Tuesday, 1 March 2016

-Federico Garcia Lorca --Jalāl ad-Dīn Muhammad Rūmī- -Maureen Burge-Sappho---Li Ching Chao--Tien tzu mu-lan hua --Wang ch' uan chi-(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Federico García Lorca - in poems collide.
I'm scared of losing the wonder
Of your eyes of statue and that accent
That night I print in full face
Of your breath the solitary rose.
I'm sorry to be this ribeira
Torso without branches; and what else I feel
It is not to have the flower, pulp, or clay
For the gusano of my suffering.
If you are the treasure that I have hidden my
If you're my cross and my pain wet,
If your landlord I am the dog,
Don't let me lose what I won
And the waters decora of your river
With the leaves of my autumn elusive.

Translated from Portuguese

Shanmugam Subramaniam
1-03-201620 hrs ·

ஒவ்வொரு ஆடியின் பிற்புறத்தில்
ஒரு மரித்த தாரகையும்
ஒரு மழலை வானவில்லும்
துயில்கின்றன.

ஒவ்வொரு ஆடியின் பிற்புறத்தில்
ஒரு வெறுமை வெளி நித்தியமாயுள்ளது
மெளனங்களின் கூடு
பறத்தலுக்கு அதி-பால்யமாயுள்ளது .

ஆடி ஒரு ஊற்றாயுள்ளது
பதனிட்ட பிரதேமாகிறது;
ஒரு ஒளி ஓடு போலும் அந்தியில்
மூடிக்கொள்கிறது .

ஆடி
தாய்மைப் பனித்துளியாயுள்ளது
உலர்த்திய அந்தி மெல்லொளிப் புத்தகத்தின்
எதிரொலி மாம்சமாகிறது.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 28 at 11:51pm ·

தற்செயல் நிகழ்வின்
ராசிமண்டலம்
திறந்து கொள்கிறது, விசிறி போல்
சிவப்பு மஞ்சள் பச்சை.

எண்களின் வனத்தில்
ஒரு சிறுமி தொலைந்துவிட்டாள்
விழிகள் சாத்திக் கொண்டன
நான்கு? ஐந்து? ஏழு?

ஒவ்வொரு எண்ணும்
ஒரு பறவையை அல்லது ஒரு அரவத்தை உள்ளடைக்கிறது.
ஆம் என்கிறது நான்கு
இல்லை என்கிறது இருபது.

தற்செயல் நிகழ்வால் ஆளப்படும் வான்மீது
சிறுமியின் விரல்
தனது தாரகையைப் பதிக்கிறது-
பெருவளமார்ந்த நிகழ்கணம்.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 28 at 12:11am ·

அன்பரே, நான் இழந்ததை நீ
ஒரு வியப்பூட்டும் பரிசாக மாற்றுகிறாய்.

எனது வாயை நினது வேட்கையால் திறந்துவிட்டு
திறவுகோலை என்னிடமே கையளிக்கிறாய்.

ஒரு விநோதமான,மதிகேடான அனுமானம்
மெய்யாகவே மெய்யாகவே தோன்றுகிறது.

பிற புனைவுகளை நான் கடந்தேக அனுமதிக்கிறேன்.
நான் நினது விதைப்பையின் உள்ளடக்கங்கள்,
என்னை பூமியின் மீது தூவு.

நான் சாந்தமாய் இருந்துவிடுகிறேன்
இந்த சப்தங்களுக்கு மத்தியில்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Like

Shanmugam Subramaniam
February 27 at 8:18am ·

இத்தருணத்திலிருந்து நைட்டிங்கேல் பறவைகள் இசைக்கும்,
வெளிப் புறத்தே அமர்ந்திருக்கும் நம்மைப் பற்றி,
காற்று வில்லோ செடிகளின் கேசத்தை உயர்த்தி
அவளது ஆடலைத் துவக்குகிறது.
இறைவனொருவனே அறிவான் அந்நேரம்
அவர்கள் ஒருவருக்கொருவர் யாது மொழிகின்றனர் என.

பிளேன் தரு அதன் அகல்-கரங்களை வெளியே நீட்டுகிறது
பசும்புல் வெளியை துதிக்கும் வண்ணம்,
நாணலின் பேருணர்ச்சியை சொற்பமாய் உணர்ந்து.

நான் ரோஜாவை வினவுகிறேன், நீ எவ்விடமிருந்து இத்தகைய சருமத்தை பெற்றாய் என?
அவள் நகைக்கிறாள், எவ்வாறு அவள் விடையளிக்க கூடும்?

அவள் வெறியுற்றிருக்கிறாள், ஆயினும் நிறைவாயில்லை
இரகசியங்களைச் சொல்வதற்கு என்னை நிகர்த்த துர்த்தனமில்லை.

வெறியுற்றவருடன் அலைந்து திரி
அவர்கள் எதை மறைத்து வைத்துள்ளனர் என்பதை
நீ அறிந்து கொள்ள வேண்டுமெனில்.

மூடியுள்ள உறைப்பை-வாயை திறந்து
அவர்கள் தாராளத்தைச் சிந்துவார்கள்.

அங்கொரு வைன் முதிர்ந்து புளிக்கிறது
ஒரு மறை ஞானியின் நெஞ்சில்,
அங்கிருந்து ஒரு குரல் என்னை
விருந்திற்கு அழைக்கிறது.

ஒரு மானுட மார்பு பால் அளிக்கக்கூடும்,
அன்றி வைனையும் , அதனோடு
ஒரு ஆற்றொழுக்கு உள்ளது
அது கதைகளை மொழிகிறது.

பால் பருகும் போதே செவிமடுங்கள்
பின்னர் வைன், அதன் பின்னர் கதைகள்.

நினது தொப்பியையும் நினது மேலங்கியையும் கீழே கிடத்திவிடு
மகிமையிலிருந்தே மொழியத் துவங்கு.

இப்போது மொழிதலற்றிரு.
வெகு சிலரே செவியடைவர்.

பெரும்பாலான செம்பு பொன்னாய் மாறுவதில்லை
எந்த இரசவாத கல்லிற்கும்.

ஷாம்சிடம் நினது வார்த்தைகளை எடுத்து வா.
கதிரொளி மொழியோடு கூடிக் கலக்கட்டும்
உலகாய் இருந்திடு.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 25 at 10:44pm ·

இரவு மெலெழுந்துள்ளது நாமிருவரும் முழுநிலவுடன்,
நான் அழத் துவங்கினேன் நீயோ நகைத்திருந்தாய்,
உனது அலட்சியம் ஒரு இறையாயிருந்தது, எனது முறையீடுகள்
கணங்கள் சங்கிலியில் பிணையுற்றிருக்கும் புறாக்கள்.

இரவு தாழ்ந்துள்ளது நாமிருவரும், வாதையின் படிகமாயிருக்கிறோம்.
நீ கதறியழுதபடி இருக்கிறாய் ஆழ்ந்த தொலைதூரங்களின் மீது,
எனது விசனம் மனவேதனைகளின் குழுவாயிருந்தது
மெலிந்த உன் மணல் நெஞ்சின் மேற்புறம்.

புலர்வு நம்மை இருவர் சகிதமாய் மஞ்சத்தின் மீது ஈர்க்கிறது,
வாய்கள் அழுந்தியுள்ளன உறைந்த நீர்த்தாரையில்
நில்லாது சிந்தியபடியிருக்கும் குருதி.

