Tuesday, 8 March 2016

வெள்ளிவீதியாரின் நாப்கின் - வெய்யில் வெய்யில்


Gouthama Siddarthan liked this.







வெய்யில் வெய்யில்
7 hrs ·



.....................................................வெள்ளிவீதியாரின் நாப்கின்.

கபிலர் கனவு காண்கிறார்
காட்டுப் பாதையில்
சிவந்த முல்லைப் பூக்கள் சிதறிக்கிடக்கின்றன
முல்லையிலேது சிவப்பென வியப்புற்று எழுகிறார்
கபிலரின் மனைவியும் கனவிலிருக்கிறார்
தலைவியின் தூய்மைக்குருதி
கசிய கசிய முல்லைப்பூக்களால் துடைத்தபடி
அவன் உடன் நடந்து போகிறான்
மனைவியின் கனவிற்குள் நுழையும் கபிலர்
அவன் ஏந்தியிருக்கும் வேர்களால் முடையப்பட்டக் கூடையில்
நிறைந்திருக்கும் வெண்பூக்களை
இருகைகளிலுமாக அள்ளியபடி வெளியேறி
மனைவியின் கால்மாட்டிற்கு வந்து
மிகப்பொறுப்போடு அமர்கிறார்.


- நீட்சி 2011