Sunday 20 September 2015

Shajehanmubarak Js

நேற்று வரை பதின்மூன்று " மணிச் சித்திரங்களைப் " பதிவிட்டிருந்தேன். அவைகளுக்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்திருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 80 களில் நான் வசித்து வந்த புஞ்சை புளியம்பட்டி எனும் ஊரில் வைத்து எனக்கு அறிமுகமானார் மணி. அதற்கு முன் நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. மணியின் தந்தை வழிப் பாட்டியின் ஊர் புளியம்பட்டி. மணியின் தம்பி முறையாகும் ஓர் உறவுதான் ' என் அண்ணனும் இது மாதிரி புத்தகமெல்லாம் படிப்பார்...... வருவார். வந்து உங்களைப் பார்க்கச் சொல்கிறேன்' என்று அறிமுகப் படுத்தியது. பிறகு தன் தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மணி சிறிது காலமே புளியம்பட்டியில் இருந்து மறைந்தார். நீலமலைப் பனிமலர் என்கிற சிற்றிதழை அவர்தான் கொண்டு வந்தார், ஊட்டியிலிருந்து. எத்தனை இதழ்கள் வந்தன என்ற விபரங்கள் என்னிடம் இல்லை. காப்காவின் அவர் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று அதில் இருந்தது. என் நினைவு சரியானதென்றால் திரு. பிரம்மராஜன் அவர்களுடைய "மீட்சி" இதழும் ஊட்டியிலிருந்துஅப்போது வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் கவிஞர் சுகுமாறன் அவர்கள் மணியைப் பற்றி ஒரு கட்டுரையைத் தன் தொகுப்பு நூலில் எழுதியிருந்தார். அது தவிர மணியைப் பற்றிய பதிவு வேறொன்றுமில்லை. அவர் காலமான முதலாம் ஆண்டு நினைவு நாளில் "பயணம்" எனும் சிற்றிதழில் அவரைச் சுட்டி ஒரு கவிதை எழுதியிருந்தேன். அவ்வளவுதான். பேராசிரியர். கால. சுப்பிரமணியம் கருத்திட்டிருந்ததைப் போல எல்லாம் விழலுக்கு இறைத்த நீரான வருத்தம் எனக்கும் இருக்கிறது... மீண்டும் " மணிச் சித்திரங்களுக்கு" விருப்பம், கருத்துத் தெரிவித்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
Share
18 people like this.
Comments

Shajehanmubarak Js
Yesterday at 7:01am ·
காலத்தின் திரை ? காலமே திரை ? மனிதனின் தூரிகை ? மனிதனே தூரிகை ? வண்ணத்தின் வாழ்வு ? வண்ணமே வாழ்வு ? " எவற்றின் நடமாடும் " சித்திரங்கள் நாம் ? _ கனிவுடன் மருத்துவரைப் பார்த்தார் மணி. 'நகரமெங்கும் அன்பைத் தேடி அலையும் ஆத்மாநாம் நான் ' மணியின் புன்னகை கண்டு மருத்துவர் வணங்கினார், மணி இருமினார்... தெறித்த குருதித்துளிகள் திரையில் வீழ்ந்து வழிந்து முடித்தன மணியின் சித்திரங்களை ....
Share
Kaala Subramaniam and 19 others like this.
Comments

Amuthan Ismail Arputham..kavithai.. Perunthukkam
Yesterday at 8:02am
News Feed

Ibn Abdul Azees
September 18 at 8:08pm · Edited ·
‪#‎PAK‬ ‪#‎LOGIC‬
இந்தப் பெண்ணியவாதிகள் எல்லோருமே ஃபாஸிஸ்டுகள். ஹிட்லர் வகையராக்கள். உலக மக்கள் தொகையில் சரிவிகித அளவுள்ள ஆண் வர்க்கம் அத்தனை பேரும் (95% சதவீதம் கூட இல்லை, நூறு சதவீதம் ஆண்களும்) பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று 99% சதவீத பெண்ணியவாதிகளஃ பழி சுமத்துகிறார்கள். உங்களுக்குத் தெரியுமா எத்தனை அலுவலகங்களில் பெண்ணுக்கு கீழே ஆண் வேலை பார்க்கிறான். ஆம் ஒரு காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டதில் ஆணுக்கும் பங்கிருக்கிறது. ஆனால் இப்பொழுது ஆண் மட்டுமா பெண்ணை அடிமைப்படுத்துகிறான். குடும்பத்தில் ஒரு பெண் அடிமைப்படுத்தப்படுவதற்கு சக பெண்தான் காரணம். மருமகள்களைக் கொடுமைப்படுத்துவது மாமியார்கள்தான். மேலும் இன்றைய மருமகள்கள்தான் நாளைய மாமியார்கள் ஆகிறார்கள். அப்போ பெண்களை அடிமைப்படுத்துவதில் கணிசனமான பங்கு பெண்கள்தான் வகிக்கிறார்கள். அதற்காக பெண்ணிவாதிகள் எல்லோரையும் ஹிட்லரோடு ஒப்பிடமாட்டேன். ஆனால் மனித சமூகத்தில் சரிபாதி விகிதம் கொண்ட ஆண்களை ஆதிக்க வாதிகள் என்று அடையாளப்படுத்தியதன் மூலம் அவர்கள் நிச்சயமாக ஹிட்லரின் வழியைப் பரிசீலித்து இருக்கிறார்கள்.
Disclaimer:- இந்தப் பதிவு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் பெண்களைக் கிண்டல் செய்யும் பதிவு என்று நினைத்துக் கொண்டு Like போட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை மக்களே! Yamuna Rajendran Shajehanmubarak Js
6 Likes3 Comments1 Share
Like   Share

Shajehanmubarak Js
September 18 at 5:35am ·
" ஷாஜி மணி ஆறாச்சு " என்று ரமணண் போலச் சிரித்தார் மணி. ரமணனுக்கு அமிர்தம் வேண்டும். ரமணனே அமிர்தம். ரமணாமிர்தம். அமிர்தம் அய்ந்து ரூபாய்க்கும் கிடைக்கும்! அய்ம்பது ரூபாய்க்கும் கிடைக்கும்! அய்ம்பதின் வழிக்கு எப்போதும் அடைப்பென்பதால் அய்ந்துக்கு வழி கிடைக்கும். ரமணோபதேசமும் நடக்கும். " மணி, ஒரு நூல் தான் வித்தியாசம்! நீங்கள் நானாகலாம்! நான் நீங்களாகலாம்." ரமணனாகப் போவார் ராம்சுரத் குமாராக வருவார் மணி கை விரலிடுக்கில் புகையும் சிகரெட்டோடு!
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
September 17 at 8:47am ·
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது வந்த மாமணி நீ! காலுக்குச் செருப்புமின்றிக் கால் வயிற்றுக் கஞ்சியுமின்றி வீணுக்குழைத்தவரைக் கண்டு விழித்திருந்து உழைத்தவன் நீ! உன் பாதச் சுவடுகள் படாதிருந்திருந்தால் பாவப்பட்ட எங்கள் அகலிகை வாழ்க்கை கல்லாகவே இருந்திருக்கும்! எங்கள் தலைமுறையைக் கைகொடுத்துக் கரை ஏற்றி விட்டவனே நீதான்! உன் வார்த்தைகளில் உருவான சூறைக்காற்று எங்களை நோக்கித் திரும்பிய போது தென்றலாய்ப் பரிணமித்தது! மூவாயிரம் வருடத்து விஷ விருட்சத்தைக் கெல்லி எறிய முயன்ற முதல் கோடாறி உன்னுடையதுதான்! இனியும் ஒரு மூவாயிரம் வருடம் உன் கரம் பிடித்து நடந்தால் ஒழிய எங்களுக்கு மூச்சும் இல்லை; பேச்சும் இல்லை! தந்தை சொல் தட்டிய தனயன்களைப் பெற்றதுதான் உனக்கு நேர்ந்த ஒரே அவலம்! எப்படியும் நீ வைத்த புள்ளியிலிருந்துதான் எவரும் கோலம் போட வரமுடியும்! உன்னை வீழ்த்தத்தான் உன் எதிரிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்! "கிரேன்" வைத்துத் தூக்கிப் போட நீ சோவியத் ருஷ்யாவின் விளாதிமீர் இலியிச் லெனின் அல்ல! உன் தாடி மயிர் ஒன்று போதும் அவர்களைத் தூக்கித் தூக்கில் போட! உன் விரல் பிடித்து நடந்தோம்! உன் விரல் பிடித்து நடக்கிறோம்! உன் விரல் பிடித்து நடப்போம்! உனக்குக் கோடி நன்றி தந்தையே!
Share
16 people like this.
12 shares
Comments

துணைத் தளபதி மார்கோஸ் நன்றிகள் பல பல.
September 17 at 9:44am

மழைக்குருவி நன்றி நன்றி நன்றி !!!
September 17 at 9:53am

களந்தை பீர் முகம்மது ”நீ வைத்த புள்ளியிலிருந்துதான் எவரும் கோலம்போட முடியும்” - நாமும் போடுவோம்.
September 17 at 10:36am

நாத்திகனாய் நான் ஆகா... அருமை தோழரே
September 17 at 11:29am

Shajehanmubarak Js
September 17 at 7:28am ·
இந்து தமிழ் நாளிதழ்_ 17.9.15 இன்றைய வெ. சந்திரமோகன் நடுப் பக்க கட்டுரை_ சென்னைக்கு வந்த சோதனை_ சென்னைக்கு எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன, மதுரைக்கு பாண பத்திரனால் வந்தது போல, வைகைக் கரை உடைந்து வெள்ளம் நகருக்குள் புக.. அணை போடும் திருவிளையாட்டில் ஆணை போட்டவன் உள்பட அத்தனை பேரும் உதிர்ந்த பிட்டு உண்டவனால் அடிபட்ட கதை போல சென்னைக்கும் பல சோதனைகள் வந்திருக்கின்றன! ' செனனை மனதே' என்று சீறிய ஆந்திராக்காரர்களால் உண்டான சோதனையிலிருந்து அதற்கு முன் ' எம்டன்' வந்து குண்டு போடப் போகிறான் என்ற செய்தி பரவி ஊர் மக்கள் ஊரைக் காலிசெய்யத் துவங்கியது வரை நிறைய சோதனைகள். சந்திரமோகனின் தண்ணீர் புராணம் சென்னையின் பெரும்பான்மை நடுத்தர வெள்ளைக் காலர்களின் விம்மல்களை வெளிப்படுத்துகின்றன. பாவம்! கணிணியும் தகவல் தொழில் நுட்பமும் படித்து விட்டு உலகப் பெரும் நகரங்களில் தண்ணீர் குடங்களுடன் தெருவில் நின்று கொண்டிருக்கும் இளைய பாரதத்தினரை நினைந்தால் பாரதியும் நெஞ்சு பொறுக்க முடியாமல் கவிதை எழுதி விடப் புறப்பட்டு விடுவார்." ஓய்! கவிதை எழுதியது போதுமய்யா! குடத்தைப் பிடியும்! ஒரு குடம் தண்ணீராவது கிடைக்கும்!" என்று பாரதியின் கையிலும் ஒரு பிளாஸ்டிக் கவிதை மன்னிக்கவும் பிளாஸ்டிக் குடம் திணிக்கப்படவும் வாய்ப்புண்டு!! ஏனெனில் அவரும் திருவல்லிக்கேணி எனும் நீர் நிரம்பிய குளம் இலங்கிய சென்னையின் சிங்காரப் பிரஜையாக தன்னுயிர் நீத்த பெருமகன் அல்லவா? நிற்க, சந்திரமோகன் குறிப்பிட்டது போல கோயம் பேடு வரை வந்து குசலம் விசாரித்து விட்டு மறுபஸ் பிடித்து ஊர் திரும்பும் " பாக்கியவான்களில்" அடியேனும் ஒருவன்! மூன்றாவது உலகப் போரைக் கூடத் தடுத்து விடலாம்! இனிமேல் யாராவது சென்னையில் உத்தியோக லட்சணம் பார்க்கும் மாப்பிள்ளை என்று சொல்லி வந்து 'பெண்' கேட்டால் நடக்கும் போரை யாராலும் தடுக்க முடியாது! ' சென்னையும் தண்ணீரும்' என்ற பின் நவீனத்துவ கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்!! ஆமாம்! சொல்லிப்புட்டேன்!!
Share
20 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 17 at 6:11am ·
புதுமைப்பித்தனின் செண்பகராமன் பிள்ளை. க நா சு வின் சோமுப் பண்டாரம். சு ராவின் புளியமரத்து தாமோதரன். தி ஜா வின் பாபு மற்றும் ரங்கண்ணா. மௌனியின் சேகரன் மற்றும் சுசீலா. ஜெயகாந்தனின் ஹென்றி. காசியபனின் கணேசன். ஜி. நாகராஜனின் கந்தன். எல்லாமாக இருந்தார் மணி! காப்கா அல்லது காம்யூவின் சிறுகதை. கிளிகளுக்கு கூண்டுகள் செய்து விற்பவன்! வேலியோரம் கிடந்து இறந்து போவான்! மணியின் மொழி பெயர்ப்பு இவ்வாறு முடிந்திருக்கும்! " ஏனோ இவன் வாழ்க்கை இவ்வாறு முடிந்தது!" மணி! மணி!! மணி!!!
Share
Kaala Subramaniam and 20 others like this.
Comments

Shajehanmubarak Js
September 16 at 6:38am ·
எதற்கும் யாருக்கும் அகப்படாத பேருண்மை.. இன்மையின் இருப்பா? இருப்பின் இன்மையா? பையனைப் பத்திரிக்கையியல் படிப்பில் சேர்க்க பெங்களூர் வந்த அப்பா , நடு இரவில் இரயில் நியைத்தில் பிளாட்பார பெஞ்சில் படுத்துத் தூங்கினார்! அப்பா! குளிரின் சுவையறிய ரெண்டு பாட்டில் வாங்கி ஒன்றை மகனின் அறைக்கு அனுப்பி வைப்பார் அப்பா! அப்பா! கேட்கும் போதெல்லாம் கழுத்துச் செயினில் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வெட்டித் தருவாள் தோழி! தோழி! பிரிய அம்மா! செல்லப் பாட்டி! நான்! நீங்கள் ! வேறென்ன எனக்கு வேண்டும் எனக்கு சொல்லுங்கள் ஷாஜி என்றார் மணி! யாருக்கும் அகப்படாத பேருண்மை .. இன்மையின் இருப்பா? இருப்பின் இன்மையா?
Share
Kaala Subramaniam and 20 others like this.
Comments

