Wednesday, 20 September 2017

க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல் ஜி. குப்புசாமி


க.நா.சு. 100
க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள்
உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல்
ஜி. குப்புசாமி
தன்னை வெறுக்கிற சமுதாயத்தை விட்டுக் கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கி நின்று உண்மை இலக்கியாசிரியன் தனது முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறான். மௌனமாக, வாசகர் கவனத்தையும் கவர விரும்பாமல் - திருட்டுத் தனமாக என்றுகூடச் சொல்லலாம் - எழுதிச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தனி மனிதனாக அவன் கௌரவிக்கப்படுகிறான். எழுதிவிட்டானானால் ஒரு சில வாசகர்களையேனும் எட்டுவது பெரிய விஷயமாக இல்லை. வேறு என்ன வேண்டும் ஒரு நல்ல உண்மையான இலக்கியாசிரியனுக்கு?
இலக்கிய வட்டம் இதழ் 7, 14.2.64
இன்றையத் தமிழ் இலக்கியம்
கட்டுரையில் க.நா.சு.
கந்தாடை நாராயணஸ்வாமி சுப்ரமண்யம் (க.நா.சு) என்னும் பன்முக ஆளுமையின் மொழி பெயர்ப்பாளர் என்ற பரிமாணம் மட்டுமே இக்கட்டுரையில் மீள்பார்வை செய்யப்பட்டுள்ளது. நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர், விமரிசகர் என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட க. நா. சுவின் முக்கியப் பங்களிப்பு மொழிபெயர்ப்பே.
பொய்த்தேவு, ஒருநாள் போன்ற குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியிருந்தாலும், உலக இலக்கியங்களின் மகோன்னத சிகரங்களை அறிமுகப்படுத்திவந்த அவருடைய தரத்திற்குப் பெரும் இடைவெளியில் இந்த நாவல்கள் அமைந்திருப்பதை இன்றைய வாசகன் உணர்கிறான். ‘தமிழ் மரபு தெரிய வேண்டுமென்றும் அதில்லாவிட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமல்ல’ என்றும் கூறுகிறவர்களுக்குப் பதிலளிப்பது போல் ‘உலக இலக்கிய மரபுகள் நமக்குத் தெரிய வேண்டும். அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம்’ என்று கூறிய க. நா. சு. அதற்கு உதாரணம் காட்டுவதுபோலவே தனது நாவல்களை முயன்று பார்த்திருப்பதாகக் கூறலாம். உன்னதமான எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமையையும் படைப்பாளிக்குள்ளிருக்கும் கவிமனக்கூறுகளைக் கவனிக்கும் நுட்பமான பார்வையையும் அவர் கொண்டிருந்தாலும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய இயல்பான உந்துசக்தி அவரிடம் இருந்ததில்லை.
நவீனக் கவிதை பற்றிய தெளிவான பிரக்ஞையோடு இருந்த அவர்தான் ‘புதுக்கவிதை’ என்ற பெயரையே சூட்டியவரென்றாலும் அவர் இயல்பான கவிஞரும் அல்ல.
இலக்கியத்தை நேரடியாகவே உணர்ந்து அனுபவிக்க வேண்டுமென்ற நம்பிக்கை கொண்டிருந்தவரென்பதால், அவர் இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்த நூல்களில் தரமானவற்றை, தன் ரசனையின் அளவுகோலை மட்டும் வைத்துக் கணித்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தோ அறிமுகமோ செய்துவந்திருக்கிறார்.
விமர்சனத்திலும் அவரது சமகால விமர்சகர்களான சி. சு. செல்லப்பாவின் பகுப்பாய்வுக் கோட்பாடுகளுக்கோ கைலாசபதி, ரகுநாதன் போன்றோரின் மார்க்சிய அடிப்படை விமர்சன முறைகளுக்கோ உட்படாமல் வாசிப்பின்போது தன் மனத்திற்குப்பட்ட விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ரசனை விமர்சகராகவே செயல் பட்டுவந்தார். அவர் தன்னை எக் காலத்திலும் முழுமையான விமர்சகன் என்று கூறிக்கொண்டதுமில்லை.
தொடர்ச்சியான வாசிப்பையும் வாசித்தவற்றில் சிறந்தவற்றை எந்தவொரு மனமாச்சரியமுமின்றிப் பரிந்துரைத்து வந்தது அவர் விரும்பி ஏற்றுச் செய்த விஷயங்கள் என்று கூற வேண்டும். இந்தப் பரிந்துரை என்ற கூரையின் கீழேதான் அவரது மொழிபெயர்ப்புகளையும் வைத்துப் பார்க்க வேண்டுமெனக் கருதுகிறேன்.
2
உலக இலக்கியம் என்பது ஓர் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தமிழில் முதன்முதலாகப் புகுத்தியவர் க. நா. சு.தான். இதற்கான வழி வகைகள் என்னவென்று சிந்திப்பது தன்னைப் போன்ற இலக்கியவாதியின் கடமையென்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உலகத்தில் எந்த மொழியில், எந்தப் பகுதியில் மிகத் தரமானது. உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்காக வழிவகைகள் வகுத்துக்கொள்ள வேண்டும்’ என்ற க. நா. சு. தமிழுக்கு அறிமுகப்படுத்திய, மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகளின் தேர்வு மிக முக்கியமானது. கிரேஸியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ், பேர் லாகர்க் விஸ்ட் போன்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைப் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வணிகப் பத்திரிகைகள் பிரபலமான, பெரும் வாசகர்களைக் கொண்டிருந்த ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கையில் க. நா. சு. முதன்முதலாகக் கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்தார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் படைப்புகளை வாசிக்கையில் ஒருவித அந்நியத் தன்மையை உணர்வதாகவும் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் தமிழ் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவும் அவர்கள் தமது குடும்பம் சார்ந்து பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது என்றும் க. நா. சு கூறியதாக சுந்தரராமசாமி தனது நினைவோடையில் குறிப்பிடுகிறார்.
மேற்கத்திய விமர்சகர்கள் அதிகம் கொண்டாடாத காதரின் ஆன் போர்ட்டர் போன்றோரின் மிகச் சிறந்த கதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறார். அவர் மொழிபெயர்த்த பேர்லாகர் க்விஸ்ட்டின் பாரபாஸ் (அன்பு வழி) மற்றும் ஸெல்மா லாகர்லெவ்வின் மதகுரு போன்ற நாவல்கள் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் பெரும் ஆதர்சமாக இருந்திருக்கின்றன. வண்ணநிலவன் தனது முதல் நாவலான கடல்புரத்திலின் முன்னுரையில் அன்பு வழியைப் போன்றதொரு நாவலைத் தன் வாழ்நாளில் எழுதிவிட முடிந்தால் . . . என்று ஏங்குகிறார். மதகுரு நாவலைக் கிருஷ்ணன் நம்பி பாராயணமே செய்துவந்ததாக சுந்தரராமசாமி கூறுகிறார். நட்ஹம்சனின் நிலவளம் தனது பள்ளிப் பிராயத்திலேயே எத்தகைய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி உலக இலக்கியத்தின்பால் தன் கவனத்தைத் திருப்பியது என்று எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ரோமன் ரோலந்தின் ஜீன் கிருஸ்தஃபர், மார்டின் து கார்டின் தபால்காரன், வில்லியம் ஸரோயனின் மனுஷ்ய நாடகம், அண்டோனியோ பாகஸாரோவின் கடல் முத்து போன்ற இலக்கியத்தின் புதிய சிகரங்களைத் தொட்ட கலைப் படைப்புகளைத் தமிழ் வாசகருக்குக் க. நா. சு. அறிமுகம்செய்து ஒரு மொழிபெயர்ப்பு மரபையே தமிழில் உண்டாக்கி வைத்திருப்பதால்தான் இன்று நம்முடைய சூழலில் நவீன இலக்கியத்தைப் பற்றி ஹொசே சரமாகோ, உம்பர்தோ ஈகோ, மார்கேஸ் என்று பேச முடிகிறது. அவர் மொழிபெயர்த்த முழு நீள நாவல்களைத் தவிர, தான் வாசித்த மேனாட்டு நாவல்கள் ஒவ்வொன்றையும் ஏழு எட்டுப் பக்கத்திற்குள் சுருக்கிப் புகழ்பெற்ற நாவல்கள் என்ற தலைப்பில் தந்ததும் படித்திருக்கிறீர்களா? என்ற தொடர் கட்டுரை மூலம் உலகின் தலைசிறந்த நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், இந்தியாவின் முக்கிய நாவல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தியதும் தமிழுக்கு அவர் ஆற்றிய மிகப்பெரும் தொண்டுகள். அவரது சமகால இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் ஆகியோரைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் பொது வழியிலிருந்து விலகி தாரா சங்கர் பந்தோபாத்தியாயா, விபூதி பூஷன் பந்தோபாத்தியாயா போன்றோரின் நாவல்களை ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்ததும் தி. ஜானகிராமன் அன்னை, குள்ளன் போன்ற ஐரோப்பியப் புனைகதைகளை மொழிபெயர்த்ததும் க. நா. சு. உருவாக்கிய மரபின் தொடர்ச்சியே.
3
க. நா. சு. தனது மொழிபெயர்ப்புகளைச் சரளமாகப் படிக்கும்படி செய்வார். வாசிப்புப் பயிற்சியில்லாத வாசகனுக்கும் புரிய வேண்டும். நமது கலாச்சாரத்திற்கு அந்நியமாக ஒரு படைப்பு இருந்துவிடக் கூடாது என்ற அளவில் இலக்கியப் பரிந்துரையாளராக அவரது கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதுதான். இன்றைய சூழலில் அவரைப் பொருத்திப்பார்க்கும்போது க. நா. சுவை பரிபூரணமான மொழிபெயர்ப்பாளர் என்று கூற முடியாது என்பதுதான் என் எண்ணம். அவர் மொழிபெயர்த்தவை மறுகதைகூறலாகவே (retelling) இருக்கின்றன. அவரளவில், வார்த்தைக்கு வார்த்தை, உத்திக்கு உத்தி, மூலப் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவர அவர் சிரத்தை காட்டவில்லை எனலாம். அவரைப் பொறுத்தவரை அக்கதையின் ஆன்மாவை, எது அக்கதையை முக்கியமாகக் கருத வைத்ததோ எந்த அம்சம் தமிழுக்கு அதைக் கொண்டு வர வேண்டுமென அவரைத் தூண்டியதோ அதைத் தனது மொழிபெயர்ப்பில் கொண்டு வந்தால் போதுமானது என்று அவர் நினைத்திருக்கக்கூடும். தான் மொழிபெயர்த்த நூல்களின் ஆசிரியர்களுடைய தனித்தன்மையைப் பெரும்பாலும் அவரால் புனர்சிருஷ்டி செய்துதர முடிந்ததில்லை. இதற்குக் காரணம் அவரது எளிமையான, வெகுஜனப் பத்திரிகைத்தனமான மொழிநடைதான் என்கிறார் பிரமிள். மேலும் அவர் கூறுகையில், க. நா. சு. எப்போதுமே ஆழ்ந்த, பின்னலான பிரச்சினைகளையோ கவித்துவ அம்சங்களையோ எடுத்தாண்டதில்லை என்கிறார். இதனால் அவரது மொழிபெயர்ப்பின் மூலம் நமக்குக் கிடைக்கும் எழுத்தாளர்களின் சுயத்தன்மைக்கு அவரது தமிழ் ஈடுகட்டியதில்லை. மொழி பெயர்ப்பின் உண்மையான சவால் மூல நூலாசிரியனின் தனித்தன்மையும் நமது மொழியின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டிய அவசியமும் பண்பாட்டு, பிரதேச, மத வேறுபாடுகளால் நிர்ணயிக்கப்படும் வழக்குகள், குறியீடுகள் போன்றவற்றை வேற்று மொழியிலிருந்து நமது மொழிக்குக் கொண்டுவருதலும் ஆகும். மொழிபெயர்ப்பு இந்த அளவு லட்சியத் தன்மையை அடையாவிட்டாலும் மூல ஆசிரியனின் முத்திரையை அப்படியே தரும் முயற்சி முக்கியமானது; நிச்சயம் செய்யப்பட வேண்டியது. க. நா. சு. இதற்காக முயன்றதில்லை என்று பிரமிள் அவதானிக்கிறார்.
உன்னதமான உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு தன்னை மட்டுமே சார்ந்திருந்தது என்ற நினைப்போடு, தன் வாழ்நாள் முடிவதற்குள் அவை எல்லாவற்றையும் தமிழில் கொண்டு வந்தேயாக வேண்டுமென்ற அவசரத்தில் அவர் மொழிபெயர்த்துத் தள்ளிக்கொண்டிருந்ததாக அத்தகைய அசிரத்தையான வாக்கிய அமைப்புகளை வாசிக்கும்போது அவரைப் பற்றிய சித்திரம் என் மனத்தில் வருவதுண்டு. அவருக்கு எதிராக வர்த்தக ஊடகங்களின் எக்களிப்புகள், லட்சக்கணக்கான வாசகர் கூட்டத்தைக் கொண்டிருப்பவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வாசகர்கள், தமிழின் புராதன மரபுகளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டு, உலக இலக்கியங்களிலேயே தமிழ்தான் தலையாயது என்ற பெருமிதத்துடன் மற்ற மொழிகளை உதாசீனம் செய்துகொண்டிருந்த கிணற்றுத்தவளைப் பண்டிதர்களின் ஆரவாரக் கூச்சல்கள், நவீன இலக்கிய சகாக்களிடமிருந்தே தன்னைப் பற்றியும் ( ‘அவர் ஒரு சி. ஐ. ஏ. ஏஜென்ட்) தனது இலக்கியக் கோட்பாடுகள் பற்றியும் (அவர் செய்வது விமர்சனமே அல்ல - அபிப்பிராயங்கள்தான்’) எழுப்பப் பட்டுவந்த அக்கப்போர்கள் போன்ற அனைத்து விதமான தாக்குதல்களையும் அவரது இலக்கிய வாழ்வின் மிகப்பெரும்பான்மைக் காலம்வரை தனியாளாகவே நின்று சமாளித்து வந்திருக்கிறார். இத்தகைய சாதகமற்ற தமிழ்ச் சூழலிலிருந்த ஓர் உணர்ச்சிகரமான கலைஞன் மிக எளிதாக மனம் நொடித்து விலகி விட்டிருக்கக்கூடும்.
