Thursday, 24 March 2016

பிரமிள் பேட்டி - லயம் 12 : கால சுப்ரமணியன்

_
 பிரமிள் பேட்டி - லயம் 12
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
padippakam
இன்றைய பின்னணி, அதிகாரம், அதனை மூலதனமாக்கி அரசியல் யந்திரத்தின் மூலம் பயங்கரமாகக் கொள்ளையடித்தல். அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவே, மூலபுருஷர்களின் அன்றைய இயக்கங்கள் இன்றைய கோஷதாரிகளாலும் வேஷதாரிகளா லும் பயன்படுத்தப்படுகின்றன. சீரிய இலக்கியத் துறையில் செயல்படும் வெங்கட்சாமிநாதனும், அரசியல் விமர்சகரான சோவும், பெருவாரிப் பத்திரிகை வாதியான சுஜாதாவும் இவ் விதமாகப் பிரச்சினையைப் பார்ப்பவர்கள்தாமா? இது விஷயத் தில் சோவைத்தான் ஓரளவுக்கு சரியான எழுத்தாளராகப் பார்க்க முடிகிறது. ஊழல் எவருடையதானாலும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இருந்தும்கூட அவர் ஜாதியவாதிதாம். சுஜாதா, தமது ஸ்தானத்தை ஆடாமல் பார்த்துக் கொள்கிறதுக்காகக் கொஞ்சம் பச்சோந்தித் தனமான வர்னஜாலங்களைப் பண்ணு வார்-இது வெ.சா. அக்குப் பிடிக்காது. ஆனால் வெ.சா.வுக் கும் சோவுக்குமிடையே பரஸ்ப முதுகு சொறிதல் உண்டு. இவருக்கு அவர் ஜீனியஸ். அவருக்கு இவர் ஜீனியஸ்.

கா.சு

பார்ப்பன இயக்கத்திலேயே எல்லா பிராமணர் களும் இருப்பதாக நீங்கள் பார்க்கவில்லையே?
பிரேமிள் பார்ப்பன இயக்கத்துக்கு எதிரானவர்களும் அந்த வகுப்பில் இருப்பது எனக்குத் தெரியும். திராவிட இயக் கத்தில் சேர்ந்து, இப்போது அ.தி.மு.க.வில் உள்ள கார்க்கி: ஒருவர். தமது பெயரிலேயே ஹலன் என்ற முஸ்லிம் இந்திய விடுதலைப் போராளியின் பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹசன் இன்னொருவர். ஹாலன் என்பதுக்கு சிரிப்பவன் என்ற சமஸ்கிருத வழிப் பொருள் உண்டு. ஆனால் கமல்ஹசன் என் பதுதான் அவர் அதை உபயோகிக்கும் உண்மை வடிவம். இவரைத் தமது பிராமண சங்கத்தில் சேரும்படி சோ அழைத்த போது நான் பிராமணன் அல்ல, பறையன் என்று கூச்சலிட்டு மறுத்தவர் நடிகர் கமல்ஹசன் சாமான்யருள் நான் குறிப்பிடப் பலர் உள்ளனர். இங்கேயும் பிற இடங்களிலும் வெ.சா. போன்றோரின் பார்ப்பனிய வாதங்களுக்கு நான் தரும் ஆதார பூர்வமான மறுப்புகள் அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை.
கா.சு பெரியார், அண்ணாதுரை ஆகியோரின் எழுத்து கள் சாகித்ய அகாதமி இலக்கிய வரிசையில் வெளிவரவேண்டும் என்று ஏற்கனவே காரணம் தந்து விளக்கியிருக்கிறீர்கள். இவர் கள் இப்படி பிரசுரம் பெறவேண்டும் என்று நீங்கள் விரும்பு வதற்கு வேறு காரணங்களும் உள்ளனவா?
40 லயம் )
படிப்பகம்
________________

padippakam
பிரேமிள்

 சரித்திரம் இருட்டடிப்புச் செய்யப்படக்கூடிய ஒன்று. ஆறுமில்லியன் யூதர்களை நிர்மூலம் செய்த நாஸிகளின் சரித்திரத்தை இருட்டடித்து அது நடக்கவே இல்லை என்று கூறுகிறவர்கள் மேனாடுகளில் உள்ளனர். முக்கியமாக Fred டecteப என்ற அமெரிக்க சரித்திர எழுத்தாளரையும் பேnter Drecker என்ற ஜெர்மன் அரசியல்வாதியையும் குறிப்பிடலாம்.

ஈ.வெ.ராவுக்கும் அண்ணாதுரைக்கும் சாகித்ய அகாதமி வரிசையில் இடம் பெறவேண்டும் என்று பிரேமிள் ஏன் மாய் கிறான்? காரணம் சமூகப் பொது உணர்வும் சரித்திரப் பிரக்ஞை யும் ஆகும். ஈ.வெ.ரா. உருவாக்கிய பகுத்தறிவு இயக்கம், இந்தியாவில் தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் நடந்த தில்லை. இந்த இயக்கங்களின் விளைவாகத் தமிழகத்தில் மட்டுமே ஜாதி எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு முதலியவை நிறைவேறியுள்ளன. இவை இடதுசாரி இயக்கங்களினாலேயே சாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தும், இடதுசாரி அரசை அமைத்த கேரள மாநிலத்தில் ஜாதீய எதிர்ப்பு இல்லை. அங்கே பெரியார் எழுத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி கிறது. தேவதாசி முறையும் ஒழியவில்லை. தமிழவனார் குட்டிக்கர்ணம் போட்டுக் கோமாளித்தனமாகப் புகழும் கர்நாட கத்தின் கதை இதைவிட மோசம். ஆர்.எஸ்.எஸ்.-ன் கேந் திரமே அதுதான். தேவதாசி முறையும் அங்கே உண்டு. ஆக இன்று ஞானி போன்ற மார்க்சியவாதிகள்கூட பெரியாரியம்’ பேசுவதன் காரணம் கவனத்துக்குரியது. மிக எளிதாகப் பொது மக்களின் உள்ளத்தில் பயமற்ற பகுத்தறிவுப் பண்பைத்துண்டும் சக்தி ஈ.வெ.ரா, அண்ணாதுரை எழுத்துகளில் உள்ளது. இது அகில இந்தியச் சொத்தாக மாறுவது அவசியம். இதற்கு அகாதமிப் பிரசுர வரிசை ஓர் உபகரணமாகும்.

கா.சு : இன்றைய சமூகத் தலைமையை ஏற்பதற்கு திறன் (Merit) உள்ளவர்கள்தாம் தேவை என்று மீறல் பேட்டி யில் கூறியிருக்கிறீர்கள். திறனாளி ஊழல்வாதியாக இருந்து விட்டால்?

பிரேமிள்
 , ஊழல் என்பது திறன் ஆகாது. இங்கே ஒரு நுட்ப விபரம். ஹிட்லர் தனக்காக எதுவும் பணம் பண்ண வில்லையே என்று இங்கே ஆர். எஸ். எஸ். கூடாரத்திலிருந்து குரல் கேட்கிறது. ஊழல்வாதியினின்றும் வேறுபட்ட ரத்தவெறி பிடித்த இனவாதம்தான் அவனுடையது. ஊழல் என்பது நாட்டின் நிதியமைப்பைத் தனித்த அதிகாரிகள் கையாடும்
0 லயம் 41
படிப்பகம்
________________

padippakam
நிலையாகவும், லஞ்சத்தின் மூலம் அதிகாரத் தொடர்பு கொள்ள வரும் மக்களைச் சுரண்டும் நிலையாகவும் பொருள் பெறும். ஹிட்லரின் இரத்த வெறியில் இந்த வகை ஊழல்கள் இரண் டாம் பட்சமானவை. அதாவது, இவற்றையும் உள்ளடக்கி, இவற்றை எளிதாக நடைமுறைப்படுத்தும் பயங்கரவாத வடிவ மான இனவெறி பிடித்த சர்வாதிகாரக் கட்டுமானம் அவனு டையது. ஊழல் செய்யும் நம் அதிகாரிகள் எட்டமுடியாத வகையில் பயங்கரவாதத்தின் மூலம் யூதர்களின் செல்வங்களை அவனது அதிகாரிகள் கொள்ளையடித்தனர். அவர்களது சர்வாதிகார முறையில் செக்ஸ்கூட, பயங்கரவாதத் தாக்குதல் தான். இதன் பொருளாதாரப் பின்னணியில் கனரகத் தொழில் வரை ஜெர்மனியில் ஒரு சுபீட்சம் ஏற்படக்கூடிய விதமாக, முதலாம் உலகயுத்தத்துக் கடன்களை எல்லாம் இந்த சர்வாதி கார முறை மூலம் தட்டிக் கழித்தான் ஹிட்லர். கடனைத் திருப்பித்தராத இந்நிலைதான் அவனது ஜெர்மனியின் திடீர் அபிவிருத்தியாக மாறியது. இதைத் தனது பயங்கரவாதம், இனவெறி, சர்வாதிகாரம் ஆகியவற்றுக்குத் தேவையான மூலாதாரமாகப் பேணியமைதான், அவனைப் பார்த்து இங்கே உள்ள இனவெறியர்களை ஜொள்ளு வடிக்க வைக்கிறது. இது Meritocracy அல்ல; திறன், நன்மை இரண்டும் சேர்ந்த ஒன்றே Meritocracy ஆகும். இதற்கு தமிழில் சீராட்சி எனலாம். ஏனெனில், சீர்மையில் திறனும் நன்மையும் கலந்த ஒழுங் கமைப்பு, பொருள் பெறுகிறது.

கா. சு 
புதுமைப்பித்தனைப் பற்றி யாரும் சரியாகக் கணிக்கவில்லை என்று முன்றில் அரற்றுகிறதே! முன்றிலில் ஒடியாடும் அணில்கள் இதைச் செய்யலாமே!

பிரேமிள்
 பத்திரிகை ஒன்றை வைத்துக் கொண்டு அதன் மூலம் தாம் வளைதோண்டி முன்னேறுவதற்கு உதவக் கூடியவர்களின் கோணங்கித்தனமான விமர்சனங்களையும், எழுத்துக்களையும் பிரசுரித்து வரும் முன்றிலார், புதுமைப் பித்தனை ஆய்வுப் பூர்வமாக அணுகத் திறன் கொண்டவரல்லர். முன்றிலாரின் தோஸ்த் சா. கந்தசாமி, வெவ்வேறு இடங்களில் பு: பி. யை மட்டம் தட்டியே விமர்சித்திருக்கிறார். முன்றிலுக்கு மூச்சுக் காட்டத் தைரியம் இல்லை. ஏனெனில் சா. க ஒரு கூச்சல்வாதி. பிரேமிளின் கருத்துகளைத்தான் இவர்கள் எதிர் பார்த்து சிவராத்திரி நோன்பு காக்கிறார்கள். எனது பார்வை சமன் செய்து சீர்தூக்கும் பண்பைக் கொண்டிருப்பது. தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் இரண்டு கண்கள் என்கிறேன்.
42 லயம் -
படிப்பகம்
________________

padippakam
கண்களுள் ஒன்றைக் குத்திக் கொண்டு ஒரு பக்கத்துக் காட்சியை மறுப்பவர்களாகவே பார்ப்பனிய வாதிகளும். திராவிடியர்களும் ஒத்தைக் கண்பார்வை செலுத்துகிறார்கள். இந்த ஒத்தைக் கண் பார்வைக்கு உபயோகமாகிறவற்றைத் தந்திரமாகத் தமதாக்கும் வேலைதான் முன்றிலாருடையது. இல்லாவிட்டா லும் என் இயக்கத்தின் தர்மார்த்த சக்திக்குப் பின்னால் ஒண்டி நின்று கல்லெறிவதே இவர்கள் நோக்கம்.

கா. சு

முன்றில் இப்படிச் செய்தால் கவிதா சரண் அப்பட்டமாகவே உங்களை ஒப்பிக்கிறது. சு. ரா. பற்றி, எழுதியவர் பெயரில்லாமல் கவிதா சரண் ஒரு கட்டுரை வெளி யிட்டபோது, உங்கள் கட்டுரையா என்று ஞானி என்னை விசாரித்தார். நான் கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றேன். அப்படியானால் உங்களின் கருத்துகளை வாங்கி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஞானி.

பிரேமிள்

நவீன எழுத்தியல் பற்றி விவஸ்தையற்ற விதமாக எடுத்தெறிந்து எழுதியுள்ள கவிதாசரண் - வேதநாயகம் பிள்ளை, பாரதி, பு. பி. ஆகியோரிலிருந்து இன்றுவரை எழுதி வருவோர்களைத் தேர்ந்து எடுத்தாவது விமர்சித்து ஒரு விமர் சகராகத் தம்மை நிறுவிக் கொண்டவரல்லர். எனவே இவர் 'டுபுக்’ என்று சு.ரா. பற்றி என்னை அடியொற்றிக் கூட எழுதுவதற்கு உரிமை அற்றவர். முன்றிலும் இவரும் செய்வது வழுக்கைத் தலையில் நரை பிடுங்கும் வேலையைத்தான். ஏதோ நான் எழுத்து காலத்தில் எழுதியது பார்ப்பனியச் சார்புடையது என்று அழுது வடிந்தபடியே, "பிரேமிள் நிறைய பேசவும் எழுதவும் வேண்டும்' என்று உயர இருந்து பிச்சை கேட்கும் முன்றிலார், எனது கருத்துகள் மேற்படி, வேலைக்கு உபயோகமாகப் பிறக்க வேண்டும் என்றே இளிக்கிறார். தமிழ வனின் விவஸ்தையற்ற கட்டுரை போன்றவற்றை ஆசிரியக் கண்ணோட்டமற்றுப் பிரசுரிப்பது; இந்த தமிழவனுக்கு பன்னிர் செல்வத்தின் பிதற்றல் பாராட்டு - அப்படியே அவரது பன்னிர், விக்ரமாதித்யன் மீதும் தெளிக்கப்படுகிறது.விக்ரமாதித் யனும் முன்றிலாரும் ஒரே ஜாதி என்பது கூட நேர்ப் பேச்சுகளில் நாறுகிறது முன்றில் தர்பாரில். முன்றில், வெளிப்படையான ஒரு அரங்கமல்ல; அதில் வளைகள்தாம் தோண்டப்பட்டு பெருச்சாளிகள் குடியிருக்கின்றன. ஏனெனில், ஈ. வெ. ராவுக் கும் அண்ணாதுரைக்கும் சாகித்ய அகாதமியில் இலக்கியப் பிரசுரிப்புத் தேவையில்லை என்று தமிழவன் கூறிவிட்டு,
லயம் 43
படிப்பகம்
________________

padippakam
பின்னாடி அரண்டுபோய் எழுதிய கட்டுரையை முன்றில் - 15 பிரசுரிக்கிறது. இதைக் கைப்பிரதியில் படித்துவிட்டு பதில் எழுதிக் கொடுத்தேன். அதே இதழில் தமிழவனின் பல்லிளிப் புடன் போடுவதற்காக ஆனால் முன்றிலின் பெருச்சாளி சாம்ராஜ்யம் இதைச் செய்யவில்லை. அடுத்த இதழில் போடுவ தாகச் சொல்லிவிட்டு போடாமல் விட்டதுடன், ஏற்கனவே காலக்ரமம் பத்திரிக்கையில் வந்த என் சூன்யவம்சம்' கவிதையை மட்டும் போட்டிருக்கிறது. பிறகு லயம் ലേു தமிழவனது மேற்படி பிரச்சினை சிறிதளவு பதில் பெற்றதும், முன்றில் 11ல்) தமக்கு தரப்பட்ட கட்டுரை பிரசுரிக்கப்ப-க் தேவை இல்லை என்று பெருச்சாளிப் பொந்துக்குள் பூந்து கொள்கிறார் முன்றிலார். ஏன்? என் கட்டுரைக்குப் பதில் தர அவராலும் முடியாது. அவர் எவருடைய கடாட்சத்துக்காக அதைப் பிரசுரிக்காமல் விட்டாரோ அந்தக் கார்லோஸ் தமிழவ னாலும் முடியாது. என் சூன்யவம்சத்தைப் போட்டுவிட்டு அதற்கு மட்டும் தி. க. சி. யின் அரண்டான் மிரண்டான்

 எதிரொலியைப் போடுகிறார் முன்றிலர்.என் கட்டுரையில் 'அடா!' என்று இருக்கிறதாம். இதைத் தயவு செய்து எடிட் பண்ணும்படி முன்றிலார் கேட்டு எடிட் பண்ணிக்கூட நான் கட்டுரையைக் கொடுத்திருக்கிறேன் என்பதும் இவ்விடத் தில் குறிப்பிட வேண்டும்.
(இக்கட்டுரை சென்ற இதழ் லயத்தில் பிரசுரம் பெற்றிருக் கிறது.)

