Saturday, 21 April 2018

கிஸ்டீரியா…” கற்சுறா

Thursday, 19 April 2018
“கிஸ்டீரியா…”

கற்சுறா
https://matrathu.blogspot.in/2018/04/blog-post.html

குரல் அறுந்தே கிடந்தது… ஒரு இரவல்ல. சீவியத்தின் சாமமெங்கும்
தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவுக்கு நிழல்களே ஊசலாடிக் கொண்டிருந்தது. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும் யாரையெல்லாம் மன்றாடினார்கள் என்பதனை இப்போது சொல்ல முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.

“காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது” என்று மனது
நினைக்கும் தருணங்களிலெல்லாம், இல்லை… இல்லவேயில்லை.
என்று அவரது மனது துருதுருத்து எப்பொழுதும் அதனை மறுத்துக்
கொண்டேயிருந்தது. தான் கண்டடைந்த எல்லாக் கதைகளையும்
அவரால் ஒருபொழுதும் சொல்லிவிடவே முடியாது. சொல்லப்பட்ட
கதைகளில் மட்டுமே வாழ்வு தடமிடுவதில்லை. சொல்லமுடியாத
கதைகளோடு கழியும் தனது சீவியத்தின் தண்டனைகளை அவர்
சாமங்களில் மட்டுமே இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கடும் இரைச்சலோடு கூடிய மழையை அல்லது கசிந்துருகும் தார் +ஒட்டும் வெயிலை அல்லது கடும் பிறேக் ஒன்றைப் பிடித்தபடி
திடீரென்று நிறுத்தப்படும் ஒரு வாகனத்தை அல்லது நிறுத்தாமலேயே
வேகமாகப் போகின்ற ஒரு வாகனத்தை காணவேண்டிவரும்போது
சட்டென நிலை குலைந்து கால்கள் தடுமாறி விடுகிறது அவருக்கு.
அவர் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் கதைகளை அவ்வப்போது
நடக்கும் இப்படியான சாதாரண நிகழ்வுகள் அந்தப் பொழுதுகளிலேயே
அவரை உடைத்து ஒரேயடியாக ஓட்டையாக்கிவிடுகின்றன. அவை
ஒவ்வொன்றும் அவருக்கு சாதாரண நிகழ்வுகளாக ஒருபொழுதும்
இருப்பதேயில்லை.

இப்படி வெறுமனே மிகவும் சாதாரணமாக, அன்றாடம் நடக்கின்ற
ஒவ்வொரு சிறிய செயற்பாடுகளையும் கண்டு இப்போது குலைபட்டுப்
போகும் அவரை எல்லோருமே அப்போதே கிஸ்டீரியா என்று
அழைத்தார்கள்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் இடைவெளி கிட்டத்தட்ட
முப்பத்தியொரு வருடங்களாக இருக்கின்றது. இந்த முப்பத்தியொரு
வருடங்களுக்குள்ளாக அவருடன் உருண்டோடிய கதைகளின் ஒரு
கதைதான் இது.

மிகைப்படுத்தப்பட்ட அல்லது கற்பனைக்குக் கூட ஒவ்வாத கதைகளைச்
எப்பொழுதும் சொல்லுவதே கிஸ்டீரியாவின்  இயல்பு. அதனைக்
கேட்பவர்கள் தங்கள் கொடுப்புக்குள் சிரித்துத் தன்னைப்  பழித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதனைப் பற்றி  ஒருபொழுதும் கொஞ்சமும்
கவலை கொள்ளாத முகம் கிஸ்டீரியாவினுடையது.
ஒவ்வொரு கதையையும் சொல்லும் போது மிக நிதானமாக தொடர்
சம்பவங்களை விபரித்துக் கொண்டிருக்கும் கிஸ்டீரியா அதன்
இடையிடையே தன் அனுபவமாக புகுத்தும் பாலியல் அபரீதக்
கதைகளைக் கேட்டுச் சிரிப்பதற்கென்றே அவனைச் சுற்றி எப்பொழுதும்
ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தின் கலகலப்பை
தன்னுடைய கதைகளால் அதிகரித்துக் கொண்டிருப்பான். அவன்
சொல்லுகின்ற பாலியல் கதைகளால் அப்போது அவனுக்கு உண்டான
காரணப் பெயர்தான் கிஸ்டீரியா.

இப்பொழுது கிஸ்டீரியாவுக்கு அறுபது வயதை நெருங்கிக்
கொண்டிருக்கும் தோற்றம். சலரோக வியாதி தொடக்கம் அனைத்து
வியாதிகளும் அவரது உடலில் தோன்றியிருக்கும் நிலையில்
அவற்றைச் சமநிலைப்படுத்த காலையும் மாலையும் தொடர்ந்து நடந்து
களைக்க வேண்டியிருக்கிறது. அவர் தனது மனதின் சமநிலையை
மட்டுமல்ல தனதுடலின் சமநிலையையும் குலைத்து நீண்ட
காலமாகிவிட்டது.

உடலின் உன்னதத்தையோ இன்னொரு உடலின் வாழ்தலுக்கான
உரிமையையோ விளங்கிவிடாத இள வயதுகளின் செயல்களைக்
கொண்டு ஒருவரை இப்போது ”பெட்டிகட்டி” “கட்டங்கட்டி”
குறுக்கிவிடமுடியுமா? என்று என்னால் யோசிக்க முடிவதில்லை.
ஆனால் என்னை விட கிஸ்டீரியாவுடன் அதிகமான காலங்களில்
நெருக்கமாக இருந்த “கே.எம். அவர்கள்” கிஸ்டீரியாவின் மீதும் அவரது
ஆரம்பகால செயற்பாடுகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை
இப்போது முன்வைக்கிறார். இன்றைக்கு எஞ்சி
உயிரோடிருக்கின்றவர்களில் ஒரு முக்கியமானவர் கிஸ்டீரியா.
“கே. எம் அவர்கள்” இதுசம்பந்தமாக கிஸ்டீரியாவை இதுவரையில்
மூன்று முறை சந்தித்திருக்கிறார். இருந்தும் அவர் எதிர்பார்ப்பது போல்
அவருக்குத் தெரியாத புதிதாக எந்தத் தகவலையும்
கிஸ்டீரியாவிடமிருந்து அவரால் பெற்றுக் கொள்ள முடியவேயில்லை.
கிஸ்டீரியா தன்னுடைய இயல்பாகச் சொல்லப்படும் வார்த்தைகளில்
“கே. எம் அவர்கள்” தொடர்ந்தும் குழம்பிப் போய்க்
கொண்டேயிருக்கிறார்.

கிஸ்டீரியா தனது வயோதிப காலத்தை வாழ்ந்து முடிக்க
ரொரன்டோவில், மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் தென்கிழக்குப்
பக்கமாக அமைந்திருக்கும் ஏழு மாடிகளைக் கொண்ட முதியோர்
இல்லத்தில் இப்போது வாழ்ந்து வருகிறார். இங்கே வந்த பிற்பாடுதான்
கே. எம். அவர்களுக்கும் தொடர்ந்து அவரைச் சந்திக்க முடிகிறது. கே.
எம். அவர்களும் மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் இருந்து கிழக்குப்
பக்கமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இதே மாதிரியான
இன்னுமொரு முதியோர் இல்லமொன்றில் வசித்து வருகிறார்.
அவருக்கும் உடலில் ஆயிரம் வியாதிகள். மலம் போவதையோ சலம்
போவதையோ அவரால் உணர்ந்து கொள்ளமுடியாத நிலையில்
பம்பர்ஸ் கட்டிக்கொண்டுதான் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலை
வந்திருக்கிறது அவருக்கு. உடலளவில் தைரியத்ததை இழந்தாலும்

மனதளவில் இழந்து விடாது கர்வம் பிடித்திருக்கும் வாழ்வு
அவருடையது.

கிஸ்டீரியா சம்பந்தப்பட்ட கதைகளை உண்மையோடு அறிந்து பதிவு
செய்யவேண்டும் என்பதுவே அவரது நீண்டகால நோக்கம்.
அதற்காகவே கிஸ்டீரியாவுக்கு தொடர்ந்து கரைச்சல் கொடுக்கிறார்.
கே.எம் அவர்கள் மீது இன்னமும் மரியாதை வைத்திருக்கும்
கிஸ்டீரியாவிற்கு இந்தக்கரைச்சலில் இருந்து விலத்திவிட ஒற்றைச்
சொல்லில் “போடா பேயா” என்று சொல்லிவிட வேண்டும் என மனம்
உன்னினாலும் சொல்லி மறுத்துவிட முடியாதிருக்கிறது. அதனால்தான்
பல நேரங்களில் பொறுமை இழந்து போனாலும் கிஸ்டீரியாவினால்
ஒருபொழுதும் அவரது முகத்தை முறித்து கதைத்துவிட விருப்பம்
இன்னமும் வரவில்லை.

இது சந்திப்பின் நான்காம் நாள். கிஸ்டீரியா தன் கதையின்
பின்பாதியை இப்போது சொல்லத் தொடங்கினார். கிஸ்டீரியா
சம்பந்தப்பட்ட மூன்றாவது கொலை அது.
1984ம் வருடம் துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்
வைத்துக் கடத்தப்பட்டு அனிச்சயங்குளம் வெளிக்காட்டுச்
சுடலைக்குள்ளே வைத்து கொலை செய்யப்பட்ட சிங்கள மனுசி
ஒருத்தியினது கதையை இப்பொழுது விளக்கமாக “கே. எம்.
அவர்களுக்குச்” சொல்லத் தொடங்கினார் கிஸ்டீரியா.
கதையைச் சொல்லத் தொடங்க முதல் கிஸ்டீரியா தனது முகத்தைக்
இரண்டு கைகளாலும் இறுகப் பொத்தினார். கிட்டத்தட்ட முப்பது
செக்கன்கள் வரையில் குனிந்தபடியே கண்களை மூடியிருந்தார். அந்த
முப்பது செக்கன்களில் அவர் தனது மனதைக் கட்டுப்படுத்தினாரா?
அல்லது இளகவிட்டாரா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால்
கழுத்தில் இருக்கும் தசைநார்கள் இரண்டும் அப்போது

வெளித்தள்ளியபடி இருந்தது. மூடியிருந்த கைகளால் முகத்தை
வளித்தெடுத்து இரண்டு பெருவிரல்களிலும் தனது நாடியைத்
தாங்கிப்பிடித்தவண்ணம் கே.எம் அவர்களை அண்ணாந்து பார்த்தபடி
அவர் பேசத் தொடங்கினார்.

"நானும் பின்பக்கமாக நின்று அவளின் முதுகுத்தண்டில் எட்டிக் காலால்
உதைத்தேன். சாம்பல் தூறிக்கிடந்த நிலத்தில் குப்புற விழுந்தாள். குப்புறக்
கிடந்த அவளின் தலைமயிர்களுக்குள்ளால் சாம்பல் புழுதி புகைபோன்று
மேலெழுந்தது. கைகளையும் கால்களையும் நீள் கயிற்றில்
கட்டிவைத்திருந்தபடியால் ஒவ்வொருமுறை உதையும்போதும் அவள்
நிலத்தில் விழுந்து எழும்பிக் கொண்டிருந்தாள். ஆனால் நான் உதைந்த
இந்தமுறை மட்டுந்தான் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை.
சாம்பல் பரவிக் கிடந்த நிலத்தில் கால்களை விரித்து முட்டுக்காலில்
ஊன்றியபடி குப்புறக்கிடந்தாள். கைகள் மட்டும் முதுகுப்பக்கமாகக்
கயிற்றில் இழுபட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன."

என்று சம்பவம் குறித்து அவர் சொல்லத் தொடங்கிய விதம் “கே. எம்.
அவர்களுக்கு”கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்திருக்கத்தான் வேண்டும்.
அவரால் அதனைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை.

தனது பாணியில் கதையைச் சொல்லத் தொடங்கியது சரியாக
இருந்ததாகவே இப்போதும் கிஸ்டீரியா நினைக்கிறார். பழக்கப்பட்டுப்
போன கதை கேட்கும் முறையிலிருந்து “கே.எம் .அவர்களாலும்”
மாறமுடியாதிருந்தது. மிக அதிகமாகவே குழம்பிப் போனார்.
பதட்டப்பட்ட கண்கள் வெள்ளேந்தியாக கிஸ்டீரியாவை நோக்கி
நேரெதிராகத் திரும்பியிருந்தன. அந்தவிதமான பார்வையை

கிஸ்டீரியாவும் கவனித்தார். சொல்லப்பட்ட வார்த்தைகளிலிருந்து
எந்தக் குறிப்பையும் எடுத்துவிடக்கூடிய காலஅவகாசம் கே.எம்.
அவர்களுக்குப் போதாமல் இருந்தது.

அதனை திசைதிருப்பும் விதமாகத்தான் அவர் கிஸ்டீரியாவை
இடைமறித்து உடனே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

"அவளுக்கு கிட்டத்தட்ட எத்தனை வயது இருந்திருக்கும்?"

சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அப்போது அவளைப்பார்க்க
எனது பெரியமாமியின் சாயல் இருந்ததால் ஒரு முப்பத்தெட்டு நாற்பது
வயது மதிக்கலாம். என்று நினைக்கிறேன். என்றார் கிஸ்டீரியா.

"எதற்காக அவளை நீங்கள் கடத்தினீர்கள்?"

"அவள் ஒரு சி.ஐ.டி."

“அவள் சி.ஐ.டி. என்பதனை நீங்கள் எவ்வாறு அடையாளம்
கண்டுகொண்டீர்கள்?”

"அவள் சிங்களத்தி..."

ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலைச் சொல்ல இடையில் அதிக
நேரத்தை எடுத்துக் கொண்டார் கிஸ்டீரியா.

கிஸ்டீரியாவிற்கு பதில் சொல்வதில் இருக்கின்ற நெருக்கடி
என்னவென்றால் சொல்லுகின்ற பதிலை எந்தக் காலத்தில் வைத்துச்
சொல்வது என்பதுதான். முடிந்தவரை பதட்டமில்லாது கதை நடந்த
அன்றைய காலத்தில் வைத்தே இந்தக் கேள்விகளுக்கு பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.

“சிங்களத்திலே உங்களிடம் அவள் பேசினாளா?”

“இல்லை அவள் யாருடனும் எதுவும் பேசவேயில்லை.”

இந்தக் கேள்விகளினூடு “கே.எம்.அவர்கள்” ஒவ்வொரு தடவையும்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டேயிருந்தார். கிஸ்டீரியாவைக் கதை
சொல்ல விடுவதிலும் பார்க்க கேள்விகளால் தனக்குத்
தேவையானவற்றை எடுத்துக் கொள்வது கே.எம். அவர்களுக்கு
இலகுவாக இருந்தது.

“அப்போ எப்படி அவள் சிங்களத்தி என்று உங்களுக்குத் தெரியும்?”

“அப்ப எண்பது எண்பத்திரண்டில சிங்களத்திகளே அங்கு தேங்காய்
விற்பதற்காக லொறியில் வருவார்கள். அப்பிடித்தான் அவள் லொறியில்
தேங்காய் விற்பவளாக வந்தவள்.”

“தேங்காய் வாங்கியவர்கள் யாரிடமாவது அவள் சிங்களத்தில்
பேசினாளா?”

“இல்லை. ஆரம்பத்தில் பேசினாளாம். பின்பு எதுவுமே பேசவில்லையாம்.”
“அதுதான் ஏன்?”

“அவள் ஊமை மாதிரி நடித்தாள்.”

“அதை எப்படி நீங்கள் கண்டு பிடித்தீர்கள்?”

“அவள் இவ்வளவு அடிக்குப் பிறகும் வாய்திறக்கவில்லை.”

“எத்தனை நாட்களாகக் கட்டி வைத்திருந்தீர்கள்?”

“தொடர்ந்து மூன்று நாட்கள்.”

“அந்த மூன்று நாட்களும் உங்களுடன் எதுவும் பேசவில்லையா?”
“இல்லை.”

“என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்?”

“றோஸ்பாணும் பிளேன்ரீயும்.”

‘ம்... அதனை விரும்பிச் சாப்பிட்டாளா?”

“இல்லை. அவள் சாப்பிட மறுத்தாள்.”

“நீங்கள் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லையா?”

“கட்டாயப்படுத்தினோம். அடித்தும் பார்த்தோம். அவள் சாப்பிடவில்லை.”

“ம்...”

“நீங்கள் சொல்வது எதாவது ஒன்றேனும் அவளுக்கு விளங்கியிருந்ததா?”

“தெரியாது.”

“அதனை நீங்கள் அறிய ஏன் முற்படவில்லை?”

“சிங்களம் தெரிந்த ஒரு தோழரைக் கூட்டிவந்து பேசவைத்தோம்.”

“நீங்கள் கூட்டி வந்த தோழருக்கு நன்றாகச் சிங்களம் தெரிந்திருந்தது
என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அவர் நிக்கரவட்டியாத் தாக்குதலுக்குப் போய்வந்தவர். அவருக்கு
நன்றாகச் சிங்களம் பேசத்தெரியும்.”

“அவள் அவருடனாவது பேசினாளா?”

“இல்லை. அவரை அவள் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் களைத்துப்
போயிருந்தாள் என்று நினைக்கிறேன். அப்போ கண்களைத்
திறக்கமுடியாமல் இருந்தாள். இரத்தம் காய்ந்து அவளது கண்களை
ஒட்டவைத்திருந்தது.”

“அவர் பேசியதை அவள் விளங்கிக் கொண்டாளா?”

“தெரியாது.”

