Sunday, 6 March 2016

கிடாரி - சுந்தா ராமசாமி

________________

கிடாரி -  சுந்தர ராமசாமி 
(மெய்ப்பு பார்க்கப்படவில்லை)
மிகப் பெரிய காம்பெளண்டு அது. தற்சுவர். நடுவில் மிகப்
பெரிய வீடு. மாடி விடு. - ... " - மாடி வீட்டின் கொல்லை இடது மூலையில் உரக்கிடங்கும், அதை
யொட்டி கன்றுகளே மறிக்க கம்பழிக் கூண்டும், தொழுவமும்.
தொழுவத்துக்கு அடுத்தாற்போலிருந்த அறையைத்தான் கிழவர் தினது வாசஸ்தலமாக்கிக் கொண்டார். சில மாதங்கன் முன்னுல் வரை அங்கு விறகு குவித்திருந்தது. அதைக் காலிசெய்து கைவசப்படுத்திக் கொண்டார், கிழவர். இப்பொழுது கொல்லப்புறம்தான் அவரது ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யம். வேலைக்காரன் சம்முகம், எஜமானியும் சமையல்காரிவு மான ச்ெல்லம்மா, வேலைக்காரி, ஒரு கறவைப்பசு, ஒரு கற்பிணிப் பசு, ஒரு காளேக்கன்று ஆகியோர் குடைநிழல் பிரஜைகள். அதிலும் கால் நடைகள்தான் முக்கியமான பிரஜைகள். அவைகள் மத்தியில் தான் கிழவருக்கு நல்ல செல்வாக்கிருந்தது. அவருடைய அற்பு எண்ணங்கள்கூட் அங்கு விதிகளாகி அமலாகிவிடும். அபிப்பிராய. வேற்றுமைக்கு இடமேயில்லை. - گن . " சில மாதங்கள் முன்குல் வரை மாடி வீட்டில் மாப்பிள்ளை சபே சய்யர், மகள் குஞ்சம்மாள், பேரன் பேத்திகள் ஆகியோருடன், கூடி வாழ்ந்திருந்தார் கிழவர். மனத்துக்கு ருசிக்கவில்லை. மாப்பிள்ள்ே மகா முன்கோபி என்பது கிழவர் அபிப்பிராயம். கிழவருக்கு இங்கி, தமே தேரியாதென்பது சபேசய்யர் தீர்மானம். சபேசய்யர் வருமான வரி ஆபீஸ்ர் வேலையிலிருந்து ரிட்டயராகி, பொழுதை வீட்டிலேயே, செலவு செய்யும் நிலை ஏற்பட்டதும் அரமும் அரமும் உரைந்தாற். போல், இருவர் உறவும் கிறீச்சிட்டது. முகதரிசனம் வாய்த்த மறு. வினுடியே பரஸ்பரம் வெட்டிக் கொண்டார்கள்: மடக்கி மடக்கித் தாக்கிக்கொண்டார்கள். படிரென்று விலாவில் குத்துவார் மாப் பின்ளே மண்டையில் ஓங்கி அறைவார் மாமனர். எல்லாம் வார்த் களில்தான். பெண்ணை வைத்துத்தானே கிழவருக்கு அந்த வீட்டில் மதிப்பு? பெண் குஞ்சம்மாளோ, மாடியில் அடைபட்டுக் கிடந்தாள். கீழே இறங்கி வரக்கூடாது. -- - முன்கட்டில் செல்வாக்கு இழந்துவிடவே,மெதுவாகக் கொல்லப்
பறம் நகர்ந்தார் கிழவர். விறகு அறையையும், தன்னுடைய அதை யையும் காலி செய்தார். விறகும், ஒட்டை உடைசலும் நெற்குத்தும்________________

கிடாரி • . 23
கொட்டகைக்கு இடம் மாறின. வெற்றிலேப் பையும், வறுவல் டப்பாவும், எண்ணெய்க் குப்பியும், செம்பும், மரஜோடும், விசிறியும், நார்க் கட்டிலும், விறகு அறைக்கு வந்தன. s சிறு வயதிலிருந்தே மாட்டுப் பைத்தியம் கிழவருக்கு இடமாற் றம் அதற்கு மேலும் சுருதி கூட்டிற்று. அன்பையும், அரவணைப் பையும், ரத்தபாசத்தையும் தொழுவத்திலேயே கண்டு ஆனந்தக் களிப்பில் அழுந்திப்போளுர் கிழவர்.
தொழுவத்தில் சலசலப்புக் கேட்டுக்கொண்டிருந்தது. இரவில் கண் விழிக்கும்போதெல்லாம், மாடுகளின் கால் அரவம், சிறுநீர் கழிக்கும் சுர்...ர்...ர்ர். வைக் கோல் பிடுங்கும் சரசரப்பு, கன்றின் கழுத்து மணி "ணரிங், னிங்-இத்யாதி ஓசைகள் கேட்டவண்ணம் தான் இருக்கும். கிழவருக்கு இந்தப் பின்னணி யோசை பழக்கப் பட்டுவிட்டது. - - -
ஆளுல் அன்று விடிவெள்ளிப் பொழுதில் ஏதோ அசாதார்ண மான சூழ்நிலை தொழுவத்தில் உருவாகி வருவதாக உணர்ந்தார் கிழவர். கண் மூடியபடியே கட்டிலில் உட்கார்ந்து, எழுந்து நின்று இரவில் போர்வையாக மாறியிருந்த வேஷ்டியை இடுப்பில் சுற்றி, வேஷ்டியாக்கிக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். இரு ளில் இருள்தான் தெரிந்தது. பெரிய குடையொன்றை விரித்து வைத்ததுபோலிருந்தது அறை முன்குல் நின்ற ஒட்டு மா. இலைக ளிடையே இருள் துண்டு துண்டாகத் தேங்கிக் கிடந்தது, வானத் தைப் பார்த்தார். உம், விடிய ஒரு மணி நேரமாகலாம்..... -
தொழுவத்தில் அரவம் கேட்டது,
சுவரைத் தடவியபடியே சுவர் அலமாரியைத் திறந்தார். மேல் தட்டிலிருந்து வெற்றிலேப் பையையும், கீழ்த்தட்டிலிருந்து ஒவல்டின் டப்பாவையும் எடுத்துக்கொண்டார். நார்க்கட்டிலில் உட்கார்ந்தபடி, டப்பாவைத் திறந்து ஏத்தங்காய் வறுவலை ஒவ்வொன்ருக வாயில் போட்டு மென்ருர். ஸ்டாக் சிறிதுதானிருந்தது. டப்பா காலி, பையை அவிழ்த்து இரும்பு உரலையும், உலக்கையையும் எடுத்து நிலைப்படியில் வைத்துக்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் "ணங், ணங்’ என்ற ஓசை, தாள லயம் தவருமல் கேட்க ஆரம்பித் தது. விடிவெள்ளி நேரத்தில் இந்த ஓசை எழுவது பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும், சமையல் செல்லம்மாவுக்கும், சம்முகத்துக்கும். மாடு
கன்றுகளுக்கும் பழக்கப்பட்டுப்போன விஷயம், சிம்முகத்துக்கும்,
சேல்லம்மாவுக்கும் அதுதான் அலாரம். இந்த ஓசை எழுந்ததும். படுத்திருக்கும் ம்ாடுகளும் எழுந்து நின்று சோம்பல் முறிக்கும். சம்மு கம் எழுந்துவந்து சாணியை வ்ழித்தெறிந்துவிட்டு செம்பையும் எண் ணெய்க் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வருவான். கட்டில் நிற்கும் கன்று பின்வாங்கி முன் பாய்ந்து, கயிற்றை வெட்டி வெட்டி இழுக்கும். - -________________

