Tuesday 22 March 2016

பிரமிள் பேட்டி - லயம் 11

________________

 

(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
padippakam
***** படுகிறது. ஞானக்கூத்தன் பற்றி அவர் முதலில் "நடை"யில் புகழ்ந்து விட்டு பின்னாடி என் விமர்சனத்தின் இரவலைத் தான் பெற்றார். இந்தச் சந்தர்ப்பமே அவரது முந்திய இரவல்களையும் அம்பலப்படுத்தும் தடயத்தை வெளிப்படுத் துகிறது. இது ஓர் உள்விபரம். இலக்கிய வட்டம் மில் சி.சு.செ.யை, வெ. சா. பழமைவாதியாகக் கணித்த காலம், எழுத்து காலம்தான். அதுவும் எழுத்து வில் நான் லேசாகக் குறிப்பிட்ட ஒரு சிறு விமர்சனத்துணுக்கு தான் அவருக்கு உதவி இருக்கிறது. இந்தத் துணுக்கு உட்பட்ட கட்டுரையை அப்படியே பிரசுரித்தவர் சி.சு.செ. இது அவ ரது உயர்தர ஆசிரியப்பண்பினைக் காட்டுவது. இந்த சி.சு.செ.யை பழமைவாதியாக முத்திரை குத்திய வெங்கட் சாமிநாதன், சூழலை-கலைஞர்களை-தாம் உருவாக்குவதான பிரமையுடன் இளவேனில் பத்திரிகையில் எழுதிய போது அதன் தொடரான விமர்சனம் பத்திரிகையில் நான் மறுப்பளித்து ஒரு கடிதம் எழுதினேன். உடனே அவரது "சிந்தனை இப்படி வேலை செய்திருக்கிறது: "ஐ ஆம் ஏ பிராமின். பிரேமிள் இஸ் நாட் ஏ பிராமின். என்னை அவன் அட்டாக் பண்ணிட்டான். தெயர் ஃபோர் ஹீ இஸ் அன் அன்டி பிராமின்!” உடனே என்னை பார்ப்பன எதிர்ப் பாளன் என முத்திரை குத்தி கடித மூலமும், நேர்ப்பேச்சு மூலமும் பிரசாரம் செய்யத் துவங்கினார் வெ.சா. இவ்வள வுக்கும், விமர்சன மிற்கு நான் எழுதிய கடிதத்தில் இதற்கு ஆதாரம் இல்லை. அன்றிலிருந்து, வெ. சா.வின் ஆத்மா ஒரு பார்ப்பனியப் புழுக்கிடங்காயிற்று. இதற்குத் தீனி போட்டவர்கள் மெளனியும் சுந்தர ராமசாமியும்.

கா. சு. .

 இதற்குப்பின்பு 'கொல்லிப்பாவை மூலம் நீங்கள் வெ. சா.வின் பார்ப்பனியத்தையும் இவரது சகபாடியான சு. ரா. வின் பார்ப்பனியத்தையும் வெளிக்கொண்டு வருகி றிர்கள். இதற்கு ராஜமார்த்தாண்டனின் ஆசிரியத்துவம் உதவி இருக்கிறது சரிதானா? அதேகாலத்தில்தான் வெ. சா. , யாத்ரா' மூலம் உங்களை கிறுக்கு, குரங்கு என்றெல்லாம் துஷிக்கிறார்? இதன் பின்னணிகளையும் நீங்கள் தரவேண்டும்.

பிரேமிள் : யாத்ராவை நடத்திய ஆர். மணியம், ஸி. ஜெயபாலனும், டேவிட் சந்திரசேகருடன் கூட்டாக மணி பதிப்பகத் தின் மூலம் வெ. சா. அம். என்னையும் சேவித்து
- -- --
________________

padippakam
கொள்ளும் முன்பே மணியையும், ஜெயபாலனையும் மூளைச் சலவை செய்துவிட்டார் வெ. சா. இதன் காரணம் என்ன என்பது சமகால இலக்கிய மதிப்பீட்டுச் சரித்திரத்திற்கு அவசிய மான ஒன்றாகும். இதற்குக் காரணம் சாமிநாதனின் சுயப்பிர தானம்தான். தகுதிக்கு மீறிய ஒரு பேராசானாகத் தாம் பிறர் பார்வையில் படவேண்டும் என்பதுதன் யாத்ராவும் மணி பதிப் பகமும் என் பார்வைகளுக்கு இடம் விட்டால், இப்படி இவர் பிறர் பார்வையில் தென்பட இடம் கிடைக்காது. 'கொல்லிப்பாவை' என்னைப் பிரசுரித்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த என்கட் டுரை எதற்குமே மறுபதில் தர முடியாதிருந்த வெ. சா. , எனக்கு எதிராக ராஜமார்த்தாண்டனை மூளைச்சலவை செய்வதற்காக 'பிரேமிள் உங்கள் குரு' என்றெல்லாம் ஏளனம் செய்து கடிதம் எழுதி இருக்கின்றார். யாத்ரா - மணி பதிப்பகத்தினருள் டேவிட் மட்டும் வெ. சா. வுக்கு மசியவில்லை. மணியும், ஜெய பாலனும் யாத்ரா மூலம் வெ. சா. வின் பார்வைகளை மட்டுமே எவ்வித விவஸ்தையுமற்று பிரசுரிப்போராயினர். போகப் போக, தங்களை வெ. சா. உபயோகித்த காட்டுமிராண்டிப் போக்கு அவர்களுக்கே சகிக்கலை யாத்ரா நிறுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். மொத்தத்தில் யாத்ரா மூலம் வெ. சா. பரிபூரணமான பார்ப்பனியப் புழு மூளையாக மட்டும்தான் தம்மை அம்பலப்படுத்திக்கொண்டார். அது நடந்து கொண்டிருக் குப்போதே, யாத்ராவில் டேவிட் எழுதிய ஒரு கடிதம், வெ. சா. வின் போலித்தனமான இலக்கிய ஞானத்தை சூனியமென்று காட்டிவிட்டது. பிறகு, வெ. சா. வின் உ. வே. சா. ஊதல் கட்டுரையை நிர்மூலமாக்கிய கயிற்றரவு என்ற கால சுப்ர மணியத்தின் கட்டுரை லயம் இதழில்.

கா. சு. 
இவ்வளவு உள்விபரங்கள் கொண்ட பிரச்சினை களின் பின்னாலான ஒட்டத்தை மலினப்படுத்தி உங்களுடைய "எழுத்து காலக் கட்டுரைகள் பார்ப்பனச் சார்பானது என் கிறார்களே? -

பிரேமிள் : 
என் எழுத்து காலக் கட்டுரைகள் ஆன்மார்த்தத்தையும் செவ்விய இலக்கிய மதிப்பீடுகளையும் கொண் டிருந்தவையே. மேலே நான் கோடி காட்டும் வெ. சா. வீய சுயப்பிரதானப் பார்ப்பணியம் என்னிடமிருந்து ஒரு புதுவித அம்சத்தை வருவித்தது. இந்த அம்கம், இந்தப் பிரச்சினைக்கு
________________

padippakam
பிரசுரிக்கப்படாத காரணத்துக்காகத்தான் வவுத்தெரிச்சலைக் கொட்டுகிறார் என்று மட்டுமே இவ்விபரங்கள் பேசுகின்றன. ஞானக்கூத்தனும் இதே காரணத்துக்காக, செல்லப்பா மீது காறி உமிழ்ந்தவர்தாம். அதாவது, முன்றிலாரும் ஞா. கூ வும் ஒரே குப்பைக் கூடைவாசிகள். இதனால்தான் தமது எந்த ஓர் எழுத்திலும் வைதீகம் பண்ணி இராத செல்லப்பாவை வைதிக வாதி என்று தூவிக்கும் முன்றிலார், வெறும் வைதீகப் பிண்ட மான ஞா. கூ வுக்கு ஜால்ரா போடுகிறார். ஆக, முன்றிலின் அந்தராத்மாவில் எரிவது அவரது சொந்தப் பிரபலப் பிரச்சினை பற்றிய வவுத்தெரிச்சல்தானேயன்றி, வைதிகப் பிரச்சினை யல்ல. இலக்கிய விமர்சன மதிப்பீடுகளைப் பயன்படுத்தி எதுவும் பண்னத் தெரியாத கையாலாகாத்தனம் மட்டும் அல்ல, 'நான், நான் என்றடிக்கும் புழுமூளைத்துடிப்பும் காரண மாகும். செல்லப்பா, முதலில் பிரேமிளை அபரிமிதமாகப் பாராட்டிவிட்டுப் பின்னாடி சரியானபடி சிவிக்காட்டினார் என்று முன்றிலார் பேத்துவதற்கு பிரசுரங்களின் அடிப் படையில் கிடைக்கும் ஆதாரம் எதுவுமில்லை.

முதலில் பிரேமிளை செல்லப்பா எழுத்துவில் பிரசுரித்தார். இதன் மூலம் எழுத்துவின் விமர்சன இயக்கமே ஒரு எதிர் பாராத ஆழ்ந்த பரிமாணத்தைப் பெற்றது என்பதும், அதன் புதுக்கவிதை இயக்கம் ஒர் அபூர்வ கவிஞனைப் பெற்றது என்பதும் தான் சரித்திரம். இதில் பாராட்டு, எதிர்பார்ப்பு எதுவும் தேவைப்படாத நிறைவேற்றம் நிகழ்ந்துள்ளது. செல் லப்பா, முதன் முதலில் எழுத்து வடிவில் பிரேமிளைப் பற்றிக் கூறியவை இலக்கிய விசாரம் என்ற தமது பிரசுரத்தில் தான். காரணம், பார்வை' என்ற அவரது பிரசுரத்தில் குழு ரீதியாக, மணிக்கொடி எழுத்து, எழுத்தாளர்களை அவர் கணித்தமைக்கு, ‘கசடதபற'வில் பிரேமிள் தந்த எதிர்ப்பு. "இலக்கிய விசாரத்துக்கு பதில் தரும் போது, ‘கசடதபற’ சார்ந்த கவிஞர்களை (ஞா.கூ. அடங்கலாக) கவிஞர்களாகத் தாம் ஒப்புக் கொள்வதில்லை என்று 'கசடதபற'விலேயே ரேமிள் எழுதியமை விசேஷ கவனத்துக்குரியது. இதுதான் செல்லப்பா, என்னை ஆரம்பத்தில் அதுவும் வைதீக எதிர் பார்ப்புடன் பாராட்டியதாகப் புனைந்து சுருட்டி வாயில் தைத்து இழுக்கும் முன்றிலாரின் கூற்றைச் சந்திக்கிற உண்மை விபரம்.


________________

padippakam
டதபற-வை சி.சு.செ. "இலக்கியப் புறம்பானது என்று கணித் தார் என்பதும் கூட இங்கே கவனிக்கப்பட வேண்டும். அதன் பக்கங்களிலேயே அதன் ஸ்டார்கள் உட்பட்ட கவிஞர்களை எடுத்தெறிந்து எழுதியவன் பிரேமிள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் முன்றிலாருக்கு செல்லப்பா ஒரு வைதீக வாதி, ‘கசடதபற’ ஞா.கூ. ஒரு காளிதாசன்.

எழுத்து இயக்கமோ அதை நடத்திய செல்லப்பாவோ வைதீகம் சார்ந்தவர்களல்ல என்பதற்கு மறுக்க முடியாத உதா ரணம், அதன் இதழ்-13 (பெப் 1960)ல் வெளிவந்த ஜ. தியாக ராஜன் (அசோகமித்திரன்) கதையான மஞ்சள் கயிறு: இது பார்ப்பனச் சீரழிவை அப்படியே படம் பிடிக்கிற கதை. இதற்குப் பிறகு எழுத்துவுக்கு அ.மி. அனுப்பிய கதைகளைச் செல்லப்பா நிராகரித்தார். அவை பிறகு வேறு இடங்களில் வெளிவந்தவை. பின்னாடி அ.மி. எழுதியவை rணித்த பார்ப்பனியப் படப்பிடிப்பை வேண்டுமென்றே தவிர்த்து எழுதப்பட்டவைதாம். கணையாழி, கசடதபற காலம் அது.

முன் கூறிய இலக்கிய விசாரத்துக்குப் பிறகுதான், "தீபத்தில் தமது எழுத்து அநுபவங்கள் கட்டுரைத் தொட ரில் பிரேமிள் பற்றி அபரிமிதமாகப் பாராட்டினார் செல்லப்பா. அச்சமயத்திலேயே பிரேமிளின் வைதீக எதிர்ப்பு திரட்சி பெற்று விட்டது (Thought - அஃக்). எனவே பிரேமிளிடம் செல்லப்பா, வைதீகச் சார்பை எதிர்பார்க்க முடியாத நிலையில்தான் அபரிமிதமாக பாராட்டினார்உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தைச் சாதித்தவன் என்று. இதற்கும் பின்னாடி, கைப்பிடியளவு கடல் முன்னுரையில், பிரேமிளின் படிமவியல் இரண்டாயிரம் வருஷத் தமிழ்க் கவிதைச் சரித்திரத்தில் புதுமையானது என்கிறார். இந்நிலையில், எழுத்துவடிவ சாட்சியாக செல்லப்பா கூறி யவை அமைந்துவிடுகின்றன. எனவே முன்றிலாரின் கூற் றுக்கு, அவரது வயிற்றில் எரியும் அமிலத்தைத் தவிர ஆதாரம் என்ன?

கா.சு. 
வைதீகம் என்று எதைச் சொல்கிறீர்கள்? வைதிகம் என்றால் என்ன?

பிரேமிள்: 

வைதீகம் என்பதுடவேத மரபுகளைச் சார்க்க
________________

padippakam
உண்டாகிறது. இருள் என்பதில் (கடவுள், செய்யுள் என்ப வற்றில் போன்று) ள் விகுதியாகும். பெருநிலை பெறா மல் இப்போதே இருக்கும் நிலையினையே இது குறிப்பிடு கிறது. இது இரவு பகல் இரண்டையும் உட்கொண்ட நமது வாழ்வின் நிலையைக் குறிப்பிடும் பதமாகும். இப்படி இரவு பகலாக இருப்பதைத் தாண்டி, இன்னொரு பரிமாணத்திலி ருப்பதே ஒளித்திருக்கிற ஒளிர்மய நிலை. இத்தகைய பிரச்
சினைகளுக்குள் நுழையும் முன்றிலார், Fools rust in where angles fear to tread’ stop surăspáGiu நினைவுறுத்துகிறார். 'ஏலாத செயலிலே ஏனையா முயலுதீர்?' என்று புதுமைப் பித்தன் வேறு கேட்கிறார்.

கா. சு. 
சந்தஸ் பற்றி விளக்க முயன்று, எதையெ தையோ சொல்லி விட்டு, சந்நதம் எந்த மொழிச் சொல்அதையும் சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறது முன்றில்?

பிரேமிள்: 
நுண்ணறிவுள்ளோருக்கு இப்படி நான் விளக்காமலே அதை நான் தமிழ்ப்பதம் என்று கூறுவது புரிந்தி ருக்கும். ஏனெனில் சந்நதம் என்பது மனோவியல் ரீதியாக ஓர் ஆதி நிலை. எனவே அதற்குரிய பதம் இரவலாக முடி யாது. சந்தஸ் என்ற பதம் இலக்கண ரீதியானது. இரவல் பெறப்படக் கூடியது. இதற்கு மேல் போய்கூட விளக்க வேண்டுமா?

கா. சு. : 
இங்கே, சமஸ்கிருதம்-தமிழ் பற்றி ஒரு மேற் கோளைத் தரலாம் என்று நினைக்கிறேன். இதை ஈழத்துத் தமிழ் அறிஞர் பண்டிமணி சி. கணபதிப்பிள்ளையின் கட்டுரை யிலிருந்து எடுத்துத் தம் எழுத்து (ஏடு-55 ஜூலை 6.3) தலையங்கமான விஷ(ம)க் கருத்துக்கள்'-ல் தந்திருப்பவர் சி.சு. செல்லப்பா:
உயர்ந்தோர்கள் வழங்கிய சொல் வடிவங்கள் இரண்டு வகை. ஒன்று ஆரியம். மற்றது தமிழ். 'ஆரியமும் தமி ழும் உடனே சொலிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே." ஆரியம் காரியத்தை விசாரிப்பது. பொருள் இந்தப் படியை உணர்த்துவது. தமிழ் விசாரித்தறிந்த உண்மைப் பொருளில் அன்பு சுரப்பது, ஆரியம் 山學輕歌 தமிழ் தாய்; ஆணும்
________________

padippakam
ஒன்றை ஒன்று இன்றியமையாதது. ஒரு கயிற்றின் இரு புரி கள். மகரிஷிகள் காரியத்தை விசாரிக்கும் போது ஆரியர்; விசாரித்ததில் அன்பு செலுத்தும் போது தமிழர். ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் (தேவாரம்). ஆண் பாகம் ஆரியம்; பெண் பாகம் தமிழ். தோடுடைய செவி பெண்பா கம். சம்பந்தர் சொன்னது தமிழ்.'
எழுத்து வின் பார்ப்பணியம் பற்றி முன்றில் பிதற்றுவ தற்கும், வேளாளர் நாகரீக சைவசிந்த திராவியம் பேசுவதற் கும் இக் கூற்றில் பதில் உண்டு.

