Saturday 11 April 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 11- ஹருகி முராகமி (Haruki Murakami) “1Q84”,எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) "Invisible Cities" The Masterful Polaroid Pictures Taken by Filmmaker Andrei Tarkovsky

 

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 11- ஹருகி முராகமி (Haruki Murakami) “1Q84”

http://mdmuthukumaraswamy.blogspot.in/2015/04/11-haruki-murakami-1q84.html

 





தமிழில் சமீபத்தில் அதிகமும் மொழி பெயர்க்கப்பட்ட ஆசிரியர் ஹருகி முராகமியாகத்தான் இருக்க வேண்டும் . சென்னை புத்தகக்கண்காட்சியில் முராகமியின் ‘நார்வேஜியன் வுட்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். சில பக்கங்களைப் புரட்டி பார்த்து சில பத்திகளை வாசித்துப் பார்த்தேன். தமிழே விசித்திரமாக இருந்தது. ஏர்டெல்லின் மாதாந்திர மொபைல் பில் கூட விளங்கிவிடும்  போல ஆனால் இந்த முராகமி நாவல் தமிழில் சுத்தமாகப் புரியாது என்று தோன்றியது. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்ந்து புத்தகத்தை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அப்பன் முருகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.

முராகமியின் 1Q84 நாவலில் வரும் ஒரு அத்தியாயம் ‘பூனைகளின் நகரம்’, தனியாக சிறுகதையாகவும் வாசிக்கப்படுகிறது சிறுகதையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையை எங்கே வாசித்தேன் என்று குறித்துவைத்துக்கொள்ளவில்லை ஆனால் நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தது. முராகமியின் உரைநடை எளிமையானது ஆகையால் மொழிபெயர்ப்பது சிரமமாக இருக்காது. மூன்று பாகங்களைக் கொண்ட பெரிய நாவலான 1Q84 தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டால் புதிய புனைவுலகம் தமிழுக்கு அறிமுகமாகும். 

ஹருகி முராகமியின் புனைவுலகம் எப்படிப்பட்டது? அது லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மூலமாக அறிமுகமான மாந்தரீக யதார்த்தவாத இலக்கிய வகையைச் சார்ந்ததும் இல்லை, ஜப்பானிய மரபிலிருந்து கிளைத்த காவபட்டா நாவல் வகையும் இல்லை. முராகமியின் புனைவுலகம் உலகமயமான சமகால ஜப்பானிய சமூகத்தின் நனவிலியை நோக்கி கீழே இறங்கிச் செல்வதாக இருக்கிறது.   “கீழே இறங்கிச் செல்லுதல்” என்பது தனது எழுத்தில் அலுப்பூட்டக்கூடிய அளவில் ஏணியில் இறங்குதல், கிணற்றுக்குள் இறங்குதல் என பலவகைகளிலும் வர,  இறங்கியபின் கதையில் தள மாற்றம் நிகழ்வது தனக்கே பிடிக்கவில்லை என முராகமி ஒரு பேட்டியில் சொல்கிறார். அதனால்தானோ என்னவோ 1Q84 நாவலில் கதையின் நாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் டோக்கியோ நகர பாலமொன்றில் மேலேறிச் செல்லும்போது நனவின் தள மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. டோக்கியோவில் வசிக்கும் முராகமி டோக்கியோவில் மாயாஜாலங்கள் எதுவும் நிகழ்வதில்லை, பறக்கும் கம்பளங்கள் போன்ற மாயப்பொருட்கள் எதுவும் காணக்கிடைப்பதில்லை மயாஜாலங்கள் நிகழவேண்டுமென்றால் நீங்கள் உங்களுள்ளேயே உங்கள் மனதின் அடியாழத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார். முராகமியின் நாவல்கள் இப்படி ஜப்பனியர்களை அவர்கள் மனதின் அடியாழத்துக்கு உண்மையிலேயே கூட்டிச் செல்கிறது போலும். ஓவ்வொரு முரகாமி நாவல் வெளியீட்டின் போதும் ஒட்டு மொத்த ஜப்பானே அதை எதிர்பார்த்து காத்திருக்கிறது. முராகமியின் நாவல்களின் கரு என்ன என்று  பலவிதமான யூகங்கள் வெகுஜன ஊடகங்களில் எழுப்படுகின்றன. அதனால் முராகமி 1Q89 நாவலின் கருவை படு ரகசியமாக வைத்திருந்தார். நாவல் வெளியான மூன்று மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.  2008-2009 ஜப்பானிய மொழியில் வெளியான 1Q84 நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2011 இல் ஆங்கிலத்தில் வெளியானது அது இன்றுவரை தொடர்ந்து அதிகம் விற்பனையான இலக்கிய படைப்பாக இருந்துவருகிறது.
முராகாமியின் நாவலின் ஈர்ப்பு அது ஒரு கனவு போலவே எழுதப்பட்டிருப்பதுதான் என்று நான் நினைக்கிறேன். கனவு போலவே அனுபவமாகின்ற 1Q84  ஒரு காதல் கதையாகவும், மர்ம நாவலாகவும், சுயகண்டுபிடிப்பின் சாகசமாகவும், அதீத கற்பனையாகவும், தேவதைக்கதையாகவும்,  வார்த்தைகளற்ற துக்கமாகவும், அபத்தத்தின் வெற்றிகளாகவும் முழுமை கொள்கிறது.