24 பாற் கடல்
ணங்.ணங்...-ணங்...ணங்...சம்முகம் எங்கே? காணுேம்.
'சம்முகம், சம்முகம்' என்று கூப்பிட்டார் கிழவர். பதிலில்லை. ...நர்ஸைக் கொண்டுபோய் வீட்டில் சேர்த்துவிட்டுப் படுக்கிற பொழுது மணி இரண்டு அடித்திருக்கும். அசந்து தூங்குகிருன் பாவம்... .
கொம்பை வைக்கோல் அழியில் முட்டிமோதும் ஓசை கேட்டது. ..இந்த விஷமம் இரண்டுக்கும் கிடையாதே! புதிய பாடமோ?...
கிழவர் வெற்றிலையை மென்றுகொண்டே தொழுவத்துக்கு வந்தார். இருளின் திட்பம் ஒரு சொல்லுக்குக் குறைந்து, மெல்லிய கறுப்புத் திரை போர்த்தியது போலிருந்தது. உத்திரக் கட்டையைத் துழாவி தீப்பெட்டியை எடுத்து அரிக்கன் லாந்தரை ஏற்றினர்.
கன்றுக்குட்டிக் கூண்டை யொட்டி கறவை மாடு நின்றுகொண் டிருந்தது. அறைச் சுவரையொட்டி சினைமாடு நின்றுகொண்டிருந் தது. இரண்டு மாட்டுக்கும் நடுவில் கூரையிலிருந்து லாந்தர் தொங் கிக்கொண்டிருந்தது. தரையில் கிழவர் நின்றுகொண்டிருந்தார். -
லாந்தரின் இலேசான அசைவில், மாடுகளும் கிழவரும் கருநிறம் பூண்டு சுவரில் குறுக்கும் மறுக்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள், கிழவர் லாந்தரைத் தொட்டு ஆட்டத்தை நிறுத்தினர். - கறவை மாட்டுக்கு மடுவில் பால் குத்த ஆரம்பித்து விட்டதால், தொடர்ந்து அலறிற்று. கிழவர் குனிந்து பார்த்தார். காம்புகள் 'உன்னைப்பார் என்னைப்பார்’ என்றிருந்தன. - கூண்டினுள் முன்னுடம்பு தணியும்படி காலே அகலவிரித்து மூஞ்சியைக் கம்பழிக்குள் துருத்திக்கொண்டிருந்தது கன்று. இந்தப் போஸ்ை கண்டாலே அசாத்திய கோபம்மூளும் கிழவருக்கு. வேறு எதற்கோ செல்லும் பாவனையில் அதன் பக்கம் நெருங்கி, கரிய முக் கில் நறுக்கென்று சுண்டிவிட்டு.விடுவார். இரண்டு நிமிஷம் கழித் துப் பார்த்தால் மீண்டும் மூஞ்சியைத் துருத்திக்கொண்டுதான் நிற் கும் அது. கறவை மாடு நின்ற நிலையில் அதன் மடுவுக்கும், கன்றின் மூஞ்சிக்கும் நாலு விரல்தான் இடைவெளியிருக்கும். ஆளுல் அதற்கு மேல் ஒரு அங்குலம் பின்வாங்கக் கழுத்துக் கயிறு கறவை மாட்டுக்கோ, ஒரு அங்குலம் முன்னேற, அழி கன்றுக்கோ இடம் தராது. இந்த நிலையை மிகவும் ரசித்தார் கிழவர். - - கொம்பால் அழியைத் தட்டும் ஒசை மீண்டும் கேட்டது. சினை மாடுதான்! - - - - கிழவர் இந்தப் பக்கம் வந்தார். கர்ப்பிணியை மேலும் கீழும் பார்த்தார். எல்லாம் விபரீதமாகப் பட்டது. அடிக்கொரு தரம் வைக்கோல் அழியைக் கொம்பால் தட்டுகிறது. நிலைமாற்றி நிலை மாற்றி நின்று, நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பின்னங்கால உதறிற்று.________________

கிடாரி - 25
இரவு வைத்த வைக்கோல் அப்படியே இருந்தது. கண் இமைகளில் ஈரம் படிந்து, கன்னத்தில் ஈரக்கோடும் விழுந்திருந்தது. கிழவர் வாலேத் தூக்கிப் பார்த்தார். மாசு தொங்கிவிட்டது. தீர்மானம் செய்துவிட்டார் கிழவர். - - - மறுகணம் எக்களிப்போடு சம்முகம், சம்முகம்' என்று கத்தினர். பதிலில்ல்ே. குரலில் பதற்றம். மேற்கொண்டு என்ன செய்யவேண்டு மென்பதும் தட்டுப்படவில்லை. நின்ற இடத்திலிருந்து தன்னுணர் வில்லாமல் முன்னும் பின்னும் சென்ருர். - - கயிற்றில் தொங்கிய லாந்தரை அவிழ்த்துக்கொண்டு ஒட்டு மாவைச் சுற்றி நெற்குத்துச் சாவடிக்கு நகர்ந்தார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவர் ஹேஷ்யம் பலிக்கப் போகிறது. அமாவாசை தாண்டாது என்பது அவருடைய கணிப்பு. நோவு எடுத்துவிட்டதே. மாதக் கடைசிவரை இழுக்கும் என்ருன் சம்முகம். அவனுக்கு என்ன தெரியும்? வஜ்ர மடையன். -
கிழவர் அடிவைக்க வைக்க, வலது புறத்தில் கிணற்றடியும், கம்பி வலைபோட்ட அடுக்களையும், ஸ்ளுன அறைக்குப் பின்னல் நின்ற ஐந்தாறு தென்னம்பிள்ளைகளும் விளக்கொளியில் புலப்பட்டன.
கொட்டகையின் ஒரு பக்கம்தான் சுவர். நாலு தூண்கள் மேல் எழுப்பிய கூரை தான் அது. ஒரு மூலையில் பிரம்மாண்டமான கல் யான ஆட்டுக் கல், யானைக்குட்டி படுத்திருப்பது போலிருந்தது. மறுபக்கம் கூரையில் முட்டும்படி விறகு அட்டி. தட்டு முட்டு சாமான்கள். பின்புறம் சுவரையொட்டி நா8லந்து அடுப்புக்கள். ந்ெல்லப் போட்டுக் குத்துவதற்குக் கொட்டகையின் நடுவில் அடுப் புக்கு முன்புறம் சம சதுரமான கல்லைத் தரையோடு தரையாய் பதித் திருந்தது. கிழவர் விளக்கைத் தூக்கிப் பார்த்தார். கருங்கல்லில் தேங்காப்பூ டவல் விரித்தபடி யிருந்தது. டவலில் முதுகு அழுத்தத் தின் சுவடும் தெரிந்தது. அடுப்பின் மேல் சாய்வாக வைத்திருந்த பலகையில் தலை எண்ணெய் படிந்து, உள்ளங்கை அகலத்துக்குக் கறுப்பு அடையாய் அப்பியிருந்தது. - •.
சம்முகத்தைக் காண வில்லை! -
கிழவருக்கு ஏமாற்றமும் கோபமுமாக வந்தது. என்ன இது? மாட்டுக்கு வலியெடுத்துவிட்டது. எங்கே தொலைந்து போளுன், மடசாம்பிராணி, மனத்துள் திட்டி நொறுக்கினர். கோபத்தை நேரில் காட்ட முடியுமா? திரும்பக் காட்டி விடுவான். ஆளுல் சபேசய்யர் வருகிருர் என்ருலோ அரையோடு நீரைக் கழித்துவிடுவான். நர்ஸ்ை வீடுகொண்டு போய்ச் சேர்க்கப் போனவன் அப்படியே தொலைந்து போயிருப்பாளுே? -
சம்முகத்தை எழுப்பி, தனது ஹேஷ்ய சூட்சமத்தையும், பிரதா பத்தையும் ஒரு பாட்டம் பாட எண்ணியவர் ஏமாந்து அடுக்களைப் பக்கம் சென்ருர். - - - - -________________

26 - - பாற் கடல்
அடுக்களேயில்தான் செல்லம்மா படுப்பது வழக்கம். இருபது. வருடமாக அந்தக் குடும்பத்தோடு ஒட்டிப்போன ஜீவன். கிழவர் கண்விழிக்கும் தறுவாயில் எழுந்திருந்து வென் னிர் அடுப்பைப் பற்ற வைத்து அடுக்களை அடுப்பையும் மூட்டுவாள். - - இன்று என்ன, எல்லாம் விபரீதமாக யிருக்கிறது. செல்லம்மா வும் எழுந்திருக்கவில்லையே. கிழவர் அடுக்களைக் கம்பி வலைமேல் லாந்தரைத் தூக்கிப் பார்த் தார். வழக்கமாகப் படுத்திருக்கும் இடத்தில் செல்லம்மாவைக் காணவில்லை. அப்பொழுதுதான் கிழவருக்கு நினைவில் தட்டிற்று. பிரசவ அறையில் படுத்திருப்பாள். பாவம், செல்லம்மா, தன் வயிற் றுப் பெண்ணுக்குப் பார்ப்பதுபோல் பார்த்தாள். கோயிலில் வைத் துக் கும்பிட வேணும், செல்லம்மாவை, அவளுக்காகத்தான் கோமதி நேற்று தப்பிப் பிழைத்தாள். ஆமா. அந்த மாராசிக் காக, அவள் கைராசி அப்படி; டாக்டரே மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்து விட்டாரே. பகவானே, எனக்கு அபகீர்த்தி தேடித் தராதே. என்னே இந்த வீட்டைவிட்டுத் துரத்திவிடாதே’ என்று செல்லம்மா புலம்பினுளே, அந்தப் புலம்பலுக்குச் செவிமடுத்து அபகரித்த உயிரை திரும்ப தந்துவிட்டது தெய்வம். ஒவ்வொரு தடவையும் இந்தப் பாடுதான் கோமதிக்கு. டாக்டர் தான் வர வேண்டும். ஆயுதம்தான் போட வேண்டும். ஒவ்வொரு தடவை: யும் போச்சு போச்சு என்றிருக்கும். பன்னிரண்டு மணிக்குள்ளாக டாக்டர் நாலுதடவை வரும்படியாகி விட்டதே. ஒரு மட்டும் ஒரு மணிக்குக் குழந்தை இறங்கி வந்தது. ரத்தக் கசிவு ஜாஸ்தியாம். இரண்டு கையையும் மாறி மாறிச் சல்லடையாகத் தொளைத்துவிட் டார்கள். இன்னும் ஒரு வார்த்துக்கு இமைக்குள் வைத்துப் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டான் டாக்டர். யார் பார்க்கப் போகிருர்கள் இமைக்குள் வைத்து? பெற்ற தாய்ை மாடியில் உட் கார்த்தி வைத்திருக்கிறது. ஐந்து வருடமென்ன, அதற்குமேலுமிருக் கும். துரதிர்ஷ்டம் பிடித்தவள். பிரசவ வேளையில்கூட பெற்ற பெண் பக்கத்திலிருந்து வயிற்றைத் தடவக் கொடுத்துவைக்கவில்லை. ம்...இப்பொழுது இவள் எழுந்திருக்கவேண்டுமே...எழுந்திருப்பது என்ன? எழுப்பிவிட்டுத்தானே கீழே உட்காருவாள் செல்லம்மா... பச்சைக் குழந்தை வீலென்று கத்திற்று. கிழவர் சிரித்துக் கொண்டார். சம்முகம் கட்டிடத்தின் வலதோரமாக விறுவிறு என்று வருவதைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தின் இடதோரமாக நகர்ந்தார் கிழவர். அவளுகக் கண்டுபிடிக்கிருளு என்றுதான் பார்ப்போமே... - -
கொய்யா மரத்துக்கும் பலா மரத்துக்குமிடையே இருக்கும் தேன் கூட்டுக்கு முன்னுல் வந்ததும் கிழவர் தலையைத் துக்கிப்பார்த் தார். கட்டிடத்தின் அந்த இடத்தில் கீழே ஒரு பெட்ரூமும், மாடி
யில் ஒரு பெட்ரூமுமிருந்தது. கீழறையில்தான் தலைக்கு நாள் நடு________________