கா. சு. 
நேர் சந்திப்புகள் பற்றியும் முன்றில் கூறு கிறது. இதற்கு முன் வேறு சிலரும் நேர் சந்திப்புகளில் நிகழ்ந்தவை பற்றித் திரித்துள்ளனர்.
பிரேமிள் என் கருத்துக்களை எதிர் கொள்ளும் திராணி யற்றவர்களின் இயக்கங்களுள் ஒன்று, இல்லாத தலைகளை எனக்குப் பொருத்தி என்னை ராகூடிஸ்னாகக் காட்டுவதாகும். "நேர் சந்திப்பில் நான் அவருடைய இந்தத் தலையைப் பார்த் தேன்’ என்ற விதமாக, 1972 லிருந்து ஒவ்வொருவரும் ஒவ் வொரு தலையை என்னுடைய தோளில் நிறுத்தி வந்திருக்கி றார்கள். இத்தகைய பெளராணிகர்களுக்கு பதில் சொல்வது வியர்த்தம் மட்டுமல்ல, அறிவார்த்தமாக வாசகர்களுக்கு இது எவ்வித லாபமும் சேர்க்காது.

கா. சு. 
புதுமைப்பித்தன் பற்றி, தீவிர இலக்கியப் பண்புள்ளவர்களும் இடதுசாரிகளும், பண்டிதவாதிகளும் மிக அதிக அளவில் எழுதியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் பாராட்டப்படவேயில்லை என்று கலைமகள்' பத்திரிகையில் அவர் கதைகள் பிரசுரமான காலம் பற்றி முன்றிலில் நினைவு கூறப்படுகிறது.இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பிரேமிள் : 
கலைமகளுக்குத் தமது கதைகளை அனுப்பி அவை நிராகரிக்கப்பட்டமையாலும், அதே கலைமகள் முன்றி லாரது ஸ்கூலில் அவருடன் படித்த பாவத்தைச் செய்த கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் பிரசுரித்தது என்பதும்தான் இந்தப் பேத்தல் ஆராய்ச்சியின் பின்னணி. பு. பி. க்கு சி. சு. செல்லப்பா, ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார். 856üa 6ü
________________

padippakam
ஒன்று. இதனால்தான் கலைமகளே அவரிடம் கதை கேட்டு, வாங்கிப் போட்டிருக்கிறது. அதுவும் பு. பி. யினால் ஏளனப் படுத்தப்படுவதைச் சகித்தபடி (விபரம் மீறல் பேட்டியில்) கி. வா. ஜ. இதைச் செய்திருக்கிறார். பு: பி. யின் இந்த ஏளனப் பேச்சின் பின்னணியில், அவர் எவ்வளவு ஸ்திரமான விதத்தில் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டார் என்பதும், அவரைப் பற்றி கி. வா. ஜ. ஏன் கலைமகளில் எழுதவில்லை என்பதும் வெளிப்படுகிறது. மெளனி பற்றி பு: பி. தந்த அங்கீகாரமும் பாராட்டுதலும், ஏற்கெனவே பு: பி. பெற்றிருந்த அதிகார பூர்வமான இலக்கியக் கருத்துலக விதானத்தையே காட்டுகிறது. இதனைச் சரிவர உணராத கி. வா. ஜ. கல்கி முதலியோரின் ஸ்தானம் இலக்கிய பூர்வ மானவர்களால் எத்தக் காலத்திலும் ஏற்கப்பட்டதில்லை. எனவே இவர்கள் பு. பி. யைப் பாராட்டவில்லை என்பதும், பு: பி. பாராட்டப்படவில்லை என்பதும் ஒன்றகாது. பார்க்கப் போனால் மெளனி, பிச்சமூர்த்தி, லா, ச. ரா. முதலியோர்களை விடவும் மிக அதிகமாகப் பாராட்டப்பட்டவர் பு. பி. இது சரித் திரம். பார்க்கப் போனால், கதாசிரியராக இயங்கியிரா விட்டாலும், ஒரு கலாச்சரா சக்தியாக இயங்கிய டி. எஸ். சொக்கலிங்கம் பற்றித்தான் அவர் சரிவரப் பாராட்டப்படா தவர் என்று கூறலாம். உயர்சாதித்தனம் பண்ணுகிறவர்களின் வாயிலிருந்து வெளியேவரும் சாக்கடையில் சொக்கலிங்கம் போன்ற நெருப்பின் பெயர் வெளிப்படாது. ஏனெனில் அவர் பெயரே இச் சாக்கடை இயக்கங்களுக்கு ஆபத்தாகும்.

பு: பி. இடைக்காலத்திய கலைமகளில் பிரசுரம் பெற்றுத் தெரியவந்தவர் அல்லர். அவர் மணிக்கொடி போன்ற பத்திரி கைகளில் பிறந்து வளர்ந்தவர். மணிக்கொடி இயக்கம், காந்திய பாரதி இயக்கமாகும். இதில் வைதீகம் இடம் பெற்ற தில்லை. அந்தக் காலத்தில் ஆசிரியர்களுள் வீர்யமும் மேதமை யும் வாய்ந்தவராக பு: பி. மணிக்கொடி இயக்கத்தினுள்ளேயே மதிப்புப் பெற்றிருந்தவர். அன்றைய பாராட்டுகள் உடனடி யாக எழுத்து வடிவம் பெற்றவையல்ல. பின்னாடி க. நா. சு. மூலம் பு: பி. மிக முக்கியமான சிறுகதையாசிரியராகத் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்தமை, க. நா. சு. வின் தயவான பட்டியல்களில் பதவி தேடி அலைந்த முன்றிலாருக்கு மறந்துவிட்டது. இலக்கியச் சிறுபான்மையினருள் அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்தவரானது. நா. சு. வின் பார்வை,

________________

padippakam
பு. பி. யின் மறைவுக்குப் பிறகு முதன்மையாக கு. அழகிரிசாமி யாலும், இரண்டாவதாக பரந்துபட்ட தளத்தில் சிதம்பர ரகுநாதனாலும் பாராட்டப்பட்டது. விமர்சன அணுகுமுறை களை ஆதர்சித்து எழுத்து'வில் சி. சு. செல்லப்பா வளர்த்த இயக்கத்துக்கு ஈடுகட்டிய படைப்பாளிகளுள், முக்கியமான வராக எழுத்து வில் இனம் காட்டப்பட்டவர் பு. பி. இது செல்லப் பாவுக்கு, பி. எஸ். ராமையா மீது இருந்த பெர்சனலான பரி வையும் மீறி நிகழ்ந்த விமர்சன இயக்கமாக எழுத்து'வை இனம் காட்டுகிறது - பு. பி. எழுத்து வில் குறிப்பிடப்பட்ட விதமும், விமர்சிக்கப்பட்ட தோரணையும்.

கா. சு.

 பு. பி. போன்றோர் தொடர்ந்து ஜீவிதநியாயம் பெறுவது எந்த விதத்தில் என்பதைச் சொல்லுங்கள்.

பிரேமிள் :
 பு. பி., பிரேமிள் போன்றோர். ஏதோ ஓரிருவரினால் பெயர் குறிப்பிடப்படுவதானால் ஜீவித நியாயம் பெறுவோரல்லர். இவர்களது ஜீவித கியாயம் இவர்களது பார்வை களுக்குக் கிடைக்கும் மூர்க்கமான எதிர்ப்புகளின் விளைவு ஆகும். விசேஷமாக பிரேமிளுக்கு மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் மிகுந்து வந்துள்ளமையின் காரணம், அவருக்குத் தரப்படும் மூர்க்கமான முட்டாள்வாத எதிர்ப்புகள் அவர்மீது முட்டி மோதிச் சரிந்து நகர்கிற ஓர் இயக்கத்தின் விளைவு விஞ்ஞான பூர்வமான அறிவார்த்தமும் இந்த மண்ணு பண்டைகளும் மோதும்போது, இதுதான் நடக்கும்; இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அறிவியல் நாடித்துடிப்பின் மூலம் தங்க ளுடைய இயக்கங்களை நியாயப்படுத்திக் கொள்வோரின் மத்தியில், பிரேமிளின் செல்வாக்கு நீடிப்பதனால்தான், ஒரு சமயத்தில் அவர்மீது காட்டம் காட்டிவிட்டுப் பின்னாடி தம்மைத் திருத்திக் கொண்டார் சி. சு.செல்லப்பா. அப்படிக் காட்டுவது தமக்கே ஆபத்து என்று வாளாவிருந்தனர் க. நா. சு. வும் நகுலனும் காட்டம் காட்டி முறிந்து விழுந்தவர் வெங்கட் சாமிநாதன். இவ்வளவும் நடந்தபிறகும்கூட,_அறிவார்த்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, பிரேமிள் சிறப்பிதழ் ஒன்றினை 'மீறல் சார்ந்த புதியவர்கள் (என். தண்டபாணி, குருநாத் கே. ரஞ்சன்) வெளியிட முன் வந்தமை, மேற்படி எவருடைய தயவுக்கூற்றுகளோ, தாக்குதல்களோ, பிரேமிளின் செல்வாக் கைப் பாதிக்கவில்லை என்பு:ஆந்ததன் காட்சியமாகும். இதைச்
__--_-_
________________

padippakam
கின்றன - சிறப்பாக அன்று யாத்ரா', இன்று முன்றில் மற்றும் கொசுறு மண்ணுகள்.

கா. சு. 
புதுமைப்பித்தன் நம்பளவன்' என்று சொன்ன தற்காக முன்றில் விளக்கம் சரியா?

பிரேமிள்
 புதுமைப்பித்தன் நம்பளவன்' என்று தமிழ் வாதிகளைக் கிண்டல் பண்ணியது முதல் குரங்கே தமிழ்க் குரங்கு என்ற அவர்களுடைய தொன்மை வாதத்துக்காக மட்டு மல்ல. பிளேட்டோவுடன் ஒப்பிட்டால் நமது திருவள்ளுவர் ஒரு தவளும் குழந்தை' என்று அவர் சொல்லி வந்திருக்கிறார் (தகவல் கு. அழகிரிசாமி). சங்க இலக்கியம் என்பவை இலக் கியத் தகுதியே பெறமாட்டாத தரத்தவை என்ற அவருடைய பார்வை மெளனியிடம் எதிரொலித்திருக்கிறது. பு. பி. யின் தீவிர கெளரவத்துக்கு உரியதாக இருந்த தமிழிலக்கியம் கம்ப ராமாயணம்தான் - ஆரிய எதிர்பாளர்களால் இறக்கி வைக்கப் படுவது கம்பராமாயணம், தூக்கி நிறுத்தப்படுவது சங்க இலக் கியமும் திருக்குறளும். இத்தகைய விபரங்கள் உண்மையில் முன்றிலின் சரக்கு மண்டியில் பு. பி. யை சேர்க்க இடம் விட மாட்டா. ஆனால் அறிவார்த்தமாக முன்றிலின் சரக்கு மண்டி கட்டுப்படுத்தப்படாமையினால் அதற்குள் பு: பி. யும் அறுக்கப் பட்டு உப்புக் கண்டமாக பாக் பண்ணப் பட்டுள்ளார். இளங் கோவை மெளனி தரமற்றவராக எங்கும் கூறியதில்லை. சிலப்பதிகாரம் இலக்கியமே இல்லை என்று ஈ. வெ. ரா. வும் தான் கூறியுள்ளார். காரணம் இளங்கோவிடம் உள்ள பார்ப் பனசார்பும் பெண்ணடிமைப் பிரச்சாரமும். மெளனி கூட இளங்கோவை நிராகரித்திருந்தால் அதன் காரணம் அது ஆரியச் சார்பில்லாத கண்ணகி என்ற தேவதை பற்றியது என்பதாகவே இருக்கும். இளங்கோவின் இந்நிலை அதி சுவாரஸ்யமானது. இந்நிலைக்கு அத்தகைய ஒரு கவி இலக்கா கியமை, அவன் ஓர் அறிவார்த்த சமூகத் தராசுக்கோல் நிலை யில் நின்றமையாகும். இந்தத் தராசுக்கோலைப் புரிந்து கொள்ள இன்றைய முரட்டு மண்டைகளுக்கு முடியாது - அவை ஆரிய மண்டைகளோ திராவிட மண்டைகளோ - இரண்டாலும் முடியாது.
கா. சு. வெ.சா. வையாபுரிப்பிள்ளை' என்ற தலைப் M S S STS STS SSAS SSAS STTSTSS0SSSMSSSS - .ம - ட
________________

padippakam
கேட்கிறது? என, அடா போட்டு மீறல் சிறப்பிதழ் பேட்டி யில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது மிகமிகப் பொருத்தமானது என்பது பலருடைய பார்வை சமூக ரோஷம், மானுட ரோஷம் ஏதுமில்லாத வகையில் இதை முன்றில் குத்தம் சொல்கிறது. இதேதான், பெரியார் ஈ.வெ.ரா., சி.என். அண்ணாதுரை ஆகியோருக்கு சாகித்ய அகாதமி பிரசுரத்தில் இடம்தரத் தடை விதித்த தமிழவன், சா. கந்தசாமி, ஜெயகாந்தன் கும்பலுக் கும் பொருந்தும். இத்தகையவர்களை உரிய சமயத்தில் உரியபடி கண்டிப்பவர் நீங்கள் ஒருவர்தாம். இத்தகைய கண்டிப்புகளைத் தராமலே, முன்றில் ஒருபுறம் இத்த கையவர்களுடன் சமரசங்களையும் மறுபுறம் பார்ப்பன எதிர்ப்பு என்ற பம்மாத்தை அதுவும் ஜாதிச் சண்டைத் தளத்திலும் செய்கிறது. சென்ற லயம் பேட்டியில் முன்றில் குத்திக் காட்டப் பட்டதும், அது தமது உண்மைச் சொரூபத்தைப் படு ஆபாசமாக, இதழ் 17-ல் அம்பலப்படுத்தியுள்ளது. முன்றில்: காரருக்கும் இவரது பள்ளித் தோழராக இருந்த கிருஷ்ணன் நம்பிக்கும் இடையே பெர்சனல் எரிச்சல் இருந்ததை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல சிறுகதையாசிரியர் களில் ஒருவரான கிருஷ்ணன் நம்பி, தமிழின் மிகச் சிறந்த குழந்தைக் கவிஞருமாகத் தனித்து நிற்கும் சிறப்புப் பெற்றவர் என்பது என் அபிப்ராயம். இவரை மட்டம் தட்ட முன்றில் சில பிரயத்தனங்களைச் செய்துள்ளது. இதன் பின்னணியை நீங்கள் வாசகர் முன் வைப்பது பொருத்தமாயிருக்கும்.

பிரேமிள்: 
இந்தப் பெர்ஸனல் எரிச்சலை கிருஷ்ணன் நம்பியே அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவர் இதைக் குறிப்பிடும் தோரணை ஒருபுறம் முன்றிலாரின் இப்போதைய அம்பலவா ணத் தோற்றத்தை அப்படியே காட்டுவதாகவும் மறுபுறம் நகைச் சுவையாகவும் இருக்கும். சரஸ்வதி'யில் நம்பியின் 'நீலக்கடல் சிறுகதை வந்ததிலிருந்து முன்றிலாருக்கு அவர் மீது கடுமையான எரிச்சல். பிறகு நம்பியின் சுதந்திரதினம் கதை கலைமகளில். இவ்விரண்டும் தமிழின் அரிய சிறுகதை களின் வரிசையில் நிற்பவை. சதங்கையில் பின்னாடி அவர் எழுதிய கணக்கு போன்றவற்றில் கிருஷ்ணன் நம்பி தொய் வடைகிறார். இருந்தும், நம்பியன் தரக்குறைவான கணக்குக்கு ஈடு சொல்லக் கூடிய எதையும் கூட முன்றிலார் எப்போதும் எழுதியதில்லை. சரியதோழன் ஒருவன் எழுதிய
________________

padippakam
உதிர்த்த தெய்வசிகாமணிக் கூற்றுக்களுள் ஒன்று இது: :பத்திரிகைகளில் தங்கள் கதை வருவதற்காகக் கூட்டிக் குடுக்கிறாங்க இந்த முன்றிலார் பிரசுர சாந்தித்யம் பெற எவ்வளவு முயன்றும் முடியாமைதான் இந்த மாமணிக் கூற்றில் மிளிரும் பொருள். இப்படி எத்தனையோ!