ஞாயிறு அடைக்கபட்ட மேல்மாடத்தினூடே நுழைந்தது
வாழ்வின் பவளம் தனது கிளையை திறக்கிறது
பிரேதப் போர்வை கவிந்திருக்கும் எனது நெஞ்சின் மீது.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam with Karthik Prakatheesan and 3 others.
February 25 at 12:05am ·

முழுநிலா அலையெழுச்சி என்னை நகைப்பிற்குள் கொணர்கிறது, எஞ்சிய வெறிமயக்கின் நீட்சி என்னை சிரசுழற்ச்சியில் இருத்துகிறது.

ஒரு நிலா என்னை வட்டத்துள் கொணர்ந்தது, தோழன் ஒருவன் என்னை தோழனற்றிருக்கச் செய்துவிட்டான்.

யாழின் குரலினூடே நானொரு இசைநரம்பானேன்- இன்னிசை செவிப்படுகிறது, இசைநரம்பு புலப்படவில்லை.

தூசு போலும் அவன் உலகை அசைவாட்டினான்; தூசியினுள் காற்றைப் போலும் அவன் மறைந்தான்.

ஒரு கனலைப் போலும் வாழ்வை மூட்டிய அந்த ராஜன் ஒரு கனல் பொறியினுள் மறைந்தான் அழல் எரிதலாய்.

ரோஜாத் தோட்டத்தை அணியூட்டியவன் முள்ளின் ஆன்மாவில் ஒரு ரோஜாவைப் போலும் மறைந்தான்.

எனது நெஞ்சம் நவில்கிறது. சகியிடம் மொழிந்திடு நான் எஞ்சியுள்ள ஒன்றிற்காக போதையுற்றிருக்கிறேன் என.

எனது நெஞ்சம் ஒரு ஆடியைப் போலும் அமைதியாயிருக்கிறது ஆடியை ஏந்தியுள்ள பிரமிக்கத்தக்க கரங்களில் பேசுகிறது .

கணத்திற்கு கணம் அங்கு ஆடியில் ஒளிர்கிறது ஒரு பிரமிக்கத்தக்க எழிலுருவம்.

ஒவ்வொரு வடிவமும் சுல்தானின் வல்லுறை ஒத்துள்ளது; அதுவே ஒரு வேட்டைப்பொருள், அது ஒரு வேட்டைப்பொருளை நாடுகிறது.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 23 at 10:52pm ·

உனது நினைவை உன்னுடனே எடுத்துச் செல்லாதே.
எனது நெஞ்சகத்துள் அதைத் தனித்திருக்க விடு,

செர்ரி தருக்களின் நடுக்கம்
வெண்- ஜனவரியின் புனித உயிர்த்துறவு.

துர்கனாவின் ஒரு சுவர்
மாய்ந்தோரிடமிருந்து என்னைப் பிளவுறுத்துகிறது.

ஒரு சுண்ணச்சாந்தின் நெஞ்சத்திற்கு
ஒரு பசும் லில்லியின் வாதையை நான் அளிக்கிறேன்.

இரவு யாவும் கனித் தோட்டத்தில்
எனது விழிகள், இரு நாய்களை ஒத்துள்ளன.

இராப் பொழுது முழுமையும்
திண்கனிகளின் விடத்தை உண்ணுகிறேன்.

சிலபொழுதுகளில் நறுங்காற்று
அச்சத்தின் ஒரு துலிப் பூவாயிருக்கிறது.

ஒரு பிணியுறு துலிப்
பனிக்கால புலர்வு.

ஒரு துர்கனாவின் சுவர்
மாய்ந்தோரிடமிருந்து என்னைப் பிளவுறுத்துகிறது.

மோனத்தில் நாணல் கவிந்து கொள்கிறது
உனது தேகத்தின் சாம்பல் வண்ணப் பள்ளத்தாக்கு.

எம்லாக் செடி வளைவாய் வளர்கிறது
சந்திப்பின் வளைவாய்.

அன்றி உனது நினைவை என்னிடம் விட்டுவிடு
எனது நெஞ்சகத்துள் அதைத் தனித்திருக்க விடு.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 22 at 10:18pm ·

இக்கணம் இராப் பறவைகள் இசைத்துக் கொண்டிருக்கின்றன ,
நாம் ஒருவரையொருவர் நேசம் செய்யும தடத்தில்.
அவை ஏன் பூக்களைப் பற்றி இசைக்க வேண்டும்
நம்மைப் பூந்தோட்டத்தில் கண்ட பின்னும்?

ஒருவேளை அவை நாணமுற்றிருக்கலாம்.
முகத்தை காணவியலாது,
அவை பாதத்தை வர்ணிக்கின்றன.
தொடர்ந்து நேசத்தை துண்டுகளாக பிளந்தால்
அவை முற்றிலுமாய் மறையும்.
நாம் சாந்தமாயிருந்து அவைகளுக்கு நயமாய் விளக்க வேண்டும்.

பிரம்மாண்டமான ஒரு மலையை நினைந்திடு
காக்கஸஸ் மலைத்தொடரும் ஒரு நுண் புள்ளியாகும்
அவள் அழைக்கும் போது சராசரி மலைகள் அவளை நோக்கி ஒடுகின்றன.
தனது குகைச் -செவிகளால் மடுக்கின்றன, திரும்பவும் எதிரொலிக்கின்றன.
அருகடையும் போது அவைத் தலைகீழாய் புரள்கின்றன;
அவ்வண்ணமாய் கிளர்ந்துள்ளன.

இனி வார்த்தைகள் இல்லை,
இவ்விடத்தின் பெயரால் நாம் பருகுகிறோம் நமது சுவாசித்தலுடன்,
ஒரு பூவாய் மோனத்திரு, அவ்வண்ணமாய் இராப் பறவைகள் இசைக்கத் துவங்கும்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 22 at 2:02am ·

இவ்வாழ்வின் ருசி நின் வசமிருந்தே வருகிறது
ஆன்மா மலைப் புனலாய் அசைகிறது
பூக்களின் வான் கீழ்.

அத்தகைய வனப்பை காண்பது
நாளை என்னை நீர்ம வண்டலை எதிர்நோக்கச் செய்கிறது.

நின்னை நான் நிலாவென அழைக்கிறேன், மாறாக அது
மெய்யன்று. ஏதேனும் ஒன்று
நின்னை ஒத்திருக்கிறதா?

துயிலெழும் நகரின் சப்தம்
எனது நெஞ்சை நிறைக்கிறது.
ஷாம்ஸ் இதை மொழிகிறான்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 20 at 10:22pm ·

நீல நதி.
ஒரு தந்தப் படகு
ஆப்பிள்களை சுமந்து செல்கிறது.

மாய்ந்துவிட்ட முத்தங்கள்.
பனி ஆப்பிள்கள்,
அதரங்களிலிருந்து ஆழ்மடிப்புகள் நடுங்குகின்றன.

நீல நதி.

நீர் புறம்பே வெறிக்கிறது, திரவம்-
அனந்த விழியின் கிளை .

நதி நீலம்.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 20 at 11:06am ·

துணிகள் காயும் கொடியிலுள்ள ஜட்டிதான்
சுதந்திரத்திற்கான மாபெரும் கொடி......................

