எதுவாயினும் சரி ,ஆனால் நினது விழிநீரல்ல,
என்னைச் சபி, என்னைத் தூற்று ,என்னைத் துரத்திவிடு,
என்னைக் கடிந்துகொள்,பிரமாணம் செய் ,
கடுமையாய் மற்றும் நயமின்றி நடந்து கொள்,
நினது பார்வையிலிருந்து என்னை ஆண்டாண்டுகளுக்கு தடைசெய்,
“நான் உன்னை நேசிக்கவில்லை” என
என்னை நோக்கி கூச்சலிடு:
ஆயினும் அழாதே ,
அழாதே என் அன்பே,
எதுவாயினும் சரி, ஆனால் நினது விழிநீரல்ல!
நான் நிஜமாகவே பிழையனாக இருப்பினும்
நான் பத்துமுறை நேரானவனாக இருப்பினும்
எத்தகையக் குற்றவுணர்வையும் நான் முறையிடுவேன்.
எனது பார்வையில் நினது விழிநீர் வீழும்போது.
-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
வீதியில் பனி பறக்கிறது,
மெதுவாய் , உருகியே , மெல்ல உயிரிழக்கிறது,
மெதுவாய் , பேசாது , ஒரு யுவதி கடந்து போகிறாள்,
தனது கண்ணீரைத் தானே விழுங்கியபடியே பெருமூச்செறிகிறாள்,
அவள் ஏன் இன்பமிழந்து இருக்கிறாள்?
அவள் அவதியுற்று ஏன் அழுது -அரற்றுகிறாள்,
புத்தாண்டின் பனித்துகள்கள் பறந்திருக்க?
அவள் தனிமையில் விடபட்டிருக்கிறாள் -
வாழ்வு எத்தனை குரூரமானது, எத்தனை அழுத்தமானது.
உவகையும் மற்றும் இன்பமும் மறுதலிக்கப்பட,
ஆகையால்தான்,
அவள் திக்கின்றி திரிகிறாள்,
தனது கண்ணீரை விழுங்கியபடி பெருமூச்செறிகிறாள்,
காற்றில் அபகரித்தும் மற்றும் அழுதபடியிருகிறாள்,
யோசனையில் ,
அநேகமாய் - அவ்வண்ணமே யானும் யோசிக்கிறேன்.
இன்பம் என்பதோர் வெற்றுப் -பொய்மையே,
யாவுமே உருகித் தீரவேண்டும், பறந்திருக்கும் பனித்துகள் போல்,
யாவுமே, பனி நிகராய் படபடத்திருக்கும்...
-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்
வா இன்றெனக்கு நினது வருகையைத் தந்தருள்,
நானுன்னை இறுதியாகக் கண்டு எத்துனை நாளானது.
நினது பாடல் எனது சோகத்தை விரட்டியடிக்கட்டும்
அது காலம் நெடிதுற எனது விருந்தினனாகத் தங்கிவிட்டது ..
ஒப்பில்லா அமைதியில் ஒரு வெண்புறா மேவிச்சென்று
எனது சாளரத்தின் மீது செங்குத்துச் சுருள்களாக எழுகிறது.
நேசமே , எனது கனாக்களில் நின்னை ஒருவேளைக் காணக்கூடும்,
ஆயினும்,
அந்தோ ,எனது துயிலை ஏனோ தவறவிட்டேன்!
-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நிசப்தத்துள் எனது நூலுடன் நீ அமர்,
எனது நூலின் மீது நினது நிழல் சாய்கிறது
நினது நேசத்தின் பிரதிபிம்பமாய்,
எனது நூலின் மீது நினது நிழல் சாய்கிறது.
இக்கணமுதல்;
ஒருவேளை நானுறையும் அவ்விடத்திற்குப் பிரயாணம் செய்,
நான் செய்யக் கூடிய கவிதைகள் எதுவாயினும் ,
நான் எவ்விடமெல்லாம் கடற்பயணம் செய்யினும் அன்றி சிறகடிப்பினும்,
நினது நிழல் ஒவ்வொரு பாடலிலும் சாய்ந்திருக்கும்.
-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
துயிலும் நுண் புற்கள்
இப்போது விழிப்புறுகிறது
கதிரொளியில் நிற்கிறது
நீண்டும் , தங்களது விழிகளைத் துடைக்கின்றன.
உலர்ந்த மஞ்சள் புற்கள்
இப்போது பச்சையமாகியுள்ளது,
சுகந்தம் பரப்பும் காற்றின் முன் சிரம் தாழ்த்துகிறது,
அவை முறுவலித்தபடியே ஒன்றுக்கொன்று முகமன் கூறுகிறது.
மங்கி மறைந்த நுண் புற்கள்
இப்போது சுதந்திரமாய் செழிக்கிறது.
