Friday, 15 May 2015

https://www.facebook.com/muni.arasu.9


தொகிமொலாவின் வரலாறு

மீண்டு தமிழவனின் எழுத்துகள். இம்முறை அவரின் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல்.
தொகிமொலா முன்பு வாசித்த முஸல்பனி நாவலிலும் வந்தமையால் எனக்கு அந்நியமாகவில்லை. இங்கோ அந்த புனைவை மறக்க செய்யும் அளவு வரலாற்றுப் புனைவு ஒன்று இருக்கிறது. இதை வாசிக்கும் போது முஸல்பனி என்னுள் இன்னமும் ஒரு படி கீழே இறங்குகிறது. நேற்று அந்நாவலில் வர்ணனைகள் இல்லாததை பார்த்து சந்தோஷம் கொண்டேன். இதை வாசித்தவுடன் அந்நாவலில் ஏன் வர்ணனைகள் இல்லை என்று விசனம் கொள்கிறேன்.

க.வை.பழனிச்சாமியின் ஆதிரை நாவலை வாசித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன் - தங்களின் நாவலில் கரு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் நீட்சி அதிகமாக உள்ளதே என. அது என்னவோ அந்நாவலை பொறுத்தவரையில் உண்மை தான். பக்கங்களை மட்டும் குறைத்திருந்தால் காத்திரமான படைப்பாக அமைந்திருக்கும். காத்திரம் மட்டும் இப்போது மிஸ்ஸிங்!" அதற்கு அவர் சொன்ன பதிலில் தான் வர்ணனைகள் ஒரு நாவலில் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன்.

தமிழவனின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். இரண்டுமே மேஜிகல் ரியலிஸத்தை(மாயா யதார்த்தம்) கொண்டிருக்கிறது. இது போன்ற நாவல்களில் முக்கியமாக இருப்பது இந்த வர்ணனைகள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வர்ணனைகள் இல்லாமல் இருந்திருந்தால், சிவகாமியின் சபதத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நம்மிடையே அவை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.

வர்ணனைகள் வாசகனை தன்னிலை மறந்த நிலைக்கு கொண்டு செல்லும். அங்கு சென்ற பின் யோசிக்க வைப்பது யோசிக்க வைக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்யலாம். வெறும் மேஜிகல் ரியலிஸத்தை எங்குமே நம்மால் காண முடியாது. அது வாசகனை உள்ளிழுப்பதோடு முடிந்துவிடுகிறது. இந்த வர்ணனைகள் நீட்சியுடன் இருப்பதற்கான காரணம் அவை வாசகனின் வாசிப்பில் அவனுள் ஒரு obsession ஐ வேரூன்றுகிறது. இதன் மூலம் அவன் அந்த மாய உலகத்தை நம்ப துவங்குகிறான். அல்லது உள்வாங்க ஆரம்பிக்கிறான். அப்படி அவன் உள் நுழைந்துவிட்டால் அவனுக்கு கதை மாந்தர்கள் நெருக்கம் கொள்கிறார்கள். அப்பொழுது எழுத்தாளன் என்ன எழுத்து சேட்டைகளை செய்ய வேண்டுமெனினும் செய்து வாசகனை திக்கு முக்காட செய்யலாம்.

முஸல்பனி நாவலிலோ நம்மால் அதை காண மட்டுமே முடிகிறது. ஒட்டு மொத்த கதைக்களனும் அல்லது அந்நாவலில் காட்டப்படும் தொகிமொலா என்னும் நாடும் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருந்துவிடுகிறது. இது அந்நாவலில் இருக்கும் சிறு வீழ்ச்சி.

உள்செல்லும் முறை என்பது எல்லோருக்கும் பழக்கப்பட்டதே. நாம் நம் பத்தாம் வகுப்புவரை கட்டாயமாக வரலாற்றை படித்து வந்திருக்கிறோம். வெறுமனே நெட்டுரும் போது நமக்கு வரலாறு வெறும் வார்த்தைகளாக இருந்துவிடுகிறது. காந்தி மண்டேலா மாசேதுஙிலிருந்து ஹிட்லர் முசோலினி ரஸ்புதின் என்று அனைவரின் வரலாற்றையும் கற்கும் போது நமக்குள் ஒரு காட்சிபடிமம் ஆரம்பிக்கிறது. அங்கே அந்த வரலாறு உயிருடன் ஓடுகிறது. இதைத் தான் உள்செல்லும் முறை என்கிறேன்.

வரலாறு முழுவதையும் சொல்வது அல்ல. ஒரு மனிதனின் அல்லது பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகளின் முழுமையை சொல்வது தான் வரலாறு. வரலாற்றில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் வாய்வழிச் செய்திகளாக இருந்திருக்கிறது. பாட்டிகளின் மூலம் கடத்தபட்டு கதைகளாக சொல்லப்பட்டு வந்த கதைகள் காலப்போக்கில் காலாவதியும் ஆகியிருக்கின்றன.

இதை இங்கு குறிப்பிட்டதன் காரணம் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல் இதே வரலாற்றை சொல்லும் எழுத்து வகையில் தான் எழுதபட்டிருக்கிறது. மேலும் இக்காலத்திய கதைசொல்லி ஒருவன் இந்த தொகிமொலாவின் வரலாற்றை மெதுவாக சொல்லுகிறான். இந்த வகையில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்பதால் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. மேலும் வரலாற்றை சொல்லும் போது இடையில் சொல்வோன் கேட்போன் என்று இருவர் வருகிறார்கள். சொல்வோன் தான் வரலாற்றை சொல்லுபவன். கேட்போன் கேட்பவன். அவனுக்கு இடையிடையில் வரும் சந்தேகங்கள் அப்போதே தீர்க்கப்படுகிறது. வாசகனும் உள்நுழைவது போல் பல வெளிகளை இந்நாவல் கொண்டிருக்கிறது.