ஜட்டியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால்
நேற்றிரவு எனக்கு அவ்வளவாக தூக்கம் பிடிக்கவில்லை...See More

Shanmugam Subramaniam
February 19 at 10:18pm ·

சுகந்தத்தை யாரும் அறிந்துணரவில்லை, எப்போதும்:
நினது உதரத்தின் இருளுற்ற மாக்னோலியா மலரை.
யாருமே எப்போதும் அறிந்திருக்க்வில்லை
நீதான் நேசத்தின் ரீங்காரப் பறவையை
நினது பற்களுக்கிடையில் ஜீவத்தியாகம் செய்வித்தாயென.

ஓராயிரம் பாரசீக சிறுபரிகள் துயிலாழ்ந்துவிட்டன
நிலவொளி மூண்ட நினது புருவங்களின் சந்தைவெளியில் ,
நான்கு இரவுகள் நெடிதாய் நினது இடையில்
நான் பிணைந்திருக்கையில், பனியின் பகைவன்.

சுவர்சாந்திற்கும் மல்லிகைக்கும் இடையில்
நினது கணநோக்கு, விதையின் வெளிறிய கிளை.
எனது மார்பில் தேடினேன் தந்தத்தின் லிபிகள் மொழியும்: எந்நேரத்திலும் என்பதை நின்னிடம் வழங்க.

எப்போதும், எப்போதும் , எனது வேதனையின் தோட்டத்தில்,
நினது நழுவும் வடிவம் நித்தியமாய்:
நினது நாளங்களின் குருதி எனது வாயினில்,
நினது வாயோ இப்போது இருளுற்றிருக்கிறது எனது மாய்விற்காய்.

Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 18 at 11:17pm ·

நான் வேறெதையும் வேண்டேன், கரம் ஒன்றையே.
கூடுமெனில் காயமுற்ற கரம் ஒன்றையே, .
நான் வேறெதையும் வேண்டேன், கரம் ஒன்றையே,
ஆயினும் நான் ஓராயிரம் இரவுகளை மஞ்சமின்றிக் கழிக்கின்றேன்

அதுவொரு வெளிறிய எலுமிச்சை லில்லியாயிருக்கும்,
என் நெஞ்சோடு ஒரு புறா தாம்பாய் இறுக்கமாகப் பிணைகிறது.
அதுவே ஒரு அரணாயிருக்கும் , எனது மாய்வின் இரவில்,
நிலவிற்கு நுழைவாயிலை முற்றாய் தடுத்துவிடும்

நான் வேறெதையும் வேண்டேன், அந்தக் கரமொன்றையே,
அன்றாடத்தின் தைலஅபிஷேகங்களும் எனது வாதையின் வெண் தாளும்
நான் வேறெதையும் வேண்டேன்,அந்தக் கரமொன்றையே,
எனது மாய்தலின் சிறகை சுமந்து செல்ல.

மற்றவை எல்லாம் கடந்தேகித் தொலைவாகின்றன
நாமம் இன்றியே இப்போது நாணிச் சிவந்திடு. நித்திய தாரகையே.
மற்றவை எல்லாம் வேறொன்றாய் உள்ளது: மணல் காற்றில்,
இலைகள் புறமித்தோடுகின்றன, திரளாய் சுழல்கின்றன.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 17 at 11:36pm ·

நான்கு நிலாக்களின் இரவு
ஒற்றைத் தரு
ஒற்றை நிழலுடன்
ஒற்றைப் பறவை.

எனது மாம்சத்தில் நினது அதரங்களின் பதிவை விழைகிறேன்.
தூவல் நீர்த்தரை காற்றை முத்தம் கொள்கிறது
தீண்டாமலே.

நீ என்னிடம் ஒப்படைத்த ”மறுப்புரையை”
நான் எனது கரத்தின் அகங்கையில் சுமந்தேன்
ஒரு மெழுகு எலுமிச்சை போல்
சற்றேகுறைய வெந்நிறமாய்.

நான்கு நிலாக்களின் இரவு
ஒற்றைத் தரு
ஊசியின் கூர்புள்ளியில் எனது நேசம் நிற்கிறது-
வளைவாய் சுழ்ன்றபடியே.

-Federico Garcia Lorca -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Like

Shanmugam Subramaniam
February 16 at 11:35pm ·

நேற்று நானொரு செய்தியை அனுப்பினேன்.
தாரகையை ஒத்திருக்கும் தெளிவுடனும் ஸ்திரத்துடனும்.

கற்களை பொன்னாய் மாற்றிடும் நீ,
என்னையும் மாற்றிடு.

நின்னிடம் நான் அவாவைக் காண்பித்தேன்
எனது மார்பினை நான் உலுக்கினேன்
அழும் குழவியை அமைதிப்படுத்துவது போலும்.

நினது மார்பகத்தைத் தளர்த்தி அவிழ்
நேசத்தின் ஆதியிடத்திற்கு என்னைத் திரும்பவும் ஏந்திச் செல்,
எங்கு நாம் சங்கமித்திருந்தோமோ அங்கு.

இன்னும் எத்துனை நெடிதாய் நான் அலைந்து திரிய வேண்டும்?

நான் இப்போது அமைதியாய் இருப்பேன் பொறுமையுடன்,
நான் காத்திருகிறேன் நீ சிரம் திருப்பி பார்ப்பதற்காய் .

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 16 at 12:00am ·

நான் இதுவன்று . நினது எழில்ரூபம் எனது விழிகளைச் சாத்துகிறது, நான் அதனுள் வீழ்கிறேன்.

இந்நேசத்துடன் நாபிக் கொடியைத் துண்டிக்கிறாய்
ஜனனமுதலாய் அது என்னுடனிருந்தது.

நினது மலை எனது முகத்தில் பிரதிபலிப்பதை என் மாதா கண்டாள்,
நீ அந்தப் பொதியுறைகளை உயர்த்துகிறாய், நீ அம்மாய்வைக் கொணர்கிறாய்,.

படைப்பிற்கு முன்னமே நாம் இதில் இசைந்திருந்தோம்.
நான் அத்துனை அந்தரங்காமாயிருந்தேன்.

எனது தேகத்திடம் வினவு நான் யாரென, அது மொழிகிறது, திண்மைப் பூமியென.
எனது ஆன்மாவிடம் வினவு. காற்றை ஒத்த சிரமயக்கில். இரண்டுமல்லாது.
நானிங்கு ஷாம்ஸ் தபிரிஸை நோக்கியபடி நிற்கிறேன்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 15 at 12:38am ·

ஆழியிடம் அதிருப்தியுற்றக் கயலை நீ கண்டிருக்கிறாயா?
நீ ஒரு நேசனைக் கண்டிருக்கிறாயா?

செதுக்குபவனைத் தவிர்க்கும்
ஒரு படிமத்தை நீ கண்டிருக்கிறாயா?
பொருண்மை சூன்யமான பதத்தைக் கண்டிருக்கிறாயா?

நினக்கு நாமம் ஏதும் தேவையில்லை.
நீயேதான் ஆழி , நினது அசைவாட்ட்த்தில் நான் வசமாகியுள்ளேன்.

தழல் நினது திருமுன் ரோஜாபுதராய் உருமாறுகிறது.
நின்னிலிருந்து நான் புறமுற்றிருக்கும் போது, வாழ்வு ஒரு வாதையாகிறது.

சாலமோன் எருசலேமிற்குள் நடையிட்டுத் திரும்புகிறான்,
ஆயிரம் தீபக்கூண்டுகள் பிரகாசிக்கின்றன..
இறை மகிமை ஒரு மலை கூட்டில் குடியமர்கிறது.

