையில் இருந்தார்கள். ஆனால் எழுத்தாளராக வாழ்வதற்கு சென்னைதான் சரியான ஊரென்று சிலர் வாழ்ந்து வந்தார்கள். ஒரு வேலையும் செய்யாத எழுத்தாளர்கள் கூட, சென்னையை இருப்பிடமாகக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள்,புத்தக நிலையங்கள், நூலகங்கள் புத்தகக் கடைகள் எல்லாம் சென்னையில் இருந்தன. வானொலி சென்னையில் இருந்தது. வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பல எழுத்தாளர்கள் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சென்னையில் சில எழுத்தாளர்கள் வசித்தார்கள்.

சுந்தர ராமசாமி, திருவனந்தபுரத்தில் தன் நண்பர் கிருஷ்ணன் நம்பியுடன் சென்று க.நா.சுப்பிரமணியத்தைச் சந்தித்ததை, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஒரு பெரிய மனிதர் சந்திப்பு என்ற வகையிலேயே எழுதி இருக்கிறார். க.நா.சுப்பிரமணியத்தின் இலக்கிய மதிப்பீடுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டார். தொ.மு.சி. ரகுநாதன் உட்பட கம்யூனிஸ்டுஎழுத்தாளர்கள் க.நா.சுப்பிரமணியம் படைப்புக்களையும் ஏற்றுக் கொண்டது இல்லை; அவருடைய இலக்கிய விமர்சனங்களையும் கண்டு கொண்டது இல்லை. அவரை சோவியத் எதிர்ப்பாளர் என்றும், மார்க்சிஸ்டு விரோதி என்றும், அமெரிக்காவின் கூலி என்றும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். இந்திய-தமிழக கம்யூனிஸ்டு எழுத்தாளர்களோடு இலங்கை கைலாசபதியும் சேர்ந்து கொண்டார். சுந்தர ராமசாமி, கைலாசபதியை நிராகரித்தார். ஆனால் ரகுநாதன் பற்றி ஒரு சொல்லும்சொன்னது இல்லை.

இலக்கியத்திற்குச் சித்தாந்தம் எதிரானதோ, விரோதமானதோ இல்லை. ஆனால் அதனைக் கலையாகச் சொல்வதில் இருக்கிறது என்ற முறையில்தான்
பின்னால் எழுதினார்.

சுந்தர ராமசாமியின் முதல் நாவல் "சரஸ்வதி' இதழில், "ஒரு புளிய மரம்' என்ற பெயரில் 1959 - ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அது தொடர்ந்து வரவில்லை. இடையில் நின்று போய்விட்டது. பின்னர், 1966 -ஆம் ஆண்டில் "ஒரு புளிய மரத்தின் கதை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அவர் வெகுஜன பத்திரிகை எழுத்தாளர் இல்லை. அதில் உறுதியாக இருந்தார். தன் படைப்புகள்வெகுஜன பத்திரிகைகளில் வந்து பிரபல்யம் அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் சிறுபத்திரிகை, சிற்றிதழ் எழுத்தாளர்தான். அவர் "சாந்தி', "சரஸ்வதி", "எழுத்து', "இலக்கிய வட்டம்', " சலங்கை', "கொல்லிப்பாவை', "தீபம்', "ஞானரதம்' இதழ்களில் தான் எழுதினார். "தாமரை'யிலும் சில கதைகள் எழுதி உள்ளார். அவர் மொத்தமாக எழுபத்திரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நா. பார்த்தசாரதி, சுந்தரராமசாமி மீதும், அவர் படைப்புகள் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கதைகள் தான் பணிபுரிந்த "கல்கி'யில் வெளிவரவேண்டுமென விரும்பினார். அவரிடம் வற்புறுத்தி கதைகள் வாங்கி "கல்கி' தீபாவளி மலரில் வெளியிட்டார். சொந்தமாக "தீபம்' தொடங்கியதும் அவர் கதைகளை வெளியிட்டார்.

சுந்தர ராமசாமி அதிகம் எழுதும் எழுத்தாளர் இல்லை. அவசரப்படாமல்தான் எழுதி வந்தார். 1967-ஆம் ஆண்டில் சொந்தத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏழாண்டு காலம் எழுதுவதையே விட்டுவிட்டார். படைப்பு மனம் மாறிவிட்டது. அது ஒரு மனோ நிலை. சிலர் எழுதிக் கொண்டும், பலர் எழுதாமலும் எழுத்தாளராகவே இருக்கிறார்கள். சிலருக்கு விட்டதைப் பிடிக்கும்போது கலையே உருமாறி விடுகிறது.

எழுத்து என்பது மனத்தில் சுரந்து வருவது. சிலருக்கு வற்றாது சுரந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள் சுரந்து வறண்டு போவதும் உண்டு. என்றும் சுரப்பவர்தான் எழுத்தாளர் என்றோ இடையில் விடுகிறவர் எழுத்தாளர் இல்லையென்றோ சொல்ல முடியாது. என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதுதான் படைப்புலகத்தில் முக்கியமாகக் கவனம் பெறுகிறது.

சில எழுத்தாளர்கள் முதல் நாவலில் தன்னை எழுத்தாளன் என்று நிலைநிறுத்திக் கொண்டுவிடுகிறார்கள். க.நா.சுப்பிரமணியம் முதல் நாவல் "சர்மாவின் உயில்', சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்', ஆர். சண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்', நீல பத்மநாபனின் "தலைமுறைகள்', அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்' எல்லாம் முதல் நாவல்கள்தாம். ஆனால் முதிர்ச்சி உள்ள நாவல்கள். ஒரு படைப்பைப் பாதியில் விட்டால், இணைப்பது என்பது அநேகமாக சாத்தியமில்லாமல் போகிறது. மிகச்சிறந்த கலைவாணர்கள் இரண்டு பகுதிகளையும் வெகு நுட்பமான முறையில் முடிச்சுத் தெரியாமல் இணைத்து விடுகிறார்கள்.

சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை' மிகவும் நேர்த்தியான விதத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது பற்றி எத்தனைதான் சொன்னாலும், பூரணமாகச் சொல்லி முடித்துவிட முடியாது. ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லை எட்டியே செல்கிறது.

சுந்தர ராமசாமி விட்டதைப் பிடிக்கும் எழுத்தாளராகவே இருந்தார். அவர் உரைநடையில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது போல புதுக் கவிதைகளும் எழுதினார். அவர் புதுக் கவிதைகள் தமிழில் எழுதப்பட்டு வந்த புதுக்கவிதைகள் மரபை ஒட்டி இல்லை. இருண்மை, தத்துவ விசாரணை கிடையாது. தீர்மானமான வெளிப்பாடுகள். ஆனால் சமூக விமர்சனம் செய்கின்றவை இல்லை. மனத்தை நெகிழ வைக்கும் புதுக்கவிதைகள் எழுதியது போல பிரகடனப்படுத்தும் கவிதைகளும் எழுதினார்.

அவர் புதுக் கவிதைகள் எழுதி வந்த காலத்தில் அவர்தான் புதுமையைச் சார்ந்திருந்தார்.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா இல்லை அவர். அவர்களைப் படித்திருந்தார். ஆனால் அவர்களை விட்டு ஒதுங்கி வெகுதூரம் வந்திருந்தார். அவரின் புதுக் கவிதைகள் மொழியும், சொல்லப்பட்ட கருத்தும், சொல்லிய விதமும் வசீகரம் கொண்டிருந்தன. அவருக்குத் தான் எழுதுவது பற்றி பூரண பிரக்ஞை இருந்தது. ஒவ்வொரு சொல்லின் சொல்லப்படும் அர்த்தமும், சொல்லப் படாத பொருளும் வாசிக்கும்போது புரிந்து கொள்ளும் விதமாக எழுதினார்.

"ஜே.ஜே. சில குறிப்புகள்' என்ற நாவல் 1981 - ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் சிறப்பான முறையில் அச்சிட்டிருந்தார். "ஜே.ஜே. சில குறிப்புகள்' மலர்மன்னன் என்ற எழுத்தாளர் நடத்திய "கால்' என்ற காலாண்டு இதழில் பல பகுதிகள் வெளிவந்தன. "ஜே.ஜே. சில குறிப்புகள்' அது மரபான கதையில்லை. மொழி இறுக்கமாக இருந்தது. இலக்கியம் மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும் மொழியே இலக்கியம் கிடையாது. அதனை சுந்தர ராமசாமி அறிந்து கொண்டுதான் இருந்தார். ஆனால் எழுதுகிறபோது முறுக்கலான மொழிநடை நாவலை நிலைநிறுத்திவிடும் என்று எழுதி இருப்பது தெரிகிறது.

சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்' எழுதப்பட்ட புதுமொழி புதிய வாசகர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் "ஜே.ஜே. சில குறிப்புகள்' போலதொரு நாவல் தமிழில் இல்லை என்றே கொண்டாடினார்கள். அவருக்கும் தமிழ் நாவலாசிரியர்கள் யார் மீதும் பெரிய அளவில் மதிப்பு இல்லை. அவருக்கு ஜானகிராமன், ஜெயகாந்தன் மீது சிறிது மதிப்பு இருந்தது. அதைத்தவிர அவர் மலையாள எழுத்தாளர்கள் தகழி, பஷீர், பொற்றே காட், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, காரூர், தாமஸ் மேல் எல்லாம் மதிப்பு கொண்டிருந்தார். அதுவே அவரை தகழியின் "தோட்டியின் மகன்' நாவலை இருபது இருபத்தொரு வயதில் மொழி பெயர்க்க வைத்தது. பின்னர் அவர் தகழியின் "செம்மீன்' நாவலை மொழி பெயர்த்தார்.

க.நா.சுப்ரமணியம், இந்திய எழுத்தாளர்களில் மலையாள எழுத்தாளர் பஷீரையும், கன்னட எழுத்தாளர்களில் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், சிவராம் காரந்தையும் அங்கீகாரம் செய்தார். தமிழ் மக்கள் விரும்பிப் படித்து வந்த மராத்திய எழுத்தாளர் வி.ச. காண்டேகரை ஒதுக்கித் தள்ளிவிட்டார். அவர்தான் இலக்கியத் தரம் நிர்ணயிக்கக்கூடிய திறன் பெற்றவராக இருந்தார். அவரை ஏற்காதவர்கள் கூட, அவர் பட்டியலுக்கும், மதிப்புரைக்கும் மதிப்பளித்து வந்தார்கள். ஆனால் அவர் தன் குரலை உயர்த்தாமல் சொல்லவும் எழுதவும் கூடியவராக இருந்தார். ஒரு கவிதையை, சிறுகதையை, நாவலை வாசகன் படித்து தன் சொந்த அறிவால் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இலக்கிய விமர்சனம் என்பது தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படுவது இல்லை என்று சொல்லப்படுவதுதான் அது.