ரி.டையர்மெண்டுக்குப் பிறகு சொந்தச் செலவில் புத்தகங் களை அதுவும்ராம்ஜிசுவாமிநாதன் என்ற பிராமண அன்பர்உதவி மூலம் வங்கிக்கடன் பெற்று பிரமுகர்’ ஆகப் படாதபாடுபட்டுக் கொண்டிருப்பவர் முன்றிலார் செல்வாக்கு உள்ள க. நா. சு. நகுலன் ஆகியோர்களைப் போய்ப் பாத்து பல்லிளித்து பவிஷ தேடித் திரிந்த அதே சமயத்தில் என்னிடமும் தமது நூல்களைத் தந்து பார்த்திருக்கிறார். இவர் பார்ப்பனியத்தைப் பார்த்து வலித்துக் காட்டும் முன்றில், நகுலன், கோபிகிருஷ் ணன், காசியபன் போன்றோரையே பிரசுரிக்கவும் செய்கிறது. நகுலனுக்கு விமர்சனம் சுட்டுப் போட்டாலும் வராது என்பது துண்ணிய இலக்கிய அபிமானிகளுக்குத் தெரியும். ஆனால் எந்தப் பிசாசுக்கு எந்தப் பிண்டத்தை வைத்து சாந்தி பன்ன னும் என்ற அதர்வண வேதாகமம் அவருக்கு அத்துபடி. முன்றில் பிரசுரித்த நகுலனின் வாக்குமூலம் நாவலில், கடைசித் தீர்ப்பு வழங்குபவர் ஒரு சாஸ்திரி. அதுவும் இது எதிர்காலத்தில் நடக்கும் கதை. எதிர்காலத்தில் கூட நம்பள வாதான் டாப்டக்கர் நாற்காலியில் இருப்பார் என்ற பார்ப் பணியம் இதில் வெளிப்படுகிறது. இதை முன்றிலார் கண்டுக்க மாட்டார். ஏனெனில், அவரது பெயரைக் குறிப்பிட்டு அதே நூலின் பின்னுரையிலும், அவ்வப்போது வேறு வேறு இடங் களிலும், நகுலன் அவருக்கு பிண்டம் வைத்து வருகிறார்.

கா. சு. 
கிருஷ்ணன் நம்பி தம் கடைசி காலத்தில் எழுதிய மருமகள் வாக்கு கதை மிக உயர்தரத்தில் அமைந் திருக்கிறது. அரும்பு (ஆகஸ்ட் 94) இதழில், அதைத் தேர்ந் தெடுத்து, வெளியிடச் செய்திருக்கிறேன். திருநெல்வேலி காஞ்சனை சீனிவாசன், கிருஷ்ணன் நம்பியின் யானை என்ன யானை? என் குழந்தைக் கவிதைத் தொகுப்பை மறுபிரசுரம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்குக் புத்தகம் கிடைக்க மாட்டேனென்கிறது. கிருஷ்ணன் நம்பியின் - **** - - s: so - i); - 5ಣಿ ಶಿಡ್ಲಿಲ್ಲಿಸಿ
- - - -- - - - - - r- re-r--r--r- * ٭-اے- = --آر-اے- = --سم
________________

padippakam
பித்தனுக்கு இணையானவர் என்றுதான் மா. அரங்கநாதன் நினைத்திருந்தார். அவருடைய ஞானக்கூத்து தொகுப்பின் பின்னுரையில் க. நா. சு. அவரைப் போர்ஹேயுடன் ஒப்பிட்டுப் பாராட்டிய பிறகு, தாம் போர்ஹேயைவிடச் சிறந்தவர் என்ற நினைப்பு அவருக்கு இப்போது என்று ஒரு நண்பர் குறிப்பிட் டார். உங்களிடமிருந்தும் நல்வாக்குப் பெறுவதற்காக அவர் தவித்ததை நாமறிவோம். விஷ்ணு நாகராஜனுக்கும், கோபுல் பரிக்கும் தந்த ஒரு லேசான சிலாகிப்பைக் கூட நீங்கள் அவருக்குத் தரவில்லை என்ற எரிச்சல் அவரது இதழ் 17-ல் வெளிப்படுகிறது. மீறல் சிறப்பிதழின் முடிவில் அவரது கட்டுரை ஒன்றை மட்டும் நீங்கள் குறிப்பிட்டதை வேறு நினைவு கூர்கிறார். அவரது பெயருடன் பரமசிவன் என்ற ஆய் வாளரின் பெயரையும் குறிப்பிடுகிறீர்கள். வெ. சா.வின் திருகு தாளங்களுக்கு இவை ஓரளவு பதில் தர முயற்சிப்பதற்காக இவற்றை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மீது அரங்கநாதன் பாய்ந்து பிறாண்டும் தோரணையைப் பார்த்தால்...

பிரேமிள் : .
வெ.சா. வும் முன்றிலாரும் ஒரே ரத்தமாகி விடுகிறார்கள். சிலவேளை இந்த அடிப்படையில் இவ்விரு வரும் சேர்த்தி ஆகக்கூட இடமுண்டு!...

விஷ்ணு நாகராஜனின் மன ஊற்று கதைத் தொகுப்புக் குத் தந்த முன்னுரையில் நான் அவரை இலக்கியச் சாதனை யாளராகக் குறிப்பிடவில்லை. ஆரோக்கியமான கதையாளர் என்றே தகுதிப்படுத்தியுள்ளேன். கோபுல்பூரீயையும் இலக் கியச் சாதனையாளராக நான் சென்ற லயம் இதழில் கூற வில்லை. ஆனால் இப்போது மோஸ்தர்களுக்கு ஏற்ப இலக்கியம் பண்ணுவோரைவிட உதாரணமாகத் தமிழவனைவிட - அபார சக்தி வாய்ந்தவர் என்பதை உணர்த்தி உள்ளேன். காலசுப்ர மணியத்தின் கயிற்றரவு : வெங்கட்சாமிநாதனின் உ.வே.சா' என்ற (லயம்-9) கட்டுரையும் அவரது பிராய்டு பற்றிய டைஜஸ்ட் கட்டுரையான மறைக்கப்பட்ட உண்மை (மீறல்-3) யும் அற்புத அறிவார்த்த சாதனைகள். இத்தகைய எதையும் முன்றிலார் முயன்றால் அவரது பேனாவிலிருந்து ஏதும் வராது.

SSAAAS S SLS tt MttT TTYZSZYCA Ml lllTT TLL LLLS
________________

padippakam
என் சிலாகிப்புக்கள், அவற்றுக்குப் பதில் தரவே திராணி யற்ற தவளைக்கூச்சல் இலக்கியஸ்தர்கள் பலருக்கும் கடுமை யான வயிற்றெறிச்சலை எழுப்பியிருக்கின்றன என்று தெரிய வருகிறது. அதுசரி, என் சிலாகிப்பு, அதுவும் ஒருசில வரிகளில், யாருக்கோ கிடைத்ததுக்கு, இப்படி ஏன் இந்தவித எரிச்சல்? எனது சிலாகிப்புக்கு இலக்கான எவருக்குமே இந்தியா டுடே, சுபமங்களா, சுஜாதா, தமிழவன் போன்றதுகளின் பிரசாதம் கிடைக்கவே கிடைக்காதே! என்னால் பெயர் குறிப்பிடப்படு வதில் எவருக்கும் மேற்படி ரகமான லாபம் எதுவும் கிடையாது. உண்மையில் மேற்படி ரகமான லாபங்களை மட்டுமே தேடும் இலக்கிய நபும்சகர்கள், என்னால் நிராகரிக்கப்படுவதையே தங்களது இலக்கிய டிக்கட்டுகளாக யூஸ் பண்ணித்தான் மேற்படி பிரசாதத்தைப் பெற்றிருக்கிறார்கள். என்னால் பெயர் குறிப்பிட்டுத் தாக்கப்படுவது இந்தப் பிரசாத கடாட்சத்துக்கு ஒரு பஸ்ட்கிளாஸ் டிக்கட் இந்த டிக்கட்டுக்காகத்தான் குருட் டுப் புதிய நம்பிக்கை யில் ரவி என்ற குஞ்சானும், முரட்டு முன்றிலின் நஞ்சானும் படாதபாடு பட்டிருக்கின்றனர்.

எனது விமர்சன இயக்கம் சிறந்த எழுத்துக்களை அனுப வித்துக் காட்டுவதாக இருந்து வந்துள்ளது. முன்றிலியம் வெறும் வவுத்தெரிச்சலியமாகும். சிறந்த எழுத்தை அநுபவித் துக் காட்டும் சக்தி இல்லாதவனுக்கு விமர்சனத் துறையில் இடமில்லை.

கா. சு. 
எங்களுர் செம்மங்குடி கட்டுரையில் மெளனி, ஊருக்குள் வரவேண்டுமானால் குடியானவத் தெருவைத் தாண்டி வரவேண்டும்' என்று எழுதியதை பார்ப்பணியமாகக் காட்டுகிறது முன்றில், இதை முன்பே மார்க்சீய அமைப்பியல்தலித்தியக்காரர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பிரேமிள் 

அங்கே அந்தக் காலத்தில் இருந்த குடியானவர் களே சொல்லியிருக்கக் கூடியதைத் தான் மெளனி எழுதினார். முன்றிலாரின் ஜாதிக்காரர்கள் கூட அப்படி எல்லைக்கோடு போட்டு வாழ்ந்தவர்கள்தாம். இன்றும் வாழ்கிறவர்கள்தாம். அவரே பார்ப்பனரை விட தமது ஜாதி ஒஸ்தி என்று காட்ட மரக்கறிப் பெருச்சாளியை அவிழ்த்து விட்டிருக்கிறார் - அதே முன்றிலில் இந்தக் குடியானவூத் தெரு விஷயத்தில் மெளனி
________________

padippakam
மாகவும் பிரபஞ்ச கானம் கதையில் மெளனி செய்துள்ள ஒரு மாபெரும் தவறைப் புரிந்துகொள்ள இடமில்லை. அதை நாம் எடுத்துக் காட்டினால் அதை உடனே பிடித்துக்கொண்டு லோ லோ என்று அவர் கத்தவும் கூடும். அதுவும் நம்மை வழிமொழி யாமலே இதைச் செய்யக்கூடும். இந்த எச்சரிக்கையுடன் விஷயத்துக்கு வருகிறேன். இது மெளனியை உன்னத நிகழ்ச்சி என்று ஊதும் வெ.சா.வுக்கே பதிலாக அமைவதாகும். பிரபஞ்ச கானம் கதையில் விகாரமான வெலித்தியான சப்தங்கள் முதலில் குறிப்பிடப்படுகின்றன. இந்தச் சப்தங்களுள் ஒன்று பறைச்சேரி நாய்க்குரைப்பு. பின்னாடி எல்லாச் சப்தங்களும் பிரபஞ்ச விகாசம் பெறுவது குறிப்பிடப்படும்போது, குஞ்சுப் பாப்பாவின் குரல் போன்றவைதாம் குறிப்பிடப்படுகின்றன. இது ஒரு மாபெரும் தத்துவார்த்த இடறலாகும். அபேதமான அத்யாத் மிகக் கோனத்திற்கு முரணான தேர்வு முறைப் பார்வையாகும். ‘பிரபஞ்ச கானமாக எல்லாச் சப்தங்களுமே உன்னதமடைவ தானால் அந்தச் சப்தங்கள் முதலில் விகாரமாக ஒலித்தவற்றி னின்றும் வேறுபட்டதாக இருக்க இடமில்லை. இந்த என் பார்வை, பிரபஞ்சகானம் கதைக்குத் தரப்பட்டு வந்த முக்கியத் துவத்தைக் குறைபாடாக்குவதாகும்.

கா. சு. . 
இது உங்கள் புதிய பார்வையா? இது உண்மை யிலேயே புதியதாகத் தான் ஒலிக்கிறது. இன்றைக்கு உலக ளாவிய முறையில் நவீன சிந்தனைகளைப் பாதித்தவர்கள் என்று எடுத்துக்காட்டப் படுபவர்களும்கூட, தங்களையும் அறியாமல் இனத்துவேஷத்தை காட்டி விடுகிறார்கள் என்று கருப்பின அறிவு ஜீவிகள் எடுத்துக்காட்டுகின்றனர். தன்னையே டிகன்ஸ்ட்ரக்ஷன் - சிதைவாக்கம் செய்து கொண்ட தெரிதா, எழுத்தாளன் இறந்து படுகிறான்' என்று காட்டும் ரோலண்ட் பார்த், அதிகாரம் பற்றிப் பேசிய ஃபூக்கோ - யாரும் இதிலிருந்து தப்பவில்லை. மேற்கூறிய உங்கள் பார்வை மாற்றத்துக்குக் காரணம் என்ன?

பிரேமிள் .

 அத்யாத் மீகப் பார்வைதான் காரணம். சில வேளைகளில் அபூர்வமாக மனம் மூழ்கிய நிலையில், கேட்கும் ஒலி எதுவானாலும், அது அளவிட முடியாத பேரனுபவமாகிறது என்பதே இந்தப் பார்வை. இதன் அடிப்படையிலேயே பிரபஞ்ச கானத்தில் உள்ள கோளாறை உணர முடிந்திருக் கிறது. படிப்பகம்
________________

padippakam
என்றும், இதற்காக பிராமணர்கள் துவிஜன்மிகள் என்பதும் மரபு. ஆனால் துவிஜன்மி என்றால் ஐரோப்பியனுக்கும் இந்தியனுக்கும் பிறந்தவன் என்கிறார் அரங்கநாதன்..!

பிரேமிள் 

மனுதர்மத்தின்படி, சூத்ரன் என்ற நாலாம் வர்ணத்தினன் தவிர்ந்த பிராமண, கூடித்ரிய, வைசியர் மூவருமே யக்ஞோபவிதத்தின் வழி துவிஜன்மிகள் தாம். இது செயல்முறை ஆத்மிகத்துடன் பொருந்தாத பித்தலாட்டச் சடங்கு என்பதனால் மட்டும் தான் இதை நான்சென்ஸ் என்று கூறலாம். இதை மீறல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளேன். இது இத்தச் சடங்கை மட்டுமே தாக்குகிறது. ஆனால் முன்றிலாரின் கூற்று, ஒரு மனித சமூகத்தை இழிவுபடுத்துவதாகும். தம்மை வெள்ளாளராகக் கொண்டு இறும்பூதெய்தும் இவரிடமும் நாம் இதற்குப் பதிலாய் காலம் காலமாக வழங்கி வரும் பாட்டின் வரிகள் சிலதைக் கூறலாம்:

'கள்ளர் மறவர் காடர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளர் ஆயினரே

கா. சு. 
அபிப்ராய மூர்க்கத்தை எந்த ஓர் அறிவார்த்த இயக்கமும் காட்டக் கூடாது. இல்லையா?
பிரேமிள்
 அறிவார்த்த இயக்கம் அபிப்ராய மூர்க்கங்களை நிராகரிக்கிற ஒன்று. இதேபோல், அபிப்ராய மூர்க்கம், அறிவார்த்தத்தைத் துச்சமாக மதிக்கின்ற ஒன்றுமாகும். முன்றிலாரின் பார்வை, வெறும் மூர்க்கமான ஒன்றேயன்றி, அறிவார்த்த நியதிகளைக் கடைப்பிடிப்பதல்ல.

ஆரியர்கள் கோவில்களைக் கொண்டு வந்தது பற்றிய விஷயத்தில் - ஆரியத் தன்மையை இழிவு படுத்த முன்றிலார் தந்த முந்திய கூற்று, எஸ். வையாபுரிப்பிள்ளையின் கூற்று ஆய்வுக் குறிப்பாகப் பின்பு தரப்பட்டதும், முந்தியதைப் பிந்தியது மறுக்கும் கூற்றாக மாறிவிட்டமை பற்றிய நுட்பம் இல்லாததால், அறிவார்த்த ஒழுக்கமோ சிரத்தையேர் இல்லாத குருட்டுத்தனத்தை வெளிப்படுத்தி விடுகிறது.
பிரேமிளின் வைதீக எதிர்ப்பு இந்த மண்ணில் ஏற்கெனவே உள்ள சித்தர், புத்தர் எக்ஸ்ட்துக்களின் விளைவுதானே அன்றி
________________

padippakam
தல்ல", கிரேக்க தத்துவப் பரிச்சயத்தின் விளைவு என்றும் முன்றிலார் கூறியுள்ளார். இந்த முரண்பாடு பற்றிய பிரக்ஞை அவருக்கு ஏற்படாமைக்குக் காரணம் அறிவு கெட்ட மூர்க்கம் அன்றி வேறேதுமல்ல.

கா. சு. 
உங்களுடைய கருத்துக்கள் இந்த மண்ணின் வேர்களிலிருந்து தோன்றியவையில்லை என்று முன்றில் கூறும் வசை, உண்மையில் ஒரு பாராட்டல்லவா?

பிரேமிள் 
ஆம். பிரேமிளின் கருத்துக்கள் இந்த மண்ணில் இருந்து பிறந்தவையல்ல. அவை ஒரு சமூக விஞ்ஞானப் பார்வையின் விளைவுகள். இது உலகளாவிய ஒர் அறிவார்த்த இயக்கத்தின் நீரோட்டத்தைச் சேர்ந்தது. இப்படிச் செயல்படக்கூடிய ஒருவனைத்தான் இன்டலெக்சுவல் என்று சொல்வார்கள், மண்ணுகளிலிருந்து விளைகிறவைகள் மரபு களாகும் - காட்டுமிராண்டித்தனங்களாகும். இதைச் சார்ந்த வர்கள்தான் தி.க.சி. வகையறா கம்யூனிஸ்டுகள், ஞான வைதீகக் கூத்தன்கள், இவர்களைக் கொண்டாடும் திராவிட மண்ணுகளான சா. கந்தசாமிகள், இந்த மண்ணுகளின் கொண் டாட்டத்திலிருந்து தங்கள் காளிதாஸன்களைக் கண்டு கொள்ளும் முன்றில்கள். ஒரு காரணம், சா. கந்தசாமி நன்னா துட்டு பண்ணின்டிருக்கா என்பதுதான். இன்னொன்று, மதிப் பீட்டின் இழிவுநிலையில் இவர்கள் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள். அட்ரஸ் இல்லாமல் போன யாத்ரா' வெங்கட்சாமிநாதன்களின் அதே டெக்னிக்கைக் கூட முன்றிலில் காணமுடிகிறது. யாத்ரா பிரேமிளை கிறுக்கு, குரங்கு” என்றால் முன்றிலுக்கு பிரேமிள், பைரவ வாகனமாகிய நாய் (பக்-7). காலம் காலமாக இந்த மண் வளர்த்துவரும் அறிவியல் இயக்கம் இதுதான்.

