ஹா சார்
எனது பூக்களுக்கு மத்தியில்
நீ மோப்பம் பிடிப்பதையும்
கண்- அயர்வதையும் பார்த்திருக்கிறேன்
அதனால் என்ன , பிராத்தனை செய்,
உனக்கு தோட்டக்கலையைப் பற்றித் தெரியுமா
நீ ஆட்டின் கால்களைக் கொண்டிருக்கிறாய் ?
எனது பூக்களுக்கு மத்தியில்
நீ மோப்பம் பிடிப்பதையும்
கண்- அயர்வதையும் பார்த்திருக்கிறேன்
அதனால் என்ன , பிராத்தனை செய்,
உனக்கு தோட்டக்கலையைப் பற்றித் தெரியுமா
நீ ஆட்டின் கால்களைக் கொண்டிருக்கிறாய் ?
வா ஆஸ்டர் , வா எபெலியோட்டா
எனது தோட்டத்தில் பான் இருப்பதைப் பார்.
ஆனால் நீ நகர்ந்தாலோ அல்லது பேசினாலோ
இது உன்னை துரத்திக் கொண்டு ஓடிவரும்
பயத்தில் உறையச்செய்யும்
தன்னையே இசிவிற்குள்ளாக்கும் .
எனது தோட்டத்தில் பான் இருப்பதைப் பார்.
ஆனால் நீ நகர்ந்தாலோ அல்லது பேசினாலோ
இது உன்னை துரத்திக் கொண்டு ஓடிவரும்
பயத்தில் உறையச்செய்யும்
தன்னையே இசிவிற்குள்ளாக்கும் .
-Ezra Pound -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
பசும்புல்வெளிகள் நஞ்சாகியுள்ளன
ஆனால்
இலையுதிர் பருவம் அதிநேர்த்தியானது
அங்கு மேயும் பசுக்கள்
மெல்ல மெல்ல நஞ்சுடைகின்றன
பசுபுல்வெளியின் குங்குமப்பூ லில்லாக்குகள்
விழிகளை சுற்றியுள்ள சருமமாயிருக்கிறது
நீல ஊதாநிறம் இலையுதிர் பருவத்தை
சுற்றியுள்ள சருமத்தை ஒத்திருக்கிறது
உன்னுடைய விழிகளுக்கு என் வாழ்க்கை மெல்ல நஞ்சடைகிறது

குழந்தைகள் பள்ளியிலிருந்து சத்தமிட்டு வெளியே வருகின்றனர்
ஜாக்கட் அணிந்து மவுத் ஆர்கன் வாசித்துபடி விளையாடுகின்றனர்
அவர்கள் தங்கள் அன்னையரை போன்ற
பசும்புல்வெளியின் குங்குப்பூக்களை எடுக்கின்றனர்
மகள்களின்வழி மகள்கள் அவர்களது இமைகளின் வண்ணங்கள்
படபடக்கும் பூக்கள் பித்தான காற்றில் படபடக்கின்றன.

மந்தையின் மேய்ப்பன் மெலிதாய் பாடுகிறான்
பசுக்கள் மெல்ல உக்காரமிடுதலைக் கைவிடுகிறது
என்றென்றைக்குமான இந்த பசும்புல்வெளி
இலையுதிர் பருவத்தால் வற்றிய பூக்களால் நிரம்பியுள்ளன.
பசுக்கள் மெல்ல உக்காரமிடுதலைக் கைவிடுகிறது
என்றென்றைக்குமான இந்த பசும்புல்வெளி
இலையுதிர் பருவத்தால் வற்றிய பூக்களால் நிரம்பியுள்ளன.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்......
எப்போதும் நாம்
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
எத்தனை பிரபஞ்சங்கள் மறக்கப்பட்டிருக்கின்றன
பிறகு யார்தான் மாபெரும் மறதியாளர்கள்
இந்த அல்லது அந்த உலகின் பகுதியை
நம்மை மறக்க செய்ய யருக்குத்தான் தெரியும்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் எங்கிருக்கிறார்
ஒரு கண்டத்தை மறக்க காரணமாயிருந்தவருக்குத்தான்
நாம் நன்றி சொல்லவேண்டும்