கதை நாவலின் கதாநாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் அனாமதேய டாக்சி டிரைவர் ஒருவனின் அமானுஷ்ய ஆலோசனையின் படி டோக்கியோ நகர பாலமொன்றில் ஏற அவள் நனவின் தளங்கள் மாறுகின்றன. நாவலின் தலைப்பு ஆர்வெல்லின் புகழ்பெற்ற நாவலான “1984” ஐ நினைவுபடுத்தும்படி பெயரிடப்பட்டிருக்கும் 1Q84 இல் நாவலின் நிகழ்வுகளும் புனைவாக்கப்பட்ட 1984 இல் நடக்கின்றன.1984இல் ஜப்பானில் பிரசித்திபெற்று விளங்கிய பாப் இசைப் பாடல்கள் நாவல் முழுக்க வெவ்வேறு விபரக்குறிப்புகளாக வருகின்றன. அமோமி ஒரு தொழில்முறை கொலைகாரி; அவள் Sakigake  என்ற ரகசிய மதக் குழு ஒன்றின் தலைவரை கொலை செய்யுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறாள். அவளை அனுப்பிய செல்வந்த மூதாட்டி விதவை (the dowager ) என்று மட்டுமே நாவலில் அழைக்கப்படுகிறாள். அந்த சீமாட்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதி நடத்தி வருகிறாள். அவளுடைய விடுதியில் தாபூசா என்ற பத்து வயது சிறுமி  வேறொரு Air Chrysalis என்ற நாவலில் வரும் சிறிய மனிதர்களால் காற்றில் ஒரு கூண்டு அமைத்து கடத்தப்படுகிறாள்.  விதவை சீமாட்டி ரகசிய மதக் குழுவின்  குருவும் ஆஸ்ரமத் தலைவருமான ‘தி லீடர்’ தான் கடத்தியிருக்க வேண்டும்  என்று துப்பறிந்து அவனைக் கொல்வதற்கு அமோமியை அனுப்புகிறாள். அமோமி ஆன்மீக குரு தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் பணியாள் வேடமிட்டு நுழைந்து அவனை சந்திக்கும்போது அவனுக்கு உண்மையிலேயே சில அபூர்வ சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவன் கடுமையான கழுத்து தசைப்பிடிப்பினால் அவதிபட்டுக்கொண்டிருக்கிறான். அவன் அமோமியிடம் தன்னை வலியில்லாமல் கொன்றுவிடுமாறு வேண்டுகிறான். இந்த சம்பவங்களின் போதே அமோமி 1Q84 என்ற மாற்று யதார்த்த தளத்தினுள் தள்ளப்பட்டு விடுகிறாள். அமோமி இந்த சம்பவங்களை ஆவணக்காப்பகத்திலுள்ள செய்தித்தாள்களின் மூலம் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறாள். ஆன்மீக குரு கொலை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறவில்லை அதை இயற்கை மரணம் என்றே அறிவிக்கிறது.

அமோமியின் கதை நடக்கும்போதே இணையாக அமோமியின் பள்ளித் தோழன் டெங்கோ கவானாவின் கதையும் சொல்லப்படுகிறது. டென்கோ ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கிறான். அவன் ஒரு இலக்கிய எழுத்தாளனும் கூட. டெங்கோவிடம் அவனுடைய பதிப்பாளர் 17 வயது பெண் எழுதிய கதையைக் கொடுத்து திருத்தி தருமாறு கேட்கிறார். அந்தக் குறு நாவல் Air Chrysalis. அதை எழுதிய ஃபூக்கோ எரி மனவளர்ச்சி குன்றிய பெண். அவள் அமோயியால் கொல்லப்படுகிற ஆன்மீக குருவின் மகள். அவள் பத்து வயது வரை ரகசிய மதக்குழுவின் ஆஸ்ரமத்தின் கம்யூனில் வளர்ந்து அதன் பிறகு அந்த ஆஸ்ரமத்திற்கு  எதிர் கம்யூன் அமைத்த புரபசர் எபிசுனோவின் வீட்டில் வளர்கிறாள். எபிசுனோவின் மகள் Air Chrysalis கதையை, அதாவது பத்து வயது வரையிலான அவளுடைய ஆஸ்ரம நினைவுகளை குத்துமதிப்பாக வார்த்தைப்படுத்த உதவுகிறாள். Air Chrysalis ஒரு தேவதைக்கதை. அதில் சிறிய மனிதர்கள் சிறுமிகளை தொந்திரவு செய்கிறார்கள். டெஙோ ஃபூக்கொ எரியின் கதையை செழுமைப்படுத்திக்கொடுக்க அது அதிகம் விற்று விற்பனையில் சாதனை படைக்கிறது. 

