Friday, 15 May 2015

https://www.facebook.com/muni.arasu.9


தொகிமொலாவின் வரலாறு

மீண்டு தமிழவனின் எழுத்துகள். இம்முறை அவரின் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல்.
தொகிமொலா முன்பு வாசித்த முஸல்பனி நாவலிலும் வந்தமையால் எனக்கு அந்நியமாகவில்லை. இங்கோ அந்த புனைவை மறக்க செய்யும் அளவு வரலாற்றுப் புனைவு ஒன்று இருக்கிறது. இதை வாசிக்கும் போது முஸல்பனி என்னுள் இன்னமும் ஒரு படி கீழே இறங்குகிறது. நேற்று அந்நாவலில் வர்ணனைகள் இல்லாததை பார்த்து சந்தோஷம் கொண்டேன். இதை வாசித்தவுடன் அந்நாவலில் ஏன் வர்ணனைகள் இல்லை என்று விசனம் கொள்கிறேன்.

க.வை.பழனிச்சாமியின் ஆதிரை நாவலை வாசித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன் - தங்களின் நாவலில் கரு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் நீட்சி அதிகமாக உள்ளதே என. அது என்னவோ அந்நாவலை பொறுத்தவரையில் உண்மை தான். பக்கங்களை மட்டும் குறைத்திருந்தால் காத்திரமான படைப்பாக அமைந்திருக்கும். காத்திரம் மட்டும் இப்போது மிஸ்ஸிங்!" அதற்கு அவர் சொன்ன பதிலில் தான் வர்ணனைகள் ஒரு நாவலில் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன்.

தமிழவனின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். இரண்டுமே மேஜிகல் ரியலிஸத்தை(மாயா யதார்த்தம்) கொண்டிருக்கிறது. இது போன்ற நாவல்களில் முக்கியமாக இருப்பது இந்த வர்ணனைகள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வர்ணனைகள் இல்லாமல் இருந்திருந்தால், சிவகாமியின் சபதத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நம்மிடையே அவை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.

வர்ணனைகள் வாசகனை தன்னிலை மறந்த நிலைக்கு கொண்டு செல்லும். அங்கு சென்ற பின் யோசிக்க வைப்பது யோசிக்க வைக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்யலாம். வெறும் மேஜிகல் ரியலிஸத்தை எங்குமே நம்மால் காண முடியாது. அது வாசகனை உள்ளிழுப்பதோடு முடிந்துவிடுகிறது. இந்த வர்ணனைகள் நீட்சியுடன் இருப்பதற்கான காரணம் அவை வாசகனின் வாசிப்பில் அவனுள் ஒரு obsession ஐ வேரூன்றுகிறது. இதன் மூலம் அவன் அந்த மாய உலகத்தை நம்ப துவங்குகிறான். அல்லது உள்வாங்க ஆரம்பிக்கிறான். அப்படி அவன் உள் நுழைந்துவிட்டால் அவனுக்கு கதை மாந்தர்கள் நெருக்கம் கொள்கிறார்கள். அப்பொழுது எழுத்தாளன் என்ன எழுத்து சேட்டைகளை செய்ய வேண்டுமெனினும் செய்து வாசகனை திக்கு முக்காட செய்யலாம்.

முஸல்பனி நாவலிலோ நம்மால் அதை காண மட்டுமே முடிகிறது. ஒட்டு மொத்த கதைக்களனும் அல்லது அந்நாவலில் காட்டப்படும் தொகிமொலா என்னும் நாடும் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருந்துவிடுகிறது. இது அந்நாவலில் இருக்கும் சிறு வீழ்ச்சி.

உள்செல்லும் முறை என்பது எல்லோருக்கும் பழக்கப்பட்டதே. நாம் நம் பத்தாம் வகுப்புவரை கட்டாயமாக வரலாற்றை படித்து வந்திருக்கிறோம். வெறுமனே நெட்டுரும் போது நமக்கு வரலாறு வெறும் வார்த்தைகளாக இருந்துவிடுகிறது. காந்தி மண்டேலா மாசேதுஙிலிருந்து ஹிட்லர் முசோலினி ரஸ்புதின் என்று அனைவரின் வரலாற்றையும் கற்கும் போது நமக்குள் ஒரு காட்சிபடிமம் ஆரம்பிக்கிறது. அங்கே அந்த வரலாறு உயிருடன் ஓடுகிறது. இதைத் தான் உள்செல்லும் முறை என்கிறேன்.

