http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19103%3A2012-03-21-08-18-40&catid=1457%3A2012&Itemid=698
அல்தூஸ்ஸரை மறுக்கும் பூக்கோ...
- விவரங்கள்
- எழுத்தாளர்: இசக்கி
- தாய்ப் பிரிவு: தாமரை
- பிரிவு: மார்ச்2012
(மார்க்சிய விவாதக் கட்டுரைகள் பலதந்த முனைவர் ந.முத்துமோகன் அவர்களின் மிஷல் பூக்கோ குறித்த மதிப்பீட்டை தெளிவுபடுத்துமுகமாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.)
* அல்தூஸ்ஸரின் மாணவன் நான்' என்று முழங்கும் பூக்கோ 1967 பேட்டி ஒன்றில்: "அவருடைய மாணவன் என்ற முறையில் அதிகம் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு சவால் விடும் வகையில் என்னுடைய முயற்சி ஒன்றை அவருடைய கையெழுத்தின் கீழ் வைக்கிறேன். அவருக்குப் பிடித்தமான தளத்தில் என்னால் எதிர்வினை ஆற்றமுடியாது. ஆனால் ஒன்று சொல்வேன்: 'அல்தூஸ்ஸரின் புத்தகங்களை திறந்து பாருங்கள். எனக்கும் அவருக்குமான வேறுபாடு/ வித்தியாசம் அவற்றில் காண்பீர்; மார்க்சை குறித்துச் சொல்லும்போது சூஎபிஸ்டமாலஜிக்கல் பிரேக்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
(அதுகால வரைக்குமுள்ள மொத்த அறிவுத்தோற்ற கருத்தாக்கத்தையே மார்க்ஸ்தான் மாற்றியமைக்கிறார்) நான் உறுதியாகச் சொல்வேன் மார்க்சிடம் அப்படியொரு அறிவுத்தோற்ற நிறுத்தம் / அறிவுத் திருத்தம் இல்லை"
* அல்தூஸ்ஸரின் சூலெனினும் தத்துவமும்' மற்றும் பூக்கோவின் அறிவு குறித்த தொல்லியலாய்வு' போன்ற படைப்புகளில் சொல்லாடல், சித்தாந்தம், விஞ்ஞானம் என்ற மூன்றையும் குறித்து வலுவான விமர்சனங்கள், வரையறைகள் இருவரிடமிருந்தும் கிளம்பின. அல்தூஸ்ஸரை மறுத்துதான் பூக்கோ தன்னுடைய கருத்தாக்கங்களை வைக்கிறார். பிரெஞ்சு விஞ்ஞான தத்துவவாதி ஜார்ஜ் கங்குயிலெமின் கருத்தாங்களால் கவரப்பட்ட அல்தூஸ்ஸருடைய படைப்புகளை, ("கங்குயிலெமிற்கு நான் மிகுந்த கடமைப் பட்டுள்ளேன் "அல்தூஸ்ஸர்) தீவிர மார்க்சிய பார்வையை கருத்துமுதல்வாதி பூக்கோ நிராகரித்துவிட்டார். கங்குயிலெமின் நூலுக்கு முன்னுரை எழுத வந்த பூக்கோவினுடைய விஷமத்தனமான வார்த்தைகளில்:
"கங்குயிலெமை எடுத்துவிட்டால் உங்களால் அல்தூஸ்ஸரை / அல்தூஸ்ஸரியத்தை, பிரெஞ்சு மார்க்சியருக்குள் நடந்த மொத்த விவாதத்தையுமே புரிந்துகொள்ளமுடியாது; சமூகவியலில் மிக வலுவான கருத்தாக்கங்களை பதித்த பூர்தியோ, காஸ்டெல், பாஸ்ஸரென் மற்றும் லகானியர்கள் சொல்லும் மொத்த உளவிய பகுப்பாய்வு முறையை உங்களால் நெருங்கவே முடியாது. மேலும் 68, மாணவர் எழுச்சிக்கு முன்னும் பின்னும் உயர்ந்த கூர்மையான விமர்சன சிந்தனையாளர்கள் பலரும் கங்குயிலெமிடமிருந்து உருவானவர்களே.''
அமெரிக்க வரலாற்றாசிரியரும் விஞ்ஞான தத்துவவாதியும் புகழ்பெற்ற "விஞ்ஞானப் புரட்சியின் அமைப்புகள்" நூலாசிரியருமான தாமஸ் குன் சொல்லும், 'ஒரு காலகட்டத்தில் கோலோச்சும் அறிவுச்சிந்தனை',/ விஞ்ஞானஅறிவின் நகர்வு' போன்ற கருத்தாக்கங்கள், விளக்கங்கள் மொத்த விஞ்ஞானிகளுக்குமே புதிய தேடலை / ஆய்வுக் களத்தை விரிவுபடுத்தியது.
