Vijay Bhaskarvijay
இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் ‘ஸ்டைலிசம்’ என்பது என்னவென்று சுந்தர ராமசாமிக்கோ,பேட்டி கண்டவருக்கோ தெரியவில்லை.
சுந்தரராமசாமியை ‘ஸ்டைலிஸ்ட்’ என்று பட்டயம் கட்டுகிறார் பேட்டி கண்டவர்.
சுரா திருப்பிச் சொல்லும் போது,அவருடைய ஸ்டைல் அவருடைய உள்ளடக்கத்தால் விவரம் பெறுகிறது என்கிறார்.
அவர் உண்மையில் ஸ்டைலிஸ்ட்டாக இருந்தால் -இப்படியில்லாமல்,அவருடைய ஸ்டைலின் அழுத்தத்தினால் அவருடைய உள்ளடக்கம்தான் உருமாற்றம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த காரணத்தினால்தான் ஸ்டைலிஸ்ட்டுகள் புதுரகமான பண்டிதவாதிகளாகவும் ஆகிறார்கள்.
சுராவிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவரிடம் மங்கி விட்ட தர்சனம், அவருடைய ஸ்டைலை அங்கத நடைக்கு மெதுவாக மாற்றி அதிலேயே ஸ்திரம் பெறச்செய்துவிட்டது.
அவருடைய தற்போதைய நிலை இதுதான்.
- பிரமிள்
Piramil shared Thuraiyur Saravanan's photo.
10 mins ·
Thuraiyur Saravanan with Kaala Subramaniam
கேள்வி : நீங்கள் உங்களைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
பிரமிள் : அவசியம் தெரிந்துகொள்ள வேண்டுமா? சரி குறித்துக்கொள். நான் ஒரு பிரகஸ்பதி. எனக்குத் தெரிந்தவையெதுவும் தமிழில் மற்றவர் எவருக்கும் தெரியாது. என்னைவிட அறிவுஜீவியான மற்றொரு கவிஞன் தமிழில் இன்றில்லை. ஒருநாளின் 24 மணிநேரமும் எனக்கு ஒரு கவிஞனின் வாழ்க்கையாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனக்குப் பட்டதை முகத்துக்கு நேரே சொல்லிவிடுவேன். முன்நிற்பது பூதமா, சாமியா? என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. எனக்கு யாரும் கொம்பன் கிடையாது.
------------------------------------------------------------------------------------------------
மேலும்,
(ஒரு கேள்விக்கான பதிலில்)
பிரமிள் : ... என்னுடைய படைப்புகளை யாரும் அங்கீகரிக்கத் தேவையில்லை. அதனை ஏற்கனவே இந்த பிரமிள் அங்கீகரித்துவிட்டான்.
-------------------------------------------------------------------------------------------------
( பிரமிளின் பேட்டியிலிருந்து ...)
[ மகுடம் பிரமிள் சிறப்பிதழ் ]
Add Friend
Arulljothiechanthiran அருள்ஜோதிச்சந்திரன் Sandrasegarampillai
20/04/1939 இல் பிறந்து 76வது ஜயந்தி தினங் கண்ட படிமகவிதைப் படைப்பாளர் பிரேமிள் தர்மூசிவராம் அவர்களின் நினைவாஞ்சலி.
Piramil added 2 new photos.
March 7 ·
பிரமிள் அவர்களின் கையெழுத்து.
Like Comment Share
Like Comment Share
ZERO GRAVITY 38
A film by Stanley Kubric and
Arthur C. Clarke
AN ODE TO '2001: A SPACE ODYSSEY'
Where is the foot---
Fall? Where's
The foot for
The fall? We're
The bottomless
On a sea without surface
Crouched Future - wise
In womb suits.
The tiny burps
Of our coded beeps
Die within a rocket's reach.
The contending crackles of
Every giant mouth - eye - window.
So sparingly called at home.
Star,
Takes over
The void's unknown media.
Hal,
The ship's master computer
Double - crossed our usefullness
Thrown overboard
By a computerised righteousness
We're the confetti, spilling
From a new kind of reasoning.
After the exhaustion
Of all its provisions,
Our space - suits
Would soon be coffins.
Without a surface
To float us debris
Without a bottom
To sink us debris
The waterless sea is
Its own surface all over
Its own bed all over.
We're the space - borne,
Destination: despare.
Our coded radio signals
Kick through the alkaline distance,
Short lived tads,
Fighting way home,
To an Earth - ovum.
None makes it.
@project Star'they said, 'This is
Project point - blank.'
But expansion
The elastic dimension
Moves apart the galaxies
Like an absract Samson
And from star to dtar
Zero gravity
Crashes down on us
Like a roof of
Pillarless cavity.
The nightmare getting close
We cry out in our sleep
In coded radio signals:
"Mama!"
THE GREAT WIND - TAMER 37
He may be
Just seven years old,
But, look,
He has tamed the wind
With a kite.
EPIC 36
The detached father
Writes along the wind
A long flight.
E=Mc^2
சக்தி = ஜடம் X ஒளிவேகம் ^2
ஒற்றைக் குருட்டு
வெண்விழிப்பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
"எங்கே?"
என்றார்கள் மாணவர்கள்.
ஒம்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்யத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
"இங்கே " என்றான் சிவன்.
"அசடு" என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.