“அவள் காது கேட்கக் கூடியவளா?”

“தெரியாது.”

“உங்கள் தோழர் வந்து போனதையாவது அவள் உணர்ந்து கொண்டாளா?”

“தெரியாது.”

கே.எம். தனது இரண்டு சொண்டையும் உள்ளுக்குள் இறுக்கி மடித்துக்
கொண்டு தலையை பக்கம்பக்கமாக ஆட்டினார்.  கே.எம்.அவர்கள்.
தன்னுடைய பதில்களில் திருப்தியடையவில்லைப் போலிருந்தது
என்பதனை அந்தத் தலையாட்டு கிஸ்டீரியாவிற்கு உணர்த்தியது.

“நான் என்ன செய்யமுடியும் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
அவ்வளவுதான். நானே அவளைக் கட்டி வைத்திருந்த கொட்டிலுக்குக்
கடைசி நாள்தான் போனேன். அப்போதே அவள் அரை மயக்கத்தில்
இருந்தாள். நான் போனபோது அவளைப் பிடித்து மூன்று
நாட்களாகியிருந்தன”
என்றார் கிஸ்டீரியா.

கே.எம்மின் தலையாட்டு அவருக்கு ஒரு அரியண்ட எரிச்சலைக்
கொடுத்தது. அதனால்தான் அந்தச் சம்பவத்தின் விளக்கவுரையை
மேலும் தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

“அதுநாள்வரை அவள் பேசினாளா? அல்லது உண்மையிலேயே ஊமையா
என்று எனக்குத் தெரியாது. அவளைப்பிடித்தது ஒருத்தன். இந்தக்
கொட்டில்வளவிற்குள் கொண்டு வந்தது வேறு ஒருத்தன்.அதுவரை
சாப்பாடு தண்ணி கொடுத்தான்களா என்றே எனக்குத் தெரியாது.”  என்று
அவரை நிமிந்து பார்க்காமலேயே தொடந்து சொல்லிக்
கொண்டிருந்தார்.

மூன்று நாலுபேர் சொல்ல வேண்டிய பதிலைத் தனியொருவனாகத்
தான் மட்டும் இப்ப முப்பத்தியொரு வருடம் கழித்து சொல்லிக்
கொண்டிருப்பது மிகுந்த கவலையளித்தது. இந்தச் சம்பவத்தின்
நாலிலொருபகுதியைத்தான் தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
என்பதுவோ இது ஒரு முழுமையற்ற பதிவு என்பதனையோ கே.எம்.
அவர்கள் விளங்கிக் கொள்ளப் போவதேயில்லை.

அந்தக் கொட்டில்வளவு நடுக்காட்டிற்குள் இருப்பதுபோல் தோன்றியது.
சுற்றிவர முள்ளுப்பத்தைகள். வளவின் வேலிக்கு அடையாளமாக
வெட்டிய பற்றைகளைக் கொண்டே “அக்கிள்” போட்டிருந்தார்கள்.
வைபோசாகப் பிடித்த காணி என்பது அந்த அக்கிளில் தெரிந்தது.
வளவிற்குள்ளும் முளைத்தால் முளைக்கட்டும் என்று சோளனையும்
கவுப்பியையும் விதைத்திருந்தார்கள். அது அங்கொரு கொஞ்சம்
இங்கொரு கொஞ்சம் என முளைத்திருந்தது. கொட்டில் வரையும் ஒரு
ஒற்றையடிப்பாதை இருந்ததே நடக்க நடக்கத்தான் தெரிந்தது. சுற்றிவர
வீடுகளே இல்லை. அவ்வளவிற்குக் காடுபத்திய வளவு அது. சிறியான்
குரங்குகளின் பாய்சலும் விளையாட்டும் மரக் கிளைகளை உலுப்பிக்
கொண்டிருந்தன. புல்லுக்கும் நோகாமல் அசுமாத்தமும் தெரியாமல்
அசைவேயற்று நடக்கின்ற சிறியான் குரங்குகள் இத்தனை உலுப்பு
உலுப்புவது அன்று என்னமோ அதிசயமாகவே இருந்தது.
கிஸ்டீரியாவுக்கு பழைய ஞாபகங்கள் வந்து போயின.

மூன்று நாட்களாக இரவுக்குளிரைப் போக்க விறகு கட்டையைக்
கொட்டிலுக்குள்ளேயே எரித்திருந்தார்கள். நெருப்பிற்குமுன்னால்
நிலத்தில் முழங்கால்கள் முட்டும் படி அவளது கைகளைக் கட்டித்
தொங்கவிட்டிருந்தார்கள். மூன்று நாட்களாக எரித்த சாம்பல் அவளின்
கால்களின் கீழேதான் பரவிக் கிடந்தது. சற்று நிமிடம் நிதானித்து
பழைய கதையை யோசித்துக் கொண்டிருந்த கிஸ்டீரியா மீண்டும்
பேசத் தொடங்கினார்.

“ஒருகட்டத்தில் இனி உவள வச்சிருந்து நாம மினக்கடமுடியா… என்று
சொன்னான் தளையன். தளையன் சொல்வதை நாங்கள் யாரும் அங்கே
மறுப்பதற்கில்லை. ஜேர்மனிலிருந்து திரும்பிவந்து இந்திய றெயினிங்
முடித்து வந்தவன் அவன். அதனால் எங்கள் எல்லோருக்கும் அவன்
மீது மிகுந்த மரியாதை இருந்தது. தளையன் சரியான கறுப்பு
என்றாலும் ஜேர்மனில் இருந்து திரும்பி வந்ததால் அவனை நாங்கள்
ஒரு வெள்ளைக்காரனைப் போலவே அனுசரித்தோம்.” என்றார்
கிஸ்டீரியா.

ஆனால் இவ்வளவையும் கேட்ட கே.எம். எவ்வித பதட்டமும்
அவசரமும் இல்லாது

“நீங்கள் அவளை வைத்திருந்த காலங்களில் என்ன தகவலைப்
பெற்றீர்கள்?”
என்று கேட்டார்.

கிஸ்டீரியாவிடம் அதற்கு ஒரு பதிலும் இல்லை என்பதும் கே.எம்.இற்குத்
தெரிந்திருந்தது. அதனால்தான் உடனேயே தன்னைச் சுதாகரித்தபடி

“சரி...என்ன தகவலைப் பெற்றுவிடலாம் என்று எண்ணி நீங்கள் அவளைக்
கடத்தினீர்கள்”
எனக் கேட்டார்.

அவளை நாங்கள் கடத்தியதற்கும் இன்று தான் கே.எம்முடன்
கதைத்துக்கொண்டிருப்பதற்கும் முப்பத்தியொரு ஆண்டுகள்
இடைவெளியிருந்தது. இதையே இருபது ஆண்டுகளுக்கு முன்
கேட்டிருந்தால் ஒருபதிலும் போன ஆண்டு கேட்டிருந்தால் வேறு
ஒருபதிலும் சொல்லியிருக்கவேண்டிய கேள்விக்கு நான் என்ன பதிலை
இப்போது சொல்ல? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் “கே.எம். அவர்கள்” ஒவ்வொரு கேள்விகளுக்கூடாகவும் ஒரு
அடிமட்டத்தை வைத்து அளந்து தன்னைக் கோணர் பண்ணுவதை
கிஸ்டீரியா உணர்ந்து கொண்டேயிருந்தார்.
ஆனால் கேள்வி கேட்கப்படும் போது அந்த ஒரு கேள்வி முப்பத்தியொரு
பதில்களால் நிரப்பப்படக்கூடியவை என்பதை தனது ஆசானான கே.எம்.
மிற்கு எப்படித் தெரியாதிருந்தது என்பதுதான் அவருக்கு மிகுந்த
கவலையளித்தது.

“கே.எம். அவர்கள்” அவரையொரு விசாரணைக் கைதியை
விசாரிப்பதுபோல் விசாரித்துக் கொண்டிருந்தார். இப்போது
கிஸ்டீரியாவின் கால்களின் கீழே சாம்பல் கொட்டியிருக்கவில்லை.
கார்ப்பெட் போட்ட தரையில் அவர் இருந்தார். “கே.எம்.அவர்கள்”
கொஞ்சம் உயரத்தில் சோபாவில் இருந்தார். விசாரணைதான்
அப்பொழுதும் இப்பொழுதும் ஓரே வடிவமாய் இருந்தது.

பதிலேயற்ற கேள்விகளால் தொடரப்படும் விசாரணைகளால் எதையும்
விசாரணையாளர் புதிதாக அறிந்து கொள்ளப் போவதில்லை.
விசாரணையாளரால் எடுக்கப்பட்ட முடிவில் இருந்து எழுப்பப்படும்
ஒரு கேள்விக்குக் கூட சரியான பதிலைக் எந்தக் கைதியும்
சொல்லிவிடப்போவதேயில்லை.
இன்றைய கேள்விகளை விடவும் மிக மோசமான கேள்விகளால்
அவள் மீதான விசாரணையை அப்போது நாங்கள் மேற்கொண்டோம்.

அந்த மோசமான கேள்விகளில் இருந்தே நாம் எதையும் அப்போது
பெற்று விடவில்லை. என்று நினைத்து கிஸ்டீரியா குனிந்திருந்து
சிரித்தார்.

விசாரணையாளர் தனது செயலுக்கு அதிகமான வீரியத்தைக்
கொடுப்பதற்கு மட்டுமே அவ்வகையான கேள்விகள் உகந்தவையாக
இருக்கும். நாங்கள் அந்தச் சிங்களத்தியிடம் கேட்ட கேள்விகளிலும்
விட மிகப் பலவீனமான கேள்விகளையே கே.எம் இப்போது தன்னிடம்
கேட்டுக் கொண்டிருப்பதாக கிஸ்டீரியா ஒரு பக்கம் நினைத்துச்
சிரித்தார்.

தேவையற்ற பதில்களுக்காக “கே.எம். அவர்கள்” நீண்ட நேரம் காத்துக்
கொண்டிருப்பது கிஸ்டீரியாவுக்கு பெருத்த அயர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே இடத்தில் தொடர்ந்து அசைவற்று இருந்ததினால் அவருக்கு கால்
விறைத்திருக்கவேண்டும். சுவரில் சாய்ந்தபடி இருந்து கொண்டே
காலை நீட்டி மெல்ல உதறினார்.

“அரைமணிநேரம் காலை மடித்திருந்ததுக்கே உமக்குக் கால்
விறைக்கிறதா? மூன்றுநாட்கள் தொடர்ந்து கால்களையும் கைகளையும்
கட்டிவைத்தால் மட்டும் விறைக்காதா?”
என்று கேட்டார் “கே.எம் அவர்கள்.”

கிஸ்டீரியா அதற்கு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. காலை
நீட்டி இடுப்பைச் சுவர்ப்பக்கமாக இழுத்து நிமிர்ந்திருந்து கொண்டு,
“நீங்கள் என்னிடம் மேலதிகமாகக் கேட்கவேண்டியிருக்கும்
கேள்விகளைத் தொடர்ந்து கேளுங்கள் தோழர்”
என நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தபடி சொன்னார்.

கிஸ்டீரியாவின் இந்த வார்த்தையைக் கேட்டு கே.எம். ஒரு செக்கன்
திகைத்துத்தான் போனார். அவரது அந்தத் திகைப்பின் இடையே
சிறிதும் நேரம் விடாது,

“நீங்கள் என்னை மன்னிக்கோணும், உங்களிடம் இருந்து நான்
ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் தோழர்”
எனச் சொல்லி,

“வதைகளை வடிவமைத்தவர்கள் யார் தோழர்?”
என்று மிகவும் பக்குவமாக மரியாதையாக கே.எம் அவர்களைப்
பார்த்துக் கேட்டார் கிஸ்டீரியா.

“வகைவகையான மனித வதைகளை நமக்குக் கற்பித்தவர்கள் யார்?

இதன் தொடக்கம் எங்கிருந்தது என்பதையாவது எனக்குச்
சொல்வீர்களா?”
என்று தயவாகக் கேட்டார்.

கே.எம் தொடர்ந்து மௌவுனமாக இருந்தார். கிஸ்டீரியாவிடம் இருந்து
இந்தச்சிறயளவு கேள்வியைக் கூட அவர் எதிர்கொண்டதில்லை.

“இராணுவ வடிவமைப்பில் இராணுவச் சிந்தனையில் நமது மனமும்
அணுகுமுறைச் செயற்பாடும் உருவாகத் தொடங்கிய போதே
வதைமுறைச் சிந்தனையும் அதனுடன் வெளித்தோன்றி விடுகிற
தல்லவா? அந்த வதைமுறையை நாங்கள் அப்போது புதிதாக
யாரிடமிருந்தும் கற்கவேண்டியிருக்கவில்லை. அது எங்கள்
எல்லோருக்குள்ளும் உள்ளேயே இருந்திருந்தது அல்லவா?”
என்று கேட்டார் கிஸ்டீரியா.

இதனை உற்று அவதானிப்பது போல்.தலையைக்குனிந்து
கேட்டுக்கொண்டிருந்தார் கே.எம். அவர்கள்.

அந்த மௌவுனத்தின் பின்னும் கே.எம் அவர்களிடமிருந்து அதற்குப்
பதில் வரவே வராது என்று தெரியும் கிஸ்டீரியாவிற்கு. அதனால்
அவரே தொடர்ந்து கதையைச் சொல்லத்தயாரானார்..

நாங்கள் அவளை இரவு சுடப் போகிறோம். இனிவைத்திருக்க முடியாது
என்று தளையன் ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். சுடுவதற்கு
கொண்டு செல்வதற்கு முன், தளையன் வெளியில் போய்விட்டான்.
குட்டான் சிவாதாசனும் நானும் தான் தனியே அந்தக்
கொட்டில்வளவில் இருந்தோம். திடீரென அவளின் பாவடையைக்
கிளப்பி,
“டேய் கிஸ்டீரியா இஞ்ச இவளின்ர சாமானைப் பார்” என்று எனக்குக்
காட்டினான் சிவா.
“அதனைப் பார்க்கும் போது எனக்கு என்ன மனநிலை இருந்தது என்று
உங்களால் ஒருபொழுதும் சொல்லிவிடமுடியாது. இண்டைக்கு அது
நடந்து முப்பத்தியொரு வருசம்.”
இதனைச் சொல்லும் பொழுது கிஸ்டீரியாவிற்கு தொண்டை
கரகரத்தது.
“கொஞ்சக்காலத்திற்கு முன் றெஸ்ரோறன்டில இறைச்சி
வெட்டிக்கொண்டிருந்த ஒரு சின்னப்பொடியன் “ ஐயா இஞ்ச வாங்க
எண்டு கூப்பிட்டு, “நீங்களும் இன்னமும் கலியாணம் கட்டேல்ல,
இப்பயே அறுபதத்தாண்டுது உங்களுக்கு, இனியும் கட்டப் போறேல்ல.
இண்டுவரைக்கும் நீங்கள் ஒரு சாமானையும் பாத்திருக்கமாட்டியள்.
பொம்புளையளின்ர சாமான் எப்படியிருக்குமெண்டு தெரியுமா?”

என்று சொல்லிப்போட்டு மேசையில் கிடந்த மாட்டிறச்சியில ஓங்கி
கத்தியால ஒரு கொத்துக் கொத்தி அந்தக் கத்தி நுனியாலேயே
கொத்திய இறைச்சியின் பிளவை விரித்துக்காட்டினான்”

“இப்படித்தான்”. ஐயா, சரியா இப்புடித்தான் ஐயா அந்தச் சாமான்
இருக்கும்” வேணுமெண்டா இதப்பாத்து இண்டைக்கு ஒருக்கால்
“கையில அடியுங்கோ” எண்டான்.

“என்ர கண்ணுக்கு அப்படியே குட்டான் சிவதாசனப்பார்த்தமாதிரியே
இருந்தான் அவன்.”

கே.எம். அவர்களிடம் ஒரு அசுமாத்தமும் தெரியவில்லை.

“தளையன் “பிக்-அப்” ட்றக்கை எடுத்துவரப் போயிருந்தான். அப்போது
இரவு 1 மணியைத் தாண்டியிருந்தது. அவளின் கையில் கட்டியிருந்த
கயிற்றை கத்தியால் அறுத்தான் சிவா. அவள் குப்புற சாம்பலுக்குள்
விழுந்தாள். அவளது கைகளும் கால்களும் செயலிழந்து போனவை
போல் பலமிழந்து கிடந்தன. மூச்சு வந்து போய்க்கொண்டு இருந்ததைப்
பார்த்தே உயிருடன் இருப்பது தெரிந்தது. வெளியில் மழை மெதுவாகப்
பெய்யத் தொடங்கியிருந்தது. திரும்பி வந்த தளையன் மிகுந்த
ரென்சனில் இருந்தான். இந்த மழைக்கு விறகுகட்டைகள் நனைந்து
போய் இருக்கும் என்று சிவா என்னிடம் காதுக்குள் மெதுவாகவே
சொன்னான்.”
என்றார்.

“நானும் சிவாவும் அவளை பின் பெட்டிக்குள் ஏற்ற தளையன்
வாகனத்தை மிக வேகமாக எடுத்தான். சில்லுகள் நான்கும்
சுற்றியடித்துப் புறப்பட்டது. நாங்கள் பற்றிப்பிடிக்க வாகனத்தில் எதுவும்
இருக்கவில்லை. கால்களை நீட்டி பெட்டியில் அமத்திக்கொண்டு
முதுகை மறுமுனையில் பின்னால் சாய்த்து இறுக்கிக் கொண்டேன்.