Shajehanmubarak Js
September 15 at 7:27am ·
ஒரு பிரபல எழுத்தாளர் நகருக்கு விஜயம் செய்தார். ஒரு பிரபல எழுத்தாளர் சிற்றிதழ் துவங்கினார். கரை புரளும் உற்சாகம் மணிக்கு! கரை புரண்ட உற்சாகம் கரை ஏறிய ஓட்டல் பில் அலைகளாக மாறி, ஓர் துர் அதிர்ஷ்டம் , மணியின் அப்பா காலைச் சென்றடைந்து நனைத்ததுமில்லாமல் அவரைக் கடலுக்குள் வேறு இழுக்கப் பார்த்தது! அப்பா கடலுக்குச் சொந்தக்காரர் இல்லாவிட்டாலும் துளித் துளியாய்ச் சேகரித்து வாழ்வை நதியாக்கிக் கொண்டவர் ! ' கண்ட நாய்களெல்லாம் வந்து நக்கிக் குடிக்க என்னுடையது என்ன தர்ம குளமா?' என்பது அப்பாவின் கேள்வி. குளத்தின் உடைப்பை அடைக்க அணை போடச் சொல்லி உத்தரவு போட்டார்! பிள்ளையோ ஒரு கிழவியிடம் அல்ல ஒன்பது கிழவிகளிடம் உதிர்ந்த பிட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டு அப்பா பணித்த வேலை எதுவும் செய்யாமல் " காப்கா என்றும் காம்யூ " என்றும் பூந்து பூந்து விளையாடினார் ! இந்த " இழவு விளையாட்டு " அப்பாவுக்குப் புரியுமா என்ன? அரிமர்த்தன பாண்டியனானார் அப்பா! அடிபட்டுப் போனார் மணி!
Share
17 people like this.
Comments

Shajehanmubarak Js
September 14 at 5:26am ·
" உள்ளே போய் விட்ட மனிதத்துவத்தை வெளியே இழுத்து நிறுத்துவதல்ல கலையின் வேலை. வாழ்வின் சிடுக்குகளில் சிக்கிக் கொண்ட வாழ்வை உணர்வதும் விவரிப்பதும் விவாதிப்பதும் கேள்விகளை எழுப்புவதுமே கலையின் வேலை. உலக இலக்கியத்தின் பிதாமகன்கள் வேத வியாசனாகட்டும் வால்மீகியாகட்டும் நம் புதுமைப் பித்தனாகட்டும் தாஸ்தாவெஸ்கி , ஹெமிங்வே, காப்கா, காம்யூ ஆகட்டும் அனைவரும் திருடர்கள், வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள், தற்கொலைக்காரர்கள். அழிந்த ஆத்மாநாமின் ஜீவன் சுடர் விட்டது எதனால்?" காலையில் இவ்வாறு மணி பேசினார். " தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டா ஷாஜி! எங்கூட அவளால வாழ முடியலே ஷாஜி! அவ செத்துப் போயிருவா ஷாஜி" மாலையில் இவ்வாறு மணி அழுதார்.
Share
15 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 13 at 6:57am ·
" வாங்க வாங்க வாங்க " குனிந்து குழந்தைகளை வாரி எடுத்துக் கொள்ளும் போது மணியின் முகம் கோடிப் பிரகாசம் கொள்ளும். நீண்ட கரங்களுக்குள் குழந்தைகள் தாவி ஏறிக் கொள்ளும். இரு புறம் சட்டையைப் பிடித்து இரண்டு சிறுவர்கள் தொங்க மணி நடை போடுவார்.. கடைக்குச் சென்று திரும்பி வருகையில் எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் மிட்டாய் கவர்களும் கொழிக்கும். " இதுதான் இதுதான் ஷாஜி.. " என்று எதையோ கூற வந்து முடிக்காமல் வாய் நிறையப் புன்னகையுடன் குழந்தைகளை இறக்கி விடுவார் மணி. பரவசம் நிறைந்த மணியின் முகம் அற்புத ஓவியம்!
Share
Kaala Subramaniam and 22 others like this.
Comments

Krish Ramadas அன்பிர்க்குமுண்டோ அடைக்கும் தாழ்.
September 13 at 9:50am

Jawahardeen Shajahan Anarkali நானும் அக்குழந்தைகளில் ஒருத்தியா?
September 16 at 9:39pm

Shajehanmubarak Js ஆம்.
1 · September 16 at 9:50pm

Shajehanmubarak Js
September 12 at 6:15am ·
புத்தன் கிடந்தான் ஏசு கிடந்தான் ஜராதுஷ்ரா கிடந்தான் நாயகம் கிடந்தான் நீட்சே கிடந்தான் வள்ளுவன் கிடந்தான் இளங்கோ கிடந்தான் ராமலிங்கன் கிடந்தான் பாரதி கிடந்தான் காந்தி கிடந்தான் ராமசாமி கிடந்தான் காரல் மார்க்ஸும் குப்புறக் கிடந்தான் அய்லான் கிடந்தான்.
Share
19 people like this.
2 shares
Comments

Shajehanmubarak Js
September 12 at 5:59am ·
அறையெங்கும் இசைத் தட்டுகள் இறைந்து கிடந்தன. எல் ஷங்கரின் டபுள் வயலின் ஒருபுறம். பாலக்காடு மணி அய்யரின் தனித் தவில் ஒருபுறம். உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கம். அல்லா ரக்கா, ஜாகிர் உசேனின் தபேலா ஆவர்த்தனம். கன்னட ராஜ்குமாரின் பக்தி மழை. மதுரை சோமுவின் கிடுகிடுக்க வைக்கும் உச்ச ஸ்தாயி. எஸ். பாலசந்தர், சிட்டிபாபு, காயத்ரியின் வீணைகள். மாலியின் புல்லாங்குழல்... ஓர் இசைச் சக்கரவர்த்தி போல வீற்றிருந்தார் மணி.
Share
Kaala Subramaniam and 28 others like this.
Comments

Slm Hanifa அது அபூவத்தின் தருணம் .அந்தக்காட்சியைக்கண்ட நீங்கள் பாக்யம் பெற்றவர் ...
September 12 at 6:57am

Kaala Subramaniam நீலமலைப் பனிமலர் மணிக்கண்ணன் பற்றி அன்றே அதிகம் யாருக்கும் தெரியாது, அதுவும் இப்போது சுத்தமாகத் தெரியாது. எனவே அவரை அறிமுகப்படுத்திவிட்டுப் பதிவுகளைத் தொடர்ந்தால் நல்லது. யாரைப்பற்றி எதைப்பற்றி எழுதினாலும் பிரமாதமாகக் கவனிப்பதுபோல் தோன்றும், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது.
3 · September 12 at 8:06pm

Shajehanmubarak Js நன்றி. உங்கள் வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறேன். மணி என்பது பெயர் மட்டும்தான். ஒரு பொதுவான சித்திரத்தை எழுப்பவே முயல்கிறேன்.
3 · September 13 at 9:39am

Shajehanmubarak Js
September 11 at 6:07am ·
மடித்துக் கட்டிய பூப்போட்ட கைலி. கறுப்பு நிற முண்டா பனியன். முறுக்கி விடப்பட்ட மீசை. கலைத்து விடப்பட்ட தலை முடி. எல்லாவற்றுக்கும் மேல் கன்னத்தில் பெரிய கருப்பு மச்சம். கக்கத்தில் கட்டு சேவல் . வலது கரத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட துப்பாக்கி. .. நவீன பாரதியைப் போல இருந்தார் மணி. " இப்புடி ஒரு போட்டோ எடுத்துக் குடுங்க ஷாஜி " என்றார். எடுத்தேன்.
Share
13 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 11 at 5:29am ·
கவிதை என்று தெரியாமல் படித்த கவிதைகள் உன்னுடையவை தான் பாரதி! கவிதை என்று தெரிந்த பின்பும் படித்த கவிதைகள் உனனுடையவை தான் பாரதி! வேறென்ன வேண்டும் உனக்கு சொல்!
Share
25 people like this.
1 share
Comments

Radhakrishnan Ramanathan Nejam!
September 11 at 7:00am

Indran Rajendran சத்திய வாக்கு பிரமாணம்
September 11 at 2:08pm

Siva Kumar கவிதாஞ்சலி....!
September 11 at 3:27pm

Slm Hanifa பாரதி உன் கவிதைகள் படித்து கர்வம் கொண்டேனடா ..
September 11 at 3:38pm

Saravanan Chandran
September 10 at 9:41am ·
தர்க்கம் நன்கு சமைந்து வந்து விட்டால் யாரையும் எளிதில் அடித்து வீழ்த்தி விடலாம். அதிலும் கொஞ்சம் கலைத்துவமும் சேர்ந்து விட்டால் வாசகன் கதி அதோகதி தான்! சரவணன் சந்திரனின் " ஐந்து முதலைகளின் கதை"யை வாசித்து ஒரு வாரமாகி விட்டது. ஆனாலும் இரவில் இருளில் விழிப்பு வந்து விட்டால் அரை குறைத் தூக்கத்தில் மனக் குளத்தில் முதலைகள் நீந்துகின்றன. சில நேரம் கரையேறி மிரட்டுகின்றன. கற்சிலைகள் போலப் படுத்துக் கிடந்து கண்களை மட்டும் திறந்து பார்க்கின்றன..... நான் உலக அனுபவக் கடலில் குதித்தவனல்லன...
See More
48 Likes1 Comment
Like   Comment   Share

Shajehanmubarak Js
September 10 at 7:02am ·
தர்க்கம் நன்கு சமைந்து வந்து விட்டால் யாரையும் எளிதில் அடித்து வீழ்த்தி விடலாம். அதிலும் கொஞ்சம் கலைத்துவமும் சேர்ந்து விட்டால் வாசகன் கதி அதோகதி தான்! சரவணன் சந்திரனின் " ஐந்து முதலைகளின் கதை"யை வாசித்து ஒரு வாரமாகி விட்டது. ஆனாலும் இரவில் இருளில் விழிப்பு வந்து விட்டால் அரை குறைத் தூக்கத்தில் மனக் குளத்தில் முதலைகள் நீந்துகின்றன. சில நேரம் கரையேறி மிரட்டுகின்றன. கற்சிலைகள் போலப் படுத்துக் கிடந்து கண்களை மட்டும் திறந்து பார்க்கின்றன..... நான் உலக அனுபவக் கடலில் குதித்தவனல்லன். எனவே ஒரு ஒப்பீட்டாளனும் அல்லன். ஆனால் சுய அனுபவத்தின் சாரத்தை உறிஞ்சி வாழ்ந்து உண்மைகளை நாடிப் பயணம் போகிறவன்..... ' திரை கடல் ஓடி திரவியம் தேடுதல் ' உலக மாந்தர் தமக்குள் இட்ட பெருமுடிச்சுகள். வாழ்வின் எளிமையைத் தொலைத்துப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முதலைகளுக்குத் தான் வரவேற்பு, மரியாதை, பட்டுக் குஞ்சலம் எல்லாம்! பிரிட்டனின் லங்காஷயர் நூல் நமது சேலம் நெசவாளிகளின் கழுத்துகளுக்கு சுருக்குக் கயிறானது மாபெரும் சோக வரலாறு. வாஸ்கோடகாமாவும் ராபர்ட் கிளைவும் அவர்களது " தைமூருக்கு" வந்து நிகழ்த்திய வரலாறு இன்று வரை அச்சம் தரும் தொடர்கதைகளாக, தொடர் கவிதைகளாக விளங்குகின்றன... சரி,விடுங்கள்! சரவணனின் ஐந்து முதலைகள் கதை இவ்வளவும் கிளப்பி விடுகின்றன. இவனும் பீட்டரும் சந்தோஷும் தர்முவும் காவியனும் ஏசாவும் முபாரக் அண்ணனும் ஏன் இப்படி பணத்துக்குப் பாடாய்ப் படுகிறார்கள் என்பது கேட்கப்பட வேண்டாத கேள்வி. சமூகத்துடனான நமது உரையாடல் அங்கே சுற்றி இங்கே சுற்றி நுட்பமான வணிகத்தில் வந்து முடிகிறது. சமூக ஆய்வாளர்கள் நமது உறவுகள் பண உறவாகி விட்டது எனப் பிரகடனம் செய்து வருடங்களாகி விட்டன. அந்தப் பிரகடனத்தின் துணைக் கையெழுத்துதான் சரவணன் சந்திரனின் " ஐந்து முதலைகளின் கதை ." அவசியம் எல்லோரும் படித்துப் பாருங்கள்.
Share
14 people like this.
1 share
Comments

Saravanan Chandran sir thank u so much
September 10 at 9:39am

களந்தை பீர் முகம்மது இதுபோன்ற பின்னூட்டங்கள் படைப்பாளியை ஊக்குவிக்கும். வாழ்த்துகள் தோழர்!
1 · September 10 at 11:35am

