https://www.facebook.com/kasthurisamy.rajendran?fref=nf
செய்தி
ஓரு புறம் எகிப்தினாலும்
மறுபுறம் இஸ்ரேலினாலும் இறுக்கப்பட்ட காஸா
ஒரு மாபெரும் சிறைபோல இருக்கிறது
மறுபுறம் இஸ்ரேலினாலும் இறுக்கப்பட்ட காஸா
ஒரு மாபெரும் சிறைபோல இருக்கிறது
*
சிறைக் கொட்டடி
மஹ்முத் தர்வீஸ்
மஹ்முத் தர்வீஸ்
*
இது சாத்தியம்
சில வேளைகளிலாவது இது சாத்தியம்
குறிப்பாக இப்போது இது சாத்தியம்
ஒரு சிறைக் கொட்டடிக்குள் குதிரை சவாரி செய்வது
பாய்ந்து செல்வது
சிறையின் சுவர்கள் இல்லாமல் போவது சாத்தியம்
எல்லைகளற்ற தூரத்து நிலமாக
சிறைக் கொட்டடி ஆவது சாத்தியம்
சுவர்களை என்ன செய்யலாம்?
கற்களிடம் அதனைத் திரும்பக் கொடுத்துவிட்டேன்
கூரையை என்ன செய்வது?
அதைச் சேணமாக ஆக்கிக் கொண்டுவிட்டேன்
கை விலங்குகளை?
பென்சிலாக அதை ஆக்கிக் கொண்டுவிட்டேன்
சிறைக் காவலனுக்குக் கோபம் வந்துவிட்டது
அவன் என்னோடு பேசுவதை நிறுத்திக் கொண்டான்
கவிதைகளைப் பற்றித் தான் அக்கறைப்படுவதில்லை என
அவன் என்னிடம் சொன்னான்
அப்புறமாக எனது சிறைக்கொட்டடியைப் பூட்டினான்
சில வேளைகளிலாவது இது சாத்தியம்
குறிப்பாக இப்போது இது சாத்தியம்
ஒரு சிறைக் கொட்டடிக்குள் குதிரை சவாரி செய்வது
பாய்ந்து செல்வது
சிறையின் சுவர்கள் இல்லாமல் போவது சாத்தியம்
எல்லைகளற்ற தூரத்து நிலமாக
சிறைக் கொட்டடி ஆவது சாத்தியம்
சுவர்களை என்ன செய்யலாம்?
கற்களிடம் அதனைத் திரும்பக் கொடுத்துவிட்டேன்
கூரையை என்ன செய்வது?
அதைச் சேணமாக ஆக்கிக் கொண்டுவிட்டேன்
கை விலங்குகளை?
பென்சிலாக அதை ஆக்கிக் கொண்டுவிட்டேன்
சிறைக் காவலனுக்குக் கோபம் வந்துவிட்டது
அவன் என்னோடு பேசுவதை நிறுத்திக் கொண்டான்
கவிதைகளைப் பற்றித் தான் அக்கறைப்படுவதில்லை என
அவன் என்னிடம் சொன்னான்
அப்புறமாக எனது சிறைக்கொட்டடியைப் பூட்டினான்
காலையில் என்னைப் பார்க்கத் திரும்பி வந்தான்
என்னை நோக்கிக் கத்தினான் :
எங்கிருந்து இந்தத் தண்ணீரெல்லாம் வருகிறது?
நைல் நதியிலிருந்து நான் கொண்டு வந்தேன்
இந்த மரங்கள்?
டமாஸ்கஸின் சோலைகளில் இருந்து கொண்டு வந்தேன்
இந்த இசை?
எனது இதயத் துடிப்பிலிருந்து
சிறைக் காவலன் பைத்தியக்காரன் போல் ஆனான்
அவன் என்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டான்
எனது கவிதையைத் தான் விரும்பவில்லை என அவன் சொன்னான்
எனது அறைக் கதவைப் பூட்டினான்
மாலையில் அவன் திரும்பவும் வந்தான்
என்னை நோக்கிக் கத்தினான் :
எங்கிருந்து இந்தத் தண்ணீரெல்லாம் வருகிறது?
நைல் நதியிலிருந்து நான் கொண்டு வந்தேன்
இந்த மரங்கள்?