கா. சு 
சுபமங்களாவில் எழுத்தாளர்களின் போட் டோக்கள் வெளிவரும் நேர்த்தி குறித்து நீங்கள் சொன்னது முன்றில் 16-ல் திரித்துக் கூறப்பட்டிருந்தது.

பிரேமிள்
 எழுத்தாளர்களை நடிக, நடிகையர்களாக்கி செயற்கையாக சுபமங்களா' படம் பிடித்துக் காட்டுகிறது. ஓர் எழுத்தாளின் ஆத்மாவைப் படத்தின் மூலம் வெளிக் கொண்டு வருவதுதான் சரி என்று மீறல் பேட்டியில் கூறிய நான், உதாரணமாக மெளனியையும், க. நா. சு. வையும் லோன்ரெக்லா எடுத்த படங்களை குறிப்பிட்டு, விபரம் தந்தி ருக்கிறேன். ஆனால் இது ஏதோ போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற விஷயம் என்று நினைத்து நபக்கவ் கூட போஸ் குடுத்தாரு என்று சுபமங்களாவைப் பார்த்து ஜொள்ளு வடிக் கிறார் முன்றிலார் நான் குறிப்பிடும் லோன்ரெக்ஸா படங்
44 லயம் -
படிப்பகம்
________________

padippakam
களும் கூட, மெளனியையும், க.நா.சு. வையும் போஸ் கொடுக்க வைத்து எடுத்தவைதாம். போஸ் எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதுதான் விஷயம். பின்னாடி நீலபத்மனாபனை கோவில் முதலிய பின்னணிகளோடு கலந்து, அவரது எளிய ஆடையும், தாடியும் சீரியலான முகத்தோற்றமும் வெளிப்படும் விதமாக, சுபமங்களா வெளியிட்டிருக்கிறது. இது விதிவிலக்கு.

முன்றிலாருக்கு அறிவார்த்தம் வராது - அவரது பார்ப்பன எதிர்ப்பியக்கம் கூட சமூக விரோத விஷம்தான். இதனால் அவரது வேலை முன்பின் முரணாகிறது. ஓர் உதாரணம்; முன்றில் 14-ல், தமிழகக் கோவில்கள் ஆரியருடையவை என்ற வெ. சா. வின் கூற்றை மறுக்கும்போது, ஆரியர்கள் வட துருவத்திலிருந்து கோவிலைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு வந்தார்களா?' என்று கேட்கும் முன்றில், பிந்திய இதழில், ஆரியர் மெலப்பத்தோமியாவிலிருந்து வந்ததாக வையாபுரிப்பிள்ளை கூறியதைப் பிரசுரிக்கிறது. நேரே வட துருவத்திலிருந்து எக்ஸ்பிரஸ் பிடித்து ஆரியர்கள் இங்கே வரவில்லை. இந்தியத் தமிழகக் கோவில்களின் சாயல்கள் ஏற்கனவே உருவாகி இருந்த சமீப கிழக்கில் ஊறியவர்களாகவே இங்கு வந்தனர். இந்த சமீப கிழக்கில் நமது கோவில்களின் முன்மாதிரிகள் உள்ளன. இப்படிச் சிந்திக்கக் கூடிய பிரக்ஞை அமைப்பு அற்றது முன்றிலாருடைய ஜன்மம்.

கா. சு : 
மனித வக்ரம் சார்ந்த விதிவிலக்குச் சிந்தனை என்றும் இறக்குமதிச் சரக்கு என்றும் நவீன இலக்கியத்தைக் கண்டி க்கும் கவிதாசரண் பத்திரிகை ஞாபகத்துக்கு வரு கிறது.
பிரேமிள் :
 விதிவிலக்கு என்று எதுவுமே கிடையாது. இக்குரலை அன்று எழுப்பியவர்கள் கல்கி, ராஜகோபாலாச்சாரி போன்றோர். இன்று சிறு பத்திரிகைக்காரர்களின் தாக்கம் வெகு ஜனப் பத்திரிக்கைகளை மட்டுமல்ல, பண்டித மண்டலங்களை யும் பாதித்திருக்கிறது. குமுதத்திலிருந்து தமிழ்ப்பொழில் வரை, ஏதோ ஒரு கோணத்தில் சிறுபத்திரிகை சார்ந்த பெயர்கள், பிரச்சினைகள் எதிரொலிக்கின்றன. தாம் உவந்து அட்டையில் அலங்காரமாக வெளியிடும் மாடர்ன் ஆர்ட்டையும் கவிதா சரண் இறக்குமதிச் சரக்கு என்று காண வேண்டும். இது ஒரு மோஸ்தருக்காகச் செய்யப்படுகிற ஒன்றே தவிர வேறல்ல.
கா. சு 
முன்றில், கவிதாசரண் போன்றவைகளுக்கு யூனிவர்சலான பார்வை இல்லை என்கிறீர்கள். 'யாதும் ஊரே I_ லயம் 45
படிப்பகம்
________________

padippakam
யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் கவிதையைக் கணையாழியில் என்.எஸ். ஜகந்நாதன் குறிப்பிட்டு, இந்தக் கவிதைக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோது, சம்பந்தம் உண்டு என்றது கவிதாசரண்! ஆனால் எப்படி, என்ன சம்பந்தம் என்ற விளக்கமில்லை.

பிரேமிள் கணியன் பூங்குன்றனாரின் கவிதையுடன் திராவிட இயக்கம், பார்ப்பன இயக்கம், கணையாழி, கவிதா சரண், முன்றில் எதுவுமே உரிமை கொண்டாட முடியாது. வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள், சங்கப் பாடல்கள், சித்தர் பாடல்கள் என்ற நமது பொக்கிஷங்களுக்கும் இந்தக் கணையாழி - ஆரியப் பார்ப் பான்கள், முன்றில், கவிதாசரண் திராவிட பார்ப்பான்கள் - இரு பகுதியினருக்குமே தொடர்பு இல்லை. இவர்கள் மேற்படி பொதுவான பொக்கிஷங்கள் மீது தங்கள் சாக்கடைக் குட்டை களில் கிடந்தபடி தங்களுடைய குறுகல்வாதச் சேற்றைத்தான் வாரியடிக்கிறார்கள். தமிழும் சமஸ்கிருதமும் ஆன்மீகப் பிணைப்பு கொண்டவை. தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கு போயிருக்கக் கூடியவை கூட அநாதி காலத்தில் இனப் பாகு பாட்டை மீறிய தமிழ் ரிஷிகள், ஆரிய ரிஷிகள் ஆகியோரின் சங்கமம் எதனுடையவோ ஒரு விளைவு என வேண்டும். இத்த கைய சங்கமம் துவேஷங்களுக்கு அப்பாற்பட்ட உந்நத இயக்க மாகும். இப்படி இந்தியவியலை ஒரு பொதுப் பார்வையோடு அணுகுகிற என்னைப் போன்ற ஒருவனது பார்வை முற்றிலும் வேறு விதமானது. சரித்திர விபரங்களை அனுசரிப்பதற்கும் வெறுப்புகளை உமிழ்வதற்குமிடையே வேறுபாடு தெரியாதவர் கள்தாம் இந்த ஆரியப் பார்ப்பான்களும் திராவிடப் பார்ப்பான் களும் பூங்குன்றனாரின் கவிதையை எடுத்தால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியைத் தொடரும் வரி திதும் நன்றும் பிறர்தர வாரா இது நாடோடித்தனம் என்று ஆரியப் பார்ப்பான்கள் கூறினால் தங்களுடைய பிறப்புறுப்புக்களையே அறுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏனெனில் இது ஆரியர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்துகிற திராவிடப் பார்ப்பான்களுக்கும் ஸ்பெஷல் சொத்து ஆகாது.

கா. சு 

தமிழ் வாதத்தை நவீன இலக்கிய களத்துக்குள் நுழைக்கும் பணி இன்று முடுக்கப்பட்டுள்ளதே?
பிரேமிள் ஆம். அவர்தான் என்று எழுதினால் ராங். அவர்தாம்' என்பதே கரெக்ட். இந்தத் தத்துவவாதிகளின்
46 സulf D
படிப்பகம்
________________

padippakam
பார்வையில் பாரதி, புதுமைப்பித்தன் - எவருக்குமே தமிழ் கரெக்டாக எழுதத் தெரியாது. ஆனால், நான், இது போன்ற நியதிகளைக் கட்டுரையில் கடைப்பிடிப்பவன். இருந்தும், படைப்பியல் எழுத்து பேச்சுப்பாணியை ஒட்டி இருப்பதே நிரடல் இல்லாத நடைக்கு நல்லது. இதை உணர்ந்திருந்தவர் கள்தாம் (தான் அல்ல) பாரதி, பி. பு, போன்றோர். உரை யாடலில் மட்டுமின்றி, பாத்திரங்களின் பார்வைகளைப் பிரதி பலிக்கும் இதர பகுதிகளுக்கும் இலக்கணத்தின் இறுக்கம் உதவாது. இதை இலக்கியச் சுரனை உள்ளவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்.

கா. சு 
விருட்சம் கவிதைகள் முன்னுரையில், உண ராம லேயே வசன கவிதைகளைப் பாரதி எழுதியாக சாஸ் திரீயப் பார்வை செலுத்துகிறார் ஞானக்கூத்தன்.
பிரேமிள் :
 பாரதி, வசனகவிதை' என்ற தலைப்பிலேயே ஒரு நீண்ட படைப்பைத் தந்துள்ளார். இந்தப் படைப்புக்கு, படைப்பை வெளியிட்டவர்கள் தாம் வசனகவிதை என்ற பெயரை அளித்தார்களா இல்லையா என்பது ஒரு பிரச்சி னையே அல்ல. ஏனெனில் படைத்தவன் பாரதி. படைப்பு, நிச்சயமாக வசனத்தை மீறிக் கவிதையைச் சாதிப்பது. இதை பாரதி உணராமல் எழுதியதாகத் தொனிக்கும் இந்த சாஸ் திரீய பூச்சாண்டியாரை விடவும் ஆங்கில, சமஸ்கிருதப் பயிற்சி, கூடவே பிரெஞ்சு மொழி ஞானம் வாய்ந்திருந்தவர் பாரதி. அவர் ஏதோ குருட்டாம் போக்காக வசன வடிவில் கவிதை எழுதியதாகப் பிதற்றுவது, குருட்டாம் போக்காகக் கவிதை எழுதும் ஒருவரின் குருட்டாம்போக்குக் கருத்து. இது அதிகப் பிரசங்கித்தனம்.

கா. சு 
கவிதை பற்றி வெகுஜனத் தளத்தில் பேசப்பட்ட தைக் கவனித்தீர்களா?
பிரேமிள் : 

ஒரு மொழியின் உச்சகட்ட சாதனை கவிதை தான் என்பதை உணராதது வெகுஜன இலக்கிய உலகம். கவிதைக்கு அடுத்து சிறுகதை, பிறகு நாவல். உயர்ந்த எழுத் தியலார்களின் தகுதிகளும் இந்த வரிசையிலேயே வரும். தினமணிசுடர் பேட்டியில் தமிழில் மைனர் பொயட்ஸ் கூட இல்லை என்கிறார் சுந்தரராமசாமி என்றால், வேறொரு பத்திரிகையில், கவிதையின் எதிர்காலம் பற்றி ஆருடம் சொல் கிறார் ஜெயகாந்தன் - இனி கவிதைக்கு இடம் இல்லை என்று!
I_ லயம் 47
படிப்பகம்
________________

padippakam
கவிதை இன்றேல் கலையின் அம்சமும் தத்துவத் தேடல் ஈறான எந்தச் சமூகவியலும் கூட இல்லாத காட்டுமிராண்டித் தனம்தான் நிலவும். இதை உணர பல்துறைப் பிரக்ஞை தேவை. 'மைனர் பொயட் கூட இல்லாத ஒரு மொழி சார்ந்த கலாச்சாரத்தில் மகான்கள் பிறந்திருக்க முடியுமா?' என்று சு. ரா. விடமும், எதிர்காலம் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகள் நம்முடைய எதிர்காலத்தில் எற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனவே, அங்கெல்லாம் கவிதை காலாவதி யாகிப் போச்சோ?' என்று ஜெயகாந்தனிடமும் கேட்டிருக்க வேண்டும். இவர்கள் தங்கள் சுயபிம்பங்களுக்கு குஞ்சலங்கள் கட்டி தத்தக்க பித்தக்க என்று ஆடுவதைப் பார்த்து ஆ ஊ' என்று உச்சக்கட்ட இன்பம் அடைந்து கொண்டிருக்கிற அறி வுலக நபும்சகர்கள், இப்படி இவர்களிடம் கேட்க முன்வருவ தில்லை.

கா. சு
 நவீன தமிழிலக்கியத்தின் மதிப்பீட்டுச் சீர் குலைவு பற்றிக் கூறுகிறீர்கள். இந்த மதிப்பீடுகள் ஆரோக்கிய மாக ஆரம்பித்த காலகட்டங்களைச் சொன்னால், சீர்குலைவு பற்றிய குறிப்பு இன்னும் தெளிவுபடுமல்லவா?