க. நா. சுவை வைத்து நடத்தப்படும் மற்றுமொரு சர்ச்சை அவர் எந்த மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார் என்பது. தனக்கென்று பெரிய அளவில் ஆதரவாளர் கூட்டம் ஏதுமில்லாதிருந்த அவருக்குக் கடைசி சில வருடங்களில் சேர்ந்த புதிய தலைமுறை அபிமானிகள் அவருக்குப் பதினெட்டு மொழிகள் தெரியுமென்றும் நார்வேஜிய, ஸ்வீடிஷ், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தாரென்றும் புதிய பிம்பங்களை உருவாக்க, அவருடைய எதிர்ப்பாளர்கள் அவருக்கு ஆங்கிலத்தையும் தமிழையும் தவிர வேறு மொழி எதுவுமே தெரியாதென்றும் ஆவேசத்தோடு வாதாடிவந்திருக்கின்றனர். இத்தகைய விவாதங்களே அவசிய மற்றவை என்றுதான் நான் கருதுகிறேன். க. நா. சு. தானாக எந்தப் புத்தகத்திலும் எந்த மொழிப் பதிப்பை ஆதாரமாக வைத்துத் தான் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டதில்லையென்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆனால் தன்னை ஓர் இலக்கியப் பரிந்துரையாளராகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் என்பதால், இந்த விஷயத்தில் தன்னிலை விளக்கத்தைத் தர அவர் முயலாததைப் பெரிய குறைபாடாகக் கருதத் தேவையில்லையென நினைக்கிறேன்.
பின்னலும் சிடுக்கும் மண்டிய மொழியைக் கொண்ட பிரதிகளை மொழிபெயர்க்க அவர் தேர்ந் தெடுத்ததேயில்லையென்றும் எளிதாகவும் தெளிவாகவும் சொல்லக் கூடிய விஷயங்களை மட்டுமே எடுத்தாண்டதாகவும் பிரமிள் கூறுவதை மறுக்கும்படியாகவே அவர் மொழிபெயர்த்த ஆல்பெர் காம்யு, காதரின் ஆன் போர்ட்டர், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோரின் சிறுகதைகள் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இருந்தும், ஒரு தேர்ந்த வாசகன் பார்த்தவுடனேயே இது க. நா. சு. மொழிபெயர்த்த கதை என்று சொல்லிவிடும்படியாக அவரது மொழிநடை பல கதைகளில் ஒரே ஜாடையில் இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கென்று தனித்துவமான மொழிநடை கெட்டித்துவிடக் கூடாது என்பதில் நவீன மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் கவனமாக இருக்கின்றனர். மிகெல் ஸெர்வாண்டிஸ்ஸின் டான் க்விக்ஸோட் மற்றும் கார்ஸியா மார்கேஸின் பெரும்பான்மையான நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள எடித் கிராஸ்மன் மொழிபெயர்ப்பைத் தவிரச் சொந்தமாக எதையும் எழுதுவதற்கு மிகவும் தயங்குவதாகவும் கூடியவரை தவிர்ப்பதாகவும் கூறுகிறார். அனேகமாக எல்லா எழுத்தாளர்களுமே தாம் ஒரு நாவலை எழுதும் காலத்தில் பிற எழுத்துக்களை அவை தம் எழுத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற ஜாக்கிரதையுணர்வில் வாசிப்பதில்லை. ஆனால் விமர்சனம் உட்பட எந்தவிதமான இலக்கியச் செயல்பாட்டிலும் தொழில்நுட்பச் சட்டகங்களைப் பொருத்திப் பார்க்காத க. நா. சு. இத்தகைய அழகியல் விதிமுறைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருப்பாரென்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இலக்கிய நுண்ணறிவையும் ரசனையையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிவந்த அவருக்கு இத்தகைய ‘தியரி’கள் தெரிந்திருக்காது என்று நினைப்பது அபத்தம்.
அவருக்கு மிக விருப்பமான கெஸ்டா பெர்லிங் ஸாகாவைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு முன்பு ஐம்பது தடவையாவது படித்திருப்பதாக மதகுருவின் முன்னுரையில் கூறுகிறார். இப்போது மொழிபெயர்க்க உட்காரும்போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது என்கிறார். அந்தளவிற்கு லயிப்போடு அவர் மொழிபெயர்த்த இந்நாவலிலும் பாரபாஸிலும் மூல நூலை வைத்து நான் சோதித்துப் பார்த்ததில்லையென்றாலும், ஸெல்மா லாகர்லெவ் மற்றும் பேர் லாகர்க் விஸ்ட் ஆகியோரின் ஆன்மாவிற்கு மிக அருகிலேயே தனது மொழியாக்கத்தைக் கொண்டு சென்றிருப்பதாக நான் உணர்கிறேன். தேவமலர் சிறுகதையில் கிருஸ்துமஸ் இரவன்று கீயிங்கே வனம் விழித்தெழுந்துகொள்ளும் காட்சியை வர்ணிக்கும் அவரது நடை, படித்துப் பல பத்தாண்டுகள் கழிந்த பின்பும் புத்தம் புதிதாக என் நினைவில் ஊறிக்கொண்டிருக்கிறது:
பூமியின் மேல் போர்த்தியிருந்த மாரிக்காலத்துப் போர்வையை ஏதோ ஒரு மாயக்கரம், தெய்வீகக்கரம் எடுத்துவிட்டதுபோலிருந்தது. அப்பட் ஹான்ஸினுடைய கண் முன்னர் பூமியின் மேல் பச்சைப் போர்வை படர்ந்தது. புல்லும் பூண்டும் அடர்ந்து ஒரு நொடியில் வளர்ந்து தலைதூக்கின. எதிரே தெரிந்த குன்றுகளின் சரிவெல்லாம் திடுமென்று பச்சைப் பசேலென்றாகிவிட்டது. விதவிதமான பூச்செடிகள் முளைத்துத் தலைதூக்கிப் பூத்துக் குலுங்கின. அந்த வர்ண விஸ்தாரமே அபூர்வமானதாக, அற்புதமானதாகவே இருந்தது. வேறென்ன சொல்வது? தெய்வீகமானதோர் வர்ணச்சித்திரம் அது. . . அவர் கண்கள் நிறைந்தன. திடீரென்று வெளிச்சம் சற்று மங்கிற்று. மறுபடியும் முன்போல் இருட்டிப்போய் விடுமோவென்று பயந்தார் அப்பட்ஹான்ஸ். ஆனால் வெளிச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அவ்வெளிச்சத்திற்குப் பின்னணியாக ஆறுகளின் சலசலப்பும் அவற்றின் இசையும் எழுந்தன. எங்கேயோ தூரத்தில் ஒரு நீர்வீழ்ச்சியின் சப்தம் கேட்டது.
. . .
க. நா. சு. நமக்கு அறிமுகப்படுத்திய இத்தகைய உன்னதமான வரிகள்தாம் தமிழில் நவீன இலக்கிய மரபு ஒன்று உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தனவென்று நெகிழ்ச்சியோடு மட்டுமல்ல, நிதானத்துடனேயே கணிக்கிறேன்.
4
சர்வதேசக் கதைகளைக் க. நா. சு. மொழிபெயர்த்த அளவிற்குப் பிற இந்திய மொழி இலக்கியங்களிலும் அவருக்கு அக்கறை இருந்தது. இந்தியின் அக்ஞேயாவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. விகாஸ் பப்ளிகேஷன்ஸிற்காக இந்திய மொழிக்கதைகளைத் தொகுத்து, அத்தொகுப்பின் முன்னுரையில் இதற்காக 600 கதைகள் வரை படித்து அவற்றிலிருந்து அக்கதைகளைத் தேர்வுசெய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய இலக்கியம் என்ற ஒன்று உண்டா என்ற தேடல் அவருக்கு எப்போதும் இருந்தது. இந்திய இலக்கியத்தின் சாயலை மேற் சொன்ன கதைகள் சிலவற்றில் பார்ப்பதாக அவர் கூறுகிறார். அவர் அதிகமும் ஈடுபாடு கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய இலக்கியங்களிலும் குறிப்பாக ரஷிய, ஸ்காண்டி நேவிய இலக்கியங்களிலும் இந்தியப் பாரம்பரியத்தைப் போலவே ஆன்மீக அக்கறையும் கடவுள் பற்றிய பிரக்ஞையும் கூடுதலாக இருப்பதைச் சிலாகித்துக் குறிப்பிடுகிறார். ஆன்மிக மரபுகளில் அக்கறை கொண்டிருந்த இலக்கியம் அவருக்கு எப்போதுமே முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.
மொழியை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்திய இலக்கியம் என ஒன்று இல்லைதான். ஆனால் இலக்கியம் என்பது மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. மொழிமூலம் வெளிப்பாடு பெற்றாலும் மொழியைத் தாண்டிய அம்சங்கள் இலக்கிய உருவாக்கத்தில் உள்ளன. பொதுவான வேர்ச்சொற்கள், வெளிப்பாடுகள், படிம வளம், கதைகள், மூலமாதிரிகள் என்ற வகையில் இந்திய மொழிகளுக்கிடையே பொதுவான இழையோடுகிறது. (கே. சச்சிதானந்தன், இந்தியன் லிட்டரேச்சர், 3,4,94) இதிகாசங்களை சுவீகரித்துக் கொண்ட தன்மையிலும் ஆன்மிகத் தத்துவ மரபுகளை ஏற்றுக்கொண்ட விதத்திலும் நாட்டார் இலக்கியக் கூறுகளிலும் காணப்படும் பொதுத் தன்மையை வைத்துத்தான் பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றே என டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் கூறுகின்றனர்.
பலதேசிய இனங்களையும் பல மொழிகள் பேசுவோரையும் பல மதத்தினரையும் கொண்டுள்ள இந்தியாவை சமஷ்டியமைப்பாக வளர்த்தெடுக்காமல் இந்திய தேசம் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் திணிக்க முயலும் தேசியவாத அரசியலின் ஓர் அம்சம்தான் இந்திய இலக்கியம் என்ற கோட்பாடு என்று விமரிசிப்பவர்கள் இருக்கின்றனர். பிராந்திய மொழிகளை இந்திக்கு இணையாக வளர்த்தெடுக்காமல் இருக்கும்வரை இந்திய இலக்கியம் என்று சொல்வதற்கான பொதுக் கூறுகள் நிலவுவது சாத்தியமல்ல என்பது இவர்களது வாதம்.
இந்தியாவின் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் முதலில் தோன்றிய இலக்கியங்கள் ராமாயணமும் மகாபாரதமுமாகவே இருந்திருக்கின்றன. ஆன்மீக அடிப்படையில் இதிகாசங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்திய இலக்கிய மரபு என்று இதைப் பொதுமைப்படுத்திவிட முடியாது. பிராந்திய மொழிகளில் இந்த இதிகாசங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டபோது அவை தத்தமது இன விடுதலைக்கான நோக்கத்திலேயே அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். மூலப் பிரதியின் அடிப்படை நோக்கங்களிலிருந்தே விலகி எதிர்த்திசை நோக்கிப் பயணிக்கும் இந்தப் பிராந்திய இலக்கியங்கள், இதிகாசங்களை சுவீகரித்துக்கொண்டதால் தமது மொழியில் பொதுப்படையான அம்சங்களை உண்டாக்கிக் கொண்டுள்ளனவா என்று கவனிக்கும் தேடல் க. நா. சுவிடம் இருந்தது.
5
இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தத்தமது இலக்கியச் சிறப்புகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதவும் ஆவேசமாக முழங்கவும் ஏராளமானோர் இருந்தபோது அத்தகைய காரியங்களைத் தமிழுக்காகத் தனியாக நின்றுகொண்டு செய்துவந்தவர் க. நா. சு. தமிழ்மொழியில் நடைபெற்றுவந்த புதிய முயற்சிகளைப் பற்றித் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறித் தொடர்ந்து அவர் பேசிவந்திருக்கிறார். புதுமைப்பித்தன், மௌனி போன்றோரின் மேதமையைப் பல ஆங்கிலக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சிலப்பதிகாரத்தையும், நீல. பத்மநாபனின் தலைமுறைகள், சண்முகசுந்தரத்தின் சட்டி சுட்டது, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனல் போன்ற நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
எழுதுவது ஒன்றையே ஜீவனமாகக் கொண்டிருந்த அவர் தனது அந்திமக் காலத்தில் இந்தியாவில் கத்தோலிக்க சமுதாயம் போன்ற நூல்களையும் சமூக உண்மையைத் தீவிரமாகச் சொல்லவில்லை என்று அவரே குறிப்பிட்டிருந்த குருதிப் புனலையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருப்பது தமிழில் முழுநேர எழுத்தாளராக இருந்தால் ஏற்படக்கூடிய நகைமுரண் விளைவுகளுக்கு உதாரணங்கள்.
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வாழ்க்கையில் அவர் ஆங்கிலத்தில் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாக Financial Express இல் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ஆர். வெங்கட்ராமன் கூறுகிறார். அவர் தமிழில் எழுதிப் பிரசுரமாகாதவையே பல்லாயிரம் பக்கங்களைக் கொண்டிருக்கும் என்பது பரவலான நம்பிக்கை. அவற்றையும் அவர் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூல் வடிவத்தில் . . . அல்லது குறைந்தபட்சம் இணையதளத்திலாவது வெளியிட முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் கண்டவரின் நூற்றாண்டில் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி அதுவாகவே இருக்க முடியும்
LikeShow More Reactions
Comment
8 comments
Comments
22 September 2012 at 15:50
LikeShow More Reactions
Manage
Arunmozhi Varman க.நா.சு எழுதிய "ஒரு நாள்" இனைத் தவறுதலாக ஒரு நாள் கழிந்தது என்று குறிப்பிட்டுவிட்டார் என்று கருதுகின்றேன்
20 September 2015 at 02:27
LikeShow More Reactions
1
Manage
Kuppuswamy Ganesan தவறுதான். ஒரு நாள்.
20 September 2015 at 02:39
LikeShow More Reactions
Manage
Samayavel Karuppasamy Grand writing. Thanks for your effort to. write a total article on Ka.Na.Su. I agree with your all the points. Congrats GK. You have become very close to my heart by this article friend.
20 September 2015 at 11:32
LikeShow More Reactions
1
Manage
Kuppuswamy Ganesan Thanks Samayavel Karuppasamy தோழர்
20 September 2015 at 13:16
LikeShow More Reactions
1
Manage
Raja Ramasamy I think narrow mindedness of our Tamil writers of various groups didn't take up his articles for the uplift of Tami modern literature in Ka.Na.Su days.
23 September 2015 at 04:59
LikeShow More Reactions
Manage
நா. விச்வநாதன் க.நா.சு வின் இலக்கியப் பங்க
ளிப்பு அபரிமிதமானது.தஞ்சா
வூரில் அவரிடம் சொன்னேன்:

'உங்களுக்கு கவிதை கதையெல்
லாம் வராது.பித்தப் பூ வும் 
பொய்த் தேவு இரண்டுமே மிகச்
சுமாரான ரகம்.உங்கள் சுய சரி
தையைக் கவிதை நடையில்
எழுதியது அபத்தம்" அப்படியா
சொல்றே" என்ற ஒருவரி பதில்
தான்.இப்போது இலக்கியக்
குருமார்களை இப்படிக் கேட்க
முடியுமா?

Friday, 4 August 2017

கானல் (சிறுகதை) – திலீப்குமார்

https://abedheen.com/2012/08/09/dileepkumar-story1/

கானல் (சிறுகதை) – திலீப்குமார்

எங்கள் அன்பு திலீப்குமார்-ன் ’கடவு’ சிறுகதையைப் பற்றி நண்பர் சுரேஷ் கண்ணன் நேற்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் ஃபேஸ்புக்கில். திலீப்குமாரின் ’கானல்’ சிறுகதையை நான் டைப் செய்து (அல்லது எங்கிருந்தோ காப்பி செய்திருந்தேனா?) வைத்திருந்தது ஞாபகம் வந்தது. ’மீட்சி’ சிற்றிதழில் வந்திருந்ததாக அதில் குறிப்பும் எழுதியிருக்கிறேன். சரியாபிரம்மராஜன் சார்?  – ஆபிதீன்
***
கானல்
மெல்ல மெல்ல, அந்த அறையின் புழுக்கத்தையும் அங்கு திடீரென்று படிந்து விட்ட நிசப்தத்தையும் அவர்கள் உணரத் துவங்கினார்கள். அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நீல நிற சிறிய விளக்கின் மங்கிய ஒளியில் அவர்கள் கரிய நிழல்கள் போல் உறைந்து கிடந்தார்கள். அவர்களது நிர்வாணமான சிவந்த உடல்கள் ஒரு வகையில் பிணங்கள் போன்றும் தெரிகின்றன. அதிருப்தியால் வதங்கிய மலர்களுடன் அவர்கள் கிடந்தார்கள். உடல்களிலிருந்து வீசிய வியர்வையின் நெடியும், படுக்கையில் படிந்த லேசான ஈரமும் பொறுக்க முடியாததாக இருந்தது. என்றாலும், அங்கு நிலவிய மௌனம் கலைக்கப்படாமல் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஏமாற்றத்தின் கொந்தளிப்பு மிகுந்த வெறுமையை அந்த அறையின் இருளிலும், நிசப்தத்திலும் கரைத்துவிட முயன்றார்கள் போலும். அவள், கால்கள் ஒன்றின் மேல் மற்றது கிடக்க உத்திரத்தை வெறித்தபடி நேராகக் கிடந்தாள். மூச்சு விட அவளது ஸ்தனங்கள் சீராய் மெல்ல அசைந்ததைத் தவிர சலனமற்றுக் கிடந்தாள். இவன் பக்கவாட்டில் சாய்ந்து முகத்தை அவளது தோள்களில் புதைந்தபடி இருந்தான். அந்நிலையிலிருந்தே இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படுத்திருந்த விதமும், அவளது அதிருப்தியுற்ற நிர்வாணமும் இவன் மனதைத் தொட்டது. அவள் கண்கள் பனித்திருந்தன என்றும் இவனுக்குப்பட்டது.
இந்த இடத்தின் தனிமை அவர்களுக்கு அன்று மதியம் தான் ஊர்ஜிதமாயிற்று. இவன் அவளிடம் அதை தெரிவித்த போது எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக் கொண்டாள். இருவருக்குமிடைய ஆழ்ந்த கவர்ச்சி என்றும் இருந்ததில்லை. என்றாலும், கிடைத்தால் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்கிற அளவு சஞ்சலம் இருந்தது இருவருக்கும். எப்படியோ ஒருவர் மனதை மற்றவர் அறிந்து வைத்திருந்தார்கள். சற்றுக் கழித்து, அவள் எதையோ லேசாக தீர்மனித்துக் கொண்டவள் போல் சிறிது நகர்ந்து கொண்டாள். இவனும் மௌனமாக விலகி படுத்தான். இவனுக்கு ஏதாவது பேசலாம் என்று தோன்றியது. ஆனால் பேசவில்லை. பேசுவதா அல்லது பேசாமலிருப்பதா அச்சந்தர்ப்பத்தில் எது உசிதம் என்று இவனால் நிச்சயிக்க முடியவில்லை. அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று இவன் நினைத்துப் பார்த்தான். குழப்பமாக இருந்தது. இவனுக்கு முன்பாகவே, அவள் இந்த இடத்தை வந்து அடைந்திருந்தாள். இவன் கதவை தட்டியபோது தளர்த்திக்கட்டிய கேசத்துடன், வெளிர் நீல புடவையில் பவுடர் மணக்க இவன் முன் தோன்றினாள். இவன் உள்ளே வந்ததும், கதவை தாழிட்டு விட்டு இவனை பார்த்துக் கண்களில் அர்த்தம் தொனிக்க முகம் மலர சிரித்தாள்.
அவள் உடல் முழுவதிலுமிருந்து ஒரு வினோத ஆவல் வெளிப்பட்டது போல் தோன்றியது. அவளது விழிகளின் கருமணிகளில் படர்ந்திருந்த பளபளப்பு நிலவின் விரக ஒளிபோல் தாக்கியது. அவர்கள் ஒன்றும் பேசாமல் இறுகத் தழுவிக் கொண்டார்கள். இவன் அவளது தலையை வருடியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒரு அழகிய விலங்கைப் போல் இவனது கைகளில் தகித்து உருகினாள். சிறு குழந்தைகள் போல் அலங்கோலமாக உடைகளைக் களைந்து கொண்டே படுக்கையை அடைந்தார்கள்.
அவள் ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போல் கிடந்தாள். இவன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளே முதலில் பேசினாள். “நாம் எழுந்து கொள்வோம். நேரமாகி விட்டது என்று நினைக்கிறேன்.” தொடர்ந்து “விளக்கைப் போடலாமா” என்று கேட்டாள். இவன் வேண்டாம் என்று பதில் சொன்னான். பின் மெல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள். இவன் அவளைப் பார்த்தான். அவளது அழகிய உடல் ஓர் அற்புத சிற்பம் போல் தோன்றியது. இவன், திடீரென்று அவளை அணைக்க விரும்பி தாபத்துடன் அவளது தோள்களைத் தொட்டான். சட்டென்று அவள் இவன் கைகளை விலக்கி விட்டுக் கொண்டே “போதும்” என்று நிராசை மிகுந்த குரலில் சொன்னாள். இவன் பின்வாங்கி, ஒன்றும் பேசாமல் அவளைக் கடந்து முன்னறைக்குச் சென்றான். இவன் உடைகள் அணிந்து, அவளுக்காகக் காத்திருந்தான். முன்னறையில் தனக்கு வீட்டை உபயோகிக்க கொடுத்த, நண்பனின் மனைவியுடன் கூடிய புகைப்படம் முன்னறையில் மாட்டப்பட்டிருந்தது. இருவரும் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் தன் நண்பனின் மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அந்த பெண்முகம் தன் எளிய புன்னகைக்குப் பின்னாலிருந்து இவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது. இவன் குழப்பத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் மீண்டும், சற்றுமுன் அவளது வாளிப்பான உடல் தன் மீது சரிந்திருந்த காட்சி தெரிந்தது. அன்றைய கூடலில் பிசகு ஏதும் ஏற்படாது என்றே இவன் நினைத்திருந்தான். அவளது அழகான சிறிய மார்பகங்களை முத்தமிட துவங்கிய போது அவள் இவனை இறுக அணைத்துக் கொண்டாள். மூச்சுக் காற்றின் மயக்கும் ஆவேசம் ஜ்வாலையாக எங்கும் படர அவர்கள் கரைந்து அழிந்து கொண்டிருந்தார்கள். மெல்ல, மெல்ல, நிறைவேற்றத்தை நோக்கிய மென்மையான பாய்ச்சல்கள் துவங்கியபோது உலகமே சுற்றியது. இதோ இதோ என்று உச்சத்தை நோக்கிய கடைசி துடிப்புகளின் போது தான் எல்லாமே திடீரென்று மாறியது. அலைகள் பின் வாங்க இவன் விழுந்து நொறுங்கினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாதவளாக முகமும் உடலும் பதற பயங்கரமாக அசைந்து புரண்டாள். இவன் குற்ற உணர்வுடனும், வாஞ்சையுடனும் அவளைத் தாங்கிக் கொண்டான். நீரிலிருந்து திடீரென்று வெளியே எடுக்கப்பட்ட மீன் போல சிறு துடிப்புகளுக்குப் பின் அடங்கிப் போனாள் அவள். இவன் அவளை விட்டு மெதுவாக விலகினான். எல்லாமே கணங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அவள் திடீரென்று விசும்பல்களுடன் அழத் துவங்கினாள். இவன் பேசாமல் கிடந்தான். அவள் முன்னறைக்கு வந்தவுடன், இவன் கிளம்ப ஆயத்த மானான். அவள் முகம் தெளிவாக இருந்தது. கண்களில் அதிருப்தியின் தீவிரம் குறைந்திருந்தது. அவள் இவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.
வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் தெருவுக்கு வந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. வானத்தில் நிலவு மிதந்து கொண்டிருந்தது. இருவரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி மெல்ல நடந்தார்கள். சாலை மரங்களின் இலைகள் சலசலக்க காற்று வீசிய போது இவனுக்கு ஒரு அலாதியான விடுதலையுணர்வு ஏற்பட்டது. மனதின் இறுக்கம் குறைந்தது.
இவன் : என்னை மன்னித்து விடு.
அவள் : எதற்காக?
இவன் : ……இல்லை…. என்றுமே இப்படி நடந்ததில்லை. நீ எப்படி உணர்ந்து கொண்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.
அவள் : பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வருத்தமில்லை.
இவன் :நான் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை என்றாலும் சொல்கிறேன் இப்படி நடப்பது இது தான் முதல் முறை
அவள் : பரவாயில்லை.
இவன் : ஒரு வேளை, இன்று நான் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனா
அவள் : சரி பரவாயில்லை விடு.
இவன் : இல்லை. இந்த வாய்ப்பின் திடீர்தன்மைதான் என்னை தேவைக்கதிகமான பரவசத்திற்குள்ளாக்கி விட்டது.
அவள் : சரி விடு.
இவன் : உன் துணிகரத்திற்கு பயனில்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.
அவள் : போதும், பேசாதே.
இவன் : உனக்கு என் மீது ஒரே வெறுப்பாக இருக்கிறது இல்லையா?
அவள் : இல்லை.
இவன் : என் உடலின் ஆற்றல் குறித்தும் உனக்கு சந்தேகம் வந்து விட்டிருக்கும்.
அவள் : இல்லை.
இவன் : நீ பொய் சொல்கிறாய்.
அவள் : போதும் நிறுத்து.
இவன் : தயவு செய்து, நீ என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே- குறிப்பாக உன் கணவரோடு.
அவள் :………………
இவன் : அடுத்த முறை………….
அவள் : போதும் உன் உளறல்.
அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். பஸ் நிறுத்தம் இருந்த பெரிய சாலையை அடைய இன்னும் சில நிமிடங்கள் நடக்க வேண்டியிருக்கும். இவன் வானத்தை பார்த்தபடி நடந்து வந்தான். அவள், தெருவில் விழுந்த தன் நீண்ட நிழலை கவனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று இவன் மீண்டும் பேசினான்.
இவன் : நாம் இன்று சந்தித்திருக்கவே கூடாது.
அவள் : நாம் என்றுமே சந்தித்திருக்கவே கூடாது.
பஸ் நிறுத்தம் காலியாக இருந்தது. அவர்கள் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்.
***
நன்றி : திலீப்குமார்
***

Saturday, 29 July 2017

Anais Nin’s Diary - தேன்மொழி தாஸ்


Thenmozi Das with Kadanganeriyaan Perumal and 7 others.


11 January ·




Anais Nin’s Diary

=============

நிர்வாண உடலில் பூசப்பட்ட

ஓவியங்களுக்கு உள்ளேயும்

சுயநிறமிழக்காத முலைகளைப்

பார்த்துக்கொண்டே வருகிறாள் அனைஸ்


எனக்குத் தெரியும்

கனிந்த ராஸ்பெர்ரி பழங்களை விடவும்

இனிமை மிக்கதொரு

அழகியின் முலைகளை ருசித்தவள் இவளென


இரகசியங்கள் ஏதும் மறைக்கப்படாத

நாட்குறிப்பேட்டின் பக்கத்தில்

அவளைப் பற்றி அனைஸ்

இப்படி எழுதி வைத்திருக்கிறாள்


“எனக்குள் தீராத ஒரு கொடுங்கனவு இருந்தது

அப்போதுதான் June

திடீரென இந்நகரத்திற்குத் திரும்பியிருந்தாள்

நாங்கள் தாழிடப்பட்ட ஒரு அறையில் தனித்திருந்தோம்

அப்போது

ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் துவங்கினேன்

அவளது ஆடைகளைக் களையச் சொல்லிக் கெஞ்சினேன்

அவள் இரு கால்களுக்கிடையே

அணைக்கயியலாது கனலும் நெருப்பினைக்

காணவேண்டுமெனச் சொன்னேன்”


கையில் சிரெட்டுடன் படுத்திருந்தாள் ஜூன்

எல்லாப் பருவகாலத்துக் குளிரும் திரண்ட கோளமென கண்கள் அவ்வறையில் நடப்பட்டிருக்க

ஒரு ஆணின் முதுகென

சிகரெட்டில் கனல் இறங்கியபின்

வெளிப்பட்ட புகையின் சுருள் வளையங்களுக்குள்

அனைஸின் முலைகள் பூக்களெனச் சிக்கின

June தன்னிரு குடைக்காளான்களால்

அப்பூக்களை நசுங்கச் செய்தாள்


இதைப்பற்றித் தன் நாட்குறிப்பேட்டில்

“June என்மேல் அசைகையில்

என் உடல் முழுவதையும்

ஆண்குறி தழுவுவதுபோல் உணர்ந்தேன்”

என எழுதினாள் அனைஸ்


புணர்தலுக்குப்பின் பிரிக்கயியலாப் பட்டாம்பூச்சிகளென

இரு ஜோடி உதடுகள் கூடிக் கிடந்ததை

மறக்கவே முடியவில்லை என்னால்


இப்போது ட்ரம்பெட்டின் இசையைக் கேட்கிறேன்


சிறு தொலைவில்

ஹென்றி பெருங்கனவுடன் வருகிறான்

இசையை விடவும் இசைக்கின்ற கலைஞர்கள் அற்புதமென

உடலொரு திசையில் நடக்க

உதிர்ந்த நாவல் பழங்களென அனைஸின் கண்கள் அந்நகரத்துச் சாலையைக்

குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கடக்கின்றன


ஆடையணியவிரும்பாத வெளிச்சமென சிலர்

நிர்வாணமாய் அலையும்

உணவு விடுதிக்குள்ளே

நிரம்பிய மதுக்கிண்ணமென அவள் நுழைகையில்

ரிச்சர்டு இவ்வாறு கூறத் துவங்கினான்


“அவன் என்னிடமிருந்தும் hugoவிடமிருந்தும்

உன்னைத் திருடிக்கொண்டான்

எனது முக்கியமான சில சிந்தனைகளை எடுத்து தனது நாவலில் பதிவு செய்துவிட்டான்

என்னை உன் காதலன் என்றும்

உன் கணவனுக்கு மிகச்சிறந்த நண்பனென்றும் நினைத்துக்கொண்டிருந்தேன்

anais

அவன் கடுமையாகச் சித்ரவதை செய்யக்கூடியவன்

புரூக்லைனிலிருந்து வந்த காட்டுமிராண்டி

என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறான்

வெளியே நண்பனாக நடித்துக்கொண்டு

ஆத்மார்த்தமான நண்பர்களைக்கூட

தன் படைப்புக்கான

கச்சாப் பொருளாகப் பயன்படுத்துகிறான்

இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்

எனது வீட்டுக்குள்

இனி புணர்ச்சியில் ஈடுபடக் கூடாது”


ரிச்சர்டு அவ்விடம் விட்டுப் போன பின்

அனைஸின் விருப்பம்

ஹென்றியை விடுதியின் அறைக்குள் அழைக்கிறது


இருண்ட நினைவுகளை வெட்டியெறியப்பட்ட

படச்சுருளெனக் காயும் கம்பளிக்குள்ளே

வெண்ணிற களிமண் தோட்டமெனச்

சரிந்து கிடக்கும் அவள் தேகத்தில்

பறிக்கச் சொல்லி நீட்டிய

ரோஜா மொட்டுக்களை அவன் சுவைக்கிறான்

பின் இருள்விலகாத் தீவின் ஒருவழிப் பாதையில்

அவன் நீரூற்று பாய்ந்து அடங்குகிறது


அக்கணம் ஓயாத trumpetன் ஓசையை அவ்வறையின்

குளிரூட்டப்பட்ட ஜன்னல் மழைத்துளிபோல் நீட்ட

கதகதப்பான நிர்வாணத்துடன் ஓடிச்சென்று

கதவு திறக்கிறாள்.