* மிக முக்கியமாக,: விஞ்ஞானம் சித்தாந்தம் இரண்டுக்குமான வித்தியாசத்தை / பிரிவையே பூக்கோ நிராகரித்தார். உலகளாவிய விவேகம்/அறிவார்த்தம் என்ற கருத்தை மறுத்து அதோடு மனிதத்தன்னிலை (தனிநபர்/கூட்டு) என்ற கருத்தையும் நிராகரிக்கும் பூக்கோ சித்தாந்தம்' என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக்கமாக இல்லையென்று அதையும் நிராகரிக்கிறார். விஞ்ஞானத் துறைகளின் அறிதல் பாத்திரத்தை முழுவதும் பூக்கோ மறுதலிப்பார். ஆனால் வரலாற்றுச் சட்டகத்திற்குள் மனிதத்தன்னிலை யினுடைய பங்கு/இடம் குறித்து பகுப்பாய்வு ஒன்றை வடிவமைக்க வம்சாவளி முறையில் ஆய்வுசெய்திருக்கிறார். மார்க்சியம் ஒரு விஞ்ஞானம் என்ற கோரிக்கை/ குறிக்கோள் இங்கு விமர்சிக்கப்படுகிறது: “புறவயத் தன்மை/பருண்மைத்தன்மை என்ற மாயத்தோற்றத்தைக் கருத்தாக்கமாகக் கொண்ட மார்க்சி யம், புறவயத்தன்மை (பொருள்முதல்வாத) மற்றும் விஞ்ஞானத்தன்மையை முன்னரே சுவீகரித் துக் கொண்டதால், முதலாளித்துவ சொல்லாடல் அதிகாரத்தின் வலிமையை உதாசீனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது”
அல்தூஸ்ஸருடைய மையப்பகுதியே, மார்க்சை வாசிக்க வலியுறுத்திய விதமே விஞ்ஞானம் சித்தாந்தம் என்ற மையப்புள்ளியிலிருந்துதான். மார்க்சிய தத்துவம் என அல்தூஸ்ஸர் குறிப்பது "இயக்கவியல் பொருள்முதல்வாதம்" ஆகும். சொல்லாடலின் நிறுவன மறு உற்பத்தி என்கிற கருத்தாக்கத்தை திருத்திச் சொன்னது அல்தூஸ்ஸருக்கு; ஆனால் பூக்கோவிற்கு சொல்லாடலின் வலிமையே அதிகாரமும் அறிவுமே. நிறுவனங்களின் அதிகாரம் அறிவுத்துறை களை வளர்ப்பதும் மறு உற்பத்தி செய்வதிலுமே குறியாக இருக்கிறது', என இருவருமே சொல்கின்றனர். இதனால்தான் செயல்முறை வாதிகள் என இவர்கள் பழிக்கப்பட்டனர்.
விஞ்ஞான அறிவுத்தோற்ற / கங்குயிலெம் (1970) தாமஸ் குன் தத்துவவாதி காஸ்டன் பேச்சலர்டு
* காஸ்டன் பேச்சலர்டு (1938) பின்னால் கங்குயிலெம்(1970) இருவரும் விஞ்ஞானத்தின் வரலாறு மற்றும் தத்துவம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளனர். விஞ்ஞானத்தின் வரலாறு என்பதே அறிவுத்தோற்ற தடைகள் / சிக்கல்களை மீறி அறிவுத்துறை வளர்ந்திருக்கிறது என்பதே. யூகங்கள், தேடல்கள், கணிப்புகள் யாவும், அறிவுத்தோற்றத்தின் மூடிய கதவுகள் உதைத்துத் திறக்கப்பட்டன. மொத்த அறிவுத்துறை கருத்தாக்க மறுசீரமைப்பே அறிவுத்தோற்ற தடை குறிக்கிறது. அதுகால வரைக்குமுள்ள மொத்த செவ்விய பொருளாதார அறிஞர்களின் கருத்தாக்கங்களையே மாற்றி ஒரு புதிய விஞ்ஞான அறிவுப்பார்வையை கொடுத்த மார்க்சைதான் அல்தூஸ்ஸர் வலிமையாக முன்வைக்கிறார். ஆனால் பூக்கோ அல்தூஸ்ஸரை/ மார்க்சையே நிராகரிக்கிறார். விஞ்ஞான வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைச் சொன்ன மார்க்ஸ், ஹெகலுக்கும் பாயர்பாக்கிற்கும் பயணித்த அறிவுத்தோற்ற தடையை கண்டுபிடித்ததாகும். அப்படியொரு விஞ்ஞான அறிவார்ந்த கண்டுபிடிப்பு மார்க்சிடம் இல்லை என்கிறார் பூக்கோ.
* அல்தூஸ்ஸர் வேண்டுமானால் பூக்கோவின் ஆசிரியராக இருக்கலாம். ஆனால் பூக்கோ தெரிதாவிற்கு ஆசிரியர்.. இப்போது அல்தூஸ்ஸரை மறுத்தவர், எதிர்த்தவர் பூக்கோதான். இருவரின் படைப்புகளும் ஒரேசமயத்தில் வெளியாயின. அல்தூஸ்ஸருடைய உறுதியான மார்க்சிய நிலை நிறுத்தப் படைப்புக்கள் பூக்கோவுக்கு எரிச்சலூட்டின. அல்தூஸ்ஸரைவிட பூக்கோ கூர்மையான விமர்சனம் வைப்பவர். அல்தூஸ்ஸருடைய மாணவன் என்றால், பூக்கோவினுடைய மொத்த படைப்புகளையும்விட குறிப்பிட்ட படைப்பிற்கான விமர்சன அணுகுமுறை, ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். மார்க்சிய நிலைபாட்டிலிருந்து பூக்கோவை வாசித்தோமென்றால் ஹைடேக்கரின் கடிதம் வைக்கும் மனிதமையவாத எதிர்ப்பு கருத்தாக்கம் முக்கிய விஷயமாக எடுபடாது.