கலையென்பதும், படைப்பு என்பதும் வித்தையல்ல. மூளையில் கட்டும் நேர்த்தியான கூடும் கிடையாது. ஓர் எழுத்தாளன் வாழும் காலம் முழுவதும் சிறந்த கதைகளையே எழுதி கொண்டிருக்க முடியும் என்பதோ, எழுதவேண்டும் என்பதோ விதி கிடையாது. சில மகோன்னதமான படைப்பு எழுத்தாளர்களுக்கு, ஒரு படைப்பு போதுமானதாக இருக்கிறது. அதுவும் முதல் படைப்பிலேயே சிலர் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் தரமான, மேலான படைப்புகள் எழுதினால்தான் படைப்பாளர் என்பது கிடையாது. தமிழ் மரபில் ஒரு பாடலுக்காக மூவாயிரம் ஆண்டுகளாகக் கவியென கொண்டாடப்படுகிற கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கவிதை, ஒரு பாடல்தான் எழுதினார்கள் என்பதில்லை. தொகுப்பாளர்கள் ஒரு பாடல் போதுமென கருதி இருக்கிறார்கள். ஒரு பாடல் மூலமாக எல்லாக் காலத்திற்குமான கவியாகி இருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி எழுத்தைச் சமூகத்திடம் இருந்து பெற்றவர். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழியென்பது பத்திரிகைகளின் மொழியில்லை.
"மணிக்கொடி'யில் வெளிவந்த புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா சிறுகதைகளை அவரது தாயார் தங்கம்மாள் படித்துக் காட்ட கேட்டுக் கொண்டார். அதுவே அவரை வெகுஜன பத்திரிகை கதைகள் எழுதவிடாமல் தடுத்து நிறுத்தி, தனித்தன்மையோடு மிளிர வைத்தது என்று குறிப்பிட வேண்டும்.

இளம்பருவத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீது அவர் கொண்ட ஈடுபாடு கடைசி வரையில் குறையவே இல்லை. இளம் பருவ இலக்கிய ஈடுபாடு, அக்கறை எல்லாம் காலம் போகப் போக ஐம்பது அறுபதுஆண்டுகளுக்குப் பின்னால் மாறிப் போவது உண்டு. அவரே முற்போக்குச் சித்தாந்தத்தின் மீதும், அதையொட்டி கதைகள் எழுதுவது என்பதையும் விட்டுவிட்டு தன்னையறிதலும் அறிந்ததைச் சொல்வதுமாக எழுத ஆரம்பித்தார். புதுமைப்பித்தனை அதிகமாக அவர் மதித்தாலும், அவர் படைப்புகள் மீது புதுமைப்பித்தன் பாதிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

புதுமைப்பித்தன் வேறு, தான் வேறு என்ற நிலைப்பாடே அவருடையது.

அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதனை அறிந்தேதான் செய்தார் என்று குறிப்பிட வேண்டும். அவருக்குத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைப் பிரபல்யப் படுத்துவதில், அவரின் இலக்கிய மேதமையை எடுத்துச் சொல்வதில்தான் ஈடுபாடு இருந்தது. தெரிந்துதான் அதனைச் செய்தார் என்பதுதான் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது.

புதுமைப்பித்தன், சீடர்களை நேர்முகமாகவும், இலக்கிய வழியாகவும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் தொ.மு.சி. ரகுநாதன் போன்று சிலர் சீடர்களாகி இருந்தார்கள். சுந்தர ராமசாமிக்கு பதின்மூன்று வயதாகும்போது புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டார். அவருக்குப் புதுமைப்பித்தன் அறிமுகம், பழக்கம் என்பது எல்லாம் புத்தகங்கள் வழியாகத்தான். அதுதான் படைப்பு இலக்கியம் என்பது. அதற்கு ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது கிடையாது. பார்த்துப் பேசி அனுபவம் பெற வேண்டும் என்பதும் இல்லை. ஒரு படைப்பில் சொன்னதற்கு மேலாக, எழுத்தாளன் எதுவும் சொல்லிவிட முடியாது. சில அபூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் பற்றி பேசியும், எழுதியும் வதம் செய்திருக்கிறார்கள்.

அதுதான் ஜீவிதமான மரபு. ஒரு கவி, படைப்பு எழுத்தாளன் காலத்தில் வாழ்ந்து உரையாடி ஞானம் அடைவதை விட, அவன் படைப்புகள் வழியாக தானே ஞானம் அடைவதுதான் மகத்தான ஆளுமை. அதுதான் குருவை ஒழிக்கச் சொல்கிறது. பல கலைகள் ஒன்றாகச் சேர்ந்து இருந்தாலும், ஞானத்தின் வெளிப்பாடான எழுத்து என்பது தனித்துவம் கொண்டது. அது குடும்பப் பாரம்பரியம் கொண்டது இல்லை. பயிற்சி பெற்று கவியாகிவிட முடியாது.

மகத்தான கவிஞர், வியப்பூட்டும் எழுத்தாளர்கள், கதைகளையும் படிக்கலாம். ஆனால் அசல் எழுத்தாளன் தனக்குப் பிடித்தமான, பிடிக்காத எந்ததொரு எழுத்தாளனையும் பின்பற்றி எழுத முற்படுவது இல்லை. தான் விரும்பும் படைப்புக்கு இன்னொரு படி மேலே போக வேண்டும் என்பதுதான் எழுதும் எழுத்தாளர்கள், சொல்லும் இலட்சியமாகவும், சொல்லப்படாத இலட்சியமாகவும் இருக்கிறது.

""என்னை உருவாக்குவதில் பாரதிக்கு, புதுமைப்பித்தனுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு, க.நா.சுப்பிரமணியத்துக்கு, மலையாள மொழி எழுத்தாளர் எம்.கோவிந்தத்துக்குப் பங்கிருக்கிறது'' என்று சுந்தர ராமசாமி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவர் நம்பியதைச் சொல்கிறார். படைப்பில் அது பூரணமாக இருக்கிறதா என்று பார்த்தால் அநேகமாக இல்லாமலேயே இருக்கும். எனவேதான் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு, எழுத தூண்டிய சக்தி, எழுதுவதற்கான காரணம் பற்றியெல்லாம் சொல்வதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தமிழ் மொழியே கவிதை மொழி. மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் என்பது கவிதையாகவே இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழி வழியாக, பிரிட்டிஷ், அமெரிக்கக் கவிதைகளைப் படித்த புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம் எல்லாம் இலக்கணம் இல்லாமல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். சொந்த மன உணர்வுகளைச் சொல்லும் விதமாகவும், சமூக விமர்சனமாகவும் இருந்த அவர்களின் கவிதைகளுக்குத் தமிழ்ப் பேராசிரியர்கள், முற்போக்குவாதிகளிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் வாசகர்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தது.

சி.சு.செல்லப்பா எழுத்துப் பத்திரிகை ஆரம்பித்ததும் அதில் தமிழ்ப் புதுக் கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. அவர் பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளை வெளியிட்டு மகாகவி என்று எழுதினார். புதிதாகப் பலர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். புதுக்கவிதை எதிர்ப்பாளர்களாக இருந்த தொ.மு.சி. ரகுநாதன், நா.பார்த்தசாரதி உட்பட பலரும் புதுக்கவிதை ஆதரவாளராக மாறினார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் புதுக்கவிதைகள் எழுதினார்கள்.

(அடுத்த இதழில்)


****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/09/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3353311.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 09th February 2020 07:57 PM |



சென்ற இதழ் தொடர்ச்சி...

சிறுகதைகள் எழுதி வந்த ராமசாமி புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் என்று அங்கீகாரம் பெற்றிருந்தார். 1959 -ஆம் ஆண்டில் "எழுத்து'சிற்றிதழ் ஆசிரியருக்கு “"உன் கை நகம்'” என்ற புதுக்கவிதையை "பகவய்யா' என்ற புனைப்பெயரில் அனுப்பி வைத்தார். அதோடு அது ராமசாமி எழுதியது என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தன் புதுக்கவிதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைஅறிய புது ஆளாகவே இருக்க ஆசைப்பட்டார்.

உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு
பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவியஅருமை கண்ணாளின்
இடது தோளில்ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு
தூக்கி சுமக்கும்அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்ரத்தம் கசியும்
இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே
குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

"புதுக்கவிதை என்பது இலக்கணம் இல்லாதது மட்டும் இல்லை. அதில் சொல்லப்படும் கருத்தும் புதுமையாக இருக்கவேண்டும்; சொற்களும் வழக்கமாகப் பயன்பாட்டில் உள்ளனவாகப் பெரும்பாலும் இருக்கக் கூடாது'என்று க.நா.சுப்பிரமணியம் சொல்லி வந்தது ராமசாமிக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அதனை அவரின் முதல் புதுக்கவிதையான "உன் கை நகம்' என்பதன் வழியாகவே தெரிந்தது.

"உன் கை நகம்' எழுத்தில் வெளி வந்ததும் கவனம் பெற்றது.ஆனால் அது ஓர் புதுக் கவிஞர் புதுக் கவிதை இல்லை; தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்று அனுமானிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கவிதைக்காகவே கவனிக்கப்பட்டது. அது அவருக்கு உற்சாகம் அளித்தது. சமூகம், வாழ்க்கை என்பன பற்றி மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்யும் புதுக்கவிதைகளையும் எழுதி வந்தார்.

1964 -ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "பிரசாதம்' வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான "அக்கரைச் சீமையிலே' தொகுப்பில்இருந்து முற்றிலும் மாறான ஒரு சிறுகதைத் தொகுப்பு. கருத்தும், மொழியும் மாறி விட்டிருந்தது. "பிரசாதம்' தொகுப்பில் இடம்பெற்றபல கதைகள் விஜயபாஸ்கரனின்,"சரஸ்வதி'யில் வெளிவந்தவையாகும். அது முற்போக்கு இதழ்தான். ஆனால் விஜயபாஸ்கரன் பலவிதமான சிந்தனைப் போக்குகளுக்கும் இடம் கொடுப்பவராக இருந்தார். தொ.மு.சி. ரகுநாதன், க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன், சுந்தர ராமசாமி எல்லாம் "சரஸ்வதி'யில் எழுதினார்கள்.

1957-58-ஆம் ஆண்டுகளில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த தகழியின் "தோட்டியின் மகன்' நாவல் தொடராக வெளிவந்தது. அவர் "சரஸ்வதி'யில் சிறுகதைகள் எழுதி வந்தார். எனவே ஒரு மாறுதலுக்காக என்.எஸ்.ஆர். என்ற புதுப் பெயரில் மொழிப் பெயர்ப்பாளர் குறிப்பிடப்பட்டிருந்தார். என்.எஸ்.ஆர் என்பது நாகர்கோவில் சுந்தரம் ஐயர் ராமசாமி என்பதுதான்.

2000-ஆம் ஆண்டில் "தோட்டியின் மகன்'நூலாக வெளிவந்தது. நாவல் மொழி பெயர்க்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் நூலாக வந்தது. முன்னுரையில் எழுதினார். "மலையாளத்தில் "தோட்டியின் மகன்'வெளிவந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நாவல். மேடையிலும் எழுத்திலும் அங்கு நடந்த விவாதங்கள் என நினைவில் இருக்கின்றன. ஆனால் "சரஸ்வதி'யில் இந்நாவல் தொடர்கதையாக வந்தபோது வாசகர் கவனத்தை இந்த தொடர் பெற்றதற்கான எந்த அடையாளமும் என்னிடம் வந்து சேரவில்லை. யாரும் இந்த நாவலைப் பற்றி இன்று வரையிலும் எழுத்திலோ, பேச்சிலோ, குறிப்பிட்ட நினைவும் இல்லை.'