தங்கள் தலைவரின் கொலையை துப்பறிய யூஷிக்காவா என்ற அசிங்கமான வக்கீலை நியமிக்கிறது ரகசிய மதக்குழு. யூஷிக்காவா முராகமியின் வேறொரு கதையிலும் வரும் கதாபாத்திரம். உஷிக்காவா டென்கோவும் அமோமியும்  பள்ளித்தோழர்கள் என்று கண்டுபிடித்துவிடுகிறான். அவன் ஃபூக்கொ எரி Air Chrysalis கதையை டெங்கோவின்  உதவியுடன் எழுதினாள் என்றும் கண்டுபிடித்துவிடுகிறான். அமோமியும் டெங்கோவும் யூஷிக்காவின் துப்பறிதலின் மூலமாக இருபது வருடங்களுக்குப் பின் இணைகிறார்கள். அதாவது இரண்டு இணைகதைகளும் சந்திக்கின்றன. யூஷிக்காவாவை சீமாட்டி விதவையின் காவலன் டமரு கொன்று அமோமியை காப்பாற்றி விடுகிறான். டமரு நாவலில் ஒரு சுவாரஸ்மான கதாபாத்திரம். ஓரின சேர்க்கையாளன். பெரிய படிப்பாளி. ஷேக்ஸ்பியரையும் ஆண்டன் செகாவ்வையும் அடிக்கடி மேற்கோள் காட்டி  பேசுகிறவன். டமரு யுச்சிக்காவை கொல்லும்போதும் ஆண்டன் செகாவ்வை மேற்கோள்களை சொல்கிறான் ( எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் நூலை படித்திருப்பான் போல) 

மேற்சொன்ன சிக்கலான கதை தொய்வில்லாமல் சொல்லப்படுகிறது. பாலியல் சித்தரிப்புகளுக்கும் காட்சிகளுக்கும் குறைவில்லை. அமோமியும் அவளுடைய போலீஸ் தோழி அயோமியும் சேர்ந்து சிங்கிள்ஸ் பார்களுக்கு சென்று அவர்களுடைய அப்போதைய பாலியல் இச்சைக்கேற்ப ஆண்களைத் தேர்ந்தெடுத்து  உடலுறவு கொள்கிறார்கள். ஒரு முறை அவர்கள் வழுக்கைத் தலை ஆண்களை இச்சை ககொள்வதும் தேர்ந்தெடுத்து உறவு கொள்வதும் நாவலில் விரிவாக விஅவரிக்கப்படுகிறது. அயோமி மர்மமான முறையில் நாவலில் கொல்லப்பட்டுவிடுகிறாள். பொலீசும் கொலையாளியும் ஒரே மன அமைப்பு கொண்ட்வர்களாக இருக்கிறார்கள். 

டெங்கோ மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையை பார்க்க பூனைகளின் நகரத்திற்கு செல்கிறான். போகிற வழியில் நர்ஸ் பெண் ஒருத்தியுடன் உறவு கொள்கிறான். இலக்கற்ற, காதலற்ற உறவுகள் நாவலில் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் தொடர்பற்றும் தொடர்புடனும் இருக்கின்றன. கேபிள் டிவி சந்தா சேகரிக்க வீடு வீடாக அலையும் உருவம் டெங்கோவின் தந்தை என்று வாசகனுக்கு தெரிகிறது. டெங்கோவுக்கு மருத்துவமனையில் இருக்க்கும் தந்தையைத்தான் தெரியும்.

  அமோமிக்கும், டெங்கோவுக்கும் இருக்கும் சிறிய பள்ளி நினைவு அவர்களின் வன்முறையான வாழ்க்கை சம்பவங்களூடே காதலென மலர அவர்கள் முழு நிலவினை பார்த்து நிற்க நாவல் முடிகிறது. அவர்கள் அன்று ஆனால் இரு முழு நிலவுகளின் உதயத்தைப் பார்க்கிறார்கள். ஒன்று யதார்த்தம் சார்ந்தது மற்றொன்று 1Q84 ஐ சார்ந்தது.