மாறாக தவறாகிவிடும். இது அல்லது அது என்பதல்ல விஷயம். பூக்கோவும் லெவஃப்ரேயும் நீட்ஷே மற்றும் ஹைடேக்கரை மார்க்ஸினோடும், ஹெகலை எதிர்த்தும் ஆய்வு வைத்தனர். பூக்கோவினுடைய படைப்புகளை மார்க்சினுடைய குடிமைச்சமூகம், சித்தாந்தம் அல்லது அதிகார மேலாண்மை போன்ற ஆய்வுகளுக்குள் வைத்துப் பார்க்க முடியும். மொத்தத்துவ அணுகு முறையிலோ, ஏன் மொத்தத்துவ மார்க்சிய அணுகு முறையிலோகூட பூக்கோவை மதிப்பிடுவதென் பது பொருத்தமாயிராது; ஏனெனில் அவை குறுக்கல் வாதப் பார்வையுடைய தாகையால் சில பிரத்தியேக சமூக அடுக்குகள், விசேஷ சமூகயதார்த்தங்கள் கவனத்திற்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுமுண்டு.
* அதிகாரம்/அறிவு குறித்து விவாதிக்கையில் சொல்லாடலின் மேலேறும் பகுப்பாய்வை' விவரிக்கிறார். அறிவு சமூக ரீதியாகக் கட்டமைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவு, அறிவுப்பூர்வ அதிகாரம், அறிவே அதிகாரம் அல்தூஸ்ஸருக்கு இது பிரச்சினை அதிகார உறவுகளைப் பற்றிய ஒரு புதிய ஒழுங்கமைவு தேவை. பகுத்தறிவு மயமாக்கலுக்கும் அரசியல் அதிகார ஒடுக்குமுறைக்கும் இடயிலான உறவு வெளிப்படையானது. அல்தூஸ்ஸரையும் அவர் வைத்த "அரசு சித்தாந்த கருவி' என்ற கருத்தாக்கத்தையும் விமர்சித்துதான் பூக்கோ, ஒழுங்குமுறையும் தணடனையும்' என்ற நூலில் சமூகம் முழுக்க அதிகாரப் பரவல், அதிகார ஆதிக்கம் இருப்பதைச் சொல்லி, அரசு அதிகாரத்தை விமர்சிக்கும் மார்க்சியத்தை பூக்கோ விமர்சிக்கிறார்: "குடிமைச் சமூகத்திலும் அதே பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கின்றன" என்று வலுவான தமது வாதத்தை வைத்து இரண்டு சமூகங்களுக்குமுள்ள வித்தியாசங்களை நிராகரிக்கிறார்.
* 1968 மாணவர் எழுச்சிக்குப் பிறகு பிரெஞ்சு மார்க்சியரிடையே எழுச்சிக்காலத்தின் போது பேச்சாக இருந்த பொருள்முதல்வாதம் குறித்து "சொல்லாடலின் ஒழுங்கமைவு" நூலில் பூக்கோ விமர்சிக்கிறார். அல்தூஸ்ஸர் சொல்லித்தான் பூக்கோ பிரெஞ்சு கம்யூனிஸ்டுக் கட்சியில் 1950இல் சேர்ந்ததும், ஆனால் கட்சியில் எந்தப் பங்கெடுப்புமின்றியும், உNகு கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்தும், சீக்கிரமே மாஸ்கோவிய கஇஊஇன் மாயையிலிருந்து விலகியும்விட்டார். சோவியத்யூனியனுடைய டாக்டர் பிளாட்' "யூதஇன ஒதுக்கலை' எதிர்த்து வெளியேறினார். கட்சிக்குவெளியே மார்க்சியத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்தாலும், போலந்தில் மார்க்சிய அரசின் செயல்முறைகள்/ நடவடிக்கைகளைக் கண்ணுற்ற பூக்கோ, மார்க்சியத்தை எதிர்க்கத் தொடங்கினார்.
திடீரென்று 1969 படைப்புகளில் மார்க்சிய சொல்லாட்சியைப் பிரயோகித்த பூக்கோ, 1975இல் அவற்றையும் கைகழுவிவிட்டார். "மார்க்ஸ் ஓர் அரசியல் சாணக்யன்" என்று சொல்லமுடியாது; அரசியலை விமர்சனம் செய்வார்' என்று சொல்லும் பூக்கோ ஒருபுறம். கிராம்சி வைத்த வலுவான ஹெகலிய மார்க்சியத்தை மறுத்து மிகவலுவான மனிதமையவாத எதிர்ப்பு கோட்பாடுகளை உருவாக்கிய அமைப்பியலாள மார்க்சியர் அல்தூஸ்ஸர் மறுபக்கம் (அல்தூஸ்ஸருடைய பிற்கால படைப்புகள் வேறுவிதமாகப் பேசும்). "மேற்கட்டுமானத்தின் குறிப்பிட்ட தாக்கம் குறித்த விரிவான ஆய்வை வைத்ததில் மார்க்ஸ், ஏங்கல்ஸ்க்குப் பிறகு கிராம்சிதான் மிகமுக்கியமானவர்" என்று மார்க்சிய சிந்தனை மீளாய்வு செய்யும்போது சொன்ன அல்தூஸ்ஸர் கிராம்சியினுடைய வரலாற்றுவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இத்தாலிய தேச ஒற்றுமை. தேச அரசு என்ற கருத்தாக்கத்தினடிப்படையிலான இத்தாலிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கான மாக்கியவல்லிய ஆய்வுசெய்த கிராம்சியின் சிந்தனைக்கட்டு அல்தூஸ்ஸருக்கு அரசியல் தளமமைத்துக் கொடுத்தது.
