Thursday 19 February 2015

ஒரு பரமபத வரைபடம் முன்வைக்கும் ஆட்டக்களிப்பைத் .... ”யோகநித்திரை ஏகினான் ஸ்ரீமான் எம்.டி.எம்”. - எஸ்.சண்முகம்

எஸ்.சண்முகம்



ஒரு பரமபத வரைபடம் முன்வைக்கும் ஆட்டக்களிப்பைத் தருகிறது ”யோகநித்திரை ஏகினான் ஸ்ரீமான் எம்.டி.எம்”.

என்ற பிரதி............................


ஒருசில கதையை எப்போதும் போல் வாசிப்பதில் கிடைக்கும் களிப்பைக் காட்டிலும். அதை ஒரு ’பிறழ்-வாசிப்பிற்கு’ உட்படுத்தினால் நம் மனம் எண்ணற்ற விநோதங்களை கண்டடையும். மந்தமான கதைசொல்லும் பிரதிகள் உற்பத்தி செய்யும் வாசக அயர்ச்சியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.


விநோதங்களைச் சமைக்கும் அதீத ஆற்றல் வாசக மனங்களில் ஒடுக்கப்பட்ட வேட்கையாய் அடைந்து கிடக்கிறது. அது ஒரு சிறிய விளையாட்டுத்தனமான சீண்டலில் முழு ஆனந்தத்துடன் நம்முன் ஆடிக்களிக்க காத்திருக்கிறது கதைகள். இவை நிறங்களும் -ஒலிகளுமாக பிணைந்து படிம விசிரி விரிவதுபோல் பிறழ்வாசிப்பில் அவிழ்கிறது..


காப்காவின் விசாரணை நாவலை ஒருவகையான வாசிப்பின் அறிதலில் நாம் இதுவரை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால் இதையே உம்பர்த்தோ எக்கோ தனது 'Misreadings ' என்ற நூலில் சற்று வித்தியாசமான பிறழ்-வாசிப்பில் ஒரு துப்பறியும் நாவாலாக வாசிப்பதாக எழுதியுள்ளார். 1959 இல் Il Veri என்ற இலக்கிய பத்திரிகையில் எழுதிய சிறிய கட்டுரைகளை ’பிறழ்-வாசிப்புகள் ’ என்ற நூலில் சேகரித்துள்ளார். குறிப்பாக 1957 இல் வெளியான ரோலண்ட் பார்த்தின் 'Mythologies' இல் வெளியான கட்டுரைகளை வாசித்தபின்பு அதன் ஜாடையில் இல்லாமல் ஒரு மாற்று வடிவமாக 'Pastiche' என்ற வகைமையை தேர்ந்து கொண்டதாக கூறுகிறார்.


இவர் ஒரு சமயம் தனது பேட்டியில் சில புத்தகங்களை படிக்கவே இயலாமல் போனதிற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அதில் ஒன்று William Makepeace Thackeray யின் Vanity Fair; மந்தமான- கதையாடலைக் கொண்டது என்பார். இதில் Nabakov ,The Bible, Homer Odyssey ,Dante The Diving Comedy,Torqquato Tasso ,Denis Diderot,Sade, Cervantes, Manzoni ,Marச்el Proust,Immanuel Kant, Franz Kafka , ஆகியோரது பிரதிகளை பிறழ்-வாசிப்பு செயதல் என்ற ஒரு நவீன -வாசிப்பு வகைமையைச் செய்துள்ளார். காப்காவின் விசாரணை நாவலை ஈகோ ..........

...................................................................................................


Nice little book. A thriller with some Hitchcock touches. The final murder, for example . It could have an audience.

...........................................................................................................................................................................................................................................................................................................................................................................Otherwise , why all these vague references, this trick of not giving names to people

or places?And why is the protagonist being put on trial?


suspense assured............

..................................................................................................................................................................................................................................................


If we can have a free hand with editing, I'd say buy it.If not,not.


Kafka, Franz, The Trial

-Umberto Eco -

(Misreadings)


மொழியின் கள்ளமும், வகைமைகளின் மயக்மும் ஒரு தொடு புள்ளியில் சம்பவிக்கும் எழுத்து எம்.டி,எம். இன் யோக நித்திரை ஏகினான் ஸ்ரீமான் எம்.டி.எம்.” என்ற பிரதி.


தொடுதிரையில் விரலின் தீண்டலில் உயிர்ப்புறும் ஒளிக்குறிகளாய் விரிகிறது இந்தப் பிரதி. காலத்தை தாண்டிக் குதிக்கும் கதைசொல்லியின் எண்ணற்ற குரல்களின் திரிகளை பிணைந்து கொண்டே செல்லும் உரைநடை ; வாசிக்கும்போது அவிழ்ந்து மொழியின் பன்மை கிளைத்துக் கொண்டே செல்கிறது.


”ஸ்ரீமான் பொதுஜனம் உவாச:


மஹாமஹா சூரரும் மஹாமஹா தீரரும் பாரத தேசத்தை ஒற்றைக்க்குக் காப்பாற்றப் புறப்பட்ட வில்லாளியும் வலக்கையால் ஹிந்து மத அஸ்திரங்களையும் இடக்கையால் ஹிந்துத்துவ அரசியல் அஸ்திரங்களையும் எது எந்த அஸ்திரம் எனத்தெரியாதவாறு சவ்யாசியாய் எய்யக்கூடியவரும், முன்பு ஒருமுறை மஹா பண்டித

மஹா வித்துவான் ஸ்ரீலஸ்ரீ தமிழவனுக்கு ஸ்திரியை ஆலிங்கனம் செய்து இதழோடு இதழ்பொருத்தி இனியபானம் செய்யும் முறை தெரியாது என நுணுக்கமாக உலகுக்கு அறிவித்த ம்ஹோன்னத மஹாபண்டித மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ பண்டித சிரோமணி மஹாஉபாத்தியாய ஸ்ரீலஸ்ரீ வெங்கட்சாமிநாதனார் அவர்களால்..”...................................................................................................................................................................................................................................