பறவைகள் கிளர்ந்து இசைக்கின்றன,
”நண்பர்களே, நாம் வெகுநாட்களாய் பிரிந்திருந்தோம்!”
இளவேனிலின் ஆழுணர்வு எத்துனை வலியது!
வனப்பான நுண் புற்கள், எமது நண்பர்கள்,
இளவேனில் உன்னைத் வருவித்ததா?
அன்றி நீ தான் அவளை வருவித்தாயா?
-Chu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
காலைப் பொழுதில் ஞாயிறு
என்னோடும் என தந்தையோடும்
ஒருங்கே வனங்களில் உலவியது.
எனது வலதுகரம் அவரது இடது கரத்திலிருந்தது-
மின்னல் மரங்களினூடேவெட்டிப் பாயும் வாளாகிறது.
இலைகளின் மீதிருந்த குருதி கண்ட
விழிகளின் நடுக்கத்தில் பெரிதும அஞ்சினேன்.
- தந்தையே, தந்தையே, விரையுங்கள், ஈசாக்கை காப்பாற்றுங்கள்.
மதிய உணவுநேரத்தில் யாரும் விடுபடாதிருக்கவும்.
-எனது தனையனால் நான் கொலையுண்டேன், என் மகனே.
ஏற்கனவே எனதுக் குருதி இலைகளின் மீதிருக்கிறது,
தந்தையின் குரலோ நெறிக்கப் பட்டுள்ளது
அவரது முகம் வெளிறியுள்ளது
-நான் உரத்துக் கதற எத்தனித்தேன், அதை நம்பாதிருக்கவும் படபடத்தேன்,
எனது விழிகளைப் பிய்த்துத் திறந்தேன்.
நான் துயில் நீங்கினேன்.
-குருதியற்றிருக்கிறது எனது வலதுகரம்.
-Giloba-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஆபிரகாமைப் போல்
அந்நாட்களில் எனது தந்தையாரும்,
ஒவ்வொரு காலையும் விழித்தெழுந்து
தேவதைகளுக்கான ஆர்வம் பூத்த- விழிகளுடன்,
பொறுமையுடன் காத்திருப்பாரா.
அவரிடமிருந்து ஒரு திருவுளச் செய்தியைத் தாங்கி வந்துள்ளதை
அறிந்திருக்கிறார்.
ஒரு தந்தை தனது மகவை சுமப்பதைப் போலும்
வழியெங்கிலுமாக.
நாள்; நெடுந்தூர மலையொன்றில் வடிகிறது.
வருகையுறா மூன்று தேவதைகளாய் .
மாலை அவர்மீது நின்றது.
ஒளி விதைக்கப்பட்டுள்ளது.
அவரது கன்னங்களின் செவுள் பள்ளத்துள்.
இன்னுமொரு ஊதா தாணியமணி பொருத்தப்பட்டுள்ளது.
அவரது நெற்றிப் பொட்டில்,
அதுவொரு மாதுளை துண்டு போன்றிருந்தது.
-Geldman -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நெப்பமாய், நெப்பமாய் உள்ளது நிலவொளி ,
கிராமங்களுக்கு அப்பாலுள்ள பைன்காடுகளை திரையிட்டு மூடுகிறது,
வட்டமாய், வட்டமாய் உள்ளன வெண் மேகங்கள்
அதனூடே சிலத் தாரகைத் துளிகளைச் சலிக்கின்றன.
பால்வெளி எங்குள்ளது?
தூரத்தே பனி கொண்ட ஆழி மூட்டம்;
ஒருவேளை;
ஆங்கோர் கடற்கரையில், கடற்கன்னி இருக்கக் கூடும்
நிலாவின் முன் முத்துக்களை அழுதவண்ணம்.
-Kuo-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
இரு மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சிகள்
இணையாக வானுக்கு பறந்தன;
எதற்கென நான் அறியேன்,
ஒன்று திடீரெனத் திரும்புகிறது
தனிமையிலும் மற்றும் இரக்கமின்றியும் .
மற்றொன்றை விடுத்து.
அதற்கும்கூட வானுக்குள் பறந்திட மனமில்லை ,
வானுலகும் மிகு- தனிமை அடர்ந்த இடமே.
-Hsih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
பத்து வருடங்களுக்கு முன்பு
யாரோ ஒருவர் எனக்கொரு புன்னகையை ஈந்தார்,
அவ்வேளையில் - எதற்கென்று நான் அறிந்திருக்க்வில்லை -
அவர் இனிதே புன்னகைத்தார் என உணர்ந்தேன்.
அம்மனிதருக்கு நேர்ந்த்தை நான் அறிந்திருக்கவில்லை,
ஆயினும் அவரது புன்னகை மிஞ்சியது ;
அவரை மறக்கவும் என்னால் கூடவில்லை
புன்னகை நெடிதாய் நீடிக்க மேலும் நேசிப்புக்குரியதாய் மாறியது.