கா. சு. :
 “இல்முன் என்பதன் இலக்கணப் போலி 'முன்றில்’. இந்த முன்றில் பத்திரிகையோ, சிறுபத்திரிகைப் போலி அல்லது விமர்சனப்போலி யாகவே இயங்குகிறது. ஒரு இடத்தில் திருவேங்கடசாமி நாட்டார் நூல்கள் என்கிறது முன்றில் (இதழ்-17). நூல்கள் என்று பன்மையில் கூறுவ தாலும், பெயரின் முன்னொட்டாக திரு வருவதாலும் (திரு' வுக்குப் பின் புள்ளி விடுபட்டு விட்டது என்று சொல்ல TS TMMMS GGMMGGGtttM T LSLLL TTT LLLTT ttt TTS TT TSTttt
________________

padippakam
விஷயங்களைத் திசைமாற்றியும் விடுகிறது முன்றில், அது சரி. மெளனியையும், சு. ரா. வையும் பகிஷ்காரம் செய்பவர்கள், ஞானக்கூத்தன் என்ற பலவீனமான, கோளாறுகள் நிறைந்த கவிஞனைத் தாங்குவது ஏன்?

பிரேமிள் : 

நான் மெளனியின் ஜாதியத்தை விமர்சிக்கும் போது, அவரை ஒரு சமூகப் பிரஜையாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். தமது கலையினுள் ஜாதியப் பிரச்சினைக்கு அவர் இடம் விட்டதில்லை என்ற அடிப்படையினை நிறுவி விட்டே இதனைச் செய்து வந்திருக்கிறேன். இந்த ஜாதீய மனோ பாவத்தின் விளைவாக, தமிழ்மொழித் துவேஷமும் இணைய, மெளனியினால் தொடர்ந்து எழுத முடி யாமற் போயிற்று என்பது என் சித்தாந்தமாகும். எனது இந்தப் பார்வையை ஆபாலப்படுத்தும் கீழ்த்தரமான குருட்டு முரட்டுத்தனம் தான்முன்றிலார், கவிதாசரணார் ஆகியோரிடத்திலிருந்து பிறக் கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், எழுத்தில் ஜாதியத்தை வெளியிட்டிராத மெளனியையும், எழுத்துத் திறனோடு ஜாதீயத்தை வெளியிட்ட சு. ரா. வையும் பகிஷ் கரிக்கிற இந்த குருட்டு முரடுகள், எழுத்துத் திறன்கூட அற்ற குருட்டாம்போக்கில் ஜாதியம் பண்ணுகிற ஞானக்கூத்தனைக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான். இதன் ரகசியம் என்ன? மதிப்பீட்டியக்கத்துக்கு சவக்குழி தோண்டுகிறவர்களாக ஞா.கூ.வும் முன்றிலாரும் அவரது சகபாடியான கவிதா சரணாரும் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. இவர்களது குருட்டு முரட்டுத்தனத்துக்கு முரட்டுக் குருநாதர் ஒருவர் இருக்கிறார். அந்த குருநாதரின் கசடதபற லெட் காரர் ஞா.கூ. எனவே ஞா.கூ. பற்றி மட்டும் ஏதாவது ஏறுமாறா எழுதினே அப்படியே கீச்சுப்புடு வேன் கீச்சு!" என்று அந்த குருநாதர் முன்றிலாருக்கும் அவரது சகபாடிக்கும் தமது சங்கேத பாஷையில் எச்சரித்திருக்கிறார். சாகித்ய அகாதமியில் தமிழவனோடு சேர்ந்து வீற்றிருக்கும் இந்த குருநாதர் சா. கந்தசாமி. இவர்களை ஞா கூ விஷயத் தில் மற்றிருவரும் வழி மொழிகிறார்கள் என்பதே சரி. இந்த அளவுக்கு மதிப்பீட்டுச் சுரணையற்று முன்றிலார் என்னை கிறுக்கு, நாய் என்று கூடக் கூறுவதன் காரணம், சா. க.வுக்கும் தமிழவனுக்கும் உச்சிகுளிர வைக்கவேண்டும் என்ற கொத்தடி மைத்தனமாகும். - -
படிபபகம
________________

padippakam
கடித்துக் குரைத்துக் கொள்கின்றன என்பது. இதன் ஜாதியப் பொருளம்சம் என்னால்தான் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை மறுப்பதாகவோ ஏதோ பாவலா பண்ணும் முன்றிலார், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற தோரனையில், மேற்படி கவிதையின் கட்டுமானம் (பொருளம்சமல்ல, அதை வெளியிடும் கட்டுமானம்) ரீடர்ஸ் டைஜஸ்ட் துணுக்கு ஒன்றி லிருந்து திருடப்பட்டதைக் குறிப்பிடுகிறார். சரியான லிகல் பாயின்ட் செய்யப்பட்ட குற்றம் எது என்ற எனது சார்ஜ்' சமூகவியல் ரீதியானது என்பதைத் திசை திருப்பிவிடும் பாயின்ட் இது. இது கோர்ட்டில் கூடச் செல்லுபடியாகாது. என் பார்வையை நேர்மையாகக் கிரகிக்க முடியாத அளவு இப்படி எலிவளைகளுக்குள் ஒடிப் பதுங்கிக் கொள்கிறவர்கள் சமூகவியல் சமாச்சாரங்களைப் பற்றிப் பேச அருகதையற்றவர் கள். ஞா.கூ.வின் இதே பொருளம்சம், சு.ரா.வின் நடுநிசி நாய்கள், நான் கண்ட நாய்கள் ஆகிய கவிதைகளிலும் வெளிப்படுகிறது. ஆனால் அங்கு இழைக்கப்பட்டுள்ள குற்றம் சமூகவியல் பார்வை சம்பந்தமானது மட்டுமே. நான் பெருமள வுக்கு சு.ரா. வைத் தாக்கி விமர்சிப்பது அவரது இந்தக் கோளா றுக்காகத்தான். அவரது வெளியீட்டு வடிவக் கட்டுமானம் இந்தக் குறைபாடு தெரியாதவிதமான செம்மையைக் கொண்டி ருக்கிற ஒன்றாகும். சு.ரா. மீது எனக்கு இதே காரணத்துக் காக மிகுந்த கோபமே பிறந்துள்ளது. ஏனெனில் வெளியீட்டிய லின் பண்புகளை கீழ்த்தர சமூகவியல் பார்வைக்கு அவர் பலியிட்டுள்ளார். இது விஷயத்தில் இவரது வழித்தோன்றல் ஜெயமோகன். மெளனி விஷயம் வேறு. அவரது வெளியீட்டியல் கட்டுமானம் இப்படி பிரக்ஞாபூர்வமாக அவரால் கீழ்த்தரமாக பயன்படுத்தப்படவில்லை. ('பிரபஞ்ச கானம்' கதையில் மட்டும் இது அவரது பிரக்ஞையை மீறி வெளி வந்திருப்பதை இப்பேட்டியின் பிறிதோரிடத்தில் விவரித்துள்ளேன். மற்றவர் கள் குறிப்பிடும் குடியானவத்தெரு விவகாரம், மெளனியின் கட்டுரையில் வருவதாகும்-கதையிலல்ல.) ஞா.கூ.வின் கதை முற்றிலும் வேறு வகையானது. இவரை மெளனி, கவிஞராக ஏற்றுக் கொண்டதில்லை. உண்மையில் மெளனி, நண்பர் களிடையே, ஞா. கூ வின் கவிதைகளை எடுத்து வைத்து, அவற்றின் படுகோமாளிக் கூத்துகளை, கூத்தாடிக் காட்டிக்கூட பரிகசித்திருக்கிறார். இது ந. முத்துசாமிக்கு நேரில் தெரிந்த ஒன்று. சு. ரா. கூட ('பிரக்ஞைய்யில்)சஞ்ா. கூவை கவிஞராகவோ
________________

padippakam
மாமாங்கத்துக்கு மாமாங்கம் அவர், இந்தியா டுடே மலரில் வெளியிடப்படுவதன் காரணம், அவரை பிரேமிள் பார்ப்பன வெறிபிடித்தவராக அம்பலப்படுத்தி அந்த இமேஜ் ஸ்திரமாகி விட்டமைதான். ஒருபுறம் இனி போன்ற நேர்மையான அணுகுமுறையாளர்களினால், பிரேமிள் வழி மொழியப்பட்டு, ஞா.கூ. இனம் காட்டப்படுகிறார். இதேபோல், இந்தியா டுடே யும் பிரேமிளை வழிமொழிந்து ஞா. கூ வின் பார்ப்பன வெறிக் காகவே தாங்கள் அவரைப் பிரசுரிப்பதாகவும் அவர் எழுதுவது கவிதையே அல்ல என்றும் கூறுவதுதான் நேர்மை. விஷயம் இவ்வளவு பட்டவர்த்தனமானது. இதில் முன்றிலின் உளற லுக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

பிரேமிளின் விமர்சன இயக்கம் தலைசிறந்த எழுத்தாளர் களை இனம் காட்டுவது மட்டுமல்ல, அதனை ரசித்துக் காட்டு வதும் ஆகும். ஒரு படைப்பின் நாடி இது என்று இனம் காட்டக் கூடிய விமர்சகர் அவரைப் போல வேறு எவரும் இல்லை. இது ஸ்தாபிதமாகிவிட்ட உண்மை. எனவே அவரது அபிப்பிராயங் களுக்கு ஒர் ஆளுமை உண்டு. இந்த ஆளுமையை செல்லுபடி யாகாதவாறு பண்ண எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட் டுள்ளன. இவற்றுள் சிகர முயற்சி யாத்ரா'வில் வெ. சா., பிரேமிளை கிறுக்கு என்று ஸ்தாபிக்க முயன்றமையாகும். இதுவே இப்பொழுது முன்றிலிலும் தொடர்கிறது. குழுசார்ந்து இயங்குகிறவராகக் கூட பிரேமிளை இனம் காட்ட முயல்கிற முன்றில், விஷ்னு நாகராஜனுக்குத் தந்த முன்னுரை, கோபுல்பூரி பற்றிய குறிப்பு, கால சுப்ரமணியம் கட்டுரைகள் பற்றித் தந்த குறிப்பு ஆகியவற்றை முன் வைக்கிறது. இந்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லப்பட்டவற்றைத் தாக்கிச் சிதற டிப்பதுதான் சரியான மறுப்பாகும். ஞானக்கூத்தன் ஒரு பார்ப் பனியப் பிண்டம் என்று நான் ஆதாரபூர்வமாகக் கூறுவதை மறுப்பதாக நினைத்துக் கொண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் குறிப்பை மேற்கோள் காட்டுகிறவருக்கு, அறிவியக்கச் செங்குத்து சறுக்கும். முயன்றால் சறுக்கியடித்து தமது பூர்வாசிரம ஜாதியச் சாக்கடையில்தான் விழ முடியும்.

கா. சு.
 வெங்கட் சுவாமிநாதன் உங்களுக்கு எதிராக செய்த பிரசாரம் உங்களைப் பாதித்துண்டா?

பிரேமிள் 

என் பார்வையில் அப்படிச் சொல்ல மாட்டேன்.
________________

padippakam
இவருக்கு வெ.சா. என்னைப் பற்றிக் கடிதம் எழுதி இருக் கின்றார். ந.பி.க்குச் சூழ்ச்சிகள் புரியாது. எனவே என்னிடம் ந.பி.யே இந்த லெட்டரைக் குறிப்பிட்டார். நான் புன்னகை செய்ததுக்கும் மேல் ஏதும் சொல்லவில்லை. அவரும் புன்ன கையுடன் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசத் துவங்கினார். அதாவது அவர் பழமைவாதி தானே அன்றி பார்ப்பனியரல்லர். அடுத்ததாக லா.ச. ராமாமிருதம் கதை- இது விஷயம் எனக்கு என். பி. ராமானுஜம் என்ற மதுரை நண்பரினால் சொல்லப் பட்டிருக்கிறது. இவர் பின்னாடி சு.ரா.வினால் பரிபூரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டார். இவரது கட்டுரை சு.ரா.வின் காலச் சுவடு என்ற ஆண்டு மலரில் வெளி வந் தும் இருக்கிறது. இவர் ஒரு கல்லூரி ஆசிரியர். இந்த ராமானுஜம் மதுரை பல்கலைக் கழகத்தின், சி. கனக சபாபதி வீட்டில், அவருடனும் லா.ச.ரா. உடனும் பேசிக்கொண்டிருந் தார். அது, எம்.ஜி. ராமசந்திரன் தமிழக முதல்வராக இருந்த சமயம் எழுத்தாளர்களுக்கு மாதம் தலா ஐநூறு ரூபாய் தரும் திட்டம்- அதை அப்போது அங்கே வந்த ஒரு கட்சிக்காரர் சி. க.விடம் தெரிவித்து, என்னால் ஒரு நாலு பேரைச் சொல்ல முடியும். எனக்கு எழுத்தாளர் யாரையும் தெரியாது. நீங்கள் சிபாரிசு செய்கிறவர்களுடைய பெயரைத் தெரிவிக்க லாம்' என்றார். உடனே ராமானுஜம் என் பெயரைக் குறிப் பிட்டிருக்கிறார். குறுக்கே விழுந்தாராம் லா.ச.ரா. 'ஆ' ஆ ஆ' என்று தலையாட்டிய மறுப்புடன்! அந்தக் கணம் தயக்கு ஏற்பட்ட அதிர்ச்சி போல் எப்போதுமே ஏற்பட்ட தில்லை என்றார் ராமானுஜம். இந்த லா.ச.ரா.வின் ஆ!. ஆ ஆவுக்குப் பின்னால் என்னைப்பற்றி லா.ச.ரா.வுக்குக் கடித மூலம் வெ.சா செய்த பிரச்சாரம் வேலை செய்திருக்கிறது. இது எனக்குத் தெரியும். இதுபற்றி என்.பி.ஆரிடம் நான் பேசிய போது தான் கொல்லிப் பாவை"யில் மேலும் சில வசவுகள் என்ற தலைப்பில் நான் வெளிக் கொண்டு வந்த விபரத்தை என்னிடம் அவர் கூறினார். அதாவூது ராமானு ஜத்திடம் ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் ஏன் பிரேமிளுக்கு மரியாதை கொடுத்துப் பேசுகிறீர்கள்?' என்றார் வெ.சா. இந்தக் கேள்வியின் விசித்திரத்தினால் அதிர்ச்சி அடைந்த ராமானுஜம் அவர் எனது நண்பர். மேலும் வகுப்பில் நான் ஆங்கில இலக்கியம் கற்பிப்பதற்கு பிரேமிளின் விமர்சனக் கருத்துக்கள் எனக்கு உதவுகின்றன.'
________________

padippakam
கா. சு. இன்று உங்களை இல்லாமல் ஆக்கிவிட அலை கிறவர்கள் பற்றி முன்றில் (15வது இதழ்) கூறும் போது அது இவர்களை வைதீகவாதிகளாக மட்டுமே சுட்டிக் காட்டு கிறதே? அது சரியா.

பிரேமிள் என்னை இல்லாமல் ஆக்கிவிட கங்கணம் கட் டிக் கொண்டு எவரெவர் அலைகிறார்கள் என்பதைவிட மதிப் பீட்டியக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட எதெது எல்லாம் செய் யப்படுகிறது என்பதை எடுத்து முன் வைப்பதே செய்ய வேண்டிய வேலை. மதிப்பீட்டியலின் கோணத்தில் நின்று பார்த்தால், அதனை இல்லாமல் ஆக்கிவிட அலையும் பிளாட்பாரக் கேஸ்களில் ஒன்றாகவே முன்றிலாரும் தென்படு கிறார். முன்றில் 17-ல் இது என் இயக்கத்துக்கு எதிராக வெளிப்படுகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்க் கும்பல் வாதிகள் என்னை மட்டம் தட்ட முயன்று இருக்கின்றனர். இதற்குப் பின்பு பார்ப்பனியர்களும் இதையே செய்தனர்.