* பூக்கோவிய மாயையில் கட்டுண்டு கிடந்த அல்தூஸ்ஸரிய மார்க்சியரான மார்க் ஆல்ஸ்ஸன், எடின் பாலிபர் போன்றோர் பூக்கோவை விட்டுக்கொடுக்காமல் தம்மிலொருவராக உரிமை கொண்டாடினர். "வரலாற்று மார்க்சிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கமுடையவர் பூக்கோ' என நிறுவவே "பூக்கோவின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்' என எழுதினார். பொருள்முதல்வாதம் என்றால் என்ன? என்ற வரையறை செய்யாமலேயே அருகிலிருக்கும் தெரிதாவைவிட பூக்கோதான் அதிகம் பொருள்முதல்வாதி. ஏனெனில் வெறும் மொழி ஆய்வுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை பூக்கோ' என்றெல்லாம் எழுதினர். மொழியிய கருத்து முதல்வாதத்தில் ஊறிக்கிடக்கும் தெரிதா, பூக்கோவை தவறாகத் திட்டியிருந்தார்.
அல்தூஸ்ஸரின் மாணவரான பாலிபர், சக தோழனான பூக்கோவை மதிப்பிடுகையில்: "பூக்கோவினுடைய கருத்தாக்கங்கள், கோட்பாடுகளையெல்லாம் கவனிக்கும்போது அவற்றை சூவரலாற்றுப் பொருள்முதல்வாதமென' வரையறை செய்வதில் தவறேதுமில்லை "பாலிபருக்கு இந்த ஞானம் எப்படி வந்ததென்றால் அதிகாரத்தின் கருவிகள், உடல்கள்' என்றெல்லாம் பூக்கோ பேசியதிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதி' என வரையறை செய்ததைத்தான் ஆல்ஸ்ஸன் மேற்கோள் காட்டியிருந்தார். 1970 படைப்புக்களில் புறவயம் / புறப்பொருள் / பருண்மை குறித்து பூக்கோ எழுதினாலும் அகவய / பருண்மையற்ற பொருள் முதல்வாதத்தைதான் வலியுறுத்தினார். உடல்களைப் பற்றிப்பேசும் பொருள்முதல்வாத மென்பது பருண்மையற்ற பொருள்முதல்வாத வகையைச் சேர்ந்ததல்ல. ஆக, பாலிபர் கொண்டாடும் பூக்கோ வைத்ததாகச் சொல்லப்படும் பொருள்முதல்வாதம் உண்மையில் ஒன்றுமல்ல / வரலாற்றாய்வைத்தான் முன்வைக்கிறார்.
* பூக்கோவின் “மனிதமையவாத எதிர்ப்பு''
“சித்தாந்தமோ, சொல்லாடலோ உறுதிப்படுத்துதலை வலியுறுத்துகிறது. ஆனால் ஆளும் வர்க்க தேவைகளை எதிர்க்கிறது" என பூக்கோவும் அல்தூஸ்ஸருமே கருதினர். மனிதனின் மரணம் / மனிதத் தன்னிலையின் மரணம் ஒரு வர்க்கத்தின் கூட்டு மனிதத் தன்னிலையின் மரணம் முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒடுக்குமுறையால் நிகழும் "மனிதனின் மரணம்' என அமைப்பியல்வாதம் சொல்வதை பூக்கோவும் மறுக்கவில்லை. அனால் உலக உண்மையின் மனிதமையவாதம் என கருதுவதை இருவரும் எதிர்க்கின்றனர்.
இந்த மனிதமையவாத எதிர்ப்பு நிலைபாட்டை அல்தூஸ்ஸரிடமிருந்தல்ல, நீட்ஷே, ஹைடேக் கர் போன்ற மனிதமையவாத எதிர்ப்பாளரிடமிருந்து பெற்றவர் பூக்கோ. ஹைடேக்கரின் மனிதமையவாதம் குறித்த கடிதம், பின்யுத்த பிரெஞ்சு சிந்தனையில் பெரும்பேச்சாக இருந்ததது தெரிதாவும் அல்தூஸ்ஸரும் பேசிக்கொண்டனர் பூக்கோவோ பிரெஞ்சு சிந்தனையே அப்படித் தான் என்பதுபோல இருந்தார். இப்போது முக்கியமான சிந்தனையாளர் சார்த்தர். இருத்தலிய வாதிகளின் வாசிப்புப்பிடியிலிருந்து மார்க்சியத்தை மீட்டெடுத்து நிலை நிறுத்தியவர் அல்தூஸ்ஸரே. மார்க்சினுடைய 1844 கையெழுத்துப் படிகளைவிட பிற்கால விஞ்ஞான படைப்புகளுக்கு சார்த்தர் போன்றோர் அதிகம் அழுத்தம் கொடுத்துப் பேசினர்.