Saturday, April 11, 2015


எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) "Invisible Cities"

"InvisibleCities" by Source. Licensed under Fair use via Wikipedia - http://en.wikipedia.org/wiki/File:InvisibleCities.jpg#/media/File:InvisibleCities.jpg

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 9 - இடாலோ கால்வினோ (Italo Calvino) “Invisible Cities”

    இடாலோ கால்வினோவின் Invisible Cities தமிழில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாகிவிட்டதா என்று தெரியவில்லை. “If on a winter's night a traveller” நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அந்த மொழிபெயர்ப்பை ஐந்தாறு பக்கங்கள் படித்தவுடனேயே மூடி வைத்துவிட்டேன். Invisible Cities தமிழில் மொழிபெயர்க்கப்படுமானால் அதற்கு ஒரு சீரும் சிறப்புமான நல்ல வாழ்க்கை அமைய அதன் மொழிபெயர்ப்பாளர் மெனெக்கெட வேண்டும். 

    ஏனெனில் கால்வினோவின் Invisible Cities மரபான அர்த்தத்தில் நாவல் இல்லை; இதில் கதையென்று ஏதும் சொல்லப்படுவதில்லை. சீனாவின் பேரரசரான குப்ளாய் கான் தனது விரியும் சாம்ராஜ்யத்தினை அறிந்துகொள்ள வேண்டி புகழ்பெற்ற பயணியான மார்கோ போலோவை அனுப்பி வைக்கிறார். மார்கோ பொலோ திரும்பி வந்து குப்ளாய் கானிடம் ஐம்பத்தைந்து நகரங்களைப் பற்றிய விவரணைகளைச் சொல்கிறார். மார்கோ போலோ பேசுவது ஒரு மொழி குப்ளாய் கான் புழங்குவது இன்னொரு மொழி இரண்டு பேரும் உரையாடுகிறார்கள். கற்பனையை ஊடகமாக வைத்து ‘மொழிபெயர்த்து’ இருவரும் புரிந்துகொள்கிறார்கள். ஆக, கற்பனையும் கற்பனையின் சாத்தியங்கள் மட்டுமே இந்நாவலின் கரு.

    நாவலில் வரும் அத்தனை நகரங்களும் பெண் பெயர்கள் கொண்டவை, அந்தப் பெண்களோடு கொள்ளும் ‘உறவுகளின்’ அடிப்படையில் பதினோரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. நகரங்களும் நினைவுகளும், நகரங்களும் ஆசையும், நகரங்களும் குறிகளும் (மக்களே! இங்கே குறிகள் என்பது signs என்ற ஆங்கில் வார்த்தையின் தமிழாக்கம்), ஒல்லியான நகரங்கள், வியாபார நகரங்கள், நகரங்களும் கண்களும், நகரங்களும் கண்களும், நகரங்களும் பெயர்களும், நகரங்களும் வானமும், நகரங்களும் இறந்தவர்களும், தொடர்ந்த நகரங்கள், மறைந்திருக்கும் நகரங்கள் ஆகியன பிரிவினைகள்.  

    கால்வினோவின் மூல இத்தாலிய நாவல் 1972 இல் வெளிவந்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1975இல் வந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் 1986இல் கால்வினோவின் நாவல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கால்வினோவின் ஒரு சிறுகதையை ‘இனி’ இதழுக்காக மொழிபெயர்த்தார் என்று ஞாபகம். கால்வினோவின் இதர படைப்புகளைத் தேடித்தேடி படித்த நான் 2004 ஆம் வருடம் ஃபிரான்ஸின் தலைநகரான பாரிசிலிருந்து நண்பர்களுடன் இத்தாலியின் ஃப்ளாரன்சுக்கும், வெனிசுக்கும் சாலைவழியாக பயணம் செய்தபோதுதான் Invisible Cities ஐ வாசித்தேன். அதற்குள் நான் உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட்டபடியால் மார்கோ போலோ போன்றே என்னுள் ஒரு பயணியின் அகம் உருவாகியிருந்தது. கால்வினோவின் ஐம்பத்தைந்து வசனகவிதைகளால் ஆன அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் என் பயண அனுபவங்களை கற்பனையால் மேலும் மேலும் செழுமைப்படுத்திக்கொண்டே இருந்தது. நாட்டார் வழக்காறுகளின் தொகுதியாக பிறந்த ஐரோப்பிய நாவல் செர்வாண்டசில் நகை பொலிவு பெற்று கால்வினோவின் Invisible Citiesஇல் எங்கே வந்து சேர்ந்திருக்கிறது பார்த்தீர்களா என்று வாய்விட்டு கூவினேன்.  என்னுடன் பயணம் செய்த இரண்டு ஃப்ரெஞ்சுத் தோழிகளும் “எங்கே வந்து சேர்ந்திருக்கிறதா? வெனிஸுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வெனிஸுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக” என்று பதிலளித்தார்கள்.

