Saturday, 13 February 2016


கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எவ்வாறு?
------------------------------------------------------------------------
ஸ்டீபன் ஹாக்கிங்
-----------------------------
ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.
ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.
இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது - நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் - எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட - பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு.
ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது - காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.
இதன் அர்த்தம் என்னவென்று பார்ப்பதற்கு, இயல்பாக, அன்றாடம் நாம் செய்யும் ஒரு கார் பயணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்துகொள்வோமாக. நேர்கோட்டில் ஓட்டிச் செல்லும்போது நிநீங்கள் ஒற்றைப் பரிமாணத்தில் பயணிக்கிறீர்கள். வலதுபக்கமோ இடதுபக்கமோ திம்பும்போது, இரண்டாவது பரிமாணத்தைச் சேர்க்கிறீர்கள். ஒரு திருகலான மலைப்பாங்கான பாதையில் மேலும் கீழும் ஓட்டிச் செல்லும்போது, உயரத்தையும் இது சேர்ப்பதால், எல்லாவித மூன்று பரிமாணங்களிலும் பயணிப்பதாக ஆகிறது. ஆனால், காலத்தினுள் நாம் பயணிப்பது எவ்வாறு சாத்தியம்? நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிப்பதற்கான வழியை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?
ஒரு சிறு விஞ்ஞானப் புனைகதைக்குள் நாம் சிறிது ஆழ்வோம். காலப்பயணத் திரைப்படங்களில், பரந்து விரிந்த, ஆற்றல்-பசி கொண்ட எந்திரம் ஒன்று தொடந்து சித்தரிப்படுவது நமக்குத் தெரியும்.நான்காவது பரிமாணத்தின் ஊடே ஒரு வழியை - காலத்தினூடே ஒரு குடைவுப்பாதையை - அந்த எந்திரம் உண்டாக்கும். காலப் பயணி ஒருவர் - தைரியமும் பெரிதும் மடத்துணிச்சலுமுள்ள தனிமனிதன் ஒருவன் - இன்னதென்று அறியா அதற்குள் செல்லத் தயாராகி, காலச் சுருங்கைப் பாதையினுள் அடியெடுத்து வைத்து, எது என்று தெரியாத இன்னொரு காலத்தில் வெளிப்படுவான். இந்தக் கருதுகோள், வலிந்து பெறப்பட்டதாக இருக்கலாம். எதார்த்தம் இதிலிருந்த மிக வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, அப்படியொன்றும் மிகப் பைத்தியகாரத்தனமானதல்ல.
இயற்பியலாளர்கள் கூட, காலத்துக்குள் போகும் சுருங்கைவழி பற்றி சிந்தித்து வந்துள்ளார்கள். ஆனால் நாம் இதற்கு, ஒரு வேறுபட்ட கோணத்திலிருந்து வரவேண்டும். இயற்கையின் விதிகளுக்குள்ளாக, கடந்தகாலம் அல்லது எதிர்காலத்துக்கான நுழைவாயில்கள் என்றாவது சாத்தியமாகுமா என்று நாம் வியக்கலாம். எதிர்பார்த்தபடியே, அப்படிப்பட்டவை உள்ளன என்று நாம் இன்று நினைக்கிறோம். அதற்கும் மேலாக, நாம் அவற்றுக்கு புழுத்துளைகள் (வா[ர்]ம் ஹோல்) என்று பெயரும் கொடுத்திருக்கிறோம். உண்மை என்னவென்றால், இந்த புழுத்துளைகள் எல்லாம் நம்மைச் சுற்றிலும் உள்ளன - ஆனால், காண முடியாத அளவு மிகச் சின்னவையாக மட்டுமே அவை உள்ளன. புழுத்துளைகள் மிக நுண்ணியவை. வெளியிலுள்ளும் காலத்தினுள்ளும் அவை, மூலை முடுக்குகளிலும் பிளவுகளிலும் காணப்படுகின்றன. இது கடினமான கருதுகோளாக உங்களுக்குத் தென்படலாம். ஆனால், என்னோடு தொடர்ந்து வாருங்கள்.
தட்டையானது அல்லது ஸ்திரமானது என்று எதுவுமில்லை. நீங்கள், போதுமான அளவு மிக நெருக்கமாக எதையும் கவனித்துப் பார்த்தால், அதனுள் துளைகளையும் சுருக்கங்களையும் கண்டுபிடிக்கலாம். இது அடிப்படையான இயற்பியல் விதி. காலத்துக்கும் கூட இதைப் பொருத்தலாம். மெத்தென்ற நீர்ப் பந்து போன்றவை கூட நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் கொண்டிருக்கும். இப்போது, முதல் மூன்று பரிமாணங்களில் இதுதான் உண்மை என்று காட்டுவது எளிதானது. ஆனால் - என்னை நம்புங்கள் - நான்காம் பரிமாணத்திலும் இதுவே உண்மை.
காலத்திலும் நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் இருக்கின்றன. மிகமிகச் சிறிய அளவில் உள்ள, மூலக்கூறுகளைக் காட்டிலும் சிறியதான, அணுவைக் காட்டிலும் சிறியதானவற்றினுள், குவாண்டம் நுரை என்று அழைக்கப்படுபவைகளுக்கான இடம் இருப்பதை நாம் அறிகிறோம். இங்கேதான் புழுத்துளைகள் இருக்கின்றன. வெளியினுள்ளும் காலத்தினுள்ளும் நுண்ணிய சுருங்கை வழிகள் அல்லது குறுக்கு வழிகள், இந்த குவாண்டம் உலகுக்குள், நிரந்தரமாக உருப்பெற்றபடி, அழிவுபெற்றபடி, மறுவடிவம் பெற்றபடி இருந்துவருகின்றன. மேலும் இவை உண்மையில், தனித்தனி இரு இடங்களையும் வேறுபட்ட இரு காலங்களையும் இணைப்பவை.
துரதிருஷ்டவசமாக, இந்த நிஜமாக வாழும் காலச் சுருங்கை வழிகள், ஒரு சென்டிமீட்டருக்கும் பில்லியன்-டிரில்லியன்-டிரில்லியன் அளவு சிறியவை. ஒரு மனிதன் உட்புகுந்து செல்லமுடியாத மிகச் சிறு வழிகள் - ஆனால், இந்த இடம்தான் புழுத்துளைக் கால எந்திரங்கள் பற்றி யோசனைக்கு இட்டுச் செல்கிறது. ஒரு புழுத்துளையைக் கைப்பற்றுவதும் அதை ஒரு மனிதனோ அல்லது ஒரு வானவெளிக் கப்பலோ கூட புகுந்து செல்வதற்கு ஏற்றவாறு, போதுமான அளவுக்குப் பெரிதாக பல டில்லியன் மடங்கு அதை உருப்பெருக்குவதும் சாத்தியமாகலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
ஒருவேளை, போதுமான அளவுக்கு சக்தியையும் முன்னேறிய தொழில்நுட்பத்தையும் ஈந்தால், ஆகாயவெளியில் கூட, ஒரு மாபெரும் புழுத்துளையை கட்டமைக்க முடியும். இதைச் செய்ய முடியும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படிச் செய்தால், அது ஒரு உண்மையில் மகத்தான சாதனமாகத் திகழும். அதன் ஒரு முனை இங்கே பூமிக்கு அருகிலிருக்க, மற்ற முனை மிக மிகத் தொலைவில், ஏதாவதொரு தொலைதூரக் கிரகத்தின் அருகிலிருக்க வேண்டும்.
கோட்பாட்டுரீதியில், ஒரு காலச் சுருங்கையோ அல்லது ஒரு புழுத்துளையோ, மற்ற கிரகங்களுக்கு நம்மை இட்டுச்செல்வதைக் காட்டிலும் அதிகமாகவே செயல்பட முடியும். இரு முனைகளும் அதே இடத்தில் உள்ளதாய், துரத்தால் அல்லாமல் காலத்தால் பிரிக்கப்பட்டதாய் அது இருந்தால், விண்கலம் ஒன்று உள்ளே பறந்து போக முடிந்து, பூமிக்கு அருகில் அது மீண்டும் - தொலைதூரக் கடந்த காலத்தில் - வெளிப்படவும் முடியும். கலம் ஒன்று தரையிறங்கக் கீழே வந்ததைக் காண, ஒரு டைனோசார் சாட்சியாக இங்கே இருக்கலாம்.
வரவாற்றில் அப்போலோ 10 தான் மனிதரோடு சென்ற அதிவிரைவு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகததை எட்டியது. ஆனால், காலத்தினுள் பயணிக்க அதை விட 2000 மடங்கு அதி வேகத்தில் நாம் செல்லவேண்டியிருக்கும். இன்று, நான்கு பரிமாணங்களில் பயணிப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எளிதானதல்ல என்பதையும், உங்கள் தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொள்ள முடியாமல், தடுமாற வைக்கும் ஒரு கருதுகோள் இந்த புழுத்துளைகள் என்பதையும் நான் அறிவேன்.
ஆனால், கொஞ்சம் நில்லுங்கள். இன்றாவது அல்லது எதிர்காலத்திலாவது, ஓரு புழுத்துளை வழியாக காலப்பயணம் மேற்கொள்வது மனிதரால் சாத்தியமா என்பதை வெளிப்படுத்த ஒரு எளிய பரிசோதனையைச் செய்ய நான் நினைத்துள்ளேன். எளிய பரிசோதனைகளும் ஷாம்பெய்னும் எனக்குப் பிடிக்கும். ஆகவே நான், எனக்குப் பிடித்தமான இரு விஷயங்களை இணைத்து எதிர்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்குக் காலப் பயணம் செய்வது சாத்தியமா என்று பார்க்கப் போகிறேன்.
எதிர்காலத்துக் காலப் பயணிகளுக்கான ஒரு வரவேற்பு விருந்து ஒன்றை நான் நடத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், இதில் ஒரு திருகல் உள்ளது. விருந்து நடந்து முடிந்த பிறகுதான், இதைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும்படி நான் செய்யப் போகிறேன். காலத்திலும் வெளியிலும் சரியான ஒருங்கிணைப்பைத் தந்தவர்களுக்குத்தான் நான் ஒரு அழைப்பிதழை உருவி எடுத்துத் தரப்போகிறேன். அதன் பிரதிகள், ஏதாவது ஒரு வடிவில், பல் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை, அழைப்பிதழில் உள்ள தகவலை எதிர்காலத்தில் வாழ்ந்திருக்கப்போகும் யாராவது ஒருவர் ஒருநாள் கண்டுபிடிக்கப்போகிறார். எனது விருந்துக்கு ஒரு புழுத்துளைக் கால எந்திரத்தைப் பயன்படுத்தி - ஒருநாளைக்கு காலப்பயணம் சாத்தியம்தான் என்பதை நிரூபிக்கும்வண்ணம் - பின்நோக்கி வரப்போகிறார்.
இதற்கிடையில், எனது காலப்பயண விருந்தாளிகள் எந்த நிமிடத்திலும் இப்போது வரப்போகிறார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. ஆனால், நான் இதைச் சொல்லும்போது, எந்த விருந்தாளியும் வரவில்லை. என்ன அவமானம்? ஒரு எதிர்கால மிஸ் யுனிவர்ஸாவது கதவுக்கு உள்ளே அடியெடுத்து வைப்பாள் என்று நான் நம்பினேன். எனவே, ஏன் இந்தப் பரிசோதனை வேலை செய்யவில்லை? ஒரு காரணம் - இறந்தகாலத்துக்குக் காலப்பயணம் செய்கையில் ஏற்படுவது என்று எல்லோரும் அறிந்த பிரச்சனை - முரண்புதிர்கள் (பாரடாக்ஸ்) என்று நாம் அழைக்கும் ஒரு பிரச்சனை.
நினைத்துப் பார்ப்பதற்கே வேடிக்கையானவை இந்த முரண்புதிர்கள். அதில் மிகப்பிரபலமான ஒன்று - ‘தாத்தா’ முரண்புதிர். ‘பைத்தியகார விஞ்ஞானி’ முரண்புதிர் என்று ஒரு புதிய எளிய பதிப்பும் என்னிடம் இருக்கிறது.
திரைப்படங்களில், விஞ்ஞானிகளைப் பெரும்பாலும் பைத்தியம் பிடித்தவராகச் சித்தரிக்கும் விதம் எனக்குப் பிடித்தமானது அல்ல என்றாலும், இந்த விஷயத்தில் அதுதான் உண்மை. விஞ்ஞானியான அந்த ஆள், தம் லாழ்நாள் முழுதையும் இது தின்றுவிடும் என்று தெரிந்தும், ஒரு முரண்புதிரைப் படைக்கத் தீர்மானிக்கிறார் - எப்படியோ, ஒரு புழுத்துளையை, ஒரு நிமிடத்தில் இறந்தகாலத்துக்குள் செலுத்தக் கூடிய கால நுழைவாயில் ஒன்றை, அவர் கட்டமைக்கிறார். புழுத்துளை வழியாக, ஒரு நிமிடத்துக்கு முன் தான் எவ்வாறு இருந்தோம் என்பதை விஞ்ஞானியால் பா£ர்க்கமுடியும். ஆனால் , தனது முந்திய நான்-ஐ சுட்டுவிட நமது விஞ்ஞானி தீர்மானித்து புழுத்துளையைப் பயன்படுத்துகிறார் என்றால்? அவர் இப்போது இறந்திருப்பார். ஆகவே, துப்பாக்கிக்குண்டை வெடித்தது யார்? இதுதான் அந்த முரண்புதிர். இது ஒன்றும் புரிந்துகொள்ளும்படி இல்லை. இந்தவகை நிலமைதான் பிரபஞ்சத்தோற்றவிய லாளர்களுக்கு பயங்கரக் கனவை உண்டாக்கிவருவது.
ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் ஆட்சி செலுத்துகிற அடிப்படையான ஒரு விதியை இந்தவகைக் கால எந்திரம் சீர்குலைத்துவிடும் - காரியத்துக்குமுன் காரணம் நிகழ்கிறது - முறையான வழியில் அல்லாமல். பொருட்கள் தாமாகவே அசாத்தியச் செயலை மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறவன் நான். அப்படி அவற்றால் முடியும் என்றால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ‘கயோஸ்’ நிலைக்கு இறங்குவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. ஆகவே, இந்த முரண்புதரை நிகழாமல் தடுக்க ஏதாவதொன்று எப்போதுமே நிகழும் எந்று நான் நினைக்கிறேன். தன்னைத் தானே சுட்டுவீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையை நமது விஞ்ஞானி அடையமாட்டார் என்பதற்கு எப்படியாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் - இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும் - புழுத்துளைதான் ஒரு பிரச்சனையாக உள்ளது.
முடிவில், இது போன்ற ஒரு புழுத்துளை இருந்துவர முடியாது என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டம் தான் அதற்கான காரணம். ராக் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்போதாவது போயிருந்தால் ஒன்றின்மீது ஒன்றேறி ஏற்படும் இந்த கீரீச்சிடல் சப்தத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதுதான்
பின்னூட்டம். இதற்கு என்ன காரணம் என்பது எளிதானது. மைக்ரோபோனில் ஒலி நுழைகிறது.
ஒயர்கள் வழியாக மாறுதலூட்டப்பட்டு, ஆம்ப்ளிஃபயரால் பெருக்கப்பட்ட ஒலி, ஸ்பீக்கர்கள் வழியாக வெளியே வருகிறது. ஆனால், மைகினுள் அது திரும்பச்சென்று, ஸ்பீக்கர்களிலிருந்து மிக அதிகமாக ஒலி ஏற்பட்டால், அது சுற்றிக்சுற்றி வளைய வந்து, ஒவ்வொரு தடவையும் அதிகரித்த ஒலியைப் பெருகிறது. அதைத் தடுக்க ஒன்றும் இல்லாவிட்டால், பின்னூட்டத்தால் ஒலிபெருக்கி அமைப்பே ஆழிந்துவிடும்.
இதே விஷயம்தான் ஒரு புழுத்துளையிலும் ஏற்படும் - ஒலிக்கு பதிலாக கதிர்வீச்சு. புழுத்துளை விரிவடைந்த உடனுக்குடனே, இயற்கையான கதிர்வீச்சு அதில் நுழையும். வளையமாகச் சுற்றிவருவதில் அது முடியும். பின்னூட்டம் வலிமையானதாக ஆகிவிட்டால், அது புழுத்துளையை அழித்துவிடும். ஆகவே, நுண்ணிய புழுத்துளைகள் இருப்பதாக இருந்தாலும், எதில்வரும் ஒரு குறிப்பிட்ட நாளில் அதை பெருக்குவது சாத்தியமாகக் கூடும். ஆனால், அதை ஒரு கால எந்திரமாகப் பயன்படுத்துவதற்கு போதுமான கால அளவுக்க அது நிலைத்திருக்காது. எனது விருந்துக்கு யாரும் திரும்ப வர முடியாததற்கு இதுதான் உண்மையான காரணம்.
முரண்புதிர்கள் ஏற்பட்டால் தவிர, இறந்த காலத்துக்கான எந்த வகைக் காலப் பயணமும் - புழுத்துளை வழியாகவோ அல்லது வேறு முறைப்படியோ - அசாத்தியம் என்பதுதான் நிலமை.
ஆகையால், இறந்த காலத்துக்கான காலப் பயணம் என்றைக்கும் கைகூடப்போவதில்லை என்பது தான் சோகம். டைனோசார் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம்தருவது; வரலாற்றாசிரியர்களுக்கு நிம்மதி தருவது.
ஆனால், இன்னும் கதை முடியவில்லை. இதனால், எல்லாவித காலப் பயணங்களுமே சாத்தியமில்லை என்று ஆகிவிடவில்லை. காலப் பயணம் சாத்தியம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்துக்கான காலப் பயணம். ஒரு நதி போன்று ஓடுகிறது காலம். காலத்தின் நீரோட்டத்தில், நாம் ஒவ்வொருவருவருமே இரக்கமற்று இழுத்துச் செல்லப்படுவோம் என்றே தோன்றுகின்றது.ஆனால், காலம் ஒரு நதி போன்றது என்பது இன்னொரு விதத்தில்தான். அது, வேறுவேறு இடங்களில் வேறுவேறு வேகங்களில் ஓடுகிறது. அதுதான் எதில்காலத்துக்குள்ளான பயணத்துக்குத் திறவுகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் இந்தக் கருத்து முன் மொழியப்பட்டது. காலம், வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும் இடங்களும் இருக்கும் எனபதையும் மற்ற இடங்களில் காலம் வேகத்தையும் அடையும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அவருடையது மிகச்சரியானது. சரியாக, நம் தலைக்கு மேலேயே அதற்கான சான்று இருக்கிறது. மேலே ஆகாயவெளியில்.
அதுதான், குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் அல்லது ஜிபிஎஸ். செயற்கைக்கோள்களின் தொடர்வரிசை ஒன்று, பூமி சுற்றிவரும் கோளப்பாதையில் உள்ளது. செயற்கைக்கோள் மூலமான வான்வழிச் செலவை, செயற்கைக்கோள்கள் சாத்தியமாக்கியுள்ளன. ஆனால் அவை, கீழே பூமியில் நிகழ்வதைவிட வான்வெளியில் காலம் அதிவேகத்தில் ஓடுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு விண்கலத்தின் உள்ளும் மிகத் துல்லியமான கடிகாரம் உண்டு. ஆனால் அவை மிகச் சரியாகக் கணித்தபோதிலும் ஒவ்வொரு நாளினுடைய ஒரு நிமிடத்தின் பில்லியன் மடங்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துக் கொள்கிறது. அந்த மாற்றத்தை சரிசெய்து கொள்ளும் செயல்முறை அதிலுள்ளது. இல்லாவிட்டால், அந்த துளி வித்தியாசம், எல்லாச் செயலையும் சீர்குலைத்து விடும் - ஒரு நாளைக்கு ஆறு மைல் மெதுவாகப்போகும்படி பூமியிலுள்ள ஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்தையும்பாதித்துவிடும். இப்படி இதனால் உண்டாகும் தற்காப்பற்ற முடக்கநிலையை நீங்களை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
பிரச்சனை, கடிகாரங்களில் இல்லை. கீழே இருப்பதைவிட வெளியில் காலம் அதிகரிப்பதால் அவை வேகமான ஓடுகின்றன. இந்த அசாதாரணமான விளைவுக்குக் காரணம், பூமின் பொருள்திணிவில் இருக்கிறது. காலத்தால் பொருள் இழுத்துச் செல்லப்படும்போது, ஒரு நதியின் வேகக் குறைவான பகுதிபோல், அதை வேகக் குறைப்புச் செய்கிறது என்பதை ஐன்ஸ்டீன் உணர்ந்தார். பொருள் கனமாக இருப்பதற்கேற்ப காலத்தால் அது இழுபடுவதும் அதிகரிக்கும். இந்த திடுக்கிட வைக்கும் எதார்த்தம், எதிர்கால காலப் பயணத்துக்கான சாத்தியத்துக்கான கதவை திறந்துவிட்டுள்ளது.
பால்வீதியின் சரியான மையத்தில், நமக்கு 26,000 ஒளியாண்டுத் தூரத்தில், பால்வெளிமண்டலத்திலேயே மகா கனமான பொருள் ஒன்று உள்ளது. தனது சுய ஈர்ப்புவிசையால் நான்கு மில்லியன் அளவு சூரியன்களின் பொருள்திணிவை தனியொரு புள்ளில் இறுக்கியடைத்துக் அடக்கிக் கொண்டதாய் உள்ள மகா பொருள்திணிவு கொண்ட கருந்துளை (பிளேக் ஹோல்)தான் அது. கருந்துளைக்கு அருகில் நீங்கள் எவ்வளவு நெருங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அதன் ஈர்ப்புவிசை வலிமயுடையதாய் இருக்கும். உண்மையிலேயே அருகில் போனால், ஒளிக்கதிரால் கூட தப்பிக்கமுடியாது. இந்தமாதிரி ஒரு கருந்துளை, காலத்தின் மீது விசித்திரமான விளைவை ஏற்படுத்துகிறது. பால்மண்டலத்தின் வேறு எதையும்விட அதை மிக மெதுவாகச் செல்வதாக ஆக்கிவிடுகிறது. இது அதை ஒரு இயற்கையான கால எந்திரமான ஆக்கிவிடுகிறது.
இதைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட ஒரு விண்கலம், இந்த விசித்திர நிகழ்வினைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி நான் கற்பனை செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரு விண்வெளிப் பயண நிறுவனம் இந்த செயல்திட்டத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடிந்தால், ஒவ்வொரு முழுச் சுற்றையும் முடிக்க அதற்கு 16 நிமிடங்கள் ஆவதை அவர்கள் கவனிக்கமுடியும்.
ஆனால், இந்தத் திணிவுகொண்ட பொருளின் அருகில், விண்கலத்தின் தளத்தில் உள்ள தைரியசாலிகளுக்கு, காலம் மெதுவாகக் கீழிறங்கும். பூமியின் ஈர்ப்புவிசை இழுவையைவிட,
மிக அதிக தீவிர கதியில் அதன் விளைவு இங்கே இருக்கும். குழுவினரின் காலம் பாதியாகக் குறைந்துபோகும். ஒவ்வொரு 16 நிமிட சுற்றிலும், எட்டு நிமிட நேரத்தை மட்டும்தான் அவர்கள்
அனுபவம் கொள்வார்கள்.
கூற்றிச் சுற்றி அவர்கள், கருந்துளைக்கு மிகத் தொலைவில் போகப்போக, ஒவ்வொருவரும் நேரத்தின் அரைப்பங்கையே அனுபவம் கொள்வார்கள். விண்கவமும் அதன் குழுவும் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருப்பார்கள். தம் வாழ்நாளின் ஐந்து ஆண்டுகள் அவர்கள் கருந்துளையைச் சுற்றுகிறார்கள் என்று கற்பனைசெய்து கொள்ளுங்கள். மற்ற இடத்தில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, பூமியிலுள்ள யாவரும் அவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வயதானவர்களாக இருப்பார்கள்.
ஆகவே, மகா பொருள்திணிவுகொண்ட கருந்துளை, ஒரு கால எந்திரமாக ஆகிறது. ஆனால், இது நடைமுறையில் மிகச்சரியாக நிகழமுடியாதுதான். புழுத் துளைகள் மேல் அது சலுகைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், முரண்புதிர்களை அது எழுச்சிபெறச் செய்யாது. கூடவே, பின்னூடட்டத்தின் ஒரு ‘பளிச்’சிடலால் அது தன்னையே அழித்துக் கொள்ளாது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. அதற்கு நீண்டகாலம் இருக்கிறது. எதிர்காலத்துக்குள் மிகத்தொலைவில் நம்மை அது இட்டுச் செல்லாது. அதிருஷ்டவசமாக, காலத்தில் பயணிப்பதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. இதுவே ஒரு உண்மையான கால எந்திரத்தை நாம் கட்டமைப்பதந்கு இறுதியானதும் சிறந்ததுமான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நீங்கள் பயணத்தை மிக மிக வேகமாகப் செய்யதால் போதும். கருந்துளைக்குள் உறுஞ்சப்படுவதைத் தவிர்க்கத் தேவைப்படும் வேகத்தை விடவும் அதிவேகமாகப் போக வேண்டும். பிரபஞ்சம் பற்றிய இன்னொரு விநோதமான ஒரு நடப்புத்தான் இதற்கான காரணம். ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகின்ற, நிமிடத்துக்க186,000 மைல்கள் என்பதுதான் பிரபஞ்சவெளியின் வேக எல்லை. இந்த வேகத்தை எதுவும் மீறிவிட முடியாது. அறிவியலில் மிகவும் சிறப்பாக நிரூபணம் பெற்ற ஒன்று இது. நம்பினால் நம்புங்கள், ஒலியின் வேகத்துக்கு நிகராகப் பயணம் செய்தால், அது உங்களை எதிர்காலத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
ஏன் என்று விவரிக்க, விஞ்ஞானப் புனைகதையின் பயணப்போக்குவரத்து முறையைச் சற்று கனவு சாண்போம். ஒரு அதிவிரைவுவேகத் தொடர்வண்டியின் ஒரு பாதையைப்போல், பூமியைச் சுற்றிலும் ஒரு பாதை போவதாகக் கற்பனை செய்வோம். இந்த கற்பனைத் தொடர் வண்டியை முடிந்த அளவுக்கு ஒளியின் வேகத்துக்கு நிகராகப் போக நாம் பயன்படுத்தப் போகிறோம் - அது ஒரு கால எந்திரமாக எவ்வாறு ஆகிறது என்று பார்க்க. உள்ளே பயணிகள் எதிர்காலத்துக்கான ஒருவழிப் பயணச்சீட்டுடன் இருக்கிறார்கள். தொடர்வண்டி, தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. விரைவில் அது பூமியை மறுபடியும் மறுபடியும் சுற்றிச் சுற்றி வரலாகிறது.
ஒளியின் வேகத்தை எட்டுதல் என்பதன் பொருள், அதிவேகமாக பூமியைச் சுறிற்றி வருதல். ஒரு நிமிடத்துக்கு ஏழு தடவை. ஆனால், தொடர்வண்டி எவ்வளவு அதிகமாகச் சுற்றிக்கொள்வதாயிருந்தாலும், இயற்பியலின் விதிகள் அதை ஒதுக்குவதால், அது ஒளியின் வேகத்தை என்றும் அடையவே முடியாது. மாறாக, அந்த எல்லையற்ற வேகத்துக்கு வெட்கி, அது அந்த வேகத்துக்கு நெருங்கி வருவதாகக் கொள்வோம். இப்போது ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கிறது. கலத்தின் தளத்தில் - உலகின் பிற பகுதியை ஒப்பிட - காலம் மெதுவாக ஓடத் தொடங்குகிறது; கருந்துளைக்கு அருகில் நிகழ்வதுபோல் - ஆனால் மிக அதிகமாக. தொடர்வண்டியிலுள்ள எல்லாம் மெதுவான இயக்கத்தில் (சுலோ மோஷனில்) இருக்கிறது.
வேக எல்லையைக் காப்பாற்றவே இது நிகழ்கிறது. எதனால் இப்படி என்று காண்பது கடினமானதல்ல. தொடர்வண்டியினுள் ஒரு குழந்தை ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். அவளது முன்னோக்கிய வேகம், தொடர்வண்டியின் வேகத்தோடு இணைசேர்கிறது. ஆகையால் வேக எல்லையை அவள் தற்செயலாகவாவது முந்திவிட முடியாதா? இல்லை என்பதுதான் பதில். இயற்கையின் விதிகள், கலத்தின் தளத்தில் காலம் மெதுவாகி வரும் சாத்தியக்கூறைத் தடுத்துவிடுகின்றன.
இப்போது அவள், வேக எல்லையை மீறும்வகையில் போதுமான வேகத்தில் ஓட முடியாது. வேக எல்லையைப் பாதுகாக்க, காலம் எப்போதுமே மெதுவாகிவிடும். இந்த எதார்த்தத்திலிருந்துதான், எதிர்காலத்தில் பல ஆண்டுகள் பயணிப்பதன் சாத்தியம் வெளிப்படுகிறது.
ஜனவரி 1, 2050-ல் நிலையத்திலிருந்து தொடர்வண்டி கிளம்புவதாகக் கற்பனை செய்வோம். 2150 புத்தாண்டு நாளில் கடைசியாக வந்து நிற்பதற்கு முன், 100 ஆண்டுகளாக அது பூமியைப் பல தடவைகள் சுற்றுகிறது. தொடர்வண்டியினுள் காலம் மிகவும் மெதுவாகிவிடுவதால், பயணிகள் ஒரு வாரகாலமே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்கள் வெளியே வரும்போது, தாம் விட்டுச்சென்றதை விட வேறு ஒரு உலகத்தைக் காண்பார்கள். ஒரு வாரத்தில் அவர்கள் 100 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்திருப்பார்கள். அந்த அளவு வேகத்தை எட்டும் தொடர் வண்டியைக் கட்டுவதென்பது முடியவே முடியாத காரியம்தான். ஆனால், அந்தத் தொடர்வண்டியை நிகர்த்ததான வேறொன்றை நம்மால் கட்டமுடியும் - சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சிஈஆர்என்-னின் உலகின் பெரிய அணுத்துகள் ஆக்ஸிலரேட்டர்.
படுபாதாள அறையில், 16 மைல் நீளமான வட்ட மூடுபாதையில், டிரில்லியன் நுண்ணிய அணுத்துகள்களின் நீரோட்டம் உள்ளது. சத்தி அளிக்கப்படும்போது அவை ஒரு நொடியின் ஒரு பின்னத்தில், பூஜ்யத்திலிருந்து 60,000 எம்பிகெச் வேகத்தில் முடுக்கப்படுகின்றன. சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு, அணுத்துகள்கள் வேகவேகமான, ஒரு நொடியின் 11,000 கால அளவில் மூடுபாதையில் வீசிச் செல்லும் - இது ஒளியின் வேகத்துக்கு மிக அருகிலானது. ஆனால், தொடர்வண்டி போலவே இவையும் தேவையான அளவு வேகத்தை எட்டுவதில்லைதான். அவை வேகஎல்லையின் 99.99 சதவீதத்தையே எட்டமுடியும். அப்படி நிகழும்போது, காலத்துள் அவையும் பயணிக்கத் தொடங்கிவிடும். பை-மெஸான் என்றழைக்கப்படும் மிகமிகக் குறுகிய வாழ்நாளுடைய அணுத்துகள்கள் சிலவற்றால், இதை நாம் அறியமுடிகிறது. சாதாரணமாக, ஒரு நொடியின் 25 பில்லியன் பிரிவுள் ஒன்று என்ற வேகத்தில் அவை சிதைவுறுகின்றன. ஆனால் ஒளிவேகத்துக்கு நிகராக அவை முடுக்கப்படும்போது, 30 மடங்குக்குமேல் நிலைத்துநிற்கின்றன.
அந்த அளவுக்கு அது எளிமையானது. எதிர்காலத்தில் நாம் உண்மையில் பயணம் செய்ய விரும்பினால், நாம் வேகமாகச் செல்வதே தேவை. உண்மையான வேகம். எப்போதாவது நாம் அதைச் செய்ய முடியும் என்றால், ஆகாயவெளிக்குச் செல்வதே ஒரே வழியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் அப்போலாதான், மிகவேகமாக மனிதருடன் சென்ற ஒரு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகத்தை எட்டியது. ஆனால் காலப்பயணம் செய்ய, அதைவிட 2,000 மடங்கு வேகமாக நாம் செல்லவேண்டியுள்ளது. அதைச் செய்ய மிகப் பெரிய விண்கப்பல் நமக்குத் தேவை. நிஜமாகவே பேரிய அளவிலான எந்திரம். அந்தக் கப்பல், ஏராளமான அளவு எரிபொருளை ஏற்றிச்செல்லப் போதுமான அளவு பெரிதாய், ஒளியின் வேகத்துக்கு ஏறக்குறைய உள்ள முடுகுவிசையைப் போதுமான அளவு கொண்டதாய் இருக்கவேண்டும். பிரபஞ்ச வேக எல்லையின் கீழ் சேர, முழுதாய் ஆறு ஆண்டுகளுக்கான முழுச்சக்தித்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும்.
கப்பல் கனமானதாகவும் பெரிதாயும் இருப்பதால், ஆரப்பகாலத்து முடுகுவிசை மெதுவானதாய் இருத்தல் அவசியம். ஆனால் படிப்படியாக, வேகத்தை அது பெறவேண்டும். விரைவில் பேரளவுத் தொலைவை கடக்க வேண்டும். ஒரு வாரத்தில் அது, வெளிப்புற கிரகங்களை அடையும். இரண்டு ஆண்டுகளில் அது, பாதி ஒளிவேகத்தினை எட்டும். நமது சூரிய மண்டலத்துக்கு மிக வெளியே போய்விடும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அது, 90 சதவீத ஒளிவேகத்தில் பயணிக்கும். புறப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிலிருந்து ஏறக்குறைய 30 டிரில்லியன் மைல் தூரத்தில் இருக்கும்போது, காலத்துள் பயணம் செய்யத்தொடங்கும் கப்பல். கப்பலில் காலத்தின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும், பூமியில் இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். திணிவுள்ள கருந்துளையைச் சுற்றிவரும் விண்கலமும் இதற்கு இணையான சூழலில்தான் இருக்கும்.
முழுவேகத்தில் சென்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சபட்ச வேகமாகிய 99 சதவீத ஒளிவேகத்தை அடையும். இந்த வேகத்தில், கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும்.
காலம் மெதுவாவதால் இன்னோரு பயனும் உண்டு. கோட்பாட்டுப்படி இதன் அர்த்தம், மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும் என்பதே. பால்மண்டலத்தின் எல்லைமுனைக்குப் போய்வர 80 ஆண்டுகள் ஆகும். ஆனால். நமது பயணத்தின் உண்மையான அதிசயம், பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதுதான். மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட விகிதங்களில், ஓடும் காலத்தைப் பெற்ற பிரபஞ்சம் அது. நுண்ணிய புழுத்துளைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிரபஞ்சம் அது. இறுதியாக, இயற்பியல் அறிவைக் கொண்டு, நான்காம் பரிமாணத்தின் ஊடாகச் சென்றுவரும் உண்மையான பயணிகளாக நாம் விளங்கக் கூடிய பிரபஞ்சம் அது.
ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen William Hawking (1942 - ) :
நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் வரிசையில் இன்றுள்ள பிரசித்திபெற்ற கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி. பிரபஞ்சத்தோற்றவியல், குவாண்டம் ஈர்ப்புவிசை, கருந்துளை போன்ற துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளும், பொது இயற்பியலில், ரோஜர் பென்ரோஸுடன் சேர்ந்து இவர் ‘சிங்குளாரிட்டி’ பற்றி கூறியுள்ளவையும் முக்கியமானவை. கருந்துளைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு ஒன்று, ‘ஹாக்கிங் ரேடியேசன்’ என்றே அழைக்கப்படுகிறது. அறிவியலைப் பற்றி ஜனரஞ்சகமாக இவர் எழுதிய A Brief History of Time விற்பனையில் சாதனை படைத்தது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முளைநரம்பு முடக்க நோயால் பாதிக்கப்பட்டு படிப்படியே தம் உடற் செயல்பாட்டை இழந்த இவர், இன்று தலையால் மட்டுமே வாழும் விந்தை மனிதர்.
தமிழாக்கம் - கால சுப்ரமணியம்.
‘உன்னதம்’ இதழில் பிரசுரமானது.