அபரிதமான காதல் கவிதைகளை அதன்மீதே புனைந்தேன்
பல-அமைவுகளை அதற்காகவே செய்துள்ளேன்,
அக்கவிதையை வாசித்த சிலர் சோகத்தை உணர்ந்தனர் ,
அக்கவிதையை வாசித்த பிறர் மகிழ்வை உணர்ந்தனர்,
மகிழ்வும் மற்றும் சோகமும்,
ஒற்றை புன்னகை மட்டுமே,
அவ்வாறு யார் புன்னகைத்தாரோ அவரைக் காணவே இயவில்லை,
ஆயினும்
அவரது நேசம் கனிந்த புன்னகைக்கு நான் நன்றியறிதலுடன் இருக்கிறேன்..
-Hu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அடிக்கடி நாம் உற்ற இரவைக் கழிக்கிறோம்,
ஒரு விசித்திரமான அறையில், காலைப் பொழுதில்,
அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என அறிந்துணர,
நமக்கு வழியேதுமில்லை,அதன் கடந்தகாலத்தையும் மற்றும்
வருங்காலத்தையும் , நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம்.
எல்லையில்லா சமவெளியொன்று நமது சாளரத்திற்கு அப்பால் நீள்கிறது,
அந்திப் பொழுதில் நாம் வந்தடைந்த அந்தச் சாலையை ,
நாம் சற்றும் தெளிவின்றி ஞாபகமடைகிறோம், இவையே நாமறிந்தவை.
நாளை நாம் விடைபெறப் போகிறோம் , மீண்டும் திரும்பப் போவதில்லை.
ஓ; உனது விழிகளை சாத்திக் கொள், அந்த உற்ற இரவுகளும்,
விசித்திரமான இடங்களும்,
நமது நெஞ்சில் பின்னிப் பிணையட்டும்
நமது வாழ்வோ சாளரத்தின் அப்பாலுற்ற சமவெளியாகிறது,
அந்தப் பனிசூழ் சமவெளியில், நாம்
ஒரு மரத்தையும் , ஏரியிலிருந்து எழும் ஒரு திடீரொளிப் பாய்வையும் அறிந்துணர்கிறோம் , அதன் இன்மையில் ,
நினைவிலிருந்து நீங்கிய கடந்த காலமும் ,
மேலும் மங்கலாக தென்படும் வருங்காலமும் ஒளிந்துள்ளது.
-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
என்னால் அதை மறக்கவே இயலாது,
மேற்கில் சமைந்திருக்கும் அந்த நீர்-நகரை,
அது வாழ்வின் குறியீடு-
ஆயிரமாயிரம் தனிமைகளின் ஒன்று -கூடல்.
ஒவ்வொரு தனிமையும் ஒரு தீவு,
ஒவ்வொரு தீவும் எனது நண்பனாகியுள்ளது,
எனது கரங்களை நீ குலுக்கும் போது,
அது நீரின் குறுக்கே அமைந்தப் பாலத்தை ஒத்திருக்கிறது.
நீயென்னைக் கண்டு புன்னகைக்கும் தருணம்,
அது நேரெதிர் -புறத்து தீவினில்
திடீரென விரிந்த ஒரு சாளரமாகிறது. .
ஆயினும் இரவு ஆழ்ந்து அசைவின்மையை அடையும்வரை காத்திரு,
இறுகமூடிய சாளரம் ஒன்று மட்டுமே காணத் தட்டுப்படுகிறது,
அந்தப் பாலத்தின் மீது மானுடர் சுவடென ஏதுமில்லை.
-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அலை தனது கரங்களை நீட்டுகிறான்,
மறுபடியும் மறுபடியும் அணைத்து மெய்தழுவகிறான்
மணல்;
அவளை அவன் முத்தமிடுகிறான்,
ஒரு முத்தமிடலுக்குப் பின்னர்,
அவன் காற்றால் பின்னுக்கு உந்தப்படுகிறான்.
அவன் சினந்து கர்ஜிக்கிறான்,
மீண்டும் அவன் தன்னிச்சையாக முந்திப் பாய்கிறான்,
கடற்கரை அருகிலுள்ள சின்னஞ்சிறு பகோடாவை தழுவி ,
இன்னும் அதீதப் பேருணர்வில் அவளை முத்தமிடுகிறான்
அந்த சின்னஞ்சிறு பகோடா மீதேற,
பனியொத்த தூவல்கள் சிதறுகின்றன, எங்கிலுமாக வாரியிரைக்கப்படுகின்றன.