டமாஸ்கஸின் சோலைகளில் இருந்து கொண்டு வந்தேன்
இந்த இசை?
எனது இதயத் துடிப்பிலிருந்து
சிறைக் காவலன் பைத்தியக்காரன் போல் ஆனான்
அவன் என்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டான்
எனது கவிதையைத் தான் விரும்பவில்லை என அவன் சொன்னான்
எனது அறைக் கதவைப் பூட்டினான்
மாலையில் அவன் திரும்பவும் வந்தான்
இந்த நிலா எங்கிருந்து வந்தது?
பாக்தாதின் இரவுகளிலிந்து
திராட்சை ரசம்?
அல்ஜீரியாவின் திராட்சைத் தோட்டங்களில் இருந்து
இந்தச் சுதந்திரம்?
நேற்றைய நள்ளிரவில் நீ பூட்டிய கைவிலங்கிலிருந்து
சிறைக் காவலன் துயரத்தில் ஆழ்ந்து போனான்
அவனது சுதந்திரத்தை அவனிடம் திருப்பித் தந்துவிடுமாறு
என்னிடம் கெஞ்சினான்
பாக்தாதின் இரவுகளிலிந்து
திராட்சை ரசம்?
அல்ஜீரியாவின் திராட்சைத் தோட்டங்களில் இருந்து
இந்தச் சுதந்திரம்?
நேற்றைய நள்ளிரவில் நீ பூட்டிய கைவிலங்கிலிருந்து
சிறைக் காவலன் துயரத்தில் ஆழ்ந்து போனான்
அவனது சுதந்திரத்தை அவனிடம் திருப்பித் தந்துவிடுமாறு
என்னிடம் கெஞ்சினான்
*
கதறல் - மஹ்முத் தர்வீஸ்
கடற்கரையில் ஒரு சிறுமி
அந்தச் சிறுமிக்கு ஒரு குடும்பம் இருந்தது
அந்தக் குடும்பத்திற்கு ஒரு வீடு இருந்தது
அந்த வீட்டுக்கு இரண்டு சன்னல்களும் ஒரு கதவும் இருந்தது
அந்தச் சிறுமிக்கு ஒரு குடும்பம் இருந்தது
அந்தக் குடும்பத்திற்கு ஒரு வீடு இருந்தது
அந்த வீட்டுக்கு இரண்டு சன்னல்களும் ஒரு கதவும் இருந்தது
நான்கு, ஐந்து, ஏழு என நடைபாதிவாசிகள்
வீழ்ந்து கொண்டிருந்த கடற்கரையில்
அவர்களைக் கொன்றது போக இருந்த நேரத்தில்
கடலில் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தது
யுத்தக் கப்பல்
வீழ்ந்து கொண்டிருந்த கடற்கரையில்
அவர்களைக் கொன்றது போக இருந்த நேரத்தில்
கடலில் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தது
யுத்தக் கப்பல்
பனிமூட்டக் கைகளின் புண்ணியத்தில்
மயிரிழையில் சிறுமி உயிர்தப்பினாள்
புனிதக்கரமொன்று அவளைக் காப்பாற்றியது
அவள் தனது தந்தையை அழைத்தாள் :
‘தந்தையே எழுந்திரு, நாம் போய்விடுவோம்.
கடல் நமக்கானது இல்லை’
மயிரிழையில் சிறுமி உயிர்தப்பினாள்
புனிதக்கரமொன்று அவளைக் காப்பாற்றியது
அவள் தனது தந்தையை அழைத்தாள் :
‘தந்தையே எழுந்திரு, நாம் போய்விடுவோம்.