ஒரு குழந்தை விரல்பயித்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர .கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன----
காலமே வெளி!
இன்று கண்டது
நேற்றையது.
இன்றையது நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.
விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.
அனுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்த்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கத்தியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!
மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை.
1945
ஹிரோஷிமா நாகசாகி
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.
இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.
பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை..
ஃ
கண்ணாடியுள்ளிருந்து குறுங்காவியம் 34
V
தசைச் சுவர்வீசும் இப்
புவன நிகழ்வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன.
ஒவ்வொரு சுடரும் (25௦)
பெண்குறி விரிப்பு.
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
காற்றில் ஏறும்
மயானச் சாம்பலாய்
எனது லிங்கம்
மீண்டும் எழுகிறது.
பனிவிரலாய் நிற்கிறது.
உடனெழுந்து நிற்கும்
கேள்விகள். (26௦)
இச் சுடர்களின் பொருள்?
பார்வை?
இவற்றில் துடிப்பது
இக்கணம்.
பயத்தில் உறைகிறேன்.
விரிந்து மூடி
துடிக்கும் கதவு.
பார்த்துப் பழகச்
சமீபித்தால் கண்ணாடி.
இக்கணம் இக்கணம். (27௦)
எனது கண்கள்
குகைகலாகின்றன.
என்னை என் கபாலம்
எதிர்கொண்டழைக்கிறது.
வெளியெங்கும் சுடரா?
நிழலெங்கே?
உள்ளே
புற வுலகெங்கும்
ஒளிப் புழுதி.
புழுதிச் சுவர். (280)
திரும்பி நடக்கிறேன்.
திரும்பு திரும்பு.
வளைய வருகிறேன்.
எரியும் மணல்மீது
சேற்றுச் சுவடுகள்.
சுடர்களோ என்னோடு
இதயத்துள் ஒடுங்குகின்றன.
ஆனால் இங்கே,
பாலைமீ தெங்கும்
திசையின்மையுள் (29௦)
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி வெறிச்சிட்டு நிற்கிறது.
குறுங்காவியம்
கண்ணாடியுள்ளிருந்து
Piramil
November 20, 2014 ·
கண்ணாடியுள்ளிருந்து குறுங்காவியம் 34
IV
பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாதது. (15௦)
அதன் வித்தை ஒரு
போலி வெளி.
பகலைக் கவ்வும் ஒரு
நிழல் நோய்.
என் இருப்பைக் கவ்வும் ஒரு
மூளை.
கதிரின் மீது
நரம்பு வலை.
ஆனால்
தனித்த சுடருக்கு (16௦)
நிழலில்லை.
சுடரைச் சூழ்ந்து
இரவாய் விரிகிறது என்
தசையின் நிழல்.
இரவினுள்
ஒரு சுடர்.
இதயத் துடிப்பு.
வெளியில் ஒளிப்
பிளவு.
மிருதுச் சுவடு. (17௦)
முரசொலி கேட்கிறது.
மத்தளங்கள் நடனம்.
சொர்க்கத்துள் நுழைகிறது
மயானச் சாம்பல்.
பரிதியைத் தீண்டும் ஒரு
பனி விரல்.
இவ்வொளி யோனியை
தடவி விரித்தது எவர்கை?
எவ்வகைப் பிரியம்?
இதயத்தின் மத்தளத்தில் (180)
அதிர்வு
மௌனம்.
உயிர்ப்பு
மரணம்.
இக்கணம்
இக்கணம்.
யாவற்றினுடனும்
எனது உடன்பிறப்பு.
என்னுடன் யாவும்
யானெனும் கோஷம். (19௦)
யுகாந்திரங்களாயினும்
நிலைத்திருப்பது ஒரு கணம்.
இக்கணம்.
மறுகணம்
மீண்டும் எதிரேறும்
எதிர் காலம்.
ஒளியைப் பிரதியெடுக்க
மனசை விரித்தேன்
மனதானேன்.
இருள். (2௦௦)
இதயத்தை மூடும்
மனசின் சவப்பாறை.
மலரின் மீது ஓர்
ஊமை வியாதி.
ரத்தச் சக்தியுள்
புதையும் ஒளித் தாவரங்கள்.
ஒளி குவிந்து
வெறும் புழுதி.
மணல்.
கண்ணாடிப் பாலைமீது (21௦)
நடுக்கம் பிறக்கிறது.
புழுதியுடல் பெற்றது காற்று.
எரிந்து கோஷிக்கும்
மணற் சுவாலைகள்.
என்னைச் சூழுமொரு
அசைவுச் சுவர்.
பிறகு
ஒவ்வொரு மணல்மீதும்
எனது தசை நிழலின் படிவு,
பாரம். (22௦)
இறங்குதல்
மண்டுதல்.
உதரக் கண்ணாடி
என்னை அழைக்கிறது.
முகத்தில் முளைத்த
முலைகளாய் மயக்கும் என்
பிரதியின் கண்கள்.
என் மீதழுந்தும்
பார்வைக் குவடுகள்.
உதரக் கண்ணாடி (23௦)
என்னை அழைக்கிறது.
மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்
வாழ்க்கையின் நடிப்பு.
புல்நுனி மீதுறையும்
பனித்துளியில்
ஒரு மலையின் பிரதிபிம்பம்.
மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்.
