Thursday 22 January 2015

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள் - நெமில்லர்

 பெருமாள் முருகனுக்கு நேர்ந்தது  யாருக்கும் நேரலாம்.

 “பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்...” லசந்த விக்ரமதுங்க தமிழில்: கவிதா - ஒரு சிறு பகுதி http://www.kalachuvadu.com/issue-110/page26.asp

நன்றி :  


....... ஜெர்மானிய ஆன்மிகவாதி மார்ட்டின் நெமில்லர். அவர் இளம் பிராயத்தில் யூதர்களுக்கு எதிரானவராகவும் ஹிட்லரை மிகவும் மதிக்கிறவராகவும் இருந்தார். நாஜியிசம் ஜெர்மனியை முழுமையாகக் கைப்பற்றிய போதுதான் நாஜியிசம் என்றால் என்ன என்பதை அவர் உணர்ந்தார். ஹிட்லர் யூதர்களை மட்டும் வெளியேற்றவில்லை, மாற்றுக் கருத்துக்கொண்ட எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். நெமில்லர் பிறகு பேசத் தொடங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் 1937இலிருந்து 1945 வரை சாச்சென்ஹௌசன் மற்றும் டாச்சௌ வதை முகாம்களில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். நெமில்லர் எழுதிய ஒரு கவிதையை நான் என் பதின்பருவங்களில் முதன்முறையாகப் படித்தேன். எனது மனத்திலிருந்து அது இப்போதும் விலகவில்லை.

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.
அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.
பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.
அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.
அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.
பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

- நெமில்லர்

லசந்த விக்ரமதுங்க தமிழில்: கவிதா

Also among those works burned were the writings of beloved nineteenth-century German Jewish poet Heinrich Heine, who wrote in his 1820-1821 play Almansor the famous admonition, “Dort, wo man Bücher verbrennt, verbrennt man am Ende auch Menschen": "Where they burn books, they will also ultimately burn people."