பிரேமிள் : 
1959-ல் ஆரம்பிக்கப்பட்ட எழுத்து பத்திரி கையினை இந்த நவீன மதிப்பீட்டியகத்தின் விசேஷமான ஆரம்ப முனையாகக் காட்டலாம். இதற்கு முந்தியே இதன் வேரோட்டங்கள் இருப்பினும் எழுத்து ஒரு விசேஷ திருப்பு முனை எழுத்துவில் 1940-களின் மணிக்கொடி பரம்பரை, ஒரு விமர்சன அணுகுமுறை மூலம் புனர்ஜன்மம் பெறுகிறது. கலைப்பாங்கின் அடிப்படையில் பிச்சமூர்த்தி,மெளனி.லா.ச.ரா., புதுமைப்பித்தன் முதலியோர் ஆய்வுபூர்வமாக விசேஷிக்கப்படு கின்றனர். இருந்தும், எழுத்து'வுக்குக் கிடைத்த பொருளா தரவு இலங்கையின் தமிழிலக்கிய அபிமானிகளது சந்தாவாகத் தான் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும் அதாவது, எழுத்து இயக்கத்தின் கலையியல் இந்தியத் தமிழில் காலூன்றி நின்றிருந்தும்கூட, அதன் இயக்கத்துக்குக் கிடைத்த பொருளுட்டம் இலங்கைத் தமிழரிடமிருந்துதான். இதனால் இலங்கைத் தமிழரின் பார்வைகள் எழுத்துவில் இடம் பெற வில்லை என்று கூறவும் இடமில்லை. எழுத்து இயக்கத்தின் அச்சாணி என்று குறிப்பிடக்கூடிய அளவுக்கு செயல்பட்ட பிரேமிள், அந்தப் பத்திரிகையில் தர்மு சிவராமு என்ற பெயரில் எழுதியவை இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும்.
48 லயம் )
படிப்பகம்
________________

padippakam
அந்தச் சமயத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரிய புதியவர்களாக க. நா. சு. குறிப்பிட்ட ஜெயகாந்தனே, சுந்தரராமசாமியோ
இந்த அளவுக்கு மதிப்பீட்டியலைப் பேணிய எழுத்தாளர் களல்லர். இவர்களுடைய படைப்பியக்கம் கூட பின்னா 。 n) 鸟
வெவ்வேறு வகைகளில் இனம் அடையவே செய்துள்ளது. [[]] - துளளது மதிப்பீட்டியலைப் பொருத்தவரை இவர்கள் செய்தது, செய்வது எல்லாம் தங்கள் படைப்புப் பாதணிகளுக்கு ஏற்ப, மதிப்பீட்டுப் பாதங்களை வெட்டும் னகளங்களாகி உள்ளன. இருவரது பார்வைகளும் வேறுபடுகிறபோது கூட மதிப்பீட்டியலின் நுட்பங்களை மழுங்கடிக்கும் வேலையைப் பொருத்தவரை, ఇ குட்டையில் ஊறிய மட்டைகள்தாம், இவ்விருவரின் ஒற்றுமை, இருவருமே வேறுவேறு விதங்களில் புதுமைப் பித்தனை எதிரொளித்தவர்கள் என்பதே.

கா. சு 
இவ்விரு எழுத்தாளர்களும் எந்த வகைப் படைப் பியக்கத்திலிருந்து கரீனமடைந்தனர்?
பிரேமிள்
 பிணக்கு கதையை அன்று எழுதிய அதே ஜெயகாந்தன் பின்னாடி, இலக்கணம் மீறிய கவிதை' என்ற மனோவியல் அபத்தக் கதை ஒன்றை எழுதி இருக்கிறார். "பிணக்கு வில் ஒரு குடும்பப் பெண், வயோதிபமான பிறகு தனது கணவர் என்றோ ஒரு விபச்சாரியுடன் கொண்ட தொடர்பை இனிமையாக அவர் நினைவு கூர்வதைக் கேட்டுப் பிணங்குகிறாள். பினக்குடனே மரணிக்கிறாள். இதில் பெரிது படுத்தல் இருந்தாலும், தீவிரமான மனோதர்ம மதிப்பீடு சித்திரம் பெறுகிறது. விபச்சாரம் என்பதே மனோதர்மம் அற்ற மனிதவீழ்ச்சிதான். விபச்சாரம் செய்யும் நபர், அதை ஆதரிக்கும் சமூகக் கட்டுமானம், இரண்டுமே நசிவு நிலையில் உள்ளவை. இந்தச் சாமான்யமான நுட்பத்தைக் கூட இழந்த நிலைதான் பெரும்பாலான பிந்தைய காலத்திய ஜெயகாந்தனுடைய படைப்புகள். ஜப்பானில் ஒரு விபச்சாரி, தன்னுடன் ஜப்பானிய முதல்வர் பனத்துக்காக உறவு கொண்டதை வெளிப்படுத்திய உடனேயே அங்கே அரசாங்கம் மாறி இருக்கிறது. பொருளியல் ரீதியாக ஜப்பான், நம்மால் எட்டவே முடியாதோ என்ற எதிர் காலத்தில் உள்ளதை இலக்கியாருட ஜாம்பவானாகிய ஜெய காந்தனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கா. சு 

படைப்பின் விஷய அடிப்படையில், ஜெயகாந்தன் ஒரு மனிதாபிமானி என்று சொல்கிறார்களே?
(-) லயம் 49
படிப்பகம்
________________

padippakam
பிரேமிள் : 
மனிதாபிமானம் வேறு, மலிவு விலைத் தர்மங் கள் (easy Virtues) வேறு. வேசிகளும் பொறுக்கிகளும் அவ்வப் போது உயர்குணங்களைக் காட்டினால் கூட அவர்களது "உயர்குணங்கள் வேசித்தனங்களையும் பொறுக்கித் தனங் களையும் நியாயப்படுத்தி விடமாட்டா. இந்த நுட்பம் கசமுசா வாகி விடுகிறது. ஜெயகாந்தன் கையில். காரணம், வேசித்தனத் துக்கும் பொறுக்கித் தனத்துக்கும் மகுடம் சூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்த நசிவு நிலையில் உள்ளவர்களின் மீது உயர் குணங்களைச் சுமடேற்றுகிறார். மனிதப் பண்புகள் தகுந்த அத்திவாரங்களின் மீதே நிமிர முடியும். நசிவு நிலையில் உள்ளவர்களினால், உயர் பண்புகள் பேணப்பட முடியாதவை. வேசிகளும், பொறுக்கிகளும் காட்டும் கெட்டிக்காரத் தனங்களும், பவ்யங்களும், சந்தர்ப்ப சாமார்த்தி யங்களும் அவர்களுடைய தொழில் நுட்பங்களே தவிர உயர் குணங்களல்ல. இத்தகைய தெளிவுகளை, வேண்டுமென்றே மழுப்பி எழுதும் ஜெயகாந்தன், சொல்கிற கதைக்குத் தேவை யான உண்மை விபரங்களில் கூடத் தமது பாட்டுக்கு ரீல் விடு கிறார். ஒழுங்கான லாட்ஜில் ஹீரோவின் ரூமுக்கு வேசி வந்து போனால், பிரச்சினையை லாட்ஜ் உரிமையாளர்தான் வந்து சந்திப்பார். இப்படிச் செய்தால் ஜெயகாந்தனின் புடுங்கி ஹீரோ பாடு திண்டாட்டமாகி விடும். எனவே லாட்ஜ் உரிமை யாளரைத் தவிர்த்துவிட்டுப் புடுங்கித்தனமாக ஹீரோ பேசு வதற்கு ஏற்றவிதமாக மற்ற ரும்காரர்களை இளிச்சவாயர் களாக்குகிறார் ஜெயகாந்தன். எத்தகைய சாத்தியக் கூறுகளைக் கொண்ட சொருபமாக மனிதர்கள் இருக்க முடியும் என்ற நிதானம் அற்று, அவர்களை மலிவாக்கிப் படம் பிடிப்பது என்ன வகை மனிதாபிமானமோ?

கா. சு : சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனுடைய இமிட்டேட்டர்கள் என்று சொல்ல முடியாதல்லவா?

பிரேமிள் : புதுமைப்பித்தனும் பாரதியும் நவீன தமிழியலின் ஆளுமைகள். இவர்களுடைய இயக்கம் பலருக்கு ஒரு பிரமாண்ட மான எகிறு தளமாக (spring board) ஆக இருந்திருக்கிறது. இது இயற்கையான இலக்கிய நிகழ்வு. இமிட்டேஷன் என்பது கையாலாகாத செயல். சு.ரா.வும் ஜெ. கா. வும் இப்படி கையாலாகாதவர்களல்லர். இருவருமே ஆபூர்வமான திறனாளி களாகத்தான் பிறந்தார்கள். அப்போது இவர்களது இலக்கியத் தின் எகிறுபலகையாக பு. பி. யின் ஆளுமை இருந்திருக்கிறது.

50 லயம் (-)
படிப்பகம்
________________

padippakam
அதிலிருந்து இவர்கள் எகிறிச் சென்ற வழிகள் இவர்களுடை யவைதாம். அந்த வழிகளில் இவர்கள் செய்துள்ளவை பற்றி மொத்தமாகப் பார்த்தால், எங்கேயுமே எஸ். பொன்னுதுரையின் காட்டுத்தனமான இமிட்டேஷன்களையும் திருட்டுக்களையும் காண முடியாது. என்னைச் சந்தித்த அன்றைய சந்தர்ப்பத்தில், உந்தச் சீகு செல்லப்பாவைப் போல நான் முன்னுறு பக்கம் எழுதுவேன்' என்றவர் இந்த எஸ். பொ. வேசித்தனமான எழுத்துதான் இவருடையது. இவருடைய நடைகூட கொச்சை யாக இல்லாத இடங்களில் லா. ச. ரா. இமிட்டேஷன்தான். இது மட்டுமல்ல, செல்லப்பா, பு. பி. எழுத்து'வில் ஆரம்பித்து ஒரு புதிய பரிமாணத்தையே தமிழ் உரைநடைக்குத் தந்துள்ள எனது நடை, எல்லாமே ஏகக் களேபரமாக இந்தக் கோமாளி யால் இமிட்டேட் பண்ணப்பட்டிருக்கின்றன. இவரைவிட பல மடங்கு உயர்தரமானவர் தமிழகத்தின் ஜெயகாந்தன் என்பதை யும் இங்கே குறிப்பிடுவது என் கடமை. ஜெயகாந்தன் எப் போதுமே திருடி எழுதியதுமில்லை, போர்னோ பண்ணியது மில்லை. ஆனால் மொரேவியா, டால்ஸ்டாய் எழுத்துகளைத் தழுவி எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். அவர் எழுத்து பின்னாடி rணமடைந்துமிருக்கிறது. (சினிமாத் துறையில் ஜெயகாந் தனின் சாதனை சிறப்பானது. அது வேறு விஷயம்). ஜெய காந்தனைவிட நீண்ட காலம் இலக்கிய இயக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தும் சுந்தரராமசாமி, முழுமை யாகப் படைத்தவை ஒரு சிறுகதையும் அதன் பொருள் சாயல் உள்ள ஒரு கவிதையும்தான். சிறுகதை 'பல்லக்குத் தூக்கிகள். கவிதை; மூடு பல்லக்கு இந்தப் படைப்புகளில்தான் பின்னாடி அவர் செய்த ஜாதீயக் கிசுகிசுத்தனங்கள் எதுவும் இல்லாத பொருளம்சம் ததும்பி நிற்கிறது. அர்த்தமற்ற சுமையாக எல்லாவித இயக்கங்களும் பொருள் பெறக்கூடிய கருக்களம் இவற்றில் உண்டு. வாசனை’ போதை முதலிய சிறுகதை களும், அவரது நாய்க் கவிதைகள் போன்றவையும் எனது கருக்களம் (கொல்லிப்பாவை) கட்டுரையில் விமர்சிக்கப் பட்டுள்ளன. ஜே. ஜே. சில குறிப்புகள் பற்றி - (ஞானரதம்' ‘தீக்ஷண்யம் இரண்டிலும்) எனது கட்டுரையான புதிய புட்டியில் பழைய புளுகு வந்துள்ளது. இவையும் ஞானக் கூத்தன் பற்றிய எனது பார்வைகளும் இடது, வலது, எதிர் கலைச்சாரிகளினால் என் பெயர் குறிப்பிடப்படாமலேயே தாறு மாறாக எதிரொலிக்கப்பட்டுள்ளன. இப்போது, முன்றில், கவிதாசரண் சாரதா, ஊடகம் - சாரிகளும் எனது பார்வை களையே எடுத்துப் பவுடர் பண்ணி, தங்களின் பொச்சரிப்புச் சேற் றையும் சேர்த்து அரிதாரமாக்கிப் பூசிக் கொண்டு நிற்கின்றனர்.
I_ லயம் 51
படிப்பகம்
________________

padippakam
கா. சு. 
நீங்கள் ஏன் புதிய எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை?
பிரேமிள் 
பெயர் குறிப்பிடும் ரகமான விமர்சனம் எனக் குப் பிடிக்காத ஒன்று. எழுத்துத் திறன் இருந்தும் பார்வைத் தீர்க்கம் இல்லாத விதமாகச் சிலர் எழுதி விடுகிறார்கள். இதே வரிசையில்தான் எழுத்துத் திறன்கூட இல்லாத ஞானக்கூத்த னும் நிற்கிறார். இவர்களுடைய குற்றம் வேறு வேறு முகாம் களில் இருந்து இழைக்கப்பட்டாலும், ஒரே விதமான வக்ாம் என்ற அளவில் இவர்கள் இணைகிறார்கள். இதிலிருந்து தப்பித்துத் தெளிவுடன் எழுத்துத் திறனைக் காட்டுபவர்களும் கூட போலித்தனத்தைக் கொஞ்சம் கெட்டித்தனமாக வெளியிடு பவர்களாகி விடுகிறார்கள். பார்வைத் தீர்க்கம் சம்பந்தமான கோளாறு இல்லாதவர்கள் சிலர் இருந்தும் பார்வைத் தீர்க்கத் தின் தரிசனம் சார்ந்த ஆழம், சமூக விமர்சனாபூர்வமான தீவிரம் என்பவை அருகியே இன்று பிறக்கிறது. தலித்துகளிடம் உள்ள வெடிப்புறு நிலையில்இனித்தான் நாம் இந்த ஆழங்களை எதிர்பார்க்க வேண்டும்.
கா. சு
 தலித் எழுத்தாளர்களையும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே?
பிரேமிள் 
ஒரு சுயாதீனமான சமூகப் பெருநிகழ்ச்சிக்கும் தனிமனித மேதமைக்கும் வேறுபாடு உண்டு. தலித் இயக்கம் ஒரு சமூகப் பெரு நிகழ்ச்சி தானே தவிர அதற்குள் இருந்து மேதமை எதுவும் தோன்றிவிடவில்லை. தோன்றித்தான் ஆகவேண்டும் என்பதோ, அத்தகைய தோற்றத்துக்கு நாம் காத்திருக்க வேண்டும் என்பதோ அந்தப் பெருநிகழ்ச்சியின் வீடிண்யத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. எனவே தான் இன்னின்ன எழுத்தாளர்கள் என்று அவர்களுள் எவரை யும் முக்கியப்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறேன். ஆயினும் பஞ்சமர் நாவலை எழுதிய டேனியல் என்னால் ஏற்கனவே வேறு ஒரு சமயத்தில் இலக்கியக் கட்டமைப்புக்குள் குறிப்பிடப் பட்டிருக்கிறார். அவரது நாவல்கள், நீலபத்மனாபனின் தலை முறைகள் போன்று சரித்திரார்த்தமானவை.
இன்று வெவ்வேறு தரங்களில் எழுதி வருகின்றனர் தலித் இயக்கத்தினர். தலித் இயக்கம், நுட்பமான விதத்தில் சமூக
தர்சனப் பண்புள்ள இலக்கிய விமர்சனத்தைச் செய்யாத அள
52 லயம் )
படிப்பகம்
________________

padippakam
வில்கூட வெடிப்புறப் பேசு' என்ற பாரதியின் இலக்கணத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சுயாதீன சக்தி ஒன்றை வெளியிட்டு வருகிறது. இன்று இந்தப் பிராந்தியம் கவனிப்புப் பெற வேண்டும். இந்த இயக்கம், தலித் சார்பு காரர்களுக்கும் அப்பால் நடப்பது. மேலும் தலித் இயக்கம், இலக்கியப் பண்பு களை (பு. பி. பாரதி, பிரேமிள் தரத்தில்) பேணுகிறதா இல்லையா என்பதற்கும் அப்பாற்பட்ட வெடிப்புறு நிலை (Explosion) என்ற அளவில் கவனிப்புக்குரியது. இதை ஒரே யடியாக இருட்டடிப்புச் செய்பவர்கள், காலம் காலமாகப் பதிவு பெறாத நமது சரித்திர இருள் மண்டபத்துக்குள் இத்தகை யோரின் சுயபிரக்ஞாபூர்வமான சிருஷ்டிக் குரல்கள் இருட்டடிப் புக்கு உள்ளாகி இருக்கலாம் என்பதற்கே நிரூபண காரணங் களாகின்றன.