பேரரசனும், ஒளியின் மூல ஊற்றும், ஷாம்ஸ் தபிரிஸூம்,
இங்கே எனது நெஞ்சில் இட -அமைவின்றி ஜீவிக்கின்றனர்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்

Shanmugam Subramaniam with Semmalar Annam and 2 others.
February 14 at 1:18am ·

சர்க்கரையைக் கரைப்பவனே , என்னையும் கரைத்துவிடு,
இது உகந்த தருணமெனில்.
மிருதுவாய் அதையொரு கரத்தின் தீண்டலில்,அல்லது ஒரு கண்ணோக்கில் நிகழ்த்திவிடு,
ஒவ்வொரு காலையும் உதயத்தில் நான் காத்திருக்கிறேன்.

அப்போதுதான்; அது முன்னமே சம்பவித்துவிட்டது .
அல்லாவிடில் அதையொரு மரண நிறைவேற்றம் போல் சட்டென்று நிகழ்த்திவிடு .
வேறு எவ்வாறு நான் மாய்விற்கு ஆயத்தமடைவேன்?

நீயொரு தீப்பொறி போலும் தேகமின்றி சுவாசிக்கிறாய்.
நீ துக்கமுறுகிறாய், நான் லேசாய் உணரத் துவங்குகிறேன்.
நினது கரத்தால் என்னை நீ அப்பால் விலக்குகிறாய்
ஆயினும் அப்பால் விலக்கிடல் என்னை அகத்தே ஈர்க்கிறது.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்

Shanmugam Subramaniam updated his cover photo.
February 13 at 8:12pm ·

பறவைகானம், மென்காற்று,
நீரின் முகம்.

ஒவ்வொரு பூவும், மணத்தை நினைவுற:
நான் அறிகிறேன் நீ சமீபித்திருக்கிறாய்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 12 at 11:37pm ·

நினது முகத்தில் நான் தொலைந்தேன், நினது தொலைந்த விழிகளிலும்.
குடியனும் பித்தனும் என்னுள் ஒருவரையொருவர்
உவக்கின்றனர்.
பூமியில் அவர்கள் ஒன்றாய் அமர்கின்றனர்.
வாழ்வின் இந்த துர்கதியைப் பாருங்கள்
கதிரோன் சிதிலங்களினூடே வாஞ்சையுடன் நோக்கும் பொழுது.

ஒற்றை கண்ணோக்கில் எண்ணிலா தருக்கள் ஒற்றை விதையிலிருந்து துளிர்த்தெழுகிறது.
நினது இருவிழிகள் பாரசீகத்தில் ஜனித்த துருக்கியனை ஒத்திருக்கின்றன.
அவன் மூர்க்கமாய் பாய்கிறான், ஒரு பாரசீகன் துருக்கிய அம்புகளை பாய்ச்சுகிறான்.
எனது இல்லத்தை அவன் சூறையாடிவிட்டான்.
ஆதலால் யாரும் இங்கு வசிப்பதில்லை .
வெறுங்காலுடன் சற்றே ஒரு சிறுவன் உள்ளெங்கிலும் ஓடுகிறான்.

இல்லம் நிலைத்திருந்த புலத்தில் நினது முகம் ஒரு பூந்தோட்டமாய் எழுகிறது .
நம் கரங்களாலேயே நமது இல்லங்களை கிழித்து கீழெறிந்து வெற்றிடங்களாக்குகிறோம்.
நிலா வர்ணிக்கப்படுவதில் வேட்கையற்றிருக்கிறது.
இக்கவிதைகள் யாருக்கும் தேவைபடவில்லை.
ஒரு செளந்தர்ய நங்கையின் தளர்ந்துள்ள கேசயிழைகள்
சீவீயிருக்க வேண்டிய அவசியமில்லை.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 11 at 11:20pm ·

மீண்டும் அவர்கள் நேசர்களாயினர், சர்க்கரை பாலில் கரைகிறது.
காலையும் மாலையும் ,வித்தியாசமற்றிருக்கிறது.
சூரியன்தான் சந்திரன், ஒரு ரசக்கலவை
அவைகளின் பொன்னும் வெள்ளியும் கூடி உருகுகிறது.
இதுவே உகந்தப் பருவம் மாய்ந்த கிளையும்
பச்சைக் கிளையும் வேறல்லாத அதே கிளையாகும்.

சிடுசிடுக்கும் வெடுக்கன் தனது விரலைக் கடிக்கிறான் ஏனெனில் அவனால் அறிந்துணர இயலாததால்
உமறும் அலியும் ஒரே அரியணை மீதுள்ளனர், இரு ராஜாக்களும் ஒரே வார்க் கச்சையில்.
மனப்பேயுருக்கள் ஒளியால் நிரம்புகின்றன ஒரு விடுமுறை தினத்தைப் போல்.
மாந்தரும் தேவதூதர்களும் ஒரே மொழியைப் பேசுகின்றனர்,
மாயாமானவைகள் இறுதியாய்ச் சந்திக்கின்றன.

சாரமும் உருமலர்ச்சியுற்று வெளிப்படும் வடிவங்களும்
ஒன்றையொன்று சந்திக்க ஒடுகின்றன
குழவிபோல் தனது தாய் தந்தையிடம்.
நன்றும் தீதும் , மாய்ந்தோரும் உயிர்த்திருப்போரும்,
சகலமும் ஒரே இயற் தண்டில் பூக்கின்றன

நீ இதை முன்னமே அறிந்துள்ளாய், நான் நிறுத்திக் கொள்வேன்.
நீ எத்திசைத் திரும்பினும் அது ஒரே தரிசனம்தான்.
ஷாம்ஸ், எனது தேகம் தழலால் தீண்டிய மெழுகுவத்தி.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 10 at 11:30pm ·

இதுவே தினம் ரோஜாவின் ஆண்டு.
பூந்தோட்டம் முழுமையும் தனது நகைப்பை அவிழ்க்கின்றது.

ஐரிஸ் சைப்ரஸ் தருவின் காதோடு பேசுகிறது
யாரோ ஒருவரைச் சந்திக்கும் பேரின்பம்தான் ரோஜா.

ரோஜா ஒரு உலக கற்பனை கற்பனையுற இயாலாதது.
ஆன்மா வாழும் கனித்தோட்டத்திலிருந்து வருகிறான் ஒரு தூதுவன்.

ஒருசிறு விதை மாபெரும் ரோஜாத் தருவைச் குறியிட்டுச் சுட்டுகிறது.
அதன் கரங்களைப் பற்றியபடி குழுவி போலும் நடக்கிறது.

ரோஜா தீர்க்கதரிசிகள் ஆற்றும் வினையில் வளர்வது
முழுநிலவு, நவநிலவு.

இளவேனில் விசாலிக்கும் அழைப்பை ஏற்றுக் கொள்,
ஒரு பெருமானை நோக்கி நான்கு பறவைகள் சிறகடிக்கின்றன.

இவையாவற்றிலும் ஒரு ரோஜா,
அடைந்து கொள்ளும் மோனம் நிழலில் அமர்கிறது, ஒரு அரும்பு.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Like

Shanmugam Subramaniam
February 9 at 11:39pm ·

அவனை பார், அங்கு,
தனது சிரத்தை திருப்பி இமையாது நோக்கும் அவனை கவனி
அவன் என்னை இச்சிக்கிறான் என எண்ணுகிறேன்.

