Friday, 14 August 2015

வா.மு. கோமு3 hrs ·
கழுத்து நீண்டவளும் காமாலைக்
கண்ணுடையவளுமான கனகா தன் காதலை
முதலில் வீட்டாரிடம் சொன்ன சமயம்
வேடிக்கை செய்தி கேட்டது போல் குடும்பம்
சிரிக்க செல்லமாய் சிணுங்கினாள்! அம்மா தான்
நீ சொல்லு தங்கம்! அவன் என்ன சாதி?
எங்க வேல பாக்கான்? அப்பா சும்மா
தமாசுன்னு சிரிக்காரு! என்றதும்
கனகா தன் காதலனைப்பற்றி
புட்டுப் புட்டு வைத்தாள் சபையில்!
அவைகளை கேட்ட மறுநொடியே தந்தை
வடிவேலுவின் ஜோக் பார்த்தது போல
கீழே விழுந்து சிரித்தார்! கனகா மளாரென
தன் அறைக்குள் ஓடி கதவை அறைந்து
சாத்திக் கொண்டாள். “கட்டுனா அவனைத் தான்
கட்டுவேன்! இல்லின்னா சாவேன்!” என்று சபதமிட்டாள்.
நிதானத்திற்கு வந்திருந்த அப்பா மறுக்காவும்
வீடே அதிரும்படி சிரிக்கத்துவங்க


இப்போது அம்மாவும் சிரிக்க ஆரம்பித்தார்!

You, you, you, you
me me me me
Who?.....
not you!
not me!


-Frederico Garcia Lorca-


நான் நேசத்தின் ஆழியில் இடைவிடாது மிதந்திருந்தேன்,
பாய்ந்தெழும் அலையென்னை மேலுயர்த்துகிறது, மற்றொன்று;
கீழே இழுக்கிறது,
இவ்வண்ணமாக தொடர்ந்தேன்,
இக்கணம் மேலெழுந்தும் , இக்கணம் வீழ்ந்துமிருக்க,
ஆழ்கடலின் நடுவே என்னை நான் காணுமட்டும் ,
கரையில்லா புள்ளிவரை நேசத்தால் அடித்துச் செல்லப்பட்டேன்.
பீதியுற்று நான் ’அவரை’ அழைத்தேன்,
எவருடைய நேசத்திற்கு நான் இன்றளவும் உண்மையற்றுப் போனதில்லையோ,
அவரது நாமத்தை வெளிப்படுத்த மாட்டேன்.
‘உனது நியமம் நியாமானதே , என்றேன் ,
உனது நேர்மையார்ந்த வினைகளை என் வாழ்வைக் கொண்டு
பாதுகாக்க தயாராயிருக்கிறேன்,
ஆயினும்
இதுவல்ல நமக்கிடையிலான உடன்படிக்கையின் வரையறை .


-Al-Hallaj-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



If a soul has already chosen solitude,why should it need Travel?

-Hafez-





பூந்தோட்டம் இன்று சொர்க்கத்தின் பூங்காற்றை மூச்செறிகிறது .
என்னால் என்னையே நுண்ணுரவியலும், மற்றும்
உவகையுற்றிருக்கும் இந்த வைன்,
நண்பரது தன்னியல்பு இறைமையை அணுகுகிறது.


யாசகன் அரசனாய் தன்னை இன்று கோரினாலும் சரிதான்,
அவனது கொட்டகையோ மேகம் வீசியெறிந்த நிழல்;
அவனது விருந்து மண்டபம் புதிதாய் விதையூன்றிய நிலம்.

சொர்க்கம் இங்கு மேமாத பசும்புல்வெளி சொல்லும் எளிய கதையாயிருக்கிறது,
ஞானவான் வருங்காலத்தையும் அதன் லாபத்தையும் போக அனுமதிக்கிறான், ரொக்கத்தை இப்போது ஏற்கிறான்.

உங்களது சத்ரு உங்களுக்கு நம்பகமாயிருப்பான் என
தயவுசெய்து கற்பனை கொள்ளாதீர்கள்.
துறவிகள் ஒளியூட்டும் மெழுகுவத்திகள்
இம்மையுறும் தேவாலயங்களில் எப்போதும் படபடத்திருக்கிறது.

இரகசிய வைனை பருக அனுமதித்து உனது ஆன்மாவை வல்லமையுற செய் . இந்த அழுகிய உலகு
நமது தூசையெல்லாம் செங்கற்களாக அழுத்துகிற
அதற்கேயுரிய திட்டத்துடனிருக்கிறது.

-Hafez-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நான் யவரை நேசிக்கிறேனோ அவர் வைனை ஏற்கும் பொழுதில்,
பொய்மைப் படிமங்களின் அங்காடி குலைகிறது.

பூமியின்மேல் ஒரு குவியலைக் கிடத்திவிட்டு, அழுகிறேன்,
அவனது கரத்தின் தீண்டலை மெய்யுணரும் நம்பிக்கையுடனிருக்கிறேன்.


நான் ஆழ்நீரினுள் வீழ்ந்த கயலாயிருக்கிறேன்,
தனது வலையால் என்னையென் நண்பர் பிடிப்பாரென்ற நம்பிக்கையில்.

மின்னொளிரும் அவனது விழியினுள் நோக்கும் எவரும் அழுவர்;
“ ஏற்கனவே யாரோ ஒருவர் போதையிலாழ்ந்திருக்கிறார் , காவலரை அழையுங்கள்!”

ஹபீஸை ஒத்திருக்கும் இம்மானுடன் எத்துனை ஆசீர்வதிக்கப்பட்டவன்,

ஆதாமிற்கும் முன்பே வடித்த வைனை தன் நெஞ்சத்தில் ருசித்தவன்.

-Hafez-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)