இலக்கிய உலகின் மர்ம யோகி!
கவிஞர் பிரமிள்-மு.வி.நந்தினி
ஜூலை 16, 2013
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது‘
தன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.
Piramil
”அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்” என்கிறார் காலசுப்ரமணியம்.
”இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்‘ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.
’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது.
Piramil's painting
அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ’கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.
ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…
https://mvnandhini.wordpress.com/
Like Comment
Share
4 people like this.
1 share
Comments
Write a comment...
பிரமிளுக்குப் பிறகு பிரமிள்/pramil After Pramil
January 29, 2014 ·
ஒளிக்கு ஒரு இரவு
காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.
Raja Sundararajan
எழுத்துக் கலை பற்றி
______________________
கால சுப்ரமணியன்: உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றிக் கூற முடியுமா?
பிரேமிள்: படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே, சிருஷ்டிகரமான ஆழ்ந்த கருத்துகள் தோன்றும் நிலை. இதுதான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துகள் பளீர் பளீரெனப் பிறக்கும் போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துகளை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக, ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.
கா.சு.: எழுத்து மூலம் உண்மையை அடைதல் பற்றி உங்கள் பார்வை என்ன?
உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான். எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒடுக்கத்தைத்தான் இந்த மௌனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒடுக்கத்தைச் சாதித்துவிடுமா? ஒண்ணரைக் கவிதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான் தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக்கொண்டால் அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தை நாசூக்காகக் கொலு வீற்றிருக்கக் காணலாம். எனவே, கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது நேர்மையும் மனஒருமையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்.) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ தான். மிக மேலோட்டமான பயிற்சிதான்.
(இன்று, 6 ஜனவரி, கவிஞர் பிரமிள் நினைவு தினம்.)
முதல் முகத்தின் தங்கைக்கு-பிரமிள்
துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி
உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?
உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?
அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.
மோஹினி
கவிதை..ஓவியம்-பிரமிள்
‘உனக்கே
உனக்கு நான்’ என
சப்தித்த நின் பார்வைகள்
உன் முகம் நீங்கி
எட்டாத நிலவாயிற்று.
வக்கரித்துத் தரையில்
இலைப்பார்வை பரப்பிற்று.
வழிதொறும்
நிழல் வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும் ஓர்
ஆயிரம் வடுக்கள்.
வேதனை வேர் நரம்பெழுந்து
மூடியது கானகம்.
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்.
என் மன விகற்பத்தின்
வெண் இருள்
நிழலை வளைத்து
துளி வேல்கள் ஏந்தின
கருநீல முட்கள்.
உயரத்தே ஒரு கணம்
பார்வையைப்
பறிகொடுத்து
ஊளையிட்டது நிலவு.
அது கணம்
வெண்நிழல் அழைத்தது.
அணுக
அவளை என்
பாதங்கள் துணிந்து
அணுகக் கருநீல
வேல் நுனிகளில் என்
உதிரத்தின் மலர்ச் செம்மை.
முட்கள்
மொக்க விழ்கின்றன.
விரிகிறது
இதழ் வேளை.
ஊன்றி எடுத்த என்
பாதத்தில் ஊறி
உதிரத்தில் ஒலித்ததுவோ
நிலவின் விஷ ஊளை.
நாநுனி தவித்து
துளியளவு தீண்டி
பதிவுகள் தொடர
திசையறும்
வெண் இருளில்
ரகஸியக் கிணறு.
அதில் எரிகிறது
ஈரநெருப்பு.
குனிந்து பறந்து
கீழ்நோக்கி எழுகிறேன்.
தத்தளித்து
தாகம் தணித்த
நீர்வெளி
பாறையாய் இறுகி
என் புதைவை
சிறையிடுகிறது
கல்பீடம் ஆகிறது.
நிலவின் ஊளை வெளிறி
பலிசிந்தி வீழ
அவளது தந்தங்கள்
வெறிக்கின்றன.
ஓ! என்
பணிவுகளை உறிஞ்சும்
பலி பீடமடி நீ!