அவன் நகைக்கிறான், ஒலிகூட்டி ஆனந்தக் களிப்பில் அவன் நகைக்கிறான்
ஆயினும் காற்று அவனை
மறுபடியும் பின்னுக்கு உந்தித் தள்ளுகிறது,
ஓ அலையே!
சிறுபொழுதேனும் நீ ஓய்ந்திரு.
ஏற்கனவே நீ அவளைத் துறந்து தொலைந்தாய்,
உனது நேசத்தின் ஞாபகம்
இவ்வண்ணமாக நீள்கிறது.
ஒரு சிறிதேனும் நீ சோர்வுறவில்லையா ?
-Wang-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அவளது விழிகள் இளவெம்மைச் சூரியன்,
இல்லையெனில் , ஏன், அவள் என்னைக் கண்டதும் ,
எனது உறைந்த நெஞ்சம் பிழம்பாய் ஒளிர்கிறது?
அவளது விழிகள் முடிச்சுகளை அறுக்கும் கத்தரிக்கோல்கள்
இல்லையெனில், ஏன், அவள் என்னைக் கண்டதும்,
எனது தளையுற்ற ஆன்மா விடுவிக்கப்படுகிறது?.
அவளது விழிகள் பேரின்பத்தின் திறவுகோல்;
இல்லையெனில், ஏன், அவள் என்னைக் கூர்நோக்கியதும்,
நான் சொர்க்கத்தில் இருப்பதாய் உண்ர்கிறேன்?
அவளது விழிகள் துயரின் எரியிழையானது,
இல்லையெனில், ஏன், அவள் என்னை வெறித்ததும்,
நான் கடுந்துயராழியில் அமிழ்கிறேன்?

In all the world I do not know
Two shorter words than "Yes" and "No".
Yet sometimes questions may arise
Causing such inner strife,
That to give one of these replies
May take up all one's Life.
-Gevorg Emin -
நின்னை முத்தமிடுவதாய் நேற்றிரவுக் கனவுற்றேன்,
ஓ, எத்தனை இனிமை ஊறிய வாய் !
துயில் நீங்கிப் பார்த்தபோது நினது வாய் தென்படவில்லை,
நினது மொட்டு -நிகர் வாயை எனக்கென கனவில் அனுப்புவாய் என விழைவேன்.
நான் துயிலும் தருணம் , கொசுவலையின் அகத்தே நின்னையே காண்கிறேன்;
நான் பருகும் போதெல்லாம், நின்னயே எனது குவளையில் காண்கிறேன்;
நான் வகுப்பறையில் உள்ளபோதும் , பலகையில் நின்னையே காண்கிறேனே அன்றி வரைபடங்களையல்ல.
-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஒரு மஞ்சள் கீற்று மரத்துள் பறந்தது,
பாருங்கள் ,
ஒரு மஞ்சள் ஓரியோல் பறவை, என்றது ஒரு குரல்.
தன் வால்நுனியை மேலுயர்த்துகிறது, அது ஒலி எழுப்பவில்லை.
அடர்ந்த கறுத்த தழைகளை,
அதன் ஒளிப்பிரகாசம் பொலிவுறச் செய்தது,
இளவேனில் ஒளிபோலும், தீச்சுடர் போலும் , பேருணர்ச்சி போலும்.
-Hsu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
எனது தனிமை ஒரு நீள்- அரவம்,
அமைதியாய் மற்றும் பேச்சற்றிருக்கிறது.
உங்களது கனவில் அதைக் காண நேரிட்டால்,
ஓ, எவ்வகையிலும் திடுக்கிட்டு விடாதீர்கள்.
அது எனது விசுவாசமிக்கத் தோழன்,
அதன் நெஞ்சமோ இல்ல- நினைவின் ஏக்கத்தில் எரிகிறது:
ஒரு வளமார் தழைவெளிக்காக ஏங்குகிறது,
அந்தக் காகக்- கறுமையின் பட்டிழைகள் உனது சிரத்தில்!
நிலவின் ஒளிக்கற்றைப் போன்று, லேசாக
அது உனது பக்கமாக நழுவுகிறது.
எனக்கென உனது கனவைக் களவாடுகிறது,
எரிதழல் மூண்ட கிரிம்சன் மலராய் ஒரு கனவு.
-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
எனது நயமற்ற முரட்டு விரல்-நுனிகளால்,
உனது தசையின் வெதுவெதுப்பை உணர்கிறேன்;
ஒரு மான்கன்று கானகத்தில் வழியை இழக்கிறது
மாய்ந்த இலைகளின் பெருமூச்சு மட்டுமே எஞ்சியுள்ளது.
உனது சன்னமான தாழ்குரல்
எனது பாழ் நெஞ்சில் அலறுகிறது,
நான் யாவற்றையும் வென்று கைக்கொள்பவன்,
எனது ஈட்டியையும் கேடயத்தையும் உடைத்துவிட்டேன்.