கடல் நமக்கானது இல்லை’
அவர், இன்மையில் எழும்போது தனது நிழலில் சிதறிப்போனார்
அவர் பேசவில்லை
கொஞ்சம் இரத்தம் பனை மரத்தில்
மேகத்தில் கொஞ்சம் இரத்தம்
அவர் பேசவில்லை
கொஞ்சம் இரத்தம் பனை மரத்தில்
மேகத்தில் கொஞ்சம் இரத்தம்
அந்தச் சப்தம் அவளையும் அவளது தந்தையையும்
அந்தக் கடற்கரை சப்தத்தை விடவும் உயரக் கொண்டுபோனது
இரவின் அந்தகாரத்தில் அவள் கதறுகிறாள்
எதிரொலி எதிரொலிக்கவில்லை
அந்தக் கடற்கரை சப்தத்தை விடவும் உயரக் கொண்டுபோனது
இரவின் அந்தகாரத்தில் அவள் கதறுகிறாள்
எதிரொலி எதிரொலிக்கவில்லை
இரண்டு ஜன்னல்களையும் ஒரு கதவையும் கொண்ட
சிறுமியின் வீட்டைத் குண்டு வீசித் தகர்ப்பதற்காக
தாக்குதல் விமானங்கள் மீளவும் வந்துபோது
அதிரடிச் செய்தி அல்லாததாகின
சிறுமியின் வீட்டைத் குண்டு வீசித் தகர்ப்பதற்காக
தாக்குதல் விமானங்கள் மீளவும் வந்துபோது
அதிரடிச் செய்தி அல்லாததாகின
அதிரடிச் செய்திகளில் அவள் நிரந்தரக் கதறலாக ஆனாள்வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்கள்
*
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உமது பெயர்களைப் பொறுக்கிக் கொண்டு
போய்விடுங்கள்
எமது நேரத்திலிருந்து உங்கள் மணித்தியாலங்களை
திரும்ப எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
எத்தனைப் படங்களைக் களவெடுக்க இயலுமோ
அத்தனைiயும் திருடிக்கொள்ளுங்கள்
ஏனெனில், உங்களுக்குத் தெரியும்
எமது நிலத்திலிருந்து ஒரு கல்
எவ்வாறு வானக்கூரையை அமைக்கும் என
உங்களால் சொல்ல முடியாது என உங்களுக்குத் தெரியும்
உமது பெயர்களைப் பொறுக்கிக் கொண்டு
போய்விடுங்கள்
எமது நேரத்திலிருந்து உங்கள் மணித்தியாலங்களை
திரும்ப எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
எத்தனைப் படங்களைக் களவெடுக்க இயலுமோ
அத்தனைiயும் திருடிக்கொள்ளுங்கள்
ஏனெனில், உங்களுக்குத் தெரியும்
எமது நிலத்திலிருந்து ஒரு கல்
எவ்வாறு வானக்கூரையை அமைக்கும் என
உங்களால் சொல்ல முடியாது என உங்களுக்குத் தெரியும்
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உம்மிடம் கத்தி, எம்மிடம் இரத்தம்
உம்மிடம் உருக்கிரும்பும் நெருப்பும், எம்மிடம் தசை
உம்மிடம் பிறிதொரு டாங்கி, எம்மிடம் எமது கற்கள்
உம்மிடம் வாயுக்குண்டு, எம்மிடம் மழை
உம்மிடம் கத்தி, எம்மிடம் இரத்தம்
உம்மிடம் உருக்கிரும்பும் நெருப்பும், எம்மிடம் தசை
உம்மிடம் பிறிதொரு டாங்கி, எம்மிடம் எமது கற்கள்
உம்மிடம் வாயுக்குண்டு, எம்மிடம் மழை
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
எம்மிருவருக்கும் மேலும் ஒரே வானம்தான்
எமது இரத்தத்தில் உமது பங்கை எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
இரவுப் போசனத்துக்கு இருந்துவிட்டுப் போய்விடுங்கள்
எமது இரத்தசாட்சிகளின் ரோஜாக்களை
நாம் கண்ணுற வேண்டும்
நாங்கள் விரும்புகிறபடி நாங்கள் வாழவேண்டும்;
எம்மிருவருக்கும் மேலும் ஒரே வானம்தான்
எமது இரத்தத்தில் உமது பங்கை எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
இரவுப் போசனத்துக்கு இருந்துவிட்டுப் போய்விடுங்கள்
எமது இரத்தசாட்சிகளின் ரோஜாக்களை
நாம் கண்ணுற வேண்டும்
நாங்கள் விரும்புகிறபடி நாங்கள் வாழவேண்டும்;
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உமது பிரம்மைகளையெல்லாம்
பாழ்பட்டதொரு குழிக்குள் குவித்துமூடிப் போய்விடுங்கள்
புனிதச் சண்டைக்காளையின் மரபுக்கு ஒப்ப
காலத்தின் கைப்பிடியைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
துப்பாக்கி விசையின் லயத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குச் சந்தோஷமூட்டாததை நாங்கள் இங்கு கொண்டிருக்கிறோம், போய்விடுங்கள்
உங்களுக்கு இல்லாதது எங்களுக்கு இருக்கிறது