எண்ணற்ற இசைக் கருவிகளின் ஆரவாரத்துடன்

அடங்காத காட்டினின்று புறப்பட்ட வெட்டுக்கிளிகளென

அந்நகர வீதியை

நிர்வாணத்தால் வீழ்த்தியிருந்தார்கள்


திராட்சைப் பழத்தின் மேல்தோல் கிழித்துப் போர்த்தி

அனைஸ் அவ்வழியே நடக்கத் துவங்குகிறாள்


கழுகின் முகமேந்திய நீல உடலொன்று

அவளைப் பின்தொடர்கிறது


புத்தாடை அணிந்த சிறுமியின் கர்வத்துடன்

ஓவியங்களை உடுத்திய மனிதர்கள்

ஏதேன் தோட்டத்து ஆதிக் குகையைத்

தன் நடனத்தில் வரைந்து காட்டி அலைகையில்


முலைகளையே உன்னதமான ஆடையெனக் கருதும்

ஒரு பெண்ணைக் கடக்கிறாள் anais


அப்போதும் நீலவுடல் அவளைப் பின்தொடர்கிறது

தண்ணீரின்மேல் மரக்கட்டைகளை அடுக்கி

இசைக்கும் ஒருவனை

அயராமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கையில்

தொடர்ந்து வந்த கழுகு முகத்தின் உடல் அவளை

ஒரு நொடியில் வீழ்த்திப் புணர்கிறது


அவள் இனிமையின் விளிம்பில் கண்களைத் தாழ்த்தும்போது

I love you pussy willo என்கிறது அக்கழுகு

முகத்திலறைந்த அவ்வார்த்தையில்தான்

தன்னைப் புணர்வது கணவனென உணர்கிறாள் அனைஸ்


அன்றிரவு அவள் எழுதிய நாட்குறிப்பேட்டில்

“ஹென்றிக்கு எதிரான உணர்வுகளுடன்

முழுமையாகக் கணவனுக்கு என்னைக் கொடுத்தேன்

அந்த அனுபவம் உடல்ரீதியான பேரின்பம்

ஹென்றிக்கு நான் இழைத்த முதல் துரோகம்

இருப்புக் கொள்ளாமல் இருக்குமளவுக்கு

நான் மாறியிருக்கிறேன்

ஏற்பட்டிருக்கும் உற்சாகத்திலும் சாகச உணர்விலும்

இனி முற்றிலும் உண்மையானவளாக இருக்க வேண்டும்

அதே சமயத்தில்

ரகசியமாக வேறொரு மனிதனைச் சந்திக்கவும் விரும்புகிறேன்

பாலுணர்வைத் தூண்டக்கூடிய

அநேகக் கற்பனைச் சித்திரங்கள்

என்னிடம் இருக்கின்றன

எனக்கு அவ்வின்பம் தேவையாகவும்

இருக்கிறது.”


Poetryplay written by - Thenmozhi Das in Tamil

Screenplay Written by - Philip Kaufman in English

Annis written Dairy - in French


■ Thenmozhi Das 1st Experimental Poetry

Written on ..... 01.08.2005

----------------

இந்தக் கவிதை, பிலிப் காஃப்மனின் “ஹென்றி அன்ட் ஜூன் ” (Henry and June ) என்னும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.


இருபதாம் நூற்றாண்டில் பிரபலமான இலக்கிய ஆளுமைகள் இருவரின் இளம் பிராயத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் இது. இளம் பெண் படைப்பாளியுமான அனைஸ் நின் 1931இல் பாரிஸில் அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லரைச் சந்தித்தப் பின், சுய தேடலுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், தனது அனுபவங்கள் அனைத்தையும் டயரிகளில் எழுதுகிறார்! அனைஸின் டயரிகளில் மறைக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது “ஹென்றி அன்ட் ஜூ” படம்.


தனது டயரிகளின் மூலம் பிரபலமான அனைஸ், பல நாவல்களையும், சர்ரியலிஸப் பாணியிலான ஒரு வசன கவிதையையும் எழுதியுள்ளார்.

-------------


2005 ல் இணை இயக்குநராக பணியாற்றிய காலம் மனதில் திரைக்கதையை விடவும் இனிமை மிக்க கவிதையை / திரைக்கதையை விட காட்சிபூர்வமாய் ஏன் இயற்றக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்தது . எத்தகைய உலகத்தரமான சினிமாவையும் ஒரு கவிதை எளிமையாய் கைக்கொள்ளவும் கடக்கவும் மீறவும் முடியுமா எனப் பரிசோதிக்கத் தோன்றியது .... எனது வாழ்வு இயக்குநராவது அல்ல . கவிதையே எனது வாழ்வு. இதில் நான் என்ன வித்தியாசம் செய்ய இயலும் என நினைத்தேன்.


இக் கவிதை எழுதி முடித்த போது

எத்தகைய கலையையும் விட

"கவிதையே ஆகச் சிறந்த கலை" என -மனம்

உறுதி கொண்டது .

காரணம் கவிதைக்குள் திரைக்கதையை தகர்க்க முடிவது மட்டுமல்ல. .. இசையையும் எழுப்ப முடிகிறது.

ஒரு கவிதை ஒரு திரைக்கதையை விட

எவ்விதத்திலும் குறைந்ததல்ல .


- தேன்மொழி தாஸ்


Cinema - cut to - Poetry

Thursday, 13 July 2017

சுஜாதாவின் வெளிநாட்டுக்குடை - சுந்தர ராமசாமி

சுஜாதாவின் வெளிநாட்டுக்குடை -
 சுந்தர ராமசாமி

AUTOMATED GOOGLE-OCR
 THANKS TO WWW.MAAMALLAN.COM FOR JPG IMAGES

1992 மார்ச் மாத சுபமங்களாவில் சுஜாதா, 'காலச்சுவடு சிறப்பிதழ் பற்றி அவருடைய பாணியிலான மதிப்புரை ஒன்றை எழுதியிருக்கிறார். மதிப்புரை என்ற பழைய சொல்லைப் பயன்படுத்துகிறேன். உண்மை யில் அவருடையது, மதிப்புரைக்கும் திறனாய்வுக்கும் இடைப்பட்ட நவீன சூட்சுமம் ஒன்றை மொழிவழிப்படுத்துவதாகும் இந்தச் சூட்சுமத் திற்கு இன்னும் வார்த்தை முளைத்தாகவில்லை என்றாலும் சுஜாதா வளர்த்து வரும் தமிழ் மூலமே நமக்கு எந்த நிமிடமும் அது இடைக்க வும் கூடும்.

சுஜாதாவின் மதிப்புரை, காலச்சுவடு மலரைப் படிக்கும் வாய்ப்புப் பெறாத வாசகரிடையே பல தவறான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியது. வெகுஜன இதழ்களுக்குப் படிந்துபோன ஒரு வழக்கமான முகம் இருப்பது போலவே, சிற்றிதழ்களுக்கும் பழக்கப்பட்டுப்போன ஒரு மோஸ்தர் முகம் இருக்கிறது. ஏறத்தாழ அந்த முகத்தைத்தான் காலச்சுவடும் காட்டுகிறது என்பதுதான் சுஜாதாவின் மதிப்புரையின் சாரம் இது எந்த அளவுக்கு தன்மை? காலச்சுவடு மலரைக் கவன மாகப் படிக்கும் ஒரு வாசகனுக்கு சுஜாதாவின் முடிவுகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லாமலே இருக்கும் வணிக சஞ்சிகைகளால் உருவாக்கப்பட்டுவரும் வாசகர் மத்தியில், சிற்றிதழ்கள் பற்றிப் பொது வாக இருக்கும் குறைகளைத் தொகுத்துக் காலச்சுவடு மலர் மீது பொறுப்பின்றிக் கவிழ்க்கும் தந்திரத்தை மட்டுமே சுஜாதா தம மதிப்புரையில் செய்திருக்கிறார். காலச்சுவடு மலரின் உள்ளடக்கத்தை நடுநிலையில் நின்று பார்த்து அதன் நிறைகுறைகளை அவருடைய பா. இக்கட் அவர் முன்வரவில்லை

காலச்சுவடு மலரில் வெளியாகி இருக்கும் விஷயங்கள் வறண்ட சிக்கலான, கடுமையான மொழியில் எழுதப்பட்டவை -9|al)ճմ, சுமார் முந்நூறு பக்கங்கள் கொண்ட இந்த ரின் பெரும்பகுதியை

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 879________________




ஒரு வாசகன் எவ்விதச் சிரமமுமின்றிப் படித்துவிட முடியும் எந்த வாசகன் குமுதம், சரோஜா தேவி, சுஜாதா வாசகனா? இவர்களுக்கு மலர் போய்ச் சேராது. நவரச லேகியங்களுக்கு மட்டுமே வாய் திறக்கும் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டது அல்ல காலச்சுவடு மலர் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோர் படைப்பில் நிறுவியுள்ள தரத்தை எதிர்கொள்ள ஒரு தமிழ் வாசகனுக்கு மூளைத் திட்பம் இருக்குமென்றால் அவனால் காலச்சுவடு மலரைப் படிக்க முடியும் நேற்றைய படைப்புகளின் தரத்தை அறிந்த ஒரு வாசகன் காலத்தின் நவீன முகங்களை அறிந்துகொள்ளத் தவறியிருந்தால் அல்லது அறிந்துகொள்ளும் விருப்பமற்றவனாக இருந்தால் காலஒரு சில பகுதிகள் அவனுக்குச் சிரமத்தைத் தரக்கூடும். என் அதிருஷ்டம் மலரில் இரண்டு விஷயங்கள் சுஜாதாவுக்கு முழுமையாகவே பிடித்துப்போய்விட்டன. அண்ணாமலையின் கட்டுரையும் தமிழ்ச் செல்வனின் கதையும் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு ஷொட்டும் ஒரு நொள்ளையும் சிலருக்கு நொள்ளை மட்டும். சிற்றிதழ்களிலும், வணிக இதழ் போலவே திரும்பத்திரும்ப ஒரு சிலர்தான் எழுதுகிறார்கள் என்று புதுமுகங்களையும் ஆழங்களையும் காணத் துடிக்கும் சுஜாதா அங்கலாய்க்கிறார். ஆனால், அண்ணாமலை யும் தமிழ்ச் செல்வனும் சிற்றிதழ் வட்டத்திற்குப் புதியவர்கள் என்ற உண்மையைக் கவனமாக "ஒளித்து வைத்துக்கொள்கிறார். சுஜாதா பார்வையில் சுவாரஸ்யமான இவர்களுடைய எழுத்துகளை சுஜாதாவின் குமுதங்கள் வெளியிடுமா? அப்படியென்றால் வணிக எழுத்தைத் தாண்டிச் சில சுவாரஸ்யங்கள் சுஜாதாவுக்கும் தேவைப்படு கின்றன. தன்னுடைய சுவாரஸ்யம்தான் தமிழின் இறுதி எல்லை என்று சுஜாதா கற்பனை செய்துகொள்ள விரும்புகிறார். சுஜாதாக்களை யும் குமுதங்களையும் தாண்டி வந்தவர்களுக்காக நடத்தப்படுபவை சிற்றிதழ்கள். அண்ணாமலையின் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகக் கொஞ்சம் உணர்த்தப்படுவது மிக அதிகம் கட்டுரை முடியும் இடத்தில் நம் சிந்தனை தொடர்கிறது. சிந்திக்க வாய்ப்புப் பெறுவது சிலருக்கு சுவாரஸ்யம். இந்த சுவாரஸ்யத்திலிருந்து விவாதமும் செயல்பாடும் தொடர்ந்து தமிழ்க் கலாச்சாரம் செழுமை பெறலாம். வயது வந்தவர்களையும் மடியில் போட்டுக்கொண்டு அவர்களுக்குப் பாலூட்டி, இனிப்புத் தந்து தொடைகளை நீவிவிட்டு, காசும் புகழும் பறித்துக்கொள்வது மற்றொரு கலாச்சாரம் இரண்டு கலாச்சாரங்களும் அவரவர்க்கு சுவாரஸ்யமானவையே. இவற்றில் எதை ஒரு எழுத்தாளன் தேர்வு செய்கிறான் என்பது அவன் வியாபாரியா அல்லது படைப் பாளியா என்பதைப் பொறுத்தது.

காலச்சுவடில் படைப்புகள் நல்ல தமிழில்தான் எழுதப்பட்டிருக் கின்றன. இந்த உண்மையைச் சாகடிக்கப் பூரணச்சந்திரன் கட்டுரை யிலிருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு வாக்கியத்தைத் தந்திருக்கிறார் சுஜாதா கட்டுரையிலிருந்து வெட்டி வெளியே வைக்கப்பட்டுள்ள

680 / சுந்தர ராமசாமி________________




-

அத 'நிழலாக இருக்கிறது. ஆனால், பூரணச்சந்திரன் கட்டுரை மிகத் தெளிவானது. அமைப்பியல் வாதத்தை மோஸ்தர் குணததுடன அணுகக்கூடாது எனபது குஜாதாவின் உபதேசம் இதே பார்வைதாश பூரணச்சந்திரனுக்கும் தமிழ்ப் பின்னணியைச் Frtřigy அமைப்பியல் வாதம முன வைக்கப்பட வேண்டும் என்றும் பிறரை பயமுறுதத ஒரு குண்டாந்தடியாக அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அமைப்பியல் வாதத்தின் தத்துவ சஞ்சாரங்களிலிருந்து மிக்கு வந்து தமிழ்ப் படைப்புகளை அமைப்பியல் பார்வையில் விண்டு சொல்லும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பூரணச்சந்திரன் கூறுகிறார். தன் பார்வையில் நின்று திறந்த மனத்துடன் மதிப்பிடக்கூடிய மனம் சுஜாதாவுக்கு இருந்திருந்தால் பூரணச்சந்திரன் கட்டுரையை அவர் தமிழ் வாசகருக்குச் சிபாரிசு செய்திருக்கக்கூடும் சிற்றிதழ்களில் வழக்கமாக எழுதாத பலரும் காலச்சுவடில் எழுதியி ருக்கிறார்கள். இ.அண்ணாமலை என்.பி.ராமானுஜம் எம்.ஏ.நுஃமான், ஜி.ஆர்.பாலகிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், வேதசகாயகுமார், பாரதிபுத்திரன், சோலைக்கிளி, சேரன், வ.ஆறுமுகம் என்று பலரும் இவர்கள் எல்லோருமே சிற்றிதழ் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் தீவிரமான எழுத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், இன்று ஆழமான எழுத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கும் சிற்றிதழ்கள் மட்டுமே இடம் தருகின்றன. ஆக, இவர்களுடைய படைப்புகள் காலச்சுவடிலும் இடம் பெற்றிருப்பது வெகு இயற்கையான காரியம் ஸ்லோ மோஷன்" என்பது இன்று செல்லுபடியாகாத பழைய வாதம் கதைக்கு ஸ்லோ மோஷன் நிறையும் அல்ல; குறையும் அல்ல. வேகம், வேகமின்மை எடுத்துக்கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தது. திரைப்படங்களில் ஸ்லோ மோஷன்" என்ற வகையில் படும் பதேர் பாஞ்சாலி தன்னிகரற்ற கலை, பல "ஸ்லோ மோஷன்" படங்கள் பெரிய அறுவைகள். பதேர் பாஞ்சாலி வேண்டாம்: எம்.ஜி.ஆர் படம் போதும் என்று கூறும் வணிக புத்தி இன்று தமிழ்க் கருத்துலகத்தில் செல்லுபடியாகாது. சுஜாதாவுக்கு დისე0:Bambrr மோஷன் பிடிக்காது என்றாலும் ஸ்லோ மோஷன் கதையான மாமல்லன் கதை பிடித்திருக்கிறது. அதை நான் சிறிது எடிட் செய்திருந்தால் மேலும் பிடித்திருக்கும். அனைவராலும் பாராட்டப் பட்டுள்ள ஸ்லோ மோஷன் கதையல்லாத ஜெயமோகனின் விறுவிறுப் பான கதையை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சுஜாதாவின் பார்வை ஒரு வெளி நாட்டுக் குடை அவர் விரும்பும்போது விரிக் கலாம் விரும்பாதபோது சுருக்கிக் கக்கத்திலும் இடுக்கிக்கொள்ளலாம் சாதத் ஹசன் மண்டோவின் கதைகள் பற்றியும் அவரை அறிமுகம் செய்யும் ட்டுரை பற்றியும் அவருக்குச் சொல்ல ஒன்றுமில்லை வ.கீதாவின் ஆல்பெர் காம்யு கட்டுரை பற்றி அவருக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காம்யுவைப் பற்றிய கூரான விமரிசனம் அது சுய படிப்பிலிருந்து உருவாகிவந்த விமரிசனம்