அனால் கண்ணாடியுள் நிற்பவன் (24௦)
நிழலுக்கும் பதிதன்.
கண்ணாடி:
ஊடற்ற ஒரு
போலி வெளி.
வெற்றுத் தனம்.
நிர்பரிமாணம்.
Piramil
November 19, 2014 ·
கண்ணாடியுள்ளிருந்து குறுங்காவியம் 34
III)
சிகிச்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது. (80)
அவ்வுயிரின் மீதெனது
நடனங்கள் பிறக்கின்றன.
புலன்களின் மீது
கதவுகள் பூக்கின்றன.
பிறகு பிறந்து
நடக்கும் இரவு.
இரவுடன் நடக்குமொரு
அந்தகாரத்தின் அளவின்மை.
என்னுடன் பின்தங்கும்
அதன் ஒரு துளி --- (9௦)
இருண்ட நெருப்பு,
ஊமை நட்பு.
பகலூடே. எனது இருப்பினூடே,
நடக்கும் நிழல்.
மத்தியக் கணத்தில்
என் இதயத்தை நெருடுமொரு
ஊமைத் தனம்.
எனது ரத்தத் துடிப்பில்
ஒரு குனரூபத்தின் சமிக்ஞை.
என்னை உணர்ந்த ஓர் (1௦௦)
ஊமை நண்பன்
என்னிலிருந்து எழும்
லிங்கமாய்த் துடித்து
இரவினுள் புதைய
இணங்குகிறான்.
இரவினுள்
காலம் காலமாய்
கொள்ளை போய்க்கொண்டிருக்கும்
வைரங்கள் போல்,
போகாத நக்ஷத்ரங்கள். (11௦)
வெறுமை மீது
ஒன்றை யொன்று உற்று நோக்கும்
இரண்டு கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி.
எங்கும்
கோடானு கோடி
பிரதி பிம்பங்கள்.
கர்ப்பக கிருகத்து
வௌவால்களாகத் தவிக்கும்
நிழல்கள். (12௦)
போக வழியற்று
சுற்றிக் குவியும்
இருள் குழுவினுள்
சூரிய ஊற்று
நிழலாய் உறைகிறது.
கதிர்களின்
காக்கை அலகுகள்,
இருண்ட அலறல்கள்.
இருள் நெருங்கி
வைரப் புன்னகைகளில் (13௦)
வர்ணவில் சமிக்ஞை யிட்டு
அழைத்ததும்
எனது நிழல்
நிமிர்ந்து
இரவினுள் புதைகிறது.
எங்கும்
உருவெளித் தோற்றங்கள்.
இரவினுள் புதைந்து
முயங்கிக் கிடக்கும் நிழல்கள்.
ஒன்றையொன்று கண்டு நிற்கும் (14௦)
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறுக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.
கண்ணாடியுள்ளிருந்து குறுங்காவியம் 34
II)
நாம் ஒருவருள் ஒருவர்
ஊடுருவ முடியாதா?
ஊடுருவி நின்றாடி
எமது ரத்தத் துடிப்பின் நடனத்தை
பருக முடியாதா?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
மனம் வாய்புலம்புகிறது.
எமது காலடிகள்
சமன் கோடுகளில் வளர்கின்றன.
பொறுமையிழந்து (4௦)
எம்மிடையே நிகழும் வெளிமீது
மின்னல்களை வரைகிறேன்.
விடிவு வருகிறது.
புறாக்களின் வெள்ளித் துடிப்பில்
எனது மலட்டுத்தனம்
தூக்கம் கலைகிறது.
அத்துடன் மரணமும்.
இதயத்தின் உதிரத்தாலாட்டில்
மரணம்
புரண்டு படுக்கட்டும். (5௦)
கேள்,
குரல்கள்!
ஒளியின் திடீர் ஊளை.
இந்த வெற்றொளி
கண்காணாத ஊற்றொன்ரின்
ஊளைதான்.
ஒளியின் பேராழத்துள்
ஊற்று ஒளிந்திருக்கிறது.
தனது நீர்ப்பெருக்கின் மீது
தானே மிதந்து (6௦)
ஊற்று எதிரேறட்டும்.
தொடுவான்மீது
இவ் ஒளி உதரம் அழட்டும்.
அழுகை இறுகி
நக்ஷத்ர சக்திகளின்
சிற்றலைகளாகட்டும்.
அவைதமது அச்சுக்களிலிருந்து
உலகங்களையும்
மண்துகள்களையும்
கக்கட்டும்...(7௦)
அல்ல---
நீர்ப்படலத்தில் ஏறி மிதப்பது
ஊற்றாகாது.
குமிழ்.
Piramil
November 17, 2014 · Edited ·
கண்ணாடியுள்ளிருந்து குறுங்காவியம் 34
I)
யாரிது?
இதுதான் என் பிறப்பா?
இது பிரதி,
இரட்டை,
எனது புதிய மறுமை.
பிறப்பல்ல.
பிறப்பதற்கு
வாழும் கணமே
சாவாக வேண்டும்.
நாமோ (1௦)
வெறுமே சாகிறோம்.
கண்ணாடி சமீபிக்கிறது.
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது
ஒவ்வொரு அடிச் சுவட்டுடனும்
என் இதயத்திலிருந்து
வீழும் ஒரு நட்சத்திரம் (2௦)
எனது இருளுருவின்
விளிம்புவரை தானிந்த
உலகின் தொடுவானம்.
