Wednesday 11 February 2015

முக்கோணம் - மா.தக்ஷிணாமூர்த்தி

முக்கோணம் - மா.தக்ஷிணாமூர்த்தி

அமைதி தந்தாய் நீ
மோன ஒளியில்
விரைவு தந்தாய் நீ
உயிரில்லாப் பயிர்
கதிரில்லாப் பதர்
என்று நீ தள்ளினும்
உனை வளைய வளைய வந்-
துன்னமைதியைக் குலைத்தேன்
வலையை அறுத்தேன்

இயற்கைப் புணர்ச்சி
தலைவன்
தலைவி
குறிஞ்சி
மடலேறுதல்
செய்தகு காரியமோ

கருமம் அனுபவித்தே தீரும்
ஊடல் அமைதியை ஊட்டாது

வளை நெகிழ
உடல் மடிய
வலை குலையக்
கருகி விடுவாய்

வாழ்வின் தாழ்ப்பாள்
ஒரு பிடிச் சாம்பலோ
நீறணிந்து நீத்தலே வாழ்வு
நீராய் நித்தம் புழுதியாய்த் தழுவிச்
சேறாதல் சாவு

பயணமே பயன் தரும்
சேராத இடமே சீருடைத்தோ
செயற்கைப் புணர்ச்சி
செம்மையாம் முக்கோணத்தில்
முக்கோண மருத்துவங் கண்ட
ரமாவிற்குத் தலைவலி


செந்தாமரையிலும்
சேறு
முரண்பட்ட அரண்மனையில்
அரவம்.

நன்றி : நடை தொகுப்பு  (கி.அ.சச்சிதானந்தம்)