மக்கள்குருதி கசியும் ஒரு தாய்நிலம், குருதித் தாய்நிலம்
இதனைப் புரிந்து கொள்வது உமது நினைவுக்கு
அல்லது மறதிக்கு நல்லது
உமது பிரம்மைகளையெல்லாம்
பாழ்பட்டதொரு குழிக்குள் குவித்துமூடிப் போய்விடுங்கள்
புனிதச் சண்டைக்காளையின் மரபுக்கு ஒப்ப
காலத்தின் கைப்பிடியைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
துப்பாக்கி விசையின் லயத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குச் சந்தோஷமூட்டாததை நாங்கள் இங்கு கொண்டிருக்கிறோம், போய்விடுங்கள்
உங்களுக்கு இல்லாதது எங்களுக்கு இருக்கிறது
மக்கள்குருதி கசியும் ஒரு தாய்நிலம், குருதித் தாய்நிலம்
இதனைப் புரிந்து கொள்வது உமது நினைவுக்கு
அல்லது மறதிக்கு நல்லது
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
நீங்கள் எங்கே போய் இருக்க விரும்புகிறீர்களோ
அங்கே போக இது நேரம்
எங்களுக்கிடையில் நீங்கள் இருக்க வேண்டாம்
நீங்கள் எங்கே போய் சாகவிரும்புகிறீர்களோ
அங்கே போய் சாக இது நேரம்
எங்களுக்கிடையில் இருந்து சாக வேண்டாம்
நீங்கள் எங்கே போய் இருக்க விரும்புகிறீர்களோ
அங்கே போக இது நேரம்
எங்களுக்கிடையில் நீங்கள் இருக்க வேண்டாம்
நீங்கள் எங்கே போய் சாகவிரும்புகிறீர்களோ
அங்கே போய் சாக இது நேரம்
எங்களுக்கிடையில் இருந்து சாக வேண்டாம்
எங்கள் நிலத்தில்
எங்களுக்கு நிறையக் காரியங்கள் இருக்கிறது
எங்களுக்கு இங்கு கடந்தகாலம் இருக்கிறது
எங்களது வாழ்வின் முதல் ஒலியை
இங்கே நாங்கள் கொண்டிருக்கிறோம்
நிகழ்காலம் மற்றும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை
நாங்கள் கொண்டிருக்கிறோம்
வாழ்வையும்
அப்புறமாக வாழ்வுக்கு அப்புறமான வாழ்வையும்
நாங்கள் கொண்டிருக்கிறோம்
ஆகவே --
எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்களுக்கு நிறையக் காரியங்கள் இருக்கிறது
எங்களுக்கு இங்கு கடந்தகாலம் இருக்கிறது
எங்களது வாழ்வின் முதல் ஒலியை
இங்கே நாங்கள் கொண்டிருக்கிறோம்
நிகழ்காலம் மற்றும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை
நாங்கள் கொண்டிருக்கிறோம்
வாழ்வையும்
அப்புறமாக வாழ்வுக்கு அப்புறமான வாழ்வையும்
நாங்கள் கொண்டிருக்கிறோம்
ஆகவே --
எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்கள் கோதுமைகளை விட்டு எங்கள் உப்பை விட்டு
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி வெளியே போய்விடுங்கள்
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி வெளியே போய்விடுங்கள்
மஹ்மூத் தர்வீஸ்
*
எமது உடல்களின் மீது நிரந்தரமாக யுத்தம் தொடுத்திருப்பதோடு, இவர்கள் எமது கனவுகளின் மீது, எமது மக்களின் மீது, எமது வீடுகளின் மீது, எமது மரங்களின் மீது யுத்தக் கொடுமைகள் புரிகிறார்கள். இன ஓதுக்கல் சமூகத்தைத் தவிரவும் இது எமக்கு எதனையும் உத்தரவாதப்படுத்தவில்லை. இதயங்களை தோல்வியுறச் செய்கிற வாள்களின் சாத்தியம் தவிர வேறெதனையும் எமக்கு இது உத்தரவாதம் செய்யவில்லை. மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு : அது எமது நம்பிக்கை. விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை. நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை. எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவருவது குறித்த நம்பிக்கை. மருத்துவமனையில் கர்ப்பிணப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள், ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை. சிவப்பு வண்ணத்தின் அழகை எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல, ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை. அன்பும் சமாதானமும் என அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை.