* அல்தூஸ்ஸர், கிராம்சி போன்றோருக்கும் பூக்கோவுக்குமான கோட்பாடாக்க முறை பற்றி பேசும்பொழுது நாம் கவனமாக இருத்தல்வேண்டும். பூக்கோ அல்தூஸ்ஸரை மறுப்பதை மூவருக்குமுள்ள படைப்பாய்வு சொல்லும். பூக்கோ மீதான ஹைடேக்கரின் தாக்கம் என்பது வலுவானது; பொதுவாக ஏற்றுக்கொள்வதை விட அதிகம் செல்வாக்குடையது, மனிதமைய வாதம் குறித்த ஹைடேக்கரின் கடிதம். பூக்கோவின் “ஆர்டர் ஆப் திங்க்ஸ்'' படைப்பின், மானுடவியல் என்ற இரண்டாம்பட்ச ஆய்வுக்கு கான்ட்டும் அனுபூதவிய / இயக்கமறுப்பிய பிரச்னைகளும் மையக்கருத்தாகிவிட்டன. ஹைடேக்கருடைய நீட்ஷேய நூல் முக்கிய குறிப்புதவி செய்தது. பூக்கோவினுடைய சூடிஸ்பொஸிடிஃப்' = கருவி/ஒடுக்குமுறை = சிறை தண்டனை, நீதிமன்றம் போலீஸ், ராணுவம், அரசு மருத்துவமனை நிறுவனம், மற்றுமுள்ள மொத்த அறிவுத்துறை அமைப்புகள் யாவும் சமூக ஒழுங்கமைவுக்குள் முழு அதிகாரத்தை செலுத்துகிறது' . என்ற கருத்தாக்கம் மொழிநுட்ப சூக்குமமாக வைக்கப்பட்டது.
ஹைடேக்கருடைய எழுத்துக்களை நேரடியாகப் படித்து உள்வாங்கினோமென்றால் பூக்கோ வைக்கும் காத்திரமான பல கேள்விகள் ஹைடேக்கருடைய படைப்புகளில் இருந்தமை புலப்படும். ஆனால் இருவருக்குமான வித்தியாசம்? வித்தியாசத்தால் எவ்வித பயனுமில. ஆனால் பூக்கோ குறித்து ஏராளமான ஆய்வுகள் வெளிவந்தாலும் மார்க்சிய மதிப்பீடு இன்னும் கூர்மையடையவில்லை. விஷயதானங்கள் எவரிடமிருந்து பெற்றாலும் அவற்றை நடைமுறையொட்டிய ஆய்வுத் தரவுகளாக இணைத்துவிடுபவர் பூக்கோ. வரலாற்று சமூகவியல் (இருப்பிய வரலாறு) ஆய்வுகளை உள்வாங்குவதைக் காட்டிலும் ஹைடேக்கரைப் (நீட்ஷேயேயும் சேர்த்து) படிப்பதன் மூலம் பூக்கோவினுடைய' ஜீனியாலஜி'யை (வரலாற்று இருப்பியல்) உள்வாங்குவது பயனுள்ளதாகும். வெளி சார்ந்த வரலாற்றாய்வு. பூக்கோ ஓர் அமைப்பிய மார்க்சியரோ நீட்ஷேயவாதியோ / பின் அமைப்பியவாதியோ அல்ல. மாறாக ஹைடேக்கரிய இருப்பியவாதி என்பது நிச்சயம். அதேசமயம் அல்தூஸ்ஸரை உறுதியாக மறுப்பவர் பூக்கோ.
* அல்தூஸ்ஸர், பூக்கோ, வரலாற்று இருப்பியல்:
அல்தூஸ்ஸரையும் அமைப்பிய மார்க்சியத்தையும் பூக்கோ பயன்படுத்திக்கொண்டது மார்க்சியத்தை எதிர்க்கவே. பூக்கோவின் படைப்புகளில் அல்தூஸ்ஸரிய தாக்கம் அதிகம் உண்டு; பின்னாளில் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் உண்டு. மனிதமையவாத எதிர்ப்பு வரலாற்றுவரைவியலுக்கு முதன்முதலாக அடித்தளமிட்டுத் தொடங்கிய ("மார்க்சியமும் மனிதமைய வாதமும்") அல்தூஸ்ஸரிடமிருந்துதான் 'தொல்லியலாய்வு'க்கும்', 'ஜீனியாலஜி'க்குமான தளம் பூக்கோவுக்குக் கிடைத்தது. அல்தூஸ்ஸர்தான் முதன்முதலாகத் தொடங்கிவைக்கிறார? வரலாற்றுவரைவியலும் பிரச்சினைக்குரியதா? பூக்கோ குறிவைத்த முக்கியமான ஏரியாவே அதுதான். ஆனால் இரண்டாம்கட்ட காலப்பொருத்தமற்ற சிந்தனை, 'நீதிகளின் வம்சாவளி' போன்ற படைப்புகள் என்ன ஆயிற்று? 'இருத்தலும் காலமும்' படைப்பின் இரண்டாம் பிரிவு என்ன ஆயிற்று? அல்தூஸ்ஸருடைய மனிதமையவாத எதிர்ப்பு என்பது ஹைடேக்கருடைய மனிதமையவாதம் குறித்து எழுதப்பட்ட கடிதத்தோடு தொடர்புடையது என்பதை மறந்துவிடக்கூடாது.