உனது ”மென் - கணப்பார்வை “
கொய்வதற்கானக் கசாப்புக்காரனின் எச்சரிக்கையை ஒத்திருக்கிறது;
உனது அதரங்கள்? அவைகளைக் குறிப்பிடவே அவசியமில்லை !
அதற்குப் பதிலாக நான் உனது கரங்களை நம்புவேன்.
பித்தம் தொனிக்கும் தேவதைக் கதைகளை நம்புவேன்,
ஆனால் நங்கையின் நேசத்தையல்ல.
ஒப்பீடு செய்வதில் நான் பரிச்சயமற்றவன்,
ஆனால்
நீயோ புனைகதை ஆய்மகளின் சாயலைக் கொண்டிருக்கிறாய்.
இசைமெட்டுக்கள் யாவையும் நான் தீர்த்துவிட்டேன்,
ஆயினும் உனது செவிகளை இன்புறுத்த இயலவில்லை;
நான் ஒவ்வொரு வண்ணத்தையும் பிரயோகிக்கிறேன்,
ஆயினும் ;
அதில் ஒன்றேனும் உனது பெருவனப்பை வசப்படுத்தவில்லை.
-Li-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
எனது புத்தகத்தை அப்பால் வைத்துவிட்டேன் ,
கரங்களில் முகவாயும், தனிமையுமாக,
அங்கு கானகத்தில் கூடடையும் பறவைகளில் கவனம் கொள்கிறேன்,
அவைப் பொருத்தமான வார்த்தையைத் தீர்மானிக்க இயலாது,
கவிதையொன்றில் முணுமுணுத்திருக்கிறது,
மாலையின் நிழல்கள் இறவாண்த்தின் மூலைகளில் கூடுகிறது.
வாயிற்கதவின் புறத்தே நானொரு நண்பனைச் சந்திக்கிறேன்,
என்னைக் காணத் தனது சட்டைக் கையில் கவிதையுடன் வருகைத் தருகிறான்
உனது கவிதையை வாசித்தறிய மிகுதியான நேரமிருக்கிறது
முதலாவதாக ;
நாமிருவரும் சென்று மலர்ச்சியுறும் பிளம்களைக் காணலாம்.
-Michizane -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
என்னைக் காணத் தனது சட்டைக் கையில் கவிதையுடன் வருகைத் தருகிறான்
உனது கவிதையை வாசித்தறிய மிகுதியான நேரமிருக்கிறது
முதலாவதாக ;
நாமிருவரும் சென்று மலர்ச்சியுறும் பிளம்களைக் காணலாம்.
-Michizane -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நான் சீப்பை நோக்குகிறேன், நீரை நோக்குகிறேன்,
உதிர்ந்து வீழ்ந்தவை எவையென நோக்குகிறேன்.
வயதும் இளமையும் தொலைதூரமாகிவிட்டன,
இரண்டையும் ஒருசேர வசமாக்க இயலாது.
எனது கேசம் நாள்தோறும் மெலிவதாய்ச் சொல்லாதே-
அதற்கு பதிலாக,
எனது பேரப் பிள்ளைகளின் தாடி வளர்வது எவ்வாறெனப் பார்!
-Tadaomi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
எனது நயமற்ற முரட்டு விரல்-நுனிகளால்,(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
உனது தசையின் வெதுவெதுப்பை உணர்கிறேன்;
ஒரு மான்கன்று கானகத்தில் வழியை இழக்கிறது
மாய்ந்த இலைகளின் பெருமூச்சு மட்டுமே எஞ்சியுள்ளது.
உனது சன்னமான தாழ்குரல்
எனது பாழ் நெஞ்சில் அலறுகிறது,
நான் யாவற்றையும் வென்று கைக்கொள்பவன்,
எனது ஈட்டியையும் கேடயத்தையும் உடைத்துவிட்டேன்.
உனது ”மென் - கணப்பார்வை “
கொய்வதற்கானக் கசாப்புக்காரனின் எச்சரிக்கையை ஒத்திருக்கிறது;
உனது அதரங்கள்? அவைகளைக் குறிப்பிடவே அவசியமில்லை !
அதற்குப் பதிலாக நான் உனது கரங்களை நம்புவேன்.
பித்தம் தொனிக்கும் தேவதைக் கதைகளை நம்புவேன்,
ஆனால் நங்கையின் நேசத்தையல்ல.
ஒப்பீடு செய்வதில் நான் பரிச்சயமற்றவன்,
ஆனால்
நீயோ புனைகதை ஆய்மகளின் சாயலைக் கொண்டிருக்கிறாய்.