கண்ணிமைகள்
தொட்டுக் கொள்கின்றன.
கண்கள்
இமைகளின் ஆழத்துள்
எதையோ தேடி
தாமே தயாரித்த
தரிசனங்களைப் பருகுகின்றன. (3௦).
Piramil
November 16, 2014 ·
பிரியும்போது 33
அவள் நாடகபாணியில் தலையை
நிமிர்த்திக் கொண்டாள். எனக்கோ
களைப்பு. மாலை இருளினுள் புரண்டது....See More
Piramil
November 16, 2014 ·
பாலை 32
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என்பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
சிதைவு 31
லிங்கத்தின் உதயமுனை
வரம் தந்தது.
இவளுக்குப் புதுவிபரம்
புரிந்தது.
மூண்டது
கரு.
புரியாது கழிந்த
பொய்நாட்கள் எல்லாம்
உடைந்து குவிந்து
பழங்கதையாய்க்
கிடந்தன . பார்
புழுத்து
பாழின் புழுக்கடையில்.
இருந்தும்
பாசம் நெடி நீட்டி
அழைக்க இவள்
முகம் திரும்பிப்
பார்த்தாள்.
பார்வையில் ஊன்கொண்டு
ஊர்ந்தன
புழுக்கடைப் புழுக்கள்-
முகம் கொண்டு
பல் நீட்டி
ஊன் தந்த விழிப்பந்தைக்
கவ்வி
உயிர் குடிக்க ஊடுருவி
கருவைத் தேடி
உதரத்துள் புகுந்தன.
✪
பிறந்தது பிள்ளை
பிணமாக.
ஃ
கல்வீச்சு 3௦
காலக் குளத்தே
நாளை நேற்றென்ற
அலையேன் புரள்கிறது?
'இன்று' எனும் கல்த்துளிகள்
வீசி விழுவதனால்.
(நன்றி 'எழுத்து')
லட்சியவாதி 29
நானும் பார்கிறேன்,
அன்னாந்தல்ல.
✪
வானத்தில்
பரிதியே நின்று
கிணற்றுள்தன் பிம்பத்தை
பட்டம் விட்டாளும்
குடி தண்ணீர்
வாளி வீச்சில்
நடுங்காது நிற்கிறதா?
அலைக்காமல்தான்
அள்ளமுடிகிறதா என்ன?
ஃ
எல்லை 28
அதிர்கிற தந்தியில்
நிசப்தம் குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது.
எரிகல் 27
வெளிவானம் எரிகல்லில்
கிழிபட்டுத் தெரிகிறது.
விழுகிறது இருட்கரியின்
வயிரம் உதிர்கிறது....
இயற்கைதன் இருளை மொழி
பெயர்த்து உதிர்த்தகவி...
உதரக் குடல் நாடி
உதிரும் சிறு குழவி...
(நன்றி 'எழுத்து')
பெயர்ப்பலகை 26
முனையில் தெருவின்
பெயர்ப்பலகை.
அதைப் படித்துத் திரும்பினால்
தெரு முற்றத்தில் ஒரு
கோலக் குமரி.
✪
கோலமாக் கோடுகளை
மெல்லக் கரைக்கிறது
மழைச்சேறு மெழுகிய
'மல்லிகைத் தெரு'.
மின்னல் 25
ககனப் பறவை
நீட்டும் அலகு.
✪
கதிரோன் நிலத்தில்
எரியும் பார்வை.
✪
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை.
✪
கடவுள் ஊன்றும்
செங்கோல்.
(நன்றி 'எழுத்து')
014 ·
மறைவு 24
கூந்தலின் திரை விலக்கி
வெடித்தெழும் வெண்முகம்....
கண்ணிமைச் சிறகில்
ஆசைகள் நடுங்கும்....
இதழின் உதறலில்
நேசத் துளிகள்
உதிரும்...
ஆனால்,
முன்னும் பின்னும்
கொஞ்சும் கண்கள்,
நடுவில்
முத்தக் கனலில்
இதழ்கள் கரைகையில்
ஒளித்து மறையுது.
ஏன்?
திருப்திச் சுடரில்
தியானித்திருக்கவா?
கனவுக் குமிழாய்
விழிக்குழி நீக்கி
நினைவில் அலையவா?
எங்கே?
நெருக்கத் திரையிலா?
இதழ்மதுக் கசிவின்
போதைக் குளத்திலா?
நெருப்புச் சுனையெழும்
இதயப் பிளவிலா?
ஏன்?
எங்கே?
(நன்றி 'எழுத்து')
கனவு 23
கண்ணில் பட்டு
நினைவுள் நிற்கும்
பிரதி
கருவாயிற்று.
கைகால் முளைத்து
உதடுகள் பூத்துச்
சிரிக்கும் இதுவெனப்
போஷித்தேன்.
விழிப்பின் கதவைக்
காவளுமாக்கினேன்.
✪
நடு இரவில்
சூல் கலைந்தது.
சில் லென்று
சிற கெடுத்தது
கரு.
புறவுலகின்
பிரத்தியட்சத்துக்கு
வழிதேடி
உதரச் சுவர்கள்
நடுங்க உதைத்து
உள்ளே பறந்து
திரிந்தது.
✪
கர்ப்பக்கிருகத்தில்
இருள் உடைகிறது.
