சின்னு முதல் சின்னுவரை -
வண்ணதாசன்
https://vannathasan.wordpress.com/?s=சின்னு+முதல்+சின்னு+வரை
Automated Google-ocr
ஆயிரமாயிரம் சொல்லட்டும். அவள் அப்படி, இப்படி என்று வண்டி வண்டியாய்க் கேவலமாய்ப் பேசட்டும். இந்தத் தந்தி போஸ்ட் தாண்டி, அந்த முடுக்குக்குள் ஒரு எட்டு எடுத்து வைத்தால் கூடப் போதும். நாளைக்கும் பின்னைக்கும் உங்களுக்கு மரியாதை என்கிறது இருக்காது தெருவில் என்று எச்சரிக்கை பண்ணட்டும்.
அதற்காக எல்லாம் சின்னுவைப் பார்க்க முடியாமலிருக்க முடியுமா? அதுவும் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலேயேதான் அவள் இருக்கிறாள் என்று தெரிந்தபோது அப்படி இருந்து விடமுடியுமா.
ஏதோ ஒரு பேச்சு வருகையில் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்த ஜவஹர் ராஜ் மருந்து குடித்துச் செத்துப்போனது, அவனுடைய அக்கா (எங்களுக்கெல்லாம் அல்ஜீப்ரா தெரிகிறது என்றால் அது அந்தத் திலகா அக்கா புண்ணியம். கணக்கை வெறும் கணக்காகச் சொல்லிக் கொடுத்தால் சிரமம்தான். திலகா அக்கா ஒரு பாட்ல் போலச் சொல்லிக் கொடுப்பாள். நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஓடிவா என்று திருப்பிச் சொல்வது போல அவ்வளவு எளிதாக இருக்கும். சின்ன வயதில் கண்ணாடி போடுவதே அந்தக் காலத்தில் அபூர்வம். அதுவும் பெண்பிள்ளைகள் கண்ணாடி போட்டு நாங்கள் பார்த்ததேயில்லை. திலகா அக்கா தங்க பிரேம் கண்ணாடி அணிந்திருப்பாள். கண்ணாடி அணிந்து ரிங் டென்னிஸ் அந்த வாசலிலேயே ஆடும்போதும் சரி, ஒரு நியமம் போல முகம் கழுவுவதற்கு முன் கழற்றி வைத்துவிட்ட பிறகும் சரி, முகம் அழகாகவே இருக்கும். தலைவாரி, ஒற்றைச் சடை போட்டு, பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு முடிப்பாள்.
இதோடு கண்ணாடியை அணிந்து கொள்ளலாம். அணியமாட்டாள். டக்கென்று ரேடியோவைப் போடுவாள். சிலோன் ரேடியோவில் மயில்வாஹனன் சத்தம் கேட்கும். அல்லது இசையும் கதையும் நிகழ்ச்சியில், கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ, 'உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீ ஆட' என்ற பாட்டுக் கேட்கும். முதலில் அதிக சத்தம் வைத்து, அப்புறம் முள்ளை அங்கே, இங்கே சுழற்றி, கரகரப்பையெல்லாம் சுத்தமாக அகற்றி, மறுபடி ஒலி அளவைக் கச்சிதமாக குறைப்பாள். குறைந்த பிறகு அமிர்தமாகக் காதில் இறங்கும் எல்லாம். அப்படிக் குறைந்த அளவில் ரேடியோவைப் பாட வைப்பதும், சன்னமான தீர்க்கத்துடன் குத்து விளக்குச் சுடரை முத்துப்போல் ஏற்றுவதும் ஒரு பெரிய கலை. திலகா அக்காவால் அது முடிந்தது. அப்படி ரேடியோவைப் பாடவிட்ட கையோடு, கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு திலகா அக்கா வருவாள். கட்டு மரத்தை எப்போது கடலுக்குள் தள்ளுகிறார்கள், அதில் எப்போது ஏறுகிறார்கள் என்ற மாயத்தைச் சொல்ல முடியாதது எப்படியோ அப்படியே திலகா அக்காவின் கண்ணாடிச் சட்டம் முகத்தின் பக்கவாட்டில் பொருந்துவதும் அவர்கள் சிரிப்பதும். அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் அல்ஜீப்ரா எல்லாம் தூசு, ஊதி விடுவோம்...) வீட்டைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா போய்விட்டதாகவும் அந்த வீட்டில்தான் சின்னு வாடகைக்கு இருப்பதாகவும் சொன்னார்கள்.
சின்னுவைப் பற்றி ஒரு வரியோசிப்பதற்குள் ஜவஹர்ராஜ் வீட்டு திலகா அக்கா ஞாபகத்தில் இவ்வளவு ஓடி விட்டது. வாழ்க்கை, வயது, மனம் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. நேர்த்தியான சிற்பங்கள்துண்துரணாகச் செதுக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபமாக அது இருக்கையில், ஒரு தூணிலிருந்து இன்னொரு துணுக்கு நகர்வதற்கு முடியாமல் ஒவ்வொரு இணுக்கிலும், இழைவிலும் புல்லரித்து நிற்கும்படி மனிதர்கள் இருக்கிறார்கள். அடித்துண் பார்த்து, நடுத்தூண் பார்த்து அப்புறம் அண்ணாந்து பார்ப்பதற்குள் ஆயுசு இருட்டிவிடுகிறது. இதற்குள்தான் படையெடுப்பு, இடிபாடு, தேய்மானம், மூளியானது, தூசுதும்பு துடைத்து புனருத்தாரணம். எல்லாவற்றுக்கும் மத்தியில் எந்த முகம் அலுத்தது. எதைத் தாண்டிப் போக் முடிகிறது. எதை ஒதுக்கி வைக்க முடிகிறது. அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு.
சின்னுவும் அப்படியொரு அழகு. மூக்கால், கண்ணால், பல் வரிசையால் எல்லாம் பத்துக்கு இரண்டு பேர் அழகாய் இருப்பார்கள். கல்யாணப்பந்தலில் லஸ்தர் கட்டினதுமாதிரி ஒரு சமயத்தில் இருந்தஅழகு இன்னொரு சமயம் இல்லாமல் போகும். சில சமயம் 'ஈ' என்று அசட்டு இளிப்பை இளிக்கவும் செய்யும்.
சின்னுவுக்கு அப்படியொரு அழகுண்டு. பிலுயிலுவென்று முன்வரிசை பூராவும் நெற்றியில் சுருண்டு நிற்கும். அவ்வளவு ஈரமும் மினுமினுப்பும் அகலமுமாகக் கண் உருளும். சற்றுக் கூர்மையில்லாத மூக்குத்தான். ஆனால் அதை அந்த ஒற்றை மூக்குத்தி சாப்பிட்டு விடும். சிரிப்பு என்கிறது மேலே எட்டு, கீழே எட்டு என்று காட்டுகிற பல் வரிசை மட்டுமா? காரை, கருப்பு, பழுப்பு இல்லாமல் இருக்கிற ஆரோக்யம் மட்டுமா? அது ஊற்று மாதிரி மனதிலிருந்து பொங்கிப் பூப்பூவாகப் புல்லில் விழுந்து குளிரவைக்கிற விஷயம். தான்மட்டும் ஒற்றையாய்ச்சிரிக்காமல், பக்கத்தில் இருப்பவர், எதிரில் இருப்பவர் எல்லோரையும் தொற்றிக் கொள்ள வேண்டும். சடசடவென்று பெய்கிற மழை மாதிரி ஜன்னல் வழியாக வீட்டுக்குள் தெறிக்கவேண்டும். தூங்குகிற குழந்தை மேல் விழுகிற நிலா வெளிச்சம் மாதிரி, தானும் அழகாகித் தான் விழுமிடத்தையும் மேலும் அழகாக்க வேண்டும். சின்னு அப்படித்தான் செய்தாள். சின்னு சிரிப்பும் அப்படித்தான் இருந்தது.
உலகத்தில் மனைவிமார்களின் உடனடித் தங்கைகளின் அழகும் பிரியமும் இருக்கிறதே அது இன்னொரு அற்புதமான விஷயம். ஒரு அற்புதத்தைப் பற்றிப் பேசுகையில் இன்னொரு அற்புதத்தின் பேச்சு வரக் கூடாது என்று கட்டாயமா என்ன? சற்று நேரமாவது ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக் கொள்கிற அற்புதவரிசையாக வாழ்க்கை இருக்குமெனில் அற்புதம்தானே.
என்னுடைய கொழுந்தியாளுக்கு ஒரு வீடு வாடகைக்குத் தேடும்போதுதான் சின்னுவைப் பார்க்க முடிந்தது. சின்னு என்கிற இந்தச் பூரீனிவாச லட்சுமி வேறு யாருமல்ல. ஆறாவது வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை என்னுடன் ஒன்றாகப் படித்த ஆர். கண்ணனின் மனைவி. ஆர். கண்ணன் தான் ஆறாம் வகுப்பில் இன்ஸ்பெக்ஷனுக்காக மீராவேஷம் போட்டான். டு, ஃபோர், சிக்ஸ், எய்ட் என்று ரெசிட்டேஷன் சொல்லிப் பரிசு வாங்கினான். நான் எப்போதும் முதல் ராங்க் வாங்கிக் கொண்டு, நவம்பர் மன்த்லி டெஸ்ட்டை விட அரையாண்டுத் தேர்வில் அரைமார்க் தமிழில் குறைவாக வாங்கினதற்காக, அப்பாவிடம் கன்னா பின்னாவென்னு அடிவாங்கிவிட்டு, முனிசிபல் பார்க்கில் தன்னந்தனியாக இட்லிப்பூ பறித்துக் கொண்டிருந்தேன். புல் கற்றைக்கிடையில் அணில்கள் ஒடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாதாங்கொட்டை ருசியை விட, வாதாம் பழ நிறமும், வாதாம் பழ நிறத்தைவிட, வாதாம் மர இலையின் நிறமும் அழகு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதும், வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததன் அழகு எல்லாம் இப்போதுதான் தெரிகிறது என்பதும் உண்மை.
அப்புறம் ஹைஸ்கூல் போன பிறகும் கூட ஆர் கண்ணன் தாவீதும், கோலியாத்தும் நாடகத்தில் தாவீதாக நடித்தான். எனக்கு என்ன வேலை என்கிறீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்தில் முதல் மார்க்கும், ஞாபக சக்திக்குப் பெரிய பெயரும் வாங்கியிருந்ததால் ஸ்டேஜின் ஒரு ஒரத்திலிருந்து வசனத்தை மறந்தால் எடுத்துத் தருகிற ப்ராம்ப்ட்டர் வேலை. முழு வசனமும் அத்துபடியாகி வீட்டில் நான் மட்டும் நடித்துக் கொண்டிருக்க, படிக்காமல் எதையோ உளறிக் கொண்டிருப்பதாய் பிடரியில் அடி. வேறு யார் அடிப்பார்கள். அப்பாதான். அந்த ராத்திரியில் முனிசிபல் பார்க்கிற்கா போக முடியும். தலையணையைப் போட்டுப் படுத்துக் கொள்வேன். சுவர் ஒரம் பிள்ளையார் எறும்பு போய்க் கொண்டிருக்கும். வெவ்வேறு காலங்களில் மெழுகப் பட்ட சாணிப் பொறுக்குகள் தளச் செங்கல்களிலும், சுவர் ஓரங்களிலும் விரல் விரலாக எடுக்க, எடுக்கக் கிளம்பும். இந்த வினாடியில் கூட அந்த ராத்திரியில் நுகர்ந்த சாணிப் பொறுக்கின் மணம் நாசிக்கு வருகிறது.
அப்படியிருக்க ஏழெட்டு வருஷங்களுக்குள் அறிமுகமான சின்னுவின் முகம் எப்படி மறக்கும். சின்னுவைப் பார்த்த இடம் வினோதமானது.
________________
******
________________
இந்தக் காலம் மாதிரி காலனிகளோ, தனித்தனி வீடுகளோ அந்தக் காலத்தில் ஏது. கிடைத்த இடத்தில் தோன்றினது மாதிரி அல்லது தோன்றின இடத்தில் கிடைத்ததை வைத்துக் கட்டின வீடுகள். தெருவை ஒட்டி ஒரு வீடு. அப்புறம் கல்யாணம் காட்சி நடத்த என்று ஒரு வாசல். அப்புறம் இரண்டு வரிசையாக வீடு. அப்புறம் தொழு. குத்துப்புரையாக இருந்து இப்போது அந்த இடத்திலும் ஒரு சிறு அறை. அதற்கப்புறம் வியாபாரத்திற்குத் தோதுவாக சரக்குகளை அடுக்க ஒரு பெரிய அறை. இதை ஒட்டி ஒரு சந்தில் ஆற்றுத் தண்ணீர் குழாய். அதையும் தாண்டிப் போனால் வாடகைக்கு விடுகிற திட்டத்தோடு கட்டப்பட்ட மூன்று சிறு வீடுகள்.
நாங்கள் சின்னுவைப் பார்த்தது அந்தச் சந்தில்தான். மிகவும் துணுக்கமாக ஒரு சொட்டுத் தண்ணிர் கூட வீணாகி விடாத கவனத்துடன், சின்னு குனிந்து தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்தாள்.________________
இந்த வீடு பிடிக்கிற, ஊர் விட்டு வேறு ஊர் போகிற சங்கடங்கள் எல்லாம் கோடை காலங்களில்தானே நேர்கின்றன. கிட்டத்தட்ட ஆறுமணியான சமயத்திலும் வெயில் சுவரில் மடங்கி விழுந்து கொண்டிருக்க, சுருள் சுருளான முடிகளை ஒதுக்கிவிட்டுக் கொண்டு சின்னு, நிரம்பிய குடத்தை ஒரு வீசு வீசி இடுப்பில் வைத்துக் கொண்டு நிமிர்ந்த நேரத்தின் அழகைப் பார்த்தால்தான் தெரியும்.
முதலில் ஆர். கண்ணன் பணியனும் வேட்டியுமாக, அப்புறம் நான் மிக ஒழுங்காகத் தலை சீவி, வாடகைக்கு வீடு தேடுகிறவர்களுக்கு இருக்க வேண்டிய பவ்வியத்துடன். பின்னால் என் வீட்டம்மா.
பார்த்த உடனே சின்னு முகத்தில், இடுப்பில் வைத்த குடத்தோடு, பெரிய சிரிப்பு. ஆர். கண்ணன் அந்தச் சிரிப்பிடம், இது நம்ம அண்ணாச்சி என்று சொல்லிவிட்டுப் போனான் வாங்க என்று சொல்லும்போது என்னைத் தாண்டிவிட்டு, இருங்க, குடத்தை இறக்கிவிட்டு வந்திருதேன்' என்று சொல்லும்போதே என் மனைவியின் கையைப் பிடித்துவிட்டுப் போனாள்.
இப்படிக் கையைப் பிடித்தவுடனேயே என் மனைவிக்குக் குளிர்ந்துவிட்டது. அவளுக்கும் இப்படித்தான். பேசினால் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். மிகவும் என்னிடம் கோபப்பட்ட சமயத்தில் கூட என் இரண்டு கைகளையும் கூப்பினது போலத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு சொல்லுங்க சொல்லுங்க என்று உலுக்கின ஞாபகம்.
புத்தம் புதிதாகச் சிமெட்டி வாசனை, மரவாசனை, கண்ணாம்பு வாசனை, ஹோமம் நடத்தின புகைத்தடம். அலமாரியில் சார்த்தின பிள்ளையார் படம், வெங்கடாசலபதி படம் என்று சாவிக்கு உடனே திறக்காத பூட்டும், தச்சு ஆசாரியின் மூச்சுப்பட்ட வெப்ப்ம் தணியாத ஜன்னல் கதவுமாக இருந்தது வீடு. -
மனிதர்கள் பிடித்த பிறகு இடம் , வசதி, வாடகையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் பெரிதாகத் தெரியவா செய்யும். ஆர்.கண்ணனும் நானும் ஆறாம் வகுப்பிலிருந்து பேசத் தொடங்கினோம். பெண்கள் என்ன அப்படி ஒரே இடத்தில் நின்று விடுகிறார்களா? சின்னுவும், என் வீட்டுக்காரியும் இரண்டாவது நிமிஷம் அக்கா, தங்கை மாதிரி ஆகிவிட்டார்கள். காப்பி போடுகிறேன் என்று சின்னு கிளம்ப, வேண்டாம் இப்போதுதான் குடித்தோம் என்று இவள் மறுக்க, நீங்க குடிக்காவிட்டாலும் அண்ணாச்சி குடிப்பாங்க என்று சின்னு என்னைப் பார்க்க, அதெந்த________________
அண்ணாச்சி மானத்லே இருந்து குதிச்ச அண்ணாச்சி' என்று அடுக்களைக்குள் போய் காப்பிப்பொடி டப்பாவை இவள் பிடுங்க -
காப்பி சாப்பிட மாட்டோம் என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்புகிற அளவுக்கு அன்றைக்கு நேரமாகிவிட்டது. சரியான தளத்தில் இறங்கி, சரியான முகங்களும் தென்பட்டுவிட்டதெனில் சம்பிரதாயங்களும், ஊடு திரைகளும், சல்லாத் துணிகளும், முகமூடிகளும் எப்போது கழன்று எங்கே போய் விடுகின்றன என்பது தெரிவதில்லை. இப்படிப் போய் நிற்கிற இடம் சட்டென்று தென்படுவதில்லையே தவிர, இதே போன்று அங்கங்கே எவ்வளவோ இருக்கத்தானே செய்கின்றன. நெற்றியின் மத்தியிலும், கண்களின் ஒரத்திலும் கன்னங்களிலும் விழுந்து கிடக்கிற சுழிப்புகளையெல்லாம் நீவி நீவி அப்புறப்படுத்தி மலர வைக்கிற முகங்களே எதிர்ப்படுவதில்லை என்று எப்படிச் சொல்லிவிட முடியும்.
சின்னுவுக்கு அப்படியொரு முகம் இருந்தது. அப்படி மெத்தென்று நீவி விடும் விரல்கள் இருந்தன. சின்னுவின் நெற்றிப் பொட்டு, சின்னுவின் காது ஜிமிக்கி, சின்னு உட்கழுத்தையொட்டி அணிந்திருக்கும் அட்டிகை போன்ற ஒரு நகை. அவள் உடுத்தும் சேலைகள் எல்லாம் சின்னுவிடம் இருக்கும் அடிப்படையான அந்த பிரபையைத் தூண்டிக் கொண்டிருக்கவே உதவின. ஒரு பெரிய வெண்கலத்தில் வார்க்கப்பட்ட அகல் விளக்கை ஏற்றிவிட்டு வாடாமல் பார்த்து ரசிப்பது போல ஆர்.கண்ணன் நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றயது.
அப்பாவுக்குப் பிறகு அப்பா நடத்தின கடையை அதே விமரிசையோடு ஆர்.கண்ணன்தான் நடத்திக் கொண்டு வருகிறான். வரிசையாக நாலைந்து தம்பிகள், மூன்று தங்கைகள், அவர்களின் கல்யாணம் காட்சி, கொஞ்சம் அரசியல் பிரபலம் என்று தலை நரைத்துப் போயிருந்தது.
'முதலாளிக்கு ஒரு முடி நரைக்கலையே' என்று ஆர். கண்ணன் என்னைப் பார்த்துச் சொன்னான். 'முதலாளி கவனிச்சுக்கிடுங்க" என்று அப்புறம் சொல்ல ஆரம்பித்தான். ஒருவேளை ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறவர்கள், என்னைப் போன்ற மாதச்சம்பளக்காரர்களைப் பார்த்து ஒருவிதக்குத்தலும், நக்கலுமாகச் சொல்கிற வழக்கம் இருக்கலாம். நான் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. சின்னுவை மத்தியில் வைத்துக்கொண்டு எதையுமே தப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.________________
சில சமயம் பார்த்துக்கொண்டு நிற்க மாத்திரம்தான் முடிகிறது. ஆபிசிலிருந்து திரும்பும்போது போகும்போது, ஒரு நோட்டுப் புத்தகமோ, மாத்திரையோ, இங்க் பாட்டிலோ வாங்கச் செல்லும்போது நடைபாதையில் நின்றுகொண்டு எத்தனை ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாயிற்று. காய்கறிப் பையையும், இலைக் கட்டையும் உள்ளே கொண்டு வந்து வைத்த கையோடு எவ்வளவு சனம், எவ்வளவு கூட்டம், ரதவீதி அடைச்சுப் போகுதே என்று உட்கார்ந்த தினகரியின் அம்மா சொன்னதும் அப்படி பார்த்துக்கொண்டு நின்றதைத்தானே. 'அம்மி கொத்துகிறதோய். ஆட்டுரல் கொத்துகிறதோய்...' என்று தெருத் தெருவாக, வெயிலோடு வெயிலாக இந்தத் தள்ளாமையிலும், வேர்வை ஒழுக சாக்குப் பையில் சுற்றின உளியும், சுத்தியலுமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இப்படியே அவ்வளவு சைக்கிளும், அவ்வளவு கொடியும், அவ்வளவு கோஷமும் தாண்டிப்போகிறவரை நின்றாரே அவராலும் பார்த்துக் கொண்டுதானே நிற்க முடிந்தது.