இசைமெட்டுக்கள் யாவையும் நான் தீர்த்துவிட்டேன்,
ஆயினும் உனது செவிகளை இன்புறுத்த இயலவில்லை;
நான் ஒவ்வொரு வண்ணத்தையும் பிரயோகிக்கிறேன்,
ஆயினும் ;
அதில் ஒன்றேனும் உனது பெருவனப்பை வசப்படுத்தவில்லை.
-Li-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
எனது பாழ் நெஞ்சில் அலறுகிறது,
நான் யாவற்றையும் வென்று கைக்கொள்பவன்,
எனது ஈட்டியையும் கேடயத்தையும் உடைத்துவிட்டேன்.
உனது ”மென் - கணப்பார்வை “
கொய்வதற்கானக் கசாப்புக்காரனின் எச்சரிக்கையை ஒத்திருக்கிறது;
உனது அதரங்கள்? அவைகளைக் குறிப்பிடவே அவசியமில்லை !
அதற்குப் பதிலாக நான் உனது கரங்களை நம்புவேன்.
பித்தம் தொனிக்கும் தேவதைக் கதைகளை நம்புவேன்,
ஆனால் நங்கையின் நேசத்தையல்ல.
ஒப்பீடு செய்வதில் நான் பரிச்சயமற்றவன்,
ஆனால்
நீயோ புனைகதை ஆய்மகளின் சாயலைக் கொண்டிருக்கிறாய்.
இசைமெட்டுக்கள் யாவையும் நான் தீர்த்துவிட்டேன்,
ஆயினும் உனது செவிகளை இன்புறுத்த இயலவில்லை;
நான் ஒவ்வொரு வண்ணத்தையும் பிரயோகிக்கிறேன்,
ஆயினும் ;
அதில் ஒன்றேனும் உனது பெருவனப்பை வசப்படுத்தவில்லை.
-Li-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அவனை அண்மிக்க அனுமதித்தேன்
அமைதியாக
எனது செவியருகே கட்டைவிரல் நுனி ஊன்றிவர
எனது மார்பில் இதயம் நடுங்கும் கணம்
ஜுரமுற்ற எனது குருதியைத் துரிதப்படுத்துகிறது
முதலில் வனம், பின்னர் அடர்கானகம்,
உறைபனியின் இழைநயத்தைக் காட்டிலும்
கூடுதலான பனிமூட்டம்
தழைத்துச் செழித்த கவிதை,
முதலாவதாக
வரி வரியாக உறிஞ்சி ஈர்க்கும்
ஒவ்வொரு தஞ்சமின்மை
பின்னர் இழிமை தாக்குகிறது மற்றும்
பசிப்பிணியுற்ற
கூர்மதி நரி பதுங்குகிறது
மென்மையாய் ஊர்கிறது ஆயினும்
பெருவேட்கையுறுகிறது
மூலாதாரத்திலிருந்து அவனே
மைய உள்ளீடாயிருக்கிறான்
பின்னர் ஒசை பெருவெடிப்புற
வளைவுற்று , பாதையில் விரைந்து
அவன் குறுக்குவழியை கைகொள்கிறான்
ஒரு கூட்டத்துடன் ஒடியடியிருக்கிறான் அன்றி
தனியனாய் தப்பிக்கிறான்
இரவின் நிசப்தத்தில் அவன்
வெண் வனநரியின் ஆடையில்
நிலவொளியை கொணர்கிறான்
எனது சருமத்தின் நடுக்கத்தில்
அவன் வருகையுற்றதை உண்ர்கிறேன்,
கூடி ஒன்றிய மணிக்கட்டில்
அடைபட்டத் தலைசுற்றல்
நான் எழுதும் வினையில்
எனது கனவின் மீது பாய்கிறான்
மெல்ல அவனது ஆடைகளைக் களைந்து
அவனுடன் சயனிக்கிறேன்.
-Maris Teresa Horta-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
கனவில் எனது - இறை என்னை அடைந்தாரா
அவரது இன்-தீண்டலுக்கு நான் விழிதிறந்தேன்.
எனது கனவின் இன்ப -நிறைவை வசமாக்கிக் கொள்ள
எனது விழிகளைச் சிறிதேனும் மலர்த்தவில்லை .
இறையுள்ளத்தின் நேசக் குறிப்பை
எனது சின்னஞ் சிறு நெஞ்சத்தின் மையத்துள் பதிக்கிறார்.
துளியேனும் தண்ணீரை பருகாதிருக்கிறேன்
அந்தத் திருவுளக் குறிப்பைக் கரையாது காத்திட
விழியறைக்குள் வந்தடையேன், என் நேசமே.
உடனே இமைத்திரையை இறக்குகிறேன்
அவ்வண்ணமாக;
நான் மட்டுமே உன்னையங்கு தரிசிப்பேன்
நீவீர் வேறு யாரையும் காணாதிருப்பீர்.