மெளனியின் எச்சல் இலை உளறல், மேலேகுறிப்பிடப்பட்ட லா.ச.ரா.வின் ஆஆ. . முக்கிய உதாரணங்கள்! இப்படி திரை மறைவு வேலைகள் செய்த அதே சமயத்தில் சிருஷ்டி கர்த்தாக்களாக மெளனியும் லா.ச.ரா.வும் சூன்யமாகிவிட்டோர் என்றும் காண வேண்டும். இளைய, சிறிய திறனாளிகளான சுந்தரராமசாமி, ந. முத்துசாமி இருவருடைய கதையும் இதுவே தான். திறனே இல்லாத கசடதபறவான ஞானக் கூத்தனும் இதையே செய்தார். என்னைப் பற்றி பிராமண விரோதி என்று பிரச்சாரம் செய்த விமர்சனாஸ்ரமவாதியான வெங்கட் சாமிநாதன், மதிப்பீட்டியல் கருவி எதையுமே தொட முடியாத அளவு அந்தத் துறையில் தீண்டத்தகாதவரானார். இந்தக் கட்டத்தில் இதே அடிப்படையில்தான் இப்போது முன் றிலில் என்னையும் என் கவிதைகளையும் தரக்குறைவு பண் ணும் முயற்சி நடக்கிறது. ஆனால் முன்றில் பார்ப்பன விரோதமும் விண்ணுகிறது. எனவே, திராவிடியம், கம்யூனிஸம் வைதீகம், எதிர் கலாச்சாரம்-எல்லாமே மதிப்பீட்டியலுக்கு எதிரான மட்ட ரகங்கள் என்ற அடிப்படையில் ஏகோபித்து நிற்பவை. இது எனக்கோ எவருக்குமோ எதிரானது என நினைப்பது பிரமை பார்க்கம் போனால் என் கவிதைகளை இமிட்டேட் பண்ணிப் பார்த்து அதற்காகத் தீவிரமான இலக் கிய அவதானிகளால் எள்ளிடிந்கையாட்டுபட்ட பின்பு என்னைக்
________________

padippakam
யாமல் இதே நம்பிக்கையில் ஈடுபட்ட விக்கிரமாதித்யனும், 'மீறல் சிறப்பிதழுக்காக என்னிடம் ஆபாலக் கேள்விகள் கேட்டு எழுதியபோது அவர்கள் மதிப்பீட்டியலுக்கு விரோத மாகவே இதைச் செய்தனர். கி.அ. சச்சிதானந்தம் மெளனி யின் கதைகள்-ஐ தாம் வெளியிடுவதற்காக, மெளனியின் குடும்பத்தை அணுகியபோது இந்தப் பொறுப்பை என்னிடமே தர விரும்பிய அவர்கள் எனது இருப்பிடம் பற்றி கி.அ.ச. விடம் விசாரித்த போது, நான் இங்கில்லை, இலங்கையி லேயே இருப்பதாக மனமறிந்து பொய் சொல்லியதுடன், 'மெளனி கதைகளுக்கு நான் எழுதிய முன்னுரையையும் இருட்டடிப்புச் செய்த போது, அவர் வைதீகச் சார்பாளராக வேலை செய்யவில்லை. தம்மைப் போன்ற கொசுறுகளை சரியாக இனம் காட்டக்கூடிய என் மதிப்பீட்டுக்கு இருட்ட டிப்புச் செய்கிறவராகவே வேலை செய்தார். இத்தகைய விய ரங்களை முன்றிலார் முன்னிலையில் நான் பிறரிடம் கூறியி ருக்கிறேன். ஆனால், மதிப்பீடுகளை ஏய்த்து வளை தோண்டி முன்னேறும் லட்சியவாதியான அவருக்கு இது உண்மையில் விரோதமான விபரம்தான். சொல்லப்போனால் அவர் தமது முன்னேற்றத்துக்கு இத்தகையவர்களிடம் உதாரண புருஷத் வங்களையே காண்பார். காண்கிறார்.

கா. சு.

 பழைய பார்ப்பனியராக சி.சு. செல்லப்பாவை முன்றிலார் காட்டுகிறார். சி.சு.செ. உங்களிடம் புதிய பார்ப் பனியத்துக்கு ஆதாரத்தைக் கண்டு அதற்காக உங்களை அபரிமிதமாகப் புகழ்ந்தார் என்கிறார் முன்றிலார். அப்படி யானால் புதிய பார்ப்பனியர்களான ஞானக்கூத்தன், அசோக மித்திரன் ஆகியோரை சி.சு. செ. உங்களைவிட அதிகப்படியான அடரிமிதத்துடன் பாராட்டியிருக்க வேண்டுமே! அவர்களை அவர் குறைவாக அல்லவா மதிப்பிட்டார்? பிரேமிள் : இப்படி உங்களைப் போன்றவர்கள் கேட்கக் கூடுமே என்ற அறிவுச் சுரணையுடன் முன்றிலார் எழுதவில்லை. பிரேமிளையும் அவனிடத்தில் நிகழும் மதிப்பீட்டியக்கத்தையும் தாம் உதாசீனம் செய்வதாக அவர் உரியவர்களுக்குச் சிக்னல் கொடுக்கிறார். இவ்வளவுக்கும் இவர் வெ.சா. வை விமர் சிப்பவர். பின்னாடி சி. சு. செ. என்னைக் குறைத்து மகிப்பிட்டதாக முன்றிலார் உள்துகிறார். அனால் வெ. சா.
________________

padippakam
நிர்தாட்சண்ய நியதியை வெ. சா. என் மூலம் சந்தித்தமைதான் இதன் காரணம். நிர்தாட்சண்யத்திலிருந்து தப்பித்து பிறப் பினால், ஜாதியால், ஒஸ்தி பண்ணுகிற மனோபாவம் பார்ப் பனியம். இதுவேதான் கட்சி அடிப்படையில் கம்யூனிஸ்டு களாலும் திராவிட தமிழியல் (வெள்ளாள என்றும் பாடம்) அடிப்படையில் முன்றிலும் முடுக்கி விடப்படுகிறது. இவர்கள் யாவருமே மதிப்பீட்டியலை ஏமாற்றி மதிப்பீட்டாளனான என்னைத் துரவித்து பிளாக்மெயில் பண்ண முயற்சிக்கும் ஒரே பாாப்பனியக் குட்டைவாசி 1ள் தாம். இதற்கும் செல்லப்பா வுக்கும் சம்பந்தமில்லை.

கா. சு.
 மெளனியைப் பாராட்டும் உங்களுக்கு ஞானக் கூத்தன் மீது காட்டம் ஏன் என்கிறதே முன்றில்?

பிரேமிள் 

மெளனி மகத்தான கலைஞன். ஞானக்கூத்தன் ஒரு வரிக் கவிதை கூட எழுதவராத இலக்சிய நபும்சகர் என்பது காரணம். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பிரச்சாரப் பேச்சாளருள் அன்று ஒருவர், சங்கநாதன். அந்தக் காட்சிக்காக அவர் சிவஞானத்தின் "ஞானத்தைக் கண்டு தாம் கூத்தாடுகிறவராக உணர்த்திப் புனைந்து கொண்டதுதான் ஞானக்கூத்தன்' என்ற பெயர். மெளனியின் கலைத்தரத்தைப் பற்றி நான் ஏராளமாக எழுதி விட்டேன். ஞானக்கூத்தன் 'கசடதபற'வில் எழுதிய கீழ் வெண்மணி கவிதையை உதாரணமாக எடுத்தால், ஜாதியத்தின் காட்டுமிராண்டி இனக்குழு வாதம் பற்றிய பார்வை இதில் தந்திரமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் மனித நேயத்தைவிட இதில் குருவிநேயம்தான் அதிகம். குருவிகள் முதலிய சிற்றினங்கள் குடிசைகளோடு எரிக்கப் பட்டிருப்பதே கவிதையில் அழுத்தம் பெறுகிறது.
இக்கவிதையை என்பூரிலங்காப் பிரச்சினைக் கவிதைகளான உதிரந்தி (மீறல் சிறப்பிதழில் மறுபிரசுரம்), காலமுகம் (லயம்), கடல் நடுவே ஒரு களம் இருபத்தி நாலு மணிநேர இரவு (விடுதலைப்புலிகள்) தீவு (திகூடிண்யம்), மானுடம் (மீறல்) ஆகிய கவிதைகளுடன் ஒப்பிட்டால் ஞானவைதீகக் கூத்தனின் படைப்பு ஒரு சோளக் கொல்லைப் பொம்மை என்று காணலாம். இவ்வித அணுகுமுறையே மதிப்பீட்டியலின் ஒழுக்கத்தையும் நியதியையும்பகார்ந்தது. இந்த நியதியையும்
________________

padippakam
எழுதினார். உண்மையில் அதில்கூட மனிதாயப் பார்வை அவரிடமிருந்து கிளம்பவில்லை என்பதுதான் பகடியான பகடி. மனிதன்மீது தேங்காய் விழுந்து அவன் இறந்து கிடந்தால் தேங்காய்க்குப் பழுது வரவில்லையே என்று புளகாங்கிதம் அடையும் ஒரு குறளிக் கவிதைகூட அவர் எழுதியிருக்கிறார். அதில் மனிதனை விட்டு தேங்காயைக் கவனிக்கும் அதே உள்க் குணம்தான், மனிதர்களை விட்டு குருவிகளைக் கவனிக்கும் "கீழ்வெண்மணி'யிலும் தெரிகிறது. இதன் அடிப்படை, கவிஞ னுக்குரிய சாந்நித்ய மனோநிலை அணுவளவும் கூத்தனாருக்கு இல்லை என்பதுதான்.

ஆனால் இப்போது இந்து, இந்தி, இந்தியா நூலில் இந்துத்துவ வெறியின் இயக்கத்தை இனம் காட்டக் கிளம்பி யிருக்கும் எஸ். வி. ராஜதுரை அன்று கூத்தனாரின் கசடதபற ஸ்ெட்காரர். இப்போது முன்றிலார் மெளனியையும் ஞானக் கூத்தனையும் சேர்த்துப் பிடித்தது போல. டி. எஸ். இலியட், ஞானக்கூத்தன் இருவரையும் ஒரே இடுக்கியால் பிடித்துத் தமது எக்ஸிஸ்டென்ஷலிலம் - ஓர் அறிமுகம் நூல் முகப்பாகத் தந்தவர். ஞானவைதீகத்திடமிருந்து அவர் எடுத்துத் தந்த கவிதை, மேற்படி தேங்காய்க் குறளிக் கவிதை. அதில் ஏதோ எக்ஸிஸ்டென்ஷலிஸம் இருக்கிறது என்பது பெறுபேறு. உண் மையில் கூத்தனாரின் கூற்றுகள் குருட்டாம் போக்கானவை. இதை நான் இடைவிடாமல் எடுத்துக்காட்டி வந்திருக்கிறேன். இதை நான் செய்த, செய்யும், ஒரே காரணம், மிகவும் சாந்நித்ய மான கவிதைக் கலையின் நுண்ணிய குணாம்சங்களைப் பேன வேண்டும் என்பது மட்டுமே
.
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். கான் கடுமையாக எவரெவரை எல்லாம் விமர்சிக்கிறேனோ அவர்களைப் பற்றி சகட்டுமேனிக்காவது புகழுரை வழங்கி பெரீய்ய' ஆளாகுவது எனக்கு மிகவும் சிம்பிள். அதை நான் செய்தால் எனக்கு லாபம், ஆனால் மதிப்பீட்டியலுக்கு மகாகஷ்டம். இதை வாசகர்கள் தீர்க்க மாகக் கவனிக்க வேண்டும். சரி எனது விமர்சனங்களை மீறியே திறனற்றவர்கள்கூட எப்படி பவனிவர முடிகிறது என்றால், புதிது புதிதாக திறனற்ற முன்றில்களில் முளைக்கும் சப்பாத்திக் கள்ளிகளும் காளான்களும் தரும் ஆதரவுதான். இவர்கள் விமர்சன உணர்வற்றவர்கள் என்பது மட்டுமல்ல, விவஸ்தை யற்றவர்களும்கூட என்பதால்தர்ன்கமெளனி யையம் ாை கூ
________________

padippakam
புதர்க்காடுகளும் சாக்கடைக் குட்டைகளும்தான். இந்த வெளி யில்தான் ஒர்ட்டேகா யி காஸ்ட் (0 EA என்ற தத்துவவாதி கூறியது நிருபணம் பெறுகிறது மட்டமான ருசியைப் போல அதிவேகமாகப் பரவக்கூடியது வேறு எதுவும் இல்லை'. இந்த மதிப்பீட்டின்மையும் விவஸ்தையின்மையும் தான் ஞானக்கூத்தனின் பார்ப்பனியத்தையும் முன்றி லரின் திராவிடத் தமிழ் வெள்ளாள வாதத்தையும் மீறி இவர்களை ஒன்று படுத்துகிறது. சா. கந்தசாமி இவர் களுடன் இணைவதும் இதே அடிப்படையில்தான்.

இது ஒரு விஷயத்துக்கு அலாதியான சாட்சியாகும். அதாவது ஒருவர் வைதீகம் பேசினாலும் சரிதான், மற்றவர் திராவிடியம் பேசினாலும் சரிதான்-இருபகுதியினருமே பிடித்துத் தொங்குவது ஒரே மட்டமான ருசியை ஆகும். இரு பகுதியினருக்கும், தி. க.சி போன்ற கம்யூனிசுக்களுக்கும் கலைவியலின் தீவிரமான மதிப்பீடு ஆபத்தானது. மதிப்பீடு இவர்கள் யாவருக்கும் பொது விரோதி. இதைப் புரிந்துகொள்ளாவிட்டால், சா. கந்தசாமி, தமிழவன், தி.க.சி. முன்றிலார்,ஞானவைதீகக் கூத்தன் எக்ஸ்ட்ரா எல்லாம் ஒன்றுபடுவதுபுரியவே புரியாது.

மீண்டும் ஞானக் கூத்தனின் கவிதா மண்டல வரட்சிக்கு வருகிறேன். வே. மாலியை இமிட்டேட் பண்ணிய ஞான வைதீகக் கூத்தன், கசடதபற காலத்தில் மட்டுமல்ல, பின்னாடி ழ கவனம் காலத்தில் கூடத் தமது குருட்டாம் போக்கில் தான் எழுதி வந்திருக்கிறார். படித்துவிட்டு வேலையில்லாமல் தெருவில் பிளேடு விற்கும் வாலிபர்களைப்பரிகசித்து எழுதியதும், குளிக்க மறைவிடமில்லாமல் பகிரங்கத்தில் குளிக்கும் பெண்களை வக்ரமாகப் பார்த்து எழுதியதும் உதாரணங்கள். இத்தகைய வக்ரங்களை வே. மாலி சி. மணி)யிடம் காணமுடியாது. எந்த தாலியைத் தாம் இமிடேட் பண்ணினாரோ அதே மாலியின் வரும்போகும் நூல் வந்தபோது மட்டம் தட்டி ‘கசடதபற’ வில் கூத்தனர் எழுதியதும், இதற்காக ந.முத்துசாமி, கூத்தனாரை பிரக்ஞையில் தாக்கியதும் சரித்திரம். ஆனால் அதே நழுத்தசாமி சென்ற ஆண்டு மீண்டும் ஞ.கூ.வுடன் விருட்சம் கூட்டத்தில் சந்தித்து சேர்த்தி ஆகி இருக்கிறார். அன்று ஞானக்கூத்தனின் கவிதைகளை எடுத்தெறிந்து பிரக்ஞை ல் எழுதிய ந.மு. இந்தக்கூட்டத்தில் பாதிக்குப் பிறகு ஒரே கவி ஞா.கூ. என்று ஒரு கூச்சலும் போட்டாராம். இதே , , , .ன் படுத்தத் வின் இன்றைய வணிகப்


பிரேமிள் - மாரப்பன்
padippakam
1. முதல் சந்திப்பு
'மை டியர் மாரப்பன்...' என்று இரண்டொரு கடிதங்களில் தனது ஒவிய எழுத்துக்களால் பிரேமிள் எனக்கு by return of post-ல் பதில் எழுதியிருந்தாலும் அவரை நேரில் சந்திப்பது திருநாளைப்போவார் ஆசைபோல் நாளனந்தம் நழுவிக் கொண்டே போயிற்று. அத்தோடு - சிறுவயதிலேயே, குன்றக் குடியாரையும், கைலாசபதியாரையும் அசட்டை செய்த தலைக் கனம் பிடித்த ஆசாமி அவரை நான் முன்பின் அறிமுகமின்றிச் சந்திப்பதை ஏற்றுக்கொள்வாரா, எடுத்துஎறிந்து விடுவாரா அல்லது ஏடகூடமாக ஏதாவது நடந்து விடுமோ என்ற சங்கடமும் மனதில் வெளவாலைப்போல் தொத்திக் கொண்டு தானிருந்தது. இலக்கிய யுத்தத்தில் வெங்கடசாமிநாதனை வெட்டிச்சாய்த்தவர், சுந்தரராமசாமியை சுட்டுத்தள்ளியவர், எதிர்த்த பல எடுபிடிச்சில்லரைகளையெல்லாம் வெகுண்டு துவம்சம் செய்த ஜாம்பவானிடம் ஒன்றுமில்லாத நீ நெருங்கிச் சாகாதே, பிரேமிள் நெருப்பு, வேண்டாம் விபரீதம் என்று சில நண்பர்கள் சாம்பிராணிப்புகையும் தூவியிருந்தனர். பத்தாததற்கு, சமீபகால சிறுபத்திரிக்கைகளும் அவரை இலக்கிய ரவுடியாக, இமாலய அகந்தைக்காரராக, கிறுக்காக குரங்காக வெறிபிடித்த வேட்டைநாயாக திருநாமங்கள ஜபித்து புளகாங்கிதம் அடைந்திருந்தன. இடையிடையே - இப்படிப்பட்ட இடிமின்னல் கள் பயத்தில் நடுநடுங்க வைத்திருந்தாலும் என் இயல்பான தைரியம் நேரங்காலத்தை நோக்கியிருந்தது. இந்நிலையில் பிரேமிளில் நான் சொக்கிவிழந்ததற்கும் அவரைச் சந்திப்பதை முக்கியமாக கொண்டதற்கும் இரண்டு காரணங்கள் உந்துதலாகவும், துண்டுகோளாகவும் சொல்லலாம். முதலாவ தாக, அவரது பாதரசப் படைப்புகளில் சாதாரணமாக ஈர்க்கப் பட்டது, இரண்டாவது, தமிழ்மண்ணில் இலக்கியங்களைத் தூத்திப்புடைத்துத்தான் பார்க்கவேண்டும் என்ற அவரது விமர்சனக் கருத்துலகம், இலக்கியம் என்ற தனிப்பட்ட எந்தச் சொத்துக்கும் அதிபதியாக இல்லாவிட்டாலும் - கால சுப்ரமணியம் அறிமுகப் படுத்திய அவரது ஆரம்பகாலப் படைப்பு களை வெளியிட்ட உரிமையில் கூட இந்தப் பாசம் ஒரு வாசகத் தனமாக நேர்ந்திருக்கலாம்.

