Thursday, 22 January 2015

சல்மா இரு கவிதைகள் Translated by N Kalyan Raman from the Tamil poem,

சல்மா
இரு கவிதைகள்
http://www.poetsalma.com/
இறுதிக் கணம்
மௌனித்திருக்கும் வீட்டில் எதிர்கொள்கிறேன் நீ மறதியால் விட்டுச்சென்ற வாசனைத் திரவிய டப்பியிலிருந்து உதிர்ந்துகொண்டிருக்கிற உன் பிரியங்களை குழந்தைகளின் விளையாட்டில் கலையத் தொடங்குகிறது வீடு திரைமறைவிலிருந்து களிப்போடு இயல்பு மீள்கின்றது இந்த வாழ்க்கை எதிர்ப்புக் காட்டாமல் மரஅலமாரிக்குள்முடங்கி உறையத்துவங்கும் நேற்றைக்கு மட்டும் நடமாடித் திரிந்த பளிங்குப் பீங்கான்களும் என் ஓயாத பேச்சும் அலமாரிக் கதவுக்குள்ளிருந்தெழும் விசும்பலில் கசிகிறது இதுவே இந்தப் பருவத்தின் இறுதிக் கணமாயுமிருக்கலாம் என்கிற ஒரு செய்தி

கனிவின் திசை
என் கனிவின் மொத்தமும் வேண்டி அபகரிக்கக் காத்திருக்கிறது ஒற்றைப் பூவரசு ஜன்னல் வழி எட்டிஎட்டித் தளும்பும் ஏங்கிய முகம் நீட்டி தன்னிடமில்லாக் காய்களை மலர்களைத் தேடி வேறிடம் செல்வேனா என்கிற தவிப்புடன் தன் அடர்பசும்நிறம் குவித்துவைத்திருக்கும் குளுமை சன்னப் பொத்தல்களோடிருந்தாலும் தன் நிழல் நெய்த இருட்கம்பளம் என எல்லாமும் காட்டும் மரத்தின் உடலெங்கும் ஓடித்திரிகிறது ஓணான் என்மீது மணிக் கண்களை உருட்டி வண்டுகளும் அதுவும் அங்கேயே உறங்கவிடுகின்றன தினமும் அலகில் கவ்விய துண்டுக் குச்சிகளோடு இடம் பார்த்துச் செல்கின்றன சில பறவைகள் இத்தனைக்குப் பிறகும் என் கனிவின் திசையை வரையறுத்துக் கொள்ளாப் புழுக்கத்தில் அது மறுகி மறுகித் தீய்க்கிறது தன் பசுமையை
Two poems by Salma #Translation
http://www.twitlonger.com/show/n_1sk3gv3

The Final Moment

In a silent house
I come upon
your affection wafting
from the scented
powder tin 
you forgot 
and left behind.

The house begins to come apart
in the frolic of children.
From behind a curtain
this life becomes
happily normal again.

Without a fight,
the sparkling china that was
up and about just yesterday, along 
with my incessant chatter,
begins to fold and freeze
inside the wooden cupboard 

Talk that this could be
the season’s final moment
trickles out in the sob that rises
from inside the cupboard’s door.

Translated by N Kalyan Raman from the Tamil poem, Iruthik kanam by Salma 





The path of tenderness

Craving all my tenderness,
the lone Portia tree 
is waiting to grab it.
Thrusting its wistful
face that strains and brims
through the window bars, 
in despair that I might
go elsewhere to seek
the fruit and flowers 
it no longer holds,

it displays
the coolness piled high 
by its green foliage
and the blanket of darkness
woven by its shade 
(though strewn with fine holes).
The garden lizard roams
all over the tree’s body, while
rolling its pearly eyes on me.
The wasps and the lizard
fall asleep on the tree.

Holding twigs in their 
beaks, some birds
hover above, looking
for a home.

In spite of so much,
despondent at having failed
to define the direction
of my tenderness, it broods
and broods, singeing
its own greenery.

Translated by N Kalyan Raman from the Tamil poem, Kanivin Thisai by Salma