ஆர்.கண்ணன் குடும்பத்துக்குள் சொத்துக்குத் தகராறோ மனஸ்தாபமோ வந்து வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வீம்புக்கு கடை போட்டு, வெளிச்சமும், விஸ்தாரமுமாக அலங்கரித்ததில் ஏகப்பட்டது செலவாகி, இங்கே அங்கே வாங்கினதைத் திருப்பிக் கொடுக்கிற அளவுக்கு அப்படி வியாபாரம் இல்லாமல் போய் தவங்கிக்கொண்டு இருந்தபோது எங்களால் என்ன செய்துவிட முடிந்தது.
ஆனாலும் ஆர்.கண்ணன் நின்ற இடம் உயரம்தான். தொண்டர் சன்னதியில் ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டு வந்தபோது, புதுக்கடையில் உட்கார்ந்திருந்தவன் எங்களைப் பார்த்ததும் இறங்கி வந்தான். அண்ணாச்சி என்றான். மதினி என்றான். ஏட்டி என்ன கல்யாணவீடா,பட்டுப் பாவாடையில் அசத்துதியே என்று தினகரின் கன்னத்தை நிமிண்டினான். இன்னும் கொஞ்சம் தரைத்திருந்தது.
கன்னம் வாடியிருந்தது புதிதாக நெற்றியில் அகலக் குங்குமப் பொட்டு வந்திருந்தது. கண்களில் ஒரு திகைப்பு சதா இருந்தது. வீடு ரொம்பக் கிட்டத்தில்தான் இருக்கு. இவ்வளவு தூரம் வந்த பிறகு அண்ணாச்சி வீட்டுக்கு வராமல் போகக்கூடாது. சின்னு ஆட்களேயில்லாமல் தவிச்சுப்போய்க்கிடக்கிறாள் என்று கடைப் பையனைக் கூடவே அனுப்பினான். தட்டமுடியவில்லை.
டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு________________
பள்ளிவாசல் தாண்டி ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் 'சை.சை என்று மூக்கைப் பிடித்துக் கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக் காரிகளையும், வயசாளிகளையும் தினகரி பார்த்துக் கொண்டே வந்தது. குடை மாதிரி ஒரு மாமரத்தின் கீழ் ஏகப்பட்ட பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மரத்தின் உச்சியில் பச்சைக் கொடி கட்டின கம்பு ஒரு பக்கம் சாய்ந்து அசைந்தது. அதற்குமேல் வானத்தில், வாய்க்காலுக்கு மறுகரையில் உள்ள கட்டடத்திலிருந்து இரண்டு மூன்று பேர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். துல்லியமான ஆகாயத்தில் இவ்வளவு வெயிலுக்கும் மத்தியில் அந்த இரண்டு பட்டங்களும் மிக லேசான சலனங்களுடன் பறந்து கொண்டிருந்தவிதம் அப்படியே மனதை ஏதோ செய்தது.
சின்னுவும் மனதை ஏதோ செய்கிறபடிக்கே இருந்தாள். தன்னுடைய பெண்ணை தலைக்குக் குளிப்பாட்டி விட்டு ஜட்டியோடு அதை நிற்க வைத்து தலையைச் சிக்கல் எடுத்து வாரிக்கொண்டிருந்தாள். எட்டு ஒன்பது வயதுதான் என்றாலும் உந்தியும் உடம்பும் மறையாமல் ஈரம் கோர்த்துத் தொங்குகிற நீண்ட தலைமுடியுடன் அது மாந்தளிர் மாதிரி மினுமினுவென நின்றுகொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் சின்னு வாங்க எனறாள். மளுக்கென்று கண் நிறைந்து நீர் கட்டி சின்னுவின் பார்வை மிதந்தது. அந்தச் சுருட்டை முடி, ஜிமிக்கி, மூக்குத்தி எல்லாம் இருந்தாலும் ஏதோ இல்லாமலிருந்தது. முக்கியமாக சின்னு என்னிடம் முகம் பார்த்து பேசாதது போலிருந்தது. நகர்ந்து நின்று கொண்டதுபோலிருந்தது. சின்னுவின் பெண் நேர்த்தியாக ஒரு கவுன் மாட்டிக்கொண்டு என்னிடம் வந்து தண்ணீர் குடிக்கக் கொடுத்தது. அவளிடம் மட்டும் பேசிக்கொண்டு இருங்கள் என்பது போல் என்னையும், மகளையும் மட்டும் விட்டுவிட்டு சின்னு உள்ளே போய்விட்டாள். என் மனைவி, என் மகள் எல்லோரும் சின்னுவுடன் பேசிக்கொண்டிருக்க நான் மட்டும் நைலான் வயர் பின்னிய அந்த இரும்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சின்னுவின் மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஒரு சிறுபெண் நம்மிடம் எவ்வளவு நேரம் பேசிவிட முடியும். சற்று நேரத்தில் அது உள்ளே போய்விட்டது. இதற்குள் வீட்டைஅடையாளம் காட்டிக் கொண்டு வந்து விட்ட கடைப் பையன், சைக்கிளைக் கொண்டு வந்து நிறுத்திப் பொட்டலம், பொட்டலமாக எடுத்துக்கொண்டு உள்ளே போனான். மறுபடியும் ஒரு எவர்சில்வர் தூக்கில் டீ வாங்கிக்கொண்டு வந்தான்.
*******
இந்தப் பொட்டலம், இந்த டீ, இந்தக் கடைப்பையன் உபசாரம் எல்லாம் அதிகப்படியாகப் பட்டது. நான் விழுந்துவிடவில்லை என்று ஆர்.கண்ணன் எங்களிடம் ருசுப்பிக்க முயற்சித்தது போலிருந்தது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ருசுப்பிப்பதற்கும், நிரூபித்துக் கொள்வதற்கும் எந்த அவசியமும் இல்லை. ஒரு கட்டத்தில் இந்த ருசுப்பித்தலையும் நிரூபணத்தையும் மீறி எல்லாம் புரியக் கூடிய எளிமையுடனேயே இருக்கின்றன. புரிந்த பிறகு புரியாதது போல் நடந்து கொள்வதற்கு யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. கெட்டிக்காரத்தனத்திற்கு ஆர்.கண்ணனின் வியாபாரத்தில் வேண்டுமானால் இடம் இருக்கலாம். இங்கே இந்த வீட்டுக் கூடத்தில் சின்னுவும், குழந்தையும் நாங்களுமாக இருக்கையில் அதற்கு எந்த இடமும் இல்லை.
துக்கமடைந்தது போல் ஒரு மனநிலை கூடி விட்டது. சின்னுவின் வீட்டு வாசலில் ஒரு மூலையில் கிடந்த முட்டைத் தோட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு உடைந்த முட்டைத் தோட்டில் ஆயுள் முழுவதும் பார்ப்பதற்கும், யோசிப்பதற்கும் உண்மையிருப்பது போலிருந்தது. ஒரு சின்னஞ்சிறு பாம்பு அரணை தன் ஆரஞ்சுவாலுடன் சுவர் ஒரமாய் இருக்கிற பொத்துகளில் புகுந்து விடுவது போல் முகத்தை வைத்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு தபால்காரர் அந்த வழியாகப் போவது போலக் கற்பனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. தினசரி வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத புலிகளும் யானையும் எப்படி வருகின்றன என்பது தெரியாததுபோல வரிசை வரிசையான டாங்கிகளும், பீரங்கி வண்டிகளும் உறுமிப் பெரிய பெரிய கட்டடங்கள் தங்களுடைய நூற்றாண்டுக் கட்டுமானங்களைப் பெயர்த்துக்கொண்டு கீழே விழ, பெண்களும் குழந்தைகளும் என் பக்கமாக அலறியடித்துக் கொண்டு வருகிற வீதியில் கிடக்கும் ஆண்களின் காலணி ஒன்றில் அப்பியிருக்கிற ரத்தம் கண்டு பதறுகிற காட்சிகள் மனதில் உருவாக என்ன காரணம் என்பது தெரியாதது போல, இந்தச் சமயத்தில் தபால்காரரின் ஞாபகத்தையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த கடலின் அடியில் வளர்ந்து மண்டிக்கிடக்கிற நீர்த்தாவரங்களின் நாடாக்கள் போன்ற பச்சை இலைகள் அசைவதாகவும், நீரின் வெவ்வேறு அடர்த்திகளைத் தாண்டிக் கீறிக் கொண்டு உள் இறங்கும் உச்சிச் சூரியனின் ரேகைகளைப் பிடித்து விடுவது போல இந்த நீர்த்தாவரங்களின் இலைக் கீற்றுகள் அசைந்தசைந்து மேற்செல்வது போலவும் கற்பனை செய்து கொள்ள வாழ்க்கை எப்படி இடம் அளிக்கிறது. நான் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில்.________________
நேரம் ஆகிவிட்டது. போகலாமா என்று தினகரியுடன் இவள் வந்தபோது சின்னுவின் முகமும், முழு உடம்பும் மறைந்திருந்தது. எனக்குச் சின்னுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு பார்க்கவேண்டும். பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. மணிக்கட்டுக்கு மேலுள்ள உள்ளங்கைப் பகுதியில் கண்களைக் கன்னம் அதுங்கத் துடைத்துக் கொண்டு சின்னு முகத்தை நிமிர்த்தும்போது கண்ணாடி வளையல் சத்தம் கேட்டது. ஒரு நைந்த ஒலை விசிறி ஒன்று பின்னால் செருகப் பட்டிருக்கிற முகம் பார்க்கும் கண்ணாடியில்,சின்னுவின் தலையின் பின்பாகமும், முதுகும் தெரிந்தது.
'என்ன அண்ணாச்சி உங்களத் தனியா விட்டுட்டு நாங்க உள்ள போயிட்டோமோ என்று கேட்டுக்கொண்டே சின்னு சிரித்தாள். எது சிரிப்பு எது அழுகை என்று தெரிந்து கொள்ள முடியாத வயதா நமக்கு. எல்லாம் தெரிந்தது. சின்னு சொல்லச் சொல்ல இவளும் கையைப் பிடித்துக் கொண்டு அழுதிருப்பாள் போல. இவளுடைய அசைவுகளிலும் ஈரம் இருந்தது. அழுகை இருந்தது. இதற்கு முந்தின வினாடிவரை அழுதுவிட்டு, இந்த வினாடி சிரிக்கிற சிரிப்பு இருந்தது. தீவிரமான சோகத்துக்கும், உண்மையான பிரியத்திற்கும் இடையிலான அடர்த்தியினூடே வனங்களில் வைர ஊசியாக இறங்குகிற சூரியக்கற்றை போன்ற ஒரு தாங்க முடியாத பிரகாசம் சின்னுவின் முகத்தில் இருந்தது. சின்னுவின் மகளோ, சின்னுவின் வீட்டில் முன்பு இருந்தவர்களோ, சுவர்களில் எழுதியிருந்த ஆப்பிள் என்ற கோணல் மாணலான ஆங்கில எழுத்துக்களில் கூட அது இருந்தது.
சின்னு என் கையைப் பற்றிக் கொள்ளட்டும். சின்னு நாற்காலியில் நான் இதோ உட்கார்ந்திருக்கிற வசத்திலேயே என் மடியில் மடங்கிப் படுத்து அழட்டும். சின்னு அப்படியே வேண்டுமானால்கூட உறங்கட்டும்.
இப்படியெல்லாம் தோன்றியது. ஆனாலும் தோன்றியவாறு எல்லாம் நிகழ்ந்தால்தான் வாழ்க்கையின் மீது மரியாதை போய்விடுமே. நாம் பாம்புப் பிடாரன் மகுடி ஊத மாட்டானா என்று நினைததால் அது ஐஸ்காரன்தடதடவென்று தட்டுவதையும், ஹாரன் அடிப்பதையும் கேட்கச் செய்யும், 5ம் நம்பர் பஸ் வராதா என்று நினைத்தால் 11ம் நம்பர் பஸ்ஸை வரிசையாகக் கொண்டு வந்து. நிறுத்தும். உத்தரக் கட்டையில் குருவி குஞ்சு பொரித்துச் சத்தம் போடாதா என்றால் மின் விசிறியில் அடிபட்டு மூலையில் விழும்.________________
நுட்பத்தின் இடத்தில் அற்பம் போய் உட்கார்ந்து கொள்கிறதும் மிக உன்னதம் என்று நினைத்துப் போற்றுகிற கணத்தை உப்புப் பெறாத காரியத்திற்காக விட்டுக்கொடுக்க நேர்வதும் எல்லாம்தான் சராசரியாகிவிட்டதே. இதற்கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு, ஜனசந்தடிக்கும். நெரிசல்களுக்கும் இடையே தன் வழியை உண்டாக்கிக்கொண்டு ஏற ஏற கல்லும் மண்ணுமாகச் சரிகிற ஏற்றங்களில் புதர்களைப் பற்றியும், நெஞ்சும் அடிவயிறும் சிராய்க்கச் அப்புறப்படுத்திவிட்டு, நெருப்பும் பந்தமும் கையிலேந்தி, ஹோவெனக் கூச்சலிட்டு அப்புறம் சென்று, மக்கிக் கிடக்கிற எலும்புகளைக் காலால் புறந்தள்ளிக் கொண்டு அதற்கும் அப்பால் உறுத்தாத வெளிச்சத்தில், இதமான மஞ்சும் மேகமுமான தளத்தில் சூரியனின் கீழ் மலர்ந்த பூவைத் தொடுபவர்களின் குறைந்த எண்ணிக்கையும் ஒரு பக்கம் இல்லாமலில்லை. சின்னுவும் அப்படியொரு பூவாகத்தான் இருக்கவேண்டும்.
இந்தப் பூவோ, இந்தத் துக்கமோ, இந்த ஞாபகமோ எதுவோ சின்னுவை இப்படிப் பார்த்துவிட்டுப் போன இரவில் அப்படியே கரைத்துக் கொள்வது போல, மீண்டும் மீண்டும் ஏதோ மலைச்சரிவுகளில் ஏறிச் சறுக்குவதைப் போல, ரகசியங்களின் வெப்பமும், தீராத வாயில் நாக்குலர்ந்து தவித்து பாறைகளில் கசிந்த ஈரத்தில் முகம் ஒற்றி அப்படியே நழுவி விழுந்து இறந்தவர்களின் மூச்சின் திக்குமுக்காடல்களும் நிறைந்த குகைகளில் நுழைந்து அப்புறம் செல்ல முயல்வதுபோல, பூவும் புடவையும் கசங்கக் கசங்க 'சாமி வந்துட்டுதா என்று பல் கிட்டின குரல் காதடியில் கேட்கக் கேட்க, வியர்வை அப்பிக் கிடந்தேன். நிசி அறியாமல் நட்சத்திரம் அறியாமல ஒரு நீலக்கடலின் அலை ஒதுங்கினது போல் அவள் கிடக்க, தினகரி அயர்ந்து கிடக்க, நான் மட்டும் தூக்கம் வராமல் ஜன்னல் பக்கமாகவே நின்றுகொண்டிருந்தேன்.
ஆர்.கண்ணன் இறந்து போனது ரொம்பப் பிந்தித்தான் தெரியும். 'இன்று வெயில் ஜாஸ்தி என்பது போல ஒரு அன்றாடத் தகவலாக இதை என்னிடம் தெரிவித்தார்கள். நான் இந்த ஊரைவிட்டுப் போய் இரண்டு, மூன்று வருஷம் ஆகிவிட்டது என்றாலும் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள். எனக்குத் தெரிந்திருக்கும். என்று நினைத்துக்கொண்டே என்னிடம் தெரிவிக்கப்படாத, நான் அறியாத, நான் மிகக் கடைசியில் அறிந்து கொண்ட விஷயங்கள் நிறைய. அதிலும் முக்கியமாக மரணங்கள். நான் நெருக்கமாக உணர்ந்தவர்களின் திடீர் திடீர் என்ற மறைவுகள்.________________
நுட்பத்தின் இடத்தில் அற்பம் போய் உட்கார்ந்து கொள்கிறதும் மிக உன்னதம் என்று நினைத்துப் போற்றுகிற கணத்தை உப்புப் பெறாத காரியத்திற்காக விட்டுக்கொடுக்க நேர்வதும் எல்லாம்தான் சராசரியாகிவிட்டதே. இதற்கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு, ஜனசந்தடிக்கும். நெரிசல்களுக்கும் இடையே தன் வழியை உண்டாக்கிக்கொண்டு ஏற ஏற கல்லும் மண்ணுமாகச் சரிகிற ஏற்றங்களில் புதர்களைப் பற்றியும், நெஞ்சும் அடிவயிறும் சிராய்க்கச் சிராய்க்கவும் மேலேறி, குகைகளை மூடின பாறையை அப்புறப்படுத்திவிட்டு, நெருப்பும் பந்தமும் கையிலேந்தி, ஹோவெனக் கூச்சலிட்டு அப்புறம் சென்று, மக்கிக் கிடக்கிற எலும்புகளைக் காலால் புறந்தள்ளிக் கொண்டு அதற்கும் அப்பால் உறுத்தாத வெளிச்சத்தில், இதமான மஞ்சும் மேகமுமான தளத்தில் சூரியனின் கீழ் மலர்ந்த பூவைத் தொடுபவர்களின் குறைந்த எண்ணிக்கையும் ஒரு பக்கம் இல்லாமலில்லை. சின்னுவும் அப்படியொரு பூவாகத்தான் இருக்கவேண்டும்.
இந்தப் பூவோ, இந்தத் துக்கமோ, இந்த ஞாபகமோ எதுவோ சின்னுவை இப்படிப் பார்த்துவிட்டுப் போன இரவில் அப்படியே கரைத்துக் கொள்வது போல, மீண்டும் மீண்டும் ஏதோ மலைச்சரிவுகளில் ஏறிச் சறுக்குவதைப் போல, ரகசியங்களின் வெப்பமும், தீராத வாயில் நாக்குலர்ந்து தவித்து பாறைகளில் கசிந்த ஈரத்தில் முகம் ஒற்றி அப்படியே நழுவி விழுந்து இறந்தவர்களின் மூச்சின் திக்குமுக்காடல்களும் நிறைந்த குகைகளில் நுழைந்து அப்புறம் செல்ல முயல்வதுபோல, பூவும் புடவையும் கசங்கக் கசங்க 'சாமி வந்துட்டுதா என்று பல் கிட்டின குரல் காதடியில் கேட்கக் கேட்க, வியர்வை அப்பிக் கிடந்தேன். நிசி அறியாமல் நட்சத்திரம் அறியாமல ஒரு நீலக்கடலின் அலை ஒதுங்கினது போல் அவள் கிடக்க, தினகரி அயர்ந்து கிடக்க, நான் மட்டும் தூக்கம் வராமல் ஜன்னல் பக்கமாகவே நின்றுகொண்டிருந்தேன்.
ஆர்.கண்ணன் இறந்து போனது ரொம்பப் பிந்தித்தான் தெரியும். 'இன்று வெயில் ஜாஸ்தி என்பது போல ஒரு அன்றாடத் தகவலாக இதை என்னிடம் தெரிவித்தார்கள். நான் இந்த ஊரைவிட்டுப் போய் இரண்டு, மூன்று வருஷம் ஆகிவிட்டது என்றாலும் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள். எனக்குத் தெரிந்திருக்கும். என்று நினைத்துக்கொண்டே என்னிடம் தெரிவிக்கப்படாத, நான் அறியாத, நான் மிகக் கடைசியில் அறிந்து கொண்ட விஷயங்கள் நிறைய. அதிலும் முக்கியமாக மரணங்கள். நான் நெருக்கமாக உணர்ந்தவர்களின் திடீர் திடீர் என்ற மறைவுகள்.________________
பாப்பாவின் மறைவை ரொம்ப காலம் கழித்துத்தான் தெரிந்து கொண்டேன். பாப்பாவுக்கு முத்துராமனின் நடிப்பு என்றால் உயிர். 'வாழ்க்கைக் படகும், 'போலீஸ்காரன் மகளும் எத்தனை தடவை வந்தாலும் அத்தனை தடவை பார்த்திருப்பாள். மில்லு பெரியம்மா (மில்லில் வேலை பார்த்ததால் மில்லுப் பெரியம்மா, பேங்கில் வேலை பார்த்ததால் பேங்குத் தாத்தா) வீட்டு அவரைப் பந்தல் பக்கம் இருந்து, எங்கேயிருந்தாலும் ஓடுகிற தையல் மெஷினை அப்படியே நிறுத்திவிட்டு, தங்கச்சியுடன் வந்து அமர்ந்து பேசினபேச்சு எல்லாம் சட்டென்று பொய்யாய்ப் போனது. நான் காலேஜில் இரண்டாவது வருடம் வாசித்துக்கொண்டிருக்கையில்தான் மில்லுப் பெரியம்மா வீட்டுக்கு லீவில் அடிக்கடிப் போய்க் கொண்டிருந்தேன். பாப்பா அப்பா பல்லடத்திலிருந்து இங்கே உள்ள மில்லுக்கு மாறி வந்திருந்தார். தங்கச்சிக்கும் ரொம்ப நாளாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவோ இவளிடம் ஒரு பிரியம். இவளை வைத்து இவள் சினேகிதியான பாப்பாவிடம் ஒரு பிரியம். இதைத் தவிர வேறு எந்தக் கற்பனையுமில்லாது பொங்கல் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருந்த என்னிடம் மில்லுப்பெரியம்மை வீட்டுத் தங்கச்சிக்கு, அண்ணே நீ பாப்பாவைக் கட்டிக் கொள்கிறாயா என்று எப்படிக் கேட்கத் தோன்றிற்று என்று தெரியவில்லை.