உடைந்து சொரியும்
இருளின் செதில்கள்,
சிரிக்காத
சிறுமுகம் தூக்கி
தோல்சிற கலைத்து
எத்தனை எத்தனை
அரைகுறைச் சிசுக்கள்!
.....................திடுக்கிட்டு
கனவுள் கண்
விழித்தேன்.
கலைந்த சூல்
ஓடிவந்து
கூடிற்று.
ஒருகணம் நானே
கருவானேன்.
✪
நாளை புரட்சி 22
வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்.
பசியில் அடைத்த
காதிலும் விழுகிறது
நாளைபுரட்சி
சரித்திரம் நமது கட்சி
என்றென்
பசியைக் கூட
ஜீரணிக்க முயற்சிக்கும்
ஏப்பக் குரல்கள்.
ஆனால்,
நாளைகள் ஒவ்வொன்றும்
நாள் தோறும் நேற்றாக
தன்பாட்டில் போகிறது
தான்தோன்றிச் சரித்திரம்.
நம்பிக்கை 21
கல்லில்
சிரிப்பைச் செதுக்கி
பூவைப் பிடுங்கி
அடித்தேன் கல்லில்
'பூஜை' என்று
கும்பிட்டது
கும்பல்.
ஏதோ சிரிப்பு
எங்கிருந்து?
உள்ளிருந்தா?
வெளியிலா?
செத்துச் செத்து
உபதேசிக்கிறது
பூவின் சிரிப்பு.
கேட்டேன்
பூவைக்
கும்பிட்டேன்.
ஊரைப் பார்த்து
'கல்லின் சிரிப்பு
முறைப்பு' என்றேன்.
கேட்ட கும்பல்
கல்லைப் பிடுங்கி
பூவையடித்தது.
தொழில் கவிதை 2௦
இன்னும் விடியவில்லை
முதுகைக் காட்டிப்
புரண்டு படுத்தாள்
தொழில் என்பாள்,
என் மனைவி அவள்.
*******************************
இவள் யார் புதிதாய்
மோகினி
'இனிமை' என்கிறாள்?
'அவள்' காதில் விழுந்தால்
உடனெழுந்துறுமுவாள்
போய்விடென்றேன்.
என்றென் விதிக்கு
வெட்கினேன். சிரித்தாள்.
வெட்கம் வெளியாயிற்று.
***********************************
இரவுக் கூரை உதிர்ந்திட மிதித்து
எழுந்தது சிரிப்பு.
மனக்கண்ணின் மத்தளத்தில்
கதிர்களின் கூத்தடிப்பு,
மடியில் இவளவள்,
ஒருத்திதான்.
(கம்யூனிஸ்டுகளுக்கு)
ராமன் இழந்த சூர்ப்பனகை 19
இருளின் நிறமுகக் கதுப்பில்
தணல்கள் சிரித்தன.
அவள் ராக்ஷஸப் பாறைகள்
பாகாய் உருகின.
உருகியென்?
அவனோ கடவுள்.
ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்.
நடையோ
ரடியொவ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்.
நடுங்கியென்?
அவனோ, பாவம்,
கடவுள்.
தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்து பிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்து எரிந்தழைக்கும்.
அழைத்தென்?
அவனோ, த்சொ!
கடவுள்.
முதுமை வருகை 18
வீழ்ந்த வருஷங்களைக் கணக்கில் வை.
கிழட்டுத்தனம் பனிக்கோடையாக
மேல்வர கலங்கரை விளக்கு தன்
யந்திரங்களை வேகம் குறைக்கிறது.
ஏற்கனவே குளிர்ந்த கடல்களின் மீது
கப்பல் திசை தவறிவிட்டது.
ஒரு பனிப்பாறையாகச் சமைந்து,
மரணம், கடைசி அதிர்ச்சிதரக்
காத்திருக்கிறது.
இழந்த படிமங்களைக் கணக்கில் வை.
தாய் நிலத்தை, அடிமனத்தை, அத்துடன்
இதயத்தை ஆட்சி கொள்ள,
ஒரு குற்றமற்ற குழந்தமை
பிரதிஷ்டை செய்து நீ இப்போது
இழந்துவிட்ட சிலைகளைக் கணக்கில் வை.
இன்றிருப்பவை, அவற்றின் தளங்களில்,
காற்றின் குருட்டு விரல்கள்
தடவிப் படிக்கும் வெறும் பெயர்கள்.
ஊமை 17
மனிதரின் பேச்சு அவனுக்குப்
பிடிபடாது.
பேசாத வேளையில்
ஊமைகளாகின்றன
பாஷைகள்.
நக்ஷத்ரங்களைவிட
நிறையவே பேசுவது
அவற்றின் இடையுள்ள
இருள்.
எனவேதான்,
தன்தனி வழியில்
நம்பிக்கை குலையாமல்
பேச்சுக்கும் அப்பால்
தாண்டி,
அவன் கண்ட கலை
சமிக்ஞை.
தாசி 16
குங்குமம், கூந்தலில் மலர்,
"குலக்கொடி நான்,
ஆனால் இது
பசிக் கொடுமையில்" என்றாய்,
எனவே நான்
பேரம் பேசவில்லை.
உன் கண்களும்
அரை யிருளில்
உனது புருவநிழலில்
தெரியவில்லை.