இந்த கேட்போன் சொல்வோன் என்பவர்களை நான் முழுமையாக சொல்லியே ஆக வேண்டும். அதற்கு காரணம் இவ்விருவர்கள் எனக்குள் பெரிதாக விளையாடுகிறார்கள். இந்த நூலினுள் என்னால் நுழைய முடிய்வில்லை. அதற்கு காரணமும் இவ்விருவர்கள் தான். இவர்களை எனக்கு பிடிக்கவும் செய்கிறது வெளியெற்ற வேண்டும் என்ற அவாவும் எனக்குள் எழுகிறது. கதை நிகழாமல் ஒரு கூத்தினை கேட்பது போல் இவ்விருவர்களும் நிகழும் சம்பவங்களை வரலாறுகளை மாற்றியமைக்கிறார்கள். ஆகவே நாம் உள்ளே நுழையாமல் இந்நூலை வெளியிலிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படியே ரசிக்க இவ்விருவர்களால் நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்விருவர்கள் இல்லையெனில் நாவல் முழுமையடைந்திருக்காதோ என்றும் இவர்கள் இல்லாத படைப்பு எப்படியிருக்கும் என்னும் சிந்தனை என்னுள் ஆற்றாமையை விதைக்கிறது.

கதை யாதென சொல்ல முடியாது. எந்த ஒரு வராலாறும் ஒரே ஒரு கதையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்றை சொல்லுங்கள் என்று சொல்லி அதற்கு பதிலாய் ஆங்கிலேயர் ஆண்டார்கள் நாம் எதிர்த்து வெற்றி கொண்டோம் என்று சொன்னால் மட்டும் அது வரலாறாகிவிடாது. அதே போலத் தான் இங்கும்.

தொகிமொலா நாட்டில்,
பச்சைராஜன் - அரசன். இவனுக்கு உடல் பச்சையாக இருக்கும். மேலும் ஒற்றைக்கண் மட்டுமே.
பாக்கியத்தாய் - ராணி. இவளால் கண்களை மூடியும் பார்க்க முடியும். கண்களை திறந்தும் உறங்க முடியும்.
மலை மீது ஒளி - இருவருக்கும் பிறந்த முதல் மகன். இவனால் தன் உயிரை பிரித்து பலரினுள் சென்று வாழ முடியும்.
சொல்லின் பொருள் - இருவருக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனுக்கு கவிதை நன்றாக வரும்.
மூன்றாவதாக ஒரு தங்கை. அவள் நிழலாக இருப்பவள்.
கருணாகரத் தொண்டைமான் - ராணியின் படையில் இருப்பவன்.

இந்நூலிலிருந்து எந்தவொரு குறிப்புகளையும் நான் எடுத்தாளவில்லையே எனலாம். இங்கு அப்படி செய்ய முடியாது. பிரதி அப்படியொரு உருவத்தை கொண்டிருக்கிறது. சின்ன உதாரணம் பாக்கியத்தாய் உடல் பெருத்து க்ஷீணமடைவது போல ஒரு சம்பவம் நிகழும். அப்போது சொல்லின் பொருள் அம்மா எனக் கூற அவளின் வியாதி தீர்கிறது. இதை எப்படி நான் அர்த்தபடுத்திக் கொள்ள ? தற்கால குடும்ப அமைப்புகளின் மீது வைக்கப்படும் ஒரு பகடியாக நான் இதை பார்க்கிறேன். மேற்கத்திய காலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் சில விஷயங்களை மறுதலித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று அம்மா. இது மூலக் கதையுடன் ஒன்றவில்லை. காரணம் எழுதப்படும் முறை வரலாற்று ரீதியானது. அந்த வரலாற்றின் ஒரு சரடே இது என்பதேயொழிய வரலாற்றின் நீட்சியல்ல. இப்படி சொல்ல வேண்டுமெனில் முழு நாவலையும் நானே சொல்ல வேண்டியிருக்கும். அதனாலே தான் இந்நாவல் சார்ந்து மிக மேம்போக்காக எழுதியிருக்கிறேன்.
இவர்களைத் தாண்டி இவர்களால் உருவெடுக்கும் சில மனிதர்கள். இந்த அனைவரையும் கொண்டு எழுத்தப்படும் வரலாறே தொகிமொலா வரலாறு. அதன் தொகுப்பே சரித்திரத்தில் படிந்த நிழல்கள். சுவாரஸ்யமான நூல்