பசிதணிந்து
பசிகொண்டு
பாறை தளர்ந்து
தசை வெளியாய்
தத்தளித்து
பசியேற்றி
அசைகிற சுழலே,
இன்று கொட்டும்
இருளின் தமுக்கில்
நம் இருவர் தசைகளில்
தீராத
தினவுகள் அடியே!
பசுந்தரை
கவிதை, ஓவியம்-பிரமிள்
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!
என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.
பாலையில் படர்கிறது
பசுந்தரை.
Drawing by Pramil
பிரமிள் உருவாக்கிய சிற்பங்கள்
பியானோ
இதயச் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள் தைக்க விடாத
கல்நாரினால் செய்த
காலணிகள் பூண்டு
தசை மினுக்கி
தசை பார்த்து
அறையில் அமர்ந்திருந்த
உள்வட்டக் கூட்டத்தின்
இந்தியச் சலசலப்பினுள்
சிந்தித்தன மேற்றிசை
இசையின் கரங்கள்
நிலவின் நிலவெளிமேல்
சிறகெடுத்து விரல்நுனிகள்
மிதந்து தயங்கின
கைதொட எட்டி
கண்தொட எட்டாத
தொலைதூரம் வரை
கட்டமிட்டு நின்றன
ஸ்ருதி பாறைகள்
இசையின் வெளியில்
வட்டமிட்டது ஒருநிழல்
திடீரிட்டு
வெளிநீத்து வெளியேறி
கையை நிழல்
கவ்விக் குதறிற்று
வேதனையில்
சிலிர்த்த விரல்கள்
நிலவில் ஒடுங்க்கின.
நிலவெளிமேல்
ஸ்ருதிப் பாறைகள்
தத்தளிக்க துவங்கின.
"அடடா!- ஆனாலும்
இண்டியன் கர்நாடிக்
மியூசிக்கிற்கு
அப்புறம்தான் இது -
நம்ப கல்ச்சர்
ஸ்பிரிச்சுவல் ஆச்சே"
என்று உருண்டன
உள்வட்டது
அசட்டுக் கற்கள்
இந்தக் கல்நார்
தோல் வட்டத்துக்கு அப்பால்
அரை இருளில்
காலணியற்று நின்ற
யாரோ ஒருவனின்
இதயச் சுவடுகளில்
குத்திய முட்கள்
சிறகுகளாயின
துடிப்புகள் கூடி
கழுகுகளாகி
நிலவில் ஒடுங்கின
நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெரு மௌனம்
பிரமிள்
கலப்பு
ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....
கவிதை, ஓவியம் -பிரமிள்
பிரமிளுக்குப் பிறகு பிரமிள்/pramil After Pramil
August 14, 2014 ·
drawing by Pramil
பிரியும்போது - பிரமிள்
அவள் நாடகபாணியில் தலையை நிமிர்த்திக் கொண்டாள்
எனக்கோ களைப்பு. மாலை இருளினுள் புரண்டது. ஏதோ,
சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிரியுமுன்
கைகளைப் பற்றிக் கொண்டோம். சில வேளை, ஒரு
பார்வையின் விபத்து பழைய நினைவுகளைத் தொட்டு
மறைந்திருக்கலாம். விரல் நுனிகளை நோக்கி நழுவிய கைகள்
திடீரென விழித்த பாழ் நிலங்களாயின. உடன் ரத்தமும்
இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசின........
கதவு
நிழல் விழுத்தும் அகாதம்
தட்டாது தானே திறக்கும் கதவு
ஆனால் தேனீ தட்டாது
மொட்டு திறக்காது
சுற்றும் விட்டிலும்
சுடருக்குக் கதவு தேடி
சிதறி விழும்- இதோ
இப்போ இப்பாறைச்சுடருள்
புகுந்தவன் யார்?
சுவர் நடுங்க உள் நின்று
உதைப்பவன்?
சுடரிதழ் விரிந்தது - தெரிந்தது
அகாதம்.
