அ. பிரபாகரன் added 2 new photos — feeling refreshed.
6 hrs ·
"அதெப்படி தனியனாய் இருப்பது? யாரையும் நீங்கள் பார்பதே இல்லை என்றா சொல்கிறீர்கள்?"
"இல்லை இல்லை! பார்கிறேன், இருந்தாலும் நான் தனியன்தான்".
"யாரோடும் பேசுவது இல்லையா?"
"சரியானபடி சொல்வதெனில்,யாரோடும் பேசுவதில்லை".
"அப்படியானால் நீங்கள் எம்மாதிரியான ஆள் என்பதைக் கொஞ்சம் விளங்கும்படிச் சொல்லுங்கள்! இருங்கள், நானே சொல்கிறேன்,எனக்கு ஒன்று தோன்றுகிறது; எனக்குப் பாட்டி இருக்கிற மாதிரி ஒருவேளை உங்களுக்கும் ஒரு பாட்டி இருக்குமோ? என்னுடைய பாட்டிக்குக் கண் தெரியாது, பாட்டி என்னை வெளியே எங்கும் போகவிடாது.நான் வெளியே சென்று எவ்வளவோ காலமாகிறது.எனக்கு யாருடனும் பேசுகிற பழக்கமே அனேகமாய் அற்றுப்போய்விட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரம் நான் செய்யக் கூடாத ஒரு காரியம் செய்துவிட்டேன்.இனி என்ன சொன்னாலும் வீட்டிலே அடைந்து கிடக்க மாட்டேன் என்பதைக் கண்டதும் பாட்டி என்னை அருகே கூப்பிட்டு என்னுடைய உடையைத் தன்னுடையதுடன் சேர்த்து வைத்து ஊக்குப் போட்டு குத்திவிட்டது.அது முதலாக நாங்கள் இருவரும் இப்படித்தான் தினமும் ஊக்குப் போட்டு இனைக்கப்பட்டு உட்கார்ந்திருக்கிறோம்.கண் தெரியாவிட்டாலும் என் பாட்டி காலுறை பின்னிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்.நான் பக்கத்தில் அமர்ந்துகொண்டு ஏதாவது தைப்பேன் அல்லது பாட்டிக்கு புத்தகம் படித்துக் காட்டுவேன்.ஊக்கு போட்டுக் குத்தி உட்கார வைக்கப்படும் இத்தகைய விபரீதம் இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது.
-தாஸ்தோவ்ஸ்கி.