Thursday 3 September 2015

-Maxine Kumin- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-Le Van Tai- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-Vincent Buckley- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





For this thing the body needs
Let me sing
for the supper,
for the kissing.
for the correct
yes...........


-Anne Sexton-



உனது உடையில் அது எவ்வாறு தோன்றுகிறது
என நான் சொல்லட்டுமா?
நீ மாய்ந்த ஒரு மாதம் கழிந்ததும்
உனது நீல மேலுறையை நான் அணிகிறேன்,
எனது வாழ்வின் மையத்திலிருக்கும் நாய்
வருகை தர நீ வந்திருப்பதை அடையாளம் காண்கிறது,
அவன் மெய்பரவசிக்கிறான்.
இடதுபுற பாக்கட்டில் ஒரு துளை,
வலதுபுறம் ஆகஸ்ட் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள
பே ஸ்டேட் சாலைக்கான நிறுத்தச் சீட்டிடுக்கிறது.
எனது நெஞ்சில்,
மில்க் வீட் வனச்செடியாய் வீசீத் தூவப்பட்டவை,
ஆன்மாவின் விதைப்பைகள் கவனமற்று எறியப்பட்டுள்ளன,
எனது சருமம் உனது பழைய புறக்கோட்டை அழுத்துகிறது.
அகப்புறம் உலர்ந்து மற்றும் கொதித்திருக்கிறது.


உனது அந்திம நாளை நான் எண்ணுகிறேன்,
நெடுநாளைய நண்பனே ,அதை நான் எவ்வண்ணமாய் பிரித்தறிவது, வேறொரு ஒவியச் சேர்க்கையில் நானதை எவ்வாறு
ஒருசேர ஒட்டுவது,
நிறுத்துமிடத்தில் செயலற்று கிடக்கும் மரணக் -காரிலிருந்து மீண்டு,
மாடிப்படியில் மேலேற , பிராத்திக்கும் உனது கரங்கள் அவிழ்க்கப்பட்டுள்ளது,
உண்ணக் கடியுண்ட ரொட்டியும் - சூரை மீனும்
ஒரு சாண்ட்விச் சடங்கில் மறு-சேர்மானமடைகிறது,
நாம் சகஜமாக புழங்கும் வெளிக்கு
வீட்டுத் திரைப்படத்தை பின்னோக்கி ஓட்டி,
சமையலறையில் வோட்காவும் ஐஸ்கட்டியுடனிருக்க,
வாழும் இறைச்சியாக நமது வார்த்தைகள்.

நேச நண்பனே, நீ உனது உதாரணத்தோடு
கிளர்ந்த ஜனத்திரளை தக்கவைத்துள்ளாய். அவர்கள்
உனது விளிம்புகளில் வலிந்து
வைன் பைகளாய் வீங்கிப் பெருத்துள்ளனர்,
நமது வார்த்தைகளை ஆண்டாண்டுகளாக சேகரித்திருப்பேன்,
எழுத்துக்களை , புகைப்படங்களை, சாயக்- கறைகளைத் தூண்டிலிட்டு பிடித்தபடியிருப்பேன்
நீள்-காலம் நீடித்த துணியின் மீது
எனது விலாவை சாய்த்தபடியே
உனது மாய்வின் ஊமை -நீல மேல்சட்டையை அணிவேன்.

-Maxine Kumin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)










இளவேனில் அணுகி நிகழ்ந்துவிட்டது , ஆனால் தூய்மையோ உடனிகழவில்லை;
மூலைகளில் சேகரமான புழுதியை மனம் துடைத்தெறிகிறது,
நுண்ணிய கறுத்த விதைப் பைகள்
சிலந்தி வலைத் திரையால் போர்த்தப்படிருக்கிறது,
இலையிழைக் கொடிகள், மற்றும் காய்ந்தவைகள்,
தழைக்கும் யாவுமே ஒரினமாய் கூடி நகர்பவைகள் ,
பிரவேசிக்க தகுந்த தருணம், போத்திசெலியின் நங்கையே,
உனது தோளில் ஏந்திய ஒளியுடன்
திடமான காலினை முன்னோக்கிச் செலுத்தி
இப்புனித இடத்தை காத்தருள்கிறாய்.


-Vincent Buckley-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
I think I grow tensions
like flowers
in a wood where
nobody goes.


Each wound is perfect,
encloses itself in a tiny
imperceptible blossom,
making pain.

Pain is a flower like that one,
like this one,
like that one,
like this one .

-Robert Creeley-



சூரியன்கள் அற்ற நாட்களில்
நான் எனது நெஞ்சின் கனலை
சற்றே கூடுதலாக்க விழைவேன்.

நகைத்தல் அற்ற நாட்களில்
நான் எனது விரல்களில்
ரோஜா மலரும்வரை
கனலை விடுவிக்க முயல்வேன்.


இசையும் கவிதையும் அற்ற நாட்களில்
நான் பறந்து அப்பாலுற முயல்வேன்
அலையாய் வளைவுறும் எனது வெண்கேசம்
காற்றில் புகையாக மாறுகிறது.

இல்லம் அற்ற நாட்களில்
அம்மாவும் உன்னையும் சூழ யாருமில்லை
நான் எனது விழிகளை இறுகச் சாத்தி
அலையும் மருள்- தோற்றங்களின் மீது நினைவுறுகிறேன்
என்னுடைய சுருண்ட கால்விரல்களில்.

-Le Van Tai-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)