மனசக் கீறியது
இருளின் திருட்டுவிழிப்பு.
தசையைத் தீண்டிற்று
தாம்பூலச் சக்தி.
இருபது ரூபாய்களுக்கு
எனதின்பம் உனதுதரத்துள்
எரிகற் தாரையாய்
சீறி விழுந்தது.
இரவு பெருக்கெடுத்து
ஓடிக் கழிந்தது.
விடிகாலையின் வெற்றுமணலில்
தனித்தொன்றிய
கர்கலாய்த் துயின்றோம்.
விழித்தெழுந்தபோது கண்டேன்
உன் கண்ணில் ஒரு
மலட்டுத்தனம்.
குற்றத்தை உணரா மனப்
பாசி!
நேற்றிரவு
பேரம்பேசியிருந்திருக்கலாம்.
தவிப்பு 15
தவிப்பு, நம்பிக்கையின் இனிய துகள்களாய் சிதறி விழுகிறது.
மனிதச் சிறுவர்கள், இரவினூடே யாவற்றையும் தேடிப்பிடித்தாராய்ந்து விளையாடுகின்றனர்.
எல்லையின்மை தவித்துத் தவித்து, சிதறியபடி ஆராய்வுக்ககப்படாது விரிந்தகல்கிறது.
இந்த இரவுகளில் சிறுவர்களின் ஆய்வுக்கருவிகள்தான் விழித்திருக்கின்றன.
ஆய்வுக் கூடங்களில் எல்லையின்மையை செயற்கைக் கருப்பைகளில் சிறையிடுகின்றனர்.
கருவையும் நிர்மாணிக்கின்றனர். காத்திருக்கின்றனர்.
கருப்பை வெடிக்கிறது.
அழிவு.
சரித்திரம், காலம், மனிதச்சிறுவனின் நம்பிக்கைகள்...... இனியதுகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.
அற்புதம் 14
துருப்பிடித்த
இரும்புக் கொடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப் பாறைகள்.
வரண்ட நதிபோல் கிடக்கும்
ஒரு துறைமுகத் தெரு
எங்கும்
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்.
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்.
அற்புதம்.
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க,
பரிதியின் விரித்த கையிலிருந்து
ஒரு மழைத்துளி பிறக்கிறான்.
முகத்தில்
வைரத்தின் தீவிரம்.அவள்
மூளையில் ஒரு வான வில்.
எச்சல் துளி
என் விழிப்பந்தில் வீழ்கிறது.
அக்கணம், ஒரு கணம்
கிரேன்கள் லாரிகள் யாவும்
தொழிலற்றுச் சமைந்தன.
வசன கவிதை தவிப்பு 15

ஆய்வுக் கூடங்களில் எல்லையின்மையை செயற்கை கருப்பைகளில் சிறையிடுகின்றனர்.

சரித்திரம், காலம், மனிதச்சிறுவனின் நம்பிக்கைகள்.......இனியதுகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.
ஃ
அடிமனம் 12
முட்டித் ததும்பியென்ன?
மாலையில் பகல் வடிகிறது.
ஒளி ஒதுங்கிய இரவாகிறது.
கதிர்
எங்கோ சொட்டி
விளைந்தன தாரகைகள்,
பகலின் துளிகள்.
என் மன அகலிகையின்
நிறைவின்மை முடிவுற்று
வாழ்வு கரவாகிறது.
இனி என்ன?
கௌதம உக்கிரத்திற்கு
ஒரு போலி.
போலிப் பரிதி.
ஒரு போலி வைகறை.
உதிக்கிறது எங்கும் ஒரு
திருட்டுத் தெளிவு.
இந்திர நிலவு.
பாதி தெளிந்து
ஆடை கலைந்து
வெளிர்கிறது மனவெளி.
ஒலியற்றுச் சிரித்து
மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு தனித்து
வெறிச் சோடிய தெருவெங்கும்
அழுகி வடியும் விளக்கின்
வாழ்த்தொளி.
இது நிகழ்ந்த சமயம்
இடமற்ற
மனோவேளை.
(நன்றி: 'கசடதபற')
வசன கவிதை வருகை 13
இரு துவங்களிலுமிருந்து சுவர்கள் முளைத்து அறையாகின்றன.
சூர்யக் கூரையிலிருந்து தொங்கும் ஒரு ஆகர்ஷணத் தூணியுள், அறைவாசி காமம் மேலிட்டுத் தவிக்கிறான்.
நக்ஷத்ரன்களினூடே, இன்னொரு மானுஷ்யத்தைத் தேடி அலைகிறது அவளது காம வாடை.
பிரபஞ்சம், நுகரும் புலன்களற்று, வெற்றுப் பார்வை பார்த்து. விடாயைக் கூட்டுகிறது.
ஒளிமண்டலங்களிடையே பிளக்கும் அகாதம் தூளியில் தவிப்பவளை நோக்கி வந்து புகுந்தபடியே இருக்கிறது; முடிவற்று விடாய்தீர்கிறது. உணராது அவள் தவிக்கிறாள்.
ஃ
0
பேச்சு 1 9
கேள்,
அழகு கதைக்கிறது.
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகளைக்கும்.
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச் சுவருள்
வண்டுக் குரல் ஒலிகள்
மோதி மடிகிறது.
முத்தத் திரைமறைவில்
பேச்சுப் புதைகிறது.