அற்புத கணங்களை யாத்தெடுக்கிறது......
யுஜினியோ மொன்டேலின் -கவிதை.
ஈரம்சுமக்கும் கணங்களுக்குள் முளைக்கும் காளான்களின் வசிகரம் போன்றவைக் கவிதைகள். நொடியை சொடுக்கும் துரிதத்தில் பளிச்சிடும் காட்சிகளின் உடலியம்; அதை அறிதலுக்குள் சேகரிக்கும் வாசகனின் பிரய்த்தனமும் அசாதாரணமானவை. சொற்களில் குவியும் கவனம்; காட்சிஅலகுகளின் வண்ணங்களைத் தப்பிக்க விட்டுவிடும்.மறுப்டியும் நம்மைச் சுண்டி இழுக்கும் கவிதைமொழியின் மனோவெளி .
நாம் அனுதினமும் பார்த்து குறிப்பறியாமல் நினைவில் இடம்பெற அனுமதிக்காதவைகள் பல உள்ளன. அவைகளை கவிதையின் சொல்லுதலுக்குள் உணர்ந்துவிட்டு மீண்டும் எதிர்கொள்ளுவது ஒருவிதம். பார்வையின் காண்வயத்தில் புலப்படாத ஒன்றினால் இடறுவதுபோல் நிகழ்ந்துவிடும். படிமங்களூம் ; குறியீடுகளும். உருவகங்களும் இப்படி சில நேரம் பிரக்ஞையை முன்னறிவிப்பின்றி சுண்டிவிட்டு கவிதையின் இயற்-விஸ்தீரணத்தை புலப்படச் செய்பவை.
உள்ளங்கையினுள் தென்படும் வரைபடத்தில் ;தனது விதிநிலத்தைத் தேடி அலையும் யாத்திரிகனின் பாதி மங்கிய சுவடுகளுக்குள்- அவனது வியர்த்ததின் அடுக்குகளில் கதையொன்று தீட்டப்பட்டுள்ளது. அதன் புறங்கையின் வளைவும் நெளிவும் நிறைந்த அலைதலில்; மின்னிப் பாயும் விவரணையின் கட்டுக்குள் கவிதையாடல் அடங்காது. உணர்புலன் காட்சிகளை மறதியின் சர்ப்ப கவ்வலில் இருந்து கவிதைமொழி தன்னை விடுவித்துக் கொள்கிறது. இதை பிரதிக்குள் கையகப்படுத்தும் கண்கட்டு வித்தையை கதை/கவிதைச் சொல்லிகள் செய்கின்றனர்.
எதையொன்றையும் பார்க்கிறோம் ஆனால் காணுதலைச் செய்கிறோமா? என்ற வினா நம்மை உறுத்திக் கொண்டேயிருகிறது. வாசித்தலின் தன்னிச்சையின் பின்னிகழ்வாக வார்த்தையின் பருண்மையில் உணர்புலனின் உடலியம் பொதிந்திருக்கிறது. சொற்படிமங்களின் மேலடுக்குக்கும் - கீழடுக்கிற்கும் இடையில் வாசிப்பு நிகழ்கிறது.
இந்த இடையடுக்கில் துடிப்புறும் கவித்துவம் அளப்பெரியது. யாசுனாரி கவபாட்டாவின் ”Palm -of -the -hand -Stories” ல் வரும் மலைமுகட்டிலுள்ள கிராம கல்லறை
"The Maidens Prayers" வரிகள்....
"Did you see it?"
"I saw it."
Did you see it?
"I saw it"
" The village was in a round valley , and in the center of the valley was a small hill. A stream flowed through the valley around the hill. On top of the hill was the village cemetery."
**********************
"You saw it , didn't you?"
"Yes "
"You saw it, didn't you?"
"Yes"
பார்த்தலுக்கும் காணுதலுக்குமானா காண்வெளியின் இரட்டைப் பிளவை ஒரு விசாரணைக்கு உட்படுத்தும் கதையாடலை கொணடது. பார்த்தலுக்கும் /காணலுக்கும் நடுவே ஊடடாடும் கவித்துவத்தின் மாய அடுக்கு இது.
இதேபோல் அநித்தியமும்/ நித்தியமும் இரண்டற ஒன்றையொன்று ஆரத்தழுவி திளைப்பவை Eugenio Montale ன் கவிதைகள். அவரது இவ்வரிகளில்
................the flash that crystallizes
trees and walls surprises them in that
eternity or an instant,
திடீர் நொடியின் நித்தியத்தைக் கவிதைசொல்லியின் குரலாக்குகிறது . மொன்டேலின் கவிதை. மொண்டேல் பற்றி எழுதும் இட்டாலோ கால்வினோ...
.....and even the most minute natural presences in the poet's everyday observation appear as vortices.
’ஒருவேளை’ என்ற பழகிப்போன பொழுதுகளின் நீர்சுழிப்பிலிருந்து மொன்டேலின் கவிதை அற்புத கணங்களை யாத்தெடுக்கிறது. ஒரு திரையில் ஒளிச்சேர்க்கைகளால் காட்சிப்படுத்தப்படும் தந்திரங்கள் போல் மொண்டேலின் கவிதை மிளிர்கிறது.
Perhaps one morning going along in barren air like glass,
I shall turn around to see the miracle take place :
nothingness at my back, a void stretching
behind me, with drunk man's terror.
நமது தினசரி வாழ்தலில் விரவியுள்ள இன்மை நம்மை பின் -தொடருவதை கோடிட்டுக் காண்பிக்கிறது கவிதை. எனக்கு பின்புறம் விரிந்திருக்கும் வெற்றிடத்தை ஒரு குடியனின் பயங்கரமெனக் கூறுகிறது கவிதை வரிகள். நம் இருத்தலைச் சுற்றி பைசாசமாக பரந்திருக்கும் வெறுமை ஒரு நாணயத்தை நம்முன் சொடுக்கி இனமைக்க்கும் / வெறுமைக்கும் இடையேயான் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. பூவா தலையா சொடுக்கலில் இயக்கமற்று நம்முன் ஒளிரும் அற்புதங்கள் கைநழுவிப் போகிறது.
Then as on a screen , assembling themselves in one rush
will come trees. houses , hills, by the accustomed trick.
But it will be too late : and I shall go on quiet
among the men who do not turn, with my secret.
நன்கு பழகிப்போன மரங்கள், வீடுகள், மலைகள், இன்னும் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் காட்சிகள் . தினசரி காணும் பரிதியின் ஒளியின் பல்வேறு நிறச்சாயங்கள்; பறவைகளின் சப்தக் குறிகள், இவையெல்லாம் ஒற்றை ஒருங்கிணைவில் அமைகின்றன. ஆனால் காலம் பொய்மைக்குள் அமிழ்கிறது. அபரிதமான மனிதச் சுழிப்பில் இருப்பு அமைதியுறுகிறது. சகமனதுடன் ஒன்றி திரும்பிப் பார்க்காமல் சீறிப்பாயும் திரளிற்கிடையே .......................................................
என் அற்புதம் என்னில் மட்டும் இரகசியமாய் தனிமையடைகிறது.
-எஸ்.சண்முகம்-
Palm- of- the -hand- Stories
by :Yasunari Kawabata.
Shanmugam Subramaniam's photo.*Poesie /Poems
by Eugenio Montale
translated by ; George Kay
*Montale's Rock
by: Italo Calvino
(The Literature Machine)
Like · Comment · 


