Saturday, 15 August 2015

-Al-Hallaj- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்), -Federico Garcia Lorca-



எனது சுவாசத்தின் இரட்டையான உனது நேசமின்றி..........................

நான் பேரிறைக்கு உறுதியளிக்கிறேன்,
எனது சுவாசத்தின் இரட்டையான உனது நேசமின்றி
சூரியனும், நிலாவும்
இதுவரை உதித்ததுமில்லை அஸ்தமித்ததுமில்லை .
உன்னைச் சொல்லிப் பேசுதலன்றி வேறுயாரிலும்
நான் நம்பிக்கை கொள்வதில்லை ,
ஆனந்தத்திலும் மற்றும் சோகத்திலும் உன் நாமத்தை
ஒருபோதும் நான் குறிப்பிட்டதில்லை,
நீயென் நெஞ்சில் அமைந்தாலொழிய ,
அலைக்கழிக்கும் என சிந்தனைகளில் இறுகச் செருகப்பட்டிருக்க,
உனது தோற்றத்தை குவளையில் கண்டாலன்றி
எனது தாகத்தை சாந்திசெய்யும் நீரையும்கூட தீண்டியதில்லை,
உன்னை அடைய என்னால் இயலுமெனில்
எனது முகத்தால் ஊர்ந்தோ அன்றி
சிரத்தால் நடையிட்டோ உடனே உன்னிடம் வருவேன்,
உனது பாணனிடம் சொல்வேன் அவன் இசைக்க நேரிடில்
உனது நெஞ்சின் திண்மையில்
எனது துயரின் உள்ளீட்டை மீட்டுவாயென்பேன்,
என்னைத் தூற்றும் அறிவிலிகளுக்கு காரணமேதுமில்லை?
அவர்களுக்கான நம்பிக்கை அவர்களுடனிருக்க
எனதான நம்பிக்கை என்னுள்ளிருக்கிறது.


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






அவர்மீதான நேசத்திற்கு என்னை நீ பழிக்கிறாய்,
நான் யாரை நினைந்து பாடுகிறேனோ ,
அவரை நீ அறிந்திருந்தால் ,
உனது பழித்தலை நிறுத்தியிருப்பாய்,
மற்றோரெல்லாம் தமது புனிதயாத்திரைக்கு போய்விட்டனர்,
ஆனால்
எனது புனிதயாத்திரையோ நானுறையும் இடம் நோக்கியதே.
மற்றோரெல்லாம் தமது பலிகளை அளிக்கின்றனர்,
எனது பலியீகையோ எனதேயான இதயமும், குருதியும்.
அவர்கள் புனிதத் தலத்தை சுற்றி வருகின்றனர், ஆனால்.
பேரிறையை போற்றிப் பணிந்து பின்தொடர-
அவர்கள் புனிதகட்டிடத்தை சுற்றிவர அவசியமில்லை.


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




see with nobody's eyes,
we hear with nobody's ears,
we feel with nobody's hearts,
but our own.


-Wilkie Collins-
(The Moonstone)

(The Moonstone)




யாரை நேசமுற்றேனோ நான் அவனாயிருக்கிறேன்,
மற்றும்
நான் நேசமுற்ற அவன் நானாயிருக்கிறான்,
நாங்கள் ஒற்றையுடலில் வசித்திருக்கும் இரு ஆன்மாக்கள்,
நீ என்னை நோக்கும் போது உன்னால் அவனை காணவியலும்,
நீ அவனை நோக்கும் போது எம்மிருவரையும் காண்பாய்.


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



எனது விருந்தளிப்போன்,
அவனை ஒருசிறிதேனும் தவறிழைத்தவனாய்
குற்றம் சொல்லவியலாது,
ஒரு கச்சிதமான விருந்தோம்புவனாய் அவனது மதுபானத்தை பகிர்ந்திட அனுமதித்தான்,
ஆனால்,
உச்சமுற்ற போதையின் அறிகுறிகள் என்னில் தெளிவுறத் துவங்கியதும்
அவன் திடீரென்று சிரம்கொய்பவனை அழைத்து
ஒரு வாளையும் பாயையும் தருவிக்கச் செய்தான்,
இதுவே டிராகனுடன் நட்பு பாராட்டி
அவனுடன் கோடைகாலத்தில் குடித்தலின் முடிபு .


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




நின்னைச் சுட்டி உரக்க அழைத்தல்
நித்தம் வாதையைக் கூட்டுகிறது,
ஏதோ; நான் நின்னிலிருந்து அப்பாலுற்றதாயிருக்கிறது
அன்றி நீ என்னிலிருந்து இன்மையுற்றுத் தொலைந்தாய்,
ஓயாது நான் உனது பேரருளைக் கோருகிறேன்,
ஆயினும் தேவையை அறியா நிலையிலாழ்ந்தேன்,
இதற்குமுன் நான்
இத்துனை வேட்கை ததும்பிவழியும் துறவியைக்
கண்டதேயில்லை.


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

என் நெஞ்சில் உனக்கான புலம் என் முழு நெஞ்சம்,
உனக்கேயுரிய புலத்தை வேறுயாராலும் பறிக்கவியலாது,
என் ஆன்மா உன்னையென் சருமத்திற்கும் எலும்புக்கும் இடையே
உறையச் செய்தது
ஒருவேளை நானுன்னை என்றாவது இழக்க நேரிடுமெனில்,
நான் ஏது செய்வேன்?


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




A death and the man I am
A man alone with her,
a little death.

A man . So what ? That's all.


-Federico Garcia Lorca-