சுந்தர ராமசாமி எழுத்தாளராக இருந்தது போலவே படிக்கக் கூடியவராகவும், படித்ததைப் பற்றிச் சொல்லக் கூடியவராகவும் இருந்தார். ஒரு முறைதான் படிப்புப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார்:

""இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழி பெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டு போவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒருவிஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கைகொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதியையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ, சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படைப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தை சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக் கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஓர் ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து என் மனோநிலை சார்ந்து தாவிக் கொண்டே இருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கதைகள், காலங்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள், கடவுள் சார்ந்த அக்கறைகள், கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறைகள், தத்துவம் சார்ந்த அக்கறைகள், மனிதர்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள் இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.''

""1948ஆம் அண்டி வாக்கில் க.நா. சுப்பிரமணியம் முதல் நாவலான "சர்மாவின் உயில்' படித்தேன். என்னைக் கவரவில்லை'' என்கிறார்.

க.நா.சுப்பிரமணியம் வீட்டில் ஆர்.சண்முகசுந்தரம், கம்பதாசனையும் சந்தித்தது பற்றி எழுதியுள்ளார். அவர்கள் ""என்னிடம் பேசியது இல்லை. க.நா. சுப்பிரமணியத்திடம் பேச வருவார்கள். இரண்டு மணிநேரம் போல காத்திருந்ததுகூட ஏதாவது பேசி விட்டுப் போவார்கள்'' என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் க.நா.சுப்பிரமணியம் பாதிப்பால்தான் "நாகம்மாள்' எழுதினார் என்பதை விமர்சனமாகச் சொல்கிறார். அவர் இலக்கியத்தை முன்னெடுத்துச் சொல்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். 1988-ஆம் ஆண்டில் "காலச்சுவடு' ஆரம்பித்தார். சில இதழ்கள் கொண்டு வந்தார். அதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டதால் நிறுத்தி விட்டார்.

சுந்தர ராமசாமி இன்னொருவர் பேசுவதை கவனமாகக் கேட்கக் கூடியவராக இருந்தார். அதோடு அவர் இரண்டு மூன்று பேர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது குறுக்கில் புகுந்து தன் கருத்துக்களைச் சொன்னது கிடையாது. கூட்டத்தில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாக செவி மடுப்பவராகவே இருந்தார்.

"நான் அவரை சென்னையிலும், டில்லியிலும் பல முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் பேச்சைக்கேட்கும் தோரணை, "இன்னும் கொஞ்சம் பேசுங்கள்' என்று கேட்கக் கூடியதாகவே இருக்கும். அவர்கள் க.நா.சுப்பிரமணியத்திடம் எவ்வளவு தெளிவாகக் கேட்டுக் கொண்டாரோ அப்படியே மற்றவர்களிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் எழுதும் அவர் அப்படி இல்லை. தீர்மான முடிவுகள் அடிப்படையில் எழுதினார். "கொஞ்சம் குரலை உயர்த்தி கூடுதலாகவே எழுதினார்' என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை "ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் எம்' என்று அறியப்படும் "மகேந்திர குமார் டைரி' குறிப்புகளைப் படிக்கச் சொன்னார். மேலும், ""தமிழில்வேண்டாம். ஆங்கிலத்தில் படியுங்கள். அதுவும் வங்க மொழியின் மொழி பெயர்ப்புதான். ஆனால் படிக்க வசீகரமாகவும், எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கிறது'' என்றார்.

“""என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?''” என்று கேட்டபோது, “""வங்கமொழி எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜியின்"ஆரோக்கிய நிகேதன்' படித்துக்கொண்டு இருக்கிறேன். கிராம வாழ்க்கையைச் சொல்லும் சிறப்பான நாவல். சாகித்திய அகாதெமி வெளியிட்டு இருக்கிறது''” என்றார். பிறகு “""தமிழில் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறதா?''” என்று கேட்டார்.

“""அநேகமாக இல்லை''”

“""விரைவில் வெளிவந்துவிடும். அவசியம் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்''” என்றார்.

த.நா.குமாரசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. அவர் வீட்டுப் பக்கத்தில்தான் நான் குடியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்து அற்புதமான நாவல் என்று சொல்லி கையெழுத்து இட்டுக் கொடுத்தார். படித்தேன். அது அசலான இந்திய நாவல்தான்.

சுந்தர ராமசாமி புத்திசாலியான படைப்பு எழுத்தாளர். நுணுக்கமாகவும், ஆழமாகவும் எதைப் பற்றியும் சொல்லக் கூடியவர்.

சுந்தர ராமசாமியின் மாமா நாராயணன் சென்னையில் தியாகராய நகரில் வசித்து வந்தார். அவர் சினிமாவில் என்னென்னவோவேலைகள் செய்து கொண்டிருந்தார். சிறிது காலம் "துக்ளக்' பத்திரிகையில் "பரந்தாமன்' என்ற பெயரில் எழுதி வந்தார். அவருக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அபரிதமான ஈடுபாடு. எனவே கலைவாணர் கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். பல சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார். நானும் பரந்தாமனும் நந்தனம், தியாகராயர் நகர் பகுதிகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பேச நிறைய அரசியல், இலக்கியம், சினிமா சம்பந்தப்பட்ட அம்சங்கள் இருந்தன.

சுந்தர ராமசாமி, நாராயணன் என்ற பரந்தாமன் பற்றி மனம் நெகிழும் விதமாக சிறிது எழுதியிருக்கிறார்.

தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபாவில் நடைபெற்ற மகாத்மா காந்தி பற்றிய கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் வீடு அருகில் இருந்தது. வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் காபி கொடுத்து உபசரித்தார். வீடு நிறைய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை, நாடகம், சினிமா பற்றிய தகவல்கள் கொண்ட காகிதங்களை கட்டி வைத்திருந்தார். ""கலைவாணர் பற்றி ஒரு சரியான வாழ்க்கைச் சரித்திரம் எழுதப் போகிறேன். அந்த வேலையாகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார். அவர் ஆர்வம் உண்மையானது. ஆனால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது.

நாராயணன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ""ராமசாமியைப்பார்த்தீர்களா?'' என்று கேட்பார். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், ""ராமசாமி சென்னைக்கு வந்திருக்கிறாரா'' என்று கேட்பேன்.

ஒருமுறை நானும், என் நண்பருமான நா.கிருஷ்ணமூர்த்தியும், சென்னை கோபாலபுரத்தில் சுந்தர ராமசாமியைச் சந்தித்திருந்தோம். அவர் சோர்ந்து போய் இருந்தார். என்னவென்று விசாரித்தோம். மூத்த மகள் செளந்தராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

1991 -ஆம் ஆண்டில் அவரை தியாகராய நகரில் சந்தித்தேன். இரண்டு பேரும் நல்லி ஜவுளி கடைக்கு அருகில் இருந்த பார்க்லேண்ட் ஓட்டலுக்கு வந்து காபி சாப்பிட்டோம். பிறகு பனகல் பூங்காவிற்கு வந்தோம். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கியப் பரிசுகள், வெகுமதிகள், விமர்சனங்கள் பற்றி பேசி கொண்டிருந்தோம். இரண்டு மணிநேரம் சென்று விட்டது. பின்னர் எழுந்தோம்.

""மகள் எப்படி இருக்கிறார். உடம்பு சரியாகி விட்டதா?'' என்று கேட்டேன்

“""இல்லை. அவள் போய்விட்டாள்''” என்றார்.

நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

“""கேன்சர். ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்''” என்றார்.

கீதா தர்மராஜன் என்ற தமிழகப் பெண்மணி கதா என்ற அமைப்பை டில்லியில் ஏற்படுத்தி தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். கதா 2003 -ஆம் ஆண்டு "கதா சூடாமணி' என்ற வெகுமதியை சுந்தர ராமசாமிக்கு வழங்கியது. அதற்கான விழா கோலாகலமாக டில்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனலில் நடபெற்றது. டிசம்பரில் நல்ல குளிர்காலத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற விழாவில் கம்பளி உடை, தலைக்குல்லாய் அணிந்து, அனல் காய்ந்து கொண்டு அவர் ஏற்புரையை வழங்கினார். தமிழில்தான் பேசினார். அவர் நிதானமாக தீர்மானமான தொனியில் பேசினார். விழா முடிந்ததும், பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவர் மேடையை விட்டு இறங்கி வந்ததும் முன்னே சென்று வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் என் கையைப் பற்றிக் கொண்டு, “""நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா?''” என்று வினவினார்.

“""இல்லை. ஆனால் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது''” என்றேன்.

“""அவசியம் வாருங்கள். என் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். நான் மூன்று மாதங்கள் நாகர்கோவிலில்தான் இருக்கிறேன். பிறகு அமெரிக்கா போகப் போகிறேன்''” என்றார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். நான் நாகர்கோவில் செல்ல முடியாமல் போய்விட்டது.

2005 - ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமி தன் எழுபத்து நான்காவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

அவர் தனித்துவம் மிக்கத் தமிழ் எழுத்தாளர். மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியவர். எழுத்துக்கு இலக்கியப் பூர்வமாகப் பலனுண்டு என்று எழுதியவர். அதோடு எழுத்தாளன் படைப்பு சுதந்திரம் பற்றித் தன்னளவில் அறிந்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயேஎழுதினார். எழுத எழுத அவர் எழுத்துகளில் வீரியம் கூடியது. அவர் சிறுகதைகளில் "தண்ணீர்', "பிரசாதம்', "வாழ்வும்வசந்தமும்', "விசாகம்'மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய சிறுகதைகள். நாவல்களில் "ஒரு புளிய மரத்தின் கதை' குறிப்பிடப்படவேண்டியது. நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் படைப்புகள் அசலான படைப்புகள் என்ற வகையில் இடம் பெறுகின்றன.

சுந்தர ராமசாமி 1988 -ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள "குமாரன் ஆசான் விருதை' கவிதைக்காகப் பெற்றார்.

2001 -ஆம் ஆண்டுகனடா நாட்டில் டொரண்டோவில் வழங்கப்படும் "இயல்' விருது பெற்றார். 2003 - ஆம் ஆண்டில் அவருக்கு கீதா தர்மராஜன் கதா அறக்கட்டளை, "கதா சூடாமணி' விருது வழங்கியது.

சுந்தர ராமசாமி தமிழ் எழுத்தாளர். அவர் தன் படைப்புக்களைத் தாய்மொழியான தமிழில்தான் எழுதினார். ஆனால் அவர் படைப்புகள் மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, ஜெர்மன் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1966 -ஆம் ஆண்டில், தன் முப்பத்தைந்தாவது வயதில் சுந்தர ராமசாமி, "நானும் என் எழுத்தும்'கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

"வாழ்வின் அந்திமத தசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும். என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன். இவ்வளவு போதும் எனக்கு.' சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாததையும்,சொல்லப்படாததின் வழியாக அறியத்தக்கதையும் சொல்வதுதான் இலக்கியம்.