கிடாரி 27
- நிசியில் கோமதி ஐந்தாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருந் தாள். மாடியறைதான் பல ஆண்டுகளாகக் குஞ்சம்மாளுக்கு உல கம். குஞ்சம்மா கட்டிலேயொட்டி ஒரு சாளரம். அப்பொழுது சாளரக் கதவு சாத்தியிருத்தது. கிழவர் கோமதி படுத்திருந்த அறைப்பக்கமாக வந்து சன்னலின் ஒரு_பகுதியைத் திறந்தார். திறந்த இடத்தில் கோமதியின் முகம் தெரிந்தது. சன்னல் விளிம்பில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத் ததுபோல் முகத்தில்மட்டும் பிரகாசம் பரவிற்று. அறைக்குள் அப் போழுதும் இருள் சன்னமாகத் தேங்கிக் கிடந்தது. r கோமதி கைகளைக் கட்டியபடி தூங்கிக்கொண்டிருந்தாள். இமைகள் பெரிதாய் சாத்தியிருந்தன. இரண்டு நிமிஷம் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். தலைக்கு நாள் மாலையில் பின் வராண்டாவில் தலையைக் கோதிக்கொண்டிருந்த பெண் தாஞ. இவள்? கிழவரால் நம்ப முடியவில்லை, என்ன மாற்றம்! ஒரே இரவில் குழந்தை மாதிரியாகிவிட்டதே முகம். முகத்தில்தான் என்ன பேதைமை. கால் மாட்டில், கட்டிலேச் சற்றுத் தூக்கி வைத்திருந்தது. மீண் டும் குழந்தையின் சிணுங்கல் கேட்டது. - - 'கோமதீ’ என்று ரகசியமாகக் கூப்பிட்டார் கிழவர். கோமதி அதிர்ச்சியடைந்து கண்விழித்ததைப் பார்த்தபொழுது தான், கூப்பிட் டெழுப்பியிருக்க வேண்டாமென்று எண்ணிஞர் கிழவர். - . . "என்ன தாத்தா, என்ன?’ என்று பதறிஞள் கோமதி, "ஒண்னுமில்லேயம்மா. சும்மாத்தான். பசுவுக்கு வலியெடுத் திருக்கு' என்ருர் கிழவர் குழந்தையின் சிணுங்கல் அழுகையாயிற்று. "மாமீ. மாமி’ என்று கூப்பிட்டாள் கோமதி. . "செல்லம்மா, செல்லம்மா" என்று கூப்பிட்டார் கிழவர். - தான் சொன்னது கோமதியின் காதில் விழவில்லையோ என்று. சந்தேகப்பட்டதுமாதிரி மீண்டும் ஒரு தடவை, "பசுவுக்கு நோவெடுத்திருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் கன்று போட்டு விடும்' என்ருர், - -- . கோமதியின் முகம் சிலமாதிரியிருந்தது. - - செல்லம்மா எழுந்திருக்கும் ஓசை கேட்டது. அறையுள் ஒளி பரவிற்று. கட்டில் பக்கம் வந்தாள் செல்லம்மா. கை நிறைய வைத். துக்கொண்டிருந்த வெண்மையான துணிகளிடையே, வெண்மை கயான இரு கால்களைக் கண்டார் கிழவர். உதட்டோரம் கன்னம்________________

28 - பாம் கடல்
வரை விரிந்தது. மேல் வரிசையில் இரண்டு பற்கள் இல்லாத அதே இடத்தில், கீழ் வரிசையிலும் இரண்டு பற்கள் இல்லே கிழவருக்கு. அவர் சிரிக்கிறபொழுது மேலும் கீழுமாக இடைவெளியைப் பார்ப் தில் ஏற்படும் அனுபூதியை அனுபவித்தவர்கள், அத்தகைய தருணத் திற்காகக் காத்திருந்து வாய்க்கிறபொழுது வீளுக்கமாட்டார்கள். கோமதி கிழவருடைய வாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள். - குழந்தையைப் பக்கத்தில் போட்டாள் மாமி. மார்பிலும், கையிடுக்கிலுமாகப் புதைந்தது குழந்தை அழுகையும் அவரோ கணத்தில் தேய்ந்தது. - தன்னுடைய பேச்சை ஓரளவேனும் செவி கொடுத்துக் கேட்கும் கோமதியும் அவள் அப்பாவைப் போலாகிவிட்டாளா என்ன! கிழவர் நம்பிக்கை யிழக்காமல் மீண்டும் சொன்னர். 'பசுவுக்கு வலியெடுத்திருக்கு, இந்தத் தடவையாவது கிடாரி பிறக்குமின்னு நினைக்கிறேன்.” பதில் பேசவில்லை கோமதி. கிழவருக்கு ஒரே ஏமாற்றம், இரண்டு பக்கமும் திரும்பித் திரும் பிப் பார்த்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, “ஒரு மட்டும் செத்துப் பிழைத்தாய்!” என்ருர். - "பிழைத்திருக்க வேண்டாம்” என்ருள் கோமதி. உள்ளுங்கால் வழி மின்சாரம் பாய்ந்து உடம்போடு தல வரை ஒடியது கிழவருக்கு. - “ஏண்டி பெண்ணே இப்படிப் பேசறே?” என்மூர் கிழவர். கோமதியின் கன்னத்தில் கண்ணிர் வழிந்தது. கிழவருக்கு விஷயம் மங்கலாகப் புரிய ஆரம்பித்தது. "அழாதே, ஈச்வர சங்கல்பம்” என்று சொல்லிக்கொண்டே மெதுவாக சன்னலச் சாத்தியவர் மீண்டும் திறந்து, “பசு கன்னு போட்டதும் வந்து சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். - அப்பொழுது நடு. ஹாலில் அலாரம் அடிப்பதும் அதைத் தொடர்ந்து, "யாரது அங்கே? என்ன சத்தம்?” என்று சயேசய்யர் அதட்டும் குரலும் கேட்டன. - - “தாத்தாதான் அப்பா” என்ருள் கோமதி. அதற்குமேல் அங்கு திற்காமல் மடமடவென்று பின் வாங்கினர் கிழவர். தரை வெளுக்க ஆரம்பித்து விட்டது. கிழக்கிலிருந்து கிரணங் கள் தங்க ஊசிகள் போல் காம்ப்ெளண்டுச் சுவரைத் தாண்டி கோய்யா மரத்தில் விழுந்துகொண்டிருந்தன. -________________