Shanmugam Subramaniam's photo.
மக்காண்டோ
புனைவின் கதையைச் சொல்ல வாழ்ந்த
கதைசொல்லி மெல்குவிடாஸ்
மரணத்தின் கதையை முன்னுரைத்து
இன்று
தனிமையின் புதிருக்குள் கரைந்து
வாசகர்களை
சோக நிலம் மக்காண்டோவில்
கரைததார்
கார்சியா மார்க்குவேஸ்.
எஸ்.சண்முகம்

-Ezra Pound -- & - Guillaume Apollinaire- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

ஹா சார்
எனது பூக்களுக்கு மத்தியில்
நீ மோப்பம் பிடிப்பதையும்
கண்- அயர்வதையும் பார்த்திருக்கிறேன்
அதனால் என்ன , பிராத்தனை செய், 
உனக்கு தோட்டக்கலையைப் பற்றித் தெரியுமா
நீ ஆட்டின் கால்களைக் கொண்டிருக்கிறாய் ?
வா ஆஸ்டர் , வா எபெலியோட்டா
எனது தோட்டத்தில் பான் இருப்பதைப் பார்.
ஆனால் நீ நகர்ந்தாலோ அல்லது பேசினாலோ
இது உன்னை துரத்திக் கொண்டு ஓடிவரும்
பயத்தில் உறையச்செய்யும்
தன்னையே இசிவிற்குள்ளாக்கும் .
-Ezra Pound -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.


பசும்புல்வெளிகள் நஞ்சாகியுள்ளன
ஆனால்
இலையுதிர் பருவம் அதிநேர்த்தியானது
அங்கு மேயும் பசுக்கள்
மெல்ல மெல்ல நஞ்சுடைகின்றன
பசுபுல்வெளியின் குங்குமப்பூ லில்லாக்குகள்
விழிகளை சுற்றியுள்ள சருமமாயிருக்கிறது
நீல ஊதாநிறம் இலையுதிர் பருவத்தை
சுற்றியுள்ள சருமத்தை ஒத்திருக்கிறது
உன்னுடைய விழிகளுக்கு என் வாழ்க்கை மெல்ல நஞ்சடைகிறது
குழந்தைகள் பள்ளியிலிருந்து சத்தமிட்டு வெளியே வருகின்றனர்
ஜாக்கட் அணிந்து மவுத் ஆர்கன் வாசித்துபடி விளையாடுகின்றனர்
அவர்கள் தங்கள் அன்னையரை போன்ற
பசும்புல்வெளியின் குங்குப்பூக்களை எடுக்கின்றனர்
மகள்களின்வழி மகள்கள் அவர்களது இமைகளின் வண்ணங்கள்
படபடக்கும் பூக்கள் பித்தான காற்றில் படபடக்கின்றன.
மந்தையின் மேய்ப்பன் மெலிதாய் பாடுகிறான்
பசுக்கள் மெல்ல உக்காரமிடுதலைக் கைவிடுகிறது
என்றென்றைக்குமான இந்த பசும்புல்வெளி
இலையுதிர் பருவத்தால் வற்றிய பூக்களால் நிரம்பியுள்ளன.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Shanmugam Subramaniam 

ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்......
எப்போதும் நாம்
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
எத்தனை பிரபஞ்சங்கள் மறக்கப்பட்டிருக்கின்றன
பிறகு யார்தான் மாபெரும் மறதியாளர்கள்
இந்த அல்லது அந்த உலகின் பகுதியை
நம்மை மறக்க செய்ய யருக்குத்தான் தெரியும்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் எங்கிருக்கிறார்
ஒரு கண்டத்தை மறக்க காரணமாயிருந்தவருக்குத்தான்
நாம் நன்றி சொல்லவேண்டும்
இழக்க
உண்மையாகவே இழக்க
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
வாழ்க்கையை இழந்து வெற்றியைக் கண்டடைய,
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

தனது மையால் உலகை மங்கச் செய்கிறான்
தனது நேசத்திற்குரியவளின் குருதியை
குடிக்க விரும்புகிறான்
நானும் அவனை ஒத்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.