Shajehanmubarak Js
September 10 at 3:33am ·
மணி, என்னுடைய கணக்குக்கு ஆறே கால் அடி உயரம் இருப்பார். கும்பலில் அவர் தலை தனியாகத் தெரிந்தது. எல்லாத் திசைகளிலும் சுழன்றாடியது. கும்பலுக்குள் மூழகி மூழ்கி எழுந்தது. " மணி மணி " என்றேன். கும்பலின் அநேக கால்களால் சாக்கடைக்குள் வீழ்த்தப்பட்டு மிதிபட்டுக் கொண்டிருந்த பிக்_ பாக்கெட்கார சிறுவனை மணி அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்துக் கொத்தாக அள்ளி எடுத்தார். கூட்டத்திலிருந்து பிரித்துப் பிய்த்து எடுத்துக் கொணடு நகர்ந்தார். சிறிது தூரம் நடத்திச் சென்றவர், " ஓட்றா " என்று சிறுவனைத் தள்ளி விட்டார்....சிறுவன் சிட்டாகப் பறந்து விட்டான். பிறகு மணி வந்து கடைத் திண்ணையில் உட்கார்ந்து விட்டார். மணிக்கு மூச்சிரைத்தது. என்னைப் பார்த்து, " பின்ன என்ன ஷாஜி சிக்கிட்டா ஒரு ஆள இத்தன பேரு அடிக்கலாமா?" என்று கேட்டார். அவர் முகத்தில் ஒரு திருப்தியும் சிரிப்பும். அதற்குள் எப்படியோ தகவல் தெரிந்து ரெண்டு போலீஸ்காரர்கள் வந்து விட்டார்கள். திகைத்து ஆரவாரம் செய்து கொண்டிருந்த கும்பலில் சிலர் மணியைக் காண்பித்து. " அவர்தான் சார் ஓடச் சொல்லித் தள்ளிவிட்டாருங்க" என்று கை காட்டிச் சத்தம் போட்டார்கள்...... இப்போது போலீஸ்காரர்கள் மணியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
Share
Kaala Subramaniam and 11 others like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 9 at 9:03am ·
'அவருடைய புத்தகம் வேண்டுமா?' என்று கேட்டார் தோழர். ' அப்படியானால் பெதப்பம்பட்டி போங்க. பி டபிள்யூ ஆபீஸ்ல மகேந்திரன்னு ஒரு ஜே இ இருப்பார். நான் சொன்னேன்னு வாங்கிக்கங்க' என்றார் தோழர். பெதப்பம்பட்டி 15 மைல் தொலைவிலிருந்தது. பஸ் வசதி இருந்தது. ஆனால் பஸ்ஸுக்குப் போகும் வசதி தான் என்னிடம் இல்லை. நடந்தே போக முடிவு செய்தேன். ஏனென்றால் அவருடைய புத்தகத்தைப் பார்த்து விட உயிர் துடித்தது. அதிகாலை 6 மணிக்கு நடக்கத் துவங்கினேன். பெதப்பம்பட்டி சென்று ஜே இ மகேந்திரனைப் பார்த்து அவரோடு காலை டிபன் சாப்பிட்டு விட்டு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டேன். திரும்பி மீண்டும் வரும் வழியில் அவருடைய புத்தகத்தைப் படித்தவாறே நடந்து வந்தேன். சாலையோரத்தில் மரநிழல் கண்ட இடத்திலெல்லாம் நின்றும் அமர்ந்தும் படித்தவாறு வந்தேன். ஊர் வந்து சேரும் போது புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன். படித்ததில் மிகவும் பிடித்திருந்த வாக்கியம், " மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. " புத்தகத்தின் பெயர் " சிவப்புப் புத்தகம் ." புத்தகத்தை எழுதியவர் மா சே துங்.
Share
Kaala Subramaniam and 26 others like this.
Comments

Krish Ramadas GREAT SIR.
September 9 at 1:00pm

Amuthan Ismail arumai
September 10 at 9:03am

Shajehanmubarak Js
September 9 at 5:58am ·
அரக்கப் பரக்க ஓடி வந்தார் பாட்டி. " தம்பி வந்து பாரப்பா, வீட்டு மேல ஏறி உக்காந்துகிட்டு எறங்க மாட்டேங்கிறாம்பா. கடப்பாரையோட உக்காந்துகிட்டு வீட்ட இடிச்சுப் போட்றேங்கிறாம்பா. நீ சொன்னாத்தான் கேப்பாம்பா. கொஞ்சம் வாப்பா ." பாட்டி பதறினார். நான் உடனே விரைந்தேன். மணி கடப்பாரையும் கையுமாக வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்தார். "என்ன மணி ?" என்றேன் சத்தமாக. " அப்பறம் என்ன ஷாஜி.. பீடி கூட குடிக்க வேண்டாங்கிறாங்க! நீங்க பீடி வாங்கிக் குடுப்பீங்களா?" என்றார் சிரித்தபடி. " சரி வாங்க " என்றேன். கடப்பாரையைப் பத்திரமாகப் பிடித்தபடி கீழே வரத் துவங்கினார் மணி.
Share
21 people like this.
Comments

Shajehanmubarak Js
September 8 at 6:12am ·
தெருக் குழந்தைகளின் பெருத்த ஆரவாரம் புடை சூழ காட்டு ராஜா கடை கடையாக நின்று நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் கையேந்தியது. " ஷாஜி பணமிருந்தா குடுங்க " என்றார் மணிக்கண்ணன். இருபது ரூபாய் இருந்தது. கொடுத்தேன். பெற்றுக் கொண்டு விரைந்தார். " நாளைக்கு இங்கே வந்தே கொன்னு போடுவேன் " என்று காட்டுராஜாவின் முன் நின்று கூச்சலிட்டார். கடைத் தெருவில் அத்தனை பேரும் ஒரு திடுக்கிடலோடு வேடிக்கை பார்க்க உரத்த குரலில் " அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே " என்று முழங்கினார்.
Share
Kaala Subramaniam and 12 others like this.
1 share
Comments

Shajehanmubarak Js
September 7 at 6:39am ·
கடைத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கடைத் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என் நண்பர் பு. வ. மணிக்கண்ணன். சற்று நேரம் கழித்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். " என்ன? " என்றேன். " ஏன் ஷாஜி ,வீதியில் எல்லோரும் தவழ்ந்து கொண்டு போகிறார்கள்? " என்று கேட்டார் மணிக்கண்ணன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது.. சமூகம்.
Share
17 people like this.
Comments
News Feed

Saravanan Chandran with Shajehanmubarak Js
September 6 at 5:28pm · Edited ·
நான் பெரிதும் மதிக்கிற, போற்றுகிற ஷாஜகான் முபாரக் சார் ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவல் குறித்து அவரது பக்கத்தில் எழுதிய விமர்சனம். பொறுமையாக படியுங்கள். நாவலைத் தாண்டி அவர் பல விஷயங்களை நுணுக்கமாகப் பேசியிருக்கிறார்.
முதலைகளை நாம் எங்கு கேட்டிருக்கிறோம்? மனிதர்களின் அராஜகச் செயல்களை விபரிக்கும் போது.' அதுவெல்லாம் குட்டி மீனுங்க அப்பா இது பெரிய திமிங்கலம், முதலைங்க ' என்று கூறுவோம். ஆணாணாலும் பெண்ணாணாலும் போலியாகக் கண்ணீர் வடிப்பவர்களை நாம் முதலைகளின் கண்ணீரைச் சொல்லித்தான் வர்ண...
Continue Reading
50 Likes2 Comments1 Share
Like   Comment   Share

Shajehanmubarak Js
September 6 at 5:44am ·
நம்மைச் சுற்றிலும் வாழும் மனிதர்களில் நாமும் இருக்கிறோம். அவர்களைத்தான் நாம் எழுதுகிறோம், படிக்கிறோம். ஒரு காலத்தில் நமக்குள் ஒரு தேர்வு இருந்தது. அந்தத் தேர்வுக்குச் சில அடிப்படைகள் இருந்தன. அவை வாழ்வியலில் உயர்வகை சார்ந்தவை. நாம் விரும்பும் லட்சியங்கள் சார்ந்தவை. பிரதாப முதலியார், பத்மாவதி, கமலாம்பாள் ஆகியோரைத் தான் நாம் எழுதி வாசித்தோம். காவிய, காப்பிய காலங்களில் கூட கண்ணனும் ராமனும் கண்ணகியும் மணிமேகலையும் தான் இன்றளவும் நம்முடன் ஜீவிய வந்தர்களாக உலவுகிறார்கள்.. ...
Continue Reading
Share
14 people like this.
Comments

Shajehanmubarak Js
September 5 at 7:10am ·
இலங்கையிலிருந்து வெளிவரும் " மகுடம் " இதழ் " பிரமிள் சிறப்பிதழ் " ஆக மலர்ந்திருக்கிறது. பிரமிள் சம்பந்தப்பட்ட எதுவும் மனதுக்கு நிறைவாகவே இருக்கும். அறிவுலகம், படைப்புலகம் என்பது அக்கினிக் குஞ்சு போல. பிரமிளும் அக்கினிக் குஞ்சு தான். மடமைக் காட்டையும் அசட்டு வேட்டைகளையும் அது எரித்து விடும். துறையூர் சரவணன் மகுடம் இதழை அனுப்பித் தந்தார். அவருக்கு நன்றி. இதழ் கைக்குக் கிடைத்ததும் தண்ணீரைக் கண்ட தரைத் தவளை போலக் குளத்தில் குதித்து விட்டேன். அந்த நினைவு முக்குளியில் பிரமிளைக் நான் கண்டெடுத்த வகையில் மூன்று பதிவுகளை நேற்று முக நூல் பக்கத்தில் இட்டேன். மனம் நிறைந்து தளும்பிக் கொண்டே இருந்தது. பிரமிளின் ஒவ்வொரு படைப்புக்கும் சிறு அளவிலேனும் ஒவ்வொரு நூலை எழுத வேண்டும். பிரமிளின் சஹிருதயர்கள் அதைச் செய்யக் கூடும் என்றே எண்ணுகிறேன். பிரமிளின் இ சாம்யக் கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒவ்வொரு வரியாக விரித்துப் பொருளுரைத்தால் ஒரு நூல் ஆகுமா ஆகாதா ? மகுடம் ஆசிரியர் நண்பர் மைக்கேல் கொலின் மனநிறைவோடு இருக்கலாம். அவர் செய்த காரியம் அப்படி. எங்கோ பூத்திருக்கும் பூ போன்றது தான் இந்தக் காரியங்கள். நாம் மனக் குறைப் பட வேண்டாம். சமரசமில்லாத ஒரு இலக்கியப் போராளி என்கிற வகையில் பிரமிள் நினைவுகளைத் தொடர்ந்து போற்றி முன்னெடுப்போம். அவருடைய வாழ்வும் வகையும் அத்தகையது!
Share
11 people like this.
1 share
Comments

Shajehanmubarak Js
September 4 at 4:59pm ·
தர்மு சிவராம் இலங்கைத் தமிழர். திரிகோணமலைக்காரர். தமிழ் நாட்டுக்கு வந்து விட்டார். கவிஞர் . விமர்சகர். பன்முகத் திறமையாளர். ' எழுத்து ' சி.சு . செல்லப்பாவின் செல்லப் பிள்ளை. " இரண்டாயிர வருட தமிழ்க் கவிதை உலகில் புதிய குரல். படிமக் கவிதைகள் " என்று செல்லப்பாவால் பாராட்டப்பட்டவர். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் நண்பர். தருமு டெல்லியில் இருப்பார். நாகர்கோயிலில் இருப்பார். சென்னையில் இருப்பார்.மதுரையில் இருப்பார். மார்க்சியம், கம்யூனிசம் அவருக்குப் பிடிக்காது. ...
Continue Reading
Share
18 people like this.
14 shares
Comments

துணைத் தளபதி மார்கோஸ் பிரமிளை முழுதும் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை தடவை வாசிக்க வேண்டுமோ? உண்மையிலும் மேல் நோக்கிய பயணம் என்னால் கடைசி வரையிலும் புரிந்து கொள்ளப்படாமலேயே போய் விடுமோ என்ற அச்சம் உள்ளது.
1 · September 4 at 6:05pm · Edited

Krish Ramadas வணக்கம் அய்யா. இங்கு துபாயில் உள்ள, முகநூல் மூலம் கடந்த ஓராண்டுக்கு முன் அறிமுகமான நண்பர் திரு.கணேஷன் குரு மூலம் தான் திரு.பிரமீளைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். பிறகு தான் இணையத்தின் மூலம் பிரமீளை தேட ஆரம்பித்தேன். திரு.மார்கோஸ் கூறியுள்ளதைப் போல் படிக்க படிக்க பிரமீள் பிரமிப்பை உண்டாக்குகின்றார். தினம் தினம் தேடுகின்றேன் பிரமீளை. இன்றைய உங்கள் பதிவில் நிறைய புது தகவல்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி. இன்னும் நீங்கள் அறிந்ததை வெளிக் கொண்டுவாருங்கள் அய்யா. நீங்கள் கூறியதைப் போல பார்ப்பனியத்திற்கு எதிரான ஒரு கவிதை எடுத்து வைத்துள்ளேன். அதை பதிவிட்டால் எதிர்வினை மோசமாக இருக்குமோ என எண்ணுகின்றேன். இலங்கையில் இருந்து வெளி வரும், என் முகநூல் நண்பர் திரு.மைக்கேல் கொல்லின் நடத்தும் " மகுடம் " இந்த மாதம் பிரமீள் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. அதன் பின் அட்டையில் உள்ள பிரமீளின் சமாதி மனதை வெகுவாக என்னை பாதித்தது. இந்த இதழ் துறையூர் சரவணன், கால சுப்ரமணியம் அய்யா மூலமாக கிடைக்கிறது. - கிருஷ்.இராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].
2 · September 4 at 7:12pm · Edited

Vishvaksenan Arumaiyana pathivu
September 5 at 5:29pm
News Feed

Shajehanmubarak Js
September 4 at 12:50pm ·
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. கண்ணாடி அணிந்த மெல்லிய உருவம். இளம் பச்சைப் பழுப்பு நிறத்தில் பேண்ட். நல்ல சிவப்புக் கலர் காலர் வைத்த டி சர்ட். என் கடை மிகச் சிறியது. கிட்டத்தட்ட பிளாட்பாரக் கடை. ஒரு ஒட்டுத் திண்ணையில் இரண்டடிக் கூரை. கடைக்குள் ஒருவர் ஒரு ஸ்டூல் போட்டு உட்காரலாம் அல்லது நிற்கலாம். என்னைப் பார்க்க வருகிறவர் உட்கார கடையை ஒட்டி வெளியே ஒரு ஸ்டூல் போட்டிருப்பேன். இரண்டாமவர் வந்தால் அவர் நின்று கொண்டு...
Continue Reading
Share
11 people like this.
7 shares
Comments

களந்தை பீர் முகம்மது பதிவுகளெல்லாம் அற்புதமாக இருக்கின்றன; உங்களுக்கு இத்தனை அனுபவங்கள் இருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிக்குரியது. நன்று! இன்னும்......
2 · September 4 at 3:06pm

Krish Ramadas உங்கள் ஒவ்வொரு அசைவும் இலக்கியத்தில் நுழைந்து, இதயத்தை வருடிச் செல்லும் வரலாறாக இருக்கிறது. சில நேரங்களில் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கால் பல நேரங்களில் கண்ணீரை வரவழைக்கிறது அய்யா. தொடரட்டும் உங்கள் அலிபாபா குகை ரகசியங்கள். அது பிரமீளின் மேல் உள்ள பிம்பத்தை நிச்சயம் பெரிதாக்கி கொண்டிருக்கிறது. திறந்திடு சீசே.
1 · September 5 at 6:43pm