கிடா - 29
கிழவர் தேன் கூடு பக்கம் வந்ததும் மீண்டும் தலையைத் தூக்கிப் பார்த்தார். அப்பொழுதும் சாளரக்கதவு சாத்தியிருந்தது. "குஞ்சம்மா, குஞ்சம்மா’ என்று கூப்பிட்டார் கிழவர். தாழ்ப்பாளேத் தட்டும் ஒசை. சாளரக் கதவு நிறந்தது. குஞ்சம் மாள் தலையை வெளியே நீட்டிகுள். - . குஞ்சம்மாள் பல வருடங்களாக மாடியில்தான் அடைத்துக் கிடந்தான். டி. பி. என்று டாக்டர்கள் சொன் ஞர்கள். ஆளுல் கிழவர் இருமல் என்றுதான் சொல்லுவார். வீட்டுக்கு வருகிறவர், களிடமெல்லாம் என் மனேவிக்கு டி. பி., என் மனைவிக்கு டி. பி, என்று சபேசய்யர் சொல்லுவது கிழவருக்குப் பிடிக்காது. "என் பெண் ணுக்கு இருமல்' என்று தான் அவர் சொல்லுவார். சபேசய்யரும் அப்படிச் சொன்னுல் போதுமென்பது கிழவருடைய அபிப்பிராயம். இதை வியாஜமாக வைத்தே மாமனுருக்கும், மாப்பிள்ளைக்கும் லடாய் மூளும், - t சபேசய்யரின் மருத்துவ ஞானம் குஞ்சம்மாளே மாடியில் ஒதுக் கித் தள்ளிவிட்டது. வியாதிக்காரிபோலா இருப்பாள் குஞ்சம்மாள்? ஜம்பர் கை நுனியில் சதை பிதுங்கும். யாரரவது பார்த்தால் 'மாரா சி. உடல் அசையாமல் தின்று கொழுத்திருக்கிருள்” என்பார்கள். சீவி முடிந்த தலை. நிறைய ஜரிகை போட்ட காஞ்சீபுரம் பட்டுச் சேலை. வைர மூக்கித்தியையும் தோட்டையும் அடிக்கடி கழற்றித் துடைத் துக்கொண்டிருப்பாள். உடம்பு காகித வெளுப்பு. சில சமயம் வறட்டு இருமல் கிளம்பிவிட்டதென்ருல், சிரட்டையைப் பாறைமேல் தேய்ப் பதுமாதிரி சொர சொரவென்று இருமித் தள்ளிவிடும். குளிமுறை யன்று மட்டும் கீழே வருவாள். வாரத்தில் ஒரு நாள் ஸ்னைம். குளித்துவிட்டு மாலைவரை கீழே உட் கார்ந்து கொண்டிருப்பாள். அப்பாவுடைய மாட்டுப் பைத்தியம் பெண்ணுக்கும் சிறிதுண்டு. மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்து துளசி மாடம் பக்கம் நிறுத்திக் காட்டுவார்கள். மாலையில் மீண்டும் மாடிக்குள் புகுந்துவிடுவாள் குஞ்சம்மா. - விடியற்காலம் ஆறரை மணிக்குக் கிழக்கு வெயிலடிக்கையில், ஏற்றிய லாந்தருடன் அப்பா நிற்பதை விழிபிதுங்கப் பார்த்தாள் குஞ்சம்மா, - - - "இதென்ன கோலம் அப்பா?” "குஞ்சம்மா, விசேஷம் தெரியுமோ?” “என்னப்பா, என்ன விஷயம்?” - - - “பசுவுக்கு நோவெடுத்திருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் கன்னுபோடும்.” "அப்பா, கோமதிக்குத் திரும்பவும் பெண் குழந்தைதான பிறக் கணும். நமக்கு ஏன் இந்த சோதனை?” ஆற்ருமை தொனித்தது குஞ்சம்மா குரலில், - - -________________

30
கிழவர் தேன் கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஈயாகக் கூட்டின் முற்றத்திற்கு வந்து, ஒரு கணம் தயங்கிவிட்டு சட்டென்று உயரப் பறந்தது. - கிழவர் தேனியைப் பார்த்தப்படியே தலையைத் தூக்காமல் மெல்லிய குரலில் சொன்னர்: "இந்தத் தடவையாவது கிடாரி போடும்னு நினைக்கிறேன். ஈச்வர சங்கல்பம் எப்படி இருக்கோ தெரியலே.” - “அதிர்ஷ்டம் கெட்ட பெண். வரிசையா நாலு பெண் பிறந் தாச்சே. போராதோ? இந்தத் தடவையும் இப்படியாகும்னு நான் தினேக்கவே இல்லை. நேத்து ரா முச்சூடும் கண்ணேக் கொட்டலே தான். அது பிறந்த வேளே. தலையெழுத்துக் கட்டை, யார்தான் என்ன செய்ய முடியும்?” என்ருள் குஞ்சம்மா. . . . "இதுவரையும் பிறந்த ஒரு கன்னேயாவது வீட்டோடெ வச்சுக்கலை. தவிட்டு விலைக்குப் பத்திண்டு போச் சொல்லிட்டார் மாப்பிள்ளை. எனக்குத்தான் வயத்தெ எரிஞ்சுது. எதிரே நின்னு ஒரு வார்த்தை சொல்ல முடியுமோ? துர்வாசர் சதா மூக்கிலே நின்னுண்டிருப்பர். 'காளைங்கன்னே வச்சுண்டு சாணம் வாரிண் டிருக்க போறேரோ'ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா வாயடைச்சுப் போயுடுமே, என்ன செய்வே சொல்லு? வாஸ்தவந்தானே? நமக் கென்ன வயலா, கரையா, வண்டியா? ஆளுல் இந்தத் தடவை நான் சொல்றேன் குஞ்சம்மா, நீ வேணுப் பாத்துக்கோ, எப்படியப்பா இப்படிச் சொன்னேர், பொட்டுப் போட்டாப்லெ’னு கேக்கப் போறே. கிடாரிதான் பிறக்கப் போறது. ஆமாம், கிடாரி தான் பிறக்கப் போறது” என்ருர் கிழவர். - * , "நான் ஒண்ணெச் சொல்றேன், நீர் வேறெதையோ சொல்றேரே?” என்று கேட்டாள் குஞ்சம்மா. கிழவர் அதற்குப் பதில் சொல்லவில்லை. தேன்கூடு வாசலேயும், மங்கி எரிந்து கொண்டிருந்த லாந்தரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார். - r - கிழவர் இரண்டு,எட்டு வைத்து விட்டு தலையைத் திருப்பிப் பார்த்தபொழுது குஞ்சம்மா தலையைக் காணவில்லை. ‘குஞ்சம்மா, குஞ்சம்மா” என்று மீண்டும் இரு தடவை கூப்பிட்டதும் மாடியில் தலை முளேத்தது. . . . -- "டப்ப காலி" என்ருர் கிழவர். - : "ஒமப்பொடி பிழிஞ்சிருக்கு, போட்டுத் தரச் சொல்றேன்.” கிழவர் தலையைச் சரித்துக்கொண்டு யாருக்கோ சொல்வது போல் சொன்னுர், - - . . "________________

கிடாரி - 31
"குஞ்சம்மா, வருத்தப்படாதே. எல்லாம் ஈச்வர சங்கல்பம்; இதெல்லாம் நம்ம கையிலெ இல்லை. அவன் பிறக்கணும்னு நெனக்கறது தான் பிறக்கும். இப்பொ நான் கிடாரி பிறக்கும்னு சொல்றேன். நான் சொல்றேங்கறதுக்காக பிறந்துடாது. அவன் நினைக்கணும். ஆன அவன் இந்தத்தவா கிடாரி பிறக்கும்படி யாத்தான் நினைப்பாங்கற நம்பிக்கை இருக்கு எனக்கு. எப்டினு கேப்பே? பதில் கிடையாது. நம்பிக்கை; அவ்வளவுதான்...”
கிழவர் பேசிக்கொண்டே போனர்.
குஞ்சம்மா தலையை இழுத்துக்கொண்டு விட்டாள்.
தொழுவத்தில் மாடு அலறும் ஓசை கேட்டது. கிழவர் வேகமாக முன்னேறும் பாவனையுடன் தொழுவத்தை நோக்கி நகர்ந்தார்.
கிழவர் தொழுவத்துக்கு வருகிற பொழுது சம்முகம் பாலேக் கறந்து கொண்டிருந்தான். - லாந்தரை அணைத்துக் கயிற்றில் கட்டிக்கொண்டே, 'ஏய் சம்முகம், ராத்திரிப் பூரா இருமல் கேட்டுதே, பனிலெ சளி புடிச்சுண் டிருக் கோடா?” என்று கேட்டுக்கொண்டே அடக்க முடியாமல் சிரித்தார். சம்முகம், கிழவர் வாயைப் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டான். - "நர்ஸம்மாவை கொண்டு போய் வீட்டிலே தள்ளிப்போட்டு அப்படியே சுசீந்தரத்தைப் பார்த்து நடையைக் கட்டினேன். நேத்து ரிஷப வாகனமில்லா. பெரிய வாசிப்பு” என்ருன் சம்முகம். கிழவர் அவன் பக்கத்தில் வந்து கண்களில் விஷமம் பொங்க, "ஏய் சம்முகம், கீப் ஏதாவது வச்சிருக்கியோ "கீப்"?” என்ருர், போங்க சாமி” என்று சிரித்தான் சம்முகம். - கிழவர் திடீரென்று குரலை ஏற்றிக்கொண்டு, “டேய், ஆனைமடையா, வஜ்ரசும்பா, இருளடிச்சுப் போச்சோடா உன் கண்ணிலெ” என்று கத்தினர். - - - குரலில் மிடுக்கு, போலித்தனம். af பால் செம்பைப் பதனமாக் மூலையில் வைத்துவிட்டுக் கண்கள் விரிய இமைக்காமல் கிழவரைப் பார்த்தான் சம்முகம். - "அட சாம்பிரணி மடையா” என்று கத்தினர் கிழவர். சம்முகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தலையைச் சாய்த்துக் கொண்டு, பிடரியைச் சொறிந்தபடி எதையாவது மறந்து டிோளுேமா என்று யோசித்தான். “விரிசம் பழம், விரிசம் பழம்” என்று சொல்லிக்கொண்டே சினைமாடுக்குப் பக்கத்தில் சென்று நின்றுகொண்டு, “இங்கே வா” என்று கூப்பிட்டார்.________________