டால்பின்கள் காற்றில் உயரே பாய்கிறது
ஆனால்
கடல் உப்பாகவும் கசப்பாகவும் இருக்கிறது
கனவுகள் மலராய் வெடிக்கலாம்
ஆனால் 
வாழ்க்கை இரக்கத்தை இழந்து மீதமுள்ளது.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

கடவுளே! இராணுவ வீரனாய் இருத்தல்
எத்தனைப் பெரிய மகிழ்ச்சி
நாம் வட்டமாய் அமர்ந்து கேலிபேசியும்,
பாடிக்கொண்டும் இருக்கிறோம்
வடக்கிலிருந்து வீசும் காற்று 
நமது பெருமூச்சுகளை இணைக்கிறது
நான் மோதிரத்தை
தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்.
கடவுள் உன்னுடன் இருக்கட்டும்!
டிரம்பெட் இசை அழைக்கிறது
அவன் துரிதமாய் விடியலின் குறுக்க நடந்தான்
அதோ அங்கே தான் அவன் இறந்தான்
அவனது காதலியை விட்டுச் சென்றான்
அவள் ஆச்சர்யபடும்படியாக விதியைப் பார்த்து நகைத்தான் .
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது..........
அவள் ஒரு சூனியக்காரி சிவந்த கேசத்தையுடையவள்
அவள் ஆண்களை பித்தாக்கினாள்
அவள் ஆண்களை குருடாக்கினாள்
பிஷப் அவளை விசாரணைக்காக அழைத்துவர சொன்னார்
ஆனால் அதன்பிறகு அவளை விடுவிக்க உத்தரவிட்டார்
ஓ லோரெலய் உனது கண்கள் அணிகலன்கள்
வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது
எனது கண்கள் சபிக்கப்பட்டவை எனது இதயம் அயர்ந்துவிட்டது
என்மீது ஏவுப்பட்ட ஒருபார்வை, ஆண்கள் இறந்துபோயினர்
எனது கண்கள் அணிகலன்கள் அல்ல அவை தீப்பிழம்பு
அவர்களது மந்திரவித்தையை கண்டிக்க வேண்டும்
அவர்களது நெருப்பு என்னை எரிக்கிறது
ஓ லோரெலயி
வேறு யாரேனும் ஒருவர் உன்னை சாவதற்கு அனுப்பட்டும்
ஓ மரியாதைக்குரிய பிஷப்பே நையாண்டி செய்யாதீர்கள்
எனது ஆன்மாவிற்கு பிராத்தனைகள் தேவைப்படுகிறது
எனது சதை பணயம் வைக்கப்பட்டுள்ளது
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் மீணடும் வரமாட்டான்
அதனால்
என்னால் காதலிக்க இயலாது நான் எரிந்து போகிறேன்
நீ மறுதலித்த பின் என் கண்கள் எதற்காக
எனது கொடூரமான கண்கள்
எனது நாட்களை இறுதியுறச் செய்யட்டும்
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் நான் பறிப்போயிருக்கிறேன்
எனது இதயம் துன்புறுகிறது காதலன் பிரிந்து போய்விட்டான்
மதகுரு மூன்று அச்சமில்லா பெருவீரர்களை அழைத்தார்
இவளை ஆண்டவனின் மணப்பெண்ணாக கொண்டு செல்லுங்கள் என்றார்
கடவுளின் இல்லத்தில் வசி
ஒ லொரெலய்
உலகத்திற்காக மரி ஆனாலும் மரிக்காதே
அந்த நால்வரும் நதியை நோக்கிச் சென்றனர்
அவளது கண்கள் விண்மீன்கள் .
அவள் இந்த உதவியை கேட்டாள்
இந்த நிலங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் என்னுடையவை
ஆகையால்
அந்த உயரத்தில் உள்ள கல்லின் மேல் ஏறுகிறேன்
ரைன் நதியை ஒருமுறை பார்க்கிறேன்
எனது முகத்தை இறுதியாக ஒருமுறைப் பார்த்துக் கொள்கிறேன்
மலர்களையும் அந்த புல்வெளிகளையும் பார்த்து விடுகிறேன்
இளம் பெண்களுடனும் விதவைகளுடன் இணையும் முன்பு
அவளது சுருட்டை கேசம் காற்றில் சூரிய கீற்றுகளாயின
அவளை கவனித்த பெருவீரர்கள் குருடானார்கள்
நதியில் ஒரு படகு மிதந்து பயணிக்கிறது
அந்த படகின் மீது என் காதலனைக் காண்கிறேன்
எனது காதலனின் அழுகுரலால் என் இதயம் உருகுகிறது
அவள் சாய்ந்தாள் ரைன் நதியுள் வீழ்ந்தாள்
ரைன்நதி அவளது படுக்கையாக இனி எப்போதுமிருக்கும்
அவளது கண்களை தெளிந்த நீரில் கண்டாள்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