அவன் சுழன்றுத் திரும்பும் விதத்தை பார்
என்னை மேலும் கீழுமாக கண்ணோக்கும் அவனைப் பார்
நான் உறுதியாயிருக்கிறேன் என்னை அவன் இச்சிக்கிறான்

அடர்-கறுமையானஅவனது கேசத்தை பார்
மெய்யாகவே அவனை எனக்குப் பிடிக்கவில்லை நியாயம்தான்
அவன் என்னை இச்சிக்கிறான் என சற்றே உணர்கிறேன்.

அவன் நேரே நெருங்கி வருகிறான், அவன் அபாரமாய் இல்லை?
அவன் என்னிடம் டேட்டிங்கிற்கு தேதி கேட்கப் போகிறான்
நான் அறிந்துள்ளேன் அவன் என்னை இச்சிக்கிறான்.

ஒரே நிமிடம் இரு ஆயினும்
அவன் நேராக என் தோழி ஃப்ளோவை நோக்கி வருகிறான்
அவன் என்னைத்தான் இச்சிக்கிறான் என எண்ணினேன்.

தாரா ஃப்ளோ , நான் இல்லம் செல்கிறேன்
நிஜமாக நான் அறிந்திருக்க வேண்டுமென உத்தேசிக்கிறேன்
அவன் என்னை இச்சிக்கவில்லை.

எப்படியோ எனக்கு பிடிக்கவில்லை
அவன் அவலட்சணமாயிருக்கிறான்
நான் அவனை இச்சிக்கவில்லை.

-Maureen Burge-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 9 at 8:49am ·

ஆன்மாவைக் காட்டிலும் நீ வனப்பாய் உள்ளாய்
விழிகளைப் பார்க்கிலும் பயனாய் உள்ளாய்.

என்னில் நான் விழியுறும் எதுவாயினும்,
அதை நான் விழியுற்றதில்லை. நீ விழியுற்றாய்,
நீயென்னைத் தேர்ந்தாய்.

அந்தத் தேர்வை கனம் செய்யவே இக்கவிதையை நான் மொழிகிறேன்
கனன்றெரியும் சவப் படுக்கையில் சாய்ந்து படுக்க தேர்கிறேன்.

எனது விழிகளை வினவு, நீயேன் வழிந்தோடுகிறாயென?
எனது புறமுதுகை வினவு, ஏன் இத்துனை வளைந்திருக்கிறாயென ?

எனது ஆன்மாவை வினவு சாலையில் நீயேன் எஃகு காலணிகளை அணிகிறாயென?
மேலும் எனது ஆன்மாவை வினவு அது உன்னையொத்த மற்றொன்றைச் சந்தித்திருக்கிறதா என,
ஆகிலும் அவ்விதமானதை எம்மொழியிலாவது செவியுற்றதா என.

ஒளிர்வற்ற மந்தாரத்தைக் கரைக்கும் கதிர் நீதான்,
ஒரு விளைநிலத்தின் நறுவாசம் . இந்த அறையில் யாக்கோபு நுழைகிறான்.

கத்தியால் ஆரஞ்சு கனிகளின் தோலை நீக்குகியபடியே,
நாங்கள் உன்னைக் விழியுறுகிறோம், எமது கரங்களை சிறிதாய் வடுப்படுத்துகிறோம்.

பூமியைத் தீண்டாமலே நீயொரு கோட்டைக் கிழிக்கிறாய்.
நாம் அவ்வழியே திரும்ப. நீ காரணமாயிருக்க
எவ்விடம் நாம் ஏகுகிறோம் அவ்விடம் நாம் யாது செய்கிறோம்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 7 at 10:22pm ·

ஆழ் செவிசாய்த்தல் என்பது யாது?
செமா என்பது நெஞ்சத்தினுள் உறையும்
இரகசியமானவரின் முகமன், ஒரு லிபி .

நினது கூர்மதியின் கிளைகள்
புதிய இலைகளை துளிர்விக்கிறது
இச்செவிசாய்த்தலின் மென்காற்றில்.

தேகம் ஒரு சாந்தத்தை அடைகிறது.
சேவலின் ஓலி வருகிறது,
நின்னை ஞாபகமூட்டுகிறது புலர்வில் நினக்குள்ள நேசத்தையும்.

இசைக்குழலும் பாடகரின் அதரங்களும்.
நம்முள் ஆன்மா எவ்வாறு சமார்த்தியமாய் சுவாசிக்கிறது
அது இயல்பாகவும் சாதாரணமாகவும் மாறுகிறது
உண்பதும் பருகுவதும் போலும்.

மரித்தோர் எழுகின்றனர் செவிசாய்த்தலின் பேரின்பத்தில்.
இனமறியா ஒருவன் கொம்பின் இன்னிசையை செவியுறவிலையெனில் ,
அவனது சிரத்தில் புழுதியை தெளியுங்கள் அவனை மரித்தோன் என அறிவியுங்கள்.

நினது பிரிதலின் பேரெழிலை செவிசாய்த்து உணர்தறி,
அம்மொழியவியலா இன்மையை.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

ஒரு மகிமைநிறை தேவி அவளது விழிகளில்
நீதானா, அவளது தோழன், உனது பாடல்கள்
பிறரது பாடல்களுக்கு மேலான பேறாகக் கொள்கிறாள்.

லிடிய நங்கைகளுடன் இப்போது உறைகிறாள்
அவர்களை விஞ்சுகிறாள், நாள் மாயும் தருணம்
ரோஜா-பரிசித்த நிலா மேன்மையுறுகிறது
தாரகைகளின் திரள் ஒளி பிரகாசிக்கிறது
உப்பு ஆழியும் தானிய நிலமும் ஒளிர்கின்றன
அதன் ஆயிரம் அலர்கள்மீது ஒளி.

வசீகரத்தில் அதன்மேல் பனி சிந்துகிறது
புதிய வலிமையுடன் ரோஜா உயிருறுகிறது,
மெலிந்த நாணல்களும் குளோவர் புற்களும் பூக்கின்றன.

ஆனால் துக்கமாய் அவள் மேலும் கீழும் நடையிடுகிறாள்,
அவளது ஒரு காலத்திய அன்பன், ஆதீசை நினைவுற்று,
அவளது நெஞ்சில் பிணியுறும் அவா வளர்கிறது.

-Sappho-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 5 at 11:18pm ·

இதுவே நினது கணம் ,
விசுவாசத்தின் பேரிகை முழக்கம்.

செந்நிற பூக்கள் அவிழ்கின்றன.
திராட்சைகள் வைனாக நெரிக்கப்படுகின்றன.
ஆன்மாவும் அறிவார்த்த துலக்கமும் நினது மேஜையில் ஒருமித்து அமர்கின்றன.
வேட்கை யாவும் நினது சுவையைக் கோருகிறது.

இரு மெய்மைகளும் நினது உலகின் இருசிறிய கிராமங்கள்
யாவரும் நினது திரு-முன்னிருத்தலுக்காய் ஏங்குகின்றனர்.
நாம் மேலுற துவங்கையில் , நினது ஏணி வந்தடைகிறது.

நீ நவில்கிறாய்,
நினது தாயை நினது தந்தையைக் காட்டிலும்
.நான் பெருங்கருணை கொண்டிருக்கிறேன் என
நினது வாதையிலிருந்து நான் மருந்தை சமைப்பேன்.
நினது புகையிலிருந்து நான் நவ- விண்மீன் குழுவமைப்பேன்.