32 பாற் கடல்
சம்முகம் வந்தான். -
"குருட்டுக் கண்ண்ெத் திறந்து பாரு' என்ருர் கிழவர்.
சம்முகம் இரண்டு நிமிஷம் மாட்டைக் கூர்ந்து பார்த்தான். விஷயம் பிடிபட்டது.
"வலி கண்டுடுத்துப் போலிருக்கே” என்றுன்.
“என்னுது?”
"வலி கண்டுடுத்து.”
'வலி கண்டுடுத்து. இல்லையா! அடேயப்பா. எப்படியடா சம்முகம் சொல்லிப்புட்டே? அந்த வித்தையெ கொஞ்சம் சொல்லித்தாடா எனக்கு" குத்தலான குரலில் சொல்லிக் கொண்டே வந்து, குர்லே மாற்றி, "டேய் வலி கண்டுடுத்துனு அந்த ரூமிலெ. இருந்த மேனிக்குத் தெரிஞ்சுண்டு தானேடா நான் எழுந்து வந்தேன். கூப்பிட்டுச் சொல்லித்து எங்கிட்டெ, நீயெல்லாம் கான்' பெத்துதின்ன கயிறு எடு’னு சொல்ற ஜாதி, மாடில்லாத ஊரிலெ. பிறந்தவன். இன்னிக்கு கன்னு போட்டுடுமாம்! கண்டு பிடிச்சு சொல்லிப்புட்டான் பிரகஸ்பதி!” குரலேயும் வலித்து, முகத்தையும் வலித்தார் கிழவர். - -
சம்முகத்துக்கு முகம் தொங்கிப் போய்விட்டது. கிழவர் மேலும் வெற்றிவாகை சூடிக்கொண்டே போளுர், - - "நீ என்ன சொன்னே? இந்த மாசம் கடேசிலேதான் பாக்கணு மின்னெ. நான் என்ன சொன்னேன்? அமாவாசை தாண்டினு, உன்னைத் தூக்கிண்டு இந்த வீட்டைச் சுத்தி நாலுதரம் வரேன்னு, சொன்னேன். சொன்னேளு? என்னுச்சு? என்னடாய்யா பேச்சு: மூச்சில்லெ? வெத்தலே போட்டுண்டிருக்கயோ?”
சம்முகத்துக்கு அவமானம் தாங்க முடியவில்லை. -
சிரித்துக் கொண்டே அவசியமில்லாமல் அங்குமிங்கும் சென்ற.ே கிழவர். சம்முகத்தை வெற்றி கொண்ட பெருமிதம் முகத்தில் வினையாடிற்று. -- - -
“என்னுது நின்னுண்டிருக்கே? சோளக்கொல்லே பொம்மை மாதிரி, சர சரானு ஜோலியைப் பாரு. சாணத்தை அள்ளிப்போடு. ரெண்டு சாக்குத்துண்டு எடுத்துண்டு வா. கிகாஞ்சம் பொடி வைக்கோலைச் சுருட்டி வச்சுக்கோ. மொண்னேக் கத்தி ஒண்ணு, வச்சிண்டிருந்தயே, அதெ சித்தெ தீட்டிக்கறயா? கன்னு பிறந்து
விழுந்ததுமே சித்ரவதை ஆரம்பிக்க வேண்டாம்." - "இந்தத் தடவையாவது கிடாரி பிறக்கணும், சாமி” என்றன். சம்முகம். - . . . . - . . . ". . . . சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு அழுது வழியாதேன்து எத்தனே தடவைதான் சொல்றது: நம்புடா, பிறக்கும். நான்.________________

கிடாரி - 33
சொல்றேன், இந்தத் தவா கிடாரிதான் பிறக்கப் போறது. அப்படிப் பிறக்காட்டா, இதேசப் பாரு என்னே இப்படி சொடக்குப் போட்டுக் கூப்பிடு. ஆமாம் சொடக்குப் போட்டுக்கூப்பிடு' கிழவுச் சொடக்குப் போட்டுக் கொண்டே நாலு வீடு கேட்கும்படி இரைந்தார். உத்ஸ்ாகம் கரை புரண்டு விட்டது. சம்முகம் மடமடவென்று வேலையைக் கவனித்தான். கிழவர் தொழுவத்தில் உட்கார்ந்துவிட்டார். -
கிணற்றடியிலிருந்து வாளியை எடுத்துக் கொண்டு வருகிற பொழுது, சம்முகம் கிழவர் பக்கம் மிகவும் நெருங்கிவந்து, இருந் தாலும் இந்தத் தவாவும் கோமதியம்மைக்கு பொட்டைப்புள்ளெ பொறக்கணுங்கு தில்லே. அய்யருக்கு ரொம்ப வருத்தம். அசந்து போயுட்டாரு அசந்து” என்று சொல்லிக்கொண்டே வாளியைக் கீழே வைத்தான். -
'அம்புட்டும் கண்டே, போடா போ' என்ருர் கிழவர்.
'உடனெ அப்படிச் சொல்லிப்புட்டேளே. நானும் பதினுேரு வருச மாட்டு இதுக்குள்ளே தாலா லாந்திக்கிட்டு வாறேன். அய்யரு நேச்சர் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னு வை:புங்க. '
ஆமாம், நான் பிறக்கறிதுக்கு முந்தியே நீ இங்கேதான் இருக்கெ. மாடுக்கு வலி யெடுத்த தெப் பாக்கத் தெரியலெ, அளக்கருன்.” - - அசப்பில் மாடுபக்கம் திரும்பிய கிழவர், 'டேய் மாடு படுத்தாச்சு, சாக்குத் துண்டெ எடுத்துண்டு வா. ஒடு’ என்று கத்திக்கொண்டே மாடு பக்கம் விரைந்தார். - அதே சமயம் கட்டிடத்தின் முன் பகுதியிலிருந்து சம்முகம் சம்முகம் என்று, இரண்டரைக் கட்டையில் சபேசய்யர் குரல் கேட்டது. - - - சம்முகம் வாசலேப் பார்த்து ஒடிஞன்.
குழந்தைகள் எழுந்திருக்கும் சமயம் அது. பாயைச் சுருட்டி பாய்த் தூக்கில் வைப்பதற்காகச் சம்முகத்தை அந்த நேரத்தில் சபேசய்யர் கூப்பிடுவது வழக்கம்தான். - - குழந்தைகள் வரிசையாக நடு ஹாலில் படுத்திருப்பார்கள். கோமதியின் பெண் குழந்தைகளில் சச்சு, பங்கசம், கனகம் மூன்று பேரும் அம்மாவுடன் வந்திருந்தார்கள், மூத்த பெண் அன்னபூர்ணி மட்டும், படிப்பு வீணுக வேண்டாமென்ற எண்னத்திலும், "கூப்பிட்ட சத்தத்திற்கு என்னு’ என்று கேட்பதற்கும் அப்பாவுட்ன் தானிருந்தாள். - - சபேசய்யரின், பிள்ளே வயிற்றுப் பேரன் வெங்குவின் தாயார் பிரசவத்துக்குத் தாய்வீடு சென்றிருந்தாலும் அவன் இங்கேதான்
பா-3________________