காதல்....
ஒரு சர்க்கஸ் கரடியைப் போல் ...........நடனமாடியது.......
நமது இரவுகள் நமது காலைப் பொழுதை இருளடைய செய்துவிடும்.
ஒரு முதிய ஜிப்ஸிக்கு அனைத்துமே நன்றாகத தெரியும்,
நாங்கள் பயணிக்கும் வழியில் அவளுக்கு நன்றி தெரிவித்தோம்
அவள் சொன்னதை பொய்யாக்கும் நம்பிக்கையோடு.
நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கும் தருணத்தில் காதல் நடமிடுகிறது
ஒரு சர்கஸ் கரடியைப் போல் நடனமாடியது
நீலப்பறவையொன்று தனது இறகுகளை இழக்கிறது
மற்றும் யாசகர்கள் தங்களது பிராத்தனைகளை மறந்துவிடுகின்றனர்
நாம் வழியைவிட்டு விலகிச் சுற்றித்திரியலாம்,
ஆனால் நமது விதியிலிருந்து விலகிச் செல்லவியலாது
ஆயினும் நாம் நம்பிக்கையோடு வழியில் காதலை கண்டடையலாம்
அந்த முதிய ஜிப்ஸி சொல்லக் கேட்டதை
கரத்தோடு கரம் பிணைந்து மறந்துவிட முயற்சிக்கலாம்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


எனது கோப்பை வைனால் நிரம்பியுள்ளது சுடரெளியைப் போல் நடுங்குகிறது
கேளுங்கள் , படகுக்காரன் ஒரு மென்பாடலை இசைக்கிறான்
நிலவொளி பதிந்த இரவில் ஏழு பெண்கள் வந்தபோதும்
நதியிலிருந்து எழுந்து வருகையில் அவர்களின் பச்சைநிறக் கூந்தல் நீண்டிருக்கிறது.
இப்போது பாடுங்கள் நடனமாடுங்கள் மாடி சுழலும்வரை
படகுக்காரனின் மென்பாடல் மங்கி மறைகிறது
பொன்னிற கேசமுள்ள அனைத்து அழகியப் பெண்களயும் என்னிடம் கொண்டு வாருங்கள்
அசையா பார்வையுள்ளவர்கள் பின்னலிட்ட சுருள்கேசத்தினர்.
ரைன் போதையுற்று பாய்கிறது,
அதன் வைன் இலைகள் தடங்களாகின்றன,
நடுங்கும் இரவின் பொன்னிறம் அங்கே பிரதிபலிக்கிறது,
மரணத்தில் சடசடப்பில் மென்பாடல் மெலிவடைகிறது
நீர்நங்கைகள் தங்களது பச்சைநிற கேசத்தால் கோடையை பிரமிக்கச் செய்கிறார்கள்-
ஒரு புன்னகையின் உரிக்கப்பட்ட தோலாக
எனது கோப்பை நொறுங்குகிறது.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
.
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 
           
  • Jamalan Tamil"புன்னகையின் உரிக்கப்பட்ட தோல்” அருமையாக உள்ளது இந்த படிமம் அல்லது அதை கற்பனை செய்வதற்கான பிம்பம். கவிதை வரிகளின் இடைவெளி ஒரு மெல்லிய இசையை அல்லது ஒலிப்பை உருவாக்கிறது என்பது எனது வாசிப்பு. இக்கவிதைகளில் அதை கவனம் கொள்ளலாம். வரிகளை பிரிக்கும்போது அந்தஒலியை காதில் கெட்பது அவசியம். இந்த கவிதையில் அந்த ஒலி இடறுவதாக உள்ளது. மொழிபெயர்ப்புடன் ஒலிப்பெயர்ப்பை கவனம் கொள்வது கவிதை பெயர்ப்பிற்கு அவசியம். இந்த ஒலி நமது கவிதை மரபில் உள்ளதுபோலச் செய்வது கவிதையை சிறப்பாக தரும். இக்கவிதை நன்றாக எழுதப்பட்டு உள்ளது. ஒரு தேவதைக்கதையை நினைவுட்டும் கதைப்பாடல்பொல.
    Like · Reply · 3 · 17 hrs
  • Jamalan Tamilசான்றாக...

    கேளுங்கள் , படகுக்காரன் ஒரு மென்பாடலை இசைக்கிறான்

    நிலவொளி பதிந்த இரவில் ஏழு பெண்கள் வந்தபோதும்
    நதியிலிருந்து எழுந்து வருகையில் அவர்களின் பச்சைநிறக் கூந்தல் நீண்டிருக்கிறது.

    கேளுங்கள் , 
    படகுக்காரன் 
    ஒரு மென்பாடலை இசைக்கிறான்
    நிலவொளி பதிந்த இரவில் 
    ஏழு பெண்கள் வந்தபோதும்
    நதியிலிருந்து 
    எழுந்து வருகையில் 
    அவர்களின் பச்சைநிறக் கூந்தல் 
    நீண்டிருக்கிறது.