பிரெஞ்சு விவாதங்களுக்குள் அது ஒரு முக்கியமான தலையீடு ஆகும். பியுபிரெட், சார்த்தரின் விமர்சகர் போன்றோருக்கு அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. நீட்ஷேய ஜீனியாலஜியை மனிதமையவாத எதிர்ப்பு சொல்லாடலுக்கு பூக்கோவால் நுட்பமாகக் கையாளப்பட்டது. அதேசமயம் புகழ்பெற்ற பிரெஞ்சு கல்விக்கழக மேலாளராகப் பணியாற்றியபோது அல்தூஸ்ஸரின் தாக்கத்தால் பொருள்முதல்வாதப் பார்வையும் அவருக்கு வசப்பட்டது. பொருள் முதல்வாதப் பார்வைக்குத் தம்மை அர்ப்பணித்த மார்க்சியரான அல்தூஸ்ஸரும் பூக்கோவுமே அறிவுத்தோற்ற தடை / விஞ்ஞானச் சிந்தனையில் அறிவுப்பூர்வத் தலையீடு போன்ற கருத்தாங்களை உருவாக்கினர் தற்செயல் நிகழ்வு பொருள் முதல்வாதத்தில் முக்கிய காரணியாகத் தொழிற் படுவதை இணைத்தே ஆய்வுசெய்த அல்தூஸ்ஸரு டைய தற்செயல் நிகழ்வு சார்ந்த பொருள்முதல்வாதம், பூக்கோவினுடைய 'சொல்லாடலின் ஒழுங்கமைவு' வெளியானதற்குப் பிறகே வைக்கப்பட்டதென்றாலும் இருபெரும் சிந்தனையாளரும் சுயமாக வேறுவேறு தளத்திலிருந்து ஒரே கருத்தாக்கத்திற்கு வந்தடைந்தனர்.
ஆனால் மார்க்சியரான அல்தூஸ்ஸரின் நோக்கம் வேறு. பூக்கோவின் நோக்கம் வேறு. அமைப்பிய மார்க்சிய மரபில் வரலாற்றின் பொருளாயத விஞ்ஞான ஆய்வை பூக்கோ மேற்கொண்டது மனிதமையவாத எதிர்ப்பை இன்னும் மெருகேற்றவே. ஹைடேக்கர் வைத்த பல வாதங்களை, மனிதத் தன்னிலையை புறக்கணித்து/ நிராகரிக்கும் வழிகளை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அல்தூஸ்ஸர்தான் மனிதமையவாத எதிர்ப்பு அணுகுமுறையில் வரலாற்றைப் பார்ப்பதை ஒரு மார்க்சிய சட்டகத்திற்குள் மாற்றினார். பூக்கோவினுடைய ஜீனியாலஜீஸ்இல் அந்தப் பார்வைதான் பயன்படுத்தப்பட்டது. பிரத்தியேக இடம் சார்ந்த சம்பவங்கள் நிகழ்வுகளின் சிதறல்களாக வரலாற்றை கட்டுடைத்துப் பார்க்கும் பூக்கோ, ஒரு பொத்தம் பொதுவான வரலாற்றாய்வை மறுக்கிறார்.
அறிவின் தொல்லியலாய்வில் நுட்பமாக, பிரத்தியேக இடம் சார்ந்த நிகழ்வுகளின் சிதறல்களாக நுண்வரலாற்றைக் கையாள்வதால்தான் மனிதமைய வரலாற்றுவரைவியலிலுள்ள பூடகத்தன்மையை இயக்கமறுப்பியல் தன்மையை அகற்றமுடியும் என வாதிடுகிறார். தாம் ஆய்வுசெய்த பல நிகழ்வுகள் சூபொதுவானவை' என்பதை ஒத்துக்கொள்ளும் பூக்கோ, ஒருவகையான மனிதமையவாத வரலாற்றாய்வை தவிர்ப்பதற்காகவே மனிதமையவாதம் என்ற குறுக்கல்வாதப் பார்வையை நீக்கிய அடிமட்ட அணுகுமுறையிலான வரலாற்றாய்வை சூஒழுங்குமுறையும் தண்டனையும்' நூலில் விவரிக்கிறார். 1970களுக்குப் பிறகு நீட்ஷேய உத்திகளையும், ஆளுமைகளையும் தமது படைப்புகளில் அமைப்பிய மார்க்சிய சட்டகத்திற்குள் வைத்துக் காட்டுகிறார்.
உதாரணமாக, உண்மையின் வரலாறு' என்கிற நீட்ஷேய முறைப்படி பூக்கோ, "உண்மை', "உண்மையின் அரசாட்சி', போன்ற சொற்களை சித்தாந்தங்களுக்குப்' பதிலாக போடுகிறார். (ஏனெனில் சித்தாந்தம், கருத்தியல் போன்ற சொற்கள் மனிதவாத பொருள்கொண்டதால்). இந்தப் பதிலிகளை நாமும் போட்டுப்பார்த்தவுடனே சித்தாந்தங்களே மனிதத்தன்னிலையை உருவாக்குகின்றன என்ற அல்தூஸ்ஸரிய கருத்தை (மார்க்சியம் சொல்லும் மேற்கட்டுமானம் அல்லது பண்பாடு என்ற அரசு சித்தாந்தக்கருவி (ISA) மூலம் மனிதத்தன்னிலை புடம் போடப்படுகிறது) பூக்கோவிய ஜீனியாலஜி'யின் தொடக்கப்புள்ளியாகப் பார்ப்பீர்கள். ஏன் நீட்ஷேய அல்லது ஹைடேக்கரியத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடாதா? இல்லை. ஏனெனில் இருவரும் அரசியலற்றவர்கள் மிக மோசமான பாசிஸ்டுகள். புரட்சிகரமான அரசியல் விமர்சனம் ஏதாவது அவர்களிடம் உண்டா? இல்லை. மார்க்சியப் பார்வையில் ஓர் நடைமுறையையாவது பூக்கோ ஆய்வு செய்திருக்கிறார்.