சுந்தர ராமசாமி அதனையே கூர்ந்து எழுதி வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

(21.11.2019 சென்னை சாகித்திய அகாதெமி அரங்கில் ஆற்றிய உரை)

Sunday, 12 January 2020

மாய உலகம்: ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...
maaya-ulagam
மருதன்
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/534050-maaya-ulagam-4.html
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.

என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.

உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன். மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.

என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.

என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.

கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.

கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன். மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.



ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.

எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.

இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.

நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.

வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

Saturday, 21 December 2019

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு , சவக்கோட்டை மர்மம், பதிமூன்று விதங்களில் சொல்லப்பட்ட வேண்டிய கதை -ஜெயமோகன்.

சுபமங்களா . நவம்பர் 1993________________
மாபெரும் கம்பளம் பற்றிய கனவு by ஜெயமோகன்.



பதினாலாவது நூற்றாண்டின் மற்பகுதியில் தேங்காய் நாரினால் என்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு வனதேசங்களைச் சேர்ந்த ரபுக்களிடையே மவுசு ஏற்பட்ட ன் விளைவாக குளச்சல் முதல் காச்சி வரையிலான பகுதிகளில் தாழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாக ம் புதிய மாடம்பிவர்க்கமொன்று ருவாகி அதிகாரமும் செல்வமும் பற்று திருவிதாங்கூர் அரசர்களுக்கு ராத தொல்லைகள் கொடுத்த பாகவும் சரித்திரம் கூறுகிறது. கருவியே குழந்தைகளுக்கு கம்பளம் என்னும் கலை கற்பிக்கப்பட்டது. ரிய மந்திரங்கள் மூலம் அவற்றின் ரல்கள் தேவையானபடி வடி மைக்கப்படுவதற்கு கணியான் ன்ற ஜாதியே நியமிக்கப் பட்டிருந்தது. முந்தைகள் வெளிவந்த உடனேயே வற்றை நார்களில் பிணைத்து டுவதும், தன்னிச்சையாக அவற் என் விரல்கள் பின்ன ஆரம்பிப்பதும்

ஜமாக இருந்ததாக குறிப்பிடப் டுகிறது. கருப்பை உலகத்து________________




வினோத வண்ணங்கள் கம்பளங்களின் கலைமதிப்பை ஒரே தூக்காக தூக்கி, பாரீஸ் நகரத்து கலை விற்பன்னர் களிடையே பெரும் பரபரப்பை ஏற் படுத்தின. மலைச்சரிவுகளும், நதி களும், கடலும் கூடி இணைந்த நிலப் பகுதியின் பறவைப்பாடலும், நீர் நெளிவும், வான் நீலமும் நார்களில் பதிந்து உருவான ஏற்றுமதிச் செல் வம் ஒரு கட்டத்தில் குறுமிளகு விற் பனையையே தாண்டியது என்று யவன யாத்ரிகரான ஹிராடடஸ் குறிப்பிடுகிறார். அவருடைய பயணக் குறிப்பு நூலில் அவர் குறிப்பிடும் பல நம்ப முடியாத செய்திகளில் ஒன்று பிரம்மாண்டமான கம்பளம் ஒன்றை நெய்யும் வாய்ப்பை பெற்றகீவ் நகரத்து மையக் கதீட் ரலில் விரிப்பதற்காக இருக்க வேண் டும் இது -- ஒரு மாடம்பியின் அதீத உற்சாகத்தைப் பற்றியது. இவன் பெயரை ஹிராடடஸ் 'யாப்பன்' என்று குறிப்பிடுவதை அய்யப்பன் என்று திருத்தி வாசிக்க முடியும். அகஸ்தியர்கூட மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையேயான நிலப்
பகுதியை இவன் ஆண்டிருக்கக்கூடும் என்றும், பிரபலமான அய்யப்பன் மார்த்தாண்டன் என்ற மாடம்பிதான் இவன் என்றும், பிற்பாடு திக வனந்தபுரம் பற்கலைகழக வரலாற்றுக் துறை பேராசிரியர் அச்சுதன் குறுப்பு அவ்வளவாக பொருட்படுத்தப்படாத ஆய்வொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

அய்யப்பன் அக்காலத்தில் கலைஞர்களின் செயல்திறனை ஒருங் கிணைத்து கூர்மைப்படுத்தும் வழி முறைகளில் பிரதானமாக விளங்கி வந்த மரபை அடியொற்றி, கம்பளம் பின்னும் குழந்தைகளை நடமாட வும், பேசவும், கேட்கவும் முடியாத வர்களாக ஆக்கியதாகவும்; அவர் களை விரல்களில் காட்டு இருளுக் குள் அலைந்து திரிந்த மூதாதையரின் ஆவிகளை புள்ளுவப்பாட்டு மூலம் வசீகரித்து பிடித்தடக்கி கொண்டு வந்து குடியேற்றியதாகவும் ஐதீகம் குறிப்பிடுகிறது. மூதாதையரின் சன் னதம் கொண்ட குழந்தைகள் அசுர வேகத்தில் பின்னித்தள்ளிய கம்பளம் கடலலை போல சுருண்டு எழுந்த தாக ஒரு நாட்டுப்பாடல் வர்ணிக் கிறது. பல்லாயிரம் சிறுவிரல்கள் போட்ட முடிச்சுகளில் வினோத மான எழுத்துகள் உருவாகி படிக்க முடியாத சொற்றொடர்களை தன் னிச்சையாக உருவாக்கின என்றும்; அவை உருக்குலைந்தும், புதிதாக பிறந்தும் மர்மமாகப் பெருகின என் றும் தெரிகிறது. குழந்தைகள் பின்
னும் செயலில் ஒன்றிப்போய, ஒரு தருணத்தில் கம்பளத்தின் வண்ணச் சித்திரங்களில் இரண்டறக்கலந்து மறைந்தன. எனவே கம்பளம் தன் னைத்தானே பின்னிக் கொள்ளும் அற்புதம் நிகழ ஆரம்பித்தது. கம் பளம் தேவையான அகலத்துக்கு பின்னப்பட்ட போது அய்யப்பன் மார்த்தாண்டன் உற்பத்தியை நிறுத்த ஆணையிட்டான். ஆனால் குழத் தைகளின் விரல்கள் தவிர வேறு உறுப்புகள் அனைத்தும் முழுமை யாக இறந்து விட்டிருந்தன. மந்திரங் கள் மூலம் மூதாதையரின் ஆவி களைப் பிடித்து திரும்ப காடுகளுக் குச் செலுத்த முயன்ற போது அவை கம்பளத்தின் இருண்ட கட்டங்களுக் குள் புகுந்து கொண்டு போக்குகாட் டின. கோபமும் அச்சமும் கொண்ட மார்த்தாண்டன் பின்னும் விரல்களை துண்டித்து குழந்தைகளை அழிக் கும்படி ஆணையிடவே வாளுடன் அலைந்த கிங்கரர்கள் மகத்தான கம் பளத்தின் பல்லாயிரம் பிம்பங்க ளிடையே கண்மயங்கித் தவித்து, இறுதியில் அவற்றினூடே தாங்களும் பிம்பங்களாக சிக்கிக் கொண்டார் கள். பிம்பங்கள் கலந்து, அலை யலையாக முதங்கள் நிறைய, கம் பளமானது நாலாதிசைகளிலும் பொங்கி விரிந்து கொண்டிருந்தது. 'தரையில் விழுந்த தண்ணீர் பரவுவது போல' என்கிறது அந்த நாட்டுப் பாடல். அய்யப்பன் மார்த்தாண் டன் மீதும், கிங்கரர்கள் மீதும், அரண்மனைகள் மீதும், கம்பள வியாபாரிகளின் கடைவீதிகள் மீதும், அனந்த பத்மநாபசாமி ஆலயத்தின் மீதும் கம்பளம் விரிந்து பரவியது. கிழக்கே அரபிக்கடலையும் மேற்கே அகஸ்தியர்கூட மலைகளையும் அடைந்து அது விரிந்து சென்றது. கடலின் ஆழத்தில் நீலநிலப்படுகை யின் ஒளியை உள்வாங்கியும், காட் டின் அடர்த்திக்குள் பச்சை இருட் டில் கரைந்தும் கம்பளம் வளர்ந்து செல்வதாக வெகுகாலம் நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண் டில் இக்கடற்கரையும் மலைச்சரிவும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டு விட்டன. பிற்காலத்து ரொமான்டிக் கவிஞன் 'வானத்து அதீத சக்திகளின் மகத்தான பாதங்கள் தோய இயற்கை விரித்த மாபெரும் கம்பளம்' என்று இப்பகுதியின் அடர்ந்த காட்டைப் பற்றி பாடியிருப்பது மட்டுமே ஒரே ஒரு இலக்கியக்குறிப்பு எனலாம். கம் பளம் பின்னும் குழந்தைகளின் வெறும் கனவு என்று யதார்த்த வாதிகளினால் இது குறிப்பிடப் படுகிறது என்றாலும் இப்பாடலை பாடும்போது கம்பளம் பின்னுவது எளிதாக ஆவதாக இளம்தொழி லாளிகள் கூறி என் இளம் வயதில் நான் கேட்டிருக்கிறேன்.


.

சவக்கோட்டை மர்மம்

I
நாகர்கோவில் திருவனந்த புரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும், அரண்மனையையும் தமிழ்த்திரைப் படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில், குமாரபுரம் என்ற கிரா மத்தின் அருகே, ஒரு குன்றின்மீது. இன்னொரு கோட்டையையும் முற் றிலும் அழிந்துபோன ஓர் அரண் மனையின் இடிபாடுகளையும் இன் றும் நாம் காணலாம். இது 'சவக் கோட்டை ' என்று கூறப்படுகிறது. நாற்புறமும் ரப்பர்காடுகள் மண்டி, அமைதியில் விழுந்து கிடக்கிறது. திருவிதாங்கூர் கொட்டாரம் பண் டிதர் 'அச்சு மூத்தது' அவர்களின் ஒழுங்கற்ற குறிப்புகள் - சரித்திரமும் ஐதிகமும் இக்காலகட்டத்தில் வேறு வேறாக கருதப்படவில்லை - இக் கோட்டையைப் பற்றி குறிப்பிடுகின் றன. மார்த்தாண்டவர்மா மகாராஜா (1729 )வின் காலகட்டத்திற்கு முன் திருவிதாங்கூரின் பலபகுதிகளில் சுதந்திரமான மாடம்பிகள் பலர் தங் களை மன்னர்களாக பிரகடனப் படுத்தி பலகாலம் ஆட்சி செய்திருந் தார்கள். அவர்களில் ஒருவரான குமாரபுரம் கரைமாடம்பி பாறைக் கல் உதயன்தம்பி (தன்னை இவர் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா மகாராஜா - என்று அழைத்துக் கொண்டதாகத் தெரிகிறது) இதை கட்டினார் என்று தெரிகிறது. அழகிய பூமுகம், கொட்டியம்பலம், சபா மண்டபம் மற்றும் களியரங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும்; சுத்தமான வெண்தேக்கு, ஈட்டி, சந்தனமரங்களின் அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்ப அமைக் கப்பட்டதாகவும் இந்த அரண்மனை இருந்திருக்கிறது. பொன்னுமங்கலத் தைச் சேர்ந்த மூத்தாசாரி கொச்சு சாத்தன் தலைமையில் பனிரண் டாண்டுகால உழைப்பு தேவைப்பட் டிருக்கிறது 'குமாரபுரம் அம்மவீடு' என்று இது அப்போது அழைக்கப் பட்டிருக்கிறது. பொன்மனை தெற்கு மனையிலிருந்து இரண்டு கன்னி கைகளை தானமாக பெற்றுக் கொண்டு பாலராமவர்மா மகாராஜா இந்த அரண்மனையில் ஒரு
ஆவணி மாதம் (சிங்க மாதம். முதல்தேதி குடியேறியதாக செல் வழிச் செய்தி சொல்கிறது. காலம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவிற்கு உத்தேசமாக முன்னூறு வருட முன்பாக இருக்கலாம். காலக்கண கெல்லாம் இப்போதைய விஷயம் அன்றெல்லாம் காலம் தேங்கிக் கிட தது.