“A kiss on the forehead” BY MARINA TSVETAEVA

from mdm facebook

“A kiss on the forehead”
BY MARINA TSVETAEVA
-------------------------------------------
A kiss on the forehead—erases misery.
I kiss your forehead.
A kiss on the eyes—lifts sleeplessness.
I kiss your eyes.
A kiss on the lips—is a drink of water.
I kiss your lips.
A kiss on the forehead—erases memory.
*****************************
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து .... ஆண்டாள்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ!


surrounded by a thousand elephants Narana
my great lord strode through the festive streets.
Every threshold was decked
with bright banners and auspicious golden pots.
Such a vision I dreamed, my friend.

Wednesday, 10 February 2016

The Five O'Clock Express - Boris Pasternak

Doctor Zhivago

By Boris Pasternak

About the Book:

First published in Italy in 1957 amid international controversy,Doctor Zhivago is the story of the life and loves of a poet/physician during the turmoil of the Russian Revolution. Taking his family from Moscow to what he hopes will be shelter in the Ural Mountains, Zhivago finds himself instead embroiled in the battle between the Whites and the Reds. Set against this backdrop of cruelty and strife is Zhivago's love for the tender and beautiful Lara, the very embodiment of the pain and chaos of those cataclysmic times. Pevear and Volokhonsky masterfully restore the spirit of Pasternak's original—his style, rhythms, voicings, and tone—in this beautiful translation of a classic of world literature.

About Boris Pasternak:

A poet, translator, and novelist, Boris Pasternak was born in Moscow in 1890. In 1958 he was awarded the Nobel Prize in Literature but, facing threats from Soviet authorities, refused the prize. He lived in virtual exile in an artists’ community near Moscow until his death in 1960.

Read an Excerpt

Part One

The Five O'Clock Express

1

They walked and walked and sang "Memory Eternal," and when they stopped, it seemed that the song went on being repeated by their feet, the horses, the gusts of wind.

Passers-by made way for the cortège, counted the wreaths, crossed themselves.  The curious joined the procession, asked:  "Who's being buried?"  "Zhivago," came the answer.  "So that's it.  Now I see."  "Not him.  Her."  "It's all the same.  God rest her soul.  A rich funeral."

The last minutes flashed by, numbered, irrevocable.  "The earth is the Lord's and the fullness thereof; the world, and those that dwell therein."  The priest, tracing a cross, threw a handful of earth onto Marya Nikolaevna.  They sang "With the souls of the righteous."  A terrible bustle began.  The coffin was closed, nailed shut, lowered in.  A rain of clods drummed down as four shovels hastily filled the grave.  Over it a small mound rose.  A ten-year-old boy climbed onto it. 

Only in the state of torpor and insensibility that usually comes at the end of a big funeral could it have seemed that the boy wanted to speak over his mother's grave.

He raised his head and looked around from that height at the autumn wastes and the domes of the monastery with an absent gaze.  His snub-nosed face became distorted.  His neck stretched out.  If a wolf cub had raised his head with such a movement, it would have been clear that he was about to howl.  Covering his face with his hands, the boy burst into sobs.  A cloud flying towards him began to lash his hands and face with the wet whips of a cold downpour.  A man in black, with narrow, tight-fitting, gathered sleeves, approached the grave.  This was the deceased woman's brother and the weeping boy's uncle, Nikolai Nikolaevich Vedenyapin, a priest defrocked at his own request.  He went up to the boy and led him out of the cemetery.

2

They spent the night in one of the monastery guest rooms, allotted to the uncle as an old acquaintance.  It was the eve of the Protection.  The next day he and his uncle were to go far to the south, to one of the provincial capitals on the Volga, where Father Nikolai worked for a publisher who brought out a local progressive newspaper.  The train tickets had been bought, the luggage was tied up and standing in the cell.  From the nearby station the wind carried the plaintive whistling of engines maneuvering in the distance.

Towards evening it turned very cold.  The two ground-floor windows gave onto the corner of an unsightly kitchen garden surrounded by yellow acacia bushes, onto the frozen puddles of the road going past, and onto the end of the cemetery where Marya Nikolaevna had been buried that afternoon.  The kitchen garden was empty, except for a few moiré patches of cabbage, blue from the cold.  When the wind gusted, the leafless acacia bushes thrashed about as if possessed and flattened themselves to the road.