நான் யாவற்றையும் நின்னிடம் மொழிவேன்
இன்னமும் நான் யாவற்றையும் மொழியவில்லை,
ஏனெனில். என் அன்பரே,
நினது இரகசியம் நின்னால் மொழியப்படுவதே மேன்மை.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 5 at 12:25am ·

உனக்கே ஒரு முத்தத்தை அளித்துக் கொள், வெள்ளியார்ந்த-தேக உருவே; நீ சீனதேசத்தில் இருக்கிறாய், உன்னை நீ கொடானில் தேடையலையாதே,

ஒரு வெள்ளியார்ந்த உருவை உனது மார்பினினுள் நீ ஈர்த்துக் கொண்டால், உனது இணை எங்கிருக்கிறது? நீயுனது நேசத்துகுரியவரை முத்தமிட வேண்டும், பின்னர் உனது வாயை நீ சீராட்ட வேண்டும்.

உனது வனப்பின் நிமித்தமாய் விண்ணுலக எழிலணங்கின் ஆடைகளுள்ளன; ஒவ்வொரு மானுடனும் நங்கையும் உனது நேசமார் முகத்தின் பிரதிபலிப்பாகும்.

உனது வனப்பின் மீதுள்ள முகத்திரை உனது கேசச் சுருளாகும், அல்லாவிடில் உனது ஓளி வெளியே பிரகாசத்திருக்கும், ஓ கன்னத்தின் இனிமையே.

தேகத்தின் சித்திரக்காரன் எண்ணங்களது உருக்களை நோக்கி வந்தான்: அவனது கரங்களும் நெஞ்சமும் நொறுங்கியிருந்தன, அவனது வாய் திறந்திருந்தன.

இந்த வர்ணமிட்ட கூண்டுதான் நெஞ்சப் பறவையின் முகத்திரை ,
நீ நெஞ்சத்தை இனங்காணவில்லை ஏனெனில் நெஞ்சம் பிளக்கும் கூண்டினால்.

நெஞ்சம் ஆதாமின் களிமண்ணிலிருந்து முகத்திரையை ஒரே வீச்சில் வீசியெறிந்தது , தேவதூதர்கள் வீழ்ந்து வணங்கினர்.

இடையீட்டாளர் மறைந்துவிடுவர் ,ஒரு கணம் நேசத்தின் துருக்கியன் அவனது கிருபையின் முன்னே அமர்ந்து , மொழிகிறான் ஓ செலபியே, நீ யார்?

விழிகளுக்கு அரூபமானதின் பார்வை பேறளிக்கப்படும் , ஷம்சேதினின் கணநோக்கும்,தபிரிசின் பெருமை யாவும், உன்னில் ஒரு இமைச் சிமிட்டலைக் களவாடியது.

February 7 at 1:48am ·

February 3 at 10:57pm ·

விண்ணுலகின் அரண்மனையில் ஒரு தியன் -தாய் அழகி
வர்ணமிட்ட மண்டபத்தில் சிறுதுயிலுற்றிருக்கிறாள்
யாரும் வாயுரைக்கவில்லை.
அவள் தன் தலையணையை நகர்த்துகிறாள்
கறுமையாய் தகதகக்கிறது அவளது கேசம் கரிய பறவையின் இறகுகளாய்,
பூக்கள் செழித்த அவளது ஆடையில் ஒருவன் விநோத பரிமளங்ளை உள்ளுணர்வான்.

நான் கால்விரலூன்றி நடக்கிறேன், ஒரு முத்து அணிகலன் அசைகிறது,
மாண்டரின் வாத்துகள் நிறைந்த கனவிலிருந்து அவள் விழிக்கிறாள்,
அவளது கருத்தாழ்ந்த முகத்தில் ஒரு சிறுநகை சேகரமாகிறது:
நாங்கள் ஒருவரையொருவர் பார்ந்திருந்தோம் அனந்த நேசத்தில்.

-Li Yu -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 2 at 11:01pm ·

படைப்பிற்கு நான் எனது விழிகளை சாத்திவிட்டேன் அவனது பேரெழிலை நான் கண்ணுற்றதும். நான் அவரது பேரெழிலில் வெறிமயக்குற்று எனது ஆன்மாவை ஈந்தேன்.

சாலமோனது முத்திரைகளின் நிமித்தமாய் நான் எனது தேகம் யாவிலும் மெழுகானேன், ஒளிப்பிரகாசமாகும் பொருட்டே நான் எனது மெழுகைத் துடைத்தேன்.

நான் அவனது கருத்தைக் கண்ணுற்றேன் எனது திரிபான கருத்தை வீசியெறிந்துவிட்டேன்; நான் அவனது இசைக்குழலானேன்
அவ்வாறே அவனது அதரங்களில் பரிதபித்து புலம்புகிறேன்.

அவன் எனது கரங்களில் இருந்தான், விழிமூடி நான் எனது கரங்களுடன் அவனைத் துழாவினேன் ; நான் அவனது கரங்களில் இருந்தேன், அச்சமயத்திலும் தப்பிதமாய் அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றி விசாரிக்கிறேன்.

நான் ஒரு சாதாரணாகவோ அன்றி குடியனாகவோ அன்றி பித்தனாகவோ யாதேனும் ஒன்றாய் இருந்திருக்க வேண்டும்
அஞ்சிய வண்ணமாய் எனக்குச் சொந்தமான பொன்னையே களவாடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கள்ளனைப் போல சுவரின் விரிசலினூடே ஊர்ந்தேன் எனக்குச் சொந்தமான வைனில் நாடி, ஒரு கள்ளனைப் போல எனக்குச் சொந்தமான தோட்டத்தில் மல்லிகையைச் சேகரித்தேன்.

போதும், எனது இரகசியத்தை உனது விரல்நுனியில் திருகாதே நான் உனது கரத்தின் முறுக்கிய முட்டியிலிருந்து திருகி வெளியேறி விட்டேன்.

ஷம்சே தபிரிஸ் , நிலவின், தாரகைகளின் ஒளி யாரிலிருந்து வெளிப்படுகிறதோ-அவருக்கென நான் சோகமுற்று வதைகிறேன் , நான் பண்டிகையின் பிறையை ஒத்திருக்கிறேன்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
February 2 at 12:04am ·

தழலை வணங்கும் எனது நெஞ்சம் பந்தைப் போல் தழலில் சுழல்கிறது, சகியிடம் மொழிந்திடு, துரிதமாய் இப்போது, ஒரு குவளையில்
சிறிதளவே நறும் -தேறல் துவங்குதற்குப் போதுமானது.

வா, அதரம் -கடிக்கும் சகியே, வைனுடனும் கனியாதவைகளுடனும் சமைத்திடு, சபாஷ், வைனின் பூந்தோட்டத்திலும் கனித்தோட்டத்திலும் உள்ள திராட்சைகளைப் நீ பிழந்து வடித்தாய்.

யாருமே அளியா ஒரு ஜாடைக் குறிப்பைத் நான் அளிப்பேன் ; அந்த ஜாடைக் குறிப்பு இதுதான், ஓ ஆகிருதியின் செவ்விய ஒளிர்வே ,அந்த இரவினில் நீயென்னை ஆன்மாவின்மையுள் பெயர்த்தாய், நீயென்னை எனது நிலவுமுகத்தின் மீது கையளித்தாய்.