    - இரண்டின் ஒலிப்பிலும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து பார்த்தால் அதன் இசைப்பு மாறி வருவது சுவராஸ்யமாக உள்ளது.
    Like · Reply · 3 · 17 hrs


  • Shanmugam Subramaniam என்ன சார் உங்களுக்கும் ஓசை கேட்க ஆரம்பித்துவிட்டதா? கேட்கிறதா? சீக்கிரம் வீடு வந்து சேருங்க செப்பலோசையா? அல்லது துள்ளலோசையா?
    மொபைல் மற்றும் கால்வெஸ்டனிற்கும் இடையில்
    ஒரு பெரிய பூந்தோட்டம் பூத்துக் குலுங்குகிறது
    ரோஜாக்கள் கூடவே
    தன்வசம் ஒரு வீட்டை வைத்திருக்கிறது
    அதுவே ஒரு மிகப் பெரிய ரோஜாவாயிருக்கிறது.
    அங்கே ஒரு யுவதி சிலசமயங்களில் நடைபயில்கிறாள்
    தனது செடிகளுக்கிடையில் தன்னந்தனியாக,
    அவளது எலுமிச்சை அவென்யூவில்
    நான் அவளைக் கடந்து செல்லும் தருணத்தில்
    நாங்கள் பார்வை கணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.
    அவள் பின்பற்றும் சமயப் பிரிவு
    மெனோனைட்டின் பெயரைத் தாங்கியுள்ளது,
    அவளது ஆடையில் பொத்தான்கள் இல்லை,
    ரோஜாக்களுக்கும் இலைகளுக்கும் இடையே
    மொட்டுகள் ஏதுமில்லை.
    எனது சட்டைக் கையிலிருந்து இரண்டு காணாமல் போய்விட்டன
    அந்த யுவதியின் இரகசிய நடைமுறைகளும்
    என்னுடையவையும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.
    -Guillaume Apollinaire-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    *(Mennonite : originating in Europe in the 16th century, that opposes infant baptism, practices baptism of believers only, restricts marriage to members of the denomination, opposes war and bearing arms, and is noted for simplicity of living and plain dress.)
    Shanmugam Subramaniam's photo.
    Like · Comment · 

  • டெக்ஸாஸ் கடற்கரையில்
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்......
எப்போதும் நாம்
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
எத்தனை பிரபஞ்சங்கள் மறக்கப்பட்டிருக்கின்றன
பிறகு யார்தான் மாபெரும் மறதியாளர்கள்
இந்த அல்லது அந்த உலகின் பகுதியை
நம்மை மறக்க செய்ய யருக்குத்தான் தெரியும்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் எங்கிருக்கிறார்
ஒரு கண்டத்தை மறக்க காரணமாயிருந்தவருக்குத்தான்
நாம் நன்றி சொல்லவேண்டும்
இழக்க
உண்மையாகவே இழக்க
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
வாழ்க்கையை இழந்து வெற்றியைக் கண்டடைய,
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 
மேரி நீ திரும்பி வரவே மாட்டாயா..................
நீ சிறுமியாக இருந்தபோது அங்கே நடனமாடினாய்
நீ வயதுமுதிர்ந்த பின்பும்கூட அங்கே நடனமாடுவாயா
அவர்கள் பின்னங்காலில் குதித்தும் 
துள்ளியும் நடனக்கூடத்தில் ஆடுவார்கள்
ஒருநாள் எல்லா மணிகளும் ஒலிக்கும்
மேரி நீ திரும்பி வரவே மாட்டாயா
நாம் அணிந்துள்ள முகமூடிகள் எத்தனை நேர்த்தியானது
இசை வெகுதொலைவில் ஒலிப்பதாய் தோன்றுகிறது
எங்கு வானமும் தொடுவானமும் சந்திக்குமோ
அங்கு
ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன் ஆனால் அரைமனதோடு
எது என்னிடம் தவறானதாக இருக்கிறதோ அது இனிமையானது.
பறவைக் கூட்டம் பனியில் விடுவித்து விடப்பட்டுள்ளன
அந்த பனித்துகள்கள் கம்பளியின் வெள்ளிப் புள்ளிகள்
சில போர்விரர்கள் கடந்து போகிறார்கள்
நான் ஏன் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது
என்னிடமுள்ள இதயம் அப்படியொன்றும் குளிர்ந்ததல்ல
அதன்பிறகு வெதுவெதுப்பாயிருக்க
ஆயினும் எனக்கு என்ன தெரியும்
உன் கேசம் மங்கப் போவது ஏனென்று எனக்கு தெரியுமா
சினம் கொண்ட கடலாய் கேசம் சுருள்கிறது
உன் கேசம் மங்கப் போவது ஏனென்று எனக்கு தெரியுமா
இலையுதிர்கால இலைகளாய் நாமிருக்க
நாம் செய்த உறுதிமொழிகள் சிதறிக் கிடக்கின்றன
சியன் ஊடாக நான் நடைபயின்று இருக்கிறேன்
எனது கைகளுக்கு அடியில் ஒரு பழம் புத்தகம்
எனது வலியை ஒத்திருக்கிறது அந்த நதி
தாகம் தணிக்க இயலாமலும் அமைதியாயும் பாய்கிறது
வார இறுதி மீண்டும் எப்போது வரும்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