எத்தனை நாளைக்குத்தான் எழவெடுத்துத் தொலைப்பது, என்று இருபது வருஷங்களாக கட்டியழுகொண்டிருந்த நாடக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - ஒழுங்காக ஓரிட்த்தில் உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த

________________

padippakam
போது - புதுமைப் பித்தனின் தீவிரத்தன்மையும்._ஆர். ஷண்முக சுந்தரத்தின் இனிமையும், கா. கா. சு. வின் எளிமையும் ஏறி உட்கார்ந்தது போததென்று பிரேமிளின் வீரியமும் ஒரே போடாக போட்டு என் நெஞ்சை அமுக்கிக் கொண்டது எதிர் பாராது தாக்கிய ஒரு காத்துக் கருப்பு விபத்துதான். எனக்குத் தெரிந்து எண்பதுகளில் ஒரு சித்திரை மாசத்துச்சீசனில், ஒத்திகை, மேடை, அது இதுவென்று அலைந்து, தொடர்ந்து 29 நாட்கள் தூக்கமின்றி கண்விங்கி கஷ்டப்பட்டதுக்கு இது எவ்வளவோ மேலாகத் தோன்றினாலும், இலக்கிய கூட்டங்களுக்குப்போவதோ கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு வம்புதும்புகளிலும், வரட்டு விவாதங்களிலும் ஈடுபடுவதிலோ நாட்டமோ நேரமோ இல்லாமல் ஒதுங்கித்தானிருந்தேன். இது வரை எந்த எழுத்தாளரையும் ஒடிப்பார்த்து ஒட்டிக்கொள்ளுமளவுக்கு அவர்கள் எழுத்து என்னை ஆகர்ஷிக்கவில்லை என்பது எனது மனதுமட்ட அளவீடு, விதிவிலக்காக சிலர்.

முதன்முதலாக புதுமைப்பித்தனைச் சந்தித்தபோது அவரது நடை உடை பாவனைகள் பழக்கதோஷங்கள், பேச்சுத் தோரணைகளினால் வசீகரிக்கப்பட்டு ஏற்றமும் மாற்றமும் பெற்றது பற்றி மெளனி, கா. நா. சு. ரகுநாதன், கு அழகிரிசாமி முதலியேர் நிறைய சொல்லியிருக்கின்றனர். திருநெல்வேலி ஜிப்பா, வாரிவிட்டுக்கொள்ளும் பாகவதர்கிராப், ஸ்பென்சர் சுருட்டு குடிப்பது எந்த ஒட்டலானாலும் தேடிப்பிடித்து சுத்தச்சைவச்சாப்பாடு, பருப்புச்சாம்பார், பலகாரங்கள் உட்கொள்வது, வேகமாக எட்டிவிசிறி நடப்பது, அசுர வேகத்தில் படிப்பது பு. பியின் விசேஷங்களாக சித்தரிப்புப் பெறுகிறது. வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் சமர்த்தரான முருகதாஸ்ர் ஒரு நாள் கழிந்தது சிறுகதையில் வெத்திலைபோடுவதும், காபிக்கு ஏற்பாடு செய்வதும் பு: பியின் நாக்குச் செத்த வெறிதான். தன் கதை ஒன்றை பத்திரிக்கையில் பிரசுரிக்கக் கோரி காக்காய் வலிப்புக்கார தோஸ்தாவோஸ்கியை நெருங்கிய அழகி திரும்பிவரும் போது கற்பை அங்கேயே விட்டு விட்டுவிட்டு வர நேர்ந்த விபரீத சம்பவமும் இலக்கியத்தில் இருப்பது மனத்திரையில் ஒரு நிமிஷம் ஒடி மறைந்தது. சில குருட்டுத் தடவல் கூமட்டைகளுக்கெல்லாம் வாசகவைப்பு தேவைப்படுகையில் பிராய்டையும். ஜயின்ஸ்டினையும் பாதித்த வனுக்கு தற்ச் செயலாக நடந்ததில் தப்பென்ன? பின்னால் அவன்ை வாழ்க்கைத்துணைவியாகவும் சொத்தக்காரியதரிசி யாகவும் வரித்துக் கொண்டது ஒரு மேதையின் காருண்யத்தை யும் காதலையும் ஒரு சேர பறைசாட்டுகிறது. குளத்தில் சில கற்கள் விழும்போது அலைகளின் அதிர்வு இப்படி சில அழகை, அசிங்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும்.
கணிதராமாநுஜத்தை ஈன்று உலகப் புகழ் பெற்றிருந்த கும்பகோணம் மெளனி, கு பரா, நா. பிச்சமூர்த்தி தி ஜானகிராமன் கரிச்சான் குஞ்சு, எம். வி. வெங்கட்ராம் முதலியோரையும் தமிழுக்குத்தந்து இலக்கியத்திலும் பிரதான இடத்தை பெற்றிருக் கிறது. வைணவத்தில் தென்னாட்டுக் காசியான இத்தலம்
2 ம் ச. பூ.
படிப்பகம்________________

padippakam
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமக மகிமை பெற்றது. அரசலாறு பாயும் இவ்வூரில் தடுக்கிவிழுந்தால் கோயில்கள்தான். யானைக்கர்ல் விமாதியும் இவ்வூரின் விசேஷம் பித்தளைப்பாத்திர உற்பத்தி பூகோள பாடத்தில் படித்தது. பட்டு நெசவுத் தொழில் சமாச்சாரங்கள் எம். வி. வி. யின் செளராஷ்டிர வாழ்க்கையை விளக்கும் வேள்வித்தீ மூலம் தெரிந்து கொண்டது.

இத்தகைய புண்ணிய rேத்திரத்தில் 19-2-95 நன்னாளில், பிரேமிளுக்கு புதுமைப்பித்தன் சாதனை விறு' வெ.மு. பொதிய வெற்பன் வழங்குவதாக கால சுப்ரமணியம் கடிதம் மூலம் அறிந்து சொல்லாமல் கொள்ளாமல் அழையா விருந்தாளியாக பிரேமிளை சந்திக்க முடிவு செய்தேன். கும்பகோணத்திற்கு இது இரண்டாவது தடவை. மோகமுள் முடித்து, உடனடியாக மூட்டை கட்டிக் கொண்டு போய், பாசிபடிந்த மாமாகங்குளத்தில் தங்கம்மாள் தற்கொலை செய்து கொண்ட தென்மேற்கு ஈசான மூலையை தரிசித்துவிட்டு, கஷ்டப்பட்டு கைக்காட்டித் தெருவை கண்டுபிடித்து அது இப்போது இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது ஒரு பழைய விசித்திர முன் அனுபவம். இதேபோல் ஆர், ஷண்முக சுந்திரத்தின் நொய்யல் கிராமங்களான கீரனூர் வெங்கமேடு சிவியார் பாளையம், ஒரத்தப் பாளையம் இவற்றை இட்டாரி இட்டாரியாக சுற்றியபோது, அங்கு நாகம்மாளும் கெட்டியப்பனும் கூடிக் குலவிய ஒலைக் குடிசையோ, முத்தாயள் எட்டிக்குதித்துச் செத்தநல்ல தண்ணிக் கிணறோ அல்லது நீர்மலாவோ ஒரு குஞ்சுக் குருவியைக் கூடக் காணோம், வெய்யிலையும் கானலையும் சுவாசித்துக் கொண்டிருந்த கிளுவ முன்கூட்டங்கள்தான் இருந்தன. எங்களை ஒன்றும் செய்ய முடியாதென்ற தைரியத்தில். இப்படித்தான், நீலபத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம் வாசித்த உடனே ஒரு ரஷ்ய இளம்பெண், திருவனந்தபுரத்திற்கு ஓடிவந்து பத்மநாபசாமி கோயிலின் இருண்ட பிரகாரத்தில் உள்ள கார்த்தியாயினி விக்கிரகத்தை தொட்டுத்தழுவி தான் அதுபோல் கட்டுமஸ்தாக இல்லையே என்ற ஏக்கத்தில் முத்தங்கள் பொழிந்ததாக ஒரு சம்பவம் காற்று வாக்கில் கேள்விப்படுகிறேன்.

பிரேமிள் என்ற படுபாதாளக் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து அதில் என்ன இருக்கிறது, ஒரு a b c ஆவது தெரிந்துகொள்ளலாம் என முயல, அதற்குள் தன்னகங்காரத் தன்மை கொண்ட ஒரு மெடபிசிக்கல் தர்க்க உலகம் வியாபித்துக் கிடக்கின்ற பயங்கரம் int-Goth ‘a sight to dream of not to tell’ Guirá, Gräsensor ou ஒடத் திருப்பித் துரத்தியிருக்கிறது. தமிழின் சராசரி வாசகத் தன்மை இன்று சினிமாத்தனமாக இருக்கும்போது சிறுகதையில் புதுமைப் பித்தனையும், கவிதையில் பிரேமிளையும், சாதனை யாளர்களாக சொன்னால் பலரது கண்களும் அகலவிரியத் தான் செய்கிறது.

பிரேமிளின் பெயர் மாரீசம் எழுத்து'வுக்கு முன்னும் பின்னும் ஒரே தாவலாக பறந்தடித்து லயம்' பத்திரிக்கையில்தான் ஒரு
*・邑・ △ 3
படிப்பகம்
________________

padippakam
கிளையில் நிலைத்து அமர்ந்திருக்கிறது. வானவில்லின் நிறங்களாய் ஒன்றிலேயே - தருமு, தர்மு, தர்மோ, தர்ம - சிவராம், சிவராம், ஜீவராம். அஜித்ராம் - பிருமிள், பிரமிள், பிரேமிள் என்ற வண்ண ஜாலங்கள். இவ்வேவுங்கள் நாடோடித்தனமாகத் தெரிந்தாலும் இவைகள் நியுமராலஜியின் அடிப்படையில் அவ்வப்போது கூட்டிக் குறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது என் அனுமானம். தன் மீது மோதும் போலிகளை வம்புக்கு இழுத்து ராவுடி பண்ணுவது வழிமறைத்து கலாட்டா செய்வது, திடீரென்று தாக்குவது ப்படியான வாடிக்கைகள் இவரை இலக்கிய கொரில்லா வாக்கியுள்ளது. நிலைமை முற்றும்போது விஷயத்தை விட்டு விட்டு, ஆள்மேல் ஏறுவதும் தமிழில் பிரேமிள் தோற்றுவித்த புதுவகையான கலக விமர்சனம். ஒருவன் எந்த அமைப்பிலிருந்து ஜாதியிலிருந்து, வர்க்கத்திலிருந்து தொழிலிருந்து கொண்டு எழுதினாலும் அது கீழ்மை செய்யக் கூடாது. வறுமையில் அடிபட்டு இலக்கியத்தை செம்மைப் படுத்தியது புதுமைப்பித்தன் போன்றோரது பெருந்தியாகம் சூழ்ச்சியைப் புரிந்து கொள்பவன் எழுதினாலும் எழுதாவிட்டாலும் கலைஞன் தான் என்பது பிரேமிளியத்தின் மிக முக்கியமான நாடிகளில் ஒன்று. பிரேமிள் பிரபலமானவர் ஒதுக்கப்பட்டவர் என்ற இரண்டு தட்டிலும் சரிசமமாக நிற்கிறார். வணிக பத்திரிக்கை களுக்கு இவர் ஜென்ம எதிரி; பிரசுரகர்த்தாக்களுக்கு வேதாளம். போவிக்கவிஞர்களுக்கு இன்றைய ஒட்டக்கூத்தன். வறட்டு விமர்சகர்களுக்கோ எமன். இவைகள் பிரேமிளின் நவீன ஆயுதங்களாய் அடையாளங்களாய் தெரிகின்றன.

என் கதை நெருப்பப்பா, நெருப்பு, அதைப்போட்டால் உன் பத்திரிக்கை எரிந்துவிடும்' என்று புதுமைப்பித்தன் சம்பிரதாயத்துக்குகதை கேட்ட ஒரு பத்தாந்தரத்தை சொடுக்கிய விஷயம் நமக்குத் தெரியும். பிரேமிள் விஷயங்களிலும் இந்தவித ருத்ரதாண்டவமான கொந்தளிப்புகளும், காரத்தன்மையும் நடந்திருக்கின்றன. எது எப்படியாயினும் பிரேமிளின் இலக்கிய இயக்கம் புதுமைப்பித்தனுக்கு நேர் அடுத்தது என்பது நடந்து முடிந்த சரித்திரம். பித்தனில் தெரித்தது எஃகு இரும்பின் தீவிர உறுதித் தன்மையென்றால் பிரேமிளில் தேக்கின் சேவேறிய திரட்சித்தன்மைகள் படிமங்களாய் லகுவில் பிளக்கவோ பிரிக்க வோ முடியாதபடி உருண்டுகிடக்கின்றன. இவைகள் பலராலும் புரிந்துகொள்ள முடியாத கடினத்தன்மையும் ஈலியாக இமிடேட் பண்ணமுடியாத தனித்தன்மையும் கொண்டவை. தமிழின் விமர்சனதரித்திரத்தை போக்கிய பிரேமிளின் ஆன்மீக ஞானமார்க்கம் முன்னேறிய ஒரு நான்காவது நவீனத்தமிழை உற்பத்திசெய்துள்ளது மறுப்புக்கூற முடியாத சவாலாகும். இவர் இலங்கைத்தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்காக இதை இருட்டடிக்கும் முயற்சிகளும் சிறுபத்திரிக்கைகளில் நாளும் நடந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வாழ்ந்து இங்கே மட்டும் எழுதுவதால் இலங்கையலும் இவர்மேல் ஒரே கொதிப்பு. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆங்கில படைப்பாளிகள் சமமாக பாவிக்கப்படும் போது இலங்கை, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பேதம்! இந்த மாதியான அகெளரவங்கள் மொழிக்
4 A ச. பூ
படிப்பகம்________________

padippakam
கொலையை ஏற்படுத்திவிடும். யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக் கும் வாழ்க்கை முறையில் சில வட்டாரமான அம்சங்கள் தவிர வேறு என்ன வித்தியாசம்? கோல்டுஸ்மித்தையும், ஸ்காட்டையும், பெர்னாட்ஷாவையும், ஜாய்சையும் லண்டன் மக்கள் கரகோஷத் துடன் வரவேற்கவில்லையா? இச்சூழ்ச்சிச் சூழலில் துணிந்து தமிழின் நவீனத்துவம் தொகுத்தும், பிரேமிள் கவிதைகளில்_Phd ஆய்வு செய்தும், பிறபடைப்புகளை பிரசுரம் செய்தும் பிரேமிளை முன்னணிக் கலைஞனாக காட்டி வந்த வரும் கால சுப்ரமணியம் மிகவும் கவனத்திற்குரியவர் இதில் சோதனைகளை சந்தித்திருந் தாலும் கால சுப்ரமணியம் செய்த வேலை தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமைக்குரியதாக பின்னால் வரும் வாசகர்கள் படிப்பார்கள். ஜான்சனுக்கு ஒரு பாஸ்வெல் என்றால் பிரேமிளுக்கு கால சுப்ரமணியம் அதைவிட பல பங்குமேல் என்பது இன்னும் எழுதப்படாத பையாகிரப்பி உலகக்கவிதை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் விடிவெள்ளி பிரேமிள் என்பது விசாலமான ஆந்தைக் கண்களுக்குத்தான் தெரியும். தமிழில் இந்த அற்புதம் நடந்திருப்பது நம்ப முடியாததாகவே இருக்கிறது.