    ஃப்ளாரென்ஸையும், வெனிஸையும் பார்த்த தாந்தே (Dante) எப்படி நரகத்தை (inferno) கற்பனை செய்திருக்கமுடியும் என்று தாந்தேயைத் திட்டிக்கொண்டே வெனிஸை சுற்றிப்பார்த்தேன். படித்துக்கொண்டிருக்கும் Invisible Cities இல் ஒரு பத்தி பொருத்தமாய் இருந்தது : “The inferno of the living is not something that will be; if there is one, it is what is already here, the inferno where we live every day, that we form by being together. There are two ways to escape suffering it. The first is easy for many: accept the inferno and become such a part of it that you can no longer see it. The second is risky and demands constant vigilance and apprehension: seek and learn to recognize who and what, in the midst of inferno, are not inferno, then make them endure, give them space.”

    வெனிஸிலிருந்து ஊர்திரும்ப கிளம்பியபோது காதலியைப் பிரியும் காதலனைப்போல என் நெஞ்சு விம்மியது. வெனிஸின் படகு வீட்டிலிருந்து பார்த்த ஆகாயத்தை மீண்டும் நான் எப்போது பார்ப்பேன்? “Memory's images, once they are fixed in words, are erased," Polo said. "Perhaps I am afraid of losing Venice all at once, if I speak of it, or perhaps, speaking of other cities, I have already lost it, little by little.” 
    
    ஊர்திரும்பியபோது சென்னை நகரம் புத்தம் புதியதாய் இருந்தது: “...the people who move through the streets are all strangers. At each encounter, they imagine a thousand things about one another; meetings which could take place between them, conversations, surprises, caresses, bites. But no one greets anyone; eyes lock for a second, then dart away, seeking other eyes, never stopping...something runs among them, an exchange of glances like lines that connect one figure with another and draw arrows, stars, triangles, until all combinations are used up in a moment, and other characters come on to the scene... ” 

    பயணம் தரும் கனவிலிருந்து விழித்து சென்னையின் தினசரி வாழ்க்கையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். என் தோழிகளிடம் இருந்து ஒரு போஸ்ட்கார்ட் வந்தது: “ உனக்கு ஒன்று தெரியுமா Invisible Cities நாவலில் வரும் அத்தனை நகரங்களுமே வெனிஸ்தான். கோர் விடால் எழுதியிருக்கிறார்.”  என்றாவது ஒரு நாள் நானும் சென்னையின் கன்ணுக்குப் புலப்படாத நகரங்களைப் பற்றிய ஒரு நீள் கவிதையை புனைவேன் அதன் தலைப்பு ‘அனாதையின் காலம் ‘ என்பதாக இருக்கும். 

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 10 ஜெர்சி கோசின்ஸ்கி (Jerzy Kosinski) “Steps”- (கூடவே ஜெயமோகனுக்கு சில விளக்கங்களும், ஆர். அபிலாஷுக்கு ஒரு வாழ்த்தும்)






ஜெர்சி கோசின்ஸ்கியின் புகழ்பெற்ற “Painted Bird” என்ற நாவலில் இரண்டாம் உலகப்போரின்போது சிறுவன் ஒருவன் ஐரோப்பிய கிராமங்களில் சுற்றியலைகிறான்; அவனை சாதாரண கிராமமக்களும் ராணுவத்தினரும் சொல்லவொணாத வன்கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்கும், யூத இன அழிப்புக்கும் தப்பிய ஜெர்சி கோசின்ஸ்கி அமெரிக்காவில் குடியேறினார். அவருடைய நாவல்கள் அனைத்துமே போருக்குப் பிந்தைய, யூத இன அழிவினை நினைவுகளாகவும், கற்பனைகளாவும், ஏந்திய அகத்தினை ஆராய்வதாக இருக்கிறது. Pinball,  Being There, The Hermit of the 69th street, Cockpit, Blind Date, Passion Play ஆகியன அவருடைய இதர நாவல்கள். Being There திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

    ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps எனக்கு ஏன் ‘பிடித்த’ நாவலாகிறது என்பதை எழுதும்போதே எனது தேர்வுகளின் அடிப்படையைப் பற்றியும் ஒரளவேனும் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் ஏழு நாவல்கள் பட்டியலுக்கு  ஜெயமோகன்  அவருடைய தளத்தில் “எம்.டி.எம்மின் ரசனையில் புனைவை ஒரு விளையாட்டாகக் காட்டும் முறைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது” என்று எழுதியிருக்கிறார். ஆனால் என்னுடைய தேர்வுகள் மொழி, வடிவ விளையாட்டுக்களின் நேர்த்தியை வெளிப்படுத்துகிற நாவல்கள் மட்டுமல்ல. ஏனெனில் நாவல் வடிவத்தினை நான் அவ்வளவு எளிய மகிழ்ச்சிகளை அளிப்பவையாக மட்டும் கருதவில்லை. ஜெயமோகன் தன் ‘வெண்முரசு’  வரிசை நாவல்களை காப்பிய வடிவத்தில் எழுதும்போது எப்படி ஒரு தேச உருவாக்கத்தினை அதன் பாரம்பரியத்தோடு சேர்த்து புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறாரோ அது போலவே அதன் வெவ்வேறு காலகட்டங்களில் நாவல் என்ற வடிவம் தன் நிலமும் வரலாறும் சார்ந்து பல மதிப்பீடுகளை உருவாக்குகிறது அந்த மதிப்பீடுகளை அந்தந்த நாவல்களின் விளையாட்டுக்களின் வழி அறிந்து அடையாளம் காட்ட முடியும் என்று நான் எண்ணுகிறேன். உலக இலக்கியத்தில் படைக்கப்பட்ட  பல நாவல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுமென்றால் அவற்றைப்பற்றிய சொல்லாடல் பரவலாகுமென்றால் நம் படைப்புகள் உருவாக்க விரும்புகின்ற  விழுமியங்கள் வேறு வகைமையினதாக இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது ‘வெண்முரசு’ பின்னை காலனீய தமிழ்சமூகத்தில் உருவாக்க யத்தனிக்கும் இந்திய தேச புனருத்தானம், வீர நாயகர்களின் வழிபாடு, பராம்பரிய குல, சாதிய உறவுகள் மற்றும் மோதல்கள், சடங்குகள், மரபுகள், ‘குலச்சபைகள்’, உணவு பழக்கவழக்கங்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பழம்பெருமை  ஆகியவற்றால் ஆன பாரம்பரியம், பழமையின் பிடிப்பில்  வாசகனையும் தலைமுறைகளையும் நிரந்தரமாகப் பிணைக்கும் கதையாடல்- ஆகிய மதிப்பீடுகளுக்கு அப்பால் சமகாலத்திய நவீன மனித இருத்தல்களின் பிரச்சனைகள் என்ன அவற்றை சமகாலத்திய உலக இலக்கியம் எவ்வாறெல்லாம் நவீனப்படுத்திப் பேசுகிறது என்பனவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியே என் ‘ரசனை’ பட்டியல்.

    கதேயின் நாவல்கள் இல்லாமல் மேற்கத்திய சமூகத்தில் ‘தனிமனிதன்’,  சட்டம், சமூகம், ‘அறம்’ ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் மதிப்பு  வாய்ந்த சமூக அலகாக தோற்றம் பெற்றிருக்க முடியாது, வளர்ச்சி பெற்றிருக்க இயலாது என்று அறிந்த அனைவருக்குமே நாவல் வடிவத்தின் வரலாற்று பலம் என்ன என்று தெரிந்திருக்கும்.  ஆனால் Sorrows of Young Werther ஐ படிக்கும் அனைவருக்கும் அந்த நாவல் மொழியின் கவித்துவம், நேர்த்தி, செழுமை, விளையாட்டு நிறைந்த ‘கலையாக’ மட்டுமே அனுபவமாகும்.  மொழி மற்றும் வடிவ விளையாட்டின் மேல் கவனத்தைக் குவிக்கும் நாவல்கள், அவற்றை மறைத்து வைத்திருக்கும் நாவல்கள் உருவாக்கும் மதிப்பீடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளின்’ போதாமையையும், நபகோவின் The Real Life of Sebastian Knight-இன் உயர்வையும் உடனே சுட்டிவிடுவது போல.  ‘நினைவுப்பாதை’ சிதைந்துவிட்ட எழுத்தாளனின் சுயத்தை வரைபடமாக்கி தமிழின் நவீனத்துவ பரப்பினை எடுத்தியம்பியதென்றால், ‘ஜே ஜே சில குறிப்புகள்’ எழுத்தாளனின் சுயத்தை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி, புனிதப்படுத்தி தமிழ் சமூகத்தில் Me Generation, Selfie Generation இன் வருகையை அறிவிக்கிறது. Me generation இன் அதீதம் அயன் ராண்டின் virtue of selfishness என்ற வக்கிர எல்லையினை அடைந்துவிட்ட அமெரிக்க சமூகத்தில் எழுத்தாளனின் சுயமே ஒரு புனைவு, வேறு பல புனைவுகளோடு பிணைக்கப்பட்டது என்ற தீவிரத்தினை சொல்கின்ற நபகோவின் The Real Life of Sebastian Knight புனைவின் ‘நிஜத்தினை’ சொல்கிறது.  ஆகவே மொழி, வடிவ விளையாட்டுக்கள் கொண்ட நாவல்கள் திறவுகோல்கள், அவை திறப்பவை அவற்றின் பிரதி எல்லைகள் தாண்டியவை.  “எல்லையில்லா விளையாட்டுடையவர் யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று கம்பன் நமக்கு சொல்லித் தரவில்லையா? விஷ்ணு மாயை என்ற விளையாட்டாக உலகைக் காணவேண்டும் என்று நம் தத்துவஞானிகள் நம்முடைய பொது அறிவில் இருப்பதில்லையா?