During the night Yura was awakened by a tapping at the window.  The dark cell was supernaturally lit up by a fluttering white light.  In just his nightshirt, Yura ran to the window and pressed his face to the cold glass.

Beyond the window there was no road, no cemetery, no kitchen garden.  A blizzard was raging outside, the air was smoky with snow.  One might have thought the storm noticed Yura and, knowing how frightening it was, reveled in the impression it made on him.  It whistled and howled and tried in every way possible to attract Yura's attention.  From the sky endless skeins of white cloth, turn after turn, fell on the earth, covering it in a winding sheet.   The blizzard was alone in the world, nothing rivalled it. 

Yura's first impulse, when he got down from the windowsill, was to get dressed and run outside to start doing something.  He was afraid now that the monastery cabbage would be buried and never dug out, now that mama would be snowed under and would be helpless to resist going still deeper and further away from him into the ground.

Again it ended in tears.  His uncle woke up, spoke to him of Christ and comforted him, then yawned, went to the window, and fell to thinking.  They began to dress.  It was getting light.

3

While his mother was alive, Yura did not know that his father had abandoned them long ago, had gone around various towns in Siberia and abroad, carousing and debauching, and that he had long ago squandered and thrown to the winds the millions of their fortune.  Yura was always told that he was in Petersburg or at some fair, most often the one in Irbit. 

But then his mother, who had always been sickly, turned out to have consumption.  She began going for treatment to the south of France or to northern Italy, where Yura twice accompanied her.  Thus, in disorder and amidst perpetual riddles, Yura spent his childhood, often in the hands of strangers, who changed all the time.  He became used to these changes, and in such eternally incoherent circumstances his father's absence did not surprise him.

As a little boy, he had still caught that time when the name he bore was applied to a host of different things.  There was the Zhivago factory, the Zhivago bank, the Zhivago buildings, a way of tying and pinning a necktie with a Zhivago tie-pin, and even some sweet, round-shaped cake, a sort of baba au rhum, called a Zhivago, and at one time in Moscow you could shout to a cabby:  "To Zhivago!" just like "To the devil's backyard!" and he would carry you off in his sleigh to a fairy-tale kingdom.  A quiet park surrounded you.  Crows landed on the hanging fir branches, shaking down hoarfrost.  Their cawing carried, loud as the crack of a tree limb.  From the new buildings beyond the clearing, pure-bred dogs came running across the road.  Lights were lit there.  Evening was falling. 

Suddenly it all flew to pieces.  They were poor.

4

In the summer of 1903, Yura and his uncle were riding in a tarantass and pair over the fields to Duplyanka, the estate of Kologrivov, the silk manufacturer and great patron of the arts, to see Ivan Ivanovich Voskoboinikov, a pedagogue and popularizer of useful knowledge.

It was the feast of the Kazan Mother of God, the thick of the wheat harvest.  Either because it was lunchtime or on account of the feast day, there was not a soul in the fields.  The sun scorched the partly reaped strips like the half-shaven napes of prisoners.  Birds circled over the fields.  Its ears drooping, the wheat drew itself up straight in the total stillness or stood in shocks far off the road, where, if you stared long enough, it acquired the look of moving figures, as if land surveyors were walking along the edge of the horizon and taking notes.

"And these," Nikolai Nikolaevich asked Pavel, a handyman and watchman at the publishing house, who was sitting sideways on the box, stooping and crossing his legs, as a sign that he was not a regular coachman and driving was not his calling, "are these the landowner's or the peasants'?" 

"Them's the master's," Pavel replied, lighting up, "and them there," having lighted up and inhaled, he jabbed with the butt of the whip handle towards the other side and said after a long pause, "them there's ours.  Gone to sleep, eh?" he scolded the horses every so often, glancing at their tails and rumps out of the corner of his eye, like an engineer watching a pressure gauge. 

But the horses pulled like all horses in the world; that is, the shaft horse ran with the innate directness of an artless nature, while the outrunner seemed to the uncomprehending to be an arrant idler, who only knew how to arch its neck like a swan and do a squatting dance to the jingling of the harness bells, which its own leaps set going. 

Nikolai Nikolaevich was bringing Voskoboinikov the proofs of his little book on the land question, which, in view of increased pressure from the censorship, the publisher had asked him to revise.

"Folk are acting up in the district," said Nikolai Nikolaevich.  "In the Pankovo area they cut a merchant's throat and a zemstvo man had his stud burned down.  What do you think of that?  What are they saying in your village?"

But it turned out that Pavel took an even darker view of things than the censor who was restraining Voskoboinikov's agrarian passions.

"What're they saying?  Folk got free and easy.  Spoiled, they say.  Can you do that with our kind?  Give our muzhiks the head, they'll crush each other, it's God's truth.  Gone to sleep, eh?"

This was the uncle and nephew's second trip to Duplyanka. Yura thought he remembered the way, and each time the fields spread out wide, with woods embracing them in front and behind in a narrow border, it seemed to Yura that he recognized the place where the road should turn right, and at the turn there would appear and after a moment vanish the seven-mile panorama of Kologrivovo, with the river glistening in the distance and the railroad running beyond it.  But he kept being mistaken.  Fields were succeeded by fields.  Again and again they were embraced by woods.  The succession of these open spaces was tuned to a vast scale.  You wanted to dream and think about the future.

Not one of the books that were later to make Nikolai Nikolaevich famous had yet been written.  But his thoughts were already defined.  He did not know how near his hour was. 

Soon he was to appear among the representatives of the literature of that time, university professors and philosophers of the revolution – this man who had thought over all their themes and who, apart from terminology, had nothing in common with them.  The whole crowd of them held to some sort of dogma and contented themselves with words and appearances, but Father Nikolai was a priest who had gone through Tolstoyism and revolution and kept going further all the time.  He thirsted for a wingedly material thought, which would trace a distinct, unhypocritical path in its movement and would change something in the world for the better, and which would be noticeable even to a child or an ignoramus, like a flash of lightning or a roll of thunder.  He thirsted for the new.

Yura felt good with his uncle.  He resembled his mother.  He was a free spirit, as she had been, with no prejudice against anything inhabitual.  Like her, he had an aristocratic feeling of equality with all that lived.  He understood everything at first glance, just as she had, and was able to express his thoughts in the form in which they came to him at the first moment, while they were alive and had not lost their meaning.

Yura was glad that his uncle was taking him to Duplyanka.  It was very beautiful there, and the picturesqueness of the place also reminded him of his mother, who had loved nature and had often taken him on walks with her.  Besides that, Yura was pleased that he would again meet Nika Dudorov, a high-school boy who lived at Voskoboinikov's and probably despised him for being two years younger, and who, when greeting him, pulled his hand down hard and bowed his head so low that the hair fell over his forehead, covering half his face.
What do I feel if this is not love?
But if it is love, God, what thing is this?
If good, why this effect: bitter, mortal?
If bad, then why is every suffering sweet?
If I desire to burn, why the tears and grief?
If my state is evil, what’s the use of grieving?
O living death, O delightful evil,
how can you be in me so, if I do not consent?
And if I consent, I am greatly wrong in sorrowing.
Among conflicting winds in a frail boat
I find myself on the deep sea without a helm,
so light in knowledge, so laden with error,
that I do not know what I wish myself,
and tremble in midsummer, burn in winter.

Petrarch
இது காதலில்லை என்றால்
வேறு என்னதான் இது?
இதுதான் காதல் என்றால்
கடவுளே, எதுதான் இது?
இது நன்று என்றால்
ஏன் இந்த பாதிப்பு:
கசப்பும் உயிர்கொல்வதுமாய்?
இது கெடுதல் என்றால்
வேதனைகள் இனிப்பது எதனால்?
எரியத்தான் விழைகிறேன் என்றால்
ஏன் இந்தக் கண்ணீரும் சோகமும்?
இந்த நிலை தீங்கானது என்றால்
சோகித்துதான் என்ன பயன்?
ஓ, வாழ்க்கையாகிவிட்ட மரணமே
களிப்பூட்டும் தீமையே,
என் அனுமதியின்றி
என்னுள் நீ உறைவது சாத்தியமோ?
என் அனுமதி உண்டென்றால்
என் சோகம் தவறன்றோ?
எதிர்காற்றில் அலைபடும்
நொய்தான படகொன்றில்
சுக்கான் இல்லாமல்
ஆழ்கடலில் இருப்பதுபோல் உணர்கிறேன்.
எதை நான் விழைகிறேன் என்றறிய
ஞானத்தின் பலமுமில்லை
பிழைகளின் பாரமும் அதிகம்.
நடுவேனில் காலத்தில் நடுங்குகிறேன்
பனிக்காலத்தில் எரிகிறேன்.


You Tell Us What to Do
When we launched life on the river of grief,
how vital were our arms, how ruby our blood.
With a few strokes, it seemed, 
we would cross all pain,
we would soon disembark.
That didn't happen.
In the stillness of each wave we found invisible currents.
The boatmen too were unskilled,
their oars untested.
Investigate the matter as you will,
blame whomever, as much as you want,
but the river hasn't changed,
the raft is still the same.
Now you suggest what's to be done,
you tellus how to come ashore.
When we saw the wounds of our country
appear on our skins,
we believed each word of the healers.
Besides, we remembered so many cures.
It seemed at any moment
all troubles would end, each wound heal completely.
That didn't happen; our ailments
were so many, so deep within us
that all diagnoses proved false, each remedy useless.
Now do whatever, follow each clue,
accuse whomever, as much as you will.
our bodies are still the same,
our wounds still open.
Now tell us what we should do,
you tell us how to heal these wounds.

Faiz Ahmad Faiz London 1981
Translated by Agha Shahid Ali from Urdu
From the book The Rebel’s Silhouette (Delhi, OUP)
நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று

சோக ஆற்றில் நாங்கள்
வாழ்க்கைப் படகை இட்ட போது
எவ்வளவு ஆதாரமாக இருந்தன எங்கள் கரங்கள்
எவ்வளவு சிவப்பாக இருந்தது எங்கள் ரத்தம்
இரண்டொரு முறை துடுப்பை நீரில் எட்டிப் போட்டால்
படகு மறு கரை சேர்ந்துவிடும் என்று நினைத்தோம்
அது நடக்கவில்லை
ஒவ்வொரு அலையிலும்
கண்ணுக்குத் தெரியாத சுழல்
படகோட்டிகளும் பயிற்சி அற்றவர்கள்
துடுப்புகளும் இதுவரை நீரில் இடாதவை
இப்போது எத்தனை வேண்டுமானாலும் உசாவுங்கள்
யார் மீது வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும்
பழியைப் போடுங்கள்
ஆனால் ஆறு இன்னும் மாறவில்லை
படகும் அதே படகுதான்
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று

எங்கள் தேகத்தில் தேசத்தின்
காயங்களைக் கண்ட போது
மருத்துவர்களை முற்றிலும் நம்பினோம்
தவிர எங்கள் நினைவில் வேறு பல நோய் நிவாரணிகள்
எந்த நிமிடமும் எல்லாத் தொல்லைகளும் நீங்கும்
ஒவ்வொரு காயமும் முற்றிலும் ஆறும்
என்று நம்பினோம்
அது நடக்கவில்லை
எங்கள் நோய்கள் காலம்காலமாக இருந்தவை
தொட முடியா மன ஆழத்தில் அவற்றின் வேர்கள்
எல்லா நோய் அறுதியிடலும் பொய்யாய்ப் போயிற்று
ஒவ்வொரு மருந்தும் பயனற்றுப் போயிற்று
இப்போது எத்தனை வேண்டுமானாலும் உசாவுங்கள்
யார் மீது வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும்
பழியைப் போடுங்கள்
அதே உடல்கள்தாம்
அதே புண்கள்தாம்
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
இப்போது நீங்களே சொல்லுங்கள் என்ன செய்வதென்று
ஃபெயிஸ் அஹமத் ஃபெயிஸ், லண்டன், 1981
கலகக்காரனின் நிழலுருவம் புத்தகத்திலிருந்து
ஹிந்தியிலிருந்து தமிழில் ஆங்கில உதவியுடன் ஆங்கிலத்தில் செய்திருந்த சில மாற்றங்களைத் தவிர்த்து

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை - றியாஸ் குரானா, பிரியாத் துயர்




யமுனை செல்வன்

வாசகனின் குறிப்புகள் :-)

எனக்கு பிடித்த கவிதைகள் 3 – றியாஸ் குரானா
Posted onAUGUST 12, 2016Categoriesகவிதை


றியாஸ் குரானா எழுதிய கவிதை

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை

இது அதிகம் பாவிக்கப்பட்ட ஒரு பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பல வருடங்களாக
திரும்பத் திரும்ப வரையப்பட்டபோதிலும்
ஒரு இறகும் தொலைந்துவிடவில்லை
நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
வண்ணங்களை மாற்றிக் காண்பிக்கும்
இந்தப் பறவை;
தினமும் அதிகாலையில்
சித்திரத்திலிருந்து வெளியில் சென்றுவிடுகிறது
அந்த நேரத்தில்தான்
சித்திரத்தில் திருத்த வேலைகள் செய்யமுடியும்
இரவில், சித்திரத்திலுள்ள
வர்ணங்களையெல்லாம் தின்றுவிடுகிறது
இப்படித்தான் அன்றொரு நாள்
ஒரு அழகிய பாடலை எழுதிவைத்தேன்
கண்முன்னே சொற்களைக்
கொத்தித் தின்றேவிட்டது
இலக்கியங்களும்
ஓவியங்களும்
மிக அதிகம் பாவித்த இந்தப் பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
இப்போது ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில்; இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்
இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்

°
தமிழில் அதிகம் பாவிக்கப்படாத கவிஞனாகவே குரானாவை பார்க்கிறேன். இலக்கிய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் மனதில் விதைப்பது இது தான் ‘குரானாவை வாசியுங்கள்’. எனக்கான கவிஞராக தெரிகிறார். வாய்ப்பு கிடைத்தால் முழுமையாக வாசிக்க வேண்டும்.





Riyas Qurana - றியாஸ் குரானா


22 hrs ·

Non Linear poem

பிரியாத் துயர்

............................

அவரவர் இருக்கையிலமர்ந்து

மூழ்கத் தொடங்குகிறோம்

அது அவளும் நானும்தான்

அந்த ரயில் பெட்டியில்

நிறைந்திருக்கும் இரைச்சலில்

சிக்கி சிதைந்துவிடாமல்,

மூழ்கி கண்டுபிடித்த பேரமைதி

அதற்குள்தான் இருக்கிறது

தற்செயலான பார்வைகள்

வார்த்தைகளை மிக வேகமாக

அழிக்கத்தொடங்கின

உதட்டிலிருந்த சொற்கள்

அழிவதைப் பார்க்கிறேன்

சற்று ஊடுருவி,

மனதிலிருந்த சொற்களையும்

அழித்துவிட்டன

இருவரும் அமைதிக்குள்

நடந்து கொண்டிருக்கிறோம்

ரயில் பெட்டியின் பேரிரைச்சலினுள்

சிறு தீவுபோல

அந்தப் பேரமைதி இருக்கிறது

என்னையே குறிவைத்து

அசையும் காற்று

ரயிலினுள் நுழைகிறது

வழக்கத்திற்கு மாறாக

யாருக்கும் தெரியாமல்

மரக்கிளைகளினுள் நுழைந்தததைப்போல

அவளுடன் விளையாடுகிறது

அங்கிருந்தவர்கள்

காற்றே இல்லை, வியர்க்கிறது

எனப் பேசிக்கொண்டதாக

பயணத்தின் முடிவில் அறிந்தேன்

அந்த ரயில்

ஒரே நேரத்தில்

இரண்டு திசைகளிலும்

பயணித்துக்கொண்டிருந்தது.

நானிறங்கும்போது அவளும்

அவளிறங்கும்போது நானும்

கையசைத்துவிடைபெற

இது உதவியாக இருந்தது.

எதிரெதிர்த் திசையில்

மிகத்தொலைவில்

இரண்டு முடிவுகளைக்கொண்ட

ஒரு பயணத்தை

ஒன்றாகத் தொடர்ந்தோம்

இருக்கையில் மூழ்கிய நாங்கள்

மிதந்து மேலே வருகிறோம்

கரையேறியபின்,

நான் மட்டுமே இங்கிருப்பதைப்போல

அவள் மட்டுமே அங்கிருப்பாள்

எம்மைச் சுற்றி இரைச்சல்.

இறங்க வேண்டிய இடம்

தவறிப்போயிருக்கும்

அங்கும் தவறிப்போயிருக்கலாம்.

ரயிலுக்காக காத்திருக்கிறேன்

காத்திருக்கும் ரயில் வந்தால்

அதில் நான் பயணித்தால்

நடக்க வேண்டியிருப்பவைதான் இது.

இன்னும் அந்த ரயில் வரவில்லை.

Saturday, 6 February 2016

கிருஷ்ணன் நம்பி (1932 – 1976) By சாரு நிவேதிதா



http://www.dinamani.com//junction/pazhuppu-nira-pakkangal/2016/02/07/கிருஷ்ணன்-நம்பி-1932-–-1976/article3262679.ece


கிருஷ்ணன் நம்பி (1932 – 1976)


By சாரு நிவேதிதா

First Published : 07 February 2016 10:00 AM IST


இப்போதுதான் முதல்முறையாக கிருஷ்ணன் நம்பியைப் படிக்கிறேன். குமரி மாவட்டம் என்றாலே எனக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. அந்தத் தயக்குத்துடனேதான் அவரை அணுகினேன். ‘மருமகள் வாக்கு’ என்ற ஒரே கதையில் தெரிந்து விட்டது கிருஷ்ணன் நம்பி உலகின் மகத்தான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் என்று.





ஒரு ஊரில் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளை. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனார். இருவரும் உயிரைக் கொடுத்து வேலை செய்ய ஊர் இரண்டு பட்டு நிற்கிறது.

அந்த ஊரில் மீனாட்சி அம்மாள் என்று ஒரு பெண்மணி. அவள் கணவன் தாலுகா ஆஃபீஸ் பியூனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டான். இறப்பதற்கு முன் அறுபத்தாறு செண்ட் நஞ்சையை அவள் பெயருக்குக் கிரயம் செய்து வைத்திருக்கிறான். மீனாட்சிக்கு ஒரு மகன். ராமலிங்கம். அவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தாள் மீனாட்சி. மருமகள் ருக்மிணி மெலிந்து காணப்பட்டாலும் வேலைக்குச் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை ஓயாமல் இருந்து கொண்டிருக்கும் வேலை. மார்வலியும் இரைப்பும் கொண்டவள். ஆனால் மீனாட்சி அம்மாள் அவளை மருத்துவரிடம் அனுப்பச் சம்மதிக்கவில்லை. வைத்தியர்களுக்குக் காசு ஒன்றே குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாள். மேலும், டாக்டரிடம் போவதற்கு யாரும் இங்கே சாகக் கிடக்கவில்லையே?

மருமகள் ருக்மிணி அந்த வீட்டில் ஒரு கொத்தடிமை. வெளியில் இருந்து வருபவர்களிடம் வாய் திறந்து ஒரு சொல் போய் விடக் கூடாது என்பது மீனாட்சியின் உத்தரவு. வீட்டில் மீனாட்சி அம்மாள் செய்யும் வேலை, பணப் பட்டுவாடா செய்வது, மற்றும் ஒரு நோட்டுப் புத்தககத்தில் ஸ்ரீராமஜயம் எழுதுவது. சாவதற்குள் பத்து லட்சத்து ஒன்று எழுதி முடித்து விடவேண்டும் என்பது அவள் திட்டம். ஏற்கனவே லட்சத்துச் சொச்சம் எழுதி அந்த அக்ரஹாரத்துப் பெண்களை அசத்தியிருக்கிறாள். மாமியாரும் மருமகளும் சேர்ந்துதான் சாப்பிடுவது. ஆனால் அங்கேயும் சர்வாதிகாரம். உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு! அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டு விடும். ஆனால், இந்த விதி மீனாட்சிக்கு அல்ல. ரொம்பப் பொறுக்க முடியாமல் போய் இரண்டு மூன்று முறை ருக்மிணி மீனாட்சிக்குத் தெரியாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றிருக்கிறாள்.