கா.சு
 இன்றைய கவிதை பற்றி...
பிரேமிள்
 அழகியசிங்கர் போன்றோரின் எழுத்துக்கும் ஞானக்கூத்தனின் வீர்யமற்ற, ஆழமற்ற எழுத்துக்கும் இடையில் வேறுபாடு இல்லை. இருந்தும், இவர்கள் தமது சுயமனித மனோநிலைகள் பற்றியே எழுத முயற்சிப்பதால், ஞா.கூ.வின் சமூக வக்ரம் இவர்களிடம் இல்லை. இவர்கள் ஞா.கூ. வை விடவும் உயிர்த் தன்மையுள்ள கவிதைகளைக் கூட சில வேளை எழுதிவிடுகிறார்கள் என்பதுதான் பகடி. இவ்வகையில் 1984-ல் தற்கொலை செய்து கொண்ட ஆத்மாநாம், பல்வேறு அம்சங் களில் ஞா.கூ. வை விட மிகச் சிறப்பான கவிஞர்.
கா.சு 
அழகியசிங்கர் உங்களுடனும் உங்கள் விமர்சனங் கள் படைப்புகள் ஆகியவற்றோடும் பழகுகிறார். இருந்தும், கவிஞரே அல்லர் என்று விமர்சனபூர்வமாக நீங்கள் நிறுவிவரும் ஞானக்கூத்தனை அவர் கவிஞராகக் கருதுவதுடன் அவர் எழுது கிற எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கிறாரே?

பிரேமிள் :
 ஞானக்கூத்தன் தமக்கு வேண்டியவாளுக்குப் பிண்டம் போடும் பில்லி சூனியவாதி. அழகியசிங்கர்,முன்றிலார், தமிழவன், நாகார்ஜுனன், சா. கந்தசாமி, வாஸந்தி, சுஜாதா போன்றோரை அருமையான எழுத்தாளர்கள் எனக் கூறி இவர் பிடித்து வைத்திருக்கிறார். இதை விடுத்து, வெறுமனே தமது கவிதை எழவுகளை மட்டும் இவர் எழுதிக் கொண்டிருந்தா ரானால் இவரை எவரும் சீந்தக்கூட மாட்டார்கள். இவரது பில்லிசூனியத்துக்கு வசப்படக்கூடியவர்கள் தீவிரமான மதிப்
[_] 6Jມ ມື 53
படிப்பகம்
________________

padippakam
பீட்டுக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள்தாம் ஒர் உதாரணம். இவருக்கு கவிஞர்' என்று அடைமொழி தரும் எஸ். வைத்தீஸ்வரன். இவ்வளவுக்கும் வைதீஸ்வரன் ஒரு சிறந்த கவிஞர். இவர் போய் ஒருவரிக் கவிதையைக்கூட சாதித் திராத ஞா.கூ.வைப் பார்த்து கவிஞர் என்று கூறுவது ஆபால மாகவே படுகிறது. ஞா.கூ. வின் பில்லி,சூனிய வேலைக்கு குரு நகுலன். க.நா.சு.வும் இதை அவ்வப்போது சுயலாபம் கருதிச் செய்துள்ளார். இரண்டும் முக்கிய உதாரணங்கள் : க.நா. சு. வின் மொழிபெயர்ப்புப் புத்தகங்களைத் தாம் போடப்போவதாக கெளதமசித்தார்த்தன் அவரிடம் சொன்னதை ஒட்டித்தான் அவரைச் சிறப்பித்து மதிப்புரை தந்திருக்கிறார் க.நா.சு. இதே போல் அவரைப் போய் பார்த்து பல்காட்டி அவரது புத்தகத்தை போட முன் வந்து, தம் பத்திரிகைக்கு சிறப்பாசிரியராகவும் போட்டதால்தான், முன்றிலாரின் பெயர் குறிப்பிட்டார் க.நா.சு. இது பில்லி சூனியமாகவே மாறிவிடுகிறது ஞா.கூ. கையில்.

கா.சு
 ஏ.கே. ராமானுஜனின் மறைவு குறித்துக் கட்டுரை எழுதிய சிலர், சந்தடி சாக்கில் தம்மைப் பிரதானப்படுத்திக் கொண்ட கோலாகலத்தைப் படித்தீர்களா?
பிரேமிள் 
ஏ.கே. ராமானுஜன் சொல்வதைப் பாருங்கள் : இந்தியாவின் இரண்டு பேரிலக்கிய (கிளாஸிக்கல்) மொழி களுள் ஒன்றான தமிழ் மட்டும்தான் சமகால இந்தியாவில் ஒரு பேரிலக்கியத் தொடர்ச்சியோடு இன்றும் சுவாதீனத் தொடர்பு Gororó Quiñ13th 93r Quorus.” (After sword—"The Interior Landscap:) ஆழ்வார் பாசுரங்களிலிருந்து தேர்ந்து அவர் Glorio, Quirts Guuitou Broorsor “Hymn to the Drowned” நூலின் பின்னுரை இதைவிட ஒரு படி மேல். சமஸ்கிருதவாதி கள் எவ்வளவு பெரிய துரோகங்களைத் தமிழுக்கு இழைத்தனர் என்ற விவரங்களை அதில் காணலாம். ஏ.கே. ரா.வின் இந்தப் பார்வைகள் தமிழின் வர்ணாஸ்ரம தர்மவாத சாக்கடை பிரஷ் களினால் பரிபூர்ணமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. விருட்சம் இதழில் ஞா.கூ. என்ன பண்ணினார் ஏ.கே.ரா. பற்றிய கட்டுரையில் ஏ.கே.ரா. வை விட்டு தம்மைப் பற்றி எழுதியுள்ளார் ஞா.கூ. தமது குப்பைகளை எப்படித்தான் எழுத முடிகிறது என்ற விதத்தில் ஏ.கே. ரா. சாதுர்யமாகக் கேட்ட கேள்விக்கு பதிலாக அவற்றைத் தாம் மனசிலேயே உருவாக்கி ஒரே பிரதியாக எழுதுவதாக ஞா.கூ. கூறியதும், இதற்குமேல் ஏ.கே. ரா. எதுவும் பேசாததும் அதில் கவனிக்கத்தக்கது. அதாவது எவ்விதத்திலும் செப்பனிடப்படக்கூட இல்லை. ஞா.கூ.
54. லயம் -
படிப்பகம்
________________

padippakam
வின் கவிதைகள் என இதிலிருந்து ஏ.கே. ரா. அறிந்து கொண்டு வாளாவிருக்கிறார். இப்படி வாளாவிருப்பதன் உட்பொருளை 'நானே ஃபஸ்ட் டிஸ்ட் புரிந்துகொள்ளவில்லை. உண்மை யில் பால் வாலெரி (Paul Valery) என்ற பிரெஞ்சுக் கவிஞனை மேற்கோள் காட்டி, ஓர் இலக்கியச் சந்திப்பில், சென்னையில் இப்படிச் சொன்னவர் ஏ.கே.ரா : "நல்ல கவிதைக்கும் மோச மான கவிதைக்கும் இடையே உள்ள வித்யாசம், நல்ல கவிதை நன்கு திருத்தி எழுதப்பட்டது, மோசமான கவிதை அவ்வித மின்றி சும்மா எழுதப்பட்டது என்பதுதான் வாளாவிருந்ததன் மூலம் இத்தகைய விஷயங்களை ஞா.கூ. போன்ற மூளைக்குச் சொல்லிப் பயனில்லை என்பதைத்தான் ஏ.கே. ரா. வெளியிட் டார். இத்தகைய மூளை தான் ஞா.கூ. என்பதை ஆரம்பத்தி லேயே புரிந்து கொண்டவன் நான்.

கா.சு :
 ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுக்கோப்புக்குள் எல்லா விதமான இந்தியப் பிரதிமைகளையும் உள்ளடக்க முயற்சிக் கிறதே, இது எவ்வளவு தூரம் போகும்?

பிரேமிள்
 ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரே லட்சியம் பார்ப்பனியம்தான். இந்தப் பார்ப்பனியத்தின் மூலம் லாபம் பெற முற் படுகிற எல்லா முனைகளும் இதனுடன் கூட்டுச் சேர்ந்து கொள் ளும் என்ற நம்பிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு உண்டு அதாவது ஊழல், கயமை, அறிவுலக விபச்சாரம் என்ற மூலதனங்களே ஆர்.எஸ்.எஸ். சுடையவை. இந்த இயக்கத்தில் பிறந்த ஜெய மோகனைத்தான் பெயர் இல்லாமல் பூசாரி எழுத்தாளர் என்று மீறல் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறேன். இவர் சிலேட் (நிர்-3, பெப்ரவரி 94) இதழில் தமிழுக்காக மாய்ந்திருக்கிறார். இவரே சென்ற வருட சுபமங்களா கூட்டமொன்றில் சமஸ்கிருதம் தெரி யாதவன் நாவல் எழுதக் கூடாது என்று உளறியவரும். நாவல் எழுதுவதற்குரிய முக்கிய தகுதி, ஒருவனால் நீண்ட வியாசங் களை எழுத முடியுமா என்பதும், அதே சமயத்தில் அவனிடம் கலைப்பண்புகள் உள்ளனவா என்பதும்தான். வியாசம் (Essay) என்பதே கலைவடிவமாகும். இதற்கும் கட்டுரை (Artical) என்ற வடிவுக்கும் வேறுபாடு உண்டு.
தமிழில் வியாசங்களை எழுதியோர் என்று தேடிப்பிடித் தால், முதன்மையாக, எழுத்து 1960-ன் ஆரம்பங்களிலிருந்து பிரசுரம் பெற்றுவரும் (தர்மு சிவராமு என்ற) பிரேமிளைக் காண முடிகிறது. இதை உடனடியாக அடையாளம் கடுை கொண்ட பார்வைத்தீர்க்கம் அன்று செல்லப்பாவுக்கு இரு ந்
0 லயம் 55
படிப்பகம்
________________

padippakam
திருக்கிறது. சுயசிந்தனையும், மொழியின் கலைப்பண்பும் சொல்கிற விஷயத்தை அறிவார்த்தமாக நிறைவேற்றும் மனோ தர்மமும் இல்லாவிட்டால் வியாசம் நிறைவேறாது. பிரச்சாரம், தகவல் பரிவர்த்தனை என்ற தேவைகளை நிறைவேற்றுவது கட்டுரை. இருந்தும் கட்டுரை எழுதுதல் என்பது, வியாகத் தின் ஆரம்பநிலை ஆகலாம். கட்டுரை எழுதும் வேலை கூட லேசான ஒன்றல்ல. அதற்கும் ஒரு மனோதர்மம் வேண்டும். உண்மை சார்ந்த ஒழுக்கம் வேண்டும். இந்த அளவுக்கு வெங்கட் சாமிநாதன் எழுதிய பல கட்டுரைகளும் ந. முத்துசாமி யின் வேற்றுமை (பிரக்ஞையில் வெளியான தொடர்) கட்டுரை யும் சுந்தாராமசாமியின் சில கட்டுரைகளும் கவனத்துக்குரியன. மனோதர்மத்தின் தேவைகளை உதாசீனம் செய்யும்போது இவர்களது கட்டுரைகள் உள்க் கோர்வையின்மைக்கு ஆட்பது கின்றன. சி. சு. செல்லப்பாவும், க. நா. சு. வும் வியாசத்தின் லட்சணங்களை எட்டுமளவு நல்ல கட்டுரைகளை எழுதியவர்கள். சி. சு. செயின் மெளனியின் மனக் கோலம் இவற்றுள் அதிக வீச்சும் உள்ப்பிணைப்பும் கொண்ட மிக நீண்ட கட்டுரை. புதிய தலைமுறையில், இத்தகைய மனோதர்ம வீச்சை அடிப் படையாகக் கொண்ட செவ்விய கட்டுரையாளராக காலசுப்ர மணியத்தைச் சொல்லலாம். கலைப்பண்பும், சுயசிந்தனையும் இந்த அம்சங்களுடன் இனைந்தால் வியாசம் பிறக்கிறது. இவ்வளவையும் சொல்லாமல் வியாசம் என்றால் என்னவென்று காணமுடியாது.
வியாசம் பெருமளவுக்கு கலைப்பண்புள்ள சுயசிந்தனையின் விளைவு. இதுவே புரட்சிகள் எல்லாவற்றுக்கும் ஊற்றான த துவச்சுனை. இது புத்தரிடம் தோன்றி மகாயானத்தை ஸ்தாபித்த நாகார்ஜுனரிடம் சிகரநிலை பெற்றிருக்கிறது எனலாம். ஆனால் சமஸ்கிருதம், பெருமளவுக்குச் சொன்ன தையே திருப்பிச் சொல்லும் பதிவேட்டுத் தன்மையை அடிப் படையாகக் கொண்டது. மரபுகளின் தொடர்ச்சியே சமஸ்கிருதம் என்ற உபகரணத்தின் தொடர்ச்சி. அதில் வியாசம் பிறந்த தில்லை. நாவலும் பிறக்காது. வியாசத்தின் அத்தி வாரத் தேவைகள் என்று மேலே குறிப்பிடப்பட்டவற்றைப் பேனத் தக்க மொழி மரபிலே தான் நாவல் தோன்ற முடியும். சமஸ் கிருதக் கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். சமஸ்கிருதம் தெரியாதவன் நாவல் எழுதக்கூடாது என்று கூறுவது, சமஸ் கிருதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. சுயமாகச் சிந்திக் காதே, உண்மையைச் சொல்லாதே, சரித்திரத்தைப் பதிவு செய்யாதே' என்ற அறிவுலக விபச்சாரக் கோஷம்தான் இது.
56 ു ;-)
படிப்பகம்________________

padippakam
இதுவே ஆர். எஸ். எஸ். கம்யூனிஸம், திராவிடியம் யாவற்றி லும் உள்ளது. பார்க்கப் போனால், சமஸ்கிருதம் வெறுமனே பதிவுகளைச் செய்யும் மொழிக் கருவி (Linguistic device) தான். அது சுயசிந்தனை, திடீரென வெடிப்புறும் பேச்சு - எதற்கும் இடம் தராது. சமஸ்கிருதத்தைக் கற்க முனையும் எவருக்கும் தெரிகிற முதல் விஷயம் இது. சமஸ்கிருதத்தை மீண்டும்’ பேச்சு மொழியாக்கலாம் என்ற ஆர். எஸ். எஸ். உள்வட்டக் கூச்சல் ஒரு சூப்பர் பேத்தல். மீண்டும் என்ன, எந்தக் காலத்திலுமே சமஸ்கிருதம் பேசப்பட்டதில்லை. இது தர்மா னந்த கோஸாம்பியிலிருந்து சந்திரசேகரேந்திர சரஸ்வதி வரை நிபுணர்கள் வெளியிட்ட உண்மைக் கருத்து. ஆர். எஸ். எஸ். களினாலும், பரணிதரன்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்ட விபரம் இது. ஆனால் சமஸ்கிருதம் ஒரு மொழிக்கருவி என்ற அளவில் அது நன்கு செய்யப்பட்டது. இது அதை கம்ப் யூட்டர் micro processing - க்கு ஏற்றதாகக் காட்டுகிறது.