சிவாவின் இரண்டு கைகளும் அவளது முலையை இறுக்கிப்பிடித்தபடி
இருந்ததன. அவளின் தலைமாட்டில் அவன் இருந்தபடியால் அது
அவனுக்கு வசதியாக இருந்திருக்க வேண்டும்”
என்றார்.

கே.எம் அவர்கள் இப்போது கதையைக் கேட்கின்ற பொறுமையை
இழந்திருந்தார் என்பதை உணர்ந்தாலும் இன்றோடு இந்த
அரியண்டத்தை முடித்துவிட விரும்பினார் கிஸ்டீரியா. அதனால்தான்
கதையை வேண்டுமென்றே மிகவும் இறுக்கமாகவும் செறிவாகவும்
சொல்லிக் கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கேட்பதற்குப் பொறுமையிழந்த கே.எம். அவர்கள்.
“இதற்குள் நீர் தொடர்ந்து உம்மை மட்டும் புனிதனாக்கிக் கொண்டே
வருகிறீர். நீர் செய்த ஊத்தைச் செயல்களையும் சொல்லும். நீர்
ஒண்டும் தெரியாத சூசைப்பிள்ளையில்லைத்தானே.”
என்று கிண்டலடித்தார்.

“இந்தச் சம்பவத்தைப் பொறுத்தளவில் சம்பந்தப்பட்ட மிக
முக்கியமானவர்களில் குட்டான் சிவதாசனும் தளையனும் இன்று
உயிரோடு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் தோழர்.
விரும்பியோ விரும்பாமலோ சம்பவம் குறித்த நபர்களை மாற்றி
மாற்றித்தான் நான் கதையே சொல்ல வேண்டியிருக்கிறது. இப்ப என்ன
எல்லாவற்றையும் நான்தான் முன்னின்று செய்தேன் என்று சொல்லி
குற்றத்தை முழுவதுமாக என்தலையில் புதைத்துவிட்டு உங்களிடம்
இருந்து என்னால் விலகிச் சென்று விடமுடியும். அப்படி நான்
செய்யப்போவதில்லை. உண்மையில் இந்தக் கொலைக்கு நாங்கள்
மூவர் மட்டுமா காரணமாக இருக்க முடியும்.? இல்லைத்தானே…”

என்று சொல்லி முடிப்பதற்குள் இருக்கையை விட்டு எழுந்தார் கே.எம்.
அவர்கள்.

“அந்த நேரத்தில் நமது சமூகத்தின் பலத்த ஆதரவுடன்தானே மிக
அதிகமான கொலைகள் நடந்தேறின. கொலைகள் மக்கள்
மயப்பட்டிருந்தன என்பதனை நீங்கள் ஒருபோதும் மறுக்கமுடியாது”
என்று கிஸ்டீரியா சொன்னார்.

“நீங்கள் செய்த லூசுத் தனத்திற்கும் முட்டாள்தனமான செயலுக்கும்
இப்ப வந்து எனக்கென்ன விஞ்ஞான விளக்கம் தருகிறீரா நீர்?”
என்று எகிறினார் கே.எம்.

“நீங்கள் கதையை முழுவதுமாகக் கேட்பதற்குப் பின்நிற்கிறீர்கள்.
உங்களைப் போன்றவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் முடிவுகளுக்காக
எமது கதைகளை உருமாற்றமுடியாது தோழர். இந்தக் கதை நடந்த
காலத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தீர்கள். அந்தக் காலத்தை
உங்களால் ஒருபோதும் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது.”

“அந்தக் காலத்தின் சாமமெங்கும் தொண்டைத் தண்ணி வற்றிப்
பேகுமளவுக்கு எப்பொழுதும் எம்கண்முன்னே நிழல்களே ஊசலாடிக்
கொண்டிருந்தன. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும் நாங்கள்
யாரையெல்லாம் மன்றாடினோம் என்பதனை இப்போது சொல்ல
முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.
உங்களால் ஒருபோதும் அதனைக் கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாது.
முப்பத்தியொருவருசத்துக்குப்பிறகு வந்திருந்து இப்ப கேள்வி மட்டுமே
உங்களால் கேட்கமுடியும். அதற்குரிய பதில்கள் உங்களுக்கு உகந்ததாக
இல்லாதிருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்”
என்றார் கிஸ்டீரியா.

கே.எம் அவர்கள் அருகிருந்த ஜன்னல் கரையோரம் நின்றபடி
தெருவைப்பார்த்துக் கொண்டிருந்தார். சனப்பழக்கம் குறைவான தெரு
அது. அங்கே தொடர்ந்து பார்ப்பதற்கு எதுவுமேயில்லை என்றாலும்
அவர் தலையை அசையாது பார்த்துக்கொண்டேயிருந்தார்.

அவருக்கு கிஸ்டீரியாவை நேரெதிர் பார்ப்பதற்கு இயலாமல் இருந்தது. சில
மணித்துளிகள் கழித்து கிஸ்டீரியா கதையைச் சொல்லத்
தொடங்கினார்.

“தளையன் அனிச்சயங்குளச் சுடலையையும் தாண்டி நீண்ட தூரம்
காட்டிற்குள் சென்று. “பிக்-அப் ட்றக்”ஐ நிறுத்திவிட்டு எங்களையும்
இறங்கும்படி சொன்னான். கையிலும் காலிலுமாகப்பிடித்து அவளை
நாங்கள் கீழே இறக்கினோம். அவளின் இறுதி முடிவு குறித்து நாம்
எங்களுக்குள் எதையும் பேசிக் கொண்டதேயில்லை. தளையனும்
எங்களிடம் கேட்டதுமில்லை. வார்த்தைகளுக்கு அங்கே
அவசியமேயிருக்கவில்லை. சிதறிக்கிடக்கும் வீரைக்கட்டைகளையும்
பாலைக்கட்டைகளையும் குவித்தோம். மேலிருந்த கட்டைகளில் மட்டு
மெல்ல ஈரம் ஊறியிருந்தன.”
என்றார்.

மனம் பதைக்கும் முகத் தொனி தெரிய கே.எம். அவர்கள் திரும்ப
வந்து தனது இருக்கையில் இருந்தார். இருந்த இருப்பும் சாயலும், இது
குறித்து கேள்விகள் எதையும் தான் இனிக் கேட்கப் போவதில்லை
என்பதை உணர்த்தியது.

“ஈரம் படர்ந்திருந்த புல் நிலத்தில் அவளை இருத்தியிருந்தோம்.
நிமிரிந்திருக்க முடியாதவளாய் சரிந்து நிலத்தில் விழுந்தாள்.
அதற்குள்ளாக கொஞ்சம் தள்ளி இருட்டில் நின்ற வேட்டைக்கார
முத்துமாணிக்கத்தை தளையன் கூட்டிவந்திருந்தான். அவருக்கு காது
சரிவரக் கேட்காது. எல்லாவற்றையும் நாம் கைப்பாசையால் தான்
அசைத்துக் காட்ட வேண்டும். ஆனால் அந்த நேரம் தனது
கட்டுத்துவக்குடன் அவர் தயாராக நின்ற நிலை தளையன் அவருக்கு
 ஏற்கனவே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதனை எமக்கு
உணர்த்தியது.

கையை உயர்த்தி எங்ளைப் போய் வானில் ஏறும்படி சைகை செய்தார்
அவர். எங்களுக்கு வானில் ஏறியிருக்க மனமிருக்கவில்லை. மீண்டும்
ஒருமுறை உள்ளுக்க ஏறுங்கோ என்று கையால் காட்டினார்.

“டேய்… கட்டுத்துவக்கு பக்கத்தால பிரிஞ்சால் நீங்களும்
போயிருவியளடா. உள்ளுக்க ஏறி இருங்கோடா”
என்று கத்தினான் தளையன். ஏறி மூன்று செக்கனில் முதல் வெடி
தீர்ந்தது.

தனது மனக் கட்டுப்பாட்டையும் குலைத்துக்கொண்ட கே.எம். இப்ப
அந்த வேட்டைக்கார முத்துமாணிக்கம் எங்க இருக்கிறார் என்று
தெரியுமா என ஒரு கேள்வியை மீண்டும் கேட்டார்.

“இப்ப இரண்டாயிரத்து எட்டில கருணாரத்தினம் அடிகளார் கிளைமோர்
தாக்குதல்ல செத்தார் தெரியுமா? சரியா அதே இடத்தில அப்ப
இந்தியன் ஆமிக்கு கிளைமோர் வைக்கிறதுக்காகக் கூட்டிக்கொண்டு
போனவங்கள். இவருக்கு காது கேட்காதுதானே மாறி ஏதோ விளங்கி
ஆமி வரமுதலே அமத்திப் போட்டார்."

"வேணுமெண்டுதான் அவரச்சாகடிச்சிட்டாங்கள் என்று சனம் சொல்லுது. உண்மையா நடந்தது
என்னவென்று தெரியாது. ஆனால் அதில் அவர் செத்துப் போனார்”
என்றார் கிஸ்டீரியா.

“அப்ப, அவரும் செத்துட்டாரா… சரி.”

நன்றி புதியசொல்

******************
Tuesday, 19 May 2015
மூலம்: மூலவர்ணம்: வாக்குமூலம்.

http://matrathu.blogspot.in/2015/05/blog-post_19.html

கதை.

கற்சுறா

மூலம்.

செங்கமலம் இன்று வீட்டிற்கு வருகிறான்.
மிக நீண்ட நாட்களான காத்திருப்பு அது.
இருபத்தியெட்டு வருசத்துப் பகைக்குப் பின் அவனை நேரில் பார்க்கப்போகிறேன்.
அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல் என்னவாக இருக்கும்? அப்பொழுது எனக்குச் சரியாக பதினேழு வயது. அவனுக்கும் இருபதைத் தாண்டியிராத வயது. இப்ப எப்படி இருக்கிறானோ எனத் தெரியாது. இப்ப எனக்கு
முன்மண்டையில் வழக்கை விழுந்து எனது முழு அடையாளமும் மாறிவிட்டிருக்கிறது. அவனும் கிழவனாகியிருக்கலாம்.

அவனை வேலை முடிய வந்து கூட்டிவருவதாகச் சொல்லியிருந்தேன். அவனை அவனது வேலையிடத்தில் போய்க் கூட்டிவரவேண்டும். அவனுக்கும் வேலை முடிய எப்படியும் ஏழுமணியாகும். அவன் ஒரு தமிழ்க்கடையில் வேலை செய்கிறான். தமிழ்க்கடை என்று சொன்னதும் ஏதோ ரொரண்டோவில் அதுமட்டுந்தான் தமிழ்ககடை என்று நினைக்கக்கூடாது. ரொரண்டோவில் அது ஒரு வித்தியாசமான சாப்பாட்டுக்கடை. கனடாவுக்கு புதுசா வாறவர்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு மட்டும் அவர்கள் உடனே வேலை கொடுப்பார்கள். கனடாவுக்கு வந்தவுடன் வேலை கிடைக்கக் கூடிய ஒரே இடமாயும்  தமிழர்களுக்குரிய  சட்டதிட்டங்களோடு இருப்பதும் அந்தக்கடைதான். அதற்காகத்தான் அதனை நாம் பாசத்தோடு தமிழ்க் கடை என்போம். எடுக்கிற வெல்பயரைக் கழித்துக் கொண்டுதான் சம்பளக் கணக்குப் பார்ப்பார்கள். அதிலும் கொடுக்கிற சாப்பாடு பிடிக்கிற சீட்டு கிழமைக்குக் கிழமை வெட்டுற லொத்தர் வாகனத்தில் ஏற்றி இறக்கிறது என்று மொத்தச் செலவும் வெட்டி மிச்சக்காசை வேண்டி எடுப்பதற்கு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். இதை விட சிறிலங்கா ஜெயிலில  இருக்கேக்க வேலை செய்து தான் கூடக்காசு உழைத்ததாக ஒருமுறை இன்னொரு நண்பன் சொல்லியிருந்தான்.

நான் ஏழுமணிக்கு தமிழ்க் கடையடிக்குப் போய்விட்டேன்.  சமோசாவுக்கும் இடியப்பத்திற்காகவும் சனம் அடிபட்டு இடிபட்டுக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் எனப் போய்வருகிறார்கள். ஒரு டொலருக்கு 10 சமோசாவும் 4டொலர் 50 சதத்திற்கு 50 இடியப்பமும் சம்பலும் வைத்து  சொதி இலவசமாவும் கொடுக்கிறார்கள். அந்த இலவசச் சொதிக்குத்தான் இவ்வளவு அடிபாடு.  லைன்ல நின்ற சனத்தை விலத்திக் கொண்டு செங்கமலம்; ஓடிவந்தான் வெளியே ஓடிவந்த செங்கமலத்தை இழுத்துப்பிடித்து அண்ணை இடியப்பம் முடியேல்லத்தானே என ஒருவர்  கேட்டுவைத்தார். இல்லயப்பா... எனக் கத்திவிட்டு ஓடிவந்து காரில் ஏறினாhன். ஆள் நல்லாக் காய்ந்து மெலிந்து போயிருந்தான். இருபத்தியெட்டு வருசத்துக்கு முன் பார்த்த செங்கமலமல்ல அவன். சரியான சின்னவனாகியிருந்தான்.

என்ன எப்படித் தமிழ்க்கடை வேலை என்று பேச்சைத் தொடங்கினேன்.

கனடாவுக்கு வந்து இந்தக் கடையின்ர பெயரைப் பார்த்தவுடன் நான் திகைச்சுப் போனன். கனடாவில ஒரு கடைக்குத் தமிழில மாவீரன் எண்டு பெயரும் வைச்சு கடையின்ர பெயருக்கு முன் மாண்டவீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக்கடலில் மாவீரம் குளிக்கும் என்று போடுறதுக்கு ஒரு தவம் வேண்டும். வேலை செய்தால் இஞ்சதான் வேலை செய்யிறது என நினைச்சுப் போய்ச் சேர்ந்தனான். இப்ப இஞ்ச இருந்து எப்படித் தப்புறது என்று தெரியாமல் கிடக்கு என்றான் செங்கமலம்.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பையும் களுத்துதுறை ஜெயில் சமரையும் பார்த்த எங்கட பெடியளுக்கு ரொரன்ரோ மாவீரன்ர தமிழ்க்கடையை உடைச்சு வெளியேறமுடியாமல் இருக்கிறது புதினம்தான்.   உடைத்துக்கொண்டு வெளியேறேலாம சீட்டாலையும் வட்டியாலையும் சுற்றி சென்றியை வளைச்சுப் போட்டிருக்கிறார் வீரத்தமிழ்மகன் என்றான்.

வீட்டு வாசலைத் திறக்கவே இன்று யாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று ஜெபா எட்டிப்பார்த்தாள். ஜெபாவுக்கு செங்கமலத்தைக் கண்டதும் திகைப்பு வந்தவிட்டது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. செங்கமலம் பாவம் என்பது அவளுக்கும் தெரியும்.

செங்கமலத்திற்கு என்னைப் பிடிக்காது. என்னை எந்த ஒரு சந்தர்ப்பத்திலையும் அவன் நம்ப மாட்டான். நானும் அவனை நம்பத்தயாரில்லை. மற்றவனை எப்பவும் சந்தேகித்துக் கொண்டே இருக்கும் மனம் எனக்கு. அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறனான். அதிக நேரம் திரும்பிப் பார்க்காமல் இருந்தால் ஒரு துப்பாக்கி எனது தலைக்குப் பின்னுக்கு குறிபார்த்துக் கொண்டிருப்பதாகவே யோசிக்கத் தோன்றும். பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பயத்தில கொஞ்சப் பயம் கூடப்பயம் எண்டு ஒன்று இல்லைத்தானே பயம் பயம் தான். அதால செங்கமலம் என்னட்ட எவ்வளவு நெருங்கினாலும் என்னால முடியுதில்லை. எல்லாத்தையும் தாண்டி ஒன்றே ஒன்று, அவனுக்குத் தெரிஞ்சதென்றோ அல்லது சொந்தக்காரங்கள் என்றோ இங்கு யாருமில்லை. அவன் பாவம்.

செங்கமலம் அப்ப எங்கட ஏரியாப் பொறுப்பாளர். ஒரு ஹொண்டா 200 மோட்டசைக்கிள்ள திரிஞ்சு ஏரியா வேலை செய்தவன். ஊருக்கு ஹொண்டாவை முதலில கொண்டு வந்தவன் இவன்தான். அதுவரைக்கும் சீ90 தான் ஆகப்பெரிய மோட்டசைக்கிள். அப்ப எங்கட ஊரில செங்கமலத்தோடு சேர்த்து மொத்தம் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள் இருந்தவை. மற்றவர்கள் எல்லாரிட்டையும் சைக்கிளும் சீ90யும் இருக்கேக்க இவனிட்ட மட்டும் தான் ஹொண்டா 200 இருந்தது.

சரியா கணக்குப் பண்ணிப் பார்த்தால் அந்த நேரம் எங்கட ஊரில் 4 முழுக் காம்ப். 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். 11ஒவ்பீஸ் என்று ஊரே இயக்கமயப்பட்டுப் போயிருந்தது. பெரிய இயக்கத்திற்கு மட்டும்தான் காம்பும் ஒவ்பீசும் இருந்தது. மற்றயவற்றிற்கு எல்லாம் தனிய ஒவ்பீஸ் மட்டும்தான்.