இப்படிப்பட்ட ஒரு நரகத்திலும் ருக்மிணிக்கு ஒரே ஒரு சிறிய சந்தோஷம் உண்டு. மத்தியான உணவுக்குப் பிறகு மீனாட்சி அம்மாள் கொஞ்சம் படுத்துக் கிடப்பாள். அந்த வேளையில் ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்ட வேண்டும். அது குடிப்பதையும் கட்டுப்புல் தின்பதையும் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு மிகப் பெரிய சந்தோஷம். ‘சவமே, எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். மாடு என்பது மகாலட்சுமி. அதன் வயிறு வாடக் கூடாது; வாடினால் கறவை வாடி விடும் என்பாள் மாமியார். ‘பசுவே, நீ மட்டும் பெண் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு?’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. பசுவின் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம். அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள் மேல் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும்.

அன்றைய தினம் ருக்மிணி ஓட்டுப் போடப் போக வேண்டும். கிளிக்குத்தான் போட வேண்டும் என்பது அவள் விருப்பம். கிளி எவ்வளவு அழகு! அவளுக்குக் கிளியைப் போல் பறக்க வேண்டும் என்று ஆசை.

பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக் கொண்டே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்க, ‘சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா? அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’ என்று அதன் தாடையில் ஒரு தட்டு.

அதற்கடுத்து ருக்மிணி பசுவிடம் தன் வாழ்க்கையைப் பற்றி வெகு சகஜமாகப் பேசுகிறாள். அதுவும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேஜிகல் ரியலிசம் அல்ல. இங்கே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எதார்த்த வாழ்க்கையே அப்படித்தான் இருந்தது. இவள் பேசி முடிக்கவும் பசு பொத் பொத்தென்று சாணி போட்டு ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்கிறது. உடனே ருக்மிணி அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டு போய்ச் சாணிக் குண்டில் போடுகிறாள். புல் தரையில் கையைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர, பசு அவளை நிமிர்ந்து பார்த்து ‘ம்மா’ என்று கத்திற்று. இதோ ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாள் ருக்மிணி.

இதுதான் இந்திய வாழ்க்கை. குறைந்த பட்சம் பெண்கள் வரையிலாவது இப்படித்தான் இருந்தது. இன்றைய தினம் பிராமணர்களே மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளை வைத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அன்னையின் மேற்கண்ட வாழ்க்கை ஞாபகம் வருகிறது. ருக்மிணி என்னுடைய அம்மாவும்தான். அந்த வாழ்க்கையை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

ஓட்டுச் சாவடிக்கு வருகிறாள் ருக்மிணி. அது ஒரு பள்ளிக் காம்பவுண்டு. அங்கே ஒரு அளிச மரம். அதைப் பார்த்ததும் அவளுக்குத் தன் சிறு பிராய ஞாபகங்கள் வருகின்றன. இந்த உலகத்திலேயே ஒரே ஒரு அளிச மரம்தான் உண்டு; அதுவும் வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இங்கேயும் ஒரு அளிச மரத்தைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. அளிச மரத்தில் ஏறி பழம் பறித்துத் தின்ற பொழுதுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.

மாமியார் அவளைப் பூனைக்குப் போடச் சொல்லி அனுப்பியிருந்தாள். ஆனாலும் இன்று முதல்முதலாக ருக்மிணி மாமியாரின் பேச்சைக் கேட்கப் போவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள். அவள் கிளிக்குப் போட்டாளா, பூனைக்குப் போட்டாளா என்ற இடம் உலக இலக்கியத்தில் ஒரு சிகரம். நீங்களே படித்துப் பாருங்கள். ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்தக் கதை கணையாழி அக்டோபர் 1974 இதழில் வெளி வந்தது.

நான் தொடர்ந்து பல காலமாகச் சொல்லி வரும் ஒரு விஷயம், ஜனரஞ்சிகைப் பத்திரிகைகளின் மூலம் இலக்கியம் வளராது. மலையாளம், வங்காளம் போன்ற சூழல்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் தமிழில் அது சாத்தியமில்லை. லா.ச.ரா. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதினார். அதை ஒரு அதிசயம் என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சாவி எழுத்தாளர்களை வளர்த்து விடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர். சுஜாதா, ஜெயகாந்தன் ஆகியோர் பிரபலமானதில் சாவிக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் அப்பேர்ப்பட்ட சாவியே மேற்கண்ட கதையைப் பிரசுரிக்க முடியவில்லை என்று கிருஷ்ணன் நம்பிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். பின்வருவது சாவியின் கடிதம்: ‘மருமகள் வாக்கு’ கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், சில காரணங்களினால் என்னால் வெளியிட இயலவில்லை. நீங்கள் விரும்பியபடி, கதையை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.’

***

‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தலைப்பில் கிருஷ்ணன் நம்பியின் எழுத்துக்கள் யாவும் காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் சுந்தர ராமசாமி தன் நெருங்கிய நண்பரான கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதிய ஒரு பிரமாதமான கட்டுரை பின்னுரையாக சேர்க்கப்பட்டுள்ளது. நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பியாக இருந்திருக்கிறது. ஆனால் அக்காலத்தில் எழுத்தாளர்களுக்குத் தங்கள் பெயர் பிடித்திருக்கவில்லை. அந்த வழக்கப்படியே அவரும் தன் பெயரை கிருஷ்ணன் நம்பி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணன் நம்பியின் மற்றொரு விசேஷமான அம்சம், அவர் குழந்தைகளைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறார். குழந்தைகளுக்கான கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் மற்ற குழந்தைக் கவிஞர்களைப் போல் அவர் குழந்தைகளை உய்விப்பதற்கான போதனைகள் சொல்லவில்லை. அவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தன்னிடம் உள்ள விஷயங்களை எழுதினார். இது நம்பி பற்றி சு.ரா.வின் கருத்து. அது உண்மையும் கூட. மேலும் சு.ரா. சொல்கிறார்:

நம்பியின் குழந்தைக் கவிதைகளையும் அவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விடவும் பல மடங்கு புகழ் பெற்றிருந்த வேறு பல குழந்தைக் கவிஞர்களுடைய கவிதைகளையும் அன்று படித்துப் பார்த்தபோது தமிழிலேயே சிறப்பான குழந்தைக் கவிதைகள் எழுதியிருப்பவர் நம்பிதான் என்று எனக்குப் பட்டது…

எவ்விதத் தூண்டுதலுமின்றி நம்பியின் கவிதைகளைக் குழந்தைகள் பாடி மகிழ்ந்துள்ளதை நானே நன்கு அறிவேன். என் குழந்தைகள் அவருடைய கவிதைகளை மிகவும் விரும்பிப் பாடியது என் பழைய நினைவின் சந்தோஷமான பகுதியாகும். எவ்வளவோ வருடங்கள் ஓடி மறைந்த பின்பும் பணியும் படிப்பும் என் குழந்தைகளை அன்னியச் சூழலுக்கும் நெடுந்தொலைவுக்கும் இட்டுச் சென்ற பின்பும், ‘நம்பி மாமா’வின் பாடல்களை அவர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரிகளை ஒப்பிப்பது அவருடைய திறனுக்குக் காலம் தந்த ஆமோதிப்பு என்றே நம்புகிறேன்.’

காலச்சுவடு தொகுப்பில் கிருஷ்ணன் நம்பி எழுதிய குழந்தைக் கவிதைகள் மொத்தம் 39 இருக்கின்றன. ஆங்கில மோகம் கொண்டு அலையும் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய அற்புதமான பாடல்கள் அவை.

அதில் ஒரு பாடல் இது:

விளக்கின் வேண்டுகோள்

காற்று மாமா, காற்று மாமா கருணை செய்குவீர்!
ஏற்றி வைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்?
சின்னஞ் சிறு குடிசை இதைச் சிறிது நேரம் நான்
பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்.
ஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்;
ஏழும் மூணும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்.
அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்;
என்ன ஆச்சு என்று பானைக் குள்ளே பார்க்கிறாள்.
படிக்கும் சிறுவன் வயிற்றுக்குள்ளே பசி துடிக்குது;
அடிக்கொரு தரம் அவனது முகம் அடுப்பைப் பார்க்குது.
காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ?
ஆச்சு, இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே!

***

தொகுப்பில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம், கிருஷ்ணன் நம்பி தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள். முதல் கடிதம் கி. ராஜநாராயணனுக்கு எழுதியது. தேதி 24.5.1961. முகவரி: கோகுலம், கிருஷ்ணன் கோயில், நாகர்கோயில். கி.ரா. தன் குழந்தைக்காக நெல்லையிலிருந்து வாங்கிச் சென்ற பொம்மை அவர் குழந்தைக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டு எழுதியிருக்கிறார். அதில்தான் என்ன ஒரு நயம்!

தன் மகன் முரளிக்கு வாங்கிக் கொடுத்த ஸெல்லுலாய்டு பொம்மையை (விலை எட்டணாவோ பத்தணாவோ) அடுத்த நிமிஷமே தரையில் தட்டி உடைத்து விட்டானாம். அதில் இருந்த இரும்புக் கம்பியாவது பிழைத்ததே என்று பார்த்தால் அதையும் கிணற்றில் போட்டு விட்டான். நம் குழந்தைகள் தமிழனின் வீரப் பரம்பரையை நினைவூட்டுகிறார்கள். அதோடு, நிலையாமைத் தத்துவத்தையும் நினைவுக்கு வந்து விடுகிறது என்று கேலியும் கிண்டலுமாக எழுதுகிறார் கிருஷ்ணன் நம்பி.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட குடும்ப உறவுகள் எழுத்தாளர்களுக்கு இடையே இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் முன்னால்தான் என்னை ஒரு போலி எழுத்தாளன் என்று வர்ணித்து எழுதிய ஒரு நிஜ எழுத்தாளரின் கட்டுரையைப் படித்து முடித்தேன். காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

பொம்மையை உடைத்த கிருஷ்ணன் நம்பியின் புதல்வர் முரளிக்கு இப்போது என் வயது இருக்கலாம். அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

(தொடரும்)

கிருஷ்ணன் நம்பி – பகுதி 2


By சாரு நிவேதிதா

First Published : 14 February 2016 10:00 AM IST



எனக்கு ஒரு பேராசை. பழுப்பு நிறப் பக்கங்களில் வரும் ஊர்களையும் இடங்களையும் குறித்து வைத்துக்கொண்டு அங்கெல்லாம் நாம் ஒரு குழுவாகப் பயணம் சென்றால் என்ன? க.நா.சு.வின் சுவாமிமலை, தி.ஜா.வின் தஞ்சாவூர், கும்பகோணம், சார்வாகனின் ஆரணி, அசோகமித்திரனின் செகந்திராபாத் இப்படி… இந்த எண்ணம் எனக்கு கிருஷ்ணன் நம்பியின் ‘கதைக்கு ஒரு கரு’ என்ற கட்டுரையைப் படித்தபோது தோன்றியது. நம்பியின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு வடக்கே எட்டாவது மைலில் உள்ள அழகிய பாண்டியபுரம். என்ன ஓர் அழகான பெயர் பாருங்கள்! டவுன் பஸ்ஸில் கண்டக்டரிடம் ‘அழகிய பாண்டியபுரத்துக்கு ஒரு டிக்கட்’ என்று கேட்பதை நினைத்துப் பார்ப்பதே பெரும் இன்பமாக இருக்கிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் இப்படி ஒரு பயணம் சென்றால் அதை ஒரு புனித யாத்திரை என்றே சொல்லுவேன்.

கிருஷ்ணன் நம்பி ஒரு மலரைப் போன்ற மென்மை கொண்ட ஆளுமையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. லௌகீக வாழ்வின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒருவிதமான எருமைத்தோலும் தடித்தனப் புத்தியும் தேவை. அது இல்லாவிட்டால் தோல்விதான். நம்பியோ ஒரு அநிச்ச மலர். என்ன ஆவார்? தகப்பனாரின் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் தந்திர புத்தி நம்பிக்கு இல்லை. சோர்வடைகிறார். இலக்கியத்தில் தஞ்சமடைகிறார். இலக்கியமோ தன்னிடம் நிழல் தேடி வருபவனின் உயிரைப் பலி கேட்கும் பைசாச விருட்சம். தி.ஜ.ரங்கநாதன், புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், தர்மு சிவராமு போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள், அஃ பரந்தாமன் போன்ற பதிப்பாளர்கள்/சிறுபத்திரிகை ஆசிரியர்கள் என்று மட்டும் அல்லாமல் ஊட்டி மணிக்கண்ணன், கும்பகோணம் கனகு போன்ற வாசகர்களையும் பலி வாங்கியிருக்கிறது. அப்படி ஒரு பலி தான் கிருஷ்ணன் நம்பியும் என்று தோன்றுகிறது. (உயிரை பலி கேட்கும் அந்தப் பைசாச விருட்சத்தைத் தனது ‘மாந்த்ரீக’த்தின் மூலம் அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டவர்கள் என சுந்தர ராமசாமி போன்றோரைச் சொல்லலாம்.)

அந்தக் காலத்து எழுத்தாளர்களைப் போலவே கிருஷ்ணன் நம்பியும் தனது வாழ்வியல் அனுபவங்களையே படைப்பாக மாற்றியிருக்கிறார். அவர் வார்த்தைகள்: ‘அநேகமாய் என்னையே கதாநாயகனாக்கி, என் சொந்த ஆசைகளை, கனவுகளை, அசட்டுத்தனங்களை, வக்கிரங்களை, தோல்விகளை ஆதாரமாகக் கொண்டுதான் நான் கதைகள் எழுதுகிறேன்… என்னை மையமாக வைத்து எழுதும் கதைகளே எனக்குப் பிடிக்கின்றன. அப்படி எழுதும் கதைகளே வெற்றிகரமாக அமைவதாகவும் எனக்குப் படுகிறது.’ இதற்கு உதாரணமாக ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’, ‘ஒரு கனவு’, ‘கணக்கு வாத்தியார்’ போன்ற கதைகளைச் சொல்கிறார்.

‘நான்’ என்பதில், அசட்டுச் சிறுவனாக கூடு கட்டிய மார்புடன் தெருவோடு நடந்து திரிந்த நானும், காமப்பித்துத் தலைக்கேறி அலைந்த நானும், லட்சிய வெறி கொண்டு ஒன்றுக்கொன்று முரண்படப் பிதற்றிக் கொட்டிய நானும், கோபித்து எரிச்சலுற்று உடம்பைச் சூடேற்றிக் கண்ணைச் சிவக்க வைத்துக் கொண்ட நானும் – இப்படி எத்தனையோ ‘நான்’கள் அடங்கி விடுகின்றன.’ அந்தக் கட்டுரையில் 1958-ல் எழுதப்பட்ட ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற கதையின் கரு எப்படித் தனக்கு உருவாயிற்று என்று விவரிக்கிறார் நம்பி.

எழுதி எழுதிக் குவித்து பெரும் பணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நம்பி. ஆனால் எதார்த்த வாழ்வில் அவர் ஒரு மகா சோம்பேறி. வருஷத்தில் முழுசாக ஐந்தாறு கதைகள் எழுதினாலே பெரிய சாதனை. இந்த லட்சணத்தில் எங்கே எழுதுவது, எங்கே குவிப்பது? அப்படியே ஐம்பது அறுபது கதை எழுதினாலும் அதைப் பிரசுரிக்க எந்தப் பத்திரிகை தயாராக இருக்கிறது? ஆனால் கதை எழுதிச் சம்பாதிக்கும் அவரது இந்த ஆசை ‘இறைவனின் காலடியில் மலர்களாக சமர்பிக்கத்தக்க’ அளவுக்கு மதிப்புக்குரியது என்றும் எழுதுகிறார் நம்பி.





‘வளர்த்துவானேன் – என் முதல் அடிப்படை – எழுதிக் குவித்துப் பணம் பார்க்கும் என் முதல் அடிப்படை – கழுதைக் காலில் உதையுண்ட கோழி முட்டை போல் ஆரம்பத்திலேயே நொறுங்கிச் சிதறியது… இந்தப் பிரபஞ்சமே கவிதை, சிறுகதை, நாவல்களால் ஆனது என்று தீர்மானம் செய்திருந்த என் மனசை வியாபாரத்தில் ஒட்ட வைக்க முடியவில்லை.’

இதற்குப் பிறகுதான் சொந்த ஊருக்கு – அழகிய பாண்டியபுரம் - மூட்டை கட்டுகிறார் நம்பி. ‘வேலை தேடுவதற்கான முயற்சிகளை நைந்த உள்ளத்துடனும், அவநம்பிக்கையுடனும் மேற்கொள்ளலானேன். ஒன்றுமே பிரயோசனப்படவில்லை. சர்க்கார் வேலைக்கு மனுப் போடும் வயசும் எப்போதோ தாண்டிவிட்டிருந்தது. தகப்பனார் வாய்க்கு வாய் என்னை இடித்துக் கொண்டே இருந்தார். எவ்வகையிலாவது ஒரு வேலையைப் பெற்று எங்காவது ஊரை விட்டே போய் விடவேண்டும் என்று வேதனையுடன் எண்ணி எண்ணிப் பொருமினேன்… என் தந்தையின் சுடுசொற்களோ நாளுக்கு நாள் புதிய கடுமைகளுடன் என்னைத் தாக்கின.’

‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற சிறுகதை இப்படித் தொடங்குகிறது. ‘வீட்டிலே உட்கார வெச்சு எத்தனை நாளைக்கு உனக்கு தண்டச் சோறு போடறது. இனிமே உன் பாட்டை நீ பார்த்துக்க வேண்டியதுதான். நீ என்ன பச்சைக் குழந்தையா? முருங்கத்தடிக்கு ஆகிற மாதிரி முப்பது வயது ஆகிறதேடா… ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்கப்படாது. என் கண்முன்னாலே நிக்காம எங்கேயாவது தொலஞ்சு போயிடு, ஆமாம்.’ இது தகப்பனார்.

‘ஏன் இப்பிடி ஒங்கப்பன் கிட்டே ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்டிண்டு சொரணை, மானம் இல்லாம இங்க ஒக்காந்திண்டிருக்கே? எங்கேயாவது தொலையப்படாதா? ஒரு காப்பி கிளப்பிலே மேச தொடச்சாக்கூட சோறும் போட்டு, மாசம் அஞ்சு பத்து கொடுப்பானேடா. ஏன் இப்படி மானங்கெட்ட வயிறு வளர்க்கிறே? காலத்த நேரத்த எங்கேயாவது தொலைஞ்சு போயேன். எனக்குன்னு இப்பிடிக் கிறுக்குப் பிள்ளையா வந்து பொறந்துட்டயே… கர்மம்!’ இது தாய்.

‘அன்று மாலை, எங்கள் ஊர்ப் பெரிய குளத்தின் கீழ்க்கரையில், ஒரு அழகிய குன்றின் அடிவாரத்தில், ஒரு சிவன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு காசி அரளிச் செடியின் அருகில் அமர்ந்து, மாலை வெயிலொளியின் கூட்டுறவில் பொன் தகடாய் விரிந்து மினுக்கிய குளப்பரப்பில் மனசை ஓட விட்டு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தேன்.’

இந்த இடத்தில்தான் மேலே ஆரம்பத்தில் குறிப்பிட்ட புனிதப் பயணத்துக்கான யோசனை எனக்கு வந்தது. அந்தக் குளக்கரைக்குச் சென்று அதே மாலை நேரத்தில் கிருஷ்ணன் நம்பியின் கதை கட்டுரைகளை வாய் விட்டுப் படிக்க வேண்டும். உங்களில் எத்தனை பேர் இதற்குத் தயாராக இருக்கிறீர்கள்? இந்தப் பத்தியில் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி எழுதி முடித்ததும் அவர் விவரித்திருக்கும் நிலவியல் வரைபடம் ஒன்றைப் போடுங்கள். நம் பயணத்துக்கு அது எளிதாக இருக்கும்.

கிருஷ்ணன் நம்பியின் எழுத்தை வாசிக்கும்போது தமிழ்ச் சூழல் படைப்பிலக்கியத்துக்கு எந்த அளவுக்கு விரோதமாக இருந்து வருகிறது என்பதையும், அதனால் படைப்பாளி அடையும் துயரத்தின் கண்ணீர்த் தடங்களாகவே அவரது எழுத்து அமைந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கியவாதி என்று மட்டும் இல்லாமல் சமூகத்தின் மந்தைத்தனத்துக்கு மாறாக எவர் இருந்தாலும் அவரை சமூகம் ஓட ஓட விரட்டுகிறது. இதுதான் கிருஷ்ணன் நம்பியின் படைப்புகளின் அடிச்சரடாக இருக்கிறது.

‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற கதை அதன் தலைப்பு சுட்டுவது போல் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கதை இல்லை. தமிழின் தலைசிறந்த சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’, கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, ஆ. மாதவனின் ‘எட்டாவது நாள்’, லா.ச.ரா.வின் ‘ஜனனி’ சார்வாகனின் ‘முடிவற்ற பாதை’ போன்ற கதைகள் இருக்கும் அல்லவா? அதே போன்றதொரு கதைதான் ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’. 25 வயதான பையன். ஆனால் மனநிலையோ பத்து வயதுப் பையனுக்குடையது. படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறான். தந்தை ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகர். வீட்டில் கொடுமையான வறுமை. கதையிலிருந்து ஒரு காட்சி:

‘அப்பா சாதம் எடுத்து ஒரு தாமரை இலையில் போட்டுக்கொண்டு ‘தண்ணி’ மோர் எடுத்து விட்டுப் பிசைந்து கொண்டார். அம்மா மிளகாய் போட்டாள். அப்பா சாப்பிட்டபடி சொன்னார். ‘இந்தச் சோறு எனக்கே பத்தாது. இதை மூணு பேர் முழுங்க வேண்டியிருக்கு. இதில் இந்தக் கிறுக்கனை வெச்சு எத்தனை நாளைக்கு மாரடிக்கிறது? ஒரு வேளைக்கு நாலு பேர் சாப்பிடற சோறுன்னா திங்கிறான். வெட்டிச் சோறு. எங்கேயாவது தொலைஞ்சு போகச் சொல்லேண்டி இந்த எழவை.’ அம்மா அழுதாள். அவள் கண்ணிலிருந்து மோர் மிளகாய்க் கரண்டியில் ஜலம் விழுந்து ‘சுர்ர்’ என்றது. ‘கிறுக்கனா இருந்துட்டுப் போறான். ஒங்க சோத்தை நீங்களே தின்னுங்கோ. என் பிள்ளையை நான் காப்பாத்திக்கிறேன். எதுக்கு அவனைக் கரிச்சிக் கொட்டறேள்? எல்லாரையும் போல இருந்தா அவனும் படிச்சு, பாஸ் பண்ணி ஒரு வேலைக்குப் போயிருக்க மாட்டானா?’

பிராமண சமுதாயத்தில் இப்படிக் குறை வளர்ச்சி உள்ள பல பிள்ளைகளை நான் தஞ்சாவூரிலும் ஸ்ரீரங்கத்திலும் பார்த்திருக்கிறேன். தெருவுக்கு ஒரு பையன் இருப்பான். ஆனால் அதெல்லாம் நல்ல வளமான குடும்பங்கள் என்பதால் இது போன்ற பிள்ளைகளை அவர்கள் எந்தக் காலத்திலும் வீட்டை விட்டுத் துரத்தியதில்லை. குடும்பத்தில் அவனும் ஒருவனாகவே இருந்து வருவான். ஆனால் நம்பியின் கதை அர்ச்சகர் வீட்டுக் கதை. பரம ஏழைக் குடும்பம்.

ஒருநாள் பையனை பெரிய பண்ணையார் வீட்டில் ஊருணியிலிருந்து ஜலம் கொண்டு விடும் வேலையில் சேர்த்து விடுகிறார்கள். மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். மாட்டேன் போ என்கிறான் பையன். அதுவரை அடித்திராத அம்மா ஒரே ஒரு அடி போடுகிறாள். முதுகு சிவந்து விடுகிறது. அம்மாவுக்கு பலம் அதிகம். இவ்வளவு பெரிய பிள்ளையை அடித்து விட்டதற்காக அழுகிறாள்.

பண்ணையார் வீட்டுக்குப் போகிறான் பையன். ‘சுப்பையா மாமா என்னை நிமிர்ந்து பார்த்தார். மூக்குக் கண்ணாடி மூக்கு நுனியில் ஒட்டிக் கொண்டு விழுவது போல் விழாமலிருந்தது. ‘எங்கடா வந்தே?’ என்று கேட்டார். அவருக்கு ரொம்ப ப்ரௌடு. பெரிய பணக்காரர் இல்லையா?’

வீட்டுக்குள்ளே போய் காமு மாமியைப் பார்க்கிறான். காமு மாமியும் கொஞ்சம் ப்ரௌடுதான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அழகி. கடலைமா இருக்கே, அந்த நிறம். சுப்பையா மாமா அவளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாதவர். பையனை அந்த வீட்டு வேலைக்காரி, கிறுக்கு என்று கிண்டல் செய்யும்போது காமு மாமி அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். அவனைப் பார்த்தா கிறுக்காட்டமா இருக்கான்? ராஜா மாதிரி இருக்கானே?

காலையும் மாலையும் ஊருணியிலிருந்து ஒரு மைல் தூரத்திலிருக்கும் மாமா வீட்டுக்கு ஜலம் சுமக்க வேண்டும். காலையில் நாலு குடம், மாலையில் நாலு குடம். ஒருநாள் காமு மாமி அவனை நெருங்கி அவனைக் கிள்ளி, கன்னத்தை நிமிண்டி என்னென்னவோ செய்கிறாள். இவன் பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்து அம்மாவிடம் சொல்லி விடுகிறான். (பையனுக்கு 25 வயது.) ‘அட மானங்கெட்ட தேவடியா’ என்று ஆரம்பித்து காமு மாமியை அம்மா திட்டுகிறாள். பிறகு பையன் ஒரு சிறிய கோவிலுக்கு அர்ச்சகர் வேலைக்கு அனுப்பப்படுகிறான். பிரகாரத்தில் அரளிப்பூ பூத்திருக்கும். இரட்டை அரளி சிவப்பாக மணக்கும். காசி அரளி மஞ்சளாகப் பூத்துக் கிடக்கும். அந்தக் கோவில் பக்கத்தில் மகராஜன் என்ற மாடு மேய்ப்பவன் பையனுக்கு சிநேகமாகிறான். கதை முழுவதையும் பையன்தான் நமக்குச் சொல்கிறான் என்பது முக்கியம். மகராஜன் பீடி குடிப்பான். எனக்கு பீடி குடிக்கத் தெரியாது. புகையை இழுத்து மூக்கு வழியாக விடுவான். இப்படி தினமும் பீடி குடித்தால் கடைசியில் இருமல் வந்து அவன் செத்துப் போய் விடுவான்.

இந்த இடம்தான் நம்மையும் இந்தக் கதையில் வரும் இளைஞனையும் வேறுபடுத்திக் காண்பிக்கும் பகுதி. எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இருந்தால் இதை எழுத முடியும் என்று வியக்க வைக்கும் இடம் இது. பீடி குடித்தால் செத்து விடுவார்கள் என்பது அவனுக்கு அவன் அம்மா சொன்னதாக இருக்கலாம். ஆனால் நாம் அதை நம்ப மாட்டோம். நம்முடைய தர்க்கம் அதற்கு இடம் கொடுக்காது. அந்தப் பிள்ளை அதை நம்புகிறான். அப்படி நம்புவதால் அவனை நாம் கிறுக்கு என்கிறோம்.

ஒருநாள் மகராஜன் பையனிடம் தீப்பெட்டி கேட்கிறான். உடனே பையன் பீடியை வாங்கிக் கொண்டு போய் கோவிலுக்குள் இருக்கும் விளக்கில் பற்ற வைத்துக் கொண்டு போய் கொடுக்கிறான். பின்னால் வந்த அப்பா அதைப் பார்த்துவிட்டு, ‘ஸ்வாமி விளக்கிலயாடா பீடி கொளுத்தினே? ஓங்கண் அவிஞ்சு போகத்தானே?’ என்று கத்துகிறார். முதுகிலும் இரண்டு அறை வைத்தார். வலிக்கவில்லை. அம்மா அடித்தால்தான் வலிக்கும்; அம்மாவுக்கு ரொம்ப பலம்.

அர்ச்சகருக்கு மடப்பள்ளியில் சாதம் வடிக்கும் வேலையும் உண்டு. அந்த வேலையை பையனுக்காக மகராஜன் செய்து கொடுக்கிறான். ஒருநாள் மகராஜன் வரவில்லை. பையனே வடிக்க முயன்று கொதி கஞ்சி அவன் கை, கால், நெஞ்சிலெல்லாம் கொட்டி விடுகிறது.

ஒருநாள் கோவிலுக்குப் பின்னே உள்ள குளத்தில் ஜானகி குளித்துக் கொண்டிருந்தாள். சீனு மாமாவின் பெண். பையனிடம் ஒரு நெல்லிக்காயைக் கொடுத்து அவளுடைய (வெண்ணிறக்) கழுத்தில் அடி என்கிறான் மகராஜன். பையனுக்கு ஒரே பயம். மகராஜன் வற்புறுத்துகிறான். நெல்லிக்காய் கணக்காக அவள் முதுகில் படுகிறது. மகராஜன் ஓடி விடுகிறான்.

வீட்டுக்குப் போய் பையன் ‘அம்மா, சாதம் போடுடி, பசிக்கிறது’ என்கிறான்.

‘மண்ணை வாரித் தின்னேண்டா! என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறதுக்கேன்னு வந்து பொறந்துட்டியே… ஏண்டா அந்தப் பொண் மேலே நெல்லிக்காயை விட்டெறிஞ்சே? அவ அம்மா இங்கே வந்து பேசின பேச்சுக்கு நாக்கைப் பிடுங்கிக்கலாம் போலிருக்கேடா எனக்கு… போன ஜென்மத்திலே என்ன பாவத்தைப் பண்ணினேனோ? எனக்குன்னு மணியா வந்து பொறந்தயே… எதுக்குடா இளிக்கிறே? நாறப் பொணமே… இனிமே இப்பிடி எல்லாம் செய்வியா? செய்வியாடா நீ…’

அடுப்பு ஊதும் ஓமக்குழலால் அவன் முதுகில் அடிக்கிறாள் அம்மா. ராத்திரி அப்பாவும் அடித்தார். அப்பாவுக்கு பலமே இல்லை. அம்மாவுக்குத்தான் ரொம்ப ரொம்ப பலம்.

இப்படிக் கைவிடப்பட்ட பையன்களைத்தான் யாருமற்ற அனாதைகளாக, பைத்தியங்களாக சாலைகளில் பார்க்கிறோம்.

இப்படியாக 24 கதைகள் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன் நம்பி. ஒரு கதை கிடைக்காததால் அது தொகுப்பில் இல்லை.

***





கிருஷ்ணன் நம்பி அவர் நண்பர்களான கி. ராஜநாராயணனுக்கும், சுந்தர ராமசாமிக்கும், மௌனிக்கும் எழுதியுள்ள கடிதங்கள் பொக்கிஷம் என்று சொல்லத்தக்கவை. இன்றைய காலகட்டத்தில் இப்படியெல்லாம் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்வார்கள் என்பதற்கான எந்த ருசுவும் இப்போது இல்லை. பிரியமும் அன்பும் இலக்கியத்தின் மீதான தீராக் காதலும் மிகுந்த கடிதங்கள் அவை. அந்தக் கடிதங்களுக்கு எப்படியெல்லாம் பதில் வந்திருக்கும் என்று யோசிப்பது சுவாரசியமாக இருந்தது.

***

காலச்சுவடு வெளியீடான ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுப்பின் இறுதியில் சுந்தர ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை தமிழ் தெரிந்த அத்தனை பேரும் படிக்க வேண்டிய ஒன்று. எழுத்தாளர்களாக விரும்பிய கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி என்ற இரண்டு இளைஞர்கள் எப்படியெல்லாம் இந்த சமூகத்தை எதிர்கொண்டார்கள் என்பதை சு.ரா. அற்புதமாக எழுதியிருக்கிறார். ‘கலை இலக்கியத் துறையையோ அல்லது வருமானத்திற்கு உத்தரவாதமில்லாத வேறு துறையையோ தங்கள் ரசனை காரணமாகத் தேர்வு செய்ய நேர்ந்து விடும் இளம் வயதினருக்கு இந்திய வாழ்க்கையும் அதிலும் கூடுதலாக நம் தமிழ் வாழ்க்கையும் அளித்து வரும் சோதனைகள் மிகக் கடுமையானவை. எங்கள் இலக்கிய ஈடுபாடுகள் காரணமாக எனக்கும் நம்பிக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளும் அவற்றால் விளைந்த சங்கடங்களும் மிகுந்த ஒற்றுமை கொண்டவை. இதனால் எங்கள் பிணைப்பு மேலும் நெருங்கிற்று. கல்வியைத் தொடர்வதில் வெறுப்பு; லௌகீகத் திறன்களை வளர்த்துக் கொள்வதில் உதாசீனம்; எதிர்காலம் பற்றிய கவலைகள்; இலக்கியம் தவிர பற்றுக்கோடு ஏதுமில்லை என்ற கற்பனை; பச்சாதாபம்; தாழ்வு மனப்பான்மை போன்ற பலவும் எங்களிடம் பொதுவாக இருந்தன. இவை தவிர மொழிக்குள் கொண்டு வரச் சங்கடமான மனச்சிக்கல்கள் எவ்வளவோ. இவற்றால் ஏற்பட்ட நிலைகுலைவுகளை அந்த வயதில் விவேகத்துடன் மதிப்பிடவும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில் எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் குடும்பம், சுற்றம், சமூகம் ஆகிய தளங்களிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல்களிலிருந்து நிமிரவும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் மனச்சோர்விலிருந்து மீண்டு வாழ்வுக்குள் ஊன்றவும் எங்கள் உறவு உதவிற்று.’

இதன்பிறகு அந்தக் கட்டுரையில் இளம் எழுத்தாளர்களுக்கு எதிராகக் குடும்பவும் சமூகமும் தொடுக்கும் கடுமையான எதிர்ப்பு பற்றி விரிவாகப் பேசுகிறார் சு.ரா. எதிர்ப்பு அல்ல, போர் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறார் அவர். தமிழ்ச் சமூகத்தைப் போல் எழுத்தாளனை முழுமையாகப் புறக்கணிக்கும் ஒரு சமூகம் தான் அறிந்த வரையில் வேறு எங்குமே இல்லை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தப் பின்னணியில்தான் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.


அரை மணி நேர அற்புதம் - கால சுப்ரமணியம்


அரை மணி நேர அற்புதம் -  கால சுப்ரமணியம்
--------------------------------------
ஆற்றின் கழிமுகத் தேக்கம் -
வலப்புறக்கரையில்
அடர்ந்து சடையும் மரங்களின் பசுமை
இடப்புறத்தில்
பழங்கால மாளிகையொன்றின் முதிர்ந்த வெண்மை.
விரிந்து பரந்து ‘திரும்பிப் பார்’ என்று அதட்டும் கடல்
இடையில் ஓர் உடைந்த பாலம்
மேற்கே, அஸ்தகிரிக்குள்
ஆழ்ந்து கொண்டிருக்கும் சூரியன்
வானம் முழுக்க முகில் பட்டாளம்.
*
கரையோரமாக வளைந்து குனிந்து
கிளிஞ்சல்கள் பொறுக்கி வந்த இருவர்
பாலத்தருகில் கொட்டிவைக்கப் பட்டிருந்த
கிளிஞ்சல் குவியலின் எதிரே வந்து
திகைத்து நிற்கின்றனர்.
கையிலிருந்ததை எறிந்துவிட்டுச்
சலிப்புடன் ஒருவன் செல்ல
ஆவல் மீதூரக் குவியலைக்
கிளறிப் பார்க்கிறான் மற்றவன்.
இந்த இடத்திலும்
டிரான்ஸ்சிஸ்டர் வைத்துத் திருகிக் கொண்டு
எவ்வகைப்பட்டவர் இவர் என்ற வெளிப்படை துலங்க
தூரத்தில் இன்னும் ஓர் முதியவர்.
கடல் எதிரே அமர்ந்து
கண்ணை மூடித் தியானித்திருக்கும் ஒருவரைத் தாண்டி
ஒண்ட வெட்டிய தலைமுடியுடன்
வெள்ளையரைக்கால் சட்டை அணிந்து
எதையும் நோக்காது
நேராய் நிமிர்ந்து வேகமாய் நடந்து
பயிற்சி செய்கிறார் வேறொருவர்.
*
மரண காலத்தும் தன் தானச் சிறப்பையே
தானமாய் அளித்தானாம் கர்ணன் - சூரியகுமாரன்.
இங்கே, சூரியனிலும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
உலகிலேயே அழகான இடங்களில் இதுவுமொன்றென்று
யாரோ ஒரு வெளிநாட்டுக்காரன் எழுதியதன்
நிஜமும் பிறந்தது.
(உலகிலேயே ஓர் அபூர்வமான மனிதர்
நடந்ததும்கூட இங்கேதான் என்றும் ஓர் எண்ணம்
இடையிட்டு மறைந்தது)
அலை மோதிக் கோஷிக்கும் கடலின் அகண்டம்.
கழிமுக (கழிவு) நீரில்
கண்ணைப் பறித்து மனதைத் துடைக்கும்
தகத்தகாய வெளிச்சம்
முகில்களில் ரணகளம்.
மரப் பசுஞ் செறிவு நிழலுருக் கொண்டு
பின்னணி விளிம்பிடப்
பொன்னாய்க் கொதிக்கும் சூரியன் -
கனவையளிக்கும் மாளிகை மங்கல்.
அந்தி மயங்கலில் கழிமுக நீரில் கட்டுமரத்தில்
வலை வீசித் திரியும் கருத்த உருவங்கள்.
அங்காங்கே தெரியும்
மேட்டிலும் - குறைநீர் வெளியிலும் -
இரை தேடித் தேடி
நின்று நகரும் கடற்பறவைகள்.
பறவைகள் இந்த அழகை அறியாது;
அழகில் அவையும் ஒன்றாயிருப்பதால் அவசியமுமில்லை
(அபத்தம் அபத்தம் என்றது மனசு)
காரியமே குறியாய் வலை விரித்து
தேடி நகரும் இந்த உழைப்பாளிகள் -
இயற்கையுடன் இணைந்து இழையும்
அபேத நிலையா?
இயற்கையை உணர வாய்ப்பில்லாமல்
தனிப்பட்டு விட்ட கொடுமையா?....
‘அரேபியாவைச் சித்தரிக்க
ஒரு அயல்நாட்டான் விரும்பினால்
மணல் வெளிப் பாலையை
தூரத்து மேட்டில் அசைந்து நகரும்
ஒட்டக வரிசையை
விவரித்த பின்பே தன்
விஷயத்துக்கு வருவான் -
அராபியனோ
நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுவான்.’
மனதில் எழுந்து மறைந்த
கொஞ்ச நேர எண்ணச் சிதறல்.
பின், காட்சி மட்டுமே.
*
அழகும் அமைதியும்
எந்த நேரமும் உடையது இவ்விடம், எனினும்
அரை மணி நேரத்தில்
இவ்வதிசயம் நிகழ்ந்து முடிந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
பறவைகள் தங்கள் கூட்டில் அடையும்.
தொழிலை முடித்துக் கொண்டு
அவர்கள் திரும்பி விடுவார்கள்.
*
கடற்கரையில் அவ் அகால வேளையில்
யாருமேயில்லை.
உருண்டு புரளும் கடல் மட்டும்
வழக்கம் போல்
எதையோ சொல்லிச் சலித்துக் கொண்டது.
*
கனவு, 1990.
*
முன்னுரையில் பிரமிள்......
கவிதையில் அடையாளம் காட்டப்படாவிட்டாலும், தியாஸிபிக்கல் ஸொஸைட்டி கடலைச் சந்திக்கும் இடமான அடையாறு முகத்துவாரத்திற்கு (என்னுடன்) கவிஞர் வந்திருந்த ஒரு சந்தர்ப்பம்தான், ‘அரைமணி நேர அற்புதம்’ என்ற கவிதையாக உருவெடுத்து இருக்கிறது. இந்த இடத்தின் கடற்கரையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி உலவியவர் என்ற தகவல், கவிதையில் எவ்வித ஆடம்பரமும் அற்ற சங்கேத மொழியில் பிறந்து, கவிதை தீற்றுகிற இயற்கையினது பேருருவுடன் இணைகிறது. நாரணோ ஜெயராமனின் வேலி மீறிய கிளை கவிதைத் தொகுப்பில் உள்ள ‘அடையாற்றுப் பறவை’, இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. சங்கேதமாக ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் குறிப்பிடுவதாக நாரணோ ஜெயராமன் என்னிடம் கூறியிருந்திராவிட்டால், இந்த ‘அடையாற்றுப் பறவை’ யாரெவர் என்பது எனக்கு (பிறர்க்கு?) தெரிந்திராது. சங்கேதம் என்பது தடயத்தை அளித்தாக வேண்டும். நல்லவேளையாக, ‘அரைமணி நேர அற்புதம்’மில் தோன்றும் கிருஷ்ணமூர்த்தி, கால சுப்ரமணியத்தின் தீர்மானப் பொருளல்லர். இது என்ற சுட்டல் அற்ற பேருருவின் அம்சங்களுள், ‘இடை விட்டு’ மறைபவராகவே கிருஷ்ணமூர்த்தி இக்கவிதையில் வருகிறார். எனவே, இவரைத்தான் கவிதையின் அந்த வரிகள் குறிப்பிடுகின்றன என்று அறியவேண்டிய அவசியத்தில் கவிதை தேங்கவில்லை. தமக்கு முக்கியத்வம் தரக்கூடாது என்று கிருஷ்ணமூர்த்தி மிக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பதும், அவரது செய்தியின் அத்திவாரமே இதுதான் என்பதும், எவ்வளவுக்கு இந்தக் கவிதையை எழுதிய மனசால் உணரப்பட்டிருக்கின்றன என்று இது காட்டுகிறது (1993)
LikeComment