நாவலுக்கு முக்கிய அடிப்படை, சுயத்தன்மையின் தரிசன மும் பார்வைத் தீர்க்கமும் (Focus of vision). அடுத்து சரித்திர உணர்வு. நீலபத்மனாபன், டேனியல் போன்றோரிடம் சரித்திர உணர்வு நிறைவுறுகிறது. இவை அணுவளவு கூட இல்லாமைதான் சுந்தரராமசாமியின் கோளாறு. அவரது வாசனை', 'போதை போன்ற சிறுகதைகளிலேயே இது இல்லை. சு. ரா. வை நாவலாசிரியராக ஊதிக் கொண்டிருக்கும் கும்பலிடம் மனோதர்மத்தின் நாடி எதுவும் துடிப்பதில்லை. சமீபத்தில் ஒருவர் தம்மால் திரும்பத்திரும்ப சு.ரா.வின் நாவ லைப் படித்தனுபவிக்க முடிகிறது என்றார். சமாச்சாரம் என்ன? இந்த ஆசாமி, ஒரு பக்கா ஆர்.எஸ்.எஸ். உள்வட்டத்துக்காரர். இவரிடம் நாடி (மீறல் சிறப்பிதழ் அதிரடிக் கவிதை)யைப் படிக்கக் கொடுத்தபோது முகம் சிறுத்துவிட்டது. காரணம் அவருக்கு நமது குடிமையின் பகிரங்க சுகாதாரமின்மை கூடப் புலனாகவில்லை. இத்தகைய வாசகர்களையும், இவர்களுக்கு எழுதும் நாவலாசிரியர்களை'யும்தான் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லி மூளையை மழுங்கடிக்கும் இந்தியச் சிந்தனையின்மையால் தர முடியும். இதுதான் நாவல் எழுது வதற்கான தகுதி என்பதே சமஸ்கிருதம் தெரியாமல் நாவல் எழுதக்கூடாது' என்பதன் தாத்பர்யம். ஆனால் இதே மனோ பாவம் கட்சிவாரியாகத் தங்களை முளையடித்துக் கொள்ளும் கம்யூனிஸ் திராவிடியகாரர்களிடமும் உள்ளதுதான்.
I) லயம் 57
படிப்பகம்
________________

padippakam
சமஸ்கிருதம் போன்ற நன்கு செய்யப்பட்ட ஒரு மொழி, படைப்பு வகைகளுக்கு உதவாது. இந்த விமர்சன அடிப்படை களை விட்டு மொழி, இன, அரசியல் வெறியின் இன்றைய ஆர்.எஸ்.எஸ். மெளடிகத்தையே பூசாரியார் வெளியிட்டிருக் கிறார். கட்சியம், பார்ப்பனியம், திராவிடீயம் எல்லாமே மதிப் பீட்டின் முன்நிலையில், தாக்குப்பிடிக்குமளவுக்குத்தான் அர்த்தம் பெறமுடியும். இன்றேல் இவை எல்லாமே ஊழலின் அடிப் படையில் ஒன்றாகும். அது சரி, ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு விலகிய பின்பு பூசாரியார் தொடர்ந்து பூசாரீயம் பண்ணுவது ஏன்? உண்மையில் இவர்களைப் போன்ற ஒரு கூட்டமே ஆர்.எஸ்.எஸ்.ஸினால் முடுக்கப்பட்டு வெளியே வந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் முஸ்லீம்களின் ஆத்மவியலையும் இலக்கியத்தையும் கண்டுக்கிறதில்லை, ஆர்.எஸ்.எஸ். லை விமர்சிப்பதும் இல்லை!

கா. சு. 
மேஜிகல் ரியலிசம் மேற்கில் காலாவதியாகி விட்டது - அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழில் இது பற்றிய கவனக்குவிப்பும், முயற்சிகளும் மோஸ் தராக ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன. புதுமைப் பித்தனின் மேஜிக்கல் ரியலிசம் பற்றிச் சொல்ல முடியுமா?

பிரேமிள் : 
மாயாஜாலம், மகேந்திரஜாலம் மாதிரி புதுமைப் பித்தனிடமிருந்து பிறக்கிறது பித்தஜாலம். மேஜிக்கல் ரியலிசம்’ என்ற மேலைநாட்டுப் பதத்தைத் தமிழ் எழுத்து வடிவில் பச்சைகுத்திக் கொள்கிற தமிழ(றியாத)வன்களின் வழவழா கொழகொழாக்களுக்கு அப்பால்பட்ட இந்தப் பித்த ஜாலம் தான் மேஜிக்கல் ரியலிலம். தமிழின் நவீனத்தன்மைகள் பல பு. பி. யிடமே முன்மாதிரிகளைக் கண்டிருக்கின்றன என்ப தற்கு இது ஓர் உதாரணம். இந்த முன் மாதிரிகளின் வீரியத் துக்கு ஈடு சொல்ல முடியாதவர்கள்தான் இன்றைய அரசியல் ரீதியான வகுப்புவாத வன்முறைக் கூப்பாடுகளை இலக்கியக் களத்தில் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களது தமிழிய' கூப்பாடு மேஜிக்கல் ரியலிச கூப்பாடு, பிராமண கோவில் கலாசாரக் கூப்பாடு யாவும் ஒட்டுமொத்தமான கல்லுளிமங்கனிச மாக வடிவெடுத்திருக்கிறது. பு. பி. யின் சமூகக் கண்ணோட்டம் இன்றும் இத்தகையவர்களின் வகுப்புவாதத் தன்மைகளைக் கடந்த யதார்த்தப் பண்பிற்கு உதாரணமாக நிற்கிறது. எல்லாவிதமான கூப்பாடுகளுக்கும் அடியில் உள்ள பொட்டுக் கேடுகளும் அவரது சத்ர சிகிச்சை மூலம் வெளிப்பட்டிருக்
58 லயம் -
படிப்பகம்
________________

padippakam
கின்றன. இதை அவர் சாதித்தபோது வெறும் யதார்த்தப் பண்புகளுடன் அவரது சிருஷ்டிகர வீச்சு நின்றுவிடவில்லை என்பதையும் காணவேண்டும். கூடவே பு. பி. யிடம் மாஜிக்கல் தன்மைகள் சிகரப்படைப்பு வடிவுகளைக் கண்டிருக்கின்றன. யந்திர மயமாக்கப்படுகிற போது கூட மனிதப்பண்பின் உள் வெளிச்சம் பளிரிடும் கணங்கள் உள்ளன என்பதைக்கூட பு. பி. காணத் தவறவில்லை (இது மிகூழின்யுகம், கவந்தனும் காம னும்). ஆனால் இத்தகைய பளிரடிப்புகளுக்காக யதார்த்தத்தின் கூர்மையான அதிவேக வீச்சுக்களைத்தான் அவர் கையாண் டார். மனித யந்திரம் போன்ற கதைகளில் நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்ட ஓர் உழைப்பாளியின் சபலபுத்தி - “குப்பனின் கனவு கதையில் அதைவிடக் கீழ்வர்க்கத்து ரிக்ஷாக்காரன் ஒருவனின் மனோராஜ்யம் - இரண்டிலும் எல்லா விதமான ஆவேசமயமான நவீன மோஸ்தரிலமும் இல்லாமை யைக் காணலாம். மனோவியல் ரீதியான தெளிவையும் அவர வரது பின்னணியிலிருந்து விளையக்கூடிய நோக்கங்களையும் தான் இத்தகைய கதைகளில் அவர் சித்தரித்துள்ளார். ஏதாவது ‘தலித் இலக்கியம், தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிய இலக் கியம் - என்று தேடுவதனால் அவற்றின் இலக்கியாம்சத்துக்கு இத்தகைய சித்தரிப்புதான் இலக்கணமாக வேண்டும். இன் றேல் அவை பார்ப்பணியம், திராவிடியம் போல் அரசியல் கனவு வாதக் கோஷங்களின் பிரச்சாரக் குப்பைகளே ஆகும் - இலக் கியம்’ ஆகாது. உதாரணமாக பு. பி. யின் குப்பனின் கனவு’ கதை ஓர் அபார ஹாஸ்ய உணர்வின் மூலம் குப்பன் என்ற அந்தப் பாத்திரத்தினது நிதர்சனமானஅன்றாட பிரச்சினைக்குள் நம் உணர்வை நெய்து விடுகிறது. பிரச்சார கோஷத்தினால் இதைச் சாதிக்க முடியாது.

கா. சு : மார்க்யூஸின் மேஜிக்கல் ரியலிசத்துக்கு போர் ஹேயின் ஃபென்டாஸ்டிக் ரியலிசமும் மிஸ்டிக்கல் ரியலிசமும் தான் முன்மாதிரி அல்லவா?

பிரேமிள் : கேப்ரியேல் கார்ஸியா மார்க்கஸ் என்ற கொலம் பிய நாட்டு ஸ்பானிய மொழி எழுத்தாளரின் One Hundred years of st litude என்ற நாவல் நோபல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து தமிழ் எழுத்துத் துறைக்குள் நுழைந்த பதம் “மேஜிக்கல் ரியலிசம்". உண்மையில் மார்க்கஸிற்கு முன் னோடி ஹோர்ஹே லூயிஸ் போர்ஹே என்ற அர்ஜன்டீனிய ஸ்பானிஷ் சிறுகதாசிரியர்தாம். Labyinth முதலிய தொகுப்பு கள் மூலமும், இலக்கிய வட்டம் பத்திரிகையில் பாபிலோனிய
0 லயம் 59
படிப்பகம்
________________

padippakam
லாட்டரி என்ற அவரது கதைக்கு 1960-களில் க. நா.க செய்த மொழி பெயர்ப்பு மூலமும் 1971-ல் கசடதபறவில் நான் செய்த வட்டச் சிதைவுகள் மொழி பெயர்ப்பு மூலமும் போர்ஹேயின் மேஜிக்கல் ரியலிச அத்திவாரம் நம்மிடையே தெரிய வந்திருக் கிறது. இருந்தும் மார்க்கஸின் மவுஸ் தான் இங்கே இதுவரை துங்கி வழிந்து கொண்டிருந்த மண்டைகளில் ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் - போர்ஹே மார்க்ஸிய எதிர்ப் பாளர். இலக்கிய விஷயங்களில் அவரது வீர்யம் மிகுந்த செல் வாக்குக்கு வசப்பட்டிருந்த மார்க்கஸ் ஒரு மார்க்ஸிய அனுதாபி. அத்துடன் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு தோஸ்த். அதாவது இலக்கிய உணர்வோ, அதைப் பற்றிய கண்ணோட் டமோ இல்லாத அதற்குப் புறம்பான கட்சியக் கசாமுசாவின் மூலம்தான் - அதுவும் மார்க்கலாக்கு நோபல் பரிசு கிடைத்த பிறகுதான் - ஆண்டே! என்று அவரது பிரதிமையின் காலடி யில் விழுந்திருக்கிறதுகள், இங்கேயுள்ள மார்க்ஸிய இலக் கியக் கொத்தடிமைகள்! இதுகளிடம் போய் புதுமைப்பித்தன் தான் தமிழின் முதல் மேஜிக்கல் ரியாலிஸ்ட் என்றால், பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கம் என்ற கூக்குரல் கிளம்பும். ஏனெனில் மோஸ்தர் மரபைப் பின்பற்றும் இத்தகைய கொத்தடி மைகள்தான் நானும் ஒரு மேஜிக்கல் ரியலிஸ்ட் என்று காட்டு வதற்காக வழவழா கொழகொழாக்களை எழுதிப் பிரசுரித்து விட்டுக் குந்தியிருப்பார்கள்.

மேஜிக்கல் ரியாலிஸ்த்தின் ஆதார வீர்யம் மனம் போன கற்பனையல்ல - கவித்துவமான உரைநடை. இது போர்ஹே யிடம் அபார அளவில் உண்டு. மார்க்கஸிடம் கம்மி. தமிழின் மேற்படி முதல்வரிடமோ பூஜ்யம். இவருக்கு உண்மையில் தமிழே சரிவர எழுதத் தெரியாது என்பது இதில் மேலதிக
வேடிக்கை.

உரைநடையின் கவித்துவ வீர்யம் கொண்ட பித்தனிய ஜாலவித்தைகளாகப் பிறந்தவைதாம் பிரம்மராக்ஷஸ், கபாட புரம் போன்ற கதைகள். இன்று மாஜிக்கல் ரியலிலம் பண்ணிப் பார்க்கிற முதல் முதலைகளினது சுயதம்பட்டக் குட்டைக்கு எட்டாத சிகரப் படைப்புகள் பு. பி. யின் மித்த ஜாலங்களாக ஏற்கனவே தமிழில் பிறந்துள்ளன.

மேஜிக்கல் ரியலிலத்தின் ஒர் அம்சம், கவித்துவமான உரைநடை என்றால், இன்னொன்று, மாயாஜாலத் தன்மை
யுள்ள அம்சங்களை நம்பத் தகுந்தவையாக்கக் கூடிய வர்ணனை
60 லயம் -
படிப்பகம்
________________

padippakam
வீர்யம். இதையே ரியலிலம் என்ற பதம் குறிப்பிடுகிறது. யதார்த்தவியலின் பரிபூரண சக்ராதிபத்யத்தைச் சாதிக்கத்தக்க சக்திமானால் மட்டுமே மேஜிக்கலாகவும் எழுதி அதை நம்பத் தகுந்ததாக்க முடியும். இவ்வகை சக்ரவர்த்தி அவர் என்ற சிறப்பும் பு: பி. யினுடைய மேஜிக்கல் ரியலிஸ்த்துக்கு ஆதார மாகிறது.

கா. சு : 
சுபமங்களா பேட்டியில் உங்களை வக்கிரமம் பிடித்தவர் என்கிறார் எஸ். பொ. நீங்கள் அவரை எழுத்து' வில் விமர்சித்ததுதான் இதற்கு காரணம் என்பது வெளிப் L1500 L...