34 - இருந்தான். செல்லம்மாவிடம் நல்ல ஒட்டுதல். அவனுடைய அப்பா சீட்டாட குற்ருலம் சீசனுக்குச் சென்றிருந்தார்.
குழந்தைகளில் பங்கசமும் வெங்குவும் ஒரு ஜோடி, சேர்ந்தே திரிவார்கள். சச்சுவும் க ைகமும் மற்ருெரு ஜோடி. வெங்கு, பிறந்த மேனிக்கு பங்கசம் பின்னல் திரிந்துகொண் டிருப்பான். அரையில் துணியோடு அவனைத் பார்க்க முடியாது. நிஜாரைப் போட்டால் மறுகணம் அதை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு விடுவான். அப்படி யிருப்பதில் அவனுக்குப் பேரானந்தம். அதோடு அவனுடைய இரட்டைமாடி பஸ்ஸை அரைஞாணில் கட்டிக்கொள்ளவும் நிஜார் போடுவது இடைஞ்சலாக இருந்தது. குழந்தைகள் நால்வரும் தலைக்கு நாள் இரவு, வேதனைக் குரலேயும், அலறலையும் கேட்டபடியே தூங்கியவர்கள். ஏழு மணிக் கெல்லாம் இடுப்புவலி எடுக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னலேயே அம்பிப் பாப்பா பிறக்கப் போகிறது என்ற பேச்சு அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்தது. அறையிலிருந்து கிளம்பிய ஒலம் அலே அலேயாய் வீடு முழுவதும் பரவிற்று. குழந்தைகள் இருளடித்த முகத்தோடு வளைய விந்தன. அவசரமாக அங்குமிங்கும் பாய்ந்து கொண்டிருந்த பெரியவர்களை வழியில் இடைமறித்துப் பேசவும் முடியவில்லை அவர்களால்.
பங்கசமும் வெங்குவும் சாத்தியிருந்த அறைக் கதவு முன்னல் நின்று செல்லம்மா மாமி வருகிருளா என்று காத்துக் கொண்டிருந் தனர். இரண்டு தடவை நர்ஸ் வெளியே வந்தபொழுதும் மஆலயாளத்தில் பேசி விரட்டிவிட்டாள். அவள் கண்முன்னல் விலகிக்கொண்டு, உள்ளே மறைந்ததும் பழையபடி கதவண்டை வந்து நின்றுகொண்டார்கள், குழந்தைகள். காலால் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெரிய பேலின்’ பாத்திரத்தைக் கையிலேந்தியபடி பிரத்தியகூஷமாளுள் மாமி. இரண்டு குழந்தைகளும் பின்னல் சென்ருர்கள். அம்பிப் பாப்பா பிறந்தாச்சா மாமீ?" என்று கேட்டாள் பங்கசம். o -இன்னும் பிறக்கிலடி, நீங்க ரெண்டுபேரும் படுத்துண்டு தாங்குங்கோ, காலம்பற அம்பிப் பாப்பாவைக் காட்டறேன்" உடனடியாகக் குழந்தையைப் பார்க்கலாமென்றுதான் வெங்கு எண்ணியிருந்தான். மாமியின் பதில் ஏமாற்றமாக இருந்தது. அவன் கிழவி மாதிரி முகத்தைக் வைத்துக் கொண்டான். மாமி ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டு சொன்னாள். * . . .________________

இடாரி - - 35
'டேய், பங்கசத்துக்கு அம்பிப் பாப்பா பிறக்கும். நாளேக் பாயச முண்டு.” "பால் பாயசமா?” என்று கேட்டான் வெங்கு. "ஆமாம், பால் பாயசம் தான். நிறைய சர்க்கரை போட்டு” என்ருள் மாமி. - - பங்கசம் படுக்கச்சென்ருள். வெங்குவும் பின்னுல் சென் மூன். படுத்ததும் துங்கிப் போளுர்கள் இருவரும். - அம்பிப் பயலேப் பார்த்துவிட்டுத்தான் துங்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் கண்ணேக் கசக்கியபடியே வளேய வளைய வந்தார்கள் சச்சுவும், கனகமும். கோமதி அலறுகிற போழுதெல்லாம் சச்சுவுக்குத் தூக்கித் துாக்கிப் போட்டது. எக்கச் சக்கம்ாய் சபேசய்யர் முன்னுல் போய் விழுந்துவிட்டால் படுக்கையில் பிடித்துத் தள்ளி விடுவாரேயென்ற பயத்தில், அவருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருவரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். துக்கம் இமையை அழுத்தித் தலையைக் கிறுக்கியபொழுது சச்சு குழாயடிக்குச் சென்று குளிர்ந்த நீரை முகத்தில் விட்டுக்கொண்டான். அதை அப்படியே காப்பியடித்தாள் கணகம். - பின்னல் காலரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறபொழுது சபேசய்யர் பின்னுல் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் உடம்போடு வெல வெலத்தது. "இன்னமுமா முழிச்சுண்டுருக்கேள், ஏண்டி?” என்று கேட்டார் சபேசய்யர். "அம்பிப் பாப்பாவைப் பாக்கனும்” என்ருள் கனகம்.
சபேசய்யர் சிரித்துக்கொண்டார்.
"ஆம்பிப் பயிலேக் காலேயிலே பாக்கலாம்மா, இப்பொ ரெண்டு பேரும் படுத்துண்டு தூங்குங்கோ” என்ருர்.
இரண்டு குழந்தைகளும் சேர்ந்து நடந்தன. சபேய்யர். கை களிரண்டும் குழந்தைகளின் தோள்களில் தொட்டும் தொடாமலும் தொட்டுக்கொண்டு படுக்கைவரை வந்தன. -
படுக்கையில் படுத்த பின்பும், அறையிலிருந்து எழுந்த பேரொலி குழந்தைகள் மனத்தைத் தாக்கி, பீதியைக் கிளறிவிட்டுத் தூங்க விடாமல் வருத்திற்று. சச்சு பக்கத்தில் மிக நெருங்கிப் படுத்து கொண்டு அவள் கையைப் பற்றிக்கொண்டாள் கணகம், ஒரு தடவை கோமதியின் அவலக் குரல் மிகப் பயங்கரமாக எழவே, "சச்சு, அம்மா செத்துப் போவாளோ?' என்று கேட்டாள், கனகம்.
"மாட்டா, அம்பிப் பயல் பிறக்கப்போருன்” என்ருள் சச்சு.
"அம்பிப்பயல் பிறந்தப்புறம் அம்மா செத்துப்கோளு, அம்பிப் பயலுக்கு அம்மா இருக்கமாட்டாளே?” -________________

36 "அம்பிப் பயலுக்காக அம்மா செத்துப்போகமாட்டா' என்ருள் சச்சு. -
இந்தப் பதில் கனகத்துக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது. சிறிது நேரத்தில் அவள் உணர்விழந்தாள். -
அதற்கும் பின்பும் சச்சுவால் துரங்க முடியவில்லை. இரவு பதி ைெரு மணிக்குமேல் "ஐயோ, அம்மா’ என்ற கூப்பாடு வலுத்தது. கிழவர்கட்ட வராண்டாவில் வந்து நின்று கொண்டார். அடிக்கொரு தரம் என்னடா என்னுச்சு?’ என்ற குரல் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் டாக்டருக்கு போன் பண்ணிஞர் சபேசய்யர். சம்முகம் கடைத் தெருவுக்கும் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருந்தான். அறைக்குள் ஏக களேபரமாக இருந்தது. சயேசய்யர், சாத்தியிருந்த கதவு முன் ஞல் நின்றுகொண்டு; டாக்டர் டாக்டர்’ என்று கூப்பிட்டார். டாக்டர் வெளியே வரவில்லை. கதவு திறக்கப்படவில்லை. - - -
தாயின் வேதனேக் குரல் மனத்தைத் தாக்கியபொழுது, கண்ணிரி உகுத்தாள் சச்சு. தலேயணேயை வாயினுள் திணித்துக்கொண்டு, முகத்தைப் புதைத்தபடி தேம்பினுள், பின்னுல் அவளும் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து போளுள். - தாயின் துன் பக்குரல் அலேகள்தான் காலேயில் எழுந்ததுமே மனத் தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன குழந்தைகளுக்கு. மூன்று பேரும் எழுந்து பாயில் உட்கார்ந்து, தாயின் கூக்குரல் கேட்கிறதா என்பதை முதலில் ஆராய்ந்து பார்த்துக் கொண்டார்கள் அப் பொழுது பச்சிளம் குழந்தையின் சிணுங்கல் கேட்டது! முகமெல்லாம் சிரிப்போடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கண்களில் ஒளிகூடி, களே வழிந்தது முகத்தில். - - -
சச்சு, சாத்தியிருந்த அறைக் கதவை நோக்கி ஓடினுள். பங்க சமும் கனகமும் பின்னல் பாய்ந்தார்கள்.
வெங்கு எழுந்திருந்து தலைமாட்டில் அவிழ்த்துப் போட்டிருந்த இரட்டை மாடி பஸ்ஸை மீண்டும் அரைஞாணில் கட்டிக்கொண்டு, பாயசம் தயாராகி விட்டதா என்று பார்க்க அடுக்களேக்குச் சென்ருன்.. - - - - அறைக்கதவு இலேசாகத் திறந்திருந்தது. சச்சு இடுக்கு வழி யாகப் பார்த்தாள். குழந்தையின் கால்கள் தெரிந்தன. முக்காலியில் வைத்திருந்த தர்மாஸ் பிளாஸ்க்' குழந்தையின் முகத்தை மறைத்தது. - , -’ - அம்பிப் பாப்பா, அம்பிப் பாப்பா' என்று களிப்புடன் ஒசை யெழாமல் கையைத் தட்டிகுள் சச்சு. அவளுக்கு நிலைகொள்ள வில்லை. அவளே இடித்துத் தள்ளிக்கொண்டு பார்த்தாள் பங்கசம். கனகம் பார்த்துவிட்டு, 'அம்பிப் பாப்பா கால் வெண்ணெய் கட்டி________________