பிக்காஸோவும் சரி, பிக்காஸோவின் பெண்களும் சரி, ரிவைராவும் ரிவைராவின் பெண்களும் சரி, ஃபிரைடாவும் ஃபிரைடாவின் ஆண் பெண் சிநேகிதர்களும் சரி பல்வேறு உறவுகள் கொண்டிருந்தார்கள். ஆண்களாக பிக்காஸோவும் ரிவைராவும் புறநிலை உலகு நோக்கி நகர்ந்தவர்களாக இருக்க, ஃபிரைடா முற்றிலும் மாறாக, தனது ரணம், துரோகம், சந்திப்பு, முறிவு, காயம், வலி, தோல்வி, அன்பு, காதல் போன்ற உணர்வுகளை முழு உலகுக்கும் - அக உலகிலிருந்து புற உலகின் வழி மறுபடி அக உலகு நோக்கி - பொருத்திப் பார்த்தவராகவே தோன்றுகிறார்.
ஃபிரைடா முதலில் மரபுப்படியான மெக்ஸிக்க மனைவியாக ரிவைராவின் தாதியாக வாழவே விருப்பம் கொண்டிருந்தார். ரிவைராவின் முதல் மனைவிக்குப் பிறந்த அன்புப் புதல்வி சொல்கிறபடி, அவர்களது உறவு எப்போதுமே மனமுதிர்ச்சியடைந்த இரண்டு நபர்களுக்கிடையிலான பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட, பரஸ்பர அன்பிலும் மதிப்பிலும் விளையும் பாலுறவின் அடிப்படை கொண்டதானதாக, இயல்பானதாக இருக்கவில்லை. அவர்களது உறவு இரண்டு அடிப்படைகளில் ஆனது. முதலாவதாக, சிறுபிள்ளைகளுக்கிடையில் ஏற்பாடும் காதல் போல திரும்பத்திரும்ப கனவுமயமான காதலையே அவர்கள் பேசி வந்திருக்கிறார்கள். இரண்டாவதாக, தத்தமது கலையின் மீது கொண்ட பரஸ்பர மரியாதை ஈடுபாடு போன்றவற்றின் மீதே அதிகம் அவர்களது உறவு சார்ந்திருக்கிறது.
தந்தைக்குப் பிரதியாக ரிவைராவை ஃபிரைடா பார்த்து வந்திருப்பதாக வரலாற்றுசிரியர்கள் எழுதுகிறார்கள். ஃபிரைடாவுக்கு கலை ஒரு துயரத்துக்கான மாற்றாக, வெறுப்பை அன்பு வெள்ளமாக்கக் கூடிய மந்திரவர்ணமாக இருந்திருக்கிறது. தன்னனுபவம் அரசியல் ஆகும் என்பார்கள் பெண் நிலைவாதிகள். ஃபிரைடாவின் ‘தான்‘ தான் அவரது படைப்புக்களின் ஆதாரம். அவர் வரைந்தவை அநேகமாக அதிகமானவை அவரது சுயசித்திரங்கள்தான். அவர், அவரது நண்பர்கள், அவரது தீகோ, அவரது மரணமுற்ற தாய், அவரது பிறக்காத குழந்தை, அவரது முறிந்த அவயங்கள், அவரது கணவனின் துரோகம், அவரது தொழிலாளர்கள், அவரது பிராணிகள், பறவைகள், பூக்கள், அவரது தகப்பன், அவரது மக்கள், அவரது விவசாயப்பெண் அணிமணிகள், அவரது பிரபஞ்சம், அவரது மனிதர்கள் என அனைத்திலும், ஸ்தூல வடிவிலும் சித்திர வடிவிலும் ஆன்மா வடிவிலும் நிறைந்திருந்தவர் அவர்தான். அவர் மட்டும்தான். இந்தச் சுயவிசாரம், சுயவாழ்வு பிரபஞ்சமயமாகிற கலைதான் ஃபிரைடாவை பிக்காஸோவிலிருந்தும் ரிவைராவிடமிருந்தும் பிரித்துக் காட்டுகிற மிக முக்கியமான பண்பு.