பிரேமிள் :
 கும்பலே கோமாளி வேடமிட்டு நடந்தால் கோமாளிக்கு யார் சிரிப்பார் என்ற புதுமைப்பித்தனின் கவிதை வரி இங்கே நினைவுக்கு வருகிறது. இலக்கிய சரித்திர அவதானம் அற்ற காளான்களும் புல்லுருவிகளும் தமிழே தெரியாத முதலாளிகள் நடத்தும் வெகுஜனப் பிராந்தியப் பத்திரிகைககளில் சம்பாத்தியத்துக்காகக் குந்தியிருந்து செய் யும் கோமாளித்தனங்களின் நடுவில் ஒரு கோமாளி புகுந்து கொண்டு இப்படிச் சொல்ல முடிகிறது.
"எழுத்து (ஜன 63 - இதழ் 49) வில் கோமாளியாரின் "தி நாவலை ஒஹோ என்று புகழ்ந்துவிட்ட அவரது கூட்டாளி தளைய சிங்கத்துக்கு, நான் பதில் சொல்லியிருந்தேன். (பிப் 63 - இதழ் : 50) : குடும்பம் என்பது பற்றியே கட்டுரை யாளரோ நாவலோ, விசாரத்துக்கு எடுக்கவில்லை. உண்மை யில் நாவலின் எல்லை முதிர்ச்சியற்ற வாலிப எழுச்சிகளோடு (அடோலஸன்ட் நிலையில்) முடிந்து விடுகிறது. முதிர்ந்த மனிதனையோ இன்னும் உக்கிரமான குடும்ப உறவுகளையோ, அவதானிக்கவில்லை. எனவே ஓர் இளைஞனின் கனவு தொனித்து மறைகிறது. இத்தகைய முதிர்ச்சியற்ற உறவு நிலையை விவரிப்பதால் சமூக அளவு கோல்களை பாதித்துவிட முடியாது. கட்டுரையாளர் நம்மிடையே இல்லாத கருத்தென்று கூறிய அடிப்படை உணர்ச்சியே பாலுணர்ச்சி கருத்து நமக்குப் பழசு... (இப்பதிலை, தமிழின் நவீனத்துவம் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்). இவ்வளவையும் நான் சொன்ன போது பூடகமாக கோமாளியாரை நான் போர்னோ கிராபர் என்றே சொல்கிறேன். இப்படி நான் விமர்சித்ததற் காகவே இந்த எழுத்தியல் விபச்சாரி எனக்கு ஏதோ வக்ரம் என்கிறார். (மனோவியாதி மண்டலம் - என்ற 'லயம் (இதழ்: 6)
- லயம் 61
படிப்பகம்
________________

padippakam
- * فریتز . . . • Һ فر கட்டுரையில் எஸ்.பொ. பற்றி மேலும் பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன)
'இருபது வருஷங்களாக மெளனி தமது கதைகளை நூலாக வெளியிடாமல் பம்மாத்துக் காட்டிய தாக இதே கோமாளியார் எழுதியிருக்கிறார். எழுத்து வில் இலங்கைக் கடிதம் பகுதி யில் வேறொரு பெயரில் இதை விசாரித்துள்ளேன். தமிழில் பிரேமிள் ஒருவன்தான் சரித்திர உணர்வு, பாரபட்சமின்மை, தீட்சண்யம், தகவல்கள், தர்க்கம், விஞ்ஞானபூர்வமான அணுகு முறை ஆகியவற்றுடன் செயல்படும் எழுத்தியலாளன். இத்த கைய இயக்கம், போலிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் வெறி பிடித்தவர்களுக்கும் கெளரவாதிகளுக்கும் வியாபாரார்த்திகளுக் கும் சுயநலமிகளுக்கும் குருடர்களுக்கும் மந்தைகளுக்கும் ஆபத்தானது. எனவேதான் பிரேமிளுக்கு கிறுக்கு, குரங்கு, நாய், வக்கிரமம் பிடித்தவன் என்ற பட்டங்கள் சூட்டப்படு கின்றன. அறிவார்த்தமாகக் செயல்படுகிறவனுக்கு எதிராக அதே அறிவார்த்தத்துடன் பேச முடியாதவர்கள் செய்யும் வேலை இது. இந்த வேலையை Poisioning the well (பொதுக் கிணற்றில் விஷம் போடுதல்) என்று தர்க்கவியலில் குறிப்பிடுவார்கள். அதாவது பிரேமிள் கையாளும் அறிவார்த்தம் ஒரு பொதுக்கிணறு. இது பயனற்றதாகவேண்டும் என்ற நோக்கத்தோடு இதற்குள் விஷம் போடுவது போன்றே பிரேமிளுக்கு பகிஷ்கரிப்புப் பட்டங்கள் தரப்படுகின்றன. இது இத்துடன் நிற்பதில்லை எவருமே சமூகப் பிரச்சினையின் எந்தக் கட்டத்திலுமே அறிவார்த்தமாக இயங்க முடியாதபடி இது தொடரும். அதாவது அறிவார்த்தமே பகிஷ்கரிப்புக்கு உரிய தாகிவிடும். இந்நிலையில் சமூகத்தின் அறிவார்த்தம் சிதறி மேலே குறிப்பிடப்பட்ட போலிகள்.இத்யாதிகளே முக்கியஸ் தர்களாகின்றனர்.

அறிவியக்கம் என்பது வெளிப்படை உரையாடலாகும் (Oper dialogue); மூடு கதவுக் கிசுகிசுப்பல்ல. தமிழில் இன்று ஜாதியம் சம்பந்தமான பொட்டுக் கேடுகளை அம்பலப்படுத்து கிற சமூக தர்சனக் கண்ணோட்டம் எனது விமர்சனங்களில், எழுத்துக்களில் இருக்கிறது. எனவே ஜாதீய வாதிகள், ஜாதி யத்தைப் பாதுகாக்கும் எடுபிடிக்குணம் கொண்டவர்கள் என்னை பகிஷ்கரிக்கிறார்கள், துஷிக்கிறார்கள்.

கா.சு 

பிராந்திய வழக்குச் சொற்களை விதரனையற்றுக் கையாளும் எஸ்.பொ. தமது விசேஷ நடை பற்றி அதிகம் பேசியிருக்கிறார்...!
62 бршці, П
படிப்பகம்
________________

padippakam
பிரேமிள் அவரது கதைகளைப் படித்தால், தொன்னைக்கு நெய்யே ஆதாரம் என்ற நம்பிக்கையில் தொன்னையைக் கவிழ்த் துப் பிடிக்கிறார் என்றும், நெய் கீழே கொட்டி விடுகிறது என் றும் காணலாம். பாத்திரங்கள், பேச்சுகள் முதலியவை எல்லாமே பிராந்திய வழக்குச் சொற்களுக்காக என்றே சமைக் கப்பட்ட எக்ஸர்ஸைஸ்தான் இவரது பிரக்யாதி பெற்ற "நடை". ஏறத்தாழ இதே வேலையை இங்கே கி. ராஜநாராயணனும் கோணாங்கியும் செய்வதாகக் கூறவேண்டும். இவர்களிடம் கூட வில்லங்கமாக இந்தப் பிராந்திய வழக்குச் சொல் பிரயோகம் தொனித்தாலும், பாத்திர சிருஷ்டி, உணர்வு நுட்பம், அவ தானம் என்பவற்றால் கி.ரா.வும், கற்பனை வீச்சுடன் பரந்து எழும் வியாபகமான மொழி விளையாட்டினால் கோணங்கியும் விசேஷமாக முதல்தரக் கலைஞர்கள். இந்த விசேஷ அம்சம் எதுவுமற்ற தொணதொண நடைதான் கோமாளியாருடையது. பிராந்திய சொற்களை சிருஷ்டிகரமாக தமது நடையினுள் பின்னிவிடும் சாதனையை கி. ரா.வும் கோணங்கியும் செய்தால், இந்தச் சொற்களை வைத்து வசனங்கள் எழுதுக' என்ற வகுப்பறைப் பயிற்சிக்காக எழுதப்பட்ட உயிரற்ற பண்டிதத் தனத்தை கோமாளியாரிடம் காணலாம். அவரது கதைகளில் எழுதப்படும் பிரச்சினைகள் பாத்திரங்களின் இயற்கைத் தன்மை யிலிருந்து கிளர்வதுமில்லை. ஒரு மனப்பீடிப்பு (Obsession) மட்டுமே அவரது கதைகளில் திரும்பத் திரும்ப வரும். ஏதாவது ஒரிஜினல் அவரிடம் இருந்தது என்றால் அது இதுதான். இதுவே அவர் பேட்டிகளில் கூவிக் குறிப்பிடும் பால்". எல்லா போர்னோவிலும் உள்ள ஒரிஜினல் பால்’ !

கா.சு : இலக்கியத்தில் சிந்தனை அம்சம் தேவையில்லை என்று கூறியுள்ளார் எஸ்.பொ.? இது பிதற்றல் அல்லவா?

பிரேமிள் : சிந்தனை அம்சம்தான் பழங்குடித் தனமான மனோபாவ நிலையில் பிறந்த வெளியீட்டு வடிவங்களினின்றும் இலக்கியவடிவங்களை வேறுபடுத்துகிறது. ஆரம்பத்தில் இது உருவகப்படுத்தப்பட்ட நன்மை தீமைகளின் மோதலாகவும்பின்பு தத்துவார்த்தமாகவும் தீர்க்கமடைகிறது.பேரிலக்கிய லட்சணமே சிந்தனைதான். மோதல்களை வாத நியாயங்கள் வழி நீதித்வத் துக்கும் தெய்வீகத்துக்கும் வழிப்படுத்தும் உபகரணம் சிந்தனை. இந்தச் சிந்தனை அம்சமே, ஆயுதபாணியான வில்லாளி ராமனை, தத்துவ சொரூபமாக்குகிறது கம்பன் மூலம் :
மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி
() லயம் 63
படிப்பகம்
________________

padippakam
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டயோத்தி வந்தான்.
முதலிரண்டு அடிகளிலே தோன்றி மறைதலையும் காலத்தையும் அளவிடப்படக்கூடிய தன்மையையும் தாண்டிய காரண சிகரம் (பேகative Principle) ஆக ராமாவதாரம் தத்துவவடிவு பெறுகிறது. காரண சிகரமே ராமன் என்பதால் அதற்கு அடுத்த படித்தரத்து மும்மூர்த்தங்களும் கூட அவனே என்று தொடர் கிறான் கம்பன். இந்தத் தொடர்ச்சியில் ஒரே பார்வையின் உள்ப்பிணைப்பாக கவிதை பூரணம் பெறுகிறது. இதுவே சிந்தனையின் இயக்கம், இந்த இயக்கத்தின் தாதம்யத்தை ஒர் அளவையாகக் கொண்டால்தான் இலக்கியத்தை இனம் காட்ட முடியும்.

கா. சு 
உங்களைத் துரவிப்பது தொடரவே செய்கிறது. முன்றில் 17-ல் உங்களை இமாலய அகந்தைக்காரர் என்கிறார் தி. க. சி. அதே சமயத்தில் எனக்கு எழுதிய கடிதத்தில், பிரேமிள் போன்ற ஆழமான, கனமான, தரமான சிந்தனை யாளர்கள், படைப்பாளிகளை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் படி க்கிறேன். அவர் களுடன் எனக்கு உடன்பாடும் உண்டு, முரண்பாடும் உண்டு. பிரேமிள் போன்றவர்கள், நாவல்கள்,சிறுகதைகள், நாடகங்கள், திறனாய்வுகள் (நூல் வடிவில்) நிரம்ப வழங்க வேண்டும்; இல்லையெனில் தமிழ் இலக்கிய வரலாறு அவர்களை மன்னிக் காது. இது என் உறுதியான கருத்து.(14-7-94) என்றும் எழுதியுள்ளார். முன்றிலில்கூட ஒரு தலைசிறந்த புதுக்கவிஞன் என்று குறிப்பிடுகிறார்; பின்பு துழிைக்கிறார். இது அவருடைய ஒரிஜினல் டெக்னிக் தானா?

பிரேமிள்
 தி.க.சி. , வல்லிக்கண்ணன் புதுசாகக் கிளம்பி யிருக்கும் வண்ணநிலவன் ஆகியோர், வெறும் அபிப்ராயக் காரர்கள்தாம். தங்கள் அபிப்ராயங்களை விமர்சன பூர்வமாகத் தகுதிப்படுத்தத் தெரியாதவர்கள். இயறe eg என்பது தத்துவத் துறையின் பதச் சேர்க்கை. இது வெளி மனதில் அமைந்து கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் நிலை. இங்கே பிரேமிளுடையது சூப்பர் ஈகோ எனும்போது, கிறுக்குப் பிடிக்கவே முடியாத வீர்யம் கொண்ட தர்மங்களை அவன் அனுசரிக்கிறான் என்றே பொருள் பெறும். தி.க.சி.க்கு இதுகூடப் புரியாது. வல்லிக் கண்ணன், க. நா. சு. வின் அடியொற்றி அபிப்ராயம் சொல்கிறவர் என்றால், தி.க.சி. நேரிடையாக ப. ஜீவானந்தத்தை
64 லயம் -
படிப்பகம்
________________

padippakam
மயிரிழை பிசகாமல் அடியொற்றுகிறவர். சுயமூளையற்றவர் களும், நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மார்தட்டியபடியே, தங்கள் குருட்டுத் தடவலால் தடவிப் பார்த்துக்கூட உணர முடியாத சிருஷ்டி கர்த்தாக்களை எடுத்தெரிந்து அபிப்பிராயம் விளம்ப இடம் தந்தது கம்யூனிஸ் மார்க்ளியே இயக்கம். இந்த இயக்கத்தை இத்தகையோர் வக்கிரப்படுத்தியுள்ளனர். இதனை நமது சூழலில் இடைவிடாமல் தாக்கி வருபவன் நான். எனது இந்தத் தாக்குதல், மறுபுறம் ஆரோக்கியமான இடதுசாரிப் பார்வைகளுக்கு உரமாகிக்கூட உள்ளது. இலக்கிய நயத்தை விண்டு காட்டுவது, எவ்வகை விமர்சனத்துக்கு இன்றியமை யாத அடிப்படை இலக்கியமாகத் தேறாத ஒரு படைப்பை வேறு எவ்விதத்திலும் ஆராய்வது அர்த்தமற்றது. அது ஒரு குற்றம் என்று நமது நன்னூல் கூடக் கூறுகிறது. ஆரோக்கிய மான இடதுசாரிப் பார்வை கொண்ட ஞானிகூட, இலக்கிய மாகத் தேறாதவற்றை தமது ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்போகட்டும். ஜீவானந்தத்தின் குருபீடத்தருகே தி. க.சி. குந்தி யிருப்பதைக் கவனிப்போம்.