அந்தக் கேள்வி எவ்வளவு நுட்பமானது ஆழம் நிரம்பியது என்று பாப்பாவின் மரணம் உண்டாக்கின.அலைக்கழிப்பில் இருந்து தெரிந்தது. அவளும் மருந்து குடித்துத்தான் செத்துப் போனாள். ஆர்.கண்ணனும் அப்படித்தான் துள்ளத் துடிக்கச் செத்திருக்கிறான். 'ஒரு பாவியும் எனக்குத் தகவல் சொல்லவில்லையே' என்றுதான் முதல் குரல்என்னிடமிருந்து வந்தது. இதில் என்ன சிரமம் எனில் என்னிடம் இந்தத் தகவலை சொன்னவர் அவருடைய தகவலில் அவரே லயித்ததுபோல் எப்படி ஆர். கண்ணனை டாக்ஸியில் தூக்கிப்போட்டுக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்குப் போனார்கள் என்பதையும், திருக்கிப் பிழிந்ததுபோல் அவன் எப்படிக் கிறங்கிக் கிடந்தான் என்பதையும் இவ்வளவும் செய்துவிட்டுக் கடைசி நேரத்தில் 'என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று ஆர்.கண்ணன் கதறியதையும், விடியக்காலம் மூன்று மூன்றரை மணிக்கு எல்லாம் முடிந்து போனதையும், அவனை இவனை சரிக்கட்டி முழு உடம்பாக வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்ட பாட்டையும் அவர் சொல்லிக்கொண்டே போனார்.
சில சிமயம் தான் இன்னாருடன் நெருக்கம் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாத நிறைய________________
துக்கத்திற்கு வந்த மாரியப்பனோ, மாடசாமியோ பேசுகிறமாதிரி இருந்தது என் குரல். எனக்கே நெகிழ்வாகவுமிருந்தது. இப்படிப் பேசுவது எனக்கே ரொம்பப் பிடித்தது. மேலும் மேலும் அப்படியே பேச முடிய வேண்டும். பேசிக் கடைசியில் சின்னுவின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட தெரிந்து கொண்டேன்.
'அதுக்கு இந்த வெயில்லே நீங்க ரொம்ப நேரம் அலைந்து விடக்கூட அவசியமில்லாமல், உங்களுக்குப் பக்கத்துத் தெருவிலேயேதான் இருக்கா. நடை மிச்சம்'
'தனியாகவா இருக்காங்க...' 'பத்திரமாகவே இருக்கா'
தனியாக இருப்பதற்கும், பத்திரமாக இருப்பதற்கும் என்ன வந்தது. ஒன்றைக் கேட்டால் ஒன்றைச் சொல்லவும், அப்படிச் சொன்ன ஒன்றிலிருந்து இன்னொன்றை யூகித்துக் கொள்ள இடம் கொடுப்பதுமாகவே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சின்னுவைப் பற்றிக் கேட்டால் சின்னுவைப் பற்றிச் சொல்லிவிட்டால் என்ன?
'அப்ப. வரட்டுமா எனறு சொல்லிக்கொண்டே போனார். ஆர்.கண்ணன் இறந்த விஷயமும், சின்னு எங்கோ இருக்கிறாள் என்பதும் இப்படி வெற்றிலைக் காவியும், தங்கப்பல் சிரிப்புமாக சொல்லிக் கொண்டு போகிற விஷயமா? சில பேர் அப்படியே இருக்கிறார்கள். எதிராளியைப் பற்றிக் கவலைப்படாமல், தான் உண்டு தன் காரியம் உண்டு என்றே இருக்கிறார்கள். அப்படி இருக்கவே படைக்கப்பட்டது போல அவர்கள் நினைத்துக் கொள்வது இன்னொரு துக்கம்.
இப்படித் துக்கத்தின் மேல் துக்கமாகச் சம்பாதித்துக்கொண்டு வீட்டுக்குப்போய், சாப்பாட்டுத் தட்டுமுன் உட்கார்வதற்குள் அவளிடம் சொல்ல ஆரம்பித்தேன். சிப்பலில் இருந்து வெள்ளைக் கரண்டியால் சாதத்தைப் பொலபொலவென்று குனிந்து தள்ளுகிற நேரத்தில், சற்று ஆவியடிக்கிற அந்த மனத்தின் ஆரம்பத்தோடு சொல்ல ஆரம்பிக்கிற பழக்கம் அவளிடமிருந்துதான் எனக்கே வந்தது.
ஆர்.கண்ணன் இறந்து போனதைச் சொன்னேன். என்ன இப்பிடிச் சொல்லுதீங்க. எனக்கு வயிற்றைக் கலக்குதே' என்று அப்படியே________________
சுவர் ஒரமாக உட்கார்ந்தாள். சேலைத் தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டாள். கரகரவென்று அழ ஆரம்பித்திருந்தாள். கீற்றுப் போன்ற அவளுடைய கண்கள் என்னைப் பார்த்தபடியேவும் அழுதபடியேவும் இருந்தன. நான் சொல்லிக்கொண்டே வரவர கூடுதலும் குறைவுமாக அவள் குலுங்கிக்கொண்டிருந்தாள்.
'இப்படிப் பண்ணிவிட்டுப் போவாரா அம்மா அந்தப் பாவி' என்று இடையில் சொன்னாள்.
தாங்க முடியலையே' என்றாள். 'குடலைத் திருகுகிறதே என்றாள்.
‘எப்படி இருப்பா அவ. லட்சுமின்னா லட்சுமியாக அல்லவா இருப்பா என்றாள். ரீனிவாச லட்சுமி என்ற சின்னு எவ்வளவு தூரத்துக்கு அவளுக்குச் சிநேகிதியாக இருந்திருக்கிறாள் என்பதை வெளிப்படுத்துவதுபோல் சிறுசிறு சொற்களாகச் சொன்னாள்.
எங்கன கண்டாலும் ஓடிவந்து கையை பிடித்துக்கொள்வாளே என்றாள்.
'கண் மையும் கண்ணுமா அவ உருட்டி உருட்டிப் பேசுகிறதைப் பார்த்துக்கொண்டே நிற்கலாமே என்றாள்.
'மூத்தப் பொண்னு அப்படியே அவளைப் புட்டு வச்ச மாதிரி இருக்குமே என்றாள்.
நெளிவு நெளிவா ஒதுக்க ஒதுக்க முகத்துல வந்து விழுமே முடி ஒரு அழகு. அதை அவ சீவிக்கிறது ஒரு அழகு என்றாள். நானும் இத்தனையையும் மனதில் கொண்டிருப்பேன். எனினும், இவளைப் போல அப்படி அப்படியே நான் சொல்லிவிட முடியவில்லை. சந்தோஷத்தையும், துக்கத்தையும் அந்த சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் மத்தியிலேயே சிறுசிறு வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட இவர்களால் எப்படி முடிகிறது. மிகச் சுருக்கமான கோடுகளில் மிக நேர்த்தியான சித்திரங்களை வரைந்து விடுகிற சாத்தியம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது.
மிக உன்னதமான ஒவியத்தின் மீதான அத்தனை கற்பனைகளும், இன்னின்ன இடத்தில் இன்னின்ன வர்ணங்களும் என்று சதா மனத்தில் தீர்மானித்துக்கொண்டு, தீர்மானங்களின் மேல் தீர்மானங்கள் எடுத்து சதா அவற்றைப் புதுப்பித்துக் கொண்டு, ஆனால் கடைசி வரை வெற்றுத் திரைச் சீலைக்கு முன் திகைத்து நிற்பதைவிட இது சரியான காரியம் என்று படுகிறது.
________________
சின்னு அடுத்த தெருவில்தான் இருக்கிறாள் என்றதும் சாயந்திரமே பார்த்துவிடலாம் என்றாள். தினகரியும் வரட்டும், வந்த பிறகு போகலாம் என்றாள். தினகரியைப் பார்க்க சின்னு பிரியப் படுவாளாம். தினகரியும் 'அத்தை எவ்வளவு அழகா இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளாம்.
சாப்பிட்ட மாதிரித் தெரியவில்லை. என் தலையணையில் ஒண்டித் தலை வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். பேசிக் கொண்டிருந்தாள். நான்தான் சின்னு போலவும், சின்னுவின் மகள் போலவும் என் தலையை வருடிக்கொண்டேயிருந்தாள். காதோரம் ஒற்றிக்கொண்டாள். முதுகு புரட்டித் திரும்பி அனைத்துக் கொண்டாள். விரல் புதைகிற இறுக்கம். என் தோள்பட்டை இறுகியது. முதுகுச் சதை இறுகியது. பின்பக்கத்து சிகை இறுகியது. நான் தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன். நன்றாகத் துரங்கியிருந்தாள். தலையணையைப் பின்னுகிற கால் மாதிரி இடது கால் மட்டும் என் வேட்டியின் மேல் கரண்டைக் கால் கரைப் பக்கம் கிடந்தது.
எங்கள் தெரு இப்படியொரு கோடு போட்டமாதிரி. இதன் இடுப்பிலேயிருந்து பிரிகிறது இன்னொரு முடுக்கு. அது போய்ச் சேர்கிற தெருதான் சின்னு இருக்கிறதாகச் சொல்லப்படுகிற தெரு. எங்கள் வீட்டு நடையிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்ல ஐந்து நிமிடம் ஆகும். ஆனால் பந்தயத்தில் ஒடுகிற மாதிரியும், நடப்பது மாதிரியும் தெருவில் நடக்க முடியுமா? தெரு எவ்வளவு அருமையான விஷயம். அதுவும் என்னைப்போல மூன்று வருஷம், நான்கு வருஷம் வெளியூர் போய்விட்டு லீவில் வருபவனுக்கு தெருவில் நடப்பது புதையல் கிடைப்பது மாதிரியல்லவா? தசராச்சப்பரம் வரும்போது வீட்டுக்கு வீடு நின்று. ஒவ்வொரு காம்பெளண்டிற்குள் குடியிருக்கிற அத்தனை பேரும் வெளியே வந்து சாமி கும்பிடும் வரை நின்று நின்று, நிற்க நிற்க மேலும் அழகாகி நகர்வது போல அல்லவா அது.
நான், என் மனைவி, பெண் மூவருமே அந்தச் சப்பரத்துக்கு நிகழ்வது மாதிரி ஒவ்வொருவர் நின்று நின்று பேசப் பேச அழகாகிக் கொண்டே போனோம். பாட்டையா வீட்டு ஆச்சியைத் தாண்டி இந்தத் தெருவில் யாராவது போய்விட முடியுமா? ஊசித்தட்டான் மாதிரித்தான் உடம்பு. அவள் இருக்கிற வீட்டுக் கதவுகூட அனேகமாக ஒஞ்சரித்துச்சாத்தின மாதிரியிருக்கும். எங்கே பார்க்கப் போகிறாள் என்று போய்விட முடியாது. அய்யா என்பதை அவள்
________________
'யய்யா' என்றுதான் சொல்வாள்.'யய்யா... நீ எப்ப வந்த' என்று கரெக்டாக வந்து கையைப் பிடித்துக்கொள்வாள். இதில் என்ன கூச்சம் என்றால் அப்படித் தெருவில் நின்ற இடத்திலேயே கன்னத்தைத் தொட்டு, தொட்ட இடத்திலேயே முத்திக் கொள்வாள். பேத்தி செளக்கியமா இருக்கியா என்று என் மனைவியைக் கட்டி முத்தம் கொடுத்துவிடுவாள். கூச்சப்பட்டு ஓடுகிற தினகரியை நீ எங்கே ஒடுதே' என்று இழுத்துக் கொள்வாள். அப்படியேதான் இன்றைக்கும் நடந்தது. எழுபதா எண்பதா என்று தெரியவில்லை. சின்ன வயதில் பார்த்த மாதிரியே இருக்கிறாள். ஈயமோ வெள்ளியோ மூக்குக் கண்ணாடியிலும் மாற்றமேயில்லை. அப்படியே இருக்கிறது. குரல் இங்கே இருமினால் சந்திப் பிள்ளையார் கோவிலுக்குக் கேட்கும். பொறாமை, புகைச்சல் எல்லாம் இருந்தால் குரல் கம்மியிருக்கும். தெரிந்தது உழைப்பும், பிரியமும்தான். தாத்தா இருந்த காலத்திலும் மூன்று வேளை சாப்பிட்டிருக்க மாட்டாள். இப்போது வருகிற தியாகி பென்ஷன் மட்டும் என்ன உடகார்த்தி வைத்தா பருப்பும் சோறும் போட்டுவிடப் போகிறது.
இப்படியே ஒவ்வொரு ஆளாகப் பேசிக்கொண்டே போனோம். சின்னுவின் வீட்டிற்குப் போவது ஒருபுறம் தள்ளிக்கொண்டே இருந்தாலும் அவளோடு இருக்கப்போகிற நேரத்தை இது குறைக்கிறது என்று நாங்கள் உணர்ந்து போவோமா... போவோமா என்று சமிக்ஞைகள் மூலம் விடைபெற்று நகர்ந்தாலும் இதுவும் மனதிற்குப் பிடித்தே இருந்தது. ஒருவர் ஒருவராக சுருதி சேர்த்து வைத்த முகத்தோடு எல்லோருமாகப் போய் சின்னுவின் முன்னால் உட்கார்வது பொருத்தமாகத்தான் இருக்கும். கிளிகள் பக்கவாட்டில் அப்படியே நகர்ந்து, ஒரு சிறு படபடப்பில் மேல் கிளைக்குப் போய், இங்கு திரும்பி, அங்கு திரும்பி ரொம்பவும் யோசனைக்குப் பிறகு ச்ே. கீச். என்று சத்தம் போட்டுக் கொண்டு எவ்வுமே அதுமாதிரியெல்லாம் நாங்கள் உணர்ந்தோம்.
எல்லோரும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவளிடம் பேசுகிறார்கள். 'கெட்டிக்காரியில்லா...' என்று தினகரியை இழுத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு பேரைச் சம்பாதிக்க எப்படி இவளுக்கு முடிந்தது. அடுக்களைக்கு வெளியே நடமாடின நேரம் போக, என்னுடன் எப்போதாவது வெளியே வந்த நேரம் போக எப்படி இவளுக்கு இவ்வளவு பேர் தெரியும். மார்க்கட் ஏலக்கார வீட்டு அம்மாள் சரி, சரஸ்வதி டீச்சர் சரி, இந்த ஆவுடையப்பனுக்கு என்னுடன் பேசுவதற்கென்ன. அவனை எத்தனை தடவை ஆர்மோனியம் வாசிக்கச் சொல்லிக்________________
கேட்டிருக்கிறேன். புல்புல்தாராவில் உன்னை அடிப்பதற்கு ஆளேயில்லை என்று சத்தியமே பண்ணியிருக்கிறேன். அவன் என்னடாவென்றால் வாங்க மதனி. எப்ப வந்தீங்க என்று அவளுடன் பேசுகிறான். எல்லாம் சந்தோஷமாகவே இருந்தது.
வெறும் ஜலதாரை வீச்சமும், சாக்கடை நெடியுமாக மட்டும் இருந்த இடம் சற்று மாறியிருப்பது தெரிந்தது. ஆனால் அற்புதமான சிறு வயது ஞாபகங்களாக நின்றுகொண்டிருந்த இடது பக்கத்துக் காரைச் சுவர்கள் அங்கங்கே இடிக்கப்பட்டு தொண்டு வாசல்கள் விடப்பட்டிருந்தன. வாதா மரங்களும், முருங்கை மரங்களும் ஒரு இனம் புரியாத கிளர்ச்சியூட்டிய பம்பளிமாஸ் மரமும் கூட சரஸ்வதி டீச்சர் வீட்டிலிருந்து வெட்டப்பட்டிருந்தன. வாடகை வீடுகளில் வாடகைக் குழாய்களில் வாடகை மனிதர்கள் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதோ இந்தத் தந்திக் கம்பத்திற்கு கீழ்தான் என்னுடைய சிறு வயதின் பெரும் புதிர்களில் ஒன்றாகப் பதிந்திருக்கிற அந்தக் காட்சி நிகழ்ந்தது. ஒரு வெள்ளை நாயும், கறுப்பில் புள்ளியிட்ட வெள்ளையாக இன்னொரு நாயும் எதிர்மாறாகப் பிணைந்து பிரிய முடியாமல் அப்படியே அசையாமல் நின்றன. மிக நல்ல வெயில் பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக, தெப்பத்துக்காக இருக்கலாம், லீவு விட்டவுடன் நான் என்கூடப் படிக்கிற இன்னொரு பையனுடன் அவனுடைய அப்பாவைத்திருக்கிற தையற்கடைக்குப் போய் - (முதன் முதலாக ரோஸ் மில்க் குடித்தது.அந்த அருமையான மனிதர் கையால்தான்) அவனை விட்டு விட்டு குறுக்குப் பாதையாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன்.
அந்த மத்தியானமே ஒரு திகிலும், திகிலுக்குட்பட்டு.வெளி வரும் நேரத்தின் சந்தோஷங்களுடனும் இருந்தது. அந்தத் தையற்கடையிலிருந்து புறப்படுகையில், ப்ரெண்டுடைய அப்பா கடையை விட்டு இறங்கி, ஒரு தெருவரை கூட்டிவந்து வெயிலாக இருக்கிறது இப்படிப் போ. சீக்கிரம் போய்விடலாம். போய்விடுவாயல்லவா என்று கேட்டார். மற்ற நேரமென்றால் என்னால் போய்விடமுடியாது என்று பட்டிருக்கும். அவர் சொன்ன விதம், என் தோளிலிருந்து இறங்கிய பைக்கட்டை மேலே ஏற்றிக்கொண்டு சிரித்த விதம், நெற்றி மத்தியில் வைத்திருந்த பொட்டு எல்லாம் சேர்ந்து போய்விடலாம் என்று தைரியம் கொடுத்துவிட்டன.________________
ஆரம்பத்திலேயே பச்சைக் கதவு போட்ட ஒரு அம்மன் கோவில் இருந்தது. கண்மலர் வெள்ளியில் சாத்தியிருந்தார்கள். அப்போது ரொம்பப் பயம் அந்த கண்களுக்கு. அப்படியே நேரே போனால் நிழலுக்கு ஒதுங்கியதுபோல இரண்டு கழுதைகள். அந்தத் தெரு ஒரு வாய்க்காலில் முடியும் என்று தெரியாது. வாய்க்காலில் பிடித்த வலையும் கையுமாக மேலே வந்து, சற்று அகலமாக இருக்கிற இடத்தில் வலையை உதறும்போது சேலைக்குக் கொசுவம் வைப்பது மாதிரி அதை அதே நேரத்தில் மடித்துக்கொண்டு, மறுபடி உதறிக்கொண்டு என்று ஒரு சீரான விதத்தில் செய்து கொண்டிருந்தார். என்னைப் பார்க்கவேயில்லை. வலையில், கீழே பொடிசு பொடிசாகத் துள்ளும் மீன்களை உதறும் வலையில் செருகித்துள்ளி அவரின் மறு உதறலில் விழுந்த மீனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிமிஷம் கூட வலையிலிருந்து ஈயக் குண்டுகள் மாதிரி எழுந்த ஒரு சப்தத்தினூடே அந்தக் குஞ்சு மீன்கள் வெயிலடித்த தரையில் துடிப்பது தெரிகிறது. கூட்டிஅள்ளினால் ஒரு குத்து இருக்காது. அள்ளிக் குடுவையில் போடுவதும் பெரிய சிரமமில்லை என்றாலும் அவர் அப்படித்தான் இருக்க முடிந்தது. அப்படியே சைடில் திரும்பி கோட்டை மாதிரி இருந்த வீட்டின் குளிர்ந்த நிழலுள்ள கல் பாவினதாழ்வாரங்களினூடே ரொம்பதுரம் நடந்தேன். ஒரு இடத்தில் குதிரை கட்டியிருந்தார்கள். குனிந்து புல்லைச் சாப்பிடுகிற குதிரை வண்டிக் குதிரைகளையே தேரடியில் பார்த்திருந்த எனக்கு அப்படியெல்லாம் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிற ஒரு குதிரையைச் சினிமாவில் வருகிறது போலப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. அதையும் தாண்டி இன்னொரு இடத்தில் நாலைந்து பெண்கள் கால்நீட்டி உட்கார்ந்து அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். புடைத்துக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி புடைப்பதை நிறுத்தி பக்கத்திலிருந்த சொம்பை அண்ணாந்து கடகடவென்று குடித்தாள். தண்ணீர் வழிந்து மேலெல்லாம் சிந்தி சேலை நனைந்தது. அந்தப் பச்சைச்சேலை நனைய நனைய கறுப்பாக மாறிய விதம் இன்னும் மறக்கவில்லை. அவள் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் யாரும் என்னைப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்ற அவசரத்துடன் அவளைத் தாண்டும்போது அவள் அண்ணாந்து குடிப்பதை நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டு என்னைப் பார்த்தாள். தண்ணீர் வேண்டுமா என்பது போல செம்பையும், கையையும் ஆட்டிச்சிரித்தாள். கன்னங்கரேர் என்ற அந்த முகத்திற்கு அந்தச் சிரிப்பு எவ்வளவு ஒட்டுதலாக இருந்தது. பயந்து செத்துக்கொண்டு இருக்கும்போது தண்ணிரா குடிக்க முடியும்.________________
ஒன்றுக்குத்தான் வந்தது. அடக்கிக் கொண்டே இந்த முடுக்கு வரை வந்தபோதுதான் இந்த நாய்கள் இரண்டும் நின்றன. அசையாமல் அவை நின்ற விதம் துக்கம் கொடுக்கும் ஞாபகமாகவே ரொம்ப நாட்கள் இருந்தன. என்ன, ஏது என்று விபரம் தெரிந்த பின்னும், இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்போதும்கூட அந்த இரண்டு நாய்களின் பார்வையிலிருந்த துக்கத்தை என்னால் அகற்றிவிட முடியவில்லை.