ஆனால் ஓர் உயர்தரமான விமர்சனம் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மனிதமைய வாதி, அல்தூஸ்ஸர், பூக்கோ மூவரின் பிடிமானமும் இன்றைக்கு அரசியல் தளத்தில் வரலாற்றுவரைவியலில் பழமைவாதிகளாகப் பார்க்கப்படுகின்றனர். ஓர் அரசியல் நடைமுறை சார்ந்த மனிதமையவாத எதிர்ப்பு வரலாற்றுவரைவியலை நிறுவும் பெருமுயற்சியில் பூக்கோ இன்னமும் போராடிக் கொண்டுதானிருக்கிறார். அல்தூஸ்ஸர் உருவாக்கிய கோட்பாட்டு நடைமுறையின் கோட்பாடு' உண்டாக்கிய விஞ்ஞானம் / சித்தாந்தம் பிரச்சினையை கையாள்வதற்காகவே பூக்கோ பகுப்பாய்வு முறையைத் தொடங்கினார். அல்தூஸ்ஸரும் பூக்கோவும் மனிதமையவாத எதிர்ப்பு, ஹெகலிய எதிர்ப்பு மற்றும் நிகழ்விய எதிர்ப்பு சிந்தனையுடையவர்கள். அல்தூஸ்ஸரின் பொருள்முதல்வாத இருப்பியல் என்பது: "அரசு கருவியின், நடைமுறை சித்தாந்தத்தில் பொருளாயத இருத்தல் வேறு. ஒரு நடுகல் அல்லது ஒரு கைத்துப்பாக்கி பொருளாக இருக்கிறது என்பது வேறு. இரண்டும் இருப்பதற்கான சாத்தியப்பாடு அர்த்தம் ஒன்றல்ல. ஒரு பொருளைப் பற்றி பல்வேறு தொனிகளில் பேசிக்கொள்ளமுடியும் பல்வேறு அர்த்தங்களில் ஒரு பொருளின் தன்மை உள்வாங்கப்படும்.
ஆனால் எல்லாமே கடைசி நிகழ்வில் பௌதிகப் பொருள் என்ற அடிப்படையில்தான் பொருள்படும். பூக்கோ பொதுவாக ஒரு சித்தாந்தம் குறித்து கருத்துசொல்ல மறுப்பவர்; கருத்தியல் குறித்து அக்கறை கவலை கொள்ளாதவர். ஏனெனில் அடிப்படை பொருளாதார தேவைகளுக்குப் பிறகுதான் சொல்லாடல் சித்தாந்தம் எல்லாம் என்கிற மார்க்சிய புரிதலை வைத்திருக்கிறார். ஆனால் அல்தூஸ்ஸரோ சித்தாந்தம் கருத்தியல் போன்ற சமூக மேற்கட்டுமானம் குறித்து மார்க்சிய பார்வையில் வலுவான கோட்பாடுகளை வகுத்துள்ளார். ஏனெனில் தத்துவமோ சித்தாந்தமோ மக்களைக் கவ்விப்பிடிக்கையில் அது பௌதிகசக்தியாக மாறிவிடும் பொருளாயத இருத்தலாகிவிடும். இந்தப் பொருளாயத தன்மை கடைசி நிகழ்வாக குறுகிய அர்த்தத்தில் பொருளில் இருக்கிறது. இப்படித்தான் ஒரு பொருள் முதல்வாதிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது புரிந்து கொள்ளப்பட்டது. இந்தக் கடைசி நிகழ்வில் வேர்கொண்டுள்ளது' என்கிற சொற்றொடர், "மேற்கட்டுமானத்தின் கடைசி நிகழ்வில் பொருளாதார அடித்தளமே நிர்ணயம் செய்யும் " என்ற ஏங்கல்ஸின் கோட்பாட்டிலிருந்து எடுக்கப் பட்டதாகும்.
ஏங்கல்ஸ் சொன்னது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கட்டுமானத்தில் ஏற்படுத்தும் மாற்றம் அவ்வளவாக இல்லை; ஆனால் கடைசியில் நிர்ணயிப்பு என்பது சில விஷயங்களில் நடக்கிறது" என அல்தூஸ்ஸர் விளக்கம் கொடுத்தார். கடைசி நிகழ்வாக பௌதிகப் பொருளில் வேர்கொண்டுள்ளது பொருள் முதல்வாதம் என்றெல்லாம் பூக்கோ சொல்லவில்லை. ஆனால் பொருள்முதல்வாதத்தை மறுக்கவுமில்லை தன்னை ஒரு பொருள்முதல்வாதி என சொல்லிக்கொள்ள விழையும் பூக்கோ: “எனக்கும் அல்தூஸ்ஸருக்குமான மைய வேறுபாடே அறிவுத்தோற்றம் குறித்துதான்'' (1967). 'மார்க்ஸுக்கு சமகால மற்றும் முந்தைய அறிஞர்கள், சமூகவியலாளர்கள் அறிவுத்தோற்ற வரிசையில் வருபவர்தானேயொழிய புதிய அறிவுப்பூர்வ விஞ்ஞான சிந்தனைத் தோற்றம் மார்க்சிடம் இல்லை;
அவருக்கு முந்தைய மொத்த அறிவுத்துறைக்கும் ஒரு திருத்தம் கொடுத்து புதிய அறிவொளியைக் காட்டியவர் மார்க்ஸ் என்று கூற இயலாது' என வாதிடும் பூக்கோவும் அல்தூஸ்ஸரும் இருப்பியல் தளத்தில் வேறுபாடில்லை, மார்க்ஸை விமர்சிப்பதில்தான் இருவரும் வேறுபடுகின்றனர். "மார்க்ஸை மிகநெருங்கி வாசிக்கவேண்டும்; மார்க்ஸினுடைய சிந்தனைக்கட்டுக்குள் நாம் புகவேண்டும்; என்னுடைய தத்துவ ஆய்வே மார்க்ஸில்தான் வேர்பிடித்துள்ளது" அல்தூஸ்ஸர். ஆனால் பூக்கோவோ:" பழைய சிந்தனைக் கட்டுடையவர் மார்க்ஸ்; மார்க்ஸ் காலாவதியாகி விட்டார், இன்றைக்கு நாம் அவர் சிந்தித்ததையெல்லாம் தாண்டி ஆழ அகலத்துடன் நகர்ந்துள்ளோம்" என்றார்.