    மேற்சொன்ன பின்னணியுடன் வாசித்தால் நான் ‘எனக்குப் பிடித்த நாவல்கள்’ வரிசைக்கான குறிப்புகள் ‘ரசனை’, ‘பிடித்திருக்கிறது’, ‘பிடிக்கவில்லை’ போன்ற பதங்களை பயன்படுத்தும் mode of discourse அவ்வளவுதான் என்பது விளங்கும். சொல்லாடல் பாங்குகளை போன்மை செய்வது அவற்றை கவிழ்ப்பதற்கே, அவற்றை நிலைநிறுத்துவதற்கு அல்ல.

    ரசனை விமர்சனத்தை நான் கையாளும் விதம் இப்படி இருக்க, ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலி குறிப்பினை ரஜினி ரசிகனின் உயற்வு நவிற்சி போல இருக்கிறது என்று வாசித்திருக்கிறார் ஆர்.அபிலாஷ். வேடிக்கைதான். ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஜெயகாந்தனின் எழுத்து என்னை வசீகரிக்கவில்லை என்று ஆரம்பித்து, என் தந்தையின் தலைமுறையினர் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் எதைக் கொண்டாடினார்கள் என்று சொல்லி, அதன் நீட்சியாக அவருடைய ‘கம்பீரத்தை’ என்ன மாதிரியான வாய்மொழி anecdotes வழி நாம் அறிகிறோம் என்பதை உதாரணங்கள் காட்டி, அவற்றை மீறிய விதத்தில் நான் அவரை சந்தித்த போது ‘கைக்கடக்கமாக குள்ளமாக இருந்தார்’ என்று எழுதுவது எப்படி ரஜினி ரசிகன் ரஜினியை வியந்தோதுதல் போல அமைந்த கட்டுரையாகும்? அபிலாஷுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா? இவர்  சாகித்ய அகாடமி இலக்கியத்திற்கு வழங்கும் யுவ புரஷ்கார் விருது பெற்றவர். ஆர். அபிலாஷ் மேலும் வளர்ந்து தன்னுடைய மழலைச்சொற்களுக்கு சிசு புரஷ்கார் விருது பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். நிற்க.