யாருடைய துக்கத்தை யார் அகற்றிவிட முடிகிறது. அப்படியெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். சின்னுவை இப்படி ஒடி ஒடி, இத்தனை ஆள்தாண்டிப் பார்க்கப் போகிறோம். இது சின்னுவின் துக்கத்தை அகற்றவா? எங்களுடைய துக்கத்தை அகற்றவா. அப்படியெல்லாம் பலசரக்குக் கடையில் மொத்த சாமான் வாங்கிவிட்டுக் கை நீட்டினால் கொடுக்கிற, முந்திரிப் பழம் மாதிரி, இரண்டு துண்டுக் கல்கண்டு மாதிரி எல்லாவற்றுக்கும் பிறகு நாங்கள் பார்த்துச் சரிபண்ணி விட முடியுமா? மூடி முழிப்பதற்குள் எவ்வளவு நிகழ்ந்துவிடுகிறது வாழ்க்கையில். தண்டோராப் போட்டது காதில் விழுந்து, மூட்டை முடிச்சை எடுத்துக்கொள்வதற்குள் தொட்டில் பிள்ளையை எடுத்துத் தோளில் போடுவதற்குள், வெள்ளம் அடித்துக்கொண்டு போகிற குடிசைகள் மாதிரி எவ்வளவு காணாமல் போய்விடுகின்றன விடிந்து பார்க்கும் போது. ஆர்.கண்ணன் காணாமல் போனது அப்படியில்லாமல் வேறு என்ன, வெள்ளத்துக்கு மத்தியில் தைப்பூச மண்டபத்தின் உச்சியில் நிற்கிற வெள்ளாட்டுக் குட்டி மாதிரி சின்னு இருப்பாள். சின்னுவின் மகள் இருக்கும்.
இதற்குள் மங்காயி அத்தை வீடு வந்து விட்டது. இந்த வீட்டைத் தாண்டினால் நேரே சின்னு வீட்டிக்குப் போய்விடலாம். ஆனால் மங்காயி அத்தையை எப்படிப் பார்க்காமல் போக அந்தப் பெரிய குடும்பத்தில் மட்டுமல்ல, அத்தனை பெரிய வீட்டில் இப்போது மங்காயி மட்டுமே இருக்கிறாள். மங்காயி அத்தைக்கும், அந்த வீட்டு மாமாவுக்கும் மாடுகள் இல்லாமல் தீராது. தொழுவில் பசு மாடுகள் குறைந்தது மூன்று எண்ணிக்கையாவது நிற்கும். இரண்டு கறந்து கொண்டிருக்கும். ஒன்று சினையாக இருக்கும். இதையெல்லாம் தவிர பருவத்துக்கு வருகிற மாதிரி லட்சணமான இரண்டு ஈற்றுக்கு முந்தின பசுங்கன்றுக்குட்டி ஒன்று வளர்ந்து கொண்டிருக்கும்.
வீட்டை வைத்துக் கொள்வது ஏறக்குறைய இருந்தாலும், தொழுவை வைத்துக்கொள்வதற்கு மங்காயி அத்தையிடமும்,________________
மாமாவிடமும் கற்றுக் கொள்ள வேண்டும். அது லச்சுமி இருக்கிற இடம் அல்லவா!' என்றுதான் அத்தை சொல்வாள். மாமாவும் அதையே சொல்வார். மனதாரச் சொல்கிற மாதிரி இருக்கும். சொல்கிறது போலவே மாமா இருந்தார். சுழி சுத்தம் பார்க்கத் தெரியும். மாட்டுவாகடம் தெரியும். ஒன்றுக்கு ரெண்டு புத்தகம் இருக்கிறது. வெற்றிலையில் இரண்டு மிளகாயை மாமா கையால் மடக்கி கொடுத்தால் அடுத்த வினாடி எருக்கல் எடுப்பது நிற்கும். யார் வீட்டுத்தொழுவுக்காவது மாமாவந்து சினைமாட்டைப் பார்த்து விட்டு, தொழுவை விட்டு அவிழ்த்து உரலில் கட்டிப் போடுங்க" என்று சொன்னால் மறுநாள் தாயும் பிள்ளையுமாக இருக்கும். மாமா கன்றுக்குட்டி பிறந்த தகவல் கேட்டதும் அப்படியே வருவார். கன்றுக்குட்டியைத் தடவிக் கொடுப்பார். தடவின கையை, பூவை முகர்ந்து பார்க்கிற மாதிரி கம்மென்று உறிஞ்சி முகர்ந்து கொள்வார். பசு நின்று கொண்டிருந்தால் அப்படியே சுற்றி வருவார். படுத்திருந்தால் எழுப்பட்டுமா என்பதுபோல வீட்டுக்காரர்கள் ஒரு எட்டு எடுத்து வைப்பார்கள். இருக்கட்டும். இருக்கட்டும்' என்று அவர்களை அமர்த்திவிட்டு, அதனுடைய மடியையே பார்ப்பார். மறுபடி கொஞ்ச நேரம் பிறந்த கன்றுக் குட்டியை பார்த்துவிட்டு, முதல் எட்டு நாளைக்கு எந்தக் காம்பில் கறக்கக் கூடாது. அடுத்த எட்டு நாளைக்கு எந்தக் காம்பில் கறக்கக் கூடாது என்று சொல்வார். அதாவது அந்தக் காம்பு பால் எல்லாம் பிள்ளைக்காம். மாமா சொன்னபடியே செய்தால், அடுத்த பெளர்ணமி அமாவாசை வருவதற்குள் கன்றுக்குட்டி திடமாக ஆண்பிள்ளை மாதிரி இருக்கும். தோட்டத்தில் காலை உதைத்து ஓடினால், எட்டிக் கழுத்துக் கயிற்றைப் பிடிக்க முடியாது. மாமா தொழுவில் இதையெல்லாம் சொல்லிவிட்டு, காலை மாற்றி மாற்றிக் கழுவி விட்டு நேராக அடுப்படிக்குப் போவார். இருக்கிற பெண் பிள்ளைகளிடம் கடம்பு கிண்டினாயா என்பார். முதல் நாள் சீம்பாலில்தான் மாமாவுக்குக் கடம்பு கிண்ட வேண்டும். அது அம்ருதம் தாயி என்று சொல்லிக் கொண்டு அண்ணாந்து ஒரு விள்ளல் போடுவார். சின்னச் சம்படம் ஒன்றில் கடம்புவை வைத்து மூடி ரொம்ப மரியாதையாக நீட்டிக் கொண்டிருப்பார்கள். அடஹ்' என்று வெட்கப்பட்டார்போல மாமா எடுத்துக் கொள்வார். மங்காயி அத்தைக்குக் கடம்பு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி, பகடைக்குச் சொல்லியிர வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டுப் போனால் அந்தக் கன்றுக் குட்டியை ஊதின வயிற்றோடு கக்கூஸ் வண்டியில் தாக்கிப் போட்டிருப்பதைத்தான் மறுநாள் பார்க்கலாம்.________________
இத்தனையிருந்தும் மாமா தரகுக்கு வரமாட்டார். மாடு பார்த்து வாங்கித்தர மாட்டார். உங்க கையால பிடிச்சுக் கொடுத்துத் தொழுவில் கட்டணும் என்றால் ஏற்றுக் கொள்வதேயில்லை. அவ சீதேவி அல்லவா. அவளாக அல்லவா உங்க வீட்டுக்குப் படியேறி வரணும். நான் யாரு இவள் கையைப் பிடித்துக் கூட்டி வருவதற்கு? என்பார். அது மாதிரியே அவர் யாருக்கும் மாடு பிடித்துக் கொடுத்ததே இல்லை, கடைசி வரை.
தாத்தாவும், மங்காயி அத்தை வீட்டு மாமாவும் இந்தப் பசு மாட்டு வளர்ப்பு விவகாரத்தில் கூட்டாளிகள். தாத்தாவுக்கு நான் செல்லப் பேரன். தாத்தா சொல்வார் மங்காயி அத்தை வீட்டு மாமாவிடம் 'மாப்பிள்ளை உம்ம பட்டா புஸ்தகத்திலே எவ்வளவு நிலம் இருக்கும்னு பார்த்தா என் பிள்ளையைக் கொடுத்தேன். தொழுவத்தைப் பார்த்துட்டில்லா கொடுத்தேன்' என்று கேலி பண்ணுவார். மங்காயிஅத்தை தாத்தாவின் சொந்த மகளும் இல்லை. மாமா அவருடைய பெண்ணைக் கட்டின மருமகனும் இல்லை. ஆனாலும் அந்தப் பிரியம் எல்லாம் அபாரமாக இருக்கும்.
தாத்தா எங்கள் வீட்டுப் பசுவைக் குளிப்பாட்டப் போவதெல்லாம் மாமாவீட்டுக்குப்பின்னால் ஒடுகிற வாய்க்காலில்தான். மாட்டிற்குப் பின்னால் கன்றுக்குட்டி போவது போல, தாத்தா பின்னால் நானும் போவேன். ஒரு தடவை நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்படி நாங்கள் போகும்போது பந்தல் எல்லாம் போட்டிருந்தது. தெரு வாசலில் மட்டுமில்லை. வாசலிலும் பந்தல் போட்டிருந்தது. பின்வாசல் நடை தாண்டித் தோட்டத்திற்குப் போனாலும் அப்படித்தான். மங்காயி அத்தையைக் காணோம். தொழுவிலுள்ள மாடுகளைக் கூடக் காணோம். தொழுவைத் தூத்துப் பெருக்கிப் போட்டு அதில் பெரிய பெரிய தண்ணீர் அண்டாக்களை வைத்திருந்தார்கள். தாத்தா என்ன ஏது என்று ஒன்றும் சொல்லாமலேயே போனால் எப்படி?
இதற்குள் வாதா மரம் வந்துவிட்டது. வாதா மரத்துக்குக் கீழ் சிவப்புச் சிவப்பாக இலைகள் உதிர்ந்து கிடக்கும். ரொம்ப வருஷமாக உதிர்கிற இலைகளெல்லாம் காலண்டர் தாள் மாதிரி சேர்த்துக்கொண்டு வருகிறது போல அவை மரத்தடியிலேயே கிடக்கும். இலையைக் காலால் கெந்திப் பார்த்தால் ஒன்றிரண்டு வாதாம் பழமாவது இல்லாமல் போகாது. இது தவிர மங்காயி அத்தை எந்தச் சின்னப் பிள்ளைகள் வந்தாலும் கொடுக்க என்று ஒவல்டின் டப்பாவில் போட்டு வைத்திருப்பாள். இன்று பெரிய________________
ஏமாற்றமாக இருந்தது. விசேஷ வீடு என்றால் வாதா மரத்து மூடுவரை யார் சுத்தம் பண்ணச் சொன்னார்கள். வாதாங்கொட்டை ஒன்றுகூட இல்லை. அப்புறம் ஒன்று இரண்டு இலை உதிர்ந்து அதன்மேல் வெயிலடிக்காமல் இப்படி மொட்டையாக இருந்தால் இந்த இடம் நல்லாவே இல்லை அல்லவா?
இதற்குள் மாட்டையும், கன்றுக்குட்டியையும் தாத்தா தண்ணீரில் இறக்கியிருப்பார். ஒடியே போனால் அடுத்தது நெட்டிலிங்கக் கொட்டைகள். இவ்வளவு லேசாக ஆஸ்பத்திரி சீலா மூடி மாதிரி அவ்வளவு கனமில்லாமல் அவற்றை டிராயர் பை முட்டைச் சேகரித்துக் கொண்டு, வாய்க்காங்கரைப் படியில் உட்கார்ந்து ஒவ்வொன்றாகத் தண்ணிரில் வீசுவேன். மிதந்து மிதந்து அது தண்ணீரோடு போய்க்கொண்டேயிருக்கும். என் கையிலுள்ள கொட்டைகள் முழுவதையும் தண்ணீரில் வீசுவதற்கும், தாத்தா இரண்டையும் குளிப்பாட்டிக் கரையேறுவதற்கும் சரியாக இருக்கும். சற்று வெயில் படும்படியாக, மாமரத்து வேரில் கட்டுவார். மாடு கட்டுவதற்கு என்றே தண்டியாக வேர்விட்டுப் படர்ந்து நிற்பது போலத் தரைக்கும், மரத்துக்கும் இடைவெளி இருக்க ஒரு வேர் போயிருக்கும்.
பசு அவ்வளவு பெரிய பகவாகப் பிறந்து அப்போதுதான் நிற்பதுபோல் வெயிலில் மினுமினுவென்று நிற்கும். பின்னால் பிட்டிப் பக்கம் எல்லாம் ஒரு பொட்டுச் சாணிக்கறையைப் பார்க்க முடியாது. தாத்தாவுக்கு அப்படியொரு கை. அப்புறம் தாத்தா குளிப்பார். ஏதோ உடுத்தின வேட்டியை நனைப்பதற்குக் குளித்த மாதிரியிருக்கும். கடைசியாக என்னைக் கூப்பிடுவார். கன்றுக் குட்டியைத் தூக்குகிறது மாதிரித் தூக்கி, என் மூக்கை அவரே பொத்திக்கொண்டு முக்குவார். வயிற்றுக்கடியில் கை இருக்கும். நீச்சலடிக்க வேண்டும். தடாபுடாவென்று தாத்தாவின் மேலெல்லாம் தண்ணீரை இறைப்பதோடு சரி.
தலையைத் துவட்டி சரத்துண்டோடு நான் கிடுகிடுவென்று விரைத்துக் கொண்டிருக்கையில், கடைசியாக ஒரு பத்தடி தூரம் நீச்சலடித்துப் போன கையோடு ஒரு முங்கு முங்குவார். இரண்டு தாமரைப் பூவைப் பறித்துக் கொண்டு கரையேறுவார்.
நன்கு உழைத்து இறுகி மறுபடியும் தளர்ந்து கொண்டிருக்கிற அறுபது வயது உடம்போடு, வாய்க்காலில் தணிந்த நீர் மட்டத்தி லிருந்து கரையின் உயர்வான பகுதிக்கு, ஈரம் சொட்டச் சொட்ட, வெறும் கோவணத்துடன் கையில் பறித்த தாமரைப் பூக்களுடன்________________
வருகிற காட்சியின் அற்புதம் இப்போது மட்டுமல்ல அப்போதும் எனக்குப் பிடித்திருந்தது. தாத்தாவை அந்த நேரத்தில் அப்படியே ஒடிப் போய்க் கட்டிக் கொள்ளத் தோன்றும். இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வியைத் தாத்தாவிடம் கேட்டேன். தாத்தா, மங்காயி அத்தையை எங்கே. அத்தை வீட்டு பசுவையெல்லாம் எங்கே என்று. தாத்தா சிரித்துக்கொண்டார். சிரித்துக்கொண்டே இரண்டையும் அவிழ்த்து, புறவாசல் வழியாக இருக்கிற இன்னொரு இடுக்கமான சந்து வழியாக மாட்டைப் பற்றிக்கொண்டு போனார். கன்றுக்குட்டிகூடப் போய்விட்டது. நான் சிரமப்பட்டு அந்த மண்ணில் சற்றுச் சறுக்கி அப்புறம் போனேன். தாத்தா நான் ஏதோ இமய மலையில் ஏறிச் சாகசம் பண்ணியது போலச் சந்தோஷமாகப் பார்த்தார். சறுக்கிய சமயம் கை ஊன்றியதில் தாமரைப் பூ ஒடிந்து விட்டிருந்தது. இன்னொன்று அழகாக அப்படியேயிருந்தது. தாத்தா சிரித்துக் கொண்டே தலையில் கை வைத்து வெயில் சுடுகிறதா என்று பார்த்தார். தாத்தா ஏன் சிரித்துக்கொண்டே வந்தார் என்பது வீட்டுக்கு வந்தால்தான் தெரிந்தது. மங்காயி அத்தை வீட்டுப் பசுக்கள் எங்கள் தொழுவில் நின்றன. மங்காயி அத்தை வீட்டில் வைத்து யாரோ கல்யாணம் பண்ண வேண்டும் என்ற சொன்னார்களாம். அதுக்கென்ன என்று கொடுத்துவிட்டு மங்காயி அத்தை இங்கே வந்துவிட்டாள். இன்னொன்று வாதாங்கொட்டை சேகரித்து வைத்திருக்கிற டப்பாவும் வந்துவிட்டிருந்தது. இதுபோல் இன்னும் எவ்வளவோ நீண்ட ஞாபகங்களின் ஆதாரமாய் இருக்கிற இந்த அத்தை விட்டில் நுழையும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. இருட்டைவிட இப்படிக் கிட்டத்தட்ட இருட்டுகிற நேரத்துக்கு எப்போதுமேஉரிய அழகுடன் எல்லாமே இருந்தது. மிகச் சிக்கனமாக ஏற்றப்பட்ட விளக்குடன் இருந்த அந்த வீட்டுக்குள்ளேயே சின்னுவும் இருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இருட்டில், இப்படி ஒரே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு தானே சின்னு தனியாக இருப்பாள் பாவம்.
________________
இதுபோல் இன்னும் எவ்வளவோ நீண்ட ஞாபகங்களின் ஆதாரமாய் இருக்கிற இந்த அத்தை வீட்டில் துழையும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. இருட்டைவிட இப்படிக் கிட்டத்தட்ட இருட்டுகிற நேரத்துக்கு எப்போதுமேஉரிய அழகுடன் எல்லாமே இருந்தது. மிகச் சிக்கனமாக ஏற்றப்பட்ட விளக்குடன் இருந்த அந்த வீட்டுக்குள்ளேயே சின்னுவும் இருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இருட்டில், இப்படி ஒரே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு தானே சின்னு தனியாக இருப்பாள் _
ஆனால் தினகரிக்கு இந்த நரையிருட்டுப் பிடிபடவில்லை போல, என்னுடன் ஒட்டிக்கொண்டாள். என் இடது முழங்கையைப் பற்றிக்________________
கொண்டாள். அவளுடைய உலகம் வெளிச்சங்களால் நிரம்பியது. ஒரு வீட்டிற்குள், குளியலறைக்குள், தலைவாரும் கண்ணாடி முன்கூட அனிச்சையாக மின் வெளிச்சம் தேட ஆரம்பித்துவிட்ட உலகம் அது. தாயின் மார்புக்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூடஇதற்குக் காரணமாக இருக்கலாம். நிஜமான வெளிச்சம் என்பதை தினகரியோ அவள் வயது பிள்ளைகளோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. விடிகிற, அடைகிற இதுபோன்ற நேரத்தின வெளிச்சத்தை மிக நிச்சயமாக அறிந்திருக்க வில்லை. காலை என்பது என்ன என்ற கேள்விக்கான பதில்கள்.அவர்களிடம் சூரியனைச் சம்பந்தப்படுத்தித் துவங்குமா என்பதே சந்தேகம். நிறையச் சம்பந்தங்களில் இருந்து அவர்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தினகரி கையைப் பிடித்துக்கொண்ட நேரத்துக்குள் இவ்வளவும் தோன்றிவிட்டது. கையை பிடித்துக்கொண்ட விதத்தின் அடிப்படையான மகிழ்ச்சியில், எனக்கு வலது பக்கமாக வந்து கொண்டிருந்த தினகரியின் அம்மாவுடைய கையைச் சற்றுப் பிடித்துக் கொண்டேன். வளையல்கள் உரசுகிற, சேலைத் தலைப்பு படுகிற கை. என் கையைவிடச் சிறு கை. வெதுவெதுப்பானது. என்ன என்று உதறாமல் விரல்களே பரிவுடன் புரிந்து கொண்டது போல், சற்று நேரம் என் பிடிக்குள் முழுக் கையையும் இருக்க அனுமதித்து, சற்று விடுவித்து மீண்டும் என் கையைத்தன் விரல்களுக்குள் வைத்துக்கொள்கிறது. இது எல்லாம் நடப்பதற்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகியிருக்காது. ஆனாலும் அந்த நீர்த்த இருட்டும் இடது கையிலும் வலது கையிலும் புதைந்த விரல்களுமாக நன்றாக இருந்தது.
