Tuesday 25 August 2015

ஒளிச்சிற்பம் // குறு நாவல் - Gouthama Siddarthan


9 hrs · Edited · 
1989 ன் மே மாத கோடையின் போதான சுட்டெரிக்கும் அனல் தகிப்பில் எழுதப்பட்ட // ஒளிச்சிற்பம் // குறு நாவல் எதிர் வெளியீடாக இந்தவருடம் வெளிவர இருக்கிறது.
அதிலிருந்து ஒரு கண்ணி..
-----------------------------------------------------------------------------
நான் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் குடைந்தேன். இருவர் கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, என் கண்களை அவள் கண்கள் கூச வைத்தன. அவள் நீளமான மூக்குபட்டு மேலும் கூசியது, கத்தியின் கூர்மையைத் தொட்டு விட்ட நடுக்கத்தோடு. எல்லையற்ற விகாசம் பொங்கின இளநகை ததும்பும் இதழ்களில். தகிப்பு ஒளிரும் முகம், வாழ்வின் உன்னதமும் பெண்மையின் பொலிவும் இணைந்த எழில் ரூபமாய் மிளிர்ந்தது. எடுப்பான, வாளிப்பான மார்புகளை மூடிய கச்சை போன்ற ஆடையும் இடுப்புக்குக் கீழே படர்ந்த சிற்றாடையும்.. சூரிய இதழ்களில் நெய்தாளா என்ன..? சௌந்தர்ய சொரூபத்தை உள்ளடக்கிய ஒடுங்கிய இடுப்பின் அபிநயம், இசை நாதத்தை மீட்டியது. கைகால்களில் தொழில் நுணுக்கத்துடன் திரண்ட வெள்ளிக்காப்புகள், தண்டைகள், சங்குக் கழுத்திலே சரிந்திருந்த மணிமாலைகள், கோபுரமாய் உயர்ந்திருந்த கூந்தலில் பொதிந்திருந்த அணிகலன்கள், நீண்ட காதுகளில் தொங்கும் காதணிகள்.. என ஆபரணங்களின் அற்புதம் எல்லையற்ற சிருஷ்டியாய் விரிய என் பார்வைக் கயிறு அறுந்தது..
மெட்டியின் விசும்பல் ஒலி என்னைக் கடந்தபோதுதான் எனக்கு சுயநினைவு வந்தது. நான் சட்டென கேமராவை எடுத்து ஃபோகஸ் செய்து ‘ஏய் ஏய்’ என்று குரல் கொடுத்தேன். அவள் அபிநயத்தோடு திரும்பினாள்.
‘க்ளிக்’
நான் படம் எடுத்ததைக் கண்டதும் ஒரே துள்ளல். மரங்களுக்கிடையே ஒரு மின்னல் வெட்டியது. அவள் மறைந்து விட்டிருந்தாள்.
“ஆதி..யார் அவள்..?” என் படபடப்பு அடங்கவில்லை.
“எனக்கும் தெரியாது..”
“அவள் எப்படி உன்னிடம் வந்தாள்..?”
அருவியின் நீர்ப்பொழிவு, சிரசின் மையத்தில் இறங்க, கண்களை மூடி அப்படியே தியானத்தில் இருந்திருக்கிறான் ஆதி. திடுமென ஒரு விசும்பல் ஒலி. தியானம் கலைந்து போய் கண்களைத் திறந்து பார்க்கிறான். எதிரில் இந்தப் பெண். அவளைப் பார்த்த முதல் கணத்தில் அவள் தன் அம்மாவாய் இருக்கக் கூடாதா என்று ஏங்கினானாம். அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பார்வை தீயாய் உடம்பு முழுவதும் எரிய அருவியை விட்டு வெளியே வருகிறான். இப்போது அவனது குறியில் விறைப்பேற்பட்டு நிற்கிறது. தான் நிர்வாணமாய் நிற்பது அவளுக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லையென்று ஒரு கணம் உணர்கிறான்.
அவள் தன் கூந்தலை அவிழ்த்து உதறிக் கொண்டிருக்கிறாள். சட்டென அந்த வெளியெங்கும் ஒரு நறுமணம் கமழ்கிறது. அந்த மணத்தின் பால் ஆட்பட்டு ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்கு போதையேற்படுகிறது. அதன் உச்ச நிலைக்குத் தாவித் திரிந்த கணங்களில் மெல்ல மெல்ல ப்ரக்ஞை தவறுகிறது.
கண்களைத் திறந்து பார்க்கும்போது அந்தப் பெண்ணின் மேல் தான் படுத்திருப்பதை உணர்கிறான் நிர்வாணமாய். அவளும் ஆடைகளற்று நிர்வாணமாய் இருக்கிறாள். அவளது வெற்றுமேனி அந்தியில் தெறித்த மின்னலாய் பளீரிடுகிறது. மின்னல் ஜுவாலையை அவ்வளவு கிட்டத்தில் சந்தித்ததில்லையாதலால் அவன் கண்கள் இருண்டு போக, அவனைப் போதையேற்றிய நறுமணம் அவளுடைய அவிழ்ந்த கூந்தலிலிருந்துதான் வருகிறது என்பதைக் காண்கிறான். போதை மறுபடியும் தலைக்கு எகிறுகிறது. மெல்ல அவள் மீது இயங்க ஆரம்பிக்கிறான். அவளுடைய உதடுகள் சர்ப்பத்தின் நாக்குகளாய் சுழல்கின்றன. திமிர்த்தெழுகின்றன மார்பகங்கள், இயங்க இயங்க அவளது உடம்பில் பொங்கிய தீயின் உக்ரம் ஆதியை சுட்டுப் பொசுக்கி உருகிப் போய் மாம்சத்திரளாய் கரைந்து வழிந்து அப்படியே மாய்ந்து போகிறான்