ஆனால்,
ரத்தம் கதைக்கிறது.
மௌனம் அதிர்கிறது.
(நன்றி: 'எழுத்து')
பேச்சு 2 1௦
கருத்தழிவின் கழிவு
காதலன் பிதற்றல்.
அவள் சொல்லோ
வெறும் பார்வை.
வெறும் விரல்கள்
மணலில்
விட்ட வடுக்கள்.
(நன்றி: 'நடை')
விடிவு 11
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்,
மிதக்கும் குருவி.
(நன்றி: 'எழுத்து')
31/01/2014.
முதுமை 7
காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது.
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக்காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என்விழி வியப்புகள்
உயிரின் இவ்வந்திப்போதில்
திரைகள் தொடர்ந்துவரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்.
அந்தியை நோக்குகிறேன்.
ஏதோ எரிகிறது.....
ஒன்றுமில்லை,
பரிதிப் பிணம்.
பூர்ஷுவா 8
வம்பளப்பு,கண்ணடிப்பு,
கண்ணாடியில்
டீயை எதிர்பார்த்திருக்கும்
பிரதி பிம்பங்கள்.
சீனத்துக் கோப்பைகளில்
வெள்ளையன் கரண்டிகள்
சிந்திய சிரிப்புகள்.
எங்கள் முறுவலிப்பு
முறைக்கும்.
தேசம் திருகி
வலம் இடமாகும்.
காலமும் திருகி
நேற்றையது நாளையாய்
நாளை நேற்றாகும்.
யாவும் உருகி
நீராகும்.
அனால் நாமோ
முறுவல் என்று
முறைப்போம்.
யாவற்றையும் கண்டு
கண்ணாடியில்
நிச்சலனமாய்க் காத்திருக்கும்
பிரளயம்.
ஃ
கலப்பு 5
ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....
வசன கவிதை சுவர்கள் 6
மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது.
வீடு திரும்பும் வழி தெரியவில்லை.
அன்று.....
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கி திறந்த பாலைவெளியினூடே
ஒரு நக்ஷத்திர அழுகையில் அழைத்து வழி காட்டிற்று.
நான் சக்கரவர்த்தியுமல்லன்.
சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல.....
பாலையாயினும்
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாஸமான பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும்
வீடு
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
இந்த சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.
கருவாகி
புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண.
(லக்ஷிமிக்கு)
குருஷேத்ரம் 3
இன்று வேலை நிறுத்தம்!
'கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே'
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கன்னபிரானுக்குக்
கல்லடி
சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்.
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்தவீர் யார்ச்சுதனாய்
தலை ஆயிரம்,
கை இரண்டாயிரம்.
கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்.
விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை.
இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
'கீதையைக் கேட்க
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடு கௌரவரை' என்றான்.
பறந்தது போன் செய்தி
பொலீசுக்கு.
(உன் ) பெயர் 4
சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
'அப்பாடா' என்று
அண்ணாந்தேன்.......
சந்திர கோலத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.
அறைகூவல் 2
இது
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.
நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என்குதிரை.
பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர் வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.
தோலும் தசையும்
ஓடத்தெரியாத
உதிரமும் மரமாய்
நாடு மனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விற்குப் போர்வீரா!
தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.
சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து)எரியும்
சோதிஒன்று வருகிறது.
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே
தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்
நீ
ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன்
மீசையிலும்!
னில் விலகி,
இன்றேல்
நீறாகு!
தவம்
ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று கணந்தோறும் பயந்தார்கள்.யுகங்கள் கழிய பயங்கள் வியப்பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலோ என்றழைக்கத் துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர். வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது கலையும் வைத்தியமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின் உதரமாகிறான்.
ஆனால் நான் எழுதமுயர்சிக்கும்போது மட்டும் அவன் குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக மரங்களில் மோதி எதிரோளிகலாகச் சிதறுகின்றன. "டேஃப்னே, டேஃனே"என அப்போலோ தான் காதலித்தவளைப் பின் தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது. டேஃனேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள். அவள் கன்னிமையின் நிழலில் நான் நிற்கிறேன். அதன் இலைகளை ஒடித்து அப்போலோவைப் போலவே சிரசில் அணிந்து கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது.என் விரல்களை மடித்து கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள் முயல்களையும் முள்ளம்பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரைஈரலிறக்கைகளுள் மடிகின்றன.
சூர்யன் தன் உத்தரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான். எல்லையற்று ஒடுங்கிக்கொண்டிருக்கிறான்.
தவம் 1
இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.
சிலையை உடை
என் சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.
அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில் காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.
மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.
சுல்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.
ஏன்னெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது. எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.
அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.
இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸ னமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.
மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில் பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
வெங்கட் சாமிநாதன்
புதுடில்லி
ஜனவரி 16 1973
இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.
22/01/2014
தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.
அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.
இன்னும் வரும் 21/01/2014
இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.
துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்
எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.
இன்னும் வரும் 20/01/2014
இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.
இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.
இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......
சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.
·
யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.
வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை
என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.
என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.
நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.
ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.
மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.
'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?
'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.
கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?
இன்னும் வரும் 18/01/2014
Piramil
January 18, 2014 ·
சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,
கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.
இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.