இழக்க
உண்மையாகவே இழக்க
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
வாழ்க்கையை இழந்து வெற்றியைக் கண்டடைய,
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
தனது மையால் உலகை மங்கச் செய்கிறான்
தனது நேசத்திற்குரியவளின் குருதியை
குடிக்க விரும்புகிறான்
நானும் அவனை ஒத்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
டால்பின்கள் காற்றில் உயரே பாய்கிறது
ஆனால்
கடல் உப்பாகவும் கசப்பாகவும் இருக்கிறது
கனவுகள் மலராய் வெடிக்கலாம்
ஆனால்
வாழ்க்கை இரக்கத்தை இழந்து மீதமுள்ளது.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
கடவுளே! இராணுவ வீரனாய் இருத்தல்
எத்தனைப் பெரிய மகிழ்ச்சி
நாம் வட்டமாய் அமர்ந்து கேலிபேசியும்,
பாடிக்கொண்டும் இருக்கிறோம்
வடக்கிலிருந்து வீசும் காற்று
நமது பெருமூச்சுகளை இணைக்கிறது
நான் மோதிரத்தை
தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்.
கடவுள் உன்னுடன் இருக்கட்டும்!
டிரம்பெட் இசை அழைக்கிறது
அவன் துரிதமாய் விடியலின் குறுக்க நடந்தான்
அதோ அங்கே தான் அவன் இறந்தான்
அவனது காதலியை விட்டுச் சென்றான்
டிரம்பெட் இசை அழைக்கிறது
அவன் துரிதமாய் விடியலின் குறுக்க நடந்தான்
அதோ அங்கே தான் அவன் இறந்தான்
அவனது காதலியை விட்டுச் சென்றான்
அவள் ஆச்சர்யபடும்படியாக விதியைப் பார்த்து நகைத்தான் .
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது..........
அவள் ஒரு சூனியக்காரி சிவந்த கேசத்தையுடையவள்
அவள் ஆண்களை பித்தாக்கினாள்
அவள் ஆண்களை குருடாக்கினாள்
அவள் ஆண்களை பித்தாக்கினாள்
அவள் ஆண்களை குருடாக்கினாள்
பிஷப் அவளை விசாரணைக்காக அழைத்துவர சொன்னார்
ஆனால் அதன்பிறகு அவளை விடுவிக்க உத்தரவிட்டார்
ஓ லோரெலய் உனது கண்கள் அணிகலன்கள்
வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது
ஆனால் அதன்பிறகு அவளை விடுவிக்க உத்தரவிட்டார்
ஓ லோரெலய் உனது கண்கள் அணிகலன்கள்
வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது
எனது கண்கள் சபிக்கப்பட்டவை எனது இதயம் அயர்ந்துவிட்டது
என்மீது ஏவுப்பட்ட ஒருபார்வை, ஆண்கள் இறந்துபோயினர்
எனது கண்கள் அணிகலன்கள் அல்ல அவை தீப்பிழம்பு
அவர்களது மந்திரவித்தையை கண்டிக்க வேண்டும்
என்மீது ஏவுப்பட்ட ஒருபார்வை, ஆண்கள் இறந்துபோயினர்
எனது கண்கள் அணிகலன்கள் அல்ல அவை தீப்பிழம்பு
அவர்களது மந்திரவித்தையை கண்டிக்க வேண்டும்
அவர்களது நெருப்பு என்னை எரிக்கிறது
ஓ லோரெலயி
வேறு யாரேனும் ஒருவர் உன்னை சாவதற்கு அனுப்பட்டும்
ஓ லோரெலயி
வேறு யாரேனும் ஒருவர் உன்னை சாவதற்கு அனுப்பட்டும்
ஓ மரியாதைக்குரிய பிஷப்பே நையாண்டி செய்யாதீர்கள்
எனது ஆன்மாவிற்கு பிராத்தனைகள் தேவைப்படுகிறது
எனது சதை பணயம் வைக்கப்பட்டுள்ளது
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் மீணடும் வரமாட்டான்
அதனால்
என்னால் காதலிக்க இயலாது நான் எரிந்து போகிறேன்
எனது ஆன்மாவிற்கு பிராத்தனைகள் தேவைப்படுகிறது
எனது சதை பணயம் வைக்கப்பட்டுள்ளது
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் மீணடும் வரமாட்டான்
அதனால்
என்னால் காதலிக்க இயலாது நான் எரிந்து போகிறேன்
நீ மறுதலித்த பின் என் கண்கள் எதற்காக
எனது கொடூரமான கண்கள்
எனது நாட்களை இறுதியுறச் செய்யட்டும்
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் நான் பறிப்போயிருக்கிறேன்
எனது இதயம் துன்புறுகிறது காதலன் பிரிந்து போய்விட்டான்
மதகுரு மூன்று அச்சமில்லா பெருவீரர்களை அழைத்தார்
இவளை ஆண்டவனின் மணப்பெண்ணாக கொண்டு செல்லுங்கள் என்றார்

கடவுளின் இல்லத்தில் வசி
ஒ லொரெலய்
உலகத்திற்காக மரி ஆனாலும் மரிக்காதே
அந்த நால்வரும் நதியை நோக்கிச் சென்றனர்
அவளது கண்கள் விண்மீன்கள் .
அவள் இந்த உதவியை கேட்டாள்
ஒ லொரெலய்
உலகத்திற்காக மரி ஆனாலும் மரிக்காதே
அந்த நால்வரும் நதியை நோக்கிச் சென்றனர்
அவளது கண்கள் விண்மீன்கள் .
அவள் இந்த உதவியை கேட்டாள்
இந்த நிலங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் என்னுடையவை
ஆகையால்
அந்த உயரத்தில் உள்ள கல்லின் மேல் ஏறுகிறேன்
ஆகையால்
அந்த உயரத்தில் உள்ள கல்லின் மேல் ஏறுகிறேன்
ரைன் நதியை ஒருமுறை பார்க்கிறேன்
எனது முகத்தை இறுதியாக ஒருமுறைப் பார்த்துக் கொள்கிறேன்
மலர்களையும் அந்த புல்வெளிகளையும் பார்த்து விடுகிறேன்
இளம் பெண்களுடனும் விதவைகளுடன் இணையும் முன்பு
அவளது சுருட்டை கேசம் காற்றில் சூரிய கீற்றுகளாயின
அவளை கவனித்த பெருவீரர்கள் குருடானார்கள்

நதியில் ஒரு படகு மிதந்து பயணிக்கிறது
அந்த படகின் மீது என் காதலனைக் காண்கிறேன்
எனது காதலனின் அழுகுரலால் என் இதயம் உருகுகிறது
அந்த படகின் மீது என் காதலனைக் காண்கிறேன்
எனது காதலனின் அழுகுரலால் என் இதயம் உருகுகிறது
அவள் சாய்ந்தாள் ரைன் நதியுள் வீழ்ந்தாள்
ரைன்நதி அவளது படுக்கையாக இனி எப்போதுமிருக்கும்
அவளது கண்களை தெளிந்த நீரில் கண்டாள்.
ரைன்நதி அவளது படுக்கையாக இனி எப்போதுமிருக்கும்
அவளது கண்களை தெளிந்த நீரில் கண்டாள்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)