தி.க.சி. கேட்கிறார் : அப்போ கல்கி? அவனை எப்படிச் சொல்லனும்?' ஜீவா: கல்கி அவன் ஒரு பூர்ஷாவா. ஆனால் சோஷல் புரோகிரஸ்ஸிவ். இங்கே, ஸ்டாலினிய கேள்வி பதில் முறை வழிக்கல்வி(Catechism) வேலை செய்கிறது. இது கத்தோ லிக்க மத மரபைச் சார்ந்தது. கத்தோலிக்க மரபை பின்பற்றி, 'சைவ வினாவிடை’ என்ற நூலை ஆறுமுக நாவலர் கூடச்செய் துள்ளார். மேலுள்ள முறை கம்யூனிஸ் வினாவிடை . இரவு கழிந்து விடிகிறது. டுத்பிரஷாடன் பாத்ரும் வாசலில் நிற்கிறார் தி.க.சி. நின்றபடி ஜீவா போலவே தலையை ஆட்டிச் சொல் கிறார். 'கல்கி. அவன் ஒரு பூர்வடி வா. ஆனால் சோஷல் புரோகிரஸ்ஸிவ் பாத்ருமுக்குள் புகுத்து கதவைப் பூட்டிக் கொள்கிறார் தி. க.சி.இத்தகைய விபரங்கள் அங்கேயிருந்த சிதம்பர ரகுநாதன், சுந்தரராமசாமி போன்றோருக்கு எல்லாம் அவர்கள் அருவருப்படையுமளவு பழக்கமானவை. ஜீவாவின் பிளாக்மெயில் முறையையும் இவ்விடத்தில் நினைவு கூர்வது தி.க.சி.யின் அத்திவாரத்தைக் காட்டும். இடம் மவுண்ட்ரோடு போஸ்ட் ஆபிஸ் பகுதி. அந்தக் காலத்தில் டிராபிக் கம்மி. போஸ்ட் ஆபிஸ் பக்கத்து நடைபாதையில் போய்க் கொண்டி ருந்த ஜீவா, எதிர்சாரில் பாரதிதாசனைப் பார்த்துவிட்டார். உடனே கையைத்தட்டி அவரைக் கூப்பிடுகிறார். ஆனால் அவரது பக்கத்து தெருவுக்கு பாரதிதாசன் போகாமல் தமது பக்கத்து தெருவுக்கு ஜீவாவை வரும்படி சைகை செய்கிறார்.
லயம் 65
படிப்பகம்
________________

padippakam
ரு புவது ஆழ்ந்த பரிவுடன்தான் மெளனியினால் சித்தரிக்கப் படுகிறது. அதாவது, பிரத்யேகமான நேர்ப்பழக்கங்களில் சு ரா வும், ஞா. கூ-வும் தங்களை ஜாதியவாதிகளாகக் காட்டுவ தில்லை. எழுதும்போது ஜாதீயத்தை கிசுகிசு லெவலில் பண் னிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பு என்பது ஜாதிய வகை யாகவே இவர்களால் பார்க்கப்படுகிறது. மெளனியின் குறை பாடு சமூகவியல் ஜாதீயமாகும் எழுத்தில் அவர் மனமறிந்து ஜாதீயத்தை எவ்விதத்திலும் பண்ணியதில்லை. இருந்தும் அவரது பெர்லனலான ஜாதீய மனப்பான்மையின் விளைவாக அவரது கலையுள்ளம் வரண்டிருக்கிறது. சு.ரா-வின் திறன் கூrணமடைந்ததற்கும் இதுவே காரணம். ஞானக்கூத்தன் வெறும் பாமர மூளைக்காரர். இவர் கலைஞருமல்லர், வாசகர் கூட அல்லர். ஊர்த்திண்ணைகளிலும், சத்திரத்துச் சாப்பாட்டுச் சாலைகளிலும் மூக்கு முட்ட பிடித்துவிட்டு உட்கார்ந்திருந்து பாமரப் பார்ப்பான்கள் கதைக்கிறவற்றை கவிதை' என நம்பி எழுதிக் கொண்டிருப்பவர். இம்மூவருக்குமே ஒவ்வொரு விதங் களில் தமிழ்த்துவேஷம் உண்டு.

கா. சு 

மெளனிக்கு தமிழ் தெரியாது. அவர் எழுதி யவற்றில் இருந்த பிழைகளை நாங்கள்தான் திருத்தி வெளி யிட்டோம் என்று 1973-ல் எம். வி.வெங்கட்ராம், கண்ண தாசன் பத்திரிகைப் பேட்டியில் கூறி இருக்கிறார். (மறுபிர சுரம்: மெளனி இலக்கியத் தடம்) மெளனி இதற்கு ஒரு நீண்ட பதிலை எழுதினார். 1913-ல் நீங்களும் சுந்தரராமசாமியும் நாகர்கோவிலில் சதங்கையுடன் சம்பந்தப்பட்டிருந்த சமயம் அது. உங்கள் வேண்டுகோளின் பேரிலேயே மெளனி அந்த நீண்ட பதிலை எழுதி அனுப்பினார். ஆனால் அது பிரசுரிக்கப் படவில்லை. ஏன்?

பிரேமிள் :
 இந்த விபரங்களும் இது சம்பந்தமான வேறு விபரங்களும் வெகு சாதுர்யமாகப் புதைக்கப்பட்டு உள்ளன. வெங்கட்ராம் தம் பேட்டியில் மெளனிக்கு தமிழ் தெரியாது: என்று சொல்கிறார். பாரதியின் ஜாதி எதிர்ப்புக்காக 'அவனும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா? என்று மெளனி கத்தினார் என்கிறார். பாரதி பற்றி இதே தோரணையில் மெளனி என்னிடமும் பேசியதுண்டு. ஆனால் பாரதியின் கவிதை யில் உள்ள கவித்துவத்தையும், அவன் பாசாங்கில்லாமல் 'என் தாயின் மடி என்று தரையில் விழுந்து உருண்டதை யும் மெளனி உணர்ச்சிகரமாக என்னிடம் புகழ்ந்தவர். இலக் கியச் சித்தரிப்பு முறைகளை மெளனி அறிந்தவர் அல்லர்
68 லயம் -
படிப்பகம்
________________

padippakam
என்று பொருள்படும் விதத்தில், வெங்கட்ராம் தரும் விபரம் மூன்றாவது: வெங்கட்ராம் கதை ஒன்றில் ஒருவன் பிரியாணி (அந்தக் காலத்தில் பிரியாணி என்றால் மாமிசம் கலந்த உணவு மட்டும்தான். இன்றைய விஜிடபுள் பிரியாணி' ஒரு அர்த்தநாரீஸ்வரமாகும்!) சாப்பிடுகிறான். இதைப் படித்த மெளனி, வெங்கட்ராம் தமக்கு அது வாந்திவர வைப்பதாகக் கூறி இருக்கிறார். அப்படி எழுதக் கூடாது என்ற அர்த்தத் தில் மெளனி பேச, இவர் பாத்திரச் சித்தரிப்பு பற்றி ஏதோ சொல்லியிருக்கிறார். இதுவும் எனக்கு அதிசயமாகப்படுகிறது. ஏனெனில் ஆன்டன் செகாவ்வின் தி ஸ்டெப்பி" (The steppe) குறுநாவலை அபாரமாகப் புகழ்ந்தவர் மெளனி - என்னிடம் நேர்ப் பேச்சில். சைபீரியாவின் சமவெளியில் பயணம் செய்கிற சிலரைப் பற்றிய இந்தக் கதையில் ஒருவன் ஒரு குளத்தில் மீன் பிடித்து அதைப் பச்சையாகவே வாயில் போட்டு மென்று தின் பது தீர்க்கமாக மயிர்க் கூச்சம் ஏற்பட வைக்கிற மாதிரி சித்திரம் பெறுகிறது. இது ஏன் மெளனி’க்கு வாந்தி வர வைக்கவில்லை? மேலும், விபச்சார உலகைத் தமது கதை களின் ஒரு தளமாக உபயோகித்துள்ள மெளனிக்கு, வேத காலத்திய பிராமணர்களைத் தொடர்ந்து இன்றைய வடக் கத்திய பிராமணர்கள் வரை அநுசரிக்கிற மாம்ச போஜனம் தாங் கலையா? இது ஒருவித பம்மாத்து. அதுவும் தெற்கில் மட் டுமே செயயப்படும் பம்மாத்து.

கா. சு: 
முன்றில் தமது வெள்ளாள ஜாதியின் சுழி சுத்தம் என்பதற்காக வெஜிடேரியனிஸத்தைக் குறிப்பிடுவதும் பம் மாத்து ஆகிறதல்லவா?

பிரேமிள் : உலகத்திலேயே இங்குள்ள விவசாயிகள்தாம் வெஜிடேரியன்கள் என்ற அபத்த தோரணையில் முன்றிலார் எழுதியிருக்கிறார். உலகின் பிற பகுதிகளில் ஆதி காலம் தொட்டு விவசாயிகள் மாம்ச பட்சிணிகளாகவும் இருந்திருக்கின் றனர். தமிழகத்தின் பழக்க விசேஷங்கள் சிலவற்றுக்கு தீவிர பெளத்த இயக்கமும், இதைப் பின்பற்றிய சித்த மரபும்தான் காரணமாக முடியும். ஏனெனில் பழந்தமிழ் இலக்கியங்களில் மாம்ச போஜனமே சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. முன்றிலார் 'தீபாவனி தமிழர்களுடையது அல்ல, அது வெகுபின் னாடி மைசூர் அரசர் காலத்தில் இங்கே வந்தது' என்று கூறும்போது கூட சில மருத்துவ பின்னணிகளை அறியாத விஷத்தையே கக்குகிறார். தீபாவளி கொண்
I_ லயம் 69
படிப்பகம்
________________

padippakam
டாடப்படும் காலம் சுற்றுச்சூழலில் மழைநீர் தேங்கி குளிரின் போர்வையில் காலரா போன்ற கொள்ளை நோய்க் கிருமிகள் அதிவேக உற்பத்தி பெறக் கூடிய காலம் தீபாவளியின் போது நெருப்பு, கெந்தக தகனம், வீட்டைச் சுற்றிலும் தீபங் கள் தொடர்ந்து சில நாட்களுக்கு வைக்கப்பட்டு பின்னாடி, பட்டாசு முதலியவற்றின் மூலம் பவனம் புனிதப்படும் முறை யாகி இருக்கிறது. இது மதத்தின் வழியில் மருத்துவ செயல் முறையை நிறைவேற்றும் வேலை. இந்த நாட்டினரின் வெகு ஜனத்தளத்தை அறிவியல் ரீதியில் எட்டி இந்தப் புனிதப்படுத் தலைச் செய்வது அசாத்யம் என உணர்ந்த அறிஞர்கள் உரு வாக்கிய கொண்டாட்டம்தான் தீபாவளி என்று காணவேண் டும். கார்த்திகை தீபமும் இதையே தொடர்ந்து வரும் மாதத் தில் நிறைவேற்றுகிறது.

கா. சு
 சரி. வெங்கட்ராமின் பேட்டி விஷயத்துக்கு வரு வோம்.

பிரேமிள் : 
வெங்கட்ராமுக்கு மெளனி எழுதி சதங்கைக்கு அனுப்பிய நீண்ட பதிலில் (1. மெளனிக்குத் தமிழ் தெரியாது (2) பாரதியை கவிஞனல்ல என்றார் (3) பிரியாணி பற்றி எழுதப்படாது என்றார்-என மெளனி கூறியதாக வெங் கட்ராம் சொன்னவை பதில் பெறவில்லை. இவை மூன்றும் தான் மெளனியின் கலையுலக வியக்தி பற்றியவை. மெளனி இவற்றுக்கு மட்டும் தமது பதிலில் பதில் தரவில்லை. திசை திருப்பி, வெங்கட்ராம் குறிப்பிடும் வேறு பிஸினஸ் விஷயங் களுக்கு மட்டும், அதுவும் மகாமட்டமாக, பட்டப் பெயர் ஒன்றை வெங்கட்ராமுக்கு சூட்டி எழுதியிருந்தார்- பட்டு நூல்காரன் என்று. வெங்கட்ராம் பட்டு நூல் தயாரிக்கும் செளராஷ்டிரர் என்பது இந்த மெளனியக் குறியீட்டின் பொருள். படித்த எனக்கு மெளனியின் கட்டுரை பிரசுரத்துக்கே லாயக்கில்லாதது என்றுதான் பட்டது என் பார்வையை அறிந்து கொண்ட சுந்தரராமசாமி இரண்டு காரியங்களைப் பண்ணினார். அப் போது கல்லூரி மாணவராக இருந்த அ ராஜமார்த்தாண்டன் (கோகயம், சொல்லிப்பாவை இதழ்களின் ஆசிரியராக பின் னாடி வந்து இப்போது தினமணிகதிர் உதவியாசிரியராக உள் ளவர்) மூலம் மெளனியின் கட்டுரைக்குப் பிரதி எடுத்துவைத் துக் கொண்டார். அடுத்து, கட்டுரையை நான் பிரசுரிக்க மறுப் பதாக மெளனிக்கு எழுதினார். சு.ரா ஸ்டைல் போக்கிரித்தனம். ஏனெனில் சதங்கையில் அது பிரசுரமாவதும் ஆகாததும் துளிக் கூட என்னைச் சார்ந்ததில்லை. சதங்கை ஆசிரியர் வனமாலி:
70 லயம் )
படிப்பகம்
________________

padippakam
கைக்கு உண்மையில் என்னைப் பிடிக்காது என்பது ஒருபுறம். சு ரா. அவருக்கு ஒரு மாபெரும் ஸ்டார் என்பது மறுபுறம். காரணம் சிம்பிள்-சு.ரா, ஒரு பெரிய துணி வியாபாரி. நான் ஒன்றுமே புரியாத வகையில் எதையோ கிறுக்கும் ஏழை. என்னை எப்படி வனமாலிகை போன்ற கேஸ் ஒரு பொருட்டாக மதித்து ஆலோசனை கேட்டிருக்க முடியும். ஆனால் சு.ரா.வுக்கு என் எழுத்தின் தாரதம்யம் தெரியும். கூடவே குறிப்பிட்ட சில சிக்கலான நிலைமைகளில் என்னைச் சுட்டிவிட்டு தான் ஒரு பரி சுத்தவானாகக் காட்சி தருவதுக்கும் என் ஆலோசனை' உதவும். தொடர்கிறது கதை. மெளனிக்கு இதனால் என் மீது பெரிய ஆத்திரம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்தன. தமது கட்டுரையுடன் சென்னைக்கு இதற்காகவே சிதம்பரத்திலிருந்து போய் கி.அ. சச்சிதானந்தத்திடம் காட்டி இதைப் பிரசுரிக்கக் கூடாது என்று நான் சொன்னதாகக் கூச்சலிட்டிருக்கிறார். அதைப் படித்த சச்சிதானந்தமும் என் பார்வை சரி என்பதை மெளனிக்கு கூறியிருக்கிறார். கட்டுரையை வெளியிட்டால் மெளனிக்கு பெயர் கெடும் என்பது அவர் பார்வை. ஆனால் என் பார்வை அது பிரசுரத்துக்கு லாயக்கற்றது என்பதும், இலக்கிய சமூகரீதியாக நான் குறிப்பிட்ட விஷயங்களுக்கு மெளனி பதில் தரவில்லை என்பதுதான். ஆக, என் நோக்கம் இதில் பிரசுர சாதனத்தையும் இலக்கியக் கருத்துப் பரிமாறலை யும் சார்ந்தது. இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மெளனி எழுதிய அது எத்தகையதாக இருந்தாலும் பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது அப்போதைய வெ.சா-வின் பார்வை. அது 1973. அப்போதைய வெ.சா. வேறேமாதிரி. அவர் அப்போது மெளனியின் கட்டுரை அப்படியே பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறியமை என் பார்வைக்கு முரணான பார்வை அல்ல. அது சு.ரா., சச்சிதானந்தம் ஆகிய இருவரின் பார்வைக்கும் முரணான ஒன்றுதான். இவ்விருவரின் முடிவு மெளனியின் போலித்தனமான இலக்கியக் கருத்துலக வியக்தி (இது மெளனியின் கதாசிரிய இலக்கியத் தகுதிக்கு அப்பாற்பாட்ட வியக்தி) கெட்ட பெயர் பெற்றுவிடக்கூடும் என்ற கரிசனையில் பிறந்த ஒன்று. இதனாலேயே மெளனி, தாமாகவே கட்டுரையைப் பிரசுரிக்கக் கூடிய வசதி பெற்றிருந் தும் அதைத் துரப்போட்டுவிட்டார். வெ.சா-வுக்கு நான் இதை சுட்டிக்காட்டிக் கூறியது : 'மெளனியின் கட்டுரை வெறும் ஆத்திரத்தில் எழுதப்பட்ட ஒன்று. அவர் தமது கட்டுரையை தாமே ஒரு சமன நிலையில் பரிசீலித்து அதைத் திருப்பி எழுதலாம். அல்லது, விரும்பினால் அவரே இதை இப்போதைய வடிவில்
L லயம் 71.
படிப்பகம்
________________