இன்னும் வரும் 17/01/2014
தர்சனம்
புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.
வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.
இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.
In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.
பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?
என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.
எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.
"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.
"தசைச் சுவர்கள் வீசும் இப்
புவன நிழல் வெளியில்
சுடர்கள் ஆடுகின்றன
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி
(எனத் தொடர்ந்து)
.... .... .... ....
கண்ணாடி
இக்கணம்.
இக்கணம்," (வரை)
இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.
"மூடிய கதவின்
சாவித் துவாரத்தில்
(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)
இன்னும் வரும் 15/01/2014
இவ்வுனர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.
இன்னும் வரும் 14/01/2014
பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive). இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.
கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.
கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.
அதே சமயம்,
வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:
வெறுமை மீது
ஒன்றை யொன்று உற்று நோக்கும்
இரண்டு கண்ணாடிகளினுள்
வெளியினுள் வெளி
எங்கும் கோடானு கோடி
பிரதிபிம்பங்கள்
கர்ப்பக் கிரஹத்து
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள்
இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மறைந்து ...
இன்னும் வரும் 13/01/2014
மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரைக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.
இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.
இன்னும் வரும் 12/01/2014
ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.
ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.
இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.
இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.
இன்னும் வரும் 10/01/2014
"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"
என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,
"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"
என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.
ஏன்?
பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.
இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.
படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு" "மின்னல்" ஆகிய கவிதைகளில்.
இன்னும் வரும் 10/01/2014
ஆரீன்றாள் என்னை
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று பெரும் வெளியில்
ஒன்று மற்ற பாழ் நிறைந்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால்
முடிஎரித் துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களின்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெரு வெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!
யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனுகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்?
இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.
வேலி கட்டா வானத்தில்
வெள்ளிப்பயிர் வளர்க்க
தாலிகட்டிச் சத்தியினை
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி
காலமெல்லாம் காத்திருக்க
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன்
அயர்ந்திருக்கும் வேளையிலே
வேலி கட்டா வானத்தில்
வெள்ளி விதைக ளெல்லாம்
அள்ள விழுங்கும் வரை
நீர் பாய்ச்சி என்ன பயன்
வேர் முளைக்கக் காணோமே!
இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.
இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.
படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு"
பூமித் தோலில்
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.
இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.
இன்னும் வரும் 08/01/2014
அகநாழிகை புத்தகக் கடையில் Aganazhigai Pon Vasudevan ஒழுங்கு செய்திருந்த ’பிரமிளுக்கான நினைவுக்கூறல்’ இந்த புத்தக சீஸனில் கலந்துக்கொண்ட கூட்டங்களிலேயே மிகச்சிறப்பானது.
ராஜேந்திரசோழன், எம்.டி.எம்., எஸ்.ராமகிருஷ்ணன், கவுதம சித்தார்த்தன், ராஜசுந்தரராஜன், கால. சுப்பிரமணியம், வெளி ரங்கராஜன், ஆழி செந்தில்நாதன் என்று பிரமிளோடு பழகிய ஆளுமைகள் எந்த பாசாங்கும் இல்லாமல் உரையாடினார்கள். மிக நிச்சயமாக பிரமிள் இருட்டடிப்பு செய்யப்படும் மாபெரும் கலைஞர். தப்பித் தவறி இப்போது எங்காவது குறிப்பிட நேர்ந்தாலும், அவரை ஏதோ மாய யதார்த்தவாத மாந்திரிக பாத்திரம் மாதிரிதான் சித்தரிக்கிறார்கள். இலக்கிய போலிகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஓட ஓட விரட்டியவர் என்பதால் அவருக்கு இந்த நிலைமை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
இதே மாதிரி நினைவுக்கூறலை இன்னமும் பெரிய அரங்கில், நிறைய பேர் கலந்துகொள்ளும் வகையாக செய்ய வேண்டும். இரண்டாயிரங்களுக்கு பிறகாக இலக்கிய வாசிப்பினை நாடும் இளைஞர்களுக்கு திரும்பத் திரும்ப பிரமிள் நினைவுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பிரமிளால் இலக்கிய ஊக்கம் பெற்றவர்கள் இதற்காக பொன்.வாசுதேவனுக்கு துணையிருக்க வேண்டும்.
பி.கு : பிரமிள் குறித்த நேர்மையான அறிமுகத்தை விரும்புபவர்கள், அகநாழிகை புத்தக நிலையத்தில் விற்கப்படும் ‘லயம்’ இதழ்த் தொகுப்பை வாங்கலாம். பைண்ட் செய்யப்பட்ட கனமான அத்தொகுப்பினை லாபநோக்கமின்றி, மிக மலிவாக ரூ.150/-க்கு விற்கிறார்கள்.
புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.
மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.
மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்கு போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாத கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்.
இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.
மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது.
எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.
நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.
இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.
இன்னும் வரும் 06/01/2014
பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.
இன்னும் வரும் 05/01/2014
சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.
இன்னும் வரும் 04/01/2014

பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.
இன்னும் வரும்...03/01/2014

"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு
கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973
மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்
வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்
நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும் வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.
இன்னும் வரும்...01/01/2014
மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.
பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.
இன்னும் வரும் 02/01/14