Shajehanmubarak Js
September 4 at 7:42am ·
எழுபதுகளில் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக மிக மோசமான அனுபவங்களால் ஏற்கனவே இருந்த ஊரைக் காலி செய்து விட்டு புதிய ஊரில் புதிய இடத்தில் கிட்டத்தட்ட " தமைறைவு " வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம்! எண்பதுகளின் பத்து ஆண்டுகள் அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த வாழ்க்கைச் சரிவுகளைச் சரி செய்ய உழைக்க வேண்டியதாயிருந்தது. பழைய சரிவுகளை நிமிர்த்தப் போராடும் போதே புதிய சரிவுகள் புதிய சவால்களாய்த் தோன்றி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. குடும்பம் தவிர வெளி உலக உறவுகளை அறவே நிறுத்தி வைத்திருந்தேன். இதனால் கோவை ஞானி போன்றவர்களிடம் கூட என்னைப் பற்றித் தவறான அபிப்பிராயங்கள் என்னுடைய நண்பர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டிருந்தன. " இலக்கியத்தை விட்டு வாழ்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன் " என்று கோவை ஞானி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். சத்தியமங்கலத்துக்குப் பக்கத்தில் புஞ்சை புளியம்ப்டி என்ற சிற்றூர். அங்குதான் வசித்து வந்தேன். இரும்பைக் காந்தம் ஈர்ப்பதை எது தடுக்க முடியும் என்பது போல் புதிய உறவுகள் ஏற்பட்டன. ஊட்டியில் " நீலமலைப் பனிமலர் " என்று ஒரு சிற்றிதழ் நடத்தி வந்த பு.வ. மணிக்கண்ணன் புளியம்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அவரும் அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை. கவிஞர் சுகுமாரன் ஏதோ வேலையாய் நான் இருந்த ஊருக்கு வந்தவர் நான் அங்கு இருப்பதை எப்படியோ அறிந்து கொண்டு என்னை வந்து சந்தித்தார். அப்போது கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த கால. சுப்பிரமணியம் அவர்களும் எவ்வதமோ என்னை நாடி வந்தார். நான் நிர்வகித்து வந்த போட்டோ ஸ்டுடியோவிற்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க கால. சுப்பிரமணியம் வந்தார் என்றே நினைக்கிறேன். எப்படியோ இரும்பு காந்தம் உறவு இங்கும் நிகழ்ந்து விட்டது. நண்பர் மணிக்கண்ணன் அகாலமாய் காலமானபின் தொண்ணூறுகளின் இறுதி வரை கால. சுப்பிரமணியத்துடன் என் உறவு நெருக்கமாக நீடித்தது. அவர் கோவைக்கு வேலைக்குப் போய் மாலையில் திரும்பும் ஒவ்வொரு நாளும் என்னை வந்து சந்திப்பதை ஒரு வேலை போல் வைத்துக் கொண்டிருந்தார். எனக்கும் கோவை ஞானிக்கும் இடையே தூதுவர் போலவும் செயல்பட்டார். தோளில் ஒரு ஜோல்னாப் பையைப் போட்டுக் கொண்டு வருவார். புத்தகங்கள் நிறைய கொண்டு வந்து காண்பிப்பார். பேசுவார். நிறைய தகவல்களைச் சொல்வார். டீ சாப்பிடுவோம். சில நேரம் பசிக்கிறது என்று சொல்வார். அருகில் உள்ள ஓட்டலில் டிபன் சாப்பிடுவோம். சற்று நேரம் உரையாடி இருந்து விட்டு அவர் அப்போது வசித்து வந்த புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் கிரமத்துக்குப் போகும் டவுன் பஸ்ஸைப் பிடிக்க விரைவார்... கால.சுப்பிரமணியத்தைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எழுத என்னிடம் செய்திகள் இருக்கின்றன. அதை இன்னொரு இடத்தில் செய்ய வேண்டும். " லயம்" இதழை அப்போது கால. சுப்பிரமணியம் கொண்டு வந்து கொண்டிருந்தார். பிரமிளின் படைப்புகளுக்காகவே, பிரமிளுக்கான தளமாகவே லயம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிரமிளின் கவிதைகள் , கட்டுரைகள்,பேட்டிகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் எல்லாம் இதழில் தவறாமல் வந்து கொண்டிருந்தன. கால. சுப்பிரமணியம் எனனுடைய சில கவிதைகளையும் ஒரு சிறுகதையையும் என்னிடமிருந்து பெற்றுப் பிரசுரம் செய்தார். ஒருநாள் வழக்கம் போல மாலைநேரம். வந்தார். உடன் ஒருவரை அழைத்து வந்தார். " பிரமிள் " எனறார் என்னிடம்!
Share
19 people like this.
5 shares
Comments
View 2 more comments

துணைத் தளபதி மார்கோஸ் பத்தி பிரித்து எழுதவும். படிக்க சற்று சுலபமாய் இருக்கும்.
1 · September 4 at 5:58pm

களந்தை பீர் முகம்மது தோழர், உங்களுக்கு புனைபெயர் எதுவும் உண்டா?
September 4 at 6:57pm

Shajehanmubarak Js சென்னையில் என் மகள் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்! என் மகள் கையால் தேநீர் அருந்தியிருக்கிறீர்கள்! என் மருமகன் பெயர் வெ. சந்திரமோகன்! எனக்கு சந்திரமூலரசன் என்ற புனைப்பெயர் உண்டு!
1 · September 4 at 8:13pm

களந்தை பீர் முகம்மது நன்றி நன்றி. உங்களை நான் தொடர்ந்து கவனித்துவரும்போது எனக்கு இந்தச் சந்தேகம் வந்துவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பரின் இலக்கிய உலக நிகழ்வுகள் இத்தனைக்கு நிகழ்ந்திருக்கும்போது நான் அறியாதிருந்தால் எனக்கே அது இழுக்கு. ஏற்கெனவே நானும் சுகுமாரன் சாரும் உங்களைப்...See More
3 · September 4 at 8:21pm

Shajehanmubarak Js வேறென்ன வேண்டும் இந்த வாழ்க்கைக்கு இதைவிட ? நன்றி நண்பரே.
2 · September 4 at 8:51pm

Shajehanmubarak Js
September 3 at 8:39pm ·
ஒரு தேர்ந்த வாசகன் உயர்வகை எழுத்தையே விரும்புகிறான். எழுத்து குறைந்த பட்சம் ரசனைக்குரியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். எழுத்து எதைப் பற்றியது என்பது முக்கியமானாலும் அது எப்படிச் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியமானதுதான். எழுத்தின் வடிவம், எழுத்தின் உள்ளடக்கம் என்பவைகளைத் தாண்டி எழுத்து கட்டி எழுப்பும் அனுபவம் என்பது மிக மிக முக்கியமானதாகிறது. எதார்த்தவியல், சமூக எதார்த்தவியல், நடப்பியல், ஜால யதார்த்தம் என்றெல்லாம் இலக்கியத்தின் வடிவங்கள் அவை தாங்கி நிற்கும் உள்ளுறைகளுக்குத் தக்கவாறு மாறி மாறி வந்திருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் எதுவாயிருந்தலும் முதலும் முன்னணியிலும் இருப்பது வாசிப்பு அனுபவம் தான். எந்த ஒரு எழுத்துப் படைப்பின் முதல் வரியே வாசிப்பவனைக் கட்டிப் போட்டு உடன் இழுத்துச் செல்ல வல்லதாயிருக்கிறது. திஜா வின் மோகமுள் ஆகட்டும் அம்மா வந்தாள் ஆகட்டும் மரப்பசு ஆகட்டும் அன்பே ஆரமுதே ஆகட்டும் செம்பருத்தி ஆகட்டும் முதல் வரியே நம்மை ஈர்த்து நிறுத்தி வைக்கும். பிறகு நம்மை எங்கும் நகர விடாது. சோறு தண்ணி இல்லாமல் நாவலைப் படித்து முடித்து நாவலின் இறுதி வரியில் கண்கள் குத்தி வெகுநேரம் பிரம்மை பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்த அனுபவம் நம்மில் அநேகருக்கு உண்டு. தமிழின் சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் அனைத்துக்கும் அந்த வல்லமை உண்டு. 'ஒரு பத்தாண்டுக் கதெ ' என்று துவங்கும் ஒரு நாவல் படிக்கக் கிடைத்தது. உண்மையைச் சொன்னால் நாவலின் ஒரு வரி கூட எந்த ஒரு பாதிப்பையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. மாறாக சலிப்பையும் சோர்வையுமே அளித்தன. நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரமும் எந்தக் கதை நிகழ்வும் எந்த வித நுட்பமான உணர்வுகளையோ அனுபவங்களையோஏற்படுத்த வல்லதாக இல்லாமல் சாதாரணமாய் நாம் புறக்கணிக்கக் கூடியவைகளாகவே இருந்தன. ஏன் இப்படி எழுதுகிறார்கள்? எந்தவகையான மனக் கிளர்ச்சிகளும் ஏற்படுத்தாமல் எல்லாம் தட்டையாகவே இருந்தன. எந்த வகையான உயர்ந்த மன எழுச்சியும் நாவலின் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. லட்சியப் படுத்த நம்மைச் சுற்றிலும் எவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன. அரசியல் என்றும் கலாச்சாரம் என்றும் முளைக்கும் விஷயங்கள் ஆயிரம் ஆயிரமாய் இருக்கின்றன. என் கதையை நான் சொல்ல வருவதில் குறைந்த பட்ச ஆதாரமான அடிப்படை ஏதும் இருக்க வேண்டும். என் அசட்டுத்தனங்களுக்கெல்லாம் நான் இலக்கிய அந்தஸ்தை எதிர்பார்ப்பது என்ன நியாயம்? ..... இப்படிப் போனது இன்றைய என் வாசிப்பு!!
Share
16 people like this.
1 share
Comments

Radhakrishnan Ramanathan Eppadio konjam puriyum padi eluthu bavarkal mattima kalathai kadanthu nir parkal!
September 3 at 9:01pm

Abdul Ghani Nizamdeen Nizam படிக்கும்போதே மெய்மறந்த நிலயில் ஒரு மனிதனின் உணர்வுகளை தட்டி எழுப்பி அந்தநேரத்து சங்கதிகளும் சம்பவங்களும் அசைப்போட்டவண்ணம் அடிமனதில் ஊடுருவி ஆத்மாவோடு ஐக்கியமாவதில் நல்ல படைப்பாளனின் எழுத்துக்கு வலிமையுண்டு .
இந்தவகையில் சமீபத்தில் அமரத்துவம் அடைந்த ஒர...See More
1 · September 3 at 10:10pm

Shajehanmubarak Js
September 3 at 8:37am ·
எழுதுவது சாதாரண வேலையா? எழுத்து என்பது சாதாரணமானதா? தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் ஒரு நாவல் எனக்குள் இந்தக் கேள்விகளை எழுப்புகிறது. அருமையாக எழுதிவிட்டார் என்பதில் துவங்கி இது ஒரு மேன்மையான கலைப் படைப்பு என்பது வரையிலான கருத்தாக்கங்கள் ஒரு எழுத்தைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. விமர்சனம், திறனாய்வு, மதிப்பீடு என்றெல்லாம் மேற்செல்லும் வகையினங்களும் ஓர் எழுத்து சார்ந்து வரும். ' எழுத்தும் தெய்வம், எழுதுகோல் தெய்வம் ' போன்ற உயர்நிலைகள், ' எழுத்து ஒரு தவம், ஒரு தியானம், ஒரு உள்முகப் பயணம்' போன்ற உன்னத நிலைகள் பற்றியும் நம் கவனம் செல்லவே செல்கிறது. ' எழுதியவன் சாகிறான், எழுத்து சாவதில்லை' என்ற மேல் நிலைகளை நாம் பார்க்கிறோம் தானே! எழுத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனோவியல் தான் என்ன? பாரதி எவ்வாறு கவிஞனானான்? புதுமைப் பித்தனை எழுத்து பிடித்துக் கொண்டது எவ்வாறு? எழுதி எழுதி ரசித்த திஜா வின் உலகம் எத்தகையது? தனக்குள் ஒரு மேல் நாக்கிய பயணம் செய்தவாறே தன் பயணத்தை முடித்துக் கொண்ட பிரமிள் ஏன் எழுதினார்? அவர் எழுதியே தீர வேண்டும் என்கிற நிர்பந்தம் என்ன? நான் இப்படிக் கேட்கிறேன்!' நான் எழுதவில்லை என்று யார் அடித்தார்கள்? எழுத்து வலையில் என்னைச் சிக்க வைத்தது யார்? ஏன் சிக்கிக் கொண்டேன்? விடுபட முடியாமல் தவிக்கிறேன்? ' தற்போது படித்துக் கொண்டிருக்கும் ஒரு நாவல் எனக்குள் எழுப்பிய கேள்விகள் இவை. இத்தனைக்கும் நாவலைப் பாதிதான் கடந்திருக்கிறேன். அதற்குள் மனக் குரங்கு போட்டு இந்தப் பிராண்டு பிராண்டுகிறது? செகாவின் எழுத்திலும் டால்ஸ்டாயின் எழுத்திலும் ஓரான் பாமுக்கின் எழுத்திலும் மார்க்யூஸின் எழுத்திலும் நாம் மயங்கி விழுந்தது என்ன? லாசராவின் நாலே நாலு சொற்சேர்க்கைகள் நம்மை அடித்து வீழ்த்தியதென்ன? ஓரிருவர் எழுத்தைப் படித்து விட்டுப் படித்த இடத்திலிருந்து நகர முடியாமல் கண்ணீர் வடித்திருக்கிறேன். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? எனக்குள் அந்த எழுத்து நிகழ்த்தும் மாய வித்தை தான் என்ன? புதுமைப்பித்தனின் ஓர் எழுத்து என்னைச் சிலையாய் அடித்திருக்கிறது! ' எழுத்துன்னா இது எழுத்துய்யா' என்று செத்துப் போயிருக்கிறேன்....... என்ன செய்ய? எழுத்தில் வந்து மாட்டிக் கொண்டோம்.. இப்போது படித்துக் கொண்டிருக்கும் நாவல் மேற்கண்ட சிந்தனைகளை எழுப்புகிறது. முழுவதும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்!
Share
19 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 3 at 7:03am ·
பாம்பா பழுதையா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே போய் விடுகிறது பாதி வரலாறு. ' கயிற்றரவு ' கதாநாயகன் கவனமாகத்தான் சொல்லியிருக்கிறான் கவிஞரே!
Share
15 people like this.
Comments

Shajehanmubarak Js
September 2 at 4:13pm ·
" எனக்கென்னவோ நடப்பது இறுதிப் போரின் ஒத்திகை போலவே தெரிகிறது. நடப்பதை நன்றாகப் பாருங்கள்..." / எனது ஆக.30 பதிவு/ பேராசிரியர் கல்புர்கி படுகொலை/ நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்..... சமூகம்!
Share
11 people like this.
Comments

Shajehanmubarak Js
September 2 at 6:15am ·
கொட்டுத் தாங்காமலன்றோ இந்தப் பட்டு, குளவியாச்சு..?
Share
17 people like this.
Comments