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 68________________




காலச்சுவடின் பக்கங்களில் பல உள் இணைப்புகள் இருக்கின்றன. நீல பத்மநாபனைப் பற்றியும் மீரானைப் பற்றியும் நுஃமான் எழுதியிருக் கும் கட்டுரைகள் ஒரே பார்வையின் இரண்டு பகுதிகள் இரு நாவலா சிரியர்களுமே தெரிந்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்கள் ஒன்று அவதூறு மற்றொன்று படைப்பு ஏனென்று நுஃமான் விளக்குகிறார். எம். டி முத்துக்குமாரசாமியின் நாடகம் சிற்றிதழ் வாசகர்களுக்குக்கூடச் சற்று சிரமத்தைத் தரலாம். அந்த வகையில் அந்த ஒன்றுதான் மலரில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நாடகத்தை வாசகர்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து அந்த நாடகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அர்த்தத்தின் தளத்தில் மொழி இயங்கும் காலம் இலக்கிய வரலாற்றில் முடிந்துவிட்டதா? அமைப் பியல்வாதிகள் உலக விமரிசன வளத்திற்கு என்ன பங்கைச் சேர்த்திருக் கிறார்கள் அவர்களுடைய தமிழ் வாரிசுகள் என்ன பங்கை இப்போது ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்? இந்த நாடகத்தையும் பூரணச்சந்திரன் கட்டுரையையும் இணைத்துப் பார்க்க வேண்டும் அவர்கள் மனத்தில் எண்ணற்ற சந்தேகங்கள் தோன்றலாம். அக்கேள்விகள் இன்று உரக்கக் கேட்கப்பட வேண்டியவை. அதற்கான ஒரு முகாந்திரத்தை இந்தப் படைப்பை வெளியிடுவதன் மூலம் காலச்சுவடு உருவாக்க முயல்கிறது. வ. ஆறுமுகத்தின் கருஞ்சுழி நாடகம் தில்லியில் அரங்கேறியபோது, அது அகில இந்திய கவனத்தைப் பெற்றது. பாண்டிச்சேரியிலும் சுற்று வட்டாரங்களிலும் இந்த நாடகத்தைப் பலரும் விரும்பிப் பார்த்திருக் கின்றனர். குழந்தைகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்திருக்கின்றன. அதன் எழுத்து வடிவம் காட்சி வடிவத்தைக் கேட்டு நிற்பதுதான். ஆனால், அந்த எழுத்து வடிவத்துடன் ஒரு வாசகன் முன்பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டால் காட்சி வடிவம் பார்க்கக் கிடைக்கும்போது மேலும் தெளிவு பெறும் மற்ற மொழிகளில் நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கும் நாடக ஆசிரியர்களுக்கு இணையான ஒரு நாடகத்தைக் குக்கிராமப் பின்னணி கொண்ட ஒரு தமிழ் விவசாயி உருவாக்கி இருக் கிறார். அந்தச் சாதனையை ஆமோதிக்கவும் அந்த வசனம் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புதிய முயற்சிகள் தோல்வி அடையும்போதுகூட அவை "க்ளிஷே' அல்ல. உண்மையில் "க்ளிஷேஐ வைத்துத் தொழில் நடத்துபவர்கள் வணிக எழுத்தாளர்கள்தான். நான் மிகவும் போற்றும் விஷயங்களை மட்டுமே காலச்சுவடு மலரில் தந்திருந்தால் மலர் ஐம்பது அறுபது பக்கங்களில் முடிந்திருக் கும். என்னுடைய ருசியைச் சார்ந்து தமிழிலக்கியத்தின் விதி தீர் மானிக்கப்படுகிறது என்ற கற்பனை எனக்கில்லை. தமிழில் இன்று பல போக்குகள் இருக்கின்றன. பல வகைகள் இருக்கின்றன. பல அலை வரிசைகளில் படைப்பாளிகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். யதார்த்தத்தின் யந்திர ரீதியிலான பிரதிபலிப்பு என்ற அலைவரிசை யிலிருந்து யதார்த்தத்தை முற்றாகச் சிதைக்கும் அலைவரிசை வரை யிலும் எழுத்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. வேறு இந்திய மொழிகளில் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் இவ்வளவு இருக்கின்

682 / சுந்தர ராமசாமி________________




னும் எம். டி. எம்மும் பூரணச்சந்திரனு சாதத் ஹசன் மண்டோவும், ஆல்பெர் கிறார்கள். படைப்புக் கலை சார்ந்த வெவ்வேறு நம்பிக்கைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் இவர்களைத் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சிற்றிதழ்களுக்குரிய மேற்கத்திய மயக்கங்களுக்கு எதிராகச் செயல் Htt இதழ் காலச்சுவடு, நமக்காகச் சிந்திக்கும் பொறுப்பை ஐரோப்பா விடம் ஒப்படைத்திருக்கும் தமிழ் அறிவுவாதிகளின் மறுபக்கம் இது நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி உலகச் சிந்தனையாளர்களுக்கு இணையாக நம்மாலும் சிந்திக்க முடியும் என்ற உண்மையைக் காலச்சுவடு உருவாக்க முயன்றது. என் வரையறைகளும் சூழலின் எதிர்மறையான அழுத்தங்களும் இணைந்துகொள்ள, பல காரியங்கள் நினைத்த அளவுக்குச் செய்ய இயலவில்லைதான். எம்.என். ராய் பற்றியும் கோசாம்பி பற்றியும் எம். கோவிந்தன் பற்றியும் காலச்சுவடு பேசிற்று. இவர்கள் உலகச் சிந்தனையாளர்களுக்கு இணையானவர்கள். மட்டுமல்ல, இந்திய மதங்களையும் இந்திய மனங்களையும் இந்தியச் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நம் பிரச்சினைகளுக்கு விடை தேட முயன்றவர்கள். இந்த வரிசையில் ராம் மனோகர் லோகியா போன்ற வேறு பலரைப் பற்றியும் சொல்ல காலச்சுவடுக்கு யோசனை இருந்தும் நடைமுறைப்படுத்த முடியாமற்போயிற்று இந்தியப் படைப் பாளிகள் பலரையும் காலச்சுவடு தொடர்ந்து கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சகல தேசங்களைச் சேர்ந்த தரமான தமிழ் எழுத்தாளர் களும் தமிழகச் சிற்றிதழ்களில் இணைய வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் காலச்சுவடு தொடர்ந்து இடம் தந்துவந்திருக்கிறது.

காலச்சுவடு இதழின் எடிட்டராக என்னால் நிமிர முடியவில்லை. அதனால், நான் எடிட் செய்யவும் இல்லை. ஒரு சில படைப்புகளை எடிட் செய்திருந்தால் அவை மேலும் துலக்கம் பெற்றிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் 7 செ. மீ நீளம் இருக்கும் ஒரு கவிதையிலிருந்து அனாவசியமான ஒரு சொல்லை அகற்றினால் அந்தக் கவிஞருக்கும் எனக்கும் அன்று ஆரம்பிக்கிறது ஜென்மப் பகை தகவல ரீதியான ஒரு பிழையைத் திருத்தியதற்காக ஒரு தமிழ் அறிவுவாதி தன் வில்லை நாண் ஏற்றினார் எழுத்தாளர்களின் இரத்தக் கொதிப்புகளில் நான் இறு வயதில் மட்டும் கேட்டிருக்கும் வ"ை :* கடித குபங்களில் வந்து சேருகிறபோது அவற்றை என மனைவபடிககக கூடாது என்பதற்காக மறைத்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

n ஹெப்சிபா ஜேசுதாசனும் Tமயுவும் இடம் பெற்றிருக்

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 683________________




என் கவிதையை ஏன் திருப்பினீர்கள் என்று ஒரு கவிஞர் யுத்த சன்னதம் கொண்டபோதுதான் அவருக்கு உரைநடை எழுதத் தெரியாது என்ப தும் உரைநடை எழுதத் தெரியாததை "ஒளித்து வைத்துக் (சுஜாதாவுக்கு நன்றி!) கொள்ளவே அவர் கவிதைகள் எழுதிவருகிறார் என்பதும் வெளிப்பட்டது. தமிழ் எழுத்தாளர் எண்ணிக்கை மிக அதிகமாகவும் உழைப்பாளர் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் இருக்கிறது.

தமிழ்ச் சூழல் பற்றி அறிந்திருக்கும் சுஜாதா அவருடைய அறிவை ஒளித்து வைத்துக்கொண்டு காலச்சுவடை உற்சாகமாகக் கிழிக்கிறார்.

ஒரு கலாச்சாரச் சூழலில் ஒருவன் ஆசிரியராகச் செயல்படுவது அந்தச் சூழலில் நிகழும் நாகரிகம் சம்பந்தப்பட்டது. 'மிகச் சிறந்த எழுத்தை எனக்குத் தா' என்று வாசகர்களும் மிக சிறந்த எழுத்தை உனக்குத் தருகிறேன்' என்று எழுத்தாளரும் ஆசிரியரைப் பார்த்துச் சொல்லும் நாகரிகம் அது ஆசிரியருக்குரிய சுதந்திரங்களை தாட்சண்ய மின்றி அமல்படுத்து' என்று வற்புறுத்தும் கலாச்சாரம் அது நேற்று வந்த கடிதத்தில் ஒரு புகழ் பெற்ற அறிவுவாதி அவருடைய நூலுக்குக் காலச்சுவடு மலரில் மதிப்புரை எழுதியிருந்தவரைக் குறிப்பிட்டு அந்தத் திமிர் பிடித்த மடையனை விட்டு ஏன் விமரிசனம் எழுதச் சொல்லியிருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். திமிர் பிடித்த மடையன்' என அவர் அன்புடன் வருணிக்கும் சக தொழிலாளி டாக்டர் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்று பவர் பண்டைத் தமிழ் இலக்கியமும் நவீனத் தமிழ் இலக்கியமும் கற்றவர். நவீனத் தத்துவங்களைக் கற்றவர். நேர்மையான எழுத்தாளர் என்ற மதிப்புப் பெற்றவர். அவருடைய மதிப்புரையில் சில குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளைக் கண்டுகொள்ளும் அளவுக்கு எனக்குப் படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், சக தொழிலாளியைத் திமிர் பிடித்த மடையன் என்று ஒருமையில் அழைக்கும் அறிவுவாதிகள் வாழும் கலாச்சாரத்தில் நான் தொகுப்பாசிரியராகச் சரிந்திருக்கிறேன். ஆசிரியராக நிமிர முடியவில்லை. மன்னிக்க வேண்டும் சுஜாதா.

வெகுஜனப் பத்திரிகைகளும் சிறு பத்திரிகைகளும் ஒன்றுக்கொன்று குறுக்கிடாது இயங்கும் விந்தை மலையாளத்தில் இல்லை என்று நீல பத்மநாபன் சுஜாதாவிடம் தெரிவித்திருப்பது சரிதான். ஆனால், வணிகச் சீரழிவின் நாயகனே நீதிபதி வேஷமும் போட்டுக்கொண்டு சீரழிவுக்கு எதிரான கலாச்சாரத்தை உருவாக்கத் திணறிக்கொண்டிருக் கும் குற்றவாளிகளைத் தண்டிக்க முற்பட்டால் அதை மலையாளக் கலாச்சாரம் எப்படி எதிர்கொள்ளும் -தூற்றுமா, போற்றுமா, கைகொட்டிச் சிரிக்குமா? இதற்கான விடையையும் சுஜாதா கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சுபமங்களா, ஏப்ரல் 1992

684 / சுந்தர ராமசாமி

Wednesday, 12 July 2017

அகம் புறம் - பிரேதா : பிரேதன்

https://www.facebook.com/profile.php?id=100013678263272&hc_ref=OTHER&fref=nf
அகம் புறம்
முள்கீறி இசையெழும் சுழலும் ஒலிப்பாதையில் முயங்கித் தகித்த நரம்புகளின் பேரதிர்வு நிறைந்த இரவுகளின் நினைவுகளோடு ஊரற்ற வெளியில் வளைந்தோடும் இருப்புப் பாதைகளூடாக உன்னை அடையும் முனை தேடி வெயிலோடு நடக்கிறேன்.
வழியில், கைவிடப்பட்டு ஓடுகள் சரிந்து சிதைந்த சிறிய ரயில் நிலையம். உள்ளே, கழுத்தில் சுருக்கிடப்பட்டு உத்திரத்திலிருந்து தொங்கும் ஆண் பிணம். அழுகல் நெடியில் வெறியேறி தீண்டமுடியாமல் தாவித்தாவி ஏமாறும் சில நாய்கள்.
முகம்பொத்தி வெளிவருகிறேன். காய்ந்த குடிநீர் குழாயைக் கண்டதும் தாகம் ஊறுகிறது. பட்டுபோன ஒற்றை மூங்கில் மரம். சரிவர கவனிப்புப் பெறாத எருக்கம் பூவின் அழகு எனது நடையினூடே பூத்துக் குலுங்கும் புதர் மண்டிய கைவிடப்பட்ட சரக்கு ரயில் பெட்டி. அதில் எழுதப்பட்டிருக்கும் ஒரு காலத்தின் நம்பிக்கைகளாயிருந்து என்றோ பொய்த்துப் போய் கைவிடப்பட்ட பழைய புரட்சிகர வாசகங்கள்.
உன்னை அடையும் முனை தொலைவில் இல்லை. ஊரில் நெல் அவியும் உனது உடம்பின் மணம் காற்றில் கமழ்கிறது. இன்றிரவு முழுநிலா இசைத்தட்டாய் சுழலும். உனது உந்திச் சுழிப்பில் எனது நாவின் முள் தீண்டி புகைந்து பரவும் இசையில் வெயிலடிக்கும். ஒற்றை மூங்கில் மரம் நிலவில் தைக்கும்.
- பிரேதா : பிரேதன்
[ இருபது கவிதைகளும்
இரண்டாயிரம் ஆண்டுகளும் ]
1998.