-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஒருவழியாக இரவு அழிந்தது
இனிக் காலைப் பொழுதேனும் வீணில் அழியாதிருக்கட்டும்.
வண்டு பூக்களுக்கு வழிசெய்து விடைபெறுகிறது
நாரையொன்று வந்து சலனமின்றிச் சமைந்துள்ளது,
நீரைத் தேக்கும் வலிமையற்ற
வேகாதக் களிமண் குடம் போல்,
நாடித் துடிப்பற்ற உடலோ பயனற்றது.
என் நேசத்தவள் செய்வது இன்னதென அறியேன்
ஆகையால் நான் இடையறா பேரச்சத்தில் அதிர்கிறேன்.
காகத்தை விரட்டிக் கரங்கள் ஓய்கின்றன
எனது நேசத்தவளின் உள்ளக் கிடக்கையும்
எனக்கு நேரிடப் போவதையும் யாதென அறியேன்.
-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
ஓ அன்னப் பறவையே,
நாம் அந்நிலம் சேர சிறகசைப்போம்,
எங்கென் நேசத்தவள் பேரரசியாய் ஆள்கிறாளோ,
கயிறு இன்றி மற்றும் வாளியின்றி பருவ நங்கையர்
கிணற்றிலிருந்து நீரை இரைக்கின்றனர்.
அங்கு மேகமில்லாது மழையாகிறது-
உடலற்ற நம் உருவை முற்றிலும் நனைக்கிறது
நிறை- நிலா இரவுதோறும் சுடர்கிறது
காலை ஒவ்வொன்றும் கதிரொளிர்ந்து பிரகாசித்திருக்கிறது,
கணக்கற்ற ஞாயிறுகளின் பேரொளியுடன் .
-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நினது நெஞ்சத்தின் வலிய -வாதையை மொழியாதே-
அவர் மொழிகிறார்.
அவரை நாடாதிரு -அவர் நாடுகிறார்.
ஒரு எறும்பின் பாத தீண்டலைக் கூட உணரந்தறிகிறார்,
நீரின் அடியாழத்தில் கல்லொன்று நகர்ந்தாலும் -
அதை அவர் அறிந்திருக்கிறார்.
பாறையின் அகத்துள் புழு வசிப்பினும்,
அணுவினும் நுண்ணிய அதன் யாக்கையை
அவர் அறிந்திருக்கிறார்.
தோத்திரத்தின் ஒலியூற்றையும் அதன் மறைவான உண்ர்புலத்தையும்,
அவர் தனது இறைமையின் ஞானத்தால் அறிந்திருக்கிறார்.
அவரே புழுவிற்கான ஜீவாதாரத்தையும் வழங்கியுள்ளார்;
அவரே மெய்ஞானப் பாதையையும் புலனாக்கியுள்ளார்.
-Hakim Sanai-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
What appears to be truth
is a wordly distortion
of objective truth.
-Hakim Sanai-
Shanmugam Subramaniam liked this.
Ravi Subramaniyan
20 hrs ·
குளித்துவிட்டு
வாசத்துடன் வந்தவள்
நினைவின் ஈரத்தைத் துவட்டி
இழைஇழையாய் பிரித்து
காற்றில் காயவைக்கிறாள்
வாசத்தில் காயும்
நினைவுகளின் நிறம் இப்போது
கருப்பு
Shanmugam Subramaniam liked this.
அ. பிரபாகரன் added 3 new photos — with Sp Baalamurugan.
September 22 at 10:05pm ·
1.பந்துக்கள் இல்லாதவன்
'''''''''''''''''''''''''''''''''''''''''
ஊரூராய்
ரப்பர் பந்தை
விற்கும் வியாபாரியிடம்
கூந்தலை வடிவுடன்
முடிந்த பெண்
தன் பிள்ளைக்கு
இனாமாக ஒரு பந்தைத்
தருவாயா எனக்கேட்பாள்.
அந்தரத்திற்கும்
அந்தரத்திற்குமாய்
பட்டு எகிறும்
பந்தைக்கொடுத்து
எப்போதும்
இந்த உலகம் அழகானது
என்ற பாடலைப்பாடி
அந்த ஊரையும்
பந்துகளோடு கடப்பான்.