ஐதீகக் கதைகளின்படி இர தேவியருடன் பள்ளி நித்திரை கொண்டிருந்த மகாராஜா வினோ மான குரல் ஒன்று தன்னிடம் பே முயற்சிப்பதை உணர்ந்து பதறிய தாகவும், தேவியரும் அக்குரலை. கேட்டு பயந்து அலறியதாகவும் இது பெரிய பதற்றத்திற்கு காரணி மாக அமைந்ததாகவும் அறிகிறோம். இந்தக்குரல் சிலசமயம் உணர்ச்சி வசப்பட்டு கூவுவதாகவும், சிலசமயம் அரற்றலாகவும், சிலசமயம் மவுன் மான மந்திர உச்சாடனமாகவும் இருந்தது. அது ஆண்குரலோ பென் குரலோ அல்ல. மனிதத் தொண்டை யிலிருத்து வரும் குரலாகவே இருக்கவில்லை என்று திட்டவட்ட மாக குறிப்பிடப்படுகிறது. பிரல் னம் வைத்துப் பார்த்த அனந்த நாராயணன் போத்தி அரண்மனை யில் துஷ்ட ஆவிகளின் இருப்பு உள்ள தாக கண்டு பிடித்தார். வயலில் வேலை செய்யும் போது விழுந்து இறந்த புலையர்களின் ஆவிகளுக்கு பலிதரும் இடமாக இக்குறிப்பிட்ட குன்று இருந்து வந்ததாகவும், பல ஏற்க வந்து ஏமாந்த ஆவிகளின் குரலே அது என்றும் ஜோசியர்கள் குறிப்பிட்டார்கள். விரிவான யாகா களும், மாந்திரிக தாந்திரிக கர்மா களும் நடத்தப்பட்டன. பித்ரு பூசை குலதெய்வ பூஜை. துஷ்டநிக்ரக பூஜை, சாத்தன் பூஜை ஆகியவையும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அந்தச் குரல் தொடர்ந்து பள்ளியதை யில் கேட்டபடியேதான் இருந்தது கொச்சு சாத்தன் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டான் அவன் அரண்மனைக்கு இடம்பார்க் ததன் கோளாறுதான் அது என்று குற்றம் சாட்டப்பட்டான். தேவாசும் சக்திகளில் எதுவோ நடமாடும் கு. குமமான பாதை அக்கட்டிடத்தால் முறிக்கப்பட்டுவிட்டதாக கணிக்கப்
பட்டது. முன்பு காயங்குளமருகே ஒரு மன்னனுக்கு இப்படி ஆனதனால் அவன் வம்சமே அழிந்தது என்று நினைவுகூரப்பட்டது. கழுவில் ஏற் றப்பட விதிக்கப்பட்டு சக்கரக்கல் லில் கட்டிவைக்கப் பட்டிருந்த கொச்சுசாத்தன் ஒரு நாள் அவகாசம் கோரினான். அதற்குள் பிழையை கண்டு பிடித்து திருத்திவிடுவதாக குறிப்பிட்டான். அவனை விட்டால் கட்டிட சூக்குமம் அறிந்த எவருமில்லை என்பதால் அனுமதி தரப்பட்டது.

இரவெல்லாம் கட்டித்தில் அலைந்த கொச்சு சாத்தன் விடி காலையில் ஒரு கூச்சலுடன் சூக்கு மத்தை கண்டடைந்தான். பிற்பாடு அவன் சுவடியில் எழுதி வைத்த குறிப்புகள் மற்றும் கணக்குகளின் படி (இலை 'பத்மநாபசில்ப ரத்னா வளி' என்ற பெயரில் பிற்பாடு இவன் வம்சத்தைச் சேர்ந்த 'அனந் தன் முத்தாசாரி'யால் வடமொழி யில் நூல் வடிவம் தரப்பட்டு திருவனந்தபுரம் மகாராஜா சுவாதி திருநாளின் அரச சபையில் அரங் கேற்றம் செய்யப்பட்டது. நூலின் ஏட்டுப்பிரதி ஸ்ரீ சுவாதி மியூசியத் தில் இன்றும் உள்ளது) நிகழ்ந்தது இதுதான் என்று தெரிகிறது. குமார

புரம் குன்றைச் சுற்றி இருபது கிராமங்களும், வயல்வெளிகளும், சந்தைகளும், எண்ணற்ற சேரிகளும் உள்ளன. இங்கிருந்து எழும் ஒலிகள் பாறைகள் மற்றும் கோட்டைச் சுவர்கள் வழியாக எதிரொலித்தும், மறு எதிரொலித்தும், அரண்மனை யின் பிரதான வளாகத்தில் திரண்டு பள்ளியறைக்குள் அதிர்கின்றன. பள்ளி யறையின் கூரை முகடு உட்குழிந்து கிண்ண வடிவாக இருப்பதால் இவ்வதிர்வுகள் குவிந்து தெளிவான ஒலியாகவும், சிலசமயம் சொற் களாகவும் கூட மாற்றப்படுகின்றன. அதை நிறுத்துமாறு மகாராஜா உடனே ஆணையிட, சாத்தனின் திட்டப்படி கோட்டைக்கு வரும்வழி இரண்டு இடத்தில் வளைக்கப்பட்டு சுவர் எழுதப்பட்டது. ஒலியும் இல் லாமல் ஆயிற்று. மகாராஜா மகிழ்ந்து மூத்தது பட்டமும் வீராளிப்பட் டும் வளையலும் பரிசளித்து சாத் தனை கவுரவித்தார். ஆனால் சில நாட்கள் கழித்து களியரங்கில் நளந மயந்தி ஆட்டத்தின் சிருங்கார ரசத் தில் மெய் மறந்திருந்த மகாராஜா பாடலின் ஊடாக புகுந்து நாதத்தை சிதறடித்த அந்த ஒலியை மீண்டும் கேட்டார். துடித்துப் போய் சாத்தனை வரவழைத்து அதை அகற்றும் படி ஆணையிட்டார். அரண்மனை யும் கோட்டையும் மீண்டும் மாற்றும் யமைக்கப்பட்டது.


இதனால் அரண்மனைக்குள் வா வதும் போவதும் சிரமமாக இருப்ப தாகவும், பலசமயம் வழிதவர் விடுவதாகவும் மந்திரிகளும் பிராமண பூஜ்யர்களும் முணங்கிக் கொண்ட போதிலும் எவரும் அதுபற்றி மகாராஜாவிடம் கூற முயலவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக மகாராஜா அரண்மனையை விட்டு வெளியே வருவதே இல்லை. நிலப் பகுதியின் விசித்திரமோ, அல்லது கோட்டையின் விசித்திரமோ தொடர்ந்து மாற்றி மாற்றி எங்காவது அந்த அமங்கல ஒலி கேட்டுக் கொண்டுதான் இருந்தது. எனவே கோட்டை 888 முறை மாற்றியமைக் கப்பட்டது. (இது ஒருவித நாட்டுப் புற கணக்கு என்பதை மறுப்பதற்கு இல்லை . 888 என்பது ஐதீகங்கள் குறிப்பிடும் ஒரு அமங்கல எண் அன்றி வேறல்ல.) கோட்டைக்கு வரும் வழி இவ்வாறாக பலவிதமாக சிக் கலாக மாறி அவிழ்க்க முடியாத புதிராக ஆயிற்று. உள்ளே வருவதும் வெளியே போவதும் வெறும் அதிர்ஷ்டமன்றி வேறல்ல என்று ஆயிற்று. அதை மேலும் மோசமாக் கும்படி மூத்தாசாரி பித்து முற்றிய நிலையில் தனக்குள் சிரித்தபடி சுவர் களை தொடர்ந்து மாற்றி மாற்றி கட்ட டிக் கொண்டிருந்தான். தன் அமாத் யர்களும், சேவகர்களும், கிங்கரசு களும் அரைப் பைத்தியமாக ஆகி சிரித்தபடியும் அழுதபடியும் திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருவதை மகாராஜா மிகவும் தாமதமாகவே உணர்ந்தார். பீதியுடன் வெளியே வர அவர் முயன்றபோதுதான் அது எவ்வளவு பெரிய காரியம் என்று புரிந்ததாம். வெளியேறும் வழிக்கான ஒரே வெளியுலக அடையாள மாக அப்போது இருந்தது ஊரிலிருந்து வரும் அந்த ஒலி மட்டுமே. ஆனால் அதை மூத்தாசாரி கண்ட படி சிதறடித்திருந்ததனால் அதை அடையாளம் வைத்து புறப்பட்டு பலநாட்கள் நடந்து, உடல் ஒய்ந்து விழுந்து கிடக்கும்போது நேர் எதிர் திசையில் அது கேட்க ஆரம்பிக்கும் நிலை இருந்தது. சுற்றுவழிச் சந்து களில் அவ்வப்போது அவரைய போலவே அரைப்பித்து நிலையில் அலைந்து கொண்டிருக்கும் ஏதாவது மந்திரியையோ, சேவகனையோ காண்பது தவிர்த்தால் இடைவென் யற்ற அந்த பயணம், எதையும் அடையாததாகவும் எங்கும் சேராத தாகவும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மகாராஜாவைத் தேடி வாரிசுகளும் தளபதிகளும் வந்தனர்.

அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து அகப்பட்டுக் கொண்டனர். மகா ராஜாவின் இறுதிச் சடங்குகளுக்கு அவர் அஸ்திகள் கிடைக்காமையி னாலும், அதைத் தேடிச் சென்ற எவரும் திரும்பாமையினாலும், இறுதிச்சடங்கு செய்து மூதாதையை கரையேற்றாமல் சாஸ்திரப்படி வாரிசு உரிமை செல்லாது என்பதனாலும் நீண்டநாள் அராஜக நிலைமை நிலவியது. பிறகு பிராமணசபையின் முடிவுப்படி, குமாரபுரம் அம்மா வீட்டுக் கோட்டையையே ஒரு அஸ்தி கலசமாக சங்கல்பம் செய்து முறைப் படி சடங்குகள் நடத்தி முடிக்கப் பட்டன. அத்துடன் கோட்டை புனிதமான குலச்சின்னமாக ஆயிற்று. குமாரபுரம் மன்னர்கள் தங்கள் மரணத்தை அதற்குள்தான் நிகழ்த் திக்கொள்ள வேண்டும் என்று மரபு உருவாயிற்று. ஐதீகங்கள் பெருகி இக் கோட்டையின் மையத்தில் மனித வாழ்வின் புருஷார்த்தங்களின் சாரம் குடி கொள்வதாகவும் மன்னர்கள் தங்கள் மூதாதையரைப் பின்பற்றி இதற்குள் நுழைந்து, அந்த கணிதப் பாதைகளின் ஊடே பயணம் செய்து, மூதாதையர்

சென்றடைந்த மையத்தை அடைந்து, முக்தி பெற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக இவ் வம்சத்து மன்னர்கள் வாரிசுகளை ஆட்சிக்கு அமர்த்திவிட்டு, வானப் பிரஸ்தம் பூண்டு, இந்த மாபெரும் அஸ்திகலசத்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். பற்பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு மகாராஜா மையம் நோக்கி மனம் தளராமல் சென்று கொண்டிருந்த போது வெளியேறும் வழியை தேடிக் கொண்டிருந்த தன்னைப் போன்றே இருந்த ஒருவரை சந்திக்க நேர்ந்ததாகவும், அறிமுகத்துக்குப் பிறகு இருவரும் திடீரென்று உடைந்து விலாதெறிக்க சிரிக்க ஆரம்பித்த தாகவும் பிரபல அங்கதக் கவிஞ ரான மாணிநாராயண சாக்கியாரின் கூத்துப்பாடலில் குறிப்பிடப்படு கிறது. 1750-ல் திருவிதாங்கூர் தேசத்தை ஒருங்கிணைத்து ஒரு குடைக்கீழ் கொண்டுவந்த மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா குமாரபுரம் மாடம்பி வம்சத்தை பூரணமாக அழித்து, கோட்டை யையும் தகர்த்து, அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததாக அச்சுமூத்தது குறிப்பிடுகிறார். சவக் கோட்டை என்று இன்று வழங்கும் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கோட்டையின் இடிபாடுகளுக்குள் மண்டிக் கிடந்த எலும்புக்கூடுகளின் காரணமாக இருக்கலாம்

பதிமூன்று விதங்களில் சொல்லப்பட்ட வேண்டிய கதை

-________________




லண்டன் யார்ஷயரைச் சார்ந்த பிரபு எஃப். தோமஸ் தோர்ஸ் டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக, தன் வாரிசும் மாணவருமான எஃப். பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்க தன் அந்தரங்கத் தைக் குத்திச் சிதைத்து இம்சை செய்த ஒரு புதிரை அவிழ்க்கும் பொறுப்பை விட்டுவிட்டுச் சென்றமையினால் பார்கின்சன் இந்தியா வரவும், 'உருவப் பன்நிலையமைதிச்' சித்தாந் தத்தை (Parkinsons Formal Muluplicity Theory) தோற்றுவித்து உலகப்புகழ் பெறவும் நேர்ந்தது. பிரிட்டிஷ் இந்தி யாவில், திருவிதாங்கூர் சமஸ் தானத்தில், பேச்சிப்பாறை மலைப் பகுதியில் சர்வேயராக 1880 முதல் எட்டு வருட காலம் பணியாற்றிய தோர்ஸ்டன் பிரபு ரைபிள்களை திருடி விற்றமைக்காக பிடிபட்டு, தண்டிக்கப்பட்டு, திருப்பியனுப்பப் பட்டு, இறுதிவரை திரும்ப முடியாத படி வாழ்வில் கட்டப்பட்டு, உள்ளூர திரும்பிவரும் தினத்திற்காக ஏங்கிய படி, மரணப்படுக்கையை அடைந் தார். ரைபிள்கள் உண்மையில் விற்கப்படவில்லை என்பதை மரணப் படுக்கையில் பிரபு வெளிப்படுத்தி கீழ்க்கண்ட தகவல்களைக் கூறினார். ஆதிமலையுச்சியின் அணுகமுடியாத போர்க்குணம் கொண்ட பழங் குடிகளின் பெண்களுடன் உறவு கொள்வதற்கான விலையாகவே அவை தரப்பட்டன. இந்த ரைபிள் கள் பிற்பாடு பழங்குடிக் கலகங் களில் பயன்படுத்தப்பட்டு, பெருஞ் சேதத்தை விளைவித்தன என்றும்; பிறகு ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் குறிப்பிட்ட பழங்குடி வம்சம் முழுமையாக சிதறடிக்கப்பட்டது என்றும் 'திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல்' முதற்தொகுப்பு குறிப் பிடுகிறது. ஆதிமலைப் பழங் குடியினரின் பெண்களின் உடலழகும், அவர்கள் மிக வினோதமான________________




முறையிலும், பரவசவெறியில் மன நிலையே பிறழும் அளவிற்கு தீவிர மானதாகவும் கொள்ளும் உடலுறவு முறையும் அன்றைய பிரிட்டிஷாரி டையே பரபரப்பாகவும், கிட்டத் தட்ட தேவதைக் கதைகளின் கலையழகுமிக்க பயங்கரத்துடனும் பேசப்பட்டு வந்தன. ராமன் நாயர் என்ற மேஸ்திரி மூலமாக பலகாலம் முயன்றும், பெருமளவு பணம் செலவு செய்தும், மிக மிக அபூர்வ மானதும் ஆபத்தமானதுமான இவ் வனுபவத்தைப் பெற்ற ஒரே வெள்ளைய ராக தோர்ஸ்டன் பிரபு ஆனார் என்பது எழுபத்திரண்டு வருடங்களுக்குப்பிறகு அவருடைய மரணப்படுக்கையில்தான் வெளியிடப் பட்டது. ஆயினும் பிறகு எப் போதும் எப்பெண்ணையும் அணுக முடியாதபடி அவரை அக்கிய அவ் வனுபவத்தின் உக்கிரத்தை எப் போதுமே அவர் சொற்களாக மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதை யும் இங்கு குறிப்பிட வேண்டும். உறவுக்கான நிபந்தனைகளில் துப் பாக்கி தவிர, ஒருபோதும் உறவு கொள்ளும் பெண்களைப் பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை என்ப தும் முக்கியமானதாகும். அமாவாசை நள்ளிரவில் இடைவெளியற்ற இருட்டு வழியாக மலையுச்சிக்கு அழைத் துச் செல்லப்பட்ட பிரபு. அங்கு ஒரு ஓடைக்கரையில் நிர்வாண மாக பழங்குடியினருக்கு கைமாறப் பட்டு, அவர்களால் கிராமத்தின் ஒரு குடிசைக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கிருந்த பெண்ணிடம் அளிக்கப்பட்டார். உடலால் மட்டும் பார்த்து பேசி அறிந்த அந்த உக்கிர மான இரவு முடியும் முன்பே கடும் சுரத்தால் பீடிக்கப்பட்டு, அரைப்பித்து நிலையில் திரும்பிவந்து, ஒருவாரம் நீடித்த நோய்ப்படுக் கையில் சரிந்தவர் ஸ்பரிசங்களால் மட்டும் இருப்புணர்த்தும் பெண் பிம்பங்களின் பித்துப்பிடித்த உலகில்

மிதந்தலைந்தார். மீண்டும் ஆசை எழ மீண்டும் மலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பதிமூன்றாம் தடவை அகப்பட்டுக் கொண்டு. தண்டிக்கப் பட்டு, லண்டன் வந்து வேறு விதமாக வாழ்வை அமைத்துக் கொண்ட போதுகூட அவரை ஒரு முள் குடைந்து கொண்டே இருந்தது. அவ்வனுபங்களை பிரித்து வரிசைப் படுத்தி, புரிந்து கொள்ளும் முயற்சி களினால் மனநோய்க்கு ஆளாகி எட்டு வருடம் சானடோரியத்தில் இருக்க நேர்ந்தது. காலம் நகர்ந்து, அனுபவங்கள் பின்னடைந்து, விலகி

1.

விலகிச் செல்ல, குவிந்து உருவான ஒரு புள்ளியில் இருந்து தெளிவு சிடைத்தது. அவ்வனுபவங்கள் அனைத்துமே ஒரு அனுபவத்தின் பதிமூன்று கூறுகளே என்றும், பின்பு அவை ஒரு தருணமே என்றும், ஒரு தருணம் என்பது எப்போதும் ஒரு கணமே என்றும் அவர் அறியலா னார். பிரமாண்டமான ஆள் கூட்ட நெரிசல் வழியாக ஊடுருவிப் போகும் ஒரு பயணத்தில், ஒருகணம் தீண்டி, தொடர முடியாதபடி உடல் அலைகளில் விலகி மறைந்துவிட்ட




ஒரு தீற்றலே அது என்ற பிரக்ஞை அந்தத் துளியிலிருந்து முழு அனுபவத்தையும் மீட்டு படைத் தெடுத்து விடலாம் என்ற நம்பிக் கையை நோக்கி அவரை இட்டுச் சென்றது. எஞ்சிய முப்பது வருடங் களும் அவருடைய தனிமை முழுக்க அவ்வனுபவத்தின் மறு அமைப்பிற் காக செலவழிக்கப்பட்டது. பப்பது வருடத் தனிமையில் துளித்துளியாக தேக்கிய தீவிரம் ஒரு தருணத்தில் ஒரு அறிதலைச் சாத்தியமாக்கியது. பதி மூன்று முறை அவர் புணர்ந்தது ஒரே ஒரு பெண்தான். கன்னங்கரிய திரையில் கரிய கோடுகளை நுட்பமாக பொறித்து அவர் அந்த முகத்தை பதித்தெடுத்த ஒவியத்தை உலகக் கலை வெற்றிகளில் ஒன்றாகவே கருத முடியும். எளிய பார்வையில் கரியதிரை தவிர வேறு எதுவும் தெரியாத அந்த பரப்பானது. தீவிர மான உள்ளத்தை அதன் மீது செலுத் தும் தோறும் உயிர் பெற்று மெல்லத் திறந்து காட்டுகிறது. எஃப். பார்கின் சன் அம்முகத்தின் கனவால் தாக்கப் பட்டதும். அவருடைய மன அமைப்பை அது தகர்த்ததும், அவர்