பரிசளிப்பு ஞாயிற்றுக்கிழமை நேரம், காலம், இடம், எதுவும் தெரியவில்லை. தஞ்சையைத் தாண்டி சி. எம். முத்து வின் இடையிருப்பு கிராமத்தில் சனிக்கிழமை இரவு கழிந்தது. காலை பில் நாங்கள் புறப்பட்டு வந்து சேருவதற்குள் மணி இரண்டாகி விட்டது. வந்த நேரத்திற்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது பெருத்த ஏமாற்றத்தில் முடிந்தது. ஏனெனில் ஒரு மேடை, பந்தல், மாலை, மைக் இல்லாமல் கோயிலில் தாலிக் கட்டியதைப் போல் விழா ஒரு பத்துப்பேருடன் சுருக்கமாக நடந்தேறியிருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு எம். வி. வெங்கட்ராமுக்கும் இதே கதிதான் நேர்ந்திருக்கிறது என்று சி. எம். முத்து சொன்னார். பரிசித்தொகையும் மிகவும் சொற்பம். ஒரு ஆயிரம் ரூபாய்தான். ரவிசுப்ரமணியனுக்கு சொந்தமான செல்லம் லாட்ஜில் பிரேமிள் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு நானும் சி. எம். முத்து இருவரும் அறிவிப்பின்றி நுழைந்துவிட்டோம். வி. எஸ். சத்யா, மீறல் தண்டபாணி உ. செ. துளசி, களம்புதிது கரிகாலன் இன்னும் பெயர் தெரியாத சில நண்பர்கள் சூழ்ந்திருந்தனர்.
"கல்கி இறந்து விட்டார். இனித்தமிழும் செத்துவிடுமே! என்று கவலைப்பட்டாராம் ஒருவர். அதனாலென்ன கி. வா. ஜகந்நாதன் உயிரோடு இருக்கிறார். பிழைத்துக்கொள்ளும் அழவேண்டாம் என்று ஆரஞ்சுப்பழம் கொடுத்து தேற்றினாராம் இன்னொரு ரசிகர்' - என்று பொதியவெற்பன் பழைய ஜோக்கை அவிழ்த்துவிட்டதும் அறை முழுதும் ஒரே சிரிப்பு வெடிகள்!

‘மணல்வீடு மாரப்பன் ... ஆசிரியர் சதுக்கப்பூதம் ... ஏற்கனவே தெரிந்திருந்த பொதிய வெற்பன் என்னை வரவேற்று அறிமுகப்படுத்தினார். பிரேமிளைப் போன்ற இன்னொரு *- է, A 5
படிப்பகம்
________________

padippakam
மழுங்க மீசை மழித்த இந்திதர்மேந்திரா ஸ்டைல் இளைஞரும் இன்னொரு பெட்டில் இணையாக உட்கார்ந்திருந்ததால் சற்று நேரம் ஆள் மாறாட்டமும் (திருதிரு) விழிப்பும் இடம்பெற்றது. இவர் சரவணன் என்ற பிரேமிளின் நண்பர் என்பது பின்னால் தெரிந்தது.

மீறல் - 4 பிரேமிள் சிறப்பிதழ் அட்டை படத்தை நினைவு படுததிககொடுை வணக்கம என்றேன். நான் பிரேமிளில்லை அவன் தடிபபயல் இது கொடடைக்குச்சி ஒரு நிமிடம் சாதித்துப்பார்த்தும் என் உடும்புப்பிடியில் ஒனறும் நழுவ முடியவில்லை.

போட்டோவுக்கும் நேரிலும் நிறைய வித்தியாசம் என்றேன் அதி ைஎன்ன ஆச்சரியம்' எனறார் பிரேமிள ஏதோ கூழையாக saamaan af GG “Hunchback of Notterdame Gurrei unawført ஜிப்பாபோட்ட வயோதிகராக காட்சியளிப்பார் என்றிருந்தேன் சொடுக.கி விட்டாற் போன்ற உடம்பிலோ முதுகிலோ ஒரு ஒடுக்கும் இல்லை ஒரு லேசான மஞ்சள் கலந்த வொயிட் சபாரி. ஜேப்பில் ஒரு ரோட்டமாக் பால்பாயின்ட் குடிகொண்டிருந்தது குளிதது வாரிவிட்டிருந்த தலையில் பொதுபொதுப்பான லேசான நரைத்த தலைமுடிகள் சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு அடங்கியிருந்தன. மூக்குக்கண்ணாடியும் படிக்கும் போது போட்டுக்கொண்டார். விழிகள் இரண்டும் கூரிய பார்வைகளை கொண்டிருந்தன. சுற்றி சிறுபத்திரிக்கைகள் கொட்டிக்கிடக்க, மண்டியிட்டும், கையசைத்தும் விளையாட்டுப் பையனைப் போல் கறுசுறுப்பாகவும் சுவாரஷ்யமாகவும் பேசிக் கொண்டே போனார் அந்த அறை இரண்டுபெட்கள் கொண்ட பெரிய ஹாலைப்போல் இருந்தது. பலரும் சுற்றிபோடப்பட்ட சேர்களில் வட்டமாக அமர்ந்திருந்தனர். பிரேமிள் அவர் அருகாமையிலேயே என்னை உட்காரவைத்து கொண்டதும் வேர்த்து வெலவெலத்துப்போனேன். தமிழின மாமேதை யின் அருகில் அமர்ந்திருக்கிறோம் என்ற பயத்தில் வெகு நேரம் வரைக்கும் உஷாராக வாயைக் கட்டிவைத்துக்கொண்டிருந்தேன். வேறுசில் விவாதங்களும் காரமாகத் தொடர்ந்தன. பிரேமிள் அவற்றை சமாளித்தபோது அய்யோ நாம் சிங்கத்திடம் தாம் இக்கிக் கொண்டோம் என்ற நினைப்பு எழுந்தபோது இல்லை, இல்லை ஒரு தாயின் அன்பான அரவணைப்பில் தான் பாதுகாப் பாக இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியாக அது பின்னால் மாறியது ஒரு வழியாக பிரேமிள் என் விஷயங்களுக்குத் திரும்பினார். ப்ேர் என்ன கல்விடு காளியப்பன் போல் ஒரே ரொமான்டிக்கா இருக்கிறது. லேசான நகைப்பு. பலரும் சுட்டிக் காட்டியதை பிரேமின் அழுத்தமாக சொன்னார். ஆர். ஷண்முகசுந்தரம் பற்றி கட்டுரைகேட்டபோது பிரேமிள் என்னை Maாappa என்றும் சுருக்கி மாரி என்றும் குறித்திருக்கிறார். பெயர் விஷயங்களில் கூட பிரேமிளது விஞ்ஞானப்பார்வைதான்.

பழைய நாடக வாழ்க்கைப் பேர். என் துக்கத்துக்கும், தோல்விகளுக்கும் வேறுசில் பாதுகாப்புகளுக்கும், ஒரு குறியீடாக
6 ம் ச. பூ
படிப்பகம்
________________

padippakam
சேர்த்துக்கொண்டது. சொல்லிவிட்டு முகத்தை உற்றுப்பார்க்க அவரும் அதே தர்மசங்கடத்துக்கு ஆளானர். இனிமேல் இரா. மாரப்பன் அல்லது வெறும் மாரப்பனாகவே இயங்குங்கள் என்றார் என் முடிவும் அதுதான்.

'இந்த உடையில் நீங்கள் வித்தியாசமாகத் தெரிகிறீர்கள்’ 'ஆடையில் ஒன்றுமில்லை. அதிகமாகப் படிப்பதிலும்தான். நான் காவியைக் கூட கட்டிக்கொண்டு திரிவேன், உங்களைத்தெரியாது பிரேமிள் படிப்பதற்கான வசதிக்காகவே சென்னையில் இருப்பவர். தமிழில் நாளைக்குத்தான் புதிதாக புள்ளையார் சுழி போடுபவர்போல் பேசியது ஒரு இளைஞனின் ஆவேசத்தை யும் தோரணையையும் ஒன்றாய்க் காட்டியது. வேறுசிலருடன் பேச்சுக்கொடுத்த வேளையில் மீண்டும் ஒரு வினாடி உற்றுப் பார்த்தபோது ஒல்லியான உடலும் மாநிறமும் தெரிந்தது. இறுதியாக படம் பிடித்தபோதுதான் 59 வயது ஆரோக்கியமான ஆனால் வாடிச்செழித்த செடி போன்ற உருவம் உறுதிப்பட்டது. பிரேமிள் ஒற்றை நாடியான உயரத் தோற்றம் கொண்டவர். நல்லவேளை, பத்திரிக்கைக்கு போட்டோ கேட்ட போது சமீபத்தில் எடுத்த எஸ்ரே படத்தை தரட்டுமா? என்ற புதுமைப்பித்தனின் மோசமான நிலையில்லை.

'நீங்கள் நாடகத்துறையை சேர்ந்தவரா?'...

ஆம். அமெச்சூர் வகையறா...' என்ற போது அவரது மாஸ்டர் பீசான நகrத்ரவாஸி வானில் வெடித்துச் சிதறிய பிளம்பாய் ஒரு நிமிடம் பிரகாசித்து மறைந்தது. வழக்கமில்லாத வித்யா பாத்திரமும் அற்புதமான காட்சியமைப்பு பிரதிமைகளும் கச்சிதமான படிம சம்பாஷனைகளும் நிரம்பித் ததும்பும் இந் நாடகம், மேடை மரபுக்கே புதிதானது. லண்டன், கொழும்பு நகரங்களில் அரங்கேறியும் தமிழ்நாட்டில் இதுவரை நடிக்கப் பெறாதது துரதிஷ்டமாகும். இது நிறைவேறாமையினால் பிரேமிள் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டிய நாடகங்கள் நின்று விட்டன. இதன் குறியிடுகள் ஒரு காலத்தில் தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்த தோல் பொம்மை ஆட்டங்களில்தான் பார்த்திருக்கிறேன். இதன் விஞ்ஞானக் கருவும் நவீனபாணி யுக்தியும், T. S. எல்லியட்டின் மதவிமர்சனத்தை மையமாகக் கொண்ட கவிதை நாடகமான மர்டர் இன் தி கத்தீட்ரல்-க்கு சமமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதை-வசனத்தை நாடகம் என்று கூறிக்கொண்டு பலரும் இன்னும் கண்டதை கட்டிக் கொண்டு அழுகையில் பிரேமிள் அதை உடம்பின் மொழியாக்கி வானில் சஞ்சரிக்க வைத்திருப்பது புதுவகை விஞ்ஞானத் தமிழ்.

ஆமாம் காவில் எப்படி ஊனம்... எங்கே பார்க்கலாம். என்று என் பேன்டை தொட்டுப் பார்த்து மிகவும் இரக்கப்பட்ட அதே சமயத்தில் வித்தியாசமின்றி நடக்கும்போது முகம் மலர்ந்தார். குளிப்பதற்காக கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்தது என் சோகத்தை சொல்லி முடித்தபோது விசனமாக கேட்டுக் கொண்டிருந்த பிரேமிள் என்ற் மனிதர் உருகி ஒரு
ச. பூ A 7
படிப்பகம்
________________

padippakam
சொட்டுக் கண்ணிர்விட்ட நிலைக்கு ஆளானார். இரும்பு என்றும் நெருப்பு என்றும் பலர் பிரேமிளை வருணித்தது பொய்யாகிப் போயிற்று. இலங்கையில் இளமைப் பருவத்தில் தன் தாயார் பட்டினியால் துடித்ததும் மேல் படிப்பைத் தொடர முடியாமல் ஒவியத் தொழிலுக்கு வந்ததும் பின் புலம்பெயர்ந்து தமிழகத்தில் நிலையாகத் தங்கியதும் - பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தது இஞ்சில் எழுது மறைந்தது. ஒரு நிமிடம் நீடித்த இந்த பெளத்தை பிரேமிள் கலைத்தார் கற்றியிருந்த தலைகளை எண்ணிவிட்டு, எடடு குட் டீ என்று ஆர்டர் கொடுத்தார். பகலெடடில் இருந்த காசை ரும் பையனிடம் முந்தி நீட்டிய பேதுதான் தெரிந்தது கையில் காகிருந்தால் பிரேமிள் செலவுக்கு அஞ்ச மாட்டாதவர் என்று. ஆனால் அவர் கை ஒட்டைக் கை. இருந்தால் வள்ளல்தான் கண்முன் தெரியாமல் வாரி இறைத்து விடுவார். நண்பர்களுக்கும் புத்தகங்களுக்கும் என்று.

என் கட்டுரைகள் வெறும் தகவல்கள்தான். என் செக்கு மாட்டுத் தொழிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு நிவர்த்தி. எழுதிப் பழகும் முயற்சி என்றேன்.

"பரவாயில்லை. ஆனால் இறுக்கிப் பிடித்து செயற்கை சொற்களைச் சேர்க்க வேண்டாம் என்றார் பிரேமிள்.
எங்களுர் சரவணமுத்துப் பிள்ளைதான் தமிழின் முதல் நாவலாசிரியர் விட்டு விட்டீர்களே சிட்டி. பெ. கோ. சு. கூட
நிரூபித்திருக்கிறார்."

தெரியும் நான் ஆராய்ச்சிக்குப் போகவில்லை. 0nce established நாவல்களைத்தான் எந்த நோக்கமுமின்றி ஒரு விமர்சனத்துக்கு மட்டும் எடுத்துக் கொண்டேன் என்றேன். அதோடு புதுமைப்பித்தன் மீது மாப்பளான் தழுவல் சாணியை வீசியது, கு. சின்னப்பபாரதியின் தாகம் நாவலை சிறந்த பத்து இந்திய நாவல்களில் ஒன்றாக உயர்த்தியது முதலிய சிட்டியின் குட்டுக்களையும் எடுத்துக் காட்டினேன்.

கமலாம்பாள் சரித்திரம் முற்பாதி நாவல், பிற்பாதி கனவு’ புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார் என்றார் பிரேமிள்.
ஒத்துக் கொள்கிறேன். அதே பு: பிதான் பிரதாவ முதலியார் சரித்திரத்தை குறையே ஆனாலும் அதுவே முதல் தமிழ் நாவல் என்றிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? என்று பதிலளித்த போது ஒரு அசட்டுத் தைரியமும் பிறந்தது. விஷயம் வேறு பக்கம் திரும்பியது. தொகுதி தொகுதியாக எழுதித்தள்ளாத பிரேமிள், பேசும் போதும் கண்டிப்பான அளவுதான். பல அறிவு ஜீவிகளை ஸ்தம்பிக்க வைத்த அவரது கட்டுக்கல்லான நடை விவாதத்தின்போதும் பிரதிபலித்தது. அவரது ஆரம்ப விமர்சனங் களின் காட்டம் தாங்க முடியாமல் சில கந்திரிகள் அவரை அடிக்க கை ஓங்கிய நிகழ்ச்சிகளும் நாகர்கோவிலில் நடந்ததாகச் சொன்னார்.
8 △ * 。
படிப்பகம்
________________

padippakam
சி. மணி வைத்திருக்கும் சில எழுத்து பிரதிகளில் அவசர அடியாக தருமு சிவராமை பர்த்திருந்தாலும் தமிழின் நவீனத்துவம்தான் அவரை முழுக்க தெரிந்து கொள்ள உத்விய்து. இப்போதைய பேட்டிகளைவிட் அக்காலத்திய கட்டுரைகளில், விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் எழுதி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் பிரேமிள உண்டு, இலலை என்ற இரட்டை முகம் கொண்ட உராய்வுத் தத்துவத்தில்தான். சமூகம், இயற்கை மற்றும் இலக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அவரது அக்காலக் கருத்துலகம். அப்போது பச்சைப் பாலை மரத்தில் அடித்த ஆணிபோல் என்றால் இப்போது அதுவே ஒரு முதிர்ச்சியைத் தொட்டிருக்கிறது.