    என்னுடைய ‘ரசனை’ யின்படி எனக்குப் ‘பிடித்த’ ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps  நாவலை நான் இரண்டாம் முறை வாசிக்க விரும்பமாட்டேன். ஏனென்றால் Steps மனிதனின் கற்பனை வன்முறையினை எந்த எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தது என்பதனையும் யூத இன அழிப்பின் குரூர நினைவுகள் நவீன மனிதனின் பிரக்ஞையின் அங்கமாக எப்படி மாறிவிட்டது என்பதையும் வாசகனின் நரம்புகள் கூழாகும் விதத்தில் சொல்லும் நாவல். கோசின்ஸ்கியின் நாவல்கள் செர்ஜி டூப்ரோவ்ஸ்கி ஃப்ரெஞ்ச் மொழியில் அறிமுகப்படுத்திய Autofiction வகையைச் சார்ந்தது என்று பொதுவாகக் கருதப்படுக்கின்றன.  சுய வரலாற்றினை தன்னிச்சையான சுதந்திர எழுத்துடன் கற்பனை கலந்து எழுதும் ஆட்டோஃபிக்‌ஷனை இந்த நாவலில் பிரம்மை கலந்து எழுதுகிறார் கோசின்ஸ்கி. கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. நினைவுகளும் கற்பனைகளும் பிரம்மைகளும் துண்டு துண்டாக அத்தியாயங்களாகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக சில சமயங்களில் இருக்கின்றன; பல சமயங்களில் இருப்பதில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதி குரூர வன்முறை சித்தரிப்புகள் இருக்கின்றன. நாவலின் நாயகனுக்கு அடையாளமில்லை அவன் நகரத்தின் மிருகக்காட்சி சாலையில் ஆக்டோபஸ் ஒன்று தன்னைத்தானே சாப்பிட்டு அழித்துக்கொள்வதைப் பார்ப்பதற்காக போவதில் நாவல் ஆரம்பிக்கிறது. போர்ச்சூழலில் உள்ள கிராமம், மன நோயாளிகளுக்கான மருத்துவமனை, கழிப்பறை, புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறை, மயானம், அறியப்படாத இடம் ஆகிய இடங்களில் சம்பவங்கள் நடக்கின்றன. Hermit of the 69th street இல் இருந்த நகைச்சுவை கிஞ்சித்தும் Steps இல் இல்லை. Paris Review : Art of Fiction பேட்டியில் கோசின்ஸ்கி தான் ஒரு புகைப்படக் கலைஞரும் ஆகையால் புகைப்படம் கழுவதற்கான இருட்டறையே உலகினை காட்சிப்படுத்துவதற்கான தன்னுடைய உருவகம் என்று குறிப்பிடுகிறார். இந்த வன்முறைக்காட்சிகளில் வன்முறையாளன்-பலிகடா, ஒடுக்குபவன் - ஒடுக்கப்படுபவன் ஆண்டான் - அடிமை இருவருமே ஒரே மாதியான மன அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தில் இதற்கான முன் மாதிரி ஜெனெயின் எழுத்துக்களில் இருக்கிறது. The Art of the Self: Essays à propos Steps (1968) என்ற நூலில் புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறையாகிய இவ்வுலகிலிருந்து தான் ஏன் தப்பித்து ஓட நினைக்கிறேன் என்று கோசின்ஸ்கி ஸ்டெப்ஸ் நாவலை மையமாக வைத்து எழுதுகிறார். அதீதமான வன்முறையை எழுதிய கோசின்ஸ்கி தன் வாழ்க்கையில் தாந்திரீக பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அதை Hermit of the 69th street நாவலிலும் பதிவு செய்தார். யூத இன அழிப்பின் கொடூர நினைவுகளிலிருந்து தப்ப இயலாத கோஸின்ஸ்கி 1991 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். 

கோஸின்ஸ்கியின் Steps நாவலை வாசிக்கும் அனுபவம் உங்கள் நரம்புகளை கூழ் கூழாக்கும் என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை.

 http://www.openculture.com/2013/08/the-masterful-polaroid-pictures-taken-by-filmmaker-andrei-tarkovsky.html

The Masterful Polaroid Pictures Taken by Filmmaker Andrei Tarkovsky

Tarkovskypol1
Today, digitally empowered to take, view, and share a photograph in the span of seconds, we think nothing of the phrase “ïnstant camera.” But to celebrated Russian filmmaker Andrei Tarkovsky, who died in 1986 after living almost his entire life in the Soviet Union, the technology came as a revelation. He had, of course, to use a primitive Polaroid camera, but, Tarkovsky being Tarkovsky, his aesthetic sense still came through its little square, self-developing frames loud and clear — or rather, it came through, rich, pensive, solemn, and autumnal.
tark photo
In 2006, Thames & Hudson published Instant Light, a book collecting “a selection of color Polaroids the filmmaker took from 1979 to 1984 of his home, family, and friends in Russia and of places he visited in Italy,” and you can see some of these images on the blog Poemas del río Wang, or on this Facebook page.
Tarkovskypol2
The post quotes Tarkovsky’s friend Tonino Guerra, remembering the auteur’s Polaroid period: “In 1977, on my wedding ceremony in Moscow, Tarkovsky appeared with a Polaroid camera. He had just shortly discovered this instrument and used it with great pleasure among us. [ … ] Tarkovsky thought a lot about the ‘flight’ of time and wanted to do only one thing: to stop it — even if only for a moment, on the pictures of the Polaroid camera.”
tark photo2
Now that we find ourselves in a new wave of Polaroidism — you can even buy the cameras and their film at Urban Outfitters — we’d do well to study these pictures taken by a man who mastered their form just as thoroughly as he mastered cinema. And if you want evidence of the latter, look no further than our collection of Tarkovsky films free online.
Tarkovskypol3