வித்தியாசமான கேள்வி - பதில்கள்
POSTED BY ஜ்யோவ்ராம் சுந்தர் ON FRIDAY, JUNE 6, 2008 / LABELS: கேள்வி பதில்
வெகு ஜன வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, நம் வலைப் பதிவர்களும் கேள்வி பதில் எழுதத் துவங்கி விட்டனர். சில பதிவுகளைப் பார்த்தேன் - வெறும் மொக்கையாக இருக்கிறது.
மீறல் இதழுக்காகப் பிரமிள் கேள்வி பதில் வெளியாக இருந்து, சில காரணங்களால் அப்பகுதி வரவில்லை. சில கேள்வி பதில்களை உயிர் எழுத்து ஏப்ரல் 2008 இதழில் பிரசுரித்திரிக்கிறார்கள். உயிர் எழுத்திற்கு நன்றியுடன், சிலவற்றை இங்கு பதிகிறேன். இப்படிப் பட்ட கேள்வி பதில்கள் வெளியிட்டால் படிக்க - குறைந்த பட்சம் - சுவாரசியமாகவாவது இருக்கும். பதிவர்கள் முயல்வார்களா ?
ரவி உதயன் : நிலையான ஒரு பெயரை வைத்துக் கொள்வதில் என்ன சிரமம் உங்களுக்கு ?
பிரமிள் : ‘பெயர் குறிப்பிடுவதே விமர்சனம்' என்று நினைப்போர் தரும் சிரமம் தான்.
ரவி : உங்களுக்குப் புரிந்த உங்களது கவிதை ஒன்றைச் சொல்லவும் ?
பிரமிள் : உங்கள் பெயரே ரவியை உதைக்கிறது, உங்களுக்கு நான் சொல்லலாமா ?
சாரு நிவேதிதா : சே குவாராவின் குசு அதிக வாசனையா ? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா ?
பிரமிள் : உங்கள் எழுத்துக்களில் அடிக்கும் வாசத்தை எது தோழர் பீட் பண்ணும்!
சாரு : உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா ?
பிரமிள் : என் கவிதைகளுக்கு சக்தி புத்தி. உங்கள் பேத்தல்களுக்கு பீத்திமிர்.
சாரு : குஷ்புவின் பின்னழகு - சுகன்யாவின் பின்னழகு ஒப்பிடுக.
பிரமிள் : ஒப்பிடுவது எப்படி ? பின்னழகு ஒப்பனைக்கு ஒப்பனை மாறுபடும் பிடரி மயிர் ஓய்!
சாரு : ஜெனெ - ஜே கே, இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர் ? யாரிடம் அதிகபட்சம் உச்ச இன்பம் கிடைத்தது?
பிரமிள் : ஜெகன் மோஹினிப் பிரமையில் ஏதோ பேத்தி விட்டீர்கள். என் உச்ச இன்பம் எல்லாம் உங்கள் வாய்களைக் கிழிக்க அடிக்கும் போது தான்.
விக்ரமாதித்யன் : பாலிமிக்ஸ் நிற்குமா ? படைப்பு நிற்குமா ?
பிரமிள் : மிகப்பெரிய உலக இலக்கியங்கள் யாவும் பாலிமிக்ஸை உள்ளடக்கியவைதாம். வெறும் பாலிமிஸ் என்று பார்த்தால், காளமேகம், பிற்கால ஓளவை, கம்பன், திருவள்ளுவர் ஆகியோரின் தனிப் பாடல்கள் பாலிமிக்ஸாகவே இன்றும் நிற்கின்றன. வீர்யம் உள்ளவனின் குசுவும் படைப்பாகும். வீர்யமற்றவனின் படைப்பும் குசுவாகும்.
விக்ர : தேவதேவன் தவிர்த்து உங்கள் ஸ்கேலுக்குள் அடைபடும் பிற கவிஞர்கள் யார் யார் மிஸ்டர்?
பிரமிள் : நிச்சயமாக நீர் இல்லை, கவியாண்மையற்ற லிஸ்டர்!