வரலாறு முழுவதையும் சொல்வது அல்ல. ஒரு மனிதனின் அல்லது பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகளின் முழுமையை சொல்வது தான் வரலாறு. வரலாற்றில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் வாய்வழிச் செய்திகளாக இருந்திருக்கிறது. பாட்டிகளின் மூலம் கடத்தபட்டு கதைகளாக சொல்லப்பட்டு வந்த கதைகள் காலப்போக்கில் காலாவதியும் ஆகியிருக்கின்றன.

இதை இங்கு குறிப்பிட்டதன் காரணம் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல் இதே வரலாற்றை சொல்லும் எழுத்து வகையில் தான் எழுதபட்டிருக்கிறது. மேலும் இக்காலத்திய கதைசொல்லி ஒருவன் இந்த தொகிமொலாவின் வரலாற்றை மெதுவாக சொல்லுகிறான். இந்த வகையில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்பதால் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. மேலும் வரலாற்றை சொல்லும் போது இடையில் சொல்வோன் கேட்போன் என்று இருவர் வருகிறார்கள். சொல்வோன் தான் வரலாற்றை சொல்லுபவன். கேட்போன் கேட்பவன். அவனுக்கு இடையிடையில் வரும் சந்தேகங்கள் அப்போதே தீர்க்கப்படுகிறது. வாசகனும் உள்நுழைவது போல் பல வெளிகளை இந்நாவல் கொண்டிருக்கிறது.

இந்த கேட்போன் சொல்வோன் என்பவர்களை நான் முழுமையாக சொல்லியே ஆக வேண்டும். அதற்கு காரணம் இவ்விருவர்கள் எனக்குள் பெரிதாக விளையாடுகிறார்கள். இந்த நூலினுள் என்னால் நுழைய முடிய்வில்லை. அதற்கு காரணமும் இவ்விருவர்கள் தான். இவர்களை எனக்கு பிடிக்கவும் செய்கிறது வெளியெற்ற வேண்டும் என்ற அவாவும் எனக்குள் எழுகிறது. கதை நிகழாமல் ஒரு கூத்தினை கேட்பது போல் இவ்விருவர்களும் நிகழும் சம்பவங்களை வரலாறுகளை மாற்றியமைக்கிறார்கள். ஆகவே நாம் உள்ளே நுழையாமல் இந்நூலை வெளியிலிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படியே ரசிக்க இவ்விருவர்களால் நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்விருவர்கள் இல்லையெனில் நாவல் முழுமையடைந்திருக்காதோ என்றும் இவர்கள் இல்லாத படைப்பு எப்படியிருக்கும் என்னும் சிந்தனை என்னுள் ஆற்றாமையை விதைக்கிறது.

கதை யாதென சொல்ல முடியாது. எந்த ஒரு வராலாறும் ஒரே ஒரு கதையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்றை சொல்லுங்கள் என்று சொல்லி அதற்கு பதிலாய் ஆங்கிலேயர் ஆண்டார்கள் நாம் எதிர்த்து வெற்றி கொண்டோம் என்று சொன்னால் மட்டும் அது வரலாறாகிவிடாது. அதே போலத் தான் இங்கும்.

தொகிமொலா நாட்டில்,
பச்சைராஜன் - அரசன். இவனுக்கு உடல் பச்சையாக இருக்கும். மேலும் ஒற்றைக்கண் மட்டுமே.
பாக்கியத்தாய் - ராணி. இவளால் கண்களை மூடியும் பார்க்க முடியும். கண்களை திறந்தும் உறங்க முடியும்.
மலை மீது ஒளி - இருவருக்கும் பிறந்த முதல் மகன். இவனால் தன் உயிரை பிரித்து பலரினுள் சென்று வாழ முடியும்.
சொல்லின் பொருள் - இருவருக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனுக்கு கவிதை நன்றாக வரும்.
மூன்றாவதாக ஒரு தங்கை. அவள் நிழலாக இருப்பவள்.
கருணாகரத் தொண்டைமான் - ராணியின் படையில் இருப்பவன்.