அந்தக்காலத்தில் மாங்குளத்துக்காம்பில இருந்தும் பூனகரிக்காம்பில இருந்தும் அல்லது தள்ளாடிக் காம்பில இருந்தும் ஆமிக்காரன் செல்லடித்தாலும் எங்கட ஊருக்கு செல் வராது.  ஒரு காட்டு ஊர். இதுக்குத்தான் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். இயக்கத்தை வளக்கிறதுக்கு ஊர் ஊரா வேலை செய்ய வேண்டும் தானே. ஆனால் ஏரியாப் பொறுப்பாளர்களுக்கும் அவர்களின்ர சென்றிப் பொயின்றுக்களுக்கும் இருந்த முக்கிய வேலையே ஊரில இருக்கிற மற்ற இயக்கங்களை வேவு பார்க்கிறதுதான்.

ஒருத்தன்ர காம்புக்கு முன்னால மற்ற இயக்கம் போக முடியாது. போனோலே  ஒன்றையொன்று தீப்பற்றும் நிலை. நினைத்தாலே இப்பபோது சிரிப்பு வருகிறது. அக்கினி நட்சத்திரத்தில வருகின்ற பிரபுவும் கார்த்திக்கும் வாயுக்குள்ள தேவடியாப் பய என்று திட்டுற மாதிரி திட்டிக்கொண்டு ஒண்டையொண்டு விலத்திச் செல்லுவார்கள். ஏதோ இது எல்லாத்தையும்  நாளைக்கு மலரப்போற தமிழீழத்திற்கு என்று சொல்லிவிட்டு ஊர்மக்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

செங்கமலம் இயக்கத்திற்கு ஏரியாவேலை செய்ய வந்த நாளில இருந்து  அவன் ஒவ்பிசில பெரிசா இருக்கிறதில்லை. எல்லோரும் ஊர்மனைக்குள் ஒவ்பீஸ் வைச்சிருக்கும்போது செங்கமலத்தின்ர இயக்கம் மட்டும் ஒரு காட்டுரோட்டில தமது ஒவ்பீசை வைத்திருந்தது. அது ஒரு ஒவ்பீஸ் மாதிரியே இருக்கிறதில்லை. எப்பவும் அச்சம் தருகிற அளவுக்கு இருட்டடிச்சமாதிரி இருக்கும். அங்கு எப்பவாவது யாரையாவது விசாரணை என விசாரிக்கக் கூட்டிக் கொண்டு போனால்தான் செங்கமலமே போவான். மற்றப்படி ராசாத்தியக்கா வீட்டிலதான் படுகிடை. வைப்புச்செப்பெல்லாம் அவனுக்கு அங்குதான். அது இயக்கத்திற்கும் ஒரு பெரிய பிரச்சனையாய் ஒருபோதும் இருககவில்லை.

ஏனென்றால் ராசாத்தியக்காவுக்கும் பாலசிங்கண்ணையிற்கும் இயக்கமெண்டால் போதும். தமிழீழத்திற்கு தாம் செய்யுற தொண்டு அதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள்.. பாலசிங்கண்ணையும் வீட்டில பெரிதாக நிக்கிறதில்லை. இயக்கத்திற்கு லொறி ஓடுறவர். றெயினிங் எடுக்கவில்லை என்பதுதானேயொழிய மற்றப்படி இயக்கத்திற்குரிய எல்லா உரிமையும் கொண்டவர். பொடியள் சிலருக்கு ராசாத்தியக்கா வீடும் இயக்கத்தின்ர காம்ப் மாதிரித்தான். சாப்பாடு சமையல் குளிப்பு முழுக்கு எல்லாம் அங்குதான். ஆனால் மற்ற இயக்கமெல்லாம் “செங்கமலம் சிரிக்குது ராசாத்திய நினைக்குது” என்றும் “ராசாத்தி நினைப்பில செங்கமலம் நினைப்புத்தான்” என்றும்  பாட்டுப்பாடிக்கொண்டு திரிந்தார்கள்.

ஒருமுறை என்னை வேவு பார்த்த ஒரு நாய் நான் இந்தப் பாட்டுகளப் பாடினதைக் கேட்டு செங்கமலத்திற்குச் சொல்ல செங்கமலம் என்னை விளக்கத்திற்கு கூட்டிக்கொண்டு போனான். அன்றைக்குத்தான் செங்கமலத்தை பக்கத்தில பார்க்கிறன். ஒரு பற்றிக் சறம். கோடன் சேட்டு இறுகின மூஞ்சி என்று எப்பவும் எட்டத்தில பார்த்த உருவத்தை அனறைக்குத்தான் மிக நெருக்கமாய்ப் பார்க்கிறன். ஊருக்கிள்ள ரெண்டு வருசமாத் திரிஞ்சாலும் என்னோட அவன் ஒரு கதை கதைக்கிறேல்ல. இப்பவும் விளக்கத்திற்கு வரச் சொல்லிட்டான் ஆனால் விளங்கயில்ல.

கையை நீட்டி அறைந்தால் கைவிரல் பதியும் தூரம் தான் எனக்கும் அவனுக்கும். நான் எதுவும் பேசவில்லை.  அப்பவும் ஒன்றரை மணித்தியால விளக்கம். ஆனால் ஒன்றரை மணித்தியாலத்திற்குள் மூன்றே மூன்று கேள்விகள் தான் செங்கமலம் என்னைக் கேட்டான். “உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்.?” “உன்ர கொப்பற்ற மரியாதையை ஏன் கெடுக்கிறாய்.?” “ஏன் அவங்களுக்குப் பின்னால திரியிறாய்?” என்று விட்டுவிட்டு அரை மணித்தியாலத்திற்கு ஒரு கேள்வியாய் மூன்று கேள்விகளையும் கேட்டான்.

ஆனால் ஒன்றுக்கும் பதில் எதிர்பார்க்கவில்லை. அப்பாவித்தனமாக என்னைப் போ என்று சொல்லி விட்டுவிட்டான். ஏன் பாட்டுப் பாடினனீ என்றோ அல்லது ராசாத்தி அக்கா பற்றியோ அவன் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு செங்கமலத்தை நான் அன்றுவரைக்கும் பார்த்ததே இல்லை. ராசாத்தி அக்காவுக்கும் செங்கமலத்திற்கும் உறவு இருந்ததோ என்று இன்று வரைக்கும் நான் யோசிக்கிறனான்.

கொஞ்சக்காலத்தில செங்கமலத்தின்ர இயக்கம் தடை செய்யப்பட்டு ஆயுதம் எல்லாம் புடுங்கி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு செங்கமலம் மட்டும் ஓடுறதுக்கு வழியில்லாமல் இருந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்த சைக்கிள் பார்க்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அந்த வேலையால் ஒரு நேரச் சாப்பாட்டுக் காசு கூட அவனுக்கு வராது. ஆனால் தான் ஒரு அப்பாவி, நேர்மையான மனிசன் எண்டு காட்டுறதுக்கும் உயிரோட இருக்கிறதற்கும் தான் அந்த வேலை உதவியது. ஆனாலும் எப்பவும் செங்கமலத்தில ஒரு கண் வைச்சுக் கொண்டுதானிருந்தனாங்கள்.

அந்த நேரத்தில் வத்தளையில இருந்து இடம்பெயர்ந்து வந்த பெட்டை ஒன்றைக் கூட்டிக்கொண்டு செங்கமலம் ஓடிற்றான். அதுக்குப் பிறகு நான் செங்கமலத்தை இங்குதான் சந்திக்கிறன்.

இப்ப செங்கமலமும் நானும் அரைப் போத்தல் பக்காடியை முடித்திருந்தோம்.

மவுனம் பேச்சு மவுனம் என்று நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் செங்கமலத்தின்அருகில் மூன்றாவது தடவையாக இன்று இருந்தேன்.

ஒன்றரை வருசத்திற்கு முதல் சன்சீ கப்பலில வன்கூவரில வந்திறங்கினவன். மனிசி செத்துப்போய்விட்டது. தான்தான் புதைத்துவிட்டு வந்தவனாம். பெடியனும் சின்னவயசிலேயே இயக்கத்தில சேர்ந்திட்டான்.

மகனோ இப்ப இவன கொஞ்சமும்; மதிக்கிறேல்ல. இரண்டாவது மகள். யாழ்ப்பாணத்தில ஒரு வாத்தியார் வீட்டில  விட்டுவிட்டு வந்திருக்கிறான். கந்தர் மடத்தில வீடு.

யூனிவெர்சிற்றியில படிப்பிக்கிற வாத்தியார். மனிசியும் ரீச்சர். அதுகளுக்கு ஒத்தாசையா வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளைப்பற்றித்தான் அவனுக்குக் கவலை. மாறி மாறி அவளப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

படிக்கிற வயசில வேலை செய்யுறாள்.  இப்ப நினைக்கச் சரியான பயமாக் கிடக்கு. நடக்கிறதுகளைக் கேள்விப்படுறதைப் பார்த்தால் வாத்தின்ர வீட்டில விட்டதிலையும் பார்க்க சவுதிக்கு அனுப்பிற்று வந்திருக்கலாம்.

பதின்மூன்று வயது....  தாயில்லாமல்.......

கன நேரமா யோசிச்சுக் கொண்டிருந்தான்.

என்ன மகனோட கிட்டடியில கதைச்சனியோ எண்டு கேட்டன்.

அவன் கற்சிலைமடுவில இருக்கிறான். போன் அடித்து சுகம் விசாரிச்சாலே காசுதான் கேட்கிறான். வந்த காசே நான் இன்னும் குடுத்து முடியேல்ல அதுக்குள்ள கனடாவுக்குப் போய் ரண்டு வருசம் என்ன மயிரைப் புடுங்கிறாய் என்று கேட்கிறான். அவனோட கதைக்கேலாது. வயசுக்கு மீறின கதை என்றான்.

சின்னவயசிலேயே கொலை செய்து பழகினவங்கள். வாழ்க்கை எண்டால் என்னெண்டு தெரியாது. இப்ப அங்குள்ள பொடியளோடு கதைக்கேலாது.  இப்ப அவன் எடுத்தாலும் நான் எடுக்கிறேல்ல. என்றான்.

பிள்ளையளைக் குறை சொல்லி என்னசெய்யிறது. அவனுக்கும் காசு வேணும்தானே என்றேன்.

கேஸ் அக்ஸப் பண்ணினாலும் எதையாவது பார்க்கலாம். இரண்டு வருசமாகப்போகுது இவங்கள்; விசாரிக்கிறாங்கள் விசாரிக்கிறாங்கள் இன்னும் என்னை விசாரித்து முடியுதில்லை. கப்பல்ல வந்தவங்களைத் திருப்பி ஆனுப்புறாங்கள் எண்டு கதைக்கிறாங்கள். ஏன் வந்தனெற்று கிடக்கு. மகளோட நின்று இருக்கலாம். அல்லது மனிசி சாகேக்க நானும் செத்திருக்கலாம்.

வாழோணும் என்ற ஆசையில் தானே சயனைட்டை எறிஞ்சனாங்கள்...

.... யோசியாதே. என்றேன்.

நானும் என்ர குடும்பமும் ஒரு நாளும் சயினைட்டை எறியேல்ல....

என்றான் செங்கமலம்.

மூலவர்ணம்.

தேசபிதாக்களால் மாவீரர்களால் மாமனிதர்களால்
கட்டப்பட்ட இந்தப் பூமியில்
எப்போதும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
அழகிய நறுமணம் கொண்ட பூக்களின் அடியில்
நமது குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அறியாத தவறுகளும்
அவர்களே சொல்லாத பொய்களும்
வரலாறு நீளவும் அவர்கள் மீது கவிந்து கிடக்கிறது.
எனது குழந்தைகளைத் தோண்டியெடுத்து
 கொஞ்சிக் கொண்டிருக்க மனம் விருப்பியும்
வெறும் நறுமணம் வீசும் பூக்களைப்
புடுங்கி எறிய யாரும் விடுவதில்லை.
தேசத்தின் பெயரிலும் மாவீரர்களின் பெயரிலும்
வெறும் பூக்கள்
பூத்துக் கொண்டிருக்கிறது.

வாக்கு ஒன்று:

அவர்களை மீண்டும் மீண்டும் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.
கொல்லைப்புறத்திலிருந்து விளையாடிய குழந்தைக்குத்
தெரியாமல் ஒளிவதுதான் அது.

வளரும் ஒருகட்டு வார்த்தைகளில் இருந்தது அவளது பருவம்.

சிரிப்பொலியைத் தாண்டி ஓடும் குழந்தைக்குத் தெரிந்திருந்தது நீள் பயணம்.

மெல்லிய நீர்த்தரிப்பும் இளஞ்சூட்டுத்தாகமும் எடுத்து
எனது குறி விரைக்கத் தொடங்கியது.

கடைசி மனிதனின் மறைவுக்காய் காத்திருந்தன கண்கள்.

பயணத்தின் இடைமடிப்பில் விழுந்தது குழந்தை.

எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளும் என்னிடம் மன்றாடினாள்.

அல்லாவையையோ யேசுவையையோ அல்லது ஏதோ ஒரு

சைவக்கடவுளையோ பெயர் சொல்லி அழைக்கவில்லை

கணேசலிங்கம் என்னைக் கொல்லாதே என்றாள்.

நான் யாரையும் கொல்வதில்லையே.

எனது பெயரையே அவள் மெல்லிதாய் உச்சரித்தாள்.

நான் அவளைச் சீண்டினேன்.

அவள் சிலிர்த்தாள்.

ஆம் அவள் சிலிர்க்கிறாள் என்றே நான் சொல்கிறேன்.

நான் பரவசத்தில் திளைத்தேன்.

அவளது சிலிர்ப்பு பயம் கவ்வியது.

நான் அதையே விரும்பினேன்.

குழந்தையின் தொட்டிலில் அவளைக் கிடத்தி பேசத் தொடங்கினேன்

அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்ன வேலை நான் சொல்வதையெல்லாம் மறுக்காமல் கேட்பதுதானே.

அதற்காவே எனது பெற்றோர் அவளை நன்றாகப் பழக்கப்படுத்தியிருந்தார்கள்.

எங்கிருந்துதான்  பழகுகிறார்களோ தெரியாது
தங்களது பிள்ளைகளுக்காகவே வாழக் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் எல்லோரது பெற்றோரும்.

வீட்டிற்கு வெளியில் யுத்தம் கோரமாய் மெல்ல நடந்து நகர்ந்து கொண்டிருந்தது.

யுத்தத்திற்குள் வாழவும் யுத்தத்திற்குள் பேசவும் நாங்கள் கற்றிருந்தோம்.

யுத்தம் பற்றி முன்பிருந்த பயத்திற்கும்
தற்போதுள்ள பயத்திற்கும் உள்ள இடைவெளியே அது.

அவளை முதல் முதலில் தொட்டபோது இருந்த பயம்
எனக்கு இப்பொழுது இல்லை.

ஆனால் அவளிடம் அதே பயம் தொடர்ந்தது.

அவள் ஒவ்வொரு தடவையும் முதல் யுத்தப் பயத்தினுள் இருந்து கொண்டிருந்தாள்.

அது ஒரு குழந்தையின் பயத்தை ஒத்திருந்தது.

அவளிடம் முதல் யுத்தம் பற்றிய அச்சம் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது.

வெளியில் குழந்தைகள் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது நான் பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பும் ஒவ்வொரு தருணமும்

அவள் ஏதோ ஒரு மூலையில் ஒழியத் தொடங்கினாள்.
நான் தேடத் தொடங்கினேன்.

அந்த ஒழித்துப்பிடித்து விளையாடும் விளையாட்டை நான் விரும்பினேன்.

அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

என்னிடமிருந்து அவள் தப்ப முடியாது.

அவள் ஒருபோதும் தப்பமுடியாது.

அதனால் அவளது உடலை எனக்குள் மறைப்பதற்கு முன்

அவளின் மொழியை மழித்தேன்.

அது செயல் இழந்தது.

ஒரு கராத்தே வீராங்களை போல் என்னுடன் தர்க்கம் செய்யும்
அத்தனை மொழிகளையும் அவளிடமிருந்து அழித்தேன்.

இப்பொழுது அவள் ஒரு குறுகிப் படுத்திருக்கும் புனைக்குட்டி போல ஆனாள்.

நான் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆயத்தமானேன்.

பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போரின் வீயூகம் அமைக்கும் படைத் தலைவர்களாக விசர் பிடித்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

பொங்கலுக்குத் தமிழீழம் தீபாவளிக்கு தமிழீழம் என்று

 நாங்கள் ஆரம்பத்தில் சொன்ன அதே வேகத்துடன்

இப்போதும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை வளாகத்திற்குள் கண்டதும் ஒரு மாவீரனைக் கண்டதுபோல் அவர்களின் தேசபிதாவைக் கண்டதுபோல் ஆரவாரப்பட்டார்கள்.

எனக்குள் கர்வம் எகிறியது.

அவர்களின் ஆவேசம் என்னை வேறு உலகத்தில் இறக்கியது.

அவர்களின் கண்களை உற்று நோக்கிய நான் எனது அச்சம் தெளிவுற மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.

"நாம் எமது தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். சிங்கள இனவெறி அரசிற்கெதிரான யுத்தம் நம்முடையது. இந்த அரசு இனவாத அரசு. இதற்கெதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஒரு விளைவு தான் நாங்கள். நமது முன்னோர்கள் அகிம்சைப்போராட்டம் நடாத்தினார்கள்.  தற்போது மக்களே எம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்துள்ளார்கள். இது எமது விடுதலை. நமது சிறிய சிறிய பிரச்சனைகள் முரண்பாடுகள் எல்லாவற்றை யும் புறந்தள்ளிவிட்டு பொது எதிரிக் எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் "

என்ற சிறிய வழமையான உரையாடல் ஒன்றை அவர்களுக்கு நிகழ்த்தினேன்.