Shajehanmubarak Js
September 2 at 6:13am ·
திக்கே அம்பரமானவர்க்கு ஏது உதயம்? ஏது அஸ்தமனம்? இயம்புவாய் கவியே!
Share
15 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
September 2 at 6:11am ·
உண்ணும் உணவே திரி பருகும் நீரே எண்ணெய் தின்னும் வெற்றிலை நெருப்பு நன்றாய்ச் சமையும் உயிர்த் தீ!
Share
10 people like this.
Comments

Shajehanmubarak Js
September 1 at 5:44am ·
வரலாறு நமக்குள் இருக்கிறது வரலாற்றுக்குள் நாமிருக்கிறோம் வரலாறு நம்மை ஏற்றுக் கொள்கிறது அல்லது புறக்கணிக்கிறது வரலாற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் அல்லது புறக்கணிக்கிறோம். வாழ்க்கை என்பது வேறு என்ன?
Share
16 people like this.
Comments

Radhakrishnan Ramanathan Yarum ethayum earpathakavo puraknipathakavo solvathu sariyalla ellam mayai than!
September 1 at 11:59am

Shajehanmubarak Js
September 1 at 5:39am ·
மனிதன் பார்க்கிறான் மனிதன் கேட்கிறான் மனிதன் நுகர்கிறான் மனிதன் பேசுகிறான் மனிதன் உணர்கிறான் கவிஞன் பிறக்கிறான் கவிதை பிறக்கிறது.
Share
9 people like this.
Comments

Shajehanmubarak Js
August 31 at 6:44am ·
இரண்டு பட்ட உலகம் இரண்டு ஆயிரம் வருடங்களாய் ஒன்று பட்ட உலகம் எந்த உயரத்திலோ..? இத்தனையும் பொறுத்திருந்தோம் இனியும் பொறுத்திருப்போம் எம்மைச் சுற்றிலும் நடுகற்கள்.. இப்போதும் தோண்டுகிறோம் இப்பூமியை இனியும் தோண்டுவோம் இப்பூமியை இரவும் பகலும் நனைய எழுதி வைப்போம் எங்கள் கதைகளை..
Share
14 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 30 at 1:56pm ·
ராஜேந்திர சோழன் எனும் அஸ்வகோஷின் ஒரு சிறுகதை. என்றும் மறக்க முடியாதது... எப்போதும் போல எதேச்சையாக அன்றும் அவன் வீட்டு ஜன்னலருகே வந்து நிற்பான் அவன். எதிர் வீட்டு வாசலில் அவன் கவனத்தை ஈர்க்கும் படியான பேரழகுடன் பெண் ஒருத்தி நிற்பாள்! யாரையும் கவர்ந்து கொஞ்சம் நேரமாவது நின்று பார்க்கத் தூண்டும் அழகுதான் அது. தெய்வீகம் என்று வர்ணிபபார்களே அந்த மாதிரியான அழகு. மனிதப் பிறப்பில் ஒரு பெண்ணிடம் அந்த முகத்தின் அங்கங்களின் அபாரமான சேர்க்கையில் படைப்பழகின் உச்சத்தைக் கண்டு மன நிறைவோடு மயங்கி நிற்பான் அவன். தன் தாயிடம் எதிர்வீட்டுக்குக் குடி வந்திருப்போரைப் பற்றி விசாரிக்கும் போது அவர்கள் புதுமணத் தம்பதிகள் என்பதும் அந்தப் பெண் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரிய வரும்.அன்றிலிருந்து அழகும் தாய்மையும் ஒரு சேரப் பொலியும் பேரழகைத் தினசரி தரிசிப்பது என்பது அவனுடைய தினசரி வேலைகளில் ஒன்றாக மாறிவிடும். அப்போது ஏற்படும் உன்னத மன நிறைவு அவனுக்குள் ஒரு முழுமையை எட்டிய நிறைவைத் தந்து கொண்டிருக்கும். .. அன்றும் வழக்கம் போல அந்த ஜன்னலருகே வந்து நிற்பான் அவன்.புதிதாக ஒரு சிறுவன் அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பான். ஒரு ஏழு எட்டு வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. அவன் முகம் மிகவும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் தூண்டுவதாக இருக்கும். யாரிந்தப் பையன் என்று இவன் எண்ணி முடிப்பதற்குள் வீட்டுக்குள்ளிருந்து ஒரு கடூரமான பெண் குரல் போலிருக்கும் ஒரு பெண் குரல கூச்சலிடும்." வெளிய என்னடா பண்ற சனியனே! சனியனே" என்று கத்திக் கொண்டேவெளியே வரும். கூடவே அந்தப் பெண் உருவம் வீட்டுக்கு வெளியே வந்து வந்த வேகத்தில் உட்கார்ந்திருக்கும்அந்தச் சிறுவனின் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கத் துவங்கும். இவனுக்குத் தலை சுற்றி மயக்கமே வரும் போலிருக்கும்! அந்தப் பெண் வேறு யாருமல்ல அவன் தெய்வீகம் , பேரழகு என்று அதுவரை ரசித்து வந்த அதே பெண்தான். அடி வாங்கிய அந்தச் சிறுவன் வலிதாங்காமல் " அம்மா அம்மா" என்று அலறுவான். அந்த அலறல் தாங்க முடியாததாயிருக்கும். இவன் செய்வதறியாது திகைத்துப் போவான்...... அந்தப் பெண்ணின் கோபத்தில் கோணிப் போகும் முகமும் சிறுவன் தாக்கப்படும் விதமும் இவனுக்குப் பேரிடியாக இருக்கும். சிறுவனின் அலறலை விட ஒரு பேரழகிடம் இப்படஒரு ஊனம் வெளிப்பட்டது இவனுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும்...... அடுத்த நாள் அவன் அந்த ஜன்னலை இறுகச் சாத்தி, சுத்தியல் கொண்டு பெரிய பெரிய ஆணிகளை வைத்து அறைந்து கொண்டிருப்பான். " ஏண்டா " என்று கேட்பாள் இவன் தாய். இவன் சொல்லுவான் , "ஒண்ணுமில்லம்மா "
Share
15 people like this.
1 share
Comments

Indran Rajendran ராஜேந்திரசோழன் ஒரு சிறுகதை மேதை...வெறும் சம்பாஷனைகளிலேயே சகலத்தையும் சொல்லிவிடும் அநாயாசம் யாருக்கு வாய்க்கும்? ஆமாம்..ஏன் யாருமே ராஜெந்திரசோழன் குறித்து வாயே திறப்பதில்லை..? நீங்களாவது திறந்தீர்களே உங்களை எவ்வளவும் பாராட்டலாம்..
3 · August 30 at 7:06pm

Shajehanmubarak Js 70களில் செம்மலர் இதழ்களில் நானும் அவரும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினோம். அவர் என் இனிய தோழர்!
3 · August 30 at 7:15pm
View previous replies

Shajehanmubarak Js பதிப்பக வாசல்களைத் தொடும் " பாக்கியம் " பெறாதவை என் படைப்புகள்! உங்கள் நினைவில் இருக்கிறதா பார்ப்போம்! என் புனைப் பெயர் " சந்திரமூலரசன் ."
1 · August 30 at 8:49pm
View more replies

Shajehanmubarak Js
August 30 at 7:24am ·
எனக்கென்னவோ இறுதிப் போரின் ஒத்திகை போலவே தெரிகிறது நடப்பதை நன்றாகப் பாருங்கள் பெரியாரின் பிரவேசம் படு வேகத்திலிருக்கிறது! ஒப்பனைகளைக் கழற்றி உயரே பரணில் தூர எறிந்து விட்டு இரண்டில் ஒன்று பார்க்கும் இடத்துக்கு வந்தாயிற்று காடுகளில் இருந்து புறப்படும் கீதங்கள் இப்போதெல்லாம் கடுங் கனலைக் கக்குகின்றன கச்சைகளும் இறுகக் கட்டப்படுகின்றன யார்தான் எத்தனை காலந்தான் காத்திருக்கக் கூடும்.. காந்தியின் தேசம் இனியாகிலும் கனவிலிருந்து விழித்தெழட்டும்! கலைகளும் கவிதைகளுமான இப்பூமியும் தன் கனா நிறைவேறக் காணட்டும்!
Share
12 people like this.
Comments

Seema Senthil காடுகளில் இருந்து புறப்படும் கீதங்கள் கடுங்கனைலக் கக்குகின்றன///// அருமை
August 30 at 7:53am

Shajehanmubarak Js
August 29 at 6:49am ·
நேற்று கோவை ஞானி அலை பேசியில் பேசினார். அவர் குரலைக் கேட்டதும் நான் உடைந்து போனேன். ஏனெனில் அவர் குரல் அவ்வளவு உடைந்திருந்தது. அறமும் மறமும் கொண்டு எவ்வளவு திறமாக ஒலிக்கும் குரல் அவருடையது! 70களில் நான், கவிஞர்கள் முத்துப்பொருநன், கலையரசு ஆகியோர் விஜயமங்கலம் ஓடை துரையரசனின் வீட்டில் அமர்ந்து அப்போதுதான் வெளியாகியிருந்த கோவை ஞானியின் ' இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் ' நூலைப் பற்றி விவாதித்தது என் நினைவில் ஓடியது. கோவைப் பேராசிரியர்களால் தீண்டத்தகாதவர்களாய் நாங்கள் விளங்கிய அந்தக் காலத்தில் எங்களை அணைத்து ஆதரவளித்து ஆறுதல் வழங்கியது கோவை ஞானியின் கரங்கள் தான். பிற்பாடு பேராசிரியர்களுக்கு மார்க்சியமே தீண்டத் தகாததாய்ப் போனது வரலாற்று நிகழ்வு. எஸ்.வி.ஆர், சு ரா, சி சு செல்லப்பா போன்ற பல தலைமுறை எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கோவை ஞானி அவர்கள் தான். நம்பிக் கண்டடைந்து, ஆழ்ந்ததும் விரிவானதுமான படிப்பு , பயிற்சி மூலமாக தன்னையும் மார்க்சியத்தையும் வளப்படுத்திக் கொண்டவர் கோவை ஞானி எனில் அது மிகையல்ல. எண்பது தாண்டிய முதுமையிலும் அலைபேசியில் தொடர்பு கொண்டு,' என்னுடைய கட்டுரைத் தொகுப்பு. அனுப்புகிறேன். பிழை திருத்தம் பார்த்துக் கொடுங்கள்' என்று கேட்டபோது உண்மையில் என் உள்ளம் கசிந்துதான் போயிற்று.
Share
26 people like this.
Comments
View 1 more comment

Indran Rajendran தமிழ்ப் பார்வையுடன் அனைத்தையும் பரிசீலிக்கும் தெளிவு கொண்ட அபூர்வ ஆளுமை
1 · August 29 at 11:04am

Slm Hanifa கோயம்புத்தூர் லில்லி தேவசிகாமணி பரிசளிப்பு விழாவில் அவரைக்கண்டதும்கதைத்ததும் பாக்யமே .அது 1992ல்.காலம் இவ்வளவு விரைவாக கடந்து போனதே...
1 · August 29 at 12:03pm

M M Deen Really a social activist and a powerful presenter of new way to TN and its politics
1 · August 29 at 1:56pm

Amuthan Ismail ஞானியின நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகின்றன. நன்றி..
1 · August 29 at 8:41pm

Shajehanmubarak Js
August 29 at 5:49am ·
" அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் யாம் செய்த பாவங்கள்..." ஏழைகள் நிறைந்த உலகில் ஏழைகளை நோக்கி ஏழைகளால் கேட்கப்படும் இந்தப் பிரார்த்தனை... எத்தனை அபத்தம் !
Share
18 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 29 at 2:55am ·
ஏழைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த இறைவனுக்கு ஏது வாழ்வு ?
Share
20 people like this.
Comments

Kumar Duraisamy haahahhaha
August 29 at 7:24am

Shajehanmubarak Js
August 28 at 9:19am ·
வாசிப்பதன் அருமையை விவரித்து எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள். ருஷ்யாவின் மார்க்சிம் கார்க்கி அவர்களில் ஒருவர். ரொட்டி தயாரிக்கும் கடையில் கூலியாளாய் வேலை செய்கிறார் கார்க்கி. லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' நாவல் கைக்குக் கிடைத்திருக்கிறது. படிக்கத்தான் நேரமில்லை. ரொட்டி அடுப்பில் வெந்து செத்துக் கொண்டிருக்கிறார் கார்க்கி. சற்று வேலை ஓய்ந்தாலும் கடை முதலாளி வேறு வேலைகளுக்கு ஏவுகிறார். வயிற்றுக்குச் சாப்பிடவும் நேரம் ஒதுக்க முடியவில்லை. சாப்பிடாமல் இருப்பதை விடப் படிக்காமல் இருப்பதுதான் கார்க்கிக்கு பெரும் வேதனையாக இருக்கிறது. ஒருநாள் மதியம் எப்படியோ கொஞ்சம் நேரத்தைக் கண்டு பிடித்து விடுகிறார் கார்க்கி. டால்ஸ்டாயின் நூலைக் கையில் எடுத்துக் கொண்டு யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதென்று ரொட்டிக் கடையின் மேற்கூரையில் ஏறி அட்டும் அழுக்கும் பிடித்த ரொட்டி வேக வைக்கும் அடுப்பின் புகைப் போக்கிச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டு படிக்க்த் துவங்குகிறார் கார்க்கி... தான் படித்த அனுபவத்தைக் கார்க்கி இப்படிப் பதிவு செய்கிறார்:" நூலின் வரிகளில் நான் மூழ்கிப் போனேன். ரொட்டிக் கடை, அடுப்பு, நெருப்பு, கடை, அழுக்கு, பசி, தாகம் எல்லாவற்றையும் மறந்து போனேன். நான் வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து விட்டேன். டால்ஸ்டாயின் வன்மையான எழுத்து என்னைப் போட்டு நொறுக்கி விட்டது. நான் நொறுங்கிப் போனேன். என்னைச் சுற்றிலும் டால்ஸ்டாயின் வார்த்தைகள். அந்த வார்த்தைகளுக்குள் நான் தொலைந்து போனேன். இனி என்னைக் கண்டு பிடிப்பது கஷ்டம். இடையிடையே டால்ஸ்டாயும் நம்மோடு பேசுகிறார். அந்தத் தாடி, அந்த இடுங்கிய கண்கள், நெளியும் உதடுகள்... எனக்கு பயமாக இருக்கிறது! இதோ.. கனவான்கள் , சீமாட்டிகள் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் விருந்துக் காட்சியை விவரிக்கிறார் டால்ஸ்டாய்! நீண்ட நெடிய விலை உயர்ந்த துணிகள் விரிக்கப்பட்ட சாப்பாட்டு மேஜை. உலகத்தில் உள்ள உயர்ந்த உணவு வகைகள் அனைத்தும் அங்கே பரிமாறப் பட்டிருக்கின்றன. உணவு வகைகளின் மணம் முக்கைத் துளைக்கிறது. சீமானகளின் அதட்டும் குரல்கள் கம்பீரமாக ஒலிக்கின்றன. சீமாட்டிகளின் கலகல எனும் சிரிப்பொலிகள் ஒருபுறம் . எல்லாம் களை கட்டுகின்றன. எல்லாம் அழகழகான பீங்கான் பாத்திரங்கள்.." இறுதியாகக் கார்க்கி எழுதுகிறார். " சொனானால் நம்ப மாட்டீர்கள்! அந்த பீங்கான் பாத்திரங்கள் ஒனறோடொன்று மோதிக் கொள்ளும் ஒலிகள் என் காதில் விழுந்து கொண்டிருந்தது! அதில் நான் கரைந்து போய்க் கொண்டிருந்தேன்.." கார்க்கி தான் படித்த அனுபவத்தை எழுதியதை நான் படித்து நானும் கரைந்துதான் போனேன்!
Share
15 people like this.
3 shares
Comments