இந்நூலிலிருந்து எந்தவொரு குறிப்புகளையும் நான் எடுத்தாளவில்லையே எனலாம். இங்கு அப்படி செய்ய முடியாது. பிரதி அப்படியொரு உருவத்தை கொண்டிருக்கிறது. சின்ன உதாரணம் பாக்கியத்தாய் உடல் பெருத்து க்ஷீணமடைவது போல ஒரு சம்பவம் நிகழும். அப்போது சொல்லின் பொருள் அம்மா எனக் கூற அவளின் வியாதி தீர்கிறது. இதை எப்படி நான் அர்த்தபடுத்திக் கொள்ள ? தற்கால குடும்ப அமைப்புகளின் மீது வைக்கப்படும் ஒரு பகடியாக நான் இதை பார்க்கிறேன். மேற்கத்திய காலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் சில விஷயங்களை மறுதலித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று அம்மா. இது மூலக் கதையுடன் ஒன்றவில்லை. காரணம் எழுதப்படும் முறை வரலாற்று ரீதியானது. அந்த வரலாற்றின் ஒரு சரடே இது என்பதேயொழிய வரலாற்றின் நீட்சியல்ல. இப்படி சொல்ல வேண்டுமெனில் முழு நாவலையும் நானே சொல்ல வேண்டியிருக்கும். அதனாலே தான் இந்நாவல் சார்ந்து மிக மேம்போக்காக எழுதியிருக்கிறேன்.
இவர்களைத் தாண்டி இவர்களால் உருவெடுக்கும் சில மனிதர்கள். இந்த அனைவரையும் கொண்டு எழுத்தப்படும் வரலாறே தொகிமொலா வரலாறு. அதன் தொகுப்பே சரித்திரத்தில் படிந்த நிழல்கள். சுவாரஸ்யமான நூல்