ஜி.நாகராஜன் கதைகள் இரண்டு விடயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. நாகராஜன் தனது படைப்புக்களில் விளிம்புநிலை மக்களின் வாழ்வை மத்தியதரவர்க்கம் சார்ந்த இந்திய வைதீக மனோநிலையினின்று இலட்சியப்படுத்திக்கொள்ளாமல், அவர்தம் வாழ்வின் உன்னதத்தையும் அதனடியில் மறைந்திருக்கும் துக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பாலுறவு வன்முறையென்ற இயல்புணர்வுகளையும் அறவியல் ஒழுக்க மதிப்பீடுகளையும் மீறிநின்று பார்த்து, நிலவும் மதிப்பீடுகளை மறுமதிப்பீட்டுக்கள்ளாக்கியிருக்கிறார். நாகராஜனின் வாழ்வுக்கும் எழுத்துக்கம் அவரது எழுத்தை முன்வைத்து அவரைமட்டும் கொண்டாடும் இந்திய வைதீகமனோநிலைக்கும் உள்ள உறவு வரலாற்றுரீதியில் ஆய்வு செய்யப்படவேண்டும். தொட்டாற்சுருங்கி மனப்பான்மை 'தனிநபரைப் பார்க்காதே' போன்ற பார்வைகள் இதற்குப் பயன்படாது. மிகுந்த சர்ச்சைக்குள்ளான மத்தியதரவயது ஆண் - சின்னஞ்சிறு சிறுமிக்கு இடையிலான உறவை மையமாகக்கொண்ட லோலிடா நாவலை எழுதிய விளாதிமிர் நபக்கோவின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. தனக்கிருந்த எய்ட்ஸ் வியாதியை தன் நண்பர்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட பூக்கோவின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. சமபாலுறவாளரான ஜெனேவுக்கும் அவரது அராபிய காதலருக்கும் இருந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது. தூக்கத்தில் நடக்கும் வியாதிகொண்டவரும், மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவருமான மார்க்ஸீய அமைப்பியலாளர் அல்தூசரின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. மிகச்சங்கடமான விசயங்கள் எனத் தமிழ் சமூகம் கருதும் எழுத்தாளர் பற்றிய பிரச்சினை மேற்கில் வெளிப்படையாக எழுத்தில் முன்வைக்கப்படுகிறது. இதன்மூலம் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் அவன் வாழநேர்ந்த சூழலுக்குமான பல்வேறு உறவுச்சிக்கல்கள் கோட்பாட்டுப் பிரச்சினைகள் துலக்கமுற்றிருக்கின்றன. தமிழில் தயக்கமின்றி அப்படிப்பட்ட காரியங்கள் நடந்தேறவேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், தர்மோ அரூர்ஜீவராம், ஆத்மாநாம், சிவரமணி போன்றோர் பற்றி அப்படியான வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். எழுத்தாளனுக்கும் தமிழ்ச்சமூக வாழ்வில் பாலியல், தற்கொலை, வன்முறை, வறுமை போன்றவற்றிற்கும் தொடர்புள்ள அவனது எழுத்துக்குமான இடைவெளிகள் அப்போது துலக்கமுறும். நமது பிரம்மைகளும் சிலவேளை தகர்ந்து போகக்கூடும். புதிய தரிசனங்களும் அப்போது தோன்றலாம். வழிபாடுகளைக் கட்டமைப்பதை விடவும் நம்மை உடைத்துக்கொள்வதுதான் நம்மை சுதந்திரம் நோக்கிய விடுதலை உணர்வுக்கு இட்டுச்செல்லும். நாகராஜன் படைப்புகள் நமக்கு இறுதியாகச் சொல்வது இதுவாகத்தானிருக்கும்.