திரிநிலை
---------------
மேய்ந்து கொண்டிருந்த
எருமையின் மீது
கரிச்சான் அமர்ந்து
தோரணையாகக்
குரல் எழுப்பியது.
வாலால் அடிக்க
எருமை
வாகு பார்க்கவே
பக்கத்து மரத்துக்குப்
பறந்து சென்றது.
எருமை அதையே
ஏறிட்டுப் பார்த்து
மேயாமல் நிற்பதை
மேய்ப்பவன் கண்டு
மனிதத்தைக் களைந்து
மிருகமாகித்
தடியால் அடித்தான்.
பறவை மரத்தின் மேல்
பார்த்திருந்தது.
•
(1975) மானுடம், 1980.
வீடு (தொகுப்பு - பால்ராஜ் கென்னடி, அன்னம் வெளியீடு), 1986.
குமுதம், 30.11.1995.
முன்னுரையில் பிரமிள் கணிப்பு,,,,,,
‘திரிநிலை’ கவிதை 1975-ல் எழுதப்பட்டிருக்கிறது; இதே காலகட்டத்தியவை, ‘ஐந்து கவிதைகள்’-இன் முன் நான்கு பத்திகள் மற்றும் ‘சுரணை’. ‘ஐந்து கவிதை’களின் வீர்யம் சற்றே குறைந்ததாக இருந்தாலும், விசேடமானது. இவற்றுள் ‘திரிநிலை’ கவிதையுடனேயே கால சுப்ரமணியத்தின் கவிதைகள் எனக்குப் பரிச்சயமாயின என்று ஞாபகம். (பிரமிளின் ‘நீலம்’ சிறுகதை வெளிவந்த ‘வீடு’ தொகுப்பில் ‘திரிநிலை’யும் இருந்ததால் அப்போது பார்த்திருக்கலாம்-கா.சு.) இக்கவிதையில் பறவை, மிருகம், மனிதன் என்ற மூன்று உயிரம்சங்களின் ஒன்றிணைப்பு, எனிமையான அதேசமயத்தில் ஆழ்ந்து ஓடத்தக்க பொருளம்சத்தை நிர்ணயிக்கிறது. இந்த ஒன்றிணைப்பில், மனிதனின் பங்கு மனிதத் தன்மையைப் பேணுவதினின்றும் பிசகுவதாகக் கவிதை கூறுகிறது. சற்றே சாதுர்யமாகப் பின்பகுதி இருந்திருந்தால், இதுவே அவரது மிகச்சிறந்த கவிதைகளுள் இடம் பிடித்திருக்கும். ‘சுரணை’யில் இந்தச் சாதுர்யம் மட்டும், அதுவும் கவித்வமாக உள்ளோட்டம் பெறாத மேல்தள வெளியீடாக வந்துவிட்டது. ‘ஐந்து கவிதைகள்’, பார்த்தன்-பார்த்தசாரதிப் பிரதிமைகளை, நவீனக்களத்தில் லகுவான பரிஹாஸத்துக்கு உடன்படுத்திப் பேசவைக்கும் கவிதை. பேச்சின் லாவகமும் கவித்துவ வீர்யமும் இணைகின்றன இதில். இந்தக் கவிதைகளிலேயே கால சுப்ரமணியத்தின் சுயமான ஆம்சங்கள் பிறந்துவிட்டன - குறிப்பாகத் ‘திரிநிலை’யில். (1993)

எதிர் முரண்
------------------
இதோ,
நீரிலிருந்து எழுகிறது நெருப்பு!
விரக்திப் பாதாளத்தில்
நம்பிக்கை நூலேணி.
சோம்பலின் உச்சியில்
சுறுசுறுப்பின் மின்னல்.
சலனமற்ற ஓய்வின் நரம்புகளில்
செயல் துடிப்பின் நாதம்.
என் கவிதைகள்கூட
தாங்கமுடியாத
வறட்சியில்தான்
பயிராகின்றன!
எனக்கே சொந்தமான
உணர்வுகளிலிருந்து
ஓர் அந்நியன்
எழுந்து நின்று
சிரிக்கிறான்! (1984) தீட்சண்யம், 1986.
புனர் வடிவங்கள்
-------------------------
1.
எதையோ சொல்ல நினைத்தேன்.
நினைக்கையிலேயே பாதி மறந்தது -
மறந்ததைத் தேடியுழன்று மீதியும் இழந்தேன்.
இரண்டையும் எண்ணித் திகைக்கையில்
புலன்கள் தகர்ந்தன.
தகர்ந்ததன் சாரம் மூளையில் படர
செழித்து முகிழ்ந்தது ஒரு மலர்.
மலர் வெடித்து மகரந்தம் சிந்தியும்
வண்டுகளற்றதால்
தன்மகரந்தச் சேர்க்கையே சாத்தியமாயிற்று.
சேர்க்கையில் கிடைத்த விதை
வேறு நிலமற்று
அதிலேயே விழுந்து முளைத்தது.
வேர் பிரிந்து
பாதம் பற்றி
ஆழம் சென்று நிலைத்தது.
முளைத்த செடி
பின்னும் மரமாயிற்று.
மரக்கிளைகள்
அதன் தோள்களைத் துளைத்துக்
கைகளாய் அலைந்தன.
அவ்வலைதலில் சிக்கிய
இரையிலொன்று நீயானாய்.
உன் ரத்தம் எனக்கு உயிர் கொடுக்கும்.
கொடுத்துமென்ன?
நானோ தாவரம்.
பறவைகளின் சத்தமின்றி
பூக்களின் வாசனையற்று
வித்துமின்றி நிற்கிறேன் நான்.
இரை தேடும் தவிப்பே மிச்சம்.
2.
நான் சொல்ல வந்தது
முன்பே சொல்லிச் சலித்ததே.
இருந்தும் உனக்கு உணர்வூட்டவில்லை -
நெருப்பில் நீறுபூத்திருந்தது.
எப்போதோ வீசிய காற்றில் அது
சுடர்விட்டுப் பற்றியெரிந்தது.
அழுக்குகள்
அதற்கு ஆகாரமாயின.
ஆகாரம் தீர்ந்த பின்னும்
அகோரப் பசி தீராமல்
முதலில் என்னை விழுங்கியது.
இன்னும் பசியடங்காமல்
தன்னையும் விழுங்க,
விழுங்கியதின் கழிவாய்ப்
புனர்ஜன்மம் பெற்றோம்.
மீண்டும் பழசையே சொல்லவருகிறேன்
நீயோ கேட்க மறுக்கிறாய்.
செவிட்டுக் காதில் சொல்வதே
எனக்கு விதித்த சாபம்.
கேட்காமல் போவது
உனக்குக் கிடைத்த சாபம்.
(1982) லயம், 1986.

முன்னுரையில் பிரமிள்,,,,,,,
இயற்கையின் சுயாதீனப் பிரபஞ்சமே, கால சுப்ரமணியத்தின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தைப் பேணவும் இதனுடன் இணையவும் மாட்டாத மனிதன், அவரால் ஓர் அந்நியனாக இனம் காட்டப்படுகிறான். கவிஞர், தம்மீதே இந்த நிலையை ஏற்றிக்காட்டுகிற உத்தியின்மூலம் ஒருபுறம், பாசாங்கற்ற உள் உறுதியை அவரது கவிதைகள் பெறுகின்றன. மறுபுறம், வெகுசூசகமாகத் தூரத்து டேஞ்சர் சிக்னல்போல, ஒவ்வொரு மனிதனையும் உணர்வுபூர்வமாகப் பொறுப்பேற்று, மேற்படி பேணல்-இணைதலை அநுசரிக்கும்படி எச்சரிப்பது, உள்ளர்த்தம் பெறுகிறது. இதற்காக, ஆழ்ந்து கனம்கொண்டு ஒலிக்கும் ஆதங்கக் குரலை மீறி, ஆத்திரம் என்கிற rancor நிலைக்குக் கவிதையைக் கொண்டுபோகிற ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது, உறுதியின் - கருத்தியல் கண்காணிப்பின் - விளைவு. இந்த உறுதியும் கண்காணிப்பும் இல்லாதவர்களுக்கு, ஆத்திரம் ஓர் அலிபி. ஆனால், கவித்வத்துக்கு அது டி.பி. இது கட்சிவாதிகளிடம் மட்டுமின்றி, சிலவேளை, அதுவும் இயற்கைக்கு ஏற்படும் கேடு பற்றிப் பேசவரும் சிறந்த ஒரு கவிஞரிடம்கூடச் சமீபத்தில் தலைகாட்டிவிட்டு, நல்லவேளையாக மறைந்துவிட்டது.(1993)

ஆரண்யம்
----------------
சுதந்திரத்துடன் கும்மாளமிட்டுக்
குதித்து வழிந்தது அருவி.
‘நீ பார்த்ததே என் பவித்திரத்துக்குப் பங்கம்’ என்றது.
ஏறும்போது மூச்சிரைக்கவைத்து
இறங்கும்போது வழுக்கிவிட்டுக்
குறும்பு செய்தன பாறைகள்.
கண்காணாமல் இருந்து அதட்டலிட்டன மிருகங்கள்.
கால்பட்டதும் தூளாகித் திடுக்கிடவைத்தன சுள்ளிகள்.
இருட்டின் நாள்பட்ட சிறைவாசத்தில்
சோகைபிடித்து
பழுத்திருந்தது வெளிச்சம்.
என் நிழல் கண்டும் மருளாமல்
வாலசைத்து வெகுளியாய்ப் பார்த்தன
மடுவில் நீந்திய மீன்கள்.
வெகுநாள் ஆசையில் இங்கு வந்தேன் -
அடுத்த காலடியைப் பார்த்து வைக்கும்படி
கூச வைத்தது கானகம்.
‘ஏன் வந்தாய் ஏன் வந்தாய்’ என ஓலமிட்டுக்
குறுக்கே பாய்ந்தன பறவைகள்.
அமைதியின் பயங்கரம்
ஊற்றுக்கண் திறந்து கொப்பளிக்க
சௌந்தர்யத்தின் தெவிட்டலில்
திசை தெரியாமல் திக்குமுக்காடித்
திரும்பினால் போதுமென்று தவித்தேன்.
‘என்ன திருப்திதானே?’ என
வேண்டாத விருந்தாளியை
ஒப்புக்கு நலம் விசாரித்து,
‘எப்போது திரும்பப் போகிறாய்?’ என்று
காத்திருந்தது மௌனமாய்க் கானகம்.
(1979) படிமம், 1981. & கணையாழி, 1982.y · Yesterday at 10:12am
ஒன்றிரண்டாக...
-------------------------
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க
இன்றைக்கும் முடியாது போலிருக்கிறது...
*
ஒன்றிரண்டாகத்
தீபத்தின் சுடரை நக்கிக்
கருகும் விட்டில்கள்
மின் விளக்கின் கண்ணாடிச் சூட்டில்
இதமாய் ஒற்றிக் கொண்டன-
பெருத்தும் விட்டன என்று
சம்பந்தமில்லாமல் ஓர் அளவீடு...

பக்கத்தில் பூனை விளையாடுகிறது
பக்கங்கள் புரண்டுகொண்டிருக்கின்றன.
சடசடத்து வந்து வீழ்கிறது ஒரு பூச்சி.
(தயிர் சிலுப்பி என்பார்கள் இங்கே) அதைத்
தாவிப் பிடித்த பூனை
மறைவிடம் பார்த்துச் சென்றது கொறிக்க..
*
மனசுக்குள் துள்ளி விழுந்த இரைகளை
தின்று தீர்க்காமல்
பகுத்தாராய்கிறது மனது.
மனம் எதையோ நினைக்க
நினைவு வேறெதெற்கோ உயிர்கொடுக்கிறது
*
இன்று காலை
முகம் தெரியா ஒருவன்
ரொம்பச் சொந்தமாக முதுகு தொட்டு
ஒரு பெயரையும் சொல்லிக் கூப்பிட்டான்.
திரும்பியதும் முகம் மாற
மன்னிப்புக் கேட்டான்.
என்னில் எது அவனுக்கு
இன்னொருவனை ஞாபகமாக்கியது?
முன்பு அப்பாவும் இப்படித்தான்
எதையோ என்னில் பார்த்திருக்கிறார்.
அம்மாவும் அப்படித்தானென்று நம்ப மனதில்லை
என்றாலும் உண்மை அதுவாகவே இருக்கும்..
தன் மறுசாயலைச் சகோதரன் காண
சகோதரியோ நெட்டுயிர்த்திருப்பாள்.
எனக்கு நானே நானாயில்லாதது போல்
மற்றவர்க்கும் வேறானது எப்படி?...
*
மின்விளக்கினருகில் தொங்க விடப்படுகிறது
எண்ணெயில் தோய்த்த செய்தித்தாள்.
இதனை ஊடுருவிய ஒளி வயோதிகமடைந்து
மூலைச்சுவரில் விழுகிறது.
ஒரு பக்கத்துச் செய்திகள்
அத்துமீறி அடுத்த பக்கத்தில்
தலைகீழாய்த் தெரிகின்றன.
இரண்டு பக்கமுமிருந்து
ஒளியை நோக்கிப் பாய்ந்து
சுடரில் கருகுவதற்கு பதிலாக
செய்தித்தாள் பிசுக்கில் சிக்கி
ஏராளமாய்ச் சாகின்றன பூச்சிகள்.
*
முழுசையும் தின்று தீர்ந்ததா
மீதம் விட்டு வந்ததா என்று தெரியாமல்
திரும்பி வந்த பூனை
அருகில் விளையாடுகிறது..
*
படித்து முடிக்காவிட்டாலும்
இந்தப் புத்தகத்தை நாளை
திரும்பிக் கொடுத்தாக வேண்டும்.
(1990) நவீன கவிதை, 1994.
•••
முன்னுரையில் பிரமிள்,,,,,,,
1975-ல் எழுதப்பட்ட ‘திரிநிலை’ கவிதையில், கரிச்சான் ‘தோரணையாக’ குரலெழுப்புவதாகக் கூறித் தமது பார்வையுடன் நம்மை எளிதாக இணைக்கும் கவிஞர், 1990-ன் ‘ஒன்றிரண்டாக’ என்ற கவிதையில், இதேவகை எளிமை மூலம் மிகவும் ஆழமான விசாரணைத்தளங்களுக்கு நம்மை ஈர்த்துச் செல்கிறார். ‘ஒன்றிரண்டாக’ என்ற கவிதை, புத்தகவாசிப்பில் கவிஞர் ஈடுபட்டிருக்கும் போது அவருக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கிறவற்றைப் பதிவுசெய்கிறது: ஓர் இரையைப் பிடிக்கும் பூனையின் பிரதிமையில், மனசின் இரைபிடிப்புகள் எதிரொலிக்கின்றன. கவிதை முடிவில், புத்தகத்தைப் படித்து முடிக்காவிட்டாலும் நாளைக்குத் திருப்பித்தரவேண்டும் என்ற கூற்று, நம்மை அதிரவைக்குமளவுக்கு, கவிதை நம்மை ஓர் ஆழ்பொருள் நிலையில் இழுத்துச் செல்கிறது. இங்கே, புத்தகம் வாழ்க்கையாகவும் அதைத் திருப்பித்தருதல் மரணமாகவும் பரிபாஷார்த்தம் பெறுகின்றன. ‘புத்தகம் இப்போதே படித்து முடிக்கப்படவேண்டும்’ என்கிற ஒரு தீவிரநிலை, கிருஷ்ணமூர்த்தியின் Urgency of Change, Book of Life என்ற தலைப்புகளைக்கூட எதிரொலிப்பதாகக் கொள்ள இட முண்டு.
1979-ன் ‘ஆரண்யம்’ கவிதையும் 1990-ன் ‘ஒன்றிரண்டாக’ கவிதையும் ஒப்பிடத்தக்கன. ‘ஆரண்யம்’-இல் சந்திக்கப் படுகிற இயற்கையின் அமானுஷ்ய நிலையிலும், ‘ஒன்றிரண்டாக’வில் சந்திக்கப்படுகிற புத்தகவாசிப்பு நிலையிலும், அவதான கதியின் ஒற்றுமையைக் காணலாம். இரண்டுமே, சொல்லப் பட்டதையும் தாண்டிய பொருளம்சங்களை ஜ்வலிப்பவை. இதில், ‘ஒன்றிரண்டாக’ ஓர் அரிய சாதனை. (1993)

தோற்றம்
--------------
வானம் கவிந்து பூமியைக் கவ்வ
பூமியெழுந்து வானில் புதைகிறது.
அலையலையாய்த் தாவும் நதி
தன் ஊற்றை நோக்கிச் சுருள்கிறது.
ஜீரணிக்கும் தன் ஓயாக் கிரியையில்
சுருங்கி விரிகிறது குடல் வலயம்.
யோனியில் ஆழ்ந்து வீர்யம் இழக்க
முயங்கிச் செல்கிறது லிங்கம்.
இருள் திரண்டு ஒளியைத் துடைக்க
ஒளியில் கரைகிறது இருள்.
ஆ! இல்லையில்லை!!
தன்னைத்தான் விழுங்கும் தணியாத தகிப்பில்
கருநெருப்பு வளையமிட்டுச்
சீறிக்கொண்டிருக்கும்
கால சர்ப்பம்!
உருமாறிப் பிறக்கவா அல்லது
உருவிழந்து மறையவா -
இந்தத் தவிப்பு?
ஒன்றிலிருந்து அநேகமாய் விரியவா?
அநேகத்திலிருந்து ஒன்றில் குறுகவா?
தொடர்பராத வட்டமாய்த்
துடித்துப் புரளும் அதன்
செதிள் உடம்பில்
தோன்றி மறையும் சொற்கள் யாவை?
துடித்துப் புரண்டு
அது எழுதிக் காட்டுவது எதனை?
நித்திய இளமையை அளித்துச்
சத்திய ஞானம் புகட்டித்
தீட்சை கொடுக்குமா?
அல்லது புயலுக்குத் தூண்டுமா?
அறிவுக் கனியைத் தின்னத் தந்து
விடுவிக்குமா?
அல்லது ஏமாற்றுமா?
பயத்தில் கட்டுண்டு
வசீகரத்தில் திளைத்து
அருகழைக்கும் ஆற்றலை
எதிர்க்க வலுவின்றி
அப்பால் கடந்தேகும்
வழியேதும் கிடைக்கலாம் என்ற
நப்பாசையும் துளிர்க்க
நெருங்கிச் சென்றால் -
சிறகு பெற்ற பாம்பாகச்
சாடிச் சுழல்கிறது காற்று.
நீலமாய் மலர்ந்து
ஓங்கார நாதமாய் விரிந்து
அதிர்ந்து சூழ்கிறது நச்சுவெளி.
பின்வாங்கவும் நினைக்காமல்
முன்னேறவும் முயலாமல்
இருப்பில் திகைத்து நிற்க -
யாரையும் விழுங்கும் நினைப்பற்று
தன்னையே விழுங்கும் இன்பவேதனையில்
வளையமிடுகிறது ஓரபோரஸ்.
வேதனை உக்கிரத்தில்
கொழுந்து விட்டெழுகிறது நெருப்பு -
தவிப்பின் எல்லையில்
திடீரென்று
சர்ப்பம் மறைந்து
புதிய ஜீவன் ஒன்று பிறக்கிறது.
திகைப்பை இழந்து
வியப்பில் நிறைய
நெருப்பில் நீந்தி விளையாடுகிறது
சாலமாண்டர்!
(1989) கனவு, 1990.