அற்புத கணங்களை யாத்தெடுக்கிறது......
யுஜினியோ மொன்டேலின் -கவிதை.
ஈரம்சுமக்கும் கணங்களுக்குள் முளைக்கும் காளான்களின் வசிகரம் போன்றவைக் கவிதைகள். நொடியை சொடுக்கும் துரிதத்தில் பளிச்சிடும் காட்சிகளின் உடலியம்; அதை அறிதலுக்குள் சேகரிக்கும் வாசகனின் பிரய்த்தனமும் அசாதாரணமானவை. சொற்களில் குவியும் கவனம்; காட்சிஅலகுகளின் வண்ணங்களைத் தப்பிக்க விட்டுவிடும்.மறுப்டியும் நம்மைச் சுண்டி இழுக்கும் கவிதைமொழியின் மனோவெளி .
நாம் அனுதினமும் பார்த்து குறிப்பறியாமல் நினைவில் இடம்பெற அனுமதிக்காதவைகள் பல உள்ளன. அவைகளை கவிதையின் சொல்லுதலுக்குள் உணர்ந்துவிட்டு மீண்டும் எதிர்கொள்ளுவது ஒருவிதம். பார்வையின் காண்வயத்தில் புலப்படாத ஒன்றினால் இடறுவதுபோல் நிகழ்ந்துவிடும். படிமங்களூம் ; குறியீடுகளும். உருவகங்களும் இப்படி சில நேரம் பிரக்ஞையை முன்னறிவிப்பின்றி சுண்டிவிட்டு கவிதையின் இயற்-விஸ்தீரணத்தை புலப்படச் செய்பவை.
உள்ளங்கையினுள் தென்படும் வரைபடத்தில் ;தனது விதிநிலத்தைத் தேடி அலையும் யாத்திரிகனின் பாதி மங்கிய சுவடுகளுக்குள்- அவனது வியர்த்ததின் அடுக்குகளில் கதையொன்று தீட்டப்பட்டுள்ளது. அதன் புறங்கையின் வளைவும் நெளிவும் நிறைந்த அலைதலில்; மின்னிப் பாயும் விவரணையின் கட்டுக்குள் கவிதையாடல் அடங்காது. உணர்புலன் காட்சிகளை மறதியின் சர்ப்ப கவ்வலில் இருந்து கவிதைமொழி தன்னை விடுவித்துக் கொள்கிறது. இதை பிரதிக்குள் கையகப்படுத்தும் கண்கட்டு வித்தையை கதை/கவிதைச் சொல்லிகள் செய்கின்றனர்.
எதையொன்றையும் பார்க்கிறோம் ஆனால் காணுதலைச் செய்கிறோமா? என்ற வினா நம்மை உறுத்திக் கொண்டேயிருகிறது. வாசித்தலின் தன்னிச்சையின் பின்னிகழ்வாக வார்த்தையின் பருண்மையில் உணர்புலனின் உடலியம் பொதிந்திருக்கிறது. சொற்படிமங்களின் மேலடுக்குக்கும் - கீழடுக்கிற்கும் இடையில் வாசிப்பு நிகழ்கிறது.
இந்த இடையடுக்கில் துடிப்புறும் கவித்துவம் அளப்பெரியது. யாசுனாரி கவபாட்டாவின் ”Palm -of -the -hand -Stories” ல் வரும் மலைமுகட்டிலுள்ள கிராம கல்லறை
"The Maidens Prayers" வரிகள்....
"Did you see it?"
"I saw it."
Did you see it?
"I saw it"
" The village was in a round valley , and in the center of the valley was a small hill. A stream flowed through the valley around the hill. On top of the hill was the village cemetery."
**********************
"You saw it , didn't you?"
"Yes "
"You saw it, didn't you?"
"Yes"
பார்த்தலுக்கும் காணுதலுக்குமானா காண்வெளியின் இரட்டைப் பிளவை ஒரு விசாரணைக்கு உட்படுத்தும் கதையாடலை கொணடது. பார்த்தலுக்கும் /காணலுக்கும் நடுவே ஊடடாடும் கவித்துவத்தின் மாய அடுக்கு இது.
இதேபோல் அநித்தியமும்/ நித்தியமும் இரண்டற ஒன்றையொன்று ஆரத்தழுவி திளைப்பவை Eugenio Montale ன் கவிதைகள். அவரது இவ்வரிகளில்
................the flash that crystallizes
trees and walls surprises them in that
eternity or an instant,
திடீர் நொடியின் நித்தியத்தைக் கவிதைசொல்லியின் குரலாக்குகிறது . மொன்டேலின் கவிதை. மொண்டேல் பற்றி எழுதும் இட்டாலோ கால்வினோ...
.....and even the most minute natural presences in the poet's everyday observation appear as vortices.
’ஒருவேளை’ என்ற பழகிப்போன பொழுதுகளின் நீர்சுழிப்பிலிருந்து மொன்டேலின் கவிதை அற்புத கணங்களை யாத்தெடுக்கிறது. ஒரு திரையில் ஒளிச்சேர்க்கைகளால் காட்சிப்படுத்தப்படும் தந்திரங்கள் போல் மொண்டேலின் கவிதை மிளிர்கிறது.
Perhaps one morning going along in barren air like glass,
I shall turn around to see the miracle take place :
nothingness at my back, a void stretching
behind me, with drunk man's terror.
நமது தினசரி வாழ்தலில் விரவியுள்ள இன்மை நம்மை பின் -தொடருவதை கோடிட்டுக் காண்பிக்கிறது கவிதை. எனக்கு பின்புறம் விரிந்திருக்கும் வெற்றிடத்தை ஒரு குடியனின் பயங்கரமெனக் கூறுகிறது கவிதை வரிகள். நம் இருத்தலைச் சுற்றி பைசாசமாக பரந்திருக்கும் வெறுமை ஒரு நாணயத்தை நம்முன் சொடுக்கி இனமைக்க்கும் / வெறுமைக்கும் இடையேயான் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. பூவா தலையா சொடுக்கலில் இயக்கமற்று நம்முன் ஒளிரும் அற்புதங்கள் கைநழுவிப் போகிறது.
Then as on a screen , assembling themselves in one rush
will come trees. houses , hills, by the accustomed trick.
But it will be too late : and I shall go on quiet
among the men who do not turn, with my secret.
நன்கு பழகிப்போன மரங்கள், வீடுகள், மலைகள், இன்னும் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் காட்சிகள் . தினசரி காணும் பரிதியின் ஒளியின் பல்வேறு நிறச்சாயங்கள்; பறவைகளின் சப்தக் குறிகள், இவையெல்லாம் ஒற்றை ஒருங்கிணைவில் அமைகின்றன. ஆனால் காலம் பொய்மைக்குள் அமிழ்கிறது. அபரிதமான மனிதச் சுழிப்பில் இருப்பு அமைதியுறுகிறது. சகமனதுடன் ஒன்றி திரும்பிப் பார்க்காமல் சீறிப்பாயும் திரளிற்கிடையே .......................................................
என் அற்புதம் என்னில் மட்டும் இரகசியமாய் தனிமையடைகிறது.
-எஸ்.சண்முகம்-
Palm- of- the -hand- Stories
by :Yasunari Kawabata.
Shanmugam Subramaniam's photo.*Poesie /Poems
by Eugenio Montale
translated by ; George Kay
*Montale's Rock
by: Italo Calvino
(The Literature Machine)
Like · Comment · 


Shanmugam Subramaniam's photo.
மக்காண்டோ
புனைவின் கதையைச் சொல்ல வாழ்ந்த
கதைசொல்லி மெல்குவிடாஸ்
மரணத்தின் கதையை முன்னுரைத்து
இன்று
தனிமையின் புதிருக்குள் கரைந்து
வாசகர்களை
சோக நிலம் மக்காண்டோவில்
கரைததார்
கார்சியா மார்க்குவேஸ்.
எஸ்.சண்முகம்