Tuesday 25 August 2015

-David Mourão-Ferreira-,-Nuno Judice--Sophia de Mello Breyner-, -Eugénio de Andrade-, -Vasco de Graça Moura-, Sophia de Mello Breyner Andersen- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்) -Virgil-



சந்தையின் அழுத்தங்கள்;
கவிதைக்காக வார்த்தைகளை கைமாற்றாய் கொடு அல்லது
அசைகளைக் கடனாகக் கொடு ,
அவைகளை நான் சந்தையில் முதலீடு செய்வேன்.
ஆனால், உருவகத்தின் விலையோ கூடியிருக்கிறது,
எளிய படிமங்களுடன் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
மலிவானது யாருமே விரும்பாதது : ஒரு மலர்?
நாட்டுப்புற வெளிகளின் சுகந்தம் ?
பார்ப்போரிடம் வட்டியேதும் கேட்காமலே,
ஒன்றன்பின் ஒன்றாய் உடைபடும் அலைகள்.
வார்த்தகளின் விலையோ அதிகமாயிருக்க,
திருப்பிச் செலுத்த குறைவிலையாய் இருக்கும்,
சின்னஞ்சிறு வார்த்தைகளைத் தேடி,
நான் அகராதிகளின் ஏடுகளை புரட்டுகிறேன்.
எனவே என்னை ஈடுசெய்யக் கேட்பதில்லை,
ஒரு வரியின் முடிவில்,
அவைகளை சீரற்ற ஒழுங்கில் கிடத்துகிறேன்,
சந்தங்களுக்குத்தான் அதிக பிரச்சனை,
இருமடங்காக எனக்கு கட்டணம் போடுவார்கள்.
எத்தகையத் தள்ளுபடியை நான் நோக்கினாலும் சரி ,
பற்றாக்குறை ஏற்படுமாயின்,
அதனை ஈடுசெய்ய என்னால் இயலாது.
அப்போது;
திருப்பிச் செலுத்துவதற்கான விகிதம் என்னாவாக இருக்கும்.
நான் எனது கைப்பையை திறக்கிறேன்,
எனது பாக்கட்டை உள்ளிருந்து வெளிப்புறம் திருப்புகிறேன்,
கையிருப்பைப் பாருங்கள் அவை காலியாகவே உள்ளன.
குறியீடுகள், சுழியம் , உருவகக் கதைகள் , விற்றுத் தீர்ந்தன;
உருவகங்கள் , ஒன்றுகூட மிச்சமில்லை.
யாரிடம் நான் உதவி கேட்பது?
எந்த கவித்துவ-அவசர நிதி, என்னை மீட்கப் போகிறது?
இறுதியாக , ஒரேயொரு அசை மட்டுமே எஞ்சியுள்ளது-
காற்று
அது என்னிடம் உள்ளது
சுவாசிப்பதிலிருந்து யாராலும் என்னைத் தடுக்கவியலாது.


-Nuno Judice-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
August 25 at 10:36pm ·



சிலசமயங்களில் இரவுகள் பலநாட்களாய் நீள்கிறது,
சிலசமயங்களில் மாதங்கள் ஆழிகளாகிறது
சிலசமயங்களில் நாம் இறுகப்பற்றும் கரங்கள்
அதேபோல் ஒருபோதுமிருப்பதில்லை . சிலமயங்களில்;
இரவு நம்மை பலவருடங்களாக என்னவாக ஆக்கியதோ -
இரண்டே மாதங்களில் நம்மையே அதில் கண்டடைகிறோம்
சிலசமயங்களில் நாம் ஞாபகமுறுவதாய் பாசாங்கு செய்கிறோம்,
ஆழியின் சுவையை நாம் உணர்வதாய்
சிலசமயங்களில் நாம் ஞாபகமுறுகிறோம்.
குவளைகளின் அடிப்புறம் இரவுகளின் மிச்சங்களை
காண்கிறோமே அன்றி மாதங்களையல்ல.
சிலசமயங்களில் நாம் நகைக்கிறோம் அல்லது அழுகிறோம்,
சிலசமயங்களில் - சிலசமயங்களில் ஒ- சிலசமயங்களில்,
ஒரு நொடிப்பொழுதில்
எத்தனையோ வருடங்கள் சுவடின்றி மங்கி மறைகிறது.


-David Mourão-Ferreira-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











No day shall erase
you
from the memory of time....

-Virgil-



உடல்கள் பெருவெளியால் விழுங்கப்படுகிறது...........

காற்று வீசிக் கடக்கும் கணத்தில் பைன் மரங்கள் கிரீச்சிடுகிறது,
சூரியன் பூமியை அறைகிறது கற்கள் எரிகின்றன.


உப்புடன் வெண்மை மற்றும் மின்னொளிர் மீன்,
அற்புதம் விளைக்கும் கடற்கடவுளர்கள் தொலைவில் கடக்கின்றனர்.

ஒளிக்கெதிராய் வீசப்பட்டத் துரித வனப் பறவைகள், கூழாங்கற்களின் தூவலாகின்றன,
வானுள் குத்திட்டு உச்சியெழுந்து மடிகின்றன ,
அவைகளின் உடல்கள் பெருவெளியால் விழுங்கப்படுகிறது.

-Sophia de Mello Breyner-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



அங்கொரு சிறிய பூகம்பம் ,
எங்காயினும் நீயனது நாமத்தை சொல்லும் தருணம்,
உனது வாயின் உயரத்திற்கு என்னை உயர்த்துகிறாய்
மெல்ல,
என்னை இலைநீக்கம் செய்வதற்கல்ல.
பதினைந்தே வயதென நடுங்க,
இப்பூவுலகு முழுமையும்
ஒளிப் பிரகாசம்.
ஓ சொல்லில் அடங்கா இளவேனில்.
-Eugénio de Andrade-


(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் ஆக்கப்பட்டுள்ளேன் என நினைத்தேன்,
அவையூடே எனது நேசம்,
ஒளிரும் மலர்சேர்க்கைகளின் சுடர்பந்தம்.


மிருதுவாய் வண்ணமுற்ற மேகத்தைச் சுற்றி
ஓளிவட்டம் சித்திரமாய் ஈர்க்கப்படுகிறது, விதியே
சீறியெழும் உனது இசையால்?
எனது ஆன்மாவை ஏன் கசையால் அடிக்கிறாய்.

என்மீது ஏன் உமிழ்ந்தாய்,
கனவின் இருண்மைப் பொருளினுள்ளே?
அத்தகைய வினாக்களுடன் நான் பித்தாகக் கூடும்.

இக்கணமுதல் கனவுகளிடமிருந்து பின்வாங்கு ,
கற்களுக்கு எதிராய் மெல்லச் சிதறி மறையும்,
நானொரு இன்மையின்- இருண்மைப் பொருள்.

-Vasco de Graça Moura-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





இரவு நேரத்தில் ரோஜா இதழ்களை
எடுத்து நான் கடிக்கும் தருணத்தில்,
தெளிந்த இரவுகளின் அத்துனை நிலவொளியும்,
என் பற்களுக்கு இடையே பிடிபட்டிருக்கிறது.
ஒளிப்பிரவாக மதியங்கள் சுடர்கின்றன,
ஒவ்வொரு இளவேனிலின் நடமிடும் காற்றலை ,
சூரிய அஸ்தமனத்தின் சற்றே கசந்த இனிமை,
மற்றும் ஒவ்வொரு எதிர்பார்ப்பின் ஆனந்தப் பரவசம்.


-Sophia de Mello Breyner Andersen-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)