காரணம் வேறு
----------------------
டெமாக்ளிசின் கத்தி முனையாய்த்
தொங்கிப் பயமுறுத்தும் அபாயங்கள் அறியாது
அன்றாடக் கவலையில் உழலும் மனிதரின்
மொத்தப் பிரச்னைக்கும் காரணம் தேடி
தன்னை மறந்து தனித்திருந்த என்னைக்
குறுக்கிட்டது
என் குழந்தையின் குரல்:
‘என்னத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய் அப்பா?’
திடுக்கிட்டு
திகைத்து
விழிப்பைப் பெற்றேன்.
நேரம் தவறாமல் வந்து
நோட்டமிடும் பருந்தை
நினைவில் கொண்டோ
அசப்பில் கண்டோ
எச்சரிக்கையொலியை எழுப்பியது கோழி.
கூட்டுக்கு வெளியே தானியங்களைப்
பொறுக்கும் புறாக்கள் படபடத்திருக்க
உள்ளே சிலது குமுங்கிக் கொண்டிருந்தன.
மேய்ச்சலுக்குச் செல்லாத கிழட்டு எருமை
முங்கி முங்கிச் சாவதானமாய்த்
தவிட்டை
நீருடன் உழும்பிச் சவைத்தது.
மேயச் சென்றவை திரும்பும் நேரம்
ஆச்சே என்று தவித்து வழிபார்த்துத்
தாவிக் குதித்தன குட்டியும் கன்றும்.
காற்றில்
லேசாய் அசைந்து முணுமுணுக்கும்
தென்னங்கீற்றுப் பசுமைப் பரப்பில்
மூக்கைத் தீட்டிச் சிலிர்த்தது காகம்.
வெறுமையை
உமிழ்ந்து சலித்தது - அந்தப்
பிரமாண்டமான மரம் நின்ற வெளி.
தொலைவில் எழுந்து கம்பீரம் கொண்டது
நீலமலையின் பின்னணி மயக்கம்.
பருவமேகப் படர்வின் இசைவால்
முன்னதாகவே கவிந்து நின்றது
மாலை மங்கலின் மந்தகாசம்.
குழந்தையைப் பார்த்து
தயங்கி - பின்பு தயக்கம் நீங்கி,
‘இப்போதுதான் பார்க்க
ஆரம்பிக்கிறேன் கண்ணே!’
என்ற என் பதிலின் விசித்திரம் கண்டு
வியந்து கொள்கிறது குழந்தை.
விருட்சம், 1990.
முன்னுரையில் பிரமிள்,,,,,,,
‘காரணம் வேறு’ என்ற கவிதையில் ‘டெமாகளிஸின் கத்திமுனை’ எனக் கவிஞர் குறிப்பிடுவது, கிரேக்க புராண இலக்கியங்களுடன் பழகாதவர்களுக்குப் புரியாது. யமதர்ம ராஜனின் தலைக்கு மேலே, அந்தரத்தில் ஒரு கத்தி நின்று, அவன் நீதி பிசகினால் வீழ்ந்து, அவனைத் துண்டிக்கும் என்ற பிரதிமை நம்மிடமே உண்டு. ஆனால், கால சுப்ரமணியத்தின் பௌராணிகப் பிரதிமைகள், தேசவரம்புகளுக்குக் கட்டுப்படுவதில்லை. கவித்வத்தின் விஷமத்தனம் தேச வரம்புகளை மீறுவதல்லவா? உள்ளூர்ப் பிரதிமைகள்கூட அவரது கவிதைகளில் உலவாம லில்லை. ‘தோற்றம்’ கவிதையில் வரும் ‘ஓரபோரஸ்’, ‘சாலமாண்டர்’ பிரதிமைகள் எகிப்திய-கிரேக்க ரஸவாதப் பிரதிமைகளாகும். சுயவிளக்கமும் குறியீட்டுத்தன்மையும் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிராவிட்டாலும், இக்கவிதை ஒரு தைரியமான முயற்சி. (1993)
ஆதியிலே வார்த்தை இருந்தது
----------------------------------------------
எழுதுவதற்கென்று இருக்கையில் அமர்ந்ததும்
பூனைபோல் வந்தென்மேல் நேசத்துடன்
தம்மேனி தேய்கின்றன சொற்கள்.
வாசலுக்கு வெளியே காத்து நின்றவை
உரிமையோடு உள்ளே நுழைந்து
பூனைகளை விரட்டி விட்டு
சுற்றிவந்து முகர்ந்து பார்க்கின்றன.
இவைகளை அதட்டிவிட்டு
வீதியில் தேடிப் போய்
பாவப்பட்ட கழுதையை நெருங்கினால்
எட்டி உதைக்க அது கால் தூக்குகிறது.
வட்டமிடும் பறவை என்மேல்
எச்சமிட்டுப் பறந்து செல்கிறது
காட்சிசாலையின் கூண்டுக்குள் இருந்து
நான் நடுக்கம் கொள்ளக் கர்ஜித்து,
‘காட்டுக்குப் போயேன் அல்லது
என்னை விடுவித்துப் பாரேன்,’
என்கிறது சிங்கம்.
வானும் கடலும் வசப்பட வழியற்று
வீடும் வெளியும் வெறுத்துக்
கானகம் நோக்கிச் சென்றேன்.
தொலைவிலிருந்தே அதட்டிச் சிரித்து
பயங்கொள்ள வைத்தன மிருகங்கள்.
ஒளிந்திருந்து என்னைக் கவனித்து,
‘திரும்பிப் போ,’ என்று
சலித்துக்கொண்டன பறவைகள்.
லயம், 1985.
இன்றைய இரவுகள்
-----------------------------
இருள் தானே வந்து
எதையும் முணுமுணுத்ததில்லை
நான்தான் அதனில்
தூண்டிலிட்டுக் கவனித்திருப்பேன்.
மழை விசும்ப
இடி குமுற
மின்னல்கள் கணப் பிரகாசம் காட்ட
தவளைகள் கொட்டி முழக்க
எண்ணெய் மினுங்கும்
தென்னங்கீற்றிடையே
பிறை விளங்க வந்தன
அச் சௌந்தர்ய இரவுகள்.
எல்லோரும் தூங்கிய பின்
என் உலகம் விழித்தெழுந்தது.
நிலவையும் நட்சத்திரங்களையும் வைத்து
அலங்கரித்துக் கொண்டது.
*
இன்று
யாருமற்ற வீதிகளில்
தன் காலடியைத் தானே கேட்கும் பயங்கரம்.
எதையோ எதிர்பார்த்து
நடுநடுவே திடுக்கிட்டு
விழித்தெழுந்து காத்திருத்தல்...
டீயிலும் ரொட்டித் துண்டிலும்
சூடான விவாதங்களிலும்
மெதுவாகக் கழிகிறது இரவு...
எதையோ எதிர்பார்த்த
நிம்மதியின்மை.
(1981) பார்வை, 1986.
புகார்
--------
இந்த வெறுமையை என்ன செய்வது
எதை இட்டு இதை நிரப்புவது சார்?
கஞ்சா புகைத்து ஊதிட முடியுமா?
குடியாய்க் குடித்தால் மனம் அழிபடுமா?
செக்ஸுக்குள் குதித்து முக்குளிப்பதா?
மதத்தில் கட்சியில் சேர்ந்துகொண்டு
கொள்கைக்காகப் போராடலாமா?
தத்துவம் பண்ண முடியாவிட்டால்
கலையிலக்கியமாவது படைக்கலாமா?
*
மந்த மனதுகள்
அன்றாட நிகழ்வில் சலிக்கச் சலித்து
உள்ளோ புறமோ ஒரு
கிரியா ஊக்கி வேண்டியுள்ளது.
கானகம் நடுவில்
ஆழ்கடல்
ஆகாயவெளி
பாம்புகள்
மின்சார சாதனம்
இயந்திரங்கள்
எதிரிகள் இடையில்
அல்லது நெருக்கடி நிலைகளில்
சோம்பலை உதறி ஜொலிக்கும் மனது.
ஒவ்வொரு கணத்தையும்
ஒவ்வொரு நிகழ்வையும்
புதிதாய் வாழ்ந்து விழிப்புடன் இருப்பது
நடக்கிற காரியம் இல்லை அல்லவா?
ஏதுமற்ற நிலைக்குச் சில பேர் தவமிருக்கையில்
வெறுமையைத் தொலைப்பது எப்படி என்று
தவிப்பவர் மிகப் பலர்...
ஆச்சரியம் கொள்ள இதில்
என்ன இருக்கு என்கின்றீரா?
அதுவும் சரிதான்...
காலக்ரமம், 1991.
முன்னுரையில் பிரமிள்......
‘ஆதியிலே வார்த்தை இருந்தது’, ‘எதிர்முரண்’, ‘தோற்றம்’, ‘புனர்வடிவங்கள்’, ‘இன்றைய இரவுகள்’, ‘புகார்’, ‘அவநம்பிக்கை’, ‘தொடரும் பாதை’, ‘காதுகளைப் பொத்திக்கொண்டபோது’ - இவையும், மேலே பார்க்கப்பட்ட கவிதைகளைப் போன்று ஆழ்பொருளோட் டம் கொண்ட சாதனைகள்; ஒவ்வொரு விதங்களில் ஒன்றைவிட ஒன்று சிறப்புப்பெறும் கவிதைகள்.
உயிரம்சம், சொல்லாற்றல், படிமச்சிறப்பு என்ற கவித்வ அடிப்படைகளை நிறைவேற்றுவதுடன், விவேகமான அறிவார்த்தக் கட்டுக்கோப்பும் உணர்வு நுட்பமும் கொண்ட பொருளம்சங்களை வெளியிடுகிறவை இக்கவிதைகள். வெறும் வெளியீட்டுப் பண்புகளினால், கவிதையின் கட்டுக்கோப்புச் சிதறிவிடும் வகையாக எழுதுகிற பல புதிய குரல்கள் இன்று ஒலிக்கின்றன. கால சுப்ரமணியம், இவர்களுடையதைப்போலத் தமது படைப்புகள் சிதறிவிடாத வகையில் பேணக்கூடிய விஷயகனம்கொண்ட ஒருவர். (1993)
தொடரும் பாதை
--------------------------
இந்த வழியாகத்தான் நான் தினமும் போகிறேன்
அடிக்கடி வந்து பாரமேற்றிச் செல்லும் லாரிகள்
தினமும் இருமுறை மட்டும் வந்து
புழுதியைக் கிளப்பும் பஸ்கள்
இரண்டாயிரம் வருடமாய் மாற்றமேயின்றி
கடக்கு முடக்கு என்று உருளும் கட்டை வண்டிகள்...
ஜல்லியைப் பெயர்த்துப் பொக்கையைக் காட்டும்
இந்தப் பாதை வழியாகத்தான்
நான் தினமும் செல்கிறேன்.
மழையில் திரண்டு குவிந்த மணல்வெளிகளில்
சிக்கித் திணறிச் சைக்கிள் செல்லும்.
பொக்கிஷக் காப்பாய் இரண்டு புறத்திலும்
வேலிக் கருவைகள் குவிந்து
போவோர் வருவோரைப் பதம் பார்க்கத் துடிக்கும்.
உழைப்பும் கந்தையும் வேர்வையாய் அறைய
வெயிலில் கருத்துக் காலத் தழும்பேறிய
வெறுமை உமிழும் முகங்கள் நின்று
புன்னகை பூத்து குசலம் விசாரித்த பின்பே நகரும்.
சூழலும் வாழ்வும் நரகமாயுள்ள நகர வாழ்வுக்கும்
இவ் இந்திய யதார்த்தக் குறியீட்டுக்கும்
வித்யாசமற்று வரலாறு திகைக்கும்.
இங்கே நடந்து போகும்போதே
எங்கோ நடந்து நடந்து நான் ஏகும் -
என்றும் முடிவற்றுத் தொடரும் பாதை - உணர்வெழ
பழக்கப்பட்ட சாலையே எனினும்
பார்த்து - சில வேளை பதறி - நடக்கிறேன்.
உலகம் முழுதையும் நூல்களில் அடக்கி
பிரபஞ்ச உணர்வை அகத்தில் நிறைத்து
இந்த வழியாகத்தான் நான் தினமும் செல்கிறேன்.
விருட்சம், 1989.
அவநம்பிக்கை
----------------------
எத்தனையோ விதங்களில் மாறியிருந்தாலும்
உள்ளுக்குள் கிராமீயம் ஒளிந்தே திரிந்தது.
ஆயிரமாயிரம் சிதறல்கள் கண்டும்
அடியோட்டமாய்ச் சிறுநம்பிக்கை தெறித்தது.
அப்படித்தான் நானும் எண்ணியிருந்தேன்.
இன்றும்
வழக்கம்போல ஒரு வேலையின் நிமித்தம்
கிராமத்திலிருந்து நகரத்துள் நுழைந்தேன்.
சாவதானத்தை உதறி எறிந்து
அவசரகதியின் போக்கில் இணைந்தேன்.
பஸ்ஸைப் பிடிக்க விரைந்து ஏகும்
அந்த வேளையில் கூட
கண்ணில் திகைந்து அதிர்ந்தது அக்காட்சி.
பூக்களினிடையே தேனை நாடி
அலைந்து திரியும் வண்ணத்துப் பூச்சி
தெருவோரத்துச் சாக்கடை கமழும்
குப்பைக் குவியலை
மொய்த்துக் கொண்டிருந்தது!
விருட்சம், 1989
காதுகளைப் பொத்திக்கொண்டபோது...
-------------------------------------------------------
1.
சப்தம் சாகரம்
நேதி நேதி என்று
சப்தத் திரையொதுக்கும் வேதாந்தி
முடிவில் கண்டது சூன்யம்.
2.
இதற்கென்று சில ருசிகள்
பல மணங்கள்.
கோஷித்துக் குரல் எழும்பும்
குரல் வெடித்துக் கொடியாடும்.
3.
சப்தத்தை மெல்லுகையில்
பற்கள் உடைபட்டன
செவிகள் டமாரித்துக் கிழிபட்டன
நாக்குச் சுட்ட வடுக்கள் பொரிந்தன.
4.
சப்தத்தின் மத்தியில்
பிரக்ஞையற்று வாழும் முயற்சிகள்!
5.
சப்தத்தைத் தின்று
ஜீரணிக்கும் ஜீவி நான்
சப்தப் பல்லக்கைத் தூக்கிச்
சபித்துக்கொண்டு போகும்
போகியும் நானே.
இந்தப் பல்லக்கின் சுமை
தோள் தண்டில் உறுத்துகிறது.
6.
சப்தத்தின் திசையறிந்து அம்பெய்து கொல்லும்
சப்தவேதிப் பயிற்சியுள்ள தசரதனாய்...
சாமேற்று பிரியம் வைத்தவரைப்
பிரிந்து தவித்து மடிந்து போவேன்.
7.
நீதானே அன்று சப்தமிட்டாய்
இது சபதமென்றாய்...!
நானும் சாபமேற்றேன்
மௌனமானேன்.
8.
சப்தத்தைக் கவிதையாக்கினால் மட்டும்
சகிக்க முடியுமா?
மானுடம், 1980.
கால சுப்ரமணியம் கவிதைகள் (13)
---------------------------------------------
வேங்கடாசல நிலையம்
-----------------------------------
எங்கிருந்தெல்லாமோ வந்து
இங்கே பாய்கிறது
ஜனங்களின் பிரவாகம்.
மனிதருக்காக மலையின் மீது
ஏறி இறங்கி வரும் பேருந்துகள்.
காலாலேயே மலைறேறும் பக்தரின்
கையிலுள்ள பைகளை வந்து
உரிமையுடன் கவர்ந்து செல்கின்றன
பக்தியறியாத நம் மூதாதைக் குரங்ககள்.
பக்திப் பரவசக் குரல்கள் உயர்ந்து
மலைகளில் மோதி எதிரொலிக்கின்றன.
கொடைமடம் அற்ற கடவுள் சந்நிதியில்
‘வேண்டும் வேண்டும்’ என்று அரற்றும்
ஆசைகளின் அபிசேகங்கள்
உண்டியலையும் நிரப்பி வழிகின்றன.
எண்ணையும் பிசுக்கும் மினங்கும் உடம்புடன்
தட்டில் கண் ஏந்திய இடைத்தரகர்கள்
முடிவற்று நீளும் கியூவை
கர்பகிருகம் நோக்கியும்
அதை விட்டுவிலகியும்
‘நகருங்கள்! நகருங்கள்!’ என்று விரட்டுவர்.
பக்தனும் தரகனும் வேர்வையில் புழுங்க
கடவுளும் கருவறையும்
வேர்வையில் நாற
எங்கும் எதிரொலிக்கிறது இக்குரல் :
‘நகர்ந்து செல்லுங்கள்!
நகர்ந்து செல்லுங்கள்!’
பக்தி வியாபாரம்
இங்கே பலமாய் நடக்கிறது.
மனித முன்னேற்றம்
இங்கே வெறும்பேச்சாய்ப் போனது.
இரவுவேளையில்
பஸ்ஸில் திரும்பினால்
கீழே தெரியும் நகரின் விளக்குகள்
திருப்பங்களின்
சக்கரவட்டச் சுழல் கிறக்கத்தில்
நட்சத்திர வானாய்த் தோன்றும் அற்புதம்!
நகரின் பெட்டிக் கடையோரங்களில்
விட்டெறியும் பழத்தொலிகளுக்காய்
காத்து நிற்கும் மாடுகள்.
வீதிகளின் இருட்டோரங்களில் இருந்து
சிறுவர்களைத் தூதுவிட்டு
உடற் பசிக்கு பேரம் பேசும் உருவங்கள்.
எதற்கும் ஒரு விலையுண்டு இங்கே!
விலைமதிப்பற்றவை
மலையின் தன்மையும்
கோட்டை மதில்போல் தோன்றும்
மலைப்பாறை வரிசையும்!
நாலாத்திசைகளிலும் எழுந்து
மனிதர்களை பரிகசித்து
உள்ளத்தை உருக்கித்
திரும்ப வார்த்தெடுக்கிறது
கண்காணாத
கோயில்மணிகளின் நாதம்!
தீட்சண்யம், 1986.