துணைத் தளபதி மார்கோஸ் போரும் வாழ்வும் விட கார்கியின் இந்த எழுத்து அருமையாய் உள்ளது. மற்றபடி அசம்பாவிதமாய் ஆயுள் கைதியானால் மட்டுமே படிக்க வேண்டிய புத்தகம் போரும் வாழ்வும். மூன்று தொகுப்புகள். ஆயுள் தண்டனை முடிந்து வெளி வருவதற்குள் பத்து தடவை படித்து விடலாம். வெளியில் வரும் போது இரண்டு தண்டனைகளும் முடிந்த திருப்தியுடன் வெளியில் வரலாம். ( பத்து முறை என்பது நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தண்டனை.)
August 28 at 11:09am

களந்தை பீர் முகம்மது நல்ல பதிவு; ந்ல்வாழ்த்துகள் தோழரே!
August 28 at 11:43am

Jawahardeen Shajahan Anarkali கார்க்கியோடு சேர்ந்து நீங்கள் கேட்ட பீங்கான் பாத்திரங்கள் ஒனறோடொன்று மோதிக் கொள்ளும் ஒலியை நான் இரண்டாவது முறையாக கேட்கிறேன்.....
1 · August 28 at 7:00pm

Shajehanmubarak Js
August 28 at 6:43am ·
காற்றாக நிற்கப் போய் காற்றில் படபடக்கும் காகிதமானாய்.. நெருப்பாக நிற்கப் போய் நெருப்பில் வெந்து நீரானாய்... மண்ணாய்ச் செழிக்கப் போய் மண்ணாய் மக்கிப் போனாய்.. நீராய் நடக்கப் போய் நின்று தேங்கி நின்றே போனாய்.. வானமாய் விளங்கப் போய் வழமைக்குள் வீழ்ந்து போனாய்.. வரலாறே..!
Share
12 people like this.
Comments

Shajehanmubarak Js
August 28 at 5:54am ·
அவர் சொன்னார் புரிந்தது இவர் சொன்னார் புரிந்தது உவர் சொன்னார் புரியவேயில்லை!
Share
7 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 27 at 5:22am ·
எனை ஏந்தி இருத்திக்கொள்ள எப்போதும் காத்திருக்கிறது எனது இருக்கை. கொள்கைக் கைப்பிடிகள் உள்ளவை கொஞ்சம் பழசானவை என்றாலும் கட்டையாலானவை. அதன் வழவழப்பு யாருக்கும் பிடிக்கும். காலத்தின் களிம்பு இருப்பது தெரியாமல் இருப்பது அதன் இன்னொரு சிறப்பு. பிடிமானம் உறுத்தலாக இல்லாவிட்டாலும் சாய்மானம் கொஞ்சம் உற்றுப் பார்ப்பதாகவே தோன்றும். ஒன்று உறுதி. எந்தக் காலத்திலும் அதன் கால்கள் மட்டும் ஆடியதே இல்லை. அறையின் நடுவில், அறையின் மூலையில், அறையின் ஓரத்தில் என்று இருக்கையின் பிரசன்னம் இருந்து கொண்டே இருக்கும்! எனை ஏந்தி இருத்திக் கொள்ள எப்போதும் காத்திருக்கும் எனது இருக்கை.
Share
11 people like this.
1 share
Comments

Jawahardeen Shajahan Anarkali //காலத்தின் களிம்பு இருப்பது தெரியாமல் இருப்பது அதன் இன்னொரு சிறப்பு.// Wonderful lines!!
August 28 at 6:03pm

Shajehanmubarak Js
August 27 at 4:55am ·
ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் வெஙகட் சாமிநாதன் பாலையும் வாழையும் எழுதினார்! தமிழ் அறிவுலகமும் தமிழ்க் கலையுலகமும் பாலை, இதில் வாழைகள் விளையாது என்பது வெ சாவின் தத்துவம்! வள்ளுவன்,கம்பன்,இளங்கோ,பாரதி,புதுமைப்பித்தன் என்பவை எல்லாம் சமூக விளைபொருட்கள் அல்ல, சஹிருதயர்களால் உருவாக்கப்பட்ட சூழல்களின் படைப்புகள் என்பது வெ சாவின் சித்தாந்தம்! அப்புறம் வெ சா கல்லறையிலிருந்து குரல் எழுதி சிஐஏ ஏஜண்டாகவும் செயல்பட்டார்!! அய்ம்பதாண்டுகள் கடந்து விட்டன் ! தமிழ் மண் இன்னும் பாலையாகத்தான் இருக்கிறதா? தமிழ் மண் சோலையாகவில்லையா? இங்கு வாழைகள் விளையவில்லையா? கல்லறையிலிருந்து அந்தக் குரல் இன்னும் கேட்கிறதா? யாராவது சொல்லுங்களேன்!
Share
17 people like this.
Comments

Radhakrishnan Ramanathan Illai!
August 27 at 2:12pm

Shajehanmubarak Js
August 26 at 5:15am ·
நாலணாவுக்கு கேப்பை மாவு நாலணாவுக்குத் தக்காளியும் பச்சை மிளகாயும்.. விறகடுப்பில் உலையேற்றி ' ஒரப்பாகக் ' கிளறி உணவிடுவாள் அம்மா.. அம்மா!
Share
16 people like this.
1 share
Comments

Shajehanmubarak Js
August 26 at 5:12am ·
வயிற்றின் தீ வார்த்தையால் அணைவதல்ல.
Share
12 people like this.
Comments
FRIENDS · 202 (1 Mutual)

Kaala Subramaniam

Sikkandar Basha

Chakravarthi Bharati

செந்தலை கவுதமன்

Ram Chinnappayal

Sugan Paris

சந்திரமோகன் வெற்றிவேல்

Thuraiyur Saravanan

Subramanian Ravikumar
Self-Employed
From Udumalaippettai
Born on March 5, 1953
Became friends with Shankar Chockalingam and 23 other people
PHOTOS
'//உலக தமிழர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள...
./

அண்ணன் இன்னும் சன் டிவி மிட்நைட் மசாலவா மறக்கல போல இருக்கு...'
'போலி 'திருட்டு' திராவிடத்தால் வீழ்ந்தோம்..
------------------------------------------------------

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு
2006 - 24 கோடி
2011 - 51 கோடி
.............
கருணாநிதியின் சொத்து மதிப்பு

2006 - 26.58 கோடி
2011 - 44.15 கோடி
.......'
Ernesto Malcolm's photo.
Shajehanmubarak Js's photo.
Shajehanmubarak Js's photo.
Shajehanmubarak Js's photo.
Shajehanmubarak Js's photo.
Shajehanmubarak Js's photo.
Shajehanmubarak Js's photo.
LIKES · 17

Aishwarya Devan

Tamil Art

We support Prof. Ramu ...

Fero'Z Photography

Ayothidhasar

Veola Hair Care
GROUPS · 6

தமிழ்ச் சங்கம் ----புலமைக்கு மட்டுமே
1,898 members
இங்கு கவிதைகள் மட்டுமே சங்கமிக்க...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
2,948 members

மனம் விட்டு பேசலாம்
968 members
இங்கே நண்பர்கள் அரசியல் ஆன்மீகம்...

ANTI RELIGION கடவுள் மறுப்பு
1,934 members
கடவுள் மறுப்பு என் கொள்கை.அதை எவர்...
English (US) · Privacy · Terms · Cookies · Advertising · Ad Choices ·
More
Facebook © 2015
Earlier in 2015
HIGHLIGHTS
Earlier in 2015
News Feed

Shajehanmubarak Js
August 26 at 5:10am ·
கண்ணாடி பார்ப்பவர் கவனத்தில் இல்லையென்பதால் இட வல மாற்றம் இல்லாமல் போவதில்லை.
Share
12 people like this.
1 share
Comments

Shajehanmubarak Js
August 25 at 4:33am ·
ஆர் . ஷண்முக சுந்தரம் எங்கள் கோவை பகுதியின் படைப்பாளி. ஷண்முக சுந்தரத்தின் நாவல்களைப் படிப்பது என்பது கொங்கு மண்ணை நாக்கில் போட்டு ருசிப்பது போன்றது! " நாகம்மாள்" நாவல் ஒன்று போதும் ஷண்முகசுந்தரத்தின் பெயர் படைப்புலகில் என்றும் நிலைத்திருக்க! சு ரா ஒருமுறை எழுதினார் : ' ஏனுங்க நாகமமாளை இப்புடி ஆக்கினீங்க' என்று ஷண்முகசுந்தரத்திடம் கேட்டால் ஷண்முகசுந்தரம் சொல்வார்: ' எனக்குத் தெரியலீங்கோ!' ஷண்முகசுந்தரத்தைப் படிப்பது என்பது கொங்கு மண்ணுக்குள், கொங்குப் பெண்ணுக்குள் புகுந்து வருவது மாதிரி! அவ்வளவு மணமாயிருக்கும்!
Share
16 people like this.
Comments

Yadartha K Penneswaran ஆஹா... கநாசு வால் மிகவும் சிலாகிக்கப் பட்ட படைப்பாளி ஆர்,ஷண்முக சுந்தரம். அவருடைய படைப்புக்களை கநாசு மனம் குளிர பாராட்டியதை பலமுறை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.
August 25 at 7:47am · 2

Slm Hanifa அருமையான பதிவு .எங்கள் தேசத்தில் +2மாணவர்களுக்கு தமிழ் பாடவிதானத்தில் இந்த நூலும் ஒன்று .வாழ்த்துக்கள் ..
August 28 at 4:34am

Shajehanmubarak Js
August 25 at 4:16am ·
" எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? " என்கிற மௌனியின் துக்க நிழல்கள் நம்மைத் தொடர்ந்து கெ்ண்டேதான் இருக்கும்.....
Share
10 people like this.
Comments

Shajehanmubarak Js
August 25 at 4:05am ·
இன்று தி ஜா வின் நாவல்களை மனசுக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்! ஒரு நாவலில் ரோஜாப் பூ விற்பவள் பூக்கூடையை இறககி வைக்கிறாள். " கூடை நிறைய ரோஜாப் பூக்கள்! கூடை நிறையக் குழந்தைகள்! " என்று எழுதிக் கொன்று தீர்க்கிறார் திஜா! பெண்களின் கண்களை எழுதும் போது " கண்களே முகமாக.." என்று எழுதுவது அவர் வழக்கம். " அம்மா வந்தாள் " அலங்காரத்தம்மாள் பூரணமாகத் தன் அருகில் கிடப்பதைப் பார்க்கும் அப்பா, " எலலாம் எல்லாம் எனக்குத்தானா!" என்று வியப்பின் உச்சியில் வாயடைத்துப் போவார்! நாமும் தான் மனமடைத்துப் போவோம்! " மரப்பசு " அம்மிணி , " இங்கே இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் ஏறி ஏறி இறங்க வேண்டும்! ஒவ்வொரு ஆணுடனும் கை குலுக்கி விட வேண்டும் " என்று எண்ணுவாள்! என்ன எண்ணம் இது! மோக முள் யமுனாவை ஒரு காலத்தில் தேடித் தேடிக் கண்டடைந்தேன் நான்! கோவை இலக்கியச் சந்திப்பு ஒன்றில் திஜா வின் நாவல்கள் எல்லாம் " இல்லீகல் இம்மாரல் " என்று சி சு செல்லப்பா கத்தியது நினைவுக்கு வருகிறது! நினைத்துப் பார்த்தால் ஒரு பெண்ணாகவே தன்னை உணர்ந்து ஒரு பெண்ணாகவே நின்று பெண்களின் பிரச்சினைகளை குறிப்பாகப் பெண்களின் உடல் பிரச்சினைகளை , பெண்களின் உள்ளப் பிரச்சினைகளைத் தான் திஜா பேசிக் கொண்டிருந்தார் என்றே நினைக்கிறேன்!
Share
13 people like this.
Comments

Radhakrishnan Ramanathan Sari!
August 25 at 7:09am

Ajeek Tamil Irukkalam
August 26 at 2:57pm

Shajehanmubarak Js
August 24 at 5:44am ·
புதுமைப் பித்தனின் " செல்லம்மா ' சவமான பின் சவத்தின் மூக்கின் மேல் ஒரு ஈ வந்து அமரும். அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளை விசிறியை வீசி அந்த ஈயை விரட்டி விடுவார்! புதுமைப்பித்தனின் அந்த ஈ நேற்றுப் பூராவும் நினைவில் இருந்தது!
Share
13 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 24 at 5:35am ·
எழுத்துக் கலையின் உள்ளடக்கத்தில் தேர்வு என்பது துவங்கி விட்டால் அந்த எழுத்துக் கலை வற்றத் துவங்கி விட்டது என்று அர்த்தம். எழுத்தைப் பயில வேண்டுமென்றால் அந்த எழுத்தின் மேல் ஒரு புத்தம் புதிய காதல் வர வேண்டும் . அந்தக் காதல் விடலைப் பருவத்துக் காதலின் வேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். நல்ல எழுத்து விளைந்து வரும் ரகசியம் இந்த ஜனனப் பரிசுத்தத்தில் இருக்கிறது!
Share
17 people like this.
Comments