2.சஞ்சாரம் சீபத்த
'''''''''''''''''''''''''''''''''
மறுநாள் மழவன் திருமணம்
இருள் கோதும் அந்தியில்
பெரும் பாதையைவிட்டு
பாட்டையை பிடித்தான்
கிள்ளிவளவன்
வெண்பசு மிரள சரசரத்தது
பெயர் சொல்லாதது
வழியெங்கும் அத்திமணம்
நள்ளிரவில்
நாவலூரைத்தொட்டான் வளவன்
போனகாலையில் திருவதிகை
விடிந்தால் வெண்ணைநல்லூர்
கெட்டிமடத்தில் எரிந்த விளக்குகண்டு
அங்கு சென்றால்
நெடுஞ்சினனொடு கொடுஞ்சினன்
சீபத்தன் நல்வாழி நளன்
வெறியன் கோசாலைகாத்தான்
எரிபத்தன் பெருமுடிக்கிழான்
ஆகியோரும் அங்கிருக்க
வா வளவ என்றான் வெறியன்
நாளைமறுநாள் அன்பே தகளியான-Kabir-
கோவலூருக்கு வருவாய்தானே
இது சீபத்தன்
கோவலூருக்கும் வர விருப்பம்தான்
ஆனால்
சம்சாரிக்கேது சஞ்சாரம் சீபத்த.
***** ***** *****
"திருச்சாழல்" வாசித்துக் கொண்டிருக்கிறேன்."மழையிரவும் கடேரிக்கன்றும்" கவிதை சங்கப்பாடலுக்கு நிகரான கவி செழுமையோடு கண்டராதித்தனின் இந்த கவிதை எனக்கு முதன்முதலில் 1998ல் அறிமுகமானது.
தொடர்ந்து சிற்றிதழ்கள் சிலவற்றில் அவரது கவிதைகளை வாசித்தேன்.அப்போது சில கவிதைகள் மிகுந்த நேசிப்பையும் லாகிரித்தன்மையும் கொடுத்தன.பிறகுதான் தெரிந்தது அவைகள் என் வாழ்நிலப்பரப்புக்கு அருகில் முளைத்த கவிதைகளென்று.
தொடர்ந்து புதுமொழி கட்டமைப்போடு கவிதை சூழலுக்கு புதிய வாளினை பரிசாகக் கொடுத்து கவிதை அழகியலை மாற்றுதளத்திற்கு மடைமாற்றியது "சீதமண்டலத்து"க் கவிதைகள்.
"திருச்சாழல்"தொகுப்பில் உதிரி,நீண்டகால எதிரிகள்,அரசகட்டளை,வம்ச கீர்த்தி,பந்துக்கள் இல்லாதவன்,Semen test,மகளின் கண்ணீர்,சம்சாரம் சீபத்த மற்றும் திருச்சாழல் திரும்ப திரும்பவும் வாசிக்க தூண்டுகிறது.
நவீனத்தின் தளுக்கும் ,மரபின் புராதன வாசமும் கொண்ட "திருச்சாழல்"கவிதைகளை கொண்டாடலாம்.கவிஞர் கண்டராதித்தனுக்கு என் வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாட்டுப்புற வெளிகளில், மேயும் மந்தைகள்
பச்சையத்துடன் இரண்டறக் கலக்கின்றன ,
பச்சையம் அவைகளை உண்ணுதல் போலும்,
மேய்ச்சல் ஆடுகள் குரலொலித்தும்,
மணிகள் இசைத்தும், நாயின் குரைப்பில்
இயைந்திருக்கிறது.
ஆயரது குரல் தொலைகிறது,
அவை ஏகும் சேரிடம் பற்றி
ஒன்றும் சொல்லாது ( மந்தையின்
சேரிடம் உள்ளதென்றக் கற்பிதத்தில்)
நாட்டுப்புற வெளிகளில், ஆயர்கள் எங்குள்ளனர் என
யாருக்குமே புலனாவதில்லை,
அந்தியில் ஆயர்கள் எவ்விடம் பயணிக்கிறார்கள்
அவர்கள் சாலைகளை குறுக்காய் கடந்து
கார்கள் உறையும்படியாக வலிய - நிறுத்துகின்றனர்,
சில சமயங்களில் ஒட்டுனர்
விலங்குகளின் சருமத்தையும் கொம்புகளையும்
வகிர்ந்து செல்ல எத்தனிக்கின்றனர், ஆனால்
நாய்கள் கார்களை நேரெதிராய் எதிர்கொள்ளும் ,
ஆயர்களுடன் உள்ள சகாவைப் போலும்
திசை கழன்று செல்லச் செய்விக்கின்றன.
இவ்வுலகிற்கென விதிகள் உள்ளன,
மானுட இயல்பு மாற்றமுறாது.
விலங்குகளும்,நாட்டுப்புறவெளிகளும்- ஏதோ
ஒற்றைத் தனியுடலாய் உருவுற்றது போல்,
இருண்மை ஆளுகையின் புலப்படா எல்லையை,
அதன் சட்டங்களை மற்றும் திசைவழியை,
ஊடுருவ நம்மில் யாராலும் இயலாதது போல்,
ஆயர்களும் மோனத்தில்,
கடவுளர்களால் வழிநடத்தப்படுதாய்த் தோன்றுகிறது.
-Nuno Júdice-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)