நீ,காரணம் , எவ்வாறென நினைவுற இயலுகிறதா, காரணத்தின் ராஜன் நேசவெழுச்சியில் கனலும் வைனை என்மீது ஈந்தான்,முதல் மூச்சில் நீ மரித்தாய்?

அந்த நேசிப்பிற்குரியவர் இரண்டு உணவை கொணர்ந்தார், ஒன்று தழலால் ஆனது , ஒன்று பொன்னாய் நிறைந்தது, நீ பொன்னை உண்டால், அது தழலாய் மாறும், நீ தழலை மூட்டினாள், ஆட்டத்தில் நீ வெல்வாய்.

பார் அந்த இறுமாந்த சகியை! அந்த நேர்த்தியான தழலை அணைத்திடு! தழலின் வீரியத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும், நீ அங்கொரு சிறுகுழவி?

தழலிலிருந்து வெளியேறு, நீ ஷம்ஸ் -அல் தின் தபிரிசில் இருந்து களிப்புடன் வெளியே எழுவாய்; நீ பொன்னினுள் தப்பினாயெனில், பொன்னைப் போன்றே நீயும் உறைந்து இறுகிவிடுவாய்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 31 ·

ஊஞ்சலில் அமர்ந்தாடியது முடிந்தது
அவள் எழுந்து நிற்கிறாள்

களைப்புற்று
இனிமையிழையும் கரங்களை நெகிழ்த்தி வளைக்கிறாள்

எண்ணிறந்த பனித்துளிகள்
மெல்லிதான பூவின் மேல்

வியர்வையின் பனி
ஈரப்படுத்துகிறது
அவளது மெல்லாடையின் ஊடே

அவள் நோக்குகிறாள்
ஒரு அறிமுகமற்றவன் வருவதை

அவளது காலுறைகள் தாழ்கின்றன
பொன் கொண்டை ஊசி நழுவுகிறது

நாணத்துடன்
அவள் ஓடுகிறாள்

கதவின் ஓரமாய் சாய்ந்தபடியே
பின்னே நோக்குகிறாள்

நெடிதாய் நீடிக்கிறாள்
ஒரு பச்சை வண்ண ப்ளம் கனியை முகர்ந்திட.

-Li Ching Chao-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 30 ·

இளமையில் என் வசம் ஏதுமில்லை
நயமற்ற தொனியை ஈடுசெய்ய,
எனதான சுபாவம் எப்போதும்
குன்றுகளையும் மலைகளையும் நேசித்தது.

சாவதானமின்றி நான்
தூசடைந்த வலையில் வீழ்ந்தேன்,

ஒருதடவை போய்விட்ட ஸ்திதியில்
அது பதிமூன்று ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலானது,

பழக்கப்படுத்திய பறவை
தனது பூர்வ காட்டிற்காக ஏங்குகிறது-

இல்லத்து தடாகத்திலுள்ள கயல்
தனது புராதன தடாகத்தை எண்ணுகிறது.

நானும்கூட தெற்கு விளிம்பிலுள்ள
தரிசுநிலத்தின் மண்ணை உடைப்பேன்,

நான் கபடமற்ற எளிமையை காத்து
வயல்வெளிகளுக்கும் தோட்டங்களுக்கும் திரும்புவேன்.

எனது நிலமும் இல்லமும்-
பத்து ஏக்கரைக் காட்டிலும் சற்றே மிகையானது,

கூரைவேய்ந்த சிற்றில்லத்தில் -
எட்டு அல்லது ஒன்பது அறைகள் மட்டுமே.

எல்ம் தருக்களும் வில்லோ தருக்களும்
பின்புற தாழ்வாரத்தை நிழலூட்டுகிறது,

பீச் தருக்களும் ப்ளம் தருக்களும்
கூடத்தின் முன்னே வரிசையுற்றிருக்கின்றன,

பனிமூட்டமாயும் மங்கலாயும் காணப்படுகிறது
தொலைவுற்றிருக்கும் ஒரு கிராமம்,

முற்புறத்தின் அருகில்
அண்டையிலுள்ளவரின் இல்லங்களின் புகை.

நாயொன்று குரைக்கிறது
ஆழ் -சந்துகளின் மத்தியில்,

சேவலொன்று கூவுகிறது.
ஒரு மல்பெரி தருவின் மேல்.

தூசின்றியும் குழப்பமின்றியும்
எனது கதவுகளின் முன்றிலின் உள்ளே;

இன்மையான அறைகளில்,
போதிய ஓய்விற்கும் மிகையாய்.

நெடுங்காலம் நான் சிறையுற்றிருந்தேன்
கம்பிகளிட்ட கூண்டில்.

நான் இப்போது
இயற்கைக்கு திரும்பும் வல்லமையுடன் உள்ளேன்.

-T'ao Chien-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)
.

Shanmugam Subramaniam
January 30 ·

எங்கெல்லாம் உனது பாதத்தை பாவுகிறாயோ, என் நேசமே, துலிப்பும் மல்லிகையும் துளிர்தெழத் துவங்குகின்றன.

ஒரு சிறுதுண்டு களிமண் மீது நீ சுவாசிக்கிறாய், அது ஒரு புறாவாகவோ அன்றி பருந்தாகவோ ஆகிறது.

ஒரு பாத்திரத்தில் நீ கரங்களைக் கழுவினால் அக்கரங்களின் நீரினால் அப்பாத்திரம் பொன்னாகிறது.

நீயொரு சவக்குழியில் அல்ஃபாத்திஹாவை ஓதினால் சவச் சால்வையிலிருந்து பூ-உல்-ஃபொதா அவரது சிரத்தை உயர்த்துகிறார்.

உனது அரைப்பாவாடை முட்புதர் மீது தட்டினால், அதன் புதரிலிருந்து யாழ் இசைக்கிறது.

நீ தகர்த்தெறிந்த ஒவ்வொரு விக்கிரகமும் , ஓ ஆபிரகாம், அந்த உடைப்பிலிருந்து வாழ்வைப் பெறுகிறான் அறிவாற்றலைக் கண்டடைகிறான்.

தீங்கான தாரகைநிறை ஒருவன் மீது புதிய நிலா மிளிர்ந்த போது, அது மாபெரும் நற்பேறாகி அவப்பேற்றிலிருந்து அவன் தப்பித்தான்.

ஒவ்வொரு கணமும் உனது மார்பின் கூடத்திலிருந்து புதிய பிறப்பொன்று தாயும் தந்தையுமின்றி தோற்றமுறுகிறது, ஆதாமைப் போல்.

அதன்பிறகு அவனது விலாவிலிருந்தும் இடுப்பிலிருந்தும் குழவிகள் பெருகிச் செழிக்கின்றனர்.