கடவுள் தன்னைத்தானே பணிவுபடுத்திக் கொள்கிறார்...........
இங்கே மீண்டும் நீ என் அருகாமையில்
போரில் உயிர்நீத்த என் நண்பர்களின் நினைவுகள்
காலத்தின் ஆலிவ்,
பல-நினைவுகள் ஒரேயொரு நினைவை உருவாக்குகிறது
எப்படி நூறு பர்-மென்னிழைகள் ஒரு கோட் உருவாக்குகிறதோ
இந்த ஆயிரம் காயங்கள் தினசரியில் ஒரேயொரு கட்டுரையாகிறது
உன்னைப் போன்று இருண்டு உணரவியலாது
மாறும் என் நிழலின் வடிவத்தை
நீ எடுத்துக் கொண்டாய்
ஒரு செவ்விந்தியன் நித்தியதில் காத்திருத்தலோடு படுத்திருக்கிறான்
நிழல்,
நீ என்னருகில் ஊர்ந்து வருகிறாய்
ஆனால் நீ என்னை கேளாதிருக்கிறாய்
நான் இசைக்கும் இறைமையின் கவிதைகளை உன்னால் அறிந்து கொள்ள இயலாது
ஆயினும் என்னை பொருத்தவரையில்
என்னால் உன்னை கேட்கவும் உன்னைப் பார்க்கவும் முடிகிறது
விதியின் ,
பன்மை நிழல்கள்
சூரியன் உன்னை உன்னிப்பாய் கவனிக்கட்டும்
நீ என்னைப் போதுமான அளவு நேசித்தால் விட்டகல மாட்டாய்
சூரியன் முன் நடனமிடும் நீ புழுதியைக் கிளப்பவுதில்லை
நிழல்,
சூரியனின் மை
எனது ஒளியின் கையெழுத்து
வருத்தங்களின் தளவாட வண்டி
கடவுள் தன்னைத்தானே பணிவுபடுத்திக் கொள்கிறார்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

நானொரு புதரின் இளந்தளிரைக் கையிலெடுத்தேன்
இலையுதிர்காலம் இறந்துவிட்டது
மறந்துவிடாதே
நாம் மீண்டும் சந்திக்கப் போவதில்லை 
ஆயினும்
புதரின் இளந்தளிரில் காலத்தின் நறுமணம்
நான் இன்னும் காத்திருக்கிறேன் மறந்துவிடாதே.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
எனது வகுப்பறை ஒரு கூண்டு
கம்பிகளின் ஊடாக சூரியன் ஒரு கரத்தை நீட்டுகிறது
சுருட்டுகளை பற்றவைக்க ஏதுவாய்
இவை பிரஞ்சு பாடங்கள் ஒரு ஜோக்
நான் பாடம் நடத்த விரும்பவில்லை
புகைபிடிக்க விரும்புகிறேன்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

I sing the joy of wandering
and the pleasure
of the wanderer's death.
-Guillaume Apollinaire-
'I sing the joy of wandering 
and the pleasure 
of the wanderer's death.

-Guillaume Apollinaire-'
Like · Comment · 

Thursday, 14 May 2015

Franz Kafka Love Letter to Milena Jesenska

http://www.links2love.com/love_letters_3.htm


                    1921
      

No, Milena, I beg you once again to invent another possibility for my writing to you. You mustn't go to the post office in vain, even your little postman--who is he?--mustn't do it, nor should even the postmistress be asked unnecessarily.


If you can find no other possibility, then one must put up with it, but at least make a little effort to find one.

Last night I dreamed about you. What happened in detail I can hardly remember, all I know is that we kept merging into one another. I was you, you were me. Finally you somehow caught fire.

Remembering that one extinguished fire with clothing, I took an old coat and beat you with it.

But again the transmutations began and it went so far that you were no longer even there, instead it was I who was on fire and it was also I who beat the fire with the coat. 
    
But the beating didn't help and it only confirmed my old fear that such things can't extinguish a fire.

 In the meantime, however, the fire brigade arrived and somehow you were saved.

But you were different from before, spectral, as though drawn with chalk against the dark, and you fell, lifeless or perhaps having fainted from joy at having been saved, into my arms.

But here too the uncertainty of transmutability entered, perhaps it was I who fell into someone's arms.

குமிழிகள்-பிரமிள்




குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.
-பிரமிள்
--------------------------------------------------------------------
இதிலுள்ள "கைப்பிடியளவு கடல்" என்ற சொல்லே, சிறப்புக்கருதி கவிஞரின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதை பரந்தாமன் ஒரு கட்டுரையில் "பிரமிள் முன்பு வாழ்வைக் கண்ணாடியில் மட்டும் பார்த்தார் ('கண்ணாடியுள்ளிருந்து' என்ற கவிதைத்தொகுப்பு), இப்போது கடலையே கைப்பிடியளவுக்குக் கொண்டுவந்து விட்டார்" என்று குறை கூறினார்.
அப்போது பிரமிள் ஒரு கட்டுரையில் அதை மறுத்தார்.
'கவிதை காட்டும் குறியீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால், இக்குறை கூறப்படுகிறது. "கைப்பிடியளவு கடல்" என்பது வாழ்க்கையை அல்ல; ஒரு மலரை. கைப்பிடியளவுள்ள மலர் ஒரு கடலையே தன்னுள் அடக்கியுள்ளது என்ற நேர்பொருளைவிட்டு அதன் படிமத்தை மாற்றிப் புரிந்துகொண்டதால் குறைகூற நேர்கிறது.' ('சஞ்சாரம்'-கொல்லிப்பாவை) என்று விளக்கினார்.
ஆன்மநிலையின் வெளிப்பாடாகவே இக்கவிதை பிறந்துள்ளது.உயிர்க்குமிழி இன்னும் உடையாமல் வாழ்க்கை நதியில் நழுவிச் செல்கிறது; உடைந்ததும் முழுமையுடன் சங்கமித்துவிடும். உடையும் குமிழிக்கு எதிர்ப்பதமாய், குவிந்துள்ள மலர் மொக்கு வெடிக்கிறது. இறப்பென்பது முழுமையை எதிர்கொள்வதுபோல், பிறப்பு என்பதும் இன்னொரு புதிய முழுமையில் தன்னை விரித்துக்கொள்வதுதான்...
- கால சுப்ரமணியம்