Friday, 16 June 2017



நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா

 நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா
ஆலன் ராப் க்ரியே
Author photograph by Nancy Crampton. From the Paris Review.
ஃப்ரெஞ்ச் இலக்கியம், தத்துவத்தை அடுத்து என் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஃப்ரெஞ்ச் சினிமா. அதில் முக்கியமானவர், லன் ராப்-க்ரியே (Alain Robbe-Grillet: 1922 - 2008). நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட இயக்குனர். ஃப்ரெஞ்ச் சிந்தனை, இலக்கியம், சினிமா ஆகியவற்றில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராப்-க்ரியே பற்றி யாரும் அவ்வளவாக எழுத மாட்டார்கள். ஆனால், மிஷல் ஃபூக்கோவும் (Michel Foucault) ரொலான் பார்த்தும் (Roland Barthes) அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஃப்ரான்ஸின் நவீன சிந்தனையே ஆலன் ராப்-க்ரியேவிலிருந்துதான் துவங்குகிறது என்று அறுபதுகளிலேயே Tel Quel என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார் ஃபூக்கோ. ராப்-க்ரியேவின் சிறப்பு என்னவென்றால், எழுத்தில் அவருக்கு யாரும் முன்னோடிகள் கிடையாது. அதேபோல், அவரைப் பின்பற்றி எழுதியவர்களும் யாரும் இல்லை. (நான் முனியாண்டி என்ற பெயரில் எழுதிய சிறுகதைகளில் ராப்-க்ரியேவின் பாதிப்பைக் காணலாம்.) The Erasers, The Voyeur போன்ற நாவல்களை எழுதிய ராப்-க்ரியே ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். அந்தப் படங்கள் அனைத்தும் பாலுறவில் உள்ள அரசியலை மிக ஆழமாகப் பேசுபவை. அந்தத் தாக்கத்தினால்தான் பிற்காலத்தில் காதரீன் ப்ரேயா (Catherine Breillat) போன்றவர்கள் ஃப்ரெஞ்ச் சினிமாவில் உருவானார்கள். உதாரணமாக, ராப்-க்ரியேவின் Trans-Europ-Express (1966)-இல் வரும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிர்வாணப் பெண் தான் காதரீன் ப்ரேயாவின் ’ரொமான்ஸ்’ படத்தில் வரும் நாயகி. ஆக, ராப்-க்ரியே இல்லாவிட்டால் பாலுறவில் பின்னப்பட்டிருக்கும் அரசியலைப் பேசிய காதரீன் ப்ரேயா இல்லை.
ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் முற்பகுதியில் ராப்-க்ரியே எழுதிய For a New Novel என்ற கட்டுரைத் தொடரில் தன் இலக்கியக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், நவீன கதைசொல்லி தான் பார்க்கும் விஷயங்களை விவரிப்பதில்லை; அவனைச் சுற்றியுள்ள பொருட்களை அவன் தான் கண்டுபிடிக்கிறான்; அப்படிக் கண்டு பிடிப்பவற்றை அவன் பார்க்கிறான். அதனாலேயே அவன் குழந்தையாகவும் மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பொய்யனாகவும் மாறுகிறான். இங்கே தெக்கார்த்தே (Rene Descartes) கூறியதை இணைத்துப் பார்ப்போம். ”என் கனவு மிகத் தீவிரமாக இருந்ததென்றால் கண் விழித்து எழும் போது அது கனவா நனவா என்றே எனக்குத் தெரியாது.”
ராப்-க்ரியேவைப் புரிந்து கொள்ள ’கடற்கரை’ என்ற அவருடைய ஒரு சிறுகதையைப் படித்தாலே போதும். அந்தக் கதையில் ஒரு கடற்கரையில் பனிரண்டு வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் கை கோர்த்தபடி நடந்து செல்கிறார்கள். கடல் அலைகள் கரையில் வந்து வந்து போகின்றன. அவர்களின் இடப்பக்கம் ஒரு குன்று இருக்கிறது. எதிரே பறவைக் கூட்டம் அவர்கள் நெருங்குவதைக் கண்டு கூட்டமாக மேலே பறக்கிறது. இவ்வளவுதான் கதை. சுமார் 1500 வார்த்தைகளைக் கொண்ட அந்தக் கதையை பின்நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். ஒருமுறை படித்தால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிவை ஏற்படுத்தும் கதை அது. கதையில் எதுவுமே நடப்பதில்லை. சிறுவர்கள் நடக்கிறார்கள். அலைகள் கரைக்கு வந்து வந்து போகின்றன. இதை எப்படி ஒருவர் சிறுகதையாக எழுத முடியும்? அதைப் பொருட்களின் எதார்த்தம் என்கிறார் ராப்-க்ரியே. புரியாவிட்டால் நீங்களே அந்தக் கதையைப் படித்துப் பார்க்கலாம்.
இந்த இடத்தில் ரொலான் பார்த் 1967-இல் எழுதிய 'எழுத்தாளனின் மரணம்’ என்ற கட்டுரையை நினைவு கூற வேண்டும். அதில் பார்த்த, வாசகர்களுக்காகச் ’சிந்திக்கும்’, வாசகர்களுக்காகச் ’சொல்லும்’ மகா புருஷனான எழுத்தாளரைக் குறிப்பிடுகிறார். தமிழில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அந்தக் கோட்பாட்டின் பொருள், வாசகரையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் பன்முகத் தன்மை கொண்ட பிரதிகளை உருவாக்குதல் என்பதாகும். இந்தக் காரணத்தினாலேயே ராப்-க்ரியேவுக்கு தொல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைப் பிடிக்காது. அவர்கள் ‘சொல்கிறார்கள்’ என்கிறார் ராப்-க்ரியே. ”குஸ்தாவ் ஃப்ளெபர் இந்த உலகத்தையே எழுதினார்; ஆனால், அவர் எதுவும் ‘சொல்லவில்லை’. மானுடத் துயரத்துக்கு அவர் எதுவும் மருந்து வைத்திருக்கவில்லை. அவர் எழுதினார். அவ்வளவுதான். அதனால், எனக்கு அவரைப் பிடிக்கும்” என்கிறார். உலகப் புகழ் பெற்ற காப்ரியா மார்க்கேஸையும் மறுதலிக்கிறார். அவர்களெல்லாம் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்த்தே (Guillermo Cabrera Infante) தான் என்கிறார் ராப்-க்ரியே. நான் ராப்-க்ரியேவின் இலக்கியக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே காப்ரேரா இன்ஃபாந்தேவின் நாவல்களைப் பற்றி எழுதி விட்டேன். கார்ஸியா மார்க்கேஸ் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்தே தான் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்ஃபாந்தேவின் மிக முக்கியமான இரண்டு நாவல்கள், Infante's Inferno மற்றும் Three Trapped Tigers.
*
Miriam Gomez and Guillermo Cabrera Infante by Nestor Almendros
ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ’மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்து கொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக இயலாது.
லெனி பற்றியே தனியாக ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவுக்கு சாகசங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை. 1902-இல் பிறந்த அவர் 2003-இல் அவரது 101-ஆவது வயதில்தான் இறந்தார். 1934-இல் நடந்த ’நியூரம்பர்க் ஊர்வலம்’ என்ற உலகப் புகழ் பெற்ற சம்பவத்தை லெனி படமாக எடுத்தார். அதில் நான் பார்த்த ஒரு காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது போலிருக்கிறது. ஹிட்லர் ராணுவ அணிவகுப்போடு போய்க் கொண்டிருக்கிறார். அப்போது கேமரா ஹிட்லரைப் பார்க்க ஆர்வமுறும் லட்சக் கணக்கான மக்களின் முகங்களைக் காண்பித்து விட்டு திடீரென்று அவர்களின் பின்னால் பாதங்களின் பக்கம் செல்லும். எல்லோருடைய பாதங்களின் குதிகால்களும் எழும்பியபடி நிற்கும். காமரா வரிசையாக அந்தக் குதிகால்களையே காட்டியபடி செல்லும். அப்படியும் ஒரு சிறுவனுக்கு ஹிட்லர் தெரியாததால் சிறுவனின் தந்தை அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ஹிட்லர் பேசுவதைக் கேட்கும் போது டொனால்ட் ட்ரம்ப் பேசுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஃபாஸிஸ்டுகள் அனைவருடைய உடல் மொழியும் பேச்சும் ஒன்றே போல் இருப்பதைக் காணலாம்.
(நியூரம்பர்க் ஊர்வலம் முடிந்து ஹிட்லர் பேசும் காட்சி, Triumph of the Will படத்திலிருந்து.)
தில்லியில் கஸ்தூர்பா காந்தி மார்க் என்ற சாலையில் இருந்தது மாக்ஸ் ம்யுல்லர் பவன். அதே சாலையில்தான் அமெரிக்க மையமும் இருந்தது. 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்தேன். மக்களுக்கு ரேஷன் கொடுக்கும் அலுவலகத்தில் வேலை. வடக்கத்தி ஆட்கள் ராஷன் என்றுதான் சொல்வார்கள். எனவே ராஷனிங் டிபார்ட்மெண்ட். தில்லிப் பல்கலைக்கழகம் இருக்கும் வட தில்லியில் இந்திர ப்ரஸ்தா பெண்கள் கல்லூரியின் எதிரே இருந்தது நான் வேலை பார்த்த ராஷனிங் டிபார்ட்மெண்ட். சிவில் சப்ளைஸ் என்பது அதன் மற்றொரு பெயர். அந்த அலுவலகம் இருந்த அண்டர் ஹில் ரோடுக்கும் கஸ்தூர் பா காந்தி மார்குக்கும் 13 கி.மீ. தூரம். மெட்ரோ ரயில் இல்லாத அந்தக் காலத்தில் அதெல்லாம் நாற்பது ஐம்பது கிலோமீட்டருக்குச் சமம். அந்தக் காலகட்டத்தில் சிமெண்ட் கட்டுப்படுத்தப்பட்ட விலையிலும் வெளிச்சந்தையிலும் விற்றதால் இரண்டு இடங்களிலும் இரண்டு வெவ்வேறு விலைகள் இருந்தன். ராஷன் கார்டை ராஷனிங் டிபார்ட்மெண்டில் காண்பித்து பர்மிட் பெற்று வாங்கினால் ஒரு மூட்டை 30 ரூ. வெளிச்சந்தையில் 60 ரூ. அதனால் எங்கள் அலுவலகமே ஊழல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நானோ கலைஞனுக்குப் பணம் எதுக்கு என்று கஸ்தூர் பா காந்தி மார்க் அமெரிக்க நூலகத்திலும் மாக்ஸ் ம்யுல்லர் பவனிலுமே இருந்தேன். கஸ்தூர் பா காந்தி மார்கை குறுக்காக வெட்டிக் கொண்டு பாரகம்பா சாலை போகும். அதன் இடது பக்கத்தில் நடந்தால் மண்டி ஹவுஸ் வந்து விடும். இந்தியாவின் கலாச்சாரக் கேந்திரம் தில்லி என்றால் தில்லியின் கலாச்சார மையம் மண்டி ஹவுஸ். மண்டி ஹவுஸில் மட்டுமே ஒரு டஜன் கலை அரங்கங்கள் உள்ளன. மாக்ஸ் ம்யுல்லர் பவனில் சினிமா இல்லாத நாட்களில் நடந்தே மண்டி ஹவுஸ் வந்து விடுவேன்.
அலுவலகத்துக்கு மாதம் ஒருமுறை போய் எல்லா நாட்களுக்கும் கையெழுத்துப் போட்டு விட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தால் போதும். என்னுடைய ’பங்கை’ மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள் ஆதலால் நீ உன்னுடைய படிப்பு வேலையையே கவனி என்று சொல்லி விட்டார்கள் என் சகாக்கள். நான் தில்லியில் இருந்த பனிரண்டு ஆண்டுகளும் இப்படி இல்லை. மூன்று நான்கு ஆண்டுகள் அப்படி இருந்தது.
அப்போது கஸ்தூர் பா காந்தி மார்க் என்றால் யாருக்கும் தெரியாது. கர்ஸன் ரோட் என்ற பெயரை எழுபதுகளின் இறுதியில்தான் காந்தியின் மனைவி பெயருக்கு மாற்றியிருந்தார்கள் என்பதால் அப்போதெல்லாம் கர்ஸன் ரோட் என்பதே புழக்கத்தில் இருந்தது. 1978-இல் ஒரு ஆண்டுக் காலம் கர்ஸன் ரோட்டிலேயே இருந்த சர்க்கிள் நம்பர் எட்டில் வேலை பார்த்தேன். சிவில் சப்ளைஸில் பல பிரிவுகள் உண்டு. அவைதான் சர்க்கிள் நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைக்கப்பட்டன. அலுவலகமும் கலாச்சார மையங்களும் ஒரே ஏரியாவில் இருந்ததாலும், டிபார்ட்மெண்ட்டுக்குப் புதிது என்பதாலும் தினமும் போய் தலை காட்ட வேண்டியிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு ஓடி விடலாம்.
பகல் முழுதும் படிப்பு. மாலையில் சினிமா. அதே கர்ஸன் ரோட்டின் கடைசிக் கட்டிடத்தில் தான் ஹங்கேரியன் செண்டர். அங்கேயும் வாரம் இரண்டு சினிமா இருக்கும். ஆக, மாக்ஸ் ம்யுல்லர் பவனிலும் ஹங்கேரியன் செண்டரிலுமாக வாரம் நான்கு சினிமா பார்த்து விடலாம். இரண்டு மையங்களிலும் சினிமா முடிந்து மதுபானமும் கொடுப்பார்கள். ஹங்கேரியன் செண்டர் கம்யூனிஸ்ட் என்பதால் கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் இருக்காது. வாரம் ரெண்டு படத்தோடு சரி. பார்ப்பதற்கும் ஒரு மாதிரி மயான அமைதியாக கலகலப்பே இல்லாமல் இருக்கும். ஆனால் மாக்ஸ் ம்யுல்லர் பவன் அப்படி இல்லை; அங்கே கலாச்சார நடவடிக்கைகள் அதிகம். (சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றிருந்த போது பழைய ஞாபகத்தில் மாக்ஸ் ம்யுல்லர் பவன் போனேன். சினிமா முடிந்து சமோசாவும் டீயும் கொடுத்தார்கள். முன்பெல்லாம் விஸ்கி, பியர் எல்லாம் கொடுப்பார்களே என்று பவன் அதிகாரி போல் இருந்த ஒருவரிடம் கேட்டேன். வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, சிக்கன நடவடிக்கை என்றார். பிறகு சிரித்துக் கொண்டே ”இந்தியாவுக்கு வந்தால் நாமும் இந்தியரைப் போல் ஆகி விட வேண்டும் அல்லவா?” என்று கேட்டார். அப்படியானால் அடிக்கடி பெஹன் சூத் என்று சொல்லிப் பழகுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.)
தில்லியின் மாக்ஸ் ம்யுல்லர் பவனை என்னுடைய Alma materகளில் ஒன்று எனச் சொல்லலாம். அங்கே பார்த்த பல படங்கள் அப்படி அப்படியே காட்சிகளாக என் ஞாபக அடுக்குகளில் தங்கியுள்ளன. குறிப்பாக, Reinhard Hauff. சினிமா ஆர்வலர்கள் பலரிடமும் கேட்டிருக்கிறேன். அவர்கள், யாருக்கும் ரெய்னார்ட் ஹாஃப் பற்றித் தெரியவில்லை. மற்றொரு ஜெர்மன் இயக்குனரான வெர்னர் ஹெர்ஸாக் உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார். ஆனால் ரெய்னார்ட் ஹாஃப்-க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ரெய்னார்ட் ஹாஃப்-இன் சினிமா என்னுடைய புனைவுலகம் போன்றது. ஹெர்ஸாக் அளவுக்கு அவர் புகழ் அடையாமல் போனதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது 78 வயதாகும் ரெய்னார்ட் ஹாஃப் தீவிரமாக இயங்கிய கால கட்டம் எழுபதுகளும் எண்பதுகளுமாக இருந்தது. அதனால் அவர் படம் வெளிவந்த உடனேயே மாக்ஸ் ம்யுல்லர் பவனில் திரையிட்டு விடுவார்கள். இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரெய்னார்ட் ஹாஃப்-இன் படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் படங்கள் கிடைக்கவில்லை. பார்த்து 30 ஆண்டுகள் ஆகிறது.
காட்சி காட்சியாக ஞாபகம் இருக்கிறது என்று சொன்னேன். Slow Attack என்ற படத்தில் ஒரு சிறுவன் ஒரு தெருவில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் தன் கையிலிருக்கும் இரும்புக் கம்பியால் வரிசையாகக் கோடு போட்டுக் கொண்டே போவான். அந்தப் படத்தை நேற்று பார்த்தது போல் என்னால் விவரித்துக் கொண்டு போக முடியும். எண்பதுகளின் முற்பகுதியில் பார்த்த படம். இப்போதுதான் ரெய்னார்ட் ஹாஃப்-இன் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்க்கும் போது 1983-இல் வெளிவந்த படம் என்று தெரிகிறது. Endstation Freiheit என்பது அதன் ஜெர்மன் தலைப்பு. இந்தப் படம் அவரது Knife in the Head என்ற படத்தின் இரண்டாவது பாகம் என்று சொல்லத்தக்கது. ரெய்னார்ட் ஹாஃப்-இன் மற்றொரு முக்கியமான படம் The Brutalization of Franz Blum.
கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா

Thursday, 1 June 2017

ஆறு நவயுக நாவல்கள் - கு. ப. ராஜகோபாலன்

ஆறு நவயுக நாவல்கள் 

கிரஹ தாகம் - சரத் சந்திர சட்டர்ஜி 
பெண் - ஸியாராம்சரண குப்தர் 
சுகம் எங்கே ? - வி. ஸ. காண்டேகர் 
அன்னா லியோ டால்ஸ்டாய் 
ரஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் - ரமேச சந்திர தத்தர் 
மகாராஷ்டிர ஜீவன் உதயம் . . '' '' 

நாவல் இந்திய இலக்கியத்தில் ஒரு புதிய அம்சம். காதம்பரி , ஹர்ஷ சரிதம் போன்ற கதைகள் இந்திய இலக்கியத்திலும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் கதைப் போக்கும் வர்ணனையுமே முக்கியமாக இருக்கின்றன. நாவல், அதன் தற்கால அமைப்பில், வெறும் கதை மட்டுமல்ல. ஆதியில் பிறந்து வளர்ந்த மேலை நாடுகளில் கூட அது வெறும் கதைச் சரடாக இருந்த காலமும் உண்டு. அதன் வளர்ச்சி ஒரு தனிச் சரித்திரம். தற்சமயம் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாவல்தான் அதிகமாக வளர்ச்சி பெற்று வலுத்திருக்கிறது என்று சொல்லலாம் : அநேகமாக அது இலக்கியத்தின் பரப்பையே அளாவி நிற்கிறது. கவிதையும் நாடகமுங்கூட அதில் ஊடுருவி நிற்கின்றன... 

iv 

இதற்குக் காரணம் என்ன? நாவல் வாழ்க்கையின் சித்திரம் : வாழ்க்கையில் நடைபெறும் போராட்டங்களின் சித்திரம். அதில் கதையும் உண்டு; ஆனால், அந்தக் கதை பாத்திரங்களுடைய மன நிகழ்ச்சிகளின் கோவை. இக் காரணத்தாலே, நாவல் நீளமாக இருந்தாலும், அதன் கதை ' நீண்டிருக்காது. குறுகிய கால அளவிலே அமைக்கப்பெற்ற சில பாத்திரங்களின் குண சித்திரமே சில சமயங்களில் நாவலாக அமைந்துவிடும். நிகழ்ச்சிக் காலம் குறுகக் குறுக, நாவலின் பிகுவும், கட்டுக் கோப்பும், உணர்ச்சிப் பெருக்கும் அதிகமாகும். 