கிடாரி - 37
வாட்டமா இருக்கும். ஐயோடி! எனக்குத் தொட்டுப் பாக்கணும்' என்ருள். -
குழந்தைகள் ஆசை தீராமல் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளியபடி, மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"யாருடீ அங்கே?' குரல் இடிபோல் முதுகில் பாயவே, திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சபேசய்யர் நின்றுகொண்டிருந்தார்.
"கழுதைகளா, அங்கெ என்னுது எட்டி எட்டிப் பார்க்கிறேள்?" மூன்று பேருக்கும் வாய் கட்டிவிட்டது. "என்னுதுடி என்னுது?” - “அம்பிப் பயலைப் பாக்கருேம்” என்ருள் பங்கசம். "அம்பிப்பயலைப் பாக்கறேளாக்கும் ஒரு இழுப்பு, ஒரு ഖങു. குழந்தைகளுக்குப் புரியவில்லை. மூன்றும் தலையாட்டின. - "அம்பிப் பாப்பா, மண்ணுங்கட்டிப் பாப்பா, தெருப்புழுதிப் பாப்பா...போங்கோடி இங்கிருந்து.” - - மூன்றும் பின்கட்டை நோக்கித் தெறித்தன. வெங்கு அடுக்களையில் நிலையை யொட்டி விசுப்பலகையை எடுத்துப் போட்டுக்கொண்டு நிர்வாணமாகப் பத்மாசானத்தில் அமர்ந்திருந்தான். இரட்டைமாடி பஸ், நிலைக்கு அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தது. இடுப்புக்கும் பஸ்ஸ் க்குமான நூல்கயிறு அரையடி உயரத்தில் நிலைவாசலுக்குக் குறுக்கே பாலம் போட் டிருந்தது. செல்லம்மாள் ஒவ்வொரு தடவையும் கயிற்றைத் தான் டியபடியே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போய்க்கொண் டிருந்தாள். - - - - - சச்சு, பங்கசம், கனகம் மூன்று பேர்களும் முகத்தைத் தொங்கப் போட்டபடியே அடுக்களே வந்து சேர்ந்தார்கள். - அவர்களைக் கண்டதும். பாயசம் இன்னும் ஆகலே’ என்ருன் வெங்கு. - - ‘மாமி, எங்களுக்கு அம்பிப் பாப்பாவை எடுத்துக் காட்ட மாட்டியா' என்று கேட்டுக்கொண்டே மாமியின் முன் னுல் சென்று நின்ருள் சச்சு. பங்கசமும், கனகமும் மாமியின் பக்கவாட்டில் வந்து நின்றர்கள். - - - மாமி குழந்தைகளின் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் திரம்பின. - - . - "அப்புறம் காட்டறேண்டி அம்மா. நீங்க மூணு பேரும் பல் தேச்சுட்டு வாங்கோ என்ருள். - -________________

38பாற் கடல்
குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. காலையில் அவர்கள் முகத்தில் தோன்றிய பூரிப்பின் சாயலேக் கூட, இப்பொழுது காண முடியவில்லை. குழந்தைகள் படியிறங்கிக் கிணற்றடிக்குச் செல் வதைக் கண்டதும் மேலும் துக்கம் பொங்கிற்று மாமிக்கு. - வேங்குவுக்கும் ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அவனும் கிளம்பிவிட்டான். சில நிமிஷங்களுக்கெல்லாம் இரட்டை மாடி பஸ் ஒட்டு மாவைச் சுற்றித் தொழுவத்தை நோக்கி ஓடிக்கொண் டிருந்தது. . . செல்லம்மாள் தோசையும் பாலும் எடுத்துக்கொண்டு மாடிக் குச் சென்ஆன், - - அப்பொழுது குஞ்சம்மா பல்தேய்த்துவிட்டு முகத்தைத் துடைத் துக் கொண்டிருந்தாள். -- * - *செல்லம், கோமதி எப்படியிருக்கா?’ என்று கேட்டான் குஞ்சம்மா. - "ஒண்னுமில்லே, ஒண்ணுமில்லெ' என்ருள் மாமி. "அவளைப் பார்க்க மனஸ் அடிச்சுக்கிறதுடி என க்கு. செல்லம், என்ன ஜென்மமடீ இது? கீழே பெண் இடுப்பு வலியிலெ மாயறத் தெக்கூட மாடியைவிட்டு இறங்க முடியாத ஜென்மம்?" "மனலை எதுக்கு அலட்டிக்கிறேன்? இன்னிக்கு நேத்திக்கு. ஏற்பட்ட விஷயமா இது? பத்து. வருஷமா இந்த நாடகம்தான்ே நடக்கிறது? எதுக்கும் மத்யானம் கீழே வரத்தானே வரனும், அப்போ ரெண்டு நாழி கோமதி பக்கத்திலெ உட்கார்த். துண்டுருங்கோ.” - - .' அன்று குஞ்சமாவுக்குக் குளி முறையானதால் கீழே வரவேண்டி யிருந்தது. • , - . . . . . - குஞ்சம்மாள் தோசையை விண்டு போட்டுக்கொண்டாள். "நேத்து டக்கு வாங்கிப்போச்சு. ஏது இந்தப் பெண் எல்லோரையும் அகுதையாக்கிடுமோனு பயந்து போனேன்” என் ருள் செல்லம்மாள். - - . . - இவ்வளவு சிரமப்பட்டதுக்கு ஆண் குழந்தையாப் பிறந்: திருந்தா அவளுக்காவது ஆறுதலாயிருந்திருக்கும்” என்ருள் குஞ்சம்மா. - - - - "என்ன சேறது சொல்லுங்கோ? தாலோடு இப்பேச அஞ்சாச் சு." - - நீட்டிய கையில் பால் தம்ளரைக் கொடுத்தாள் செல்லம்மா. ஒரு மடக்குக் குடித்துவிட்டுத் தம்ளரை முக்காலியில் வைத்தான் குளுசமமா . . . . . - • *________________

கிடாரி 39
“போகப் போக நேத்து ரொம்ப சிரமப்பட்டுப் போச்சு, பேச்சு மூச்சில்ல்ே, கூப்புட்டாக் கூப்பிட்டா பதிலில்லை. கர்லும் கையும் ஜில்லிட்டுப்போச்சு, கடேசியிலெ தன் போதமில்லாமல்தான் குழந்தை பிறந்தது. அரைமணி நேரம் கழிச்சு கண்ணே முழிச்சுப் பாத்தா, திருதிருனு முழிச்சா, ஆட்டுக்குட்டி மாதிரி, பக்கத்திலே போய், கோமதீ, என்னம்மா வேணும்? பெத்துப் பிழைச் சாய் போன்னேன். காதோடெ, மாமி, என்ன குழந்தை?’னு கேட்டா. மாமி, நீங்களே சொல்னுங்கோ? நான் என்ன பதில் சொல்லுவேன்? 1எனக்கு அப்படியே தொண்டையை அடைச்சுண்டு நெஞ்சோடு பொருமல் வந்துடுத்து. ஐயோ இந்த ஒண்னும் தெரியாத குழந்தையையுமா பாவி தெய்வம் இப்படிச் சோதிக்கனும்?? -
குஞ்சம்மா கன்னத்தில் கண்ணிர் வழிந்தது. புடவைத் தலைப் பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
"நீங்க வேறே மனசிலெ போட்டுக்காதேங்கோ; உங்க உடம்புக்குத் தாங்காது. பால் ஆறிப்போறது’ என்ருள் செல்லம்மா. -
குஞ்சம்மாள் பால் தம்ளரை கையில் எடுத்துக் கொண்டாள்.
"இன்னிக்கு எல்லாருக்கும் கடுதாசி போட்டாகனுமே, ஒருத் தருக்கும் போடவேண்டாங்கரு கோமதி, அவளுக்கு அவமானமா இருக்குமாம். இந்தத் தடவையாவது சமத்தா ஒரு ஆண் குழந்தை யைப் பெத்துண்டு வாடீனு சொல்லி யனுப்பிச்சாளும் ஆம்படை யான்காரன். ஏண்டி, இந்த வசையாவது எங்காத்துக்காரர் பெயர் போட முடியுமோடி? மனஸ் இரங்குமா தேவிக்கு?’ என்று ரயில் நகர்ந்ததும் மாமியார்க்காரி கத்தினுளாம். பெண் குழந்தை பிறந் திருக்குனு தந்தி கிடைச்சதுமே இந்த மூதேவி முகத்திலேயே முழிக்க வேண்டாம்னு தீர்மானிச்சாலும் தீர்மானிச்சுடுவர் அவர் என்று சொல்லிக் கொண்டே ஓ’ வென்று அழரு கோமதி..."
குஞ்சம்மா டக்கென்று தம்ளரை கீழே வைத்துவிட்டு இரண்டு காதையும் பொத்திக்கொண்டு, "செல்லம்மா, அப்படிச் சொல் லாதே, அப்படிச் சொல்லாதே. எனக்கு என்னமோ சேறது' என்று கத்திகுள். . . - - . . .
குஞ்சம்மா முகத்தில் பன்னீர் தெளித்தமாதிரி வியர்த்துவிட்டது. காலும் கையும் பரந்தன. செல்லம்மா சரேலென்று தலையைப் பிடித் துக் கொண்டாள். - -
"அப்படியே தலையணையில் சாச் சுடு செல்லம்மா” என்ருள் குஞ்சம்மா. -
"போயும் போயும் உங்கள் ட்டெ வந்து சொல்றேன் பாருங்க ளேன், இந்த மூடத்துக்கு என்னிக்குத்தான் புத்தி வரப்போறதோ________________