இந்தியாவிற்கு வந்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாகும் தோர்ஸ்டன் பிரபுவின் நிலை வேறாத இறுதி ஆசையான முகத்தின் தொடர்கண்ணியை தேய் கண்டடைந்து விடுதலை இவ்வகை ணம் இன்னொரு காரணத்துக்காக அவர் மேற்கொண்டாரெனிசை எஃப். பார்கின்சன் ஒரு தூய யதார்த்து வாதியாவார். அந்த உடலுறவின் அற்புதத் தன்மைக்கு மாயஜால் அம்சம் எதுவும் தர மறுத்து மானுடவியலில் தேடிய அவருடைய அறிவுவாத மன அமைப்பு அப் பழங்குடியினர் குரங்கு -- மனிதப் பரிணாமத்தின் ஏதோ ஒரு தளத்தில் நின்று விட்டவர்கள் என்றும், குரங்கு களின் உடலுறவுப் பழக்கத்தின் ஏதோ ஒரு நிலையை தொடர்ந்து கடைப்பிடித்தவர்கள் என்றும்தாஜ் தீர்மானிக்கச் செய்தது. இந்த யுக்தி வாத ஆய்வு அடுத்த தளத்திற்கு அவரை இட்டுச்சென்று பேச்சிப் பாறை சர்வே குறிப்புகள், அலு வலகப் பதிவுகள் கடிதங்கள், மற்றும் ராபின்சன் ஜெஃபீரி ('நாயர் சமூகத் தின் வீழ்ச்சி' என்ற புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய கனடா தேசத்து மானுடவியல் அறிஞர்) ரெவரென்ட் ஃபாதர் ஜோசப் கல்லன் (பழங் குடிகளைப்பற்றிய இவருடைய ஆய்வு கள் ஏழு நூல்களாக தொகுப்பட் டுள்ளன) என். சிவசங்கரன் நாயர் ஆகியோரின் ஆய்வுகளின் துளை யோடு முன்னகர வைத்தன. பேச்சிப் பாறையின் மறு மலைச்சரிவில் தடிக்காரன் கோணப் பகுதியில் இன்று கிறிஸ்தவமதம், ரப்பர்த்தொழில் போன்றவற்றை ஏற்று முற்றிலும் ம் நாகரீகமடைந்து சிதறி விரித்து - வளர்ந்திருந்த ஆதிமலைப் பழங் குடிகளைக் கண்டு பிடித்த எஃப் பார்கின்சன் அவர்களை தொடர்ந்து ஆய்வு செய்து, வியப்பூட்டும் சில தகவல்களை அறிந்தார். அவர்கள். தங்கள் அன்னையரை கனவில் வந்து ஆட்கொண்ட பதிமூன்று வெவ் வேறு) வெள்ளை அப்போஸ்தலாம் களை வழிபட்டு வந்தனர். இவ வாறாக எஃப். பார்கின்சன் இந்தி யாவில் ஒரேசமயம் தோர்ஸ்டனின் காதலியின் பதிமூன்று வடிவங் களையும் தோர்ஸ்டனின் பதிமூன்று வடிவங்களையும் கண்டடைந்தார். இந்தக் கணக்கின் குளறுபடியை சமன் செய்யும் பொருட்டு அவர் உருவாக்கிய சிக்கலான சூத்திரன் களும் வாய்ப்பாடுகளும் அடங்க சித்தாந்தமே பிற்பாடு 'உருவப்ப நிலையமைதிச் சித்தாந்தம்' என புகழ் பெற்றது. எனினும் இன்ற குளோட். லெவி. ஸ்ட்ராஸ் போன்ற வர்களின் அமைப்பியல்வாத மானுட ஆய்வுகளின் பேரலையில் இது மூழ்கடிக்கப்பட்டு மறைந்து விட்டது

Saturday, 14 December 2019

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான் - ஃபெர்னான்டோ சோரன்டினோ

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான்
by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2016 • 0 Comments
http://vallinam.com.my/version2/?p=2636
sridhar 2என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான். சரியாக இன்றோடு அவன் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. முதலில் என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை; ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயர் தெரியாது. நடுத்தரமான உடல்வாகு உடையவன் என்பது தெரியும், சாம்பல்நிற சூட் அணிந்திருப்பான், நெற்றிப்பொட்டில் கருமை படர ஆரம்பித்திருக்கும், பொதுவான முகத்தோற்றம்.


ஐந்து வருடங்களுக்கு முன்பு, புழுக்கமான ஒரு காலைவேளையில் அவனைச் சந்தித்தேன். பாலெர்மோ பூங்காவில், மரநிழலில் அமைந்த நீளிருக்கையொன்றில், செய்தித்தாள் வாசித்தபடி அமர்ந்திருந்தேன். திடீரென என் தலையை ஏதோவொன்று தொடுவதை உணர்ந்தேன். அது, இதோ இப்போது நான் இதை எழுதிக்கொண்டிருக்கையில், இயந்திரத்தனமாகவும் உணர்வற்றும், குடையால் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறானே, அதே மனிதன்தான். அந்தத் தருணத்தில், கடுஞ்சினத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்தேன்: அவன் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான். அவனிடம் நீ பைத்தியமா என்று கேட்டேன்: நான் கேட்டது அவன் காதில் விழுந்தாற்போலத் தெரியவில்லை. பிறகு காவலரை அழைக்கப்போவதாக மிரட்டினேன். கலக்கமேதும் இல்லாமல், மிகவும் அசட்டையாக, அவன் வேலையைத் தொடர்ந்தான். குழப்பமான சில கணங்களுக்குப் பிறகு, அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தபிறகு, நான் எழுந்து நின்று அவன் மூக்கில் குத்தினேன். அவன் கிட்டத்தட்ட காதில் விழாத அளவுக்கான ஒரு முனகலுடன் கீழே விழுந்தான். மிகுந்த முயற்சியுடன் உடனே மீண்டெழுந்து, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்தான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது, அந்தக்கணம் அவனுக்காக வருந்தினேன். அவனைத் தாக்கியதற்காகக் குற்ற உணர்ச்சியடைந்தேன். உண்மையில் அவன் ஒன்றும் என்னைக் காயப்படும்படி தாக்கவில்லையே; அவன் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டிருந்தான், அதில் எனக்கு வலியேதும் இல்லை. ஆனால், உண்மையில் அந்தத் தட்டுதல்கள் அளவுக்கதிகமாகத் தொல்லை தருவனதான். நம் எல்லோருக்கும் தெரியும், நம் நெற்றியில் ஒரு பூச்சி வந்து அமர்ந்தால் நமக்கு வலியோ அல்லது வேறெதுவுமோ ஏற்படப்போவதில்லை; அப்போது நாம் உணர்வது ஒரு தொந்தரவு. அப்படியென்றால், அந்தக் குடை ஒரு சீரான இடைவெளியில் அவ்வப்போது என் தலையில் அமரும் மிகப்பெரியதொரு பூச்சி.

நான் ஒரு பைத்தியக்காரனை எதிர்கொண்டிருக்கிறேன் என்று முடிவு செய்து, அவனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் அம்மனிதன், ஏதும் பேசாமல் என்னை அடித்துக்கொண்டே என்னைப் பின்தொடர்ந்து வந்தான். எனவே நான் ஓட ஆரம்பித்தேன் (இந்த இடத்தில் பெரும்பாலானோரால் என் அளவுக்கு வேகமாக ஓடமுடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்). அவனும் என் பின்னால் ஓடிக்கொண்டே என் தலையில் ஒரு அடியேனும் அடிக்க முயற்சி செய்தான். அவன் இப்போது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தான், இதே வேகத்தில் அவனை ஓடவைத்தால் என்னைச் சீண்டிக்கொண்டிருக்கும் அவன் அதே இடத்தில் இறந்து வீழ்வான் என்று தோன்றியது.

எனவேதான் நான் வேகத்தைக் குறைத்து நடக்க வேண்டியதாயிற்று. அவன் முகத்தில் நன்றியுணர்ச்சியோ அல்லது இழித்துரைக்கும் பாவனையோ இல்லை. வெறுமனே குடையால் தலையில் அடித்துக் கொண்டிருந்தான். காவல்நிலையத்துக்குள் நுழைந்து, “அதிகாரி அவர்களே, இம்மனிதன் என் தலையில் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்,” என்று சொல்ல நினைத்தேன். ஆனால், அது ஒரு முன்னுதாரணமில்லாத விநோத வழக்காக இருக்கும். அவ்வதிகாரி என்னையே சந்தேகமாகப் பார்த்து, என் அடையாளப் பத்திரங்களைக் காண்பிக்கச்சொல்லி என்னைச் சங்கடத்துக்குள்ளாக்கும் கேள்விகளைக் கேட்கலாம். முடிவில் என்னையே கூடக் கைதுசெய்து விடலாம்.

வீட்டுக்குத் திரும்புவதே சிறந்த வழி. 67ஆம் எண் பேருந்தில் ஏறினேன். இவ்வளவுநேரம் தன் குடையால் என்னை அடித்துக்கொண்டிருந்தவன் என் பின்னாலேயே ஏறினான். முதல் வரிசையில் அமர்ந்தேன். என் பின்னால் நின்றுகொண்டு இடதுகையால் கம்பியைப் பற்றிக் கொண்டான். வலது கையால் இரக்கமின்றி மீண்டும் தொடர்ந்து குடையால் அடித்துக்கொண்டே இருந்தான். முதலில் பயணிகள் மருட்சியாகப் புன்னகைத்தனர். பேருந்தின் ஓட்டுநர் கண்ணாடி வழியாக எங்களைக் கவனிக்கலானார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பேருந்துப் பயணம் மிகப்பெரிய சிரிப்பாக மாறியது, மிகப்பலமான, நிறுத்தவே முடியாத சிரிப்பு. நான் அவமானத்தில் எரிந்து கொண்டிருந்தேன். என்னைச் சீண்டிக் கொண்டிருப்பவனோ இந்தச் சிரிப்புகளுக்குத் தனக்குள் இடங்கொடாமல் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான்.

பசிஃபிகோ பாலத்தில் – நான் இறங்கினேன் – நாங்கள் இறங்கினோம். சான்டா – ஃபே -நிழற்சாலை வரை நடந்தோம். எல்லோரும் முட்டாள்தனமாக எங்களைப் பார்க்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள், முட்டாள்களே? ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தலையில் குடையால் அடிப்பதைப் பார்த்ததே இல்லையா?” என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனால் அதேசமயம் இப்படியொரு காட்சியை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது. பிறகு ஐந்தாறு சிறுவர்கள் பைத்தியங்களைப் போலக் கத்திக்கொண்டு எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

ஆனால் என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. வீட்டை அடைந்தவுடன், அவன் முகத்தில் அறைவதுபோலக் கதவை மூட நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவன் என் மனதைப் படித்தவன் போல, கதவுக்குமிழை இறுகப்பற்றிக் கதவை உள்ளே தள்ளி என்னோடு உள்ளே நுழைந்தான்.

அந்த நேரத்திலிருந்து, அவன் என் தலையில் குடையால் அடிப்பதைத் தொடர்ந்தான். எனக்குத் தெரிந்தவரை அவன் உறங்கியதோ அல்லது எதையும் சாப்பிட்டதோ இல்லை. அவனுடைய ஒரேவேலை என்னை அடிப்பது மட்டுமே. என்னுடைய எல்லா வேலையின்போதும் என்னுடன் இருப்பான், என்னுடைய அந்தரங்கமான வேலைகளிலும் கூட. முதலில் அந்த அடிகள் என்னை இரவுமுழுதும் விழிக்க வைத்திருந்தது ஞாபகமிருக்கிறது. இப்போது அவை இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது என்று தோன்றுகிறது.