மன நிகழ்ச்சிகள்! - இவைதான் நாவலில் ஆதியிலும், நடுவிலும், அந்தத்திலும் அதற்கு உயிர்நிலை. 

குண சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாரணமான பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியா மல், அதை எதிர்த்து, வேறு தனிப் பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை ; அலை மோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்த வகை தெரியாமல் தத்த ளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதா பத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை ; லட்சிய வீரர் கள் (ஆண்களும் பெண்களும்), வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து விழும் வீழ்ச்சியைச் சித்திரிப்பது மேலும் ஒரு வகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலக் கிய - வீரர்கள் தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற் பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்கால சமூகத் திற்கு வழிகாட்டிகள். மொத்தமாகப் பொது நோக்கில் கூறி னால், மனித இயல்பும் வாழ்க்கை நியதியும் கை கலக்கும் கண் கொள்ளாக் காட்சிகளைச் சில அபூர்வசந்தர்ப்பங்களில் பொறுக் கிப் பிணைப்பதன் மூலம் காட்டுவதுதான் நாவலின் தொழில் 

மனித இயல்பை ஓர் ஆற்றுப் பெருக்காகக் கொள்ள லாம்; வாழ்க்கை யென்று நாம் சொல்லும் சமூக அமைப்பு ஓர் அணை போல அதன் முன் நிற்கிறது. அணை நன்மைக் காகத்தான் ஏற்பட்டது. சமூக அமைப்பும், அணை போல வாழ்க்கையின் வெள்ளப் பெருக்கைத் தன் கட்டுக்குள் அணைத்து, சரியான பாதையில் விகிதப்படி திருப்பத்தான் ஏற்பட்டது. ஆனால் சந்தர்ப்ப மாறுபாட்டால், அணை, வெள் ளத்தை மேலே போகவிடாமல், தன் கட்டுக்குள்ளேயே அடக்க முயலும் கொடுமையுள்ள தாக ஆகிவிடுகிறது. அதன் கட்டுக்கு அடங்கி வாழும் பெருவாரியான மக்கள், சிறு மடை வாய்கள் வழியே சென்றுவிடுகிறார்கள். இதற்காக அவர்கள் தம் இயல்பைக் குறுக்கிக்கொள்ளுகிறார்கள், அல்லது அடக் கிக்கொள்ளுகிறார்கள், அல்லது ஒரேயடியாக இழந்தே விடுகி றார்கள். சிலர், பெரு வெள்ளம் போல், கட்டுக்கடங்காமல் அணையைத் தகர்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் பெரும் பாலோர் அணையை உடைக்க முடியாமல் சிதறிப் போகிறார் கள்; சிலர் அணையைச் சில இடங்களில் தகர்த்தும் விடு கிறார்கள். இந்த மூன்று முக்கியமான போக்குகளில் நாவல் மனிதனுடைய தன்மையைப் படம் பிடிக்க முயலுகிறது. 

வாழ்க்கையின் கொடுமைகளுக்குப் பணிந்து, கஷ்டத் தைக் 'கடவுள் சித்தம்' என்று பொறுத்துக்கொண்டு காலம் கழிக்கும் மக்களிடையே, துயர் தான் தொலையாத கூட்டாளியாக இருக்கிறது. மனித இயல்பின் கீழ்த்தர அம் சங்களான பொய் புரட்டு, கொலை களவு,- இவை அத் துன் பத்திற்கு உதவி செய்து, உயர்ந்த அம்சங்களை இருந்த இடம் தெரியாமல் அடிக்க முயலுகின்றன. ஆனால் உயர்ந்த இயல்புகள் இலேசாக மறைவதில்லை. மல் யுத்தத்தில் இரண்டு சக்திகளும் மேலும் கீழுமாகக் கட்டிப் புரளு கின்றன. 

vi 

வாழ்க்கையின் கட்டுக் கடங்காமல், மனித இயல்பையே பலமாகவும் துணையாகவும் கொண்டு, அதை எதிர்ப்பவர் களுக்கும் துயர் தான் மிச்சம்; ஆனால் அந்தத் துயரையும் அவர்கள் சகித்துப் போகாமல் துச்சமாகத் தூரத் தள்ளி, மேலும் போராடுகிறார்கள், மடிகிறார்கள். அந்தப் போராட் டமும் வீர மரணமும் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் அழியாத பெயர் பெறுகின்றன. போராட்டத்தின் முடிவு வெற்றிதான் என்பதற்குச் சரித்திரம் சாட்சியாக நிற்கிறது. 

ஆனால், அந்தப் போரில் மனிதனுடைய மகத்தான இயல்புடன் உயர்ந்த லட்சியமும் கைகோத்துக்கொண்டால், வாழ்க்கைச் சட்டம் ஒரோர் சமயம் தணிந்து போய்விடு கிறது ; இயல்பும் லட்சியமும் சேர்ந்து வெற்றி பெறுகின் றன. அப்படி அவை வெற்றி பெறத் தவறிவிட்டாலும், அவற்றின் வீழ்ச்சியும் உன்னதமான கம்பீரமான வீழ்ச்சி யாகிவிடுகிறது. ஏனெனில், வீழ்ச்சிக்குக் காரணம் லட்சி யக் கோளாறோ, தவறான வழியோ அல்ல - எங்கோ ஏதோ அற்பமான ஒரு பலவீனம் அல்லது தவறு நேர்ந்துவிடுவ தால்தான். 

இந்தச் சிறு பீடிகையுடன் என் பரிசீலனைக்கு வந்த மேலே குறித்துள்ள ஆறு நவீனங்களின் போக்கையும் பொதுவாக ஆராய்ச்சி செய்ய முயலுகிறேன். 

'கிரஹ தாக' த்தில் கதாநாயகியான அசலா வெறும் உணர்ச்சிக் குவியல்; நிமிஷத்துக்கு நிமிஷம் வாழ்வை அநு பவிப்பவள். மிகவும் சஞ்சல சுபாவமுள்ள இவளுக்கு , ஆசி ரியர், மிகுந்த நகைச் சுவையுடன், அசலா (அசைவற்றவள்) என்று பெயர் வைத்திருக்கிறார். அவள் பெண் ஹிருதயத்தி லிருந்து கிளம்பிய புயலின் வேகத்தில் நால்வர் சுழலுகின் றனர் : அவளிடம் காதல் கொண்ட ஸுரேசன், அவள் 

தந்தை கேதார் பாபு, கணவன் மஹிம், கணவனுடைய பந்து மிருணாளினி. அவள் போக்கே விபரீதம். வாழ்க்கையில் தணிந்து போக வேண்டிய சந்தர்ப்பத்தில் கொதித்தெழுந்து மீறி, மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வதே அவள் தன்மை. அவளுடைய வெள்ளை உள்ளம் வாழ்க்கையின் சோதனையால் களங்கமாகிறது. அதன் போக்கு, பல அநுபவங்களுக்குப் பிறகும், அவளுக்கு அர்த்தமாவதில்லை. தனக்குத் தெரியவில்லை என்பதால், தந்தை சொன்னதை அவள் கேட்டிருக்கலாம். அவள் உள்ளம் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை - முடிவு வரை - அவள் பாதாளத் தில் விழுந்து மாசு கொள்ளும் வரை - இடம் கொடுக்க வில்லை. முதலில் தந்தை முடித்தபடி ஸுரேசனையே மணந்திருக்கலாம் - மணந்து கொள்ள மறுத்தாள் ; மஹிமை மணந்த பிறகு ஸுரேசன் காதலுக்கு இடம் கொடுக் காமலே இருந்திருக்கலாம் - இருக்கவில்லை; மணந்த கணவனுடன் வாழ்க்கை நடத்தப் போன பின் அங்காவது கணவன் மனப் போக்கை அறிந்து, அற்ப விஷயங்களைப் புறக்கணித்துப் பெரிதான அவன் காதலைக் கைக்கொண் டாளா? - அதுவும் இல்லை. மிருணாளினியின் கபடமற்ற பரிகாசத்தை - விளையாட்டை - வினையாக முடித்தாள். ஸுரேசனுடைய காதலைக் கண்டு இரங்கித் தன் கைகளைப் பிடிக்கும்படிகூட அனுமதித்தாள் ; தன் கணவன் மிருணா ளினியுடன் பரிவாகப் பேசினதைக் கண்டு பொறாமை கொண்டாள். வீடு எரிந்து போன பொழுது, ஒரு நிமிஷம் கணவனின் நினைப்புக் கொண்டு, அவனுக்காக எங்கு வேண்டு மானாலும் போகத் தயாரானாள். ஆனால், மஹிம் அவளை எடை போட்டு வைத்திருந்தான். அவள் உணர்ச்சி நிலைக்காதென்று அவனுக்குத் தெரியும். அவள் ஆதரவை அவன் லட்சியம் செய்யவில்லை. மறுபடியும் அசலா பெண் புலி யாகிறாள். 

க 

A.IN 

viii 

மஹிம் தேக அசௌக்கியமடைந்த பொழுது, மறுபடியும் கணவனிடம் ஈடுபட்டு , ஸுரேசனை மறக்க முயலுகிறாள். அந்த நினைப்பும் நீடிக்கவில்லை. வெளியூர் போகும் வழியில், ஸுரேசன் துரோகமாகத் தன்னைத் தனியே அழைத்துக் கொண்டு போனதை மன்னித்து, உடனே வீடு திரும்பாமல், அவனுடன் இருந்தாள். கடைசியாக ஸுரேசனைப் பார்த்து, 'இன்னும் என்ன தான் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்கும் நிலைமையையும் அடைந்தாள். அப்படித் தான் ஸுரேசனையாவது 'காதலி 'த்தாளா? இல்லவே யில்லை! மஹிமைத் திரஸ்கரித்தாளா? இல்லை ! சமூகத்தை எதிர்த்தாளா? ஒன்றுமில்லை. தன் உணர்ச்சிக்குத்தான் பலி யானாள் . அசலாவுக்கு அசலாதான் உலகம். பரஸ்பரம் குற்றங் குறைகளை மன்னித்து விட்டுக் கொடுக்கும் தியாகம் அசலாவுக்குப் புறம்பானது. 

சுகம் எங்கே?' என்ற நவீனத்தில் உஷா இதைப் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறாள். ஆகையால் அனாதை யான விதவையாக மைத்துனன் வீட்டிலிருந்து துரத்தப் பட்டு, கடலில் விழும் தருவாயில், தன்னைக் கரையேற்றின ஆனந்தனை அந்த நிமிஷம் முதல் உள்ளத்தில் தெய்வமாக இருத்திக்கொண்டுவிட்டாள். அந்த ஈடுபாட்டில் ஆனந்த னின் தீய பழக்கங்களை யெல்லாம் பொறுத்துக்கொண் டாள். அவனைச் சீர்திருத்தும் தொண்டில் தன் பெயர் கெடு வதையும் அவள் அலட்சியம் செய்தாள். தான் மனப் பூர்வ மாகச் செய்த அந்த ஆனந்த - ஆராதனை தன் வாழ்க்கையை ஸபலமாக்கப் போதுமானது என்று கொண்டாள். 

ஆனால், ஆனந்தன் கைபிடித்த மனைவி மாணிக்கம், வெறும் காதலிலோ, அடிபட்ட வாழ்க்கை முறையிலோ திருப்தி கொள்ளவில்லை. இருவர் ஒத்துப்போனால் தான் 

சுகம் என்பதை அவள் தர்க்க ரீதியாக அறிந்தாள். ஆனால், தான் ஒத்துப்போக அவள் தயாரில்லை. பிறர் - அதா வது கணவர் - தன் மனத்தை அறிந்து நடந்து வாழ்க் கையை நிமிஷத்திற்கு நிமிஷம் நவீன மாக்க வேண்டு மென்று எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை. அவள் படிப்பு, அச லாவின் படிப்பைப் போல , அதிருப்தியையும் அகங்காரத்தை யுமே கற்றுக் கொடுத்தது. தனஞ்சயன் என்ற போக்கிரியின் வசமாகி அவனுக்கு இரையாகிறாள். அதன் பிறகு - தடுக்கி விழுந்த பிறகு - அவளுக்கு உண்மை தெளிவாகிறது. கணவனுடன் வாழ்வது அசாத்தியமான பிறகு, தனக்குப் பிறக்கவிருந்த குழந்தையின் சேர்க்கையில் சுகத்தை அடை யத் தீர்மானிக்கிறாள். அகங்காரத்தாலும் விளம்பரப் பித் தாலும் அதிருப்தி கொண்டு திரிபவர்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றந்தான் மிஞ்சும் என்று தான் அடைந்த அனுபவத் தைக் கணவனுக்குத் தாழ்மையுடன் கடிதமூலம் அறிவித்து விட்டு அவள் மறைகிறாள். 

அன்னாவின் போக்கு எதிர்ப்பும் அன்று, பணிவும் அன்று - வெறும் நேர்மை. அலைப்பட்டது அன்று அவள் உள் ளம் . யௌவனமும், அழகும், உணர்ச்சியும் நிரம்பப் பெற்ற அன்னா, காரினினுக்கு வாழ்க்கைப்பட்டு, குழந்தை பெற்று, சமூகத்தின் முன்பு சந்தோஷ வேஷம் பூண்டு சஞ்சரிக்கி றாள். யௌவனத்தில் அமிழ்ந்து மூழ்கித் திளைக்க வேண்டிய காதல் தன் வாழ்க்கையில் இல்லாதது பற்றிக் கவலையற்ற வள் போல் இருக்கிறாள். திடீரென்று விரான்ஸ்கி என்ற யுவன் அவள் முன் தோன்றி, அவளை நிலைகுலையச் செய் கிறான். மறுக்கொணாத அந்த மர்மக் கிளர்ச்சிக்கு உட்பட்டு, அன்னா அவன் காதலியாகி, குழந்தை பெறுகிறாள். ஆனால், அவள் புருஷனிடமிருந்து தன் உள்ளத்தை மறைக்கவில்லை. 