ஹைடேக்கர்
* விஞ்ஞானத்தின் புறவயத்தன்மை பருண்மைத் தன்மை என்ற கருத்துக்கே இடமில்லை; இனிமேல் பிரத்யட்ச பார்வை மட்டுமே; பிரத்யட்ச அறிதல் மட்டுமே' என்பது பூக்கோவிய ஜீனியாலஜி. வம்சாவளி ஆய்வாளரின் முதன்மை முறையியல் வரலாற்று முறையியலைப் போன்றது; உண்மையில் வம்சாவளி ஆய்வாளர் என்பவர் ஓர் புதிய வரலாற்றாய் வளரேயாவார். நம்முடைய சமூகத்திலிருப்பது போன்ற ஒரு பக்கா தாபனப்படுத்தப்பட்ட விஞ்ஞான சொல்லாடல் செயல்படுவதிலும் நிறுவனத்தோடு தொடர்புடையதுமான மத்தியத்து வப் படுத்தப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட அறிவை புரட்சிக்குத் தூண்டுவதே இந்தப் புதிய வரலாற்றாய்வாளரின் பொறுப்பாகும்.
விளிம்பு நிலைகுழுக்களின், ஒடுக்கப்பட்ட அறிவின் விடுதலைக்கான புரட்சியை நடத்தவேண்டி பூக்கோ போராடினார். இன்றையகால கட்டத்தில் விளிம்பு நிலை குழுக்கள் யார்? தேசியவாதிகள்.
பூக்கோவும், நீட்ஷேயும் சொன்னது:
“யதார்த்தம் குறித்த நமதுபுரிதலும், நாம் புழங்கும் கருத்தாக்க பிரபஞ்சமே மொழியால் கட்டமைக்கப்படுகிறது,'' என்பது சரியென்றால் உற்பத்தியின் சொல்லாடற் கருவி தரும் அதிகாரம் யார் கையிலிருக்கிறது?
இன்றைக்கு உற்பத்தியின் சொல்லாடற் கருவியை கட்டிமேய்க்கும் ஆதிக்கமேலாண்மை உடமஸ்தன் யார்? உலகமயமாக்கல்வாதிகள்தான்.
அதிகாரமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்தது என்றால் வரலாற்று நடைமுறைகள் உற்பத்தி செய்யும் அறிவு நடுநிலைமையானதாக இருக்க முடியாது; அந்த அறிவை அப்படியே எடுத்துக்கொள்ளவும் முடியாது
அதிகார உறவுகளின் ஒரு தொகுதி அவசியம் இதில் ஈடுபட்டிருக்கிறது. இதுமாதிரியான சொல்லாடல்கள் மூலம் யார் யார் அரசியல் ரீதியாக பயனடைகிறார்கள்; யார் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைச் சொல்ல விளைகிறது ஜீனியாலஜி.
மரபு மார்க்சிய மற்றும் பின்மார்க்சிய கொள்கைகளுக்கிடையிலான வித்தியாசத்தை வேறுபாட்டைச் சொல்வதற்கு அல்தூஸ்ஸரிய து பூக்கோவிய கோட்பாடுகளைப் பயன் படுத்துவர். வரலாற்றை இயங்கியலற்றதாகப் பார்க்கும் பின்மார்க்சியர் ஹெகலிய மார்க்சிய அடார்னோ'விய கருத்தாக்கத்திலிருந்தும் இன்றளவும் முக்கியத்துவமிக்க மரபு மார்க்சிய இயக்கவியலிலிருந்தும் விலகி நின்றனர். விமர்சன சிந்தனையுடைய ஹெகலியவாதிகள் ஒரு பிரிவு; நடைமுறை, நிறுவனம் சார்ந்த அணுகுமுறையை வலியுறுத்து வோர் மற்றொரு பிரிவு என பின்மார்க்சியர் இரண்டாகப் பிரிந்தனர். மரபுமார்க்சிய சொல்லாடலிலிருந்து முன் நகர்ந்த அல்தூஸ்ஸர் பூக்கோ இருவரின் கோட்பாட்டுத்தளம் பின்மார்க்சியத்திலல்ல. அல்தூஸ்ஸரு டைய வலுவான கொள்கை கோட்பாட்டுத்தளம் பூக்கோவினுடைய "சொல்லாடற் நடைமுறை'யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.