எல்லா சமயங்களிலும் எங்கள் உறவு நன்றாகவே இருந்தது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில், நான் அவனை, பலதொனிகளில் அவனுடைய செயலை விளக்கும்படி கேட்டுப் பார்த்தேன். ஆனால் எந்தப் பயனுமில்லை: ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன் குடையால் என் தலையில் அடித்துக் கொண்டிருப்பான். பலமுறை அவனை குத்தியும், உதைத்தும் – கடவுள் என்னை மன்னிப்பாராக – குடையால் அடித்துமிருக்கிறேன். அவன் வெறுமனே அவற்றை ஏற்றுக்கொள்வான். ஏதோ, அவையெல்லாம் தன் வேலையின் ஒருபகுதி என்பதுபோல ஏற்றுக்கொள்வான். அவன் குணத்தில் குறிப்பிடும்படியான விநோதத்தன்மை இதுதான்: தன் வேலையில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை அதோடு துளியும் பகைமையுணர்வு இல்லாமை. சுருக்கமாகச் சொன்னால், உயரதிகாரி ஒருவரது உத்தரவின் பேரில் ரகசியத் திட்டமொன்றை அவன் செய்துகொண்டிருப்பது போல.

உடலுக்கான தேவைகள் இல்லாதிருந்தாலும், நான் அவனைத் தாக்கும்போது அவன் வலியை உணர்கிறான் என்று எனக்குத் தெரியும். அவன் வலிமையற்றவன் என்பதும் எனக்குத் தெரியும். அவன் இறப்புடையவன் என்பதும். மேலும், ஒரு தோட்டாவினால் அவன் தொல்லையிலிருந்து விடுபட்டுவிடலாம் என்பதையும் அறிவேன். ஆனால், அந்தத் தோட்டாவினால் அவனைக் கொல்வது நல்லதா அல்லது என்னைக் கொல்வது நல்லதா என்பதுதான் தெரியவில்லை. மேலும், நாங்களிருவரும் இறந்தபிறகு அவன் என் தலையில் குடையால் அடிக்காமல் இருப்பானா என்பதும் எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் இந்தச் சிந்தனை வீணானது; என்னால் அவனைக் கொல்லவோ அல்லது என்னைக் கொன்று கொள்ளவோ முடியாது.

தவிரவும், சமீபமாக நான் உணர்ந்த்து என்னவென்றால், என்னால் அந்த அடிகள் இல்லாமல் இனி வாழமுடியாது. இப்போது, அடிக்கடி குறிப்பிட்டவொரு துர்ச்சிந்தனை என்னைப் பீடிக்கிறது. ஒரு பதைபதைப்பு என் ஆன்மாவைத் தின்கிறது, அந்தப் பதைபதைப்பு இந்தச் சிந்தனையிலிருந்து எழுகிறது: ஒருவேளை, அவனுடைய தேவை எனக்கு அதிகமாக இருக்கும்போது அவன் என்னைப் பிரிந்து, என்னை ஆழ்ந்து உறங்கச் செய்து கொண்டிருக்கும் அந்தக் குடையடிகளை நான் உணராமல் போய்விடுவேனோ என்பதே அது.

****

ஃபெர்னான்டோ சோரன்டினோ (Fernando Sorrentino) : 1942-ல் அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் எய்ரஸ்சில் பிறந்தவர். சிறுகதைகளில் முக்கியமாகக் கருதப்படும் சோரன்டினோ தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இதுவரை ஆறு தொகுப்புகள் ஒரு குறுநாவல் வெளிவந்துள்ளது. 2013ல் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான இலக்கியமும் பெருமளவில் எழுதியுள்ளார். மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக மதிக்கப்படும் சோரன்டினோவின் கதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.

ஃபெர்னான்டோ சோரன்டினோ

ஆங்கில மொழியாக்கம்: க்ளார்க் எம். ஸ்லாட்ச்யூ

தமிழில் – ஶ்ரீதர்ரங்கராஜ்

Thursday, 12 December 2019

https://www.facebook.com/permalink.php?story_fbid=1419079428272377&id=100005110006875
பிரேம் பிரேம்
4 mins ·
போக்கெலாம் பாலை!
புணர்தல்?

பிரேதா என ஒரு நாளும்
பிரேம் என ஒரு நாளும்
மாறியமையலாம் என ஒரு ஆசையில்
இருக்கத் தொடங்கினேன்.

அதில்தான் தொடங்கின ஆகப் பெரும் தொல்லைகள்.

என் பாய்பிரண்டுக்கு ஒரு கவிதையெழுத வேண்டும் மேடம்
நீங்கள் கவிதை எழுதுவீர்களாமே
எழுதித் தருவீர்களா? என்றாள் ஒரு பெண்.

காதலுக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு.
இருக்கிறது கவியே.
வாட்ஸப் வந்த பின்னும்
கவிதையில்தான் தொடங்குகிறது காதல்.
உயர்தொழில் நுட்ப விமானங்கள்
எலுமிச்சைப் பழங்கள் இல்லாமல் ஓடாதல்லவா.

நான் சற்று முந்திய தலைமுறை.
பிரேதா என்ற பெயரைக்கூடத்
அதன் விளைவுகள் தெரியாமல்
வைத்துக் கொண்டேன்.
உங்கள் காதலை
நான் எப்படி எழுத முடியும் தெரியவில்லை.

இல்லை, நீங்கள் பெண்ணியக் கவி.
எனக்கு உதவி செய்தே ஆகவேண்டும்.

சரி என்ன சொல்ல நினைக்கிறாய்.

அவனைப் பார்க்காத நாளில்
எனக்குப் பயித்தியம் பிடித்தது போல ஆகிறது.

பயித்தியம் போலவா பயித்தியமாகவா.

தலையைப் பிய்த்துக் கொண்டு ஓட வேண்டும்
போலத் தோன்றுகிறது.

சரி
பார்க்கும் பொழுது என்ன பேசிக் கொள்வீர்கள்.
அவன் கேட்பான் நான்தான் உனக்கு ஒரே பாய்பிரண்டா.

நான் கேட்பேன் நான்தான் உனக்கு முதல் கேள்பிரண்டா.
பிறகு இருவரும் ரெட்மிகளை காட்டி நிருபிக்க முயல்வோம்.

சரி உனக்கு எத்தனை வரியில் கவிதை வேணும்.

வாட்ஸப்பில் படத்துடன் அனுப்ப உகந்ததாய் மேடம்.

“உன்னைப் பார்க்காத பொழுதுகளில்
எனக்குப் பயித்திம் பிடிக்கிறது.
பார்க்கும் பொழுதெல்லாம்
ஒரு பைத்தியத்தை மட்டுமே பிடிக்கிறது.”

என்ன மேடம் இதற்கு அர்த்தம்.
பைத்தியம் இல்லாமல் இதைப்
புரிந்து கொள்ள முடியாது.
சரி என்று வாங்கிப் போனாள்.

அடுத்த நாள் பிரேம் இல்லையா.
ஒருத்தன் வந்தான்.
என் காதலி டெல்லிப் பெண் சார்.
அவள் இங்கிலிஷ் படித்தவள்.
நானோ கொஞ்சம்போலத் தமிழ் படித்தவன்.
எங்களுக்குள் பேசிக்கொள்வதில் பிரச்சினை என்றான்.
என்ன?
நான் அவளைக் காதல் செய்கிறேன் என இங்கிலிஷில் சொன்னேன்.
"I want to make love to you"
அவள் கோபமாக இப்படிச் சொன்னாள்.
"Fuck You"
புரியல சார் என்ன சொன்னா.

நீ இந்தியன் இங்கிலிஷில் சொன்னதைத்தான்
அவர் அமெரிக்க இங்கிலிஷில் சொல்லியிருக்கிறார்.
சார் அவள் பெண்தான் ஆண் அல்ல அவர் என ஏன் சொல்கிறீர்கள்?
அது என் பழக்கம் சரி மேலே சொல்.
ஆனால் உடனே
முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாளே சார்.

செயல் அதுவே சிறந்த சொல்.
என்ன சார் சொல்கிறீர்கள்.
மன்னிக்கவும்.”செய் அல்லது செத்துமடி.”
சார் நான் பிரேதா மேடத்திடம் பேசிக் கொள்கிறேன்
என்று கிளம்பிப்போய் விட்டான்.

பிரேதா இன்று. சொல்ல வேண்டுமா.
ஒருத்தி வந்தாள்.
மேடம் இந்தக் கவிதையைக் கொடுத்து
ஒருத்தன் தொல்லை செய்கிறான்.
நான் ஏதாவது பதிலுக்குக் கவிதை எழுத வேண்டும்.
படித்துப் பார்த்தேன் அவை பிரேம் வரிகள்.

என்ன சொல்லனும் பெண்ணே.
வீட்டில் பிரச்சினை மேடம்.

அதுதானே மிகவும் ஏளிமை.

“உனைப்பார்க்க வரும் பொழுதெல்லாம்
ஒரு பயித்தியம் இடிக்கிறது.
பார்த்து விட்டு இல்லம் சென்றால்
மூன்று பைத்தியங்கள் கடிக்கிறது.”

என்ன மேடம் இதற்கு அர்த்தம்.
உங்கள் வீட்டில் எத்தனை பேர்.
மூன்று பேர்கள்.
சோ சுவீட்.

பிரேம் அன்று
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு
போவதைப் பார்த்தேன்
காரை ஓரமாக நிறுத்தி என்ன சோகம் என்றேன்.
இரண்டு மாணவிகள் கேட்டார்கள் பிரேதா.
தேசியத் தேர்வுகளில் மட்டுமின்றி
எல்லா தேர்வுகளிலும் நான்கு சாய்ஸ் கொடுத்து
எது சரி என்று கேட்கிறார்கள்.
திருமணம் என்றால் எதையும் கேட்பதில்லையே.
நாலு கொடுத்தால் நீ நாலையும்தானே கேட்பாய் என்றேன்.
அப்படி வெறுப்புடன் பார்த்துப் போனார்கள்.
நாலும் இரண்டும் சொல்லுக்குருதி.
நாயுறுவி பல்லுக்குருதி.
என்ன சொல்கிறாய் பிரேமி.
எதுவும் தெரியாதா பிரேதா.
நீ தமிழன். நான் பிரஞ்சு இப்படிப் பூடகமாய்ப் பேசாதே என்றாள்.
தற்காலத் தமிழில் ஒரு கவிதை சொல்லவா.
சொல்லித் தொலை.
நீதான் என் தில்லி நான் அதில் ஒரு புள்ளி..
பிரேதாவின் கண்ணின் கண்ணீர்ப் படலம்.
இருவரும் நெடுநேரம் பேசக்கொள்ளவே இல்லை.
போகும் போது சொன்னாள்.
.இதையும் முகநூலில் போட்டு விடாதே.
என்ன சொல்வது.
தமிழ்க் கவிஞன் ஞான்.
பில்டிங் ஸ்ட“ராங்க்.
பேஸ்மண்ட் வீக்.
பிரேதாவக இருந்தால் என்ன
பிரேமாக இருந்தாள் என்ன
விருப்பக்குறிகள் ஆயிரம் வேண்டும்.

பிரேம் புலம்பினான்
கவிதை எழுதினால்
இருபது விருப்பக் குறிகள்
கருவாடு வறுத்தேன் என்றால்
இரண்டாயிரம் விருப்பக் குறிகள்.
கவிதை எழுத வீட்டுக்கு ஒரு ஆள் உண்டு.
கருவாடு வறுப்பது அத்தனை எளிதா சொல்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
அருந்தக் கொடுத்தாய் நீ.
66
Like