சட்டென்று ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கை முழுவதையும் பரிமாறிக்கொண்டது போலிருந்தது. இருட்டுக்குள் வெளிறலாக அசைந்த செடிகள் இந்த இடத்தில் ரொம்பகாலமாக அத்தை வீட்டில் கனகாம்பரச் செடிகள் உண்டு கூடுதலான ஒரு அழகைத் தந்துவிட்டிருந்தது. அந்தச் செடி இல்லாவிட்டால் இந்தப் பற்றுதல் இவ்வளவு நுட்பம் அடைந்திருக்காது என்றெல்லாம் தோன்றியது. தினகரி க்ை அப்படியே இருக்க, இவளுடைய கை விடுவித்துக் கொண்டது.
தூரத்தில் வீட்டின் கடைசிக் கட்டுக்குள் இருந்து சிறு சிம்னி விளக்குடன் மங்காயி அத்தை வந்துகொண்டிருந்தாள். அந்த வீட்டுக்குள்ளோ பக்கத்து வீடுகள் ஒன்றிலோ யாரோ தோசைக்கு அரைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆட்டுரலில் குழவி புரள்கிற கடகடா, எனக்கு கற்களையும் பாறைகளையும் ஞாபகப்படுத்தி________________
விட்டது. மங்காயி அத்தை அங்கிருந்து ஒவ்வொரு நிலைப்படியாகத் தாண்டித் தாண்டி வர, மயங்கி மயங்கி மல்லாந்து கிடக்கிற இருளின் பாறையிடுக்குகளில் இருந்து அத்தை வருவது போல இருந்தது. பறவை எச்சங்களும், மிருகங்களின் முதுகு உராய்வுகளும், கவிந்து கிடந்த மரம் தணிந்து தணிந்து கிளை உரசின பச்சையும் வெயிலும் மழையும் கண்ட வழுவழுப்பான பாறைகள் விலகி வழிவிடுவது போல அத்தை வந்து கொண்டிருந்தாள். மங்காயி அத்தையாக ஒரு முறையும் சின்னுவாக மறுமுறையும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. சின்னுவாக வந்து சின்னுவாக வந்து கடைசியில் அத்தைதான் நின்றாள். 'எல்லோரும் குனிந்து வாங்க என்றாள். கையிலிருந்த குருவி லைட்டை வெளியில் இருந்த மரப்பெஞ்சில் வைத்தாள். நாங்கள் மூன்று பேருமே செருப்பைக் கழற்றிக் கொண்டிருந்தோம். என் பெயரைச் சொல்லி 'நீதான் முக்கியமாக குனிந்து வரனும் என்றதும் தினகரி என்னை அண்ணாந்து பார்த்து அப்பா நான் என்பது போலச் சிரித்தாள். நாங்கள் உள்ளே கால் வைக்கும்போது, விளக்கு மாடத்தில் இருந்து விளக்கு எரிந்துகொண்டு அதன் கதவுக்குரிய கம்பிகளின் நிழல்கள் தரையில் அசைந்து கொண்டிருந்தன. இரண்டு தூண்களின் பச்சை வர்ணங்களுக்குள் புகுந்து விட முடியாமல் வெளிச்சம் தவித்துக்கொண்டே பளபளத்தது. மங்காயி அத்தை மின்விளக்கைப் போட்டாள். மிஞ்சிப் போனால் 25 வாட்ஸ் இருக்கும். பெரிய மாற்றங்களை அதுஒன்றும் தந்துவிடவில்லை. விளக்கு வெளிச்சத்திற்குச் சற்றும் கூடிவிடக்கூடாது என்ற திட்டமிருந்தது அதில். நான் தூணில் சாய்ந்து கொண்டேன். தாங்குவதற்கு என்பது மாதிரியே சாய்வதற்கும் சேர்த்தே தூண்கள் கட்டப்படுகின்றன. அதுவும் இந்த வீட்டுத் தூண்களில் சாயாத தலையிருக்குமா. மங்காயி அத்தை எங்களை உடகாரச் சொல்லிவிட்டு உள்ளே போய் உட்பக்கம் வைக்கப்பட்டிருந்த இன்னொரு சிம்னி லைட்டுடன் அடுப்படிக்குள் போனாள். ஒண்ணும் செய்ய வேண்டாம். எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்' என்று இவள் எழுந்திருந்தாள். சின்னு வீடு இங்கேதானே இருக்கிறது. அவள் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறாளா என்று கேட்டுக்கொள். அத்தைக்குத் தெரியாமல் இருக்காது என்று சொன்னேன். சரி என்கிறது போல எழுந்தாள். உன்னைவிட எனக்கு அக்கறையிருக்கிறது என்பதாக அப்பார்வையிருந்தது. எழுந்தபோது 'நீயும் வாட்டி. அப்பா ஒத்தையில கிடக்கட்டும்' என்று சிரித்தாள். கள்ளச் சிரிப்பாக இருந்தது. தினகரி பின்னால் எழுந்து போனது.________________
ஏதோ இப்படித் தூணில் சாய்ந்து கொண்டு மங்காயி அத்தை வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காகப் புறப்பட்டு வந்தது போல நான் மட்டும் தனியாக இருந்தபோது மீண்டும் மீண்டும் ஆர்.கண்ணனின் ஞாபகம் வந்தது.அவனுடைய சிரிப்பும் முதலாளி என்ற சொல்லும் ஞாபகம் வந்தது. ‘என்னைக் காப்பற்றுங்கள் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கடைசியில் ஆஸ்பத்திரியில் தவித்ததாகச் சொன்னது. இந்த இடத்தில் கேட்டது. அவனுடைய குரலின் தவிப்பின் பதட்டத்தில் இந்த வெளிச்சம் நலுங்கி அசைந்து நிழல்களைச் சிலிர்த்து உதறிக் கொண்டது போலிருந்தது. தூண்களிலிருந்து சரிந்த நிழல்கள், சரிவின் அகலத்துடன் ஒரு கனத்த கம்பளிப் போர்வையென கண்ணனின்மேல் விழுவது போலவும் அப்படித் தன்மேல் விழுந்துவிடும் முன்னரே ஆக்ரோஷத்துடன் இரண்டு கைகளாலும் அப்புறப்படுத்திக் கைக்கு வந்த திசையில் வீசுவது போல இருந்தது. வீச்சில் மயங்கி மயங்கி எல்லாத் திசைகளிலும் மடிந்து மடிந்து இருட்டுக் குவிய, ஆயாசத்துடனும், பிரயாசையின் தோல்வியில் ஏற்படுகிற சோர்வுடனும் ஆர். கண்ணன் தளர்ந்து கட்டிலில் சரிய வலை போன்று ஆனால் சுருக்கமற்ற ஒரு தடித்த போர்வை அவன் மேல் எழுந்திருக்க இயலாதபடி விழுந்து விட, இப்போது போர்வையின் கீழ் கண்ணன் மூக்குத் துருத்தலும் கீழ்பகுதியில் நிமிர்ந்திருக்கிற கால் விரல்களும் ஏற்படுத்துகிற சுருக்கங்கள் தவிர, பாளமான கருப்பாகக் கட்டில் கிடக்க, இதோ இதில் அமர்ந்திருப்பது யார்? சின்னுவா சின்னுவுக்கு மூச்சு இருக்கிறதா, சின்னு ஏதாவது உடுத்தியிருக்கிறாளா, சின்னுவிடமிருந்து ஆர்.கண்ணன் இல்லையென்றால் அனைத்தையுமா அகற்றிவிடவேண்டும்.
மேல் துணி ஒன்றுமில்லாது இப்படி இருப்பதை எல்லோருமா பார்க்கிறார்கள். நான் மட்டும் இருக்கிறேனா என் கையில் கசங்குவது எது? அவள் உடுத்திய புடவையா, உடுத்துவதற்காக நான் எடுத்து வைத்திருக்கும் புடவையா, இந்தப் புடவையைச் சின்னு எப்போது உடுத்தியிருந்தாள் முதன் முதல் அவளைப் பார்த்தபோதா, எத்தனையோ சமயங்களில் எந்த சமயத்தின் சேலை இது என் கைக்கு வந்திருக்கிறது. வரையப்பட உட்கார்ந்திருப்பது போல் அந்த கட்டிலில் இருக்கிற சின்னுவையே பார்க்கிறேன். ஒரு வேளை ஆர்.கண்ணன் தனியாகக் கடைபோட்டு நடத்திக் கொண்டிருந்த சமயம், அவனுடைய வற்புறுத்தலில் வீட்டுக்குப் போய்ச் சின்னுவைப் பார்த்தோமே, என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு சின்னுவும், இவளும் உள்ளே ரொம்ப நேரமாகப் பேசிவிட்டு________________
ஈரக்கண்ணோடு வந்தார்களே அன்றைக்கு கட்டியிருந்த துணிதான் இதுவா. துக்கத்தின் மத்துச் சுற்றலில் திரளும் போதெல்லாம் சின்னு அணிவது இதைத்தானா. சின்னு அப்படியே இருந்தாள். சின்னுவின் கீழ் உட்கார்ந்திருந்த போர்வையின் கீழ் ஆர்.கண்ணன் மூக்கு இருந்த இடத்திலும் கால் பெருவிரல்கள் நிமிர்ந்த இடத்திலும் மட்டும் சுருக்கங்கள் இருக்க, சுருக்கங்கள் தவிர எந்த அடையாளமும் அற்று ஆர்.கண்ணன் போனது எவ்விதம்.
தூணில் சாய்ந்து கொண்டிருக்கும்போது திரி கருகுகிற வாசனை வந்தது. எண்ணெய் சரசரத்து, பத்திக் கங்கு போல திரியின் கனல் இரண்டு பொட்டுகளாக மின்னிச் சுருங்கின. பூனையின் கண்கள் இடுங்கி விரிவது போல, கங்குச் சிவப்புச் சுருங்கி, காற்றின் நகரலில் கனிந்தது. மீண்டும் சிவப்புத் துண்டம், நெளிகிற புகை, இருட்டுக்குள் புகைநெளிவும் தெரிந்தது. திரியும் எண்ணெயும் கருகின நெளிவு பார்த்துக் கொண்டிருக்கும்படியாக இருட்டு என்னைத் துணோடு சாய்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கனலைத் தின்று விழுங்கியது. இருட்டின் ஒரு பகுதியை, வெளியே மரப்பெஞ்சிலிருந்த குருவி லைட் வெளிச்சம் கவ்விக் கவ்வி இழுப்பது போலிருந்தது. ஒரு பெரிய மிருகத்தை இடித்துத் தள்ளி காலால் நகராமல் பற்றிக்கொண்டு, கோரைப் பற்களால் கிழித்து, தசையின் ரத்த நசநசப்புடன் கூடிய தலையசைப்புடன் இங்குமங்கும் ஆட்டி இழுப்பது போல இவ்வளவு இருட்டையும் அந்த சிறு விளக்கின் வெளிச்சம் இழுத்துவெளியே போட முயன்றது.
ஏன் இப்படி வேட்டையாடலும், கோரைப் பல்லும் ரத்த நசநசப்பும், கவ்வி இழுத்தலும் என்றெல்லாம் தோன்றுகிறது. இருட்டையும் மிருகமாக்கி வெளிச்சத்திற்கு தாக்கி அறையும் நகமும் பாதமும் வால் சுழற்றலும் கொடுத்ததும் சற்று நேரத்திற்கு முன் தாத்தா தாமரைப் பூவுடன் கரையேறுவதை நினைத்துச் சிலிர்த்துக்கொண்டதும் ஒரே மனதுதானா. எப்படிக் கலைந்து சிதைந்து சிதைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சிறு வெளிச்சத்தை கரையில் மோதுகிற துரையாகவும் அலையாகவும் ஏன் நினைக்க முடியவில்லை. மேகங்களுக்குள் உறுமி உறுமிப் பெரிதாகிற ஏரோப்பிளேன் சத்தமாக ஏன் விரித்துக் கொள்ள முடியவில்லை. விமானம் என்று ஆரம்பித்து மேகத்திற்கு மாறி, இன்னும் இத்தனை வருசத்திலும் ஒன்றைப் போல இன்னொன்றைப் பார்க்க முடியாத மேகத்தின் தனித்தனி முகங்களின் அமைப்பினில் போய் நிற்க ஏன் முடியாது போயிற்று. அன்றும் சரி, இன்றும் சரி________________
மேகங்கள் எல்லாம் தடாகங்கள் போலவும் தகடு போன்ற நீர்ப் பெருக்காவும் அதன் ஒரம் கவிந்திருக்கிற பெயர்களற்ற மரங்களாவும்தானே படுகிறது. அந்த தடாகம் பொத்துக் கொட்டிப் பெருகுவதுபோல, அவ்வளவு ஏன்? ஒரு டம்ளர் தண்ணீர் கொட்டிப் பெருகுவது போல ஏன் இந்த வெளிச்சம் உணரப்படவில்லை. கொம்புகளும் ஒன்றை ஒன்று துரத்தலுமாக மனம் ஏன் இப்படிக் கானகத்தில் திரிகிறது.
வெளிச்சம் கண்ணுக்குப் பழகப் பழக இன்னும் வெளிச்சமாகிவிட்டது. இருட்டுத் துலங்க ஆரம்பித்தது. சுவரோரம் தொங்குகிற மூங்கில் கழிக்கொடியில் ஒரு குடையும், ஒரு குடைக் கம்பும் தொங்குகின்றன. மங்காயிஅத்தை வீட்டு மாமாஞாபகங்கள், மழைத்தண்ணீர் மாதிரிக்கு அந்தக் குடைக்கம்பியில் பட்டு வழுகிச் சொட்டாக கீழே விழுந்து அந்த மூலையில் தெறிப்பது போலத் தெறித்துக்கொண்டிருந்தன. ஒரு சொட்டாக விழுந்து பத்துச் சொட்டாகத் தெறிக்கிற அந்த கற்பனை எவ்வளவோ பரவாயில்லை. சாயந்திரம் மங்காயி அத்தை வீட்டு மாமாவை அவருடைய பகக்களை எல்லாம், சின்னுவைக் கூட மறந்துவிட்டு, அவ்வளவு நேரம் யோசித்த காரியத்துக்கு இவ்வளவு நேரம் ஒரு உருவம் தேடியலைந்துவிட்டு, இப்போது இதில் அடைந்து விட்டாயிற்று. இதுபோல அது என்றால் என்ன. அதுபோல இது என்றால் என்ன. இரண்டும் ஒன்றுதானே.
'என்ன இப்படி இருட்டுக்குள்ளேயே உட்கார்ந்துவிட்டே, விளக்கு குளிர்ந்து போச்சு என்றால் அடுப்படிக்கு வந்திருந்தால் எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்திருக்கலாமே! . அத்தை சொல்லிக்கொண்டு ஒரு ஈயத்தட்டில் ஏதோ தின்பண்டமும் கொடுத்தாள். மிகவும் கெட்டியாக இருந்த ஈயத்தட்டும் அந்தத் தின்பண்டமும் அத்தையின் கையிலிருந்த சிமினி லைட்டால் ஒரு பெரிய சாயலை அடைந்திருந்தன. எத்தனை சிமினி லைட்டுத்தான் அத்தை வைத்திருப்பாள். மாமா போன பிறகு சிமினியைத் துடைத்துக்கொண்டு, திரியைப் போட்டுக் கொண்டு, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டே அத்தை நாளைக்கழித்து வருகிறாளா, சதா வெளிச்சம் மார்புச் சேலையில்பட இந்த வீட்டின் நெடுகிலும் அலைந்து அலைந்து தனி ஆளாக மங்காயி அத்தை எதைத் தேடுகிறாளாக இருக்கும். மின்சாரம் இருந்தும் மின்விளக்கை நாடாத இடத்திற்கு அத்தை ஏன் சென்றாள். இருட்டும் இருந்து வெளிச்சமும் அல்லது முழு இருட்டு இல்லாமல் இது கொஞ்சம்.அது________________
கொஞ்சமுமாக ஒன்றில் ஒன்றைக் கரைத்துக்கொண்டு, ஒருவேளை அதுதான் சரியோ. வெளிச்சம் இருள் பற்றிய சரியான கலவையை அத்தைதான் அறிந்திருந்திருக்கிறாளோ,
தட்டு காலியாகிவிட்டிருந்தது. வெண்கலத் தம்ளர், அண்ணாந்து குடித்த சமயம் கைகளுக்குள் திண்ணமாக உறுதியாகக் குளிர்ந்தது. இந்த ஈயத்தட்டும் வெண்கல தம்ளரும் அதன் அதன் காரியத்தையே செய்தன எனினும், இதுவரை எந்த எவர்சில்வர் டம்ளரும் தட்டும் தராததை இது தந்துவிட்டது போலிருந்தது. சின்னு சின்னு என்று புறப்பட்டதென்ன. இப்படி கருகருக்கிற நேரம் தாண்டி இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு யோசனையின் விசித்திரமான இண்டு இடுக்குகளில் நுழைந்து புறப்பட்டுக் கொண்டு இருப்பது என்ன. இதைத் தினகரியிடம் சொன்னால் ஒருவேளை அவள் ரசிக்கக் கூடும். இன்னும் கற்பனைகளுக்குரிய விசாலங்களுடன் தான் அவள் இருப்பாள். மரங்களையும் புதிர்களையும் விடுவிக்கிற ஆர்வமும், கனவுகளில் வினோதமான புதையல்களைத் தோண்டி எடுக்கிற உற்சாகமும், அப்படி அவள் தோண்டும்போது அவள் உள்ளங்கைகளில் அள்ளி வெளியே எறிகிறவற்றை நான் வாங்கிக் கொண்டால் அதில் சந்தோஷம் அடைகிறவளாக அவளே இருக்கிறாள். பைத்தியக்காரத்தனமாக இட்டுக் கட்டிச் சொல்கிற அத்தனை கதைகளுக்கும் அகல விரிக்கிற கண்கள் அவளுடையதாக அல்லவா இருக்கின்றன. தினகரியின் இந்த பனிரெண்டு பதிமூன்று வயது முகம் இன்னும் சில வருடங்களில் போய்விடும். அவளும் ஒருநாள் தாவணி போடுவாள். இன்னோரு நாள் கதைப் புத்தகங்கள் படிப்பாள். கண்ணாடி முன் நின்று முகம் திருத்துவாள். எனக்கோ அம்மாவுக்கோ கூட இடமில்லாத அனுமதி, எப்போதாவது அவள் நினைத்தால் மட்டுமே கிடைக்கிற உலகத்திற்குள் போய்விடுவாள். தினகரியும் ஒரு குட்டித் தினகரி அம்மாவாகிவிடுவாள்.
அம்மாவும் மகளும் ஏகராசி ஆகிவிடுவார்கள். அப்புறம் நான்?
நிழல்களாக உள் அறைகளிலிருந்து நகர்ந்து என் பக்கம் அடுத்திருக்கிற அறையிலுள்ள வெளிச்சத்தில் உருவம்பெற்று மறுபடியும் இருட்டில் செருகி நிழல்களாகி தினகரியும் இவளும் என்னை நெருங்கிக் கொண்டு நின்றார்கள். இவளுடைய கால்மெட்டியின் உலோக நிறம் மட்டும் கண்ணில் நின்றது. கனகாம்பரத்தை எடுத்துத் தினகரியின் தலையில் வைத்துக்கொண்டு, மங்காயி அத்தை என்னிடம் சொன்னாள்.
'அதெல்லாம் சரிதான்'________________
ஒன்றும் புரியவில்லை. ஏறிட்டுப் பார்த்தேன். பேச்சை அப்படித் துவங்க அத்தை தீர்மானித்து விட்டிருந்தாள் போல.