அவர்கள் மிக ஆக்கிரோசமானார்கள்.

எதையும் இலகுவாக உள்ளிளுக்கக் கூடிய தோல்களால் ஆனவர்கள் தானே அவர்கள்.

மயிர்க்கூச்செறியும் வார்த்தைகளை அர்த்தமற்றுப் பேசக்கூடியவர்களாக அப்போது எப்படி நாமிருந்தோமோ அப்படியே இப்போதும் பேசுகிறார்கள்.

சுழிபுரத்தில் ஆறு மாணவர்களுக்குக் குஞ்சாமணி அறுத்து வாயிற்குள் வைத்து மணலில் புதைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் விஜிதரனைக் கடத்தி சுட்டவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் எவ்வளவு உணர்வுகரமாக நம்பினோமோ ...
அதேபோல் நம்புகிறார்கள் இவர்கள்.

எந்தக் கஸ்டமும் இல்லாமல் நான் சொன்ன எல்லாவற்றையும் சீக்கிரத்தில் உள்ளிளுத்தார்கள்.

அவர்கள் உட்கொள்ள உட்கொள்ள எனக்குத் தொண்டை வற்றியது.

நமது சிறிய சிறிய முரண்பாடுகள் என்பதை  திருப்பித் திருப்பி அழுத்தமாகச் சொன்னேன்.

மிகமுக்கியமாக  நமது போராட்டத்தி;ற்கு இடையூறாக இருக்கும் சில பேராசிரியர்களை நாம் இனங்காணவேண்டும் எனவும்

அவர்கள் தமிழ்த்தேசியத்தின் துரோகிகள்.  அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைத்தேன்.

நான் பெயர்களைச் சொல்ல முதலே மாணவர்கள் பட்டியலிட்டார்கள்.

அவர்கள் பட்டியலிட்ட அத்தனையும் நான் நினைத்ததும் சரியாக இருந்தது.

ஆனால் அது என்னுடைய அளவை விட மிகஅதிகமாகவேயிருந்தது.

மாணவர்களும் எனது பெற்றறோர்களைப் போலவே. எப்போதும் அவர்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்கிறார்கள்.

நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று ஒரு தேநீர் அருந்தினால் களைப்புக் குறையும்.
 மாணவர்களை விலத்திக்கொண்டு சென்று சிற்றுண்டிச்சாலையின்  மேசையில் அமர்ந்தேன்.

அது சிவரமணி இருந்த மேசை.
மறக்கப்பட்ட பாடலக்குத் தாளந் தட்டிய நண்பனும் விரல்களும் சிதறிக் கிடந்த தேனீர்த் துளிகளுமாய் அந்த நடுமேசை எனக்குப் பெரும் பீதியைத் தந்தது.

அங்கிருக்கவோ அல்லது தேநீர் அருந்தவோ என்னால் முடியவில்லை.
எழுந்து நடந்தேன்.

வரிசையில் நீண்டு நின்ற அசோகா மரங்களின் மறைவில் என்னை மறைத்தேன்.

பல்கலைக்கழகத்தின் மதிற்சுவர்கள் வெறும் கண்ணறைகளாயின.
முடியவில்லை.

உடலெங்கும் தீசூழ பல்கலைக் கழகத்தை விட்டு  வெளியில் ஓடிவந்தேன்.

வீட்டின் அறையில் முடங்கிக் கிடந்த அவள் வெளியில் வரவேயில்லை. தன்னுடலை முடிந்தவரை கீறிக் காயப்படுத்தியிருந்தாள். அவை பூனையின் நகக் கீறல்கள். அவளின் அசைவு ஒவ்வொன்றும் என்னைப் பயப்படுத்தியது. ஒரு பூனைக்குட்டியின் மிரட்சி கலந்த அசைவு அது. 

வாக்கு இரண்டு:

மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்து
வெளியில் பேசினேன்.

நான் பேசக் கூடியவளானேன்.

எனது உதடுகள் திணிக்கப்பட்ட அழுகிய ஆண்குறியை சூப்புவதைத் தவிர்த்து முதன் முறையாக சொற்களை உச்சரித்தது.

நான் விரும்பிய சொற்களையெல்லாம் பேசினேன்.

குறிக்கப்பட்ட நேரத்திற்குள் இத்தனை சொற்களை பேச நான் ஒருபோதும் எத்தனித்ததில்லை.

பேசப் பேச நான் எனது மொழிக்குள் இருந்து மெல்ல விடுபட்டேன்.

பேசாதிருந்தபோது எனக்குள் மொழி அடங்கிக் கிடந்தது.

மொழிக்குள் நான் அடங்கியிருந்தேன்.

மெல்ல மெல்ல மொழியிலிருந்து நான் விடுபட்டேன்.

ஆம் நான் மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்தேன்.

கணேசலிங்கம் எனது கதவைத் திறந்து கொண்டு வந்தார்.

அவர் வழமைக்கு மாறாகக் களைத்திருந்தார்.

அவரது முகம் அச்சத்தை எதிர் கொண்டிருந்தது.

அவர் வழமையற்ற வேறு ஒரு மொழியில் என்னுடன் பேச முற்பட்டார்.

எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

அது என்னுடன் இவ்வளவு நாளும் அவர் பேசிய மொழியல்ல.

அவரது வீட்டு வேலைக்காரியாய் வந்த நாட்களில் இருந்து இன்றுவரை நான் பேசாத மொழியை அவருடன் பேசினேன்.

முதல் முறையாக நான் மிகப்பெரிய நீண்ட சொற்களை அவர் முன்னால் பேசினேன்.

அவர் ஆச்சரியப்படவில்லை.

அவர் அச்சப்பட்டார்.

மொட்டந்தலையில் வேர்த்தது.

மிகத் தடுமாறியபடி தன்னுடைய மானத்தைக் காப்பாற்றும்படி மண்டியிட்டார்.
ஒரு பேராசிரியர் பதின்மூன்றாவது தடவையும் என்னிடம் மானமிழந்து கிடந்தார்.

இப்போது பேராசிரியருக்கு நன்றாக விளங்கிவிட்டது. தனது மானம் குறித்து தானே சிந்திக்கத் தொடங்கியருந்தார்.

தன்னை அவமானப்படுததலிலிருந்து மீட்டெடுக்க எதையும் செய்யத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியில் இருந்தது பொதுவெளி.

அதற்கும் எனக்கும் இடையில் இருந்தது மிகப்பெரிய இடைவெளி.
இடையில் கணேசலிங்கம் நடந்து திரிந்தார்.

பொதுவெளியில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தை விடவும் மிகப்பெரிய யுத்தம் எனக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் ஒற்றைப் போராளி.

எனக்குரிய நேரத்தை மிச்சப்படுத்தவும் சுத்தமாய் இருக்கவும் முக்கியமாக தலையில் பேன் பிடிக்காமல் இருக்கவும் என கணேசலிங்கத்தின் பெற்றோர் என்னுடைய தலைமயிரை ஒட்ட வெட்டியிருந்தார்கள்.

இப்போது வெளியில் உள்ள போராளிகளின் சாயலை நான் ஒத்திருந்தேன்.

யாழ்ப்பாணத்திலிருந்த  வேலைக்காரிகள் அனைவரது சாயலும்   போரளிகளின் சாயலையே ஒத்திருந்தனர்.

வெளியில் குழந்தைப் போராளிகள் உள்ளே குழந்தை வேலைக்காரிகள்.

மானமிழந்த யாழ்ப்பாணம்.

இறுதி வாக்கு.

எப்பொழுதும் இடைஞ்சலான வார்த்தைகளுடனும் அபாண்டமான பழிகளுடனும் வாழப்பழகிவிட்ட என்னிடம் இருக்கும் ஒரேயொரு கேள்வி என்னவெனில் மேற்கூறிய இரண்டு வாக்கு மூலங்களையும் வாசித்த பின் பேராசிரியராகிய கணேசலிங்கம் தப்பிச் சென்ற வழி எது என்பதுதான். பேராசிரியரின் வழக்கை விசாரித்த அந்தக்காலத்து நீதவானின் துணையுடனோ அல்லது பல்கலைக் கழகத்தின் வாசல் வழியாகவோ அவன் தப்பித்திருக்கவில்லை.  அல்லது எல்லாக் கொலைகாரர்களும் தப்பித்த ஏ9 பாதையூடாகவோ சங்குப்பிட்டி வழியாகவோ அவன் தப்பித்திருக்க முடியாது. ஒரு சிறிய தீக்குச்சி போல் பற்றி பின் தீப்பிளம்பாகி எங்களை உறையவைத்த கோணேஸ்வரி எனும் கலாவின் கவிதையூடாக மட்டுமே கணேசலிங்கம் தப்பித்து மறைந்து போனாhன்.

சிங்களச் சகோதரிகளே
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை

என்று பாடிய அந்தக் கவிதை கணேசலிங்கத்தை எங்கேயோ ஒழித்து வைத்து விட்டது. யாழ்ப்பாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட வேலைக்காரக் குழந்தை குறித்து அவள் யோனி குறித்து கவிதை எழுதிவிட முடியாமல் போய்விட்டது கலாவுக்கு. நமது காலாவும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டாள்.
உண்மையில் இனிக் கவிதை எழுதமுடியாமல் போன
கலா இப்போது எங்கே?
காலாவதியாகிப் போன கலா என்பவர் உண்மையில் யார்?

நன்றி
குவர்னிகா
41வது இலக்கியச்சந்திப்பு மலர்
2013 யூலை

Tuesday, 27 March 2018

Ingmar Bergman's World of Dreams

Bergman’s cinema introduced the force of contemplation, a path that political cinema has rarely shown the courage to explore.

Ingmar Bergman in a 1981 photo. Credit: Reuters

Moinak Biswas

FILM

26/MAR/2018

When Ingmar Bergman (July 14, 1918 – July 30, 2007) was honoured with the Erasmus Prize in 1965, he could not attend the ceremony. Instead, he sent a piece to be read out titled ‘The Snakeskin’. It is one of the bleakest in its genre, a strange and bitter testimony to the sense of doubt and futility that haunted his films.

Art, including cinema, he said, is more free and intense, but has lost all importance. It has the feverish intensity of a snakeskin full of ants, “The snake itself is long since dead, eaten out from within, deprived of its poison; but the skin moves, filled with busy life.” If he would continue to make films “(e)ven though I, and many with me, find Westerns more stimulating than Antonioni or Bergman” it was because of a consuming curiosity, and a creativity that he felt as “hunger”.

By then, Bergman already had 21 years of filmmaking behind him, with widely celebrated films such as Summer with Monika (1953), Smiles of a Summer Night (1955), The Seventh Seal (1957), Wild Strawberries (1957) and Silence (1963). Of the post-war art cinema, he was the most emblematic director. A year later, Persona (1966) would put him in the position of an undisputed master of the league, placed by some critics a rung above Antonioni, Godard, Fellini and Bresson.

Feverish creation it indeed proved to be, with over 60 films, 172 stage productions and numerous writings. Two elements stand out: a life-long investment in theatre, unique in the career of a major director if we leave out Fassbinder; and a dogged preoccupation with a handful of themes over a prodigious corpus – death, crisis of faith, failure of communication, desperate efforts of revitalisation – almost always played out within the troubled yet inescapable circle of the family.

Legendary Swedish film director Ingmar Bergman attends a news conference for his film Troloesa in Stockholm in this May 9, 1998 file photo. Credit: Reuters/ Gunnar Seijbold/ Scanpix

All that contributed to a powerful model of ‘personal expression’ in cinema, considered a hallmark of artistic independence in the 1950s and 60s. The dynamics of the cinema as an institution governed by the logic of mass production gave personal expression its special value. The deeply personal quality of Bergman’s world, on the other hand, resonated well with the prevailing existentialist intellectual climate. As that climate shifted, Bergman’s preoccupations played a role in the decline of his reputation.

Jonathan Rosenbaum’s obituary for the director boldly voiced the suspicion that he may have been overrated. There were rebuttals to the article, prominently from David Bordwell and Roger Ebert, but the very fact that a respected critic like Rosenbaum could write so sceptically upon the master’s death was an indication of a crisis.

There is perhaps not much doubt that the spectacles of existential suffering so characteristic of the men and women of Bergman’s cinema, their imploding desolation, their often inexplicable struggle with the soul, would not have the desired impact on the viewer today. But it is by freeing the director from the mould of his reputation that we can see why all cinema should remain grateful to his work.

Bergman’s extraordinary craft has never stopped inspiring practitioners. From Tarkovsky to Woody Allen, a wide range of filmmakers have learned and borrowed from him. It continues to this day if we think of the recent works of Bela Tarr (Satantango, 1994), Arnaud Desplechin (A Christmas Tale, 2008), Michael Haneke (White Ribbon, 2009) and Nuri Bilge Ceylan (Winter Sleep, 2014).

When we say craft, we mean not only the remarkable technical achievements: the cinematography (Gunnar Fischer and Sven Nykvist), editing (which reached a high-point in Shame, 1968), use of actors, study of landscape etc., but also the method that makes it possible for feeling and thought to take on independent shape. One should probably ignore the spiritual convulsions of his characters to some extent to appreciate the wealth of emotions and the scope of contemplation his cinema offers. Feeling and thought often move beyond person-centric neuroses in his films to become entities in themselves. One could follow two prominent traits of his work to think about this – theatre and the face.

Perhaps the two are one. Theatre is performance, and often it comes down to the question whether the face tells the truth. The deep disgust Bergman sometimes felt with life as an organism (shared by a director like David Lynch, who owes no small debt to him) could lead him to denigrate even the most enduring faces he created. I am thinking of Erland Josephson’s harangue over Liv Ullmann’s close up in the mirror in Cries and Whispers (1972) denouncing a life of sterility and selfishness.

But it was on Ullmann’s face that the director built the most striking images of the limits of speech in Persona. That was Bergman’s answer to petulance and pontification, against the drama through which, as he said in his autobiography The Magic Lantern and elsewhere, he could lie.

Ullmann, a stage actor, simply loses the ability to speak as the film begins. Over the rest of the film, she remains silent, while her nurse, Bibi Andersson, holds up a monologue. But Andersson’s words fail to convince us of their truth: we are not always sure if she refers to actual events or is narrating dreams. This is where Bergman begins to transform presence – vision, speech – into a set of relations that constitutes a parallel world.

These, more than the brilliant reflexive prologue and endings of Persona, affords his cinema the opportunity to think. The face in Bergman oscillates between the mask and the visage. His cinema is theatrical in this sense too; not only because of the taut drama and powerful performances, or for the repeated use of the theme of staging. And faces often look directly at us – again a trace of the theatre. He creates a rift in the order of reality on the screen through the tentative positioning of the face.

“The close-up is the face”, writes the philosopher Gilles Deleuze, “There is no close-up of the face”. He thought especially of Bergman as he wrote this. Soon after Persona, where the art of the close-up attains great musical power, he pushed the face beyond the lines of balance in what is probably his most significant film, Shame.

As a nameless war rages all around, Ullmann and Max von Sydow, a musician couple, experience an unstoppable draining of love and compassion. The face, especially Ullmann’s, often comes too close to the camera, gets out of focus, fragmented. The contemplating face becomes rare. Instead, we are invited to reflect on the very coordinates of sensible reality.

This most political of Bergman’s films rests his world, set repeatedly in his favourite island of Faro from the mid-sixties on, on inscriptions of historical tragedy. Even as private lives undergo unbearable convulsions, Bergman manages to set the process of contemplation free from the person and extend it over the dreadful beauty of the surrounding nature. As they are captured by a fascist army and taken into an interrogation centre, Ullmann says, “Everything seems like a dream”.

In the final shots, when they are drifting away in a boat in the misty ocean (evoking images of Syrian refugees for us today), her words seem to come from the depths of a dream. The uncertain separation between dream and reality has been a characteristic feature of Bergman’s films, but here something else happens: the world seems to be dreaming.

In this cleft of reality, Bergman’s cinema introduced the force of contemplation, a path that political cinema has rarely shown the courage to explore.
Moinak Biswas is Professor of Film Studies, Jadavpur University, Kolkata.Ingmar Bergman's World of Dreams

Moinak Biswas is Professor of Film Studies, Jadavpur University, Kolkata.

https://thewire.in/history/brexit-and-the-lessons-of-history

Friday, 9 March 2018

லைலா February 13, 2011 - by ஷோபாசக்தி – ஷோபாசக்தி

http://www.maamallan.com/2011/02/blog-post_778.html?m=1
Monday, February 14, 2011
ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்

 லைலா

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது. 

நான் படிக்கும் ஷோபா சக்தியின் முதல் கதை என்றபோதிலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் புகை மூட்டமாய் இருப்பது போன்ற தோற்றத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. விமர்சனம்தான் வைக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால் பொதுவாக எழுத்து என்கிற காரியமே, விமர்சனம்தான். ஈழ அரசியலின் உள் நுட்பங்கள் அறியாத நான், வெறும் பார்வையாளன் மட்டுமே என்பதால், சரி தப்பு சொல்ல எனக்கு அருகதை இல்லை. 

ஷோபா சக்தியுடையது சமகாலத் தமிழின் பெரிய எழுத்துதான் சந்தேகமே இல்லை. எழுதவேண்டும் என்கிற உத்வேகத்தையும் பொறாமையையும் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் ஒருசேர தோற்றுவைத்து இருக்கிறது இந்தக் கதை.