ஒரு வாசிப்பில் பகடிபோல தோன்றினாலும் இதுபோன்ற பல அலகுகளைக் கொண்டு சொல்லப்படும் இந்த கதையொத்த வகைமை கதையிலும் அடங்காமலும் கட்டுரையிலும் அடைபடாமல் ஒருவித வகைமை மயக்கதில் சுழல்கிறது....அகவி... அகவி ....நிகழ்தப்படுகிறது.


”அன்னாரின் குறட்டையொலியைக் கேட்டு ஸ்ரீமான் எம்.டி.எம் அவர்களின் உபன்னியாஸமோ அல்லது உபன்னியாஸ்த்திற்கு அவரது மாணாக்கர்களின் மயக்காமோ என் சந்தேஹித்த மஹா பண்டித மஹா வித்வான் ஸ்ரீலஸ்ரீ ஜடாயு அவர்கள் ”.............


(பக்கம் :258)


இங்கு உபன்யாச ஒலியை/ குறட்டை ஒலியாக பிறழ்வாசிப்பு செய்கிறார் எம்.டி.எம். மேலும் அந்த ஒலியில் மயங்கிய மாணாக்கர்களையும் இங்கு பகடி செய்கிறார்.


“ குல தர்மம் ஜாதி முதலியனவற்றுக்கு எதிரான ஸ்ரீலஸ்ரீ ஜடாயு அவர்கள் தங்களுள் மூத்தவரும் தன் அனுபவத்தால் எல்லாவற்றையும் அளந்தபடியால் உலகளந்த பெருமாள் என் தமிழுலகில் அறியப்பட்ட மஹான்னத மஹாபண்டித மஹாவித்வான் பிரம்மஸ்ரீ பண்டித சிரோமணி மஹாஉபாத்தியாய ஸ்ரீலஸ்ரீ ஜெயமோகனார் அவர்கள்............................................................................................................................................................


மஹாத்மா காந்தி அவர்களை பனியா என்று விதந்தோதியதையும்

மஹாத்மா காந்தி அவர்களை வைத்தே வர்ணாசிரம் தர்மத்தை நியாயப்படுத்தி எழுதியும் பேசியும் ...................................


(பக்கம் :258)


ஆகாயத்திலிருந்து பொழியும் ஜலதாரையில் அபூர்வமாய்த் துள்ளி விழும் கடல் மீன்களைப் போலவே பாரத புண்ணிய பூமியில் விழுந்தவையே தீண்டாமையும் வர்ணாசிரம தர்மமும் ஜாதியும் என்று நன்றாகவே விளங்கிவிட்டது ஸ்ரீமான் பொது ஜனத்திற்கு.


(பக்கம்:259)


தன் மூடிய இமைகளுக்குள் அந்த அலகிலா ஈசனின் , அனந்த நடராஜனின் அஜபா நடனத்தைப் பார்த்துக் களித்திருக்கிறானோ ஸ்ரீமான் எம்டிஎம்?


அவன் முகத்தில் ஏனிந்த மந்தஹாஸப் புன்னகை?


(ப்க்கம் :259)


சொல்கதையின் தன்மையோடு நிகழ்ந்து; உபன்யாஸ தொனியில் பிரதி பேசுகிறது. யார் பேசுகிறார் அல்லது யார் வாசிக்கிறார் என்பதும் உரைநடையின் Hetero-edge தன்மையும் புனைவு-கட்டுரை -சொல்கதை அகிய வகைமைகள் ஒன்றோடு இழைந்து செல்கிறது. இதில் பேசப்படும் பொருண்மை பல்வேறு முனையிலிருந்து அணுகப்படும் சாத்தியத்தை எம்.டி,எம் இன் பிரதி தருகிறது. ஒரு பரமபத வரைபட்ம முன்வைக்கும் ஆட்டக்களிப்பை” யோக நித்திரை ஏகினான் ஸ்ரீமான் எம்.டி,எம் ”. நமக்களிக்கிறது.


ஒருவிதக் கொண்டாட்ட கதியில் எழுதப்பட்டிருக்கும் எம்டிஎம் இன் புதியவகை எழுத்து எநத இடத்திலும் மந்தப்படவில்லை . ஒரு பெருங்கதையாடலுக்கு எதிர்-பிரதியாக்கம் இங்கு கையாளபபட்டுள்ளது. எதையும் சிரிப்பில் கீழறுப்பு செய்துவிடலாம் என்ற பிரதியுக்தி தென்படுகிறது. பல்வேறு தத்துவார்த்த புலத்தில் இயங்கும் மொழியின் இழைகளை இதில் ஒரு வலைப்பின்னலாக எம்டிஎம் வேய்ந்துள்ளார். நுனி தென்படாது நெய்யப்பட்டுள்ள ஒரு அபூர்வ கதையாடலைத் தந்த எம்டிஎம் மந்தகாஸா புன்னகை புரிகிறார்.


இந்தப் பிரதியை வாசிப்போர் தமது நமட்டுச் சிரிப்பில் பெருங்கதையாடல்களைக் கீழறுப்புச் செய்யலாம்.
-எஸ்.சண்முகம்-https://www.facebook.com/shanmugam.subramaniam.71/posts/647551662018245?notif_t=like_tagged
நிலவொளி
எனும் இரகசிய
துணை...
-எம்.டி. முத்துக்குமாரசாமி-
(அடையாளம் வெளியீடு)
மின்னஞல்:info@adaiyaalam.net