'உன்மகள் இன்றைக்கு உட்காருவாளோ? நாளைக்கு உட்காருவாளோ அது நம்ம கையில இல்லை. இருந்தாலும் நாளும் கிழமையுமா எதற்கு நாலு காற்றும் படுகிற இடத்தில் அலையனும். பேசாமல் நான் சொல்வதைக் கேளுங்க. மூன்று பேருமா நேரே வீட்டுக்குப் போங்க. பொழச்சுக் கிடந்தால் நாளைக்குப் பார்த்துக்கிடலாம். யாரும் ஒடிப்போயிடப் போறதில்லை. மங்காயி அத்தை அப்படியென்றால் என்ன சொல்கிறாள். என்னை வசியம் பண்ணுகிற மாதிரியாக ஒரு குரலையும் பார்வையையும் வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் சின்னுவைப் பார்க்காமல் வீட்டுக்குப் போங்கள் என்பதுதானே.
சின்னுமுதல்-சின்னுவரை……5/
________________
ஒன்றும் புரியவில்லை. ஏறிட்டுப் பார்த்தேன். பேச்சை அப்படித் துவங்க அத்தை தீர்மானித்து விட்டிருந்தாள் போல.
'உன்மகள் இன்றைக்கு உட்காருவாளோ? நாளைக்கு உட்காருவாளோ அது நம்ம கையில இல்லை. இருந்தாலும் நாளும் கிழமையுமா எதற்கு நாலு காற்றும் படுகிற இடத்தில் அலையனும். பேசாமல் நான் சொல்வதைக் கேளுங்க. மூன்று பேருமா நேரே வீட்டுக்குப் போங்க. பொழச்சுக் கிடந்தால் நாளைக்குப் பார்த்துக்கிடலாம். யாரும் ஒடிப்போயிடப் போறதில்லை._ மங்காயி அத்தை அப்படியென்றால் என்ன சொல்கிறாள். என்னை வசியம் பண்ணுகிற மாதிரியாக ஒரு குரலையும் பார்வையையும் வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் சின்னுவைப் பார்க்காமல் வீட்டுக்குப் போங்கள் என்பதுதானே. ஒவல்டின் டப்பாவில் வாதாங்கொட்டை பொறுக்கி வைத்துக் கொண்டு வருகிற போகிற நேரம் எல்லாம் கொடுத்த அத்தை தானோ இது. மாமா போனதோடு எல்லாம் போய்விட்டதா, அல்லது வயதாக வயதாகப்புத்திக்கெட்டுப் போய்விட்டதா. இல்லாவிட்டால் எலக்ட்ரிக் லைட் இருக்கும்போது இப்படி கட்டுக்குக் கட்டு சிம்னி லைட்டைப் பொருத்திக்கொண்டு அலைவாளா.
தினகரியைப் பார்த்தேன் - தினகரி அம்மாவைப் பார்த்தேன். மாறாத முகத்துடன் தினகரி இருந்தாள். எப்போது பார்த்தாலும்.அப்பாவை பார்க்கிறோம் என்று அவளுக்கும் இது என் பெண் என்று எனக்கும் பளிச்சென்று தெரிகிற அதே பார்வை. சின்னஞ்சிறு உயிர்களின் ஒவ்வொரு அசைவும் எவ்வளவு இயல்பாக ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகின்றன. பழுத்த நிறத்தில் சிறு பூச்சி ஒன்று பறந்து பறந்து அத்தை கையிலிருந்த விளக்குப் பக்கம் போக தினகரி அதை விரட்டிக் கொண்டே நிற்கிறாள். அப்படி விரட்டும்போதே என்னைப் பார்க்கிறாள். ஒளிவு மறைவும் பூடகமும் அற்றதாகவே அந்தப் பார்வையிருக்கிறது. எந்த பதட்டமுமில்லை.
அடுத்த கதவைத் திறக்கும்போது எந்த ஆபத்துமின்றி உள்ளே போய் கூடத்தில் உட்காரலாம் என்பது போன்ற உத்தரவாதம் சொல்கிறதாகவோ தினகரி அம்மாவுடையது இருக்கிறது. என்பார்வையையே தவிர்த்துக் கொண்டு ஆச்சிக்கிட்டே சொல்லிகிட்டு வா தினகரி என்று சொல்லிக் கொண்டு, 'இருட்டுக்குள்ளே செருப்பு எங்கே கிடக்குண்னு தெரியலையே என்று, இந்த இடம் விட்டு முன்னகர்ந்து வாசலுக்குப் போய் -________________
'பிள்ளையை கூப்பிட்டுக் கொண்டு நேராக வீட்டுக்கு போங்க எல்லாரும் மங்காயி அத்தை மீண்டும் சொன்னாள். அப்படியென்றால் சின்னு வீட்டிற்குப் போகக்கூடாதா. நான் சின்ன வயதில் விளையாடிய, ஜவஹர் ராஜும் திலகா அக்காவும் இருந்த வீட்டில் எந்தப் பூதம் இருந்து தினகரியைப் பிடித்துக் கொள்ளப் போகிறது. சின்னு என்கிற பெண்ணும் அவளுடைய மகளும் மகனும் என்ன தீமையை எங்களுக்குச் செய்துவிட முடியும்.
அதெல்லாம் சரிதான் - மீண்டும் திருப்பித் திருப்பி அதையே அத்தை ஏன் சொல்கிறாள். இவ்வளவு நேரம்அத்தையும் இவளும் எதைப் பற்றி உள்ளே உட்கார்ந்து பேசினார்கள். என்ன காரியம். அவர்களாகவே ஒரு முடிவு செய்து கொண்டு முடிவை நிர்ப்பந்தமாக என்னிடம் திணிப்பது மாதிரி வீட்டிக்குத் திரும்பிப் போ என்று சொல்வது எப்படிச் சரியாகும். மங்காயி அத்தைக்குப் பசுமாடு தவிர வேறு எது தெரியும். மாமாபோய்விட்ட பிறகு அதுவும் போய்விட்டது போல. இப்படிச் சிம்னி லைட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறவளுக்கு சின்னுவைப் பற்றி என்ன தெரியும். நாற்காலியையோ வெற்றிலைப் பெட்டியையோ இங்கேயிருந்து அங்கே நகர்த்தி வைக்கிறது போல, என்னை ஒரு பொருட்டும் இன்றி. மங்காயி அத்தை நகர்த்திவிடலாம் என்று நினைத்தால் இவளுக்கு எங்கே போயிற்று. இவளும் புத்தியைக் கடன் கொடுத்து விட்டாளா, இந்த மங்காயி அத்தை வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறவரை சின்னு சின்னு என்று இவளும் உருகிக்கொண்டுதானே நின்றாள்.
'நாங்க முன்னால நம்ம வீட்டுக்குப் போய் கொண்டிருக்கிறோம். நீங்க நின்னு வருகிறீர்களா. தினகரியைக் கூப்பிட்டு நடந்தாள். இது ஒருவகையான யுக்தி. யோசிக்கவும் யோசித்ததைக் காரியப்படுத்தவும் அவகாசம் தராமல் ஆணைத்திசை திருப்பி வலுக்கட்டாயப்படுத்துகிற பெண் சாமர்த்தியம். யுக்திகளையும் சாமர்த்தியங்களையும் பிரயோகிக்காத அற்புதமான மனுஷியாகத் தானே சாயந்திரம் வரை இவள் இருந்தாள். சூலமும் சட்டியுமாக இவ்வளவு விரைவாக ஆயுதங்களைச் சேகரித்துக் கொள்ளும் அளவுக்கு என்ன நிகழ்ந்துவிட்டது அப்படி விடியற்காலம் ஆற்றங்கரை ஓரமாக மணலில் நடந்துகொண்டு போவது போலிருந்த அந்தக் கைப்பிடிப்பும் கள்ளச் சிரிப்பும் எங்கு தொலைந்தது. இந்த அவசரத்திற்கும் பத்திரப்படுத்துதலுக்கும் என்ன அவசரம்.________________
அவர்களுடன் உடனடியாகப் புறப்பட முடியாமலும் மங்காயி அத்தையிடம் நல்ல விதமாக விடைபெற முடியாமலும் ஆனால் பாவம் தனியாக இருட்டில் போய்க் கொண்டிருக்கிறார்களே என்ற அவசரத்தில் வாசலுக்கு வந்தபோது,சட்டென்று வெளவால் ஒன்று அதன் நீளவட்டத்தில் தாழ்ந்து வந்து என் முகத்தில் மோதுவதுபோல விலகி மேலே ஒட்டுக்கூரை வரை போய் மறுபடியும் அப்பிக் கொண்டு, தப்பி வரமுடியாமல் திணறுவது போல மீண்டும் மீண்டும் அது கூரைப் பக்கம் போய் திரும்பி வந்தது. அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஒடுகள். ஒட்டைத் தாண்டி, இன்னொரு எதிர்வீட்டுக் கட்டிடத்தில் மூலை மடங்கலுக்கு இடையில் தெரிந்த வானத்தில் வைரம் மாதிரி நட்சத்திரங்கள். ஒரு நட்சத்திரம் அதில் குளுகுளுவென்று, அப்படியே கண்ணில் ஒற்றடம் கொடுக்கிற மாதிரி நீல இருட்டிலிருந்து வெடித்துச் சிதறி அமைதியுடன் மினுங்குகிற இன்னும் சில நட்சத்திரங்கள். பார்க்கப் பார்க்கக் கொத்துக் கொத்தாய் நட்சத்திர மஞ்சரிகள்.
வாழ்வின் இந்த இடம்தான் ருசிகரமானது. மிகவும் இக்கட்டும் சஞ்சலமும் நிறைந்த நேரத்தில் மிகவும் அற்புதமும் நுட்பமும் நிறைந்த விஷயங்கள் எதிர் வருவது. அருவித்தடாகத்தில் மூழ்கி இறந்த சிநேகிதனுடைய உடலை மூங்கில் கழிகளால் துளாவித் துளாவி வெளிப்படுத்த, வெளிவந்த உடம்பின் மிதப்பின் மேல், மேலிருந்து அருவி விழுந்து உள் அமிழ்த்த, உடல் உள் அமுங்கிக் கொண்டிருக்கிற பதைப்புக்குள், அதே அருவியின் விசிறலில் ஏழு நிறத்தையும் காட்டிக் கொண்டு வெயிலின் இழைகளுக்கிடையே ஒரு வில். இது ருசிகரமோ, அபத்தமோ இப்படிச் சொல்லும்படியாக நிறைய நிறைய அங்கங்கே நடக்கவே செய்கின்றன.
சின்னுவைப் பார்க்க வேண்டாம் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டு, அதன் காரணங்களை எனக்கு அறிவிக்காத புறக்கணிப்பின் மத்தியில் நானிருக்க, இதோ இப்படி நட்சத்திரம் வாரியிறைக்கிற வானம் கண்ணில் படுவது அப்படித்தான். நட்சத்திரம் எந்தச் சூழ்நிலையில் பார்த்தாலும் நட்சத்திரங்கள்.ஆகவே இருக்கும். தீராத அழகுடன் அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி மினுங்கிக் கொண்டே இருந்தது.
மங்காயி அத்தை வாசல் வரை வந்து நான் தினகரியுடனும் இவளுடனும் போய் சேர்கிறவரை எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.________________
நான் மங்காயி அத்தையிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சொல்வேன் என்று அத்தையும் எதிர்பார்க்க மாட்டாள். கோபம் வந்தால் மிஞ்சி மிஞ்சி போனால் ஆண்பிள்ளை என்ன செய்வார்கள். வெளியே போகும்போது சொல்லிக்கொள்ளாமல் போவார்கள். அல்லது சாப்பாடு வேண்டாம் என்று படுத்துக் கொள்வார்கள். இதைத் தவிர வேறு புதிதாக ஒன்றும்செய்துவிடமுடியாது என்று அவளுக்குத் தெரியாதா. அதிலும் மங்காயி அத்தை பார்க்க நான் நெட்டலிங்கக் கொட்டை பொறுக்கி வாய்க்காலில் வீசிக் கொண்டிருந்த பையன். என்னைப் பற்றி அவளுக்கு நிறைய முடிவுகள் எடுக்க முடிவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இவளும் அல்லவா கட்சி மாறிவிட்டாள். மாறினதும் அல்லாமல் எனக்கு முன்னால் போய் அந்தத் தந்தி போஸ்ட் வெளிச்சத்தில் நிற்கிற அவசரம் என்ன. போய்விட வேண்டியதுதானே வீடு வரைக்கும். ஒன்று இருட்டில் போகப் பயம். அதைவிட இன்னொரு பயம். எங்கே நான் மட்டும் சின்னுவைப் பார்க்கிறேன் என்று கிளம்பிடுகிறேனோ என்று.
அப்படிச் சொல்லியிருந்தால்கூட நன்றாக இருக்கும். இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள். நீங்கள் வேண்டுமானால் போய்ப் பார்த்துவிட்டு இருக்கிறாளா இல்லையா என்று விசாரித்துவிட்டு வாருங்கள். இன்னோரு நாள் செளகரியமாகப் பகலில் எல்லோருமாக வருவோம். இப்படி எல்லாம் சொல்லத் தெரியாதவளா இவள்.
இந்தத் தெருவின் இந்த முடுக்கில் நடக்கத்தானே கற்றை கற்றையாகப் பழைய ஞாபகங்கள் எல்லாம் புரண்டு கொண்டு வந்தன. போனது வந்தது என்று துண்டு துண்டான கண்ணிகளை எல்லாம் நினைவுபடுத்திக் கோர்த்துத் தருவதாக இருந்த அதே இடம் இப்போது மெழுகிவிட்டு போட்டிருக்கிற சாணித்துணி மாதிரிச் சப்பென்று கிடந்தது எதிரில். மனதின் குதூகலங்களுக்கு ஏற்பவும் தொய்வுகளுக்கு ஏற்பவும்தான் தெருவின் லட்சணங்களும் இருக்கும்போல.
நான்போய்ச்சேர்ந்து கொள்ளலாம் என்று வேகமாகப் போக, என் வேகமாகச் செல்லல் அவசரப்படுத்தியது போல, நான் அவளை அடைவதற்குள் தினகரியை அழைத்துக் கொண்டு மேலும் அவசரத்துடன் புறப்பட, ஒரு வாகனத்திற்கும் இன்னோரு வாகனத்திற்கும் இடையிலுள்ள விபத்துத் தடுப்புத் தூரத்தை உறுதிப்படுத்திக்கொண்டே அவள் தினகரியுடன் போய் விட்டிருந்தாள்.________________
இது வாகனச்சட்டம் அன்றி வேறு என்ன விபத்தை நடுரோட்டில் தவிர்த்துவிட்டு வீட்டுக்குள் போய் மோதிக் கொள்கிற நாகரீகமான வாகனச்சட்டம். இந்த சட்டதிட்டம் எல்லாம் அறியாத ஒரு வெற்றுப் பந்து போல போய்க் கொண்டிருக்கும்போதே எனக்கு முன்னால் வலது பக்கச் சுவரிலிருந்து இடது பக்கச் சுவருக்குக் குதித்துவிட்டுப் பூனை நான் அந்த இடத்தைக் கடக்கும் வரை அசையாமல் காத்திருந்தது. பூனைகளாவது காத்திருக்கிறது. குறைந்த பட்சம் கடந்து செல்லும் வரையிலாவது.
இப்படிப்பூனைகள் வரை அனுதாபத்துடன் காத்திருக்க, நான் அதன் அனுதாபத்திற்கு முழுவதும் உட்பட்டவனாக நடந்து கொண்டிருக்கும்போது வாழைக்காய்க்கடை சூரி அண்ணாச்சி வந்து கொண்டிருந்தார். என்பதினைந்து வயதில் அவருக்கு இருபத்தி ஐந்து இருக்கலாம். இதேபோல் மஸ்லின் ஜிப்பாதான் அப்போதும்.
என் சின்ன வயதில் அழகாய் இருக்கிறதாக உணர்ந்தவர்களில் அண்ணாச்சியும் ஒருத்தர். இன்னோருத்தி பங்கஜத்து அக்கா. பங்கஜத்து அக்கா எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இதோ சூரி அண்ணாச்சி வந்து கொண்டிருக்கிறார். எங்கள் தெருவின் குப்பைத் தொட்டிக்கு அருகில் உட்கார்ந்து எழுந்திருக்காமல் சூரி,அண்ணாச்சி வீட்டுக்குள் நுழைவதே இல்லை. இந்தச் சிறு அருவருப்பைத் தவிர அவரைப் பார்ப்பதே அருமையாக இருக்கும். நிறைய தண்ணி போடுவார் என்று சொல்வார்கள். அதெற்கெல்லாம் அப்போது என்ன அர்த்தம் என்றே தெரியாது. ஒல்லியான உடம்பும் சுருள் சுருளான முடியும் தளரத் தளர ஜிப்பாவும், ஒருபோதும் நான் பார்க்க மடித்துக் கட்டியிராத வேட்டியுமாக, கிட்டத்தட்ட மணிக்கணக்கு தவறாமல் மார்க்கெட்டில் இருந்து வருகிற அண்ணாச்சியைப் பார்ப்பதற் காகவே, பொன்னையாப்பிள்ளை வீட்டு தங்கத்து அக்கா தெருப்பம்பில் தண்ணீர் பிடிக்க குடத்தை தூக்கிக் கொண்டு வருவதாகச் சொல்வார்கள். அதென்னவோ, பகல் முழுவதும் அந்த அடிபம்ப் வற்றி கிடப்பது போலவும் இந்த ஏழு ஏழரை மணிக்குத்தான்.அதிலிருந்து ஊற்று பொங்குவது போலவும் தங்கத்து அக்கா, கிழக்கும் மேற்குமாகத் தண்ணீர் எடுத்துக் கொண்டு அலைவாள். சூரி அண்ணாச்சி கதைக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. எவ்வளவோ விஷயங்களில் சொல்ல முடிவது போல இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.________________
ஆனால் சூரி அண்ணாச்சி அந்த நேரத்தில் தான் வருவார் என்பதும், அப்படிக் குப்பைத் தொட்டி பக்கத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு, அந்தத் தெரு முனையில் சற்று நேரம் புகைத்துவிட்டு நின்ற பிறகே வீட்டுக்குள் நுழைவார் என்பதும், என்னை மாதிரி யாராவது அந்தப் பக்கம் போனால், ஏய் படிக்கிறியா என்று கேட்பதும் எல்லாம் உண்மை. சூரி அண்ணாச்சி குரல் கரகரவென்று நன்றாக இருக்கும். சிகரெட் வாசனைகூட குரலைப் போல எனக்கு அப்போதே பிடித்திருந்தது. இப்பிடி எங்களைக் கூப்பிடுகிற 'ஏய் வேறு. வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டு சூரி அண்ணாச்சி அவர்களுடைய வீட்டு மதினியைக் கூப்பிடுகிற 'ஏய்ய் வேறு. ஒரு சிறு குழைவில் சூரி அண்ணாச்சி கூப்பிடும் அக்குரலுக்கு பொன்னையாப்பிள்ளை வீட்டுத் தங்கத்து அக்கா என்ன, வைரத்தக்கா என்ன, யாராக இருந்தாலும் அப்படியே ஓடி வரத்தான் தோன்றும்.
சூரி அண்ணாச்சி பக்கத்தில் வந்து சுந்தரம் எப்போ வந்தே" என்றார்கள். இருபது வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறது மாதிரியும் கூப்பிடுகிறது மாதிரியும் இல்லை. அன்றைக்கு மாதிரியே இருந்தது. வில்ஸ்பில்டர் வாடை கம்மென்று அடித்தது. ஜிப்பாவின் சைடு பாக்கெட்டில் ஒரு கை ரொம்ப அழகாகப் புதைந்து இருந்தது. வாழ்ந்து வாழ்ந்து, வியாபாரத்துடன் மல்லுக்கட்டி, பல வெற்றி கண்டு, வெற்றி அலுத்து, ஏதோ ஒர் சிறுசோகம் சிறு திட்டு முகப்பில் அப்பியிருக்க, ஃபாமிலியோடதானே வந்திருக்க இருந்தா ஒரு நாளைக்கு கூட்டிக்கிட்டு வா ஊருக்கு போகிறதுக்கு உள்ள என்றார். சூரி அண்ணாச்சி என்னுடன் இவ்வளவு பேசுகிறவரே அல்ல. சூரி அண்ணாச்சி வீட்டு மதனி இன்னார் என்றுகூட எனக்குத் தெரியாது. வரட்டுமா என்று சொல்லிவிட்டு லேசாகத் தோளில் கைவைத்துச் சிரித்தார். சிரிப்பில் வலி இருந்தது. அந்த திட்டு இருந்தது. சூரி அண்ணாச்சிக்குப் பிள்ளை இல்லை என்று சொல்வார்கள். இன்னுமா இல்லை. அந்த சிகரெட் வாசனை மட்டும் அங்கிருந்தது.
எல்லாம் இப்படித் தானிருக்கிறது.