Slm Hanifa உண்மை
August 24 at 1:22pm

Shajehanmubarak Js
August 24 at 4:52am ·
தரவைக் கையிலெடுத்துச் சரி பார்க்காமல் நினைவிலிருந்து இடும் பதிவு இது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் "பல்லக்குத் தூக்கிகள்" தொகுப்பில் "அலைதல் " என்கிற சிறுகதையில் சுந்தர ராமசாமி எழுதிய வரிகள் இவை. " குழந்தைகளும் பூக்களுமாக மாறி விட வேண்டும் என் வாழ்க்கை!" " நான் நன்றாக ஏங்கியவன். ஏக்கத்தின் கனிகள் நிச்சயம் எனககுக் கிடைக்கும் ." சிறுகதையின் கடைசியில் ஒரு வரி வரும். .." அலைதல் ஒனறுதான் என் வாழ்க்கை. அதையும் தடை செய்து விடாதீர்கள்!" / சு ராவின் எழுத்துக்ளின் வன்மையைப் பாருங்கள்! ஒரு சிறுகதையின் வாசகங்கள் நாற்பதாண்டுகளாக நினைவில் பதிந்திருக்கின்றன என்றால் எழுத்து வன்மைக்கு எடுத்துக் காட்டு அல்லவா! சு ரா வின் நினைவுக்கட்டுரையை நான் இப்படி எழுதி முடித்திருந்தேன்.. " அலைந்து முடித்து விட்டீர்களா சு ரா ?"
Share
12 people like this.
Comments

Shajehanmubarak Js
August 23 at 5:52am ·
சிறிய விளக்கொளியில் பஷீரின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்....... விளக்கு ஒளி பஷீர் நான்.. போதும்.
Share
26 people like this.
Comments

Saravanan Chandran vera enna venum sir
August 23 at 8:43am

Indran Rajendran சஹிருதய சம்வாதம்
August 23 at 8:54am

Radhakrishnan Ramanathan Appadia irnthu. (iranthu) vidalam!
August 23 at 11:45am

M M Deen Manolayam. Ttharum suganupavam...kafi raagaam. Kettu konde irukkalaam pola...
August 23 at 3:08pm

Shajehanmubarak Js
August 23 at 5:30am ·
இந்த மண் எனக்குச் சுவைக்கிறது! இந்தக் காற்று எனனைத் தென்றலாய் வருடுகின்றது! நெருப்பின் கதகதப்பை நான் நிரம்ப நேசிக்கிறேன்! ஆகாயம் என் நண்பன்! அவனிடம் நான் கற்றுக் கொண்டது அநந்தம்! நீரோடையின் சலசல ஒலியெழுப்பும் சங்கீதத்தை நான் எப்படித் தவிர்ப்பேன்! தோழரே! இந்த வாழ்க்கை எத்துணை இனிது!
Share
16 people like this.
Comments

Radhakrishnan Ramanathan Inithu inithu manidarai pirathal inithu!
August 23 at 11:47am

Shajehanmubarak Js
August 23 at 5:03am ·
உன் மெல்லிய புன்னகை ஒன்று போதும் இதோ என் வீட்டுக்குள் புதிய வெளிச்சம் குடியேறி விட்டது! அன்பு நிறைந்த உன் விரல்களின் ஒரு தொடுதலில் என் நோய்கள் எல்லாம் நொடிந்து போய் விட்டன! என் தாயின் கருணையும் என் தோழியின் நேசமும் என் சகோதரிகளின் பாசமும் ஓரிடத்தில் மலரப் பார்ப்பது என் மகளே! உன் ஒற்றைப் பார்வையில்தான்!
Share
14 people like this.
Comments

Radhakrishnan Ramanathan Arumai arumai!
August 23 at 11:48am

Shajehanmubarak Js
August 22 at 7:02am ·
நூற்றாண்டு கால முணுமுணுப்புகளாய்ப் போயின உமது கவிதைகள் ! வள்ளுவ! சிலம்பின் செல்வ! கம்ப நாட! கபிலா! பாரதி! காத்திருங்கள்! உமக்கும் வேறு வழியில்லை!
Share
12 people like this.
Comments

Shajehanmubarak Js
August 22 at 6:01am ·
நீ இல்லை என்பதறியாமல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை நல்ல கவிதை என்கிறார்கள்! உனக்கு இல்லை என்பது எனக்கு இருக்கிறது என்பதுதான் உள்ளபடியே சிக்கல்!
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
August 21 at 7:58am ·
காற்றில் கலந்திருக்கும் பேரோசையே! " வீடு முச்சூடும் அழும் " என்கிற உன் வார்த்தை மட்டும் வரலாறு பூரா ஒலித்திருக்கும்! மார்க்சிய வீணையில் தமிழ் நரம்புகளைப் பூட்டி நீ எழுப்ப முயன்ற நாதம் முடக்கப்பட்டிருக்கலாம். முகிழ்க்கும் அது நிச்சயம்! முகிழ்க்கும் அது நிச்சயம்!
Share
6 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 21 at 6:12am ·
தோல்விகள் சுழன்றடித்தன சூழ்ச்சிகள் சாய்த்து விட்டன அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம் தடுக்கப்பட்டோம் தாழ்த்தப்பட்டோம் மறுக்கப்பட்டோம் வெறுக்கப்பட்டோம் துரத்தப்பட்டோம் தீய்க்கப்பட்டோம் தோல்விகள் சுழன்றடித்தன சூழ்ச்சிகள் சாய்த்துவிட்டன நிகழ்த்திய உரையாடல்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன எங்கள் குருதியால் குழைத்தெழுப்பப்பட்டவைகளில் எங்கள் பெயர் பெறிக்கப்படாதது மட்டுமல்ல நாங்கள் தீண்டவும் உரிமையற்றுத் தூரவே நிறுத்தப்பட்டோம்! தோற்கடிக்கப்பட்ட நாங்கள் செத்துவிடவில்லை இதோ ஜீவித்திருக்கிறோம்! மெல்லிய புன்னகை எங்கள் உதடுகளிலும் ஜீவித்திருக்கிறது! நாங்களும் கவிதை எழுதுகிறோம்! எங்களுக்கும் வண்ணங்கள் பிடிக்கின்றன! நறுமணங்களை நுகரவே செய்கிறோம்! எங்கள் பெண்களுக்குக் காதல் செய்ய நன்றாகவே தெரியும்! நாங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம்! அந்தக் குழந்தைகளின் குழந்தைகள் கரங்களில் எங்கள் வரலாறு ஒளிரும்! இறுதியாகச் சொல்லுகிறோம் இந்த உலகம் எங்களுடையதுதான்!
Share
10 people like this.
Comments

உண்மையை உரக்கச் சொல் அருமை
August 21 at 7:48am

Slm Hanifa இந்த உலகம் எங்களுடையதுதான் !
August 21 at 9:30am

PA Abdul Nazar
PA Abdul Nazar's photo.
August 21 at 9:22pm

Shajehanmubarak Js
August 20 ·
சொன்னாலும் புரிவதில்லை இந்த மண்ணாளும் வித்தைகள்!
Share
13 people like this.
2 shares
Comments

Shajehanmubarak Js
August 20 ·
ஆற்றாது அழுத கண்ணீரும் அக்கிரமமாய் எரிந்த குடிசை உள்ளங்களும் அர்த்த சாஸ்த்திரத்தின் அலங்காரத்தில் அடியோடு காணாமல் போயினவே!
Share
16 people like this.
Comments

Saravanan Karunanithi unmai
August 20 at 7:52pm

Saravanan Karunanithi உண்மை.
August 20 at 7:53pm

Shajehanmubarak Js
August 20 ·
கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்துத் திருடி வந்த கதைகள் பல கோடி! கண்ணனும் கள்ளமும் பாரதத்தின் பழம் பெரும் கதைகளானால் கள்ளத்தனம் இவ்வளவு பெரிய கோபத்தைக் கிளறுவானேன்? கோபமும் கள்ளத்தனம் என்கிறார் கற்றறிந்த நண்பர் ஒருவர்! ஓ! கள்ளத்தனத்தின் வகைகள் காண்பதரிது போலும்!
Share
11 people like this.
Comments

Shajehanmubarak Js
August 19 ·
உன்னை அறியுமா தமிழ் என்று உசாவினேன்! ஆழமாய்ச் சிந்தித்து ஆழமாய் மூச்செடுத்து யாதும் ஊரே யாவரும் கேளீர்.. என்கிறான் எந்தமிழன்!
Share
11 people like this.
Comments

Shajehanmubarak Js
August 19 ·
இன்றெரியும் நெருப்பல்லடா இது அன்றெரிந்த நெருப்பு! இனி நின்றெரியும் நெருப்பு!
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
August 19 ·
கள்ளரைக் கள்ளரென்று கள்ளரே சொல்லும் கள்ளம்.......
Share
14 people like this.
Comments

Shajehanmubarak Js
August 18 ·
பாரதி இல்லாமல் பெரியார் இல்லாமல் அயோத்திதாசர் இல்லாமல் அம்பேத்கர் இல்லாமல் அய்யோன்னு போனோம் அய்யோன்னு போனோம்...
Share
13 people like this.
1 share
Comments
News Feed

Shajehanmubarak Js
August 18 ·
உளுத்துப் போனதை எழுத்து விடாமல் அழுத்தனும்னு நெனச்சா கொளுத்தறான்களே.....
Share
10 people like this.
Comments

Shajehanmubarak Js
August 18 ·
பேருமில்லை ஊருமில்லை யாருமில்லை எங்களுக்குத் தேருமில்லை......
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
August 17 ·
இன்றில்லை நாளை என்றெண்ணி எத்தனை காலந்தான் ஏய்ப்புக்காளாவார் எம் மக்கள்?
Share
6 people like this.
Comments

Shajehanmubarak Js
August 17 ·
நான் செய்த தவத்தால் பொழுது புலர்ந்தது என்றெண்ணி ஏமாந்தான் ஒருத்தன்!
Share
12 people like this.
Comments

Maghbool M M ஏமாற்றுகிறான்..!
August 17 at 9:13am

Shajehanmubarak Js
August 17 ·
புத்தகமே தமிழர் வாழ்க்கையில் இல்லையெனில் இலக்கியம் ஏது? கலை ஏது? தத்துவம் ஏது? அரசியல் ஏது?
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
August 15 ·
நாங்கள் உண்பதைப் பாருங்கள் நாங்கள் உடுப்பதைப் பாருங்கள் நாங்கள் இருப்பதைப் பாருங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் இது உங்களுக்கே உவப்பாக இருக்கிறதா? கல்வியும் கேள்வியும் எங்களுக்கு மறுக்கப்பட்டு விட்டது விதி வந்தால் நாங்கள் செத்துப் போகிறோம் ஊரைச் சுத்தம் செய்து விட்டு ஒதுக்குப் புறமாய் நாங்கள் குப்பையில் வாழ்கிறோம். நாங்கள் மலமள்ளிப் போட்டு சுத்தம் செய்த இடத்திலிருந்து வந்து சுத்தத்தைப் பற்றி எங்களுக்கு உபதேசிக்கிறீர்கள். உழைப்புக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை உழைத்து உழைத்து ஓடாய் போன எங்களிடம் உழைப்பின் உயர்வைப் பற்றி உரையாற்றுகிறீர்கள். காதலும் காமமும் கூட எங்களுக்கு மறுக்கப்பட்டு விட்டது. காதல் செய்த குற்றத்துக்காக எங்கள் இளைஞர்கள் கழுத்தறுக்கப்பட்டு தண்டவாளத்தில் போடப்படுகிறார்கள். கற்பிழந்த எங்கள் பெண்களின் கறுத்த உடம்பு மட்டும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. எங்கள் குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள் . நாங்கள் அதிகம் கண்ணீர் சிந்துவது எங்கள் குழந்தைகளை நினைத்துத்தான். எங்களைப் போன்ற அடிமைகளைத்தான் உங்களுக்கு நாங்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போகிறோம். அவர்களும் உங்களுக்கு அடிமைகளை உருவாக்கிக் கொடுத்து விட்டுப் போவார்கள். எங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நாங்களும் போராடத்தான் செய்கிறோம் . ஆனால் எங்களுக்குத் தலைமை தாங்க வருகிறவர்கள் அவர்கள் வாழ்க்கை மாறியதும் எங்ளைக் கை கழுவி விட்டுப் போய் விடுகிறார்கள்! இதோ கிழக்கே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், என்றாவது நாங்களும் உங்களைப் போல வயிறாரச் சாப்பிடுவோமென்று!
Share
6 people like this.
Comments

Shajehanmubarak Js
August 15 ·
இன்றும் தந்தை சொல்தான் கேட்கப் போகிறேன்!
Share
3 people like this.
Comments

Shajehanmubarak Js
August 15 ·
ஆடச் சொன்னாய் ஆடினோம் பாடச் சொன்னாய் பாடினோம் பள்ளும் பாடினோம் பறையும் பாடினோம் ஆனந்த சுதந்திரம் மட்டும் வரவேயில்லை எங்கும் சுதந்திரம் இல்லை என்பதே ஆச்சு இங்கு யாரும் சமமில்லை என்பதுதான் பேச்சு! ஆடினோம் பாடினோம் ஆனந்த சுதந்திரம் மட்டும் வரவேயில்லை!
Share
7 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 14 ·
எல்லாத் தலைவர்களும் வாழ்த்துச் சொல்கிறார்கள்! எதற்கு? என்பது தெரிகிறது! யாருக்கு? என்பதுதான் புரியவில்லை!
Share
9 people like this.
Comments

Shajehanmubarak Js
August 14 ·
வர்ண பேதம் நல்லது வர்க்க பேதம் நல்லது சாதி பேதம் நல்லது மத பேதம் நல்லது இது வாழும் முறைமையடி பாப்பா! மேலென்றும் கீழென்றும் சொல்லி வைத்தார் அதில் மேன்மை இருக்குதடி பாப்பா ! காலென்றும் தலையென்றும் உண்டு பாப்பா இதைக் கருத்தில் கொண்டு வையடி பாப்பா! ஆடென்று பாராதே பாப்பா மாடென்று பாராதே பாப்பா வெறும் கூடென்று பார்த்தாயெனில் குவலயத்தில் வாழ்வாய் பாப்பா! சாதிகள் இல்லையென்று சாற்றுதல் வேண்டாம்! மேதினியில் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் நன்று! (இனி வேறு) வர்க்க பேதம் நல்லது! வர்ண பேதம் நல்லது! இது வாழும் முறைமையடி பாப்பா!
Share
13 people like this.
Comments

களந்தை பீர் முகம்மது அற்புதமான் கிண்டல் மண்டையில் அடிக்கிற மாதிரி!
August 14 at 6:44pm

