பெண் தலித் குரல் - உத்தர நல்லுார் நங்கை.
15ம் நுாற்றாண்டில் பாடப்பட்டதாக அறியமுடிகிறது.
15ம் நுாற்றாண்டில் பாடப்பட்டதாக அறியமுடிகிறது.
ஊருடன் பார்ப்பார் கூடி
உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து
நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல
கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ?
பாய்ச்சலூர் கிராமத்தாரே
கொக்கின் மேல் குடுமி கண்டேன்.
15ம் நுாற்றாண்டில் பாடப்பட்ட பாச்சலுார் பதிகம் என்ற 11 பாடல்களைக் கொண்ட சிறு நுால். அனேகமாக இதுவே முதலாவது தலித் பெண்குரல் என கிடைக்கும் தகவல்களை வைத்து குறிப்பிடலாம்.
இதை பாடியது - உத்தரநல்லுார் நங்கை என்ற பெண் கவி. இவர் பற்றிய தகவல்கள் இலக்கிய வரலாற்றில் அரிதாகவே கிடைக்கின்றன.
அபிதான சிந்தாமணி இப்படி குறிப்பிடுகிறது -
”இவள் ஒரு பெண் கவி. பிராமணர்களை வசைபாடினாள்”
1916 இல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை - இப்படி கூறுகிறது.
”உத்தரநல்லுார் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்கு காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை” என்கிறது.
மேலுள்ள தலைப்பு அவருடைய கவிதையில் இருந்து எடுத்ததுதான். இப்பவே கலக்குது. 15ம் நுாற்றாண்டில் எப்படி இருந்திருக்கும்?
ஒரு பனை இரண்டு பாளை
ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அதுவுங்கள் இதுவுங் கள்ளே
ஒரு குலை உயர்ந்ததேனோ
ஒரு குலை தாழ்ந்ததேனோ
பறையனைப் பழிப்பதேனோ
பாச்சலுார்க் கிராமத்தாரே