படிப்பு
----------
படிப்பதென்பது சிரமமான காரியம்தான்.
படித்தால் அறிவு வருகிறது
எதையும் யோசிக்க வைக்கிறது.
மற்றவர்களுடன்
எரிச்சலடைய வேண்டியிருக்கிறது
பிழைக்கத்தெரியாதவனாகிறான்
வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு
உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான்.
கண்களில் தீட்சண்யம் மங்கி
கண்ணாடி போடுகிறான்.
வேலைகளைத் தட்டிக் கழித்து
அவசரமாய் மேய்ந்து
தூக்கமில்லாமல் அசைபோடுகிறான்.
மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும்
கனத்த புத்தகங்கள்
மந்திர எழுத்துகள்
இவனுக்குச் சாதாரணமாகின்றன.
முகம் கடுத்து தலை நரைக்கும்
வழுக்கையும் விழும்
நெற்றியில் கோடிழுக்கும்.
போதைவஸ்து வேறு தேவையில்லை
விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான்
மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை
எண்ணிச் சிரிக்கிறான்.
படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப்
படாதபாடு படுவான்
அவர்கள் சொல்வதைத்
தனதாகப் பாவித்துக் கொள்வான்
சுயமிழப்பான்
வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு
உயிரையும் விடுவான்.
படிப்பதைவிட ஆறறிவுக்கு
வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன?
கணையாழி, ஜனவரி 1979.
கோடை
-------------
மின் விசிறியோ
கானலின் நீறை வீசிக் கிளறியது.
மொட்டை மாடிகளில் கைவிசிறிகள்
அடிக்கடி எழுந்து எரிச்சலைக் கொட்டின.
குடிசை வாசலில் வீதியோரங்களில்
மனித யந்திரங்கள்
புழுங்கும் பிணங்களாய் உறங்கின.
ஒரு கணம்
உயிர் தொற்றி நின்ற சிசுக்குரல் ஒன்று
அலறி ஆட்சேபித்தது.
பின்
பெற்றோர் அதட்டிலில் திரும்பத் தூங்கியது.
(1983)
தீப்புயல்
-------------
கடல் நடுவே
அனுபவிக்க ஆளற்றுக்
கொட்டிக் கிடக்கிறது இயற்கை.
ஏறெடுத்துப் பாராத உழைப்பை
ஓய்வெடுத்த தினவு
மோதிச் சிதைத்தது.
அறிந்தும் அறியாத
எத்தனையோ சக்திகள்
மூளையில் பாய்ந்து
வன்மம் கிளப்பின.
இனப் புயல் வீசி
உடல் மரங்கள் பேதமற்று
முறிந்து வீழ்ந்தன.
மனிதாபிமானக் கடலின்
கரைமீறி வந்த திமிங்கல வெறிகள்
களியாடித் தீர்ந்தன.
மனது கலங்க
வீறிட்டெழுந்தன குரல்கள்.
பிரளயத் தீயின் முடிவில்
கருகிப் புகைந்தது நம்பிக்கை.
இனி இழப்பதற்கு ஏதுமற்ற
வைராக்கியம் வெடித்துப்
பற்றவைத்தது தீயை.
(1983) ஞானரதம், 1985.
கால சுப்ரமணியம்
--------------------------
ஏமாற்றும் நிழல்கள்
-----------------------------
சுவரில் பறந்த பூச்சியின் நிழலைப்
பிடிக்கப் பார்த்து ஏமாந்த பல்லி
பின் - அசையாமல் கிடந்து
பூச்சி - அருகில் வந்ததும்
சாடி - பற்றிக்கொண்டது.
நானோ - நிஜங்களைத் தேடி
நிழல்களை மறுவிச்
சாதித்துவிட்டதாய்த்
தருக்கித் திரிந்தேன்.
இன்று - நிழல்களின் கருவினுள்
ஏமாற்றச் சிசுக்கள்.
(1984)
யாளி
---------
இன்றென் கனவில்
தன் புராண காலத் தூக்கம் கலைந்து
கொட்டாவி விட்டெழுந்தது ஓர் யாளி.
நீறு பூத்த எரிமலைக் குகையாய்
ஜொலித்த விழிகளில்
ஏளனம் தெரிந்தது.
தந்தங்கள் அசைத்து நடந்து வருகையில்
முதுமையின் தளர்ச்சி பிறந்தது.
‘புசித்துப் பல யுகங்களாச்சு!
நரமாமிச பட்சணி நான், வா!’ என்றது.
பயமற்ற பரவசத்துடன், ‘நீ
பட்சிப்பது எனக்குப் பாக்கியம்,’
என்று நெருங்கினேன்.
‘உன்னைக் கொல்ல வலுவில்லை
என்ற நினைப்பா?’ எனக்
கர்ஜித்த யாளி கடைசியில் இருமி நின்றது.
‘கனவில் வந்த
கற்பனையின் பிரத்தியட்சமே!
உன்னை என்னால் வெல்ல முடியாது
நீயும் என்னைக் கொல்ல இயலாது,’
என்று நான் சிநேகிதம் பாராட்ட,
நின்று யோசித்துப் பின்
அசுவாரஸ்யமாய் ஒரு கொட்டாவி விட்டு
மறைந்து போனது யாளி.
(1984) ஞானரதம், 1985.
ஜாலம்
-----------
பெயர் தெரியாத ஒரு மரம்
மனிதக் கரங்களால் விரிந்த கிளைகள்
பசுமை கொழிக்கும் இலைகள்.
பூக்களற்று கனிகளுமற்று
வனர்ப்புத் திமிறும் இனம் விதவைக் கோலம்.
அப்போதுதான் பறந்து வந்து
கிளையில் அமர்ந்தது ஒரு பறவை
பருவம் துடைத்து
காட்சி மறைத்து
சிலிர்க்க எழுந்தது கானம்.
பூக்கள் மலர்ந்து
கனிகள் குலுங்க
திகைத்து நின்றது மனசு.
கணையாழி, 1984.
அருவிக்கரை ரகசியம்
---------------------------------
அந்தக் கானகத்து அருவியில்
குளித்தது ஒருமுறைதான் -
ஆனால் அதன்
ஓங்கார நாதம் காதில் வழிய
தெறிக்கும் நீர்த் துமிகளில் உடல் நனைய
என்றென்றும்
அந்த அருவிக் கரையில்
நின்றிருப்பதாகவே உணர்கிறேன்.
மன அருவியில் குளித்தவருக்குத்தான்
இதன் பரமரகசியம் புரியும்.
(1988)
கால சுப்ரமணியம் கவிதைகள் (14)
---------------------------------------------------
பிழை திருத்தம்
-----------------------
வீசி எறிந்த கல்
குறியிடம் பாய்ந்தது.
இன்னும் கொஞ்ச தூரமே இருக்க
விசையற்று வீழ்ந்தது.
நல்ல வேளை-
இலக்கை அடைந்திருந்தாலும்
தள்ளியே பட்டிருக்கும்-
என்றாலும்
இப்போது வீம்பு பேசலாம்.
விட்ட முதல் கணமே
போதா விசையும்
பிழைத்த குறியும்
கையும் கண்ணும் உணர்ந்தன.
மீண்டும் முயற்சிக்கப்படும் என
உணராத குறியோ
திமிராய் நின்றது.
(1983) லயம், 1985.
மனப்பாலை
------------------
வெகு நாட்களுக்குப் பின்
பெய்தது மழை.
உனக்குள் ஏற்பட்ட
ஊற்றின் சிலிர்ப்பு
எனக்கும் அனுபவமாகிறது.
அவனோ
மழையின் சகதிப் பிசுபிசுப்பில்
மனம் சுளித்து
எப்போது வானம்
வெளிவாங்கும் என்று
ஏங்கிக் தவித்து
வெயிலின் உஷ்ணம்
தாக்கும் வேளைக்குத்
தவமிருக்கிறான்.
அவன் தொழிலுக்குத் தேவை
கானலின் வறட்சி.
பசுமையின் இடையே இருக்கும் சிறுபாலை
அழகளிக்கும்
பாலையில் எங்கோ தெரியும் பசுஞ்சோலை
உயிர் கொடுக்கும்.
அவன் கண்களில்
அழகாய் விரிகிறது
சோலையற்றுப்
பேய்த்தேரோடும் மணற்பாலை.
(1983) லயம், 1985.
ஒரு புயலுக்கு முன்
------------------------------
கேட்பதற்களவாகத் தொடர்ந்து
குமுறும் இடியோசை.
பார்ப்பதற்கேற்ப மெல்லப்
பளிச்சிடும் மின் வீச்சு.
நனைவதற்கியலாமல் நிலத்தில்
நொறுங்கிட விழும் தூறல்.
மணம் பெறுவதற்கியல்பாக
இடையினக் காற்றின் கிசுகிசுப்பு.
மேகம் புணர்ந்து
மூச்சு விட மறந்து மலையில்
ஒன்றிய வெகு நீலம்.
நிறபேதத் துணை கடந்து
விளங்கும் வெளிவானம்.
கடல்மலை வாயில் கதவோரம்
மறையும் கதிர்ச் சுருக்கம்.
ஒற்றைத் தனிக்காகம் தவித்து
ஒதுங்கப் பறக்கும் சிறகோசை.
மனமே பூர்த்தி செய்ய
இடைவெளி விட்ட வானவில்.
எதிர்வரும் அழிவின் அலைவுக்காய்
அசையா வரம் பெறும் மரங்கள்...
எந்தக் கணம் வெடிக்கும்
என்று தெரியாமல்.
(1976) அன்னம்விடு தூது, 1985.
மூன்றாவது உலகம்
-----------------------------
1. பயம்
-----------
காண்பதோ கனவு
பின் பயமெதற்கு?
தூங்கும் சிங்கத்தை
தூண்டி விடு...
துரத்தி வந்தால்
நனவில் விழித்துக் கொண்டு
தப்பித்தால் போச்சு. (1984)
லயம், 1986.
2. இழப்பு
-------------
தினம் ஒரு புதுமையை அரங்கேற்றும் மனது
இன்றும் ஒரு காட்சியை நடத்தலாயிற்று...
‘அவள்’ நடித்த நாடகமாகையால்
தியேட்டர் மூளையில்
கும்பல் உணர்வுகள் நிரம்பி வழிந்தன.
நடித்த அவளை நனவுக்குக் கடத்திவர
ராவணனாய்க் கைப்பிடித்திழுத்தேன்.
கைதட்டலும் விசிலும் பறந்தன
‘ஏய்’ என்ற கூச்சல் பலத்தது.
அவசரமாக அவளை தூக்கி
அந்தரத்தில் எழுப்பினேன்.
நனவின் முனையில் கை பிடித்துத் தாவி
மேலே எம்புகையில்
அவளைச் சில கைகள்
கீழிழுத்துக் கொண்டன.
யூரிடிஸை இழந்த ஆர்பியஸாய்
நின்று திரும்பிக்
கீழே துழாவ
இருள்தான் சிக்கியது
அவளைக் காணோம்.
கணையாழி, 1984.
நீயல்ல
-----------
இந்த இலைகள் எல்லாம்
எப்போது உதிருமென்று காத்திருந்தேன்...
கரும் பச்சை பழுப்பாகி
உயிர்ச் சத்தெல்லாம் நீங்கி
காம்பையும் விடுவித்து
மெல்ல நிலம் நோக்கிக் கீழ் விழுந்து
வடக்கிருந்து காற்றடிக்கத் தெற்கோடி
கிழக்கிருந்து காற்றடிக்க மேற்கோடி
சருகாகி
மண்ணுடன் மக்கி
அடியுரமாய் ஆகும்போது
புதுத்தளிருக்கு அது சாரமாய் மாறும்.
இன்னும் அப்படித்தான்
கனவுகளும் கண்டிருப்பேன்
எல்லோரும் சிரித்தார்கள்...
பச்சையமும் போயிற்று
ஒளிச்சேர்க்கை நின்றது
இரவில் கரியமில வாயு
வெளியாவதும் இன்றில்லை...
காலங்காலமாய்
இவையெல்லாம் நடந்திருந்தும்
இன்று நினைத்துப் பார்ப்போர் யார் என்று
ஒவ்வொரு முகமாய்த் தேடி
நீயல்லவென்றடுத்த முகம் பார்த்தோடி
நீயல்லவென்று ஒதுக்கி மற்ற முகம் தேடி...
நீயல்லவானால் வேறு யார்....
எனக்கொன்றும் புரியவில்லை
போகட்டும்
இந்தக் கிளைகளெல்லாம் மீண்டும்
எப்போது துளிர்க்கும் என்று
இப்போது காத்திருப்பேன்.
(1976) கணையாழி, 1982.
ரசிப்பு
---------
1.
முடியில் பிறந்தவை மலர்கள்
பாதத்தில் கிளைத்தவை வேர்கள்.
வனப்பில் கர்வம் கொண்டு
சூரியனைச் சொந்தம் கொண்டாடின பூக்கள்.
நிலத்தின் சாரத்தை உறிஞ்சி
மலர்வித்ததுக்கு நியாயம் கேட்டு
ஆதிப்பிறப்பை நிலை நாட்டின வேர்கள்.
முன்பே களைந்திருந்தால், வேர்களுக்குச்
சொந்தம் பாராட்ட ஏதும் மிஞ்சியிராது
ஆனால் பூவும் வேரும் அற்று நிற்கும்
வாழ்வோ ரசிக்காது.
(1984) ஞானரதம், 1885.
2.
சாவதானமாய்க் காற்று வீசும்
மேகங்கள் ஜாலங்கள் செய்யும்
மேற்கில் சூரியன் பொன்முகம் காட்டும்
காக்கை குருவி கூட்டில் சிணுங்கும்
சந்திரன் கிழக்கு வானில் துளிர்க்கும்...
வழக்கம் போல் எல்லாம்
சலிக்க வைக்கும்...
சலிக்காத நீயோ
இல்லாமல் போனாய்...
சலிக்கக் கூடாததில்
சலிப்பை வைத்து
சலிக்கச் சலிக்க வாழ்கின்றேனோ?
(1982)


கால சுப்ரமணியம் கவிதைகள் (15)
---------------------------------------------------
ஒத்திகையற்ற நாடகம்
-----------------------------------
தன் ஒற்றைக் கால் சிலம்பைப்
போட்டுடைத்தாள் கண்ணகி.
சிதறிய பரல்கனை
முதுகு வலிக்கக்
குனிந்து பொறுக்கி
எண்ணிக் கணக்கிட்டு
ஏட்டில் பதிந்து நிமிர்ந்த
இளங்கோ திகைத்தான்...
சாகாமல் பாண்டியன்
சிரித்துக் கொண்டுள்ளான்
உணர்வற்றுக் கீழே
கிடக்கிறாள் கண்ணகி.
வைத்தியனை அழைப்பதா?
கையிலிருப்பவை
மாணிக்கப் பரல்களா?
முத்துக்கள் தாமா?
என்று பார்ப்பதா?
அவசரமாகத் திரைகளை இழுத்து
நாடகத்தை முடிக்கிறான் இளங்கோ.
இல்லையென்றால்
இவள் ஒற்றை முலைத் திருகல் சூட்டில்
பற்ற வேண்டிய தீக்கெங்கு போக?
(1981) கணையாழி, 1982.
------------------------
இரணிய காலம்
-------------------------
இருக்குமிடம் காட்டமறுத்த
பிரகலாதனை ஒதுக்கி
எங்கிருக்குமென்று உத்தேசம் கொண்டு
எட்டி உதைத்ததும்
கழன்று விழுந்த அட்டைத் தூணுள்
திருதிருத்து விழிந்தது செங்கட் சீயம்
தப்பியோடப் பார்த்தது.
இதுவும்
இரவுமற்ற பகலுமற்ற உழைப்பின் காலம்
வீடுமற்ற வெளியுமற்ற இருப்பின் நிலை.
பிடறியைப் பிடித்துத்
தொடையில் அமுக்கி
வயிற்றைக் கிழிக்கையில்
உதிரப் போலியாய்ச் சிவப்பு மை...
பிளாஸ்டிக் குடல்கள்...
(1981) கணையாழி, 1982.
------------------------
காலக்ஷேத்ரம்
-------------------------
இந்த மூன்று காலனுக்கு
நூற்றெட்டுக் கரங்கள்.
ஒவ்வொன்றிலும்
ஓர் அஸ்திரம் இருக்கும்.
தேவை ஏற்பட்டால்
அவை பிரயோகிக்கப்பட்டு
ஆயிரமாய்க் கிளைத்து
எதிரியைத் தாக்கும்.
எதிர்ப் பிரயோகத்தில்
பலனிருக்காது.
ஆனால்
எல்லோரும் தான்
எதிர்த்துப் பார்க்கிறார்கள்.
எதிர்த்து ஆழிவதே
மனித வாழ்க்கை
அர்ஜுனா...
(1981) ஞானரதம், 1985.
-----------------
நிகும்பலை
------------------
ராமனின் வெற்றிக்கு
நிகும்பலை தேவையில்லை
ராவணத் தற்காப்பே
அதை நாடிச் செல்லும்.
காலம் கடந்து விட்டால்
வெற்றியும் கட்சி மாறியிருக்கும்
ஆனால் எல்லாமே
காலத்தில் நடந்து விடுகின்றன.
இந்திரஜித்துக்கள் இனியும்
நிரும்பலையைத் தொடர முடியாது -
அதோ!
வாசலில்
அனுமனின் தோள் மீது
லட்சமணன் ஏறி வரும்
ஆரவாரத்தைக் கேள்!
(1984) ஞானரதம், 1985.
--------------------------------------
இடிக்கு முந்திய மின்னல்
---------------------------------------
நிலை நின்ற பாதத்தின்
மணலடியை அரித்தெடுத்து
தடுமாற்றி உள் அமிழ்த்தும்
கரையலையாய் வந்தாய்.
உப்புணர்வில் கரிப்பெடுக்க
கமறி அதை உமிழ்ந்தாலும்
ஓங்கரிக்கும் நினைவானாய்.
உன் விழி மின்னலின்
இடியோசை
காலம் கடந்து நினைவுணரும்.
சமயங்களில்
மனக்கருவி ‘கிளிக்’கிட்ட
அந்நிமிஷம் உயிர் பெற்று
உடல் தகர்ந்து வெளியேறும்
வான் தகர்ந்து
வெளியாகும்.
(1981) கணையாழி, 1982.
-------------
புஷ்பகம்
--------------
எதிரில் ஒரு நீண்டபள்ளம்
வழிமறித்துப் பிளந்தது.
பிலத்தின் அடிதெரியா இருளுள் எங்கோ
முனகல் எழுந்து நெருட
சருக்கிய கால்களை ஊன்றி நிதானித்து
எட்டிப் பார்க்க நினைக்கையில்
உனக்கேன் வம்பு என்றது மனக்குறளி.
பின் இதைத் தாண்டுவது எப்படி
என நினைத்து முடிக்குமுன்
எட்டித் தாண்டின கால்கள்.
உடனே பூமி அதிர்ந்து
சரிவில் நான் உருள
பள்ளம் புடைத்து மலையாய் எழுந்தது.
முடிதெரியாத உயர் சிகரத்தின்
மேலோ எங்கோ
நகை மின்னல் பளிச்சிட்டு
இடித்தோய்ந்தது.
என்னை விட்டு
விண் நோக்கி எழுந்தது ஒரு விண்கலம் -
அயோத்தியை...
இலங்கையை...
விட்டு
நீங்கும் விமானம்.
(1984) ஞானரதம், 1985.
-------------------------------------------------
சிவனுக்கு இனி வேலையில்லை
--------------------------------------------------
‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’
காலண்டர், டைரி சகிதமாக
நாரதர் வாழ்த்துக் கூறி
வந்து நுழைந்தார்.
கலியுகம் பிறந்து
5092-ஆம் ஆண்டு!
57 வயதான பிரம்மா
சிருஷ்டித் தொழிலில்
கருத்தாயிருந்தார்:
நிலவுலகில் மட்டும்
ஒரு நாளைக்கு 21600 பிறப்புகள்
இதில் 7200 மனித ஜந்துக்கள்
நிரயன நிலையில் அயனாம்சத்தோடு கூடிய
ஒரு லக்னத்துக்கு 600 மனிதர்கள்.
க்ஷீர சாகர அனந்த சயனத்தில்
அரைக்கண் திறந்து பார்த்தார் விஷ்ணு.
நாரதரோடு வந்த ஒரு நிழல்
பாற்கடலில் திருட்டுத்தனமாய்
ஆசை பற்றி நக்க முனைந்தது -
ஆயிரம் நாவில் ஒரு நாவு ‘உஸ்’ஸிட
தாவிக் குதித்து மறைந்து போனது.
திருமால் திடுக்கிட்டு எழுந்து கொள்ள
சுவேதவராக கல்பத்துக்குரிய
வைவாஸ்வத மனு முன்னால் வந்து,
‘Felidae குடும்பத்தைச் சேர்ந்த
வளர்ப்புப் பிராணி பூனையே அது.
எகிப்திலிருந்து தென் அய்ரோப்பா புகுந்து
அங்கே இருந்த காட்டுப் பூனையுட் கலந்து
மேற்கிலும் கிழக்கிலும் பெருகியதிவ்வினம்.
இந்தப் பூனை,
சயாம் வகை சார்ந்தது’ என்றார்.
‘பூனை நக்கிப் பாற்கடல்
தீர்ந்தா போகும்?
விரட்டியது அநியாயம்!’ என்றார் நாரதர்.
‘மதிப்பீடுகளைக் கடந்தது
பாற்கடல்
என்றுதான் நினைத்தேன்
ஆனால் இப்போது இதைச்
சொல்லாமல் முடியாது.
பாற்கடலிலும்
பொல்யூஷன் பிரச்னை...
பூனைக்கு ஏதாவது தீங்கு நேரலாம்
என்றே விரட்டினேன்,’
என்றான் சேடன்
பிரம்ம சிருஷ்டியில்
அணுக்கதிர் வீச்சில்
குறைபட்ட உயிர்களைக்
கணக்கிடா நின்றார் கலக நாரதர்.
(1993)