A vague mist hanging' round half the pages:
( Sometimes how strange and clear to the soul,
That all these solid things are indeed but apparitions,
concepts, non-realities.)
-Walt Whitman-
ஒரு அரைநிமிட பிரதிபலிப்பு:
அதை நோக்கி சுடட்டுமா அன்றி போய்விடவா?
இனமறியாக் காரணத்தால்
அந்த விலங்கு தன் விழிகளை
இன்னமும் என்மீது குவிக்க இயலவில்லை;
பிறகு அது
எனது முகவாய் தாடியின் வனமொத்த வளைவைக் கண்ணுற்றது.
சுடுதலின் நிறைவேற்றம் சற்றே எளியதுதான்,
நிரந்திரமாக நிறைவேற்றாது விடுத்தலைக் காட்டிலும்.
தோட்டா துப்பாக்கியிலிருந்து விடுவித்துக் கொண்டது,
அந்த விலங்கு விழிகளை உருட்டியது,
அப்போது, அருகிருந்த, ஆடையற்ற ரோவன் மரம்
தனது கரங்களை வான் நோக்கி உயர்த்தியது.
-Gleb Gorbovsy-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அக்டோபர் மாதம், மூடுபனியும் மற்றும் மழையும்.
மரங்களும், புதர்களுமற்ற வனவெளியில் படர்ந்திருக்கிறது,
முன்னதாக நேசம் மீளாமையை வினவுகிறது,
ஆயினும் உள்ளத்துள் ஒளிந்திருக்கிறது.
மற்றும் நாம், துயர்மிகு மனநிலையில்,
வனத்துள் பேசாமையில் நடையிடுகிறோம்,
ஒரு அளப்பெரிய புதிர்மையில்
நமது நுண்ணிய இரகசியங்கள் ஒளிக்கப்பட்டுள்ளது.
-Aleksandr Kushner-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)