சூரி அண்ணாச்சி என்னவென்றால் இப்படி இருக்கிறார். சின்னு என்னவென்றால் அப்படி இருக்கிறாள். தினகரியை பிடித்துக் கொண்டு விடுவிடுவென்று நடந்த இவளோ இன்னோரு மாதிரி இருக்கிறாள். மங்காயி அத்தையோ சிமினி லைட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறாள்.________________
சின்னுவை இன்று கண்டிப்பாக பார்த்துவிடுவேன் என்று நினைத்தேன். அது இன்றில் ஆனால் சூரி அண்ணாச்சியை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த முப்பது வருடமும் இதே தெருவில் இதே வீட்டில் இருக்க முடியும் என்று கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருக்கிறார். கூப்பிடுகிறார்.
_ேழைங்ரைச் சொல்கிறார். உங்களுக்குச் சேரவேண்டியதை என்னிடமும், எனக்குச் சேர வேண்டியதை அவர்களிடமும், அவர்களுக்குக்குரியதை இவளிடமுமாக மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே செல்கிற இந்த வாழ்க்கையில் அவரவர்களுக்குரியதை அவரவர்களிடம் சேர்த்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். முடிந்தால் நன்றாக இருக்கிறதா முடியாததால் நன்றாக இருக்கிறதா. முடிந்தால் சந்தோஷப்படுவதற்கும் முடியாவிட்டால் கோபப்படுவதற்கும் எல்லாம் இதில் எந்த முகாந்திரமாவது உண்டா. நான் கடப்பதற்காக உட்கார்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பூனை, இன்னும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறது என்று தெரியவந்தால், நான் அடைய வேண்டியது துக்கமா சந்தோஷமா? சின்னு.பூனை தினகரி எல்லோரும் வேறு வேறு என்று நினைப்பதை விட ஒன்று என்று நினைப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது.
நான் சற்று பிந்தி நின்று, இவ்வளவு யோசித்துக்கொண்டு, சூரி அண்ணாச்சியிடம் பேசிக்கொண்டு வருவதற்குள்அவ்வளவு ஒன்றும் அதிக நேரம் ஆகியிருக்காது. அந்த நட்சத்திரம் பார்த்தால் நேரம் சொல்லுமா. இப்போது தெரியும் வானத்தின் இன்னோரு பாத்தியில் அந்தக் கூடுதல் மினுக்கத்தை காணோம். ஆனாலும் மேலும் அதிகமான நட்சத்திரங்களுடன் இருந்தது அது.
தினகரியும், தினகரி அம்மாவும் அங்கேயே வாசல் நடையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரே கருங்கல்லில் இடைவெளியற்று செதுக்கிய சிற்பங்கள் போல அவர்கள் இருந்தார்கள். தினகரி தன்னுடைய அம்மாவின் இடுப்பைச் சுற்றிக் கொண்டு தன் வளர்ந்த முகத்தை அம்மாவின் தோளோரம் வைத்திருக்க இவள் இடது கை கொண்டு தலையைச் சுற்றித் தினகரியின் கழுத்தை அனைத்திருந்தாள். முகம் தெருவில் வருகிற என்னைப் பார்த்திருந்தது.
இதை எதிர்பார்க்கவே இல்லை. திடுக்கென்றது._நடையிலேயா இவ்வளவு நேரம் நிற்கிறீர்கள்?’ என்று கேட்க நினைத்துக் கேட்க முடியவில்லை. நான்தான் வந்துவிடுவேனே என்று சொல்லிக்________________
கொண்டே_டியேறும்போது, தினகரிக்குத் தெரியாமல் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டது இவளுடைய கை. பார்த்தால் அழுதுலண்டிருந்தா, சி கிறுக்கு என்றேன்.
என் கைமேல் இன்னும் கை இறுகியது. முகம் என் புஜத்தில் புரண்டது. -
* - "கிறுக்கு என்றுதான அவளிடம் மீண்டும் செல்ல முடிந்தது.
________________
எத்தனை வருடங்களுக்கு முன்போ கட்டிய வீடு. நூறு வருடங்களாக நின்ற மரத்தை அறுத்து அம்பது வருடங்களுக்கு முன்பாக செய்திருக்கவேண்டிய கட்டில். பெல்ஜியத்திலிருந்து கண்ணாடி மட்டும் வந்ததா, சட்டமும் சேர்த்து வந்ததா என்று கேட்கத் தோன்றுகிற நிலைக்கண்ணாடிகள் இரண்டு. ஒரு மிக அகலமான விசிறி. அதன் அதன் ஆதி உறுதியுடனும் அழகுடனும் எல்லாம் இருந்தன. இன்னும் தொந்தரவில்லாமல் பாடிக் கொண்டிருக்கிற பழைய ஹாலண்ட் பிலிப்ஸ் ரேடியோ. அது பாடுகிற பாட்டு இன்றைக்குரியது எனினும் பழைய வருடங்களிலிருந்து புறப்பட்டு வருகிற மாதிரி இருந்தது. எல்லையப்பர் கோபுரத்தின் பல நூற்றாண்டு கலசங்களுக்கு மேல் போன தடவை குஞ்சு பொரித்த மாதிரி, பழசின் மடியிலிருந்து செல்லம் கொஞ்சுகிற புதிதுக்குரிய அழகுடன் ரேடியோ பாடியது. நெல் மூட்டைகள் இருப்பது மாதிரியும்,நீண்ட வளையங்கள் உள்ள தண்ணிர் அண்டாக்கள் இருப்பது போலவும், இந்த வீட்டின் பழசினும் பழசான என் ஞாபகங்கள் எவை எவையெல்லாமோ அவையெல்லாம் இங்கிருப்பது போலவும் எல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இன்னும் பழசாக்கிக் கொண்டேன். என் தாத்தாவின் அப்பா உபயோகித்த திருநீற்றுப்பையும் திருநீற்று மாலையும் இதோ என் வலது ஜன்னலில் இருக்கிறது போலப் பிரமையை உண்டாக்கிக் கொண்ட பின் ரொம்பப் பத்திரமாக இருப்பது போலிருந்தது. கோயில் பிரகாரத்தில், யாளிகள் காலுயர்த்திக் கொண்டிருக்க, யாளிகளின் பாதுகாப்பில், தரையில் கல்லில் செதுக்கியிருக்கிற தாமரைப் பூக்களின் இதழ் விம்மல்களை வருடிக்கொண்டு நடுவிலிருக்கிற குழிவின் குளிர்ச்சியில் லயித்திருப்பது போல இருந்தது. இந்த ரேடியோவின் பாடல் கூட என்ன பாஷை என்று தெரிகிறது. அதுவும் அழிந்து, குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவதற்கு முன்புள்ளவர்களின் சேர்ந்திசை போல ஒரு பாடல் கேட்டால் நன்றாக இருக்கும். மூங்கில்களுக்கும்________________
மூங்கில்களுக்கும் இடையே ஆடிக் கால் மாற்றிக் கொண்டு கனத்த ஆபரணங்களுடன்பாடுகிற அந்த மலை ஜாதியினரின் பாட்டுக் கேட்டால் கூடப் போதும் இதமாக இருக்கும். இந்த தினம் வேண்டாம். இந்த தினம் என்றால், ஒரு குரல் ஆசை காட்டும். வா சின்னுவை பார்த்துவிடலாம் என்று கூப்பிடும். இன்னொன்று சிம்னியைதுக்கி கொண்டு வந்துபோகாதே என்று சொல்லும் என்ன ஏது என்று விபரம் சொல்லாமல் வீட்டுக்குப் போகலாம் என்று அவசரப்படுத்தும். தனியே விடும். தனியே போகும். தனியே அழும். தனியே நடையிலே நிற்கும். வேண்டாம் இந்த பழமையுடனேயே இருக்கிறேன். கடைந்து கடைந்து இந்த கட்டில் கால்களை செய்து முடித்திருக்கிற தச்சு ஆசாரியின் மூச்சு இங்கே கேட்காமலா இருக்கும். அவரின் இழைப்புளியைத் தேய்த்துக் கூர்மைப்படுத்துகிற சமயம் எழும்பும் சத்தத்தை விடவா இந்த ரேடியோ பாட்டு கூடுதலாக இருக்கிறது. இந்தக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். சட்டத்தின் பூவேலையை பார்த்துக் கொண்டிருந்தாலே விடிந்து விடும். இந்த நிலைக் கண்ணாடியை கீழ்ப்பக்கம் தாங்குகிற இரண்டு டானா ஆணிகளில் இதுவரை எத்தனை ஆயிரம் குருவிகள் உட்கார்ந்திருக்கும். தனியாக துணையாக எல்லாம் கண்ணாடியைக் கொத்தி கொத்திஎவ்வளவு விளையாடி இருக்கும். கண்ணாடியை உற்றுப் பார்த்தால் அலகு அலகாகக் கொத்தின சுவடு இல்லாமலா போகும்.
அந்த ஆணியில்தான் அப்பா சட்டை அநேகமாகக் கிடக்கும். எப்போதாவது சட்டை போடுகிற அப்பா அணிந்த சட்டை பெரும்பாலும் நிலைக்கண்ணாடியின் ஆணியில் தொங்கித்தான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆணியில் தொங்குகிற வெள்ளைச் சட்டையில் என்ன இருந்துவிடமுடியும். அப்பா என்கிற முழு ஆகிருதியை அது, ஆனால் அப்படியே நேரில் கொண்டு வந்து நிறுத்தும். அப்படி அப்பாவின் சட்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது. அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது. அப்பா எப்பேர்ப்பட்ட மனிதர். அப்பாவின் அருமை எல்லாம் நமக்கு வயது முதிர முதிரத்தான் தெரியுமோ என்னவோ. நிலைக் கண்ணாடிக்குள் அப்பா தெரிகிறாரா என்று பார்த்தேன். அதெப்படித் தெரிவார். சின்னுவும் தெரியமாட்டாள். முற்றிலும் இருட்டாக இருந்து விடக்கூடாது என்பது போல எங்கிருந்தோ தப்பின வெளிச்சம் எல்லாம் அங்கங்கே ஒன்றுடன் ஒன்று மோதித் தாறுமாறாக விழுந்திருந்தது. ரேடியோ மட்டும் இன்னும் பாடிக் கொண்டிருந்தது.________________
ஏணிப்படியின் மேலே ஏறிவருகிற சப்தம் கேட்டது. அந்த ஏணியும் இந்தக் கட்டில் மாதிரி இன்னொரு அருமை. அவ்வளவு நேர்த்தியான மரம். அவ்வளவு நேர்த்தியான வேலை. அகல அகலமான படிகள். கருகருவென்று மெழுகிவிட்டது மாதிரி ஒரு யானைக் குட்டியைப் படி வழியாக ஏற்றிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாலும் தாங்கும். இதையெல்லாம் விட என்ன ஆச்சரியம் என்றால் ஒவ்வொரு படியையும் சுருதி சேர்த்து வைத்திருக்கிறானோ பாவி என்று தோன்றும்.
பூனை ஒரு கால் வைத்து இன்னொரு காலில் தவ்வுகிற சப்தம் கூடக் கேட்கும். இரண்டு பூனைகள் வந்தால் இது எந்தப் பூனையுடையது. இன்னொன்று எந்தப் பூனையுடையது என்று பிரித்துச் சொல்லும்படி இருக்கும். அந்த ஏணிப்படியின் மேலிருந்து இரண்டாவது படியில் உட்கார்ந்து கொண்டால், தண்ணீரில் உடகார்ந்து கழுத்தை மட்டும் நீட்டிக் கொண்டு பாடுவது போல, மச்சில் உள்ளவர்களுக்கு என்தலை மட்டும் தெரியும். அடுப்படியில் உள்ள பெண் பிள்ளைகள் வேலை செய்துகொண்டே என்னிடம் பேசுவதற்கு பதிலும் சொல்லிக் கொள்ளலாம்.
இப்போது ஏறிவருகிறது தினகரி இல்லை, இவள். இரண்டு பேருமாகப் படியேறி வருகிற காலடிச் சத்தங்கள் மிருதங்கம் தட்டுவது போல இன்னொரு வகையில் ஒலிக்கின்ற அந்த வருஷங்கள் எவ்வளவு நன்றாக இருந்தன. இவளுடைய சத்தம், பூனை மாதிரி இவள் வந்து நிற்பதெல்லாம் எவ்வளவு அருமையாக இருக்கும்.
நிறையப் பூவாசனை மேலே வந்து விழுந்து புதைந்தது. வெவ்வேறு வகையான பூக்களை ஒரே நேரத்தில் அதிகமாக வைக்கிறதன் இணக்கமற்ற வாசனையாக அது இருந்தது. அதுவும் இந்த கனகாம்பரம் ஒட்டாமல் தொந்தரவு செய்தது. மேலே வந்து அப்பின கையில் ஈரம் இருந்தது. வளையல்களில் குளிர்ச்சி. ஏதோ ஒரு பகுதி துணியில் கை வாடை வேண்டாம் என்று சொல்லவேண்டாம் என்றிதோளில் கைவிழுந்தது. முதலில் இதைக் கேள். அப்புறம் எல்லாம் சொல்கிறேன் என்பது போல முகத்தில் இறங்கியது. இமையில் பொதிந்தது. விடமாட்டேன் என்று எடுத்துக் கொண்டது. இதையும் தாண்டிப் போகப் போகிறேன். இதுவல்ல் நான் சொல்ல வந்தது என்று மலை மலையாகத் தூக்கிப்போனது. மேகத்தில் இறக்கியது. இறக்கை முளைத்த மேகம். சில மேகங்கள் எங்களைக் கடக்க சில மேகங்களை நாங்கள் கடக்கச் சரசரவென்று________________
வானம் அகன்று கொண்டே போயிற்று. என்ன விசாலம் என்ன அமைதி. அந்த ஒற்றை நட்சத்திரம் மாத்திரம் மினுங்கியது. நட்சத்திரமல்ல. ரேடியோவின்கண் என்று தெரிந்தது. நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அடிக்குரலில் வண்டு உறுமுவது போல உறுமுகிற சப்தம் கேட்டது. கட்டிலில் கனகாம்பரக் கொத்து மாத்திரம் தனியாப் பிரிந்து கிடந்தது. தலையில் இருந்து வாடி விழுந்த பூக்களை ஏனோ தொடமுடிவதில்லை.அதுவும் இந்த கனகாம்பரங்களுக்குக் கொஞ்ச நஞ்சம் இருக்கிற அழகும் போய்விடுகிறது. மேலும் இது மங்காயி அத்தை வைத்துவிட்ட கனகாம்பரம்.
கூந்தல் முழுவதும் கழுத்து வழியே முன் பக்கம் வந்தது. சிக்கிக் கிடந்த பூவையெல்லாம் எடுத்து எடுத்து ஜன்னலில் வைத்துக்கொண்டிருந்த அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். குளித்துவிட்டு வந்த மாதிரி இருந்தது. இவள் இப்போது பேசமாட்டாள். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் பேசுவாள் என்று தெரியும்.
அதற்குள் மாடியின் கதவைத் திறந்து வைப்பாள். மேல் ஜன்னல்களை கீழ் ஜன்னல்களைத் திறந்து வைப்பாள். வாசலுக்கு நேரே எல்லாவற்றையும் விரித்துவிட்டு இங்கே காற்று நல்லா இருக்கு என்று உட்கார்ந்து மொத்தக் கூந்தலையும் ஒரு மாதிரித் தூக்கிப் பிடரியிலுள்ள வியர்வையை ஒற்றிக்கொண்டு சற்று நேரம் இருப்பாள். அந்த சற்று நேரத்துக்குள் கட்டிலில் இருந்து இறங்கி அங்கே போய் படுத்துக்கொள்ளவோ உட்காரவோ வேண்டும். அப்புறம் சொல்ல ஆரம்பிப்பாள்.
என் தலை முடிக்குள் அளைந்து அளைந்து விரல்களால் கோதிக்கொண்டே அவள் சொல்வதைக் கேட்கிற பதிலால் நானும் நிரம்பிக் கிடந்தேன். இதில் என்ன என்கிற நெகிழ்ச்சி வந்து விட்டிருந்தது.
எல்லாம் மங்காயி. அத்தைதான் சொல்லியிருக்கிறாள். இவள் சின்னு வீட்டிற்குப் போகிறோம் என்று சொன்னவுடன் அந்த' என்று ஆரம்பித்த பிறகு நிறுத்தவே இல்லை போல. எங்களுக்கும், கேட்டுக்கொண்டிருந்த இவளுக்கும் சின்னுவின் மேலிருந்த தவிப்பையும் ஈரத்தையும் உலர்த்திப் பறக்கவிடுவது போல அத்தை நிறையச் சொல்லியிருக்கிறாள்.
'ஆர்.கண்ணன் செத்தது சின்னுவால். ஆர்.கண்ணனின் தம்பியுடன்தான் இப்போது இருக்கிறாள். இதற்கு முன்னாடியே________________
சின்னு அப்படித்தான். எல்லாம் வழிவழிப்புத்திதானே வரும். ஆர்.கண்ணன் தம்பி மட்டும் யோக்கியமா. சரியான குடிகாரன். ஏற்கனவே ட்ராமாக்காரி ஒருத்தி கூட. அந்தக் கழுதை எங்கே போயிற்றோ இந்தக் கழுதையைச் சேர்த்திருக்கிறான். தினசரிக் குடித்துவிட்டுக் கதவை தட்டும்போது அர்த்த ராத்திரி. சின்னுதான் வந்து கதவைத் திறப்பாள். தோளில் கையைத் தூக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போய்ப் படுத்தார்கள் என்றால் விடிந்து பன்னிரெண்டு மணியாகும் எழுந்து பல்தேய்க்க, கதவைக் கூட சாத்துவதற்கு மறந்துபோய் இரண்டு பேரும் ஒன்றாகப் படுத்துத் தாங்குகிற கண்றாவியைப் பார்த்ததாக ஒருத்தருக்கு நாலு பேர் சொல்லியாகிவிட்டது. இந்தக் கூத்தை எல்லாம் சின்னுவின் அம்மாவும் பார்த்துக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறாள். அந்த லெட்சணத்தில் சின்னுவுடைய மகளும் பெரிய மனுவதி ஆகிவிட்டது. எல்லாம் சரிதான். அடுத்தடுத்து ஆள் வேண்டுமல்லவா வம்சத்துக்கு."
மங்காயி அத்தை சொன்னதை அப்படியே சொல்லாமல் இவளே கொஞ்சம் நல்ல வார்த்தைகளில்தான் சொல்லியிருப்பாள். அவளிடமிருந்து நான் கேட்டுச் சொல்கிற இவையே இவ்வளவு கொடுரமாக இருக்கின்றன.
அத்தை வீட்டுக்குள் இருந்து கொண்டு இருட்டைக் கவ்விக் கடித்து இழுக்கிற மிருகமாக வெளிச்சத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தது சரியாகத்தான் போயிற்று. நான் அப்படி நினைத்த நேரத்தில் சின்னுவின் மேல் விழுந்து அத்தை அவ்வளவு தூரம் குதறிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும்.
'இன்னும் கூடச் சொல்லியிருப்பாளே. இவனை அங்கே போக விடாதே. போனால் சேலைத் தலைப்பில் முடிந்து கொள்வாள். இவனுக்குச் சூதுவாது தெரியாது என்று. நான் சொல்லி முடிக்கும்போது இவள் மிக மலர்ச்சியுடன் நிமிர்ந்து அவங்க சொல்வதை எல்லாம் ஊமை மாதிரி அங்கேயிருந்தே கேட்டுக் கொண்டுதான் இருந்தீங்களா? என்று படக்கென்று எழுந்தாள். எனக்கு சுரீர் என்று அறை விழுந்தது போல இருந்தது. என் ஒரு வெற்று யூகமே கனத்து மேலே நிஜமாக விழுந்து திகைக்க வைத்தது. மங்காயி அத்தை எவ்வளவு தூரம் எல்லாம் பயங்காட்டியிருக்கிறாள். வெறும் மாட்டோடு பழகினவள்தானே அவள். மாமா இருக்கும்போது வெளி உலகம் தெரியாமல் மாடும் தொழுவும்தான் என்று சந்தோஷப் பட்டுக்கொண்டிருப்பாள். மாமா________________
போனதுக்குப் பிறகு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்திருக்கும். இத்தனை வயது வரைக்கும் அனுபவிக்காத சிரிப்பும், குதூகலமுமாக உலகம் இருப்பதை பொறுத்தக் கொள்ள முடியாது போயிருக்கும். அதெப்படி ஆண்களும், பெண்களும் சின்னஞ்சிறுசுகள்.அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம். ஒரு பெண் அருமையானவள் இன்று தன் புருஷனையும் கூப்பிட்டுக் கொண்டு இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போகலாம். ஒரு பெண் கணவன் இறந்தபின் இன்னொரு மனிதனுடன் எப்படி வாழலாம். அதுவும் தானிருக்கிற தெருவிலே. இதைப் பார்த்துக் கொண்டு அவளுடைய அம்மாவும் அவளுடனே இருத்தல் எப்படி சாத்தியம். தனக்குள் என்னவெல்லாம் தலைகீழாகப் புரண்டு கிடந்ததோ அதைப் பூராவும் இவளுடைய தலையில் மாற்றிவிடடது நன்றாகத் தெரிகிறது. ஒரு விசிறலில் ஒரு மழையின் ஈரப்பதத்தில் காடாக மண்டிவிடுகிற விஷவித்துக்களை விதைத்துக் கொண்டே மங்காயி அத்தை நடமாடியிருக்கிறாள்.