மிகச்சில தீற்றல்களில் ஃப்ரான்ஸின் நிராகரிக்கப்பட்ட கீழ்த்தட்டு மனித வாழ்வை அநாயாசமாக உயிர்ப்பிக்கிறார். நாலாந்தர ஃப்ரெஞ்ச் குடியிருப்புகளை படிக்கட்டுகளை பொலிஸ்காரர்களை மற்றவர்களுக்குத் தோன்றும் துர்நாற்றம் கதை சொல்லிக்கு தோன்றாததும், மற்றவர்களுக்குத் தோன்றாத துர்நாற்றத்தில் நாய்க்குட்டி அவனுக்குத் தெரிவதுமாக அய்யோ சொல்லிக்கொண்டே போகலாம். 

எந்த அனுதாபமும் கோராமல், நைந்து கிடக்கும் வாழ்வைக் கண்முன் விரித்து வைத்து எழுத்தாளன் ஷோபா சக்தி நம்மோடு நின்று தானும் பார்க்கிறார் அவரையும் அவரது வாழ்வையும்.

எவ்வளவு நிதானமாக நம்மைக் கொண்டு செலுத்த வேண்டிய இடத்திற்கு என்ன ஒரு நேர்த்தியுடன் வலை பின்னுகிறார்.

ஒரு எழுத்தாளனின் அறிமுகம், இப்படித் தன்னிச்சையாகக் கூடி வரவேண்டும். அபிமானிகளால் படி படி எனத் துரத்தப்பட்டு படிப்பது துன்பம். இனிமேல் ஷோபாவின் எழுத்துக்களைத் தேடிப் படிப்பேன். திகட்டாது என்றும் தோன்றுகிறது.
madrasdada@gmail.com at 9:19 PM