Lakshmi Manivannan commented on this.
இதை நான் பகிர்ந்துகொள்ளவேண்டும். இருமாதங்களாக தூக்கமில்லாத துயரம். தூக்கத்துக்குக் கண் செருகும்போது ஏதோ ஒரு புற, அகச் சப்தம் எழுப்பிவிடும். கூடவே, வலது மூளை இருபது திரைப்பக்கங்கள் திறக்கப்பட்ட பழைய கணினி போல சூடாகி பெருமூச்சுவிட்டு கழுத்தை நனைக்கும். தூக்கத் தொந்தரவு என்பதைவிட தூங்குவது எப்படி என்பது மறந்தது என்றுதான் சொல்லவேண்டும். மாலை சாய்ந்து இரவு வரும்போதே தூக்கம் குறித்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். வார்த்தைகள் நிற்காத வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னை மீறி, என்னுடையதில்லாமல். எப்படி நிறுத்துவதென்று புரியாத யோசனையும் வார்த்தைகளாகவே. காட்சிரூபமே கண்ணுக்கு எட்டாமல். செவிப்புலத்தின் சர்வாதிகாரத்தில் இருந்தேன். என் ‪#‎பிறழ்மனம்‬ கவிதையும் இந்தநிலையில் எழுதப்பட்டதுதான். மருத்துவரின் எந்த மாத்திரையும் பயனளிக்கவில்லை. சூடான பால், பாதத்தில் விளக்கெண்ணெய், வேலைக்காகவில்லை. பிராணாயாமமும் அமுக்கரா சூரணமும் கொஞ்சம் பயனளித்தன. ஆனால், கடைசியில் எனக்கு உதவியது தி.ஜா தான். செம்பருத்தியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல்நாள் கொஞ்சம் தூக்கம்வருவதுபோல் தெரிந்தவுடன், பகலில் ஒரு மணி, இரவில் தூங்கும்முன் ஒரு மணி, என்று மாத்திரைபோல. நிதானமாக மிக நிதானமாக. ஒருவரி விடாமல். சிலவரிகளில் தேர்போல நின்று. ஒன்றி. தி.ஜா மொழியைப் பற்றி ‘இரகசியம்’ ஒன்று கண்டுபிடித்தேன். அவர் வார்த்தைகளைக் காட்சிரூபமாக மாற்றுவதில் வல்லவர். வாசிக்கும்போதே மொழி காட்சியாக மாற ஆரம்பிக்கும் மனதில். இதனால்தான் போலும், என்னில் நிற்காதிருந்த வார்த்தைகள் நிற்க ஆரம்பித்தன. ஒருவழியாகத் தூக்கத்தின் வசப்பட்டேன், கனவின் வசப்பட்டேன். இலக்கியத்தின் குணமாக்கும் சக்தியை, இறையின் அருளை அனுபவித்த ஒருத்தியின் சாட்சியம் போல, இங்கே சாட்சியம் கூறுகிறேன்.