நான் ஐம்பது ஈரடிப் பாக்களை இச்சந்தத்தில் மொழிய விரும்பினேன்; நான் எனது அதரங்களை மூடிக் கொண்டேன்,
நீ உனது வாயை திறக்கக் கூடும்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 29 ·

அலைந்து திரிந்து பூ விற்பவனின் தட்டிலிருந்து
இளவேனிலின் துளிர்க்- கிளையொன்றை வாங்கினேன்
சற்றே அவிழ்ந்திருக்கிறது மலர்ச்சியில்
நீர்த்துளிகள்
அதைச் சீராக புள்ளியிடுகிறது
இன்னும் மூட்டமான செந்நிறம்
பனியின் படலத்துடன்
நான் அஞ்சுகிறேன் அவன்
இதனைத் தனது சிந்தையுள் கொள்வான் என
எனது முகம்
அவ்விதச் செளந்தர்யமாய் !
அவ்விதச் செள்ந்தர்யமாய்! இல்லையென
மேலுயர்த்திச்-
சீவப்பட்ட கேசத்தில்
ஒரு பொன் ஊசியை சாய்வாக
நான் இறுக்கிச் செருகுகிறேன்
அவ்விடம்!
அவன் நோக்கட்டும்
இரண்டையுமே அவன் ஒப்பீடு செய்யட்டும்.

-Tien tzu mu-lan hua -
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 28 ·

கணம் மகிழ்வானது யாதெனில் நாம், நீயும் நானும்,இரு உருவங்களுடன் அரண்மனையில் அமர்கிறோம் , ஒற்றை ஆன்மாவுடன், நீயும் நானும் .

பூந்தோட்டத்தின் எழிலும் பறவையின் பாடலும் வாழ்வின் நீரை நமக்களித்திடும் நாம் பூந்தோட்டத்துள் நுழையும் அச்சமயம்.

வானுலகின் தாரகைகள் நம்மைக் கண்ணோக்க வந்துறும்; அவைகளுக்கு நிலவின் அரிவாளைக் நாம் காண்பிப்போம், நீயும் நானும்.

நீயும் நானும் , தானற்று, பரவசத்தினுள் ஒன்றாய் சேகரிக்கப்படுவோம், பேருவகையில், வீணான பழங்கதைக்குக் கருத்தற்றிருப்போம், நீயும் நானும்.

வானுலகின் தத்தைகள் யாவுமே தித்திக்கும் இன்மொழியை வெடிப்பொலிக்கின்றன ,எங்கு நாம் அப்பாங்கில் நகைக்கிறோமோ அவ்விடத்தில்,நீயும் நானும்.

இன்னும் இது கூடுதலான பிரமிப்பாயிருக்கிறது, நீயும் நானும் இங்கு ஒரு மூலையில் ஒத்த கணத்தில் ஈரானிலும் கொராசானிலும், நீயும் நானும்.

இப்பூமியில் ஒரே உருவத்தில் , நித்திய வானுலகில் ,வேறொரு உருவத்தில் தித்திப்பின் புலத்தில், நீயும் நானும்.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 26 ·

உனது தோழமைகளுடன் அமர்ந்திரு, துயிலப் போய் விடாதே, ஆழியின் அடியாழத்திற்கு ஒரு கயலைப் போல் போய்விடாதே.

இரவெல்லாம் ஆழியென அலையெழும்பிய வண்ணமாயிரு, துரித நீர்- பாய்ச்சலைப் போல் சிதறிப் போய்விடாதே.

அந்தகாரத்தினுள் உள்ளது வாழ்வின் நீர் இல்லையா? அந்தகாரத்தினுள் நாடிடு, அவசரத்தில் அப்பாலுறாதே.

வானுலகின் இராப் பயணியர் ஒளி-நிரம்பியிருக்கின்றனர்,
நீயும் கூட, உனது உடனிருப்போரின் சங்கமத்தை விட்டு அப்பாலுறாதே.

துயிலொழிந்த மெழுகுவத்தி பொன் வட்டில் இல்லையா?
பாதரசம் போல பூமியினுள் போய்விடாதே.

இரா-பிரயாணியருக்கு நிலா தன் முகத்தைக் காண்பிக்கிறது; விழிப்பாயிரு , நிலா சுடரும் இராப்பொழுதில் போய்விடாதே.

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 26 ·

Wang :தனிமையுற்ற மலையின் மீது
நான் யாரையும் சந்திக்க நேரவில்லை
நான் மானுட குரல்களின்
எதிரொலியை மட்டுமே செவியடைகிறேன்,
ஒரு கோணத்தில் வெய்யோனது ஒளிக்கதிர்கள்
வன மரத்தின் ஆழங்களுள் நுழைந்து
பச்சை வண்ண பாசியின் மீது
ஒளி மினுங்குகிறது.

Pei : நாளின் அந்திமத்தில்
மலை குளிர்ந்து காணப்படுகிறது,
ஆனாலும் காலம் கழிந்து வரும் தேசாந்திரி
இன்னமும் தனது பாதையில் கடக்கிறான்,
அவன் யாதும் அறியான்
வன மரத்தின் வாழ்வினைப் பற்றி :
ஏதும் எஞ்சுவதில்லை எனினும்
ஆண்- மானின் தடங்கள்.

-Wang ch' uan chi-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam
January 24 ·

நூறு ரோஜாத் தோட்டங்களின் ஆன்மாவே, நீ மல்லிகையிலிருந்து மறைந்து போனாய், என்னிடமிருந்தும் நீயேன் மறைந்து போனாய்?

அதுமுதல் வானுலகு உன்னூடாக அதி-பிரகாசிக்கிறது, உனக்கு எது திரையிட்டு மறைக்க்ப்பட்டுள்ளது? அதுமுல் உன்னூடாக தேகம் ஜீவிக்கிறது, எவ்வாறு நீ தேகத்திலிருந்து மறைந்து போனாய்?

இறைவனது பொறாமையின் பூரணத்தினாலும் நினது பெருவனப்பின் வசீகரிப்பினாலும், ஓ மானுடரின் ராஜனே, நீ இவ்வண்ணமாய் ஆடவரிடமிருந்தும் பெண்டிரிடமிருந்தும் மறைந்து போனாய்.

ஒன்பது வானங்களின் மெழுகுவத்தியே, நீயோ ஒன்பது வானங்களின் ஊடே கடந்திட்டாய், எவ்வகை இரகசியம் இது,
மெழுகுவத்தியின் தீபத்தை ஏந்துபவரிலும் நீ மறைந்து போனாய்.

ஓ அகத்தியத் தாரகையே, எவரது முகத்தின் முன் கதிரோன் ஓளிமங்கியதோ, அதுவும் நல்லதே, , நீ ஏமனிலிருந்து மறைந்து போனதும் நல்லதே.

தார்த்தாரியரின் கஸ்தூரி வாசம் மானுடவினத்திற்கு அடையாளக் குறியை படைக்கிறது தனது ஒவ்வொரு சுவாசித்தினால் ஏனெனில் நீ சீனதேசத்தின் ராஜானாயிருக்கிறாய் கோடான் கிராமத்திலிருந்தும் மறைந்து போனாய்.

என்ன விந்தையிது ,நீ எம்மிடமிருந்தும் இரண்டு உலகிலிருந்தும் மறைந்து போனது, ஓ தன்னலமற்ற அந்நிலவே நீ தன்னிலிருந்தே மறைந்து போனாய்.

ஓ ஆன்மாக்களின் பிரசன்னமே, நீ அவ்வண்ணமாக மறைந்து போனாய் மறைந்துவிடுதலில் நீ மறைந்து போனாய்.

ஷாம்ஸ் தபிரிஸ், யாக்கோபுவைப் போல் நீயும்கூட கிணற்றினுள் சென்றாய்: வாழ்வின் நீரே, எவ்வாறு நீ கயிற்றிலிருந்தும் மறைந்து போனாய்?

-Jalāl ad-Dīn Muhammad Rūmī-
(தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)