லைலா

– ஷோபாசக்தி

இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும்.
பிரான்ஸின் தற்போதைய அதிபர்   நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன்  பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்னார். அந்தப் பகுதியில்தான் நான் கடந்த பத்து வருடங்களாக இருக்கிறேன்.
உண்மையிலேயே இந்தப் புறநகர்ப் பகுதி ஓங்கிய சிறு மரக்காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் குறுக்கறுத்து ஓடும் ஸெயின் நதியையும் கொண்ட அழகிய நிலப்பகுதி. பிரான்ஸில் ஆபிரிக்கர்களும் அரபுக்களும் சிந்தி ரோமா நாடோடிகளும் ஆசிய நாட்டவர்களும் செறிந்து வாழும் பகுதியும் இதுதான். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோஸி சூழலியலில் பெரும் அக்கறைகொண்டவர் எனப் பத்திரிகைகள் எழுதியுமுள்ளன. அவர் அந்த மரக் காடுகளையும் புல்வெளிகளையும் ஸெயின் நதியையும் எங்களிடமிருந்து காப்பாற்ற நினைத்திருக்க வேண்டும். எதிர்பார்த்தது போலவே அந்தத் தேர்தலில் நிக்கோலா சார்க்கோஸி  வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் நினைத்திருந்ததுபோல எல்லாம் சுத்திகரிப்பை எங்கள் பகுதியில் நடத்திவிட முடியாது.
நிக்கோலா சார்க்கோஸி என்ன, அந்த மாவீரன் நெப்போலியனே மறுபடியும் உயிர்பெற்று வந்தால் கூட எங்களது பகுதியில் மயிரைப் பிடுங்க முடியாது. இந்தப் பகுதியில் எவரும் பிரஞ்சு அரசாங்கத்தின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இங்கே எங்களுக்கான அறங்களையும் சட்டங்களையும் விதிகளையும் தண்டனைகளையும் நாங்களே எங்களுக்காக விதித்து வைத்துள்ளோம்.
பாரிஸ் நகரத்தில் வாழும் எனது நண்பர்கள் “நீ எப்பிடி அந்த ஏரியாவில சகிச்சுக்கொண்டு இருக்கிறாய்” என என்னைக் கேட்கும்போது நான் அவர்களிடம் திருப்பி “நீங்கள் எப்பிடித்தான் பரிஸில சகிச்சுக்கொண்டு இருக்கிறீங்களோ” எனக் கேட்பேன். எனது பகுதியில் வாழ்ந்தவர்களால் ஒருநாள் கூட பிரான்ஸின் வேறு பகுதிகளில் வாழ முடியாது. எங்களது பகுதியில் வந்து குடியேறியவர்கள் இறந்தால் அல்லது பொலிஸாரால் நாடு கடத்தப்பட்டால் தவிர இந்தப் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்வதில்லை.
பதின்மூன்று மாடிகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் பத்தாவது தளத்தில் எனது வீடு இருந்தது. ஒரு மிகச் சிறிய வரவேற்பறையையும் ஒரு சிறிய படுக்கை அறையையும் கொண்டது எனது வீடு. அந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்த எல்லா வீடுகளுமே அவ்வகையானவைதான். எனது மாதச் சம்பளத்தில் சரிபாதி வாடகைக்குப் போயிற்று. பாரிஸ் நகரத்தில் இதேபோன்ற ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பதென்றால் முழுச் சம்பளத்தையுமே வாடகைக்காகத் தாரைவார்க்க வேண்டியிருக்கும்.
வேலைக்குச் செல்லாத நாட்களிலும் மாலை நேரங்களிலும் அநேகமாக நான் எங்களது தொடர்மாடிக் குடியிருப்பின் கீழ்த் தளத்திலிருக்கும் வாசற்படிக்கட்டில் குந்தியிருப்பேன். என்னோடு அந்தக் குடியிருப்பில் இருக்கும் இளைஞர்களும் குந்தியிருப்பார்கள். பலதும் பத்தும் பேசுவோம். எங்களிடையே அடிக்கடி கைகலப்பும் வரும். எல்லாமே ஒருநாள் கோபம்தான். அடுத்தநாள் கைகொடுத்துச் சமாதானமாகிவிடுவோம். இரவு நேரங்களில் அந்தப் படிகளில் உட்கார்ந்திருந்து பேசியவாறே குடிப்போம். எங்கள் குடியிருப்புக்குத் தனியாகக் காவலாளி தேவையில்லை. எந்த நேராமானாலும் யாராவது சிலர் வாசற்படிகளில் உட்கார்ந்திருப்போம். சிலர் அங்கேயே உட்கார்ந்தவாறே தூங்கிவிடுவார்கள்.
எங்களை மிகவும் இடைஞ்சல் செய்வது பொலிஸ்காரர்கள்தான். திடீரெனச் சுற்றிவளைத்துக் கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டு எங்களைச் சுவரோடு நிறுத்தி வைத்துச் சோதனையிடுவார்கள். கத்தி, கஞ்சா, போலி விசா, திருட்டு செல்போன் என ஏதாவது அவர்களுக்குச் சிக்கும். எங்கள் குடியிருப்பே திரண்டு நின்று பொலிஸ்காரர்களைத் திட்டும். ஒருமுறை பொலிஸ் வாகனத்துக்குத் தீ வைத்த கதையும் இங்கே நடந்தது. பிரான்ஸில் போலிஸ்காரர்களுக்குக் காதலிகள் கிடைப்பதில்லை எனச் சொல்வார்கள். அத்தகைய ஒரு வெறுப்பு இங்கே பொலிஸ்காரர்கள்மீது மக்களுக்கு உண்டு. எங்கள் பகுதியில் பொலிசாருக்குக் காதலி அல்ல, தவித்த வாய்க்குக் குடிக்க ஒரு மிடறு தண்ணீர் கூட யாரும் கொடுக்கமாட்டோம்.
ஜனாதிபதி நிக்கோலா சாக்கோஸி எங்களது குடியிருப்புப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்ன சில நாட்களில் எங்களது தொடர்மாடிக் கட்டடத்திற்கு அய்ம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு தமிழ்ப் பெண்மணி வந்து சேர்ந்தார். முன்பு எங்களது தொடர்மாடிக் கட்டடத்தில் சில தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. பிள்ளைகள், குட்டிகள் பெருக அவர்கள் இங்கேயே அயலில் வேறு வீடுகளுக்குப் போய்விட்டார்கள். அதன் பின்பு இந்தப் பெண்மணி அங்கே வரும்வரை நான் ஒரேயொரு தமிழன்தான் அங்கிருந்தேன். அந்தப் பெண்மணி நானிருந்த பத்தாவது தளத்திலேயே ஏழாம் இலக்கத்தில் குடியேறினார். எனது கதவு இலக்கம் அய்ந்து.
அந்தப் பெண்மணியைப் பார்த்தவுடனேயே அவர் பாண்டிச்சேரித் தமிழா, அல்லது சிங்களப் பெண்மணியா என்ற சந்தேகங்கள் ஏதும் எனக்கு வரவில்லை. பொதுவாக அய்ரோப்பாவில் வாழும் அய்ம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஈழப் பெண்மணி எப்படியிருப்பாரோ, எவ்வாறு ஆடையணிவாரோ, எப்படித் தலை முடியையைப் பின்னால் கூட்டிக் கட்டியிருப்பாரோ அப்படியே அவர் இருந்தார். ஆனால் அவர் தனியாக அங்கே குடிவந்ததும், கையில் ஒரு நாயைப் பிடித்தபடி வெள்ளைக்காரி மாதிரி வெளியே உலாவச் செல்வதும்தான் என்னைக் கொஞ்சம் குழப்பியது. அந்த அழகிய நாய் இரண்டு உள்ளங்கைகளுக்குள்ளும் அடங்கி விடுமளவிற்கு மிகச் சிறியதான ஓர் இனத்தைச் சேர்ந்தது. அந்த வெண்ணிற நாயின் உடல் சடைத்த முடிகளால் மூடப்பட்டிருந்தது. நாயின் காலெங்கே, வாலெங்கே எனக் கண்டுபிடிப்பதே சிரமம். நாயின் கண்கள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. அந்தக் கண்கள் எப்போதும் ஒளிர்ந்தவாறேயிருந்தன. மூக்குக் கண்ணாடியில் வரைந்து ஒட்டப்பட்ட கண்களைப்போல அந்தப் பெண்மணியின் கண்கள் மரத்திருந்தன. அந்தப் பெண்மணியின் கண்களில் ஒருபோதும் உணர்சிகளை நான் பார்த்ததே கிடையாது.
நாங்கள் கட்டடத்தின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கும்போது அந்தப் பெண்மணியை எதிர்கொள்வதுண்டு. அவர் நாயுடன் எங்களைத் தாண்டிச் செல்லும் போது நாங்கள் “Bonjour Madame” என வணக்கம் தெரிவிப்போம். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டுப் போவார். சில தடவைகள் “எப்படி நலமாயிருக்கிறீர்களா” என ஒன்றிரண்டு வார்த்தைகள் எங்களிடம் பேசுவார். அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அவர் பிரஞ்சு மொழியைப் பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே உச்சரித்துப் பேசக் கூடியவர் எனத் தெரிந்தது. கீழ்த்தளத்தில் நாங்கள் அமர்ந்திருக்கும் படிகளின் அருகிலேயே தபாற் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருநாள் அந்தப் பெண்மணி தனது தபாற் பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் அவர் சென்றதும் அந்தப் பெட்டியருகே சென்று அதில் எழுதப்பட்டிருந்த பெயரைப் படித்துப் பார்த்தேன். அதில் – ராஜரத்தினம் இலங்கை நாயகி – எனப் பெயர் எழுதப்பட்டிருந்தது.
இலங்கை நாயகி அங்கு வந்து ஒருமாதம் கழிந்ததன் பின்னாகத்தான் எனக்கு அவரோடு பேச வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் இருவரும் கீழ்த்தளத்தில் லிப்டுக்காகக் காத்திருந்தபோது நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் என்னைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் ஏறியதும் நான் அவரின் கையிலிருந்த அந்த நாயைக் காட்டி “நல்ல வடிவான நாய்…என்ன பேர்?” என்று கேட்டேன். இலங்கை நாயகி ஒரு புன்னகையுடன் “லைலா” எனச் சொல்லிவிட்டுத் தனது கையிலிருந்த அந்த நாயைத் தடவிக் கொடுத்தார்.
நாய்க்கு யாராவது லைலா எனப் பெயர் வைப்பார்களா? எனக்குத்தான் அவர் சொன்னது சரியாகக் காதில் கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். நாய்க்கு லைக்கா எனப் பெயர் வைப்பவர்களுண்டு. முதன் முதலில் ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பிய நாய்க்கு லைக்கா என்று பெயர். எனவே நான் இலங்கை நாயகியிடம் மறுபடியும் “லைக்காவா” என்று கேட்டேன். அவர் வாயை அகலத்திறந்து “லைலா” என அழுத்தமாக உச்சரித்துவிட்டு நாயை எனக்கு முன்னே ஒரு குழந்தையைத் தருவதுபோல நீட்டினார். நான் நாயைத் தடவிக்கொடுத்தேன்.
இருவரும் பத்தாவது தளத்தில் இறங்கினோம். நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நாட்டிலயிருந்து வெளிக்கிட்டு கனகாலமோ” என்று கேட்டேன்.
இலங்கை நாயகி என் முகத்தைப் பார்த்தவாறே “ஓம் தம்பி, எண்பதாம் ஆண்டு லண்டனுக்கு படிக்கவெண்டு போனது, எண்பத்தி மூண்டில அங்கயிருந்து திரும்பி இந்தியாவுக்கு போயிற்றன். பிறகு திரும்பியும் எண்பத்தாறில இஞ்ச வந்தனான்” என்றார்.
“லண்டனிலயிருந்து ஏன் திரும்பிப் போனீங்கள், படிப்பு முடிஞ்சுதா இல்லாட்டி லண்டன் பிடிக்கயில்லையோ?”
இலங்கை நாயகி நாயை இறக்கித் தரையில் விட்டுக்கொண்டே “நான் லண்டனிலயிருந்து இயக்கத்துக்குப் போனனான் தம்பி” என்று சொல்லிவிட்டுத் தனது கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். நான் இவ்வாறான ஒரு பதிலை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மெதுவாக நடந்து கதவைத் திறந்து எனது வீட்டுக்குள் நுழைந்தேன்.
என்ன இந்த மனுசி ஒரு ரைப்பாக் கதைக்கிறதே என்று யோசித்தேன். முன்பின் தெரியாத ஆளிடம் தான் இயக்கம் என்று சொல்வதென்றால் இலங்கை நாயகியின் பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்கக் கூடும் என நான் எச்சரிக்கையானேன். என்னை அவர் உளவு பார்க்கிறாரா? இன்னொரு புறத்திலே ‘அந்த மனுசி இயல்பாகச் சொல்லியிருக்கவும் கூடும், அது உண்மையாகவுமிருக்கலாம், எதைப் பார்த்தாலும் தவறாகவே நோக்கிச் சந்தேகமும் அச்சமும் கொள்ளுமளவிற்கு உனக்குத்தான் மூளை வக்கிரமடைந்துவிட்டது’ என்று என் மனம் குறுக்காலே சொல்லிற்று.
அடுத்தநாள் நான் வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தூரத்தே நாயுடன் இலங்கை நாயகி நடந்து வருவதைக் கண்டதும் நான் எழுந்து லிப்டுக்கு அருகாக வந்து நின்றுகொண்டேன். அவர் லிப்டின் அருகே வந்ததும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் மெதுவாகத் தலையசைத்தார். லிப்டுக்குள் சென்று லிப்டின் கதவுகள் மூடிக்கொண்டதும் நான் இலங்கை நாயகியிடம் “அக்கா, நீங்கள் இயக்கத்துக்குப் போனதாச் சொன்னீங்கள்..எந்த இயக்கத்துக்குப் போனீங்கள்?” என்று கேட்டேன். அதைக் கேட்காவிட்டால் எனக்குத் தலை வெடித்திருக்கும். அவர் பதில் சொல்வதானால் சொல்லட்டும்.
இலங்கை நாயகி நெற்றியைச் சுருக்கி உதடுகளைக் கடித்து மேலே பார்த்தார். பின்பு “அது.. புளொட்டோ என்னவோ ஒரு பேர் சொன்னாங்கள், நான் அங்க சமையலுக்கு நிண்டனான்” என்றார். லிப்டின் கதவுகள் திறந்ததும் அவர் என்னைத் திரும்பியும் பாராமல் தனது கதவை நோக்கிக் கால்களை அகல வைத்து விறுவிறுவென நடந்தார். எனக்கு மறுபேச்சு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏதாவது திருப்பிப் பேசக் கூடிய மாதிரியா இலங்கை நாயகி பேசுகிறார். அவர் வாயைத் திறந்தாலே அவரின் வாயிலிருந்து முளைத்து ஒரு பாம்பல்லவா என்னைத் தீண்டுகிறது.
எனக்குக் கடி விஷம் ஏறிப் போய்விட்டது. இலங்கை நாயகிக்கு கொஞ்சம் மூளைப் பிசகு என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஒரு எதிர்பாராத நேரத்தில் லிப்டுக்குள் வைத்து இலங்கை நாயகி என்னைத் துப்பாக்கியால் சுட முயற்சிப்பது போல எனக்கு எண்ணங்கள் வர ஆரம்பித்தன. அவர் துப்பாக்கியை எங்கிருந்து உருவுவார், அப்போது லிப்டுக்குள் எனக்கும் அவருக்கும் எவ்வளவு இடைவெளியிருக்கும், நான் எப்படி அவரிடமிருந்து துப்பாக்கியைத் தட்டிப் பறிப்பது, பறித்தவுடன் அவரை நான் சுட வேண்டுமா, அவரைச் சுட்டால் மட்டும் போதுமா அல்லது அவரது நாயையும் சுட வேண்டுமா என்று என் மனதிற்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகாத் தோன்றி என்னை அலைக்கழித்தன.
‘உனக்கென்ன மனம் வக்கரித்துவிட்டதா, எதற்காக அந்த அழகிய நாய் லைலாவை நீ சுட வேண்டும்?’ என என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஜார் மன்னனை ட்ரொட்ஸ்கி சுடும்போது ஜாரின் நாயையும் சுட்டுக் கொன்றார் என்ற விஷயம் அந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வந்தது. அடுத்து வந்த நாட்களில் நான் இலங்கை நாயகியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
அதுவென்றும் இலேசான காரியமாக இருக்கவில்லை. அவர் திடீரெனத் தனது வீட்டிலிருந்து நாயோடு வெளியே வருவார். எங்களது குடியிருப்பின் அயலில் நாயோடு உலாவுவார். கொஞ்ச நேரம் நாயோடு புல்வெளியின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் வாங்கில் உட்கார்ந்திருப்பார். வேறங்கும் அவர் போய் வருவதாகத் தெரியவில்லை. அருகிலுள்ள சீனாக்காரனின் மலிவு சுப்பர் மார்க்கெட்டுக்குள் அவர் நுழைந்து வெளியே வரும்போது கையில் நாய்க்கான உணவு அடைக்கப்பட்டிருக்கும் பேணிகளுடன் வருவார். இலங்கை நாயகி எங்கே வேலை செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், சமைப்பதற்குப் பொருட்களை எங்கு வாங்குகிறார்? என்பது ஒன்றுமாக விளங்கவில்லை.
என்னுடைய கண்காணிப்பிலும் குறைபாடுகள் இல்லாமலில்லை. வேலைக்குச் செல்லும் நாட்களில் அதிகாலையில் புறப்பட்டுச் சென்று மாலையில்தான் திரும்பி வருவேன். இரவு எட்டு மணிக்குப் பிறகு என் தலையில் இடியே விழுந்தாலும் உணராத அளவுக்குப் போதையிலிருப்பேன். வேலையில்லாத நாட்களில் நான் தூக்கத்தால் எழுவதே மதியம் கழிந்த பிறகுதான். ஆனால் இப்போது நான் இலங்கை நாயகியுடன் லிப்டில் தனியாகச் செல்லும் தருணங்களைக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டேன்.
விரைவிலேயே எனக்கு ஒரு வழி கிடைத்தது. உண்மையில் இலங்கை நாயகி ‘புளொட்’ இயக்கமா, இல்லை மனுசி புத்தி பேதலித்துப் பிதற்றுகிறதா, இல்லை மனுசி கள்ள மனதோடு என்னுடன் பேசுகிறதா என அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நான் செல்லத்துரையைப் போய்ச் சந்தித்தேன். செல்லத்துரை புளொட் இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தவர். மத்திய குழுவில் கூட இருந்தவர் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். எண்பத்தாறிலோ எண்பத்தேழிலோ புளொட்டின் தள மாநாடு நடக்கும்வரை இயக்கத்திலிருந்து மாநாட்டோடு இயக்கத்திலிருந்து வெளியேறியவர். இப்போது அவருக்கு அரசியல் ஈடுபாடெல்லாம் கிடையாது. இடைக்கிடையே இலக்கியக் கூட்டங்களிற்கு செல்லத்துரை வருவார். அப்படி எனக்கு அவர் பழக்கம்.
பாரிஸ் நகரத்தின் ஒரு கபேயில் நான் செல்லத்துரையைச் சந்தித்தேன். நான் அவரிடம் “அண்ணே, ராஜரத்தினம் இலங்கை நாயகி எண்டு பெயர்.. அம்பது வயசிருக்கும், லண்டனிலயிருந்து எண்பத்தி மூண்டில புளொட்டுக்கு வந்தவவாம். இப்ப பிரான்ஸில் இருக்கிறா. ஆளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.
செல்லத்துரை கொஞ்சமும் யோசிக்காமல் “ஓ நீங்கள் லைலா தோழரைச் சொல்லுறீங்கள்” என்றார்.
“அண்ணே, லைலாத் தோழரா, இல்லை லைலாவின்ர தோழரா? தெளிவாச் சொல்லுங்கோ, நான் ஏற்கனவே போதுமான அளவுக்குக் குழம்பியிருக்கிறன்”
“அவவுக்கு லைலா எண்டுதான் இயக்கத்தில பேர்”
“லைலா, மஜ்னு எண்டெலாம் ரொமான்டிக்கா உங்கிட இயக்கத்தில பேர் வைக்க மாட்டீங்களே! மெண்டிஸ், சங்கிலி, மொக்கு மூர்த்தி எண்டு திகிலாத்தானே நீங்கள் பேர் வைப்பீங்கள்.”
“உமக்கு லைலாவெண்டா ஆரெண்டு விளங்கயில்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதல்முதலாய் ப்ளேன் கடத்தயிக்க அந்த ஒப்பிரேஷனைச் செய்த ஒரு பெண் போராளிக்கு லைலா எண்டு பெயர்”
“அண்ணே ஒரு பியர் குடிப்பமா, தலையிடிக்குது” என்று செல்லத்துரையிடம் கேட்டேன். அவருக்கு சீனி வருத்தமென்று சொல்லி பியர் வேண்டாம் என்றார். அவருக்கு ஒரு கறுப்புக் கோப்பியும் எனக்கு ஒரு பியரும் ஓடர் செய்தேன்.
“அண்ணே அவ லண்டனிலயிருந்தா இயக்கத்துக்கு வந்தவ?”
“ஓமோம்..அதென்னண்டா இவ லண்டனுக்கு படிக்கத்தான் போனது. அங்கதான் கீர்த்தி மாஸ்டரோட லவ்வானது. கீர்த்தி மாஸ்டர் அப்ப லண்டனில புளொட்டுக்கு வேலை செய்தவர். நல்ல அரசியல் தெளிவுள்ள ஆள். ரெண்டு பேரும் லண்டனிலயிருந்து ஒண்டாத்தான் வெளிக்கிட்டவை. கீர்த்தி மாஸ்டர் நேர பி. எல் ஓ. ட்ரெயினிங்குக்காக லெபனானுக்குப் போயிட்டார். லைலா இந்தியாவுக்கு வந்திற்றா. இந்தியாவில கே. கே. நகர் புளொட் ஒப்பிஸிலதான் இரண்டு வருசமா இருந்தவ.”
“அப்ப இவ லைலா இயக்கத்தில் பெரிய பொறுப்பில இருந்தவவா?”
“ஒப்பிஸில வேலை செய்தவ. கிட்டத்தட்ட உமாமகேஸ்வரனுக்கு செகரட்ரி மாதிரித்தான். இங்கிலீஸ் நல்லாத் தெரியும். அதால வெளிநாட்டுத் தொடர்புகள், மொழிபெயர்ப்புகள் எண்டு கன வேலை செய்தவ. இவவுக்கு அங்க மஞ்சள் குருவியெண்டு பட்டம்.”
“அதென்ன மஞ்சள் குருவி?”
“ஆம்பிள பொம்பிளை எண்டு வித்தியாசம் பாராம எல்லாரோடயும் நல்லாச் சிரிச்சுப் பழகுவா. உடுப்புகளும் அப்பிடி, இப்பிடி லண்டன் ஸ்டைலிலதான் போடுவா. ஒருக்கா உமாமகேஸ்வரன் கூட ‘உங்கிட லண்டன் பழக்கத்தை இஞ்ச காட்டாதீங்கோ, கட்டுப்பாடு தேவையெண்டு’ இவவ ஏசினது. ஆரைப் பார்த்தாலும் வழியிற கேஸ் எண்டு அவவுக்கு ஒரு பேரிருந்தது. லைலாத் தோழர் எங்களுக்கு முதலே இயக்கத்திலயிருந்து விலத்திற்றா.”
“ஏன் இயக்கத்திலயிருந்து வெளியில வந்தவ?”
“அது எனக்குச் சரிவரத் தெரியேல்ல, ஆனால் இயக்கம் உடையத் தொடங்கின உடனேயே கெட்டிக்காரங்கள் ஓடித் தப்பிற்றாங்கள். லைலா லண்டன் படிப்பெல்லா.. நாங்கள் அரைகுறையள் நிண்டு இழுவுண்டு வந்தது. மொக்குகள் எல்லாம் அங்கயிருந்து செத்துப்போனாங்கள். புலி போட்டது அரைவாசி…எங்கிட ஆக்களே போட்டது அரைவாசி.”
“அந்தக் கீர்த்தி மாஸ்டர் இப்ப எங்க?”
“ஆருக்குத் தெரியும்! பி.எல்.ஓவுக்குப் போன ஆளை பிறகு ஒருதரும் கண்டதாத் தெரியேல்ல. அவர் லெபனானிலேயே அடிபாட்டில செத்துப்போனார் எண்டு ஒரு கதையிருக்கு. அப்பிடியில்ல லெபனானில மாணிக்கத்தோட பிரச்சினைப்பட்டுத் திருப்பி இந்தியாவுக்கு வந்துதான் காணாமல் போனவர் எண்டும் ஒரு கதையிருக்கு”
செல்லத்துரையிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் வழியெல்லாம் எனக்கு இலங்கை நாயகி குறித்த சித்திரங்களே மனதிற்குள் வந்து போயின. ஆனால் இப்போது மனது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. அடுத்தநாள் கீழ்த்தளத்தில் லிப்டின் அருகே காத்திருந்து இலங்கை நாயகியுடன் லிப்டில் ஏறி அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவர் வழமைபோலவே தலையைச் சிறிது அசைத்து வைத்தார்.