இவளுக்கு நெஞ்சு ஏற்கனவே ஈரம். சின்னு சின்னு என்று உருகியிருப்பாள். உடனே என்னையும் சேர்த்து ஒரே விலங்கில் போட்டுக் கட்டிவிடத் தீர்மானித்து விட்டாள் அத்தை.
'இதையெல்லாம் நம்புகிறாயா நீ என்கிறபோதே அவள் ஏற்கனவே நம்பிவிட்டிருக்கிற முகத்தைப் பார்த்துப் பேசுகிற கஷ்டம் எனக்கு வந்து விட்டிருந்தது. ஒரு அசட்டு வீம்பும் சந்தேகமுமாக அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எந்தச் சிறு கதவின் வழியாகவும் வெளியேறிவிட முடியாதபடி எல்லா வழிகளையம் அடைத்து விடவேண்டும் என்ற திடமான நகர்வுகளில் அவள் இருந்தாள்.
ரொம்பவும் சிதிலமடைந்து விட்ட மனநிலையுடன் சட்டென்று அவளிடம் அடுத்தபடியாக எனக்குக் கேட்கத் தோன்றிற்று.
'என்னை நீ நம்புகிறாய் அல்லவா?"
'யாரையும் நம்பவில்லை என்று சொல்லிக் கொண்டு கல் மாதிரி, கல் நாகம் மாதிரி அசையாது இருந்தாள்.
'நீங்க அவளைப் பார்க்கக் கூடாது' என்று மறுபடியும் சீறினாள். சீற்றத்தின் நச்சு திசையெங்கும் பரவி, சுவாசம் அடைத்துக் கொண்டது போல் நாள் திகைத்துப் போய் இருந்தேன். இது மகாப்பெரிய இம்சையாக இருந்தது. இதுவரைக்கும் எவ்வளவு அவநம்பிக்கை இருந்திருந்தால், இப்படியொரு சாயந்திரத்துக்கும்,________________
ராத்திரிக்கும் இடையில் இப்படி பீடத்தை அசைத்து வேரோடு பிடுங்கி வெளியில் போட்டிருக்க முடியும். எத்தனை ரோஜாச் செடிகளையும், பசலிச் கொடிகளையும் வேரடி மண்ணோடு குப்பைத் தொட்டியில் பார்த்துப் பதைத்திருக்கிறேன். ஒருவினாடி நானே அந்தக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடப்பது போலிருந்தது. சூரி அண்ணாச்சி என் பக்கம் உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு நீ என்ன இப்படிக் கிடக்கிறாய். உன்னைக் குடும்பத்தோடு வீட்டுக்கு வரச்சொன்னேன் அல்லவா? என்கிறார். சிரிக்கிறார். எழுந்திருக்கப் பிரயத்தனம் செய்யச் செய்ய குப்பையும் குப்பைத் தொட்டியும் மலைமலையாக வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு கை வெளியே,விரல்கள் விரியக் குப்பை தொட்டி விளிம்பினையும், விளிம்பில் உடைந்த கம்பியையும் பற்றிக் கொண்டு தவிக்கிறது.
அவள் தவிப்பதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது.
'நீங்கள்.அவளைப் பார்க்கக் கூடாது மறுபடியும் சொன்னாள். ஒரு பிசகின பார்வையுடன் அழுது கொண்டிருக்கிற அவளுடைய முகத்தைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. எவ்வளவு அபூர்வமான அந்த முகம் இப்படிச் சுக்கல் சுக்கலாகி நிற்கிறது. பூகம்பத்தில் அஸ்திவாரம் வரை உடைந்து மேலுக்கு மேல் பாளம் பாளமாகச் சரிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது போல அல்லவா இத்தனை வருஷத்து அனுபவங்களின் கட்டுமானமும் ஆகிவிட்டது. இத்தனை இடிபாடுகளுக்குமிடையில் எங்கே தினகரி கிடக்கிறாள். ஒரு தீனமான திரளாக, இந்தக் குவியல்களுக்கு மத்தியில் இருந்து அவள் கூப்பிடுகிறது கேட்கிறது. காப்பாற்றிவிட முடியுமா? முடியவேண்டும். என்னை, இவளை, தினகரியை எல்லோரும் காப்பாற்றிக் கரை சேர்த்தால்தான் நல்லது.
என்னை அறியாமல் அவளை நான் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் கையொன்றைப் பிடித்து நெஞ்சில் வைத்திருந்தாள். அழுத கண் இன்னும் உலரவில்லை. தலையணையில் முகம் புதைந்திருக்க, ஒரு சிறு புழுப்போல, தீங்கற்ற உயிர்ப்பிராணி போல அவள் படுத்திருந்தாள்.
எல்லாம் இவ்வளவுதானா, ஜன்னல் வழியாக வெண்டைக்காய் காம்போ, பரங்கிக்காய் விதையோ எறியப்படுவது போல அற்பத்திலும் அற்பமாகத் தெருவில் விழ வேண்டியதுதானா. இந்தப்பத்து நிமிடத்திற்கு முன்னால் வரை மேகத்தில் ஊஞ்சல் கட்டி உட்கார்த்தி வைத்தது எல்லாம் என்ன? யாரோ ஒரு மங்காயி அத்தை________________
பயம் காட்டுவாள். அந்த நேரம் பார்த்து நான் நாலு தடவை சின்னு சின்னு என்று சொல்லுவேன். அதோடு என் சரித்திரம்முழுவதுமே அழுகிவிட்ட ஒன்றாகி விட்டதா?
இருக்கட்டும் எல்லாம் இருக்கட்டும். நான் எப்படி என்று நிரூபிப்பதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நானும் நீயும் எங்கே போய்விடப் போகிறோம். எங்கும் போய்விட முடியாது என்பதனால்தானே இப்படி நிறுத்தி வைத்து ஆணி அடிக்கிறாய். "ஆனால் முதலில் சின்னுவைப் பார்ப்போம். என்னுடன் வா. ரெண்டு பேருமாகவே பார்ப்போம். பார்த்த உடனே தெரிந்து போகாதா. சின்னுவுக்கு நம்மை நிமிர்ந்து பார்த்துவிட முடியுமா? அப்படியெல்லாம் என்றால், ஆர்.கண்ணனுக்காகவாவது நான் இதைத் தொடர்ந்து சொல்லாமல் வெவ்வேறு குரல்களில் சொன்னேன்.
'நானும் வரமாட்டேன். நீங்களும் அவளைப் பார்க்கக் கூடாது' என்றாள். ஒரு வகையில் பல் கிட்டிக் கொண்டு முகம் கோணி வதைத்துக் கொண்டு தெளிவற்ற ஒரு பயத்தின் வலையில், முள்ளில் விழுந்து கற்றும் முற்றும் பார்த்தேன். வெகுநேரம் சுற்றிலும் பார்க்க மறந்தே போய்விட்டிருந்தது. இருட்டு அங்கங்கே காத்துக் கொண்டிருந்தது. நிலைக் கண்ணாடி ஆணியில் என் சட்டை கிடந்தது. அப்பா சட்டை போலத் தோன்றிற்று. அப்பா போலவே தோன்றிற்று. 'உனக்கு ஏன் இப்படி நிகழ்ந்து' என்று கேட்டது. அடுத்த வினாடி பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. ஒரு நீண்ட கேவலுடன் என் தோள்கள் குலுங்குவதை நானே உணர முடிந்தது. என் கால்களுக்குக் கீழ் பலகைகள் உருவப்பட்டு எங்கோ அதல பாதாளத்துக்கு எறியப்பட்டு சொத்தென்று ஒரு பறவையின் எச்சம் போல நான் தெறிப்பது தெரிந்தது. ஒரு காகம் மாத்திரம் கத்திக் கொண்டிருந்தது. மிகச் சரியான உச்சி வெயிலில் தெரு உருகி ஓடிக்கொண்டிருந்தது. நடமாற்றமே அற்று தெருவை எல்லோரும் காலி செய்து கொண்டு போய்விட்டது போலிருந்தது.
________________
'நானும் வரமாட்டேன். நீங்களும் அவளைப் பார்க்கக் கூடாது' என்றாள். ஒரு வகையில் பல் கிட்டிக் கொண்டு முகம் கோணி வதைத்துக் கொண்டு தெளிவற்ற ஒரு பயத்தின் வலையில், முள்ளில் விழுந்து கற்றும் முற்றும் பார்த்தேன். வெகுநேரம் சுற்றிலும் பார்க்க மறந்தே போய்விட்டிருந்தது. இருட்டு அங்கங்கே காத்துக் கொண்டிருந்தது. நிலைக் கண்ணாடி ஆணியில் என் சட்டை கிடந்தது. அப்பா சட்டை போலத் தோன்றிற்று. அப்பா போலவே தோன்றிற்று. 'உனக்கு ஏன் இப்படி நிகழ்ந்து என்று கேட்டது. அடுத்த வினாடி பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. ஒரு நீண்ட கேவலுடன் என் தோள்கள் குலுங்குவதை நானே உணர முடிந்தது. என் கால்களுக்குக் கீழ் பலகைகள் உருவப்பட்டு எங்கோ அதல பாதாளத்துக்கு எறியப்பட்டு சொத்தென்று ஒரு பறவையின் எச்சம் போல நான் தெறிப்பது தெரிந்தது. ஒரு காகம் மாத்திரம் கத்திக் கொண்டிருந்தது. மிகச் சரியான உச்சி வெயிலில் தெரு உருகி ஒடிக்கொண்டிருந்தது. நடமாற்றமே அற்று தெருவை எல்லோரும் காலி செய்து கொண்டு போய்விட்டது போலிருந்தது.
ஜவஹர் ராஜையும், திலகா அக்காவையும் தேடிவந்த அதே வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். என்னென்ன வெல்லாமோ அடித்துப் புரண்டு கொண்டு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. எல்லாம் பள்ளிக்கூடமும் புத்தக ம்ெ, சினிமாப் பாட்டுகளும், திலகவதி அக்காவுமாக மாறி அறிச் சுற்றுகின்றன. ஒன்றை நிறுத்தி நிதானித்துப் பார்க்கிற சாவகாசத்துக்கு அமைதியின்றி, ஒன்றின் மேல் ஒன்று, ஒன்றின் இடத்தில்________________
ஒன்றொன்று வந்து போகின்றன. தட்டான்கள் மயமாகப் பறந்துகொண்டிருந்த மழை நாளில் இந்த வாசலில் நாங்கள் இருந்தது ஞாபகம் வருகிறது. அவரைப் பந்தலில் கருநீலத்தில் பூத்துப் படர்ந்த பந்தல் அடைத்துக் கிடந்த வாசலில், தொட்டாலே வாடையடிக்கிற அவரைப் பூச்சியை நான் தொட்டுவிட கிட்டே வராதே வராதே" என்று என்னைக் கேலி பண்ணிய திலகா அக்கா ஞாபகம் வருகிறது. அப்பேர்ப்பட்ட திலகாஅக்கா இருந்த இடத்திலாகடைசியாக இந்தச் சின்னுவும் வந்து உட்கார்ந்துக் கொள்ளவேண்டும். திலகா அக்கா அவளுக்குத்தான் வீட்டை வாடகைக்கு விட்டுவிட முடிவு செய்தார்களா? பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு சின்னு வருவாள். வந்து நம் வீட்டில் குடியிருப்பாள் சின்னுவையும் எனக்குத் தெரியவரும் என்று எல்லாம் எப்படித் தெரிந்திருக்க முடியும். எப்படியோ அவள் போனாள். இவள் இருக்கிறாள்.
எப்போது ராத்திரி தூங்கினேன். எப்போது விழித்தேன் என்று தெரியாமல் நானும் இதோ வந்து நிற்கிறேன். இங்கு வரவேண்டும் என்று எந்தத் தீர்மானமும், முன் முடிவுமில்லை. திடீரென்று இவ்வளவு சிக்கலாகிவிட்டதே எல்லாம் என்ற திகைப்பிலேயே மனம் இருந்தது. தினகரி பாடு என்ன ஆகும் என்று தோன்றிற்று. ஆதாரமற்ற நூலிழைகளில் தொங்கிக் கொண்டு வாழ்வதன் அவசியத்தின் மேல் சந்தேகங்கள் வந்து கூடியிருந்தன. எப்போது இற்று விழும் என்று பயந்து கொண்டோ, எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழட்டும் என்ற முரட்டு தைரியத்துடனோ எல்லாம் வாழ்ந்து விட முடியும் என்று படவில்லை. அப்படி வாழ்வதற்குரிய அருகதையுடையதாக இந்த வாழ்வு இருக்கிறதா என்ன? ஒரு சாயங்காலத்துக்குள் உருட்டப்படுவதற்காக, ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறவேண்டுமா?
பஸ் ஏறி சிவனைப் பார்க்கப் போனால் சிவன் இல்லை. தோழர் என்று நாங்கள் செல்லமாய் அழைக்கிற திருப்பாற்கடலையும் காணோம். சட்டென்று இவ்வளவு பெரிய ஊரில் நான் போய் மாறுதலுக்காகச் சற்று நின்று பேசுகிற அளவுக்குக் கூட யாருமே இல்லாதது போ_இருந்தது. மறுபடியும் பஸ் ஏறினேன். ரோடு வேலை செய்கிறார்கள், அது இது என்று எங்கேயோ இறக்கி விட்டான். வெயிலில் நடக்க நடக்க மூளை கொதித்தது . சட்டென்று டாக்ஸி ஸ்டாண்டிற்கும் மரக்கடைக்கும் நேரே வந்ததும் சின்னுவைப் பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று தோன்றி விட்டது.________________
மேலும் ஆர்.கண்ணன் இறந்ததைக் கேட்ட பிறகு சின்னுவையாவது நான் பார்த்து நான்கு வார்த்தைகள் ஆறுதல் சொல்லத்தானே வேண்டும்.
வாசலின் வலது சுவரில் முன்பு வரிசையாக குரோட்டன்ஸ் தொட்டிகள் இருந்த இடத்தில், ஒரு பெரிய தெரு ஒன்று நாடகத் திரைக்காக வரையத் துவங்கப்பட்டு பாதியில் நின்றது. பக்கத்திலேயே வர்ணங்களும், தூரிகைகளும், உலை மூடியில் கரைக்கப்பட்ட சில மட்டமான பெயின்ட்களுமாக அந்த இடமிருந்தது.
ஒரு சிறு வெள்ளை நாய்க்குட்டி கழுத்துச் செயினை இழுத்துக் கொண்டு குரைத்தது. வெளியே வந்து யார் என்று பார்த்தது சின்னுவின் அம்மாதான். முதன் முதலில் பிரகாரத்தில் பார்த்த அதே முகத்துடன் இருந்தார்கள். சற்றுத் தளர்ந்திருந்தார்கள். கனிவு கூடி ஒரு சிறு புள்ளியில் சிரித்தார்கள். சிரித்தது போலத்தான் இருந்தது. யார் என்று யோசிப்பதற்கான அவகாசத்தை அப்படி எடுத்துக் கொண்டார்கள் போல. ஞாபகம் வந்ததும் உள்ளே வாருங்கள்!" என்றார்கள். போனேன்.
நீண்ட பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தபோது அவர்கள் கண்கள் கலங்கியிருந்தது. எல்லோரும் செளக்யமா அய்யா என்றார்கள். 'எல்லோரும் அங்கேதானே என்று நாங்கள் இருந்த பழைய ஊரைச் சொல்லிக் கேட்டார்கள். புதிய ஊருக்குப் போய்விட்டதைச் சொன்னேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. என்ன கண்னனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கேட்கவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதெல்லாம் எதற்கு என்று அப்படியே இருந்தேன்.
'சின்னுவை வரச் சொல்கிறேன் என்று உள்ளே போனார்கள்.
ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு உள்ளே போனார்கள். சின்னு வந்தாள். அப்படியே இருந்தாள். அக்கா வரலியா என்றாள். சிறிது சிறிதாக அழ ஆரம்பித்தாள். ஜவஹர் ராஜூம் நானும் எந்த கதவைச் சாத்திக் கொண்டு சினிமா போட்டு விளையாடினாமோ அந்தக் கதவைப் பிடித்துக் கொண்டு மாலை மாலையாய் அழுதாள். பொட்டு இருந்தது. அந்த மூக்குத்தி இருந்தது. கழுத்தில் கீற்றுப்போல ஏதோ கிடந்தது. உடம்பில் எந்த வாட்டமும் இல்லை. முன்பைவிட கூடச் சுடர்விட்டிருந்தது. கண்களில் அந்த ஜோதி அப்படியேயிருந்தது. அகன்று குளுகுளுவென்று பார்த்து அப்படியே________________
பூசி வாங்குகிற அதே பார்வையிருந்தது. கன்னம்பூரித்திருந்தது. சற்று உயர்ந்த முன் பற்களைப் பூட்டிக் கொண்டு சிரிக்கிற அவளுடைய வழக்கமான சிரிப்பு இப்போது இல்லையே தவிர ஈரப்பற்றுடன் ஒன்றுடன் ஒன்று இறுகுகிற, நடுப்பல் தெரிகிற அதே உதடுகள், கன்றுக்குட்டிக்கு முதுகு சிலிர்ப்பது போல ஒரு தடவை சொடுக்கிக் கொண்டு அப்படியே இருந்தன.
நல்ல வெயிலில் அனைத்தும் அமைதியாக இருந்தன. நான் சின்னுவையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த ஆஸ்பத்திரிக் கட்டிலில் ஆர்.கண்ணன் மூடப்பட்டிருக்க இவள் உட்கார்ந்திருந்த நிலையின் விசித்திரம் ஞாபகம் வர, தொண்டையெல்லாம் உலர்ந்தது. கழுத்து, தோள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தது முகம். தேர்ந்து எடுக்கப்பட்ட சேலையின் பொதிவில் சின்னு எப்போதும் போல நேர்த்தியாக அழகுடன் நின்றாள். இடுப்பு தெரிந்தது. கையின் தொங்கலில் ஒவ்வொன்றாகச் சரிந்த மூன்று வளையல்கள்.
தூரத்தில் கடைசிவரை வாசல் வாசலாகத் திறந்து போட்டிருந்தார்கள். பசேல் என்று கடைசியில் புடலங்கொடியின் இலைகள் அசைந்தன. அந்தக் கடைசிக் கதவை அப்போதுதான் திறந்திருக்க வேண்டும். வெளிச்சம் திடுதிடுவென்று உள்ளே சிறு பிள்ளை போல ஒடி வந்து இவள் பின்னால் நின்றது. சின்னுவின் இடுப்பு வளைவிலிருந்து கால் வரை திண்ணமாக ஒரு கோட்டை அந்த வெளிச்சம் வரைந்து இதற்கு முந்திய கணத்திலிருந்து அவளை வேறொரு வீச்சிற்கு நகர்த்தி வைத்திருந்தது. இவள் பின்னால் இவ்வளவு வெளிச்சம் அப்பி, இருளிலிருந்து பெயர்த்து எடுத்தது போலச் சின்னுவை நிறுத்தி இருக்க வேண்டாம்.
சின்னு ஒரு முறை, ஒரே ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள்.
இது நான்தானா என்றிருந்தது. எனக்கு யாராவது என் புஜங்களை அப்படியே அமுக்கிப் பிடித்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டால் நல்லது. விருவிருவென்று உச்சந்தலை வரைக்கும் ஒரு பரபரப்பு ஏறி ஒவ்வொரு நகக்கண்ணிலும் மறுபடி இறங்கி வந்தது. சிறு தீ போல நானே எரிந்து அடங்குவது போல இருந்தது. தவிப்பாக இருந்தது. பரவசமாக இருந்தது. நிகழ்ந்து விடாதா என்றிருந்தது. நிகழ்ந்துவிடக்கூடாது என்று படபடத்தது.
சின்னு அப்படியே நின்றாள். ஒரு வாழைப்பூப் போல.________________
மூச்சு மறுபடியும் வந்தது. உஸ்ஸென்று சர்ப்பம் போல நெட்டுயிர்த்தது. பின்னால் கடைசி வரை அதே வெளிச்சம். அதே படவரைக் குழிப் பச்சை. 'வரட்டுமா என்று கேட்கும்போது சின்னு சிரித்த மாதிரியிருந்தது. இவ்வளவு நேரம் அப்படியே நின்றது. பார்த்தது எல்லாம் நீதானா என்று பரிதாபப்பட்டு சிரித்தது மாதிரி இருந்தது. செருப்பை மாட்டிக் கொண்டு நடையை விட்டுக் கீழே இறங்கினேன். தெரு மீண்டும் தெருவாக இருந்தது. Ll