padippakam
பிரசுரிக்கலாம். இலக்கியக் கருத்துலகில் அவர் செயல்பட லாயக்கற்றவர் என்பது இதன் மூலம் வெளியாகும். அப்படி யானால் அது வெளியாகட்டுமே என்பதுதான் அப்போதைய வெ.சா.வின் கருத்து. இது விஷயம், அவரும் நானும் நேர்ச் சந்திப்பில், அதுவும் நாகர்கோவிலுக்கு அவர் வருகை தந்தி ருந்த சமயம், பேசிப் பிரிந்த பிறகு நடந்த ஒன்று- பகிரங்கத் துக்கு வராதது. நான் நாகர்கோவிலை விட்டு சென்னையில் நடைபெற இருந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி கூட்டத்துக்கு திரும்பும் வழியில் டி. ஆர். நடராஜனை (சிந்துஜா) மதுரையில் சந்தித்து அங்கே ஒருவாரம் தங்கினேன். அப்போது ஒரு பரீட்சை செய்தேன். மெளனி போன்ற பார்ப்பணியவாதிகளின் மனோ பாவம் எத்தகையது என்று நான் நேரில் அறிய உதவிய பரீட்சை இது. சிந்துஜா அறிய, அவரைச் சாட்சியாக இருக் கும்படியாகச் சொல்லி, மெளனிக்கு ஒரு கார்டு போட்டேன். அதில், எம்.வி.வி-க்கு நானே பதில் எழுதி மெளனிக்கு அனுப்புவதாகவும், மெளனி அதை தமது பதிலாக பிரதி எடுத்து பிரசுரத்துக்கு அனுப்பும்புடியும் - இதற்கு சம்மதமா என்றும் எழுதப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாள் வந்தது, மெளனியின் பதில் உடனே எழுதி அனுப்பு, அப்படியே செய்யலாம்' என்பதாக இதுதான் சர்வவல்லபரான மெளனியின் உண்மை யான சொரூபம். என்று சிந்துஜாவுக்கு பதில் கார்டைக் காட்டினேன் 'இதெல்லாம் வேண்டாம், வேண்டாம்' என்ற கெஞ்ச லைத் தவிர அவரால் வேறேதும் சொல்ல முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்துக்குப் பிறகு சிந்துஜா இலக்கிய உலகையே விட்டு வியாபார பத்திரிகை உலகுக்குப் போய் அங்கிருந்தும் வாபஸ் பெற்றுவிட்டார். இந்த மெளனிய சுயரூப தர்சனம்தானோ என்னமோ இதற்குப் பிறகு மெளனியாரும், தமது எண்ணங் களை வெளியிட தமிழ் மொழி போதாது என்று பிதற்ற ஆரம் பித்தார். இந்தப் பிதற்றலை, அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் பார்ப்பணியவாதிகளுடைய கழிவுகளுக்கு கலைத் தனம் சேர்க்கும் ஓவியர் ஆதிமூலத்தின் மெளனி பிரதிமைச் சித்திரத்துடன் வெளியிட்டார். பேட்டி கண்டவர் இன்னொரு ஏஜண்டான பன்னிர்செல்வம். நடக்கிற கருத்துலக மோசடி பற்றிய பிரக்ஞையே அற்று கி. அ. சச்சிதானந்தம், ஆதிமூலம், பன்னிர்செல்வம், சா. கந்தசாமி, தமிழவன், ஜெயகாந்தன் முதலிய பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனியத்துக்கு தொன்று தொட்டே ஏஜண்டுகளாக இயங்கி வருகிறார்கள். இத்தகைய அடிவருடிகள் இந்தியாவில் தொன்றுதொட்டு இன்றுவரை இருப் பதால்தான் பார்ப்பனியம் புதைக்கப்படாமல் அறிவுலகத்தை ரோக உலகாக்கி, நாறச் செய்து - நாறிக் கொண்டு இருக்கிறது.
72 லயம் L
படிப்பகம்
________________

padippakam
கா.சு மெளனி பின் தமிழ் பற்றி ஆதாரபூர்வமாகச் சொல் லக் கூடியவர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். "சரஸ்வதி விஜயபாஸ்கரன், சி. சு. செல்லப்பா, நகுலன் (குரு க்ஷேத்ரம்) மற்றும் மெளனிக்கு உதவியாளராயிருந்த துர்வாஸ் ஜே.வி. நாதன். இவர்கள் மெளனியின் கதைகளைக் கைப்பிரதி யில் பார்த்தவர்கள்; வெளியிட்டவர்கள். 'கசடதபற'வில் கூட கடைசி கதை பிரசுரம் பெற்றது. இவர்களிடமிருந்து ஆணித்தர மான பதிலைப் பெறமுடியும்
.
பிரேமிள் : 
மெளனியின் வாக்கிய அமைப்புகளில் விசித்திரங்கள் உள்ளன. இவை ஒருவகையில் கலைப்பாங்கான பகுதிகளாக நிறைவு பெறும் விசித்திரங்கள். இவை திருத்தப் பட்டிருக்க முடியாதவை. இலக்கணக் குறைபாடுகளும் நிகழ்வ துண்டு. ஆனால் அவை மாபெரும் குற்றமாவது, தமிழில் என் சிந்தனைகளைச் சொல்லுமளவு தமிழ் வளரவில்லை’ என்று மெளனி கூறியபோதுதான். சரியான இலக்கண வடிவமே கைவராத ஒருவர் இப்படிப் பேசுவது முட்டாள்தனமான குற்ற மாகும். ஒன்று. நான் அறிய அவரது படைப்புகளுடன் அனுப்பும் கடிதங்களில் அவர், லகர, ளகர பேதங்களைத் திருத் தவும் என்று குறிப்பிடுவதுண்டு. இந்தப் பின்னணியுடன் வெங்கட்ராமன் கூற்றைப் பார்க்க வேண்டும்.

கா.சு :
 'மெளனி இலக்கியத் தடம் தொகுப்பில், ஆல்பர்ட் ப்ராங்க்ளின் மெளனிக்கு எழுதிய கடிதத்தை அவரே தமக்குக் காட்டியதாக வெங்கட்ராம் எழுதியுள்ளார். ஆனால் ப்ராங்க்ளின் கடிதங்கள் பற்றி என்னிடம் மேலதிகமாகச் சொல்லியிருக் கிறீர்கள்.

பிரேமிள் :
 ப்ராங்க்ளின் மெளனிக்கு கடிதம் எழுதியது 1972 வாக்கில். ஆனால் வெங்கட்ராம், மெளனியின் கண் பார்வை மிகவும் மோசமடைந்த காலத்தில், தமக்கு ப்ராங்க்ளின் கடிதத்தை அவர் காட்டியதாகக் கூறுவதால், இது மிகப் பிந்தி நடந்திருக்க வேண்டும். 1972-ல் பிராங்க்ளின் இரு கடிதங்களை மெளனிக்கு எழுதியுள்ளார். இரண்டையுமே மெளனி எனக்குக் காட்டியிருக்கிறார். முதல் கடிதம், அமெரிக்காவில் மெளனி கதைகளை வெளியிட முயற்சிப்பது பற்றி பிராங்க்ளின் எழுதி யது. இரண்டாவது, அமெரிக்க பிரசுர ஸ்தாபனத்தார் மெளனி கதைகளை மறுத்துள்ளதை காரணப் பூர்வமாகக் கூறும் கடிதம். இவற்றுள் முந்தியதை மட்டுமே மெளனி, வெங்கட்ராமுக்கு காட்டி இருக்கிறார். இரண்டாவதை மறைத்து விட்டார்.
() லயம் 73
படிப்பகம்
________________

padippakam
நானறிந்த மெளனி இத்தகையவரல்லர். தமது தோல்விகளை நேரில் சந்திக்கக் கூடிய ஸ்போர்ட்மென்ஷிப் கொண்டவர் மெளனி. (இளமையில் மைல் மணி என்று அழைக்கப்பட்ட ஒரு முதல்தர ஸ்போர்ட்மென் அவர்). வெங்கட்ராமுக்கு முதல் கடிதத்தை மட்டும் காட்டும் தற்பெருமை உணர்வு கொள்ளும் நிலைக்கு அவர் வந்ததன் காரணம்-தமது ஜீவிதத்துக்கு ஓர் உன்னதமான காரண நியாயத்தை தமக்கே உணர்த்துவதற் காகத்தான். சரீர பலமும் பொருள் பலமும் ஜாதீய செல்வாக்கும் இவற்றின் விளைவான செருக்கும் நிரம்பியிருந்த காலங்களில் அவரிடம் நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று என்னைப் போன்றவர்கள் கேட்டபோதெல்லாம், எழுதுவதால் என்ன புண்ணியமா, புருஷார்த்தமா?' என்றே சொல்லுவார். பின்னாடி தமது உண்மையான புருஷார்த்தம் தமது எழுத்துத் தான் என்று உணர நேர்கிறது. முந்திய பார்வைக்காக பின்னாடி மனோதர்ம சக்திகளினால் இப்படி தண்டனை பெற்றார் எனலாமா? பிராங்க்ளினின் இரண்டாவது கடிதத்தில்- மெளனி யின் எந்தக் கதையையும் எந்தப் பிரசுரக்காரரும் வெளியிட முன் வரவில்லை. காரணம் படிப்பவரை ஈர்த்துச் செல்லக்கூடிய அழுத்தமான கதையம்சம் இல்லை. ஆரம்ப வரிகளே சிறுகதை படிப்போரை ஈர்க்கவேண்டும். இது நிறைவுறவில்லை. சில உயரிய தன்மைகளை கதைகள் பெற்றிருந்தும் இந்நிலை வருந்துதற்குரியது' என்றிருந்தது. இதற்குப் பிறகு தமிழுக்கும் பிராங்க்ளினுக்கும் இருந்த தொடர்பு கூட போயே போய் விட்டது.

தம்மைப் பற்றிய பிராங்க்ளினின் முதற் கடிதம் வந்த சமயத் தில், தமக்கே ஏற்பட்ட தற்பெருமைத் தன்மையை மட்டும் தனிமைப்படுத்தி, அதற்குள் மட்டும் நின்றுகொண்டு, அதையே வெங்கட்ராமுக்கு தர்சனமாகத் தந்துள்ளார் மெளனி கையில் கொடுக்காமல் கடிதத்தை மூலையில் பிடித்துக் கொண்டு காட்டி யதன் காரணம் - தேதி ரொம்பப் பழையது. இந்த விபரம் மறைக்கப்பட வேண்டும் என்பதாக இருக்கலாம். கண் சரியாகத் தெரியாவிட்டாலும், பூதக் கண்ணாடி உதவியுடன் படிக்கும் பழக்கம் மெளனிக்கு இருந்திருக்கிறது. இதனால் தேதியைக் கவனித்து விரலால் மறைத்திருக்கிறார். எழுதுவதையே உதா சீனப்படுத்திய ஓர் உண்மையான கலைஞன், அந்தக் குற்றத்தை இழைத்ததுக்காக அடையும் வீழ்ச்சியை நம்முன் நிகழ்த்திக் காட்டிய சரித்திரசாட்சி இது எனலாமா? O
படிப்பகம்
________________

padippakam
பிரேமிள் பேட்டி பிற்சேர்க்கை
கா. சு விமர்சன ஊழல்கள்' நூலில் எழுத்துவில் தொனித்த வைதீகத்தைக் குறிப்பிட்டிருக்கிறிர்கள். தமிழின் நவீனத்வம் பின்னிணைப்பிலும் இது மறுபிரசுரமானது. இப் போது நீங்கள் எழுத்து'வில் பார்ப்பனியம் செயல்பட்டதில்லை என்கிறீர்கள். கசடதபறவினர், பிந்திய காலத்து வெ. சா. மூலம் வெளிவந்த வகையான பார்ப்ப ையம் எழுத்து'வில் இல்லை என்பது வெளிப்படை, இருந்தும் உங்கள் விமர்சன ஊழல்கள் கூற்றுடன் இப்போது நீங்கள் முரண்படுவதாகக் கூறி, உங்கள் மீது சாணியடிக்கும் முன்றிலார் எழுதலாம். இதைச் செய்யாமல் முன்றில் 18-ல் எதையோ எல்லாம் பிதற்று கிறார். காலம் காலமாக நாடறிந்த பாடல், கள்ளர் மறவர் காடரகம்படியர் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளராயினரே...' இதை தாமே உங்களுக்கு பிரம்மோபதேசம் மாதிரி சொல்லிக் குடுத்தாராம். அப்புறம் உங்கள் பார்வை வெளிவர உதவுகிற வர்களுக்கு பட்டப் பெயர்கள்...நான்கு வருணத்தவர்களுள் பிராமணர்களுக்கு மட்டும்தான் கோத்திரம் சொல்வதுண்டு என்று அவர் குறிப்பிடுவதுதான் அவர் புத்திசுவாதீனத்தோடு எழுதினமாதிரி இருக்கிறது.

பிரேமிள் : 
அப்படியானால் ராவணன் இத்யாதி எல்லாம் புலஸ்திய கோத்ரம் என்பதையும் முன்றிலாரின் பேதலித்த புத்தி மறந்துவிட்டது. யக்ஞோபவித சடங்கின் வழி பிராமணர்களை 'துவிஜன்மிகள்' என்கிற வழக்கின் பொருள் இந்தியனுக்கும் ஐரோப்பியனுக்கும் பிறந்த' 'தாக உளறிய முன்றிலாருக்கு பதிலாக, பிராமண, கூடித்ரிய, வைசியர் என்ற மூவர்ணத்த வருமே பூணுல் வழி துவிஜன்மிகள் என்ற மனுதர்மக் கூற்றை முன்வைத்தேன். இப்போது 'கோத்ரம்' என்கிறார். கோத்ரம் சொல்லாமல் யக்ஞோபவிதமும் இதனுடன் செய்யப்படும் பிரம் மோபதேசமும் நடக்காது! இதெல்லாம் தெற்கில் தேய் வடைந்து வடக்கில் பெருமளவு நீடிக்கும் விஷயங்கள். இந்த பூணுரல், பிரம்மோபதேசம், கோத்ரம் எல்லாமே ஆன்மிக சமாச்சாரம் என்கிற மரபு பித்தலாட்டமாகும் என்பதே என்
பார்வை . o O
படிப்பகம்