Shajehanmubarak Js
August 13 ·
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத " சாதி " என்றே சங்கை முழக்கும் காலம் வந்ததுவே! அண்ணல் காந்தியும் அம்பேத்கரும் ஆடிய ஆட்டமும் பாடிய பாட்டமும் அடியோடு மண்ணாய்ப் போனதுவே! குலம் வேண்டுமென்பார் குருக்கள் மதம் வேண்டுமென்பார் மூர்த்திகள் குருக்களாலும் மூர்த்திகளாலும் குவலயம் புதிதாய் மலர்ந்ததுவே! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத " சாதி " என்று சங்கே முழங்கு!
Share
13 people like this.
Comments

Shajehanmubarak Js
August 12 ·
பெருந் துயரங்கள் சூழ்ந்த நூற்றாண்டைக் கடந்து வந்திருக்கிறோம். எழுச்சியோடு துவங்கிய நூற்றாண்டு பெருத்த அவலத்தில் முடிந்தது. லெனினின் சோவியத் ருஷ்யாவும் மாவோவின் செஞ்சீனமும் காலத்தின் காற்றில் புழுதி படிந்த ஓவியங்களாகப் பெருந் துக்கத்தை அளிக்கின்றன. கடந்த நூற்றாண்டின் பத்துக்களையும் இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டின் பத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒரு கனத்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளியேறுகிறது. அந்தப் பெருமூச்சில் காந்தி, பெரியார்,பாரதி, அம்பேத்கர் போன்ற மாமனிதர்களின் மூச்சுக் காற்றும் கலந்திருக்கிறது. ஒரு கேள்வி. நமது 'கொடி பறக்குமா அடிவானத்துக்கு அப்பால்'?
Share
9 people like this.
Comments

Sugan Paris அடிவானத்திற்கு அப்பாலும் அவமானத்திற்கு அப்பாலும்
August 12 at 3:25pm

Shajehanmubarak Js இன்னும் சற்று செறிவான கருத்தை எதிர்பார்க்கிறேன்/சுகன்/
August 12 at 4:11pm

Ajeek Tamil Konjam kastam thaan
August 12 at 4:20pm

Shajehanmubarak Js
August 12 ·
எடுத்தது கொடு கொடுத்தது விடு இன்றெல்லாம் மலர்ந்தது எத்துணையானாலும் எடு எடுத்தது கொடு...
Share
7 people like this.
Comments

Shajehanmubarak Js
August 11 ·
மதத்தால் மாச்சரியம் உண்டென்றால் அந்த மதம் என் மயிருக்கும் சமானமில்லை என்று முழங்குவீர் மாநிலத்தீரே! சாதியால் சச்சரவு உண்டென்றால் அந்த சாதி ஒரு சாக்கடை என்று சாற்றுவீர் செகத்தீரே! கடவுளால் மனிதம் காணாமல் போகுமென்றால் அந்தக் கடவுளும் காணாமல் போகட்டுமெனக் கழறுவீர் குவலயத்தோரே!
Share
6 people like this.
Comments

Shajehanmubarak Js
August 11 ·
தேவனும் டேவிட்டும் தாவூதும் ஒன்றென்பீர்! மாரியும் மேரியும் மரியமும் ஒன்றென்பீர்! ஈசனும் யேசுவும் ஈசாவும் ஒனறென்பீர்! சீலனும் சுலைமானும் சாலமனும் ஒன்றென்பீர்! ஆபுத்திரனும் ஆப்ரஹாமும் இப்ராஹிமும் ஒன்றெனபீர்! ஆதியும் ஆதாமும் ஆடமும் ஒன்றென்பீர்! பின் சரித்திரம் பூராவும் ரத்தச் சகதியாய் இருக்கக் காரணம் என்னவென்றுசாற்றுவீர் செகத்தீரே!
Share
11 people like this.
Comments

Shajehanmubarak Js
August 11 ·
ஆறில் ஒன்றிரண்டு குறைந்தாலும் அவை பேசுகின்றன ஒரு மொழியில்! மகத்தானவனாம் மனிதன் ! தூ.......
Share
5 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 10 ·
இன்றைய தமிழ் இந்து நாள் இதழ் நடுப்பக்கம் வலது மேல் புறம் ஜே.எஸ்.அனார்கலி கவிதை 'நகரத்து மனிதன்' ' இரவுக்காகவே காத்திருக்கும் சிறு ஈசல்களும் சிள்வண்டுகளும் வாயசைக்கும் நட்சத்திரங்களும் பரஸ்பரம் பேச எதுவமில்லாத மனிதர்களும் ஒளிர்ந்திடும் விளக்குகளின் கீழ் தனிமையில் ஆழ்ந்த துயரத்தைக் கவிழ்த்தன! உடன் யாருமின்றித் தனிவழி ஏகும் துயரம் ஒரு காட்சி போல் விரிந்தது!
Share
7 people like this.
Comments

Shajehanmubarak Js
August 10 ·
காக்கையைப் பாடினேன் குருவியைப் பாடினேன் கழுகை ஏன் பாடவில்லையென்று கேட்கிறார் கவிஞரே!
Share
9 people like this.
Comments

Shajehanmubarak Js
August 10 ·
கடவுளற்ற தமிழில் கடவுளைச் சேர்த்ததெவன்? மதமற்ற தமிழில் மதத்தைச் சேர்த்ததெவன்? சாதியற்ற தமிழில் சாதியைச் சேர்த்ததெவன்? சாற்றுவீர் கொஞ்சம் செந்தமிழ் நாட்டினரே!
Share
8 people like this.
Comments

Gopalan TN யார் சேர்த்தால் தேவலாம் ஷாஜஹான் இன்று தலைவிரித்தாடுகிறது மத சாதி வெறி
August 10 at 12:30pm

Shajehanmubarak Js 'தேவலாம்' ஹாஹாஹா!
August 10 at 12:54pm

Shajehanmubarak Js
August 9 ·
சாகாமல் இருக்கும் கடவுளைப் படைத்த தமிழ் வாழ்க்கையைச் சபித்தல் தவறா? சாகாமல் இருக்கும் மதத்தைப் படைத்த தமிழ் வாழ்க்கையைச் சபித்தல் தவறா? சாகாமல் இருக்கும் சாதியைப் படைத்த தமிழ் வாழ்க்கையைச் சபித்தல் தவறா?
Share
8 people like this.
Comments
View 4 more comments

Shajehanmubarak Js தமிழ் அறிவன்/ புரியும் படி சொல்லுங்கள்!
August 9 at 11:38am

Shajehanmubarak Js தமிழ்அறிவன்/ தங்கள் விளக்கம் அருமை! நன்றி!
August 9 at 1:02pm

Shajehanmubarak Js
August 9 ·
உங்கள் வாழ்வெனும் வீட்டின் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சாளரங்களும் திறக்கப்பட்டு அறிவு ஒளி, அன்பு ஒளி பாய்ந்து நிறைய வேண்டும்! அதற்கு நீங்கள் ஒன்று செய்க! மார்க்சியம் கற்றுக் கொள்க!
Share
7 people like this.
Comments

Shajehanmubarak Js
August 9 ·
கூலி, விலை, லாபம் போன்ற சொற்களையெல்லாம் காதல், கதிர், மதி போன்ற சொற்களைப் போல மாற்றிய காரல் மார்க்ஸே! நீ அல்லவோ மகா கவிஞன்!
Share
9 people like this.
Comments

Shajehanmubarak Js
August 8 ·
திறமைக்குத் தகுந்த வேலை தேவைக்குத் தகுந்த ஊதியம் என்பதெல்லாம் ஊமையர் கண்ட கனவுதானா?
Share
7 people like this.
Comments

Shajehanmubarak Js
August 8 ·
உழைப்பவர் உயர்வார் என்பது ஒப்புக்குப் போடும் கோஷமா?
Share
9 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 8 ·
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது அவ்வளவு பெரிய பாவமா?
Share
10 people like this.
Comments

Shajehanmubarak Js
August 8 ·
தீராதா கொடிய தனிஉடைமை? வாராதா இனிய பொதுஉடைமை?
Share
8 people like this.
Comments

Shajehanmubarak Js
August 7 ·
மனிதன் அவன் படைத்தவற்றிலிருந்து விலகி அந்நியமாக நிற்கும் கொடுமையைத் தீர்த்து வைப்பதையே நாங்கள் 'பொதுஉடமை' என்கிறோம். நீங்கள் சொல்வதென்ன? சொல்லுங்கள்!
Share
5 people like this.
Comments

Shajehanmubarak Js
August 7 ·
முதலாளித்துவ சமூகத்தில் உழைப்பு என்பதை உயர்த்திப் பிடித்தவனும் அந்த உழைப்பின் விலை கொடுக்கப்படாத ஒரு பகுதி உபரி மதிப்பாய் விளைந்து மூலதனமாய்க் குவிகிறது என்பதை வெட்ட வெளிச்சமாய் விளக்கியவனும் மார்க்ஸ் ஒருவனைத் தவிர வேறு எவன்?
Share
6 people like this.
Comments

Abbas Al Azadi If we believe plant will grow only with soil & water, Let's prepare to believe mountains might have a invisible soil & water inside it's rock.

If you still have a doubt on the existence of invisible things, Let's believe & agree, We have a limited vision to explore the secrets of universe....See More
August 7 at 9:13am

Shajehanmubarak Js Abbas/Wat du u want to mean me? I dont know english. Pl. In tamil.
August 7 at 9:23am

Abbas Al Azadi Ok
August 7 at 11:00am

Abbas Al Azadi Ok sir.! I will type in Tamil while using via computer.
August 7 at 11:01am

Shajehanmubarak Js
August 7 ·
மனிதனும் மனிதனின் படைப்புச் செயலும் என்கிற தலைப்பில் மார்க்ஸின் குறிப்புகளைத் தொகுத்துப் பாருங்கள்! மார்க்சியம் மனிதனின் சொந்த மெய்யியல் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்!
Share
5 people like this.
Comments

Shajehanmubarak Js
August 6 ·
விதை மரமாவது மாறுதல் அல்ல, மாற்றம்! மாற்றத்துக்கான சாரம் விதைக்குள் இருக்கிறது! மனிதனின் சாரம் விதையைக் கண்டு கொள்ளுதலிலும், விதைத்தலிலும், நீர் பாய்ச்சுதலிலும் அதைக் காத்துப் பயனைப் பொதுவில் பங்கிடுதலிலும் விளங்குகிறது! பிரச்சினை விளக்குவதில் அல்ல மாற்றுவதில் இருக்கிறது என்று மார்க்சியம் சொல்வது இதைத்தானே? அறிந்தவர் நவில்வீர் ஆன்றோரே!
Share
5 people like this.
1 share
Comments

Shajehanmubarak Js
August 6 ·
பகல் முடிந்து இரவு விடிவது போன்றதே கவிதை.
Share
7 people like this.
Comments

Shajehanmubarak Js
August 6 ·
மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் ஆழ்ந்து கற்றுக் கொள்ளுங்கள்! அவை இரண்டும் தான் நம் இரண்டு கண்கள்!
Share
10 people like this.
Comments
News Feed

Shajehanmubarak Js
August 6 ·
அதிகாலை வேளையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் எழுதுகிறேன்! உங்கள் வாழ்க்கைப் பாதை செப்பமுற ஒரே வழிதான் உள்ளது! அதை உஙகளுக்குக் கூறுகிறேன்! 'மார்க்சியம் கற்றுக் கொள்ளுங்கள்!'
Share
11 people like this.
Comments

Abbas Al Azadi smile emoticon
August 6 at 8:02am · 1

Khader Mohideen Marxism as a Subject or as a Life Style ?
August 6 at 1:39pm · 1

Shajehanmubarak Js காதர் மொய்தீன் / மார்க்சியம் நம் வாழ்வில் இருந்தது, இருப்பது, இருக்கப் போவது!
August 6 at 4:35pm · 2

Ajeek Tamil கம்யூநிஸம் கானாவாகி நெடுங்காலம் ஆகிவிட்டது.இனி புதியதை எவ்வாறு நன்மைக்கு பயன் படுத்துவது என்பதை யோசிக்கலாம்
August 6 at 5:33pm · 1

Shajehanmubarak Js
August 5 ·
சாகும் தறுவாயில் எழுப்பிச் சொல்லச் சொன்னாலும் சொல்வேன்! மானுட வரலாறு கண்ட மகத்தான பேரறிவாளனும் பேராசிரியனும் பேராசானும் காரல் மார்க்ஸ் ஒருவன்தான்! எல்லா ஆசிரிய உரைகளும் அவனுடைய குறிப்புகளிலிருந்துதான் துவங்கியாக வேண்டும்!
Share
16 people like this.
1 share
Comments

Abbas Al Azadi இல்லைங்க்னா... முடியாது..
August 5 at 11:08pm

Arivu Selvan ஆம். மாற்றே இல்லை.
August 6 at 8:06am

Shajehanmubarak Js
August 5 ·
இலக்கியம், கலை என்பதெல்லாம் சந்தேகமில்லாமல் அவை எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் அவை கலை, இலக்கியம் ஆகின்றன!
Share
15 people like this.
Comments

Shajehanmubarak Js
August 5 ·
சமூகம் வர்க்கங்களால் ஆனது என்பதையும் வர்க்கங்கள் இருக்கும் வரை வர்க்கப் போராட்டம் இருக்கும் என்பதையும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். பிறகு வர்க்க ஆய்வைத் தொடங்க வேண்டும். சமுதாயத்தில் என்னென்ன வர்க்கங்கள் செயல்படுகின்றன என்பது தெரியாதவரை சமூகம் பற்றின வர்க்கம் பற்றின உங்கள் அறிவு முழுமை அடையாது!
Share
8 people like this.
Comments

Shajehanmubarak Js
August 5 ·
அரசு என்பது ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை வன்முறையால் அடக்கி ஒடுக்கி வைக்கும் ஒரு இயந்திரம் என்ற மகத்தான உண்மையை வரலாற்றில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்த பேராசான் ஒரே ஒருவன் தான்! அவன் பெயர் காரல் மார்க்ஸ்!
Share
13 people like this.
1 share
Comments

களந்தை பீர் முகம்மது இதுபோன்று தொடர்ந்து பதிவிடுவ்து ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர்.
August 5 at 10:57pm · 1

Shajehanmubarak Js
August 4 ·
தன்னுடைய மக்களைத் தடி கொண்டு தாக்குவதும் துப்பாக்கியால் சுட்டு உயிர் பறிப்பதும் சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதும் அரசு மற்றும் அமைச்சின் இலக்கணம் என்று எழுதாத வள்ளுவன் ஒழிக!