விவாக ரத்து வேண்டுகிறாள். தம் சமூக அந்தஸ்துப் போய் விடுமென்று பயந்து, கணவர் அவளைக் கட்டுப்படுத்த முயலு கிறார். 

அந்த நிலையில் விரான்ஸ்கியும் ஒன்றும் செய்வதற் கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அவன் பொறுப்பை ஏற் றுக்கொள்ள விரும்பினானோ, அவ்வளவுக் கவ்வளவு அவ னுக்கு அது மறுக்கப்பட்டது. காரினின் விவாக ரத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால், விரான்ஸ்கி அன்னாவை மணந்துகொள்ள முடியாது என்பது சமூகம் விதித்த விதி . அந்த விதியையும் மீறிச் செல்லுவதற்கு வேண்டிய ஆற்றல் விரான்ஸ்கியிடம் இல்லை. 

நேர்மையும் உயர்ந்த லட்சியங்களுங்கூட ஒன்றுக் கொன்று முரண்படக் கூடும் என்பதற்கு அன்னாவின் கதை அத்தாட்சி. கதை முழுவதும் தத்துவங்களின் போர்க்கள மாக விளங்குகிறது. காரினின் தம்முடைய மனைவிக்கு விவாக ரத்து அளிக்க மறுத்ததற்கு, சட்டப்படி அவருக்குச் சுதந் திரம் இருந்தது. அவருக்கு அன்னாவிடம் பிறந்த பையனை வேற்றாரிடம் ஒப்புவிக்கும்படி எப்படி வற்புறுத்த முடியும்? ....... அன்னாவின் நேர்மை அபூர்வமானது. அவளை மறந்து விட்டு, அவள் கணவர் சர்க்கார் தஸ்தவேஜிகளை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்திவந்தார். அவளுடைய மனச் சாட்சி சரியானது என்பதனால், அவள் சமூகத்தையும் மீறிப் பொங்கினாள். தனக்கு எவ்விதத்திலும் மாறுபட்ட கணவ ருடன் இருப்பது அவள் இயற்கைக்கு விரோதமானது. அந்த உறவிலிருந்து விடுபடவேண்டும் என்பதே அவள் எண்ணம் ...... விரான்ஸ்கி விஷயம் என்ன? தனக்குப் பிறக்கும் குழந்தைகளைக் காரினின் பெயருக்குப் பலியிட அவன் விரும்பாத நேர்மையும் ஒப்பற்றது. ஆனால், அவ னுக்குப் பெண் மனத்தின் தன்மை தெரியாது. அன்னாவின் 

காதல் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது என்று அவன் தவறாக அர்த்தம் செய்துகொண்டதன் விபரீதம் தான் அன்னாவின் சோக நாடகம். 

அன்னாவுக்கு அப்பொழுது தான் விழிப்பு ஏற்படு கிறது. 'காதல்' என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை என்று உணருகிறாள். அவளுடைய உயர்வும், உள்ளத் தூய்மையும், அவளுடைய தாய் ஹிருதயத்தின் இளக்கத்தில் துயர் ஓவி யங்களாக மாறுகின்றன. அவள், தன் கணவனிடம் பெற் றெடுத்த பாலகனைத் திருட்டுத்தனமாகச் சென்று பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தில், அழியாத தாய் உருவமாக மாறு கிறாள். 

அன்னாவுக்கும் மேற்போன உன்னத விக்கிரகம் ஸியாராம் சரணர் கவிதை யுள்ளத்துடன் வார்த்து நிறுத்தி யிருக்கும் பெண். அவள் தான் ஜம்னா. ஜம்னா வாழ்க்கை யின் கொடுமைகளை யெல்லாம் சகித்து, வெள்ளத்தின் முன் படியும் நாணல் போல, வளைந்து கொடுத்துக்கொண்டு, மறு படி தலை நிமிர்கிறாள். கட்டுப்பாட்டைச் சிறிதளவுகூட எதிர்க்காமலிருந்தும் கூட, சமூகம் அவளுக்குப் 'பெயர்', வைக்கிறது. ' யுவதி எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியும்?' - இதுதானே உலகரீதி! அதையும் அவள் பொருட்படுத்தாமல், கணவன் இழைத்த கொடுமையையும் பாராட்டாமல், அவனை எண்ணி எண்ணி ஏங்கி , அவன் தனக் குக் கொடுத்துச் சென்ற குழந்தையைத் துணையாகக் கொண்டு, வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறாள். அந்த அமைதியின் நடுவில், அஜீத்தின் களங்கமற்ற சேவை ஒரு நிமிஷம் அவள் மனத்தைக் கவருகிறது. தன் ஜாதி ஆசாரப்படி அவனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாமா என்று கூட அவள் கொஞ்சம் தடுமாற்றம் கொள்ளுகிறாள். 

XII 

முடிவில் அந்த உணர்ச்சியையும் திடமாகத் தூரத் தள்ளி விடுகிறாள். தனக்குத் துணை மகனே போதும் என்று தீர் மானிக்கிறாள். 

'ஹல்லீயின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நடந்து சென்றாள். ஆகாயத்தில் மேகங்கள் வந்து சூழ்ந்திருந்தன. நாற்புற மும் ஒரே இருள் ! எங்கும் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும், அவள் மகனின் கையைத் தாங்கி மேலே சென்று கொண்டிருந் தாள். இன்று மாத்திரந்தான் அவள் போய்க்கொண்டிருந்தாள் என்பதில்லை. அந்தப் பண்டைக் காலத்துப் பெண் , யுக யுகாந்தரத்து இருளில், அதைத் துச்சமாகக் கருதி, வெகுகாலமாக இப்படியே தான் மேலே நடந்து சென்றுகொண்டிருக்கிறாள் ; - துன்பமும் இருளுமான இந்த இருள் வழியை, இவ்வண்ணமே கால்களால் மிதித்துக்கொண்டு செல்லுகிறாள் ! அவளுக்கு எவ்வித அச்சமும் இல்லை, ஒரு கவலையும் இல்லை.' 

இந்த நான்கு நவீனங்களிலும் பெண் உள்ளத்தின் உணர்ச்சிதான் பிரதானமாக நின்று வாழ்க்கையின் சுக துக்கங்களை ஆண் மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக் கிறது. கலப்பற்ற துக்கமோ சுகமோ கிடையாது. அந்த வீதாசாரப்படி சுகதுக்கங்கள் ஒரு முடிவற்ற தொடர்பு கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் லட்சியமின்றிக் காதல் மட்டும் எப்படித் தனித்து நிற்க முடியாது என்பதை இவை காட்டுகின்றன. 

ரமேச சந்திர தத்தர் எழுதியிருக்கும் 'ரஜ புத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் ' ' மகாராஷ்டிர ஜீவன் உதயம்' என்ற இரண்டு நாவல்களிலும் காதல் இரண்டாம் அந்தஸ் தில் தான் இருக்கிறது. வீரந்தான் முதல் ஸ்தானம் வகிக்கிறது. தேசத்தின் கௌரவமும் ஒற்றுமையும் நிலைபெற 

xiii 



வீரம் போராடும் பொழுது, காதலை ஓய்வு நேரத்து இன்ப மாக மட்டுமே கருதுகிறது. அதாவது தனி நபரின் சுகம் தேசத்தின் - சமூகத்தின் - சுகத்திற்காகத் தியாகம் செய்யப் பட்டுவிடுகிறது. 

ரஜபுத்திரரின் கௌரவத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்ட முனைந்த பிரதாப சிம்மன், மனைவியையும் குழந்தை களையும் கஷ்டத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கத் தயங்க வில்லை. குழந்தைகள் பட்டினி கிடப்பதுகூட நிமிஷ நேரத் திற்கு மேல் அவரைக் கலங்கச் செய்யவில்லை. அவரைப் பின் பற்றின வாலிப வீரன் தேஜ் சிம்மன் நாட்டை எதிரியிட மிருந்து மீட்கு முன், குஸும குமாரியைக் கைப்பற்ற வர வில்லை. காதலனின் லட்சியம் கைகூடும் வரை காதலியும் காத்துக்கொண்டிருக்கிறாள். 

மகாராஷ்டிர ஜீவன் உதயமாகும் போரிலும் அதே மாதிரி நடைபெறுகிறது. சிவாஜி தம்மை' மறந்து பாடு பட்டுத்தான் மகாராஷ்டிரத்தை ஸ்தாபித்தார். சதா சர்வ காலமும் அவர் நினைத்துக்கொண்டு போர் புரிந்து வந்த ஒரே இலக்கு எதிரி தான். அவருக்குத் துணையாக இருந்து அவர் உயிரைக் காப்பாற்றிய இளைஞன் ரகுநாத்ஜி ஹவல்தார், போர் ஒரு விதமாக நின்ற பின்புதான், தன் காதலி ஸரயூ பாலாவைக் கண்ணெடுத்துப் பார்க்கிறான். 

இந்த இரண்டு நவீனங்களிலும், மனித ஹிருதயத்தை ஆட்கொண்டு, வாழ்க்கையின் சுகதுக்கங்களைத் தாய் நாட்டின் பாதங்களில் காணிக்கையாக சமர்ப்பிக்கத் தூண்டும் வேட்கை, உயர்வு பெற்று, வானத்தில் நின்று ஒளி செய்வது போல் விளங்குகிறது. அந்த மகா தாகத்தின் பரப்பில், சிறு மனித உணர்ச்சிகள் பேதைமை கொள்ளுகின்றன ; உயிர் களே மதிப்பற்றுப் போகின்றன ! வாழ்க்கையின் பிணக் 

xiv 

கோலத்தின் அருகில் வீர சக்தி, இரத்த வெறிகொண்ட காளி போல், தாண்டவமாடுகிறது. 

சுகம் எங்கே என்ற பிரச்னை அங்கே கிடையாது! பெண் உள்ளத்தின் பிரசண்ட வேகம் கூட அங்கே எடுபடுவ தில்லை; துக்கத்தின் தூய வர்ணனைக்கு அங்கே இடமில்லை. பெண்மையே அந்த ஊக்கத்திற்கு உணர்வளித்துத்தான் உயிர் பெறுகிறது. வாழ்க்கை பெரிதா, லட்சியம் பெரிதா என்ற கேள்வி அங்கே பிறக்க முடியாது. வாழ்க்கையைத் திருணமாக மதித்த சந்தர்ப்பத்தில், அது எப்படி எழும்? அந்த வீரத்திற்கு லட்சியம் நாட்டின் கௌரவம், ஒற்றுமை. தர்மமும் சத்தியமுமே அதன் கவசமும் கேடயமும். அதைப் போருக்கனுப்பிப் பேரவா ஊட்டும் கருவி - பெண்மை! 

நவீனங்களில் திடுக்கிடும்படியாகவோ எதிர் பாராத வண்ணமோ சம்பவங்கள் நடைபெறா ; இவற்றில் துப்பறியும் வேலை கிடையாது ; மயிர்க் கூச்செறியும் நெருக் கடிகளும் கொலைகளும் நடக்கமாட்டா. எல்லாம் நாம் வாழ்க் கையில் அனுபவத்தில் எதிர்பார்க்கும் சம்பவங்களாகவே இருப்பவை. 

ஆனால், மனித சித்திரங்கள் நிறைய இருக்கும். க்ஷண சித்தமும் தயாள குணமும் படைத்த ஸுரேசன், 'பெரிய மனுஷர்' என்று தாராளமாகச் சொல்லக்கூடிய கேதார் பாபு, 'அசையாத குன்று' என்று சொல்லுவோமே அந்த மாதிரி யான மஹிம், பெண்மையின் பொலிவாகிய மிருணாளினி - இப்படி எத்தனை விதமான பிரகிருதிகள் ! வாழ்க்கை - வீட்டில் வசிக்கும் இவர்கள் எல்லோரும் அசலாவின் தன் மையால் பாதிக்கப்படுகிறார்கள். கிரஹ தாகம்! (வீடு எரிந்து போகிறது!) நடுத் தெருவில் நிற்கிறார்கள் எல்லோரும் ! 

XV 

' சுகம் எங்கே?' என்பதில்தான் என்ன குறைவு ! விளம்பரப் பிரியர் முத்தண்ணா, விவஸ்தையற்ற சஞ்சலா , தனஞ்சயன், ஆனந்தன், மாணிக்கம், உஷா - எவ்வளவு வேறுபட்ட தன்மைகள் ! 

'அன்னா 'வில் உலவும் பிரகிருதிகள் கணக்கில் அடங்காதவர்கள். ஒவ்வொருவரும் தனித் தன்மை கொண்டவர் கள். டால்ஸ்டாய், தம் திறமையையும் உணர்ச்சியையும் பூராவும் அதில் கொட்டி, ஒப்பற்ற வகையில் உருவங்களை வார்த்து நிறுத்தியிருக்கிறார். எல்லோரும் கண்ணெதிரில் நடமாடுவது போலவே தோன்றுகிறது. 

'பெண்'ணில் ஜம்னாவின் அடக்கம் அசாதாரண மானது. கிராமாந்தரப் பரோபகாரி அஜீத் , மனத்தை விட்டு அகல முடியாத உயிர்ச் சித்திரம். ஹல்லீ , இலக்கி யத்தில் தத்ரூபமாக சிருஷ்டிக்கப்பட்டு நிற்கும் பாலகர்கள் சிலரில், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன். 

ரமேச சந்திரரின் நாவல்களில், குன்றின் மேலிட்ட விளக்குகளைப் போலப் பிரகாசிக்கும் பிரகிருதிகள் எல்லோ ரும் சரித்திர புருஷர்கள் . ராணா பிரதாப்சிங், அமர்சிங், தேவீசிங், ராணி துர்க்கா , தேஜ்சிங், திவான் பாமா ஷாஹ், - பெயர்களைக் கேட்டாலே போதும். நமது சரித்திரத்தில் தலை நிமிர்ந்து நடமாடிய ஜோதிகள் ! பிறகு சிவாஜி, தானாஜி, ரகுநாத்ஜி, ராஜா ஜயசிங் - எப்பேர்ப்பட்ட லட்சிய புருஷர் கள்! 

இவற்றை எழுதியவர்கள் சாமானியர்கள் அல்லர். சரத் சந்திரர் இந்தியாவிலேயே தலை சிறந்த நாவலாசிரியர் எனலாம். காண்டேகர் மராட்டியில் முதல் ஸ்தானம் வகிப் பவர். டால்ஸ்டாயைப் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தில்லை. அவர் 'வானமும் பூமியுமாய் வளர்ந்து நிற்கும் கலா நிபுணர்.' ஸியாராம்சரணர் ஹிந்தியில் பிரதம நூலாசிரியர், 

- கவியுங்கூட. ரமேச சந்திரர் இந்தியாவின் ஒப்பற்ற சரித் திராசிரியர். 

இந்த மொழிபெயர்ப்புகளின் மூலம் தமிழிலும் முதல் தரமான நாவல்கள் தோன்றும்படியாக ஓர் ஊக்கம் ஏற்பட வேண்டும்; தமிழ் ஆசிரியர்கள், இவற்றைக் கண்டு, நம் தாய்மொழியிலும் பெரிய நாவல்களை எழுதத் தூண்டு தல் பெற்றால், இந்த நவீனங்களை வெளியிட எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி வீணில்லை. 

இந்தப் புதிய நாவல்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயன்றிருக்கிறேன். இனிமேல், நீங்களே படித்துப் பாருங்கள்.