40 பாற் கடல்
புத்திகெட்ட மூடம்" என்று நெஞ்சில் கை வைத்தபடி தன்னைத் தானே நொந்துகொண்டாள் செல்லம்மா. . . . -->
அரைமணி நேரம் குஞ்சம்மா பக்கத்தில் உட்கார்ந்துவிட்டுக் கீழே வந்தாள், செல்லம்மா. -
செல்லம்மா, பின் வராண்டாவில் வந்ததும் வெங்கு கொல்லே யில் நின்றுகொண்டு, மாமி, மாமி, மாடு செத்துப்போயுண்டிருக்கு" என்று கத்தினுன். - . . . - செல்லம்மா தொழுவம் பக்கம் சென்ருள். .' மாடு படுத்தபடி காலத் தரையில் பட்பட் டென்று அடித்துக் கொண்டிருந்தது. கிழவர் முன்னுல் உட்கார்ந்து முகத்தைக் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். சம்முகம் பின் னுல் நின்று கொண் டிருந்தான். . . . . - - மூன்று பெண் குழந்தைகளும் சற்றுத் தொலையில் வரிசையாக முட்டுக்குத் தி உட்கார்ந்து கொண்டிருந்தனர். காலேயில் அடைந்த ஏமாற்ற உணர்வுக்கு இந்தக் காட்சி இதம் கொடுத்தது. - ‘எழுந்திருந்து போங்கடி இங்கிருந்து” என்று கத்தினுள் மாமீ.
"சும்மா இருக்கட்டும். குடி முழுகியா போகும்? காலா காலத் திலே எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே” என்ருர் கிழவர்.
"இவரொருத்தர்” என்று சொல்லியபடி முகத்தை இழுத்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றுவிட்டாள் மாமி. . . . . . - குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருந்தன. வெங்கு மட்டும் கிழவர் பக்கம் வந்து நின்றுகொண்டிருந்தான். மாடு தலையைத் தூக்கி ஒரு தடவை அலறிற்று. கன்றின் முகம் வெளியே வந்துகொண்டிருந்தது. - ‘முகத்தைப் பாத்தா காளங்கன்னு மாதிரி இருக்கு" என்ருன் சம்முகம். - - - - - "வாயை மூடு, அபசகுனமா ஏதாவது உள ருதே. முகத்தைப் பாத்தாத் தெரியுமோ? மண்டுஸ், மண்டுஸ்" என்ருர் கிழவர். "ஒரு பார்வைக்கு அப்படிப் படுது” என்று இழுத்தான் சம்முகம். - - - “நீர் ஒரு பார்வையும் பாக்க வேண்டாம். நான் தான் சொல். றேனே கிடாரிதான் போடும்னு. மேற்கொண்டு என்ன பார்வை வேண்டிருக்கு? மண்ணுப்போன பார்வை' கிழவருக்கு ஆங்காரம் அடி வயிற்றிலிருந்து வந்தது. - . . . . மாடு படக்கென்று எழுந்து நின்று, இருபுறமும் பக்கவாட்டில் புரண்டது.________________

கிடாரி 41
“ஹாவ், ஹாவ்' என்ருன் சம்முகம்.
முகத்தைத் தடவிக் கொடுத்தவாறே, ஹாவ், ஹாவ்’ என்ருர் கிழவர். -
மாடு மீண்டும் படுத்தது.
“தாத்தா, பசுவுக்கு வாலிலெ என்னுது தொங்கறது?’ என்று கேட்டான் வெங்கு. - -
"கன்னு போடப்போறதுடா, கிடாரிக் கன்னு. கிடாரி பிறக்கும்,
உனக்கு பாலேக் கறந்து தொந்திக்கு விட்டுக்கலாம்டா, யோகம் தாண்டா பயலெ’’ என்ருர் கிழவர். -
மாடு 'ம்பே' என்று பயங்கரமாக அலறிற்று. உடம் போடு ஒரு தடவை நெளிந்து புரண்டது. சில நிமிஷங்கள் இந்த அவஸ்தை.
"கன்னு விளுந்திட்டு' என்று கத்தினுன் சம்முகம்.
"என்ன கன்னு?" என்று கேட்டுக்கொண்டே கிழவர் பின்பக்கம் வந்தார். அதே சமயம் மாடும் சட்டென்று எழுந்து மிகுந்த பரபரப் புடன் பின்புறம் திரும்பிக் கன்றை முகந்து பார்த்தது. -
சம்முகம் வாலேத் தூக்கிப் பார்த்துவிட்டு, கிடாரி' என்ருன். "கிடாரி...கிடாரி” என்று கத்திஞர் கிழவர்.
ஏமாற்றத்திலும் மனச் சோர்விலும் ஆழ்ந்திருந்த குழந்தைகள் கணப்பொழுதில் இந்த உத்ஸாகத்தை வாங்கிக்கொண்டன.
- மூன்று பெண்களும் கையைத் தூக்கிக் குதித்தபடி, கிடாரி, கிடாரி' என்று கத்தினர். - r "
வெங்கு ஒரு படி மேலே சென்று, கிடாரிக்கு ஜே' என்று கோஷ மெழுப்பினுன். பெண் குழந்தைகளும் அதை ஏற்றுக்கொண். உார்கள். -
"கிடாரிக்கு ஜே -
இந்த சந்தோஷச் செய்தியை அறிவிக்க அடுக்களேயைப் பார்த்து விரைந்தார் கிழ்வர். அவசரத்தில் வேஷ்டி நெகிழ்ந்து விட் டது. அதை சரியாகக் கட்டிக்கொள்ளவும் பரபரப்பு இடங் கொடுக்க வில்லை. வயிற்ருேடு துணியை அழுத்திப் பிடித்துக்கொண்டே, 'செல்லம்மா கிடாரி, கிடாரி!' என்று கிழவர் கத்தினர்.
ஊர்வலம் கிணற்றடியைச் சுற்றிச் சென்றுகொண்டிருந்தது. கிணற்றடியில் துவைக்கப் போட்டிருந்த ஜம்பரையும் கையிலெடுத் துக்கொண்டு விசிறிஞன் வெங்கு. ஏக காலத்தில் நாலு புஜங்கள் வானத்தில் நிமிர்ந்தன.
"கிடாரிக்கு ஜே!'________________

42 - பாற் கடல்
கிழவர் தேன் கூடு பக்கம் வந்து, "குஞ்சம்மா, குஞ்சம்மா” என்று கூப்பிட்டார். சாளரம் திறந்தது. தலை முளைத்தது.
"கிடாரி!”
"அப்படியா!'
முகத்தில் முல்லை மலர்ந்தது.
வாசல் பக்கம் வந்தபொழுது சபேசய்யர் இல்லையென்பதை உணரவே, கோஷம் வலுத்தது. - -
பங்க்சம் திடீரென்று. 'கிடாரிக் கண்ணுக்கு ஜே' என்று கோஷத்தை விஸ்தரித்தாள். . .
தொடர்ந்து, கிடாரிக் கண்ணுக்கு ஜே' என்ற குரல்தான் எதி ரொலித்தது, -
கோமதியிடம் அறிவிக்க முடியாமல் போனதில் வருத்தம்தான் கிழவருக்கு. அவள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
கிழவர் கொல்லைப்புறம் வந்தார். - -
குழந்தைகளும் வீட்டைச்சுற்றிப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள்.
செல்லம்மா, பின் வராண்டாவில் நின்றபடி ஊர்வலம் வரும் அழகைக் கண்டு அகம் மகிழ்ந்துபோளுள். வெங்குவின் கை உதறலை யும், முகபாவத்தையும் பார்த்து உடம்பு குலுங்கக் குலுங்கச் சிரித் தாள். அப்படியே படி இறங்கி வந்து அவனேக் கட்டிக்கொண்டு, 'போதும்டா கண்ணு சத்தம் ப்ோட்டது. தொண்டை கட்டிக்கப் போறது என்ருள். * - - : - . . . வெங்கு, மாமி முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "பாயச மாயாச்சோ?” என்று கேட்டான். ‘. . .
"நன்ன கேட்டே போ. கிடாரி பிறந்திருக்கு. நான் வச்சுத் தரேன் உனக்கு என்ருள் செல்லம்மா. -