Thursday, 22 January 2015

மேலே சில பறவைகள் - கால சுப்ரமணியன் Up above, a few birds - translated by Nambi Krishnan

மேலே சில பறவைகள்
- கால சுப்ரமணியன்
சூரியன் கூட
மேற்கில் மறைந்தான்.
நேரத்தோடு
கூடு நோக்கி
பறந்து சென்றன நாரைகள்.
கீழே
இன்னும் வேலை முடியாத மனிதர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
(மேலே பார்க்க அவகாசமற்று)
ஆட்கள்
மிருகங்கள் 
வாகனங்கள் 
இல்லையென்று நிச்சயித்துக் கொண்டு
பாறைகளைப் பிளக்க வெடியை வெடித்தனர்.
சப்த அதிர்ச்சியில்
ஒரு கணம்
       அரண்டு
       தயங்கிக்
       குழம்பிச்
        சிதறி
மீண்டும் தன் வழியே வரிசைகொண்டு
சாவகாசமாய்
மிதந்து சென்றன பறவைகள்
Up above, a few birds 
- translated by Nambi Krishnan
Even the sun
has disappeared in the west.
On time
nestwards
the herons fly.
Down below
Day’s toil not finished yet, men
look around 
(No time to look up)
Ensure there are no :
Men
Beasts
Vehicles
Before setting explosives
For splitting the rocks.
Shellshocked
For an instant
             Terrified
             Hesitant
             Confused
             Scattered
Then back on their way, serried
and relaxed
The birds float away.