நான் புதிதாகப் பார்ப்பதுபோல ஓரக் கண்ணால் இலங்கை நாயகியைக் கவனித்தேன். அவர் தலை குனிந்து கையிலிருந்த நாயைத் தடவிக்கொண்டிருந்தார். இலங்கை நாயகி எலுமிச்சம் பழ நிறம். அதனால் கூட அவருக்கு மஞ்சள் குருவியென்று பெயர் வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். சற்றுப் பருமனான உடல்வாகு, அல்லது அவரது குள்ளமான தோற்றம் அவரைப் பருமனாகக் காட்டுகிறது. தலையில் ஒரு நரை முடி கூடக் கிடையாது. லிப்ட் கதவுகள் திறந்ததும் விறுவிறுவென அவர் கால்களை அகற்றி வைத்து வேகமாக நடந்து போனார். இப்படிக் கால்களை எறிந்து விறுக்காக நடந்துபோகும் பெண்களை ஊரில் ஆண்மூச்சுக்காரி என்பார்கள்.
ஒருநாள் காலையில் நான் கீழ்த்தளத்து வாசற்படியில் உட்கார்ந்திருந்தபோது தபாற்காரி வந்து தபாற் பெட்டிகளிற்குள் கடிதங்களைப் போட்டுக்கொண்டிருந்தாள். திடீரென ஒரு யோசனை உதிக்க நான் போய் தபாற்காரியின் அருகில் நின்று இலங்கை நாயகிக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா எனக் கவனித்தேன். அன்று இலங்கை நாயகிக்குக் கடிதம் வந்திருந்தது. அதைத் தபாற்காரி இலங்கை நாயகி என்று எழுதப்பட்டிருந்த பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றதும் நான் கீழே கிடந்த ஒரு நீளமான மெல்லிய குச்சியை எடுத்து அந்தக் குச்சியைப் பெட்டிக்குள் விட்டு லாவகமாகக் கடிதத்தை வெளியே எடுத்தேன். எங்கள் தொடர்மாடிக் குடியிருப்பில் இவ்வாறு குச்சிவிட்டு ஆட்டும் வேலையை ஒளிவு மறைவாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே தபால் பெட்டிக்குச் சாவியிருக்கிறதோ இல்லையே அநேகமானோர் இவ்வாறு குச்சி விட்டுத்தான் கடிதங்களை எடுத்தார்கள். தபால் பெட்டிகளுக்குக் கீழே நீளமான குச்சிகள் எப்போதும் கிடக்கும்.
நான் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு பத்தாவது தளத்திற்கு வந்தேன். எங்கே வேலை செய்கிறார், என்ன வருமானம், அவரின் தொடர்புகள் எத்தகையவை என எந்தவொரு தடயத்தையும் எனக்குத் தராமல் புகையால் வரைந்த ஒரு சித்திரம் போல இலங்கை நாயகி எங்களது குடியிருப்பில் இருந்தார். இந்தக் கடிதத்தைக் கொடுக்கும் சாட்டில் இலங்கை நாயகியின் வீட்டிற்குள் நுழைவது, குறைந்த பட்சம் அவர் கதவைத் திறந்து கடிதத்தை வாங்கும்போது கதவு இடைவெளிக்குள்ளால் அவரது வீட்டின் உள்ளே எட்டியாவது பார்த்துவிடுவது என்பதுதான் எனது திட்டம். உண்மையில் எனக்கு இதுவொரு தேவையில்லாத வேலைதான். ஆனால் யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் சந்தேகத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எனது மனம் என்னை வழிநடத்திற்று.
நான் ஏழாம் இலக்கக் கதவின் முன்னே நின்று அழைப்பு மணியை அழுத்திக் கையை மணியிலிருந்து எடுக்கவில்லை, சடாரெனக் கதவு திறந்தது. இலங்கை நாயகி கதவுக்குப் பக்கத்திலேயே நின்றிருக்க வேண்டும். அல்லது இவ்வளவு சடுதியில் கதவு திறபட வாய்ப்பேயில்லை. திறந்த கதவு நான்கு அங்குலங்கள் மட்டுமே திறந்தது. கதவுக்கும் நிலைக்கும் இடையே உட்புறமாக ஒன்றுக்கு இரண்டாக இரண்டு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த நாய் கீச்சிடும் சத்தம் கேட்டது. திறந்த கதவு இடைவெளிக்குள்ளால் மூக்குக் கண்ணாடியணிந்த இலங்கை நாயகியின் கண்கள் என்னைப் பார்த்தன.
“எக்ஸ்கியூஸே முவா மேடம், உங்கிட பெயர் ராஜரத்தினம் இலங்கை நாயகியா?”
கதவின் இடுக்கு வழியே பதில் ஏதும் வரவில்லை.
“இலங்கை நாயகி எண்ட பேருக்கு வந்த கடிதம் ஒண்டு என்ர பெட்டிக்க கிடந்தது, தபால்காரி மாறிப் போட்டுட்டாள் போல” என்று கடிதத்தைக் கதவு இடுக்கை நோக்கி நீட்டினேன்.
“கடிதத்தைக் கொண்டுபோய் என்ர தபால் பெட்டிக்குள்ள போடுங்கோ” என்று இலங்கை நாயகி சொன்னதும் கதவு சாத்தப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் பகல் தூக்கத்திலிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. மாதத்தின் முதல் ஞாயிறு. எங்களது குடியிருப்புப் பகுதிக்கு இயக்கப் பொடியன்கள் பத்திரிகைகள் விற்கவும் பணம் சேர்க்கவும் வரும் நாள். நான் எழுந்து சென்று கதவைத் திறந்ததும் எனது கையைப் பற்றிக் குலுக்கியவாறே இரண்டு பொடியன்களும் உள்ளே வந்து அமர்ந்தார்கள்.
“சொல்லுங்க தம்பியவ, நாட்டில என்ன புதினம்?” என்று நான் அவர்கள் எதிரே அமர்ந்தவாறே கேட்டேன்.
“சொன்னா நீங்கள் என்ன உதவியா செய்யப் போறீங்கள்” என்று அவர்களில் ஒருவன் கசப்புடன் சொல்ல, மற்றவன் என்னை வலு தீவிரமாகப் பார்த்துக்கொண்டே ‘அண்ணன், இப்ப உலக நாடுகள் எல்லாம் எங்கிட போராட்டத்தக் கவனிக்குது. தமிழீழ அரசு அமைஞ்சிற்றுது. எங்களட்ட முப்படையுமிருக்கு, ஒரு நீதி நிர்வாகம் இருக்கு, காவல்துறை இருக்கு, வங்கி இருக்கு. எங்கிட அரசை உலகம் அங்கீகரிக்கிறதுதான் மிச்சம். உங்களப் போல ஆக்கள எல்லாம் இந்த நேரத்தில எங்களுக்கு உதவி செய்ய வேணும்” என்றான்
நான் அவர்களைப் பார்த்து எனது முகத்தைப் பாவமாக வைத்தவாறே “தம்பி நீங்கள் என்ன சொன்னாலும் தாறதுக்கு என்னட்டக் காசில்ல, இந்தப் புத்தகம் பேப்பருகளைத் தாங்கோ அதுக்கு மட்டும் காசுதாறன்” என்றேன். அவர்கள் என்னிடம் ஒரு சஞ்சிகையையும் பத்திரிகை ஒன்றையும் தர நான் எண்ணிச் சில்லறைகள் கொடுத்தேன்.
சில்லறைகளை வாங்கிக்கொண்டு பொடியன்கள் புறப்படும்போது எனக்கு அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியது. நான் அந்தப் பொடியன்களைப் பார்த்து “தம்பி இஞ்ச ஏழாம் நம்பரில புதுசா ஆக்கள் வந்திருக்கினம், அங்க போனீங்களா?” என்று கேட்டேன். பொடியன்கள் ‘பிரேக்’ அடித்து நின்றார்கள்.
“என்ன பேர்?”
“இலங்கை நாயகி”
“சிங்களப் பேர் மாதிரியெல்லோ கிடக்கு”
“இல்லைத் தம்பி தமிழ்தான், இலங்கை நாயகி எண்டது தமிழ்ப் பேர்தான், சிங்களமெண்டா லங்காராணியெண்டல்லோ பேர் இருக்கும்”
பொடியன்கள் வெளியே போனதும் நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே நின்று கதவில் இருக்கும் வெளியே பார்க்கும் துவாரம் வழியாக வெளியே நடப்பதை அவதானித்தேன். அந்தப் பொடியன்கள் ஏழாம் இலக்கக் கதவருவே போய் நின்று அழைப்பு மணியில் கை வைக்கவும் கதவு சடாரெனத் திறந்தது. பொடியன்கள் உள்ளே பார்த்துப் பேசுவது தெரிந்தது. ஆனால் அவர்கள் பேசுவது இங்கே எனக்குக் கேட்காது. திறந்த வேகத்திலேயே இலங்கை நாயகியின் கதவு மூடப்பட்டது.
நான் மெல்ல எனது கதவைத் திறந்து வெளியே வந்து இயக்கப் பொடியன்களிடம் “தம்பி மனுசி என்ன சொன்னது?” எனக் கேட்டேன். ஒரு பொடியன் சலித்துக்கொண்டே “மனுசி கதவே திறக்கமாட்டன் எண்டு சொல்லிப் போட்டுது, இயக்கப் பத்திரிகை வாங்குங்கோ எண்டு கேட்டதுக்கு பேப்பரைக் கொண்டு போய்க் கடையில போடுங்கோ வாங்குறன், வீட்டை வரக் கூடாது எண்டு சொல்லிப்போட்டுது” என்று சொல்ல, அடுத்தவன் “இலங்கை நாயகி எண்டது மனுசிக்குப் பொருத்தமான பேராத்தான் கிடக்குது” என்றான்.
எனக்கு இலங்கை நாயகி மேல் மெது மெதுவாக ஆர்வம் குறையலாயிற்று. ஏனெனில் அதுக்கு மேலே தலைபோகிற பிரச்சினைகளெல்லாம் என்னைச் சூழ நடந்துகொண்டிருந்தன. பிரான்ஸில் வாழும் ஒரு இலட்சம் தமிழர்களில் எனக்கு இலங்கை நாயகியும் ஒருவரானார். எப்போதாவது அவர் எதிர்ப்பட நேரிடுகையில் நான் வணக்கம் சொல்வதும் அவர் தலையசைப்பதும் தொடர்ந்தது. நான் புன்னகைக்கும்போது அவர் எனக்குத்தான் தலையசைக்கிறாரா அல்லது எப்போதுமே கையிலிருக்கும் தனது நாயோடு தலையசைத்து அவர் செல்லம் கொஞ்சுகிறாரா என்று எனக்கு வரவரச் சந்தேகமாயிருந்தது.
ஒருநாள் எனது அழைப்பு மணி ஒலிக்கக் கேட்டு நான் கதவைத் திறந்தபோது அங்கே இலங்கை நாயகி நின்றிருந்தார். நான் “உள்ளுக்க வாங்க அக்கா” என்று கூப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்து நின்றேன். அவர் ஓரடி முன்னால் வந்து திறந்திருந்த கதவைப் பிடித்தவாறே நின்றார். எனக்கும் அவருக்கும் இடையே இருந்த மேசையில் எனது சிகரெட் பெட்டி கிடந்தது. எதற்கு இவர் என்னிடம் வந்திருக்கிறார் என்று நான் மண்டையைக் கசக்கியவாறே சிகரெட் பெட்டியை எடுக்க ஓரடி முன்னால் சென்றபோது இலங்கை நாயகி பதறிப்போய் பின்னால் நகர்ந்து வெளியே சென்றார். ‘நான் மஞ்சள் குருவிய ரேப் செய்யப்போறனாக்கும், அதுதான் பயப்பிடுறா’ என்று ஆத்திரத்துடன் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் என்னைப் பார்த்து அவ்வாறு பதறியடித்தது எனக்குக் கொஞ்சம் அவமானமாயுமிருந்தது. இலங்கை நாயகி மறுபடியும் முன்னால் வந்து கதவைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
“அன்ரனிதாசன் நீங்கள் எனக்கொரு உதவி செய்வீங்களா?”
என்னுடைய பெயர் எப்படி இவருக்குத் தெரியும்..? சரி அவரும் தபாற் பெட்டியில் பார்த்திருப்பார் போல என்று நினைத்துக்கொண்டே “சொல்லுங்கோ அக்கா என்ன செய்ய வேணும்” என்று கேட்டேன்.
“எனக்குச் சரியான சுகமில்லாமல் கிடக்குது, வெளிய போக ஏலாமக் கிடக்கு. லைலாவுக்கு சாப்பாடு வாங்கவேணும் வாங்கிக்கொண்டுவந்து தருவீங்களா” என்று கேட்டார். நான் தலையாட்டியதும் அவர் மெதுவாக நடந்து வந்து கையில் வைத்திருந்த பணத்தையும் உணவுப் பொருட்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த தாளையும் மேசையின் விளிம்பில் வைத்துவிட்டுச் சென்றார்.
நான் நாய்க்கான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வரும்போது இலங்கை நாயகி என்ன சாப்பிடுவார், அவருக்கு ஏதும் தேவையில்லையா? என யோசித்துக்கொண்டே வந்தேன். இலங்கை நாயகியின் கதவின் முன்னால் நின்று நான் அழைப்பு மணியில் கை வைத்ததும் நான் எதிர்பார்த்தது போலவே கதவு உடனே திறக்கப்பட்டது. அந்த நான்கு அங்குல இடைவெளிக்குள்ளால் நான் பொருட்களை ஒவ்வென்றாக எடுத்துக் கொடுக்க இலங்கை நாயகி ஒவ்வொன்றாக வாங்கி வைத்துக்கொண்டார். நான் அத்தோடு வந்திருந்தால் மரியாதை. நான் பேச்சை வளர்க்கும் ஆர்வத்தில் “நாட்டில் என்ன செய்தியெண்டு ஏதாவது அறிஞ்சியளோ” எனக் கேட்டேன். “எனக்கு ஒண்டும் தெரியாது” என்ற பதில் வந்ததும் கதவு மூடப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
அது ஸ்ரீலங்காவில் யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டு வீசியதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நேரமது.
நான் இலங்கை நாயகியின் உடல்நிலை குறித்து ஏதாவது கேட்டிருந்தால் அவர் பதில் சொல்லியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
கொடும்பனி கொட்டிக்கொண்டிருந்த காலமது. புல்வெளிகள் எல்லாம் பனிப் பாலைகளாக மாறியிருந்தன. ஜனவரி மாதத்தில் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வந்தன. பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் என எல்லா மாதங்களுமே அவலச் செய்திகளுடன் பிறந்து மடிந்துபோயின. மே மாதத் தொடக்கத்தில் குளிர் மடியத் தொடங்கிற்று. நான் கீழ்த்தளத்து வாசற்படியில் குந்தியிருந்தபோது இலங்கை நாயகி சுமக்க முடியாத சுமையுடன தூரத்தே நடந்து வருவது தெரிந்தது. நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன். அவரின் கைளில் இருந்த இரண்டு பைகள் நிறையப் பாண் துண்டங்கள் இருந்தன. அவரின் பின்னே லைலா மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது. நான் அவரின் கைகளிலிருந்த பைகளை வாங்கிக்கொண்டேன்.
லிப்டில் போகும்போது நான் இலங்கை நாயகியிடம் “எதுக்கு இவ்வளவு பாண்?” என்று கேட்டுச் சிரித்தேன்.
இலங்கை நாயகி தனது நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு “குளிருக்க நிண்டு எங்கிட பிள்ளையள் போராடிக்கொண்டிருக்குதுகள், அதுகளுக்கு சாண்ட்விச் செய்துகொண்டுபோய்க் குடுக்கப் போறன்” என்றார்.
நான் இலங்கை நாயகியின் கதவுவரை சென்று பாண் துண்டங்கள் நிறைந்த பைகளைக் கீழே தரையில் சுவரோடு சாய்த்து வைத்தேன். இலங்கை நாயகி நான் அங்கிருந்து நகரும்வரை காத்திருந்துவிட்டு, தனது கதவைத் திறந்து பைகளை இழுத்துக்கொண்டு உள்ளே போனார். லைலா உள்ளே நுழைந்ததும் கதவு மூடப்பட்டது.
நான் இரவு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத் தமிழர்கள் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் கீழே நாற்பது நாட்களாகத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தைக் காண்பித்தார்கள். மேலேயிருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். எப்படியும் முப்பதாயிரம் சனத்துக்குக் குறையாது என நினைக்கிறேன். இப்போது தொலைக்காட்சியில் இலங்கை நாயகி தோன்றினார். அவரின் கையில் பிரபாகரனின் படம் இருந்தது. செய்தியாளரிடம் அவர் பிரஞ்சு மொழியில் துல்லியமாகப் பேசினார். “இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்தி அங்கே விமானத் தாக்குதல்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள், ஒரு தாயாகக் கேட்கிறேன்..சர்வதேசமே எனது பிள்ளைகளைக் காப்பாற்று”  என்று விம்மிய குரலில் பேசினார் இலங்கை நாயகி. பேசும்போது அவரின் உடல் பதறிக்கொண்டிருந்தது. அவரின் கைகள் தொலைக்காட்சிச் செய்தியாளரை அடிப்பதுபோல முன்னும் பின்னும் போய்வந்தன. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் பேசியிருப்பார். ஆனால் அவரின் குரலும் ஓலமும் கேட்பவர்களின் ஆன்மாவை உலுக்கக் கூடியவை. இலங்கை நாயகி தனது பேச்சை முடிக்கும்போது தனது கையிலிருந்த படத்தை உயரே தூக்கிக்காட்டி “எங்கள் தலைவர் பிரபாகரன்”  என்றார். அப்போது அவரது குரல் கணீரென ஒலித்தது. அன்று மே எட்டாம் தேதி.
அதற்குப் பின்பு ஒரு மாதம் கழிந்திருக்கும், நான் எனது கதவைத் திறந்து லிப்டை நோக்கிச் சென்றபோது அங்கே நாயுடன் லிப்டுக்காகக் காத்திருந்தார் இலங்கை நாயகி. லிப்ட் கதவுகள் முடிக்கொண்டன. இருவரும் ஒரேதளத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறோம்,  ஆனால் நம்முடைய பேச்சுவார்த்தைகள் என்னவோ லிப்டில்தான் நடக்கின்றன. இயக்கமும் அரசாங்கமும் சொந்த நாட்டில் பேசாமல்  மூன்றாவது நாடொன்றில் பேசிக்கொள்வதுபோல நமக்கு லிப்ட் முன்றாவது தளம்.
“அக்காவ கொஞ்ச நாளைக்கு முன்னம் நான் பிரஞ்சுச் செய்தியில் பார்த்தனான்”
இலங்கை நாயகி மெதுவாகத் தலையசைத்தார். அது நாய்க்கா அல்லது எனக்கா என்பது தெரியவில்லை. நான் அவரின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே ” கையிலயிருந்த படத்தையெல்லாம் தூக்கிக்காட்டி அடிக்குமாப்போல பேசினீங்கள்” என்றேன்.
இலங்கை நாயகி உதட்டைச் சுழித்து மேலே பார்த்துக்கொண்டே “அந்தப் படமோ, அது பிரபாகரனோ என்னவோ எண்டு சொன்னாங்கள்” என்றார். லிப்ட் கதவு திறந்ததும் இலங்கை நாயகி கால்களை அகல வைத்து நடந்து வெளியே போனார். நாய் அவரின் பின்னாலே ஓடிற்று. நான் லிப்டிற்குள் அப்படியே நின்றிருந்தேன். லிப்ட் மூடிக்கொண்டது.
நேற்று நான் வெளியே பெரும் சத்தங்களைக் கேட்டு ‘லீவு நாளில கூடப் படுக்க விடுறாங்களில்லை’ எனத் திட்டிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தேன். நேரம் காலை பத்துமணியாகியிருந்தது. கதவைத் திறந்து வெளியே என்ன சத்தம் எனப் பார்த்தேன். இலங்கை நாயகியின் கதவு முன்னே கூட்டமாயிருந்தது. பொலிஸார் வந்து கதவை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஆறாம் இலக்கத்தில் குடியிருக்கும் அந்த ஆபிரிக்கப் பெண்மணியிடம் “என்ன விசயம்?” என்று கேட்டேன். தான் இரண்டு மூன்று நாட்களாகவே ஏழாம் இலக்க வீட்டின் உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்ததாகவும் இன்று துர்நாற்றம் அளவுக்கு மீறிப்போகவே தான் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் அவர் சொன்னார். நான் என் நாசியை விரித்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டேன். அப்படி ஒரு துர்நாற்றத்தையும் நான் உணரவில்லை. நான் எப்போது கடைசியாக இலங்கை நாயகியைக் கண்டேன் என்பது எனக்குச் சரியாக ஞாபகத்தில் வர மறுத்தது. ஆனாலும் கடந்த பத்துப் பதினைந்து நாட்களாகவே நான் அவரைக் காணவில்லை என்பது எனக்கு உறைத்ததும் எனக்கு நெஞ்சுக்குள் தண்ணீர் வற்றிப்போயிற்று.
கதவு உடைக்கப்பட்டதும் பொலிசார் அந்தப் பகுதியை யாரும் நெருங்காதவாறு சிவப்புப் பிளாஸ்டிக் நாடாக்களைக் குறுக்கே கட்டினார்கள். உள்ளே இலங்கை நாயகியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து பத்து நாட்களாகியிருக்கலாம் எனச் சொன்னார்கள். நான் ஒரு பொலிஸ்காரனைக் கூப்பிட்டு அவனிடம் மெல்லிய குரலில் “உள்ளே ஒரு நாயும் இருந்தது, அது உயிரோடு இருக்கிறதா எனப் பாருங்கள்” என்றேன்.
உள்ளே போன பொலிஸ்காரன் திரும்பிவந்து என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “உள்ளே நாய் எதுவும் இல்லை” என்றான்.
“அதுவும் செத்திருக்கலாம்” என்றேன்.
“எல்லாம் தேடிப் பார்த்தாயிற்று அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றான் பொலிஸ்காரன்.
இலங்கை நாயகியின் உடல் பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்டு வெளியே எடுத்துவரப்பட்டது. நான் கண்களை இறுக முடிக்கொண்டேன். லிப்டுக்குள் அவர்கள் இலங்கை நாயகியின் உடலை வைக்கும் சத்தம் கேட்டது. நான் கண்களைத் திறந்தபோது லிப்ட் போய்விட்டிருந்தது. நான் மெல்ல நடந்து எனது கதவைத் திறந்து உள்ளே வந்து படுக்கையில் விழுந்தேன். படுக்கையில் அப்படியே கண்களை மூடியவாறே கிடந்தேன்.
இரவு ஏழு மணியளவில் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். இப்போது இலங்கை நாயகியின் வாசலின் முன்னே யாருமில்லை. நான் மெல்ல நடந்துபோய்ப் பார்த்தபோது உடைக்கப்பட்ட கதவு அடைக்கப்பட்டு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. இப்போது நான் துர்நாற்றத்தை அங்கே உணர்ந்தேன். உடனே ஆறாம் இலக்கக் கதவைப் போய்த் தட்டினேன். அந்த ஆபிரிக்கப் பெண் கதவைத் திறந்து வெளியே வந்தார். நான் பதற்றத்துடன் அவரிடம் “நீங்கள் துர்நாற்றத்தை உணர்கிறீர்களா?” எனக் கேட்டேன்.
அந்தப் பெண் என்னைக் கவலையோடு பார்த்து “காலையிலேயே சடலத்தைக் கொண்டுபோய் விட்டார்களே…இப்போது துர்நாற்றம் எதுவுமேயில்லையே” என்றார்.
“அவர்கள் ஒரு சடலத்தை மட்டும்தான் கொண்டு சென்றார்கள்” என்று நான் முணுமுணுத்தேன். அந்த ஆபிரிக்கப் பெண் என்னை இரக்கத்தோடு பார்த்து “இறந்துபோன அந்தப் பெண்மணி உன்னுடைய நாட்டைச் சேர்ந்தவரா?” எனக் கேட்டார்.
நான் ஆம் என்று தலையாட்டினேன்.
“நீங்கள் எந்த நாட்டவர்கள்?” என அந்தப் பெண் கேட்கவும் “ஸ்ரீலங்காவோ என்னவோ ஒரு பேர்” என்று சொன்னேன்.
எனது மூளை முழுவதும் லைலாவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியே நிரம்பியிருந்தது. அந்த நாயை இலங்கை நாயகியைத் தவிர வேறு யாரும் கொன்றிருக்கவோ அழித்திருக்கவோ வாய்ப்பில்லை என்று திடீரென என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதை நான் நம்பவும் ஆரம்பித்தேன். ஆரம்பம் முதலே இலங்கை நாயகி மீது எனது அடி மனதிலே மண்டிக் கிடந்த சந்தேகமும் வெறுப்பும் இப்போது முழுவதுமாகத் திரண்டு மேலே வரலாயிற்று. மஞ்சள் குருவி ஒரு வெண்ணிற நாயைக் கொன்றது.
அதுதான் இந்தக் கதையின் ஆரம்பித்திலேயே நான் சொன்னேனே, இந்தக் கதைசொல்லியின் மனது வக்கிரத்தால் நிரம்பியிக்கிறது!
(‘காலம்’ ஜனவரி 2011 இதழில் வெளியாகிய கதை)