தன் தாயார் சாது அப்பாத்துரையிடம் அழைத்துச் சென்ற விபரம் அவர் தொகுத்த தியானதாரா - வரலாறும் தொகுப்பும் தெரிவிக்கிறது. இந்நூலில் இன்னபிற இலங்கை-தமிழ்ச் சூழல்கள் சிறுவன் பிரேமிளை விடாப்பிடியான லெளகீக வாதத்திலிருந்து சமூக ஆன்மீகத்திற்கு இழுத்துவிட்ட சுவடுகளையும் பார்க்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தியின தத்துவ உலகிற்குள் நுழைய இதை ஒரு வாசறபடியாக எடுத்துக் கொள்வது மிகவும் வசதியானது. ஆயி குறுநாவல் ஒரு மூச்சில் எழுதப்பட்டு ஒரு வறண்ட பாலை வனத்திற்குள் பயணம் செய்த தாகத்தை ஏற்படுத்துகிறது. முடித்து நிறுத்தி விட்டோமானால் குடம்குடமாக தண்ணிர் குடித்துத் தீர வேண்டும் தமிழில் குறுநாவல் செய்வோர் பிரேமிள் உருட்டி வைத்திருக்கும் இந்தப் பாராங்கல்லைப் புரட்டாமல் மேலே முன்னேறுவதில் பயனில்லை. கணையாழி' யிலோ கல்பனாவிலோ வந்து, பக்க அளவீடுகளில் குறுநாவலை எடைபோடுவது பைத்தியக்காரத்தனம் டால்ஸ்டாயின் 140 ušes Recollections of Sevastopol gap seagugih gibav, signi நாவலும் கிடையாது. ஒரு கதை அவ்வளவுதான். ஆர். ஷண்முக சுந்தரத்தின் நாவல்கள் அளவில் சிறியவைகளாக சொற்சிக்கனம் கையாளப்பட்டு யதார்த்தமாக வெளியான போது கழுதை விட்டையானாலும் கை நிறைய இல்லையே என்ற பொட்டைக் கண் பார்வைதான் நிலவியது. இந்த அசிங்கமான, அதிமேதாவித் தனங்கள் இன்றும் பலரை பாதிக்கின்றது. இத்தடிநாக்கு
ரசனையை வளர்த்துவிட்டது யாரோ?. அழகான அட்டை ஒவியம் ஆயி ஆசிரியரே தீட்டியிருக்கிறார். பிரேமிள் கல்யாண மாகாத கட்டைப் பிரமச்சாரியானாலும் ஆயி அவரது

பேர் சொல்லும் பிள்ளைகளில் ஒன்று. லங்காபுரி ராஜாவில் வரும் ப்ரசன்னம் சுந்தரராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் மீதான ஒரு எதிரடி Parody - யானாலும் அதையும் மீறி வேறு பரிமாணத்துக்கு செல்வது. செயலின் ஊற்றுக்கண் சிந்தனையை பாதிக்கிறது என்ற ஜாதிய அழுக்கு முகத்தைக் காட்டாமல் காட்டி மொழிகளின் மூலம் இந்தியாவை ஒருங்கிணைக்கும் புதிய பிராமணியத்தை சு.ரா அரசியலாக்கிய போது இது BECH - a book' என்பதன் அப்பட்ட தழுவல், ('பழைய புட்டியில் புதிய புளுகு (விருட்ஷம்) என்று பிரேமிள் அம்பலப்படுத்தினார். திராவிட்ப் பாரம்பரியத்தின் மீதான
ச. பூ A 9
படிப்பகம்________________

padippakam
அத்துமீறலை தடுத்து நிறுத்திய பதிலடிச் செயலாகவே இது பட்டாலும் அழுக்கை உருட்டி வைத்த சு. ராவும் ஆரோக்கியத் திற்கு வெளிச்சமிட்ட பிரேமிளும் இங்கு பிரித்தறியப்படு கிறார்கள். கார்த்தர், காம்யு, காப்கா ஜே கிருஷ்ணமூர்த்தி சாரங்களின் சுலபமான ஒரங்களை மட்டும் வெந்தும் வேகாமல் பச்சையாக விழுங்கி செரிமாணிக்க முடியாமல் விட்ட குசுவின் பிணநாற்றத்தான் ஜே. ஜே என்பது பாமர வாசகர்களுக்கு திரை பாட்டு மறைக்கப்பட்டுள்ளது கலைஞன் அந்நியமானவன் ஸ்லோகம் The autsider என்பதின் தத்ரூப கார்பன் காப்பி, ஜோசப் கே அல்லது ஜே கே தான் ஜே ஜேவாக மாற்றி ரப்பர் ஸ்டாம்பாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி மேற்கத்திய மேஜிக்கல் ரியலிலம், போஸ்ட்மாடர்னிலம் பாலிம்ஸெஸ்டு சரித்திரங்கள் யாரும் சீந்தாமல் சீழ்பிடித்து இன்றோ நாளையோ என்று மரணத்தறுவாயில் கிடக்க - அது பழைய ஐரோப்பிய ரொமாண்டிசிஸத்தின் நவநவீன வடிவம் என்று கண்டுபிடிக்கப் பட்ட வேளையிலும் - அது அறிவியல் ரீதியானது என்று தமிழவன் இறக்குமதி செய்த ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் கதை சொல்லி முறையில் புதுவகை மரபானது என்றபோது அதற்கு சல்மான் ருஷ்டியின் (Shame) முன்னோடியாகவும் கேப்ரியல் stronour innisosuolor “One Hundred Years of Solitude" நகலாகவும் வாந்தி எடுத்ததை சிறு பத்திரிக்கைகள் பலவும் சாடியுள்ளன. தமிழில் தனக்கு நிகரில்லை என்பது ஆடிக் குதித்த போது ஜெயமோகன் ஆர்.எஸ். எஸ் க்கு மணியடிக்கும் பூசாரியாக பிரேமிளால் முகமூடி கிழிக்கப்பட்டார். (லயம்-12) கள்ளக் கடத்தலும், நாணயத் திருட்டும், நகான வேலைகளும் தமிழ் இலக்கியத்தை வணிகமாக்கியபோது பிரேமிள்தான் இவற்றை துணிந்து தோலுரித்துக் காட்டினார். விமர்சன ஊழல்கள் இன்றைய தினமணியில் இருக்கும் ராஜமார்த்தாண்டன் அன்று கொல்லிப்பாவை வெளியீடாக பிரேமிளுடன் நடத்திய பேட்டி. இதன் பிரதி இப்போது கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதிலிருந்துதான் பிரேமின் உக்கிரங்களை உமிழ ஆரம்பித் துள்ளார். இவைகள் தமிழுக்கு மனிையான, மாணிக்கமான நவீன விமர்சனங்கள். கா. முத்துசாமி, மெளனி, கா. பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், சா. கந்தசாமி முதலியோருடன் கட்டிய குழாயடிச் சண்டைக்ள் போல் இவைகள் தெரிந்தாலும் வகுப்புவாதம், வைதீகம், அறைகுறையான இலக்கியத் தன்மை முதலிய பிற்போக்குத் தன்ங்களில் ஒளிந்திருக்கும் சனாதன எழுத்தாளர் களை அம்முகாமிலிருந்து கொண்டே இருப்பித் தாக்கிய போக்கு இதில் தெரிகிறது. தொடர்ந்து சாருகிவேதிதா அசோகமித்திரன், ஜெயகாந்தன், தி.க சி வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், முதலியோருடன் வெளிப்படையாகவே மோதி தன் பலத்தைக் காட்டியிருக்கிறார் குமுதம் பரிசுக் கதைகளை சுஜாதாவுக்காக செலக்ஷன் செய்ததாலும் புதிய தரிசனங்களின் கடிதங்களை தொகுத்ததாலும் ஞானியின் பஞ்சாயத்து பண்ணும் வேலையை பிரேமிள் ஆரம்பத்திலிருந்தே பேசியிருக்கிறார். பெரியார் ஈ.வே.ரா, அண்ணாத்துரை இவர்கள் சாகித்ய அகாதமியில் இடம் பெறாது உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்த ஜெயகாந்தன், தமிழவின், சா. கந்தசாமி மூவரையும் சுயத்தன்மையில்லாத
10 A ச. பூ
படிப்பகம்________________

padippakam
இரவல்களாக, கையலாகாது இலக்கியப் போலிகளாக இனம் காட்டியபோது ஏகப்பட்ட சிறுபத்திரிக்கை வாசகர்கள் உஷாரானார்கள், கா.நா கக்கு ஆங்கிலம் தவிர பிறமொழிகள் தெரியாது; கருப்பான காமராசர் காலண்டரில் சிவப்பாக தெரிவது வெறும் சாயத்தில்தான் என்ற விமர்சன உறுதிகள் பிரேமினின் கருத்து யதார்த்தத்தை காலம்முழுவதும் பறை சாற்றும் ரீலங்காவின் தேசியத் தற்கொலை அற்புத வரலாற்றுச் சுருக்கம் இதன் எளிய நடையில் - நாம இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினையை தெளிவாக பார்க்கலாம். அன்று புதுமைப் பித்தனுக்கு ஒருசிலர்தான். இன்று பிரேமிளுக்கோ பலாச்சுளை ஈக்கள் போல் பலரும் கடிக்கும் நிலை. விமர்சகர்களுக்கெல்லாம் விமர்சகராய் விளங்கும். பிரேமிளின் போக்கு தம் பிரகஸ் பதித்தனத்தை புலப்படுத்திய நிறைய மேதாவிகளுக்கெல்லாம் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவுகடல் மேல்நோக்கிய பயணம் இவைகளிலிருந்து கவுன்டர்கல்ச்சர்லிமிடெட் அதிரடிக் கவிதைகள் வரை நிறையவந்தும், பிரேமிளின் கவிதைகள் ஒரு முழுத் தொகுப்பாக இன்னும் கிடைக்கவில்லை; ஜே.கே.யில் ஊறி தன்னைக் கரைத்துக் கொண்ட பிரேமிள் லயம் பேட்டிகளில் இலக்கியமல்லாதவற்றை துணிந்து தோலுரித்து வருகிறார். முன்றில் கவிதாசரண்கள் இவரை தாக்குப்பிடிக்கமுடியாமல். ஒதுங்கிக்கொண்டன.

கவிதையில் பிரேமிள் சாதனை இயற்கையின் கரடுமுரடான காட்டுத்தனமும் காண்டாமிருக மூர்க்கப்பலமும் கொண்டது. குறைந்தபட்ச சங்க இலக்கியப் பயிற்சிகூட இல்லாமல் இன்றைய குருட்டாம் போக்குக் கவிதைகளை வைத்து பிரேமிளை நெருங்குவது அபாயகரமானது. அடிப்படையான பெளதீக அறிவில்லாமல் பிரேமிளைத் தொட்டால் ஷாக்'தான் அடிக்கும். வண்ணதாசன்/வைரமுத்து வழ வழா, கொழ கொழாக் களையும், வழக்கமான எதுகை மோனை, வார்த்தை மடிப்பு களையும் கொண்டு போனால் நிச்சயம் அவர் அதில் அடங்க மாட்டாமல் திமிறிக்கொண்டு ஓடிவிடுவார். பிரேமிளின் படிமவியல் 2000 வருட தமிழ்க்கவிதைச் சரித்திரத்தில் புதுமை யானதாக சி. சு. செல்லப்பா க்ணக்கிடுகிறார். ஒரு கவிதையான உரைநடை அல்லது உரைநடையான கவிதை அல்லது இரண்டும் மருவியநிலை வால்ட் விட்மனின் leaves of grasses”-ல் உலவியது உண்மைதான். ஆனால் கட்டுப்பாடற்ற இந்த Free verse”போக்கு பிரேமிளிக்குப் பொருந்தாது. எஸ்ரா பவுண்டுடன் இவரை Øsorão, goto-umg. “We are all hollowman moving in the waste land என்ற எல்லியட்டின் தப்பித்தல் தத்துவம் பிரேமிளுக்கு நேர் எதிரானது.பின் பிரேமிள் கவிதையின் குணாம் சம்தான் எனன்?

இதைத் தெரிந்துகொள்ளுமுன் மெடபிசிக்ஸ் என்றால் என்ன? என்ற கேள்வியைப்போட்டுக் கொள்வது அத்தியாவசியம் தமிழ் அகராதியில் இதற்கு அப்பர்லைத்தத்துவம் எனப் பெயரிடப் பட்டிருக்கிறது, மீபெளதிக வகைக்கு அரிஸ்டாட்டில்
ச. பூ_A 11
படிப்பகம்
________________

padippakam
சூட்டிய பெயரான இது அடிப்படையில் ஒரு குனருபம் (abstract) ஆகும். பொதுவாக இது டையல்கடிகல் மெட்டீரியலிசத்துக்கு sr$artrs: G& Supernaturalism assez Preternaturalism =gs கருதவும் இடம் உண்டு. METATA PHYSIKA என்ற ஜெர்மன் மூலப்பதமான இது மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளும் உயர்வகை ரியலிசம். பொருட்களின் ஸ்துாலத் தன்மையான பெளதீகத் தோற்றம் முதன்மையாகவும் அதைச் சுற்றிச்சுழன்று உற்று உணரும் மனித ஞானத்தை இரண்டாம் பட்சமாகவும் ஏற்றுச்சொல்லும் ஒரு மனோதத்துவ ஆன்ம விஞ்ஞானம் இது முழுக்க முழுக்க அறிவியல் பார்வை கொண்ட இதன் தளங்களில் தமிழில் முதன் முதல் சோதனை செய்தவர் பிரேமிள். இக்கடினமான கலையில் உலக அளவில் ஒரு சிலரே Gsustig zsir@sirarsrif. srsa Gau “That man is a fox” is a metaphor, but *that man is like a fox' is a Simile erai p உவமான உவமேய பள்ளி இலக்கணங்களை பிரேமிளுக்கு பொருத்திப்பார்ப்பது பாமரத்தனம் பிரேமிளின் படிமக் கவிதையில் ஒரு ஓங்கிய தன்கைங்காரத்தன்மையில் (Coocei) ஆழ்ந்த அறிவுச்சிந்தனை அவருக்கே கூட தெரியாமல் பிறந்து இருக்கலாம். விஷயயதார்த்தத்தின் கர்வத்தன்மையான இவரது கவிதைகள் புரியாமல் பலரும் திண்டாடக் காரணம் பல்துறை அறிவு அதளபாதாளத்தில் கிடப்பதுதான்.

இங்கே கொஞ்சம் ஆங்கிலத்தை முடிச்சுப்போட்டுப்பார்ப்பது அவசியம். எலிசபெத்கால கவிதைகளில் அலங்கார அடுக்குகள் சொல்ஜாலங்கள் தலைவிரித்தாடியபோது ஜான் டன் (ன் Doமe) இயக்கம் அதை சிந்தனைக்கு திருப்பிவிட்டது, அரைத்த மாவையே திருப்பி அரைக்கும் இது வெறுப்பில் நிகழ்ந்த ஒரு மரபு மாற்றம்தான். படிமக்கவிதையின் தந்தையாக டாக்டர் ஜான்சன் இவரை அடையாளம் கண்டபோது He effects the ielaphysics_என்ற டிரைடன் வார்த்தைகளில் கேலியாகக் குறிப்பிட்டார் தொடர்ந்து ஆங்கில மெடபிஸிகல் கவிஞர்களாக Fruff – Gaaffé, (Robert Herrick) zru so GsG (Thomas Carew) fësrf- $3prastr (Richard Crashaw) Gaussist surssär (Henry Vaughan) ouring outruste (George Herbert) சர். ஜான் சக்லிங் (Sir o suckling) ஜான் கிளிவ்லேண்ட் (John Cleaveland) 4-gapiro assiso (Abraham Cowley) முதலியோர் வருகிறார்கள். இவர்கள் புதியசிந்தினைகளில் திளைத்து ஒசைநயம், ஒலிவடிவம் இவற்றின் முதுகெலும்பை முறித்து எறிந்தார்கள். ஆரம்பத்தில் அங்கதத்திற்கு (Saike) மட்டும் பிரயேகிக்கப்பட்டு படிப்படியாக மதமும் பாடு பொருளாகியது. தூரப் பறக்கும் கற்பனைகள், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் எடுத்துக்காட்டுகள் புரிந்துகொள்ள முடியாத
வார்த்தைக் கட்டுமானங்கள் இதன் விஷேசத்தன்மைகள். காதலை ஆன்மீகமாக்கிய ஜான் டன். “John Donne Anne Donne Un- done 12 ム *・。
படிப்பகம்________________

padippakam
என்று தன் மனைவி அன்னிக்கு (Anne) சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின் முகவரியில் கவிதை எழுதியிருக்கிறான். இந்த மாதிரி ரிஷிமூல நதிமூலங்களில் மிரேமிள்ைத்தேடமுடியாது. பிரேமிள்து தனிரகம். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவது வருங்காலத் தமிழ் மாணவர்களுக்கு தேவையானது,

சில சிறுபத்திரிக்கைகளை உதாரணம் காட்டி என்.தவறு களை நேரிலியே சுட்டிக் காட்டினார். பிரேமிள் ஜர்னலிசத்தின் தொழில் நுட்பங்களை கலையம்சங்களை நிறையச் சொன்ன போது ஒவ்வொன்றும் என் நன்மைக்காக ஒரு மேதையின் முதல் சந்திப்பில் கிடைத்த மோதிரக் குட்டாகவே பட்டது. மாலை 5-00 மணியான போது எல்லோரும் பிரிந்தனர். கடைசியாக நான் மட்டும் திரும்பிப் பார்த்தபோது கால சுப்ரமணியம் மட்டும் இல்லாவிட்டால் மிஸ்டர் மாரப்பன் இன்று நீங்கள் இந்த பிரேமிளை உயிரோடு பார்த்திருக்க முடியாது' என்று நன்றியுடன் நாத்தழுக்கக் கூறியது என் நெஞ்சில் அப்படியே பாய்ந்தது. அவர் கட்டியிருக்கும் இலக்கியகோட்டைகளுக் கெல்லாம் அஸ்திவாரம் பொருளாதாரப் போராட்டமும்தான் என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது. பிரேமிள் ஊருக்குப் புறப்படத்தயாராகவே, மீண்டும் சந்திப்போம்' என்று கை குலுக்கு விடைபெற்றபோது.

'சிறகிலிருந்து பிரிந்த
 இறகு ஒன்று
 காற்றின்
 தீராதபக்கங்களில் 
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
 (காவியம்) என்ற கவிதை
 அவரது ஒண்டி வாழ்க்கையின் சோகத்தை சொல்வதாகவே திருப்பித் திருப்பி என் காதில் ரீங்கரமிட்டுக் கொண்டிருந்தது. தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் உட்சபட்ச சாதனையை எட்டிய ஒரு மேதையை சந்தித்த நிறைவுடன் வெளியேறி பஸ்சை பிடித்து ஒரத்தில் உட்காந்தபோது நில்வின் வருகையால் நீலவானம் வெள்ளையாகியிருந்தது. Q
4. g. A 13 படிப்பகம்