விக்ர : நவீன கவிதையின் அனாவசியமான இயல்பற்ற இறுக்கம், கட்டமைப்பு, செறிவு, லொட்டு லொசுக்கையெல்லாம் உடைத்தெறிகிற கவிதைகளே நம் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்ற எண்ணத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுதான் என் சிந்தை!
பிரமிள் : உமக்குண்டு ஆமாம் போட ஒரு மந்தை!
விக்ர : சில்க் ஸ்மிதாவின் அழகு, கண்ணிலா, உடம்பிலா?
பிரமிள் : நிச்சயமாக, நீர் காணும் அழகு உமது கண்ணில்தான் என்பது அழகியல் தத்துவம்.
இரா நடராஜன் : தருமு சிவராமு செத்துப்போய் விட்டானா?
பிரமிள் : ஆம். இருப்பது பிரமிள்.
இது போன்ற கேள்விகளுக்கு நம் சக பதிவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என யோசிப்பதும் சுவாரசியாமாகத் தான் இருக்கிறது !
http://jyovramsundar.blogspot.in/2008/06/blog-post_06.html
சென்னைக்கு மேல் நிலவு
குளிரின் விறைப்பில்
கதகதப்புத் தேடும்
கண்டத்துக்கு வந்துவிட்ட
உங்களுக்கும்,
எலிகளுடனே
சென்னையின் ஒரு
சிமிண்ட் பொந்தில்
குடியிருக்கும் எனக்கும்
எப்போதும் எரிகிறது
உள் மனத்தில்
தமிழகத்து வெயில்.
நெய்தல் மெரீனாவில்
சித்திரை நெருப்புக்கு
ஒத்தடம் தரும்
மாலைப் பொழுதும்
மனசுக்குள் எங்கோ
புகைகிறது.
கடல்கடல் என்று
பஸ்பஸ்ஸாய்
வந்திறங்கி
வந்திறங்கி
வரட்டுக் காற்றை வாங்கிவிட்டு
இப்போது
வீட்டுக்கு வீட்டுக்கு என்று
பஸ் நிறுத்தத்தில்
அடர்கிறது ஜனத்தொகை.
சற்றே வெற்றி என்று
சப்புக் கொட்டிய
குடும்பக் கட்டுப்பாட்டுப்
பிரசாரகர்களும்
பஸ் நெரிசலில் அகப்பட்டுத்
திணறுகிறார்களாம்;
அடேங்கப்பா
இவ்ளோ ஜனங்களா
என்ற அவர்கள் திரிசங்குக் குரல்
ஜனங்களைத் தாண்டி ஒலிக்கிறது.
கவிதை, ஓவியம்--பிரமிள்
பிரமிளின் ஓவியங்கள்//
ஒளிக்கு ஒரு இரவு-
காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.
நிழல்கள்
பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;
இருளின் சாயை ஒளி.
சைத்ரீகன்
வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?
எழுத்து. டிச. 1961
Meenakshipuram Deivakumar Muthukumaraswamy
மிள் கூறியதை குறிப்பிட்டது, பிரமிளின் கல்லறையின் மேல் சுப்பிரமணியன் வைத்திருந்த எளிய உருவப்படத்தை விளையாட்டுப் பையன்கள் சிதைத்துவிட்டதைச் சொன்னது ஆகியவை என்னை வெகுவாக பாதித்தன; கால சுப்பிரமணியன் அவற்றை தகவல்களாக மட்டுமே குறிப்பிட்ட போதிலும். வீறாப்பாக சமரசங்கள் இன்றி கம்பீரமாக வாழ்ந்து மறைந்த கவிஞனை எந்தவித பச்சாதாபங்களும் இல்லாமல் நினைவு கூர வேண்டும், கொண்டாடவேண்டும் என்ற என் அந்தரங்கமான எண்ணம் தோல்வியடைந்தாக நினைத்தேன். பிரமிளின்
"காலத்தைத் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு- நான்
அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்தவிதம்.
சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது.
சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது.
சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது" என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வர ஆறுதலடைந்தேன்